Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நந்தன் said:

பொறுங்கோ நாளைக்கு ஒருத்தருக்கு அறுதியா எழுதிக்குடுக்காம விடுறேல்ல

@வாத்தியார் இன் புண்ணியத்தில் எது நடந்தாலும் கவலை இல்லை!

tenor.gif

  • Replies 1.3k
  • Views 38.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    எட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்தாலும் இப்ராஹிம் ஸட்ரானின் அதிரடியான 177 ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகளை இழந்து சவாலான 325 ஓட்டங்களை எடுத்த

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: திருத்தப்பட்டுள்ளது   சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும், 

  • கிருபன்
    கிருபன்

    ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்த்தான் அணி நிலைத்து ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து சராசரியான 241 ஓட்டங்களை எடுத்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

நாங்கள் மெதுவாக, ஆனால் உறுதியாக முன்னேறிக்கொண்டு இருக்கின்றோம்!😃 ஆகவே, நாளை அல்வாயன் முதல்வர் ஆகாமல் இருக்க வைரவர் சூலம்🔱 வச்சிருக்கு 😁

பைரவர் மடைக்காக 5 ஆடு ,10 கோழி நேர்ந்து விட்டதோடை....விசேடமாக வெளிநாட்டு மதுபான வகைகளையும் வைத்து படைப்பதாக வேண்டியுள்ளேன்...

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, நந்தன் said:

நிலைமாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவே....

எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்
காலம் காலம் சொல்ல வேண்டும் யாரோ உண்மை அறிவார்🤣

9 minutes ago, கிருபன் said:

@வாத்தியார் இன் புண்ணியத்தில் எது நடந்தாலும் கவலை இல்லை!

🙌

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வாத்தியார் said:

@வாத்தியார் இன் புண்ணியத்தில் எது நடந்தாலும் கவலை இல்லை!

பையனைப் பார்த்துக் கொப்பி பண்ணி.......எழுத வெளிக்கிட்டு....

சீ நீ எல்லாம் ஒரு வாத்தி பையன்களை பார்த்து எழுத வெக்கமா இல்லை

எண்டு ரகுவரன் குரல் அசரீரியாக வர ....

செய்த வேலையால் இன்று...........

கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள் ......🙃

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, alvayan said:

இது எனக்கு விளங்கவில்லை..

அடுத்த முதல்வராக வர உங்களுக்கு வாய்புள்ளதாம். நாளைய முடிவுகள் அடிப்படையில்.

51 minutes ago, alvayan said:

விசேடமாக வெளிநாட்டு மதுபான வகைகளையும் வைத்து படைப்பதாக வேண்டியுள்ளேன்...

அல்வாய் எண்டால் ஓக்கே.

சாவச்சேரி பக்கம் எண்டால் பெடியள் சரக்கை போட்டு விட்டு பிரின்சிபால்ட மண்டைய பொளந்துடுவானுகோ🤣

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வாத்தியார் said:

பையனைப் பார்த்துக் கொப்பி பண்ணி.......எழுத வெளிக்கிட்டு....

சீ நீ எல்லாம் ஒரு வாத்தி பையன்களை பார்த்து எழுத வெக்கமா இல்லை

எண்டு ரகுவரன் குரல் அசரீரியாக வர ....

செய்த வேலையால் இன்று...........

கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள் ......🙃

உங்க‌ளை கால்ப‌ந்து க‌ணிப்பில் வெல்ல‌ முடியாது வாத்தி அண்ணா................நான் காலையில் எழுந்த‌தும் ப‌ல்லு தீட்ட‌மாய் , அமெரிக்க‌ன் விளையாட்டு ஸ்கோர் கிரிக்கேட் ஸ்கோர் பார்த்து விட்டுத் தான் ம‌ற்ற‌ வேலைக‌ளை செய்வேன்...........ஜ‌ரோப்பிய‌ ப‌க‌ல் நேர‌ங்க‌ளில் ந‌ட‌க்கும் கிரிக்கேட்டை பார்ப்பேன்

2009க்கு முன் கிரிக்கேட் விளையாட்டை அதிக‌ம் விரும்பி பார்ப்பேன் தின‌ம‌ல‌ர் இணைய‌த்தில் கிரிக்கேட் செய்திக‌ள் வாசிப்பேன்.................2009 இன‌ அழிப்பு ந‌ட‌ந்த‌ போது ம‌ன‌ உளைச்ச‌லுக்கு ஆளாகி அதில் இருந்து மீண்டு வ‌ர‌ ப‌ல‌ மாத‌ம் எடுத்த‌து அதோட‌ இணைய‌ செய்திக‌ள் கிரிக்கேட் மைச்சுக‌ள் பெரிசா பார்ப்ப‌தில்லை

2011ம் ஆண்டு உல‌க‌ கோப்பைக்கு பிற‌க்கு கிரிக்கேட்டை தொட‌ர்ந்து பாப்பேன்..............கிரிக்கேட் ப‌ற்றி என‌து ந‌ண்ப‌ர்கள் கேட்டாலும் ச‌ரியான‌ விள‌க்க‌த்தை கொடுப்பேன்...................

இது சும்மா பொழுது போக்குக்கு யாழில் ந‌ட‌க்கும் போட்டி தானே கொப்பி அடிப்ப‌தில் த‌வ‌றில்லை

சிரிப்பே நிர‌ந்த‌ர‌ம் வாழ்த்தி அண் ண்ணா

நான் ஏன் குமார‌சாமி தாத்தாவை தொட‌ர்ந்து க‌ல‌ந்துக்க‌ சொல்லுகிற‌ நான் அவ‌ர் இதுக்கை எழுதுவ‌தை வாசித்து சிரிக்க‌...............ஒரு பிர‌ச்ச‌னையும் இல்லை ஆள்ளை ஆள் கொப்பி அடிப்ப‌து Just Fun vadthi Anna😁👍.......................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

குல்டிப் பவ‌ர் பிலே ஓவ‌ருக்கை போட‌ மாட்டார்

முத‌ல் பவ‌ர் பிலே 10 ஓவ‌ர் வ‌ரை

40ஓவ‌ரில் இருந்து 45ஓவ‌ர் வ‌ரை இர‌ண்டாவ‌து ப‌வ‌ர் பிலே

முத‌ல் 10 ஓவ‌ரையும் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் தான் போடுவின‌ம் அப்ப‌டி அவேன்ட‌ ப‌ந்துக்கு அடி விழுந்தால் அஸ்ச‌ர் ப‌ட்டெல் போடுவார் சுழ‌ல் ப‌ந்தை

10 ஓவ‌ர் பவ‌ர் பிலே முடிந்தாப் பிற‌க்கு துணிந்து ப‌ந்து போட‌லாம் பில்ட‌ர்க‌ள் முன்னுக்கு நிக்க‌ மாட்டின‌ம் 55மீட்ட‌ர் த‌ள்ளித் தான் நிப்பின‌ம் ம‌ட்டை வீர‌ர்க‌ள் தூக்கி அடிச்சால் ப‌ந்து வேக‌மாய் போகாட்டி அது கைச்சுக்கு போகும்..............

இந்தியா மைதானங்க‌ள் ப‌ல‌ வித‌ம்

ஏன் குல்டிப்ப இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் ஜ‌பிஎல்ல‌ ஒரு அணியும் இவ‌ரை வாங்க‌ வில்லை...............இவ‌ர் உத்திர‌ பிர‌தேஸ் மானில‌த்தை சேர்ந்த‌வ‌ர்................முன்பெல்லாம் டெல்லி ம‌ற்றும் உத்திர‌ பிரதேஸ் வீர‌ர்க‌ளின் ஆதிக்க‌ம் தான் இந்திய‌ அணியில்.....................இத‌னால் 2005 த‌மிழ் நாட்டில் பெரும் போராட்ட‌ம் வெடிச்ச‌து இந்திய‌ அணியில் த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளுக்கு திற‌மை இருந்தும் புர‌க்க‌னிக்கின‌ம் என்று.............பிற‌க்கு காவ‌ல்துறை ப‌ல‌ரை கைது செய்து...............அத‌ற்க்கு பிற‌க்கு த‌மிழ் நாட்டை சேர்ந்த‌ வீர‌ர்க‌ளுக்கு வாய்ப்பு கொடுத்த‌வை...................

அப்பேக்க‌ த‌மிழ‌க‌ வீர‌ர் பாலாஜிக்கு இந்தியா அணியில் சில‌ வ‌ருட‌ம் நிர‌ந்த‌ இட‌ம் கிடைச்ச‌து...................இப்ப‌டி இந்தியா தேர்வுக்குழுவில் ப‌ல‌ குள‌று ப‌டிக‌ள் இருக்கு...................................

மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌ல் அவுஸ்ரேலியாவில் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் அடிச்ச‌ 99ர‌ன்ஸ் தான் இந்தியா டென்ஸ்ட் ச‌ம்பிய‌ன் பின‌லுக்கு வ‌ர‌க் கார‌ண‌ம் இந்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ டெஸ்ட் தொட‌ரை அவுஸ்ரேலியா வென்றாலும்

வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் விக்கேட் எடுப்ப‌தோட‌ நிக்காம்மா காவ் செஞ்சேரி அடிச்சார் , இன்னொரு மைச்சை ச‌ம‌ நிலை ஆக்க‌ நீண்ட‌ நேர‌ம் மைதான‌த்தில் ப‌ந்து வ‌ரும் திசையை பார்த்து ம‌ட்டைய‌ ச‌ரியா கையான்டார்................இப்ப‌டி ப‌ட்ட‌ அனுப‌வம் மிக்க‌ வீர‌ர் இருக்கும் போது மார்கெட்டில் கீரை விக்க‌ த‌குதியான‌ குல்டிப்ப‌ அணியில் சேர்த்த‌து அர‌சிய‌ல் உள் நோக்க‌ம் மாதிரி தெரியுது...................ஜ‌பிஎல்ல‌ இவ‌ரின் ப‌ந்துக்கு ஒரு க‌ட்ட‌த்தில‌ அடி விழ‌ KKR அணி இவ‌ரை க‌ல‌ட்டி விட்ட‌வை அத‌ன் பிற‌க்கு இவ‌ர் விலை போக‌ வில்லை

போன‌ வ‌ருட‌ம் டெல்லிக்கு விளையாடினார்....................நீங்க‌ள் ஏன் குல்டிப்பை த‌லையில் தூக்கி வைச்சு கொண்டாடுறிங்க‌ள் என்று என‌க்கு புரிய‌ வில்லை

பாக்கிஸ்தான் தொட‌ரின் போது குல்டிப்பை சேர்த்தால் அணிக்குத் தான் பாத‌ம்.....................................

சுந்தருக்கு வாய்ப்பு கொடுக்காமைக்கு காரணமான வலது ஆட்டக்காரர்களுக்கு இலகுவாக இருக்கும் ஆனால் பட்டேல் மற்றும் ஜடேயா பந்து வலது கை ஆட்டக்காரர்களுக்கு மட்டைக்கு வெளியே பந்து செல்லும் அத்துடன் பந்தை 12 மணியளவு கோனத்தில் வளமையாக போடுவது போலல்லாமல் 10 மணியளவு கோணத்தில் போடுவார்கள் அது தரையில் பந்து படும் பகுதியினை பொறுத்து கிடையாக வேகமாகவோ அல்லது பந்து தங்கி மெதுவாகவோ வரும் அதற்கு ஏற்ப துபாய் ஆடுகளமும் உள்ளது.

பொதுவாக பட்டேல்,ஜடேஜா, சுந்தர் இந்த மூவரும் இந்த துபாய் ஆடுகளத்தில் அதிகமான உதவிகளை மணிக்கட்டினை பயன்படுத்தி பந்துவீசுபவர்கள் போல பெற முடியாது, ஆனால் அந்த இரண்டு குஜராத்தியர்களின் பந்து வீச்சுஆடுகளம் மற்றும் வலது கை ஆட்டக்காரர்களுக்கெதிராக பலனுள்ளதாக இருக்கும்.

வருணிற்கு சகலதுறை திறமை இருந்தால் அவர்தான் அணித்தேர்வில் முதல் தெரிவாக இருப்பார்(வருணும் யாதவும்தான் மணிக்கட்டு பந்து விச்சாளர்கள்)

ஆனால் வருணின் மிஸ்ரி ஸ்பின்னர் எனும் விடயத்தினை கொடுப்பதற்கு பயன்படுத்தப்படும் விரல்கள் மூலம்(வருண் மணிக்கட்டினையும் விரல்கலையும் ஒருங்கே பாவித்து மாற்றங்களை ஏற்படுத்துபவர்) சிறந்த மட்டையாளர்கள் பந்தினை (அவரை முன்னர் எதிர் கொண்ட வீரர்கள்) இலகுவாக கணித்துவிடுவர், ஆனால் குல்டீபின் கையிலிருந்து பந்தை கணிப்பது மிக கடினம்.

இந்த ஒரு காரணத்தினாலேயே அவரை தெரிவு செய்கிறார்கள் என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, vasee said:

KKR க‌ல‌ட்டி விட்ட‌ கோம‌ன‌ம் தான் குல்டிப்.................

Screenshot-20250222-002609-ESPNCricinfo.

வ‌ங்கிளாதேஸ்சுக்கு எதிரா போட்டியில் இவ‌ரை 6வ‌தா ப‌ந்து போட‌ விட்டும்..........விக்கேட் எதும் எடுக்க‌ வில்லை

அஸ்ச‌ர் ப‌ட்ட‌ல் ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கையும் ப‌ந்தை போட்டு 2விக்கேட்டும் எடுத்து இருக்கிறார்...............குல்டிப் போட்ட‌ ஓவ‌ர் கூட‌ ப‌வர் பிலே இல்லாத‌ ஓவ‌ர்...........பவ‌ர் பிலே ஓவ‌ருக்கை வஸ்சின்ட‌ன் சுந்த‌ர் ப‌ல‌ மைச்சில் போட்டு இருக்கிறார்................விஸ்னேஸ் விளையாட்டான‌ ஜ‌பிஎல்ல புர‌க்கனிக்கப் ப‌ட்ட‌ வீர‌ர் எப்ப‌டி சிற‌ந்த‌ வீர‌ரா இருக்க முடியும்

ச‌ரி ஞாயிற்றுக் கிழ‌மை ந‌ட‌க்கும் விளையாட்டில் குல்டிப்பால் முத‌ல் 10ஓவ‌ர் போட‌ முடியுமா பாக் வீர‌ர்க‌ள் இவ‌ரின் ப‌ந்துக்கு சாத்தி போடுவாங்க‌ள்..............

என‌து கிரிக்கேட் பார்வையில் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் எந்த‌ மைதான‌த்திலும் திற‌மைய‌ வெளிக்காட்டும் சிற‌ந்த‌ த‌மிழ‌க‌த்து வீர‌ர்...............நான் சுந்த‌ருக்கு 100/ 90 கொடுப்பேன்

குல்டிப்பின் ப‌ந்து வீச்சுக்கு 100/ 35 கொடுக்க‌ மாட்டேன்...............கில்டிப்பை ப‌ற்றி விவாதிச்சு எங்க‌ட‌ நேர‌த்தை வீன் அடிக்க‌ வேண்டாம் அண்ணா

ஏதும் ந‌ல்ல‌தை இந்த‌ திரியில் எழுதுவோம்👍................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

சுருக்கமாக கூறி முடிக்கிறேன், கிரிக்கெட்டில் ஒரு அணியின் மிக சிறந்த பந்துவீச்சாளர் (அல்லது துடுப்பாட்ட வீரர்) காணப்பட்டால் இரன்டு வகையான உத்திகளை கையாள்வார்கள்.

1. ஆரம்பத்திலேயே அவர்களை தாக்கி ஆடுவது.

2. தவிர்த்து ஆடுவது

இதில் எதனை தெரிவு செய்வதென்பது

எந்த வகையான கிரிக்கெட் (டெஸ்ட், ODI, T20), ஆடுகளத்தின் தன்மை, அணியின் துடுப்பாட்ட வரிசை (batting strength) என்பதனை பொறுத்தது.

அதனாலேயே பெரும்பாலும் பெறுபேறுகளை மட்டும் கவனத்தில் எடுப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

https://postimg.cc/SJ940SPM

இது நேற்றைய தென்னாபிரிக்க ஆப்கானிஸ்தான் போட்டியில் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு விபரம்.

ஆப்கானிஸ்தான் அணியின் எக்ஸ் பக்டர் பிளேயராக இருப்பவர் ரஸீட் கான், தென்னாபிரிக்காவின் திட்டம் அவரது பந்துவீச்சில் விக்கெட் இழக்காமல் சராசரியாக ஓட்டங்களை எடுப்பது அதாவது தவிர்த்தாடுவது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, vasee said:

நானும் இதை கவனித்தேன்.

90 களின் ஆரம்பத்தில் பாகிஸ்தானில், வசீம், வக்கார், முஷ்டாக் அஹ்மட் (பின்பு சக்லீன் முஷ்டாக்) பந்து வீசுவார்கள்.

நாலாவது அக்யூப் ஜாவிட், ஐந்தாவதாக சலீம் மலீக் - ஆமீர் சொஹில். இவர்களின் 20 ஓவர்களைதான் அடிக்க டார்கெட் பண்ணுவார்கள்.

அதுவும் மலீக் மெதுவாக ஓடி வந்து விக்கெட் டு விக்கெட் போடுவார்.

அடிக்கப்போய், வசீம், வக்காரிடம் இருந்து காப்பாற்றிய விக்கெட்டை இவரிடம் இழப்பவர்களும் அதிகம் 🤣.

பிகு

போட்டியில் என் தெரிவுகளில் ஒருவர் ரசீட். ஆனால் நேற்று ஒண்டும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைக்காலங்களில் சொதப்பிக்கொண்டிருக்கும் இங்கிலாந்தா அல்லது முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாத அவுஸ்திரேலியாவா இன்று வெல்லும் என யோசித்து குழம்பி இங்கிலாந்தினை தெரிவு செய்திருந்தேன். இங்கிலாந்து பந்து வீச்சில் ஓரிருவாரை தவிர பெரியதாக நம்பிக்கையில்லை. இங்கிலாந்தின் துடுப்பட்டத்தினை நம்பித்தான் இங்கிலாந்தினை தெரிவு செய்துள்ளேன். Travis Head , Maxwell அதிரடி ஆட்டம் காட்டினால் இங்கிலாந்துக்கு கடினம். பார்ப்பம்

  • கருத்துக்கள உறவுகள்
On 18/2/2025 at 00:20, கிருபன் said:

கடைசி இடத்திற்கா முதல் இடத்திற்கா?🤡

ஆசை ஆரை விட்டுது !!😁

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி ரியான் ரிக்கெல்ரனின் சதத்துடன் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 315 ஓட்டங்களை எடுத்திருந்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் 43.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் 208 ஓட்டங்களுக்குப் பறிகொடுத்தது.

முடிவு: தென்னாபிரிக்கா அணி 107 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ஆப்கானிஸ்தான் வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

image.png

ஒரே நாளில் 1 இல் இருந்து 15 ஆம் இடத்திற்கு...

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

சுந்தருக்கு வாய்ப்பு கொடுக்காமைக்கு காரணமான வலது ஆட்டக்காரர்களுக்கு இலகுவாக இருக்கும் ஆனால் பட்டேல் மற்றும் ஜடேயா பந்து வலது கை ஆட்டக்காரர்களுக்கு மட்டைக்கு வெளியே பந்து செல்லும் அத்துடன் பந்தை 12 மணியளவு கோனத்தில் வளமையாக போடுவது போலல்லாமல் 10 மணியளவு கோணத்தில் போடுவார்கள் அது தரையில் பந்து படும் பகுதியினை பொறுத்து கிடையாக வேகமாகவோ அல்லது பந்து தங்கி மெதுவாகவோ வரும் அதற்கு ஏற்ப துபாய் ஆடுகளமும் உள்ளது.

பொதுவாக பட்டேல்,ஜடேஜா, சுந்தர் இந்த மூவரும் இந்த துபாய் ஆடுகளத்தில் அதிகமான உதவிகளை மணிக்கட்டினை பயன்படுத்தி பந்துவீசுபவர்கள் போல பெற முடியாது, ஆனால் அந்த இரண்டு குஜராத்தியர்களின் பந்து வீச்சுஆடுகளம் மற்றும் வலது கை ஆட்டக்காரர்களுக்கெதிராக பலனுள்ளதாக இருக்கும்.

வருணிற்கு சகலதுறை திறமை இருந்தால் அவர்தான் அணித்தேர்வில் முதல் தெரிவாக இருப்பார்(வருணும் யாதவும்தான் மணிக்கட்டு பந்து விச்சாளர்கள்)

ஆனால் வருணின் மிஸ்ரி ஸ்பின்னர் எனும் விடயத்தினை கொடுப்பதற்கு பயன்படுத்தப்படும் விரல்கள் மூலம்(வருண் மணிக்கட்டினையும் விரல்கலையும் ஒருங்கே பாவித்து மாற்றங்களை ஏற்படுத்துபவர்) சிறந்த மட்டையாளர்கள் பந்தினை (அவரை முன்னர் எதிர் கொண்ட வீரர்கள்) இலகுவாக கணித்துவிடுவர், ஆனால் குல்டீபின் கையிலிருந்து பந்தை கணிப்பது மிக கடினம்.

இந்த ஒரு காரணத்தினாலேயே அவரை தெரிவு செய்கிறார்கள் என கருதுகிறேன்.

மிகவும் துல்லியமாக விளக்கியுள்ளீர்கள். ஆடுறவனுக்குத்தான் தெரியும் ஆட்ட நுணுக்கங்கள்.

புரிதல் என்பது ஒரு வரம்.

4 hours ago, கந்தப்பு said:

அண்மைக்காலங்களில் சொதப்பிக்கொண்டிருக்கும் இங்கிலாந்தா அல்லது முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாத அவுஸ்திரேலியாவா இன்று வெல்லும் என யோசித்து குழம்பி இங்கிலாந்தினை தெரிவு செய்திருந்தேன். இங்கிலாந்து பந்து வீச்சில் ஓரிருவாரை தவிர பெரியதாக நம்பிக்கையில்லை. இங்கிலாந்தின் துடுப்பட்டத்தினை நம்பித்தான் இங்கிலாந்தினை தெரிவு செய்துள்ளேன். Travis Head , Maxwell அதிரடி ஆட்டம் காட்டினால் இங்கிலாந்துக்கு கடினம். பார்ப்பம்

அதேதான். இங்கிலாந்து அடி வெளுக்கப் போறாங்கள். ரூட் ஒருபக்கம் கட்டையைப் போட, மிச்ச எல்லாரும் அடிதான் இன்றைக்கு. பார்த்து அனுபவியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு இங்கிலாந்து ஏமாத்தினால் முட்டை வைக்க இடம் இல்லாமல் போகும் .😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

ஒரே நாளில் 1 இல் இருந்து 15 ஆம் இடத்திற்கு...

இதுதான் அதல பாதாள வீழ்ச்சி🤪

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கந்தப்பு said:

அண்மைக்காலங்களில் சொதப்பிக்கொண்டிருக்கும் இங்கிலாந்தா அல்லது முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாத அவுஸ்திரேலியாவா இன்று வெல்லும் என யோசித்து குழம்பி இங்கிலாந்தினை தெரிவு செய்திருந்தேன். இங்கிலாந்து பந்து வீச்சில் ஓரிருவாரை தவிர பெரியதாக நம்பிக்கையில்லை. இங்கிலாந்தின் துடுப்பட்டத்தினை நம்பித்தான் இங்கிலாந்தினை தெரிவு செய்துள்ளேன். Travis Head , Maxwell அதிரடி ஆட்டம் காட்டினால் இங்கிலாந்துக்கு கடினம். பார்ப்பம்

இதை தான் நான் நேற்று இர‌வே எழுதி நான்

இங்லாந்தின் ப‌ந்து வீச்சில் என‌க்கு ந‌ம்பிக்கை இல்லை

அவுஸ் முன்ன‌னி வீர‌ர்க‌ள் விளையாட‌த‌தால் தான் இங்லாந்தை தெரிவு செய்தேன்

அவுஸ் நாண‌ய‌த்தில் வென்று ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கின‌ம்..............உந்த‌ மைதான‌த்தில் இங்லாந் ம‌ட்டை அடி வீர‌ர்க‌ள் குறைந்த‌து 335 ர‌ன்ஸ் அடிச்சால் தான் அவுஸ்ரேலியாவை வெல்ல‌ முடியும்............

இங்லாந் வீர‌ர்கள் ர‌ன்ஸ் அடிப்பின‌ம் ஆனால் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் சுத‌ப்பினால் தோல்வி தான்

இங்லாந் வெற்றி பெற்றால் ம‌கிழ்ச்சி..............................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

ஒரே நாளில் 1 இல் இருந்து 15 ஆம் இடத்திற்கு...

அரசியல் ஒரு பரமபதம்🤣

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ…

இன்பத்தில் ஆடுது என் மனமே…

காலை எழும்பும் போதே ஒரு நல்ல செய்தியுடன் எழும்பினேன்.

அதே போல் இன்று அவுஸ் வெல்லும் என்றே மனது சொல்லிறது.

இங்கிலாந்து வென்றாலும் ஓக்கே.

புள்ளிகள் போனாலும் நம்ம பெ.பி வென்ற சந்தோசம் இருக்கும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இதுதான் அதல பாதாள வீழ்ச்சி🤪

1 hour ago, goshan_che said:

அரசியல் ஒரு பரமபதம்🤣

இந்திய பங்குவிலை கூட இவ்வளோ வேகமா விழுந்திருக்காது!

LIVE

4th Match, Group B (D/N), Lahore, February 22, 2025, ICC Champions Trophy

England FlagEngland (21.1/50 ov) 147/2

Australia FlagAustralia

Australia chose to field.Stats view

Current RR: 6.94 • Last 5 ov (RR): 34/0 (6.80)

Live Forecast:ENG 317

  • கருத்துக்கள உறவுகள்

வழமையாக அவுஸ், இந்தியா போன்ற நாடுகளில் திறமைக்கு பஞ்சம் இராது. பெரிய வீரர்கள் காயம்படும் போது உள்ளே வரும் புது வீரர்களிடமும் ஒரு பொறி இருக்கும்.

இந்த அவுஸ் வேக பந்து வீச்சாளர்களில் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. மிலிட்டரி மீடியம் பந்து வீச்சால் தொடர்களை வெல்ல முடியாது. ஸ்பின்னர்களும் விக்கெட் எடுக்கும் பந்துகளை வீசுவதாக தெரியவில்லை.

இங்கிலாந்து late collapse பண்ணுவதில் விண்ணர்கள்🤣.

இல்லாவிட்டால் 350 சாத்தியம்.

ஆஸ்ரேலியாவின் ஒரே நம்பிக்கை - லாகூரின் பனிப்பொழிவுதான் போல கிடக்கு🤣

  • கருத்துக்கள உறவுகள்

இனி கியரை மாத்தலாம் .

மத்த மாதிரி மாத்தி போட்டங்கள். ☹️

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இங்கிலாந்து வென்றால் மகிழ்ச்சி.இங்கிலாந்து இப்பொழுது நன்றாக விளையாடிக்கொண்ருக்கிறது. பந்துவீச்சில் சொதப்பாமல் இருந்தால்சரி.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, சுவைப்பிரியன் said:

இனி கியரை மாத்தலாம் .

மத்த மாதிரி மாத்தி போட்டங்கள். ☹️

கூல் ட‌வுன்

இங்லாந் வீர‌ர்க‌ள் ஒரு க‌ட்ட‌த்தில் 366 ர‌ன்ஸ் அடிக்கும் நிலை இருந்த‌து

எப்ப‌டியும் 335ர‌ன்ஸ்ச‌ தாண்டுவின‌ம்...................

வெற்றி ந‌ம‌தே என்று நினைப்போம்.................ஹ‌ரி வுரொக் வ‌ந்த‌ கையோட‌ அவுட் ஆகி வெளிய‌ போன‌து ஏமாற்ற‌ம் தான் , இப்போது ப‌ட்ட‌ல‌ர் ம‌ற்றும் வீன் டொக்க‌ர் இருவ‌ரும் சிற‌ப்பாக‌ விளையாடுகின‌ம்.......................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.