Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேதாஜியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக  மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

  "நேதாஜியின் ஐ.என்.ஏ-வில் தமிழர்கள் பெருவாரியாக இருந்தார்கள். அதில் முத்துராமலிங்கத் தேவர் மிகப்பெரும் பங்காற்றினார். அதனால் நேதாஜிக்கு மரியாதை செலுத்தி வருகிறோம்.

காரைக்குடியில் தமிழக முதல்வர் நிலை தடுமாறி பேசி உள்ளார். வள்ளுவரையும் வள்ளலாரையும் களவாட பார்க்கிறார்கள் என்று பேசியுள்ளார். களவாடுவது, கள்ள ரயிலில் செல்வது திராவிட ஸ்டாக்குகளின் வழக்கம். வள்ளுவர் யார்? வள்ளலார் யார்? அடிப்படை ஞானம் இல்லாத ஒருவர் தமிழகத்தின் முதல்வராக உள்ளார். அறம் பொருள் இன்பம் வீடு என்ற சனாதன இந்து தர்மத்தின் அடிப்படையில் தான் திருக்குறள் கட்டமைக்கப்பட்டுள்ளது. பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்று வள்ளுவர் சொன்னதும் கீதையில் கண்ணன் சொல்வதும் ஒன்றே. நான்கு வர்ணங்களைப் பற்றி வள்ளுவர் எழுதியிருக்கிறார். வள்ளுவரை விட சனாதனி உண்டா? பல இடங்களில் ஹிந்து தெய்வங்களைப் பற்றி வள்ளுவர் பேசியுள்ளார். திருக்குறளை தங்க தட்டில் இருக்கும் மலம் என்று பெரியார் பேசினார். வள்ளலார் திருநீறில்லாமல் இருந்திருக்கிறாரா? முருகன் தோத்திரத்தையும், மகாதேவ மாலை என்று சிவனைப் பற்றி எழுதியிருக்கிறார்.

வள்ளலார் பெருமகனாரை விட மிகச்சிறந்த ஹிந்து உண்டா? விவரமில்லாத உதயநிதி ஸ்டாலின், சனாதன இந்து தர்மத்தை அழிப்பேன் என்று இழிவாகப் பேசினார். அதற்காக அவர் மீது நாடு முழுவதும் பல வழக்குகள் உள்ளது. சனாதனம் என்று சொன்னால் இந்து மதம் என்று உச்ச நீதிமன்றமே சொல்லியுள்ளது. அதனால் களவாடுவது, கள்ள ரயில் ஏறி வருவது போன்ற திராவிட மாடலோட நாங்கள் போட்டி போட வரவில்லை. முதல்வர் சரியாக பேச வேண்டும். உங்களை விட களவாணி கூட்டம் இல்லை.

அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கம் குறித்து மத்திய அரசு விரைவில் அறிவிக்கும். அறிவிக்க தாமதம் ஆனால் என்ன, குடிகெட்டுப் போய்விடுமா? நீட் கொண்டு வந்தது திமுக அமைச்சர் காந்தி செல்வன், அதற்கு எதிராக பேசுகிறார்களா? ஹைட்ரோ கார்பன் எடுக்க கையெழுத்து போட்டவர் மு.க.ஸ்டாலின். ஆனால், கடைசியில் மக்களிடம் நடிப்பார்கள். அதுபோல் அரிட்டாபட்டி திட்டத்திலும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் திமுக அரசு நடந்துகொண்டது. எப்படியும் மத்திய அரசு ஹட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்தியது போல டங்ஸ்டன் திட்டத்தை நிறுத்திவிடும்.

பரந்தூருக்கு சென்ற விஜய், தான் முன்னேற்றத்திற்கு எதிரானவன் அல்ல என்று பேசுகிறார், விமான நிலையம் வேண்டும், ஆனால் பரந்தூரில் வேண்டாம் என்கிறார். விமான நிலையத்தை எங்கு கொண்டு வரவேண்டும் என்று விஜய், விவசாயிகளிடம் பேசி ஒப்பந்தத்தை வாங்கி கொடுத்தால், மத்திய அரசு அங்கு விமான நிலையத்தை அமைக்கும். என்ன நடக்குது தமிழ்நாட்டில், எல்லா அரசியல்வாதிகளும் தற்குறிகள். அவர்களுக்கு பிரச்னைகள் புரிவதில்லை. நாங்கள் தற்குறிகளுக்கு எதிராக எதிர் நீச்சல் போட வேண்டியுள்ளது.

" சீமான் பெரியார் குறித்து பேசுவதற்கு பின்னணியில் பாஜக உள்ளதா? என்ற கேள்விக்கு,  "சந்தேகமே இல்லாமல் ஈவெராவைப் பற்றி முதன் முதலில் பேசியது ஹெச்.ராஜாதான், 2013-ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் ஈவெரா ஒரு தேச துரோகி என்று பற்றி பேசினேன். ஏனென்றால், 1947 ஆகஸ்ட் 15 துக்க தினம், கருப்புக்கொடி ஏற்ற வேண்டும் என்று சொல்லிய ஈ.வெ.ரா ஒரு தேச துரோகி. அது மட்டுமல்ல, தமிழ் விரோதி, தமிழ் மீது பற்று உள்ள எவரும் குச்சியால் கூட ஈவெராவை தொட மாட்டான், தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழை படிக்காதீர்கள் தமிழிலை படித்தால் பிச்சைக்காரனாக கூட இருக்க முடியாது, வேலைக்காரியோடு ஆங்கிலத்தில் பேசு, பொண்டாட்டியோடு ஆங்கிலத்தில் பேசு என்று பேசிய ஈவெரா, பட்டியலின மக்களின் முதல் எதிரி.

ஹெச்.ராஜா
 
ஹெச்.ராஜா
 
மீனாட்சியம்மன் கோயில் நுழைவு போராட்டம் வைத்தியநாத ஐயர் தலைமையில் நடந்தபோது பட்டியல் இன மக்கள் கோயிலுக்குள் போகக்கூடாது, அப்படி போனால் சூத்திரன் பார்ப்பான் அளவிற்கு உயர மாட்டான் என்று பேசியவர் ஈவெரா. ஏற்றத்தாழ்வில் நம்பிக்கை கொண்டவர் ஈவெரா. இவர்கள் சமூக நீதி பேசலாமா?

    சாமி சிதம்பரனார் எழுதிய புத்தகத்தில் ஈவெரா விலைமாதர் வீடுகளுக்கு நண்பரோடு போவார் என்று எழுதியுள்ளார். அதனால்தான் இன்று கூட்டு பலாத்காரம் நடக்கிறது. பெண்களை போகப்பொருளாக அடிமையாக வைத்திருந்தவரைத்தான் பெரியார் என்கிறோம். இது சாமி சிதம்பரனார் எழுதியது, வழக்கு போடுவதாக இருந்தால் அவர் மீது போடுங்கள். அதனால் ஈவெராவைப் பற்றி முதலில் பேசியது ஹெச்.ராஜாதான். சீமான் பேசுவதை ஆதரிக்கிறேன். அவர் வீட்டை முற்றுக்கையிட்டது முட்டாள்களின் செயல்..." என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்… அண்ணாமலை…. மாரிதாஸ்…. எச் ராஜா 

 A team batting order ல B team கேப்டன ஓப்னரா இறக்கி இருக்கானுவோ🤣 

  • கருத்துக்கள உறவுகள்

1900 அளவுகளில் உலகம் முழுவதும் சமுதாய வர்க்க சமய ரீதியாக புரட்சிகள் நடந்தன . அவற்றை நடத்த ஆங்காங்கே தலைவர்கள் உருவானார்கள். தமிழ் நாட்டில் அப்படி ஒருவர் உருவாக வேண்டிய தேவையை இயற்கை கொடுத்தது. ஈவேரா அந்த வகையில் தலைவரானார். 

வாழ்வு முழுவதும் விதியால் கட்டுப்படுத்தப்படுகின்றது, ஆகவே கேள்விக்கு இங்கு இடம் இல்லை, இந்தப் பிறப்பில் என்ன துன்பம் வந்தாலும் அதை ஏற்று நட, அப்பொழுது அடுத்த பிறப்பு நல்ல பிறப்பாக அமையும் என்று 99. 99% மக்கள் நம்பிய ஒரு காலத்தில்,இந்தக் கருத்தாக்கத்துக்கு காரணமான அந்த நம்பிக்கையை அடித்துத் துவைத்தவர் ஈவேரா. 

அவர் தன்னை தற்க் காத்துக்கொண்டு கருத்துக்களை சொல்லவில்லை. எது சரியனப் படுகின்றதோ அதை அவர் வெளிப்படையாக வெளியே சொல்லி இருக்கின்றார்.

இன்றைய இந்திய சூழலில் தமிழ் நாடு வளர்ந்து இருக்க ஆங்கிலம் முதல்க் காரணம். இன்று இலங்கைத் தமிழர்கள் பின் தங்கி விடவும் ஆங்கிலப் புலமை இன்மை இன்னொரு காரணம். அப்படிப் பார்க்கும் பொழுது அவரின் அவர் அன்று சொன்னது சரியாகவே படுகின்றது 

ஒருவர் சமூகத்துக்கு என்ன செய்தார் என்று பார்க்க வேண்டுமே ஒழிய அவரின் தனிப்பட்ட வாழ்வு எமக்குத் தேவையற்றது. அதைப் பற்றிக் கவலை அவரின் மனைவிக்கோ பிள்ளைகளுக்கோ இருக்கட்டும்  எமக்கு அது தேவையற்றது 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பகிடி said:

பெரியாரை அடைமொழி தவிர்த்து ஈவேரா என அழைக்கும் (இதில் எந்த தப்பும் இல்லை - அதுதான் அவர் பெயர்) - அளவுக்கு பெரியார் மீது ஈடுபாடு அற்ற ஒருவராக இருப்பினும் - அவரின் தாக்கம் பற்றிய உங்கள் கருத்து மிக நடுநிலையாக உள்ளது👍.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2025 at 02:13, goshan_che said:

சீமான்… அண்ணாமலை…. மாரிதாஸ்…. எச் ராஜா 

 A team batting order ல B team கேப்டன ஓப்னரா இறக்கி இருக்கானுவோ🤣 

அப்ப சாமி சிதம்பரனார் எழுதியது பொய்யா கோபாலு?? புத்தகத்தில் வேற எழுதியிருக்கிறாராம்!

On 25/1/2025 at 06:38, பகிடி said:

ஒருவர் சமூகத்துக்கு என்ன செய்தார் என்று பார்க்க வேண்டுமே ஒழிய அவரின் தனிப்பட்ட வாழ்வு எமக்குத் தேவையற்றது. அதைப் பற்றிக் கவலை அவரின் மனைவிக்கோ பிள்ளைகளுக்கோ இருக்கட்டும்  எமக்கு அது தேவையற்றது 

அதே!

  • கருத்துக்கள உறவுகள்
On 25/1/2025 at 05:38, பகிடி said:

ஒருவர் சமூகத்துக்கு என்ன செய்தார் என்று பார்க்க வேண்டுமே ஒழிய அவரின் தனிப்பட்ட வாழ்வு எமக்குத் தேவையற்றது. அதைப் பற்றிக் கவலை அவரின் மனைவிக்கோ பிள்ளைகளுக்கோ இருக்கட்டும்  எமக்கு அது தேவையற்றது 

உங்களுக்கு பெரியார் ரத்தம் 

இதையே சீமானுக்கு என்றால் தக்காளி 🍅 👋

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, விசுகு said:

உங்களுக்கு பெரியார் ரத்தம் 

இதையே சீமானுக்கு என்றால் தக்காளி 🍅 👋

நான் ஒருபோதும் சீமானின் தனிப்பட்ட வாழ்வு பற்றி பேசியதில்லை. ஆனால் கேள்வி என்னவென்றால் சீமான் சமூகத்துக்கு என்ன செய்து இருக்கின்றார் என்பது தான். 

வை கோபலசாமி போன்றோர் தமிழர்களுக்கும் ஈழத்து மக்களுக்கும் செய்த உதவிகளில்,  காட்டிய பாசத்தில் ஒரு துளி கூட சீமான் செய்தது கிடையாது. 

செய்த உதவி எல்லாம் பிரபாகரனையும் புலிகளையும் எமது போராட்டத்தையும் நாறடித்து, ஈழத்தமிழர் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் கெடுத்து, எங்கள் மேல் அளவுகடந்த பாசத்தை காட்டிய, எங்களுக்காக சிறை சென்ற, அடி வாங்கிய, எமக்கு உதவப் போய் தன் குடும்பத்தை கரை சேர்க்க முடியாமல்ப் போன, திராவிட இயக்க, பெரியாரிய இயக்க தோழர்களை எமக்கு எதிரிகளாக்கி ரசித்தது மட்டுமல்லாமல் 

வீட்டில் பெற்ற தாயையே தூசணத்தில் திட்டும் மூதேசிகளை, தெருச்சந்தியில்  நின்று தண்ணி அடித்த கூட்டத்தை, Al பாஸ் பண்ணாத கூட்டத்தை,ஊரில்  ஒன்றுக்கும் உதவாததுகள் என்பதாலும், காதல் தோல்வியாலும்   வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கூட்டத்தை, சுடர் ஒளி, உதயன் போன்ற தரத்தில் தாழ்ந்த பத்திரிகை செய்திகளைக் கூட வாசிக்காத கூட்டத்தை, இவர்களுடன் எல்லாம் சேரக்கூடாது என்று பெற்றோர் சொல்வார்கள் அல்லவா அந்தக் கழுசறைகளை ஈழத்தின் முகவரி ஆக்கிவிட்டது தான் 

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகிடி said:

சீமான் இந்தளவுக்கு மனிதத்தன்மை அற்று பேசியதில்லை. மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு மற்றும் பிரிவுகள் சார்ந்த சிந்தனை உடைய உங்களை போன்றவர்கள் ஆபத்தான பேர்வழிகள். இதுக்கு ஒரு லைக் வேற. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பகிடி said:

Al பாஸ் பண்ணாத கூட்டத்தை,

A/L பாஸ்பண்ணினவனுக்கு ரெண்டு கொம்பு முளைச்சிருக்கு மற்றவனுக்கு இல்லையா..?

ஊரில 60வீதத்துக்கும் கூடின மக்கள் ஏலெவலில் ஏதோ ஒருபாடம் இல்லா எல்லாம் பெயில்தான்..

ஆனால் அவர்கள்தான் இந்த இனத்தின் பெரும்பான்மை சமூகம்..

என்ர அம்மா அப்பாகூட ஏலெவல் பாஸ்பண்ணேல்லதான்.. அதுக்காக அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழாமல் விடேல்ல..

என்ர அம்மா அப்பா போல எத்தனையோ அம்மா அப்பாக்கள் ஏலெவல் பாஸ்பண்ணேல்ல ஆனால் அவர்கள் தங்கட பிள்ளையள் நல்லா இருக்கவேணும் எண்டு தம்மை உருக்கி தம்பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள் வளர்க்கிறார்கள்..

ஏலெவல் பாஸ்பண்ணாதவர்கள் சமூகத்தில் நன்றாக உழைத்து தாமும் முன்னேறி தம் குடும்பத்தையும் முன்னேற்றி இந்த சமூகத்தில் நல்ல உதாரணமனிதர்களாக வாழ்கிறார்கள்..

ஏலெவல் பாஸ்பண்ணி படிச்சு பட்டம் எடுத்தும் உழைச்சு திண்ண களவில அப்பன் ஆத்தாவின் சோத்தை முப்பது நாப்பது வயசு ஆனாப்பிறகும் ஓசியில வெக்கமே இல்லாமல் திண்டுகொழுத்துகொண்டு றோட்டில நிண்டு கொண்டு உழைத்து கெளரவமாக வாழும் துப்புரவு தொழிலாளர்களை நக்கலடிக்குமாப்போல வேசம்போட்டு அரசாங்கத்திட்ட வேலைப்பிச்சை கேட்டதுகள் கிழட்டு மூதேவிகள்..

இதுல ஆர் உயர்ந்தவர்கள்..? 

ஏலெவல் பாசாகாட்டியும் உழைத்து கெளரவமாக வாழும் துப்புரவு தொழிலாளர்களா இல்லாட்டி ஏலெவல் பாசாகியும் ஆறாவது அறிவு விருத்தி அடையாத சோம்பேறிகளா..?

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சரி Al பாஸ் பண்ணாத என்ற வாக்கியத்தை தவிர்த்து விட்டு மீதியைப் படியுங்கள். 

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

சரி Al பாஸ் பண்ணாத என்ற வாக்கியத்தை தவிர்த்து விட்டு மீதியைப் படியுங்கள். 

வாசகர் இலகு கருதி இதை திருத்தங்களுடன் மீள் பிரசுரம் செய்கிறேன்.

கீழே உள்ள லிஸ்டில் தாம் இருப்பதாக கருதுவோர் முறையிட்டால் - லிஸ்ட் மீள் பரிசீலனை செய்யப்படும்.

————

வீட்டில் பெற்ற தாயையே தூசணத்தில் திட்டும் மூதேசிகளை, தெருச்சந்தியில்  நின்று தண்ணி அடித்த கூட்டத்தை, ஊரில்  ஒன்றுக்கும் உதவாததுகள் என்பதாலும், காதல் தோல்வியாலும்   வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கூட்டத்தை, சுடர் ஒளி, உதயன் போன்ற தரத்தில் தாழ்ந்த பத்திரிகை செய்திகளைக் கூட வாசிக்காத கூட்டத்தை, இவர்களுடன் எல்லாம் சேரக்கூடாது என்று பெற்றோர் சொல்வார்கள் அல்லவா அந்தக் கழுசறைகளை ஈழத்தின் முகவரி ஆக்கிவிட்டது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

மல்லாக்க கிடந்து துப்பி இல்ல இல்ல யோசிச்சு இருக்கிறியள்.. எத்தின சீறோ கொக் முடிஞ்சுது..?😂😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

மல்லாக்க கிடந்து துப்பி இல்ல இல்ல யோசிச்சு இருக்கிறியள்.. எத்தின சீறோ கொக் முடிஞ்சுது..?😂😂

🤣 இப்ப சீரோ கோக் விட்டாச்சு…Apple Tango Zero🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பகிடி said:

வை கோபலசாமி போன்றோர் தமிழர்களுக்கும் ஈழத்து மக்களுக்கும் செய்த உதவிகளில்,  காட்டிய பாசத்தில் ஒரு துளி கூட சீமான் செய்தது கிடையாது. 

செய்த

முற்றிலும் உண்மை    நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

.

————

வீட்டில் பெற்ற தாயையே தூசணத்தில் திட்டும் மூதேசிகளை, தெருச்சந்தியில்  நின்று தண்ணி அடித்த கூட்டத்தை, ஊரில்  ஒன்றுக்கும் உதவாததுகள் என்பதாலும், காதல் தோல்வியாலும்   வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கூட்டத்தை, சுடர் ஒளி, உதயன் போன்ற தரத்தில் தாழ்ந்த பத்திரிகை செய்திகளைக் கூட வாசிக்காத கூட்டத்தை, இவர்களுடன் எல்லாம் சேரக்கூடாது என்று பெற்றோர் சொல்வார்கள் அல்லவா அந்தக் கழுசறைகளை ஈழத்தின் முகவரி ஆக்கிவிட்டது தான்.

இதில் குறிக்கும் புலம்பெயர் தமிழர்கள் தான் எமது இலட்சிய தாயகத்தை பிறரது உதவிகள் எதுவும் இன்றி எவரிடமும் பிச்சை எடுக்காது நடாத்த உதவினர். வரலாறு பதிந்து செல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, விசுகு said:

இதில் குறிக்கும் புலம்பெயர் தமிழர்கள் தான் எமது இலட்சிய தாயகத்தை பிறரது உதவிகள் எதுவும் இன்றி எவரிடமும் பிச்சை எடுக்காது நடாத்த உதவினர். வரலாறு பதிந்து செல்லும்.

அண்ணை வழமையாக தரம்தாழ்ந்து பதிவிடும் என்னைப்போல் படிப்பறிவற்றவர்களை விடுங்கள்..ஆனால் இங்கு சீமான் சம்பந்தப்பட்ட திரிகளில் அண்மைக்காலமாக சகட்டு மேனிக்கு தரம் தாழ்ந்து அர்ச்சனைகளை பதிவிடுபவர்கள் எல்லாம் யாரென்று பார்த்தால் மெத்த படித்த நபர்களா தம்மை தாமே சொல்பவர்களாக உள்ளனர்....

அப்படியெனில் ஒரே ஒரு காரணம்தான்...

ஒருவன் எவ்வளவு படித்தாலும் பொது ஞானம் என்பது வளரவில்லை என்பதே... அவர்களின் சீமான்மீதான தரம்தாழ்ந்த பதிவுகளை படிக்கும் போது அவர்கள் மீது பரிதாபம் தான் எழுகிறது…

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அண்ணை வழமையாக தரம்தாழ்ந்து பதிவிடும் என்னைப்போல் படிப்பறிவற்றவர்களை விடுங்கள்..ஆனால் இங்கு சீமான் சம்பந்தப்பட்ட திரிகளில் அண்மைக்காலமாக சகட்டு மேனிக்கு தரம் தாழ்ந்து அர்ச்சனைகளை பதிவிடுபவர்கள் எல்லாம் யாரென்று பார்த்தால் மெத்த படித்த நபர்களா தம்மை தாமே சொல்பவர்களாக உள்ளனர்....

அப்படியெனில் ஒரே ஒரு காரணம்தான்...

ஒருவன் எவ்வளவு படித்தாலும் பொது ஞானம் என்பது வளரவில்லை என்பதே... அவர்களின் சீமான்மீதான தரம்தாழ்ந்த பதிவுகளை படிக்கும் போது அவர்கள் மீது பரிதாபம் தான் எழுகிறது…

சீமான் எதிர்ப்பு என்ப‌து அவ‌ர்க‌ளுக்கு பிடிச்ச‌ க‌ண்ணுக்கு தெரியாத‌ நோய் ஓணாண்டி

இதுக‌ள் என்ன‌த்தை வெட்டி கிழிச்ச‌துக‌ள் என்று பார்த்தால்

கால‌ம் கால‌மாய் எம‌க்காக‌ குர‌ல் கொடுப்ப‌வ‌ர்க‌ளை கொட்டி தீர்ப்ப‌து...............இது என்ன‌ பிழைப்பு சீமானை பிடிக்கா விட்டால் ஓர‌மாய் ஒதுங்கி நிக்க‌னும்

ம‌க்க‌ள் முன்ன‌ள் ஒரு இன‌த்துக்கு ந‌ட‌ந்த‌ கொடுமையை ப‌ல‌ கெடு பிடிக‌ளுக்கு ம‌த்தியில் ஒருத‌ன் உர‌க்க‌ சொல்லுவ‌து இவ‌ர்க‌ளுக்கு பிடிக்க‌ வில்லை போல் இருக்கு.....................

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அண்ணை வழமையாக தரம்தாழ்ந்து பதிவிடும் என்னைப்போல் படிப்பறிவற்றவர்களை விடுங்கள்..ஆனால் இங்கு சீமான் சம்பந்தப்பட்ட திரிகளில் அண்மைக்காலமாக சகட்டு மேனிக்கு தரம் தாழ்ந்து அர்ச்சனைகளை பதிவிடுபவர்கள் எல்லாம் யாரென்று பார்த்தால் மெத்த படித்த நபர்களா தம்மை தாமே சொல்பவர்களாக உள்ளனர்....

அப்படியெனில் ஒரே ஒரு காரணம்தான்...

ஒருவன் எவ்வளவு படித்தாலும் பொது ஞானம் என்பது வளரவில்லை என்பதே... அவர்களின் சீமான்மீதான தரம்தாழ்ந்த பதிவுகளை படிக்கும் போது அவர்கள் மீது பரிதாபம் தான் எழுகிறது…

இதில் வேடிக்கை என்னவென்றால் சீமானுக்கு நல்ல வார்த்தைகள் பேச வராது என்று பார்த்தால் இங்கு சீமான் சம்பந்தப்பட்ட திரிகளில் அண்மைக்காலமாக சகட்டு மேனிக்கு தரம் தாழ்ந்து அர்ச்சனைகளை பதிவிடுபவர்கள் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

இதில் வேடிக்கை என்னவென்றால் சீமானுக்கு நல்ல வார்த்தைகள் பேச வராது என்று பார்த்தால் இங்கு சீமான் சம்பந்தப்பட்ட திரிகளில் அண்மைக்காலமாக சகட்டு மேனிக்கு தரம் தாழ்ந்து அர்ச்சனைகளை பதிவிடுபவர்கள் தான். 

இவர்கள் எல்லாம்,

வீட்டில் பெற்ற தாயையே தூசணத்தில் திட்டும் மூதேசிகளை, தெருச்சந்தியில்  நின்று தண்ணி அடித்த கூட்டத்தை, ஊரில்  ஒன்றுக்கும் உதவாததுகள் என்பதாலும், காதல் தோல்வியாலும்   வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கூட்டத்தை, சுடர் ஒளி, உதயன் போன்ற தரத்தில் தாழ்ந்த பத்திரிகை செய்திகளைக் கூட வாசிக்காத கூட்டத்தை, இவர்களுடன் எல்லாம் சேரக்கூடாது என்று பெற்றோர் சொல்வார்கள் அல்லவா 

அந்தக் கழுசறைகள் லிஸ்ட்டில் சேர்க்கப்படவேண்டியவர்கள்…

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அட

தங்களை பற்றியே தூற்றவும் மூளை வேண்டும் என்பார்கள்?

🤣

  • கருத்துக்கள உறவுகள்

தயிரைக் கடைந்தார்கள் அது வெண்ணையைத் தந்தது.

ரோகன வியையவீராவைக் கடைந்தார்கள் அது இன்று அவர் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தைத் தந்தது.

வைத்தியர் அர்ச்சுனாவைக் கடைந்தார்கள் அது அவருக்கு இன்று பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தந்தது.

தற்போது சீமானைக் கடைகிறார்கள் அது அவருக்கு என்ன தரும் என்று பார்க்கலாம்.🤔🤩

  • கருத்துக்கள உறவுகள்

மரியாதைக்குரிய சீமான் அவர்கள், ஆதாரம் ஏதும் இல்லாமல் - தாயை புணர் என பெரியாரோ வேறு சிரியாரோ எவரோ சொன்னார்களாம் என சொல்கிறார்.

அதை கண்டிக்க துப்பில்லை.

ஆனால் இப்படி சொல்வது தன் மனவக்கிரத்தை ஏனையவர் மீது சுமத்தி இன்பம் காணும் செக்ஸ் சைக்கோதனம் என சொன்னால் - குய்யோ, முறையோ என கத்துகிறார்கள், தரம் தாழ்ந்துவிட்டதாம் என கதறுகிறார்கள்.

பிகு

இலவச படிப்பு கன்னங்கர போட்ட பிச்சை.

காசு கட்டி படித்தது பெற்றார் போட்ட பிச்சை.

பாட்ஷா பட வில்லன் சொன்ன மாதிரி, இப்பதான் நாங்கள் கல்லூரி கரஸ்பாண்டன்ஸ், ஆனால் அடிப்படையில் நாங்களும் கழுசறையள்தான்🤣.

கழுசறைதனமாக கதைப்பவருக்கு அவர் பாணியிலேயே பதில் வரும்.

3 minutes ago, Paanch said:

தற்போது சீமானைக் கடைகிறார்கள் அது அவருக்கு என்ன தரும் என்று பார்க்கலாம்.🤔🤩

பாற்கடலை பாம்பை கொண்டு கடைந்த போது விசம் வந்தது.

பாம்பை பிதுக்கினால் விசம்தான். 

கக்க வைக்கப்படுவார்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Paanch said:

தயிரைக் கடைந்தார்கள் அது வெண்ணையைத் தந்தது.

ரோகன வியையவீராவைக் கடைந்தார்கள் அது இன்று அவர் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தைத் தந்தது.

வைத்தியர் அர்ச்சுனாவைக் கடைந்தார்கள் அது அவருக்கு இன்று பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தந்தது.

தற்போது சீமானைக் கடைகிறார்கள் அது அவருக்கு என்ன தரும் என்று பார்க்கலாம்.🤔🤩

ஒருவேளை ஆமைக் கொழுப்புக் கிடைக்கலாம்!😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இதில் குறிக்கும் புலம்பெயர் தமிழர்கள் தான் எமது இலட்சிய தாயகத்தை பிறரது உதவிகள் எதுவும் இன்றி எவரிடமும் பிச்சை எடுக்காது நடாத்த உதவினர். வரலாறு பதிந்து செல்லும்.

அப்படியே சேர்த்த காசையும் தாக மிகுதியால் லபக்கியியும் கொண்டார்கள்.

இதை இப்பவே பதிவில் வைத்தாயிற்று. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாலி said:

ஒருவேளை ஆமைக் கொழுப்புக் கிடைக்கலாம்!😂

சீமான் அர‌சிய‌லில் வ‌ள‌ந்தால் உங்க‌ளை மாதிரியான‌ ஆட்க‌ள் இப்ப‌ இருக்கும் முக‌ மூடிய‌ க‌ழ‌ட்டி விட்டு இன்னொரு முக‌ மூடிய‌ போடுவின‌ம்

இது நான் 2009க்கு பிற‌க்கு க‌ற்றுக் கொண்ட‌ பாட‌ம்.........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.