Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-392.jpg?resize=750%2C375&ssl

அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!

அமெரிக்காவுடனான ஒரு பெரிய கனிம ஒப்பந்தத்தின் விதிமுறைகளை உக்ரேன் ஒப்புக்கொண்டுள்ளது கிய்வில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் வொஷிங்டன் டிசிக்கான உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் திட்டமிடப்பட்டுள்ள பயணித்தின் போது கைச்சாத்திடப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவுடனான போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர முயல்வதால், வொஷிங்டனின் ஆதரவைப் பெறுவதற்கான கெய்வின் உந்துதலுக்கு மையமான ஒரு வரைவு கனிம ஒப்பந்தத்தின் விதிமுறைகளை அமெரிக்காவும் உக்ரேனும் ஒப்புக் கொண்டதாக இந்த விடயத்தை அறிந்த இரண்டு ஆதாரங்கள் செவ்வாயன்று தெரிவித்தன.

வரைவு ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களை நன்கு அறிந்த ஒரு ஆதாரம், ஒப்பந்தம் எந்த அமெரிக்க பாதுகாப்பு உத்தரவாதத்தையும் அல்லது தொடர்ச்சியான ஆயுத ஓட்டத்தையும் குறிப்பிடவில்லை, ஆனால் உக்ரைன் “சுதந்திரம், இறையாண்மை மற்றும் பாதுகாப்பானதாக” இருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது என்று சுட்டிக்காட்டியது.

ஒப்பந்தத்தை நன்கு அறிந்த ஆதாரங்களில் ஒன்று, வாஷிங்டனுக்கும் உக்ரேனுக்கும் இடையில் எதிர்கால ஆயுத ஏற்றுமதிகள் இன்னும் விவாதிக்கப்படுகின்றன என்று கூறினார்.

மிகப் பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை (27) வொஷிங்டனுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த வாரம் இரு தலைவர்களும் விரோதமான வார்த்தைகளை பரிமாறிக் கொண்டதை அடுத்து இந்த சம்பவம் வந்துள்ளது.

Athavan News
No image preview

அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!

அமெரிக்காவுடனான ஒரு பெரிய கனிம ஒப்பந்தத்தின் விதிமுறைகளை உக்ரேன் ஒப்புக்கொண்டுள்ளது கிய்வில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார். இந்த ஒப்பந்தம் வொஷிங்டன் டிசிக்கான உக்ரேனிய ஜனாதிபதி வ...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

481274706_1047369927427979_4463434741333

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுடன் கனிம ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் - யுக்ரேன் அதிகாரிகள் தகவல்

அமெரிக்க-யுக்ரேன் கனிம ஒப்பந்தம்

பட மூலாதாரம்,BLOOMBERG VIA GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், அப்துஜலில் அப்துராசுலோவ், ஜரோஸ்லாவ் லுகிவ், அந்தோணி சுர்சர்

  • பதவி, பிபிசி நியூஸ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்காவுடனான முக்கிய கனிம ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு யுக்ரேன் ஒப்புக் கொண்டுள்ளது என்று கீவில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"நாங்கள் உண்மையில் பல நல்ல திருத்தங்களுடன் அதை ஒப்புக் கொண்டுள்ளோம். இதை ஒரு நேர்மறையான முடிவாக பார்க்கிறோம்" என்றும் தெரிவித்தார். அந்த அதிகாரி இந்த ஒப்பந்தம் குறித்து மேலும் எந்த விவரத்தையும் வழங்கவில்லை.

ஒப்பந்தத்தில் என்ன கூறப்பட்டுள்ளது?

இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சாத்தியமான வருவாயில் 500 பில்லியன் டாலர் (£395 பில்லியன்) உரிமைக்காக ஆரம்பத்தில் வைத்த கோரிக்கைகளை அமெரிக்கா கைவிட்டுவிட்டதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் யுக்ரேனுக்கு உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா வழங்கவில்லை. இது யுக்ரேன் முன் வைத்த முக்கிய கோரிக்கையாகும்.

இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் கடுமையான வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்ட நிலையில், இந்த வாரம் வாஷிங்டனில் யுக்ரேனிய அதிபர் ஜெலன்ஸ்கி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

ஓர் உடன்பாடு எட்டப்பட்டதை உறுதிப்படுத்தாமல் பேசிய டிரம்ப், இந்த ஒப்பந்தத்திற்கு ஈடாக யுக்ரேன் "போராடுவதற்கான உரிமையை" பெறும் என்று தெரிவித்திருந்தார்.

"அவர்கள் மிகவும் துணிச்சலானவர்கள்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால் "அமெரிக்காவும் அதன் நிதியும் ராணுவ தளவாடங்களும் இல்லாவிட்டால், இந்த போர் மிகக் குறுகிய காலத்தில் முடிந்திருக்கும்" என்றார்.

யுக்ரேனுக்கு அமெரிக்க ராணுவ தளவாடங்கள் மற்றும் வெடிமருந்துகளின் விநியோகம் தொடருமா என்று கேட்டதற்கு, "ஒருவேளை ரஷ்யாவுடன் ஓர் ஒப்பந்தம் செய்யும் வரை... நாம் ஒரு உடன்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும், இல்லாவிட்டால் இது தொடர்ந்து கொண்டே இருக்கும்," என்றார்.

எந்தவொரு சமாதான ஒப்பந்தம் போடப்பட்டாலும், அதை தொடர்ந்து யுக்ரேனில் "ஒருவித அமைதி காத்தல்" தேவைப்படும், ஆனால் அது "அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக" இருக்க வேண்டும் என்று டிரம்ப் மேலும் கூறினார்.

கடந்த வாரம், டிரம்ப் ஜெலன்ஸ்கியை ஒரு "சர்வாதிகாரி" என்று வர்ணித்தார். ஜெலன்ஸ்கி, அமெரிக்காவின் 500 பில்லியன் டாலர் கனிம வளத்திற்கான ஒப்பந்த கோரிக்கைகளை நிராகரித்திருந்தார். இதன் பின்னர், போரைத் தொடங்கியதற்கு யுக்ரேனை குற்றம் சாட்டியிருந்தார் டிரம்ப்.

அமெரிக்க-யுக்ரேன் கனிம ஒப்பந்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நிதியுதவிக்கு ஈடாக கனிம உரிமை கோரும் அமெரிக்கா

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து யுக்ரேனுக்கு வழங்கிய முந்தைய ராணுவ மற்றும் பிற உதவிகளுக்கு ஈடாக யுக்ரேனின் கனிமங்களை தருமாறு டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

அந்த அளவுக்கு அமெரிக்க உதவிகள் வழங்கப்படவில்லை என்று வாதிடும் ஜெலன்ஸ்கி, "எங்கள் நாட்டை என்னால் விற்க முடியாது" என்று கூறினார்.

அமெரிக்கா யுக்ரேனுக்கு 300 பில்லியன் டாலர் முதல் 350 பில்லியன் டாலர் வரை வழங்கியதாக டிரம்ப் செவ்வாய்க்கிழமை கூறினார்.

"நாங்கள் அந்த பணத்தை திரும்பப் பெற விரும்புகிறோம்," என்று டிரம்ப் கூறினார்.

"ஒரு நாட்டின் ஒரு மிகப் பெரிய பிரச்னையை எதிர்கொள்ள உதவிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அமெரிக்காவில் வரி செலுத்தும் மக்கள் இப்போது தங்கள் பணத்தை மீண்டும் பெறப் போகிறார்கள்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

யுக்ரேன் துணைப் பிரதமர் ஸ்டெபானிஷினா செவ்வாய்க்கிழமை கனிம ஒப்பந்தம் குறித்து முதலில் செய்தி வெளியிட்ட பைனான்சியல் டைம்ஸ் ஊடகத்திடம் இந்த ஒப்பந்தம் "பெரிய திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே" என்று கூறினார்.

"இது ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதி என்று அமெரிக்க நிர்வாகம் கூறுவதை நாங்கள் பல முறை கேட்டுள்ளோம்" என்று பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கிய ஸ்டெபானிஷினா கூறினார்.

யுக்ரேனிய வட்டார தகவல்களின் படி, போரால் பாதிக்கப்பட்ட யுக்ரேனுடனான ஒப்பந்தத்தில் அமெரிக்கா அதன் சில கடுமையான நிபந்தனைகளில் இருந்து பின்வாங்க வேண்டியிருந்தது.

உதவிகள் வழங்குவதில் கொள்கை மாற்றம் ஆரம்பம்?

எவ்வாறாயினும், ஒரு முன்னுதாரணம் உருவாகியுள்ளது. டிரம்ப் காலத்தில் அமெரிக்க உதவிகள் முன்பை போல கிடைக்கப் போவதில்லை. திருப்பித் தர வேண்டியிராத நல்லலெண்ண உதவிகள் என்பது முடிந்து போன விஷயமாகிவிட்டது. அவை மனிதாபிமான உதவியாக இருந்தாலும் சரி அல்லது மூலோபாய காரணங்களுக்காக வழங்கப்படும் உதவியாக இருந்தாலும் சரி.

இது மார்ஷல் திட்டம் முதல் 75 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்பட்ட அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஒரு அடிப்படை மாற்றம் குறிக்கிறது.

யுக்ரேன் ஒரு தொடக்கம்தான். டிரம்பும் அவரது வெளியுறவுக் கொள்கை குழுவும் அடுத்த நான்கு ஆண்டுகளில் உலகெங்கிலும் அவர்களின் "அமெரிக்காவுக்கு முன்னுரிமை" கோட்பாடுகளை செயல்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

யுக்ரேன் செய்தி இணையதளமான யுக்ரேன்ஸ்கா பிராவ்தா, கனிம வள ஒப்பந்தத்தில் யுக்ரேனிய வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோர் கையெழுத்திட இருப்பதாக தெரிவித்துள்ளது.

இரு நாடுகளும் புனரமைப்பு முதலீட்டு நிதியம் ஒன்றை அமைக்க உடன்பட்டுள்ளதாக செய்தி தளத்தின் பொருளாதார பிரிவு கூறுகிறது.

லித்தியம் மற்றும் டைட்டானியம் உட்பட முக்கிய கனிமங்களின் பெரும் இருப்புகளை யுக்ரேன் கொண்டுள்ளது. அத்துடன் கணிசமான நிலக்கரி, எரிவாயு, எண்ணெய் மற்றும் யுரேனிய இருப்புகள் உள்ளன. இவை பல பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டவை.

கடந்த ஆண்டு, ஜெலன்ஸ்கி யுக்ரேன் மற்றும் அதன் மேற்கத்திய கூட்டாளிகளிடம் "ரஷ்யாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்கான திட்டத்தை" முன்வைத்தார். அது போரின் முடிவில் வெளிநாட்டு நிறுவனங்கள் யுக்ரேனின் சில கனிம வள ஒப்பந்தங்களைப் பெற முடியும் என்று முன்மொழிந்தது.

அமெரிக்க-யுக்ரேன் கனிம ஒப்பந்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் யுக்ரேனிய அதிபர் ஜெலன்ஸ்கி இடையே கடுமையான வார்த்தைப்போர் கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், இந்த கனிம ஒப்பந்தம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

செவ்வாயன்று, ரஷ்ய அதிபர் புதின் அரிய கனிமங்களை அமெரிக்கா அணுக அனுமதி அளிக்க தயாராக இருப்பதாக கூறினார். இதில் யுக்ரேனில் உள்ள ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளும் அடங்கும்.

யுக்ரேனும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் கடந்த வாரம் சௌதி அரேபியாவில் நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள் உட்பட, அமெரிக்கா - ரஷ்யா இடையே சமீப காலமாக நிலவும் சுமூக உறவுகள் குறித்து அதிக எச்சரிக்கை கொண்டுள்ளன.

யுக்ரேனிலும் ஐரோப்பா முழுவதிலும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கம் கொண்ட எந்தவொரு பேச்சுவார்த்தைகளில் இருந்தும் அவர்கள் ஒதுக்கப்படலாம் என்ற கவலை நிலவுகிறது. ஐரோப்பிய கண்டத்தின் எதிர்கால பாதுகாப்பு ஒட்டுமொத்தமாக அவர்களே இடம் பெறாத பேச்சுவார்த்தைகளில் தீர்மானிக்கப்படலாம் என்று அஞ்சுகின்றனர்.

யுக்ரேனில் உள்ள தாதுக்கள் எவை?

அமெரிக்க-யுக்ரேன் கனிம ஒப்பந்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரஷ்யா ஆக்கிரமித்துள்ள யுக்ரேனின் பகுதிகளில் 350 பில்லியன் டாலர் மதிப்புள்ள கனிம வளங்கள் உள்ளன என்று யுக்ரேன் கூறுகிறது.

உலகின் "முக்கியமான மூலப்பொருட்களில்" சுமார் 5% யுக்ரேனில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

  • மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க பயன்படும் கிராபைட்டின் நிரூபிக்கப்பட்ட இருப்பு 19 மில்லியன் டன் ஆகும்.

  • ஐரோப்பாவில் அனைத்து லித்தியம் இருப்புகளில் மூன்றில் ஒரு பங்கு, இவை தற்கால பேட்டரிகளில் முக்கிய அங்கமாகும்.

  • மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்குவதற்கு முன்பு, யுக்ரேன் உலகின் 7% டைட்டானியத்தை உற்பத்தி செய்தது. இது விமானங்கள் முதல் மின் நிலையங்கள் வரை கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது.

  • யுக்ரேனில் அரிய உலோகங்களின் குறிப்பிடத்தக்க இருப்பும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை, நவீன உலகில் முக்கியமான ஆயுதங்கள், காற்றாலைகள் , மின்னணுவியல் மற்றும் பிற தயாரிப்புகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் 17 கனிமங்களின் தொகுப்பாகும்.

சில கனிம வளங்கள் நிறைந்த பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. யுக்ரேனின் பொருளாதார அமைச்சர் யூலியா ஸ்வைரிடென்கோ, 350 பில்லியன் டாலர் மதிப்புள்ள வளங்கள் இன்று ரஷ்யா ஆக்கிரமித்த பகுதிகளில் உள்ளன என்று கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2kg54wz47no

  • கருத்துக்கள உறவுகள்

உக்கிரேன் போர் முடிவுக்கு வந்து விட்டது என கருதுகிறேன், போரினால் பாதிக்கப்பட்ட உக்கிரேனை கட்டி எழுப்ப உக்கிரேனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்க முன்வரவேண்டும், இதுவரை போரிற்கு உதவியளித்த நாடுகள் உக்கிரேனின் பொருளாதார வளர்ச்சியினை கட்டி எழுப்புவதற்கும் முன்வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

உக்கிரேனினதும் அதன் மக்களதும் துரோகிகள் இருவர்.. ஒருத்தன் செலன்ஸ்கி மற்றையவன் டிரெம்ப்..

ஒருத்தன் உக்கிரேன் மக்களை ஏமாற்றி உக்கிரேனை விற்றுவிட்டான் இன்னொருத்தன் உக்கிரேன் மக்களை முதுகில் குற்றி உக்கிரேனை வாங்கிவிட்டான்..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

உக்கிரேனினதும் அதன் மக்களதும் துரோகிகள் இருவர்.. ஒருத்தன் செலன்ஸ்கி மற்றையவன் டிரெம்ப்..

ஒருத்தன் உக்கிரேன் மக்களை ஏமாற்றி உக்கிரேனை விற்றுவிட்டான் இன்னொருத்தன் உக்கிரேன் மக்களை முதுகில் குற்றி உக்கிரேனை வாங்கிவிட்டான்..

செலன்ஸ்கி என்ன செய்ய வேண்டும் ?? செல்லுங்கள் பார்ப்போம் அவனுக்கு வேறு வழி இல்லை ஒரு வல்லரசு எதிர்த்து போராடினார் இரண்டையுமே எப்படி எதிர்க்க முடியும் ??

மேலும் யார் ஆயுதம் கொடுப்பார்கள் ?? அமெரிக்கா கேட்கிறது தந்த பணத்தை திரும்ப தரும்படி ...பணம் கொடுக்கலாம். இறந்து போன்ற உக்கிரேனியர்களை அமெரிக்காவல். கொடுக்க முடியுமா??? இது உரிமை போர் இல்லை வளங்களை கொள்ளை அடிக்கும் போர்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இதில் வென்றது யார்? யார் புத்திசாலி??

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விசுகு said:

இப்ப இதில் வென்றது யார்? யார் புத்திசாலி??

தெரியவில்லை நீங்களே கூறுங்களேன்?

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப மனிதாபிமானம் >இறைமை என்பதல்லாம். இந்த வளங்களைக் கொள்ளையடிப்பதற்குத்தானா?அமெரிக்காவும் மேற்குலகும் உக்கிரைனுக்கு விழுந்து விழுந்து உதவி செய்தது இதற்குத்தானா?அமெரிக்காவும் மேற்குலகும்உக்கிரைனின் வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக உக்கிரைனுக்கு உதவுகிகன்றனர். ரஷ்யாவுக்கு உக்கிரைனின் வளங்கள் மட்டுமல்ல தனது எல்லைகளுக்கு அருகில் தனது எதிரிகளின் தளங்கள் இருப்பது அதன் பாதுகாப்புக்கும் ஆபத்து ரஷ்யா இதற்கு எதிர்வினை ஆற்றுவதில் என்ன தவறு?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகளுக்கு short term memory loss என நினைக்கிறேன்.

சஞ்சய் இராமசாமி மாதிரி கருத்து எழுதுகிறார்கள்.

கீழே உள்ளதை உங்கள் உடம்பில் பச்சை குத்தி வைத்து கொள்ளவும். கருத்து எழுதமுன் இதை படித்து விட்டு எழுதவும்.

  1. 2024 டிசம்பரில் அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வென்றார்

  2. அவர் இதுவரை கடைபிடித்து வந்த அமெரிக்காவின் உக்ரேன்/ரஸ்யா கொள்கையை 180 பாகையால் திருப்பி, கனிம கொள்ளையிலும் ஈடுபட முனைகிறார்.

  3. டிரம்ப் இப்போ வைக்கும் கனிம கொள்ளை கோரிக்கையை பைடனோ, வேறு எந்த மேற்கு நாடோ வைக்கவில்லை.

  4. ஆகவே ஜனவரி 2025 க்கு பின்ன்னான அமெரிக்காவின் உக்ரேன் கொள்கையை வைத்து 2020-2024 அமெரிக்காவின் உக்ரேன் கொள்கையை மதிப்பிடமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

இப்ப இதில் வென்றது யார்? யார் புத்திசாலி??

ஓட விட்டுத்தான் சொல்ல முடியும்.

என் கருத்து:

டிரம்ப் உண்மையில் இப்படி கேட்பது, கனிமத்தை பெற அல்ல.

மாறாக உக்ரேன் தரமுடியாத ஒன்றை கேட்கிறார். பின் அதை சாட்டி உக்ரேனை முழுமையாக கைவிடுவதே திட்டம்.

டிரம்பிடம் என்ன செய்தாலும் அது ரஸ்யாவின் நலனை காப்பதிலேயே முடியும்.

செலன்ஸ்கி துருக்கியை நெருங்குவதே சாலச்சிறந்தது என நினைக்கிறேன்.

டிரம்பையும், புட்டினையும் ஒரே நேரத்துல் வெட்டி ஆட முடியும் என்ற தைரியம் ஐரோப்பியருக்கு வந்திருப்பதாக படுகிறது.

மேர்சின் பேச்சு, நேற்று டிரம்ப் முன்னிலையில் மக்ரோன் நடந்து கொண்ட விதம், இன்றைய ஈயுவுக்கு 25% வரி அறிவிப்பு…

போன தடவை போல அன்றி, இந்த முறை ஈயு உயர்மட்டம் டிரம்ப்பை அவர் பாணியில் டீல் பண்ண முனைகிறது. இது டிரம்ப் புட்டினின் கூலி என்பதை கண்டுகொண்டதாலும் இருக்கலாம்.

பார்ப்போம் நாளைக்கு ஸ்டாமர் போய் காலில் விழுகிறாராரா அல்லது மக்ரோன் எடுத்த நிலையை எடுக்கிறரா என. அப்போ தெரியும் ஈயூ அணியில் பிரித்தானியாவும் உள்ளதா என.

நிச்சயம் இவர்கள் சீனா பக்கம் தம் பார்வையை திருப்ப வேண்டும்.

ஏனைய மேற்கு நாடுகள் இல்லாமல் சீனாவுடன் ஒரு வர்தக போரை டிரம்ப் தொடங்கினால் தோல்வி நிச்சயம்.

புட்டினின் கையாள் டிரம்ப் விரும்புவதும் இதுவாகவே இருக்கலாம்.

ஆனால் ஈயூ சும்மா இருக்க முடியாது.

டிரம்பை தேர்வு செய்தது அமெரிக்கா, அதன் பலனாக அவர்கள் இராணுவ, கேந்திர, பொருளாதார, இராஜதந்திர பின்னடைவை சந்தித்தால் அதை அமெரிக்க மக்கள்தான் அனுபவிக்க வேண்டும், நிவர்த்தி செய்ய வேண்டும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

சஞ்சய் இராமசாமி மாதிரி கருத்து எழுதுகிறார்கள்.

சஞ்சய் இராமசாமி யார் என்று எனக்கு தெரியவில்லை

மேலே உள்ள கருத்தை படித்துவிட்டு நானும் விழுத்து விழுந்து சிரித்தேன்

சீமான் தான் இப்படியான நிலைக்கு கொண்டு வந்திருப்பார் என்பது எனது நம்பிக்கை

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒருத்தன் உக்கிரேன் மக்களை ஏமாற்றி உக்கிரேனை விற்றுவிட்டான் இன்னொருத்தன் உக்கிரேன் மக்களை முதுகில் குற்றி உக்கிரேனை வாங்கிவிட்டான்..

புட்டின் பபா🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

ஓட விட்டுத்தான் சொல்ல முடியும்.

என் கருத்து:

டிரம்ப் உண்மையில் இப்படி கேட்பது, கனிமத்தை பெற அல்ல.

மாறாக உக்ரேன் தரமுடியாத ஒன்றை கேட்கிறார். பின் அதை சாட்டி உக்ரேனை முழுமையாக கைவிடுவதே திட்டம்.

டிரம்பிடம் என்ன செய்தாலும் அது ரஸ்யாவின் நலனை காப்பதிலேயே முடியும்.

செலன்ஸ்கி துருக்கியை நெருங்குவதே சாலச்சிறந்தது என நினைக்கிறேன்.

டிரம்பையும், புட்டினையும் ஒரே நேரத்துல் வெட்டி ஆட முடியும் என்ற தைரியம் ஐரோப்பியருக்கு வந்திருப்பதாக படுகிறது.

மேர்சின் பேச்சு, நேற்று டிரம்ப் முன்னிலையில் மக்ரோன் நடந்து கொண்ட விதம், இன்றைய ஈயுவுக்கு 25% வரி அறிவிப்பு…

போன தடவை போல அன்றி, இந்த முறை ஈயு உயர்மட்டம் டிரம்ப்பை அவர் பாணியில் டீல் பண்ண முனைகிறது. இது டிரம்ப் புட்டினின் கூலி என்பதை கண்டுகொண்டதாலும் இருக்கலாம்.

பார்ப்போம் நாளைக்கு ஸ்டாமர் போய் காலில் விழுகிறாராரா அல்லது மக்ரோன் எடுத்த நிலையை எடுக்கிறரா என. அப்போ தெரியும் ஈயூ அணியில் பிரித்தானியாவும் உள்ளதா என.

நிச்சயம் இவர்கள் சீனா பக்கம் தம் பார்வையை திருப்ப வேண்டும்.

ஏனைய மேற்கு நாடுகள் இல்லாமல் சீனாவுடன் ஒரு வர்தக போரை டிரம்ப் தொடங்கினால் தோல்வி நிச்சயம்.

புட்டினின் கையாள் டிரம்ப் விரும்புவதும் இதுவாகவே இருக்கலாம்.

ஆனால் ஈயூ சும்மா இருக்க முடியாது.

டிரம்பை தேர்வு செய்தது அமெரிக்கா, அதன் பலனாக அவர்கள் இராணுவ, கேந்திர, பொருளாதார, இராஜதந்திர பின்னடைவை சந்தித்தால் அதை அமெரிக்க மக்கள்தான் அனுபவிக்க வேண்டும், நிவர்த்தி செய்ய வேண்டும்.

நன்றி சகோ

விரிவான நேரத்திற்கு.

இந்திய பூதத்தை திருப்தி படுத்தியபடி எமது தேசத்தை மீட்கும் போராட்டத்துக்கும் ரசிய பூதத்தை திருப்தி படுத்தியபடி உக்ரைனை காக்கும் போராட்டமும் கடைசி காலப்பகுதியில் நிகழ்ந்த நிலைப்பாடுகளில் ஒரே வரை கோட்டில் வந்து நிற்பதாக உணர்கிறேன்.

இந்த காலகட்டத்தில் தலைவர் மீது வைக்கப்பட்ட ஏற்கமுடியாத நிபந்தனைகள் தவிர்க்க முடியாத கட்டளைகள் விட்டு கொடுக்க முடியாத கொள்கைகள் நிலங்கள் நம்பிக்கை துரோகங்கள் முதுகு குத்தல்கள் வெறும் நாக்கு ஜாலங்கள் மிரட்டல்கள் பெரிய இடத்து அதிகார அத்துமீறல்கள் என்று எமக்கு தெரிந்த தெரியாத பல விடயங்கள் இருக்கும். ஆனால் தோல்வி எம்மில் சிலரை தலைவர் மீது இவை சார்ந்து விரல் நீட்ட வைக்கிறது.

எனவே அதை நாம் முழுமையாக உணர உக்ரைன் எமக்கு உதவும் என்று நம்புகிறேன். நன்றி.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:
  1. ஆகவே ஜனவரி 2025 க்கு பின்ன்னான அமெரிக்காவின் உக்ரேன் கொள்கையை வைத்து 2020-2024 அமெரிக்காவின் உக்ரேன் கொள்கையை மதிப்பிடமுடியாது.

ஆமாம் உண்மை ஆனால் 2020,...2024 கொள்கை ஆனாது என்ன??? மக்கள் இந்த உலகில் சுதந்திரமாக வாழ வேண்டும் அதாவது உக்கிரேன். மக்களும் நாடும் அடிமை படுத்தப்படமால். அவர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பது தான்

இவர்களுக்கு கனிமவளங்களில். ஆசை இல்லை விருப்பம் இல்லை என்றால் இதோ உதவிகளை உலகில் விடுதலைக்கு போரடும். மக்களுக்கு இதோ போன்ற உதவிகளை ஏன் செய்யவில்லை ??

ஈராக் குவைத்தை அடித்து பிடிக்கிறான் பிடிக்கட்டும். ஆளட்டும். அமெரிக்காவுக்கு அங்கே என்ன வேலை?? எண்ணை இருந்த . காரணத்தால் கூட்டாளிகளுடன். சேர்ந்து அடித்தார்கள்.

2020,...2024. இல். ஒப்பந்தம் செய்யவில்லை கனிமவளங்களை கோரப்படவில்லை ஆகவே அவர்களுக்கு அதில் ஆசையும் இல்லையா?? இருந்தது ஆனால் சொல்லவில்லை

ஊரிலேயே அனேகமாக மாணவர்கள் காதலிக்கிறார்கள். திருமணமும் செய்கிறார்கள் ஆனால் நான் படித்த காலத்தில் காதலிப்பார்கள். ஆனால் இறுதிவரை அதை சொல்வது இல்லை 🤣🤪. அதேபோல தான் 2020,....2024. காலப்பகுதியும். 🙏

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

நன்றி சகோ

விரிவான நேரத்திற்கு.

இந்திய பூதத்தை திருப்தி படுத்தியபடி எமது தேசத்தை மீட்கும் போராட்டத்துக்கும் ரசிய பூதத்தை திருப்தி படுத்தியபடி உக்ரைனை காக்கும் போராட்டமும் கடைசி காலப்பகுதியில் நிகழ்ந்த நிலைப்பாடுகளில் ஒரே வரை கோட்டில் வந்து நிற்பதாக உணர்கிறேன்.

இந்த காலகட்டத்தில் தலைவர் மீது வைக்கப்பட்ட ஏற்கமுடியாத நிபந்தனைகள் தவிர்க்க முடியாத கட்டளைகள் விட்டு கொடுக்க முடியாத கொள்கைகள் நிலங்கள் நம்பிக்கை துரோகங்கள் முதுகு குத்தல்கள் வெறும் நாக்கு ஜாலங்கள் மிரட்டல்கள் பெரிய இடத்து அதிகார அத்துமீறல்கள் என்று எமக்கு தெரிந்த தெரியாத பல விடயங்கள் இருக்கும். ஆனால் தோல்வி எம்மில் சிலரை தலைவர் மீது இவை சார்ந்து விரல் நீட்ட வைக்கிறது.

எனவே அதை நாம் முழுமையாக உணர உக்ரைன் எமக்கு உதவும் என்று நம்புகிறேன். நன்றி.

தலைவர் காலத்தில், களத்தில், டிரம்ப் போன்ற ஒருவர் இருக்கவில்லை, டிரம்ப் புட்டினுக்கு சேவகம் செய்வதை போல இலங்கை/இந்தியாவுக்கு சேவகம் செய்யவில்லை என்பதும்,

இப்போதும் செலன்ஸ்கி வளைந்து கொடுத்தே போக முனைகிறார், நெகிழ்வுதன்மையை காட்டுகிறார் என்பது இரு பாரிய வேறுபாடுகள்

ஆனால் இருவர் மீதான அளுத்தமும் ஒன்றே.

1 hour ago, Kandiah57 said:

ஆமாம் உண்மை ஆனால் 2020,...2024 கொள்கை ஆனாது என்ன??? மக்கள் இந்த உலகில் சுதந்திரமாக வாழ வேண்டும் அதாவது உக்கிரேன். மக்களும் நாடும் அடிமை படுத்தப்படமால். அவர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பது தான்

இவர்களுக்கு கனிமவளங்களில். ஆசை இல்லை விருப்பம் இல்லை என்றால் இதோ உதவிகளை உலகில் விடுதலைக்கு போரடும். மக்களுக்கு இதோ போன்ற உதவிகளை ஏன் செய்யவில்லை ??

ஈராக் குவைத்தை அடித்து பிடிக்கிறான் பிடிக்கட்டும். ஆளட்டும். அமெரிக்காவுக்கு அங்கே என்ன வேலை?? எண்ணை இருந்த . காரணத்தால் கூட்டாளிகளுடன். சேர்ந்து அடித்தார்கள்.

2020,...2024. இல். ஒப்பந்தம் செய்யவில்லை கனிமவளங்களை கோரப்படவில்லை ஆகவே அவர்களுக்கு அதில் ஆசையும் இல்லையா?? இருந்தது ஆனால் சொல்லவில்லை

ஊரிலேயே அனேகமாக மாணவர்கள் காதலிக்கிறார்கள். திருமணமும் செய்கிறார்கள் ஆனால் நான் படித்த காலத்தில் காதலிப்பார்கள். ஆனால் இறுதிவரை அதை சொல்வது இல்லை 🤣🤪. அதேபோல தான் 2020,....2024. காலப்பகுதியும். 🙏

2000-2024 அமெரிக்காவின் உக்ரேன் கொள்கை, உக்ரேனின் வளங்களை இப்போ சவுதியின் வளங்களை பாவிப்பது போல் பாவிக்கும் ஒரு திட்டம்.

டிரம்ப் கேட்பது 100%.

இப்போ செலன்ஸ்கி ஒத்து கொள்வதாக சொல்லப்படுவது 50%.

எந்த நாடும் தர்மஸ்தாபனம் நடத்துவதில்லை.

எல்லாம் உள்நோக்கோடுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

டிரம்ப் கேட்பது 100%.

இப்போ செலன்ஸ்கி ஒத்து கொள்வதாக சொல்லப்படுவது 50%.

எந்த நாடும் தர்மஸ்தாபனம் நடத்துவதில்லை.

எல்லாம் உள்நோக்கோடுதான்.

பிறகு எதற்காக பூட்டின் ஆக்கிரமித்து விட்டார் என்று புலம்புகிறுpர்கள். ரஸ்யாவின் எல்லையில் அதன் பகையாளிகளுக்கு தளம் அமைத்துக் கொடுப்பதை எப்படி ரஷ்யா எப்படி பொறுமையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்?ரஸ்யா ஆக்கிரமித்த பகுதிகளில்தான் கனிம வளங்கள் அதிகப்படியாக இருக்கின்றனவாம் போர்நிறுத்தம் ஏற்பட்டபல் ரஸ்யா கைப்பற்றிய பகுதிகள் ரஸயாவுக்குத்தான் சொந்தம். மிச்சப் பகுதிக்குள் இருக்கும் கனிம வளங்களை அமெரிக்காவுக்கு கொடுத்து விட்டு செலன்ஸ்கி உக்கிரைன் மக்களுக்கு எதைக் கொடுக்கப் போகிறார்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:
  10 hours ago, goshan_che said:

டிரம்ப் கேட்பது 100%.

மேலே நான் எழுதியுள்ள 4 பொயிண்ட்சையிம் பச்சை குத்தி விட்டீர்களா 🤣?

டிரம்ப் அல்லாத எந்த அமெரிக்க அதிபரோடும் செலன்ஸ்கி/உக்ரேன் போட்ட, போட்டிருக்க கூடிய டீல்கள் சவுதி/கட்டார்/யூ ஏ ஈ/ ஜோர்தானுடன் அமெரிக்கா போட்ட்டுள்ள டீல்களை ஒத்தன. டிரம்ப் கேட்பது, இப்போ செலன்ஸ்கியை ஒத்து கொள்ளவைத்துள்ள, 100%, 50% டீல்கள் போல அல்ல அவை.

புட்டின் எப்போதும் கேட்பது 100%, பெலரூசை போல உக்ரேன் தனக்கு வேணும் என.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

போர்நிறுத்தம் ஏற்பட்டபல் ரஸ்யா கைப்பற்றிய பகுதிகள் ரஸயாவுக்குத்தான் சொந்தம். மிச்சப் பகுதிக்குள் இருக்கும் கனிம வளங்களை அமெரிக்காவுக்கு கொடுத்து விட்டு செலன்ஸ்கி உக்கிரைன் மக்களுக்கு எதைக் கொடுக்கப் போகிறார்?

  1. ஒரு பக்கம் இந்திய பிராந்திய வல்லாதிக்கம், மறுபக்கம் சிங்கள பேரினவாதம் என்ற வரலாற்று எதிரி.

  2. தலைவர் இருவரையும் எதிர்த்து போராடினார்.

  3. முடிவு இருவரும், ஏனையோர் எல்லோரையும் கூட்டு சேர்த்து அவரை தோற்கடித்தனர்.

  4. ஒரு பக்கம் டிரம்பின் கொள்ளை , மறுபக்கம் புட்டின்/ரஸ்யா என்ற வரலாற்று எதிரி.

  5. முடிந்தளவு டிரம்ப்போடு ஒரு டீலை (50:50) போட பார்க்கிறார் செலன்ஸ்கி.

  6. முடிவு? காலம்தான் சொல்லும்.

  7. தலைவரின் அசோகா ஹொட்டல் பயணத்துக்கும், நாளைய செலன்ஸ்கியின் வெள்ளைமாளிகை பயணத்துக்கும் அநேக ஒற்றுமைகள் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

பூட்டின் மாதிரி அவர் ஆதரவாளர்களுக்கும் ஆசை உக்ரேனை பூட்டின் ஆக்கிரமித்து விட வேண்டும் என்று

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

பார்ப்போம் நாளைக்கு ஸ்டாமர் போய் காலில் விழுகிறாராரா அல்லது மக்ரோன் எடுத்த நிலையை எடுக்கிறரா என. அப்போ தெரியும் ஈயூ அணியில் பிரித்தானியாவும் உள்ளதா என.

ஸ்டாமர் காலிலும் விழாமல், மேர்ஸ் போல் முறுக்கவும் செய்யாமல், ஒரு வித்தியாசமான பாதையை கையில் எடுக்கிறார். அது டிரம்ப்பின் சின்னபிள்ளைதனத்துக்கு தீனி போட்டு, அதன் மூலம் காரியம் பார்ப்பது.

யாருக்கும் கொடாத கெளரவமான 2வது அரச விருந்தினர் அழைப்பு, மன்னரின் கடிதத்தை கண்டதும் டிரம்ப் ரொம்பவே குசி ஆகிவிட்டார் என்பது வெளிப்படையாக தெரிந்தது.

  1. உக்ரேனில் ஒரு உடன்படிக்கை வரும் என தான் நினைப்பதாக டிரம் கூறினார் (ஸ்டாமர் உக்ரேனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வேண்டும் என வலியுறுத்திய பின்னும்)

  2. சாகோஸ் தீவுகள் முடிவை அங்கீகரித்தார்

  3. யூகே-யூஎஸ் வர்த்தக உடன்படிக்கை பற்றி சாதகமான கருத்து சொன்னார்

  4. ஸ்டாமரின் பயணம் வெற்றி என்றே படுகிறது. நிரந்தரமா, தற்காலிகமா? தெரியாது.

மேலதிகமாக

  1. செலன்ஸ்கியையும், உக்ரேனிய இராணுவத்தையிம் புகழ்ந்தார்.

  2. இரெண்டு நாளைக்கு முன் சொன்னதற்கு நேர் எதிராக, நான் செலன்ஸ்கியை ஒரு சர்வாதிகாரி என சொன்னேனா? என்னால் அதை நம்பமுடியவில்லை 🤣 என கூறினார்.

நாளை டீல் குழம்பினால் மீண்டும் திட்டுவார், மிரட்டுவார் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பூட்டின் மாதிரி அவர் ஆதரவாளர்களுக்கும் ஆசை உக்ரேனை பூட்டின் ஆக்கிரமித்து விட வேண்டும் என்று

இல்லை…நாம் வெல்லவில்லை ஆகவே செலன்ஸ்கியும் வெல்லகூடாது என்பதே காதல்-தோல்வி-தாடி அண்ணாக்களின் ஒரே எண்ணம் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

மன்னரின் கடிதத்தை கண்டதும் டிரம்ப் ரொம்பவே குசி ஆகிவிட்டார் என்பது வெளிப்படையாக தெரிந்தது.

😂

5 hours ago, goshan_che said:
  1. செலன்ஸ்கியையும், உக்ரேனிய இராணுவத்தையிம் புகழ்ந்தார்.

  2. இரெண்டு நாளைக்கு முன் சொன்னதற்கு நேர் எதிராக, நான் செலன்ஸ்கியை ஒரு சர்வாதிகாரி என சொன்னேனா? என்னால் அதை நம்பமுடியவில்லை 🤣 என கூறினார்.

நாளை டீல் குழம்பினால் மீண்டும் திட்டுவார், மிரட்டுவார் 🤣.

அந்த ஆளின் தரம் அப்படி 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.