Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று

எனக்குச் சொந்தமா ஒரு வீடு இருந்தது. என் கணவருக்கு தோட்டக்காணியும் உண்டு. 2012 வரை அந்த நாட்டுக்குப் போய் வாழமுடியும் என்ற எண்ணம் பலருக்குமே இருக்கவில்லைத்தானே. அதனால அந்த வீட்டை விற்பம் விற்பம் என்று என் கணவர் ஒரே கரைச்சல். அம்மாவும் அப்பாவும் கஸ்ரப்பட்டுக் கட்டின வீட்டை விற்க எனக்கு விருப்பமும் இல்லை. ஆனால் கணவர் கரைச்சல் கொடுத்ததுக்கும் ஒரு காரணம் இருந்தது. அம்மாவின் தங்கை ஒருத்தி. அவவுக்கு அக்காவின் பிள்ளைகள் இனி இங்கு வந்து இருக்கப் போவதில்லை. தன் பிள்ளைகளுக்குத் தான் அக்காவின் வீடுகளும் வந்து சேரும் என்ற பேராசை.  

புலிகள் முன்னர் சில வீடுகளில் வசித்தபோது தொலைபேசி வசதிகள் இல்லாத காலத்தில் “புலிகள் உன் வீட்டைத் தரும்படி கேட்டார்கள். நான் என் நகையை விற்று ஐம்பதாயிரம் கொடுத்து வீட்டை மீட்டுள்ளேன்” என்று என சித்தியிடம் இருந்து ஒரு கடிதம் வர, உடனே நான் என்னைக் கேட்காது நீங்கள் ஏன் பணம் கொடுத்தீர்கள். வீட்டைப் புலிகளிடம் கொடுத்துவிட்டு உங்கள் பணத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஒரு கடிதத்தை எழுதிவிட்டு அப்பா அம்மாவுடன் கதைக்க, அப்பா “அவசரப்படாதை நான் விசாரிக்கிறேன்” என்று கூறி விசாரித்தால் அப்படி ஒரு விடயம் நடக்கவே இல்லை என்று தெரியவர, அம்மாவுக்கு அப்பதான் தான் தன் தங்கையின் நாடகம் புரிகிறது.      

 மற்றப்பக்கம் கணவரின் மூத்த சகோதரர் குடும்பம் எங்கள் வீட்டில் இடப்பெயர்வின்போது சில ஆண்டுகள் குடும்பத்துடன் வந்து வசித்தனர்.  

அம்மாவின் தங்கைக்கோ அட இந்த வீட்டை நாம் எடுக்கலாம் என்று பார்த்தால் இவர்கள் ஆட்டையைப் போட்டுவிடுவார்கள் போல என எண்ணி என் அம்மாவுக்கு போன் செய்து உங்கள் மருமகன் வீட்டைத் தமயனுக்குக் கொடுக்கப் போறாராம் என்று உசுப்பேற்ற, அம்மா எனக்கு போன் செய்து நாங்கள் கஷ்டப்பட்டுக் கட்டிய வீட்டை உன் மச்சான் குடும்பத்துக்கா கொடுக்கப் போகிறாய் என்று ஒரே கரைச்சல்.

அவர்களுக்குச் சொந்தவீடு இருக்குத்தானே. இப்ப பிரச்சனை முடிஞ்சுதுதானே. உன் மச்சானை வீட்டைவிட்டு எழுப்பு என்று அம்மா தொணதொணக்க எனக்கு இரு பக்கத்தாலும் தலைவலி வர நானும் பேசாமல் வீட்டை விற்றுவிட முடிவுசெய்து புரோக்கர்களிடம் கூறி ஆட்களை ஒழுங்கு செய்யச் சொன்னேன்.

அந்த நேரம் வீட்டின் பெறுமதி 90 இலட்சம் என்று புரோக்கர் கூற எனக்கோ வீட்டை வைத்திருப்போம் என்ற எண்ணம் தலை தூக்கத்தொடங்க, மீண்டும் கணவரிடம் வீட்டை வைத்திருப்போம் என்கிறேன். கணவரோ நாங்கள் அங்கை போய் இருக்கப் போவதில்லை. விசர்க் கதை கதைக்காமல் வில் என்கிறார். போகும் நேரம் எங்கே நிற்பது என்கிறேன். என் தங்கை வீடு இருக்குத்தானே. நான் தானே அவளுக்கு வீடு கட்டிக் குடுத்தனான். ஐந்து அறைகள் உள்ள வீட்டில ஒருமாதம் தங்க ஒரு அறை தரமாட்டாளா என்கிறார். ஏன் உங்கடை காணியை மட்டும் விக்காமல் என் வீட்டை விக்கச் சொல்கிறீர்கள் என்றதற்கு வெறும் காணி கிடந்தால் ஒரு காலத்தில போய் இருக்கப்போறம் எண்டால் பிறகு நிலமைக்கு ஏற்றமாதிரி சின்ன வீடு ஒன்றைக் காட்டிக் கொள்ளலாம் என்று ஆசை காட்ட நானும் சரி என்று சொல்கிறேன்.

மனிசன் ஒன்றை நினைத்தால் முடிக்கும் மட்டும் விடாப்பிடியாய் நிப்பார். அதனால ஒரு யோசனை வர எல்லாச் சகோதரர்களுடனும் வீட்டை விற்பது பற்றிக் கூறி யாராவது வாங்கப்போகிறீர்களா என்று கேட்க, ஒரு வீட்டையே பாதுகாக்க ஏலாமல்க் கிடக்கு. இதுக்குள்ள உதை வாங்கி என்ன என்கின்றனர். ஒரு தங்கை மட்டும் கணவருடன் கதைத்துவிட்டுச் சொல்வதாகக் கூற மனம் நிம்மதி அடைகிறது.

தங்கை ஒரு வாரத்தின் பின்னர் தம்மிடம் இவ்வளவு காசு இப்ப இல்லை. நாற்பத்தைந்து இலட்சம் என்றால் நான் உடனே வாங்க முடியும் என்கிறாள். கணவருக்கு புரோக்கர் சொன்ன விலையைச் சொல்லாமல் ஐம்பது இலட்சம்தான் வீட்டின் பெறுமதி என்று கூறுகிறேன். அப்போது நாம் கடை நடத்திக்கொண்டு இருந்தபடியாலும் கணவருக்கு தொலைபேசியில் கதைக்க நேரம் இல்லை என்பதனாலும் கணவர் தன் தங்கையிடமோ தங்கையிடமோ தமையனிடமோ காணிவிலை குறித்து விசாரிக்க நேரம் இருக்கவே இல்லை.

இவ்வளவு குறைவாக இருக்கு. வேறு இரண்டு மூன்று பேரிடம் சொல்லி விக்கப்பார் என்கிறார். இது நாங்கள் வளர்ந்த வீடு. வேறை ஆருக்கு விற்றாலும் மீண்டும் போக முடியாது. தங்கைக்குக் கொடுத்தால் நாம் போகும் நேரம் போய் நிக்கலாம் என்று கணவரின் மண்டையைக் கழுவிக் காதும் காதும் வைத்ததுபோல் கணவரின் சகோதரர்கள் காதுக்கு விடயம் போகாமல் வீட்டைத் தங்கைக்குக் எழுதியாச்சு.

அதன் பின்னர் கணவர் மட்டும் 2015 இல் நாட்டுக்குச் சென்றபோது நாட்டிலும் மனிதர்களிடமும் பல மாற்றங்கள். கணவருக்கே தங்கை வீட்டில் தங்கி இருந்தது மகிழ்வைத் தரவில்லை. நான் விற்ற தங்கையின் வீட்டில் அம்மாவின் திருமணமாகாத தங்கை – தலைமை ஆசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர் - தன் வீட்டைத் தங்கையின் ஒரு மகளுக்குக் கொடுத்துவிட்டு எம் வீட்டில் இருந்தார். அவரைத்தான் அந்த வீட்டுக்குப் பொறுப்பாகத் தங்கை தங்கும்படி கூறியிருந்தாள்.

அவர் தனியாக இருப்பதனால் உதவிக்காக இராமநாதன் அக்கடமியில் கல்வி கற்கும் வெளி மாநிலப் பிள்ளைகள் சிலரை குறைந்த வாடகையில் வீட்டில் வைத்திருந்தார். எனவே கணவர் பெண்கள் மட்டும் இருக்கும் வீட்டில் நான் இல்லாது அங்கு சென்று தங்க மானமின்றிப்போக கணவருக்கு அந்த விடுமுறை மகிழ்வாக இருக்கவில்லை. நாடு திரும்பிய கணவர் எமக்கு என்று ஒரு வீடு இருக்கவேணும். ஆற்றையன் வீடு ஆற்றையன் வீடுதான் என்று புலம்ப, கூட இருந்த மகளும் “எங்கள் வீட்டை விக்காமல் இருந்திருந்தால் நாங்கள் இணுவிலுக்குப் போற நேரம் நிம்மதியா  நிண்டிருக்கலாம்” என்று கூற மனிசன் ஒண்டுமே கூறவில்லை.

சரி பிரச்சனை இல்லை. அப்பாவின் காணி இருக்குத்தானே. அதில ஒரு வீட்டைக் கட்டுவம் என்று ஆறுதலுக்காய்க் கூறினாலும் நாட்டில போய் வாழக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும்பட நாட்டில் போய் இருக்கவேண்டும் என்ற ஆசை எனக்குள் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது.

  • Replies 161
  • Views 10k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    பத்து   அடுத்தநாள் காலை வழமைபோல வீட்டுக்கு வரும் போது மருதனார் மடத்துக்கும் சுண்ணாகத்துக்கும் இடையே உள்ள பூங்கன்றுகள் விற்கும் கடைக்குச் சென்று விதவிதமாக பூத்திருந்த செவ்வரத்தங் கன்றுகளில் 15 ஐ வாங்கி

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    மூன்று   வீட்டில் இருப்பவர் இரண்டு வாரங்கள் வங்கி அலுவலாக  வெளிமாவட்டம் சென்றதனால் உடனே வாடகை ஒப்பந்தம் எழுத முடியவில்லை. இரண்டு நாழின்பின் வந்துசேர அவரை வரச்சொல்லிவிட்டு மணிவண்ணனிடம் போகிறேன். ஒப்பந்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரத்த உறவு சொந்தங்களினால்த்தான் எப்பவும் பிரச்சனை. எனக்கு சொந்தமாக இருக்கும் வீடு காணிகளைக்கூட நாங்கள் உனக்கு சொந்தக்காரர் எல்லோ. அந்த வீடு காணிகளை எங்களுக்கு எழுதி தாருங்கோவன். நீங்கள் வெளிநாட்டிலைதானே இருக்கிறியள். திரும்பி வரப்போறியளே இல்லைத்தானே எண்டு அவையளே கேள்வியையும் கேட்டு பதிலையும் சொல்லீனம். இவ்வளவத்துக்கும் அவை தூரத்து சொந்தம் மட்டுமில்லை நான் அவையள இன்னும் சந்திக்கவே இல்லை. உப்புடியான சனத்துக்கு மத்தியிலை திருப்பி போய் குடியிருக்கவும் பயமாய் கிடக்கு...

ஆனால் நான் பெஞ்சன் எடுத்ததும் ஊரில் போய் இருக்கிற பிளான் போட்டாச்சு.இன்னும் இரண்டு வருசம் பல்லை கடிச்சுக்கொண்டு இஞ்சை இருப்பம். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

நன்கொடையாக பெற்றோர், பெற்றோர் வழி உறவுகள் மூலம் காணி/நிலம்/வீடு/வயல்/தோட்டம்/கடை இவை கிடைத்தால் இதுதான் பிரச்சனை. சொந்த உழைப்பில் சேர்த்ததை உதாசீனம் செய்யமாட்டோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 20/3/2025 at 16:47, குமாரசாமி said:

நல்லது தெரிஞ்ச ஆட்கள் கொஞ்சப் பேர் நாட்டில வந்து இருந்தாலே பொழுதுபோயிடும்.

On 20/3/2025 at 22:13, நியாயம் said:

நன்கொடையாக பெற்றோர், பெற்றோர் வழி உறவுகள் மூலம் காணி/நிலம்/வீடு/வயல்/தோட்டம்/கடை இவை கிடைத்தால் இதுதான் பிரச்சனை. சொந்த உழைப்பில் சேர்த்ததை உதாசீனம் செய்யமாட்டோம்.

அதுவும் உண்மைதான். வரவுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சு திக் திக் என்று அடிக்குது,  ஏதோ ஏமாற்றம் வருமோ என்று. இருந்த வீட்டை அறாவிலைக்கு குடுத்துப்போட்டு உது தேவையா? 

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான்… பெற்றார் கொடுத்த வீடு எண்டாலும் - அங்கிளுக்கு சரியான விலையை மறைத்து உங்கட தங்கைக்கு பாதி விலைக்கு கொடுத்ததெல்லாம்….கில்லாடித்தனம் அன்ரி🤣.

அது சரி எங்க காணி பாக்கிறியள்?

இணுவில் கே கே எஸ் ரோட்டோட இருக்கிற காணி ஒரு பரப்பு என்ன விலை போகுது?

On 20/3/2025 at 09:22, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒன்று

எனக்குச் சொந்தமா ஒரு வீடு இருந்தது. என் கணவருக்கு தோட்டக்காணியும் உண்டு. 2012 வரை அந்த நாட்டுக்குப் போய் வாழமுடியும் என்ற எண்ணம் பலருக்குமே இருக்கவில்லைத்தானே. அதனால அந்த வீட்டை விற்பம் விற்பம் என்று என் கணவர் ஒரே கரைச்சல். அம்மாவும் அப்பாவும் கஸ்ரப்பட்டுக் கட்டின வீட்டை விற்க எனக்கு விருப்பமும் இல்லை. ஆனால் கணவர் கரைச்சல் கொடுத்ததுக்கும் ஒரு காரணம் இருந்தது. அம்மாவின் தங்கை ஒருத்தி. அவவுக்கு அக்காவின் பிள்ளைகள் இனி இங்கு வந்து இருக்கப் போவதில்லை. தன் பிள்ளைகளுக்குத் தான் அக்காவின் வீடுகளும் வந்து சேரும் என்ற பேராசை.  

புலிகள் முன்னர் சில வீடுகளில் வசித்தபோது தொலைபேசி வசதிகள் இல்லாத காலத்தில் “புலிகள் உன் வீட்டைத் தரும்படி கேட்டார்கள். நான் என் நகையை விற்று ஐம்பதாயிரம் கொடுத்து வீட்டை மீட்டுள்ளேன்” என்று என சித்தியிடம் இருந்து ஒரு கடிதம் வர, உடனே நான் என்னைக் கேட்காது நீங்கள் ஏன் பணம் கொடுத்தீர்கள். வீட்டைப் புலிகளிடம் கொடுத்துவிட்டு உங்கள் பணத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஒரு கடிதத்தை எழுதிவிட்டு அப்பா அம்மாவுடன் கதைக்க, அப்பா “அவசரப்படாதை நான் விசாரிக்கிறேன்” என்று கூறி விசாரித்தால் அப்படி ஒரு விடயம் நடக்கவே இல்லை என்று தெரியவர, அம்மாவுக்கு அப்பதான் தான் தன் தங்கையின் நாடகம் புரிகிறது.      

 மற்றப்பக்கம் கணவரின் மூத்த சகோதரர் குடும்பம் எங்கள் வீட்டில் இடப்பெயர்வின்போது சில ஆண்டுகள் குடும்பத்துடன் வந்து வசித்தனர்.  

அம்மாவின் தங்கைக்கோ அட இந்த வீட்டை நாம் எடுக்கலாம் என்று பார்த்தால் இவர்கள் ஆட்டையைப் போட்டுவிடுவார்கள் போல என எண்ணி என் அம்மாவுக்கு போன் செய்து உங்கள் மருமகன் வீட்டைத் தமயனுக்குக் கொடுக்கப் போறாராம் என்று உசுப்பேற்ற, அம்மா எனக்கு போன் செய்து நாங்கள் கஷ்டப்பட்டுக் கட்டிய வீட்டை உன் மச்சான் குடும்பத்துக்கா கொடுக்கப் போகிறாய் என்று ஒரே கரைச்சல்.

அவர்களுக்குச் சொந்தவீடு இருக்குத்தானே. இப்ப பிரச்சனை முடிஞ்சுதுதானே. உன் மச்சானை வீட்டைவிட்டு எழுப்பு என்று அம்மா தொணதொணக்க எனக்கு இரு பக்கத்தாலும் தலைவலி வர நானும் பேசாமல் வீட்டை விற்றுவிட முடிவுசெய்து புரோக்கர்களிடம் கூறி ஆட்களை ஒழுங்கு செய்யச் சொன்னேன்.

அந்த நேரம் வீட்டின் பெறுமதி 90 இலட்சம் என்று புரோக்கர் கூற எனக்கோ வீட்டை வைத்திருப்போம் என்ற எண்ணம் தலை தூக்கத்தொடங்க, மீண்டும் கணவரிடம் வீட்டை வைத்திருப்போம் என்கிறேன். கணவரோ நாங்கள் அங்கை போய் இருக்கப் போவதில்லை. விசர்க் கதை கதைக்காமல் வில் என்கிறார். போகும் நேரம் எங்கே நிற்பது என்கிறேன். என் தங்கை வீடு இருக்குத்தானே. நான் தானே அவளுக்கு வீடு கட்டிக் குடுத்தனான். ஐந்து அறைகள் உள்ள வீட்டில ஒருமாதம் தங்க ஒரு அறை தரமாட்டாளா என்கிறார். ஏன் உங்கடை காணியை மட்டும் விக்காமல் என் வீட்டை விக்கச் சொல்கிறீர்கள் என்றதற்கு வெறும் காணி கிடந்தால் ஒரு காலத்தில போய் இருக்கப்போறம் எண்டால் பிறகு நிலமைக்கு ஏற்றமாதிரி சின்ன வீடு ஒன்றைக் காட்டிக் கொள்ளலாம் என்று ஆசை காட்ட நானும் சரி என்று சொல்கிறேன்.

மனிசன் ஒன்றை நினைத்தால் முடிக்கும் மட்டும் விடாப்பிடியாய் நிப்பார். அதனால ஒரு யோசனை வர எல்லாச் சகோதரர்களுடனும் வீட்டை விற்பது பற்றிக் கூறி யாராவது வாங்கப்போகிறீர்களா என்று கேட்க, ஒரு வீட்டையே பாதுகாக்க ஏலாமல்க் கிடக்கு. இதுக்குள்ள உதை வாங்கி என்ன என்கின்றனர். ஒரு தங்கை மட்டும் கணவருடன் கதைத்துவிட்டுச் சொல்வதாகக் கூற மனம் நிம்மதி அடைகிறது.

தங்கை ஒரு வாரத்தின் பின்னர் தம்மிடம் இவ்வளவு காசு இப்ப இல்லை. நாற்பத்தைந்து இலட்சம் என்றால் நான் உடனே வாங்க முடியும் என்கிறாள். கணவருக்கு புரோக்கர் சொன்ன விலையைச் சொல்லாமல் ஐம்பது இலட்சம்தான் வீட்டின் பெறுமதி என்று கூறுகிறேன். அப்போது நாம் கடை நடத்திக்கொண்டு இருந்தபடியாலும் கணவருக்கு தொலைபேசியில் கதைக்க நேரம் இல்லை என்பதனாலும் கணவர் தன் தங்கையிடமோ தங்கையிடமோ தமையனிடமோ காணிவிலை குறித்து விசாரிக்க நேரம் இருக்கவே இல்லை.

இவ்வளவு குறைவாக இருக்கு. வேறு இரண்டு மூன்று பேரிடம் சொல்லி விக்கப்பார் என்கிறார். இது நாங்கள் வளர்ந்த வீடு. வேறை ஆருக்கு விற்றாலும் மீண்டும் போக முடியாது. தங்கைக்குக் கொடுத்தால் நாம் போகும் நேரம் போய் நிக்கலாம் என்று கணவரின் மண்டையைக் கழுவிக் காதும் காதும் வைத்ததுபோல் கணவரின் சகோதரர்கள் காதுக்கு விடயம் போகாமல் வீட்டைத் தங்கைக்குக் எழுதியாச்சு.

அதன் பின்னர் கணவர் மட்டும் 2015 இல் நாட்டுக்குச் சென்றபோது நாட்டிலும் மனிதர்களிடமும் பல மாற்றங்கள். கணவருக்கே தங்கை வீட்டில் தங்கி இருந்தது மகிழ்வைத் தரவில்லை. நான் விற்ற தங்கையின் வீட்டில் அம்மாவின் திருமணமாகாத தங்கை – தலைமை ஆசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர் - தன் வீட்டைத் தங்கையின் ஒரு மகளுக்குக் கொடுத்துவிட்டு எம் வீட்டில் இருந்தார். அவரைத்தான் அந்த வீட்டுக்குப் பொறுப்பாகத் தங்கை தங்கும்படி கூறியிருந்தாள்.

அவர் தனியாக இருப்பதனால் உதவிக்காக இராமநாதன் அக்கடமியில் கல்வி கற்கும் வெளி மாநிலப் பிள்ளைகள் சிலரை குறைந்த வாடகையில் வீட்டில் வைத்திருந்தார். எனவே கணவர் பெண்கள் மட்டும் இருக்கும் வீட்டில் நான் இல்லாது அங்கு சென்று தங்க மானமின்றிப்போக கணவருக்கு அந்த விடுமுறை மகிழ்வாக இருக்கவில்லை. நாடு திரும்பிய கணவர் எமக்கு என்று ஒரு வீடு இருக்கவேணும். ஆற்றையன் வீடு ஆற்றையன் வீடுதான் என்று புலம்ப, கூட இருந்த மகளும் “எங்கள் வீட்டை விக்காமல் இருந்திருந்தால் நாங்கள் இணுவிலுக்குப் போற நேரம் நிம்மதியா  நிண்டிருக்கலாம்” என்று கூற மனிசன் ஒண்டுமே கூறவில்லை.

சரி பிரச்சனை இல்லை. அப்பாவின் காணி இருக்குத்தானே. அதில ஒரு வீட்டைக் கட்டுவம் என்று ஆறுதலுக்காய்க் கூறினாலும் நாட்டில போய் வாழக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும்பட நாட்டில் போய் இருக்கவேண்டும் என்ற ஆசை எனக்குள் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்லது தெரிஞ்ச ஆட்கள் கொஞ்சப் பேர் நாட்டில வந்து இருந்தாலே பொழுதுபோயிடும்.

சம்பளத்துக்கு ஆக்களை வைச்சு தோட்டம் செய்யிற பிளான் ஒண்டு இருக்கு....cool

  • கருத்துக்கள உறவுகள்

90 லட்ஷம் வீட்டை 50 லட்ஷம் ரூபாய்க்கு கொடுத்தது முட்டாள்த்தனம் .

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, சுவைப்பிரியன் said:

90 லட்ஷம் வீட்டை 50 லட்ஷம் ரூபாய்க்கு கொடுத்தது முட்டாள்த்தனம் .

ஆமாம் உண்மை தான் அவா. எந்த வேலையை தான் புத்திசாலித்தனமாகா. செய்து உள்ளார் 🤣🤣🤣🤣.

On 20/3/2025 at 17:47, குமாரசாமி said:

ஆனால் நான் பெஞ்சன் எடுத்ததும் ஊரில் போய் இருக்கிற பிளான் போட்டாச்சு.இன்னும் இரண்டு வருசம் பல்லை கடிச்சுக்கொண்டு இஞ்சை இருப்பம். 🙂

அடைடா. நீங்கள் இன்னும் பென்சன். எடுக்கவில்லையா தம்பி ....🤣🤣.

நான் பென்சன். எடுத்து இரண்டு வருடங்கள். பூரணமாக முடித்து விட்டது தம்பி.

குறிப்பு,......எனக்கு ஒரு தம்பி யாழ் களத்தில் கிடைத்து விட்டார் 🙏

1 hour ago, குமாரசாமி said:

சம்பளத்துக்கு ஆக்களை வைச்சு தோட்டம் செய்யிற பிளான் ஒண்டு இருக்கு....cool

நல்லது நானும் ஒரு தொழிலாளராக. விண்ணப்பிக்கிறேன். .....வேலை ஒப்பந்தை. பதியுங்கள். பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

றைத்து உங்கட தங்கைக்கு பாதி விலைக்கு கொடுத்ததெல்லாம்….கில்லாடித்தனம் அன்ரி🤣

உண்மை தான் சகோதர பாசம் பணத்தை மதிப்பதில்லை

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kandiah57 said:

உண்மை தான் சகோதர பாசம் பணத்தை மதிப்பதில்லை

இவாவுக்குத்தான் கண்ணை மறைத்தது, தங்கச்சிக்கல்ல. அக்காவை நல்லா ஏமாத்திப்போட்டா பாசத்தை வைச்சு. ஒருநாளைக்கு கணவர் உண்மையை அறியாமலா இருப்பார்? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

நெஞ்சு திக் திக் என்று அடிக்குது,  ஏதோ ஏமாற்றம் வருமோ என்று. இருந்த வீட்டை அறாவிலைக்கு குடுத்துப்போட்டு உது தேவையா? 

என்ன செய்யிறது. வீதி விட்ட வழிதானே 😄

4 hours ago, goshan_che said:

என்னதான்… பெற்றார் கொடுத்த வீடு எண்டாலும் - அங்கிளுக்கு சரியான விலையை மறைத்து உங்கட தங்கைக்கு பாதி விலைக்கு கொடுத்ததெல்லாம்….கில்லாடித்தனம் அன்ரி🤣.

அது சரி எங்க காணி பாக்கிறியள்?

இணுவில் கே கே எஸ் ரோட்டோட இருக்கிற காணி ஒரு பரப்பு என்ன விலை போகுது?

இணுவிலில ரோட்டுக்கரை ஒரு பரப்பு ஒரு கோடி தொடக்கம் ஒண்டரைக் கொடிவரை போகுது . உள்ளுக்குள் இடத்துக்கேற்ற விலை. 50 தொடக்கம் 60, 65 கூடப் போகுது.

3 hours ago, குமாரசாமி said:

சம்பளத்துக்கு ஆக்களை வைச்சு தோட்டம் செய்யிற பிளான் ஒண்டு இருக்கு....cool

வாங்கோ செய்யுங்கோ. எல்லாரும் சேர்ந்து ஒரு முயற்சி செய்யலாம்.

2 hours ago, சுவைப்பிரியன் said:

90 லட்ஷம் வீட்டை 50 லட்ஷம் ரூபாய்க்கு கொடுத்தது முட்டாள்த்தனம் .

தங்கைக்குத்தானே கொடுத்தது என்பதனால் எனக்கு ஒன்றும் இல்லை. ஆனால் ஊரில போய் நிண்டு காணிக் கதையள் கதைக்கேக்குள்ள நெஞ்சு மனுசனுக்குத் தெரிந்தாலும் எண்டு டிக் டிக் எண்ணும் 😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

ஆமாம் உண்மை தான் அவா. எந்த வேலையை தான் புத்திசாலித்தனமாகா. செய்து உள்ளார் 🤣🤣🤣🤣.

உதென்ன உப்பிடி அபாண்டம்.

1 hour ago, satan said:

இவாவுக்குத்தான் கண்ணை மறைத்தது, தங்கச்சிக்கல்ல. அக்காவை நல்லா ஏமாத்திப்போட்டா பாசத்தை வைச்சு. ஒருநாளைக்கு கணவர் உண்மையை அறியாமலா இருப்பார்? 

தங்கை என்னை ஏமாற்றவும் இல்லை. எனக்கும் கண்ணைக் கட்டவில்லை. பிறந்து வளர்ந்த வீடு எண்ட ஒரு இதுதான்.😃

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உதென்ன உப்பிடி அபாண்டம்.

சரி பிழை என்றால் மன்னியுங்கள் 🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Kandiah57 said:

அடைடா. நீங்கள் இன்னும் பென்சன். எடுக்கவில்லையா தம்பி ....🤣🤣.

நான் பென்சன். எடுத்து இரண்டு வருடங்கள். பூரணமாக முடித்து விட்டது தம்பி.

குறிப்பு,......எனக்கு ஒரு தம்பி யாழ் களத்தில் கிடைத்து விட்டார் 🙏

கனக்க நினைச்சு துள்ளிக்குதிக்க வேண்டாம்.🤸

நான் பிறந்து நாலு வருசத்துக்கு பிறகுதான் பதிஞ்சதாம்cool

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

கனக்க நினைச்சு துள்ளிக்குதிக்க வேண்டாம்.🤸

நான் பிறந்து நாலு வருசத்துக்கு பிறகுதான் பதிஞ்சதாம்cool

என்னுடைய நிலமையும். அது தான் எனது உண்மையான பிறந்த தேதி 4-4-1957.

என்னுடைய அக்கா 8-8-1952. ஐந்து ஆண்டுகள் குழந்தை இல்லை இது எனது பெற்றோருக்கு. ரொம்ப கவலை நான் பிறந்ததும் உடனும். பதியவில்லை எனது தகப்பனார். நண்பர்களுடன் சேர்த்து தினமும் குடித்தபடி என்னுடைய பேரன். பேசித் தான் 12-4 1957. பிறந்தது என்னு. பதிந்து விட்டார்கள் குறிப்பை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். குறிப்பில். 4-4-1957. தான் இதுக்கு நான் எனது பெற்றோரை பேசியபடி

நீங்கள் நான்கு ஆண்டுகள் பிந்தி பதிந்தும். அமைதியாக இருககிறீரகள்.

குறிப்பு,.....உங்கள் வீட்டுகாரிக்கு இது தெரியுமா??? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kandiah57 said:

என்னுடைய அக்கா 8-8-1952. ஐந்து ஆண்டுகள் குழந்தை இல்லை இது எனது பெற்றோருக்கு. ரொம்ப கவலை நான் பிறந்ததும் உடனும். பதியவில்லை எனது தகப்பனார்

இது ஏற்கனவே நான் யாழில் எழுதிய ஒரு கருத்துத் தான்

இருந்தாலும் இங்கே அண்ணை கந்தையா அவர்கள் எழுதியதால் இன்னொரு முறை

என்னயுடைய ஒரு துருக்கி நாட்டுக்கு நண்பன் கூறுவான்

அங்கே சில சிறிய கிராமங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் ஒரே நாளில் பிறந்த நாள் கொண்டாடுவார்களாம்.

எல்லாவற்றிற்கும் பதிவுதான் காரணம்

கதையோட கருத்து

நான் பிறந்த காணி எனக்குச் சொந்தம் இல்லாவிட்டாலும்

என்னுடைய சொந்தங்களுக்கு செல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வாத்தியார் said:

அங்கே சில சிறிய கிராமங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் ஒரே நாளில் பிறந்த நாள் கொண்டாடுவார்களாம்

ஆம் அனேகமாக 1 ஆம் திகதியாக. இருக்கும் 🤣🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2025 at 14:37, Kandiah57 said:

சரி பிழை என்றால் மன்னியுங்கள் 🙏

உதுதானே வேண்டாம் எண்டுறது. 😀

On 22/3/2025 at 15:23, குமாரசாமி said:

கனக்க நினைச்சு துள்ளிக்குதிக்க வேண்டாம்.🤸

நான் பிறந்து நாலு வருசத்துக்கு பிறகுதான் பதிஞ்சதாம்cool

யேர்மனியில் 68 இல் தானே பென்ஷன் ? குசா

21 hours ago, Kandiah57 said:

என்னுடைய நிலமையும். அது தான் எனது உண்மையான பிறந்த தேதி 4-4-1957.

என்னுடைய அக்கா 8-8-1952. ஐந்து ஆண்டுகள் குழந்தை இல்லை இது எனது பெற்றோருக்கு. ரொம்ப கவலை நான் பிறந்ததும் உடனும். பதியவில்லை எனது தகப்பனார். நண்பர்களுடன் சேர்த்து தினமும் குடித்தபடி என்னுடைய பேரன். பேசித் தான் 12-4 1957. பிறந்தது என்னு. பதிந்து விட்டார்கள் குறிப்பை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். குறிப்பில். 4-4-1957. தான் இதுக்கு நான் எனது பெற்றோரை பேசியபடி

நீங்கள் நான்கு ஆண்டுகள் பிந்தி பதிந்தும். அமைதியாக இருககிறீரகள்.

குறிப்பு,.....உங்கள் வீட்டுகாரிக்கு இது தெரியுமா??? 🤣

அட நீங்களும் 0 4- 04 தானா

21 hours ago, வாத்தியார் said:

கதையோட கருத்து

நான் பிறந்த காணி எனக்குச் சொந்தம் இல்லாவிட்டாலும்

என்னுடைய சொந்தங்களுக்கு செல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

எந்தக் கதையைப் பற்றிச் சொல்கிறீர்கள் வாத்தியார்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு விருப்பு வாக்குகளை இட்ட புங்கை, சுவைப்பிரியன், ஈழப்பிரியன் அண்ணா, நுணாவிலான்,யாயினி, நந்தன், சுவி அண்ணா,கவி அருணாச்சலம் அண்ணா ஆகிய உறவுகளுக்கு மிக்க நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யேர்மனியில் 68 இல் தானே பென்ஷன் ? குசா

இவங்களை நம்பேலாது கண்டியளோ. நேரத்துக்கு நேரம் சட்டங்களை மாத்துவாங்கள்.😂

பென்சன் எடுக்கிற நேரம் வர கடிதம் போடுவாங்கள் தானே எண்டு பாத்துக்கொண்டிருக்கிறன்.எண்டாலும் எனக்கு முழங்கால் பிரச்சனை இருக்கிறபடியால முதலே பென்சன் எடுக்க வாய்ப்பிருக்கு......😎

கெதியாய் ஊருக்கு போறன்.....6 ஏக்கர் தோட்டக்காணிய துப்பவராக்கிறன்....ரஜினி மிளகாய்க்கண்டு வைக்கிறன். கோடி கோடியாய் சம்பாதிக்கிறன்.😁

R37-YFqb-OWzlvb0-Qj0-DZz.webp

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

இவங்களை நம்பேலாது கண்டியளோ. நேரத்துக்கு நேரம் சட்டங்களை மாத்துவாங்கள்.😂

பென்சன் எடுக்கிற நேரம் வர கடிதம் போடுவாங்கள் தானே எண்டு பாத்துக்கொண்டிருக்கிறன்.எண்டாலும் எனக்கு முழங்கால் பிரச்சனை இருக்கிறபடியால முதலே பென்சன் எடுக்க வாய்ப்பிருக்கு......😎

கெதியாய் ஊருக்கு போறன்.....6 ஏக்கர் தோட்டக்காணிய துப்பவராக்கிறன்....ரஜினி மிளகாய்க்கண்டு வைக்கிறன். கோடி கோடியாய் சம்பாதிக்கிறன்.

இப்பவே சொல்லி வைக்கிறன். எனக்கும் கனக்கவேண்டாம் ஒரு கோடி கடன் தாங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இப்பவே சொல்லி வைக்கிறன். எனக்கும் கனக்கவேண்டாம் ஒரு கோடி கடன் தாங்கோ.

தோட்டம் செய்யிற புரோக்கிறாம் கேன்சல் பண்ணியாச்சு...cool

2446083ab2e758176a34c5f4848296aa.gif

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யேர்மனியில் 68 இல் தானே பென்ஷன் ? குசா

இல்லை 67 வயதில் 65 ஆக. இருந்தது பாராளுமன்றம் 67 வயதில் பென்சன். கொடுப்பது என்று தீர்மானம் செய்தது .....67 -65=2 வருடங்கள். =24 மாதங்கள்

2022 ஆண்டில் ஆரம்பித்து

1,..65 ஆண்டுகள் ஒரு மாதம் பென்சனுக்கு விண்ணப்பிக்கலாம்

2,....65 ஆண்டுகள் இரண்டு மாதம் விண்ணப்பிக்கலாம்

3,...65வயது மூன்று மாதம். விண்ணப்பிக்கலாம்

4, ...

இப்படியாக ஒவ்வொரு மாதமாக கூட்டி. இப்போது 67 வயதில் பென்சனுக்கு விண்ணப்பிக்க முடியும் இப்போது 70 வயதில் பென்சன். கொடுப்பது பற்றி அரசியல் கட்சிகள் உரையாடல் நடத்தி கொண்டிருக்கிறார்கள் 80 வயதில் பென்சன். கொடுத்தால் கூட நான் கவலைப்பட போவதில்லை 🤣🤣

15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அட நீங்களும் 0 4- 04 தானா

ஆமாம் நல்ல இலக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

65 வயதுவரை உழைத்தவர் பென்ஷனுக்கு விண்ணப்பிக்க கச்சேரிக்கு போகமுதல் மாச்சுவரிக்கு போயிடுவர் ....... அரசு நோகாமல் நுங்கெடுத்துக் கொண்டிருக்கும் . ..........! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.