Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   03 FEB, 2025 | 11:22 AM

image
 
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபரும் நிர்வாகியுமான தேசமான்ய கந்தையா பலேந்திரா (கென்) தனது 85ஆவது வயதில் காலமானார்.

1940 ஆம் ஆண்டு பிறந்த பாலேந்திரா இலங்கையிலும் அதன் பிராந்தியத்திலுள்ள நிறுவனங்களில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 

மிகப்பெரிய கூட்டு நிறுவனமான John Keells Holdings Ltd இன் முதல் இலங்கைத் தலைவராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார்.

அவர் பிரண்டிக்ஸ் லங்கா லிமிடெட் மற்றும் கொமன்வெல்த் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தெற்காசிய பிராந்திய நிதியத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/205660

  • கருத்துக்கள உறவுகள்

மிகப் பெரிய தொழில் அதிபர் என்றுபத்திரிகையில் உள்ளது.
பெயரைப் பார்க்க, தமிழாராகவும் இருக்குது.
ஆனால்… இவரின் பெயரை முன்பு கேள்விப் பட்டதே இல்லை.

அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

மிகப் பெரிய தொழில் அதிபர் என்றுபத்திரிகையில் உள்ளது.
பெயரைப் பார்க்க, தமிழாராகவும் இருக்குது.
ஆனால்… இவரின் பெயரை முன்பு கேள்விப் பட்டதே இல்லை.

அனுதாபங்கள்.

கென் பாலேந்திரா என  (பலேந்திரா என வீரகேசரி எழுத்து பிழை விட்டுள்ளது) கேள்விபட்டிருப்பீர்கள்?

ஜோன்கீல்ஸ், பிரண்டிக்ஸ் இரெண்டுமே இலங்கையின் முதன்மை வர்த்த நிறுவனங்கள்.

அனுர ஜனாதிபதியாக முன்னர், என் பி பி பக்கம் ஆதரவுகரம் நீட்டிய முதல் வர்தக பிரமுகர்களில் ஒருவர். 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

கென் பாலேந்திரா என  (பலேந்திரா என வீரகேசரி எழுத்து பிழை விட்டுள்ளது) கேள்விபட்டிருப்பீர்கள்?

ஜோன்கீல்ஸ், பிரண்டிக்ஸ் இரெண்டுமே இலங்கையின் முதன்மை வர்த்த நிறுவனங்கள்.

அனுர ஜனாதிபதியாக முன்னர், என் பி பி பக்கம் ஆதரவுகரம் நீட்டிய முதல் வர்தக பிரமுகர்களில் ஒருவர். 

தகவலுக்கு நன்றி.
ஆனாலும் இவரின் பெயரை முன்பு கேள்விப் பட்ட நினைவு வரவில்லை.
ஆர்ப்பாட்டம் இல்லாமல், தொழில் செய்துள்ளார் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

https://en.m.wikipedia.org/wiki/Kandiah_Balendra
 
14 minutes ago, தமிழ் சிறி said:

தகவலுக்கு நன்றி.
ஆனாலும் இவரின் பெயரை முன்பு கேள்விப் பட்ட நினைவு வரவில்லை.
ஆர்ப்பாட்டம் இல்லாமல், தொழில் செய்துள்ளார் போலுள்ளது.

ஆர்ப்பாட்டம் இல்லைத்தான், ஆனால் இலங்கையில் 1990 க்கு பின் இருந்தோர் கட்டாயம் இவரை பற்றி கேள்விபட்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.    🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய தொழிலதிபர் கென் பாலேந்திரா காலமானார்

இலங்கையின் பெருநிறுவனத் தலைவரும் நிர்வாகியுமான தேசமான்ய கந்தையா ("கென்") பாலேந்திரா இன்று தனது 85ஆவது வயதில் காலமானார்.

இந்த தகவலை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் - இனுவில் பகுதியில் பிறந்த பாலேந்திரா கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர். 1940 இல் பிறந்த பாலேந்திரா இலங்கையிலும் தெற்காசிய பிராந்திய வலயத்திலும்  செல்வாக்குமிக்க பல நிறுவன பதவிகளை வகித்துள்ளார். 

பல பதவிகள் 

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முதலாவது இலங்கைத் தலைவரான இவர், இறக்கும் போது பொதுநலவாய அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடமையாற்றியிருந்தார்.

சிலருக்கு கென் என்றும் சிலருக்கு பாலா என்றும் அறியப்பட்ட பாலேந்திரா ஒரு புகழ்பெற்ற நபராக இருந்தார்.

முக்கிய தொழிலதிபர் கென் பாலேந்திரா காலமானார் | Ken Balandra Passes Away

பாடசாலை காலத்தில் சிறந்த ரகர் வீரராக திகழ்ந்த பாலேந்திரா, பெருந்தோட்ட நிர்வாகியாகவும் ஆற்றல் மிக்க கூட்டாண்மை தலைவராகவும் தன்னை உருவாக்கிக் கொண்டார்.

1980களில் ஜோன் கீல்ஸ் நிறுவனத்தை, காலனித்துவ காலத்து தேயிலை தரகு நிறுவனத்தில் இருந்து நாட்டின் மிகப்பெரிய கூட்டாண்மை நிறுவனமாக மாற்றியதில் பாலாவின் பங்களிப்பு அளப்பரியது. 

அதேவேளை, அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

https://tamilwin.com/article/ken-balandra-passes-away-1738562980#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

https://en.m.wikipedia.org/wiki/Kandiah_Balendra
 
ஆர்ப்பாட்டம் இல்லைத்தான், ஆனால் இலங்கையில் 1990 க்கு பின் இருந்தோர் கட்டாயம் இவரை பற்றி கேள்விபட்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.

நான்... முதல் வெடி விழ முதல் வெளிக்கிட்ட ஆள். 😎
இன்னும்... என் காதால், ஒரு துப்பாக்கி சூட்டுச் சத்தத்தையும் "லைவ்" ஆக நேரில் கேட்கவில்லை.

எனக்குத் தெரிந்த தொழில் அதிபர் எல்லாம்... 
மில்க் வைற் சோப்.... அமரர் கனகராஜா, 
அண்ணா கோப்பி முதலாளி, யானை மார்க் சோடா முதலாளி,
மலிபன் பிஸ்கட் முதலாளி, கன்டோஸ் சொக்லேட் முதலாளி மட்டுமே. 😂

பிற் குறிப்பு: இதில் கூறப்பட்டுள்ள தரவுகளை இந்தத் திரியுடன் மறந்து விட வேண்டும்.
பூனை... குட்டியை காவின மாதிரி, எல்லா திரிகளுக்கும் காவிக் கொண்டு திரியுறேல்லை.  
படித்தவுடன் கிழித்து விடவும். ஓகே.... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

மிகப் பெரிய தொழில் அதிபர் என்றுபத்திரிகையில் உள்ளது.
பெயரைப் பார்க்க, தமிழாராகவும் இருக்குது.
ஆனால்… இவரின் பெயரை முன்பு கேள்விப் பட்டதே இல்லை.

அனுதாபங்கள்.

அனுதாபங்கள்

நானும் இதை நினைத்தேன் நீங்கள் எழுதி போட்டீங்கள்..அதி அதி அதி மேட்டுக்குடி இவையளின்ட பெயர் தமிழாக இருக்கும்...எங்களை மாதிரி லொக்கல் பிபிலுடன் மிங்கில் பண்ண மாட்டினம் ...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

நான்... முதல் வெடி விழ முதல் வெளிக்கிட்ட ஆள். 😎
இன்னும்... என் காதால், ஒரு துப்பாக்கி சூட்டுச் சத்தத்தையும் "லைவ்" ஆக நேரில் கேட்கவில்லை.

எனக்குத் தெரிந்த தொழில் அதிபர் எல்லாம்... 
மில்க் வைற் சோப்.... அமரர் கனகராஜா, 
அண்ணா கோப்பி முதலாளி, யானை மார்க் சோடா முதலாளி,
மலிபன் பிஸ்கட் முதலாளி, கன்டோஸ் சொக்லேட் முதலாளி மட்டுமே. 😂

பிற் குறிப்பு: இதில் கூறப்பட்டுள்ள தரவுகளை இந்தத் திரியுடன் மறந்து விட வேண்டும்.
பூனை... குட்டியை காவின மாதிரி, எல்லா திரிகளுக்கும் காவிக் கொண்டு திரியுறேல்லை.  
படித்தவுடன் கிழித்து விடவும். ஓகே.... 🤣

உங்கள் பொறுப்பு-துறப்பை ஏற்று கொள்கிறேன்🤣.

மில்க்வைற்/அண்ணா கோப்பி ரெண்டும் அமரர் கனகராஜாவினது என நினைக்கிறேன். 

20 minutes ago, putthan said:

அனுதாபங்கள்

நானும் இதை நினைத்தேன் நீங்கள் எழுதி போட்டீங்கள்..அதி அதி அதி மேட்டுக்குடி இவையளின்ட பெயர் தமிழாக இருக்கும்...எங்களை மாதிரி லொக்கல் பிபிலுடன் மிங்கில் பண்ண மாட்டினம் ...

பெற்றார் யாழ்பாணம் இவர் கொழும்பு. றோயல் கல்லூரி பழைய மாணவர்.

அது சரி கொழும்பில் பாதி மேட்டுகுடி எல்லாம் உங்கட மானிப்பாய் பீப்பிள்தானே🤣

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

உங்கள் பொறுப்பு-துறப்பை ஏற்று கொள்கிறேன்🤣.

மில்க்வைற்/அண்ணா கோப்பி ரெண்டும் அமரர் கனகராஜாவினது என நினைக்கிறேன். 

பெற்றார் யாழ்பாணம் இவர் கொழும்பு. றோயல் கல்லூரி பழைய மாணவர்.

அது சரி கொழும்பில் பாதி மேட்டுகுடி எல்லாம் உங்கட மானிப்பாய் பீப்பிள்தானே🤣

அதனால் தான் யாழ்ப்பாணத்தின் "கொழும்பு 7" மானிப்பாய் என்று சொல்லுறவையள்...ஐ ஆம் ப்ரோம் மானிப்பாய்🤣....( மானிப்பாயில் பொலிஸ் நிலையத்தை வைக்காமல் ஆனைக்கோட்டையில் வைத்திருந்தவை அந்த காலத்தில் என நினைக்கிறேன் )🤣

  • கருத்துக்கள உறவுகள்

இவரைப்பற்றி நானும் இப்பொழுதுதான் கேள்விபடுகிறேன்.அவர் எவ்லா இடத்திலும் பெரிய பதவிகளை வகித்ததாகச் சொல்லப்பட்டிருக்கு அவை அவரின் சொந்த நிறுவனங்களா என்று குறிப்பிடப்பட வில்லை.பொருளாதாரம் நாட்டினின் முதுகெலும்பு அதில் சாதனை படைத்த தமிழ்மகனுக்கு ஆழந்த இரங்கல்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, புலவர் said:

இவரைப்பற்றி நானும் இப்பொழுதுதான் கேள்விபடுகிறேன்.அவர் எவ்லா இடத்திலும் பெரிய பதவிகளை வகித்ததாகச் சொல்லப்பட்டிருக்கு அவை அவரின் சொந்த நிறுவனங்களா என்று குறிப்பிடப்பட வில்லை.பொருளாதாரம் நாட்டினின் முதுகெலும்பு அதில் சாதனை படைத்த தமிழ்மகனுக்கு ஆழந்த இரங்கல்.

சொந்த நிறுவனங்கள் அல்ல, பங்குதார நிறுவனங்கள்.

49 minutes ago, putthan said:

அதனால் தான் யாழ்ப்பாணத்தின் "கொழும்பு 7" மானிப்பாய் என்று சொல்லுறவையள்...ஐ ஆம் ப்ரோம் மானிப்பாய்🤣....( மானிப்பாயில் பொலிஸ் நிலையத்தை வைக்காமல் ஆனைக்கோட்டையில் வைத்திருந்தவை அந்த காலத்தில் என நினைக்கிறேன் )🤣

அது முந்தி …

இப்ப சரியா மானிப்பாய் சந்தியில இருக்கு பொஸிஸ்ஸ்டேசன்🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

பிற் குறிப்பு: இதில் கூறப்பட்டுள்ள தரவுகளை இந்தத் திரியுடன் மறந்து விட வேண்டும்.
பூனை... குட்டியை காவின மாதிரி, எல்லா திரிகளுக்கும் காவிக் கொண்டு திரியுறேல்லை.  
படித்தவுடன் கிழித்து விடவும். ஓகே

ஒரு விலைமதிப்பு அற்ற.   தரமான   காட்டாயம் செல்ல வேண்டிய   

ஆலோசனைகள்.  🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

அதனால் தான் யாழ்ப்பாணத்தின் "கொழும்பு 7" மானிப்பாய் என்று சொல்லுறவையள்...ஐ ஆம் ப்ரோம் மானிப்பாய்🤣....( மானிப்பாயில் பொலிஸ் நிலையத்தை வைக்காமல் ஆனைக்கோட்டையில் வைத்திருந்தவை அந்த காலத்தில் என நினைக்கிறேன் )🤣

நான் மானிப்பாய்.  இந்து இல்    படித்து உள்ளேன்   ஆறு மாதங்கள் மட்டுமே     உயர்தரம்.    1979.  1980 இருக்கலாம்    

போராயிரவர்.   அதிபர்     மட்டக்களப்பு மாணவர்கள் 10. பேர் வரை   விடுதியில் இருந்தவர்கள்  நானும் அவர்களுடன் இருந்தேன்     காது   கேட்பது குறைவு      [ஒரு விபத்தின். பிற்பாடு  ] அதனால் தொடர்ந்து படிக்க முடியவில்லை   சாவகச்சேரி மாறிவிட்டேன்.     அதிபர்    சிறந்த சைவப் பழம்   யாராவது   சாமியார் வந்தால் கூப்பிட்டு   வீட்டில் பிரசாங்கம்.  வைப்பார்    

மட்டக்களப்பு முஸ்லிம் பெடிகளையும். கூட்டிக் கொண்டு போய் அமர்த்தி விடுவார்    எதோ    தேவன்’    என்ற பெயருடையவர்.   தான் விடுதி பெறுப்பாளர்.     அங்கு சாப்பாடு முழு சைவம்    மரக்கறி.    மட்டக்களப்பு பெடியள். 

பொறுப்பளாருடன்.  கதைத்து    களவாக   அதிபருக்கு தெரியாது  

மாட்டு இறைச்சி.  சமைப்பதுண்டு     ...🙏.      

குறிப்பு,.....பக்கத்தில்  மகளிர் கல்லுரி உண்டு”      அதுவும் மிக அருகில்   🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

பிற் குறிப்பு: இதில் கூறப்பட்டுள்ள தரவுகளை இந்தத் திரியுடன் மறந்து விட வேண்டும்.
பூனை... குட்டியை காவின மாதிரி, எல்லா திரிகளுக்கும் காவிக் கொண்டு திரியுறேல்லை.  
படித்தவுடன் கிழித்து விடவும். ஓகே.... 🤣

நாங்க சாமத்தில் பேய்கள் வெளியிரங்கும் நேரம் யாளுக்கு  வருவதுண்டு இப்படி வயிறு வலிக்க சிரிக்க வைக்க வேணாம் 😄

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

குறிப்பு,.....பக்கத்தில்  மகளிர் கல்லுரி உண்டு”      அதுவும் மிக அருகில்

ஓஓஓஓ அதுதான் சோதனை பெயிலோ?

நல்லா படித்திருந்தா என்னை தூக்கிய மாதிரி

உங்களையும் தூக்கி கொண்டு வந்து நாசாவில் விட்டிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓஓஓஓ அதுதான் சோதனை பெயிலோ?

நல்லா படித்திருந்தா என்னை தூக்கிய மாதிரி

உங்களையும் தூக்கி கொண்டு வந்து நாசாவில் விட்டிருப்பார்கள்.

இல்லை அண்ணா    O/L.  படிக்கும் போது   விடிய 6 மணிக்கு ரீயூசன்   இருக்கும்    போய் திரும்பி வரும் போது  கைதடி சந்தியில் உள்ள அந்த வட்ட வடிவம் கொண்ட கொங்றீற்.  தலைமையில் பின் பக்கம்  பலந்த. தாக்குதல்   அதன் பின்னர் காதுகள். கேட்பது குறைவு   இப்பவும் தொலைபேசியில் கதைப்பது கடினம்   ஆனால் நேரில் கதைக்க முடியும்    ...அது இல்லை எனில்  நான் இங்கே  பல்கலைக்கழகம் போய் இருப்பேன்    ஆனால்   2021 இருந்து கார்  வைத்து ஒடுகிறேன்.  🤣.  பிள்ளைகள் இருவரும் பொறியியலாளர்கள்.  மகள் திருமணமும் முடிந்து வேலை செய்கிறார்     மகன் மெக்கானிக் பொறியியலாளர்   மாஸ்டர் செய்கிறான்     

அவனுக்கு திருமணம் முடிந்த பிறகு    

நானும் ஒன்றை பார்க்கலாம் என. நினைக்கிறேன்  🤣🤣🤣🤣

நீங்கள்??? 

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் கென் பாலெந்திராவை தெரியதவர்கள் இருக்க முடியாது?
நல்ல‌தொரு கோர்பரேட் லீடர். இவருடன் நேற்று தொழிலதிபர் ஹாரி ஜயவர்த்தனவும் காலமானார்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

உங்கள் பொறுப்பு-துறப்பை ஏற்று கொள்கிறேன்🤣.

மில்க்வைற்/அண்ணா கோப்பி ரெண்டும் அமரர் கனகராஜாவினது என நினைக்கிறேன். 

 நீங்கள் சொல்வது சரி போல் உள்ளது.
மில்க்  வைற் சவர்க்கார தொழிற்சாலை யாழ். கே.கே.எஸ். வீதியிலும்,
அண்ணா கோப்பி தொழிற்சாலை இணுவிலிலும் இருந்தது என நினைவு.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kandiah57 said:

இல்லை அண்ணா    O/L.  படிக்கும் போது   விடிய 6 மணிக்கு ரீயூசன்   இருக்கும்    போய் திரும்பி வரும் போது  கைதடி சந்தியில் உள்ள அந்த வட்ட வடிவம் கொண்ட கொங்றீற்.  தலைமையில் பின் பக்கம்  பலந்த. தாக்குதல்   அதன் பின்னர் காதுகள். கேட்பது குறைவு   இப்பவும் தொலைபேசியில் கதைப்பது கடினம்   ஆனால் நேரில் கதைக்க முடியும்    ...அது இல்லை எனில்  நான் இங்கே  பல்கலைக்கழகம் போய் இருப்பேன்    ஆனால்   2021 இருந்து கார்  வைத்து ஒடுகிறேன்.  🤣.  பிள்ளைகள் இருவரும் பொறியியலாளர்கள்.  மகள் திருமணமும் முடிந்து வேலை செய்கிறார்     மகன் மெக்கானிக் பொறியியலாளர்   மாஸ்டர் செய்கிறான்     

அவனுக்கு திருமணம் முடிந்த பிறகு    

நானும் ஒன்றை பார்க்கலாம் என. நினைக்கிறேன்  🤣🤣🤣🤣

நீங்கள்??? 

கந்தையா தலைக்கு வந்தது தலைப்பாவுடன் போய்விட்டது என்பார்கள்.

விபத்திலிருந்து நீங்கள் தப்பியதே பெரிய விடஜம்.

நீங்கள் 21 இல் இருந்து கார் ஓட்டுகிறீர்கள்.

நான் 91 இல் இருந்து 20 (கொரோனா)வரை ஓட்டினேன்.

உங்களை மனஉழைச்சலுக்கு ஆளாக்கிவிட்டேன் போல உள்ளது.

மன்னிக்கவும் சகோதரம்.

14 hours ago, Kandiah57 said:

நானும் ஒன்றை பார்க்கலாம் என. நினைக்கிறேன்  🤣🤣🤣🤣

நீங்கள்???

வாழ்கின்ற ஒவ்வொரு நாளும் போனஸ் வாழ்க்கை.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ஈழப்பிரியன் said:

கந்தையா தலைக்கு வந்தது தலைப்பாவுடன் போய்விட்டது என்பார்கள்.

விபத்திலிருந்து நீங்கள் தப்பியதே பெரிய விடஜம்.

நீங்கள் 21 இல் இருந்து கார் ஓட்டுகிறீர்கள்.

நான் 91 இல் இருந்து 20 (கொரோனா)வரை ஓட்டினேன்.

உங்களை மனஉழைச்சலுக்கு ஆளாக்கிவிட்டேன் போல உள்ளது.

மன்னிக்கவும் சகோதரம்.

வாழ்கின்ற ஒவ்வொரு நாளும் போனஸ் வாழ்க்கை.

மகிழ்ச்சி  21 இல்லை    2001 இருந்து     

மன உழைச்சல். எதுவும் இல்லை    உண்மையில் இதுவும் நன்மை தான்   பல விடயங்களையும் பலரையும்  படிக்க முடிகிறது 🤣. நன்றி வணக்கம் 🙏  

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kandiah57 said:

நான் மானிப்பாய்.  இந்து இல்    படித்து உள்ளேன்   ஆறு மாதங்கள் மட்டுமே     உயர்தரம்.    1979.  1980 இருக்கலாம்    

போராயிரவர்.   அதிபர்     மட்டக்களப்பு மாணவர்கள் 10. பேர் வரை   விடுதியில் இருந்தவர்கள்  நானும் அவர்களுடன் இருந்தேன்    

ஒரு காலத்தில் பல கிழக்கு மாகாண மாணவர்கள் மானிப்பாயில் வந்து கல்வி கற்றனர் ...பரீட்சை எழுதும் பொழுது மீண்டும் கிழக்கு மாகாணம் சென்று விடுவார்கள்...

நானும் இந்த காலகட்டத்தில் உயர்தரம் படித்தேன்( பாடசாலைக்கு உயர்தர் வகுப்புக்கு சென்று வந்தேன் என்பது சரியானது )..மறைந்த ஹொஸ்டல்(ஜெய...) மாஸ்டரை தெரியுமா?மற்றும் அக்கரைப்பற்று/பொத்துவில் பகுதியில் இருந்து வந்த முஸ்லீம் மாணவர்கள்...இல்மு....,,இக்...போன்ற்வர்கள் ..கல்லடியை சேர்ந்த மாணவி..

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, putthan said:

ஒரு காலத்தில் பல கிழக்கு மாகாண மாணவர்கள் மானிப்பாயில் வந்து கல்வி கற்றனர் ...பரீட்சை எழுதும் பொழுது மீண்டும் கிழக்கு மாகாணம் சென்று விடுவார்கள்...

நானும் இந்த காலகட்டத்தில் உயர்தரம் படித்தேன்( பாடசாலைக்கு உயர்தர் வகுப்புக்கு சென்று வந்தேன் என்பது சரியானது )..மறைந்த ஹொஸ்டல்(ஜெய...) மாஸ்டரை தெரியுமா?மற்றும் அக்கரைப்பற்று/பொத்துவில் பகுதியில் இருந்து வந்த முஸ்லீம் மாணவர்கள்...இல்மு....,,இக்...போன்ற்வர்கள் ..கல்லடியை சேர்ந்த மாணவி..

ஆமாம் ஜெயதேவன்.  தெரியும்     மீசை வைத்து இருப்பார்   

பிரபல ரீயூசன.  ஆசிரியர்  பந்மநாதன்.  பிரயோக கணிதம். படிப்பித்தவர்   தூய கணிதம்.  கிண்டினன். என்றவராக இருக்கும்   கட்டை ஆள்      

யோகராசா    உயிரியல் பிரிவு படித்தார 

நெடுகேணியை சேர்ந்த வேல்முருகன்.  

விடுதி  அப்ப தான் ஆரம்பித்தது   ...சிவகுமார்.    என்ற பையன்.    அடிக்கடி வந்து கதைப்பது உண்டு”   

அதிபரின் வீட்டு ஓழுங்கையூடாக.    மகளிர் கல்லுரி வழியாக  வினயாகமூர்த்தியின்.   தனியார் வகுப்புகளுக்கு பேயயுள்ளேன். 

அங்கே மகளிர் கல்லூரி பெண் பிள்ளைகளும் வருவது உண்டு” 

உப அதிபர்  மிகவும் மெல்லியவர்.  நகைச்சுவையனவர்.  

அதிபர் மனைவி இராமநாதன்  கல்லூரியில் படிப்பிந்தவர். 

இரண்டு குண்டு பெண்பிள்ளைகளுண்டு 

விடுதியில் இருந்த அனேகரின்  பெயர்கள் மறந்து விட்டேன் 

நல்ல கல்லூரி   அங்கே இடம் எடுப்பது மிகவும் கடினம்   அங்கே தொடர்ந்து படிக்க முடியவில்லை என்பது மிகவும் கவலையளிக்கிறது     இருந்தாலும்  இன்றைய வாழ்க்கை மிக சிறப்பாக உள்ளது    🤣

குறிப்பு,......இரண்டு கல்லூரிகளுக்கும்.  இடையில் உள்ள  வேலிகளை   எடுத்து  ஒன்றாக இணைத்து விட்டால்   பிள்ளைகள் மகிழ்ச்சியாக படிப்பார்கள்.   [அல்லது   வீடுகள் ]

முரளி   எங்கள் வகுப்பு மாணவ தலைவன்   அதாவது மெனிட்டார் 

  • nunavilan changed the title to இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.