Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பந்தலந்த வதை முகாம் குறித்த குற்றச்சாட்டுகள் - அல்ஜசீரா பேட்டியில் மறுத்தார் ரணில்

Published By: Rajeeban

06 Mar, 2025 | 11:19 AM

image

பந்தலந்த வதை முகாம் குறித்து தனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

அல்ஜசீராவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

1980களின் பிற்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க  ; அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பந்தலந்தவில் சட்டவிரோதமாக தடுத்துவைத்தல்  சித்திரவதைகள் கொலைகள் இடம்பெற்றன என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையே அவர் நிராகரித்துள்ளார். 

அரசாங்க விசாரணை அறிக்கை பந்தலந்த வீடமைப்பு திட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கிய முக்கிய சூத்திரதாரி ரணில்விக்கிரமசிங்க என தெரிவித்திருந்ததுடன் அங்கு மீறல்கள் இடம்பெறுவது குறித்து குறைந்தபட்சம் அவருக்கு தெரிந்திருந்தது என குறிப்பிட்டுள்ளது.

அல்ஜசீரா செய்தியாளர் தன்வசம் வைத்திருந்த அரசாங்க விசாரணை அறிக்கையின் நகல்வடிவத்தை காண்பித்து கேள்விஎழுப்பியவேளை முதலில் அவ்வாறான அறிக்கையொன்று உள்ளதையே மறுத்த ரணில்விக்கிரமசிங்க பின்னர் அந்தஅறிக்கை செல்லுபடித்தன்மை வாய்ந்ததா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த அறிக்கையை  நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எவையும் நிரூபிக்கப்படவில்லை என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/208420

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படலந்த வதை முகாம் சர்ச்சை! ரணிலுக்கு எதிராக வலுக்கும் கண்டனம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் குடியுரிமைகளை இரத்து செய்ய தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் போராட்ட முன்னனி கோரிக்கை முன்வைத்துள்ளது.

படலந்தா வதை முகாம் தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அதன் பரிந்துரைகளை செயல்படுத்துவதன் மூலம் இந்தப் பணியைச் செய்ய முடியும் என்று அதன் தேசிய அமைப்பாளர் துமிந்த நாகமுவ சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டு ஊடகங்களுடனான கலந்துரையாடலில் ரணில் விக்ரமசிங்க கூறிய விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

படலந்த வதை முகாம்

படலந்த வதை முகாம் அறிக்கை இதுவரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், நாகமுவ தெரிவித்துள்ளார்.

படலந்த வதை முகாம் சர்ச்சை! ரணிலுக்கு எதிராக வலுக்கும் கண்டனம் | Strong Condemnation Against Ranil Viral Media Meet

ஜனதா விமுக்தி பெரமுனவின் பெரும்பான்மையினரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் இந்த அரசாங்கம் அந்தப் பணியை நிறைவேற்றுமா என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக அவர் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் துமிந்த நாகமுவ இதனை கூறியுள்ளார்.

https://tamilwin.com/article/strong-condemnation-against-ranil-viral-media-meet-1741399432

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் நரியை தோலை உரித்து தொங்கவிட்டு இருக்கிறார்கள் .

இதே போல் இலங்கையில் தமிழர் இன அழிப்பு நடக்க வில்லை அப்படி நடந்து இருந்தாலும் நிரூபிக்க போதுமான ஆதாரம் இல்லை என்று சொல்லிக்கொண்டு திரியும் தமிழர்களின் துரோகி சுமத்திரனையும் நடு மேடையில் வைத்து உருவனும் .

  • கருத்துக்கள உறவுகள்

படலந்த வதை முகாமில் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரியாக இருந்த ஓய்வு பெற்ற பொலிஸ் பரிசோதகர் ஏ. பீ கருணாரத்ரன ஒரு நேர்காணலில் வழங்கிய திரள் வாக்குமூலத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு.

♦️ ஊடகவியலாளர் : இந்த வாக்குமூலத்தை நீங்கள் வழங்குவதால் உங்களுக்கு ஏதாவது உயிராபத்து ஏற்படும் என நீங்கள் நினைக்கிறீர்களா?

♦️ஏ. பீ கருணாரத்ரன : இந்த நேர்காணலிற்கு போக வேண்டாம் என்று அச்சுறுத்தினார்கள். நான் யாருக்கும் கடனுமில்லை. பயமும் இல்லை. எனக்கு இப்போது 88 வயது . என்னை இன்று கொலை செய்தாலும் பராவாயில்லை. நாளை கொலை செய்தாலும் பராவாயில்லை. நாங்கள் வாழ்ந்த காலம் முடிந்து விட்டது. ♦️ ஊடகவியலாளர் : நீங்கள் யார் ? உங்கள் பதவி என்ன?

♦️ ஏ. பீ கருணாரத்ரன : ஏ. பீ கருணாரத்ரன , ஓய்வு பெற்ற பொலிஸ் பரிசோதகர் , இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ரன்ஜன் விஜேரத்ன அவர்களின் ஆலோசனைக்கு அமைய படலந்தவில் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரியாக நியமனம் பெற்றேன்.

♦️ ஊடகவியலாளர் : படலந்த என்றால் என்ன?

♦️ ஏ. பீ கருணாரத்ரன : படலந்த என்பது காடு அல்ல. கொழும்பிலிருந்து கிரிபத்கொடவிற்கு செல்லும் போது, கிரிபத்கொடயில் இருந்து மாத்தறை வீதிக்கு செல்லும் போது கொஞ்சம் தூரம் சென்ற பின் வலது பக்கம் சுமார் 20 ஏக்கர் அளவிலான தென்னந்தோப்பு ஒன்று இருக்கும். அதில் வேலை செய்யும் வேலையாட்களுக்கான களஞ்சிய அறைகள் உட்பட பல வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அதே 20 ஏக்கரில் பெரும் கட்டிடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த கட்டிடங்களில் தான் வதை முகாம்கள் ஆரம்பிக்கப்பட்டன.

♦️ ஊடகவியலாளர்: படலந்தவில் என்ன நடந்தது?

♦️ ஏ. பீ கருணாரத்ரன : படலந்தவிற்கு ஒருவரை கொண்டுவந்தால் முதலில் அவர்களை தலைகீழாக தொங்கவிடுவார்கள். அதன்பிறகு அவர்களின் இரு காதுகளிற்கு பெரிய இரும்பு ஆணி அடிக்கப்படும். கண்களிற்கு தையல் ஊசியால் குத்துவார்கள். கண்ணாடித் துண்டுகளை சாப்பிடக் கொடுப்பார்கள். சாப்பிடாவிட்டால் பலமாக அடித்து சாப்பிட வைப்பார்கள். சாப்பிடும் போதே அந்த கண்ணாடி துண்டுகள் உடல் பாகங்களை கிழித்துக் கொண்டு கீழே வரும். சூடாக்கப்பட்ட இரும்புக் கோளினால் முதுகில் சூடு வைப்பார்கள். இவற்றை செய்யும் போதே அந்த மனிதர் அரைவாசி இறந்த விடுவார். பின்னர் கீழே இறக்கி பொலித்தீன் உறைகளில் போடுவார்கள். பின்னர் விசாலமாக வெட்டப்பட்டுள்ள குழிகளில் அவர்களை போட்டு அவர்களுக்கு மேல் டயர்களை போட்டு கொளுத்துவார்கள் . இங்கே இடம் போதாத சந்தர்ப்பங்களில் சிலரை மட்டக்குளியில் உள்ள குப்பை சேகரிக்கும் இடத்திற்கு கொண்டு சென்று , அங்கே ரொட்டி போடும் தட்டு போல் ஒரு பெரிய தட்டு இருந்தது. அதில் போட்டு கொளுத்து வார்கள்.

♦️ ஊடகவியலாளர் : அவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களுள் யாராவது விஷேடமானவர்கள் இருந்தனரா?

♦️ ஏ. பீ கருணாரத்ரன : விஜயதாஸ லியனாரச்சி . திறமைமிக்க ஒரு சட்டத்தரணி. பெரும்பாலான காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைப் பற்றியே வாதிட்டார்.

♦️ ஊடகவியலாளர் : அவருக்கு என்ன நடந்தது?

♦️ ஏ. பீ கருணாரத்ரன : இவர் ஒருநாள் ஒரு வழக்கிற்காக வாதிட்டுவிட்டு வெளியே வரும் போது சிவில் ஆடை அணிந்த 04 பொலிஸ் அதிகாரிகள் வந்து வழக்கொன்றிற்காக வாதிட உள்ளதாக கூறி வெள்ளை வேன் ஒன்றில் ஏற்றி தங்காலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கே கரவிட்ட என்ற ஏ. எஸ். பீ ஒருவர் இருந்தார். அவர் பல கேள்விகளை இவரிடம் கேட்டார். இவர் எதற்கும் பதில் கொடுக்காமல் மௌனமாக இருந்தார். பின் அவரை பலமுறை அடித்து கேள்விகளை கேட்டார். எதற்கும் இவர் பதில் அளிக்காததால் படலந்தவிற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு கொண்டு வரும் போதே அவர் அரைவாசி இறந்த நிலையிலேயே இருந்தார். கொண்டுவரப்பட்ட உடன் டக்ளஸ் பீரிஸ் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவிற்கு செய்தி அனுப்பினார். உடனே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவும் , ரணில் விக்கிரமசிங்கவும் ஒரே வாகனத்தில் அங்கு வந்தனர். அவர்களும் முடியுமான அளவு கேள்விகளை கேட்டனர். ஆனால் அந்த சட்டத்தரணி எதற்கும் பதில் கொடுக்காமல் மௌனமாகவே இருந்தார். அவருக்கு பதில் கொடுக்கும் அளவிற்கு கூட உயிர் இருக்கவில்லை.

அதன் பின்னர் இருவரும் டக்ளஸ் பீரிஸிடம் இந்த சட்டத்தரணியை முடியுமான அளவு சித்திரவதை செய்து கொலை செய்யுமாறு பணித்தனர். அதன் பின்னர் அந்த சட்டத்தரணியின் இரு கண்களும் பிடுங்கப்பட்டு மிளாகாய் தூளை முகத்தில் போட்டனர். நான் ஆயுத களஞ்சியசாலை இருந்து மிகவும் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னர் முடியுமான அளவு சித்திரவதை செய்தனர். மாலை 5 அல்லது 6 மணியளவில் அவர் உயிர் அவரின் உடலை விட்டு சென்றது. அன்று இரவே பெரிய வைத்தியசாலைக்கு அருகில் அவரின் உடலை போட்டுவிட்டு வந்தனர். காலையில் சடலத்தை கண்ட மக்கள் வைத்தியசாலையின் பிணவறையில் கொண்டு சென்று வைத்தனர். பிணவறையில் அவர் உடல் வெட்டப்பட்டு மரண பரிசோதனை செய்யப்பட்டு உட்காயங்கள் 46 இனால் இரத்தம் வெளியேறி உயிரிழந்ததாக கூறினர். பின்னர் அவரின் அண்ணாவை அழைத்து அவரது சடலம் கையளிக்கப்பட்டது. அவரது கண்கள் இருந்த இடத்தில் ஏதோ ஒன்றை நிரப்பியிருந்தனர்.

♦️ஊடகவியலாளர் : கண்களால் கண்ட மறக்க முடியாத சம்பவங்கள் ஏதாவது உள்ளதா?

♦️ ஏ. பீ கருணாரத்ரன : ஆம். களுத்துறை பிரதேசத்தில் நடந்த சம்பவம். தென் மாகாணத்திற்கு பொறுப்பான விஜய சூரிய என்ற ஒரு இராணுவ கேப்டன் இருந்தார். அவரின் அம்மாவின் வீடு வேயங்கொட பாடசாலைக்கு அடுத்த காணியில் இருந்தது. JVP இன் சிலர் வந்து அவரின் அம்மாவின் தேசிய அடையாள அட்டையையும் , பணத்தை எடுத்துச் சென்றனர். மகனிற்கு உடனடியாக இராணுவத்தில் இருந்து வெளியேறும் கூறிவிட்டு சென்றனர். மகன் வந்தவுடன் அம்மா நடந்ததை கூறியதும் கோபமடைந்த கேப்டன் விஜய சூரிய லொறி ஒன்றை எடுத்துச் சென்று களுத்துறை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்த உயர் தர வகுப்பிற்கு சென்று அங்கு கற்றுக் கொண்டிருந்த பெண் மாணவிகள் உட்பட 20 பேரை படலந்தவிற்கு அழைத்துக் கொண்டு வந்து பெண் மாணவிகள் அனைவரையும் துஷ்பிரயோகம் செய்து ஆண் மாணவர்களை படுக்க வைத்து இரும்பு சுத்தியலால் தலையில் பலமுறை அடித்து பின்னர் பொலித்தீன் உறைகளில் அவர்களை போட்டுக் கொண்டு அந்த கேப்டனின் அம்மாவின் வீட்டுக்கு அருகில் பாடசாலைக்கு முன்பாக அவர்கள் மீது டயர்களை இட்டு கொளுத்தினர். அவர்களை கொண்டு வரும் பயத்தினால் அனைவரும் கதறி அழுதனர். சிலர் எங்கள் அம்மாவை ஒரு முறை காண்பித்து விட்டு எங்களை கொலை செய்யுமாறு கெஞ்சினர்.

♦️ ஊடகவியலாளர் : இது போன்ற சித்திரவதைகள் படலந்தவில் மாத்திரமா மேற்கொள்ளப்பட்டன?

♦️ ஏ. பீ கருணாரத்ரன : படலந்தவிற்கு பெரும்பாலும் கொண்டுவரப்பட்டவர்கள் பிற இடங்களில் வசித்தவர்கள் . ஹபராதுவை வரை , அம்பலங்கொட , பலப்பிட்டிய , வேயங்கொட , மீரிகம , திஹாரிய மற்றும் அத்தனகல்ல பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் தான் படலந்தையில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். படலந்த போன்ற வதைக்கூடங்கள் நாடு பூராவும் 46 காணப்பட்டன. அவைகள் அனைத்தும் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைக்கப்பட்ட தொழிற் கிராமங்கள் ஆகும். சூரியகந்த , வவுல்பெலே, மினுவங்கொட பலங்கொட உடவலை மற்றும் மல்மீகன்த என்பன சில உதாரணங்களாகும்.

♦️ ஊடகவியலாளர் : படலந்தவிற்கு அடிக்கடி வந்து சென்றவர்கள் யார் ?

♦️ ஏ. பீ கருணாரத்ரன : தினமும் ரணில் விக்கிரமசிங்க வந்து செல்வார். அதேபோன்று கோணவில சுனில். கோணவில சுனில் வைத்தியர் ஒருவரின் மகளை கற்பழித்து கொலை செய்து சிறைவாசம் அனுபவித்துக் கொண்டு இருக்கும் போது ரணில் விக்கிரமசிங்கவினால் விடுதலை செய்யப்பட்டு சமாதான நீதிவானாக மற்றும் இளைஞர் வேலைவாய்ப்பு அமைச்சில் செயலாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

♦️ ஊடகவியலாளர் : பிரபல்யமான தேசிய அடையாள அட்டை கொண்டு செல்லுதல் தொடர்பான உங்கள் கருத்து என்ன?

♦️ ஏ. பீ கருணாரத்ரன : உண்மை. "கோணிபில்லா" என்ற ஒரு குழுதான் செய்தது. அதில் பெரும்பாலானோர் JVP இல் இருந்தவர்கள் தான். தேசிய அடையாள அட்டைகளை எடுத்து சென்றனர். கட்சிக்கு உதவுவதாக கூறி பணத்தை கொள்ளை அடித்தனர். JVP இனர் 03 கோணிப் பைகளில் தேசிய அடையாள அட்டைகளை எடுத்து வைத்திருந்தனர். நாங்கள் விசாரணைக்காக எல்லா வதைக்கூடங்களிற்கும் சென்றோம். அனைத்தினதும் தகவல்களை சேகரித்து இருந்தோம். ஆனால் படலந்தவிற்கு மாத்திரமே வழக்கு தொடுக்கப்பட்டது. மற்றைய வதைக்கூடங்களிற்கு வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. அதே போன்று JVP இனரால் வாக்களிக்க சென்ற 5 பேரை கொலை செய்து வாக்களிக்கும் இடத்திலேயே போட்டனர். இதுபோன்று 225 பேர் கொலை செய்யப்பட்டனர்.

♦️ ஊடகவியலாளர் : இவ்வளவு நடந்த பின்பும் ஏன் இவர்களுக்கு எதிராக சட்டம் எதையும் செய்யவில்லை?

♦️ ஏ. பீ கருணாரத்ரன : நான் நீதிமன்றத்திற்கு சாட்சியளிக்க செல்ல இருந்தேன். ஆனால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க போக வேண்டாம் என பயமுறுத்தினார். இருந்தாலும் நான் போனேன். போகும்போதே டக்ளஸ் பீரிஸ் பெயரை மாற்றி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். இரண்டாவது பிரதிவாதியான நிஷ்ஷங்க என்பவர் வீட்டிலேயே துப்பாக்கியினால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

♦️ ஊடகவியலாளர் : ரணில் விக்கிரமசிங்க தற்போது அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை போன்றே செயற்படுகிறார்?

♦️ ஏ. பீ கருணாரத்ரன : இன்று ரணில் விக்கிரமசிங்க அதைத் தருகிறேன். இதை செய்வேன் என்று கதை சொல்லித்திரிகிறார். அவரின் பழைய வரலாறு கொலையை யும் , வதையையும் ஊக்குவித்த ஒருவராக காணப்படுகிறார். புதிதாக அவர் ஒரு கூட்டத்தில் இதை கூறினார். அப்போது எனக்கு பண்டைய வதைக்கூடங்கள் ஞாபகம் வந்தது.

♦️ ஊடகவியலாளர் : பண்டைய வரலாற்றை தெரியாத ஒருவருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

♦️ ஏ. பீ கருணாரத்ரன : நீங்கள் வாக்களிக்க 88/89 நடைபெற்றது என்ன என்பதை தேடிப் படியுங்கள். பின்னர் புத்திசாலித்தனமாக வாக்களியுங்கள்.

🛑 பிற்குறிப்பு இவர் இந்த நேர்காணலில் கூறியது போல் JVP இனரால் தேசிய அடையாள அட்டைகள் திருடப்பட்டது உண்மை தான். தற்பாதுகாப்பிற்காக சில கொலைகள் செய்யப்பட்டன. நானும் 2000 ஆண்டுக்கு பிற்பாடு பிறந்தவன். நானும் இவர் சொன்னது போல் வாக்களிக்க முன் பண்டைய அரசியலில் 88/89 உண்மைத் தன்மைகளை ஓரளவு தேடிப் படித்தேன்.

நான் தெரிந்த மட்டில் JVP இன் பெயரை வைத்து அவர்களின் கொள்கைக்கும் அரசியல் கோட்பாடுகளிற்கும் அப்பால் ஒரு அரச அங்கீகாரம் பெற்ற ஒரு குழு JVP பெயரை வைத்து பல அப்பாவிகளை கொலை செய்ததையும், இந்த குழுவில் இந்திய ரோ அமைப்பின் சிலரும் அரசினால் மறைமுகமாக கொண்டுவரப்பட்டு அராஜகம் செய்தாக பல நடுநிலை வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியாளர்களின் அறிக்கைகளில் எழுதப்பட்டிருத்ததை வாசித்தேன். அன்று ஊடகங்களும் அரசாங்கம் எதைச் சொன்னதோ அதே மக்களிற்கும் காட்டியது. அடாவடித்தனத்திற்கும், ஊழலிற்கும் எதிராக குரல் கொடுத்ததால் தீவிரவாதிகள் JVP இனரை முத்திரை குத்த அரசாங்கம் செய்த செயலாகவே பெரும்பாலான ஊடகவியலாளர் எழுதியிருந்தனர்.

இது தொடர்பாக இன்னும் ஆராய்ந்து எழுதவுள்ளேன். எது எப்படியோ இந்த வதை முகாம்களில் கொல்லப்பட்ட அப்பாவி இளைஞர்களுக்கு நீதியை நிலைநாட்டுவது தற்கால அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

சிலர் நினைக்கலாம் நான் JVP சுத்தப்படுத்த முனைவதாக. எழுதுவது என் விருப்பம். வாக்களிப்பதும் எனது உரிமை. விமர்சிப்பதற்கும் உங்களுக்கு உரிமை உள்ளது.

✍🏻Usaidh Muaaz

யாழ்ப்பாணம்.com

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டலந்த விவகாரம் தொடர்பாக அறிக்கையை சமர்பித்து அது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் - குமார் குணரத்னம்

Published By: VISHNU

11 MAR, 2025 | 03:46 AM

image

தற்போதைய அரசாங்கம் பட்டலந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதுடன் அது தொடர்பில் உரிய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று சம்பவம் மீண்டும் இந்த நாட்டில் இடம்பெறாமல் இருக்க சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரதம செயலாளர் குமார் குணரத்னம் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்ஜசீரா செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் முன்வைக்கப்பட்ட சில விடயங்கள் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் ஊடகவியலாளர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுப்பிய போது அவர் சம்பந்தப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட வில்லை எனக் கூறினார்.எனவே பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படாத அறிக்கையை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார்.அத்துடன் இந்த கருத்துக்களை தொடர்ந்து தற்போது பல உண்மைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.

ரணில் விக்கிரமசிங்க என்பவரின் அரசியலை நாம் தெளிவாக புரிந்து கொண்டால் 1977 ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்ட பொருளதாரா திட்டம் முதல் அதனுடன் தொடர்புடையதாக மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள் அதேபோன்று ஜனநாயகத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஒடுக்குமுறைகள் வடக்கு கிழக்கு மற்றும் தெற்கில் முன்னெடுக்கப்பட்ட சமூக விரோத செயற்பாடுகள் அனைத்தையும் மூடி மறைக்கவே அவர் செயற்பட்டுள்ளார்.

முதலாளித்துவ அரசாங்கம் எப்போதும் சமூகத்தில் மேல்மட்டத்தில் உள்ளவர்களின் நன்மைக்காக மாத்திரம் தீர்மானங்களை முன்னெடுத்த போதிலும் அப்பாவி மக்கள் சார்பில் எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை. அதேபோன்று 2022 ஆம் ஆண்டு

 நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கடுத்திருந்த போது அப்போது ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியம் அதானி நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டமை மற்றும் அதன் பின்னர் நாட்டில் ஆட்சி செய்த முறை பற்றி நாம் நன்கறிவோம்.

எனவே தற்போதைய அரசாங்கம் பட்டலந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும்.அது தொடர்பில் உரிய தரப்பினருக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த பட்டலந்த சித்திரவதை போன்று பல பகுதிகளில் குற்றச்செயல்கள் இடம்பெற்றிருக்கலாம்.எனவே இது போன்று சம்பவம் மீண்டும் இந்த நாட்டில் இடம்பெறாமல் இருக்க சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/208855

  • கருத்துக்கள உறவுகள்

22-62d264f4f1d7d.jpg?resize=600%2C375&ss

பட்டலந்த அறிக்கை தொடர்பில் அமைச்சரவையில் தீர்மானம்!

பட்டலந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை இந்த வாரத்துக்குள்
நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் தெரிவித்துள்ளார்

இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் எடுக்க வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆலோசனை வழங்கியதாக அவர் தெரிவித்தாா்.

இதேவேளை பட்டலந்தை சித்திரவதைக் கூடம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்கு அரசாங்கத்தைத் தலையிடுமாறு முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம்வும் வலியுறுத்தியிருந்தார்

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தாா்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல் ஜசீராவுக்கு அளித்த சமீபத்திய நேர்காணலையடுத்து, பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கை மீண்டும் பேசுபொருளானது.

மேலும் அரச உர உற்பத்திக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பியகம பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் உள்ள வீடுகளுக்குள் சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை தடுத்துவைத்து சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்தமை அல்லது காணாமலாக்கியமை தொடர்பில் விசாரணை நடத்தி பொறுப்புக்கூற வேண்டியவர்களை அடையாளம் கண்டு பரிந்துரை செய்வதே இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1424751

  • கருத்துக்கள உறவுகள்

484089644_1057815606383411_3170423495952

483926022_1057798383051800_3638426989895

484126636_1057438176421154_2687295624161

482323847_1057432029755102_8195997625544

482328414_1057037793127859_4737732889271

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டலந்த அறிக்கை பாராளுமன்றத்துக்கு

பட்டலந்த தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை இந்த வாரத்துக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

பட்டலந்த முகாம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய குறித்த ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

https://thinakkural.lk/article/315900

  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2025 at 02:21, தமிழ் சிறி said:

அன்று இரவே பெரிய வைத்தியசாலைக்கு அருகில் அவரின் உடலை போட்டுவிட்டு வந்தனர்

இன்பம்,செல்வம் போன்ற இளைஞர்களையும் இப்படித்தான் சித்திரை வதை செய்து பண்ணை பாலத்தில் போட்டார்கள் ஏனையவர்கள்பார்த்து பயப்பட வேணும் என்ற நோக்கத்துடன் ...நடந்தது 1980 களில்

15 hours ago, ஏராளன் said:

முதலாளித்துவ அரசாங்கம் எப்போதும் சமூகத்தில் மேல்மட்டத்தில் உள்ளவர்களின் நன்மைக்காக மாத்திரம் தீர்மானங்களை முன்னெடுத்த போதிலும் அப்பாவி மக்கள் சார்பில் எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை. அதேபோன்று 2022 ஆம் ஆண்டு

சோசலிசவாதிகள் உத்தமர்களாக்கும்,,அவையின்ட அரசுகள் சூப்பர் என ரீல் விடுயினம்

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/share/p/1AAK9SvbBh/

படலந்த வதை முகாமில் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரியாக இருந்த ஓய்வு பெற்ற பொலிஸ் பரிசோதகர் ஏ. பீ கருணாரத்ரன ஒரு நேர்காணலில் வழங்கிய திர்ள் வாக்குமூலத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு. ♦️ ஊடகவியலாளர் : இந்த வாக்குமூலத்தை நீங்கள் வழங்குவதால் உங்களுக்கு ஏதாவது உயிராபத்து ஏற்படும் என நீங்கள் நினைக்கிறீர்களா? ♦️ஏ. பீ கருணாரத்ரன : இந்த நேர்காணலிற்கு போக வேண்டாம் என்று அச்சுறுத்தினார்கள். நான் யாருக்கும் கடனுமில்லை. பயமும் இல்லை. எனக்கு இப்போது 88 வயது . என்னை இன்று கொலை செய்தாலும் பராவாயில்லை. நாளை கொலை செய்தாலும் பராவாயில்லை. நாங்கள் வாழ்ந்த காலம் முடிந்து விட்டது. ♦️ ஊடகவியலாளர் : நீங்கள் யார் ? உங்கள் பதவி என்ன? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : ஏ. பீ கருணாரத்ரன , ஓய்வு பெற்ற பொலிஸ் பரிசோதகர் , இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ரன்ஜன் விஜேரத்ன அவர்களின் ஆலோசனைக்கு அமைய படலந்தவில் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரியாக நியமனம் பெற்றேன். ♦️ ஊடகவியலாளர் : படலந்த என்றால் என்ன? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : படலந்த என்பது காடு அல்ல. கொழும்பிலிருந்து கிரிபத்கொடவிற்கு செல்லும் போது, கிரிபத்கொடயில் இருந்து மாத்தறை வீதிக்கு செல்லும் போது கொஞ்சம் தூரம் சென்ற பின் வலது பக்கம் சுமார் 20 ஏக்கர் அளவிலான தென்னந்தோப்பு ஒன்று இருக்கும். அதில் வேலை செய்யும் வேலையாட்களுக்கான களஞ்சிய அறைகள் உட்பட பல வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அதே 20 ஏக்கரில் பெரும் கட்டிடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த கட்டிடங்களில் தான் வதை முகாம்கள் ஆரம்பிக்கப்பட்டன. ♦️ ஊடகவியலாளர்: படலந்தவில் என்ன நடந்தது? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : படலந்தவிற்கு ஒருவரை கொண்டுவந்தால் முதலில் அவர்களை தலைகீழாக தொங்கவிடுவார்கள். அதன்பிறகு அவர்களின் இரு காதுகளிற்கு பெரிய இரும்பு ஆணி அடிக்கப்படும். கண்களிற்கு தையல் ஊசியால் குத்துவார்கள். கண்ணாடித் துண்டுகளை சாப்பிடக் கொடுப்பார்கள். சாப்பிடாவிட்டால் பலமாக அடித்து சாப்பிட வைப்பார்கள். சாப்பிடும் போதே அந்த கண்ணாடி துண்டுகள் உடல் பாகங்களை கிழித்துக் கொண்டு கீழே வரும். சூடாக்கப்பட்ட இரும்புக் கோளினால் முதுகில் சூடு வைப்பார்கள். இவற்றை செய்யும் போதே அந்த மனிதர் அரைவாசி இறந்த விடுவார். பின்னர் கீழே இறக்கி பொலித்தீன் உறைகளில் போடுவார்கள். பின்னர் விசாலமாக வெட்டப்பட்டுள்ள குழிகளில் அவர்களை போட்டு அவர்களுக்கு மேல் டயர்களை போட்டு கொளுத்துவார்கள் . இங்கே இடம் போதாத சந்தர்ப்பங்களில் சிலரை மட்டக்குளியில் உள்ள குப்பை சேகரிக்கும் இடத்திற்கு கொண்டு சென்று , அங்கே ரொட்டி போடும் தட்டு போல் ஒரு பெரிய தட்டு இருந்தது. அதில் போட்டு கொளுத்து வார்கள். ♦️ ஊடகவியலாளர் : அவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களுள் யாராவது விஷேடமானவர்கள் இருந்தனரா? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : விஜயதாஸ லியனாரச்சி . திறமைமிக்க ஒரு சட்டத்தரணி. பெரும்பாலான காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைப் பற்றியே வாதிட்டார். ♦️ ஊடகவியலாளர் : அவருக்கு என்ன நடந்தது? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : இவர் ஒருநாள் ஒரு வழக்கிற்காக வாதிட்டுவிட்டு வெளியே வரும் போது சிவில் ஆடை அணிந்த 04 பொலிஸ் அதிகாரிகள் வந்து வழக்கொன்றிற்காக வாதிட உள்ளதாக கூறி வெள்ளை வேன் ஒன்றில் ஏற்றி தங்காலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கே கரவிட்ட என்ற ஏ. எஸ். பீ ஒருவர் இருந்தார். அவர் பல கேள்விகளை இவரிடம் கேட்டார். இவர் எதற்கும் பதில் கொடுக்காமல் மௌனமாக இருந்தார். பின் அவரை பலமுறை அடித்து கேள்விகளை கேட்டார். எதற்கும் இவர் பதில் அளிக்காததால் படலந்தவிற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு கொண்டு வரும் போதே அவர் அரைவாசி இறந்த நிலையிலேயே இருந்தார். கொண்டுவரப்பட்ட உடன் டக்ளஸ் பீரிஸ் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவிற்கு செய்தி அனுப்பினார். உடனே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவும் , ரணில் விக்கிரமசிங்கவும் ஒரே வாகனத்தில் அங்கு வந்தனர். அவர்களும் முடியுமான அளவு கேள்விகளை கேட்டனர். ஆனால் அந்த சட்டத்தரணி எதற்கும் பதில் கொடுக்காமல் மௌனமாகவே இருந்தார். அவருக்கு பதில் கொடுக்கும் அளவிற்கு கூட உயிர் இருக்கவில்லை. அதன் பின்னர் இருவரும் டக்ளஸ் பீரிஸிடம் இந்த சட்டத்தரணியை முடியுமான அளவு சித்திரவதை செய்து கொலை செய்யுமாறு பணித்தனர். அதன் பின்னர் அந்த சட்டத்தரணியின் இரு கண்களும் பிடுங்கப்பட்டு மிளாகாய் தூளை முகத்தில் போட்டனர். நான் ஆயுத களஞ்சியசாலை இருந்து மிகவும் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னர் முடியுமான அளவு சித்திரவதை செய்தனர். மாலை 5 அல்லது 6 மணியளவில் அவர் உயிர் அவரின் உடலை விட்டு சென்றது. அன்று இரவே பெரிய வைத்தியசாலைக்கு அருகில் அவரின் உடலை போட்டுவிட்டு வந்தனர். காலையில் சடலத்தை கண்ட மக்கள் வைத்தியசாலையின் பிணவறையில் கொண்டு சென்று வைத்தனர். பிணவறையில் அவர் உடல் வெட்டப்பட்டு மரண பரிசோதனை செய்யப்பட்டு உட்காயங்கள் 46 இனால் இரத்தம் வெளியேறி உயிரிழந்ததாக கூறினர். பின்னர் அவரின் அண்ணாவை அழைத்து அவரது சடலம் கையளிக்கப்பட்டது. அவரது கண்கள் இருந்த இடத்தில் ஏதோ ஒன்றை நிரப்பியிருந்தனர். ♦️ஊடகவியலாளர் : கண்களால் கண்ட மறக்க முடியாத சம்பவங்கள் ஏதாவது உள்ளதா? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : ஆம். களுத்துறை பிரதேசத்தில் நடந்த சம்பவம். தென் மாகாணத்திற்கு பொறுப்பான விஜய சூரிய என்ற ஒரு இராணுவ கேப்டன் இருந்தார். அவரின் அம்மாவின் வீடு வேயங்கொட பாடசாலைக்கு அடுத்த காணியில் இருந்தது. JVP இன் சிலர் வந்து அவரின் அம்மாவின் தேசிய அடையாள அட்டையையும் , பணத்தை எடுத்துச் சென்றனர். மகனிற்கு உடனடியாக இராணுவத்தில் இருந்து வெளியேறும் கூறிவிட்டு சென்றனர். மகன் வந்தவுடன் அம்மா நடந்ததை கூறியதும் கோபமடைந்த கேப்டன் விஜய சூரிய லொறி ஒன்றை எடுத்துச் சென்று களுத்துறை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்த உயர் தர வகுப்பிற்கு சென்று அங்கு கற்றுக் கொண்டிருந்த பெண் மாணவிகள் உட்பட 20 பேரை படலந்தவிற்கு அழைத்துக் கொண்டு வந்து பெண் மாணவிகள் அனைவரையும் துஷ்பிரயோகம் செய்து ஆண் மாணவர்களை படுக்க வைத்து இரும்பு சுத்தியலால் தலையில் பலமுறை அடித்து பின்னர் பொலித்தீன் உறைகளில் அவர்களை போட்டுக் கொண்டு அந்த கேப்டனின் அம்மாவின் வீட்டுக்கு அருகில் பாடசாலைக்கு முன்பாக அவர்கள் மீது டயர்களை இட்டு கொளுத்தினர். அவர்களை கொண்டு வரும் பயத்தினால் அனைவரும் கதறி அழுதனர். சிலர் எங்கள் அம்மாவை ஒரு முறை காண்பித்து விட்டு எங்களை கொலை செய்யுமாறு கெஞ்சினர். ♦️ ஊடகவியலாளர் : இது போன்ற சித்திரவதைகள் படலந்தவில் மாத்திரமா மேற்கொள்ளப்பட்டன? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : படலந்தவிற்கு பெரும்பாலும் கொண்டுவரப்பட்டவர்கள் பிற இடங்களில் வசித்தவர்கள் . ஹபராதுவை வரை , அம்பலங்கொட , பலப்பிட்டிய , வேயங்கொட , மீரிகம , திஹாரிய மற்றும் அத்தனகல்ல பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் தான் படலந்தையில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். படலந்த போன்ற வதைக்கூடங்கள் நாடு பூராவும் 46 காணப்பட்டன. அவைகள் அனைத்தும் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைக்கப்பட்ட தொழிற் கிராமங்கள் ஆகும். சூரியகந்த , வவுல்பெலே, மினுவங்கொட , பலங்கொட உடவலை மற்றும் மல்மீகன்த என்பன சில உதாரணங்களாகும். ♦️ ஊடகவியலாளர் : படலந்தவிற்கு அடிக்கடி வந்து சென்றவர்கள் யார் ? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : தினமும் ரணில் விக்கிரமசிங்க வந்து செல்வார். அதேபோன்று கோணவில சுனில். கோணவில சுனில் வைத்தியர் ஒருவரின் மகளை கற்பழித்து கொலை செய்து சிறைவாசம் அனுபவித்துக் கொண்டு இருக்கும் போது ரணில் விக்கிரமசிங்கவினால் விடுதலை செய்யப்பட்டு சமாதான நீதிவானாக மற்றும் இளைஞர் வேலைவாய்ப்பு அமைச்சில் செயலாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். ♦️ ஊடகவியலாளர் : பிரபல்யமான தேசிய அடையாள அட்டை கொண்டு செல்லுதல் தொடர்பான உங்கள் கருத்து என்ன? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : உண்மை. "கோணிபில்லா" என்ற ஒரு குழுதான் செய்தது. அதில் பெரும்பாலானோர் JVP இல் இருந்தவர்கள் தான். தேசிய அடையாள அட்டைகளை எடுத்து சென்றனர். கட்சிக்கு உதவுவதாக கூறி பணத்தை கொள்ளை அடித்தனர். JVP இனர் 03 கோணிப் பைகளில் தேசிய அடையாள அட்டைகளை எடுத்து வைத்திருந்தனர். நாங்கள் விசாரணைக்காக எல்லா வதைக்கூடங்களிற்கும் சென்றோம். அனைத்தினதும் தகவல்களை சேகரித்து இருந்தோம். ஆனால் படலந்தவிற்கு மாத்திரமே வழக்கு தொடுக்கப்பட்டது. மற்றைய வதைக்கூடங்களிற்கு வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. அதே போன்று JVP இனரால் வாக்களிக்க சென்ற 5 பேரை கொலை செய்து வாக்களிக்கும் இடத்திலேயே போட்டனர். இதுபோன்று 225 பேர் கொலை செய்யப்பட்டனர். ♦️ ஊடகவியலாளர் : இவ்வளவு நடந்த பின்பும் ஏன் இவர்களுக்கு எதிராக சட்டம் எதையும் செய்யவில்லை? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : நான் நீதிமன்றத்திற்கு சாட்சியளிக்க செல்ல இருந்தேன். ஆனால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க போக வேண்டாம் என பயமுறுத்தினார். இருந்தாலும் நான் போனேன். போகும்போதே டக்ளஸ் பீரிஸ் பெயரை மாற்றி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். இரண்டாவது பிரதிவாதியான நிஷ்ஷங்க என்பவர் வீட்டிலேயே துப்பாக்கியினால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். ♦️ ஊடகவியலாளர் : ரணில் விக்கிரமசிங்க தற்போது அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை போன்றே செயற்படுகிறார்? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : இன்று ரணில் விக்கிரமசிங்க அதைத் தருகிறேன். இதை செய்வேன் என்று கதை சொல்லித்திரிகிறார். அவரின் பழைய வரலாறு கொலையை யும் , வதையையும் ஊக்குவித்த ஒருவராக காணப்படுகிறார். புதிதாக அவர் ஒரு கூட்டத்தில் இதை கூறினார். அப்போது எனக்கு பண்டைய வதைக்கூடங்கள் ஞாபகம் வந்தது. ♦️ ஊடகவியலாளர் : பண்டைய வரலாற்றை தெரியாத ஒருவருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : நீங்கள் வாக்களிக்க 88/89 நடைபெற்றது என்ன என்பதை தேடிப் படியுங்கள். பின்னர் புத்திசாலித்தனமாக வாக்களியுங்கள். 🛑 பிற்குறிப்பு இவர் இந்த நேர்காணலில் கூறியது போல் JVP இனரால் தேசிய அடையாள அட்டைகள் திருடப்பட்டது உண்மை தான். தற்பாதுகாப்பிற்காக சில கொலைகள் செய்யப்பட்டன. நானும் 2000 ஆண்டுக்கு பிற்பாடு பிறந்தவன். நானும் இவர் சொன்னது போல் வாக்களிக்க முன் பண்டைய அரசியலில் 88/89 உண்மைத் தன்மைகளை ஓரளவு தேடிப் படித்தேன். நான் தெரிந்த மட்டில் JVP இன் பெயரை வைத்து அவர்களின் கொள்கைக்கும் அரசியல் கோட்பாடுகளிற்கும் அப்பால் ஒரு அரச அங்கீகாரம் பெற்ற ஒரு குழு JVP பெயரை வைத்து பல அப்பாவிகளை கொலை செய்ததையும், இந்த குழுவில் இந்திய ரோ அமைப்பின் சிலரும் அரசினால் மறைமுகமாக கொண்டுவரப்பட்டு அராஜகம் செய்தாக பல நடுநிலை வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியாளர்களின் அறிக்கைகளில் எழுதப்பட்டிருத்ததை வாசித்தேன். அன்று ஊடகங்களும் அரசாங்கம் எதைச் சொன்னதோ அதே மக்களிற்கும் காட்டியது. அடாவடித்தனத்திற்கும் , ஊழலிற்கும் எதிராக குரல் கொடுத்ததால் தீவிரவாதிகள் JVP இனரை முத்திரை குத்த அரசாங்கம் செய்த செயலாகவே பெரும்பாலான ஊடகவியலாளர் எழுதியிருந்தனர். இது தொடர்பாக இன்னும் ஆராய்ந்து எழுதவுள்ளேன். எது எப்படியோ இந்த வதை முகாம்களில் கொல்லப்பட்ட அப்பாவி இளைஞர்களுக்கு நீதியை நிலைநாட்டுவது தற்கால அரசாங்கத்தின் பொறுப்பாகும் சிலர் நினைக்கலாம் நான் JVP சுத்தப்படுத்த முனைவதாக. எழுதுவது என் விருப்பம். வாக்களிப்பதும் எனது உரிமை. விமர்சிப்பதற்கும் உங்களுக்கு உரிமை உள்ளது. ✍🏻

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சொந்த இனத்தையே இப்படிச் செய்த இனம்...எம்மினத்தை என்னபாடூ படுத்தியிருப்பார்கள்....வாசிக்கவே நெஞ்சு பதறுகின்றது

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, alvayan said:

சொந்த இனத்தையே இப்படிச் செய்த இனம்...எம்மினத்தை என்னபாடூ படுத்தியிருப்பார்கள்....வாசிக்கவே நெஞ்சு பதறுகின்றது

உண்மை ....இது தெரிந்த விடயம் கதிர்காம அழகி முதல் 2009 வரை நடந்த ஒன்று...இவர்கள் பழைய விடயங்களை கிளறி எமது இனவழிப்பை நியாயப்படுத்த முனைவார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

சொந்த இனத்தையே இப்படிச் செய்த இனம்...எம்மினத்தை என்னபாடூ படுத்தியிருப்பார்கள்....வாசிக்கவே நெஞ்சு பதறுகின்றது

இன்னும் நிறைய இருக்கிறது வாசிப்பதற்கு எனவே… நன்றாக சாப்பிட்டு திடகாத்திரமாக. இருங்கள் ....ரணிலும். இதே வதை முகாமில். அடைத்து அவருக்கும் அதே சித்திரவதைகள். வழங்க வேண்டும் அனுபவித்து பார்க்கட்டும். தலைவர் இவருடன் சமாதன ஒப்பந்தம் செய்தது தவறு ஆகும்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, putthan said:

இன்பம்,செல்வம் போன்ற இளைஞர்களையும் இப்படித்தான் சித்திரை வதை செய்து பண்ணை பாலத்தில் போட்டார்கள் ஏனையவர்கள்பார்த்து பயப்பட வேணும் என்ற நோக்கத்துடன் ...நடந்தது 1980 களில்

பொன் சிவகுமாரின் மரணத்தின் பின்...

இன்பம்,செல்வம் ஆகியோர்... முதன் முதலாவதாக அரச பயங்கரவாதத்தின் மூலம் கொலை செய்ய ஆரம்பமாகிய காலம் என்று நினைக்கின்றேன் புத்தன்.

இந்தக் கொலை யாழ். மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அப்போதுதான்.... இயக்கங்களும் மெது, மெதுவாக ஆரம்பிக்கப் பட்ட காலம் அது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

484315025_1058656709632634_2861313465320

484124475_1058655999632705_6129138766155

483092241_1058645839633721_2343990502975

484227453_1058643132967325_1260116826503

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

சொந்த இனத்தையே இப்படிச் செய்த இனம்...எம்மினத்தை என்னபாடூ படுத்தியிருப்பார்கள்....வாசிக்கவே நெஞ்சு பதறுகின்றது

கொலை செய்து இப்படி உடல்களை பகிரங்கமா வைப்பது மற்றவர்களை அச்சுறுத்துவதத்காதானே?

தமிழ் இயக்கங்களும் இவ்வாறு தங்களுக்குள் அடிபட்டு படுகொலை செய்து உடலங்களை பகிரங்கமாக வைத்தார்கள் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2025 at 02:21, ஏராளன் said:

பட்டலந்த விவகாரம் தொடர்பாக அறிக்கையை சமர்பித்து அது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் - குமார் குணரத்னம்

Published By: VISHNU

11 MAR, 2025 | 03:46 AM

image

தற்போதைய அரசாங்கம் பட்டலந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதுடன் அது தொடர்பில் உரிய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று சம்பவம் மீண்டும் இந்த நாட்டில் இடம்பெறாமல் இருக்க சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரதம செயலாளர் குமார் குணரத்னம் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்ஜசீரா செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் முன்வைக்கப்பட்ட சில விடயங்கள் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் ஊடகவியலாளர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுப்பிய போது அவர் சம்பந்தப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட வில்லை எனக் கூறினார்.எனவே பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படாத அறிக்கையை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார்.அத்துடன் இந்த கருத்துக்களை தொடர்ந்து தற்போது பல உண்மைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.

ரணில் விக்கிரமசிங்க என்பவரின் அரசியலை நாம் தெளிவாக புரிந்து கொண்டால் 1977 ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்ட பொருளதாரா திட்டம் முதல் அதனுடன் தொடர்புடையதாக மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள் அதேபோன்று ஜனநாயகத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஒடுக்குமுறைகள் வடக்கு கிழக்கு மற்றும் தெற்கில் முன்னெடுக்கப்பட்ட சமூக விரோத செயற்பாடுகள் அனைத்தையும் மூடி மறைக்கவே அவர் செயற்பட்டுள்ளார்.

முதலாளித்துவ அரசாங்கம் எப்போதும் சமூகத்தில் மேல்மட்டத்தில் உள்ளவர்களின் நன்மைக்காக மாத்திரம் தீர்மானங்களை முன்னெடுத்த போதிலும் அப்பாவி மக்கள் சார்பில் எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை. அதேபோன்று 2022 ஆம் ஆண்டு

 நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கடுத்திருந்த போது அப்போது ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியம் அதானி நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டமை மற்றும் அதன் பின்னர் நாட்டில் ஆட்சி செய்த முறை பற்றி நாம் நன்கறிவோம்.

எனவே தற்போதைய அரசாங்கம் பட்டலந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும்.அது தொடர்பில் உரிய தரப்பினருக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த பட்டலந்த சித்திரவதை போன்று பல பகுதிகளில் குற்றச்செயல்கள் இடம்பெற்றிருக்கலாம்.எனவே இது போன்று சம்பவம் மீண்டும் இந்த நாட்டில் இடம்பெறாமல் இருக்க சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/208855

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, colomban said:

கொலை செய்து இப்படி உடல்களை பகிரங்கமா வைப்பது மற்றவர்களை அச்சுறுத்துவதத்காதானே?

தமிழ் இயக்கங்களும் இவ்வாறு தங்களுக்குள் அடிபட்டு படுகொலை செய்து உடலங்களை பகிரங்கமாக வைத்தார்கள் அல்லவா?

அவர்கள் பயங்கரவாதிகள் அப்படித்தான் செய்வார்கள் ..அங்கிகரிக்கப்பட்ட அரசுகள் செய்யும் பொழுது அது குற்றம் ...அரசுகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் வித்தியாசம் இருக்க தானே வேணும் ..

இங்கு அங்கிகரிக்கப்பட்ட அரசாங்கத்தை நடத்திய அரசியல்வாதிகளிடம் தான் இப்படியான பகிரங்க குற்றசாட்டுக்களை வைக்க முடியும்...போராளிகளை பயங்கரவாதிகள் என முத்திரை குத்திதானே சர்வேதேச மனித உரிமை சட்டங்களை மீறி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றனர்...

13 hours ago, colomban said:

கொலை செய்து இப்படி உடல்களை பகிரங்கமா வைப்பது மற்றவர்களை அச்சுறுத்துவதத்காதானே?

சில அரசுகள் இன்றும் குற்றசெயலுக்கு பகிரங்கமாக தலையை வெட்டுவதும் அதற்காக தான்..சில அரசுகள் துப்பாக்கியால் சுட்டு மரணதண்ட்னை வழ்ங்குவதும் அதற்காக ....இவற்றை எல்லாம் நாங்கள் நியாயப்படுத்தி வாதட முடியாது ..அது அவர்கள் நாட்டு சட்டம் ...

ஆனால் நாம் வாழும் நாடு,வாழ்ந்த நாடுகளில் இப்படியான சட்டங்கள் இல்லை ஆகவே அரசுகள் செய்தவற்றை நியாய படுத்த முடியாது

14 hours ago, தமிழ் சிறி said:

பொன் சிவகுமாரின் மரணத்தின் பின்...

இன்பம்,செல்வம் ஆகியோர்... முதன் முதலாவதாக அரச பயங்கரவாதத்தின் மூலம் கொலை செய்ய ஆரம்பமாகிய காலம் என்று நினைக்கின்றேன் புத்தன்.

இந்தக் கொலை யாழ். மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அப்போதுதான்.... இயக்கங்களும் மெது, மெதுவாக ஆரம்பிக்கப் பட்ட காலம் அது.

செல்வம் துணைக்கு

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

இந்தக் கொலை யாழ். மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அப்போதுதான்.... இயக்கங்களும் மெது, மெதுவாக ஆரம்பிக்கப் பட்ட காலம் அது.

செல்வம் துணைக்கு சென்றவர் ...அன்று அந்த இளைஞர்களின் சித்திவதையை பார்த்து ஏனைய இளைஞர்கள்

பயப்படவில்லை ...மிகவும் உக்கிரமாக தொடர்ந்து போராட்ட இயக்கங்களில் இணைந்து கொண்டனர்...ஆகவே ஒன்று மட்டும் நிச்சயம் தெரிகின்றது பயந்து எவனும் ஒதுங்குவதில்லை என்று

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2025 at 03:02, colomban said:

கொலை செய்து இப்படி உடல்களை பகிரங்கமா வைப்பது மற்றவர்களை அச்சுறுத்துவதத்காதானே?

தமிழ் இயக்கங்களும் இவ்வாறு தங்களுக்குள் அடிபட்டு படுகொலை செய்து உடலங்களை பகிரங்கமாக வைத்தார்கள் அல்லவா?

உங்கள் புரிதல் இதுதானென்றால்...இதற்கு பதில் எழுதுவது என் நேரத்தை வீணாக்குவதாகும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.