Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அஜித் குமார், தமிழ் சினிமா, கார் ரேஸ், கோலிவுட்

பட மூலாதாரம்,@AKRACINGOFFL

படக்குறிப்பு, வெகு நாட்களாகவே ஊடகங்களிடம் பேசுவதைத் தவிர்த்துவந்தார் நடிகர் அஜித் குமார்
14 ஜனவரி 2025, 08:32 GMT
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

துபையில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தொடரில் (24H series) 911 போர்ஷே கார் பிரிவில் நடிகர் அஜித் குமாரின் அணி 3-வது இடத்தைப் பிடித்தது. இதைத் தொடர்ந்து, நடிகர் அஜித்துக்கும் அவரது அணியினருக்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

வெகு நாட்களாகவே ஊடகங்களிடம் பேசுவதைத் தவிர்த்துவந்த நடிகர் அஜித் குமார், இந்த கார் பந்தய நிகழ்வின் போது ஊடகங்களின் சில கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.

துபையில் அவர் அளித்த ஒரு சமீபத்திய நேர்காணலில், "படங்களை பார்ப்பது கொண்டாடுவது எல்லாம் சரிதான். அஜித் வாழ்க அல்லது விஜய் வாழ்க என்று சொல்கிறீர்கள். நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?" என ரசிகர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் அஜித் பேசும் அந்தக் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் குறித்து மட்டுமல்லாது, சமூக வலைத்தளங்களில் நிலவும் வெறுப்பு, பாதுகாப்பாக இரு சக்கர வாகனம் ஓட்டுவதன் அவசியம் உள்ளிட்ட பல விஷயங்களை அவர் பேசியுள்ளார்.

துபை 24 மணிநேர கார் பந்தயத் தொடரில் தனது அணி பெற்ற வெற்றிக்காக வாழ்த்திய மற்றும் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தும், பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் அஜித்.

அவரது மேலாளர் சுரேஷ் சந்திராவின் எக்ஸ் பக்கத்தில் இந்த அறிக்கை பதிவிடப்பட்டுள்ளது.

அஜித் குமார், தமிழ் சினிமா, கார் ரேஸ், கோலிவுட்

பட மூலாதாரம்,@SURESHCHANDRAA

பல வருடங்களுக்கு பிறகு அஜித் அளித்த நேர்காணல்

இதற்கிடையே துபையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நடிகர் அஜித் அளித்த பேட்டியில், "விளையாட்டு மற்றும் பயணங்களை நான் மிகவும் விரும்புகிறேன். என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், உற்சாகத்துடன் வேலைக்கு (சினிமா) திரும்பவும் உதவுவது அவை தான். எனது பிள்ளைகளுக்கும் அதை கற்றுக் கொடுக்கிறேன்" என்று கூறினார்.

பல வருடங்களுக்கு பிறகு ஊடகத்திற்கு அவர் அளிக்கும் ஒரு முழு நேர்காணல் இது.

சில மாதங்களுக்கு முன்பாக மதங்கள் மனிதர்களை எப்படி மாற்றும் என்பது குறித்து அவர் தெரிவித்த கருத்தை, இந்த நேர்காணலில் மீண்டும் சுட்டிக்காட்டினார்.

"மதம் நீங்கள் இதுவரை சந்திக்காத மனிதர்கள் மீது கூட வெறுப்பைத் தூண்டும் என்று ஒரு வாசகம் உள்ளது. அது உண்மை தான். மதம், சாதி எதுவாக இருந்தாலும் சரி. மனிதர்களை சந்திக்கும் முன்பே அவர்கள் மீதான தவறான மதிப்பீடுகளை செய்து விடுகிறோம்."

"நீங்கள் பயணங்கள் மேற்கொண்டால் வெவ்வேறு தேசம், மதம், கலாசாரத்தைச் சேர்ந்த மக்களை காண்பீர்கள். இதன் மூலம், நம்மைச் சுற்றியுள்ள மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியும். பயணம் உங்களை நல்ல மனிதனாக்கும்" என்று கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியான ஒரு காணொளியில் அவர் பேசியிருந்தார்.

அஜித்தின் அந்தக் கருத்து, அவரது ரசிகர்களால் மட்டுமின்றி பலராலும் அப்போது பாராட்டப்பட்டது.

அஜித் குமார், தமிழ் சினிமா, கார் ரேஸ், கோலிவுட்

பட மூலாதாரம்,@SURESHCHANDRAA

படக்குறிப்பு, பயணங்களின் போது, தான் மனநிறைவாக உணர்வதாகவும் அஜித் நேர்காணலில் தெரிவித்திருந்தார்

துபையில் அவர் அளித்த நேர்காணலில் கார் பந்தயத்தில் இருக்கும் சவால்கள் குறித்தும் பேசினார்.

"ஒருமுறை காருக்குள் அமர்ந்துவிட்டால், பிரேக் மீதும் ரேஸ் டிராக் மீதும் மட்டும் தான் முழு கவனமும் இருக்க வேண்டும். இது சினிமா அல்ல, இங்கு உங்களுக்கு ரீடேக் (Retake) கிடையாது. ஒரு நொடி கவனம் சிதறினால், அது படுகாயங்களை ஏற்படுத்தும் அல்லது உயிரைப் பறித்துவிடும்" என்றார்.

இந்த பந்தயங்கள் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், விதிமுறைகளுடன் நடத்தப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், சாலைகளில் பொறுப்பற்ற முறையில் வேகமாக வாகனங்களை இயக்குவது உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் நிலவும் வெறுப்பு குறித்து பேசிய அவர், "அது பிரபலங்களை மட்டுமல்ல, அனைவரையும் பாதிக்கிறது. உடல்நலமும் மனநலமும் முக்கியம். என் ரசிகர்களுக்கு நான் சொல்வது, வாழ்க்கை மிகச் சிறியது, அப்படியிருக்க ஏன் வெறுப்பைப் பரப்ப வேண்டும்? உங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள்" என்று கூறினார்.

அந்த நேர்காணலின் இறுதியில், "திரைப்படங்களை பார்ப்பது கொண்டாடுவது எல்லாம் சரிதான். அஜித் வாழ்க அல்லது விஜய் வாழ்க என்று சொல்கிறீர்கள். நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்? நீங்கள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் இந்த பேரன்பிற்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொண்டால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்."

"நீங்கள், என்னுடைய நண்பர்கள் மற்றும் சக நடிகர்கள் மீதும், பிற மனிதர்கள் மீதும் அன்பு செலுத்தி, நல்ல வாழ்க்கையை வாழ்ந்தால் மிகவும் மகிழ்வேன். வாழ்க்கை மிகவும் குறுகியது. எனவே அதை அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள்" என்று அஜித் தெரிவித்தார்.

அஜித் குமார், தமிழ் சினிமா, கார் ரேஸ், கோலிவுட்

பட மூலாதாரம்,@AKRACINGOFFL

படக்குறிப்பு, நடிகர் அஜித் தனது ரசிகர்களுக்கு 'உங்கள் வாழ்க்கையை பாருங்கள்' என்ற ரீதியில் வேண்டுகோள் விடுப்பது இது முதல் முறையல்ல

சமூக வலைத்தளங்களில் வைரலான நேர்காணல்

அஜித்தின் இந்த நேர்காணல் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அவரது கருத்துகளை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

"நான் விஜய் ரசிகன், ஆனாலும் நீங்கள் சொன்னதை இதுவரை யாரும் சொல்லவில்லை. நீங்கள் சிறந்த மனிதர்" என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

"அஜித்தின் முந்தைய நேர்காணல்களிலும் கூட மனிதர்கள் மீது அவருக்கு இருக்கும் அன்பும் மரியாதையும் வெளிப்படும். அவர் எப்போதும் ஒரே மாதிரியான மனிதராகவே இருக்கிறார், சினிமாவில் அறிமுகமானபோதும் இப்போது உச்சத்தில் இருக்கும் போதும்" என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர், "அஜித் என்றால் தனி பிராண்ட். தன்னுடைய சுயநலத்துக்காக ரசிகரை வழிநடத்தாமல் நேரான பாதையில் கொண்டு செல்லும் அஜித்குமாருக்கு மனமார்ந்த நன்றிகள். உங்களைப் போலவே உங்கள் ரசிகனும் நல்வழியில் செல்வான் என்ற நம்பிக்கை நீங்கள் ரசிகர் மன்றம் வேண்டாம் என்று சொல்லும்போதே வந்து விட்டது" என்று பதிவிட்டுள்ளார்.

"நடிப்பு என்பது தொழில் என்பதில் நடிகர்கள் எல்லாம் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். நிழலை நிஜம் என்று நம்பும் ரசிகர்கள் தான் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள். அவர்களை தான் இவர் கூறுகிறார்" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

நடிகர் அஜித் தனது ரசிகர்களுக்கு 'உங்கள் வாழ்க்கையை பாருங்கள்' என்ற ரீதியில் வேண்டுகோள் விடுப்பதோ அல்லது திரைப்படங்களைக் கடந்து தன்னை கொண்டாட வேண்டாம் என அறிவுறுத்துவதோ இது முதல் முறையல்ல.

அஜித் குமார், தமிழ் சினிமா, கார் ரேஸ், கோலிவுட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2021ஆம் ஆண்டில், தன்னை இனிமேல் 'தல' என்று அழைக்க வேண்டாம் என ஊடகங்கள் மற்றும் ரசிகர்களிடம் நடிகர் அஜித்குமார் வேண்டுகோள் விடுத்தார்

நடிகர் அஜித் குமார், கடந்த 2011ஆம் ஆண்டு தனது ரசிகர் நற்பணி மன்றங்களை கலைப்பதாக அறிவித்தார்.

"கோஷ்டி பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டிற்கு இணங்காமல் தன்னிச்சையாகச் செயல்படுவது, தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள், என் எண்ண ஓட்டத்துக்கு உகந்ததாக இல்லை."

"சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல் குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகிறேன். நலத் திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம், நல் உள்ளமும் எண்ணமும் போதும் என்பதே என் கருத்து." என்று அப்போது அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பாக, சமூக வலைத்தளங்களில் அஜித்தின் பெயரைப் பயன்படுத்தி 'கடவுளே, அஜித்தே' என்ற வாசகம் வைரலானது.

அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், "சமீபகாலமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரிகமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் 'க… அஜித்தே' என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது."

"எனது பெயரைத் தவிர்த்து, எனது பெயருடன் வேறெந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியளவும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்." என்று தெரிவித்திருந்தார்.

அதற்கு முன்னதாக 2021ஆம் ஆண்டில், தன்னை இனிமேல் 'தல' என்று அழைக்க வேண்டாம் என ஊடகங்கள் மற்றும் ரசிகர்களிடம் நடிகர் அஜித் குமார் வேண்டுகோள் விடுத்து, மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் அறிக்கை வெளியிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஏராளன் said:
படங்களை பார்ப்பது கொண்டாடுவது எல்லாம் சரிதான். அஜித் வாழ்க அல்லது விஜய் வாழ்க என்று சொல்கிறீர்கள். நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?" என ரசிகர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

"மதம் நீங்கள் இதுவரை சந்திக்காத மனிதர்கள் மீது கூட வெறுப்பைத் தூண்டும் என்று ஒரு வாசகம் உள்ளது. அது உண்மை தான். மதம், சாதி எதுவாக இருந்தாலும் சரி. மனிதர்களை சந்திக்கும் முன்பே அவர்கள் மீதான தவறான மதிப்பீடுகளை செய்து விடுகிறோம்."

அஜித் அருமையாகச் சொல்லியிருக்கின்றார். ஆனாலும், கட் அவுட்டை கட்டி, அதன் உச்சியில் ஏறி நின்று அதன் மேல் பால் ஊற்றி, விழுந்து இறந்தும் போகும் இளைஞர்கள் வந்துகொண்டு தான் இருப்பார்கள்............😌.

என்னுடைய சமவயது நண்பன் ஒருவனிடம் இருந்து பொங்கல் வாழ்த்து விஜய் ஒரு கையை மேலே சுற்றும் ஒரு படத்துடன் வந்திருக்கின்றது...............🫣.

முன்பின் அறிமுகம் இல்லாத மனிதர்கள் மேல் முன்னரே ஏற்படும்/ஏற்படுத்தப்படும் மதிப்பீடுகள் தவிர்க்கப்பட வேண்டியவை. சில வேளைகளில் மனிதர்கள் வெறுப்பதற்கும், பகைப்பதற்கும் தான் மனிதர்களைத் தேடுகின்றார்களோ என்று தோன்றுகின்றது................. 

  • கருத்துக்கள உறவுகள்
On 15/1/2025 at 03:45, ரசோதரன் said:

முன்பின் அறிமுகம் இல்லாத மனிதர்கள் மேல் முன்னரே ஏற்படும்/ஏற்படுத்தப்படும் மதிப்பீடுகள் தவிர்க்கப்பட வேண்டியவை. சில வேளைகளில் மனிதர்கள் வெறுப்பதற்கும், பகைப்பதற்கும் தான் மனிதர்களைத் தேடுகின்றார்களோ என்று தோன்றுகின்றது................. 

இதற்கு காரணம் விடயங்களை எமது தனிப்பட்ட நிலையில் (Perception) இருந்து அணுகுவதால் இவ்வாறு ஏற்படுகிறது,மற்றவர்கள் கூறுவதனை கூட கேட்பதற்கு தயாராக இருப்பதில்லை.

இந்தியர்களும் எம்மவர்களுக்கும் உள்ள பொதுவான ஒற்றுமை, யாராவது இருவர் கதைக்கும் போது அந்த சம்பாசனைக்குள் இடையில் புகுந்து அந்த சம்பாசனையினை முறித்து தான் கூறுவதனை முதன்மைபடுத்த முயல்வார்கள்.

ஒரு சம்பாசனைக்குள் குறுக்கிடுவதற்காக மன்னிப்பு கேட்பதும் இல்லை, மற்றவர்கள் கூறுவதனை பொறுமையாக கேளாமல் அரைகுறையாக விளங்கிகொண்டு தேவையில்லாமல் சம்பாசனைகளை குறுக்கிடுவார்கள்.

 தமது பார்வையில் இருப்பது போல உலகம் இயங்க வேண்டும் என நினைப்பார்கள், இந்த மாதிரியான ஸ்ரியோரைப்பான சிந்தனைகள் படித்தவர்களிடமும் காணப்படுகிறது.

மிகைப்படுத்தப்பட்ட சுயவிம்ப மாயை சாதி, மதம் என இல்லாத ஒரு விம்பத்திற்குள் தாம் இருப்பதனை கூட உணரமுடியாத பாமரர்களாக படித்தவர்களும் இருக்கிறார்கள்.

இதனை தமது தனித்துவம் என தவறாக நினைத்து பூனை கண்ணை மூடி பாலை குடிப்பது போல உலகத்தினை பார்க்க விரும்புகிறார்களில்லை, இவர்கள் உலக பயணங்கள் மூலம் பல்வேறுபட்ட சமூகங்களை பார்த்தாலும் அவர்களில் மாற்றம் ஏற்படாது.

இவர்கள் சுய விமர்சனங்களை விரும்புவதில்லை, தமது தவறுகளுக்கும் நியாயம் கற்பிப்பதில் காலத்தை விரயம் செய்கிறவர்கள்.

இதற்கு எமது கல்வி முறையும் ஒரு காரணமோ என தோன்றுகிறது, சிந்திக்கும் ஆற்றல் அற்ற ஒரு கற்ற சமூகத்தினை உருவாக்குவதில் எமது கல்வியும் ஒரு காரணமாக உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு பால் அபிசேகம் செய்து பழக்க பட்ட மக்கள் எப்போது தங்களுக்காக வாழப் போகிறார்கள்..சொல்லப் போனால் பெரிய திரை, சின்னத் திரை போன்றவற்றுக்கு அடிமையானவர்கள் நிறைய பேர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏலே தல அசித்து….

இத நீங்க படம் நடிக்க வந்த ஆரம்பத்தில சொல்லி இருந்தா அது அக்கறை, நியாயம்.

அத்தனை ரசிககுஞ்சுகளையிம் உசுப்பேத்தி, மன்றம் வைத்து, பற்பல கோடிகள் சம்பாதித்து செட்டில் ஆகி, இனி ரிட்டையர் ஆகி கார் ரேஸ் ஓட்டும் நேரம் சொல்லுவதில் ஒரு பயனும் இல்லை.

ரசிகனை மொக்கனாக்கி உழைக்கும் வரை உழைத்துவிட்டு, இப்ப கழட்டி விடப்பாக்கிறார்🤣

  • கருத்துக்கள உறவுகள்

அரவிந்சாமியின் கருத்துடன் ஒப்பிடும் போது அஜித்தின் கருத்து இரண்டாம் பட்சம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

இதற்கு எமது கல்வி முறையும் ஒரு காரணமோ என தோன்றுகிறது, சிந்திக்கும் ஆற்றல் அற்ற ஒரு கற்ற சமூகத்தினை உருவாக்குவதில் எமது கல்வியும் ஒரு காரணமாக உள்ளதா?

பொதுவாகவே உலகம் முழுவதும் பரவலாக இருக்கும் கல்வி முறைகளில் குறைபாடுகள் இருக்கின்றன என்றே நினைக்கின்றேன். கல்வி என்பதே ஒரு தொழிற்கல்வி ஆகி விட்டது என்று தான் சொல்லவேண்டும். நிலையான வேலை, நிரந்தரச் சம்பளம், பதவி உயர்வுக்கான வழிகள் என்பன போன்றனவே கல்வியின் நோக்கங்களாக இருக்கின்றன. 

எங்களின் கல்வி முறை ஒரு அசட்டுத்துணிவைக் கொடுக்கின்றது. அளவில்லாத தன்னம்பிக்கையையும் கொடுத்துவிடுகின்றது. அங்கிருந்தே முன்முடிவுகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றிலிருந்து நாங்கள் வெளியே வருவதேயில்லை. 

இலக்கியங்கள் ஏன் அவசியம், வாசிப்பு ஏன் அவசியம், பயணங்கள் ஏன் அவசியம், பிற மனிதர்கள் ஏன் அவசியம் என்ற இப்படியான கேள்விகளுக்கான பதில் ஒரு புள்ளியையே சுற்றி நிற்கின்றது. ஆனால், இதை இன்றிருக்கும் எந்தப் பாடசாலை அல்லது பலகலைக் கல்விகளாலும் கொடுக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. இவை ஒரு சமூகத்தில் அதன் வாழ்க்கை முறையாகவே மாறினால் மட்டுமே இவை சாத்தியம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

இந்தியர்களும் எம்மவர்களுக்கும் உள்ள பொதுவான ஒற்றுமை, யாராவது இருவர் கதைக்கும் போது அந்த சம்பாசனைக்குள் இடையில் புகுந்து அந்த சம்பாசனையினை முறித்து தான் கூறுவதனை முதன்மைபடுத்த முயல்வார்கள்.

தாங்கள் சொல்வதை மட்டும் கேள் என்பார்கள் ஒரு பத்து நிமிடம் என்னுடைய விளக்கத்தை கேள் என்றாலும் செவியில் வாங்கி கொள்ள மாட்டார்கள் ஒரு மாதிரி அவர்களின் பிழையை இரண்டு மணி நேர போராட்டங்களுக்கு பின் நிரூபித்தாலும் ஒரே வார்த்தையில் முடிப்பார்கள் "சாரி சார் நெக்ஸ் டைம் இந்த பிழை வராத போல் பார்த்து கொள்கிறோம் " என்பார்கள் .

எல்லோரும் அப்படியல்ல ஒரு 7௦ வீதம் அப்படிஎன்றால் 3௦ வீதம் கடும் உழைப்பாளிகள் ஆனால் அவர்களை தேடி கண்டு பிடிப்பது கல்லில் நார் உரிப்பது போல் .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

இதற்கு காரணம் விடயங்களை எமது தனிப்பட்ட நிலையில் (Perception) இருந்து அணுகுவதால் இவ்வாறு ஏற்படுகிறது,மற்றவர்கள் கூறுவதனை கூட கேட்பதற்கு தயாராக இருப்பதில்லை.

இந்தியர்களும் எம்மவர்களுக்கும் உள்ள பொதுவான ஒற்றுமை, யாராவது இருவர் கதைக்கும் போது அந்த சம்பாசனைக்குள் இடையில் புகுந்து அந்த சம்பாசனையினை முறித்து தான் கூறுவதனை முதன்மைபடுத்த முயல்வார்கள்.

ஒரு சம்பாசனைக்குள் குறுக்கிடுவதற்காக மன்னிப்பு கேட்பதும் இல்லை, மற்றவர்கள் கூறுவதனை பொறுமையாக கேளாமல் அரைகுறையாக விளங்கிகொண்டு தேவையில்லாமல் சம்பாசனைகளை குறுக்கிடுவார்கள்.

 தமது பார்வையில் இருப்பது போல உலகம் இயங்க வேண்டும் என நினைப்பார்கள், இந்த மாதிரியான ஸ்ரியோரைப்பான சிந்தனைகள் படித்தவர்களிடமும் காணப்படுகிறது.

மிகைப்படுத்தப்பட்ட சுயவிம்ப மாயை சாதி, மதம் என இல்லாத ஒரு விம்பத்திற்குள் தாம் இருப்பதனை கூட உணரமுடியாத பாமரர்களாக படித்தவர்களும் இருக்கிறார்கள்.

இதனை தமது தனித்துவம் என தவறாக நினைத்து பூனை கண்ணை மூடி பாலை குடிப்பது போல உலகத்தினை பார்க்க விரும்புகிறார்களில்லை, இவர்கள் உலக பயணங்கள் மூலம் பல்வேறுபட்ட சமூகங்களை பார்த்தாலும் அவர்களில் மாற்றம் ஏற்படாது.

இவர்கள் சுய விமர்சனங்களை விரும்புவதில்லை, தமது தவறுகளுக்கும் நியாயம் கற்பிப்பதில் காலத்தை விரயம் செய்கிறவர்கள்.

இதற்கு எமது கல்வி முறையும் ஒரு காரணமோ என தோன்றுகிறது, சிந்திக்கும் ஆற்றல் அற்ற ஒரு கற்ற சமூகத்தினை உருவாக்குவதில் எமது கல்வியும் ஒரு

நீங்கள் மேலே குறிப்பிட்ட தமது பார்வையில் இருப்பது போல உலகம் இயங்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணம் 1940 களிலேயே படித்த சைவர்களுக்கோ அல்லது இன்றும் பல கிறிஸ்தவ குடும்பங்களிலோ ( சில தலைமுறையாக   இருப்பவர்கள் ) இருப்பதாக சொல்ல முடியாது. காரணம் அவர்கள் தமது சுற்றம், வட்டம் மதம், கலாசாரம் தாண்டி இன்னும் அதிகமானவற்றை உள்வாங்கியத்தோடு மட்டும் அல்லாமல்  அவற்றில் நடைமுறைக்கு உகந்ததை தமது வாழ்வியலாகவும் கொண்டு விட்டார்கள். 

மறுபுறம் மற்றவர்களோ யாழ்ப்பாணம் தாண்டி  போனது கிடையாது, மட்டக்களப்பு, திருகோணமலை கூடப் போனது இல்லை. ஆகக் கூடியது கதிர்காமத்துக்கு ஒரு நடை. 

பிள்ளைகளை யாழ் பல்கலைக்கழகம் தான் அனுப்புவார்கள், கொழும்பு அல்லது கண்டிக்கு அனுப்பினால் பிள்ளைகள் கெட்டு விடுமாம், ஆக இவர்களின் பிள்ளைகள் நிலையும் அதுதான்,

வெளிநாடு வந்த பின்னரும் சேரும் கூட்டமும் அதே தமிழ்க் கூட்டம் தான், குமிஞ்சு போய் ஒரே இடத்திலேயே போய் இருப்பது, அதே சாப்பாட்டை தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிப்பது என்று.

இவர்களை திருத்தவே முடியாது, கேள்வி கேட்டால் இனம் கூடித்தான் வாழ வேண்டும் என்று கதையளப்பு. 

உழைத்துப் பொருள் சேர்த்தவர்களிலும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை 

படிப்பும், கொஞ்சம் செல்வமும், மேலை நாட்டு நாகரிகமும் எமக்கு கொஞ்சம் பிந்திக் கிடைத்து இருந்தால் எங்களுக்கும் எதியோப்பியா எரித்திரியர்களுக்கும் வித்தியாசம் இருந்திருக்காது 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

ஏலே தல அசித்து….

குடியேற்றவாசிகளில் சிலர் தாங்கள்  குடியேறி செற்றிலான பின்பு புதிதாக குடியேற்றவாசிகள் வந்துவிட கூடாது என்பதில் முன்னுக்கு நிற்பார்கள் தானே 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம் ஆர்.ராதாவும் கவுண்டமணியும் சினிமாவை சினிமாவாக பாருங்கள் என எப்பவோ சொல்லிவிட்டார்கள். அதை வீட்டுக்குள் கொண்டு வந்தது  அரசியல்வாதிகளின் பிழைப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, விளங்க நினைப்பவன் said:

குடியேற்றவாசிகளில் சிலர் தாங்கள்  குடியேறி செற்றிலான பின்பு புதிதாக குடியேற்றவாசிகள் வந்துவிட கூடாது என்பதில் முன்னுக்கு நிற்பார்கள் தானே 

பழைய குடியேற்றவாசிகள் அந்தந்த நாட்டு மக்களை கத்தியால் குத்தவுமில்லை. சிறுமிகளை வன்புணர்வு செய்யவுமில்லை.சோசல் காசில் வாழவுமில்லை.பொது மக்கள் நிகழ்வுகளில் அந்த நாட்டு மக்களை கொலை செய்ததுமில்லை.

அதை ஆதரித்ததுமில்லை. கேடு கெட்ட கருத்துக்களுக்கு பச்சை இட்டதுமில்லை..
 
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விளங்க நினைப்பவன் said:

குடியேற்றவாசிகளில் சிலர் தாங்கள்  குடியேறி செற்றிலான பின்பு புதிதாக குடியேற்றவாசிகள் வந்துவிட கூடாது என்பதில் முன்னுக்கு நிற்பார்கள் தானே 

இதே தான் அமெரிக்க தேர்தலிலும் நடந்து ரம் வென்றும் விட்டார்.

On 17/1/2025 at 15:31, goshan_che said:

அத்தனை ரசிககுஞ்சுகளையிம் உசுப்பேத்தி, மன்றம் வைத்து, பற்பல கோடிகள் சம்பாதித்து செட்டில் ஆகி, இனி ரிட்டையர் ஆகி கார் ரேஸ் ஓட்டும் நேரம் சொல்லுவதில் ஒரு பயனும் இல்லை.

அஜித்துக்கும் மன்றம் இருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

பழைய குடியேற்றவாசிகள் அந்தந்த நாட்டு மக்களை கத்தியால் குத்தவுமில்லை. சிறுமிகளை வன்புணர்வு செய்யவுமில்லை.சோசல் காசில் வாழவுமில்லை.பொது மக்கள் நிகழ்வுகளில் அந்த நாட்டு மக்களை கொலை செய்ததுமில்லை.

அதை ஆதரித்ததுமில்லை. கேடு கெட்ட கருத்துக்களுக்கு பச்சை இட்டதுமில்லை..
 
🤣 80, 90, 2000 ம்களில் இலண்டனில் அரியாலை, மன்னார், கொட்டடி எனவும், கனடாவில் கண்ணன் குரூப் எனவும், பரிசில் இன்னும் பல பெயர்களில் எல்லாம் ரவுடித்தனம் பண்ணியது, வெள்ளைகளே…

அதே போல் கள்ள மட்டையில் 90,2000-2024 வரை கரைகண்டதும் குடியேற்றவாசிகள் அல்ல.

70,80,90,2000 ம்களில் இலண்டன் போதை வியாபாரத்தை கையில் வைத்திருந்தது யாடி கேங்ஸ் எனப்படும் மேற்கிந்திய தீவினர் அல்ல.

90,2000-2020 வரை பிரிதானியாவில் பல சிறுமிகளை கூட்டு வன்புணர்வு செய்தது பாகிஸ்தானிகள் அல்ல.

16 minutes ago, ஈழப்பிரியன் said:

இதே தான் அமெரிக்க தேர்தலிலும் நடந்து ரம் வென்றும் விட்டார்.

ஜேர்மன் தேர்தல் இன்னும் சில ஷாக்கிங் நீயூசை தரும் என நினைக்கிறேன்🤣

17 minutes ago, ஈழப்பிரியன் said:

அஜித்துக்கும் மன்றம் இருக்கிறதா?

ஓம் சில வருடங்கள் முன் நற்பணி மன்றம் ஆக்கி. பின் சும்மா மினகெட முடியாது என அதையும் கலைத்து விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 18/1/2025 at 11:49, ரசோதரன் said:

எங்களின் கல்வி முறை ஒரு அசட்டுத்துணிவைக் கொடுக்கின்றது. அளவில்லாத தன்னம்பிக்கையையும் கொடுத்துவிடுகின்றது. அங்கிருந்தே முன்முடிவுகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றிலிருந்து நாங்கள் வெளியே வருவதேயில்லை. 

இது எமது சமூகத்தில் படித்தவர்கள் என்றவுடன் அவர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை நிமித்தம் எமது சமூகத்தில் மட்டும் நிலவுகிற நிலை காணப்படுகிறது.

எமது கல்வி  காலனித்துவ நிர்வாக அடிப்படை நோக்கில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என கருதுகிறேன், பெரும்பாலும் இந்த கல்வியின் பிரச்சினை பெட்டிக்கு வெளியே நின்று சிந்திப்பதனை தவிர்த்து சிறிய மாற்றம் வழமையான வேலையில் ஏற்பட்டால் கூட என்ன செய்வதென தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் நிலை உள்ளவர்களாகவும், உறுதியான முடிவெடுக்க தெரியாதவர்களாகவும் இருக்கிறார்கள்.

இது ஓர் ஆட்ட்டு மந்தை போல சிந்திக்க மட்டும் வைப்பதற்கான கல்வி முறையாக இருக்கின்றது, குறிப்பிட்ட வேலையினை மிக சரியாக செய்தால் போதுமானது.

On 18/1/2025 at 12:06, பெருமாள் said:

தாங்கள் சொல்வதை மட்டும் கேள் என்பார்கள் ஒரு பத்து நிமிடம் என்னுடைய விளக்கத்தை கேள் என்றாலும் செவியில் வாங்கி கொள்ள மாட்டார்கள் ஒரு மாதிரி அவர்களின் பிழையை இரண்டு மணி நேர போராட்டங்களுக்கு பின் நிரூபித்தாலும் ஒரே வார்த்தையில் முடிப்பார்கள் "சாரி சார் நெக்ஸ் டைம் இந்த பிழை வராத போல் பார்த்து கொள்கிறோம் " என்பார்கள் .

எல்லோரும் அப்படியல்ல ஒரு 7௦ வீதம் அப்படிஎன்றால் 3௦ வீதம் கடும் உழைப்பாளிகள் ஆனால் அவர்களை தேடி கண்டு பிடிப்பது கல்லில் நார் உரிப்பது போல் .

ஒரு தவறு நிகழ்ந்தால் அது தவறு என்பதனை உணர்ந்து திருத்துவதற்கு பதிலாக பெரிய அளவிற்கு நிலமையினை மாற்றிவிடுகின்ற நிலை காணப்படுகிறது, இதற்கு காரணம் பரீட்சையில் கேள்விக்கு சரியான விடையினை வழங்கி வந்த ஒருவர் பரீட்சையில் ஏற்படும் பெறுபேறு குறைகள் அவர்களை பாதிக்கிறது, அது போல நடைமுறை வாழ்க்கையிலும் தாம்  மிக சரியாக இருக்க எதிர்பார்க்கிறார்கள் அதனால் தவறுகளை ஏற்றுகொள்ளும் பக்குவம் அவர்களிடம் இருப்பதில்லை.

On 18/1/2025 at 13:01, பகிடி said:

நீங்கள் மேலே குறிப்பிட்ட தமது பார்வையில் இருப்பது போல உலகம் இயங்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணம் 1940 களிலேயே படித்த சைவர்களுக்கோ அல்லது இன்றும் பல கிறிஸ்தவ குடும்பங்களிலோ ( சில தலைமுறையாக   இருப்பவர்கள் ) இருப்பதாக சொல்ல முடியாது. காரணம் அவர்கள் தமது சுற்றம், வட்டம் மதம், கலாசாரம் தாண்டி இன்னும் அதிகமானவற்றை உள்வாங்கியத்தோடு மட்டும் அல்லாமல்  அவற்றில் நடைமுறைக்கு உகந்ததை தமது வாழ்வியலாகவும் கொண்டு விட்டார்கள். 

மறுபுறம் மற்றவர்களோ யாழ்ப்பாணம் தாண்டி  போனது கிடையாது, மட்டக்களப்பு, திருகோணமலை கூடப் போனது இல்லை. ஆகக் கூடியது கதிர்காமத்துக்கு ஒரு நடை. 

பிள்ளைகளை யாழ் பல்கலைக்கழகம் தான் அனுப்புவார்கள், கொழும்பு அல்லது கண்டிக்கு அனுப்பினால் பிள்ளைகள் கெட்டு விடுமாம், ஆக இவர்களின் பிள்ளைகள் நிலையும் அதுதான்,

வெளிநாடு வந்த பின்னரும் சேரும் கூட்டமும் அதே தமிழ்க் கூட்டம் தான், குமிஞ்சு போய் ஒரே இடத்திலேயே போய் இருப்பது, அதே சாப்பாட்டை தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிப்பது என்று.

இவர்களை திருத்தவே முடியாது, கேள்வி கேட்டால் இனம் கூடித்தான் வாழ வேண்டும் என்று கதையளப்பு. 

உழைத்துப் பொருள் சேர்த்தவர்களிலும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை 

படிப்பும், கொஞ்சம் செல்வமும், மேலை நாட்டு நாகரிகமும் எமக்கு கொஞ்சம் பிந்திக் கிடைத்து இருந்தால் எங்களுக்கும் எதியோப்பியா எரித்திரியர்களுக்கும் வித்தியாசம் இருந்திருக்காது 

எனக்கு எதியோப்பிய, எத்ரித்திய நண்பர்கள் கிடைக்கவில்லை ஆனால் சூடான், சோமாலிய நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்கள் சிந்தனை  மிக சிறப்பாகவும் இருக்கும் ஆனால் சில விடயங்களில் விடாப்பிடியாக பிற்போக்குவாதிகளாக இருப்பார்கள் (பெண்கள் விடய்ததில்) அதற்கு மதம் ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் அதனை தவிர்த்து பார்த்தால் எம்மவர்களை விட அவர்கள் சிலபடி கூட என கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்).

வேலையிடத்தில் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பயிற்சி நிகழ்வில் ஒரு எழுத்து மூலமான செய்தி குறிப்பினை முதலாவதாக உள்ளவரிடம் கொடுத்து அதில் உள்ள விடயத்தினை அப்படியே அடுத்தவருக்கு வாய் மூலமாக சொல்லுமாறும், அதன் பின்னர் அந்த செய்தியினை கேட்டவர் அதே செய்தியினை அடுத்தவருக்கு வாய் மூலமாக சொல்லுமாறு கூறப்பட்டது, இது ஒரு பல் சமூகம் கொண்ட ஒரு அணியில் நிகழ்ந்தது இறுதியாக அந்த செய்தியினை கேட்டவர் அதனை பகிரங்கமாக செய்தியினை தெரிவிக்க வேண்டும்.

அந்த செய்தியினை கூறியவர்  மிக குறைந்த வரியில் சுருக்கமாக ஒரு செய்தியினை கூறினார் அதனை கேட்ட பெரும்பாலானோருக்கு அதிர்ச்சியாக இருந்தது ஒரு சாதாரண செய்தி ஒரு மோசமான செய்தியாக மாறியிருந்தது, எழுத்து மூலமாக கொடுக்கப்பட்ட செய்தியிலிருந்து முற்றிலும் வேறுபாடாக அந்த செய்தியிருந்தது.

இந்த விடயத்தில் பெரிய பங்கை வகித்தது அந்த அணியில் இருந்த ஒவ்வொருவரின் Perception தான் காரணம்.

அவர்களே அறியாமல் தமது புரிதல்களை செய்தியாக்கியுள்ளார்கள், எமது சமூகத்தில் உள்ள அடிப்படையான விடயங்களையே படித்தவர்களும் என கூறிகொள்ளப்படும் தர்ப்புகளும் தொடர்கின்றனர்.

அதிக கல்வி அறிவுகொண்ட சமூகம் என எம்மை நாமே கூறிக்கொண்டாலும் அந்த கல்வி அவர்களது சமூக பண்பாட்டு வளர்ச்சிக்கு எனத வகையிலும் உதவவில்லை.

தமது சரி பிழைகளை கூட உணரமுடியாத சிந்தனையற்றவர்களாகவே படித்தவர்களும் இருக்கிறார்கள், ரசோதரன் கூறுவது போல வெறும் தொழில்கல்வியாகவே எமது கல்வி உள்ளது, மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதனை அமைதியாக உள்வாங்க முடியாமல்,  தாங்களாகவே ஒரு அனுமானத்துடன் முடிவிற்கு வந்து தவறான புரிதல்களுடன் இருக்க்கிறார்கள், இதற்கு எல்லாம் தெரியும் எனும் மாயையினை தாமாகவே உருவாக்கி அதனை நம்புகின்றவர்களாகவும் மாறிவிடுகிறார்கள்.

எமது சமூகம் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகமாக இருந்தும் அதனை பற்றி கவலை கொள்ளாமல் மற்ற சமூகத்தில் உள்ள குறைபாடுகளை எள்ளி நகையாடுவதில் இன்பம் காணுபவர்களாக இருக்கிறோம், ஆனால் எமது சமூக மாற்றத்திற்கு இந்த கற்றவர்களின் பங்களிப்பு முற்று முழுதாக இல்லாத நிலையே காணப்படுகிறது, 

"மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே,. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" எமது சமூகத்தின் இந்த இழி நிலை சங்க காலத்திலிருந்து இருக்கின்றது என தெளிவாக தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

80, 90, 2000 ம்களில் இலண்டனில் அரியாலை, மன்னார், கொட்டடி எனவும், கனடாவில் கண்ணன் குரூப் எனவும், பரிசில் இன்னும் பல பெயர்களில் எல்லாம் ரவுடித்தனம் பண்ணியது, வெள்ளைகளே…

இஞ்ச பாருங்கோ, அந்த நேரத்தில் சோசியல் மீடியா இல்லை, you tube இல்லை, வெளி உலகத்தில் தமிழ் சமூகத்துக்கு கேட்ட பெயர் கொடுக்கக் கூடாது என்று இந்தியர் போர்வையில் அதை செஞ்சோம். 

இப்ப என்ன செய்தாலும் வெளியில் விஷயம் வந்துவிடும் என்பதால் அடக்கி வாசிக்கின்றோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, goshan_che said:

🤣 80, 90, 2000 ம்களில் இலண்டனில் அரியாலை, மன்னார், கொட்டடி எனவும், கனடாவில் கண்ணன் குரூப் எனவும், பரிசில் இன்னும் பல பெயர்களில் எல்லாம் ரவுடித்தனம் பண்ணியது, வெள்ளைகளே…

அதே போல் கள்ள மட்டையில் 90,2000-2024 வரை கரைகண்டதும் குடியேற்றவாசிகள் அல்ல.

70,80,90,2000 ம்களில் இலண்டன் போதை வியாபாரத்தை கையில் வைத்திருந்தது யாடி கேங்ஸ் எனப்படும் மேற்கிந்திய தீவினர் அல்ல.

90,2000-2020 வரை பிரிதானியாவில் பல சிறுமிகளை கூட்டு வன்புணர்வு செய்தது பாகிஸ்தானிகள் அல்ல.

என்ரை அப்பு,ராசா! அவனவன் தன்ரை சொந்த நாட்டிலை குற்றங்கள் அடாவடித்தனம் செய்யிறதுக்கும் வந்தான் வரத்தானுகள் அட்டகாசம் செய்யிறதுக்கும் வித்தியாசம் இருக்குத்தானே 😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

என்ரை அப்பு,ராசா! அவனவன் தன்ரை சொந்த நாட்டிலை குற்றங்கள் அடாவடித்தனம் செய்யிறதுக்கும் வந்தான் வரத்தானுகள் அட்டகாசம் செய்யிறதுக்கும் வித்தியாசம் இருக்குத்தானே 😂

ஐயா சாமி!

மேலே சொன்ன உதாரணங்கள் எல்லாம் 80-2010 வரை புலம்பெயர் நாட்டில் பழைய தமிழ் குடியேற்றவாசிகள் செய்த குழப்படிகள்.

நீங்கள் இப்படி சொன்னதுக்கான👇பதில் அது.

18 hours ago, குமாரசாமி said:

பழைய குடியேற்றவாசிகள் அந்தந்த நாட்டு மக்களை கத்தியால் குத்தவுமில்லை. சிறுமிகளை வன்புணர்வு செய்யவுமில்லை.சோசல் காசில் வாழவுமில்லை.பொது மக்கள் நிகழ்வுகளில் அந்த நாட்டு மக்களை கொலை செய்ததுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

ஜேர்மன் தேர்தல் இன்னும் சில ஷாக்கிங் நீயூசை தரும் என நினைக்கிறேன்🤣

🤣

ஓம்   AFD இனவெறி கட்சி  அவர்கள் சொல்வதை  பார்த்திருப்பீர்கள் நல்ல சிறப்புக்கள் நடைபெறலாம்.

அகதி என்பவர் அவர்களுக்கு அதாவது ஈழ தமிழர்கள் சிங்களவர்களிடம் அடிவாங்கினால் அவர்களின் பிராந்தியத்தில் உள்ள  இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கே செல்ல வேண்டுமாம். ரோஹிங்கிய அகதிகள் மியன்மாரிலிருந்து இலங்கைக்கு வந்தது போன்று.   அந்த பிராந்தியததை சேர்ந்தோர்க்கு மட்டுமே அங்கே உரிமை என்னும் இந்த கட்சி மற்றய அகதிகளை மட்டுமல்ல   ரஷ்ய தாக்குதல்களில் இருந்து தப்பிவந்த உக்ரைன் அகதிகள் அனைவரையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்கின்றதாம்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, goshan_che said:

ஐயா சாமி!

மேலே சொன்ன உதாரணங்கள் எல்லாம் 80-2010 வரை புலம்பெயர் நாட்டில் பழைய தமிழ் குடியேற்றவாசிகள் செய்த குழப்படிகள்.

நான் ஜேர்மனிக்குள் நிற்கிறேன்.😂
பிரான்ஸ்,லண்டன்,கனடாவுக்குள் வரவில்லை. வரவும் மாட்டன்.😷
உங்களுக்கு ஜேர்மனிக்குள் நடக்கும் வெளிநாட்டவர் பிரச்சனைகள் தெரியாது என நினைக்கின்றேன். பொது மக்களின் அவலங்களும் தெரியவில்லை தெரியாமல் இருக்கலாம்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நான் ஜேர்மனிக்குள் நிற்கிறேன்.😂
பிரான்ஸ்,லண்டன்,கனடாவுக்குள் வரவில்லை. வரவும் மாட்டன்.😷
உங்களுக்கு ஜேர்மனிக்குள் நடக்கும் வெளிநாட்டவர் பிரச்சனைகள் தெரியாது என நினைக்கின்றேன். பொது மக்களின் அவலங்களும் தெரியவில்லை தெரியாமல் இருக்கலாம்.🤣

நான் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதில்லை 🤣.

மேலும் ஜேர்மனி இன்னுமொரு ஐரோப்பிய நாடு, உலகின் 4  வது பொருளாதாரம். அதாவது பத்தோடு பதினொன்று அத்தோடு ஜேர்மனியும் ஒன்று 🤣.  

ஆனால் குடியேற்றம் என்பது உலகளாவிய பிரச்சனை அதை தனியே ஜேர்மனியை மட்டும் வைத்து அந்தகன் யசிகா ஆனந்தை பார்த்தது போல் பார்க்க முடியாது.

அதே போல், கீழே உள்ள கருத்து தனியே குடியேற்றவாசிகள் என்றே இருந்தது. ஜேர்ம்னியில் அல்லது நான் ஜேர்மனியில் வாழும் ஸ்டட்டில் உள்ள குடியேற்றவாசிகள் என்று இருக்கவில்லை🤣.

On 18/1/2025 at 23:15, குமாரசாமி said:

பழைய குடியேற்றவாசிகள்

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

நான் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதில்லை 🤣.

மேலும் ஜேர்மனி இன்னுமொரு ஐரோப்பிய நாடு, உலகின் 4  வது பொருளாதாரம். அதாவது பத்தோடு பதினொன்று அத்தோடு ஜேர்மனியும் ஒன்று 🤣.  

ஆனால் குடியேற்றம் என்பது உலகளாவிய பிரச்சனை அதை தனியே ஜேர்மனியை மட்டும் வைத்து அந்தகன் யசிகா ஆனந்தை பார்த்தது போல் பார்க்க முடியாது.

அதே போல், கீழே உள்ள கருத்து குடியேறிகள் என்றே இருந்தது. ஜேர்ம்னியில் அல்லது நான் ஜேர்மனியில் வாழும் ஸ்டட்டில் என்று இருக்கவில்லை🤣.

கோசான்! நீங்கள் இன்னும் உழைக்க வேண்டும். பட பாஷையில் சொல்லணும் எண்டா தீயா வேலை செய்யணும் கோசான் 😂

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

கோசான்! நீங்கள் இன்னும் உழைக்க வேண்டும். பட பாஷையில் சொல்லணும் எண்டா தீயா வேலை செய்யணும் கோசான் 😂

உங்கள் ஆசி இருந்தால்….இமயம் கூட காலடியில்😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

🤣

ஓம்   AFD இனவெறி கட்சி  அவர்கள் சொல்வதை  பார்த்திருப்பீர்கள் நல்ல சிறப்புக்கள் நடைபெறலாம்.

அகதி என்பவர் அவர்களுக்கு அதாவது ஈழ தமிழர்கள் சிங்களவர்களிடம் அடிவாங்கினால் அவர்களின் பிராந்தியத்தில் உள்ள  இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கே செல்ல வேண்டுமாம். ரோஹிங்கிய அகதிகள் மியன்மாரிலிருந்து இலங்கைக்கு வந்தது போன்று.   அந்த பிராந்தியததை சேர்ந்தோர்க்கு மட்டுமே அங்கே உரிமை என்னும் இந்த கட்சி மற்றய அகதிகளை மட்டுமல்ல   ரஷ்ய தாக்குதல்களில் இருந்து தப்பிவந்த உக்ரைன் அகதிகள் அனைவரையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்கின்றதாம்.

எனக்கு ஒரு விபரீத ஆசை.

இப்படி நடக்ககூடாது, ஆனால் ஒரு சிலருக்கு தாம் கொப்பில் இருந்து மரத்தை வெட்டியதன் பலனை பார்த்து…கோஷான் ராசா நீங்கள் சொன்னது சரிதான் அப்பு என ஏற்கும் ஒரு நிலை வரவேண்டும் என என் மனது சில சமயம் விபரீதமாக சிந்திப்பதுண்டு.

அது இதுதான்.

AfD ஆட்சிக்கு வரவேண்டும். ஜேர்மனியை ஈயுவில், ஐரோப்பிய மனித உரிமை சாசனத்தில் இருந்து AfD விலக்க வேண்டும்.

AKD ஆட்சிமாற்றம் அத்தோடு இலங்கையில் ஜனநாயகம் திரும்பி விட்டது என அறிவித்து, ஜேர்மனியில் இருந்து மீள வருவோர் அனைவருக்கும் இலங்கையில் நிபந்தனை அற்ற பொதுமன்னிப்பு என AfD, AkD ஒப்பந்தம் போட வேண்டும்.

இந்த ஒப்பந்தத்தின் படி 1945 க்கு பின் ஜேர்மனி வந்த அனைவரும், அவர்களின் வம்சாவழியினரும், ஜேர்மன் பாஸ்போர்ட் இருப்பினும் இலங்கைக்கு திருப்பி அனுப்பபட வேண்டும். ஜேர்மன் கலப்பின பிள்ளைகள் மட்டும் தங்கலாம்.

இலண்டன் லூட்டன் ஏர்போட்டில் சனம் அலை மோதும்.

அப்போ நான் அங்கே போய் I told you so என சொல்ல வேண்டும்.

இந்த விபரீத ஆசை நடக்கவே கூடாது. ஆனால் சிலசமயம் நடந்தால் நல்லா இருக்கும் என்றும் தோன்றும்.

பிகு

மேலே விபரித்த விடயம் அப்படி ஒண்டும் நடக்கவியலாத கற்பனை அல்ல. யூதருக்கு ஒரு final solution கொடுக்கபட்ட நாட்டில், அதே நிலை ஏனைய இனங்களுக்கு ஏற்படலாம்.

History doesn’t repeat itself but it often rhymes

- Mark Twain -

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, goshan_che said:

சும்மா வெறிக்கதை எழுதக்கூடாது கோசான்..😂
இஞ்சை வந்த வெளிநாட்டுக்காரர் ஒழுங்காய் வேலைக்கு போய் வரியை கட்டிக்கொண்டு தாங்களும் தங்கட பாடும் எண்டு இருந்தால் ஏன் இந்த Afd போன்ற கட்சிகள் உருவாகப்போகுது? 😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.