Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG-8184.jpg

சுற்றுலா, வேலை, நண்பர்கள் சந்திப்பு, கொண்டாட்டம் என்று வெளியே சில நாட்கள் நாம் போய் இருந்து விட்டு வந்தாலும், வீட்டுக்கு திரும்ப வந்து சொந்தக் கட்டிலில் நித்திரை கொள்வது எப்போதும்  மகிழ்ச்சியையும், அமைதியையும் நிம்மதியையும் தரும். அது தான் வீட்டின் தனித்துவமான தன்மை. ஆனால் தனது வீட்டில், தனது கட்டிலில் படுத்திருக்கும் காஞ்சனாவுக்கு மட்டும் நித்திரையும் வரவில்லை. அமைதியும் கிடைக்கவில்லை. இருட்டில் விழித்தபடி இருந்தாள்.

“நல்ல பெடியன், எங்கடை ஊர். ஓரளவு தூரத்துச் சொந்தம். நல்ல குடும்பம் எண்டு என்ரை அம்மா சொல்லுறா. இந்தக் கலியாணத்தைக் கட்டு. நல்ல வாழ்க்கை உனக்குக் கிடைக்கும்” அவளது தந்தை சொன்ன போது அவள் பதில் சொல்லவில்லை. 

யேர்மனியில் பிறந்து வேறு ஒரு கலாச்சாரத்துக்குள் வாழும் தனக்கு நாட்டில் இருந்து  வரும் மாப்பிள்ளை ஒத்து வருமா? என்ற கேள்வியுடனே சில நாட்கள் போனது. அவளது நண்பிகளே கேட்டார்கள், ”என்னது? முன்பின் தெரியாத ஒருவன். நேரில் கூட பார்க்கவுமில்லை. உங்களுக்கு எப்பிடி இது சாத்தியமாகிறது?” அவர்களது கேள்வியிலும் உண்மை இருந்தது. 

காஞ்சனாவுக்கு ஐந்து வயாதாக இருக்கும் போது நடந்த கார் விபத்தில் தாயை இழந்திருந்தாள். அதன் பிறகு அவளது தந்தையே அவளுக்கு எல்லாமுமாக இருந்தார். எத்தனை பேர் கேட்டும், தனக்கு இன்னுமொரு கலியாணம் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்து தனக்காக வாழும் தந்தையை எப்போதும் அவள் உயரத்திலையே வைத்திருந்தாள். அவரது வார்த்தைக்கு அவள் மறு பேச்சு சொன்னதும் இல்லை.

சீதனமாக ஒரு இலட்சம் யூரோநகைஊரில் அவர்களுக்கு இருந்த காணி, பூமிசிறீலங்காவில் இருந்து கல்யாணத்துக்கு உறவினர்கள் யேர்மனிக்கு வந்து போவதற்கான பயணச் செலவுகள், கல்யாணச் செலவுஎன்று ஏகப்பட்ட செலவுகளுடன்  எங்கள் நாட்டுக் முறைப்படி கரை சேர்ந்தாள் காஞ்சனா.

கல்யாணம் முடிந்து ஒரு மாதம்தான். விடுமுறை முடிந்து விட்டது. பிரச்சினையும் தொடங்கி விட்டது.

அன்று வேலை முடிந்து வீட்டுக்கதவைத் திறந்த போதே வீட்டில் புயல் மையம் கொண்டிருந்ததை காஞ்சனா விளங்கிக் கொண்டாள்.

நேரம் என்ன எண்டு தெரியுதோ?”

 “நீங்கள்தானே கையிலை Mobile வைச்சிருக்கிறீங்கள். Mobile இலை நேரம் என்ன display செய்யேல்லையோ?”

“எனக்குத் தெரியுது? உனக்குத்தான் தெரியேல்லை. ஒரு பொம்பிளை வீட்டுக்கு வாற  நேரமே இது? “

“இப்பத்தானப்பா வேலை முடிஞ்சுது

“இரவு ஒன்பது மணிக்கோ? எல்லாரும் office  முடிஞ்சு ஐஞ்சு ஆறு மணிக்குள்ளை வீட்டை போயிடுவாங்கள். உனக்கு மட்டும் ஒன்பது பத்து மணியாகுது

“இண்டைக்கு வேலை கூட. அதை முடிக்காமல் வரேலாது. அப்பிடி வந்து மிச்ச வேலையைச் செய்ய நாளைக்குப் போனால், ஒவ்வொரு நாளும் போக வேணுமோ எண்டு புராணம் பாடத்  தொடங்கீடுவிங்கள்

“மகள் home office தான் செய்யிறாள். எப்போதாவது மாதத்திலை ஒண்டு இரண்டு நாட்களுக்குத்தான் officeக்குப் போவாள் எண்டு சொல்லித்தானே கலியாணம் செய்து வைச்சவை.

“உண்மை. ஆனால் என்ரை வேலை அப்பிடி. சில வேலைகளை office க்குப் போய்த்தான்  செய்யோணும்

“எனக்கென்னவோ நீ வேலைக்காக office க்குப் போறதாத் தெரியேல்லை

“மாதவன், களைச்சுப் போய் வந்திருக்கிறன். நல்லமுறையிலை கதையுங்கோ.

சிறீலங்காவிலை இருக்கிற ஊர் வாழ்க்கையை இங்கை உள்ள வாழ்க்கை முறையோடை ஒப்பிட்டுப் பார்க்காதையுங்கோ. அங்கை உள்ள சூழல் வேறை. இங்கை வேறை.

“நாங்கள் தமிழர்கள். எங்கை வாழ்ந்தாலும் எங்களின்ரை பண்பாடுகளை மாத்தேலாது. இரவு ஒன்பது பத்து மணிக்கு வீட்டுக்கு வாறதை என்னாலை  ஒத்துக் கொள்ளேலாது

“முதலிலை நானும் மனித இனம் எண்டதை ஒத்துக் கொள்ளுங்கோ. எங்கடை கலாச்சாரம், பண்பாடுகள்... என்னை அடிமைப் படுத்தும் எண்டால்  எனக்கு  அது தேவையில்லை

“கலியாணம் பேசக்கை நீ நல்ல  பிள்ளை, பண்பான பிள்ளை எண்டெல்லாம்  எனக்குச் சொல்லிச்சினம். உடுப்பு, ஆளின்ரை நடை, செயல்பாடு எல்லாம் இஞ்சை வேறையாக் கிடக்கு

IMG-8186.jpg

மனம் ஒரு நிலையில் இல்லாமல் கட்டிலில் நித்திரையின்றி தவித்துக் கொண்டிருந்த காஞ்சனா, அலைபேசியில் ஒலித்த  “ஆனந்த யாழை மீட்டுகிறாய்

அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்பாடலைக் கேட்டு  கட்டிலில் எழுந்து அமர்ந்து கொண்டாள். அந்தப் பாடலை தனது தந்தையின் தொலைபேசி அழைப்பாக அவள் அலைபேசியில் பதிவு செய்திருந்தாள்.

கட்டிலில் இருந்த படியே அலைபேசியைக் கையிலெடுத்து

“சொல்லுங்கோ அப்பா” என்றாள்.

“மாதவன் ரெலிபோன் எடுத்தார்

“எடுப்பார் எண்டு எனக்குத் தெரியும்”

“கதவைத் திறக்கேலாதாம் உனக்கு போன் எடுத்தால் answer இல்லையாம்

“அவராலை கதவைத் திறக்க ஏலாது. நான் கதவின்ரை பூட்டை முழுசா மாத்தீட்டன்.  Phoneஇலையும் அவரை block செய்திட்டன். எனக்கும் அவருக்கும் ஒத்து வரேல்லை. அவருக்கும் எனக்குமான கலியாண ஒப்பந்தம் முடிவுக்கு வருகுது. நான் lawyer ஓடை எல்லாம் கதைச்சிட்டன். நீங்கள் கலியாணம் என்று கேட்டபோதே நான் வேண்டாமெண்டு சொல்லியிருக்கோணும். அந்த நேரம் நான் உங்களின்ரை சொல்லை மதிச்சனே தவிர மற்றதையெல்லாம் சிந்திச்சுப் பாக்கேல்லை. இங்கை ஒவ்வொருநாளும் சண்டை அவரின்ரை சந்தேகப் பார்வை,  பேச்சு…… அப்பா, நான் நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்தனான். மாதவனுக்கு சீதனமா ஊரிலை இருக்கிற சொத்துகள், பிறகு காசு, நகை எல்லாம் குடுத்தீங்கள். வேணுமெண்டால் ஒரு நட்ட ஈடாக மாதவனும் அவரின்ரை குடும்பமும் அதுகளை எடுத்துக் கொள்ளட்டும். என்னைக் கட்டினதாலை அவருக்கு யேர்மனி விசாவும் கிடைச்சிருக்கு. நல்ல வேலையையும் அவருக்கு ஏற்ற பொம்பிளையையும் அவர் தேடிக் கொள்ளட்டும். என்னைப் பொறுத்தவரை இனி அவர் எனக்கு வேண்டாம். மாதவனின்ரை சகல பொருட்களையும் கட்டி கராஜ்ஜுக்குள்ளை வைச்சிருக்கிறன். கராஜ் திறந்துதான் இருக்கு. எடுத்துக் கொண்டு போகச் சொல்லுங்கோ

அலைபேசியை வைத்து விட்டு காஞ்சனா கட்டிலில் படுத்தாள். நிம்மதியாக இருந்தது. இனி வீட்டுக் கட்டிலில் சுகமான தூக்கம் அவளுக்கு க் கிடைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையின் சாயல் சற்று முன்னைய காலமாக இருக்கலாம். இப்போது சற்று விழித்து விடடார்கள் பெண்கள். முகம் தெரியாத அறிமுகம் இல்லாத பழகாத ஆண்களை நம்பி கழுத்தைக் கொடுக்க தயாரில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பெட்டைகள் திருமணம் என்றால் குறைந்த பட்சம் உயர்தர வகுப்பாவது படித்திருக்க வேண்டும் என்பார்கள்.

இங்கு பல்கலைக்கு படிக்க வந்தவர்களை வேண்டாம் என்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிலாமதி said:

இந்தக் கதையின் சாயல் சற்று முன்னைய காலமாக இருக்கலாம். இப்போது சற்று விழித்து விடடார்கள் பெண்கள். முகம் தெரியாத அறிமுகம் இல்லாத பழகாத ஆண்களை நம்பி கழுத்தைக் கொடுக்க தயாரில்லை.

நிலாமதி, உங்கள் கருத்து உண்மையானது. ஆனாலும் இன்னும் கொஞ்சம் மிச்சம் சொற்பம் எங்களிடம் இருக்கத்தான் செய்கிறது. . இந்தக் கதை உண்மையானது. நான் வசிக்கும் மாநிலத்தில் மூன்று வருடங்களுக்கு முன் நடந்தது. இப்பொழுது காஞ்சனா மறுமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்று கேள்விப்பட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kavi arunasalam said:

சீதனமாக ஒரு இலட்சம் யூரோநகைஊரில் அவர்களுக்கு இருந்த காணி, பூமிசிறீலங்காவில் இருந்து கல்யாணத்துக்கு உறவினர்கள் யேர்மனிக்கு வந்து போவதற்கான பயணச் செலவுகள், கல்யாணச் செலவுஎன்று ஏகப்பட்ட செலவுகளுடன்  எங்கள் நாட்டுக் முறைப்படி கரை சேர்ந்தாள் காஞ்சனா

கரை சேர்ந்தது என்னவோ மாதவன் போல தான் கிடக்கு. காஞ்சனா கடலுக்கை விழுந்து போன மாதிரித் தான் நிலைமை 😄.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, villavan said:

கரை சேர்ந்தது என்னவோ மாதவன் போல தான் கிடக்கு. காஞ்சனா கடலுக்கை விழுந்து போன மாதிரித் தான் நிலைமை 😄.

நானும் இதை வாசித்ததும் அதைத்தான் நினைத்தேன் . ........ "கண்ணை விற்று ஓவியம் வாங்கியதுபோல் " காஞ்சனாவின் நிலைமை . ............! 😇

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, villavan said:

ரை சேர்ந்தது என்னவோ மாதவன் போல தான் கிடக்கு. காஞ்சனா கடலுக்கை விழுந்து போன மாதிரித் தான் நிலைமை 😄.

வில்லவன், நீங்கள் சொல்வது சரி. ஆனாலும் காஞ்சனாவுக்கு வாழ்நாள் முழுதும் அமைய இருந்த ஒரு அடக்குமுறையான வாழ்க்கையில் இருந்து விடுதலை கிடைத்திருக்கிறது அல்லவா? ஆக இருவருக்கும் ஒரு சுகமான முடிவு.

10 hours ago, suvy said:

நானும் இதை வாசித்ததும் அதைத்தான் நினைத்தேன் . ........ "கண்ணை விற்று ஓவியம் வாங்கியதுபோல் " காஞ்சனாவின் நிலைமை . ............! 😇

Suvy, காஞ்சனாவின் நிலமை நன்றாகத்தான் இருக்கிறது. அவள் தன் விருப்பம்போல் வாழலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kavi arunasalam said:

வாழ்நாள் முழுதும் அமைய இருந்த ஒரு அடக்குமுறையான வாழ்க்கையில் இருந்து விடுதலை கிடைத்திருக்கிறது அல்லவா?

உண்மை @Kavi arunasalam அண்ணை. கடைசியில் காஞ்சனாக்கு நல்ல தூக்கம் மற்றும் வாழ்க்கை கிடைத்தது நல்ல முடிவு.

எத்தனையோ பேர் குடும்பங்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் சமாளித்தபடி தங்கள் வாழ்க்கையையே முழுமையாகத் தொலைத்து விட்டு ஏதோ கடைமைக்கு வாழ்கின்றனர். அப்பிடிப் பார்க்கும் போது காஞ்சனா கெட்டிக்காரி.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, villavan said:

கரை சேர்ந்தது என்னவோ மாதவன் போல தான் கிடக்கு. காஞ்சனா கடலுக்கை விழுந்து போன மாதிரித் தான் நிலைமை 😄.

நீந்தி கரை சேர்ந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்கின்றார்..காஞ்சனா

On 9/3/2025 at 08:12, Kavi arunasalam said:

யேர்மனியில் பிறந்து வேறு ஒரு கலாச்சாரத்துக்குள் வாழும் தனக்கு நாட்டில் இருந்து  வரும் மாப்பிள்ளை ஒத்து வருமா? என்ற கேள்வியுடனே சில நாட்கள் போனது. அவளது நண்பிகளே கேட்டார்கள், ”என்னது? முன்பின் தெரியாத ஒருவன். நேரில் கூட பார்க்கவுமில்லை. உங்களுக்கு எப்பிடி இது சாத்தியமாகிறது?” அவர்களது கேள்வியிலும் உண்மை இருந்தது. 

நிச்சயமாக இது ஒத்து வராது ...குறைந்த பச்சம் பழகியாவது(பேசி) பார்க்க வேணும்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு அமெரிக்காவில் நான் இருக்கும் பகுதியில் இப்படியான திருமணங்கள் நடப்பது மிகவும் அரிது. கிட்டத்தட்ட இருபத்து ஐந்து வருடங்களின் முன்னர் ஒன்று நடந்தது நினைவில் இருக்கின்றது. அவர்கள் இருவரும் சில வருடங்களில் பிரிந்து போனார்கள்.

இன்று எனக்கு இரண்டு பிள்ளைகள் இந்த வயதுகளில் இருக்கின்றார்கள். இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள், மகன் ஒருவர் மகள் ஒருவர். இப்படியான ஒன்று சரிவரும் என்று எனக்கு தோன்றவில்லை......... நல்லது கூடாது என்பதையும் தாண்டி, கல்லில் எழுதிய எழுத்து போல பழக்கவழக்கம் என்ற ஒன்று ஒவ்வொரு பிரதேசத்திற்கும், சூழலுக்கும் அமைந்தும் விட்டது........... ஒருவர் அவருக்கு பரிச்சயமில்லாத இன்னொன்றை தனது வாழ்க்கைப் பாதையாக ஏற்றுக் கொள்வது மிகவும் கடினம்............

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் எமது நாட்டவரை தான் திருமணம் செய்துள்ளாரா? ( அதாவது ஜேர்மனில் பிறந்து வளர்ந்தவரா)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nunavilan said:

மீண்டும் எமது நாட்டவரை தான் திருமணம் செய்துள்ளாரா?

எங்கள் நாட்டவர்

  • கருத்துக்கள உறவுகள்

கவி அருணாச்சலம் அண்ணாவின் இக்கதை, மாறிவரும் சமுதாய அமைப்புகளையும், கலாச்சார வேறுபாடுகளையும் உணர்வுபூர்வமாகப் பிரதிபலிக்கிறது... காஞ்சனாவின் கதையில், பாரம்பரியத்திற்கும் தனிப்பட்ட விருப்பங்களுக்கும் இடையே உருவாகும் மோதல் மிகவும் உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது...

யேர்மனியில் பிறந்து வளர்ந்த காஞ்சனாவுக்கு, பாரம்பரிய தமிழ் கலாச்சாரத்தின் அடிப்படையில் திருமணம் என்பது எவ்வளவு சிக்கலானதாக இருக்கிறது என்பதைக் கதையாளர் மிக நுட்பமாகக் காட்டியுள்ளார்... திருமணத்திற்கு பிறகு காஞ்சனா சந்திக்கும் உணர்ச்சிப் போராட்டங்கள், அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் கலாச்சார மோதல்கள், அவளது மனநிலை – இவையனைத்தும் நம்மை யதார்த்த உணர்விற்கு கொண்டுசெல்கிறது...

காஞ்சனா தனது வாழ்க்கையை தன் விருப்பப்படி அமைத்துக் கொள்ள முடிவெடுப்பது, பெண்களின் வாழ்க்கையில் ஒரு புதிய திசையை குறிக்கிறது... வாழ்க்கை முழுவதும் அடக்குமுறைக்கு உட்பட்டு வாழ்வதை விட, தன்னம்பிக்கையுடன் முடிவெடுத்து, சுயநிறைவை அடைவது என்பது இக்கதையின் முக்கியப் பொருள்... இது, இன்றைய காலத்திற்கேற்ப பெண்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே கட்டுப்படுத்தும் நிலையை பிரதிபலிக்கிறது...

அமைதியற்ற வாழ்க்கை மத்தியில், வீட்டுக் கட்டிலில் அமைதியான தூக்கம் கிடைப்பது என்பது, நிம்மதியும் விடுதலையும் குறிக்கும் அழகிய முடிவாகவே பார்க்கப்படுகிறது... காஞ்சனாவின் முடிவு, பெண்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே வழிநடத்தும் காலத்தின் பிரதிபலிப்பாக திகழ்கிறது…

முடிவாகச் சொல்லப்போனால், “தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே” என்பது காஞ்சனாவின் மனநிலையை மட்டும் அல்ல, பெண்கள் தங்களின் வாழ்க்கையில் அமைதி பெறும் தருணத்தைக் குறிக்கும் சிறப்பான உவமையாகும்…

  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2025 at 22:12, Kavi arunasalam said:

நல்ல பெடியன், எங்கடை ஊர். ஓரளவு தூரத்துச் சொந்தம். நல்ல குடும்பம் எண்டு என்ரை அம்மா சொல்லுறா. இந்தக் கலியாணத்தைக் கட்டு. நல்ல வாழ்க்கை உனக்குக் கிடைக்கும்”

On 8/3/2025 at 22:12, Kavi arunasalam said:

காஞ்சனாவுக்கு ஐந்து வயாதாக இருக்கும் போது நடந்த கார் விபத்தில் தாயை இழந்திருந்தாள்.

இரண்டும் முரண்பாடுகிறது ...ஆனாலும் கதை நல்லது தான்

ஒரு லட்சம் யூரோ  மற்றும் காணி பூமிகள். திருப்பி கொடுக்கவில்லையா. ???

தரகர் மூலம் ஒருபோதும் திருமணம் செய்யக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இரண்டும் முரண்பாடுகிறது ...ஆனாலும் கதை நல்லது தான்

கவியர் இந்த முரண்பாட்டில் நானும் கொஞ்சம் தடுமாறிவிட்டேன்...திருப்பி திருப்பி வாசித்தேன்....கதைதானே...ஆனால் இதனை கதையென்று ..ஒதுங்கிச் செல்ல முடியவில்லை...நிஜமும்தான்...எனக்கும் பிள்ளைகள் இருக்கினம்...அவர்களுடய விருப்பிக்கு விட்டிருக்கின்றேன்..ஆனால் நூலை கட்டி ஒருவட்டமாக விட்டிருக்கின்றேன்...முக்கியமானது எம்மினமாக இருக்கவேண்டும்..

கதையும் அருமை ...சித்திரமும் அருமை தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இரண்டும் முரண்பாடுகிறது

24 minutes ago, alvayan said:

கவியர் இந்த முரண்பாட்டில் நானும் கொஞ்சம் தடுமாறிவிட்டேன்...திருப்பி திருப்பி வாசித்தேன்

On 8/3/2025 at 22:12, Kavi arunasalam said:

நல்ல பெடியன், எங்கடை ஊர். ஓரளவு தூரத்துச் சொந்தம். நல்ல குடும்பம் எண்டு என்ரை அம்மா சொல்லுறா. இந்தக் கலியாணத்தைக் கட்டு. நல்ல வாழ்க்கை உனக்குக் கிடைக்கும்” அவளது தந்தை சொன்ன போது அவள் பதில் சொல்லவில்லை.

அது ஊரில் வாழ்ந்த அப்பம்மா கூறியது

ஊரில் இருந்து மாப்பிள்ளையை இறக்குமதி செய்வது..... சரியாகப்படவில்லை என்று நினைத்து..... இங்கேயே தெரியாத... அறிமுகம் இல்லாத.... மாப்பிள்ளைகளிடம் மாட்டுப்பட்டவர்களும் இருக்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, வாத்தியார் said:

அது ஊரில் வாழ்ந்த அப்பம்மா கூறியது

ஊரில் இருந்து மாப்பிள்ளையை இறக்குமதி செய்வது..... சரியாகப்படவில்லை என்று நினைத்து..... இங்கேயே தெரியாத... அறிமுகம் இல்லாத.... மாப்பிள்ளைகளிடம் மாட்டுப்பட்டவர்களும் இருக்கின்றார்கள்

விளக்கத்திற்கு நன்றிகள் பல வாத்தியார் கவி. எழுதியது சரி தான் ஆனால் இவ்வளவு பெரும் தொகை சீதனம. கொடுத்து திருமணம் அதுவும் ஊரிலிருந்து மணமகன் எடுப்பது ஏன்???

நான் இருக்கும் இடத்தில் இப்படி திருமணம் நடந்தது 15 வருடங்களுக்கு முன் பிரிந்து விட்டார்கள் ஏன் என்பது தெரியாது பெண் இங்கே இருந்தவர்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.