Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

யாழ் களத்தில் இவ்வளவு வன்மம் கூடாது. விளையாட்டில் உள்ள ஆர்வம் காரணமாகத்தான் நான் உள்ளே வந்தேன். ஆனால் இங்கு சொல்லப்படும் விடயங்கள் நல்லாகவே இல்லை. என்னால் ஏற்கக் கூடியாதாகவே இல்லை. இப்படியான இடத்தில் இருப்பதற்கும் ஆர்வமில்வல.

கூல் டவுன் புரோ...அது விளையாட்டுக்களம்...அப்படித்தான் இருக்கும்..சி.எஸ் . கே தோற்றவுடன் ..வீடே எனக்கு வெறுக்கத் தோன்றும் ..அவ்வளவு தோனி அடிமை ...இப்ப தேற்றிவிட்டென்...மற்ற திரிகளில்பூந்து விளையாடுவதினால்...மாறிவிட்டேன் ..

வாருங்கள் சேர்ந்துபோவோம்..உங்க பாணியில் என் அழைப்பு

  • Replies 3.3k
  • Views 98.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

GMT நேரப்படி நாளை திங்கள் 07 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

20) திங்கள் 07 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

MI எதிர் RCB

17 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் 06 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ்

  • வசீ

  • ஈழப்பிரியன்

  • அல்வாயன்

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • பிரபா

  • செம்பாட்டான்

  • கந்தப்பு

  • வாதவூரான்

  • ஏராளன்

  • தமிழ் சிறி

  • கிருபன்

  • குமாரசாமி

  • எப்போதும் தமிழன்

  • கோஷான் சே

  • அகஸ்தியன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

  • சுவி

  • சுவைப்பிரியன்

  • ரசோதரன்

  • நுணாவிலான்

  • நந்தன்

  • புலவர்

இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? beaver_1f9ab.png

  • கருத்துக்கள உறவுகள்

@செம்பாட்டான்

குறுக்கு ம‌றுக்கு கேள்வியில் 6புள்ளி த‌ன் வ‌ச‌ம் வைச்சு இருக்கிறார்

286 இந்த‌ ஜ‌பிஎல்ல‌ எந்த‌ அணியும் தாண்ட‌ வாய்ப்பில்லை

குறைந்த‌ ஸ்கோர் 116 இதாய் தான் இருக்கும் என‌ ந‌ம்புகிறேன்

கூட்டி க‌ழிச்சு பார்த்தால் தெய்வ‌ம் தான் க‌ட‌சியில் நிர‌ந்த‌ர‌ முத‌ல்வ‌ர்🙏🥰...................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

யாழ் களத்தில் இவ்வளவு வன்மம் கூடாது. விளையாட்டில் உள்ள ஆர்வம் காரணமாகத்தான் நான் உள்ளே வந்தேன். ஆனால் இங்கு சொல்லப்படும் விடயங்கள் நல்லாகவே இல்லை. என்னால் ஏற்கக் கூடியாதாகவே இல்லை. இப்படியான இடத்தில் இருப்பதற்கும் ஆர்வமில்வல.

என்ன‌ ஆச்சு

ஏன் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் புரிய‌ வில்லை

ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் எழுதின‌தை வாசியுங்க‌ள்

ஜ‌பிஎல்ல‌ அதிஷ்ட‌ம் , அக‌ன்ட‌ வெளிய‌ ஒருக்கா பாருங்கோ சென்னை அணிய‌ எப்ப‌டி எல்லாம் க‌ழுவி க‌ழுவி ஊத்துகின‌ம் என்று , டோனிய‌ எப்ப‌வும் இல்லாத‌ அள‌வு இந்த‌ முறை ர‌சிக‌ர்க‌ள் த‌டிச்ச‌ வார்த்தையில் பேசுகின‌ம்

அடிச்சு சொல்லுகிறேன் நீங்க‌ள் தான் நிர‌ந்த‌ர‌ முத‌ல்வ‌ர்

கூல் ட‌வுன் தெய்வ‌மே

நான் ஏன் உங்க‌ளை தெய்வ‌ம் என்று அழைக்க‌ கார‌ண‌ம் இது தான்

ந‌ட‌ந்து முடிந்த‌ ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ரில் இருவ‌ரும் போட்டி ப‌திவில் இருந்து தெரிவு செய்த‌ வீர‌ர்க‌ளில் இருந்து

அதோட‌ நாங்க‌ள் தெரிவு செய்த‌ வீர‌ர் ஒரு போட்டியில் கூட‌ விளையாட‌ வில்லை போட்டி முடிவில் இருவ‌ரும் ச‌ம‌ புள்ளியோட‌ நின்றோம்😁👍...............................

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

GMT நேரப்படி நாளை திங்கள் 07 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

20) திங்கள் 07 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

MI எதிர் RCB

17 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் 06 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ்

  • வசீ

  • ஈழப்பிரியன்

  • அல்வாயன்

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • பிரபா

  • செம்பாட்டான்

  • கந்தப்பு

  • வாதவூரான்

  • ஏராளன்

  • தமிழ் சிறி

  • கிருபன்

  • குமாரசாமி

  • எப்போதும் தமிழன்

  • கோஷான் சே

  • அகஸ்தியன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

  • சுவி

  • சுவைப்பிரியன்

  • ரசோதரன்

  • நுணாவிலான்

  • நந்தன்

  • புலவர்

இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? beaver_1f9ab.png

நாளைக்கு தில‌க் வ‌ர்மா ம‌ற்றும் இங்லாந் வீர‌ர் ஜ‌க்ஸ் இருவ‌ரும் விளையாடாம‌ மாற்று வீர‌ர்க‌ள் விளையாடினால் மும்பை வென்று விடும்

வும்ரா மீண்டும் நாளை விளையாடுவ‌தாய் எங்கையோ வாசித்தேன் வும்ரா அணிக்கு திரும்புவ‌து கூடுத‌ல் ப‌லம்🤜💪🤛......................................

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கிருபன் said:
  1. சுவி

  2. சுவைப்பிரியன்

  3. ரசோதரன்

  4. நுணாவிலான்

  5. நந்தன்

  6. புலவர்

இதெனனப்பா இந்தக் குறூப்பில இருக்கிற 3 பேர் எப்பவும் ஒரே மாதிரி சிந்திக்கினம்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

@suvy ஐயா தொடர்ந்தும் முதல்வராக நிலைக்கின்றார். கூடவே @நந்தன் உம் இரண்டாம் இடத்தில் சமமான புள்ளிகளுடன் நிற்கின்றார்.

எங்கள் மன்னர் தானைத் தலைவர் மாமன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கன் அவர்கள் 🤣

எதிரிகளைத் தன் கட்டுப்பாட்டில் தக்க வைத்து

தன்னைப் போர்முனையில் முன்னணியில் நிலை நிறுத்தியுள்ளார் 🙏

மாமன்னர் வழியே தன் வழியென தளபதி நந்தனாரும் 😃

மன்னருக்குப் பாதுகாப்புக் கவசமாக அவரைப் பின் தொடர்கின்றார் 😂

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, புலவர் said:

இதெனனப்பா இந்தக் குறூப்பில இருக்கிற 3 பேர் எப்பவும் ஒரே மாதிரி சிந்திக்கினம்?

எல்லாம் கொப்பி அடியா இருக்குமோ புல‌வ‌ர் அண்ணா லொள்.............................................

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, புலவர் said:

இதெனனப்பா இந்தக் குறூப்பில இருக்கிற 3 பேர் எப்பவும் ஒரே மாதிரி சிந்திக்கினம்?

7 minutes ago, வீரப் பையன்26 said:

எல்லாம் கொப்பி அடியா இருக்குமோ புல‌வ‌ர் அண்ணா லொள்.............................................

இரண்டில் ஒன்றுதான் தெரிவு எனும் போது

சிங்கங்கள் சேர்ந்தும்

சிங்கிளாகவும் வரும் சந்தர்ப்பங்கள் இருக்கு......

இருந்தது..😃

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, வீரப் பையன்26 said:

நாளைக்கு தில‌க் வ‌ர்மா ம‌ற்றும் இங்லாந் வீர‌ர் ஜ‌க்ஸ் இருவ‌ரும் விளையாடாம‌ மாற்று வீர‌ர்க‌ள் விளையாடினால் மும்பை வென்று விடும்

வும்ரா மீண்டும் நாளை விளையாடுவ‌தாய் எங்கையோ வாசித்தேன் வும்ரா அணிக்கு திரும்புவ‌து கூடுத‌ல் ப‌லம்🤜💪🤛......................................

ஒரு போட்டியில் சரியாக விளையாடாததினால் மட்டும் திலக் வர்மாவை நீக்க மாட்டார்கள். சென்ற போட்டியில் காயம் காரணமாக விளையடாத ரோகித் சர்மா இபோட்டியில் விளையாடவுள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கந்தப்பு said:

ஒரு போட்டியில் சரியாக விளையாடாததினால் மட்டும் திலக் வர்மாவை நீக்க மாட்டார்கள். சென்ற போட்டியில் காயம் காரணமாக விளையடாத ரோகித் சர்மா இபோட்டியில் விளையாடவுள்ளார்

தில‌க் வ‌ர்மா இர‌ண்டு போட்டியிலும் டெஸ்ட் மைச் விளையாடின‌வ‌ர்..............................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

அடம் சம்பா, ராகுல் சஹர், ஹர்ஷால் படேல் யாருமே விளையாடவில்லை!

ஹர்ஷால் படேல் நேற்று காயம் காரணமாக விளையாடவில்லை. அடம் சம்பா SRH இன் முதல் 3 போட்டிகளில் விளையாடினார். அப்போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை

3 hours ago, Eppothum Thamizhan said:

இஷாந்த் ஷர்மாவிற்காக றபாடாவை விளையாடினால் குஜராத் playoff இற்கு செல்ல வாய்ப்பு இருக்குது!

நடராஜன் டெல்லி கேபிடலுக்கு விளையாடுகிறார். நான்தான் மாறி எழுதிவிட்டேன்!

சன்ரைசர்ஸ் பௌலிங் lineup தான் IPL இல் மிக கேவலமாக இருக்கிறது! ஏலம் எடுக்கும்போது என்னதான் செய்தார்களோ தெரியவில்லை!

ரபாடா தனிப்பட்ட பிரச்சனை காரணமாக தென்னாப்பிரிக்கா சென்று உள்ளார். விரைவில் வந்து விளையாடுவார்.

SRH சென்ற ஐபிஎல் இல் அதிக விக்கேட்கள் எடுத்த ஹர்திக் பட்டேல், இந்தியாவின் தலை சிறந்த வேகப்பந்துவீச்சாளர் மூகமத் சாமி , ஆஸ்திரேலியாவின் சிறந்த சுழல் பந்து வீச்சாளர் அடம் சம்பா என நல்ல வீரர்களைதான் எடுத்தார்கள்.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

இல்லைங்க. நான் சொல்லவந்ததே வேற விடயம். மாற்றாக வேறுமாதிரி வந்துவிட்டது போல.

தடித்த வார்த்தைப் பிரயோகங்கள். கண்ணியமற்று பேசுவது. ஒரு வீரனை தப்பாக இட, வர்க்க ரீதியாகப் பேசுவது. இவற்றைத்தான் வன்மம் என்று சொன்னேன்.

நான் புள்ளிகளில் எங்கே என்பது ஒரு பொருட்டே இல்லை. நான் அதைப் பற்றியே கதைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, செம்பாட்டான் said:

யாழ் களத்தில் இவ்வளவு வன்மம் கூடாது. விளையாட்டில் உள்ள ஆர்வம் காரணமாகத்தான் நான் உள்ளே வந்தேன். ஆனால் இங்கு சொல்லப்படும் விடயங்கள் நல்லாகவே இல்லை. என்னால் ஏற்கக் கூடியாதாகவே இல்லை. இப்படியான இடத்தில் இருப்பதற்கும் ஆர்வமில்வல.

விடுங்க தம்பி . ....... இது ஒரு ரசிப்புக்காக பங்கு பற்றுகிற போட்டிதானே ......... ஏனைய திரிகளை விட இதில்தான் பலரும் மகிழ்வாய் கலந்துரையாடி ஒருத்தரை ஒருத்தர் கலாய்த்துக் கொண்டு போக முடியுது . .........!

சென்ற பல போட்டிகளில் நான்தான் அத்திவாரமாக இருந்திருக்கிறேன் . ......... இப் போட்டியிலும் பங்கு பற்ற வேண்டும் என்பதற்காக உடல்நிலை இன்னும் தேறாத நிலையில் பையனின் பதிவுக்கு எதிராகத்தான் போட்டிருந்தேன் . ....... அது இப்படி வேலை செய்வது எனக்கே ஆச்சரியமாக இருக்கு . ........ எனக்கு கோலியைப் பிடிக்கும் . ......அவர்ர பொங்களுர் ஒருநாளும் சம்பியனாய் வந்ததில்லை . ........ சரி .....இம்முறையாவது வரட்டும் என்று போட்டிருக்கிறேன் . ........ பார்ப்பம் . .......!

மனக்கிலேசமில்லாமல் கலந்து போட்டியை சிறப்பிப்போம் .......! 😁

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, செம்பாட்டான் said:

தடித்த வார்த்தைப் பிரயோகங்கள். கண்ணியமற்று பேசுவது. ஒரு வீரனை தப்பாக இட, வர்க்க ரீதியாகப் பேசுவது. இவற்றைத்தான் வன்மம் என்று சொன்னேன்.

1 hour ago, வீரப் பையன்26 said:

என்ன‌ ஆச்சு

ஏன் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் புரிய‌ வில்லை

பையன் தம்பி

இது ஒரு கிரிக்கெட் விளையாட்டு சுற்று

பல அணிகள் ஒன்றுடன் ஒன்று ஒருமுறை அல்லது இருமுறை மோதி

இறுதியில் ஒரு அணி எப்படியும் வெற்றியைத் தனதாக்கிக் கொள்ளும் .

இது எல்லோருக்கும் தெரியும்

ஆனால் விளையாட்டு வீரர்கள் தங்களின் விருப்பப்படி இங்கே எந்த அணியிலும் விளையாடும் நிலை இல்லை.... அதுவும் பிரச்சனை இல்லை ...

ஆனால் ஒரு அணி வென்றால் அந்த அணியைப் போற்றுவதும் உங்களுக்கு விரும்பிய அணியாக இருந்தால் ...அதை ஆகா ஓகோ என்று புகழ்வதும் .... அதே அணி தோல்வியைத் தழுவும் போது........

அந்த அணியையும் அதில் விளையாடிய வீரர்களையும் தப்பான வார்த்தைகளை பிரயோகித்து கருத்துக்களை வைப்பதையே ( உதாரணம் கேனையன்கள் ) எங்கள் முன்னாள் முதல்வர் சுட்டிக் காட்டியிருக்கின்றார்

என்பது எனது கணிப்பு

உங்கள் விமர்சனங்கள் எங்களுக்கு வேண்டும்

உங்கள் அனுமானங்கள் மற்றும் முன் கூட்டிய கணிப்புக்கள் எங்களுக்கு உதவியாகவும் ஒரு முடிவிற்கு வரும் சந்தர்ப்பத்தையும் எங்களுக்குத் தருகின்றது

தொடருங்கள் .....

யாரோ பெற்ற ஒரு பிள்ளைகள் விளையாடும் ஒரு அணியை சரியாக விளையாடவில்லை என்பதற்காக கடும் வார்த்தைகளால் சாட வேண்டாமே

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வாத்தியார் said:

வாத்தி என‌து யாழ்க‌ள‌ போட்டி அனுப‌வ‌த்தில் ப‌ல‌ உற‌வுக‌ள் விளையாடும் வீர‌ர்க‌ளை க‌ழுவி க‌ழுவி ஊத்தி இருக்கின‌ம் க‌ட‌ந்த‌ கால‌த்தில்

நானும் ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌னும் தான் அதிக‌ம் வீர‌ர்க‌ளை இந்த‌ திரியில் விம‌ர்ச‌ன‌ம் செய்து இருக்கிறோம்

என‌க்கு பிடிச்ச‌ வீர‌ர்க‌ளை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் விம‌ர்ச‌ன‌ம் செய்ய‌லாம் அதில் த‌வ‌று இல்லை

ச‌த்திய‌மாய் இதுக்கை எழுத‌வே இனி ம‌ன‌ம் வ‌ராது............................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

  • சுவி

  • சுவைப்பிரியன்

  • ரசோதரன்

  • நுணாவிலான்

  • நந்தன்

  • புலவர்

என்ன இவை ஒரு ஐந்தாறு பேர் கூட்டு சேர்ந்திருக்கினம்.

இது நல்லதுக்கில்லை.

இதை உடைக்கோணும்.

முதல்வர் @suvy க்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வீரப் பையன்26 said:

வாத்தி என‌து யாழ்க‌ள‌ போட்டி அனுப‌வ‌த்தில் ப‌ல‌ உற‌வுக‌ள் விளையாடும் வீர‌ர்க‌ளை க‌ழுவி க‌ழுவி ஊத்தி இருக்கின‌ம் க‌ட‌ந்த‌ கால‌த்தில்

நானும் ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌னும் தான் அதிக‌ம் வீர‌ர்க‌ளை இந்த‌ திரியில் விம‌ர்ச‌ன‌ம் செய்து இருக்கிறோம்

என‌க்கு பிடிச்ச‌ வீர‌ர்க‌ளை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் விம‌ர்ச‌ன‌ம் செய்ய‌லாம் அதில் த‌வ‌று இல்லை

ச‌த்திய‌மாய் இதுக்கை எழுத‌வே இனி ம‌ன‌ம் வ‌ராது............................

பையா, ஒரு அணியோ அல்லது ஒரு வீரரோ பிழையாக ஆடும்போது அதை விமர்சனம் செய்வதில் எந்தத்தவறும் இல்லை. குறிப்பாக CSK கேப்டன்சி, டோனியின் ஆடவரும் வரிசை, மட்சை கடைசி ஓவர்வரை எடுத்துச்செல்லும் யுக்தி என்பவற்றை விமர்சிப்பதில் தவறில்லை! ரூடராஜ் ஆரம்ப ஆட்டக்காரராக இறங்கவேண்டும்.

அதேபோல் SRH இந்த தொடக்கவீரர்களின் அணுகுமுறையும் விமர்சிக்கப்படவேண்டியதே! குறிப்பாக க்ளாஸனின் ஷாட் செலெக்க்ஷன் மிக மோசமாக உள்ளது! அதனாலேயே முன்பு தென்னாபிரிக்க பல மட்ச்களை தோற்கவேண்டியதாக இருந்தது! பத்து போட்டியில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே சோபிப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை.

அதனால் மற்றவர்களுக்காக நாங்கள் எமது விமர்சனங்களை மாற்றவேண்டியதில்லை! ஆனால் வார்த்தை பிரயோகங்களை கவனிக்க வேண்டும்! அவ்வளவே!!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சென்ற லக்னோ vs மும்பை விளையாடடைப் பார்த்தால் ஒன்று புரியும் . ......நியாயமாய் மும்பை வெல்ல வேண்டியது ........முதல் 10ஓவர் வரை நன்றாக விளையாடியவர்கள் . ......பின் திலக்கின் சொதப்பல் எல்லாம் நம்புகிறமாதிரி இல்லை . ...... விளையாடித் தோற்கவில்லை . ........ தோல்விக்காகவே விளையாடியது போல் இருந்தது . ......... தோற்றுப் போகும்போது கூட பாண்டியா உட்பட யாருடைய முகத்திலும் சோகத்தின் சாயல் துளியும் இல்லை . ....... ஒரு பார்வையாளனாக என் நிணைப்பு இவை யாவும் ஒரு நாடகம் . ........ நாங்கள் சும்மா குத்தி முறிந்து எதுவும் பிரயோசனமில்லை . ........ இங்கே வெறும் பம்பல் + சந்தோசம் அவ்வளவுதான் . .......! 😁

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வீரப் பையன்26 said:

என்ன‌ ஆச்சு

ஏன் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் புரிய‌ வில்லை

பையா அவர் முன்பும் ஒரு முறை எழுதியுள்ளார் இதைப்பற்றி.அவரின் ஆதங்கம் என்னவென்றால் சொற்பிரயோகம் தான் அது உங்களுக்கு மட்டுமானதல்ல.உதாரனத்துக்கு வடக்கன் என்ற வார்த்தையத்தான் அவரது முதல் பதிவில் சுட்டியிருந்தார்.அதால அதிகம் குழம்பாமல் தவறு இருந்தால் திருத்திக்கொன்டு தொடர்ந்து கும்மியடிப்போம்.பி கப்பி.😀

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, வீரப் பையன்26 said:

யோக்க‌ர் ப‌ந்து போடுவ‌தில் ந‌ட‌ராஜ‌ம் திற‌மைசாலி

வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு சுழ‌ல் ப‌ந்து போட‌வும் தெரியும் ம‌ட்டையால் அடிக்க‌வும் தெரியும் இந்த‌ இர‌ண்டு வீர‌ர்க‌ளை க‌ல‌ட்டி விட்ட‌வை அத‌ன் விலைவு ந‌ண்பா

யோக்க‌ர் ப‌ந்து போட‌ SRH அணியிட‌ம் வீர‌ர்க‌ள் இல்லை...........................

குஜ‌ராத் அணி ம‌று ப‌டியும் கோப்பை தூக்கினால் ம‌கிழ்ச்சி அடைவேன்.......................ர‌சித் கான் ப‌ழை நிலைக்கு திரும்ப‌னும்..................................

ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 5 capped players இனை தக்கவைக்கமுடியும் . ஏற்கனவே நான் எழுதியது போல இம்முறை 18,14,11,18,14 = 70 கோடி இவர்களுக்கு செலவு செய்யவேண்டும். சென்ற ஐபிஎல்இல் SRH 2 ஆம் இடத்தை பிடித்தது. இதற்கு காரணமானவர்களை SRH தக்கவைக்க விரும்பியது. க்ளாசன் 23 கோடிக்கும் அணித்தலைவர் கம்மின்ஸ் 18 கோடிக்கும் சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட சோடிகளான ஹெட், அபிஷேக் சர்மாவை தலா 14 கோடிக்கும் தக்கவைத்தனர். மிகுதி 6 கோடிக்கு உடன்பட்ட நடிஸ்ஜ் குமார் ரெட்டி தக்க வைக்கப்பட்டார். ஏலத்தில் SRH இடம் இருந்த மிகுதி தொகை 50 கோடி மட்டுமே ( 120- 70 =50) இதில் மீதி 20பேரை வாங்க வேண்டும் . அணிகள் தக்கவைக்காத ஏலத்தில் வரும் வீரர்களை ஒவ்வொரு குழுவாகப்பிரித்து குழு 1 இல் இருந்து 79 குழுக்களாக பிரித்தார்கள். குழு1 இல் இருந்து ஆரம்பித்து வீரர்களை ஏலம் விடுவார்கள். முதல் 2 குழுவில் சிறந்தவீரர்கள் இருப்பார்கள்

முதல் குழுவில் 6 பேர் இருந்தார்கள். இதில் இருந்தவர்களை எல்லா அணிகளும் அடிபட்டு அதிக விலை குடுத்து வாங்கினார்கள் . இந்த குழுவில் இருந்த ரிஷப் பாண்ட், சிரேஷ அய்யர், ஆர்சிப் சிங் போன்றவர்கள் அதிக விலைக்கு போனார்கள்.

வாசிங்டன் சுந்தர் 14 வது குழுவில் இருந்தார். 96 வது வீரராக இவருக்கு ஏலாத்தின் இலக்கம் வழங்கப்பட்டது. அஸ்வின் 4 வது குழுவில் இருந்தார் வாஷிங்டன் சுந்தர் 4 வது குழுவில் இருந்தால் சென்னை சிலவேளை வாசிங்டன் சுந்தருக்கு போட்டியிட்டு இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

The Times of India
No image preview

CSK IPL 2025 Full Player List, CSK Squad | Chennai Super...

Cricket News: Chennai Super Kings (CSK) strategically managed their Rs 55 crore purse at the IPL auction in Jeddah. They secured key players like Devon Conway, Ravi

ஐந்து வீரர்களுக்கு 65 கோடி! மற்றய 20 வீரர்களுக்கு 55 கோடி!! டீம் எப்படி உருப்படும்! அஸ்வினை 9.75 கோடிக்கு வாங்கியதுக்கு பதில் வாஷிங்டன் சுந்தரை 3.2 கோடிக்கு வாங்கி இன்னொடு நல்ல பிளேயரையும் வாங்கி இருக்கலாம்!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:
  13 hours ago, வீரப் பையன்26 said:

என்ன‌ ஆச்சு

சென்னை அணியில் வ‌ட‌க்க‌னின் ஆதிக்க‌ம் என்று யாழில் நான் எழுத‌ தொட‌ங்க‌ வில்லை , ப‌ழைய‌ உற‌வுக‌ள் இப்ப‌டியா விளையாட்டு திரிக‌ளில் எழுதின‌தால் என‌க்கும் அப்ப‌டியே எழுத‌ வ‌ருது

வ‌ட‌ நாட்ட‌வ‌ர்க‌ளை த‌மிழ் நாட்டிலே வ‌ட‌க்க‌ன் என்று தான் ப‌ல‌ர் அழைக்கின‌ம் , அங்கை இருந்து இங்கை வேலைக்கு வ‌ந்து விட்டு இம்ம‌ட்டு த‌லைக்க‌ன‌மா என்று.................வ‌ட‌ நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள் த‌மிழ‌க‌த்தில் த‌மிழ‌ர்க‌ளை அடித்தார்க‌ள் என்று ஊட‌க‌ங்க‌ளில் செய்தி வ‌ந்த‌து போன‌ வ‌ருட‌ம்.............................வ‌ட‌ நாட்டான் என்று சொல்வ‌தில் என்ன‌ த‌வ‌று இருக்கு.................வ‌ட‌ நாட்டாங்க‌ளுக்கு ஆங்கில‌ம் க‌தைக்க‌ தெரியாது த‌மிழ‌ர்க‌ளுக்கு ஹிந்தி தெரியாது...............த‌மிழ‌ர்க‌ள் சுற்றுலா போனாலும் உங்க‌ளுக்கு ஹிந்தி தெரியாது நீங்க‌ள் இந்திய‌ர்க‌ள் இல்லை என்று த‌மிழ‌ர்க‌ளை பார்த்து சொல்லுகிறான்😁.....................த‌மிழ் நாட்டில் இருந்து டெல்லிக்கு ப‌யிற்ச்சி எடுக்க‌ போன‌ பிள்ளைக‌ளுக்கு அடி விழுது....................வ‌ட‌ நாட்டான் த‌மிழ‌னை எப்ப‌டி பார்க்கிறார் என்று தெரிந்து வைத்து விட்டு வ‌ட‌ நாட்டானுக்காக‌ தார‌லமாக‌ முட்டை க‌ண்ணீர் விட‌லாம் பிர‌ச்ச‌னை இல்லை...................ப‌ல‌ யூடுப்ப‌ர்க‌ளே வ‌ட‌ நாட்ட‌னின் செய‌ல்க‌ள் பிடிக்காம‌ உண்மையை போட்டு காட்டுகின‌ம்......................அர‌சிய‌லுக்கு ஒரு ஞாய‌ம் விளையாட்டுக்கு இன்னொரு ஞாய‌மா....................................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

பையா, ஒரு அணியோ அல்லது ஒரு வீரரோ பிழையாக ஆடும்போது அதை விமர்சனம் செய்வதில் எந்தத்தவறும் இல்லை. குறிப்பாக CSK கேப்டன்சி, டோனியின் ஆடவரும் வரிசை, மட்சை கடைசி ஓவர்வரை எடுத்துச்செல்லும் யுக்தி என்பவற்றை விமர்சிப்பதில் தவறில்லை! ரூடராஜ் ஆரம்ப ஆட்டக்காரராக இறங்கவேண்டும்.

அதேபோல் SRH இந்த தொடக்கவீரர்களின் அணுகுமுறையும் விமர்சிக்கப்படவேண்டியதே! குறிப்பாக க்ளாஸனின் ஷாட் செலெக்க்ஷன் மிக மோசமாக உள்ளது! அதனாலேயே முன்பு தென்னாபிரிக்க பல மட்ச்களை தோற்கவேண்டியதாக இருந்தது! பத்து போட்டியில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே சோபிப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை.

அதனால் மற்றவர்களுக்காக நாங்கள் எமது விமர்சனங்களை மாற்றவேண்டியதில்லை! ஆனால் வார்த்தை பிரயோகங்களை கவனிக்க வேண்டும்! அவ்வளவே!!

ந‌ண்பா நான் 2011ம் ஆண்டில் இருந்து யாழ்க‌ள போட்டிக‌ளில் க‌ல‌ந்து இருக்கிறேன்

ப‌ழைய‌ உற‌வுக‌ளுட‌ன் அடிச்ச‌ ப‌ம்பல‌ ம‌ற‌க்க‌ முடியாது..................அந்த‌க் கால‌த்தில் யாரும் யாருக்கும் இது பிடிக்க‌ல‌ அது பிடிக்க‌ல‌ என்று ம‌ன‌ உளைச்ச‌லை உருவாக்கின‌து கிடையாது ம‌ன‌சில் ப‌ட்ட‌தை எழுதி விட்டு போவின‌ம்

என்ர‌ ம‌ன‌சில் என்ன‌ ப‌டுதோ அதை தான் எழுதினேன் , வ‌ட‌ நாட்டான் என்று சொல்லுவ‌து த‌ப்பு என்றால் என்னால் ஒன்றும் செய்ய‌ முடியாது..................த‌மிழ் நாட்டு த‌மிழ‌னே வ‌ட‌ நாட்டானின் ஆதிக்க‌ம் த‌மிழ‌ர்க‌ளின் வேலைக‌ள் ப‌றி போகுது வெளிய‌ போ என்று ஆர்பாட்ட‌ங்க‌ள் செய்யின‌ம்.................

இது விளையாட்டு திரி ந‌ண்பா வீர‌ர்க‌ள் விடும் த‌வ‌றுக‌ளை , திற‌மையான‌ வீர‌ர்க‌ள் சாதிச்சால் பொருமையாக‌ எழுத‌ முழு சுத‌ந்திர‌ம் எல்லாருக்கும் உண்டு

நேற்று நான் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர‌ ப‌ற்றி பெருமையா எழுதின‌து சில‌ருக்கு பிடிக்காம‌ இருக்க‌லாம் ஆனால் அது எனக்கு பிடிச்சு இருக்கு................. SRH அணி கொச் ஓன‌ர்க‌ள் திற‌மையான‌ வீர‌ர்க‌ளை த‌க்க‌ வைச்சுக்க‌ தெரியாது என்று எழுதினேன் , முத்தையா முர‌ளித‌ர‌ன் தொட்டு கொச் மார் கூ முட்டைக‌ள் என்று எழுதின‌து மாபெரும் குற்ற‌மா😁..................இது விளையாட்டுத் திரிதானே என்று சும்மா க‌ட‌ந்து செல்லாம‌ ஒவ்வொரு முறையும் ஏதாவ‌து ஒன்றை பிடிச்சு தொங்கி அதை ஊதி பெருதாக்கி யாழில் ப‌ல‌ திரிக‌ளில் எழுதாம‌ ஒதுங்கின‌ மாதிரி இந்தி திரியிலும் ஒதுங்கி இருந்தால் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு நான் இடைஞ்ச‌லாக‌ இருக்க‌ மாட்டேன் ந‌ண்பா......................

இனி இதுக்கை என் வ‌ருகையை எந்த‌ உற‌வுக‌ளும் எதிர் பார்க்க‌ வேண்டாம்

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்👍.........................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

The Times of India
No image preview

CSK IPL 2025 Full Player List, CSK Squad | Chennai Super...

Cricket News: Chennai Super Kings (CSK) strategically managed their Rs 55 crore purse at the IPL auction in Jeddah. They secured key players like Devon Conway, Ravi

ஐந்து வீரர்களுக்கு 65 கோடி! மற்றய 20 வீரர்களுக்கு 55 கோடி!! டீம் எப்படி உருப்படும்! அஸ்வினை 9.75 கோடிக்கு வாங்கியதுக்கு பதில் வாஷிங்டன் சுந்தரை 3.2 கோடிக்கு வாங்கி இன்னொடு நல்ல பிளேயரையும் வாங்கி இருக்கலாம்!!

நீங்கள் வாழ்க்கையில் ஐபிஎல் ஏலம் பார்க்கவில்லை போல. ஏலத்தில் 90க்கு பிறகு ஆளாக வரும் ஒருவருக்காக எந்த அணியும் வெயிட் பண்ணமாட்டினம். ஒருவருக்காக வெய்ட் பண்ணப்போய் அவரும் இல்லை, இவரும் இல்லை என்ற கதையாகும். முக்கியமாக முதல் நாள் ஏலம் முதல் 83 பேருடன் முடிந்துவிட்டது. பெரும்பாலான அணிகள் தங்களுக்கு தேவையான 10 க்கு மேற்பட்ட வீரர்களை தெரிவு செய்துவிட்டார்கள். 2 ஆம் நாள் எல்த்தில்தான் வாஷிங்டன் சுந்தர் வந்தார். பெரும்பாலான அணிகளிடம் குறைவான பணமே இருந்தது.

வாசிங்டன் சுந்தர் முந்தைய ஐபிஎல்களில் பெரிதாக சாதிக்காததும் ஒரு குறை இருக்குது

எனினும் வாசிங்டன் சுந்தர் குழு 4 இல் இருந்தால் ஓரளவு பெரிய விலைக்கு போயிருப்பார்.

4 minutes ago, வீரப் பையன்26 said:

ந‌ண்பா நான் 2011ம் ஆண்டில் இருந்து யாழ்க‌ள போட்டிக‌ளில் க‌ல‌ந்து இருக்கிறேன்

ப‌ழைய‌ உற‌வுக‌ளுட‌ன் அடிச்ச‌ ப‌ம்பல‌ ம‌ற‌க்க‌ முடியாது..................அந்த‌க் கால‌த்தில் யாரும் யாருக்கும் இது பிடிக்க‌ல‌ அது பிடிக்க‌ல‌ என்று வீன் ம‌ன‌ உளைச்ச‌லை உருவாக்கின‌து கிடையாது ம‌ன‌சில் ப‌ட்ட‌தை எழுதி விட்டு போவின‌ம்

என்ர‌ ம‌ன‌சில் என்ன‌ ப‌டுதோ அதை தான் எழுதினேன் , வ‌ட‌ நாட்டான் என்று சொல்லுவ‌து த‌ப்பு என்றால் என்னால் ஒன்றும் செய்ய‌ முடியாது..................த‌மிழ் நாட்டு த‌மிழ‌னே வ‌ட‌ நாட்டானின் ஆதிக்க‌ம் த‌மிழ‌ர்க‌ளின் வேலைக‌ள் ப‌றி போகுது வெளிய‌ போ என்று ஆர்பாட்ட‌ங்க‌ள் செய்யின‌ம்.................

இது விளையாட்டு திரி ந‌ண்பா வீர‌ர்க‌ள் விடும் த‌வ‌றுக‌ளை , திற‌மையான‌ வீர‌ர்க‌ளை சாதிச்சால் பொருமையாக‌ எழுத‌ முழு சுத‌ந்திர‌ம் எல்லாருக்கும் உண்டு

நேற்று நான் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர‌ ப‌ற்றி பெருமையா எழுதின‌து சில‌ருக்கு பிடிக்காம‌ இருக்க‌லாம் ஆனால் அது எனக்கு பிடிச்சு இருக்கு................. SRH அணி கொச் ஓன‌ர்க‌ள் திற‌மையான‌ வீர‌ர்க‌ளை த‌க்க‌ வைச்சுக்க‌ தெரியாது என்று எழுதினேன் , முத்தையா முர‌ளித‌ர‌ன் தொட்டு கொச் மார் கூ முட்டைக‌ள் என்று எழுதின‌து மாபெரும் குற்ற‌மா😁..................இது விளையாட்டுத் திரிதானே என்று சும்மா க‌ட‌ந்து செல்லாம‌ ஒவ்வொரு முறையும் ஏதாவ‌து ஒன்றை பிடிச்சு தொங்கி அதை ஊதி பெருதாக்கி யாழில் ப‌ல‌ திரிக‌ளில் எழுதாம‌ ஒதுங்கின‌ மாதிரி இந்தி திரியிலும் ஒதுங்கி இருந்தால் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு நான் இடைஞ்ச‌லாக‌ இருக்க‌ மாட்டேன் ந‌ண்பா......................

இனி இதுக்கை என் வ‌ருகையை எந்த‌ உற‌வுக‌ளும் எதிர் பார்க்க‌ வேண்டாம்

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்👍.........................

தம்பி சின்னப்பிள்ளை மாதிரி கோவிக்காமல் வந்து எழுதுங்கள். நீங்களும் கேட்டதினால்தான் இப்போட்டியில் கலந்து கொண்டேன். வீட்டில வாங்கி வைக்க இடமெல்லாத அளவுக்கு முட்டைகள் வாங்கி குவிக்கிறேன் 😀

Edited by கந்தப்பு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.