Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு , பல்வேறு தரப்பினருடனும் முரண்பாட்டில்  ஈடுபட்ட  சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு  நீதிமன்ற உத்தரவில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

புலம்பெயர் நாடொன்றிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சந்தேக நபர் ஒருவர் ரிக் ரொக் தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு பல்வேறு தரப்பினருடனும் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

சந்தேக நபர் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் , வரணி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு சென்று , வெளிநாட்டு பணத்தினை உள்ளூர் பெறுமதிக்கு மாற்ற வங்கியில் கால தாமதம் ஏற்பட்டதாக நேரலையில் காணொளி பதிவிட்டு,  வங்கியின் முகாமையாளர் , உத்தியோகஸ்தர்கள் , பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

அதேபோன்று சந்தேக நபர் சில வாரங்களுக்கு முன்னர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தினுள் சென்று , பொலிஸார் முறைப்பாடுகளை பதிய கால தாமதம் செய்வதாக நேரலை காணொளிகளைப் பதிவிட்டு பொலிஸாருடனும் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் வரணி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் இல்ல மெய்வல்லுனர் போட்டி ஒன்றுக்குச் சென்று , மாணவிகளின் அனுமதியின்றி , ரிக் ரொக் தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்ட போது , பாடசாலையில் கடமையில் நின்ற பொலிஸார், அதிபரின் அனுமதியின்றி மாணவிகளைக் காணொளி எடுக்க முடியாது என அறிவுறுத்திய போது , பொலிஸ் உத்தியோகத்தர்களுடனும் முரண்பாட்டில் ஈடுபட்டு , அவற்றினையும் காணொளிகளாக பதிவிட்டுள்ளார். 

குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து , பொலிஸ் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் சந்தேக நபர் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு  சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. 

யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல் | Virakesari.lk

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பிழம்பு said:

அண்ணா அது லண்டன் காரனாமே....கனடாக் காரன் என்றால்...அது எல்லாம் நேரடி நடவடிக்கைதான்...சுளுத்தான் ..இல்லையென்றால் பக்கிரி..

  • கருத்துக்கள உறவுகள்

481503606_1049060747257299_3908412249201

481082106_1049060240590683_3383827362952

ஆள்... இவர் தான். நல்ல அடி கொடுத்து, பிற கைதிகளுடன் சேர்த்து விலங்கும் மாட்டி, சட்டையையும் கிழித்து அனுப்பி இருக்கின்றார்கள். 😅

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

481503606_1049060747257299_3908412249201

481082106_1049060240590683_3383827362952

ஆள்... இவர் தான். நல்ல அடி கொடுத்து, பிற கைதிகளுடன் சேர்த்து விலங்கும் மாட்டி, சட்டையையும் கிழித்து அனுப்பி இருக்கின்றார்கள். 😅

சிறியர்..இது என்னமாதிரிக் கொலஸ்ரோல்.....

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, alvayan said:

சிறியர்..இது என்னமாதிரிக் கொலஸ்ரோல்.....

சிலருக்கு…. வெளி நாட்டு பாஸ்போட்டுடன்,

ஊருக்குப் போனவுடன்.. ஏதோ வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்த மாதிரி ஒரு நினைப்பு.

இப்ப… இவர் வழக்கு முடியும் மட்டும், நாட்டை விட்டு போக இயலாது என நினைக்கின்றேன். கிடைத்த விடுமுறையில்… இரண்டு கிழமையை இலங்கை விளக்கமறியலில் கழிக்க வேண்டி வந்திட்டுது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

2 கிழமை வித்தியாசமான...சாப்பாடுதானே சாப்பிட்டுப் பார்க்கட்டும்

2 hours ago, தமிழ் சிறி said:

… இரண்டு கிழமையை இலங்கை விளக்கமறியலில் கழிக்க வேண்டி வந்திட்டுது. 😂

செய்தியின் சாராம்சம் படி, இவர் புலம்பெயர் நாட்டில் இருந்து அங்கு போய் வசிக்கின்றவ ஒருவர் போன்று தெரிகின்றது.

இப்படி பெண் பிள்ளைகளை /மாணவிகளை அவர்களின் அனுமதியின்றி இங்கு கனடா போன்ற நாட்டில் படம் எடுத்திருந்தா, கடுமையான பிரிவுகளில் நடவடிக்கை எடுத்து, எல்லா ஊடகங்களிலும் படத்தை போட்டு, இவர் இதைப் போன்று முன்னர் நடந்து கொண்டு, அதனால் எவராவது பாதிப்படைந்தனரா என்று எல்லாம் தகவல் கேட்டு இருப்பார்கள்.

இவரது கைத் தொலைபேசி, கணணி, தகவல் சேமிப்பு கருவிகள் எல்லாவற்றையும் பொலிசார் பரிசோதிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

இது சரியான தகவல்தானா?

இங்கு அமெரிக்காவை பொறுத்தவரை பப்ளிக் ஏரியாவில் நீங்கள் வீடியோ/ படங்கள் எடுக்கலாம்.... அது எத்தனையோ பேர்களின் தனி வாழ்வை கெடுகிறது. பெரும் பணக்காரர்கள் சினிமா அரசியல் பிரமுகர்கள் கூட (குறிப்பாக பெண்கள்) இதனால் பெரிதும் பாதிக்க படுகிறார்கள். இருந்தாலும் பப்ளிக் ஏரியா என்பதால் அப்படி படம் எடுப்பவர்களை சட்ட ரீதியாக ஒன்றும் செய்ய முடியாது இருக்கிறது. ( டயானா இறந்த போதுஅந்த மரணத்தை வைத்து சில கட்டுப்பாடுகளை கொண்டுவர முயற்சி செய்தும் பெரிதாக எந்த பயனும் கிடைக்கவில்லை)

நிறைய உயர்நிலை பெண்பிள்ளைகளின் விளையாட்டு போட்டிகள் தவறான முறையில் வீடியோ/ படங்கள் எடுத்து பகிர படுகிறது அவர்கள் வயது 16-18 க்குள்தான் இருக்கிறது இருப்பினும் பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்க படுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

இவர் புலம்பெயர் தேசத்தில் வசித்து இருந்தும், பாடசாலைக்குள் சிறுவர், சிறுமியரை படம் எடுக்கக் கூடாது என்ற அடிப்படை சட்டம் கூட தெரியாதவர் போலுள்ளது.

பொலிஸ் ஸ்ரேசனிலும் போய் அடாவடி செய்த படியால்… நட்டு, கிட்டு கழண்ட ஆளோ தெரியவில்லை. 😂

47 minutes ago, Maruthankerny said:

இது சரியான தகவல்தானா?

இங்கு அமெரிக்காவை பொறுத்தவரை பப்ளிக் ஏரியாவில் நீங்கள் வீடியோ/ படங்கள் எடுக்கலாம்.... அது எத்தனையோ பேர்களின் தனி வாழ்வை கெடுகிறது. பெரும் பணக்காரர்கள் சினிமா அரசியல் பிரமுகர்கள் கூட (குறிப்பாக பெண்கள்) இதனால் பெரிதும் பாதிக்க படுகிறார்கள். இருந்தாலும் பப்ளிக் ஏரியா என்பதால் அப்படி படம் எடுப்பவர்களை சட்ட ரீதியாக ஒன்றும் செய்ய முடியாது இருக்கிறது. ( டயானா இறந்த போதுஅந்த மரணத்தை வைத்து சில கட்டுப்பாடுகளை கொண்டுவர முயற்சி செய்தும் பெரிதாக எந்த பயனும் கிடைக்கவில்லை)

நிறைய உயர்நிலை பெண்பிள்ளைகளின் விளையாட்டு போட்டிகள் தவறான முறையில் வீடியோ/ படங்கள் எடுத்து பகிர படுகிறது அவர்கள் வயது 16-18 க்குள்தான் இருக்கிறது இருப்பினும் பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்க படுவதில்லை.

இங்கு அனுமதி இல்லாமல், 18 வயதுக்குட்பட்ட பெண்ணின் படத்தை எடுத்து, அதற்கெதிராக பொலிசாருக்கு முறைப்பாடு செய்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள்.

பாடசாலைக்கருகில் ஒருவர் காரிற்குள் இருந்து சுய இன்பம் அனுபவித்ததுக்கே கைது செய்யப்பட்டார்.

அவ்வளவு ஏன், பாடசாலை முடிந்து வீதியில் வந்து கொண்டிருந்த ஒரு மாணவிக்கு லிப்ட் தர முயன்றதுக்கே ஒருவரை கடுமையாக விசாரித்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/3/2025 at 01:11, பிழம்பு said:

சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது

என்னப்பா இதுவும் சாவகச்சேரியில் நடந்ததா?யூ டியுப் ஊடாக எம்.பி பிரபலமான மாதிரி தானும் பிரபலமாகலாம் என நினைக்கின்றார் போல...

பொலிசாரின் அடாவாடித்தனம்..நீதிமன்றம் பக்கசார்பாக செயல் படுகிறது என அறிக்கைவிடுவார் ,....எம்.பி யை போல‌

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நிழலி said:

இங்கு அனுமதி இல்லாமல், 18 வயதுக்குட்பட்ட பெண்ணின் படத்தை எடுத்து, அதற்கெதிராக பொலிசாருக்கு முறைப்பாடு செய்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள்.

பாடசாலைக்கருகில் ஒருவர் காரிற்குள் இருந்து சுய இன்பம் அனுபவித்ததுக்கே கைது செய்யப்பட்டார்.

அவ்வளவு ஏன், பாடசாலை முடிந்து வீதியில் வந்து கொண்டிருந்த ஒரு மாணவிக்கு லிப்ட் தர முயன்றதுக்கே ஒருவரை கடுமையாக விசாரித்தார்கள்.

யூரோப்பில் அப்படி ஒன்றும் இல்லை.. பப்ளிக் இடத்தில் படம் பிடிப்பதை யாரும் தடை செய்ய முடியாது.. அண்மையில் கூட தீவிர வலது சாரி ஒருவர் அகதிகள் தங்கி இருந்த ஹோட்டலை பிரதான வீதியில் நின்று படம்பிடித்தவாறு போவோர் வருவோரிடம் இந்த அகதிகள் இங்கு தங்கி இருப்பதால் உள்ளூர் மக்கள் உங்களுக்கு எவ்வளவு இடையூறு என்று வெறுப்பு கருத்துக்களை பதிவிட அகதிகள் அவருடன் முரண்பட அத்துடன் அந்த அகதிகளை மெயிண்டெயின் பண்ணும் தொண்டு நிறுவன் வெள்ளை என நினைக்கிறேன் அந்த பெண்ணும் படம்பிடிக்க முடியாதென அந்த ஹொட்டலின் வாசலில் படப்பிடிப்பு தடை என்ற ஒட்டி இருந்த நோட்டிஸ் இனை காட்டி வாக்குவாதப்பட அந்த யூரியுப் ஊடகவியளாலர் சொல்கிறார் இது பப்ளிக் பிளேஸ் இங்கு நான் படம்பிடிப்பதை யாரும் தடை செய்யமுடியாது இது சட்டம் என்று வாதிட இறுதியில் பொலிஸ் அழைக்கப்பட்டு அந்த யூடியூப்பருகு சாதகமாகவே பொலிஸ் சொல்லிவிட்டு சென்றனர்..

இவை Public Offence இதற்கு இங்கும் தண்டனை உண்டு

நான் கூறுவது படம் வீடியோ எடுப்பது பற்றியது

நான் சில வீடியோ பார்த்து இருக்கிறேன் போலீஸ் FBI ஏஜெண்ட்ஸ் உடன் கூட சண்டைக்கு போவார்கள். அவர்கள் நிஜாயம் நான் பப்ளிக் ஏரியாவில் நிற்கிறேன் என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று வாதம் செய்வார்கள். போலீஸ் கூட ஒன்றும் செய்ய முடியாது பார்த்துக்கொண்டு நிற்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

in the UK, you generally have the right to take photographs and record videos in public places. There are no laws preventing photography or filming in public spaces where you have a right to be. However, there are some key points to keep in mind:

When It’s Generally Allowed:

• You can photograph or film in public places (e.g., streets, parks, beaches).

You do not need permission from people appearing in the background.

• Police officers and security guards cannot legally delete your photos or videos.

Restrictions & Considerations:

1. Privacy Laws – While public photography is allowed, if someone is in a situation where they have a “reasonable expectation of privacy” (e.g., inside their home, in a private garden), taking pictures or filming them could violate privacy laws.

2. Harassment & Nuisance – If you repeatedly film or photograph someone in a way that causes them distress, it could be considered harassment under the Protection from Harassment Act 1997.

3. Commercial Use – If you plan to use photos or videos commercially (e.g., advertising), you may need consent from individuals featured prominently.

4. Security & Counter-Terrorism – While it’s legal to film police officers and public buildings, under the Terrorism Act 2000, police can stop and question you if they believe you are filming for illegal purposes.

5. Private Property – Shopping centres, train stations, and some other public-facing areas may have rules restricting photography because they are technically private property.

https://www.met.police.uk/advice/advice-and-information/ph/photography-advice/

Edited by பாலபத்ர ஓணாண்டி

10 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

யூரோப்பில் அப்படி ஒன்றும் இல்லை.. பப்ளிக் இடத்தில் படம் பிடிப்பதை யாரும் தடை செய்ய முடியாது.. அண்மையில் கூட தீவிர வலது சாரி ஒருவர் அகதிகள் தங்கி இருந்த ஹோட்டலை பிரதான வீதியில் நின்று படம்பிடித்தவாறு போவோர் வருவோரிடம் இந்த அகதிகள் இங்கு தங்கி இருப்பதால் உள்ளூர் மக்கள் உங்களுக்கு எவ்வளவு இடையூறு என்று வெறுப்பு கருத்துக்களை பதிவிட அகதிகள் அவருடன் முரண்பட அத்துடன் அந்த அகதிகளை மெயிண்டெயின் பண்ணும் தொண்டு நிறுவன் வெள்ளை என நினைக்கிறேன் அந்த பெண்ணும் படம்பிடிக்க முடியாதென அந்த ஹொட்டலின் வாசலில் படப்பிடிப்பு தடை என்ற ஒட்டி இருந்த நோட்டிஸ் இனை காட்டி வாக்குவாதப்பட அந்த யூரியுப் ஊடகவியளாலர் சொல்கிறார் இது பப்ளிக் பிளேஸ் இங்கு நான் படம்பிடிப்பதை யாரும் தடை செய்யமுடியாது இது சட்டம் என்று வாதிட இறுதியில் பொலிஸ் அழைக்கப்பட்டு அந்த யூடியூப்பருகு சாதகமாகவே பொலிஸ் சொல்லிவிட்டு சென்றனர்..

ஓணாண்டி, Public இடத்தில் படம் எடுப்பது என்பது வேறு, சிறுமிகளை (18 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளை) அவர்களின் / பெற்றோர்களின் அல்லது பாதுகாவலரின் அனுமதி இன்றி படம் / வீடியோ எடுப்பது வேறு. இந்த வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடியவில்லையா?

அப்படி மைனர் பிள்ளைகளை ஒருவர் அன்னியர் படம் எடுத்தால், அவருக்கு எதிராக முறைப்பாடு தெரிவித்தால், அல்லது அப்படி எடுக்கும் போது காவல்துறை கண்டால் நடவடிக்கை எடுப்பர். கண்டிப்பாக ஐரோப்பாவிலும் இது நடைமுறையில் இருக்கும் என நம்புகின்றேன்.

இந்த செய்தியில் குறிப்பிட்ட சம்பவத்தில் மாணவிகளை படம் எடுக்கும் போது, பாடசாலை நிர்வாகம் எடுக்க வேண்டாம் என்று தடுத்து இருக்கின்றது. அதையும் மீறி எடுத்துள்ளார். எனவே இது முறைப்பாடு செய்ய வேண்டிய ஒரு விடயம்.

பாடசாலை நிர்வாகம் தடுத்து இருக்காவிடின், மிகச் சாதாரண நிகழ்வாக அமைந்து இருக்கும். இதுவே பாடசாலை சம்பந்தப்பட்ட ஒருவரோ அல்லது மாணவிகளின் பெற்றோர் / பாதுகாவலர் ஒருவரோ படம் எடுத்து இருந்தால் பிரச்சினை எழுந்து இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒன்றை மட்டும் பார்த்து விட்டு எழுந்தமானமாக எழுதக் கூடாது.இதே ஆள் தான் வீடியோ எடுக்கும் இடங்களில் எல்லாம் ஆதாரம் கேட்டு முரண்பட்டதை வங்கி வீடியோ கிளிப்பில் பார்த்தேன்.ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமான நடைமுறைகள் இருக்கும் அதை நாம் நமக்கு சார்பாக எடுத்துக் கொள்வது அதுவும் பலவந்தமாக எடுத்துக் கொள்வது தவறு.அது மட்டுமல்ல. தன்னை ஒரு போட்டோ கிறாபர் என்று சொல்லி நிகழ்ச்சிகளில் படம் பிடித்திருக்கிறார் என்றும் முகப் புத்தகத்தில் பார்த்தேன்.நல்லவராயின் சட்டைகிளிய வாங்கி கட்ட வேண்டிய அவசியம் என்ன......?

சட்டம் மிக அரிதாகவே black and white ஆக இருக்கும். இதுவும் அப்படி நிறைய grey areas உள்ள விடயம்தான்.

எது public place என்பதில், என்னத்துக்காக எடுக்கப்படுகிறது (intention) என்பதில் நிறைய தங்கி உள்ளது.

அத்தோடு, upskirting போட்டோ எடுப்பது நிச்சயமாக குற்றம்.

இன்னொரு விடயம் வீடியோ எடுப்பதற்கு உள்ள சுதந்திரம் அதை பகிர இல்லை. அங்கே reasonable expectation of privacy யையும் கருத்தில் எடுக்க வேண்டும்.

இங்கேதான் பெண்பிள்ளைகளின் ஸ்போர்ட்ஸ் மீட்டில் போய் படம் எடுத்தது பிரச்சனையாகலாம்.

Intention அதை விட மோசமானது என நிறுவினால் - சிறுவர் பாலியல் வழக்கும் ஆகலாம்.

உதாரணமாக ஒரு வங்கியில் போய் 20x ஆப்டிகள் சூம் லென்சை பாவித்து ஒவ்வொருவருடைய பாங் பலன்சையும் ஸ்கீரீனில் போட்டோ எடுக்க முடியுமா?

ஆகவே இடம் பொருள் ஏவல் முக்கியம்.

இங்கே இவர் செய்வது யூடியூப் லைக்சுக்காக video auditors என்பவர்கள் எடுக்கும் வீடியோக்கள்.

இப்படி போய் வீடியோ எடுத்து, சர்ச்சையாக்கி லைக்ஸ் அள்ளுவது.

யூகேயில் விடுற சேட்டையை ஊரில் விட்டிருக்கிறார்…சேட்டை கிழிச்சு போட்ட்டானுவோ🤣.

பிகு

ஆள் லண்டன் ரிட்டேர்ன்னாம் எண்டதும் எனக்கு திக் என்றாகிவிட்டது.

இப்ப எல்லாம் ஓகே யா🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, யாயினி said:

ஒன்றை மட்டும் பார்த்து விட்டு எழுந்தமானமாக எழுதக் கூடாது.இதே ஆள் தான் வீடியோ எடுக்கும் இடங்களில் எல்லாம் ஆதாரம் கேட்டு முரண்பட்டதை வங்கி வீடியோ கிளிப்பில் பார்த்தேன்.ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமான நடைமுறைகள் இருக்கும் அதை நாம் நமக்கு சார்பாக எடுத்துக் கொள்வது அதுவும் பலவந்தமாக எடுத்துக் கொள்வது தவறு.அது மட்டுமல்ல. தன்னை ஒரு போட்டோ கிறாபர் என்று சொல்லி நிகழ்ச்சிகளில் படம் பிடித்திருக்கிறார் என்றும் முகப் புத்தகத்தில் பார்த்தேன்.நல்லவராயின் சட்டைகிளிய வாங்கி கட்ட வேண்டிய அவசியம் என்ன......?

இவர் புலம் பெயர்ந்தவர் அல்லோ ...தற்பொழுது அங்கு வசிப்பவர் ஆகவே தான் அக்க‌றையாக இருக்கிறோம்😀...பல தாயகத்தில் வாழும் யூ டியுப் காரார் சாப்பாடு சிறுவர்களை படம் பிடித்து போட்டுள்ளனர் ...

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, நிழலி said:

ஓணாண்டி, Public இடத்தில் படம் எடுப்பது என்பது வேறு, சிறுமிகளை (18 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளை) அவர்களின் / பெற்றோர்களின் அல்லது பாதுகாவலரின் அனுமதி இன்றி படம் / வீடியோ எடுப்பது வேறு. இந்த வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடியவில்லையா?

அப்படி மைனர் பிள்ளைகளை ஒருவர் அன்னியர் படம் எடுத்தால், அவருக்கு எதிராக முறைப்பாடு தெரிவித்தால், அல்லது அப்படி எடுக்கும் போது காவல்துறை கண்டால் நடவடிக்கை எடுப்பர். கண்டிப்பாக ஐரோப்பாவிலும் இது நடைமுறையில் இருக்கும் என நம்புகின்றேன்.

இந்த செய்தியில் குறிப்பிட்ட சம்பவத்தில் மாணவிகளை படம் எடுக்கும் போது, பாடசாலை நிர்வாகம் எடுக்க வேண்டாம் என்று தடுத்து இருக்கின்றது. அதையும் மீறி எடுத்துள்ளார். எனவே இது முறைப்பாடு செய்ய வேண்டிய ஒரு விடயம்.

பாடசாலை நிர்வாகம் தடுத்து இருக்காவிடின், மிகச் சாதாரண நிகழ்வாக அமைந்து இருக்கும். இதுவே பாடசாலை சம்பந்தப்பட்ட ஒருவரோ அல்லது மாணவிகளின் பெற்றோர் / பாதுகாவலர் ஒருவரோ படம் எடுத்து இருந்தால் பிரச்சினை எழுந்து இருக்காது.

எதோ ஒரு வில்லங்கமான சட்டம் இருக்கிறது என்றே எனக்கும் நீண்ட நாள் சந்தேகம் இருக்கிறது எனக்கு அந்த சந்தேகம் வர காரணம்

கூகிள் ஸ்ட்ரீட் வியூ ( Google Street View) அவர்கள் பப்ளிக் வீதிகளில் கார்களை ஒட்டித்தான் எடுத்தாலும் ...... அதில் வரும் ஆட்களின் முகங்கள் கார்களின் இலக்க தகுடுக்களை மறைத்தே காண்பிப்பார்கள். ஆகவே கூகிளுக்கு எதோ சிக்கல் இருந்து இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, யாயினி said:

ஒன்றை மட்டும் பார்த்து விட்டு எழுந்தமானமாக எழுதக் கூடாது.இதே ஆள் தான் வீடியோ எடுக்கும் இடங்களில் எல்லாம் ஆதாரம் கேட்டு முரண்பட்டதை வங்கி வீடியோ கிளிப்பில் பார்த்தேன்.ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமான நடைமுறைகள் இருக்கும் அதை நாம் நமக்கு சார்பாக எடுத்துக் கொள்வது அதுவும் பலவந்தமாக எடுத்துக் கொள்வது தவறு.அது மட்டுமல்ல. தன்னை ஒரு போட்டோ கிறாபர் என்று சொல்லி நிகழ்ச்சிகளில் படம் பிடித்திருக்கிறார் என்றும் முகப் புத்தகத்தில் பார்த்தேன்.நல்லவராயின் சட்டைகிளிய வாங்கி கட்ட வேண்டிய அவசியம் என்ன......?

யாயினி இவர்குறித்து எனக்கு தெரியவில்லை இவர் வீடியோவும் பார்க்கவில்லை.. நான் இந்த செய்திகுறித்து கருத்து எழுதவில்லை.. மருதங்கேணியின் சட்டம் குறித்த கேள்விக்கு ஜரோப்பாவில்(இலங்கையில் அல்ல) நிலமையை நான் பார்த்த ஒரு வீடியோவை வைத்து எழுதினேன்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, யாயினி said:

ஒன்றை மட்டும் பார்த்து விட்டு எழுந்தமானமாக எழுதக் கூடாது.இதே ஆள் தான் வீடியோ எடுக்கும் இடங்களில் எல்லாம் ஆதாரம் கேட்டு முரண்பட்டதை வங்கி வீடியோ கிளிப்பில் பார்த்தேன்.ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமான நடைமுறைகள் இருக்கும் அதை நாம் நமக்கு சார்பாக எடுத்துக் கொள்வது அதுவும் பலவந்தமாக எடுத்துக் கொள்வது தவறு.அது மட்டுமல்ல. தன்னை ஒரு போட்டோ கிறாபர் என்று சொல்லி நிகழ்ச்சிகளில் படம் பிடித்திருக்கிறார் என்றும் முகப் புத்தகத்தில் பார்த்தேன்.நல்லவராயின் சட்டைகிளிய வாங்கி கட்ட வேண்டிய அவசியம் என்ன......?

பேங்க் பள்ளிவளாகம் (Bank & Schools) இரண்டும் பிரைவேட் ப்ரோபெற்றிக்குள் (Private Properties) அடங்கும்.

ஆகவே அது மிக சாதாரணமாகவே விதிமீறலுக்குள் வந்து விடும்

ஓணாண்டி சொல்வது பப்ளிக் ஏரியா பற்றியது

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, நிழலி said:

ஓணாண்டி, Public இடத்தில் படம் எடுப்பது என்பது வேறு, சிறுமிகளை (18 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளை) அவர்களின் / பெற்றோர்களின் அல்லது பாதுகாவலரின் அனுமதி இன்றி படம் / வீடியோ எடுப்பது வேறு. இந்த வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடியவில்லையா?

அப்படி மைனர் பிள்ளைகளை ஒருவர் அன்னியர் படம் எடுத்தால், அவருக்கு எதிராக முறைப்பாடு தெரிவித்தால், அல்லது அப்படி எடுக்கும் போது காவல்துறை கண்டால் நடவடிக்கை எடுப்பர். கண்டிப்பாக ஐரோப்பாவிலும் இது நடைமுறையில் இருக்கும் என நம்புகின்றேன்.

இந்த செய்தியில் குறிப்பிட்ட சம்பவத்தில் மாணவிகளை படம் எடுக்கும் போது, பாடசாலை நிர்வாகம் எடுக்க வேண்டாம் என்று தடுத்து இருக்கின்றது. அதையும் மீறி எடுத்துள்ளார். எனவே இது முறைப்பாடு செய்ய வேண்டிய ஒரு விடயம்.

பாடசாலை நிர்வாகம் தடுத்து இருக்காவிடின், மிகச் சாதாரண நிகழ்வாக அமைந்து இருக்கும். இதுவே பாடசாலை சம்பந்தப்பட்ட ஒருவரோ அல்லது மாணவிகளின் பெற்றோர் / பாதுகாவலர் ஒருவரோ படம் எடுத்து இருந்தால் பிரச்சினை எழுந்து இருக்காது.

பாடசாலை பப்ளிக் பிளேஸ் அல்ல என்பதால் இந்த கேள்வியே தேவை இல்லை.. எடுக்க முடியாது.. அதுதான் சட்டம்..

1 minute ago, Maruthankerny said:

பேங்க் பள்ளிவளாகம் (Bank & Schools) இரண்டும் பிரைவேட் ப்ரோபெற்றிக்குள் (Private Properties) அடங்கும்.

ஆகவே அது மிக சாதாரணமாகவே விதிமீறலுக்குள் வந்து விடும்

ஓணாண்டி சொல்வது பப்ளிக் ஏரியா பற்றியது

அதேதான்.. இதை எழுதி அப்டேற் பண்ண நீங்கள் எழுதி இருக்கிறீர்கள்.. சேம் வேவ்லெந்..

14 minutes ago, putthan said:

இவர் புலம் பெயர்ந்தவர் அல்லோ ...தற்பொழுது அங்கு வசிப்பவர் ஆகவே தான் அக்க‌றையாக இருக்கிறோம்😀...

ஒருவர் மீது கோபம் அல்லது காழ்ப்புணர்ச்சியில் பதில் எழுதுவது இப்படித்தான்.. முழுவதும் புரியாமலே முந்திக்கொண்டு நம்ம கோள்வத்தை தீர்க்கோணும்..🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

பாடசாலை பப்ளிக் பிளேஸ் அல்ல என்பதால் இந்த கேள்வியே தேவை இல்லை.. எடுக்க முடியாது.. அதுதான் சட்டம்..

அதேதான்.. இதை எழுதி அப்டேற் பண்ண நீங்கள் எழுதி இருக்கிறீர்கள்.. சேம் வேவ்லெந்..

ஒருவர் மீது கோபம் அல்லது காழ்ப்புணர்ச்சியில் பதில் எழுதுவது இப்படித்தான்.. முழுவதும் புரியாமலே முந்திக்கொண்டு நம்ம கோள்வத்தை தீர்க்கோணும்..🤣🤣

யார் என்று தெரியாதவர்கள் மேல் யாருக்கும் கோவமோ, காள்புணர்ச்சியோ வருவதற்கு சாத்தியக் கூறுகள் இல்லை.உங்கள் மனதுக்கு அப்படித் தோன்றினால் ஒன்றும் செய்ய இயலாது..

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, யாயினி said:

யார் என்று தெரியாதவர்கள் மேல் யாருக்கும் கோவமோ, காள்புணர்ச்சியோ வருவதற்கு சாத்தியக் கூறுகள் இல்லை.உங்கள் மனதுக்கு அப்படித் தோன்றினால் ஒன்றும் செய்ய இயலாது..

நீங்கள் எதுக்கு புத்தனுக்கு எழுதினதுக்கு பதில் எழுதுறீங்க..😯

  • கருத்துக்கள உறவுகள்

நிஞாயத்தை யாரும் சுட்டிக்காட்டலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.