Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

கேரளாவுக்கு எத்தனையாவது இடம்?

கேரளா 15 ஆயிரம் சதுர மைல். த.நா 50 ஆயிரம் சதுர மைல்.

வறுமை கோட்டு தகவலில் கேரளாவுக்கு அருகில் இலட்சதீவு, புதுச்சேரி, கோவா நிக்கும்.

தமிழ் நாட்டை அதை ஒத்த பெரிய மாநிலங்களோடுதான் ஒப்பிட வேண்டும்.

அதே போல் கேரளாவிலும் திறமான மாநில ஆட்சியாளர் அமைந்தனர் என்பதால், தமிழ் நாட்டில் அமையவில்லை என கூற முடியாது.

Edited by goshan_che

  • Replies 78
  • Views 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ஒரு சில இலங்கை தமிழ் தற்குறிகள், சமூக வலைத்தளங்களில் வரும் தமிழகத்தின் பொருளாதாரத்தை பற்றியும், அதன் தலைமைத்துவத்தை பற்றியும் தவறான தகவல்களை எந்தவித கேள்விகளுக்கும் உற்படுத்தாமல் பரப்பிவருகின்றார்கள்

  • குமாரசாமி
    குமாரசாமி

    தமிழ்நாட்டின் கிராம பக்கங்களுக்கு போனால் வளர்ச்சி தெரியும்.😃 இந்த செய்தியை வாசிக்கும் போது பிரமாண்ட இயக்குனர் சங்கரின் திரைப்படம் பார்த்த பீலிங் வருவது எனக்கு மட்டும் தானா? அதை விட இந்தியாவிலேயே தமி

  • goshan_che
    goshan_che

    கேரளாவில் படிப்பறிவு வீதம் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே (சம்ஸ்தானங்கள்) அதிகம். சுதந்திரத்துக்கு முந்தைய மெட்டிராஸ் பிரசெடென்சியில், இன்றைய கேரள பகுதிகள் இலங்கை போல வழமான இடமாகவும், அதிகாரிகள், ஆசிரி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

டாஸ்மார்க்குக்கு நான் ஆதரவில்லை. ஆனால் புத்தர் முதலமைச்சர், யேசு நிதியமைச்சர் அல்லாத நாடு/மாநிலம் ஒன்றில் இது பெரிய சதவீதமாக எனக்கு படவில்லை

பள்ளிகூடம் போகாமல் கட் அடித்து கள்ளு குடித்துவிட்டு படத்துக்கு போனவர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஒரு மாநிலத்தில் எப்படி புத்தர், யேசு எல்லாம் முதலமைச்சராவது?

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நிர்வாக சேவை அதிகாரிகள் கொள்கை முடிவை எடுப்பதில்லை.

தேசிய கொள்கைகள் அல்ல.

மாநிலக் கொள்கைகள்.

IAS என்ற படியால் தான் கொள்கை தொடர்ச்சி.

அப்போது எப்படி சில மாநிலங்கள் பிந்திய வளர்ச்சி - மாநிக்க கொளகைகள் மாற பிந்தியது.

ஏற்கனவே சொல்லவிட்டே சிறு மாற்றங்களை செய்யலாம். போக்கில் மாற்றங்களை செய்ய முடியாது.

அனால் தேசிய பொருளாதார கொள்ககைகளை வகுப்பதும் ias தான். கொள்கை வகுப்பு முறை மத்தியில் இருக்கும் அமைப்பு முறையே மாநிலத்திலும் இருக்கிறது. பெயர்கள் வேறுபடலாம்.

(உண்மையில் கிந்தியா யாப்பின் படி மாறி, IAS வேண்டுமாயின் மாநில அரசியல்வாதி கொள்கைகளை தடுக்கலாம்.

இது அம்பேத்கா ர் சாதி கொடுமையை பார்த்து செய்தது. மொழியில் அதிகாரத்தை பரவல் ஆக்குவதாகவும், வேண்டுமாயின் மத்தி மாநிலத்தை தடுக்கலாம் என்றும்.)

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

தமிழ் நாட்டு பொருளாதர வளர்ச்சியில் ஈழதமிழன் சீலை, நகை, சினிமா மூலம் கொடுத்த இலாபம், மிக, மிக, மிக சொற்பமானது.

எங்களுக்குத்தான் இது பெரிய காசு, தமிழ் நாட்டு பொருளாதாரத்துடன் ஒப்பிட்டால் - தூசு.

சரி தான் அனைத்து மாநிலங்களினதும். வளர்ச்சி வீதம் 10. உள்ளே தான் எங்களாது அந்த சொற்பம் கூட இவர்கள் முதலிடம் பிடிக்க. காரணமாகும் சீலை நகை. சினிமா விட காய்கறிகள் கருவேற்பிலை தூள் வகைகள். சுற்றுலா,.....போன்றன பங்களிப்பை வழங்கும் இல்லையா??

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

கேரளா 15 ஆயிரம் சதுர மைல். த.நா 50 ஆயிரம் சதுர மைல்.

வறுமை கோட்டு தகவலில் கேரளாவுக்கு அருகில் இலட்சதீவு, புதுச்சேரி, கோவா நிக்கும்.

தமிழ் நாட்டை அதை ஒத்த பெரிய மாநிலங்களோடுதான் ஒப்பிட வேண்டும்.

அதே போல் கேரளாவிலும் திறமான மாநில ஆட்சியாளர் அமைந்தனர் என்பதால், தமிழ் நாட்டில் அமையவில்லை என கூற முடியாது.

படித்தவர் கூடிய மாநிலம் கேரளா என்பார்கள் அதனால் கேட்டேன்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

தேசிய கொள்கைகள் அல்ல.

மாநிலக் கொள்கைகள்.

IAS என்ற படியால் தான் கொள்கை தொடர்ச்சி.

அப்போது எப்படி சில மாநிலங்கள் பிந்திய வளர்ச்சி - மாநிக்க கொளகைகள் மாற பிந்தியது.

ஏற்கனவே சொல்லவிட்டே சிறு மாற்றங்களை செய்யலாம். போக்கில் மாற்றங்களை செய்ய முடியாது.

அனால் தேசிய பொருளாதார கொள்ககைகளை வகுப்பதும் ias தான். கொள்கை வகுப்பு முறை மத்தியில் இருக்கும் அமைப்பு முறையே மாநிலத்திலும் இருக்கிறது. பெயர்கள் வேறுபடலாம்.

(உண்மையில் கிந்தியா யாப்பின் படி மாறி, IAS வேண்டுமாயின் மாநில அரசியல்வாதி கொள்கைகளை தடுக்கலாம்.

இது அம்பேத்கா ர் சாதி கொடுமையை பார்த்து செய்தது. மொழியில் அதிகாரத்தை பரவல் ஆக்குவதாகவும், வேண்டுமாயின் மத்தி மாநிலத்தை தடுக்கலாம் என்றும்.)

நிச்சயமாக இல்லை.

இந்தியா, இலங்கை நாம் வகிக்கும் மேற்கில் கூட கொள்கையை முடிவு செய்வது அதிகாரிகள் அல்ல.

மக்கள் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள்.

உதாரணமாக - திமுக கடந்த தேர்தலில் எதிர்கட்சியாக இருந்த போது ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என ஒரு தேர்தல் அறிக்கை அல்லது கொள்கை பிரகடனத்தை வெளியிட்டார்கள்.

ஆட்சிக்கு வந்த பின் அந்த கொள்கைகளை நடைமுறை படுத்துகிறார்கள்.

அதை நடைமுறை படுத்தும் உத்தியை வகுப்பதும், நடைமுறை படுத்துவதும்தான் அதிகார வர்க்கம்.

2 hours ago, Kadancha said:

அப்போது எப்படி சில மாநிலங்கள் பிந்திய வளர்ச்சி - மாநிக்க கொளகைகள் மாற பிந்தியது

மாநில கொள்கையால்தான் சிலது முன்னேற சிலது பிந்தங்கியது.

அது திறமையான மாநில கொள்கையை வரித்து கொள்ளாத, ஒழுங்காக அதிகாரிகளை மேற்பார்வையிடாத அந்தத்த மாநில அரசியல் தலைவர்கள் பிழை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

சரி தான் அனைத்து மாநிலங்களினதும். வளர்ச்சி வீதம் 10. உள்ளே தான் எங்களாது அந்த சொற்பம் கூட இவர்கள் முதலிடம் பிடிக்க. காரணமாகும் சீலை நகை. சினிமா விட காய்கறிகள் கருவேற்பிலை தூள் வகைகள். சுற்றுலா,.....போன்றன பங்களிப்பை வழங்கும் இல்லையா??

இல்லை அண்ணை.

ஒட்டுமொத்த இலங்கையின் ஜிடிபி 99 பில்லியன்.

தமிழ் நாட்டின் = 420 பில்லியன்.

இலங்கையின் பொருளாதாரத்தில் நாம் செலுத்தும் பங்களிப்பினை விட பலமடங்கு குறைவு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் நாம் செலுத்தும் பங்களிப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, goshan_che said:

ஆனால் மீனை, மண்ணை தவிர, நிலக்கரி, தாதுக்கள், எண்ணை என சகல வளத்தையும் அகழும் அதிகாரம் மத்திய அரசிடமே உண்டு.

கச்சதீவை பரிமாறியது யார் அதிகாரத்துக்குள் வரும்?

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

கச்சதீவை பரிமாறியது யார் அதிகாரத்துக்குள் வரும்?

அந்த கடல் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இரு தரப்புகள் இலங்கையும், இந்திய மத்திய அரசும் மட்டுமே.

இது சம்பந்தமான ஆவணங்களை பிறிதொரு திரியில் தந்துள்ளேன்.

நாட்டின் எல்லையை விட்டுகொடுப்பது, சுருக்குவது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் அதிகாரம்.

இது நடந்த போது கருணாநிதி அதை எதிர்க்கவில்லை, ஆதரவாக நடந்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டே ஒழிய - கச்சதீவையோ, இச்ச தீவையோ சுவீகரிக்கும் அல்லது விட்டு கொடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, goshan_che said:

இது நடந்த போது கருணாநிதி அதை எதிர்க்கவில்லை, ஆதரவாக நடந்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டே ஒழிய - கச்சதீவையோ, இச்ச தீவையோ சுவீகரிக்கும் அல்லது விட்டு கொடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை.

கட்சியின் கோட்பாடாக கருணாநிதி கச்சதீவு சீதனத்துக்கு ஆதரவு தந்தார். இன்று கருணாநிதியின் மகனும் பேரனாரும் கச்ச தீவு வேண்டும் என்கிறார்கள்.

அதுதான் பெரிய பகிடி.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2025 at 18:45, விசுகு said:

கடந்த சில ஆண்டுகளாக ஸ்டாலின் திராவிடம் என்று பேசியதை விட தமிழ் தமிழ் என்று பேசியது தான் அதிகம். அப்படியானால் தமிழ் தான் உயர்த்தி இருக்கவேண்டும் 🤗

உண்மை....தமிழ் தேசியம்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

படித்தவர் கூடிய மாநிலம் கேரளா என்பார்கள் அதனால் கேட்டேன்.

நன்றி.

  1. கேரளாவில் படிப்பறிவு வீதம் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே (சம்ஸ்தானங்கள்) அதிகம். சுதந்திரத்துக்கு முந்தைய மெட்டிராஸ் பிரசெடென்சியில், இன்றைய கேரள பகுதிகள் இலங்கை போல வழமான இடமாகவும், அதிகாரிகள், ஆசிரியர்களை உருவாக்கும் இடமாகவும்,

இன்றைய தமிழ்நாட்டின், குறிப்பாக மத்திய, தென் தமிழ்நாட்டின் பகுதிகள் கூலி தொழிலாளர்க்ளை உருவாக்கும் இடமாகவும் இருந்தன.

இலங்கைக்கு பிரிட்டிஷ் காலத்தில் வந்த மலையாளிகள் - ஆசிரியர்கள், கங்காணிகள், குறைந்தது டீ க்கடை போடுபவர்களாக வந்தனர் - ஆனால் தமிழர் தொழிலாளராகவே வந்தனர்.

இது கேரவாவிற்கு உள்ள நூற்றாண்டு கால early advantage.

இதனால் கல்வி, பெண்கல்வி, சிசுக்கொலை என தமிழ் நாட்டை பீடித்துள்ள பலது கேரளாவில் இருக்கவில்லை.

தமிழ்நாட்டை அதன் பிற்போக்குதனத்தில் இருந்து விடுவிக்க போராடியது போல் கேரளாவில் தேவைபடவில்லை. ஆகவே அங்கு கல்வியில், சுகாதாரத்தில், மாநில அரசின் கவனம் குவிவது இலகுவாகியது.

பிற்போக்குதனத்தில் சுதந்திர்ந்த்தின் பின்னான தமிழ்நாடு ஆந்திரா, ஒரிசாவை போலவே இருந்தது. கேரளா அப்படி அல்ல.

  1. எண்ணிகை. கேரளாவில் சனத்தொகை தமிழ் நாட்டின் பாதி. கல்வியறிவு வித்தியாசம், 93% உம் 80% உம்.

  2. இன்னும் பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று கேரள கம்யூனிச, காங்கிரஸ் அரசுகள் போல ஆரம்பம் முதலே தமிழ்நாட்டு அரசுகள் செயல்படவில்லை. காமராஜர், 60 களின் பின் திராவிட கட்சிகள்தான் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தன. ராஜாஜி குலக்கல்வி வேண்டும் என்றார்.

  3. அதே போல் கேரள கட்சிகள் அளவுக்கு, திராவிட கட்சிகள் இந்த விடயத்தில் தீவிர முனைப்பு காட்டவில்லை என்பதும் உண்மை.

  4. ஆனால் தனியே எழுத படிக்க தெரிந்த கேரளாவை விட தமிழ்நாட்டிலும், கர்னாநடகாவிலும் கல்வியில், தொழில் கல்வியில், ஐ.டி. யில் சிறப்பு தேர்ச்சி உள்ளதும் உண்மை. உயர் கல்வியில் தமிழ்நாடு முன்னேதான் நிற்கிறது. சுந்தர் பிச்சைகள், சிவன்கள் தமிழ்நாட்டில் வருவது போல் கேரளாவில் இல்லை.

  5. அதே போல் industrialization தொழில்மயமாதலில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதல் என நினைக்கிறேன்.

24 minutes ago, குமாரசாமி said:

கட்சியின் கோட்பாடாக கருணாநிதி கச்சதீவு சீதனத்துக்கு ஆதரவு தந்தார். இன்று கருணாநிதியின் மகனும் பேரனாரும் கச்ச தீவு வேண்டும் என்கிறார்கள்.

அதுதான் பெரிய பகிடி.

கச்சதீவு ஒரு மேட்டரே இல்லை.

அது தமிழக அரசியல்வாதிகள் மாறி மாறி உதைக்கும் புட்போல்.

இதை நாமும் தூக்கி கொண்டு திரிவதுதான் எல்லாத்தையும் வெண்ட பகிடி.

தமிழக மீனவர் இலங்கை நேவியிடம் அடி வாங்குவது கச்சதீவிலோ அதன் அருகிலோ அல்ல, நெடுந்தீவுக்கு அருகிலும், வல்வெட்டிதுறைக்கு அருகிலும்.

கச்சதீவு இந்தியாவிடம் இருந்தாலும் இது இப்படித்தான் இருக்கும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:
  1. கேரளாவில் படிப்பறிவு வீதம் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே (சம்ஸ்தானங்கள்) அதிகம். சுதந்திரத்துக்கு முந்தைய மெட்டிராஸ் பிரசெடென்சியில், இன்றைய கேரள பகுதிகள் இலங்கை போல வழமான இடமாகவும், அதிகாரிகள், ஆசிரியர்களை உருவாக்கும் இடமாகவும்,

இன்றைய தமிழ்நாட்டின், குறிப்பாக மத்திய, தென் தமிழ்நாட்டின் பகுதிகள் கூலி தொழிலாளர்க்ளை உருவாக்கும் இடமாகவும் இருந்தன.

இலங்கைக்கு பிரிட்டிஷ் காலத்தில் வந்த மலையாளிகள் - ஆசிரியர்கள், கங்காணிகள், குறைந்தது டீ க்கடை போடுபவர்களாக வந்தனர் - ஆனால் தமிழர் தொழிலாளராகவே வந்தனர்.

இது கேரவாவிற்கு உள்ள நூற்றாண்டு கால early advantage.

இதனால் கல்வி, பெண்கல்வி, சிசுக்கொலை என தமிழ் நாட்டை பீடித்துள்ள பலது கேரளாவில் இருக்கவில்லை.

தமிழ்நாட்டை அதன் பிற்போக்குதனத்தில் இருந்து விடுவிக்க போராடியது போல் கேரளாவில் தேவைபடவில்லை. ஆகவே அங்கு கல்வியில், சுகாதாரத்தில், மாநில அரசின் கவனம் குவிவது இலகுவாகியது.

பிற்போக்குதனத்தில் சுதந்திர்ந்த்தின் பின்னான தமிழ்நாடு ஆந்திரா, ஒரிசாவை போலவே இருந்தது. கேரளா அப்படி அல்ல.

  1. எண்ணிகை. கேரளாவில் சனத்தொகை தமிழ் நாட்டின் பாதி. கல்வியறிவு வித்தியாசம், 93% உம் 80% உம்.

  2. இன்னும் பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று கேரள கம்யூனிச, காங்கிரஸ் அரசுகள் போல ஆரம்பம் முதலே தமிழ்நாட்டு அரசுகள் செயல்படவில்லை. காமராஜர், 60 களின் பின் திராவிட கட்சிகள்தான் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தன. ராஜாஜி குலக்கல்வி வேண்டும் என்றார்.

  3. அதே போல் கேரள கட்சிகள் அளவுக்கு, திராவிட கட்சிகள் இந்த விடயத்தில் தீவிர முனைப்பு காட்டவில்லை என்பதும் உண்மை.

  4. ஆனால் தனியே எழுத படிக்க தெரிந்த கேரளாவை விட தமிழ்நாட்டிலும், கர்னாநடகாவிலும் கல்வியில், தொழில் கல்வியில், ஐ.டி. யில் சிறப்பு தேர்ச்சி உள்ளதும் உண்மை. உயர் கல்வியில் தமிழ்நாடு முன்னேதான் நிற்கிறது. சுந்தர் பிச்சைகள், சிவன்கள் தமிழ்நாட்டில் வருவது போல் கேரளாவில் இல்லை.

  5. அதே போல் industrialization தொழில்மயமாதலில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதல் என நினைக்கிறேன்.

கச்சதீவு ஒரு மேட்டரே இல்லை.

அது தமிழக அரசியல்வாதிகள் மாறி மாறி உதைக்கும் புட்போல்.

இதை நாமும் தூக்கி கொண்டு திரிவதுதான் எல்லாத்தையும் வெண்ட பகிடி.

தமிழக மீனவர் இலங்கை நேவியிடம் அடி வாங்குவது கச்சதீவிலோ அதன் அருகிலோ அல்ல, நெடுந்தீவுக்கு அருகிலும், வல்வெட்டிதுறைக்கு அருகிலும்.

கச்சதீவு இந்தியாவிடம் இருந்தாலும் இது இப்படித்தான் இருக்கும்.

இவ்வளவு தரவுகளை ஒற்றைப் பதிவில் தந்திருக்கிறீர்களே? நீங்கள் "வேலை வெட்டி" இல்லாமல் இருக்கிறீர்களா? 😎

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

கச்சதீவை பரிமாறியது யார் அதிகாரத்துக்குள் வரும்?

19 hours ago, goshan_che said:

அந்த கடல் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இரு தரப்புகள் இலங்கையும், இந்திய மத்திய அரசும் மட்டுமே.

இது சம்பந்தமான ஆவணங்களை பிறிதொரு திரியில் தந்துள்ளேன்.

நாட்டின் எல்லையை விட்டுகொடுப்பது, சுருக்குவது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் அதிகாரம்.

இது நடந்த போது கருணாநிதி அதை எதிர்க்கவில்லை, ஆதரவாக நடந்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டே ஒழிய - கச்சதீவையோ, இச்ச தீவையோ சுவீகரிக்கும் அல்லது விட்டு கொடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை.

large.IMG_9488.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

large.IMG_9488.jpeg

இணைப்புக்கு நன்றி.

கருணாநிதி முள்ளிவாய்க்கால் இறுதி போரை முடிவுக்கு கொண்டுவர “போராடியது” போலத்தான் கச்சதீவு விட்டு கொடுப்பில் நடந்து கொண்டார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு என நினைக்கிறேன்.

ஆனால் உண்மையில் இது ஒரு உப்புசப்பில்லாத விடயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

large.IMG_9488.jpeg.f2aa0e9241f04c51e7cc

கச்சதீவு தமிழர் பிரதேசங்களுக்கு நடுவில் தானே இருக்கின்றது.இரு பக்க தமிழர்கள் தானே அங்கு ஒன்று கூடினார்கள். பண்டமாற்று மற்றும் உறவு பரிமாற்றங்களை செய்தார்கள்.

இதற்கு கருணாநிதி அவர்கள் ஏன் பதை பதைத்தார் துடி துடித்தார்? 😎

  • கருத்துக்கள உறவுகள்
On 13/4/2025 at 14:18, goshan_che said:

நிச்சயமாக இல்லை.

மேலோட்டமான புரிதல், ஹிந்தியைன் பொருளாதரத்தை பொறுத்தவரை.

அப்படி அரசியல் வாதிகள் செய்ய முடியும் என்றால், 1991 க்கு முதல் , ஏன் தென்மாநிலங்கள், (இலங்கையில் வந்த ஒப்பிட்டளவிலான தாராளமயத்தை, அந்த போக்கை ) கொண்டு வர முடியவில்லை, வளர்த்தி வேறுபாடுகள் தெரிந்தும்? ஆனால், முயன்றன தென் மாநில அரசியல் கட்சிகள்.

அதே போல, 1991 தளரமயம் வந்ததும் அரசியல் வாதிகளால் அல்ல. 1991 balance of payment பிரச்சனையால்.

ஆனால், மன்மோகன்சிங் பொருளியல் துறை நிபுணராக இருந்தது வாய்ப்பாகியது. மன்மோகனின் பேச்சை பார்க்கவும், போக்கையே மாற்றுகிறோம் என்பது. (கொங்கிரஸ் சொல்லி இருந்தது சீரமைப்பு, போக்கை மாற்றுவது அல்ல).

  • கருத்துக்கள உறவுகள்
On 13/4/2025 at 07:03, Kadancha said:

தேசிய கொள்கைகள் அல்ல.

மாநிலக் கொள்கைகள்.

IAS என்ற படியால் தான் கொள்கை தொடர்ச்சி.

அப்போது எப்படி சில மாநிலங்கள் பிந்திய வளர்ச்சி - மாநிக்க கொளகைகள் மாற பிந்தியது.

ஏற்கனவே சொல்லவிட்டே சிறு மாற்றங்களை செய்யலாம். போக்கில் மாற்றங்களை செய்ய முடியாது.

அனால் தேசிய பொருளாதார கொள்ககைகளை வகுப்பதும் ias தான். கொள்கை வகுப்பு முறை மத்தியில் இருக்கும் அமைப்பு முறையே மாநிலத்திலும் இருக்கிறது. பெயர்கள் வேறுபடலாம்.

(உண்மையில் கிந்தியா யாப்பின் படி மாறி, IAS வேண்டுமாயின் மாநில அரசியல்வாதி கொள்கைகளை தடுக்கலாம்.

இது அம்பேத்கா ர் சாதி கொடுமையை பார்த்து செய்தது. மொழியில் அதிகாரத்தை பரவல் ஆக்குவதாகவும், வேண்டுமாயின் மத்தி மாநிலத்தை தடுக்கலாம் என்றும்.)

இதன் படி பார்த்தால் "மாநில அரசு" என்பது எங்கள் ஊர் மாநகர/நகர சபை போல "வாய்க்கால் தூரும்" அமைப்புகள் போல படுகிறதே?

இன்னொரு சந்தேகம்: இந்த "வாய்க்கால் தூரும்" தமிழ் நாட்டு அரசின் தலைமையை யார் ஏற்றாலும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றாமல் ஈழத்தமிழர் பற்றியகொள்கைகளும் மாறாதே? பிறகேன் மொக்குத் தனமாக நடந்து கொள்ளும் ஒரு சாக்கடை தமிழக அரசியல் வாதியை எங்கள் ஆட்கள் முட்டுக் கொடுத்துத் தாங்குகிறார்கள்😂?

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Justin said:

நீங்கள் கூறிய அந்த அரசியல்வாதி வந்தால் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பச்சை மட்டை மூலம் சட்டங்களை அமுல்படுத்துவார். அதை கண்டு வியப்பு அடைய போகும் மேற்கு நாடுகளும் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு பச்சை மட்டை யை கையில் எடுக்க, அண்ணன் உலக நாடுகளுக்கு எல்லாம் பச்சை மட்டை ஏற்றுமதி செய்து தமிழ் நாட்டு பொருளாதாரத்தை உயர்ததுவார். ஏற்கனவே நெய்தல் படை அமைத்து விடுவாரோ என்ற அச்சத்தில் இலங்கை கடற்படை அதிர்சசி அடைந்துள்ளதாம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

இதன் படி பார்த்தால் "மாநில அரசு" என்பது எங்கள் ஊர் மாநகர/நகர சபை போல "வாய்க்கால் தூரும்" அமைப்புகள் போல படுகிறதே?

பொருளாதரத்தில், மாநில நிர்வாகம் பெரிதாக மாற்ற முடியாது, (கொள்கை) போக்குக்குள் இருக்க வேண்டும்.

(அனால் , எந்த மாநில அரசியல் வாதிகளுக்கும் போக்கை மாற்ற வேண்டும் என்பது தேவை இல்லை)

அனால், 2015 இல் மோடி, மாநிலங்களுக்கும் கொள்கை அமைப்பில் இடம் கொடுக்க வேண்டும் என்று, NITI Aayog (இதை policy commision என்றே வெளியில் சொல்வது) என்பதை உருவாக்கி இருக்கிறார். ஆயினும், முடிவு அந்த அமைப்பிடம்தான்.

இதன் அடிப்படை காரணம், இந்தியா மத்திய அரச அமைப்பு, அதாவது அரச இயந்திரம் கிட்டத்தட்ட ராஜ் (அதாவது முடி) என்ற வகிபாகத்தை எடுத்து கொண்டது, முக்கிய சனநயாக நடைமுறைகளுடன்.

பொருளாதாரத்தில், licensing ராஜ் என்றே இருந்தது வியாபாரம், தொழிற்றத்துறையை தொடங்குவதற்கு (அதில் 80 அதிகார பீடங்களிடம் அனுமதி வாங்க வேண்டும்) , 1991 இல் தாராளள மாயா போக்கில், இது 5-6 துறைகளை தவிர மிகுதி எல்லா துறைகளுக்கும் இல்லாமல் செய்யப்பட்டது.

ஆயினும், அதுக்கான மாற்றீடு licensing முறையும் வந்தது

வேறு பல அம்சங்களும் (குறிப்பிட்ட அதிகாரத்தின் பெயர்) ராஜ் இப்போதும் இருக்கும் என்றே நினைக்கிறன்.

மற்றது ias / ifs/ ips / irs ... அதிகாரிகளை நீக்குவது மிகவும், மிகவும் கடினம், அதிபருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது.

இவை எல்லாம் ஒன்றாக சேரும் போது, IAS அதிகாரிகள் கொள்கை முடிவு எடுக்கும் நிலைக்கு வருகிறார்கள்.

(அனால், இதை அமெரிக்கா தூதவர்களும் அவதானித்து குறித்து உள்ளார்கள்,எமது யுத்தம் நடந்த போது, அதாவது அதிகாரிகள் கொள்கைமுடிவு எடுக்கிறார்கள் என்று.

சிவசங்கர் மேனனின் நூலில், இந்தியா கொள்கை முடிவு எடுத்ததாக, அனால் எடுத்து உண்மையில் யார்?)

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

மேலோட்டமான புரிதல், ஹிந்தியைன் பொருளாதரத்தை பொறுத்தவரை.

உங்களது மிக தவறான புரிதல் - விளக்கம் கீழே.

3 hours ago, Kadancha said:

அப்படி அரசியல் வாதிகள் செய்ய முடியும் என்றால், 1991 க்கு முதல் , ஏன் தென்மாநிலங்கள்

ஏன் என்றால் நரசிம்மராவ் என்ற அரசியல்வாதியும், மன்மோகன் சிங் என்ற அரசியல்வாதியும் 1991 க்கு பின், பிரதம, நிதி அமைச்சர்களாக திறந்த பொருளாதார கொள்கையை இந்திய ஒன்றியத்யில் அமல் படுத்தினர்.

பாரிய பொருளாதார கொள்கை, macro economic policy ஒட்டு மொத்த இந்திய நாட்டுக்கு உரியதே. அதனுள்தான் மாநில அரசுகள் பொருளாதார கொள்கையை அமைக்க முடியும்.

ஆனால் ஒன்றிய, மாநில பொருளாதார கொள்கையை அமைப்பது பிரதமர், முதலமைச்சர் எனும் அரசியல்வாதிகள்தான், அதிகாரிகள் அல்ல.

3 hours ago, Kadancha said:

அதே போல, 1991 தளரமயம் வந்ததும் அரசியல் வாதிகளால் அல்ல. 1991 balance of payment பிரச்சனையால்.

என்ன பிரச்சனையால் வந்தாலும், கொண்டு வந்தது நரசிம்மராவ், மன்மோகன் சிங்தான்.

Architects of modern, free market India என இவர்கள்தான் வர்ணிக்கப்படுகிறார்கள். எந்த அதிகாரியும் அல்ல.

3 hours ago, Kadancha said:

ஆனால், மன்மோகன்சிங் பொருளியல் துறை நிபுணராக இருந்தது வாய்ப்பாகியது. மன்மோகனின் பேச்சை பார்க்கவும், போக்கையே மாற்றுகிறோம் என்பது. (கொங்கிரஸ் சொல்லி இருந்தது சீரமைப்பு, போக்கை மாற்றுவது அல்ல).

உங்களுக்கு நான் என்ன எழுதபோகிறேன் என்பது புரிந்து ஒரு சடையல்🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 14/4/2025 at 22:43, குமாரசாமி said:

large.IMG_9488.jpeg.f2aa0e9241f04c51e7cc

கச்சதீவு தமிழர் பிரதேசங்களுக்கு நடுவில் தானே இருக்கின்றது.இரு பக்க தமிழர்கள் தானே அங்கு ஒன்று கூடினார்கள். பண்டமாற்று மற்றும் உறவு பரிமாற்றங்களை செய்தார்கள்.

இதற்கு கருணாநிதி அவர்கள் ஏன் பதை பதைத்தார் துடி துடித்தார்? 😎

இப்போ மலையாளி சின்ன கருணாநிதி, ஈழத்தில் என் சொந்தங்களை கொன்றார்கள் என கூலிக்கு மாரடிப்பதில்லையா?

அதையேதான் அப்போ பெரிய கருணாநிதி செய்துள்ளார்😎

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

இதன் படி பார்த்தால் "மாநில அரசு" என்பது எங்கள் ஊர் மாநகர/நகர சபை போல "வாய்க்கால் தூரும்" அமைப்புகள் போல படுகிறதே?

இன்னொரு சந்தேகம்: இந்த "வாய்க்கால் தூரும்" தமிழ் நாட்டு அரசின் தலைமையை யார் ஏற்றாலும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றாமல் ஈழத்தமிழர் பற்றியகொள்கைகளும் மாறாதே? பிறகேன் மொக்குத் தனமாக நடந்து கொள்ளும் ஒரு சாக்கடை தமிழக அரசியல் வாதியை எங்கள் ஆட்கள் முட்டுக் கொடுத்துத் தாங்குகிறார்கள்😂?

சுத்த பைத்தியக்காரத்தனமான கதை இது.

அணிசேராமை என்பது நேரு உருவாக்கிய கொள்கை.

திறந்த பொருளாதாரம் என்பது ராவும், மன்மோகனும் சேர்ந்து உருவாக்கியது.

கஸ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் - மோடியும் அமித்ஷாவும்.

பாகிஸ்தானை கையாளும் விதம் - மோடி வந்த பின், முன்னர் காங்கிரஸ் ஆட்சியில் எப்படி மாறுபாடாக உள்ளது. ஆனால் இரெண்டு ஆட்சியிலும் அதிகாரிகள் ஒரே ஆட்கள்தான்.

இந்தியா தன் அண்டை நாடுகள் மீதான போக்கை 1990 களின் மத்தியில் குஜ்ரால் வெளிநாட்டமைச்சராக இருந்த போது மாற்றியது. அதன் பெயரே Gujral doctrine.

நிலமை இதுதான்.

ஒரு ஜனநாயக நாட்டில், அதிகாரிகள்தான் எல்லாம் என்றால் ஆட்சியில் அரசியல்வாதிகள் எதுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

நிலமை இதுதான்.

ஒரு ஜனநாயக நாட்டில், அதிகாரிகள்தான் எல்லாம் என்றால் ஆட்சியில் அரசியல்வாதிகள் எதுக்கு.

இது எந்த நாட்டிலும் இருக்கக் கூடிய சாதாரண நிலை, ஓரளவு செய்தி வாசிக்கும் எவருக்கும் புரியக் கூடிய உண்மை.

ஆனால், "திராவிட மொடல் காரணமாக பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை" என்று நிறுவ "சீரமைப்பு" , "போக்கு" என்பன இரு வேறு விடயங்கள் என குத்தி முறியும் நிலைக்கு வந்திருக்கிறார் கடஞ்சா! அவரது தியரியின் மிகப்பெரிய ஓட்டை, இதே IAS அதிகாரிகள் செயலில் இருக்கும் பீகாரில் ஏன் தமிழகம் போல வளர்ச்சி இல்லை? என்பதற்கான பதிலில் இருக்கிறது.

இதையெல்லாம் சீரியசாக அணுகுவது நேர விரயம்😂!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

இதில் அவருக்கு ஒரு உண்மையான புரிதல் தடுமாற்றமும் இருப்பதாக எனக்கு படுகிறது.

ஆங்கிலத்தில் policymakers என்ற ஒரு சொல்லை பாவிப்பார்கள்.

ஆங்கிலத்திலேயே இது ஒரு தவறான சொற்பதம் - misnomer.

கொள்கையை முந்தள்ளி, முடிவெடுக்கும் அரசியல்வாதி, அவரின் கட்சிசார் ஆலோசகர், ஆலோசனை வழங்கும், நடைமுறைபடுத்தும் நிர்வாக சேவை அதிகாரிகள், இன்னும் 3rd party stakeholders அனைவரையும் குறிக்கும் ஒரு பொதுபதமாக இந்த policymakers என்ற பதம் பயன்படுகிறது.

இப்போ எல்லாம் இந்த பதத்தை தவிர்த்து - policy-actors என்ற பொருத்தமான பதத்தை பாவிக்க ஆரம்பித்துள்ளனர்.

ஆங்கிலத்தில் உள்ள இந்த misnomer ஐ அப்படியே தமிழில் காவி - கொள்கைவகுப்பாளர் என பிழையாக விளங்கி கொண்டுள்ளார்.

மாக்கிரெட் தட்சர் சொன்ன ஒரு மிக முக்கிய வாசகம்:

Advisors advise but ministers decide.

அதிகாரிகள் ஆலோசனை சொல்வார்கள், ஆனால் முடிவை மந்திரிகள்தான் எடுப்பார்கள் என்பதே இதன் அர்த்தம்.

பொதுவாக ஒரு கட்சியின் கொள்கை முடிவு அது அதிகாரிகளிடம் அதிகம் தொடர்பில் இல்லாத எதிர் கட்சியாக இருக்கும் போதே எடுக்கப்பட்டு விடும்.

இவை தேர்தல் அறிக்கையிலும் இருக்கும். அந்த கொள்கைகளை ஆட்சிக்கு வந்த பின் அமல் படுத்துவதில் அதிகாரிகள் பங்கெடுப்பார்கள்.

இந்தியா உட்பட உலகெங்கும் இதுதான் நடைமுறை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.