Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தோனியின் ஆளுமை தோற்றே விட்டது//

பதிரானா பத்துப் பந்து வீசி ..14 ரன் குடுத்தது

வந்த கூடா ..எனக்கு ரன் அடிக்கவே தெரியாது என அவுட்டானது...

போலர் நூருக்கு 100தரம் சோல்லியிருக்கவேணும் ..ஓங்கி அடியாதை என்று..

முதலில்கோச்சை மாற்ற வேண்டும்..

  • Replies 3.3k
  • Views 94.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 49வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்களில் சாம் கரனின் புயல்வேக ஆட்டத்தில் எடுத்த 88 ஓட்டங்களுடனும், டெவால்ட் ப்ரெவிஸின் 32 ஓட்டங்களுடனும் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்கள் எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆரம்ப வீரர்களின் மின்னல் அடியில், குறிப்பாக ப்ராப்சிம்ரனினதும், ஷ்ரேயஸ் ஐயரினதும் அரைச் சதங்களுடனும் மூன்று விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைய 12 ஓட்டங்கள் இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் இறுதியில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது.

முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த @நந்தன் க்கும் @புலவர் ஐயாவுக்கும் மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றம் இல்லை!):

large.IMG_0761.jpeg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

GMT நேரப்படி நாளை வியாழன் 01 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

50) வியாழன் 01 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்

RR எதிர் MI

07 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் 16 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

ராஜஸ்தான் ராயல்ஸ்

  • சுவி

  • சுவைப்பிரியன்

  • ஏராளன்

  • நுணாவிலான்

  • நந்தன்

  • புலவர்

  • அகஸ்தியன்

மும்பை இந்தியன்ஸ்

  • வசீ

  • ஈழப்பிரியன்

  • அல்வாயன்

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • பிரபா

  • செம்பாட்டான்

  • கந்தப்பு

  • வாதவூரான்

  • ரசோதரன்

  • தமிழ் சிறி

  • கிருபன்

  • குமாரசாமி

  • எப்போதும் தமிழன்

  • கோஷான் சே

இப்போட்டியில் போட்டியில் எவர் புள்ளிகளைப் பெற்றுக்கொள்வார்கள்? peacock_1f99a.gif

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கந்தப்பு said:

முன்புதான் சென்னை அணியை அப்பாக்களின் அணி என்று சொல்வார்கள். ஏலத்தில் அதிக வயது போனவர்கள் சென்னை அணியில் எடுப்பதினால் சொல்லுவார்கள். ஆனால் இம்முறை சென்னை அணியில் 3 பேர் மட்டுமே 35 வயதும் அதற்கு மேற்பட்டவர்களும் இருக்கிறார்கள். தோனி 43 வயது. அஸ்வின் 38 வயது. ஜடேஜா 35 வயது. மும்பாய் அணியில் 3 பேர். ஆனால் கொலகத்தா அணியில் 5 பேர் 35 ம், 35 வயதுக்கு மேல் இருக்கிறார்கள். இம்முறை கொல்கத்தா அணியில் அதிக வயது போனவர்கள் இருக்கிறார்கள். இம்முறை சென்னை அணியில் இருக்கும் 25 பேரில் 10 பேர் 25 வயதை விட குறைவானவர்கள். நூர் அகமது 19 வயது, பத்திரானா 21 வயது . ரச்சின் ரவீந்திரா 24 வயது. ஆயுஷ் ம்ஹாத்ரே 17 வயது. அன்சுல் கம்போஜ் 23 வயது . ஷாகிக் ரஷித் 20 வயது. டெவால்ட் பிரேவிஸ் 21 வயது . இன்று சிலவேளை விளையாடுவார் என எதிர்பார்க்கப்படும் vansh bedi 21 வயது. தமிழக வீரர் சித்தார்த் 18 வயது .

ஸ்சப்பா. பையன் விரல் நுனி என்றால் கந்தப்பு விரல் நகமாக இருக்கிறார். (தகவல் திரட்டலில்)🙂

  • கருத்துக்கள உறவுகள்

வழமைபோல முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

தோனியின் ஆளுமை தோற்றே விட்டது//

பதிரானா பத்துப் பந்து வீசி ..14 ரன் குடுத்தது

வந்த கூடா ..எனக்கு ரன் அடிக்கவே தெரியாது என அவுட்டானது...

போலர் நூருக்கு 100தரம் சோல்லியிருக்கவேணும் ..ஓங்கி அடியாதை என்று..

முதலில்கோச்சை மாற்ற வேண்டும்..

சட்டு புட்டென்று ஒரு முடிவுக்கு வாங்க.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

வழமைபோல முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.

70வது போட்டி வரையும் அவர்தான். இனி அசைக்க முடியாது. எடக்கு முடக்குக் கேள்விகளில் ஏதாவது நடந்தால்தான் உண்டு.

வாழ்த்துக்கள் நந்தன். உங்கள் தெரிவுகள் எல்லாம் பக்கா.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, alvayan said:

தோனியின் ஆளுமை தோற்றே விட்டது//

பதிரானா பத்துப் பந்து வீசி ..14 ரன் குடுத்தது

வந்த கூடா ..எனக்கு ரன் அடிக்கவே தெரியாது என அவுட்டானது...

போலர் நூருக்கு 100தரம் சோல்லியிருக்கவேணும் ..ஓங்கி அடியாதை என்று..

முதலில்கோச்சை மாற்ற வேண்டும்..

நூருக்கு ஒரு பந்துதான் இருந்தது. அதன் பின் கடைசிப் பரிபாற்றம். சிவம்தான் எல்லாப் பந்தையும் அடிக்கப் போகின்றார். அவர்கள் ஒன்று ஓடுவதற்கு முயற்சியே செய்யப்போவதில்லை. ஆதலினால் இருக்கும் அந்த ஒரு பந்தை அடி என்றுதான் நூருக்கு சொல்லி இருபடும். வந்தால் மலை அல்லது.....

அவர்கள் விட்ட பிழை என்னவென்று சொன்னால், சாகல் வரும்போது, தலை தான் அடிக்காமல் ஒரு ஓட்டத்தை எடுத்து மிச்ச பந்துகளை சிவத்திடம் கொடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் சிவம் தான் சுழல் பந்து வீச்சாளர்களை போட்டு விளாசுவார். அணித் தலைவரே அவ்வாறு யோசிக்காவிட்டால், எப்படி மற்ற வீரர்கள் யோசிப்பார்கள். இதெல்லாம் சிறிய விடயங்கள். ஆனால் போட்டியின் போக்கையே மாற்றி விடும். மாற்றியே விட்டது. சரி அடித்தது தான் அடித்தார் ஏன் எல்லா பந்தையும் படிக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களப் போட்டியாளர்கள் பலருக்கு பல தடவைகள் முட்டைகள் பரிமாறிய CSK அவுட்!

large.IMG_0762.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

பைவவ் சூரியவம்சிக்கு 14 வயதினை விட வயது அதிகம் என ஒரு குண்டை எனது இந்திய நண்பர் போட்டார், அதற்கு அவர் கூறும் காரணம் பதினைந்து வயதிற்குட்பட்ட போட்டிகளில் வாய்ப்பு எடுப்பதற்காக பிறப்பு அத்தாட்சி பத்திரப்பதின்போது ஆண்டை மாற்றி உள்ளார்கள் என்றும் இது இந்தியாவில் பொதுவான விடயம் எனவும் கூறினார், 2017 உள்ள படத்தில் அவர் குழந்தையாக உள்ளாரே என கேட்ட பொது அதற்கான சரியான பதிலை அவர் வழங்கவில்லை, இந்த உரையாடல் நிகழ்ந்த போது அவருடன் நின்ற இன்னொரு இந்திய நண்பர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார்.

7 minutes ago, கிருபன் said:

யாழ் களப் போட்டியாளர்கள் பலருக்கு பல தடவைகள் முட்டைகள் பரிமாறிய CSK அவுட்!

large.IMG_0762.jpeg

பானையில இருக்கிறதுதானே அகப்பையில் வரும், நாங்கள் தெரிவு செய்த ஒரே காரணத்திற்காக அவர்களை வெல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.😂

  • கருத்துக்கள உறவுகள்
On 30/4/2025 at 19:19, Eppothum Thamizhan said:

வேண்டிய காசுக்கு ஒழுங்கா விளையாடாவிட்டால் கழுவி ஊத்தத்தான் வேண்டும்!

செம்பாட்டன் அவர்கள் பொதுவாக சொன்னதை எனக்கு சொன்னதாக நினைத்து எழுதினேன். ஒவ்வொருவருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. உங்களுக்கு என்ன தோன்றுதோ அவற்றை எழுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, செம்பாட்டான் said:

பஞ்சாப் இரண்டாம் இடத்தைப் பிடித்துக்கொண்டது.

சென்னை வெளியில என்டு, நாம் எப்பவோ சொல்லிப்போட்டம். யாழ் தளமா கொக்கா. இப்பத்தான் அவங்கள் எல்லாரும் சொல்லினம். இப்போ அதிகாரபூர்வமாக அவர்கள் வெளியில்.

இன்று ராஜஸ்தான் தோல்வியுற்றால் அதிகாரபூர்வமாக வெளியில்

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, செம்பாட்டான் said:

மீண்டும் ஒரு காதல் கதை மாதிரி, மீண்டும் இடிந்து விழுந்த சென்னை. எப்படி என்று நினைப்பதற்கு முன், எல்லாம் முடிந்தது. சிவம் டுபே மற்றப் பக்கம் நிற்கிறார். வாற துடுப்பர் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு தட்டுத் தட்டி, மற்றப் பக்கம் போவதுதான். நானும் அடிக்கிறேன் பேர்வழி என்று ஆட்டமிழந்து செல்ல, தொடர்ச்சியாக எல்லாரும், வந்தார்கள், சென்றார்கள்.

மீண்டும் நிருபணம் ஆகியிருக்கிறது . போட்டி எப்படிப் போகுது என்ற விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் வீரர்கள்

முதலில் கோச்சை வெளியே அனுப்ப வேண்டும். ஒருவர் ஆடப்போகும்போது என்ன செய்யவேண்டும் என்று கூடவா சொல்லி அனுப்ப முடியாது! நூர் அஹமட் தலைக்குள் எதுவுமே இல்லாத மாதிரித்தான் ஒவ்வொருமுறையும் பேட்டிங் செய்கிறார்! பத்திரனாவின் பந்துவீச்சும் சுத்த வேஸ்ட்! அவருக்கு பதிலாக நேதன் எல்லிஸை விளையாடலாம்!!

தோனியிலும் பிழை உள்ளது! பதிரான தொடர்ந்து நான்கு ஓவர் போட்டுக்கொடுப்பது மிகவும் பிழை. பேட்ஸ்மேன் மிக இலகுவாக கணிக்கக்கூடியதாக போய்விடும்!

இப்போதுதான் KKR யோசிக்கும் அந்த வெங்கடேஷை வாங்கிய நேரம் ஷிரேயஸை வாங்கி இருக்கலாம் என்று!

சென்னை தோற்கும்போது "அது ஒரு அழகிய நிலாக்காலம்" என்ற பாடலை போட்டது அருமை!

  • கருத்துக்கள உறவுகள்

494386904_1239564357775402_3428427697252

நினைத்துப் பார்க்க அழகாய் இருக்கும் ஹாட்ரிக் + ஒன் விக்கட் , (ஒரு ஓவரில் குறைந்த ரன்கள் நான்கு விக்கட் ) . ........ சூப்பர் ஷாகுல் ....... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

பைவவ் சூரியவம்சிக்கு 14 வயதினை விட வயது அதிகம் என ஒரு குண்டை எனது இந்திய நண்பர் போட்டார், அதற்கு அவர் கூறும் காரணம் பதினைந்து வயதிற்குட்பட்ட போட்டிகளில் வாய்ப்பு எடுப்பதற்காக பிறப்பு அத்தாட்சி பத்திரப்பதின்போது ஆண்டை மாற்றி உள்ளார்கள் என்றும் இது இந்தியாவில் பொதுவான விடயம் எனவும் கூறினார், 2017 உள்ள படத்தில் அவர் குழந்தையாக உள்ளாரே என கேட்ட பொது அதற்கான சரியான பதிலை அவர் வழங்கவில்லை, இந்த உரையாடல் நிகழ்ந்த போது அவருடன் நின்ற இன்னொரு இந்திய நண்பர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார்.

பானையில இருக்கிறதுதானே அகப்பையில் வரும், நாங்கள் தெரிவு செய்த ஒரே காரணத்திற்காக அவர்களை வெல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.😂

தொடங்கிட்டாங்களா. முந்தி பாக்கிஸ்தான் வீரர்களை அப்பிடிச் சொல்லுவினம். அப்ரிடி தனது 18 வயதில் வேகமான சதம் அடித்த போதும் இதே போன்ற ஒரு குற்றச்சாட்டு வந்திருந்தது. இப்படி கதைப்பவர்களின் மனதில் எரிச்சலைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

அந்தப் பையன் அதிர்ஷ்டத்தால் தான் அன்று நூறு அடித்தான் என்று நைசாக சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். நேரடியாக அதிர்ஷ்டம் என்று சொல்லாமல் அன்று அவனது நாள், அடித்ததெல்லாம் எல்லைக்கோட்டை தாண்டியது, அப்படி இப்படி என்று ஒரு கூட்டம். ஒருவனது திறமையை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. கீழே தள்ளாமல் இருந்தாலே போதுமானது.

  • கருத்துக்கள உறவுகள்
On 30/4/2025 at 06:52, Eppothum Thamizhan said:

சாம் கரனெல்லாம் மூன்றாவதா ஆடுற அளவிற்கு வந்திட்டுது!

உங்க ஆள் தானே நேற்று கீறோ.

50 அடித்தவுடன் பண்ணிய அட்டகாசம் இருக்கே அப்பப்பா சொல்லிமாளாது.

யாருக்கு போன் பண்ண சொன்னார்?

என்னதான் இருந்தாலும் நேற்று அவரைப் போற்ற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அடிகாரன் இன்னும் ஆறடிக்கவில்லை.

இணைப்பாட்டம் அருமை. ஒரு 220 ஓட்டங்கள் எதிர் பார்க்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று RR வெல்லும்போல இருக்கே.

  • கருத்துக்கள உறவுகள்

சூரியகுமார் செந்நிறத் தொப்பியைத் தனதாக்கிக் கொண்டார்.

200 ஓட்டங்களைத் தாண்டி போய்க்கொண்டிருக்கினம். 220 வருது

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு இணைப்பாட்டம். இருவரும் மாற்றி மாற்றி அடிப்பதும், ஓற்றை ஓட்டங்கள் ஓடி மற்றவருக்கு அடிக்கக் கொடுப்பதும். இப்பிடித்தான் ஆட வேண்டும் என்று ஒரு பாடம் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இருவரும் சமமாக 23 பந்துகளில் 48 ஓட்டங்கள்.

217 காணும் என்றுதான் நினைக்கிறேன். போல்டும் பூம்ராவும் முடிச்சு விடுவினம்.

  • கருத்துக்கள உறவுகள்

வைபவ் ஓட்டமெதுவும் எடுக்காமலே ஆட்டமிழந்தார். எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்தது நடக்கவில்லை.

ராஜஸ்தான் நடையைக்கட்டும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

2 hours ago, செம்பாட்டான் said:

அந்தப் பையன் அதிர்ஷ்டத்தால் தான் அன்று நூறு அடித்தான் என்று நைசாக சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். நேரடியாக அதிர்ஷ்டம் என்று சொல்லாமல் அன்று அவனது நாள், அடித்ததெல்லாம் எல்லைக்கோட்டை தாண்டியது, அப்படி இப்படி என்று ஒரு கூட்டம். ஒருவனது திறமையை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. கீழே தள்ளாமல் இருந்தாலே போதுமானது.

என்னைத்தான் சொல்கிறீர்கள் என்று தெரிகிறது! அதற்கான பதிலை இன்று பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்! சின்னப்பையனின் திறமையை குறைத்து மதிப்பிடவில்லை! அவர் எல்லாப்பந்துக்கும் அடிக்காமல் , தனக்கான பந்து வரும்வரை (within his arc) காத்திருக்க வேண்டும் என்றுதான் சொன்னேன்!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Eppothum Thamizhan said:

என்னைத்தான் சொல்கிறீர்கள் என்று தெரிகிறது! அதற்கான பதிலை இன்று பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்! சின்னப்பையனின் திறமையை குறைத்து மதிப்பிடவில்லை! அவர் எல்லாப்பந்துக்கும் அடிக்காமல் , தனக்கான பந்து வரும்வரை (within his arc) காத்திருக்க வேண்டும் என்றுதான் சொன்னேன்!

ஜயையோ. உங்களை அல்ல. கொஞ்சம் கவனமாத்தான் இருக்க வேணும் போல. எல்லாரும் டக்கென்டு தொப்பியப் போடுறியலே

இரண்டு மூன்று பேட்டிகள் பார்த்தேன். தொலைக்காட்சியில் தோன்றும் விளையாட்டு விற்பன்னர்கள்தான் அப்படிக் கூறினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கில, குறைந்த ஓட்டங்களைப் பெறப்போகினமோ. KKRன் 95 ஓட்டங்களைத் தாண்டுவார்களா.

6 விக்கட்டுகள் போய்விட்டன

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

இன்று RR வெல்லும்போல இருக்கே.

ஆமா ஆமா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.