Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன ; மருத்துவமனைகள் மீது விமான தாக்குதல் இடம்பெற்றது ஆனால் அது திட்டமிட்ட முறையில் இடம்பெறவில்லை - ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Rajeeban

06 Mar, 2025 | 03:06 PM

image

யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான  மனிதாபிமான உதவிகள்  தடுக்கப்பட்டன மருத்துவமனைகள் மீது விமானக்குண்டு வீச்சு இடம்பெற்றது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க எனினும் இது திட்டமிடப்பட்ட முறையில் பெருமளவில் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளார்

அல்ஜசீராவிற்கான பேட்டியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

2009ம் ஆண்டு முடிவிற்கு வந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற் நீதி வழங்கப்பட்டுவிட்டதா என மெஹ்டி ஹசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ரணில்விக்கிரமசிங்க எந்த சமூகத்திற்கும் இதுவரை நீதி வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தில் சிக்குண்டிருந்தவர்களிற்கான மனிதாபிமான உதவி  தடுக்கப்பட்டது, மருத்துவமனைகள் மீது குண்டுவீச்சு இடம்பெற்றது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ஆனால் இது திட்டமிடப்பட்ட விதத்தில் முன்னெடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

விமானப்படை விமானங்கள் மருத்துவமனைகள் மீது குண்டுவீசிய தருணங்கள் உள்ளன, இதற்காக  அவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க ஆனால் இது பெருமளவில் இடம்பெற்றதா? நான் அப்படி சொல்ல மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள மெஹ்டி ஹசன் ஐக்கியநாடுகளின் குழு இலங்கை படையினர் யுத்தத்தில் சிக்குண்டவர்களிற்கான மனிதாபிமான உதவிகளை தடுத்தனர் என குறிப்பிட்டுள்ளனரே என கேள்வி எழுப்பியுள்ளார்.

நான் அது இடம்பெற்றது என நினைக்கின்றேன் என அவ்வேளை எதிர்கட்சி தலைவராகயிருந்த ரணில்விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/208445

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ஏராளன் said:

யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான  மனிதாபிமான உதவிகள்  தடுக்கப்பட்டன மருத்துவமனைகள் மீது விமானக்குண்டு வீச்சு இடம்பெற்றது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க எனினும் இது திட்டமிடப்பட்ட முறையில் பெருமளவில் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளார்

அல்ஜசீராவிற்கான பேட்டியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

திட்டமிட்டு தான் அனைத்தும் நடந்தன. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, தற்போதைய ஜே வி பி எல்லோரும் உடந்தையாக இருந்தார்கள் . அது நேரடியாகவும் மறைமுகமாகவும் நடைபெற்றன.

15 வருடங்கள் கழித்து அல்ஜசீரா. கோமாவில் இருந்து திரும்பியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இதற்கு பதிலளித்துள்ள ரணில்விக்கிரமசிங்க எந்த சமூகத்திற்கும் இதுவரை நீதி வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் முடிந்து 15 வருடங்கள் முடிந்தும் பாதிக்கப்பட்ட இனத்துக்கு நீதி வழங்க முடியாத தலைவர்கள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?

போர் நடந்தபோது தவறுதலாக குண்டு போட்டீர்கள் என்றால்

போர் முடிந்து சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்றது எந்த விதத்தில் நிஞாயம்?

சர்வதேச சட்டத்திலேயே சரணடைந்தவர்களை பாதுகாக்க வேண்டும் என்று தானே சொல்கிறார்கள்.

தலைவரின் மகன் என்பதற்காக பாலகனை விசுக்கோத்து கொடுத்து சுட்டுக் கொன்றீர்களே இதுவும் தவறுதலாகவா நடந்தது?

இதற்கெல்லாம் என்றோ ஒருநாள் பதில் சொல்லயே ஆகணும்.

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபய ராஜபக்சவை நான் காப்பாற்றினேனா?- ரணில் மறுப்பு – அல்ஜசீரா பேட்டியின் இடைநடுவில் வெளியேறப்போவதாக மிரட்டல்

image

அல்ஜசீராவிற்கு வழங்கிய பேட்டியொன்றின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பாதுகாத்ததாக தெரிவிக்கப்படுவதை மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேட்டியின் இடைநடுவில் வெளியேறப்போவதாக எச்சரித்தார்.

அல்ஜசீராவின் இன்று ஒளிபரப்பாகவுள்ள ஹெட் டு ஹெட் பேட்டியில் கோத்தாபய ராஜபக்சவை தான் பாதுகாத்தார் என்ற குற்றச்சாட்டை ரணில்விக்கிரமசிங்க மறுத்துள்ளார்.

பெரும் உயிரிழப்புகளை  ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தனது அரசாங்கம் நம்பகதன்மை மிக்க  விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளையும் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து நாட்டிலிருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பாதுகாப்பு அளித்தீர்களா என்ற கேள்விக்கு எனது நாட்டில் அரசியல்தொடர்பற்றவரான சட்டமாஅதிபரே வழக்குதாக்கல் செய்வது குறித்து தீர்மானிப்பார் எங்களால் அவருக்கு ஆதாரங்களை அனுப்பமுடியும் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவை நான் காப்பாற்றினேனா?- ரணில் மறுப்பு – அல்ஜசீரா பேட்டியின் இடைநடுவில் வெளியேறப்போவதாக மிரட்டல் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் பேட்டி ஒலிஒளி வடிவில்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

ரணிலின் பேட்டி ஒலிஒளி வடிவில்.

சின்ராசுவுக்கு அம்னெஸ்ரி , ஐரோப்பிய ஒன்றியம் பிடிக்கவில்லையாம்

செவ்வி எடுத்தவருக்கு பாராட்டுக்கள். ரனில் குடும்பியை மறைக்க முயன்றதை பார்க்க முடிந்தது. திக்குமுக்காடி போனார் ரனில்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகளை ஒருபோதும் மறைக்க முடியாது, எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும் அத்தனையையும் உடைத்துக்கொண்டு ஒருநாள் தக்க சமயத்தில்  வெளியில் வரும். சமுதாயத்தில் மதிக்கப்படவும் வரலாற்றில் இடம்பெறவும் செய்த சாகசங்கள் பின்னாளில் மறக்கப்பட்டு குற்றவாளிகளாக வரலாற்றில் இடம்பெற்ற சம்பவங்களுமுண்டு. இதுதான் ஆரம்பம் உண்மைகள் வெளியே வர, இது தொடரும். எல்லோராலும் சிங்கள இனவாதிகளின் முகம் வெளியே கொண்டுவரப்படும். புதிய சமுதாயம் இதற்காக வெட்கப்படும். 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nunavilan said:

சின்ராசுவுக்கு அம்னெஸ்ரி , ஐரோப்பிய ஒன்றியம் பிடிக்கவில்லையாம்

செவ்வி எடுத்தவருக்கு பாராட்டுக்கள். ரனில் குடும்பியை மறைக்க முயன்றதை பார்க்க முடிந்தது. திக்குமுக்காடி போனார் ரனில்.

இப்படி பலரும் நெருக்குவாரம் கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, nunavilan said:

சின்ராசுவுக்கு அம்னெஸ்ரி , ஐரோப்பிய ஒன்றியம் பிடிக்கவில்லையாம்

செவ்வி எடுத்தவருக்கு பாராட்டுக்கள். ரனில் குடும்பியை மறைக்க முயன்றதை பார்க்க முடிந்தது. திக்குமுக்காடி போனார் ரனில்.

மாமன் ஜெயவர்த்தனா ரஜீவுக்கு நீ பிறக்க முதலே நான் அரசியலுக்கு வந்தவன் என்று சொன்னது போல

நான் அரசியலுக்க வரும்போது நீ பிறக்கவே இல்லை என்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஈழப்பிரியன் said:

மாமன் ஜெயவர்த்தனா ரஜீவுக்கு நீ பிறக்க முதலே நான் அரசியலுக்கு வந்தவன் என்று சொன்னது போல

நான் அரசியலுக்க வரும்போது நீ பிறக்கவே இல்லை என்கிறார்.

கேட்ட கேள்விக்கு மழுப்பல் பதில்கள். இதற்குள் உனது வயது தான் எனது அரசியல் அனுபவம் என்று வாய்ச்சவடால் வேறு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

சின்ராசுவுக்கு அம்னெஸ்ரி , ஐரோப்பிய ஒன்றியம் பிடிக்கவில்லையாம்

செவ்வி எடுத்தவருக்கு பாராட்டுக்கள். ரனில் குடும்பியை மறைக்க முயன்றதை பார்க்க முடிந்தது. திக்குமுக்காடி போனார் ரனில்.

சின்ராசு...எப்படியும் பதவி எடுத்திடவேணுமென்று ஓடுப்பட்டுத்திரியிது...ஒருமாதத்திலை 3 விசிட் இந்தியாவுக்கு..

1 hour ago, ஈழப்பிரியன் said:

மாமன் ஜெயவர்த்தனா ரஜீவுக்கு நீ பிறக்க முதலே நான் அரசியலுக்கு வந்தவன் என்று சொன்னது போல

நான் அரசியலுக்க வரும்போது நீ பிறக்கவே இல்லை என்கிறார்.

அது இரத்தமெல்லே...

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, alvayan said:

சின்ராசு...எப்படியும் பதவி எடுத்திடவேணுமென்று ஓடுப்பட்டுத்திரியிது...ஒருமாதத்திலை 3 விசிட் இந்தியாவுக்கு..

அது இரத்தமெல்லே...

சுமந்திரனும் இவரும் ஒரே ராசி என்று நினைக்கிறேன்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

சுமந்திரனும் இவரும் ஒரே ராசி என்று நினைக்கிறேன்.🤣

பச்சை காய்ஞ்சிட்டுது....வரட்டும் பார்ப்பம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேர்காணலை பார்க்கும்போது சிரிப்பாகவும் அதேநேரம் ரணிலின் கால நேரத்தையும் நினைத்தேன். விடுதலைப்போராட்டம் முடிவுக்கு வந்தபின் கோத்தாவை சணல் நான்கு என நினைக்கிறன், நேர் காணலில் கேட்ட கேள்விக்கு உண்மைக்கு புறம்பான கருத்தை கோத்த சொன்னபோது, கேள்வி கேட்டவர் ரொம்ப கடுப்பாகிவிட்டார். அப்போ கோத்த அவரை பாத்து சொன்னது, நீங்கள் ஏன் பதற்றப்படுகிறீர்கள்? பதற்றமடைய வேண்டியவன் நான், நானே அமைதியாக இருக்கிறேன் என்றார். திட்டமிட்டு செய்பவன் பதற்றமடைய மாட்டான், தேவையுமில்லை என்றே புரிகிறது. அதன் பின் மஹிந்தவை பல பத்திரிகைகள் நேர்காணல் கண்டன, அதில்  அல் ஜெஸீரா, சணல் நான்கு கேட்ட கேள்வி ஒன்று. அதெப்படி உங்கள் அரசில் பல உங்கள் குடும்ப உறவுகள் பதவி வகிக்கின்றனர்? அதற்கு அவர் சிரித்துக்கொண்டே, மக்கள் வாக்களித்து தெரித்தெடுக்கின்றனர், அவர்கள் விரும்பாத போது அவர்கள் நம்மை வெளியேற்றுவார்கள் என்றார். கடந்த வருடமென நினைக்கிறன் இந்த நரியை ஒருவர் நேர்காணல் செய்து, உயிர்த்த ஞாயிறு பற்றி வினவிய போது. எப்படி அட்டகாசம் போட்டார்? சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க மாட்டேன், நான் இலங்கை கத்தோலிக்க சபையோடு உறவில் இருக்கிறேன், கர்தினால் மட்டுமே பிரச்சனை செய்கிறார் என்று என்று படு பொய் சொல்லி தப்பித்துக்கொண்டார். இந்தமுறை வளமாக மாட்டினார். உயிர்த்த ஞாயிறு சம்பவம் பற்றி கேள்வி கேட்டவுடன் நான் கார்த்தினாலோடு உறவிலுள்ளேன் என பொய் சொல்லுகிறார். அதே நேரம் எல்லா குற்றங்களுக்கும் தான் பொறுப்பில்லை என்கிறார். மஹிந்த வீட்டில் கேக் வெட்டினாராம். இவரது கட்சி ஆட்சி செலுத்திய காலத்திலும் தமிழருக்கு அநிஞாயம் நடந்திருக்கு. பலதடவை இவர் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார். ஏன் இந்தப்பிரச்னைக்கு தீர்வு காண இவரால் முடியவில்லை? தாங்கள் பாடசாலைகளை திறந்து மக்களுக்கு உணவு வழங்கினார்களாம். அப்போ கப்பலில் மக்களை வடக்கிற்கு அனுப்பியது யார்? ஏன் அந்த கலவரத்தை உடனடியாக நிறுத்தவில்லை? இதே ஜே .ஆர் .சொன்னார், போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம். புலிகளை அழிப்பதற்கு எந்தப்பேயுடனும் பேசத்தயார் என்றார். பாவம், அவரது இறப்பு நாட்டில் பொதுவிடுமுறை விடவில்லை, நாட்டின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவில்லை. இப்போ, கோத்த பாய, விமானப்படையே போருக்கு காரணம் என்பது மாதிரி சொல்லி தப்பி விட்டேனென  நினைத்திருப்பார். ரணில் நாட்டுக்கு வர,  எப்படியான  வரவேற்பிருக்கிறது என்று பாப்போம். அப்படியானால், ஐநாவில் இவரது ஆட்சிக்காலத்தில் இவற்றை ஒத்துக்கொள்ளாதது ஏன்? ராஜ பக்சக்களை காப்பாற்றியது ஏன்? பாவம் ரணில்! ஆப்பிழுத்த குரங்குபோல டுமாட்டுப்பட்டு முழிப்பது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. உண்மையிலேயே ஹசனுக்கு ஒரு சலூட். பிச்சு உதறிட்டார். நிராஜ் தேவா என்பவரா அவர்? அவருந்தான் வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கலாம், தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார். 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஏராளன் said:

யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான  மனிதாபிமான உதவிகள்  தடுக்கப்பட்டன மருத்துவமனைகள் மீது விமானக்குண்டு வீச்சு இடம்பெற்றது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க எனினும் இது திட்டமிடப்பட்ட முறையில் பெருமளவில் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளார்

சின்ராசு என்ன பிராண்ட் கஞ்சா இழுக்கிறார் என்று அறிய ஆவல். ஒருக்கா ட்ரை பண்ணி பாப்பம் எண்டுதான்

எபெக்ட் தாறுமாறா இருக்கும் போல.

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-89.jpg?resize=750%2C375&ssl=

தன்னை பதவி நீக்கம் செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முயற்சித்தது – அல் ஜசீராவுடனான நேர்காணலில் ரணில்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நிலைப்பாட்டை விமர்சித்ததுடன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு தன்னைப் பாராட்டுவதற்கு முன்பு அவர்கள் முதலில் தன்னை பதவி நீக்கம் செய்ய முயற்சித்ததாகக் கூறினார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் ஆறு முறை பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சவுதி அரேபியாவை தளமாக் கொண்ட அல் ஜசீராவில் வியாழக்கிழமை (06) மாலை ஒளிபரப்பான அல் ஜசீராவின் ஹெட் டு ஹெட் நிகழ்ச்சியில் பிரிட்டிஷ் ஒளிபரப்பாளர் மெஹ்தி ஹசனுடன் ஒரு பரபரப்பான நேர்காணலில் பங்கெடுத்தார்.

இதன்போதே ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தைக் கூறினார்.

இந்த நேர்காணலின் போது அவர்,

பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வழக்குத் தொடுப்பிலிருந்து பாதுகாக்கவில்லை என்று மறுத்தார்.

2019 ஆம் ஆண்டு இலங்கையை உலுக்கிய கொடிய பயங்கரவாத தாக்குதல்களுடன் அரசாங்க தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுவதை நம்பகத்தன்மையுடன் விசாரிக்க தனது சொந்த நிர்வாகம் தவறிவிட்டது என்ற புதுப்பிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார்.

இலங்கையின் உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து போர்க்குற்ற விசாரணைகளை அரசாங்கம் கையாண்ட விதம் மற்றும் 1980 களின் பிற்பகுதியில் அவரது கண்காணிப்பின் கீழ் செய்யப்பட்ட சித்திரவதை குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சூடான விவாதம் இந்த நேர்காணலில் இடம்பெற்றது.

2022 ஆம் ஆண்டு வெகுஜன போராட்டங்களைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு அளித்தீர்களா என்று இங்கு ஊடகவியலாளரினால் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, என் நாட்டில் வழக்குத் தொடருவது குறித்து முடிவெடுப்பது சட்டமா அதிபர் தான், அவர் ஒரு அரசியல் பிரமுகர் அல்ல – நாங்கள் அவருக்கு முன் ஆதாரங்களை மட்டுமே அனுப்ப முடியும் என்றார்.

கோட்டாபய மற்றும் அவரது சகோதரரான முன்னாள் பிரதமர் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருவரும் ஊழல் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகவும், நாட்டை பெரும் நிதி நெருக்கடியில் தள்ளியதாகவும் பரவலாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு விக்கிரமசிங்கே ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர், கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்யாமல் நாட்டிற்குள் திரும்ப அனுமதித்தது குறித்தும் இங்கு கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, அவர்கள் மீண்டும் நாட்டுக்குள் உள்ளே வரலாம். அவர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. நான் எப்படி அதை செய்ய முடியும்? நான் ஒரு சர்வாதிகாரியா? – என்றார்.

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் தொடர்புடைய “பிற சக்திகளை” ஐ.எஸ்.ஐ.எஸ்-சார்புடைய அமைப்பால் நடத்தப்பட்டதாக கத்தோலிக்க திருச்சபையின் புதிய குற்றச்சாட்டுகள் குறித்தும் ஊடகவியலாளர் ஹசன் இதன்போது வினவினார்.

அதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, இந்தக் குற்றச்சாட்டுகளை “அனைத்தும் முட்டாள்தனம்” என்றும் “கத்தோலிக்க திருச்சபையின் அரசியலுக்கு” ஒரு எடுத்துக்காட்டு என்றும் கூறினார்.

இலங்கையில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் முட்டாள்தனமாகப் பேசுகிறாரா?” என்று ஹசன் மறுபடியும் வினவினார்.

அதற்கு “ஆம்,” என ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

2019 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, உள்ளூர் கார்டினல் மெல்கம் ரஞ்சித்தின் பொது அறிக்கைகளுக்கும், தொலைக்காட்சி பதிவுக்கு முன்பு அல் ஜசீராவின் தலைமை குழுவிற்கு கார்டினல் தெரிவித்த பிரத்யேக கருத்துக்களுக்கும் பதிலளித்தார்.

அல் ஜசீராவுடனான தொலைபேசி அழைப்பில், உண்மையிலேயே சுயாதீனமான விசாரணைக்கான திருச்சபையின் கோரிக்கையை விக்ரமசிங்கே கவனிக்கத் தவறிவிட்டார் என்றும், விக்ரமசிங்கவின் ஜனாதிபதி காலத்தில் முந்தைய விசாரணை மற்றும் அறிக்கை “அது எழுதப்பட்ட காகிதத்திற்கு மதிப்புக்குரியது அல்ல” என்றும் மெல்கம் ரஞ்சித் கூறியிருந்தார்.

இலங்கையின் உள்நாட்டுப் போருக்கு உண்மை மற்றும் சமரசம் குறித்து ஹசன், விடுதலைப் புலிகள் (LTTE) பக்கம் திரும்பியபோது, 2009 இல் முடிவடைந்த மோதலில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு நீதி வழங்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, இல்லை. எந்த சமூகத்திற்கும் நீதி இதுவரை வழங்கப்படவில்லை – என்றார்.

அத்துடன், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் தடுக்கப்பட்டதையும், சில மருத்துவமனைகள் குண்டுத் தாக்குதல்களில் தாக்கப்பட்டத்தையும் அவர் ஒப்புக் கொண்டார், ஆனால் அத்தகைய குண்டுவெடிப்புகள் முறையாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டவை என்பதை மறுத்தார்.

ஐ.நா. குழுவின் கூற்றுப்படி, இலங்கை அரசாங்கப் படைகள் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதைத் தடுத்தன என்று ஹசன் கூறினார்.

அது தொடர்பில் பதிலளித்த போரின் இறுதிக் கட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்ரமசிங்கே, அது நடந்தது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் – என்றார்.

அமெரிக்க வெளிவிகாரத் துறை போர்க்குற்றங்கள் செய்ததாக குற்றம் சாட்டும் ஜெனரல் சவேந்திர சில்வாவை, ஜனாதிபதியாக மீண்டும் இலங்கையின் ஆயுதப் படைகளுக்குத் தலைவராக நியமித்ததற்கான காரணம் குறித்தும் ரணில் விக்ரமசிங்க இதன்போது தெளிவுபடுத்தினார்.

ஒரு தேர்தலின் போது இராணுவத் தளபதிகளை மாற்றக்கூடாது என்பது ஒரு நடைமுறை, நான் பொறுப்பேற்றபோது, அதைச் சரிபார்த்தேன், ஜெனரல் சில்வா அதில் (போர்க் குற்றங்களில்) ஈடுபடவில்லை என்பதில் நான் திருப்தி அடைந்தேன் என்று அவர் மேலும் கூறினார்.

1980களின் பிற்பகுதியில் ஒரு அமைச்சராக தாம் வசித்து வந்த படலந்த என்ற வீட்டுத் தொகுதியில் சட்டவிரோத தடுப்புக்காவல், சித்திரவதை மற்றும் கொலைகள் நடந்ததாக ரணில் விக்ரமசிங்க அறிந்திருந்ததாக அரசாங்க விசாரணை ஆணையகம் கூறிய குற்றச்சாட்டுகளையும் முன்னாள் ஜனாதிபதி இதன்போது மறுத்தார்.

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், காலி முகத்திடலில் போராட்டக்காரர்களை கையாண்ட விதம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து வந்த விமர்சனங்கள் குறித்து ரணில் விக்கிரமசிங்கேவிடம் இங்கு கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ஐரோப்பிய ஒன்றியம் சில நிறுவனங்களுக்கு நிதியளித்து, எனது இராஜினாமாவைக் கோரியது, அதன் பின்னரே அதே ஒன்றியம் இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்த மனிதராக என்னைப் பாராட்டியது” என்று கூறினார்.

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் மற்றும் நிதி நெருக்கடிகளில் ஒன்றின் மத்தியில் 2022 இல் நாடாளுமன்றத்தால் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, 2024 தேர்தல் தோல்வியை சந்தித்தார்.

இருந்தாலும் தனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் மேற்கொண்ட செயல்கள் தொடர்பில் அவர் இந்த நேர்காணலில் பெருமிதம் கொண்டார்.

இரண்டு ஆண்டுகளில், நான் பொருளாதாரத்தை மீண்டும் பாதையில் கொண்டு வந்தேன். அதாவது பணவீக்கக் குறைப்பு, சுருக்கம். இது மிக மிக கடினம்.

“நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை செய்தேன்,” என்று கூறினார்.

‍மேலும், ஜனாதிபதியாக அவர் மத்தியஸ்தம் செய்த ஒரு முக்கிய சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒப்பந்தத்தை மேற்கொள்ளிட்டு “தான் ஜனாதிபதி பதவியை ஏற்கவில்லை என்றால், நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கும்” – என்று சுட்டிக்காட்டினார்.https://athavannews.com/2025/1424349

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திர தாரியை அறிவிக்கப்போவதாக ஞானசார தேரர் அறிவித்துள்ளார். குற்றவாளி யார் எனத்தெரிந்தும் அதை வெளியிடாமல் மௌனம் காத்த இவரும் குற்றவாளியே. குற்றவாளிகளை காட்டிக்கொடுக்கும் யாவரும் கொலை செய்யப்படுவார்கள்.  தப்பினால் சிறை செல்லக்கூடும். எத்தனைபேரை கொன்றாலும் உண்மையை கொலைசெய்ய முடியாது, தண்டனை அதிகரிக்கும். இவர்களது ஆதங்கம் அவர்களது கொலை கொள்ளைகளில் அவர்களுக்கு ஆதரவாக நின்று உதவியவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்படும்போதோ, சிறைச்சாலையில் இருக்கும்போதோ அவர்களை பயன்படுத்தியவர்கள் அவர்களை கைகழுவி அநாதையாக விட்ட கோபமே அவர்களை காட்டிக்கொடுக்க விழைகிறார்கள். அதை வெளிப்படையாக அறிவிப்பதால் கொலைசெய்யப்படுகிறார்கள். இதில், பல போலீசார் இராணுவத்தினரும் அடங்கும். தேசபந்து தென்னக்கோனுக்கு பாதுகாப்பு வழங்குபவர்களே அவரை கொலை செய்துவிட்டு அரசுமீது பழி போடலாம். தாம் தப்புவதற்காக எதையும் செய்வார்கள்.

ரணில், ஊடக சந்திப்பில் தான் அளித்த முக்கியமான, சிறப்பான பதில்களை அவர்கள் வெளியிடவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார். சுமந்திரனின் நண்பர்தானே ரணில், வேறு எதை சொல்வார். வளமாக மாட்டிக்கொண்டுள்ளார். நாமல் பிச்சு உதறப்போறார் ரணிலை. அந்தக்கலந்துரையாடலில் அம்பிகா சற்குணநாதன் கலந்து கொள்வாரென அறிவிக்கப்பட்டதாம், அதனால் தான் அதிக மகிழ்ச்சி கொண்டிருந்ததாகவும் ஆனால் அவருக்கு பதிலாக வேறு இருவரை நியமித்திருந்தார்கள் என்றும் அவர்கள் புலிகள் சார்பானவர்கள் என்றும் தெரிவித்திருக்கிறார். தானே அங்கு நடந்த கொடுமைகளை ஏற்றுக்கொண்டுள்ளார், ஆனால் உண்மையை ஆதாரங்களுடன் நிரூபித்து கேள்வி கேட்டவர்கள் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்கிறார். இப்படித்தான் இவ்வளவு காலமும் தங்களையும் மக்களையும் ஏமாற்றுகிறார்கள் என்பதை அறியவில்லை. இனியென்ன ஒன்றொன்றாக உண்மை வெளியில் வரும் காலம் அண்மையிலுள்ளது.

"மூடர் தம் வாயாலேயே கெடுவர்."   

  • கருத்துக்கள உறவுகள்

அல்ஜசீரா நேர்காணல் குறித்து ரணில் அதிருப்தி

editorenglishMarch 7, 2025

Ranil-Wickremasinghe.png

அல்ஜசீராவில் மேற்கொள்ளப்பட்ட  நேர்காணல் குறித்து ரணில்  விக்ரமசிங்க,அதிருப்தி  தொிவித்துள்ளாா். நேர்காணல் ஒளிபரப்பான சிறிது நேரத்திலேயே  இது தொடா்பில் அவா்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளாா்.

அல்ஜசீரா தொகுப்பாளர் மெஹ்தி ஹசனுடன் இணைந்த மூன்று குழு உறுப்பினர்களில் இருவர் விடுதலைப் புலிகள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என அவா் தொிவித்துள்ளாா்.

“மனித உரிமைகள் வழக்கறிஞரும் இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் ஆணையருமான அம்பிகா சத்குணநாதன் இந்த விவாதத்தில் பங்கேற்பார் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. எங்கள் சித்தாந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும், நான் அவரை அறிந்திருப்பதால், அதில் நான் மகிழ்ச்சியடைந்தேன். இருப்பினும், பின்னர் அவருக்குப் பதிலாக விடுதலைப் புலிகள் ஆதரவு குழுக்களுடன் தொடர்பு கொண்ட இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதை அறிந்தேன்,” என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

நேர்காணலின் வடிவத்தையும்   விமர்சித்த அவர் தனது  பதில்களின் முக்கிய பகுதிகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும்  குற்றம் சுமத்தியுள்ளாா்.

“நான் உள்ளூர் ஊடகங்களுடன் பேசும்போது, அது நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது, எனவே நல்லது கெட்டது இரண்டும் வெளிவரும். இருப்பினும், அல் ஜசீரா இரண்டு மணி நேரம் என்னை நேர்காணல் செய்தது, ஆனால் ஒரு மணி நேர பகுதியை மட்டுமே வெளியிட்டது, அதில் பெரும்பகுதியைத் திருத்தியது” என்று அவர்  தொிவித்துள்ளாா்.

https://globaltamilnews.net/2025/212831/

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள சிங்கங்கள் வெகுண்டு எழும்புவார்கள். ஒருத்தரின் கருத்தையும் காணவில்லை. கசான் புலி என்று கூறுவார்கள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

“நான் உள்ளூர் ஊடகங்களுடன் பேசும்போது, அது நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது, எனவே நல்லது கெட்டது இரண்டும் வெளிவரும். இருப்பினும், அல் ஜசீரா இரண்டு மணி நேரம் என்னை நேர்காணல் செய்தது, ஆனால் ஒரு மணி நேர பகுதியை மட்டுமே வெளியிட்டது,

இவர் என்ன சொல்ல வருகிறார்? நாள்முழுவதும் தனது நேர்காணலை ஒளி பரப்பி தன்னை பாராட்ட வேண்டுமென்கிறாரா? நாட்டிலே அதுதான் நடக்கிறது.

2 hours ago, தமிழ் சிறி said:

இரண்டு ஆண்டுகளில், நான் பொருளாதாரத்தை மீண்டும் பாதையில் கொண்டு வந்தேன்.

ம், எழுபத்தாறு ஆண்டுகாலம் புரையோடிப்போன, எல்லா வீழ்ச்சிக்கும் காரணமான இனப்பிரச்சினையை யாராலும் தீர்க்க முடியவில்லையே, அது ஏன்? ஒருவர் பயங்கரவாதத்தை முறியடித்தேன் என பெருமை பேசுகிறார், சொந்த குடிமக்களை அழித்து விட்டு. இவர் வீழ்ந்துபோன  பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தினேன் என்கிறார். ஆனால் எல்லாவற்றிற்கும் ஆணிவேரான உண்மையான பிரச்சனையை இனங்காணவோ தீர்க்கவோ முடியவில்லை, விரும்பவில்லை. அதுவரை உங்கள் பெருமைகள் எல்லாம் தாற்காலிகமானவையே, நாட்டை கட்டியெழுப்புவதில் தோற்றுபோனவர்களே. 

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலை வைத்து, மெஹ்தி ஹஸன் செய்துவிட்டாரா...?

Mynthan Shiva -


சுதந்திரத்திற்குப் பின்னரான, மிகவும் ஆளுமையுள்ள சிங்களத் தலைவர் ரணில்!


சந்தேகமா? ரணிலின் இந்த இடத்தில் மகிந்தவையோ இன்னொரு தலைவரையோ உட்கார வைத்திருந்தால் என்னவாகியிருக்கும் என நினைக்கிறீர்கள்?


Mehdi Hasan உடனான அல்ஜெஸீரா நேர்காணல் கிட்டத்தட்ட ஐம்பது நிமிடங்கள் நீடித்த - மிகவும் intense ஆன, நேரமெடுத்து யோசித்து பதில் சொல்ல முடியாத வகையிலான, உடனடி நேரடிப் பதில்களை கேட்டு நின்ற நேர்காணல். 


அதுமட்டுமல்லாது, ரணிலின் ஐம்பத்தி ஐந்து வருடகால அரசியல் வாழ்க்கையில் சந்தித்த மிக நெருக்கடியான நேர்காணலும் இதுவாகத்தான் இருக்கமுடியும். 


அல்ஜெஸீரா என்கிற சர்வதேச புகழ்வாய்ந்த ஊடகத்தின் முன் நின்று- மெஹ்தி ஹஸன் என்கின்ற புகழ்பெற்ற ஊடகவியலாளரினை முகம்கொடுத்து,


கொடுக்கப்படும் ஒவ்வொரு பதில்களும் இலங்கையையும்- இலங்கை சிங்கள பவுத்த அரசுகளையும், கடந்தகால- இக்கால அரசுகளை சங்கடத்துக்குள் - பிரச்சனைக்குள் தள்ளக்கூடும் என்று தெரிந்துகொண்டு, 


தொடுக்கப்பட்ட ஒவ்வொரு உக்கிரமான கேள்விகளுக்கும் நேரடிப் பதில்களைக் கொடுக்காமல்,  எதனையும் ஒப்புக்கொள்ளாமல்,எந்தப் பொறியிலும் தானும் தன் அரசும் தன் நாடும் விழுந்துவிழாமல்,  மிகக் கச்சிதமாக தன்னை ஒரு பொய்யராக - நேர்மையற்றவனாக - மக்கள் விரோதியாக காட்டி, மொத்தப் பழியையும் தன் மேல் போட்டுவிட்டு,  பேரினவாத கடந்த - நிகழ்கால அரசுகளையும், தன் அரசியல் தோழர்களையும், நாட்டையும் திறமையாக காப்பாற்றியிருக்கிறார் பிறவி அரசியல் ராஜதந்திரி ரணில் விக்கிரமசிங்க! 


கவனமாகப் பாருங்கள்- இதுவரை அரசியல் வெளியில் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மைகளை மட்டுமே இந்த நேர்காணலில் ரணில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.


ஏனைய அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொள்ளவே இல்லை! அதற்கான accountability யை தொடக்கூட இல்லை. I am clean என்பதை தொடர்ந்தும் மெய்ண்டெய்ன் செய்துகொண்டேயிருந்தார்!


அதுமட்டுமல்லாது இலங்கை அரசின் அத்தனை குற்றங்களையும் முடிந்தளவு சாக்குப்போக்குச் சொல்லி மடைமாற்றியவண்ணமிருந்தார்.


மெஹ்தி ஹஸன் அழைத்து வந்திருந்த அவர் சார்பு பார்வையாளர்களின் இகழ்ச்சிச் சிரிப்புகளையும் தலைக்குள் ஏற்றாமல், நிலை தவறாது ஐம்பது நிமிடங்களை நெருப்பாற்றில் கடந்து முடித்திருப்பது, சிங்களவர்களுக்கு இதுவரைகாலும் கிடைத்த ஒப்பற்ற அரசியல் ராஜதந்திரி ரணில் என்கின்ற ஆளுமையின் திறமையே! 


சர்வதேச மட்டத்தில் பதில் சொல்ல முடியாவிட்டாலும் கூட, தன்னை அடைமானம் வைத்து நாட்டை காப்பாற்றியிருக்கிறார் - இது பெரும்பான்மைக்கு கிடைத்த ஒப்பற்ற வரமில்லையா? 


ஹஸன் அழைத்துவந்த மூன்று பேச்சாளர்களில் ப்ரான்ஸிஸ் ஹரிஸன் மட்டும் காத்திரமாக பேசியிருந்தார். மதுராவும் டேவிட்டும் நேர்காணலின் கனத்தை உணர முடியாமல் பேசினார்கள். 


ரணிலை வைத்து செய்துவிட்டார் ஹஸன் என்று பலரும் ரணிலின் மேலான கோபத்தை / கடுப்பை கொண்டாடுகிறார்கள் - அது சிற்றின்பமே! 


ரணில் மீண்டுமொருமுறை நம் அனைவரையும் தன் ராஜதந்திரத்தால் (வெல்லமுடியாமல் நீங்கள் சொல்லும் நரித்தனத்தால்) தோற்கடித்திருக்கிறார் என்பதுதான் கசப்பான உண்மை!

https://www.jaffnamuslim.com/2025/03/blog-post_14.html

  • கருத்துக்கள உறவுகள்

482005390_666132222477583_46241665544390

நரி வேட்டையாடப்பட்டது என்பதே நிதர்சனம்.

அதனை ஏற்றுக் கொள்ள சில நரிக் கூடாரத்தின் விசுவாசிகளால் முடியவில்லை.

நரியே தனது மூக்குடைஞ்ச வேதனையில, ஊடகவியலாளர கூட்டி

வெட்டிட்டாங்க கோர்த்துட்டாங்கனு அழுகுறார்.

பற்றாக்குறைக்கு சங்கங்களின் காலையே நக்கிட்டார்.

இங்க சிலர் இன்னும் நரியின்ர உடைக்கப்பட்ட மூக்குக்கு

பேஸ்ற் பூசிட்டு வாரது தான் சகிக்க முடியல.

ஈழத்தமிழர்களுக்கு சர்வதேசத்தில ஒரு களம் திறக்கையில

உங்களுக்கு லைற்றா எரிய தான் செய்யும். Rest in Peace ப்ரண்ட்ஸ்.

Monisha Kokul

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியல் என்ற போர்வையில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல் - ரணிலுக்கு சார்பாக அலிசப்ரி கருத்து

07 Mar, 2025 | 02:39 PM

image

அல்ஜசீராவின் மெஹ்தி ஹசனுடனான முன்னாள் ஜனாதிபதிரணில்விக்கிரமசிங்கவின் சர்ச்சைக்குரிய நேர்காணலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவை நியாயப்படுத்தியுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அந்த பேட்டியை ஊடகவேடமிட்டு நடத்தப்பட்டதாக்குதல் என குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக பதிவில் அலிசப்ரி மேலும் தெரிவித்துள்ளதாவது

நான் மெஹ்தி ஹசனை முன்னரும் பார்த்திருக்கின்றேன்,அவர் எப்போதும் மோதல்போக்கை கொண்ட ஆக்ரோஷமானவராக காணப்படுவார்.

ரணில்விக்கிரமசிங்க உடனான அவரது நேர்காணால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது.

இது பதில்களைபெறுவது பற்றியது அல்ல.இது ஊடகத்துறை தொடர்பானது இல்லை.

இது நிகழ்ச்சிநிரல் ஒன்றை முன்னெடுப்பது தொடர்பானது இது தாக்குவதை நோக்கமாக கொண்ட ஒரு நேரடி விசாரணை.

பேட்டி வழங்குபவருக்கு எதிரியின் பகுதிக்குள் செல்வது போன்ற  உணர்வை ஏற்படுத்துவதற்காகஇலங்கை எதிர்ப்பு உணர்வு கொண்ட பார்வையாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

நியாயமான விதத்தில் கடுமையான கேள்விகளை கேட்பதற்கான வழிமுறைகள் உள்ளன.

அதற்கு பதில் மெஹ்தி பதில்கள் குறித்து கூச்சலிட்டார்,விளக்கங்களை துண்டித்தார்,மேலும் தனது சொந்த சொல்லாடலிற்கு ஏற்றவாறு வார்த்தைகளை திரித்தார். பதில்கள் தனது விருப்பத்திற்கு ஏற்ப இல்லாவிட்டால் அவர் செவிமடுக்க மறுத்தார்.

அவர் எப்படி செயற்படுவார் என நான் பார்த்திருக்கின்றேன் ஆனால் உலகின் பலம்வாய்;ந்த நாடுகளின் தலைவர்களை அவர் இவ்வாறு கையாள்வாரா என்ற கேள்வி எழுகின்றது.அவர்களின் யுத்த குற்றங்கள்,அவர்களின் மனித உரிமை மீறல்கள் குறித்து இதேயளவு ஆக்ரோசத்துடன் விமர்சிப்பாரா?

அல்லது நம்மை போன்ற சிறிய நாடுகளின் தலைவர்களிற்காக இது ஒதுக்கப்பட்டுள்ளதா?

எவரும் இலங்கை தவறுகள் அற்றது என தெரிவிக்கவில்லை,நாங்கள் பூர்த்தி செய்யவேண்டிய வேலை உள்ளது நாங்கள் சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும், பொறுப்புக்கூறலை முன்னெடுக்கவேண்டும்,ஆனால் இது எங்களின் போராட்டம்.

இலங்கை மக்கள் தங்கள் எதிர்காலங்களை தாங்களே தீர்மானிப்பார்கள்  நிகழ்ச்சி நிரலுடன் செயற்படும் ஊடகவியலாளர்களோ தெரிவு செய்யப்பட்ட ஆய்வுடன் கூடிய சர்வதேச ஊடகமோ இல்லை.

ஊடகவியல் என்ற போர்வையில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல் - ரணிலுக்கு சார்பாக அலிசப்ரி கருத்து | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

ஊடகவியல் என்ற போர்வையில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல் - ரணிலுக்கு சார்பாக அலிசப்ரி கருத்து

07 Mar, 2025 | 02:39 PM

அல்ஜசீராவின் மெஹ்தி ஹசனுடனான முன்னாள் ஜனாதிபதிரணில்விக்கிரமசிங்கவின் சர்ச்சைக்குரிய நேர்காணலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவை நியாயப்படுத்தியுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அந்த பேட்டியை ஊடகவேடமிட்டு நடத்தப்பட்டதாக்குதல் என குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக பதிவில் அலிசப்ரி மேலும் தெரிவித்துள்ளதாவது

நான் மெஹ்தி ஹசனை முன்னரும் பார்த்திருக்கின்றேன்,அவர் எப்போதும் மோதல்போக்கை கொண்ட ஆக்ரோஷமானவராக காணப்படுவார்.

ரணில்விக்கிரமசிங்க உடனான அவரது நேர்காணால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது.

இது பதில்களைபெறுவது பற்றியது அல்ல.இது ஊடகத்துறை தொடர்பானது இல்லை.

இது நிகழ்ச்சிநிரல் ஒன்றை முன்னெடுப்பது தொடர்பானது இது தாக்குவதை நோக்கமாக கொண்ட ஒரு நேரடி விசாரணை.

பேட்டி வழங்குபவருக்கு எதிரியின் பகுதிக்குள் செல்வது போன்ற  உணர்வை ஏற்படுத்துவதற்காகஇலங்கை எதிர்ப்பு உணர்வு கொண்ட பார்வையாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

நியாயமான விதத்தில் கடுமையான கேள்விகளை கேட்பதற்கான வழிமுறைகள் உள்ளன.

அதற்கு பதில் மெஹ்தி பதில்கள் குறித்து கூச்சலிட்டார்,விளக்கங்களை துண்டித்தார்,மேலும் தனது சொந்த சொல்லாடலிற்கு ஏற்றவாறு வார்த்தைகளை திரித்தார். பதில்கள் தனது விருப்பத்திற்கு ஏற்ப இல்லாவிட்டால் அவர் செவிமடுக்க மறுத்தார்.

அவர் எப்படி செயற்படுவார் என நான் பார்த்திருக்கின்றேன் ஆனால் உலகின் பலம்வாய்;ந்த நாடுகளின் தலைவர்களை அவர் இவ்வாறு கையாள்வாரா என்ற கேள்வி எழுகின்றது.அவர்களின் யுத்த குற்றங்கள்,அவர்களின் மனித உரிமை மீறல்கள் குறித்து இதேயளவு ஆக்ரோசத்துடன் விமர்சிப்பாரா?

அல்லது நம்மை போன்ற சிறிய நாடுகளின் தலைவர்களிற்காக இது ஒதுக்கப்பட்டுள்ளதா?

எவரும் இலங்கை தவறுகள் அற்றது என தெரிவிக்கவில்லை,நாங்கள் பூர்த்தி செய்யவேண்டிய வேலை உள்ளது நாங்கள் சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும், பொறுப்புக்கூறலை முன்னெடுக்கவேண்டும்,ஆனால் இது எங்களின் போராட்டம்.

இலங்கை மக்கள் தங்கள் எதிர்காலங்களை தாங்களே தீர்மானிப்பார்கள்  நிகழ்ச்சி நிரலுடன் செயற்படும் ஊடகவியலாளர்களோ தெரிவு செய்யப்பட்ட ஆய்வுடன் கூடிய சர்வதேச ஊடகமோ இல்லை.

ஊடகவியல் என்ற போர்வையில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல் - ரணிலுக்கு சார்பாக அலிசப்ரி கருத்து | Virakesari.lk

போட்ட எலும்புத்துண்டு இன்னமும் மிச்சமிருக்கு...இதுவும்..இந்த இனமும் நம்மை அழிக்க ஒத்துழைதமைக்காக...வாலாட்டிக்கொண்டு திரியினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெராரி காரை செலுத்துவதற்கான வாகன அனுமதிப்பத்திரங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்தவரை அல்ஜசீரா இடித்து விழுத்தியுள்ளது - பிமல் ரத்நாயக்க

07 Mar, 2025 | 12:02 PM

image

பெராரி காரை செலுத்துவதற்கான வாகன அனுமதிப்பத்திரங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்த  முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க வீதிவிபத்தில் சிக்குண்டுள்ளார் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல்ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அல்ஜசீராவிற்கு ரணில்விக்கிரமசிங்க வழங்கிய பேட்டி குறித்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பெராரி வாகனங்களை செலுத்துவதற்கான வாகன அனுமதிப்பத்திரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தவரை அல்ஜசீரா இடித்து விழுத்தியுள்ளது அவர் தனது புத்தியை இழந்து ஏதேதோ பேசிக்கொண்டிருக்கின்றார் என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/208520

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.