Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது. அடைப்புகள் ஏற்பட்டன. இரண்டாயிரத்தில் பைபாஸ் செய்துக்கொண்டேன்.

அப்போதும் சிகரெட் பிடிப்பவனாக இருந்திருந்தால் மரணம் அன்றே குறிக்கப்பட்டிருக்கும். சிகரெட் நிறுத்தி ஆரோக்கியத்தை அதிகப்படுத்தியதால் அந்த ஆபரேஷனை சமாளிக்க முடிந்தது.

பிறகு பத்து வருடங்கள் எந்தவித இம்சையும் இல்லாமல் அழகாக வாழ்க்கை ஓடியது.

2011 இல் நீரிழிவு காரணமாக ரத்தக்கொதிப்பின் காரணமாக மறுபடியும் அடைப்பு ஏற்பட, இரண்டாம் முறை பைபாஸ் செய்து கொண்டேன்.

சுவாச பயிற்சி செய்திருந்ததால், மூச்சு பற்றிய ஞானம் இருந்ததால், தினந்தோறும் காலையும் மாலையும் வேகமாக நடந்ததால், மெல்லிய உடற்பயிற்சிகள் செய்ததால் இரெண்டாவது பைபாஸையும் தாண்டிவர முடிந்தது.

ஆனால் இரண்டாயிரத்து பன்னிரெண்டில் அடுத்த சோதனை. பத்தொன்பது வயதில் பிடித்த சிகரெட்டுகள் அறுபத்தாறு வயதில் தன் விஷத்தன்மையை காட்டியது. தன் வக்கிரத்தை நிரூபித்தது.

நுரையிரலின் அடிப்பக்கம் முழுவதும் நிகோடினால் ஏற்பட்ட சளி அடைப்புகள். நுரையீரல் முழு திறனோடு வேலை செய்யவில்லை. அதற்கான திறனை மெல்ல மெல்ல இழந்தது. அதோடு சளி அடைப்பும் சேர்ந்து பழிவாங்கியது. மூச்சு திணறல் ஏற்பட்டது.

ஒரு பிடி சாதத்திற்கு அவஸ்தை படும் நிலைமை. முகம் முழுவதும் மூடி ஆக்சிஜனை செலுத்தினால் தான் உயிரோடு இருப்பேன் என்கிற நிலைமை. என்.ஐ.வி என்கிற அந்த விஷயத்தோடுதான் இரவு தூங்க முடியும் என்கிற நிலைமை. பிராங்கோஸ்கோபி என்று மூச்சுகுழலுக்குள் கருவியை விட்டு சோதனை செய்து அங்கே அடி நுரையீரலில் அடர்த்தியாக அசைக்க முடியாதபடிக்கு கெட்டியாக சளி இருப்பதை தெரிந்து கொண்டார்கள்.

இதை எப்படி சரிசெய்வது?

வலியை பொறுத்துக் கொள்ளலாம். வேறு ஏதேனும் பத்தியமாக இருந்தால் அவ்விதமே நடந்து கொள்ளலாம். மூச்சு இழுத்து பிராணவாயு உள்ளே போய் வெளியே வருவதே கடினமானால் எப்படி சமாளிப்பது? தினசரி மரண போராட்டமாக மாறிவிட்டது.

மூச்சு வேகமாக இழுத்து இழுத்து இன்னும் சில நிமிடங்களில் பாலகுமாரன் செத்து விடுவான் என்ற எண்ணத்தை மற்றவருக்கு ஏற்படுத்தியது.

வீடு தவித்தது. வீட்டிற்குள் மூன்று நான்கு நாட்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கும்படி நேரிட்டது. வேகமாக காற்றை செலுத்தக்கூடிய கருவி தனியாக இருந்தது.

ஆஸ்பத்திரியிலிருந்து வீடு வந்தவுடன் வீடு ஆஸ்பத்திரியாக மாறியது. எப்போதும் மூக்கில் ஆக்சிஜன் இருக்கும் படி ஒரு அவஸ்தை.

ஸ்கூட்டர் எடுத்துக் கொண்டு மயிலாப்பூர் முழுவதும் சுற்றித் திரிந்தவனுக்கு சிறைத்தண்டனை போல வீட்டில் அதே அறையில் இருக்கும் படி நேரிட்டது. மிகப்பெரிய வலியில்லை ஜீரம் இல்லை. ஆனால் ஆக்சிஜன் குழாயை எடுத்து விட்டால் மூச்சுத் திணற ஆரம்பிக்கும். அது இல்லாமல் நடக்க முடியாது, பேச முடியாது உண்ண முடியாது எதுவும் செய்ய முடியாது. காலில் சங்கிலி கட்டி கையில் இரும்பு குண்டை கொடுத்தது போன்ற மிகப்பெரிய தண்டனை. வேறு எந்த வழியும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டேன்.

ஒரு நாளைக்கு நூற்றியிருபது சிகரெட் பிடிக்க வேண்டும் என்கிற நிலையில் இருந்ததை நினைத்து சிரித்துக் கொண்டேன். அப்படி புகைத்தால் தான் கதை எழுத வரும் என்று முட்டாள் தனமாக நம்பியதை நொந்து கொண்டேன்.

மரணம் எல்லோருக்கும் வரும். எப்பொழுது வேண்டுமானாலும் வரும். எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரும். ஆனால் மூச்சு திணறி இதோஸ.. இதோஸ என்று பயம் காட்டுகின்ற ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது.

நெஞ்சு வலித்தது. ஐந்து நிமிடம் துடித்தார். உயிர் நீங்கியது என்பது பராவாயில்லை.

மூச்சு விட முடியாமல் உள்ளுக்குள் போன மூச்சை வெளியே செலுத்த முடியாமல் வெளியே இருக்கின்ற பிராண வாயுவை உள்ளே இழுக்க முடியாமல் திணறி கதறுகின்ற வேதனை யாருக்கும் வரக்கூடாது. சிகரெட் பிடிக்கலாம் என்கிற ஆசையுள்ளவர்கள் தயவு செய்து அந்த எண்ணத்தை அழித்து விடுங்கள்.

- எழுத்தாளர் பாலகுமாரன் -

May be an image of 1 person and beard

Jeeva Murugesan  ·

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி நுணாவிலான்.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான எழுத்தாளர் . ......... பல இடங்களில் தனது வாழ்க்கையையும் ஒளிவு மறைவின்றி பகிர்ந்திருக்கிறார் . ........ யோகி ராம்சுரத்குமாரின் பக்தனுமாவார் . ........!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்த பல நாட்டவர்கள், இளவயதில் சிகரெட் புகைத்து… ஒரு கட்டத்தில் அதனை நிறுத்திய பின் 60 வயதுகளில் சுவாசம் சம்பந்தப் பட்ட பெரும் பிரச்சினைகளை எதிர் கொண்டார்கள்.

முக்கியமாக அயலவர் ஒருவர் அதனால் படும் சிரமத்தை நேரில் கண்டேன். நேர காலம் இல்லாமல் நள்ளிரவில் அம்புலன்ஸ் வந்து அவர் வீட்டு வாசலில் நிற்கும். இறுதிக் காலங்களில் அவர் ஒட்சிசன் சிலிண்டருடன் தான் நடமாடினார். அவரின் நோயால்… அவரின் குடும்பத்தவர்களும் மிகவும் சிரமப் பட்டு விட்டார்கள்.

சிகரட் புகைப்பவர்கள் யாராவது இருந்தால்… தயவு செய்து அதனை நிறுத்தி விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

எனக்குத் தெரிந்த பல நாட்டவர்கள், இளவயதில் சிகரெட் புகைத்து… ஒரு கட்டத்தில் அதனை நிறுத்திய பின் 60 வயதுகளில் சுவாசம் சம்பந்தப் பட்ட பெரும் பிரச்சினைகளை எதிர் கொண்டார்கள்.

சிறி நான் 14 வயதில் புகைக்க பழகி அதற்கு அடிமையாகி 97ம் ஆண்டு இருதயநோய் வரும்வரை புகைத்துக் கொண்டே இருந்தேன்.

எனக்கு புகையால்த் தான் நெஞ்சுவலியே வந்திருக்கிறது.

இதை ஒரு சவாலாக எடுத்து புகைக்கவே மாட்டேன் என்று எண்ணி இன்றுவரை புகைப்பதில்லை.

அதேபோல அந்த வயதிலேயே ஆனைக்கோட்டை பனம் கள்ளு என்று தொடங்கி காலப்போக்கில் ஒரு குடிகாரனாகவே மாறிவிட்டேன்.குடிக்காக நாளே இல்லை என்றே சொல்லலாம்.

1987இல் காய்ச்சல் வந்து மாறவே மாட்டேன் என்றது.ஆனைப்பந்தியில் இருந்த தனியார் வைத்தியசாலையில் பலநாட்கள் இருந்தேன்.

இரத்த சோதனையில் குடியினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விட்டதாக சொன்னார்கள்.

அதோடு விட்ட குடி இப்போதும் தொடுவதில்லை.

இத்தனைக்கும் எனது நண்பர்கள் அங்கும் சரி இங்கும் சரி எல்லோருமே குடிப்பார்கள்.அவர்களுக்கு மத்தியில் இருப்பேன்.

இதை மிகவும் வேதனையுடனே எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்களுடைய மன உறுதிக்கு பாராட்டுக்கள் ஈழப்பிரியன்.

இங்கு பல தமிழர்கள் வந்த ஆரம்பத்தில் குடிக்க ஆரம்பித்து, அதனை நிறுத்த முடியாமல் மொடா குடிகாரர்களாகி செய்த வேலையையும் இழந்து நோயாளிகளாகி, குடும்பத்தையும் பிரிந்தவர்கள், இறந்தவர்கள் என்று நிறைய உதாரணம் சொல்லலாம்.

ஒரு நல்ல விடயம்… இப்போ அப்படியான செய்திகளை கேள்விப் படுவதில்லை. அடுத்த தலைமுறை இந்த விடயத்தில் முன் எச்சரிக்கையாக இருக்கின்றார்கள் என்றே நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி நான் 14 வயதில் புகைக்க பழகி அதற்கு அடிமையாகி 97ம் ஆண்டு இருதயநோய் வரும்வரை புகைத்துக் கொண்டே இருந்தேன்.

எனக்கு புகையால்த் தான் நெஞ்சுவலியே வந்திருக்கிறது.

இதை ஒரு சவாலாக எடுத்து புகைக்கவே மாட்டேன் என்று எண்ணி இன்றுவரை புகைப்பதில்லை.

அதேபோல அந்த வயதிலேயே ஆனைக்கோட்டை பனம் கள்ளு என்று தொடங்கி காலப்போக்கில் ஒரு குடிகாரனாகவே மாறிவிட்டேன்.குடிக்காக நாளே இல்லை என்றே சொல்லலாம்.

1987இல் காய்ச்சல் வந்து மாறவே மாட்டேன் என்றது.ஆனைப்பந்தியில் இருந்த தனியார் வைத்தியசாலையில் பலநாட்கள் இருந்தேன்.

இரத்த சோதனையில் குடியினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விட்டதாக சொன்னார்கள்.

அதோடு விட்ட குடி இப்போதும் தொடுவதில்லை.

இத்தனைக்கும் எனது நண்பர்கள் அங்கும் சரி இங்கும் சரி எல்லோருமே குடிப்பார்கள்.அவர்களுக்கு மத்தியில் இருப்பேன்.

இதை மிகவும் வேதனையுடனே எழுதுகிறேன்.

வேதனையுடன் எழுத வேண்டாம் அண்ணா. சந்தோசமாக எழுதுங்கள்.உங்களின் மன உறுதிக்கு ஒரு சபாஸ் சொல்லுங்கள்.

எனது யூத நண்பர் தொடர்ந்து சிகரட்டை குடித்து கொண்டே இருப்பார். 13 வயதில் புகைக்க தொடங்கி இப்போ 40 ஆகி விட்டது. சில தடவை புகைத்தலை விட்டு மீண்டும் பழைய இடத்துக்கே வந்து விடுவாராம். மனைவி, அம்மா எல்லோரும் சொல்லியும் தன்னால் விட முடியவில்லையாம். இப்போ தனது 8 வயது மகள் அப்பா புகை மணம் தாங்க முடியவில்லை. புகைத்தால் தனக்கு கிட்ட வர வேண்டாம் என கூறினாராம். இப்போ 3 மாதமாகிறது புகைத்தல் விட்டு. உடம்பின் நிறை கூடுகிறது என்றார். உடற்பயிற்சி செய். மீண்டும் புகைக்காதே என்று சொல்லி உள்ளேன். பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nunavilan said:

இப்போ தனது 8 வயது மகள் அப்பா புகை மணம் தாங்க முடியவில்லை. புகைத்தால் தனக்கு கிட்ட வர வேண்டாம் என கூறினாராம். இப்போ 3 மாதமாகிறது புகைத்தல் விட்டு. உடம்பின் நிறை கூடுகிறது என்றார். உடற்பயிற்சி செய். மீண்டும் புகைக்காதே என்று சொல்லி உள்ளேன். பார்க்கலாம்.

இவ்வளவு எல்லா கூத்துக்களும் அடித்தது இன்னமும் பிள்ளைகளுக்குத் தெரியாது.

ஆனாலும் ஏதோ கரடுமுரடான வாழ்வு இருந்திருக்கிறதென நம்புகிறார்கள்.

இதனால் எனது பழைய நண்பர்களை சந்தித்தால் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று பிள்ளைகளை இழுத்துக் கொண்டு ஓடிவிடுவார்.

இவைகளை விட்டதனால் இன்றுவரை தாக்கத்தைக் காணவில்லை.

ஆனாலும் எனது பேஸ்மன்ற் ரொம்ப வீக் நீண்டகாலம் உங்கள் எல்லோருடனும் வாழ முடியாது என்று சொல்லி நினைப்பூட்டிய படியே இருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நான் 14 வயதில் புகைக்க பழகி அதற்கு அடிமையாகி 97ம் ஆண்டு இருதயநோய் வரும்வரை புகைத்துக் கொண்டே இருந்தேன்.

எனக்கு புகையால்த் தான் நெஞ்சுவலியே வந்திருக்கிறது.

இதை ஒரு சவாலாக எடுத்து புகைக்கவே மாட்டேன் என்று எண்ணி இன்றுவரை புகைப்பதில்லை.

நான் பத்து வருடங்கள் புகை பிடித்து

அதை விட்டு பத்து வருடங்கள் ஆகிய பின்னர்

மீண்டும் புகைத்தலுக்கு அடிமையாகி 20 வருடங்கள் ஆகிய பின்னர்

இப்போது பத்து மாதங்களாக பிடிப்பதில்லை

எனக்குப் பத்தொன்பது வயதாகி இருந்த போது முதன் முதலில் புகை பிடிக்க ஆரம்பித்தேன் .

இப்போது முக்கியமான கேள்வி.....

எனக்கு எத்தனை வயது இப்போது ? 😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வாத்தியார் said:

நான் பத்து வருடங்கள் புகை பிடித்து

அதை விட்டு பத்து வருடங்கள் ஆகிய பின்னர்

மீண்டும் புகைத்தலுக்கு அடிமையாகி 20 வருடங்கள் ஆகிய பின்னர்

இப்போது பத்து மாதங்களாக பிடிப்பதில்லை

எனக்குப் பத்தொன்பது வயதாகி இருந்த போது முதன் முதலில் புகை பிடிக்க ஆரம்பித்தேன் .

இப்போது முக்கியமான கேள்வி.....

எனக்கு எத்தனை வயது இப்போது ? 😄

இன்னுமிரு மாதத்தில் உங்கள் 60 ஆவது பிறந்தநாள்.😁

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nunavilan said:

இன்னுமிரு மாதத்தில் உங்கள் 60 ஆவது பிறந்தநாள்.😁

இல்லை

இருந்தாலும் பதிலுக்கு நன்றி 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

சிறி நான் 14 வயதில் புகைக்க பழகி அதற்கு அடிமையாகி 97ம் ஆண்டு இருதயநோய் வரும்வரை புகைத்துக் கொண்டே இருந்தேன்.

எனக்கு புகையால்த் தான் நெஞ்சுவலியே வந்திருக்கிறது.

இதை ஒரு சவாலாக எடுத்து புகைக்கவே மாட்டேன் என்று எண்ணி இன்றுவரை புகைப்பதில்லை.

அதேபோல அந்த வயதிலேயே ஆனைக்கோட்டை பனம் கள்ளு என்று தொடங்கி காலப்போக்கில் ஒரு குடிகாரனாகவே மாறிவிட்டேன்.குடிக்காக நாளே இல்லை என்றே சொல்லலாம்.

1987இல் காய்ச்சல் வந்து மாறவே மாட்டேன் என்றது.ஆனைப்பந்தியில் இருந்த தனியார் வைத்தியசாலையில் பலநாட்கள் இருந்தேன்.

இரத்த சோதனையில் குடியினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விட்டதாக சொன்னார்கள்.

அதோடு விட்ட குடி இப்போதும் தொடுவதில்லை.

இத்தனைக்கும் எனது நண்பர்கள் அங்கும் சரி இங்கும் சரி எல்லோருமே குடிப்பார்கள்.அவர்களுக்கு மத்தியில் இருப்பேன்.

இதை மிகவும் வேதனையுடனே எழுதுகிறேன்.

உலக மகா அதிசயம் பிரியன்....உறுதி... நான் குடிப்பதில்லை ..சிகரட் பிடிப்பதில்லை என்பதில் உறுதியாகா இருந்த்தேன் ...கனடாவந்து 35 வருடம் ...தண்ணி மன்னர்கள் ..ஊதுவோர்கள் மத்தியிலும் ,நக்கல் நளினங்களை கேட்டபடி கோக் குடித்துக் கொண்டிருக்கின்றேன்...குடித்து கும்மாளம் அடிப்பவன் பல் விசயம்களை சாதிப்பார்கள்... அது எனக்கு முடியாமலிருக்கிறது..

1 hour ago, ஈழப்பிரியன் said:

ஆனாலும் எனது பேஸ்மன்ற் ரொம்ப வீக் நீண்டகாலம் உங்கள் எல்லோருடனும் வாழ முடியாது என்று சொல்லி நினைப்பூட்டிய படியே இருப்பேன்.

கடவுளை நம்புங்கள்...கைவிடப்படமாட்டீர்கள்....எல்லாம் அவனாலேதான் நடக்கும்

55 minutes ago, வாத்தியார் said:

நான் பத்து வருடங்கள் புகை பிடித்து

அதை விட்டு பத்து வருடங்கள் ஆகிய பின்னர்

மீண்டும் புகைத்தலுக்கு அடிமையாகி 20 வருடங்கள் ஆகிய பின்னர்

இப்போது பத்து மாதங்களாக பிடிப்பதில்லை

எனக்குப் பத்தொன்பது வயதாகி இருந்த போது முதன் முதலில் புகை பிடிக்க ஆரம்பித்தேன் .

இப்போது முக்கியமான கேள்வி.....

எனக்கு எத்தனை வயது இப்போது ? 😄

60 வய்தும் 10 மாதமும் ...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

எனக்கு எத்தனை வயது இப்போது ?

வாத்தியார் 50 ஆகிறது.

38 minutes ago, alvayan said:

கடவுளை நம்புங்கள்...கைவிடப்படமாட்டீர்கள்....எல்லாம் அவனாலேதான் நடக்கும்

நான் அதிலும் வீக்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது புகை ஆரம்பம் 13,14 வயதுகளில் என நினைக்கின்றேன். ஆரம்பம் பேப்பர், பீடி,சுருட்டு என தொடங்கி வெள்ளை சுருட்டில் என் வாழ்க்கை பிரகாசமாகியது. புத்திமதிகளும் பெரிதாக இல்லாத காலம். இழுக்க....இழுக்க இன்பமயமான காலம்.எனினும் ஊரில் பெரியவர் மரியாதை,பய நிமித்தம் சற்று குறைவாகவே இழுவை அடக்கி வாசிக்கப்பட்டது.

வெளிநாடு வந்தபின் கட்டாக்காலியாக திரிந்த எனக்கு எல்லாமே சுதந்திரமாக தெரிந்தது.கட்டுபடுத்த யாருமேயில்லை. ஆரம்ப காலத்தில் புகைத்தல் நாகரீகமாக தெரிந்த எனக்கு ....போகப்போக அத்தியவசியமாகி விட்டது.தினசரி 40 வெள்ளை சுருட்டுக்களை உள்ளே இழுத்தேன். இன்னும் இழுக்க வேண்டும் போலிருந்தது. படுக்கையிலும் புகைத்தேன்.

இள வயதில் எந்த விக்கனமும் தெரியவில்லை. எல்லாம் நலமாக சுகமாகவே இதமாகவே தெரிந்தது.

36 வயதில் மனதுக்குள் ஏதோ ஒரு அலுப்பு தட்டியது. புகைத்தலை நிறுத்தி...இனி புகைத்தலே வேண்டாம் என முடிவெடுக்க இருதய பிரச்சனை ஆரம்பமாகியது. அன்றிலிருந்து இன்று வரை புகைத்தலை நான் தேடவில்லை.என் மனமும் தேடவில்லை.

இருந்தாலும் வைத்தியர்கள் எனக்கு தேதி குறிக்கும் போது எட்டு செலவில்லாமல் ஆற அமர இருந்து ஊதி தள்ள வேண்டும் என்ற திட்டம் அடிமனதில் இருக்கத்தான் செய்கின்றது.😂

அவரவர் உடம்பு வாசி.யாரும் எதுவும் எப்போதும் வீரம் பேச முடியாது.😌

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

36 வயதில் மனதுக்குள் ஏதோ ஒரு அலுப்பு தட்டியது. புகைத்தலை நிறுத்தி...இனி புகைத்தலே வேண்டாம் என முடிவெடுக்க இருதய பிரச்சனை ஆரம்பமாகியது. அன்றிலிருந்து இன்று வரை புகைத்தலை நான் தேடவில்லை.என் மனமும் தேடவில்லை.

ஏற்கனவே ஆரம்பமாகி இருக்கும்.

நிற்பாட்டும் நேரம் தான் தெரிந்திருக்கும்.

இதனால் நிற்பாட்டியதால்த் தான் நெஞ்சுவருத்தம் வந்தது என்று சொல்ல வசதியாகி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இதனை நான் ஒருகாரணமாக 100வீதம் ஏற்கமாட்டேன்....ஊரில் உள்ளவர்கள் கூட இந்த பழக்கமின்றீ ..இருதய...சிறுநீரகப் பிரச்சனையால்....பாதிக்கப்பட்டு ..சிகிச்சை பெற்று இருக்கின்றார்கள்...உணவுப் பழக்கங்களும் காரணமாக இருக்கலாம்...யாழ் நகரில் பாடசாலை செமினாரில் இருக்கும்போது 53 வயது பெண் ஆசிரியை மயங்கி விழுந்து முடிந்தாவே ..அவவுக்கு..இந்த பழக்கமிருந்ததா..இல்லை.. நீங்கள் இருவரும் நல்ல அக்ரிவ்வாகவே இருப்பவர்கள்... கவலைப் படக்கூடாது...எப்பவும் சந்தோசாமாக இருங்கள்.. கடவுள் கைவிடமாட்டார்..

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

வெளிநாடு வந்தபின் கட்டாக்காலியாக திரிந்த எனக்கு எல்லாமே சுதந்திரமாக தெரிந்தது.கட்டுபடுத்த யாருமேயில்லை. ஆரம்ப காலத்தில் புகைத்தல் நாகரீகமாக தெரிந்த எனக்கு ....போகப்போக அத்தியவசியமாகி விட்டது

22 hours ago, குமாரசாமி said:

அவரவர் உடம்பு வாசி.யாரும் எதுவும் எப்போதும் வீரம் பேச முடியாது.😌

சரி இங்கே புகை பிடிக்கும் பழக்கத்தையும் அதை நிறுத்தியதையும் பகிர்ந்து கொள்கின்றோம்.

நான் இந்தப்பழக்கத்தை நிறுத்த முயற்சி செய்து பல முறை தோல்வி அடைந்தவன்

இரண்டு தடவைகளுக்கும் கிட்டத்தட்ட ஒரு மாதம் எனது ஜாக்கெட் பாக்கெட்டில் சிகரெட்டை வைத்திருந்தேன்

ஆனால் பிடிப்பதில்லை ஒவ்வொரு முறையும் பத்து நிமிடங்கள் தள்ளி வைத்தேன்

பின்னர் அதை ஒரு மணித்தியாலம் தள்ளி வைத்தேன்

அப்படியே மணித்தியாலங்கள் நாட்களாகி கிழமைகளாகி மாதம் ஆகியதும் அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்

ஆனாலும் அந்த ஒரு மாதம் வந்த ஆத்திரம் கோபம் மன உழைச்சல்

இத்தியாதி என நானே என்னுடன் ஒரு பெரும் போரை நடத்தியிருந்தேன்.

வீட்டில் அந்த நேரம் எப்போது எரிந்து விழுந்து கொண்டேயிருந்தேன் .

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, வாத்தியார் said:

நானும் எத்தனையோ பேரை பார்த்திருக்கிறேன்

புதுவருடம்,

23 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கு எத்தனை வயது இப்போது ?

வாத்தியார் 50 ஆகிறது.

வருடப்பிறப்பு(.சித்திரை)தீபாவளி இப்படி நல்ல நாட்களாக எதிர்பார்த்திருப்பார்கள்.

ஒருநாள் கூட முழுமையாக விட முடியாமல் இருப்பார்கள்.

வாத்தியார் எனது கணிப்பு சரியோ?(வயது)

  • கருத்துக்கள உறவுகள்
On 15/3/2025 at 22:46, வாத்தியார் said:

நான் பத்து வருடங்கள் புகை பிடித்து

அதை விட்டு பத்து வருடங்கள் ஆகிய பின்னர்

மீண்டும் புகைத்தலுக்கு அடிமையாகி 20 வருடங்கள் ஆகிய பின்னர்

இப்போது பத்து மாதங்களாக பிடிப்பதில்லை

எனக்குப் பத்தொன்பது வயதாகி இருந்த போது முதன் முதலில் புகை பிடிக்க ஆரம்பித்தேன் .

இப்போது முக்கியமான கேள்வி.....

எனக்கு எத்தனை வயது இப்போது ? 😄

10+10+20=40*2=80. வயது சரியா அண்ணை 🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்

On 15/3/2025 at 19:13, ஈழப்பிரியன் said:

On 15/3/2025 at 17:46, வாத்தியார் said:

எனக்கு எத்தனை வயது இப்போது ?

வாத்தியார் 50 ஆகிறது.

என்ன பிரியன்சார்....வாத்தியார் கணக்கிலை வீக்கோ ..அல்லது எமக்கு கணக்கு விடுகிறாரோ...

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, alvayan said:

On 15/3/2025 at 19:13, ஈழப்பிரியன் said:

வாத்தியார் 50 ஆகிறது.

என்ன பிரியன்சார்....வாத்தியார் கணக்கிலை வீக்கோ ..அல்லது எமக்கு கணக்கு விடுகிறாரோ...

வாத்தியார் கணக்கு விடுகிறார்.

19+10+10+20+.10=59.10

நான் குளிர்காலத்தில் சிகரட்டை தொடவும் மாட்டேன். இளவேனில் காலம், இலையுதிர்காலம் மற்றும், கோடை காலத்தில் மாதம் ஒன்றுக்கு 10 இல் இருந்து 15 சிகரெட்டுகள் புகைப்பேன். சிகரட் Pack வாங்கி, அதை முடிக்க முடியாமல், காற்றுப் பட்டு இளவாலித்து போய் பல தரம் பாதியில் எறிந்தும் இருக்கின்றேன்.

டிசம்பர் 15 இன் பின், நேற்றுத்தான் இந்த வருடத்தின் முதல் சிகரட்டினை புகைத்தேன்.

முதல் சிகரெட் புகைத்தது இன்னும் நினைவில் உள்ளது. க.பொ.த சாதாரண தரத்தின் இறுதி பரீட்சையை எழுதிவிட்டு, சுண்டிக்குளி மகளிர் கல்லூரிக்கு சரியாக முன்னால் நின்று, அருகில் இருந்த கடையில் சிகரட் ஒன்றை வாங்கி, 'கலர்ஸ்' காட்ட என் முதல் சிகரட்டினை புகைத்தேன்.

ஊரெல்லாம் சுற்றிவிட்டு, 3 மணியளவில் வீட்டை போக, எவனோ ஒரு பயல் இந்த விடயத்தை அம்மாவுக்கு அதற்கிடையில் போட்டுக் கொடுக்க, அம்மா வேப்பங் கம்புடன் பத்திரகாளியாகி நின்று கொண்டிருந்தார்..

  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2025 at 00:10, ஈழப்பிரியன் said:

வருடப்பிறப்பு(.சித்திரை)தீபாவளி இப்படி நல்ல நாட்களாக எதிர்பார்த்திருப்பார்கள்.

ஒருநாள் கூட முழுமையாக விட முடியாமல் இருப்பார்கள்.

வாத்தியார் எனது கணிப்பு சரியோ?(வயது)

முதல் முறை மக்களுக்காகவும்

இரண்டாவது முறை பேத்திக்காகவும்

இதுவும் கடந்து செல்ல வேண்டுமே

50 தாண்டிப் பல வருடங்கள்

On 17/3/2025 at 00:31, Kandiah57 said:

10+10+20=40*2=80. வயது சரியா அண்ணை 🤣🤣🤣

அண்ணை என்று சொன்னபடியால் சொல்கின்றேன்

அது என் கனவு 😂

On 17/3/2025 at 13:49, ஈழப்பிரியன் said:

19+10+10+20+.10=59

இங்கை பார்றா கண்டு பிடிச்சுட்டார்

சரியான பதில் வாழ்த்துக்கள் ❤️🙏

  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2025 at 15:14, நிழலி said:

சுண்டிக்குளி மகளிர் கல்லூரிக்கு சரியாக முன்னால் நின்று, அருகில் இருந்த கடையில் சிகரட் ஒன்றை வாங்கி, 'கலர்ஸ்' காட்ட என் முதல் சிகரட்டினை புகைத்தேன்.

புகை பிடித்தாலும் நான் பாடசாலைக்கு அருகில் நின்று பிடிப்பதில்லை

தூரமாகப் போய்விடுவேன் அல்லது சிகரெட்டை முதலே எறிந்து விடுவேன்.😂

இப்போதெல்லாம் கொழும்புத்துறை வீதியில் ஆன் வீதிக்கு அருகில் இருக்கும் எனது மாமியார் வீட்டிற்கு செல்லும் பொது அல்லது அங்கெ தங்கி நிற்கும்போது உங்கடை வீடு எந்தப்பக்கம் இருக்கும் என்ற

யோசனை வரும்.🙏

  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2025 at 01:10, குமாரசாமி said:

36 வயதில் மனதுக்குள் ஏதோ ஒரு அலுப்பு தட்டியது. புகைத்தலை நிறுத்தி...இனி புகைத்தலே வேண்டாம் என முடிவெடுக்க இருதய பிரச்சனை ஆரம்பமாகியது. அன்றிலிருந்து இன்று வரை புகைத்தலை நான் தேடவில்லை.என் மனமும் தேடவில்லை.

அதை விட மிகவும் கரிசனையான விடையம்

இந்தப் புகைப்பழக்கத்தில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு

அதன் பின்னர் சாதகமான விழைவுகளும் வரும் ஒரு சிலருக்குப் பாதகமான விளைவுகளும் வரலாம்

எனது தந்தையார்

அவர் தனது 84 ஆவது வயதில் இயற்கை அடைந்தபோதும் அதுவரை புகை பிடித்தலை நிறுத்தவேயில்லை.

இது புகை பிடித்தலை ஊக்குவிக்கும் கருத்து அல்ல

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.