Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கழகம் இரண்டு இலக்க 'சி' யில் பேசியதாக தகவல்கள் இருவாரத்திற்கு முன்பே வந்தது... பனையூரில் இருமுறை அண்ணாவயும் சந்தித்திருக்கிறார்… ஒரு பக்கம் அதிமுகவிலும்.....

விஐயும் அதிமுகவும் சரியான முடிவை தரலை போல பாப்போம்.....

அவரை இழப்பது சீமானுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது மாயைய்த்தான். ஆனால் அவர் சரியான இடத்திற்கு போனால் மட்டுமே அவரது பொட்டன்சியலுக்கு நல்லது....

எங்கிருந்தாலும் தமிழர்களுக்காக செயல்படட்டும்...

  • Replies 68
  • Views 3.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    நடந்து கொண்டிருக்கும் விடயங்களை ஒவ்வொருவரும் அவரவர் பார்வையிலேயே ஊகித்துக் கொள்கின்றனர். என் பார்வை அவர்களுக்கு எதிர்காலம் கிடையாது என்று சொல்கின்றது ஏனென்றால் அதுவே தான் எனக்கு பிடித்த தெரிவு. நீங்கள

  • அக்னியஷ்த்ரா
    அக்னியஷ்த்ரா

    ஏன் இவர்களே பெரிய ஆளுமைகள் தானே தனி கட்சி தொடங்கி தமிழ் தேசியத்தை அப்படியே தூக்கி நிறுத்தியிருக்கலாமே. பெயின்டு கண்ட்ரக்டர் இப்ப கழகத்திற்கு நாதகவில் இருந்து உருவி கமிஷன் பார்ப்பது போல் தனது சொந்த கட்

  • Maruthankerny
    Maruthankerny

    பஸ்ஸே காலி ஆனாலும் ஓட்டுநர் இடத்தில இருந்து சீமான் எழுந்தால் வீழ்ச்சிதான். தமிழ் தேசிய அரசியலை பொறுத்தவரை தேர்தல் வெற்றி இரண்டாம் பாகம்தான். முதலாம் பாகம் மண்ணில் நிற்பதுதான். அதை சீமான் அடிக்கடி பேசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காளியம்மாள் விலகல்.. சீமான் பரபரப்பு பேட்டி..

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ…ஐயோ…ஒரு மோதல் தவிர்ப்பை அறிவித்து விட்டு, முக்கவும் முடியாம, ஈனவும் முடியாம நான் படும் அவஸ்தை இருக்கே….

எதிரிக்கு கூட வரக்கூடாது இந்த நிலை.

🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்

நாதகவில் இருந்து விலகும் காளியம்மாள்… சீமான் ரியாக்சன்!

22 Feb 2025, 12:31 PM

seeman reaction on ntk kaliyammal

நாதகவில் இருந்து விலக காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் உண்டு என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (பிப்ரவரி 22) தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில், தற்போது நாம் தமிழர் கட்சி மாநில மகளிர் ஒருங்கிணைப்பாளராக உள்ள காளியம்மாள் பங்கேற்க உள்ளதாக அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது.

அதில் காளியம்மாளின் நாதக பொறுப்பு குறித்து எதுவும் குறிப்பிடாமல், சமூக செயற்பாட்டாளர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த அழைப்பிதழ் சமூகவலைதளங்களிலும் அதிகளவில் பகிரப்பட்டது.

இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து ஏற்கனவே விலகிவிட்டாரா என்ற சந்தேகம் எழுந்தது.

கடந்த சில மாதங்களாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான அதிருப்தி காரணமாக அக்கட்சியின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் முதல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விலகி மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது பிரச்சாரத்திற்காக காளியம்மாள், அந்த பக்கமே போகவில்லை. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள அழைப்பிதழ் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக இன்று ஊடகங்களிடம் அவர் பேசுகையில், “நான் என் முடிவை விரைவில் அறிவிப்பேன்” என தெரிவித்தார்.

இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், காளியம்மாள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், ”நாம் தமிழர் கட்சியில் உள்ள அனைவருக்கு சுதந்திரம் உள்ளது. இன்னைக்கு என் பக்கத்தில் நிற்பவர் கூட நாளைக்கு செல்லலாம். கட்சிக்குள் வந்தால் ’நன்றி’ என தெரிவிப்போம், சென்றால் ‘வாழ்த்துகள்’ என தெரிவிப்போம்.

பருவக்காலங்களில் இலையுதிர் காலம் மாதிரி, தற்போது எங்கள் கட்சிக்கு களையுதிர் காலம்.

காளியம்மாளை நாம் தமிழர் கட்சிக்குள் அழைத்து வந்தது நான் தான். அவர் வேறு கட்சிக்கு செல்வது குறித்து முடிவெடுக்க முழு சுதந்திரம் உள்ளது. அதில் யாரும் தலையிட முடியாது” என சீமான் தெரிவித்துள்ளார்.

https://minnambalam.com/political-news/seeman-reaction-on-ntk-kaliyammal/

  • கருத்துக்கள உறவுகள்

கட்சி என்று இருந்தால் பலர் சேர்வதும் சிலர் விலகுவதும் நடைபெறும். சிறிய கட்சிகளில் இணைந்து புகழ்செளிச்சத்தைப் பெற்று விட்டு பெரிய கட்சிகளில் இணைவதை பெரிய கட்சிகள் வரவேற்பார்கள். பெரிய கட்சிகளில் நேரடியாக இணைந்தால் யாரும் கண்டுக்க மாட்டார்கள் ஊடகங்களும் பெரிது படுத்த மாட்டார்கள்கடைசிவரை பசைவாளியைத் தூக்கிக் கொண்டு திரிய வேண்டிஇருக்கும் பசை இருக்காது.நாதக ஆரம்பிதத காலத்திலிருந்து அனைத்து தேர்தல்களும் போட்டியிட்டவர் காளியம்மாள். அடுத்த முறை வேறு ஒருவருக்கு அந்தச்சந்தர்பம் கிடைக்கும். கட்சியில் தொடர்ந்து இருப்பதா விலகுவதா என்பதை காளியம்மாள்தான் முடிவெடுக்க வேண்டும். இதே Nhல் தொடந்து நாதக சார்பில் அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியி;ட கலியாணசுந்தரம் ராஜீவ்காந்தி ஆகியோர் இன்று என்ன நிலையில் இருக்கிறார்கள். அதன் பிறகும் கட்சி வளர்ச்சிப் பாதையில்தான் போய்க் கொண்டு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

அதற்கு அவர், ”நாம் தமிழர் கட்சியில் உள்ள அனைவருக்கு சுதந்திரம் உள்ளது. இன்னைக்கு என் பக்கத்தில் நிற்பவர் கூட நாளைக்கு செல்லலாம்.

இவரிடம் மட்டும் ஆட்சி அதிகாரம் புட்டின் போன்று இருந்தால் நாம் தமிழர் கட்சியை விட்டு விலகுபவர்கள் மாடியில் இருந்து தவறி விழுந்து இறப்பார்கள் அல்லது தேத்தண்ணி குடித்த பின்பு இறப்பார்கள்.

காளியம்மாள்நாம் தமிழர் கட்சியை விட்டு விலகிவிட்டாவா இல்லையா?

அவா விலகினாலும் சீமான் 2026 முதல்வராவதை தடுக்க முடியாது💪

  • கருத்துக்கள உறவுகள்

காளியம்மாள் ஏற்கனவே அயோக்கிய அரசியல்வாதியான சீமான் தனது “ மூலம் செய்துவந்த அரசியல் தரகு வேலைக்கு இடைஞ்சலாக இருந்ததால் அவரை பிசிறுஎன்று அழைத்து, அந்த பிசிறை வெளியேற்ற வேண்டும் என்று சீமான் கூறினார். அவர் விரும்பியபடி அவரின் அயோக்கிய அரசியல் தரகு வேலைக்கு இடைஞ்சலாக இருந்த காளியம்மாள் வெளியேறி விட்டதால் சீமானின் அரசியல் தரகு பணவேட்டை அரசியலுக்கு இருந்த இடைஞ்சல் ஒன்று நீங்கியதால் சீமானின் மகிழ்சசி அடையலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைகோ பதினொரு மாவட்ட செயலாளர பிரிச்சிட்டு போய் கட்சிய பொளந்த போது திமுகவுக்கு எந்த சேதாரமும் வரவில்லை....

காளியம்மாளைவிட நட்சத்திர ஆட்களாக இருந்தவர்கள் பணம் படைத்தவர்கள் வெளியப்போயும் நாதகவுக்கு சறுக்கல் வரல.......

காளியம்மாள் வெளிய போனால் கட்சிக்கு இழப்பு வராது காளியம்மாளுக்கும் இழப்பு வராது.......

அவர்களுக்கு இழப்பு வருவதற்கு காரணங்கள் வேறு அதை அவர்கள் உணர்ந்து கொண்டார்களானு தெரியல.....

தமிழ்நாட்டில் நாதக வளர்வது ஜெட் வேக வளர்ச்சி அதை நாதக காரர்களுக்கு எழுதி நரேட்டிவ் செட்ட பன்ற அளவுக்கு திறன் இல்லை...........

உருட்டுனு நெனச்சா நெனச்சிட்டு போங்க....

கல்யாணசுந்தரம், ராசீவ்காந்தி போன பின் தான் நாம்தமிழர் கட்சி 36லட்சம் வாக்குகள் வாங்கியது..

இந்த வாக்குகள் சீமான் என்ற தனிமனிதனுக்காக வந்த வாக்குகள் அல்ல... தமிழ்தேசியம் தேவை கருதி அந்த தத்துவத்தின் அருமை கருதி தன்னை தமிழனாக உணர்ந்தவர்கள் ஒன்றுபட வந்த வாக்குகள்..இதை சீமானே பலமுறை சொல்லிருக்கிறார்…பிறர் கட்சிக்கு யார் போனாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்வு வளம் பெருமே தவிர அதனால் தமிழர்களுக்கு எந்த நன்மையும் இல்லை…

சீமானை தனிமனிதன்கட்சி சர்வதிகாரி என்று விளங்கமறுப்பான் போன்று சொல்பவர்களுக்கு..

எடப்பாடிக்கு முன்பான அதிமுகவுக்கும் ஒரு தனி மனித கட்சி தான்..

அண்ணாதுரைக்கு பின்பான திமுகவும் ஒரு மனித கட்சிதான்....

தவெகவும் ஒரு மனித கட்சிதான்...

தாவாகாவும் ஒரு மனித கட்சிதான்....

சீமானுக்கு கட்சியில் இருந்து யாராவது வெளியேறும்போதோ அல்லது வெளியேற்றும்போதோ அதை சரியாக ஹேண்டில் செய்ய தெரியவில்லை...

தவெக வில் கூட அவரைத் தவிர யாரும் பெரியதாக அறியப்படவில்லை..ஆனால் நாம் தமிழர் தொகுதிக்கு சிலர் பேர் அனைவராலும் அறியப்பட்டவர்களாக இருக்கிறார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

எங்கிருந்தாலும் வாழ்க 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் கட்சி தாவுவது என்பது பெரிய விடயமல்ல.

கொள்கை இல்லாதவர்கள் இங்கிருந்தால் என்ன? அங்கிருந்தால் என்ன?

எல்லாம் ஒன்றுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கு போனாலும் அரசியல் ஆசானை மறக்காமல் இருந்தால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

திமுகவுடனான பேச்சுவார்த்தை நாகபட்டினம் சட்டமன்ற தொகுதி அல்லது ஒரு ராஜ்யசபா பதவி என்ற அளவில் வந்து நிற்கின்றது. காளியம்மா கேட்பது கொஞ்சம் அதிகம் தான், ஆனாலும் இதைக் கொடுக்காவிட்டால் இவர் தவெக பக்கம் போய் விடுவார் என்பது தான் திமுகவின் சிக்கல்.

இவரின் தலைமையில் ஒரு தனிக்கட்சியை நாதகவிற்கு போட்டியாக உருவாக்கி விடலாம் என்று கூட திமுக திட்டம் போடுகின்றது. இந்த வாரம் நாதகவின் கொள்கை பரப்புச் செயலாளரும் கட்சியிலிருந்து விலகினார்.

சீமான் நானே பஸ்ஸை ஓட்டுகின்றேன், நீங்கள் எல்லாம் பின்னால் இருப்பவர்கள்..... என்று கட்சியிலிருப்பவர்களை பார்த்துச் சொல்கின்றார். ஒரு நாள் ஓட்டுநர் திரும்பிப் பார்க்கும் போது, பஸ்ஸே காலியாக இருக்கப் போகின்றது..............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரசோதரன் said:

ஒரு நாள் ஓட்டுநர் திரும்பிப் பார்க்கும் போது, பஸ்ஸே காலியாக இருக்கப் போகின்றது..............

அப்படி இருக்காது என்று நினைக்கிறேன்.. இப்பொழுது எல்லாம் நாம் தமிழர் மேடைகளில் புதுப்புது முகங்கள் பல நாள் அனுபவமுள்ள அரசியல்வாதிகள் போல் பேசுவதை அவதானிக்கிறேன்.. இன்றும்கூட பழனிபாப நினைவுநாள் நாம்தமிழர் நேரலை போய்க்கொண்டிருக்கிறது.. எத்தனையோ புதுமுகம்கள்.. பிச்சு உதறுகிறார்கள்.. எங்கிருந்து வருகிறார்கள் எப்படி உருவாக்குகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.. அதனால்தான் மீண்டும் சொல்கிறேன்.. நாம் தமிழர் மெதுவாக அகலக்கால் ஊன்றி ஆழமாக வளர்கிறது.. நாம் எம் சந்தோசத்துக்கு கேலிகிண்டல் பண்ணலாம்.. ஆனால் யதார்த்தம் வேறாக இருக்கிறது..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அப்படி இருக்காது என்று நினைக்கிறேன்.. இப்பொழுது எல்லாம் நாம் தமிழர் மேடைகளில் புதுப்புது முகங்கள் பல நாள் அனுபவமுள்ள அரசியல்வாதிகள் போல் பேசுவதை அவதானிக்கிறேன்.. இன்றும்கூட பழனிபாப நினைவுநாள் நாம்தமிழர் நேரலை போய்க்கொண்டிருக்கிறது.. எத்தனையோ புதுமுகம்கள்.. பிச்சு உதறுகிறார்கள்.. எங்கிருந்து வருகிறார்கள் எப்படி உருவாக்குகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.. அதனால்தான் மீண்டும் சொல்கிறேன்.. நாம் தமிழர் மெதுவாக அகலக்கால் ஊன்றி ஆழமாக வளர்கிறது.. நாம் எம் சந்தோசத்துக்கு கேலிகிண்டல் பண்ணலாம்.. ஆனால் யதார்த்தம் வேறாக இருக்கிறது..

நடந்து கொண்டிருக்கும் விடயங்களை ஒவ்வொருவரும் அவரவர் பார்வையிலேயே ஊகித்துக் கொள்கின்றனர். என் பார்வை அவர்களுக்கு எதிர்காலம் கிடையாது என்று சொல்கின்றது ஏனென்றால் அதுவே தான் எனக்கு பிடித்த தெரிவு.

நீங்கள் சொல்வது சரியாகவும் இருக்கலாம். 2026ம் ஆண்டில் எந்த வெற்றிடமும் இல்லை, எந்த அலையும் இல்லை, அந்த தேர்தல் ஒரு சரியான நிலவரத்தை காட்டும் என்று நினைக்கின்றேன். அதுவரை இப்படியே போய்க் கொண்டிருப்போம்..........👍.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

இங்கே ஜெட் வேகம், ராக்கெட் வேகம், ஒளியின் வேகம் என்றெல்லாம் கற்பனையில் உருட்டுபவருக்கும் தனியே நின்றால் 2026 இல் அத்தனை தொகுதியிலும் டெபாசிட் காலி என்பது தெரியும்.

2026 வரைக்கும் டைம் இருக்கு - அது வரை உருட்டுவோம்.

2026 க்கு பின் நடப்பதை அப்போ பார்த்துகல்லாம் என்பதுதான் இவர்கள் பலரின் நிலைப்பாடு.

2 hours ago, ரசோதரன் said:

ஒரு நாள் ஓட்டுநர் திரும்பிப் பார்க்கும் போது, பஸ்ஸே காலியாக இருக்கப் போகின்றது..............

இல்லை…பேரறிஞர் எச் ராஜா, தம்பி அண்ணாமலை, அக்கா தமிழிசை என பல நாக்பூர் பயணிகள் பஸ்சை நிரப்பி இருப்பார்கள்.

காளியம்மாள் - அவர் பரம்பரை திமுக என நினைக்கிறேன் - ஆனால் திமுகவுக்கு போகக்கூடாது என்பதே என் விருப்பம்.

ஊழல் இல்லாத, நடைமுறை சாத்தியமான தமிழ் தேசியத்தை முன் தள்ளும் ஒரு கட்சி - த வெ க இருக்கிறது.

அங்கே ஒரு பெண் ஆளுமைக்கு வெற்றிடமும் உள்ளது.

அவர் அங்கே போகவேண்டும். தமிழ் நாட்டின் ஒரு பெரும் ஆளுமையாக வரவேண்டும் என்பதே என் அவா.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

2026 வரைக்கும் டைம் இருக்கு - அது வரை உருட்டுவோம்.

2026 வரை மட்டும் அல்ல, அதற்கு பிறகும் உருட்டுவோம். நாங்கள் உருட்ட உருட்ட அண்ணன் தரகு வேலை செய்து பணத்தை சுருட்டோ சுருட்டென்று சுருட்டுவார். 😂

  • கருத்துக்கள உறவுகள்

காளியம்மாள் வெளியேறுவது அதுவும் சீமானின் வாயால் வெளியேறுவது சீமானுக்கு ஒரு கறை படிந்த வரலாறாக வரலாம். ஆனால் இதனால் நாம் தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் வராது. அது விதைக்கப்பட்டு விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

திமுகவுடனான பேச்சுவார்த்தை நாகபட்டினம் சட்டமன்ற தொகுதி அல்லது ஒரு ராஜ்யசபா பதவி என்ற அளவில் வந்து நிற்கின்றது. காளியம்மா கேட்பது கொஞ்சம் அதிகம் தான், ஆனாலும் இதைக் கொடுக்காவிட்டால் இவர் தவெக பக்கம் போய் விடுவார் என்பது தான் திமுகவின் சிக்கல்.

இவரின் தலைமையில் ஒரு தனிக்கட்சியை நாதகவிற்கு போட்டியாக உருவாக்கி விடலாம் என்று கூட திமுக திட்டம் போடுகின்றது. இந்த வாரம் நாதகவின் கொள்கை பரப்புச் செயலாளரும் கட்சியிலிருந்து விலகினார்.

சீமான் நானே பஸ்ஸை ஓட்டுகின்றேன், நீங்கள் எல்லாம் பின்னால் இருப்பவர்கள்..... என்று கட்சியிலிருப்பவர்களை பார்த்துச் சொல்கின்றார். ஒரு நாள் ஓட்டுநர் திரும்பிப் பார்க்கும் போது, பஸ்ஸே காலியாக இருக்கப் போகின்றது..............

சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் திமுக்காவின‌றால் இவாவின் உயிருக்கே ஆவ‌த்து வ‌ர‌ பார்த்த‌து

காளிய‌ம்மாள் மேடையில் பேசி கொண்டு இருக்கும் போது ம‌து போத்திலால் இவாக்கு எறிஞ்ச‌வ‌ங்க‌ள் , ச‌ரியா ம‌ண்டையில் ப‌ட்டு இருந்தால் அந்த‌ இட‌த்தில் ர‌த்த‌ம் கொட்டி ப‌டாத‌ இட‌ங்க‌ளில் ப‌ட்டு இருந்தால் க‌ண் பார்வையே போய் இருக்கும்

திமுக்காவுக்கு போவ‌தும் ந‌ர‌க‌த்துக்கு போவ‌துக்கு ச‌ம‌ம் என்று காளிய‌ம்மாளுக்கு ந‌ல்லாவே தெரியும்

அவாவே ப‌ல‌ வாட்டி சொல்லி இருக்கிறா மாவீர‌ர்க‌ள் மீது உறுதி மொழி எடுத்து விட்டு எம் இன‌த்தை அழிக்க‌ துணை போன‌ திமுக்கா கூட‌ எப்ப‌டி நான் சேர்வேன்...................

க‌ட்சி வேட்பாள‌ர் ச‌கோத‌ரி காளிய‌ம்மாள‌ தொட‌ர்வு கொண்டு கேட்ட‌ போது த‌ன‌து பெய‌ரை அவ‌ர்க‌ளாக‌த் தான் போட்ட‌து என்று சொல்லி இருக்கிறா

அக்கா காளிய‌ம்மாள் வெளிப்ப‌டையாய் சொல்லும் வ‌ரை மெள‌வுன‌த்தை க‌டை பிடிப்ப‌து ந‌ல்ல‌ம்

ஏற்க்க‌ன‌வே திமுக்கா கார‌ங்க‌ள் க‌ளிய‌ம்மாள‌ க‌ருவாட்டுக்காரி என்று எல்லாம் விம‌ர்ச‌ன‌ம் வைச்ச‌வை

திமுக்காவுக்கு போகாம‌ காளிய‌ம்மாள் எங்கை போனாலும் அக்காவுக்கான‌ என‌து ஆத‌ர‌வும் அன்பும் எப்ப‌வும் இருக்கும்🙏👍🥰😍❤️......................

ஈழ‌த்தில் என‌து பார்வையில் ஒரு க‌ருணா ஆனால் த‌மிழ் நாட்டில் ஒவ்வொரு க‌ட்சிக்குள்ளும் ப‌ல‌ க‌ருணாக்க‌ள்

அப்ப‌டி ப‌ட்ட‌ க‌ருணாக்க‌ள் தான் காளிய‌ம்மாளை சீமானிட‌ம் போட்டு கொடுத்து விட்டு இப்போது திமுக்கா , கூட்ட‌னியில் இருக்கும் வேல் முருக‌னுட‌ன் ச‌ர‌ன் அடைந்து விட்டின‌ம்................வேல் முருக‌னுக்கு எப்ப‌ ஊந்த‌ கூட்ட‌ம் பின்னால் குத்த‌ போகுதோ தெரியாது😡👎....................

சில‌ர் மேல‌ எழுதின‌தை சும்மா உத‌ர்ச‌ன‌ப் ப‌டுத்த‌க் கூடாது...............க‌ட்சிக்குள் இப்ப‌ ப‌ல‌ புது முக‌ங்க‌ள் வ‌ந்து விட்ட‌ன‌....................க‌ட்ட‌மைப்பு எல்லாம் புது வ‌டிவில் செய்யின‌ம் அத‌னால் அதில் உட‌ன் பாடு இல்லாத‌ ப‌ழைய‌ உற‌வுக‌ள் ஒரு சில‌ர் வெளிய‌ போகின‌ம்..................

அக்கா காளிய‌ம்மாள‌ சீமான் பிசிறு என்று சொன்ன‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை................இத‌னால் க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் ச‌ண்டையும் பிடிச்ச‌ நான்..................ச‌த்திய‌மாய் பிசுறுவின் சொல் நான் முன்ன‌ பின்ன‌ கேள்வி ப‌ட்ட‌து கிடையாது பிற‌க்கு தான் தெரியும்

சீமானுக்கு சில‌ ச‌மைய‌ம் நாக்கில் ச‌னி.................திற‌மையான‌ க‌ட்சி பிள்ளைக‌ளை இன்னும் ஊக்க‌ம் கொடுத்து வைச்சு இருப்ப‌தை விட‌ அதுக‌ளை பிசிறு ம‌சிறு என்று சொன்னால் க‌ட்சி த‌லைவ‌ருக்கு அது அழ‌கில்ல‌

நீங்க‌ள் நினைக்க‌லாம் பைய‌ன் சீமான் எது செய்தாலும் த‌லை ஆட்டுவான் என்று

2013ம் ஆண்டு க‌த்தி ப‌ட‌ பிர‌ச்ச‌னையின் போது சீமான் அத‌ற்க்குல் தேவை இல்லாம‌ மூக்கை நுழைச்ச‌துக்காக‌ ஒரு வ‌ருச‌த்துக்கு மேல் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் செய‌ல் பாட்டை எட்டியும் பார்க்காம‌ விட்ட‌ நான் பிற‌க்கு 2014க‌ளில் ம‌ன‌ம் மாறி மீண்டும் சீமானை ஆத‌ரிக்க‌ தொட‌ங்கி நான்

காளிய‌ம்மாள் 2019ம் ஆண்டு தான் க‌ட்சியில் இணைஞ்ச‌வா

2019 முத‌ல் பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 55ஆயிர‌ம் வாக்குக்கு மேல் நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌றாக‌ நின்று கிடைச்ச‌ ஓட்டு வ‌ட‌ சென்னையில் ...................

என‌து அனுப‌வ‌த்தில் சொல்லுகிறேன் அக்கா காளிய‌ம்மாள் தேர்த‌ல் நேர‌ம் பிர‌ச்சார‌ம் செய்ய‌ அவாவின் உட‌ல் நிலை பெரிசா ஒத்துக் கொள்ளாது...............பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் 6தொகுதிய‌ உள் அட‌க்கிய‌து ஒவ்வொரு தொகுதிக்கும் போய் பிர‌ச்சார‌ம் செய்ய‌ சிர‌ம‌ ப‌ட்ட‌வா...............

தான் ஒரு க‌ட்சிக்கும் போக‌ மாட்டேன் தொட‌ர்ந்து ப‌ழைய‌ ப‌டி ச‌ம்முக‌ சேவை செய்ய‌ போகிறேன் என்றால் ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் மேல் இன்னும் ம‌திப்பு கூடும்

க‌ளிய‌ம்மாளின் அம்மாவுக்கு க‌ளிய‌ம்மாள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிய‌ விட்டு பிரிவ‌து தாய்க்கு விருப்ப‌ம் இல்லை..................காளிய‌ம்மாளின் க‌ண‌வ‌ர் அவாவின் வாழ்கையில் அதிக‌ம் த‌லையிடுகிறார் போல் தெரிகிற‌து..........................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அப்படி இருக்காது என்று நினைக்கிறேன்.. இப்பொழுது எல்லாம் நாம் தமிழர் மேடைகளில் புதுப்புது முகங்கள் பல நாள் அனுபவமுள்ள அரசியல்வாதிகள் போல் பேசுவதை அவதானிக்கிறேன்.. இன்றும்கூட பழனிபாப நினைவுநாள் நாம்தமிழர் நேரலை போய்க்கொண்டிருக்கிறது.. எத்தனையோ புதுமுகம்கள்.. பிச்சு உதறுகிறார்கள்.. எங்கிருந்து வருகிறார்கள் எப்படி உருவாக்குகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.. அதனால்தான் மீண்டும் சொல்கிறேன்.. நாம் தமிழர் மெதுவாக அகலக்கால் ஊன்றி ஆழமாக வளர்கிறது.. நாம் எம் சந்தோசத்துக்கு கேலிகிண்டல் பண்ணலாம்.. ஆனால் யதார்த்தம் வேறாக இருக்கிறது..

பஸ்ஸே காலி ஆனாலும் ஓட்டுநர் இடத்தில இருந்து சீமான் எழுந்தால் வீழ்ச்சிதான். தமிழ் தேசிய அரசியலை பொறுத்தவரை தேர்தல் வெற்றி இரண்டாம் பாகம்தான். முதலாம் பாகம் மண்ணில் நிற்பதுதான். அதை சீமான் அடிக்கடி பேசுகிறார் ஆனால் அதை எவ்வளவு தெளிவாக புரிந்து இருக்கிறார் என்று தெரியவில்லை.

நாதாக வை பொறுத்தவரை எந்த பதவியிலும் யாரையும் வைத்திருக்க கூடாது .. வைத்திருக்கவும் முடியாது. நானே மந்திரி நானே ராஜா என்று இருக்கும்வரைதான் கடசியும் இருக்கும். அல்லாதுபோனால் துரோகத்தால் வீழ்த்தப்படுவார்கள். ராஜீவ் கல்யாணசுந்தரம் போன்றவர்கள் விலகிய போது போங்கடா என்றுவிட்டு தொடர முடிந்தது என்றால் அதுக்கு ஒரே காரணம் நானே ராஜா நானே மந்திரிதான். இல்லையென்றால் பிரித்து இன்னொரு கும்பலை உருவாக்குவார்கள் ........ இப்போது இருக்கும் தெரிவு விலகுவது ..... எங்காவது போய் ஒட்டிக்கொண்டு இவ்வளவு காலமும் பேசியதற்கு நேர் எதிராக வாய்கூசாமல் பேசிக்கொண்டு இருப்பது.... அது தமிழக அரசியலில் பழகிப்போன ஒன்றும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரசோதரன் said:

திமுகவுடனான பேச்சுவார்த்தை நாகபட்டினம் சட்டமன்ற தொகுதி அல்லது ஒரு ராஜ்யசபா பதவி என்ற அளவில் வந்து நிற்கின்றது. காளியம்மா கேட்பது கொஞ்சம் அதிகம் தான், ஆனாலும் இதைக் கொடுக்காவிட்டால் இவர் தவெக பக்கம் போய் விடுவார் என்பது தான் திமுகவின் சிக்கல்.

இவரின் தலைமையில் ஒரு தனிக்கட்சியை நாதகவிற்கு போட்டியாக உருவாக்கி விடலாம் என்று கூட திமுக திட்டம் போடுகின்றது. இந்த வாரம் நாதகவின் கொள்கை பரப்புச் செயலாளரும் கட்சியிலிருந்து விலகினார்.

சீமான் நானே பஸ்ஸை ஓட்டுகின்றேன், நீங்கள் எல்லாம் பின்னால் இருப்பவர்கள்..... என்று கட்சியிலிருப்பவர்களை பார்த்துச் சொல்கின்றார். ஒரு நாள் ஓட்டுநர் திரும்பிப் பார்க்கும் போது, பஸ்ஸே காலியாக இருக்கப் போகின்றது..............

சீனுக்கு எதிராக‌ ஒரு அமைப்பு தொட‌ங்கின‌வ‌ர் தான் வெற்றிக்கும‌ர‌ன்...................வெற்றிக்கும‌ர‌ன் ச‌ரியான‌ பிராடு அதில் மாற்றுக் க‌ருத்தில்லை.............சீமான் இல்லை என்றால் இவ‌ர்க‌ள் எங்க‌ளுக்கு யார் என்று கூட‌ தெரிந்து இருக்காது.............ஒரு அமைப்பு தொட‌ங்கி இர‌ண்டு மாத‌ம் கொண்டு ந‌ட‌த்த‌ முடியாம‌

வேல்முருக‌னின் த‌மிழ‌க‌ வாழ்வுரிமை க‌ட்சியுட‌ன் அந்த‌ அமைப்பை இணைத்து விட்டார் வெற்றிக் கும‌ர‌ன் அத‌ற்க்கு முத‌ல் அவ‌ர் விட்ட‌ வில்டாப் அதிக‌ம்...............

புக‌ழேந்தி மாற‌ன் , வெற்றிக்கும‌ர‌ன் , ஜெக‌தீச‌ பாண்டிய‌ன் , இவ‌ர்க‌ள் க‌ட்சிய‌ விட்டு நீக்கின‌ பிற‌க்கு வில‌க‌லுக்கு பிற‌க்கு திமுக்காவின் யூடுப் ச‌ண‌ல்க‌ளுக்கு போய் அல‌ம்புவ‌தை நான் கேட்ப்ப‌தும் இல்லை பார்ப்ப‌தும் இல்லை , உல‌க‌ம் ஒரு நாட‌க‌ மேடை போல் தெரிகிற‌து இப்ப‌த்த‌ ம‌னித‌ர்க‌ளின் கூத்தை பார்க்க‌................8மாத‌த்துக்கு முன்பு ஜெக‌தீச‌ பாண்டிய‌ன் த‌ன்னை வேட்பாள‌ரா அறிவிக்காட்டி தான் பூச்சி ம‌ருந்து குடிச்சு சாவேன் என்று வெளிக்கிட்ட‌ ந‌ப‌ர்......................சில‌ மாத‌ங்க‌ளுக்குள் எப்ப‌டி எல்லாம் ந‌டிக்கிறார்...............இவ‌ர் சீமான் கூட‌ 27வ‌ருட‌ம் ஒன்னா இருந்த‌ ந‌ப‌ர்.................த‌ன்மான‌த் த‌மிழ‌ன் ஒரு போதும் எலும்பு துண்டுக்கு ஆசைப் ப‌ட‌ மாட்டான்...................இவ‌ர்க‌ள் போன்ற‌வ‌ர்க‌ள் ஈழ‌த்து க‌ருணாவை விட‌ ஆவ‌த்தான‌வ‌ர்க‌ள்...................

காளிய‌ம்மாளின் முழு பிர‌ச்ச‌னைக்கும் இவ‌ர்க‌ள் மூன்று பேரும் தான் கார‌ன‌ம்

சீமான் உண்மையை க‌ண்டு அறியாம‌ இந்த‌ துரோகிய‌லின் பேச்சை கேட்டு பிசுறு என‌ குர‌ல் ப‌திவு விட‌ அதை ப‌த்திர‌மாய் சில‌ வ‌ருட‌ம் வைச்சு இருந்து விட்டு பிற‌க்கு சாட்டை துரைமுருக‌னின் கைதின் போது இந்த‌ பிசுறு பிர‌ச்ச‌னை வெடிச்ச‌து.....................

உப்ப‌டி தான் க‌ட்சிக்குள் கோல் மூட்டி விட்டு வேடிக்கை பார்ப்ப‌து இவ‌ர்க‌ளின் வேலை

ம‌ற்ற‌து நான் பெரிசா நீ பெருசா என்ற‌ போட்டி க‌ட்சிக்குள் அதிக‌ம்..................நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருந்து நீக்க‌ப் ப‌ட்ட‌ ராஜிவ் காந்தி க‌ட்சியில் ப‌ய‌ணித்த‌ போது புல‌ம்பெய‌ர் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளிட‌ம் காசு கேட்டு வாங்கின‌வ‌ர் அதோட‌ ராஜிவ்காந்தின்ட‌ பிள்ளைக‌ளின் ப‌டிப்பு செல‌வை சீமானே பார்த்தார்...................நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் க‌ருணாநிதியை ராஜிவ்காந்தி அள‌வுக்கு யாரும் விம‌ர்சித்து இருக்க‌ மாட்டின‌ம்

ப‌டு கேவ‌ல‌மாய் க‌ருணாநிதிய‌ திட்டி தீர்த்த‌ ந‌ப‌ர்க‌ளில் ராஜிவ்காந்தி முத‌ல் இட‌ம்................இப்போது திமுக்காவில் மாண‌வ‌ர் அணி பொருப்பில் இருக்கிறார்..................க‌ருணாநிதி குடும்ப‌த்துக்கு வெக்க‌ம் மான‌ம் சூடு சுர‌னை எதும் இல்லை என்று உல‌க‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு தெரிந்த‌ விடைய‌ம்......................

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா சொன்ன‌ மாதிரி , த‌ம்பி த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் லாறியில் க‌ழிவ‌றைக்கு ஏற்றி செல்லும் த‌ண்ணீர் போன்ற‌து த‌மிழ் நாட்டின் அர‌சிய‌லின் த‌ர‌ம் அப்ப‌டி

அர‌சிய‌ல் என்ப‌து

க‌ன‌டா

அமெரிக்கா

ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ள்

ஜ‌ப்பான்

அவுஸ்ரேலியா

நியுசிலாந் போன்ற‌ நாடுக‌ளில் தான் அர‌சிய‌லுக்கு வ‌ர‌வேற்ப்பு அதிக‌ம் , நேர்மையான‌ ஓட்டு , ஓட்டுக்கு ப‌ண‌ம் இல்லை.................

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Maruthankerny said:

பஸ்ஸே காலி ஆனாலும் ஓட்டுநர் இடத்தில இருந்து சீமான் எழுந்தால் வீழ்ச்சிதான். தமிழ் தேசிய அரசியலை பொறுத்தவரை தேர்தல் வெற்றி இரண்டாம் பாகம்தான். முதலாம் பாகம் மண்ணில் நிற்பதுதான். அதை சீமான் அடிக்கடி பேசுகிறார் ஆனால் அதை எவ்வளவு தெளிவாக புரிந்து இருக்கிறார் என்று தெரியவில்லை.

நாதாக வை பொறுத்தவரை எந்த பதவியிலும் யாரையும் வைத்திருக்க கூடாது .. வைத்திருக்கவும் முடியாது. நானே மந்திரி நானே ராஜா என்று இருக்கும்வரைதான் கடசியும் இருக்கும். அல்லாதுபோனால் துரோகத்தால் வீழ்த்தப்படுவார்கள். ராஜீவ் கல்யாணசுந்தரம் போன்றவர்கள் விலகிய போது போங்கடா என்றுவிட்டு தொடர முடிந்தது என்றால் அதுக்கு ஒரே காரணம் நானே ராஜா நானே மந்திரிதான். இல்லையென்றால் பிரித்து இன்னொரு கும்பலை உருவாக்குவார்கள் ........ இப்போது இருக்கும் தெரிவு விலகுவது ..... எங்காவது போய் ஒட்டிக்கொண்டு இவ்வளவு காலமும் பேசியதற்கு நேர் எதிராக வாய்கூசாமல் பேசிக்கொண்டு இருப்பது.... அது தமிழக அரசியலில் பழகிப்போன ஒன்றும் கூட.

க‌ட்சிக்கு அதிக‌ம் உழைச்ச‌ திலீப‌ன் வ‌றுமையின் கார‌ன‌மாய் ஆதிமுக்காவில் இணைந்தார் ஆனால் க‌ட்சிய‌ விட்டு போன‌ பிற‌க்கு சிறு விம‌ர்ச‌ன‌ம் கூட‌ பொது வெளிக‌ளில் வைக்க‌ வில்லை

வ‌டிவேலு ஏதோ ஒரு ப‌ட‌த்தில‌ சொல்லுவார் வாங்கின‌ காசுக்கு மேல‌ கூவுரான்டா கொய்யால‌ என்ர‌ மாதிரி , திமுக்காவுக்கு போன‌ பிற‌க்கு , நாற வாய் ராஜிவ் காந்தி எப்ப‌டி எல்லாம் ந‌க்கி பிழைக்கிறான்

க‌ருணாநிதியின் பெய‌ரை விவாத‌ மேடையில் அர‌சிய‌ல் விம‌ர்ச‌க‌ர் சொல்ல‌ , நீங்க‌ள் க‌ருணாநிதி என்று சொல்ல‌க் கூடாது அவ‌ரை க‌லைஞ‌ர் என்று சொல்ல‌னும் என்று சொன்ன‌ சில்ல‌றை தான் இந்த‌ ராஜிவ் காந்தி😁😁😁😁😁😁

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கும் போது க‌ருணாநிதிக்கு எத்த‌ பெண்டாட்டி என்று பேசின‌ கோமாளி தான் ராஜிவ் காந்தி😁😁😁😁😁😁😁😁

இப்ப‌டி ப‌ல‌ அசிங்க‌ங்க‌ள் த‌மிழ‌க‌ அர‌சிய‌லில்..............ராஜிவ் காந்தி அள‌வுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் க‌ருணாநிதிய‌ விம‌ர்சிச்சு இருக்க‌ மாட்டின‌ம்😁😁😁😁😁😁😁...................

ஈழ‌த்தில‌ பிற‌ந்த‌ ந‌ம‌க்கு த‌ன்மான‌மும் பெரிசு இன‌ மான‌ம் அதை விட‌ பெரிசு என்று நினைச்ச‌ ப‌டியால் தான் த‌லைவ‌ர் பின்னால் உத்த‌னை ஆயிர‌ம் போராளிக‌ள் த‌ங்க‌ளை போராட்ட‌த்தில் இணைச்சு மாவீர‌ர்க‌ள் ஆகின‌வை🙏😥....................

உண்மையா அண்ணா இதை நான் அடிக்க‌டி நினைப்ப‌து உண்டு 2002 ச‌மாதான‌ கால‌த்தில் ச‌ர்வ‌தேச‌ம் எங்க‌ட‌ த‌மிழீழ‌ நாட்டை அங்கிக‌ரித்து இருந்தால் த‌மிழ் நாட்டு அர‌சிய‌லை எட்டியும் பார்த்து இருக்க‌ மாட்டேன்..............என‌து சிந்த‌னை பூரா எங்க‌ட‌ நாட்டை க‌ட்டி எழுப்பி எம் ம‌க்க‌ள் ந‌ல்ல‌ வாழ்க்கை வாழுவ‌தையே விரும்பி இருப்பேன்.....................நேர்மையான‌ த‌மீழீழ‌ அர‌சாங்க‌ம் உருவாகி இருக்கும் ஜாதி பேதி எல்லாம் ம‌ண்ணோட‌ ம‌ண்ணாய் போய் இருக்கும்

த‌மிழ‌ர்க‌ள் என்ர‌ ஒற்றுமையோட‌ வாழ்ந்து இருப்போம்🙏👍...........................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

40 minutes ago, வீரப் பையன்26 said:

பையன் சார், வழமையாக எழுதுவதை போலல்லாமல் நிதானமாக எழுதியிருக்கின்றீர்கள்...........👍.

பொதுவாகவே பல இடங்களிலும் விவாதங்கள் ஒரு நாயக வழிபாடு அல்லதோ கொள்கை பரப்புச் செயலாளரின் அறிக்கை போன்று இருக்கும், முற்று முழுதாக ஒரு பக்கம் மட்டுமே சாய்ந்திருக்கும், கருத்துகளால் நிறைந்திருக்கின்றன. என் தலைவர், என் கட்சி தப்பே செய்ய மாட்டார்கள் என்ற நிலைப்பாடு தான் எல்லாவற்றையும் முந்தைய நிலைப்பாடாக பல இடங்களிலும் இருக்கின்றது. என்ன சாட்சி என்ற கேள்விக்கு ஆதாரம் காட்டினால் கூட, அது பொய் ஊடகம், இது உண்மையான ஊடகம் என்றும், நீங்கள் அதை நம்புவது போல நாங்கள் இதை நம்புகின்றோம் என்றும் போய்க் கொண்டேயிருப்பார்கள்.

நீங்கள் இன்று அங்கேயும் தப்பு இருக்கின்றது என்று சொன்னது மிக நல்லதொரு ஆரம்பம், ஆரோக்கியமான ஒரு விவாதத்திற்கு.

இவர்கள் எவரும் பிரிந்து போவது நாதகவிற்கு குறுகிய காலத்தில் இழப்பே இல்லை. இது எம்ஜிஆர் திமுகவிலிருந்து பிரிந்து போனது போலவோ அல்லது மஹிந்த சுதந்திரக்கட்சியிலிருந்து போனது போலவோ அல்ல. ஆனால், எந்தப் பதவியிலும் இல்லாத அல்லது மிகவும் குறைவாகவே வெளியில் தெரிந்த இளைஞர்கள் நாதகவை விட்டுப் போவதும், அதற்கான காரணம் அவர்கள் எதிர்பார்த்து வந்த நாதக இதுவல்ல என்பதும் நீண்ட காலத்தில் பெரும் சேதத்தை விளைவிக்கும்.

இன்னொன்று, இது மிக முக்கியமான ஒன்று, ஆனால் இங்கு களத்தில் பலரும் அதை ஏற்றுக் கொள்வதில்லை: நாகரீகமற்ற பொதுவெளிச் பேச்சுகள் நடுநிலையான மக்களை இன்னும் தூரப்படுத்தும். சுற்றிவர நிற்பவர்கள் கைதட்டி ரசித்து சிரிக்கலாம். ஆனால் இந்த ரசிகர்களின் ஒவ்வொரு கைதட்டலிலும் இன்னும் நாலு பொதுமக்கள் தூரத்தே போய்விடுவார்கள். இந்த முதிர்ச்சி இல்லாமல், சீமானாலும், அர்ச்சுனாவாலும் எதையும் அடையமுடியாது.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

அங்கே ஒரு பெண் ஆளுமைக்கு வெற்றிடமும் உள்ளது.

அவர் அங்கே போகவேண்டும். தமிழ் நாட்டின் ஒரு பெரும் ஆளுமையாக வரவேண்டும் என்பதே என் அவா.

தவெகவில் பெண் ஆளுமைக்கு மட்டும் இல்லை, பல வெற்றிடங்கள் இருக்கின்றன. இன்னமும் 25 மாவட்டங்களுக்கு செயலாளர்களை அறிவிக்கவில்லை. செயலாளர்கள் கூட்டம் என்று விட்டு, அதை இப்போது பிற்போட்டுவிட்டார்கள். 'நீங்கள் கூட்டதை கூட்டுங்கள், நான் தலைமையேற்க வருகின்றேன்...........' என்று சொன்ன ரஜனியிலிருந்து ஒரு அடி முன்னுக்கு போயிருக்கின்றார் விஜய். ஆனால் இன்னும் நூறு அடிகள் போகவேண்டும் வேகமாக.

நேற்று கமல் அவர் கட்சியின் ஆண்டுவிழாவில் பேசியிருந்தார். தான் ஒரு தோற்றுப் போன அரசியல்வாதி என்று சொன்னார். ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்றும் சொன்னார். இவர் அரசியலுக்கு வந்த போதே இதைத்தானே நாங்களும் சொன்னோம்........ என்ன ஆனாலும், நேற்று கமலின் பேச்சைக் கேட்டபோது கவலையாக இருந்தது.

கமல் இறங்கிய அளவுக்கு கூட விஜய் இன்னும் இறங்கவில்லை. அவர் இறங்கி வரவேண்டும்..........

கிஷோர் தவெகவிற்கு 20 வீதம் அளவு வாக்கு வங்கி இருக்கின்றது என்கின்றார். இது உண்மையென்றால், இது ஒரு பெரிய எண். அதிமுகவின் அளவே அது தான். தவெக நடவடிக்கைகளை ஒழுங்காக்கி விரைவில் ஒருங்கிணைத்தால், அவர்கள் பலமான ஒரு மாற்றுச் சக்தியாக வரலாம். காளியம்மா போன்றவர்கள் இதற்கு இன்னும் வலுச்சேர்ப்பார்கள்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரசோதரன் said:

பையன் சார், வழமையாக எழுதுவதை போலல்லாமல் நிதானமாக எழுதியிருக்கின்றீர்கள்...........👍.

பொதுவாகவே பல இடங்களிலும் விவாதங்கள் ஒரு நாயக வழிபாடு அல்லதோ கொள்கை பரப்புச் செயலாளரின் அறிக்கை போன்று இருக்கும், முற்று முழுதாக ஒரு பக்கம் மட்டுமே சாய்ந்திருக்கும், கருத்துகளால் நிறைந்திருக்கின்றன. என் தலைவர், என் கட்சி தப்பே செய்ய மாட்டார்கள் என்ற நிலைப்பாடு தான் எல்லாவற்றையும் முந்தைய நிலைப்பாடாக பல இடங்களிலும் இருக்கின்றது. என்ன சாட்சி என்ற கேள்விக்கு ஆதாரம் காட்டினால் கூட, அது பொய் ஊடகம், இது உண்மையான ஊடகம் என்றும், நீங்கள் அதை நம்புவது போல நாங்கள் இதை நம்புகின்றோம் என்றும் போய்க் கொண்டேயிருப்பார்கள்.

நீங்கள் இன்று அங்கேயும் தப்பு இருக்கின்றது என்று சொன்னது மிக நல்லதொரு ஆரம்பம், ஆரோக்கியமான ஒரு விவாதத்திற்கு.

இவர்கள் எவரும் பிரிந்து போவது நாதகவிற்கு குறுகிய காலத்தில் இழப்பே இல்லை. இது எம்ஜிஆர் திமுகவிலிருந்து பிரிந்து போனது போலவோ அல்லது மஹிந்த சுதந்திரக்கட்சியிலிருந்து போனது போலவோ அல்ல. ஆனால், எந்தப் பதவியிலும் இல்லாத அல்லது மிகவும் குறைவாகவே வெளியில் தெரிந்த இளைஞர்கள் நாதகவை விட்டுப் போவதும், அதற்கான காரணம் அவர்கள் எதிர்பார்த்து வந்த நாதக இதுவல்ல என்பதும் நீண்ட காலத்தில் பெரும் சேதத்தை விளைவிக்கும்.

இன்னொன்று, இது மிக முக்கியமான ஒன்று, ஆனால் இங்கு களத்தில் பலரும் அதை ஏற்றுக் கொள்வதில்லை: நாகரீகமற்ற பொதுவெளிச் பேச்சுகள் நடுநிலையான மக்களை இன்னும் தூரப்படுத்தும். சுற்றிவர நிற்பவர்கள் கைதட்டி ரசித்து சிரிக்கலாம். ஆனால் இந்த ரசிகர்களின் ஒவ்வொரு கைதட்டலிலும் இன்னும் நாலு பொதுமக்கள் தூரத்தே போய்விடுவார்கள். இந்த முதிர்ச்சி இல்லாமல், சீமானாலும், அர்ச்சுனாவாலும் எதையும் அடையமுடியாது.

சீமானை நான் ஒரு போதும் அர்ச்சுனாவோடு ஒப்பிட‌ மாட்டேன் குருநாதா....................சீமான் மைக்குக்கு முன்ன‌ள் நின்று ஊட‌க‌ங்களுட‌ன் முர‌ன் ப‌டுவ‌தில் என‌க்கு பெரிய‌ உட‌ன் பாடு இல்லை இதை சீமான் மாற்றி கொள்ளா விட்டால் இவ‌ர் மீதான‌ தேவை இல்லா ப‌ல‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ள் எழுந்து கொண்டே இருக்கும்........

சீமானுக்கே ந‌ல்லாத் தெரியும் அவ‌ர் சொல்லும் ந‌ல்ல‌துக‌ளை ச‌ட்லையிட் ஊட‌க‌ங்க‌ளில் காட்ட‌ மாட்டின‌ம் என்று.................சீமான் துப்பும் எச்சில‌ பெரிதாக்கி காட்டுவ‌து தான் ஊட‌க‌ங்க‌ளின் வேலை...............நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் தொட‌ர்ந்து புதிதாக‌ இணைப‌வ‌ர்க‌ள் ப‌த‌வி பெருப்பு ஏற்ப்ப‌வ‌ர்க‌ளை ஊட‌க‌ங்க‌ள் காட்டுவ‌தில்லை.................க‌ட்சியில் முர‌ன் ப‌ட்டு கொண்டு யாரும் வெளியில் போனால் அவ‌ர்க‌ள் வீட்டின் முன் ச‌ண் டீவி போய் நிக்கும் பேட்டி எடுக்க‌....................

சீமானும் முன்னுக்கு பின் சில‌ இட‌ங்க‌ளில் பேசி இருக்கிறார் ஆனால் வைக்கோ திருமாள‌வ‌னுட‌ன் ஒப்பிடும் போது சீமான் ப‌ய‌ணிக்கும் பாதை ச‌ரி என‌ப் ப‌டும்

2009 ஓட‌ இல‌ங்கை அர‌சிய‌லை எட்டியும் பார்க்காம‌ விட்ட‌ நான் கார‌ண‌ம் ச‌ம்ம‌ந்த‌ர் ம‌ற்றும் ப‌ல‌ரின் துரோக‌த்தால்.................எம‌க்காக‌ போராடின‌ போராளிக‌ள் கோயில் சாச‌லில் பிச்சை எடுக்க‌ விட்டு வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள்...............காணாம‌ல் போன‌வ‌ர்க‌ளை க‌ண்டு பிடிச்சு த‌ருகிறோம் என்று சொல்லி ஏமாத்தின‌வ‌ர்க‌ள்..............அதில் ஒரு அர‌சிய‌ல் வாதி தான் போன‌ மாத‌ம் இற‌ந்த‌வ‌ர்.......................

நாம் த‌மிழ‌ர் என்ர‌ க‌ட்சி ப‌ல‌ரின் க‌டின‌ உழைப்பால் உய‌ர்ந்த‌ க‌ட்சி...............அந்த‌ வ‌ள‌ர்ச்சிக்கு சீமானின் ப‌ங்கு பெரிய‌து.......................நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்ச்சிக்கு யூடுப் பெரிதும் உத‌வின‌து...................யூடும் இல்லை என்றால் க‌ட்சிய‌ இந்த‌ அள‌வுக்கு வ‌ள‌த்து இருக்க‌ முடியாது.................க‌ட்சி 8 ச‌த‌ வீத‌த்தை தாண்டி 10ச‌த‌ வீத‌த்தை தொட்டு இருக்கும்....................விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போன‌து க‌ட்சி பிள்ளைக‌ள் சின்ன‌ம் இல்லாம‌ பிர‌ச்சார‌ம் செய்த‌து.................தேர்த‌ல் ஆனைய‌த்தால் ஒதுக்க‌ப் ப‌ட்ட‌ மைக் சின்ன‌த்தை உட‌ன‌ கொண்டு சேர்த்து இருந்தால் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்ய‌ கூடுத‌ல் நாள் இருந்து இருக்கும்................சீமானின் ந‌ட‌வ‌டிக்கையால் 8ச‌த‌ வீத‌த்தோட‌ நின்று விட்ட‌து

இன்னும் சில‌ குறைக‌ள் சீமானிட‌ம் இருக்கு அதை அவ‌ர் ச‌ரி செய்ய‌னும்..................

காளிய‌ம்மாள் விச‌ய‌த்தில் நான் எப்ப‌வும் காளிய‌ம்மாள் ப‌க்க‌ம் தான்......................காளிய‌ம்மாள் துரோகி சீமான் முதுகில் குத்தி விட்டா என்று எவ‌ன் சொன்னாலும் அவ‌ர்க‌ளின் கோம‌ன‌ம் உருவி தொங்க‌ விட‌ப் ப‌டும்............................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

இன்னொன்று, இது மிக முக்கியமான ஒன்று, ஆனால் இங்கு களத்தில் பலரும் அதை ஏற்றுக் கொள்வதில்லை: நாகரீகமற்ற பொதுவெளிச் பேச்சுகள் நடுநிலையான மக்களை இன்னும் தூரப்படுத்தும்.

அவரின் நாகரிகமற்ற பேச்சுக்களால் வெளிநாடுகளில் உள்ள ஈழதமிழர்களையும் கெடுத்து போட்டார்.

1 hour ago, ரசோதரன் said:

இந்த முதிர்ச்சி இல்லாமல், சீமானாலும், அர்ச்சுனாவாலும் எதையும் அடையமுடியாது.

ஆரம்பத்தில் பெரிதாக நினைத்த அர்ச்சுனா இவரோடு ஒப்பிடும் அளவுக்கு கீழே வந்தது ஏமாற்றம்

45 minutes ago, ரசோதரன் said:

தவெகவில் பெண் ஆளுமைக்கு மட்டும் இல்லை, பல வெற்றிடங்கள் இருக்கின்றன. இன்னமும் 25 மாவட்டங்களுக்கு செயலாளர்களை அறிவிக்கவில்லை. செயலாளர்கள் கூட்டம் என்று விட்டு, அதை இப்போது பிற்போட்டுவிட்டார்கள். 'நீங்கள் கூட்டதை கூட்டுங்கள், நான் தலைமையேற்க வருகின்றேன்...........' என்று சொன்ன ரஜனியிலிருந்து ஒரு அடி முன்னுக்கு போயிருக்கின்றார் விஜய். ஆனால் இன்னும் நூறு அடிகள் போகவேண்டும் வேகமாக.

நேற்று கமல் அவர் கட்சியின் ஆண்டுவிழாவில் பேசியிருந்தார். தான் ஒரு தோற்றுப் போன அரசியல்வாதி என்று சொன்னார். ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்றும் சொன்னார். இவர் அரசியலுக்கு வந்த போதே இதைத்தானே நாங்களும் சொன்னோம்........ என்ன ஆனாலும், நேற்று கமலின் பேச்சைக் கேட்டபோது கவலையாக இருந்தது.

அறிந்து கொண்டேன் நன்றி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.