Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வீரப் பையன்26 said:

சீமான் பிற‌ப்பால் ப‌ச்சை த‌மிழ‌ன்

உறவே சீமான் பிறப்பால் ப‌ச்சை த‌மிழ‌ன் என்று சாட்சி சொல்ல பத்து ஆயிரம் தமிழர்கள் வந்தால் ஸ்டாலின் ப‌ச்சை த‌மிழ‌ன் என்று சாட்சி சொல்ல நாற்பது ஆயிரம் தமிழர்கள் வருவார்கள் என்பதே நிலை.தமிழ் நாட்டை ஆண்ட அனைவருமே தமிழர்கள் தான். தமிழ்நாட்டை இதுவரை ஆளாத உதயநிதி சீமான் விஜய்யும் தமிழர்களே தங்களை தமிழர்களாக உணர்பவர்கள் தமிழர்கள் தான்.

இலங்கையில் தமிழர்களில் முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்கள் தங்களை தமிழர்களாக உணரவில்லை கவனியுங்கள்

  • Replies 74
  • Views 3.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    தாத்தாவும் பேரனும் ஒரே கேள்வியை கேட்டதால் ஒன்றாக பதில் சொல்கிறேன். ஸ்டாலினும் கனிமொழியிம் திருடர்கள், நிம்மியை சந்திக்கிறார்கள். அதே போல் சீமானும் திருடன் என நீங்கள் ஒத்து கொண்டால்…. யாரும் பொங்கி எழ

  • goshan_che
    goshan_che

    இதுக்கு பெயர் ஜெயிலோ-போபியா. இந்த நோய் தாக்கம் ஆளுக்கு ஆள் மாறுபடும். நோயாளியை ஊழல் வழக்கில் மத்திய அரசு நிர்வாகம் திரத்தினால் - ஆஸ்பத்தியில் போய் படுக்க வேண்டி வரும். நோயாளியை பாலியல் வன்கொடுமை வழக்க

  • Kandiah57
    Kandiah57

    நீங்கள் சொல்வது சரி ஆனால் ஒரு அல்லது பல. தமிழர்கள் ஐரோப்பாவில் கனடாவில் அவுஸ்திரேலியாவில்,....... ..இது போன்ற நாடுகளில் தேர்தலில் நின்று அந்தந்த நாட்டு மக்களின் வாக்குகளை பெற்று வெல்லும் போது ர

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, வாத்தியார் said:

அப்போது மம்மி டாடி வராது அப்பா அம்மா என்ற சத்தம் வருவதற்கான அறிகுறிகள் எம்மிடையே அதிகமாக காணப்படுகின்றது

இப்போது மம்மி டாடி மிக சாதாரணமாக உள்ளது ஐரோப்பாவில் இல்லை; என்பது உண்மை தான் 👍

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

இது போன்ற நாடுகளில் தேர்தலில் நின்று அந்தந்த நாட்டு மக்களின் வாக்குகளை பெற்று வெல்லும் போது ரொம்பவும் மகிழ்ச்சியாக வாழ்த்துக்கள்… தெரிவிக்கிறீர்கள். ....அவர்கள் தமிழ் மொழி பேசலாமா?? மேலும் எவராகவிருந்தாலும். என்ன மொழி பேசினாலும் மக்களுக்கு சிறந்த சேவை. ஆற்றினால். அவர்களை மக்கள் தெரிவு செய்வார்கள்

மேலைநாட்டு குடிமக்களின் வாக்குகளை பெற்று வெற்றிபெற்ற ஈழ தமிழ் வம்சாவளி பாராளுமன்ற உறுப்பினர்கள் திருகுறளையோ அல்லது தமிழ் பழமொழி ஒன்ற சொல்லிவிட்டார்கள் என்பதற்காக இனி அவர்கள் தங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கிய மேலைநாட்டு குடிமக்களின் முகத்தில் குத்திவிட்டார்கள் என்று எடுத்து கொள்ளலாம்

8 hours ago, Kandiah57 said:

எவராகவிருந்தாலும். என்ன மொழி பேசினாலும் மக்களுக்கு சிறந்த சேவை. ஆற்றினால். அவர்களை மக்கள் தெரிவு செய்வார்கள்

மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஜெயலலிதாவுடன் ஊழல் மோசடியில் தண்டணை பெற்ற சசிகலாவையோ பழனிச்சாமியையோ தமிழர்கள் என்பதற்காக அதிகாரம் கொடுத்தால் கொள்ளை தான் அடிப்பார்கள்

6 hours ago, goshan_che said:

🤣 அடிக்கடி கோசான் யாழில் எழுதும் போது ஆங்கில பழமொழியை, பெரியோர் மொழியை, சொலவாடையை எடுத்தாளவார்.

ஆகவே கோஷான் ஆங்கிலேயன் 🤣

நான் இப்போது தமிழ் பழமொழிகளை பாடமாக்கி வைத்திருந்து மற்றவர்களுடன் கதைக்கின்ற போது எடுத்து அடித்து விடுகிறேன் நானும் சீமான் மாதிரி பச்சை தமிழன் தான் 🤣

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இது இரண்டுக்குமான வித்தியாசம் தெரியாதவரல்ல தாங்கள் சகோ. ஒன்று படித்து தெரிந்து கொண்டது இன்னொன்று தாய் மொழி. உங்களுக்கு எங்கே அடி விழுந்தாலும் அம்மா என்று தான் வரும். மம்மி என்று வந்தால் சொல்லுங்கள் ஆங்கிலேயன் என்று நான் ஒத்து கொள்கிறேன். ஆனால் அதை ஆங்கிலேயன் ஒரு போதும் ஒத்துக் கொள்ள போவதில்லை.

உண்மையிலேயே ஸ்டாலினின் தாய்மொழி அதாவது அவர் வீட்டில் பேசும் மொழி தெலுங்கு என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

அவர் தெலுங்கு வம்சாவழி என்பது உண்மை ஆனால் அவர் தெலுங்கில் சரளமாக உரையாடுவார் என்பதும், வீட்டில் தெலுங்கு பேசுவார் என்பது இதுவரை நிறுவபடாத விடயங்கள்.

பேரு பெத்த பேரு ஆனா தாகத்துக்கு நீரு லேது என ஒரு கூட்டத்தில் அவர் அது ஒரு தெலுங்கு பழமொழி என சொல்லியே பேசினார்.

அதை வைத்து மட்டும் அவர் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர் என வாதிட முடியாது.

இன்னொன்றையும் சொல்ல வேண்டும் நான் வீட்டில் தமிழ் பேசினாலும், இப்போ ஆங்கிலேயந்தான்.

ஆனால் இனவழி ஆங்கிலேயன் அல்ல ethnic-English.

ஸ்டாலின் இதன் உல்டா. அவர் இனவழி தெலுங்கன் ஆனால் வாழ்வியலில் தமிழன்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

உண்மையிலேயே ஸ்டாலினின் தாய்மொழி அதாவது அவர் வீட்டில் பேசும் மொழி தெலுங்கு என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இந்த புரட்டுக்கள் எல்லாம் முகநூல் மூலம் தமிழ் புரட்சியாளர்களால் பரப்பபடுபவை சிலவாரங்களுக்கு முதல் கூட ஒரு நடிகை அய்சுவரியராய் இறந்துவிட்டார் யப்பானில் நிலநடுக்கம் என்று தகவல்கள் வந்தனவாம்

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

அவர் இனவழி தெலுங்கன் ஆனால் வாழ்வியலில் தமிழன்.

அது எப்படி சீமான் இனவழி தமிழரும், நிர்மலா சீதாராமன் தமிழிச்சியுமானார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

பொதுவாக இந்தியா,பங்களாதேஷ்,பாக்கிஸ்தான்,இலங்கை போன்ற நாடுகளில் உள்ள மக்கள் வெள்ளைக்காரன் என்றால் ஆங்கிலேயரைத்தான் நினைவுக்கு கொண்டு வருவார்கள்.

அதே போல் தமிழரை பிரித்து பார்க்க மாட்டார்கள். திராவிடத்துக்குள் அடக்கி தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,தமிழ் என எல்லாவற்றையும் சாம்பாராக்கி திராவிட முடி சூட்டி விடுவர்.

ஆனால்.....

மலையாளியும்,கன்னடரும்,தெலுங்கரும் மொழிவாரியாக, இன வாரியாக தம் இனத்தை போற்றி பாதுகாப்பர்.தம் நாடு என்பர்.தமக்கு உரியது என்பர்.வேற்று மொழியாருக்கு இடமில்லை என்பர். அதைப்பற்றி யாரும் தூக்கி பிடிக்க மாட்டார்கள்.குறையும் கூற மாட்டார்கள்.

இப்படியான கூத்துக்கள் போக.....

நான் தமிழ்.எனது நாடு என் மக்களுக்கே முதலிடம்.எம்மை நாமே ஆள வேண்டும் என்றால் முதலில் கொதித்தெழுவவது யாரென்று பார்த்தால் அவர்கள் தமிழர்கள் தாம் 😂

தமிழ் நாட்டில் தமிழர் தமிழர் அல்லாதோர் என 300,500 வருடங்கள் முன்பு வந்தோரை பிரித்து பார்க்கும் கலககாரார் யார் என பார்த்தால்…

ஒன்றில் மலையாளிகளாக இருப்பார்கள் (சீமான்).…

அல்லது தமது போராட்த்தை கூட நடத்தாமல் வெளிநாடு ஓடி வந்து விட்டு, அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை, தாம் 64 இயக்கமாக பிரிந்து தம் நாட்டை நாசப்படுத்தியது போல் நாசப்படுத்த எண்ணும், புலம்பெயர் ஈழ தமிழராக இருப்பார்கள்.

54 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அது எப்படி சீமான் இனவழி தமிழரும், நிர்மலா சீதாராமன் தமிழிச்சியுமானார்கள்?

சீமான் தமிழர்…

நிம்மி தமிழர் என்றால்…

ஸடாலினும் தமிழர்.

ஸடாலின் தெலுங்கர் என்றால்..

சீமான் மலையாளி…

நிம்மி…மங்கோலியா🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

பொதுவாக இந்தியா,பங்களாதேஷ்,பாக்கிஸ்தான்,இலங்கை போன்ற நாடுகளில் உள்ள மக்கள் வெள்ளைக்காரன் என்றால் ஆங்கிலேயரைத்தான் நினைவுக்கு கொண்டு வருவார்கள்.

அதே போல் தமிழரை பிரித்து பார்க்க மாட்டார்கள். திராவிடத்துக்குள் அடக்கி தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,தமிழ் என எல்லாவற்றையும் சாம்பாராக்கி திராவிட முடி சூட்டி விடுவர்.

ஆனால்.....

மலையாளியும்,கன்னடரும்,தெலுங்கரும் மொழிவாரியாக, இன வாரியாக தம் இனத்தை போற்றி பாதுகாப்பர்.தம் நாடு என்பர்.தமக்கு உரியது என்பர்.வேற்று மொழியாருக்கு இடமில்லை என்பர். அதைப்பற்றி யாரும் தூக்கி பிடிக்க மாட்டார்கள்.குறையும் கூற மாட்டார்கள்.

இப்படியான கூத்துக்கள் போக.....

நான் தமிழ்.எனது நாடு என் மக்களுக்கே முதலிடம்.எம்மை நாமே ஆள வேண்டும் என்றால் முதலில் கொதித்தெழுவவது யாரென்று பார்த்தால் அவர்கள் தமிழர்கள் தாம் 😂

நீங்கள் கூறுவது தவறு. அப்படி எதுவும் நடக்கவில்லை

தமிழ் நாட்டில் தமிழ் மொழி தனித்துவத்துடன் எழுச்சி பெற்றதற்கு திராவிட இயக்கங்கின் பங்களிப்பை எவராலும் குறைத்து மதிப்பிட முடியாது. இவை எல்லாம் வரலாறுகளாக பல்வேறு நூல்களில் உள்ளன. நீங்கள் வெறும் வட்சப் முகநூல் கட்சி பரப்புரைகளை மட்டுமே வைத்து கருத்து சொல்கின்றீர்கள்.

மிக அதிகமாக சமஸ்கிரதம் திணிக்கப்பட்டிருந்த பல தமிழ் நாட்டு அரச துறையில் தமிழ் கோலோச்ச தொடங்கியது திராவிட இயக்கங்களின் எழுச்சிக்கு பின்னரே. இந்தி திணிப்புக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தியதில் திராவிட இயக்கங்களுக்கு பாரிய பங்களிப்பு உள்ளது. 1974 ம் ஆண்டு யாழ்பாணத்தில் நடந்த தமிழாராய்சசி மகாநாட்டில் கலந்து கொள்ள கருணாநிதிக்கு விசா வழங்க இங்கை அரசு மறுத்ததும் அந்த பின்னணியினால் தான்.

சீமான் மேடைக்கு மேடை தனது வழிகாட்டி எனவும் பச்சை தமிழர் என போற்றும் காமராஜர் தமிழ் தேசியத்தைக்கு எதிராக இந்திய தேசியம் பேசியவர். தமிழ் நாடு என்ற பெயரை கூட சூட்ட மறுத்தவர. மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழ் நாட்டுக்கு சொந்த மான பல பிரதேசங்களை ஆந்திராவுக்கு தாரை வார்தது விட்டு அது பற்றி கேட்ட போது அவை எங்கும் போய்விட வில்லை இந்தியாவுக்குள் தானே உள்ளது என்று பதிலளித்தவர்.

50 களில் ராஜாஜி, காமராஜர் ஆட்சிக்காலங்களில் தமிழ் மொழி இருந்த நிலையையும் பின்னர் 1967 க்கு பின்னரான காலத்தையும் விரிவாக நடு நிலையுடன் ஆராய்ந்து பார்ததால் உங்களுக்கு உண்மை விளங்கும்.

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

தமிழ் நாட்டில் தமிழர் தமிழர் அல்லாதோர் என 300,500 வருடங்கள் முன்பு வந்தோரை பிரித்து பார்க்கும் கலககாரார் யார் என பார்த்தால்…

ஒன்றில் மலையாளிகளாக இருப்பார்கள் (சீமான்).…

அல்லது தமது போராட்த்தை கூட நடத்தாமல் வெளிநாடு ஓடி வந்து விட்டு, அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை, தாம் 64 இயக்கமாக பிரிந்து தம் நாட்டை நாசப்படுத்தியது போல் நாசப்படுத்த எண்ணும், புலம்பெயர் ஈழ தமிழராக இருப்பார்கள்

நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. வரலாற்றை படிக்காமல் அது பற்றிய புரிதல் இல்லாமல் சீமானின் உசுப்பேற்றும் கேவலமான உரைகளை மட்டும் கேட்கும் புலம் பெயர் ஈழத்தமிழர் பலர் சிங்கள இனவெறியர்களை விட மோசமான கடைந்தெடுத்த இனவாதிகளாக உள்ளது உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விளங்க நினைப்பவன் said:

உறவே சீமான் பிறப்பால் ப‌ச்சை த‌மிழ‌ன் என்று சாட்சி சொல்ல பத்து ஆயிரம் தமிழர்கள் வந்தால் ஸ்டாலின் ப‌ச்சை த‌மிழ‌ன் என்று சாட்சி சொல்ல நாற்பது ஆயிரம் தமிழர்கள் வருவார்கள் என்பதே நிலை.தமிழ் நாட்டை ஆண்ட அனைவருமே தமிழர்கள் தான். தமிழ்நாட்டை இதுவரை ஆளாத உதயநிதி சீமான் விஜய்யும் தமிழர்களே தங்களை தமிழர்களாக உணர்பவர்கள் தமிழர்கள் தான்.

இலங்கையில் தமிழர்களில் முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்கள் தங்களை தமிழர்களாக உணரவில்லை கவனியுங்கள்

உற‌வே

2009க்கு பிட் பாடு

எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ரையும் ம‌லையாளி என‌ அவ‌தூறு ப‌ர‌ப்பின‌ கூட்ட‌ம் தான் திமுக்கா கூட்ட‌ம்

இப்போது இணைய‌த்தில் த‌லைவ‌ரை த‌ப்பாக‌ சித்த‌ரிப்ப‌து 200ரூபாய் கொத்த‌டிமைக‌ள்...................அவேன்ட‌ அறிவு புரித்த‌ல் இம்ம‌ட்டுத் தான் என்று க‌ட‌ந்து போவ‌து சிற‌ப்பு

க‌ருணாநிதிய‌ விட‌ பிர‌பாக‌ர‌னுக்கு உல‌க‌ அள‌வில் ஏன் த‌மிழ் நாட்டில் கூட‌ ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு , அதை கெடுக்க‌னும் என்று தான் எங்க‌ட‌ த‌ல‌வ‌ரையும் ம‌லையாளி என‌ அவ‌தூற கில‌ப்பி விட்ட‌வை ஆனால் அது நீண்ட‌ தூர‌ம் போக‌ வில்லை

வைக்கோ த‌மிழ‌ரா தெலுங்க‌ரா ச‌ரியா சொல்லுங்கோ பாப்போம்..............................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

வைக்கோ த‌மிழ‌ரா தெலுங்க‌ரா ச‌ரியா சொல்லுங்கோ பாப்போம்...

1981ல் பிரபகரன், உமா மகேஸ்வரன் சென்னை பாண்டி பஜார் துப்பாக்கி சண்டைக்காக கைது செய்யப்பட்ட போது கைது செய்யப்பட்ட பிரபாவை சந்தித்ததோடு அவர்களை நாடுகடத்துவதை தடுக்க அனைத்து கட்சியினரும் இணைந்து முயற்சி செய்தார். அதில் வெற்றியும் பெற்றார்.

பின்னர் கிட்டத்தட்ட விடுதலை புலிகளின் பிரச்சாரகர் போலவே செயற்பட்டார். 1987 ல் இந்திய இராணுவம் ஈழத்தில் நடத்திய படுகொலைகளை தமிழகத்தில் பரப்புரை செய்ததோடு இந்திய- புலிகள் யுத்தத்தின் காரணமாக தமிழ் நாட்டு மக்களிடையே இருந்த குழப்பநிலையை போக்க பேருதவி புரிந்தார். அன்று திமுக கட்சியில் இருந்த வைகோ கட்சி அரசியல் தொடர்புகள் மூலம் ஜோர்ஐ் பெர்னாண்டஸ் போன்ற வட இந்திய தலைவர்களை அழைத்து வந்து இந்திய இராணுவத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் பிரச்சாரங்களை முன்னெடுத்ததோடு அவரை நிரந்தரமாக ஈழப்போராட்டத்தின் ஆதரவாளராக மாற்றுனார். பின்னர் ராஜீவ் கொலைக்கு பின்னரான பாரிய நெருக்கடி நிலையிலும் ஈழப் போராட்டதை ஆதரித்து பல முறை அதற்காகவே சிறை சென்றார்.

இருப்பினும் தற்போது சீமான் என்ற காமடியன. எம்மை entertainment செய்ய கிடைத்துள்ளதாலும் வைகோவால் எந்த பிரயோசனமும் இல்லை என்பதாலும், “ நன்றி மறத்தல் மிக நன்று”, என்ற ஈழதமிழ் அரசியலின் நியாயப்பட்டிடன் அடிப்படையில் அவரை தூக்கி கடாசி தமிழர் இல்லை என்று கறிவேப்பிலை போல் தூக்கி எறிவது நியாயம் தான்.

( வைகோவின் தமிழக உள்ளூர் அரசியல் கூத்துகளை பற்றி எனக்கும் உடன்பாடு இல்லை. விமர்சனம் உண்டு)

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, வாத்தியார் said:

முதல் தலைமுறை பட்ட கஷ்டங்களினால் அனுபவத்தினால்

இரண்டாம் தலைமுறை சற்றுப் பிறழ்வின்பால் சென்றாலும்....

மூன்றாம் தலைமுறையை காப்பாறும் முயற்சியில் ஆவது முதலாவது தலைமுறையினர் ஈடுபடுவார்கள் என நான் நினைக்கின்றேன்

அப்போது மம்மி டாடி வராது அப்பா அம்மா என்ற சத்தம் வருவதற்கான அறிகுறிகள் எம்மிடையே அதிகமாக est காப்படுகின்றது.

16 hours ago, வாத்தியார் said:

முதல் தலைமுறை பட்ட கஷ்டங்களினால் அனுபவத்தினால்

இரண்டாம் தலைமுறை சற்றுப் பிறழ்வின்பால் சென்றாலும்....

மூன்றாம் தலைமுறையை காப்பாறும் முயற்சியில் ஆவது முதலாவது தலைமுறையினர் ஈடுபடுவார்கள் என நான் நினைக்கின்றேன்

அப்போது மம்மி டாடி வராது அப்பா அம்மா என்ற சத்தம் வருவதற்கான அறிகுறிகள் எம்மிடையே அதிகமாக காணப்படுகின்றது

21

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வீரப் பையன்26 said:

வைக்கோ த‌மிழ‌ரா தெலுங்க‌ரா ச‌ரியா சொல்லுங்கோ பாப்போம்..............................

உங்களைப் போல இளைஞர்கள் இப்படி "முக்கியத்துவம்" வாய்ந்த விடயங்களில் கவனத்தைச் செலுத்துவதால் தான் ஈழத்தமிழர்களின் நிலை இன்று இத்தனை "சிறப்பாக" இருக்கிறது😎!

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, வாத்தியார் said:

முதல் தலைமுறை பட்ட கஷ்டங்களினால் அனுபவத்தினால்

இரண்டாம் தலைமுறை சற்றுப் பிறழ்வின்பால் சென்றாலும்....

மூன்றாம் தலைமுறையை காப்பாறும் முயற்சியில் ஆவது முதலாவது தலைமுறையினர் ஈடுபடுவார்கள் என நான் நினைக்கின்றேன்

அப்போது மம்மி டாடி வராது அப்பா அம்மா என்ற சத்தம் வருவதற்கான அறிகுறிகள் எம்மிடையே அதிகமாக காணப்படுகின்றது

.

45 minutes ago, விசுகு said:
  16 hours ago, வாத்தியார் said:

முதல் தலைமுறை பட்ட கஷ்டங்களினால் அனுபவத்தினால்

1 hour ago, விசுகு said:
  17 hours ago, வாத்தியார் said:

முதல் தலைமுறை பட்ட கஷ்டங்களினால் அனுபவத்தினால்

சிலவற்றிற்கு பதில் எழுதி விட முடியாது வாத்தி தம்பி.

தேசியவாதம் என்பதை இனவாதமாக்கி நோக்கினால் இறுதியில் அது தமிழர்கள் தனி நாடு கேட்பதே தவறு என்பதில் வந்து நிற்கும். அதுவே சிலரின் விருப்பங்கள் கூட.

நான் தமிழ் பெண்ணை திருமணம் செய்வது எனது பிள்ளைகளுக்கு தமிழ் பெயர் வைப்பது பிள்ளைகளுக்கு தமிழர்களை திருமணம் செய்து கொடுப்பது பேரப் பிள்ளைகளுக்கும் இதையே தொடர்வது அனைத்தும் தூர நோக்கு கொண்டவை. தமிழை எம்மால் முடிந்தளவு இன்னும் பல தலைமுறைகளுக்கு கடத்தும் நோக்கம் கொண்டவை. இவை அனைத்தும் இனவாதத்துக்குள் கொண்டு வரப் பட்டால்....?

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, விசுகு said:

நீங்கள் மேலே சொன்னவை எதையும் இனவாதம் என யாரும் எப்போதும் சொல்வதில்லை.

500, 600 வருடங்களாக தமிழ் நாட்டில் வாழும் மக்களை. தமிழில் கல்வி கற்று, தமிழராக தம்மை உணர்பவர்களை சாதியின் அடிப்படையில் தமிழர் இல்லை என்பதுதான் இனத்தூய்மைவாதம்.

அப்படி இனத்தூய்மைவாதம் பார்த்தேதான் ஆக வேண்டும் என்றால், அப்படி ஒரு கருத்தியலை முன்வைக்கும் மலையாளி சைமன் செபஸ்டியனில் இருந்து ஆரம்பிப்பதே முறை.

  • கருத்துக்கள உறவுகள்
On 13/4/2025 at 23:53, goshan_che said:

அண்ணை - சீமானே தான் சந்தித்ததாக ஒத்துகொள்ளவில்லை.

அந்தளவுக்கு இது அரசியலில் மாறான விடயம்.

இங்கே யாருக்கும் சீமான் மீது கோவம் இல்லை.

திருமா மகிந்தவை சந்திப்பார், சீமான் நிம்மியை சந்திப்பார். தமக்கு சுயநலமாக அனுகூலமெனில் இந்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் யமனையே சந்திப்பார்கள்

என்னைப்பொறுத்தளவில் இந்திய நாட்டு அரசியல் மட்டுமே எப்போதும் இலங்கை அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றது-

இனியும் இருக்கும் .

தமிழ் நாட்டு அரசியல்வாதிகளினால் ஒரு நாளும் இலங்கையின் அரசியலைத் தீர்மானிக்க முடியாது .

ஆனால் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளினால் ஈழத் தமிழர்களின் அரசியலை தீர்மானிக்க முடியும் என்று பரப்புரை செய்து தன் அரசியல்

வாழ்வைத் தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களின் ஒருவர் தான் சீமான்.

சரி அவர் தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்கு ஈழத் தமிழர்களை முன்னிறுத்துவதால் அவருடைய வளர்ச்சி குறையவில்லை

ஒவ்வொரு தேர்தலிலும் அவருடைய வாக்கு வங்கி மேலே செல்கின்றதே , அப்படியென்றால் தமிழ் நாட்டு மக்களிடையே ஈழத் தமிழ் மக்கள் மீது இருக்கும் கரிசனை அதிகரிக்கின்றது என்றுதானே எடுக்க வேண்டும்.

தமிழ் நாட்டு மக்களிடம் ஈழப்போராட்டத்தின் மீது கரிசனை இருக்கும் வரை ஈழப்போராட்டம் தக்க வைக்கப்படும்.. இந்தக் கரிசனை தக்க வைக்கப்பட வேண்டும். சீமான் சுயநல அரசியல் செய்தாலும்..... இன்றைய நிலையில்

தமிழ் நாட்டு மக்களை ஈழப் போராட்டத்தின்பால் ஈர்த்து வைத்திருக்கும் ஒரு கருவியாக நாங்கள் சீமானைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வாத்தியார் said:

என்னைப்பொறுத்தளவில் இந்திய நாட்டு அரசியல் மட்டுமே எப்போதும் இலங்கை அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றது-

இனியும் இருக்கும் .

தமிழ் நாட்டு அரசியல்வாதிகளினால் ஒரு நாளும் இலங்கையின் அரசியலைத் தீர்மானிக்க முடியாது

மிக மிக சரியான கருத்துகள் நடைமுறையில் உண்மையும்கூட வாழ்த்துக்கள்

12 minutes ago, வாத்தியார் said:

ஆனால் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளினால் ஈழத் தமிழர்களின் அரசியலை தீர்மானிக்க முடியும் என்று பரப்புரை செய்து தன் அரசியல்

வாழ்வைத் தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களின் ஒருவர் தான் சீமான்.

சரி அவர் தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்கு ஈழத் தமிழர்களை முன்னிறுத்துவதால் அவருடைய வளர்ச்சி குறையவில்லை

ஒவ்வொரு தேர்தலிலும் அவருடைய வாக்கு வங்கி மேலே செல்கின்றதே , அப்படியென்றால் தமிழ் நாட்டு மக்களிடையே ஈழத் தமிழ் மக்கள் மீது இருக்கும் கரிசனை அதிகரிக்கின்றது என்றுதானே எடுக்க வேண்டும்.

ஆமாம் ஆனால் இதனால் எந்தவொரு பிரயோஜனம் இல்லை ..நீங்கள் மேலே தெளிவாக சொல்லி உள்ளீர்கள்

14 minutes ago, வாத்தியார் said:

தமிழ் நாட்டு மக்களிடம் ஈழப்போராட்டத்தின் மீது கரிசனை இருக்கும் வரை ஈழப்போராட்டம் தக்க வைக்கப்படும்.. இந்தக் கரிசனை தக்க வைக்கப்பட வேண்டும். சீமான் சுயநல அரசியல் செய்தாலும்..... இன்றைய நிலையில்

தமிழ் நாட்டு மக்களை ஈழப் போராட்டத்தின்பால் ஈர்த்து வைத்திருக்கும் ஒரு கருவியாக நாங்கள் சீமானைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்

இதனால் தமிழருக்கு இலங்கை தமிழருக்கு எந்தவொரு நன்மையுமில்லை ஆனால் சீமானுக்கு பல நன்மைகள் உண்டு”

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, வாத்தியார் said:

தமிழ் நாட்டு மக்களை ஈழப் போராட்டத்தின்பால் ஈர்த்து வைத்திருக்கும் ஒரு கருவியாக நாங்கள் சீமானைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்

16 minutes ago, Kandiah57 said:

ஆமாம் ஆனால் இதனால் எந்தவொரு பிரயோஜனம் இல்லை ..நீங்கள் மேலே தெளிவாக சொல்லி உள்ளீர்கள்

கடலில் அதிக தூரம் நீந்திக் கடக்கவேண்டிய நிலை வந்தால்

களைப்புவரும்போது ஒரு சிறு துரும்பாவது கிடைக்காதா என்று நினைக்கும் நிலையில் தான் ஈழத்தமிழர்களின் நிலையும் இப்போது இருக்கின்றது.

கிடைத்ததை பற்றிக் கொண்டு அவர்கள் தங்களின் இருப்பைத் தக்க வைப்பதில் என்ன தவறு இருக்கின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, goshan_che said:

500, 600 வருடங்களாக தமிழ் நாட்டில் வாழும் மக்களை. தமிழில் கல்வி கற்று, தமிழராக தம்மை உணர்பவர்களை சாதியின் அடிப்படையில் தமிழர் இல்லை என்பதுதான் இனத்தூய்மைவாதம்.

அப்படி இனத்தூய்மைவாதம் பார்த்தேதான் ஆக வேண்டும் என்றால், அப்படி ஒரு கருத்தியலை முன்வைக்கும் மலையாளி சைமன் செபஸ்டியனில் இருந்து ஆரம்பிப்பதே முறை.

தமிழ்நாட்டில் வசிக்கும் பிரபல்யங்களும்,அரசியல்வாதிகளும் ஏதாவது ஒரு விடயங்களிலாவது தம்மை தெலுங்கு வம்சாவளியினர் என நேரடியாக அல்லது மறைமுகமாக தெரிவிக்கின்றனர். வீடுகளில் தாம் தெலுங்கு மொழியில் தான் உரையாடுவோம் எனவும் சொல்லியுள்ளனர்.

அப்படியிருக்கும் போது சீமான் தன்னை மலையாள வம்சம் என தெரிவிக்கவில்லை. சீமானை சுற்றி கடா முடா கேள்விக்கணைகளை கேட்கும் சீமான் நீங்கள் மலையாள இனமா என கேள்வியும் கேட்டதாக எனக்கு தெரியவில்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்ததை நீங்கள் பார்த்திருந்தால் அந்த இணைப்பை இங்கே இணைத்து விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இதனால் தமிழருக்கு இலங்கை தமிழருக்கு எந்தவொரு நன்மையுமில்லை ஆனால் சீமானுக்கு பல நன்மைகள் உண்டு

முழுக்க உண்மை. ஈழ தமிழ் மக்களின் பாதுகாவலர் சீமான் என்று நம்பி திரள்நிதி வழங்கி கொண்டிருக்கின்றார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, வாத்தியார் said:

தமிழ் நாட்டு அரசியல்வாதிகளினால் ஒரு நாளும் இலங்கையின் அரசியலைத் தீர்மானிக்க முடியாது .

அப்படி முடியாத விடயம் என்றால் ஏன் கருணாநிதி பெட்டி படுக்கை,கூலர் சகிதம் உண்ணாவிரதம் இருந்து இலங்கையில் போர் முடிந்து விட்டது என அறிக்கை விட்டார்.

அது மட்டுமல்ல ஏன் தமிழக அரசியல் தலைவர்கள் வன்னிக்கு வந்து கீச்சு மூச்சு காட்டி உசுப்பேற்றினர்?

முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் கூட விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்தார் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

என்னைப்பொறுத்தளவில் இந்திய நாட்டு அரசியல் மட்டுமே எப்போதும் இலங்கை அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றது-

இனியும் இருக்கும் .

தமிழ் நாட்டு அரசியல்வாதிகளினால் ஒரு நாளும் இலங்கையின் அரசியலைத் தீர்மானிக்க முடியாது .

ஆனால் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளினால் ஈழத் தமிழர்களின் அரசியலை தீர்மானிக்க முடியும் என்று பரப்புரை செய்து தன் அரசியல்

வாழ்வைத் தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களின் ஒருவர் தான் சீமான்.

சரி அவர் தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்கு ஈழத் தமிழர்களை முன்னிறுத்துவதால் அவருடைய வளர்ச்சி குறையவில்லை

ஒவ்வொரு தேர்தலிலும் அவருடைய வாக்கு வங்கி மேலே செல்கின்றதே , அப்படியென்றால் தமிழ் நாட்டு மக்களிடையே ஈழத் தமிழ் மக்கள் மீது இருக்கும் கரிசனை அதிகரிக்கின்றது என்றுதானே எடுக்க வேண்டும்.

தமிழ் நாட்டு மக்களிடம் ஈழப்போராட்டத்தின் மீது கரிசனை இருக்கும் வரை ஈழப்போராட்டம் தக்க வைக்கப்படும்.. இந்தக் கரிசனை தக்க வைக்கப்பட வேண்டும். சீமான் சுயநல அரசியல் செய்தாலும்..... இன்றைய நிலையில்

தமிழ் நாட்டு மக்களை ஈழப் போராட்டத்தின்பால் ஈர்த்து வைத்திருக்கும் ஒரு கருவியாக நாங்கள் சீமானைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்

இது ஒரு நல்ல மூலோபாய சிந்தனைதான். ஆனால் இதில் இரு வழுக்கள் உள்ளன.

  1. ஈழத்தமிழர் நலனின் வழு - சீமானின் 2009 க்கு பின்னான நடவடிக்கைகளின் பின் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் மீதான வெறுப்பு உள்ளவர்கள், ஈழத்தமிழர் பிரச்சனை உருபாக்குபவர்கள், என்ற எண்ணம் உள்ளவர்கள் மிக அதிகமாக உருவாகி உள்ளனர்.

சீமான் களத்தில் இறங்கும் வரை காங்கிரஸ், பிஜேபி ஆட்கள் தவிர மிகுதி அனைவரும் ஈழ ஆதரவாளர்களாகவே இருந்தனர். செயலில் எதுவும் இல்லாவிடிலும் - மனதளவிலாவது ஆதரவு இருந்தது.

இப்போ இது வெகுவாக குறைந்துள்ளது.

அகதி நா*, இன்னும் பல வசை மொழிகள், தலைவரை உருவக்கேலி, என தமிழ் நாடு 2009க்கு முன் கண்டறியாத பல விடயங்கள் அரங்கேறுகிறன.

இவை மட்டும் அல்ல, முஸ்லிம் வெளியேற்றம், கட்டாய ஆட்சேர்ப்பு, சிறுவர் படை சேர்ப்பு, அரந்தலாவை, இன்னும் பலதை வெளியே எடுத்து - புலிகள் பயங்கரவாதிகளே எனவும் எடுத்து சொல்லப்படுகிறது.

சீமான் மூலம் தமிழ் நாட்டில் உருவாக்கப்பட்ட ஈழ-எதிர் மனநிலையின் விளைவு இது.

அதேபோல் இதை ஈழத்தின் ஆதரவாக சீமான் 8% ஐ திரட்டினார் என்றால் அதில் முக்கால்வாசி நெய்தல் படை அமைப்போம் என நம்பும் அடி முட்டாள் கூட்டமாகவே இருக்கிறது.

முடிவில் சீமான் ஈழத்தமிழருக்கு தமிழ் நாட்டில் பலமான எதிரிகளையும், பலவீனமாக ஆதரவாளர்களையும் உருவாக்கி விட்டுள்ளார் என்பதும், இதில் நீண்ட கால நோக்கில் ஈழத்தமிழருக்கு நல்லதை விட தீமையே அதிகம் என்பதும் கண்கூடு.

  • கருத்துக்கள உறவுகள்
  1. தமிழக தமிழர் நலனில் வழு - இன்றளவும் சங்பரிவார் கூட்டம் தமிழ் நாட்டை அண்டாமல் இருக்க ஒரே காரணம் திக, திமுக, அதிமுக தான்.

சீமான் நிச்சயம் திராவிடத்தை, தமிழ் தேசியத்தால் பிரதியீடு செய்ய போவதில்லை. மாறாக இரெண்டில் ஒரு கட்சியாக இருக்கும் அதிமுகவை அழித்து, அதை பாஜகவால் பிரதியீடு செய்வதே, அதாவது பாஜகவுக்கு வழி சமைத்து கொடுப்பதே சீமானின் அரசியலின் ஆக கூடிய பெறுபேறாக இருக்கும்.

சீமான் உண்மையில் திமுக அணி வாக்கை பிரிப்பதில்லை. அவர் பிரிப்பது திமுக-எதிர் வாக்கை. அதாவது அதிமுக வாக்கை. சீமான் இப்படி செய்ய, செய்ய அதிமுக மீதான பாஜக ஆளுமை அதிகரிக்கும்.

இப்போ அதிகுகவை மிரட்டி கூட்டணி வைக்கும் அளவுக்கு வந்து விட்ட பாஜக, 2026 இன் பின் - ஒட்டுமொத்த அதிமுகவையே விழுங்கி விடும்.

இதை சீமான் இலகுவாக்குகிறார்.

ஆக தமிழக தமிழர் நலனை பார்த்தாலும் சீமான் ஒரு கெட்ட விசமே.

பிகு

இதில் எங்கேயும் சீமான் ரோவின் கையாள் என்ற நோக்கில் நான் எழுதவில்லை. உங்கள் கருத்தியலின் அடிப்படையில் மட்டுமே எழுதியுள்ளேன்.

அந்த நோக்கையும் கருத்தில் எடுத்தால் சீமான் தமிழ் கூறு நல்லுலகிற்கே விசம் என்பது புரியும்.

1 hour ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டில் வசிக்கும் பிரபல்யங்களும்,அரசியல்வாதிகளும் ஏதாவது ஒரு விடயங்களிலாவது தம்மை தெலுங்கு வம்சாவளியினர் என நேரடியாக அல்லது மறைமுகமாக தெரிவிக்கின்றனர். வீடுகளில் தாம் தெலுங்கு மொழியில் தான் உரையாடுவோம் எனவும் சொல்லியுள்ளனர்.

அப்படியிருக்கும் போது சீமான் தன்னை மலையாள வம்சம் என தெரிவிக்கவில்லை. சீமானை சுற்றி கடா முடா கேள்விக்கணைகளை கேட்கும் சீமான் நீங்கள் மலையாள இனமா என கேள்வியும் கேட்டதாக எனக்கு தெரியவில்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்ததை நீங்கள் பார்த்திருந்தால் அந்த இணைப்பை இங்கே இணைத்து விடுங்கள்.

கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி தம் தாய் மொழி தெலுங்கு, தாம் வீட்டில் தெலுங்குதான் பேசுவோம் என கூறிய ஆதாரத்தை நீங்கள் வெளியிட்டு 10 செக்கனுக்குள் நான் சீமான் மலையாளி என்ற ஆதரத்தை வெளியிடுவேன்.

2 hours ago, வாத்தியார் said:

களைப்புவரும்போது ஒரு சிறு துரும்பாவது கிடைக்காதா என்று நினைக்கும் நிலையில் தான் ஈழத்தமிழர்களின் நிலையும் இப்போது இருக்கின்றது.

முதலையை பிடித்து கொண்டு தொங்க கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, goshan_che said:

கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி தம் தாய் மொழி தெலுங்கு, தாம் வீட்டில் தெலுங்குதான் பேசுவோம் என கூறிய ஆதாரத்தை நீங்கள் வெளியிட்டு 10 செக்கனுக்குள் நான் சீமான் மலையாளி என்ற ஆதரத்தை வெளியிடுவேன்.

நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். உங்கள் ஆதாரத்தை நிரூபியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். உங்கள் ஆதாரத்தை நிரூபியுங்கள்.

எனக்கு நீங்கள் வெல்வதோ தோற்பதோ இலக்கல்ல.

கருணாநிதி தெலுங்கன் என்பது அவர் “சின்னமேளம்” என்ற வசைசொல்லால் அறியப்படும் இசைவேளார் சாதி என்பதால்.

அதே போல் “கிறிஸ்தவ நாடார்” சீமானும் மலையாளி என சாதிய உட்பிரிவை கொண்டுதான் வகைபடுத்தபடுகிறார்.

இங்கே இவர்கள் இனத்தூய்மை பற்றி சிறுநீரக மாதிரி மூலம் நிறுவிய ஆதாரம் உங்களிடமும் இல்லை, என்னிடமும் இல்லை.

ஆனால் நான் தமிழராய் உணர்வோர் எல்லோரும் தமிழரே என ஏற்பதால் - கருணாநிதி, சீமானின் சாதியை ஆராயாமல் இருவரையும் தமிழராக ஏற்கிறேன்.

இதில் ஒருவரை ஏற்கமுடியாது என நீங்கள் சொன்னால், மற்றவரையும் ஏற்க முடியாது என்கிறேன்.

அவ்வளவுதான்.

Edited by goshan_che

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.