Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி

ஜெர்மனியில் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி (SPD) ஆட்சியில் இருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பரில், கூட்டணிக் கட்சியை சேர்ந்தவரான நிதி அமைச்சரை சான்சலர் ஒலாப் ஸ்கால்ஸ் திடீர் பதவி நீக்கம் செய்தார். இதையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோல்வியுற்றதை தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில், ஒலாப் ஸ்கால்ஸின் சமூக ஜனநாயகக் கட்சிக்கும், முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் கிறிஸ்துவ ஜனநாயக யூனியனுக்கும் கடும் போட்டி இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், வலதுசாரி கட்சியான ஏ.எப்.டி, கட்சியும் கடும் போட்டியை அளித்து வருகிறது.

ஆளும் கட்சி சார்பில் ஒலாப் ஸ்கால்ஸ், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU-CSU) சார்பில் பிரெட்ரிக் மெர்ஸ், ஏ.எப்.டி சார்பில் ஆலீஸ் வீடெல் ஆகியோர், சான்சலர் பதவிக்கான தேர்தலில் மோதுகின்றனர். பசுமை கட்சியின் ராபர் ஹபெக்கும் களத்தில் இருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியில் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி தலைவரான பிரெட்ரிக் மெர்ஸ் சான்சலர் ஆவதற்கே வாய்ப்புள்ளதாகவும், அவரது கன்சர்வேடிவ் கட்சியே முன்னணியில் இருப்பதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்ட எக்ஸிட் போல் முடிவுகளில் தெரியவந்துள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்புகளின்படி, பிரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக கட்சி (CDU/ CSU) கூட்டணி தேர்தலில் 28.9% வாக்குகளையும், தீவிர வலதுசாரி கட்சியான AFD (Alternative for Germany) 19.9% வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்து எதிர்க் கட்சியாக உருவெடுக்கும் என தெரியவந்துள்ளது. ஜெர்மனியின் தற்போதைய சான்சலர் ஓலாப் ஸ்கால்ஸின் SPD கட்சி 16% வாக்குகளுடன் 3வது இடம் பிடிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

ஜெர்மனி சான்சலர் பதவிக்கான தேர்தலில் பிரெட்ரிக் மெர்ஸ் வெற்றி உறுதியானதை தொடர்ந்து, ஒலாஃப் ஸ்கால்ஸ் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு பிரெட்ரிக் மெர்ஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த தேர்தல் முடிவுகளானது SPD கட்சியினருக்கு கசப்பானது என்றும் தெரிவித்துள்ளார்.

https://tamil.oneindia.com/news/international/germany-election-conservative-alliance-wins-elections-show-exit-polls-682517.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

பிந்திய நிலவரம் - தோல்வியை ஏற்று கொண்டார் நடப்பு அதிபர்.

வெற்றியை கோரியது மெர்சின் கட்சி.

அதி தீவிர வலது, மறைமுக நாஜிகள் AfD இரெண்டாம் இடம். 20.6%

வெற்றியீட்டிய சி எஸ் யூ -28.5%

  • Replies 56
  • Views 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    இதுவரைக்கும் பிரித்தானியாவில் இல்லை. இங்கே AfD யுடன் ஒப்பிட கூடியவர்கள் Britain First, BNP, National Front, English Defense League போன்றவை. இவர்களுக்கு ஒரு உள்ளாட்ட்சி மன்ற சீட் கூட இல்லை. அண்மையில் உ

  • விளங்க நினைப்பவன்
    விளங்க நினைப்பவன்

    செய்திகளில் நான் கவனமாக அவதானித்தேன். கம்யுனிச ஆக்கிரமப்பின் கீழ் முன்பு இருந்த யேர்மனின் கிழக்கு பகுதி தொகுதிகளில் பேர்லின் தலைநகர தொகுதியை தவிர இனவெறி AFD கட்சி மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது. பல இடங

  • goshan_che
    goshan_che

    பிரான்சில் நிலைமை சற்று வேறுபாடானது. அங்கே AfD யுடன் ஒப்பிடுகூடிய கட்சி என்றால் லிபென்னின் நேசனல் ரலிதான். ஆனால் செனெட்டில் இவர்கள் பலம் 3/348. கீழ் சபையில் 126/577. மிகுதி இருப்பவர்கள் எல்லாம் ஒன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, goshan_che said:

வெற்றியை கோரியது மெர்சின் கட்சி.

அமெரிக்க ஜெனாதிபதி டொனால்ட் ரம்ப் அவர்கள் நாளைய ஜேர்மன் அதிபர் Friedrich Merz அவர்கட்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.🍀

  • கருத்துக்கள உறவுகள்

அந்தந்த நாட்டு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். நாம் தான் எப்ப எங்கே ஓடலாம் என்று கணக்கு பண்ணியபடி???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்க ஜெனாதிபதி டொனால்ட் ரம்ப் அவர்கள் நாளைய ஜேர்மன் அதிபர் Friedrich Merz அவர்கட்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.🍀

எதிர்பார்த்ததுதான்.

மேர்ஸ் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை அவர் SDU, Greens இன் ஆதரவைக் கோரியபடி செய்ய முடியாது.

ஆகவே இதுவரை ஜேர்மனியில் சகல முண்ணனி கட்சிகளும் கடைப்பிடித்த Brandmauer எனப்படும் மறைமுக நாஜிகளிடம் கூட்டணி இல்லை என்ற கொள்கையை இவர் உடைக்கக்கூடும்.

இந்த பாராளுமன்றில் இரு குடியேற்ற சட்டமூலங்களை AfD துணையுடன் நிறைவேற்ற முயன்றவர் இவர்.

அத்துடன் மஸ்கின் நேரடி AfD ஆதரவு, அமெரிக்காவின் உதவி தேவை எனில் AfD க்கு தகுந்த இடம் கொடுக்க வேண்டும் என டிரம்ப் மேர்சை நெருக்க கூடும்.

ஜேர்மனி மிக விரைவில் ரஸ்யாவின் உற்ற தோழனாக போகிறது எனவும் நான் நினைக்கிறேன்.

வழுக்கு பாறைதொடர் ஒன்றின் முதலாவது பாறையில் ஏறிவிட்டீர்கள் என்பதை உணர்கிறீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, goshan_che said:

உலக பொருளாதார அரசியலில் சீனாவை விட ரஷ்ய பொருளாதார அரசியல் 100 சிறந்தது /நம்பகரமானது என டொனால்ட் ரம்ப் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றார்😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பிரான்சிலும் தற்பொழுது இதைத்தான் செய்கிறார்கள் என நினைக்கிறேன்.. அதாவது பெரும்பான்மை அற்ற அரசு இரண்டாவது பெரும்பான்மையானவலதிசாரிகளின் மறைமுக ஆதரவுடன் ஆட்சி அமைத்தபடி அவர்களை தாஜபண்ண குடியேற்ற விதிகளை இறுக்குகிறார்கள்..

இந்த தேர்தலில் இரண்டாவதாக இந்த நாடுகளில் வந்த வலதுசாரிகள் அடுத்து முதலாவதாக வர ரொம்பகாலம் எடுக்காது..

ஏனெனில் முன்னர் எல்லாம் இவர்கள் எல்லாம் இருக்கிறார்களா என்றுகூட தெரியாத அளவுக்கு வாக்கு வாங்குபவர்கள் இன்று இரண்டாம் இடம்.. நாளை..?

1 hour ago, விசுகு said:

அந்தந்த நாட்டு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். நாம் தான் எப்ப எங்கே ஓடலாம் என்று கணக்கு பண்ணியபடி???

அப்படி எல்லாம் சந்தோசப்பட ஒன்றும் இல்லை.. 20 வீதம் என்பது வலதுசாரிகளிற்கு வெற்றிக்கு சமம்.. நாட்டின் மிகப்பெரிய மக்கள் கூட்டம் எமக்கு எதிராக என்பதுதான் அதன் அர்த்தம்.. நாளை..?

இதுதான் உங்கள் நாட்டின் நிலையும்..

வலதுசாரிகளுக்கு “நான் வளர்கிறேனா மம்மி” காலம்.. டிரம்ப் காலம்..

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வலதுசாரிகளுக்கு “நான் வளர்கிறேனா மம்மி” காலம்.. டிரம்ப் காலம்..

“நான் வளர்கிறேனா மம்மி” சிரிப்பை வரவழைத்த நல்ல உதாரணம். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-344.jpg?resize=750%2C375&ssl

ஜேர்மனிய தேர்தலில் பழமைவாதிகள் வெற்றி; ஜனாதிபதியாக பதவியேற்கும் ஃபிரெட்ரிக் மெர்ஸ்!

ஜேர்மனியில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற தேசியத் தேர்தலில் எதிர்க்கட்சி பழமைவாதிகள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக ஃபிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) பதவியேற்கவுள்ளார்.

புதிய ஒரு அரசாங்கத்தை அமைக்கத் தயாராகும் போது, ஐரோப்பாவிற்கு அமெரிக்காவிலிருந்து “உண்மையான சுதந்திரத்தை” வழங்க உதவுவதாகவும் அவர் சபதம் செய்தார்.

தற்போதைய அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் மூன்று வழி கூட்டணி சரிந்ததைத் தொடர்ந்து, தீவிர வலதுசாரி மாற்று ஜெர்மனி (AfD) கட்சி, ஒரு உடைந்த வாக்குகளில் வரலாற்று ரீதியாக இரண்டாவது இடத்திற்கு உயர்ந்தது.

இதனால், 69 வயதான மெர்ஸ் சிக்கலான மற்றும் நீண்ட கூட்டணி பேச்சுவார்த்தைகளை தற்சமயம் எதிர்கொண்டுள்ளார்.

தொழில்நுட்ப கோடீஸ்வரரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நண்பருமான எலோன் மஸ்க் உள்ளிட்ட முக்கிய அமெரிக்க பிரமுகர்களின் ஒப்புதலைப் பெற்ற AfD உடன் இணைந்து பணியாற்றுவதை பிரதான கட்சிகள் நிராகரிக்கின்றன.

ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரம் நலிவடைந்துள்ள நிலையில், அதன் சமூகம் இடம்பெயர்வு காரணமாக பிளவுபட்டு, அதன் பாதுகாப்பு மோதலில் ஈடுபடும் அமெரிக்காவிற்கும் உறுதியான ரஷ்யா மற்றும் சீனாவிற்கும் இடையில் சிக்கியுள்ள நிலையில், மெர்ஸ், முன்னர் பதவியில் அனுபவம் இல்லாத நிலையில், ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

தனது வெற்றிக்குப் பின்னர் மெர்ஸ் அமெரிக்காவை நேரடியாகக் குறிவைத்து, பிரச்சாரத்தின் போது வொஷிங்டனில் இருந்து வந்த மூர்க்கத்தனமான கருத்துக்களை விமர்சித்து, அவற்றை ரஷ்யாவின் விரோதத் தலையீடுகளுடன் ஒப்பிட்டார்.

“இரு தரப்பிலிருந்தும் நாங்கள் மிகப்பெரிய அழுத்தத்தை எதிர்கொள்கிறோம், இப்போது எனது முழுமையான முன்னுரிமை ஐரோப்பாவில் ஒற்றுமையை அடைவதாகும். ஐரோப்பாவில் ஒற்றுமையை உருவாக்குவது சாத்தியமாகும்,” என்று அவர் ஏனைய தலைவர்களுடனான ஒரு வட்டமேசை மாநாட்டில் கூறினார்.

ஐரோப்பாவை விரைவில் வலுப்படுத்துவதே எனது முழுமையான முன்னுரிமையாக இருக்கும், இதன் மூலம் அமெரிக்காவிலிருந்து படிப்படியாக உண்மையான சுதந்திரத்தை அடைய முடியும் என்று அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் முடிவை வரவேற்ற போதிலும், அமெரிக்காவிற்கு எதிரான மெர்ஸின் விமர்சனம் வந்தது.

தேர்தலில் பழமைவாத CDU/CSU கூட்டணி 28.5% வாக்குகளைப் பெற்றது. அதைத் தொடர்ந்து AfD 20.5% வாக்குகளைப் பெற்றது என்று ZDF ஒளிபரப்பாளரால் ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்பட்ட ஒரு கணிப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்படத்தக்கது.

https://athavannews.com/2025/1422726

  • கருத்துக்கள உறவுகள்

  • licensed-image?q=tbn:ANd9GcTtXiyFl4ToR5p

    CDU/CSU

    208 Sitze

    Friedrich Merz

    14.158.432 Stimmen (28,52 %)

  • licensed-image?q=tbn:ANd9GcTj_oJDok_-Ca5

    AfD

    152 Sitze

    Alice Weidel

    10.327.148 Stimmen (20,8 %)

  • licensed-image?q=tbn:ANd9GcScSg7L0i-V-8O

    SPD

    120 Sitze

    Olaf Scholz

    8.148.284 Stimmen (16,41 %)

  • licensed-image?q=tbn:ANd9GcSualwje3VfmJd

    GRÜNE

    85 Sitze

    Robert Habeck

    5.761.476 Stimmen (11,61 %)

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

பிரான்சிலும் தற்பொழுது இதைத்தான் செய்கிறார்கள் என நினைக்கிறேன்.. அதாவது பெரும்பான்மை அற்ற அரசு இரண்டாவது பெரும்பான்மையானவலதிசாரிகளின் மறைமுக ஆதரவுடன் ஆட்சி அமைத்தபடி அவர்களை தாஜபண்ண குடியேற்ற விதிகளை இறுக்குகிறார்கள்..

இந்த தேர்தலில் இரண்டாவதாக இந்த நாடுகளில் வந்த வலதுசாரிகள் அடுத்து முதலாவதாக வர ரொம்பகாலம் எடுக்காது..

ஏனெனில் முன்னர் எல்லாம் இவர்கள் எல்லாம் இருக்கிறார்களா என்றுகூட தெரியாத அளவுக்கு வாக்கு வாங்குபவர்கள் இன்று இரண்டாம் இடம்.. நாளை..?

அப்படி எல்லாம் சந்தோசப்பட ஒன்றும் இல்லை.. 20 வீதம் என்பது வலதுசாரிகளிற்கு வெற்றிக்கு சமம்.. நாட்டின் மிகப்பெரிய மக்கள் கூட்டம் எமக்கு எதிராக என்பதுதான் அதன் அர்த்தம்.. நாளை..?

இதுதான் உங்கள் நாட்டின் நிலையும்..

வலதுசாரிகளுக்கு “நான் வளர்கிறேனா மம்மி” காலம்.. டிரம்ப் காலம்..

அப்படியானால் எந்த நாட்டில் அப்படி இல்லை என்றும் சொல்லணும் இல்லையா?

எனக்கு தெரிந்து நான் வந்த காலத்திலேயே பிரான்ஸ் இதை பார்த்து தடுத்து வருகிறது. அந்த மக்களில் பெரும்பான்மையினர் எமக்காக போராடும்போது பேசும்போது ஆதரவு தரும் போது நாம் மட்டும் அதையெல்லாம் மீறி நாம் தப்பினால் போதும் என்று சிந்திப்பது எவ்வளவு சுயநலம்.

இன்னொன்றையும் சொல்கிறேன் அந்த மக்கள் எமக்கு செய்த உதவிகளுக்கு பரிகாரமாக நம்மவர் செய்வது (வேறு நாட்டவரை விடுங்கள்). எமது தாயகத்தில் ஒன்று நடந்து விட்டால் புலிகள் பிஸ்டல் குழுவையாவது விட்டு சென்றிருக்கவேண்டும் என்று நாம் சொல்லலாம் தனது மக்களுக்கு தான் உள்ளே விட்டதால் கொடுமைகள் நடக்கும்போது அவர்கள் சொல்லக்கூடாதா??? எந்தவகையான நியாயம் இது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த தேர்தலில் இரண்டாவதாக இந்த நாடுகளில் வந்த வலதுசாரிகள் அடுத்து முதலாவதாக வர ரொம்பகாலம் எடுக்காது.

  1. AfD வாக்கு வீதம் 2021 உடன் ஒப்பிடுகையில் இரு மடங்கால் கூடியுள்ளது. ஏனைய எதிர்கட்சிகள் புறக்கணித்த இடைத்தேர்தலில் அல்ல, நாடளாவிய பொதுத்தேர்தலில். இதுதான் ராக்கெட் வேக அசுர வளர்ச்சி.

    நான் வளர்கிறேனே மம்மி குழந்தை இல்லை. டீன் ஏஜ் ஆண்பிள்ளைகள் வளரும் “பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஒவ் மை எனர்ஜி” வளர்ச்சி இது.

  2. இன்று புதிய ஜேர்மன் அதிபர், அமெரிக்கா தமது தேர்தலில் ரஸ்யா அளவுக்கு தலையிட்டது. அமெரிக்காவுக்கு இப்போ ஐரோப்பா பற்றிய கவலை இல்லை, கைவிட்டு விட்டது, நம்பாட்டை நாம்தான் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். இனிமேல் டிரம்ப் நேரடியாக ஜேர்மனியின் அதிகாரபூர்வ எதிர்கட்சியான AfD சார்பு நிலை எடுப்பார் என நினைக்கிறேன். இது இவர்கள் வளர்ச்சியை கூட்டும்.

  3. புதிய அதிபர் AfD யுடன் கூட்டு இல்லை என்றுள்ளார். ஆனால் இன்று AfD தலைவி கூறியது - எமது குடியேற்ற கொள்கைகளை வரித்து கொண்டு, எம்முடன் கூட்டு இல்லை என்கிறார், நிராகரிக்கபட்ட SDU வுடன் கூட்டு வைத்து எதை சாதிப்பார் என. இது உண்மையும் கூட. பல விடயங்களில் CDU அளித்த வாக்குறுதிகள், SDU வுடன் கூட்டுக்கு போனால் நீர்த்து போகும் என்றே நானும் நினைக்கிறேன். குறிப்பாக 1 மில்லியன் அளவு சிரியர்கள், ஆப்கானிகள், உக்ரேனியரை மீள அனுப்புவது.

    ஜேர்மன் மக்கள் எதிர்பார்ப்பது, கிட்டதட்ட இப்போ டிரம்ப் செய்வது போல் நாடு கடத்தல்களை. ஐரோப்பிய சட்டங்களோடு இப்படி செய்வது மிக கடினம்.

    எனது எதிர்வுகூறலில் - புதிய அரசாலும் குடிவரவு விடயத்தில் எதையும் பெரிதாக சாதிக்க முடியாமல் போகும். அப்போது மேலும் வாக்காளர் AfD நோக்கி உந்தபட வாய்ப்பு அதிகம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

பிரான்சிலும் தற்பொழுது இதைத்தான் செய்கிறார்கள் என நினைக்கிறேன்.. அதாவது பெரும்பான்மை அற்ற அரசு இரண்டாவது பெரும்பான்மையானவலதிசாரிகளின் மறைமுக ஆதரவுடன் ஆட்சி அமைத்தபடி அவர்களை தாஜபண்ண குடியேற்ற விதிகளை இறுக்குகிறார்கள்..

பிரான்சில் நிலைமை சற்று வேறுபாடானது. அங்கே AfD யுடன் ஒப்பிடுகூடிய கட்சி என்றால் லிபென்னின் நேசனல் ரலிதான். ஆனால் செனெட்டில் இவர்கள் பலம் 3/348. கீழ் சபையில் 126/577.

மிகுதி இருப்பவர்கள் எல்லாம் ஒன்றில் வலதுசாரிகள், அல்லது நடுவாதிகள், அல்லது நடுவிற்கு அருகான வலதுசாரிகள்.

இந்த பகிர்வு கிட்டதட்ட 20 வருடமாக பிரான்ஸில் தொடர்கிறது என நினைக்கிறேன். அங்கே ஆபத்து இருப்பது அதிபர் தேர்தலில். அங்கே டிரம்பை/ஜோன்சனை போல் ஒருவர் வந்தால் - அதி தீவிர வலதுசாரிகள் கை ஓங்கலாம்.

ஆனால் ஜேர்மனி, இத்தாலியில் நாஜி/பாசிசம் உள்ளே ஊறிய நஞ்சு. கிட்டதட்ட தென்னமரிக்காவில் கம்யூனிசம் போல. இன்றைய AfD தலைவர்களின் பாட்டன்கள் பலர் ஹிட்லரின் நெருங்கிய சகாக்கள், அமைச்சர்கள். இத்தாலியிலும் இன்னும் முசோலினியின் பிடி இருக்கிறது.

பிரான்சில் அப்படி அல்ல.

குடியேற்றத்தை கட்டுபடுத்த வேண்டும் என்பது பிரான்சில் மட்டும் அல்ல, மேற்கு முழுவதும் அடுத்த 50 ஆண்டுக்கு தவிர்க்க முடியாத அரசியல் கொள்கை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அப்படியானால் எந்த நாட்டில் அப்படி இல்லை என்றும் சொல்லணும் இல்லையா?

இதுவரைக்கும் பிரித்தானியாவில் இல்லை.

இங்கே AfD யுடன் ஒப்பிட கூடியவர்கள் Britain First, BNP, National Front, English Defense League போன்றவை. இவர்களுக்கு ஒரு உள்ளாட்ட்சி மன்ற சீட் கூட இல்லை.

அண்மையில் உருவாக்க பட்ட பராஜின் ரிப்போர்ம் பாராளுமன்றில் 3 சீட் எடுத்தது - ஆனால் இவர்கள் கூட வலதுசாரிகள் (டிரம்ப் போல) ஒழிய அதி தீவிர வலதுசாரிகள் என இதுவரைக்கும் சொல்ல முடியாது.

மஸ்கு அண்மையில் பராஜ் “இந்த வேலைக்கு சரிவரார்” என கூறி இனவாதியான டாமி ரொபின்சனை ஆதரித்தார்.

கனடா, அவுஸ், நீயூசிலாந்து ஏனைய உதாரணங்கள். நான் பிரான்சையும் இந்த பட்டியலில்தான் சேர்ப்பேன்.

AfD, நேசனல் ரலி மிக வேறுபட்டவர்கள்.

இன்று ஒரு AfD தலைவரை பேட்டி கண்டார்கள். யார் ஜேர்மனியர் என்பது கேள்வி.

பதில்: ஜேர்மன் பாஸ்போர்ட் உள்ளவர் எல்லாம் ஜேர்மன் பிரஜைகள். ஆனால் இனவழி ஜேர்மனியர் மட்டுமே - ஜேர்மனியர்.

பதில் சொன்னவர் பிபிசியிடம் உங்கள் நாட்டின் பாகிஸ்தானிகளும் இப்படித்தானே என மறு கேள்வி கேட்டார்.

பிபிசி காரர் சொன்னார் - இல்லை, ரிசி சுனாக் ஒரு ஆங்கிலேயன், பிரித்தானியன், இந்திய வம்சாவழியினன்.

பிரிதானியாவில் பாராளுமன்றத்தில் இருக்கும் எந்த கட்சியில் யாரை கேட்டாலும் இதுதான் பதிலாக வரும்.

மேலே சொன்ன நிலைப்பாட்டை நான் கூறிய உதிரி அமைப்புகள்தான் எடுக்கும்.

இது ஒரு பாரிய வித்தியாசம்.

இதனால்தான் ஜேர்மனியில் AfD உத்தியோகபூர்வ எதிர்கட்சியானது ஏனையவை சகலதையும் விட ஆபத்தானது.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

பேசாமல் நானும் சீமானை கைவிடுவது நல்லதுபோல.. எப்படி நஞ்சும் நக்கலும் என்று புரிகிறது அந்த ஜேர்மன் தலைவரின் கேள்வியில்..

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

உலக பொருளாதார அரசியலில் சீனாவை விட ரஷ்ய பொருளாதார அரசியல் 100 சிறந்தது /நம்பகரமானது என டொனால்ட் ரம்ப் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றார்😎

சீனாவை வீழ்த்த வேணும் என்ற காரணத்தினால் நம்ம தலைவன் அப்படி சொல்லியிருக்கின்றார்....தற்பொழுது சீனா தான் அமேரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கின்றது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

பேசாமல் நானும் சீமானை கைவிடுவது நல்லதுபோல.. எப்படி நஞ்சும் நக்கலும் என்று புரிகிறது அந்த ஜேர்மன் தலைவரின் கேள்வியில்..

இந்த விடயத்தில் நான் ஜெகோவா சாட்சிகள் போல, எங்கள் கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன😂

9 minutes ago, putthan said:

சீனாவை வீழ்த்த வேணும் என்ற காரணத்தினால் நம்ம தலைவன் அப்படி சொல்லியிருக்கின்றார்....தற்பொழுது சீனா தான் அமேரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கின்றது

ஜேர்மன் அதிபர் போல், பிரான்சும், யூகேயும் முடிவெடுத்து சீனாவுடன் உறவை பலப்பிக்க வேண்டும்.

ஐரோப்பா எனும் பெண்ணுக்கு அமெரிக்கா மட்டுமே முறை மாப்பிளை இல்லை என காட்டினால்தான் மதிப்பு வரும்😂.

ஆனால் உங்கள் பாடுதான் திண்டாட்டம்.

மேற்கு அவுஸ்ரேலியாவிலும் கனிம வளத்தால் கடந்த 10 வருடத்தில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது.

ஏற்றுமதியும் போவது அதிக அளவில் சீனாவுக்கு.

டிரம்பின் கண்ணில் பட்டால் தொலைந்தீர்கள்.

ஒன்றில் 50% எனக்கு அல்லது 100% சீனாவுக்கு என டீல் போடுவார் 😂.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

ஐரோப்பா அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெறவேண்டும் - ஜேர்மனியின் புதிய சான்சிலர் மேர்ஸ்

Published By: RAJEEBAN

24 FEB, 2025 | 01:53 PM

image

ஜேர்மனியின் புதிய சான்சிலராக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரீடிரிச் மேர்ஸ்  அமெரிக்காவிடமிருந்துசுதந்திரம் பெறவேண்டும் என  தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஐரோப்பிய கண்டத்தின் தலைவிதி குறித்து பெருமளவிற்கு அலட்சியமாக உள்ளது என தெரிவித்துள்ள ஜேர்மனியின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர்  ஐரோப்பா சுதந்திரமாகவேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் தேர்தலில் அமெரிக்காவின் தலையீட்டையும் அவர் கண்டித்துள்ளார்.

mers_ger.jpg

டிரம்ப் நிர்வாகமும் எலொன் மஸ்க்கும் ஜேர்மனியின் அதிதீவிர வலதுசாரிகளிற்கு ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவை வலுப்படுத்துவதே எனது மிகவும் முன்னுரிமைக்குரிய விடயம் எனதெரிவித்துள்ளஅவர் இதனை கூடியவிரைவில் செய்யவேண்டும், அமெரிக்காவிடமிருந்து படிப்படியாக நாங்கள் சுதந்திரத்தை பெறலாம் என குறிப்பிட்டுள்ளார்.

நான் இப்படி ஒரு கருத்தை தொலைக்காட்சிகளிற்கு தெரிவிக்கவேண்டிய நிலைவரும்,என ஒருபோதும் நினைக்கவில்லை  என தெரிவித்துள்ள மேர்ஸ் கடந்த வாரம் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துக்கள் அமெரிக்கா அல்லது அதன் தற்போதைய நிர்வாகம்,ஐரோப்பாவின் தலைவிதி குறித்து அலட்சியமாக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் பிரீடிரிச் மேர்ஸின் கென்சவேர்ட்டிவ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. அதேவேளை தீவிரவலதுசாரி கட்சியான ஏஎவ்டி ( அல்டனேர்ட் ஜேர்மன் கட்சி) 20.8 வீதவாக்குகள் கிடைத்தள்ளன.

பழையபாணி கென்சவேர்ட்டிவும்  . இதுவரை  அரசபதவிகளை வகிக்காதவருமான மேர்ஸ்; ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்திற்கும் அதிக சனத்தொகை கொண்ட நாட்டிற்கும் தலைமைதாங்கவுள்ளார்.

https://www.virakesari.lk/article/207520

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

ஐரோப்பா அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெறவேண்டும் - ஜேர்மனியின் புதிய சான்சிலர் மேர்ஸ்

ஐரோப்பாவில் Atlanticist என்று ஒரு பதத்தை சொல்லுவார்கள். ஐரோப்பிய நாடுகளினை விட அல்லது அதே அளவில் தம் நாடு அமெரிக்காவை சார்ந்து இருக்க வேண்டும் என நினைப்பவர்களின் கொள்கை நிலைப்பாடு இப்படி சொல்லப்படும்.

சில மாதங்கள் முன் வரை மிக தீவிர அட்லாண்டிசிஸ்ட் ஆக அறியப்பட்டவர் மேர்ஸ்.

இப்போ 180 பாகையால் திரும்பியுள்ளார்.

காரணம்? டிரம்பின் ஐரோப்பிய கொள்கை.

இதனால் அமெரிக்காவின் நலனுக்கு எத்தகைய பாதிப்பு என நான் சொல்லவேண்டியதில்லை.

டிரம்ப் புட்டினின் ஏஜெண்ட் எனும் என் சதிக்கோட்பாட்டுக்கு இது இன்னொரு ஊக-சான்று.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரம், ஜோதிடம், கிரகங்கள் மற்றும் கலியுகம், கலியுகம் என்று பூமியில் மக்களைக் கிலிபிடிக்க வைத்த புகழ்பெற்ற மேதைகளின் வார்த்தைகள் பொய்யல்ல என்பதை மெய்ப்பிக்க உண்மையில் இப்போதுதான் கலி தன் வாகனத்தில் பூமிக்கு வந்துள்ளது. பூமியில் தன் வாகனத்தைப் பார்க்செய்யக் கட்டணமற்ற இடம்தேடி முதலில் அமெரிக்காவில் கண்டுபிடித்தது. தன் ஆ ட்டத்திற்கு மேளமடிக்க டிரம்பும் அங்கு இருப்பதும் கண்டு மேலும் அளவில்லா ஆனந்தம் கொண்டுள்ளது. தொடர்ந்து ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்ககா, தென்னமெரிக்கா என்று கண்டம் கண்டமாக அதன் ஆட்டம் தொடரும் என எதிர்பார்க்லாம்.

கிரகங்கள் தாக்கத்திலிருந்து தப்புவதற்காக கோமாதா தீர்த்தம் அருந்தி செய்யவேண்டிய பரிகாரங்களை உலகத்துக்கே அறியத்தந்த இந்தியா, கலியின் ஆட்டத்தால் தொடர்ந்து வரும் அமெரிக்க வானூர்திக் கிரகங்களைக் கண்டு செய்வதறியாது தடுமாறுகிறது.

அமெரிக்காவுக்குக் கலியுக வரதனார் முதலில் வந்தாலும், அவருக்கு முந்திநின்று “ஏஎப்டி” என்று பெயர் சூட்டிப் பெருமைகொள்ளும் பெறுபேற்றை யேர்மனியே அடைந்துள்ளது.🏃🏽‍♀️💃🏼

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதுவரைக்கும் பிரித்தானியாவில் இல்லை.

இங்கே AfD யுடன் ஒப்பிட கூடியவர்கள் Britain First, BNP, National Front, English Defense League போன்றவை. இவர்களுக்கு ஒரு உள்ளாட்ட்சி மன்ற சீட் கூட இல்லை.

அண்மையில் உருவாக்க பட்ட பராஜின் ரிப்போர்ம் பாராளுமன்றில் 3 சீட் எடுத்தது - ஆனால் இவர்கள் கூட வலதுசாரிகள் (டிரம்ப் போல) ஒழிய அதி தீவிர வலதுசாரிகள் என இதுவரைக்கும் சொல்ல முடியாது.

மஸ்கு அண்மையில் பராஜ் “இந்த வேலைக்கு சரிவரார்” என கூறி இனவாதியான டாமி ரொபின்சனை ஆதரித்தார்.

கனடா, அவுஸ், நீயூசிலாந்து ஏனைய உதாரணங்கள். நான் பிரான்சையும் இந்த பட்டியலில்தான் சேர்ப்பேன்.

AfD, நேசனல் ரலி மிக வேறுபட்டவர்கள்.

இன்று ஒரு AfD தலைவரை பேட்டி கண்டார்கள். யார் ஜேர்மனியர் என்பது கேள்வி.

பதில்: ஜேர்மன் பாஸ்போர்ட் உள்ளவர் எல்லாம் ஜேர்மன் பிரஜைகள். ஆனால் இனவழி ஜேர்மனியர் மட்டுமே - ஜேர்மனியர்.

பதில் சொன்னவர் பிபிசியிடம் உங்கள் நாட்டின் பாகிஸ்தானிகளும் இப்படித்தானே என மறு கேள்வி கேட்டார்.

பிபிசி காரர் சொன்னார் - இல்லை, ரிசி சுனாக் ஒரு ஆங்கிலேயன், பிரித்தானியன், இந்திய வம்சாவழியினன்.

பிரிதானியாவில் பாராளுமன்றத்தில் இருக்கும் எந்த கட்சியில் யாரை கேட்டாலும் இதுதான் பதிலாக வரும்.

மேலே சொன்ன நிலைப்பாட்டை நான் கூறிய உதிரி அமைப்புகள்தான் எடுக்கும்.

இது ஒரு பாரிய வித்தியாசம்.

இதனால்தான் ஜேர்மனியில் AfD உத்தியோகபூர்வ எதிர்கட்சியானது ஏனையவை சகலதையும் விட ஆபத்தானது.

என்ன சகோ

நேற்று அமெரிக்கா குதிக்க சொன்னால் பிரித்தானிய குதித்திடும் என்பதிலிருந்து இன்று ??? 😂 இதுக்கு நேரே ட்ரம்புடனேயே கூட்டு வைக்கலாமே?😅

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

என்ன சகோ

நேற்று அமெரிக்கா குதிக்க சொன்னால் பிரித்தானிய குதித்திடும் என்பதிலிருந்து இன்று ??? 😂 இதுக்கு நேரே ட்ரம்புடனேயே கூட்டு வைக்கலாமே?😅

சீனாவில் மாப்பிள்ளை தேடச்சொன்னதை சொல்கிறீர்களா?😂

சும்மா ஒரு வெருட்டுக்கு அவையையும் கூப்பிட்டு பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட வைத்தால்தான் அமெரிக்காவுக்கு பயம் வரும்.

முதலாம் எலிசபெத் இப்படித்தான் ஸ்பெயின், பிரான்ஸ், ஆஸ்திரிய இளவரசர்களுக்கு “கல்யாண ஆசை” காட்டியபடி இங்கிலாந்தின் நலனை முந்தள்ளினார். ஆனால் கடைசிவரை கன்னியாகவே வாழ்ந்தார்.

இங்கிலாந்து சாம்ராஜ்யம் ஆரம்பமாகிய்து இவரின் ஆட்சியில்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா, வெளித்தோற்றத்துக்கே சொல்வது UK பாஸ்போர்ட் உள்ளவர்கள் எல்லோரும்

பிரித்தானியர் , அதாவது எல்லோரும் பிரித்தானியர் என்ற அடிப்படையில் சமமானவர்கள்.

(அப்படி ஆயின், பிரித்தானிய கடவுச் சீட்டில் என் பிறந்த இடம் இருக்க வேண்டும்?)

(ஆங்கிலேயர் என்பது நிருபரின் stretch)

அனல், சுளைக்கு வரும் பொது அந்த afd கட்சி உறுப்பினர் சொல்வதே யதார்த்தம்.

பல வேலைகளில் (வேலைகள் அரசிலும் இருக்கிறது, அரசோடு ஒப்பன்ஹாம் செய்யும் பெரிய நிறுவனங்களில் இருக்கிறது) , இங்கே பிறந்த எமது பிள்ளைகல் கூட பிரித்தானியராக கருதப்பட மாட்டார்கள் என்பது யதார்த்தம்.

அதற்கு, தாய், தகப்பன் இருவரும் பிரித்தானியாவில் பிறந்து இருக்க வேண்டும்.

இது எனது நேரடி அனுபவத்தில் இருந்து.

எனவே afd சொல்வதில் விடயமும், உண்மையும் இருக்கிறது.

ஆனால், ப்பாம்பின் கால் பாம்பு அறியும் - ஆங்கிலேயரின் அடி ஜேர்மன் இல் இருந்து தானே வந்தது.

(வேலை முக்கியம் இல்லை என்று சிலர் வாதாடக் கூடும்)

  • கருத்துக்கள உறவுகள்

480773175_3895378684037431_8574411505701

ஜேர்மனியில் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் கென்சவேர்ட்டிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

அதி தீவிர வலதுசாரி கட்சி கென்சவேர்ட்டிவ் (AfD) கட்சிக்கு அடுத்ததாக அதிகளவு வாக்குகள் கிடைத்துள்ளது. 152 ஆசனங்களுடன் 20.8% பெற்று உள்ளது.

"She is my wife She is my life"

ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும்... ஒரு பெண்ணின் உந்து சக்தி உள்ளது.

உண்மை உரைகல்

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

(அப்படி ஆயின், பிரித்தானிய கடவுச் சீட்டில் என் பிறந்த இடம் இருக்க வேண்டும்?)

இது இலங்கை இந்தியா உட்பட அநேக நாட்டு பாஸ்போட்டில் இருக்கும்.

1 hour ago, Kadancha said:

ஆங்கிலேயர் என்பது நிருபரின் stretch

இல்லை. ஆங்கிலேயர் என்பது தனியே வெள்ளைதோல் மட்டும் இல்லை.

LBC சியில் ஜேம்ஸ் ஓ பிரையன் நிகழ்சியில் போன ஞாயிறு சஜித் கானும் இதை கூறினார். I am as English as anyone else. Close your eyes and listen to me. என.

தனிப்பட்டு உங்களை போல சிலர் English என்பதை தனியே தோல் நிறத்தால் அடையாளப்பசுத்தலாம். ஆனால் பொதுவில் அப்படி அல்ல.

நாசிர் ஹுச்சைன், மொயின் அலி, அதே போல் கறுப்பின கால்பந்து வீரர்கள் எல்லாம் இங்கிலாந்துக்குதான் விளையாடுகல்கிறார்கள்.

If they are not English, how could they play for England?

1 hour ago, Kadancha said:

பல வேலைகளில் (வேலைகள் அரசிலும் இருக்கிறது, அரசோடு ஒப்பன்ஹாம் செய்யும் பெரிய நிறுவனங்களில் இருக்கிறது) , இங்கே பிறந்த எமது பிள்ளைகல் கூட பிரித்தானியராக கருதப்பட மாட்டார்கள் என்பது யதார்த்தம்.

முற்றிலும் தவறான கருத்து. எனது சொந்த அனுபவத்திலும், நான் கண்டதிலும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கே பிறக்கவில்லை. ஆனால் பிரிதானியர். “பிரிதானியருக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட வேலைகள்” பலதை செய்துள்ளேன்.

1 hour ago, Kadancha said:

அதற்கு, தாய், தகப்பன் இருவரும் பிரித்தானியாவில் பிறந்து இருக்க வேண்டும்.

தாய் தகப்பனின் பிறப்பு இடம், முழு விபரமும் கேட்பார்கள், அந்த நாடுகளில் விசாரணை கூட செய்வார்கள். அதில் ஏதும் “தடங்கலான விடயங்கள்” வந்தால் மட்டுமே வேலை கிடைக்காது போகும்.

Edited by goshan_che
ஒரு சொல் நீக்கம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.