Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

15 APR, 2025 | 11:46 AM

image

யுத்த காலத்தில் போர் நிறுத்தத்தை விரும்பாத  அப்போதைய ஜே.வி.பி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை மூழ்கடிக்கும் முயற்சியே செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வை மேற்கொள்வதில் தயக்கம் காட்டுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டுகிறார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை இராணுவத்தினால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சுமார்  600க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் யாழ். செம்மணியில் புதைக்கப்பட்டமை ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெற்ற  காலப்பகுதியில் குறித்த பகுதி மறைக்கப்பட்டு இரவிரவாக கனரக வாகனங்கள் மூலம் அகழ்வு  மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதனை மூடி மறைப்பதற்கும் ஆதாரங்களை அழிப்பதற்கும் பல்வேறு முயற்சிகள் அப்போதைய அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. 

அதேபோன்று தற்போதைய ஜே.வி.பி என்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அண்மையில் செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதனை அகழ்வதற்கு அனுமதி வழங்காது இழுத்தடிப்பு செய்கின்றது. 

அரசாங்கத்தை பொருத்தவரையில் மனிதப் புதைகுழி ஒன்றை அகழ்வதற்கு 20 இலட்சம் ரூபா என்பது சிறிய தொகை. அதனை வழங்குவதற்கு கூட தற்போதைய அரசாங்கம் அக்கறை செலுத்தாது இழுத்தடிப்பு செய்கிறது.

இந்த மனித புதைகுழியை தமிழ் பேராசிரியர் ஒருவர் ஆய்வு செய்வதற்காக அமர்த்தப்பட்ட நிலையில் அவரைக் கூட தற்போதைய அரசாங்கம் மாற்றுவதற்கான காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருவதாக அறியக் கிடைத்துள்ளது. 

தற்போதைய தேசிய மக்கள் சக்தி என்கின்ற ஜே.வி.பியினர் தொடர்பில் தமிழ் மக்கள் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். 

இறுதி யுத்த காலத்தில் போர் நிறுத்தத்தை விரும்பாத இராணுவத்துக்கு ஆட்களை திரட்டி தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைகளை மேற்கொண்டவர்கள், பெயரை மாற்றிக்கொண்டு தமிழ் மக்களுக்கான தீர்வினை தரப் போகிறோம் என மக்களை ஏமாற்றி தமது சிங்கள ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல்களை அரங்கேற்றிய வண்ணம் உள்ளனர். 

இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலும் சர்வதேச விசாரணைகளை  மூடி மறைக்கும் செயற்பாடுகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. 

தேசிய மக்கள் சக்தியினர் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் என்பதற்கு தற்போதைய பட்டலந்த விவகாரம் மிகச் சரியான உதாரணமாகும். 

அதாவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரட்டை வேடத்தை தமிழ் மக்கள் அறிந்த விவகாரமாக பட்டலந்த விவகாரத்தை கொள்ளலாம்.

பட்டலந்த வீட்டுத் திட்ட குடியிருப்பில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தமது தோழர்கள் தொடர்பாக சர்வதேச தரப்புக்களை இணைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு தயார் என கூறுகிறார்கள். இதிலிருந்து என்ன புரிகிறது..? இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான இனப்படுகொலைகளை  சர்வதேச ரீதியில் விசாரிப்பதற்கு மறுத்து உள்ளூர் விசாரணை மூலம் தீர்வு என கூறுகிறார்கள்.

ஆனால், பட்டலந்தவில் படுகொலை செய்யப்பட்ட தமது ஜே.வி.பி. தோழர்களுக்கு சர்வதேச தரப்புக்களை அழைத்து  விசாரணைக்கு தயார் என கூறும் தேசிய மக்கள் சக்தியினர் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கும் போர் குற்றங்களுக்கும் ஏன் சர்வதேச விசாரணைகளை நடத்தி தீர்வு காண மறுக்கிறார்கள்.

தமது அரசியல் நோக்கத்துக்காக பட்டலந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள தேசிய மக்கள் சக்தியினர், செம்மணி மனிதப் புதைகுழியை தோண்டுவதற்கு சிறிய பணத்தொகையை கூட வழங்க பின்னிற்கும் இவர்கள், புதைகுழி  விவகாரத்தை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லத் தயாராக இருக்கிறார்களா?

ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஆறு மாதங்கள் கடந்து செல்கின்ற நிலையில், ஜே.வி.பி என்கின்ற தேசிய மக்கள் சக்தியை பற்றி தத்துவார்த்த ரீதியாக தமிழ் மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள். 

ஆகவே, தமிழ் மக்களை தத்துவார்த்த ரீதியாக அழிப்பதற்கு பல்வேறு செயற்றிட்டங்களை வகுத்துக் கொடுத்த தற்போதைய தேசிய மக்கள் சக்தியை தமிழ் மக்கள் விரட்டியடிப்பதற்கான காலம் கனிந்துள்ளது என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/212020

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் படுகொலைகளை விசாரிக்க, வெளிநாட்டு விசாரணை தேவையில்லை, உள்ளூரிலையே விசாரிக்கலாம் என்று ஐ.நா. வில் சொல்லிவிட்டு வந்த சுமந்திரன் எங்கே? இப்படிப் பட்ட லூசு அரசியல்வாதிகளால்... தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியும் கிடைக்காமல் போகின்றது. இவர்களை அரசியலை விட்டே அடித்துத் துரத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

தமிழர் படுகொலைகளை விசாரிக்க, வெளிநாட்டு விசாரணை தேவையில்லை, உள்ளூரிலையே விசாரிக்கலாம் என்று ஐ.நா. வில் சொல்லிவிட்டு வந்த சுமந்திரன் எங்கே? இப்படிப் பட்ட லூசு அரசியல்வாதிகளால்... தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியும் கிடைக்காமல் போகின்றது. இவர்களை அரசியலை விட்டே அடித்துத் துரத்த வேண்டும்.

சும்மா பொய்ச் செய்திகளை வைத்து அலட்டிக் கொண்டிருக்காமல் இப்படி "தேவையில்லை" என்று சொல்லப் பட்ட ஆதாரத்தை இணைக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Justin said:

சும்மா பொய்ச் செய்திகளை வைத்து அலட்டிக் கொண்டிருக்காமல் இப்படி "தேவையில்லை" என்று சொல்லப் பட்ட ஆதாரத்தை இணைக்கலாமே?

ஒருவரை எமக்கு பிடிக்காவிட்டால் நேர்மையாக அவரது அரசியலை விமர்சிக்காமல் அவர் மீது ஆதாரமில்லாமல் அவதூறுகளை வீசி, பின்னர் துரோகி பட்டம் கொடுத்துப் பின்னர் போட்டு தள்ளு. இதுவே எமக்கு காலாகாலமாய் சொல்லிக் கொடுக்கப்பட்ட அரசியல் பாடம். அதை தான் நாம் செய்வோம். என்ன செய்ய, கடைசியில் சொல்லப்பட்டதை செய்யவோ செய்விக்கவோ முடியாமல் வயிறு எரிஞ்சு நாங்க படுற அவஸ்தை தெரியாமல் ஆதாரம் அது இது என்று நீங்க வேற தொல்லை. 😂

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபான்மை மக்களுக்கான நீதியை பெறவே முடியவில்லை: சர்வதேச விசாரணை வேண்டும் - சுமந்திரன்

Published By: J.G.STEPHAN

10 DEC, 2020 | 04:53 PM

image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் நீண்டகாலமாக இழுத்தடிப்புகளே காணப்பட்டு வருகின்றது. இலங்கையின் நீதித்துறை சுயாதீனம் இல்லை என்பதை ஆட்சி செய்தவர்களும் ஆட்சி செய்கின்றவர்களும் முன்வைக்கும் விமர்சனத்தில் இருந்தே வெளியாகிவிட்டது. அதனால் தான் இந்த நாட்டில் இடம்பெற்ற மோசமான குற்றங்கள், சர்வதேச சட்டங்களை மீறும் குற்றங்கள் பல நடந்துள்ள காரணத்தினால் சர்வதேச நீதிமன்ற தலையீட்டை கொண்ட  சர்வதேச விசாரணைகளை கேட்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார்.

http://cdn.virakesari.lk/uploads/medium/file/140568/sfkghjghj.jpg

அவர் மேலும் கூறுகையில், அரசாங்கங்கள் உருவாகும், வீழும் ஆனால் நீதிமன்ற சுயாதீனம் பலமானதாக இருக்க வேண்டும். இந்த நாட்டில் நீதிமன்ற சுயாதீனம் உறுதியானதாக இல்லை என்பது சபையில் பேசியவர்களின் கருத்தில் தெரிகின்றது. இது ஆரோக்கியமான ஒன்றல்ல. அதேபோல் மனித உரிமை வழக்குகள் மாகாண மேல் நீதிமன்றங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். எனினும் இந்த நாட்டின் நீதிமன்ற சுயாதீனம் குறித்த முரண்பாடுகள் எமது நாட்டின் மீதான தவறான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் காரணியாக அமைந்துள்ளது. குறிப்பாக சிறும்பான்மை மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. தசாப்த காலமாக இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொள்ள முடியாத நெருக்கடி நிலைமைகள் உருவாகியுள்ளது. அரசியல் தலையீடுகள் நீதிமன்றங்கள் மீது பிரயோகிக்கப்படுவதன் காரணமாகவே இந்த நிலைமைகள் உருவாகின்றது என கருதுகிறேன். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் குறித்தும் வேறு ஒரு கோணத்தில் இருந்தே பார்க்கப்பட்டும் வருகின்றது. இது குடியுரிமை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து இன்று வரையில் நீட்டிக்கப்படுகின்றது.

அண்மைக்கால நடவடிக்கைகளை கருத்தில் கொண்டாலும் கூட சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் எழுகின்ற நேரங்களில் எல்லாம் நீதி அமைச்சர் டுவிட்டர் மூலமாக கருத்துக்களை கூறுவதை மட்டுமே செய்து வருகின்றார். அவரால் அதனை மாத்திரமே செய்ய முடியும். முஸ்லிம்களின் இறுதிக் கிரியைகள் குறித்த பிரச்சினை எழுந்த நேரமும் அதனையே அவர் செய்தார். பெரும்பான்மையின் நிலைப்பாட்டுக்கு அமைய நியாயம் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அதேபோல் வேறு சில காரணிகளில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. உதாரணமாக 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற கலவரம் குறித்தும் இன்னமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவுமில்லை. அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருப்பவர்கள் அரச பாதுகாப்பிலேயே உயிரிழக்கின்றனர் என்றால் அது பாரிய பிரச்சினையாகும். அண்மையில் மஹர சிறையிலும் கைதிகள் கொல்லப்பட்டனர். 2000 ஆம் ஆண்டில் பிந்துனுவெவ சிறையில் 27 பேர் கொல்லப்பட்டனர் . 2012 வவுனியா சிறையில் நிமலரூபன், டில்ருக்ஷன் கொல்லப்பட்டனர். இவர்கள் அடித்து கொல்லப்பட்டனர். கை கால்கள் உடைக்கப்பட்டிருந்தது. இதற்கான சாட்சியங்கள் உள்ளது.

இவ்வாறு பட்டியலை நீட்டித்துக்கொண்டே செல்ல முடியும். அரசாங்கம் ஜனநாயகத்தை உயரியதாக கருதுவதாக கூறுகின்றது. சிறந்த நீதிமன்ற கட்டமைப்பு உள்ளதாக கூறுகின்றது. அவ்வறு இருந்தும் எவ்வாறு சிறைக்குள் கொல்லப்படும் நபர்கள் குறித்த உண்மைகளை கண்டறிந்து குற்றவாளிகளை தண்டிக்காது இருக்க முடியும். நீதிமன்ற சுயாதீனமே இல்லாத ஒரு நாட்டிற்கு எதற்கு நீதி அமைச்சர் என்ற கேள்வியே எழுகின்றது. குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில்லை என்பது மிக மோசமான நீதி கட்டமைப்பாகும். 

திருகோணமலை ஐந்து மாணவர் கொலை விவகாரத்தில் நீதி எங்கே? கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தல் விடயத்தில் என்னவானது? சிவநேசன் விடயத்தில் என்னவானது? ரவிராஜ் விடயத்தில் நீதி எங்கே? பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கொல்லப்பட்டனர். அவர்கள் குறித்த விசாரணைகள் என்னவானது? லசந்த விக்கிரமதுங்க, கீத் நோயர், பிரகீத் எக்னளிகொட, 34 தமிழ் ஊடகவியலாளர்கள் காணமால் போனமை, கொல்லப்பட்டமை குறித்தெல்லாம் ஏன் நீதி நிலைநாட்டப்படவில்லை. ஒரு சிலரது கொலைகளில் பாதுகாப்பு படையினர் தொடர்புபட்டுள்ளனர். இந்த விடயங்களில் குறைந்த பட்சம் விசாரணைக்குக் கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஜனநாயக, சட்ட வல்லமை கொண்ட நாடென்றால் ஏன் இவ்வாறு நடக்கின்றது. எனவே நீதிமன்றம் மீது நம்பிக்கை எமக்கு இல்லை என நேரடியாக எம்மால் கூட முடியும். இதற்கான எம்மை நீங்கள் திட்ட முடியாது. இந்த நாட்டில் மோசமான குற்றங்கள் இடம்பெற்றுள்ளது. சர்வதேச குற்றங்கள் பல நடந்துள்ளது. அதனால் தான் சர்வதேச விசாரணைகளை கேட்கிறோம். சர்வதேச நீதிமன்ற தலையீட்டை கோருகின்றோம். அதனை நீங்கள் வேண்டாம் என கூற முடியாது. இலங்கையின் நீதித்துறை சுயாதீனம் இல்லை என்பதை ஆட்சி செய்தவர்களும் ஆட்சி செய்கின்றவர்களும் முன்வைக்கும் விமர்சனத்தில் வெளியாகிவிட்டது. நாம் புதிதாக கூறத் தேவையில்லை, நீங்களே அதனை கூறிக்கொண்டுள்ளீர்கள் என்றார். 

https://www.virakesari.lk/article/96329

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விசாரணைக்கான சாத்தியப்பாடு பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். சில அழுத்தங்களை கொடுப்பார்களே தவிர முழுமையான சர்வதேச விசாரணை நடக்கப்போவதில்லை என்பதே ஜதார்த்தம். இன்றைய நிலையில் சாத்தியப்பாடான அரசியல் தீர்வை எட்ட முயற்சிப்பதே வினை திறனான செய்ய வேண்டியது. அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்ற பலவற்றை கூறினாலும் Reality என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப செயற்படுதல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

தேர்தல் வருதல்லோ

தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ய உதவிய, துணை நின்ற, பின் கதவால் ஆதரவு கொடுத்த அமெரிக்கா, ஐரோப்பியா, அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் இருந்து ஜேவிபி வரைக்கும் ஒரு போதும் நீதியான சர்வதேச விசாரணைக்கு முழுமையான ஆதரவு கொடுக்கப் போவதில்லை. கூட்டுக்களவாணிகள் எவரும் பங்காளிகளை காட்டிக் கொடுத்து தாமும் மாட்டுப்பட மாட்டார்கள். இலங்கையை தன் வழிக்கு கொண்டு வர மட்டுமே அதை வைத்து பூச்சாண்டி காட்டுவார்கள்.

அத்துடன், இத்தனை பேரழிவுகளை மக்கள் மீது நிகழ்த்தும் இஸ்ரேலின் அட்டூழியங்களை ஆசிர்வதித்துக் கொண்டு, புட்டினை மட்டும் கண்டிக்கும் இந்த உலக நாடுகளின் வெளிப்படையான இரட்டை வேடங்களை கண் முன்னே கண்டு கொண்டு இருக்கும் இந்த காலகட்டத்திலும் இப்படியான விசாரணைகள் மீது நம்பிக்கை வைக்க முடியுமா?

தக்கண பிழைக்கும். மற்றவை அழிக்கப்படும் என்பதே இன்றைய நீதி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

தேர்தல் வருதல்லோ

தமிழ்சிறி, "சர்வதேச விசாரணை வேண்டாம், உள்ளக விசாரணை போதும்!" என்று சுமந்திரன் சொன்னதாக உருட்டுகிறார். நீங்களோ, அவர் இப்போது சர்வதேச மட்ட விசாரணை வேண்டும் என்று பேசுவதை "தேர்தல் வருவதால் பேசுகிறார்" என்கிறீர்கள். அப்படியானால், உங்களிடம் சுமந்திரன் சர்வதேச விசாரணை வேண்டாம் என்று சொன்னமைக்கான ஆதாரம் இருக்கிறது போல😂? அப்படியா?

தலைவர்கள், பிரதிநிதிகளின் குறைபாடுகள் சுட்டிக் காட்டப் பட வேண்டும். அதை, போலித் தகவல்களை வைத்துக் கொண்டு செய்ய வேண்டிய அவசியமில்லை.

பலமான காரணங்கள் இல்லமையால் தான் இத்தகைய போலிப் புரட்டுகளைத் தூக்கி வர வேண்டியிருக்கிறதோ என யோசிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நடந்த குற்றங்களுக்கு கியூபாவிலா விசாரணை நடக்கும் என்று நக்கலாகச் சொன்னவர் சுமத்திரன்.மக்கள் எல்லோரும் மறதியானவர்கள் என்ற நினைப்பில் எழுதக்கூடாது.அதற்கும் ஒருபடி மேலே போய் சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என்று சொன்னவரும் இதே சுமத்திரன்தான்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
On 15/4/2025 at 15:51, Justin said:

சும்மா பொய்ச் செய்திகளை வைத்து அலட்டிக் கொண்டிருக்காமல் இப்படி "தேவையில்லை" என்று சொல்லப் பட்ட ஆதாரத்தை இணைக்கலாமே?

33 minutes ago, புலவர் said:

இலங்கையில் நடந்த குற்றங்களுக்கு கியூபாவிலா விசாரணை நடக்கும் என்று நக்கலாகச் சொன்னவர் சுமத்திரன்.மக்கள் எல்லோரும் மறதியானவர்கள் என்ற நினைப்பில் எழுதக்கூடாது.அதற்கும் ஒருபடி மேலே போய் சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என்று சொன்னவரும் இதே சுமத்திரன்தான்.

புலவர்...

இங்கு சுமந்திரனுக்கு முட்டுக் கொடுப்பதற்காக... ஜஸ்ரின்

கோமாவில் இருந்து வந்தவர் போல், நடிக்கின்றார்.

இப்படி இவர் நடிப்பது, இது முதல் முறையும் அல்ல.

நன்றாக தெரிந்து கொண்டே... பித்தலாட்டம் செய்வது அவரது குணாதிசயம்.

அதனால் அவருக்கு பதில் எழுதி விளங்கப் படுத்துவது, நேர வீண் விரயம் என்பதால்,

இங்கு ஒரு சிலருக்கு , நான் பதில் எழுதி மினைக்கெடுவதில்லை.

ஆர்வம் இருந்தால்...

2015´ம் ஆண்டு வந்த செய்திகளை புரட்டிப் பார்க்கட்டும். animiertes-lesen-smilies-bild-0017.gif animiertes-lesen-smilies-bild-0013.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

இலங்கையில் நடந்த குற்றங்களுக்கு கியூபாவிலா விசாரணை நடக்கும் என்று நக்கலாகச் சொன்னவர் சுமத்திரன்.மக்கள் எல்லோரும் மறதியானவர்கள் என்ற நினைப்பில் எழுதக்கூடாது.அதற்கும் ஒருபடி மேலே போய் சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என்று சொன்னவரும் இதே சுமத்திரன்தான்.

உங்க தலைவர் கஜேந்திர குமார் சர்வதேச விசாரணைக்கு முயற்சித்து பார்க்கலாமே! அவரால் சர்வதேச விசாரணை இல்லை ஒரு கிராமசபை விசாரணையை கூட செய்விக்க முடியாத வெத்து வேட்டு. அதற்குள் ஒரு நாடு இரு தேசம் என்று நடக்க முடியாத விடயங்களை கூறி வண்டியை ஓட்டுகிறார். புலம் பெயர. நடுகளில் தமிழ ஈழம் பெற்று தருவோம் என்று மக்களிடம் பணம் வசூலித்து அதை ஆட்டையை போட்டது ஒரு தமிழ் தேசிய களவாணிக் கும்பல். இப்படியே ஆளாளுக்கு தமிழ் தேசியத்தை வைத்து பிராடு வேலை செய்து விட்டு இந்த தலைமுறை நிம்மதியாக கண்ணை மூடிவிடும். தாயகத்தில் தமிழர் பகுதிகளில் மக்கள தொகை வீழ்சசி. 70 களில் இருந்ததையும் இழந்தது தான கண்ட மிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

"சும் இப்படி சொன்னாராம்" என்று முகநூலில் வந்து தமிழும், ஆங்கிலமும் தெரியாதவர்கள் போட்ட துணுக்குகளை நான் உங்களிடம் கேட்கவில்லை. "சர்வதேச விசாரணை வேண்டாம், உள்ளக விசாரணை போதும்" என்று சுமந்திரன் சொன்னதை - எழுத்தோ, பேட்டியோ- இங்கே இணையுங்கள்.

வந்ததோடு இன்னொன்றையும் தெளிவு படுத்தி விட்டுப் போங்கள்: "குறுக்கே விழுந்து தடுக்க" 😎சுமந்திரன் இப்போது இல்லை! இந்த தடை நீங்கிய சூழலில் உங்கள் பொன்னம்பலம் பா. உ இனப்படுகொலை விசாரணையை எவ்வளவு தூரம் முன்னகர்த்தியுள்ளார்?

2 hours ago, தமிழ் சிறி said:

புலவர்...

இங்கு சுமந்திரனுக்கு முட்டுக் கொடுப்பதற்காக... ஜஸ்ரின்

கோமாவில் இருந்து வந்தவர் போல், நடிக்கின்றார்.

இப்படி இவர் நடிப்பது, இது முதல் முறையும் அல்ல.

நன்றாக தெரிந்து கொண்டே... பித்தலாட்டம் செய்வது அவரது குணாதிசயம்.

அதனால் அவருக்கு பதில் எழுதி விளங்கப் படுத்துவது, நேர வீண் விரயம் என்பதால்,

இங்கு ஒரு சிலருக்கு , நான் பதில் எழுதி மினைக்கெடுவதில்லை.

ஆர்வம் இருந்தால்...

2015´ம் ஆண்டு வந்த செய்திகளை புரட்டிப் பார்க்கட்டும். animiertes-lesen-smilies-bild-0017.gif animiertes-lesen-smilies-bild-0013.gif

ஆதாரம் கேட்டவுடன் பொட்டுக்கால் புகுந்து எஸ் ஆகி விட்டு, புலவர் வந்ததும் "நேர சேமிப்பு" என்ற காரணத்தோடு வந்திருக்கிறீங்கள்! யாழ் வாசகர்களை முழு முட்டாள்களாக நினைத்துக் கொண்டு, சமூக வலை ஊடகங்களில் எவராவது உங்கள் தலையில் அரைக்கும் மிளகாயை அப்படியே இங்கே கொண்டு வந்து சம்பல் செய்யும் போது, நேரம் வீணாவதேயில்லை என நினைக்கிறேன்😎!

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே தீர்ப்பு கிடைக்குமா? நீதி வாழுமா என்பதல்ல அநீதி இழைக்கப்பட்டதா? இல்லையா என்பதே.

அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அதற்காக எவர் குரல் கொடுத்தாலும் ஆதரிக்கவேண்டும். அவ்வளவு தான் .

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

நீதி அமைச்சர் டுவிட்டர் மூலமாக கருத்துக்களை கூறுவதை மட்டுமே செய்து வருகின்றார்.

நீங்கள் பத்திரிகை பேட்டியில் மட்டுமே செய்து செய்து வருகின்றீர்கள்🤣

1 hour ago, விசுகு said:

இங்கே தீர்ப்பு கிடைக்குமா? நீதி வாழுமா என்பதல்ல அநீதி இழைக்கப்பட்டதா? இல்லையா என்பதே.

அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அதற்காக எவர் குரல் கொடுத்தாலும் ஆதரிக்கவேண்டும். அவ்வளவு தான் .

கண் முன்னே எவ்வளவோ சாட்சிகள் இருந்தும் தீர்வோ அல்லது நீதியோ வழங்கப்படவில்லை ...ஐயா...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

உங்க தலைவர் கஜேந்திர குமார் சர்வதேச விசாரணைக்கு முயற்சித்து பார்க்கலாமே! அவரால் சர்வதேச விசாரணை இல்லை ஒரு கிராமசபை விசாரணையை கூட செய்விக்க முடியாத வெத்து வேட்டு. அதற்குள் ஒரு நாடு இரு தேசம் என்று நடக்க முடியாத விடயங்களை கூறி வண்டியை ஓட்டுகிறார். புலம் பெயர. நடுகளில் தமிழ ஈழம் பெற்று தருவோம் என்று மக்களிடம் பணம் வசூலித்து அதை ஆட்டையை போட்டது ஒரு தமிழ் தேசிய களவாணிக் கும்பல். இப்படியே ஆளாளுக்கு தமிழ் தேசியத்தை வைத்து பிராடு வேலை செய்து விட்டு இந்த தலைமுறை நிம்மதியாக கண்ணை மூடிவிடும். தாயகத்தில் தமிழர் பகுதிகளில் மக்கள தொகை வீழ்சசி. 70 களில் இருந்ததையும் இழந்தது தான கண்ட மிச்சம்.

சிங்கள தேசியவாதிகள் 70 வருடங்களாக இனவாதம் பேசி,இனவழிப்பு செய்து ஒற்றையாட்சி என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தற்பொழுது தமிழர் என்ற இனமில்லை என சொல்லும் ஜெ.வி...பி...யை விட தமிழ் தேசியம் பேசுவது சிறப்பு ...

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, putthan said:

சிங்கள தேசியவாதிகள் 70 வருடங்களாக இனவாதம் பேசி,இனவழிப்பு செய்து ஒற்றையாட்சி என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தற்பொழுது தமிழர் என்ற இனமில்லை என சொல்லும் ஜெ.வி...பி...யை விட தமிழ் தேசியம் பேசுவது சிறப்பு ...

உண்மை..பேசிக் கொண்டே இருப்பது சிறப்பு! ஏமாந்த ஒரு குழுவினர் - கன பேர் அவசியமில்லை - வாக்குப் போட்டால், பொன்னம்பலம் குடும்ப பாரம்பரியமாக பா.உ வாகவே நீடித்து, ஓய்வு பெற்று வசதியாக இருக்க..பேசிக் கொண்டே இருக்கலாம்😂! ஏனையோரும் அதையே செய்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

உண்மை..பேசிக் கொண்டே இருப்பது சிறப்பு! ஏமாந்த ஒரு குழுவினர் - கன பேர் அவசியமில்லை - வாக்குப் போட்டால், பொன்னம்பலம் குடும்ப பாரம்பரியமாக பா.உ வாகவே நீடித்து, ஓய்வு பெற்று வசதியாக இருக்க..பேசிக் கொண்டே இருக்கலாம்😂! ஏனையோரும் அதையே செய்தார்கள்.

பேசுவோம் பேசிகொண்டே யிருப்போம் ...டோழர்மாரின் வெற்றி எங்களுக்கு நல்ல பாடம்...சீனாக்காரனின் கொள்கைக்காக‌ ஆயுதம் ஏந்தினார்கள் ,தோற்கடிக்கப்பட்டார்கள் பின்பு மேடைகளில் பேசினார்கள் மக்கள் கேட்கவில்லை ..திடிரேன பஞ்சம் கை கொடுத்தது ஆட்சியை கைப்பற்றிவிட்டார்கள் பேசுகிறார்கள் பேசி கொண்டே இருக்கிறார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்தவரையில் சுமந்திரன் உள்ளகப் பொறிமுறை ஒன்றின் மூலம் போர்க்குற்றங்களை விசாரிக்கலாம் என்று கூறியதாகத் தெரியவில்லை. ஆனால் நல்லிணக்க அரசுடன் நெருக்கமாக இருந்த காலத்தில் வெளியக உதவியுடனான உள்ளகப் பொறிமுறை விசாரணைக்கு மைத்திரி - ரணில் அரசு ஒத்துக்கொண்டபோது, அதனை சுமந்திரன் ஆதரித்தார் என்று நினைவு. இச்சந்தர்ப்பத்தைத் தவிர அவர் சர்வதேச விசாரணையே வேண்டும் என்று கோரிவந்தார் என்று நினைக்கிறேன்.

இனக்கொலை எனும் பதத்தினைப் பாவிப்பதில் சுமந்திரனுக்கு உடன்பாடு இருக்கவில்லை. நடந்தது இனக்கொலை தான் என்று நாம் நபினாலும் அதனை உறுதிப்படுத்த எம்மிடம் ஆதாரம் இல்லை அல்லது அதனை உறுதிப்படுத்தப் போய் நாம் மேலும் பலவீனமாக்கப்படுவோம் என்பதற்காக தான் அப்பதத்தினைப் பாவிக்கப்போவதில்லை என்று கூறியிருந்தார் என்று நினைக்கிறேன்.

சுமந்திரனின் இவ்வாறான கொள்கைகளுக்கான அடிப்படைக் காரணம் அவர் தனிநாடு என்பதனை ஒருபோதும் ஆதரிக்கவில்லை அல்லது அது சாத்தியமில்லை என்று நினைப்பதனாலோ என்னவோ என்று எண்ணத் தோன்றுகிறது. சுமந்திரனின் புலிகளுக்கெதிரான நிலைப்பாட்டிற்கும் அவரின் இக்கொள்கைகளுக்கும் தொடர்பிருக்கின்றது என்று நான் நம்பவில்லை.

2 hours ago, putthan said:

பேசுவோம் பேசிகொண்டே யிருப்போம் ...டோழர்மாரின் வெற்றி எங்களுக்கு நல்ல பாடம்...சீனாக்காரனின் கொள்கைக்காக‌ ஆயுதம் ஏந்தினார்கள் ,தோற்கடிக்கப்பட்டார்கள் பின்பு மேடைகளில் பேசினார்கள் மக்கள் கேட்கவில்லை ..திடிரேன பஞ்சம் கை கொடுத்தது ஆட்சியை கைப்பற்றிவிட்டார்கள் பேசுகிறார்கள் பேசி கொண்டே இருக்கிறார்கள்...

எமது இனத்தின் இருப்பைப் பற்றி நாமே பேசாதுவிட்டால் வேறு எவர்தான் பேசுவார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:

தமிழ்சிறி, "சர்வதேச விசாரணை வேண்டாம், உள்ளக விசாரணை போதும்!" என்று சுமந்திரன் சொன்னதாக உருட்டுகிறார். நீங்களோ, அவர் இப்போது சர்வதேச மட்ட விசாரணை வேண்டும் என்று பேசுவதை "தேர்தல் வருவதால் பேசுகிறார்" என்கிறீர்கள். அப்படியானால், உங்களிடம் சுமந்திரன் சர்வதேச விசாரணை வேண்டாம் என்று சொன்னமைக்கான ஆதாரம் இருக்கிறது போல😂? அப்படியா?

தலைவர்கள், பிரதிநிதிகளின் குறைபாடுகள் சுட்டிக் காட்டப் பட வேண்டும். அதை, போலித் தகவல்களை வைத்துக் கொண்டு செய்ய வேண்டிய அவசியமில்லை.

பலமான காரணங்கள் இல்லமையால் தான் இத்தகைய போலிப் புரட்டுகளைத் தூக்கி வர வேண்டியிருக்கிறதோ என யோசிக்கிறேன்.

13 hours ago, Justin said:

தமிழ்சிறி, "சர்வதேச விசாரணை வேண்டாம், உள்ளக விசாரணை போதும்!" என்று சுமந்திரன் சொன்னதாக உருட்டுகிறார். நீங்களோ, அவர் இப்போது சர்வதேச மட்ட விசாரணை வேண்டும் என்று பேசுவதை "தேர்தல் வருவதால் பேசுகிறார்" என்கிறீர்கள். அப்படியானால், உங்களிடம் சுமந்திரன் சர்வதேச விசாரணை வேண்டாம் என்று சொன்னமைக்கான ஆதாரம் இருக்கிறது போல😂? அப்படியா?

தலைவர்கள், பிரதிநிதிகளின் குறைபாடுகள் சுட்டிக் காட்டப் பட வேண்டும். அதை, போலித் தகவல்களை வைத்துக் கொண்டு செய்ய வேண்டிய அவசியமில்லை.

பலமான காரணங்கள் இல்லமையால் தான் இத்தகைய போலிப் புரட்டுகளைத் தூக்கி வர வேண்டியிருக்கிறதோ என யோசிக்கிறேன்.

அப்பிடியெண்டுநீங்களா கற்பனை பண்ணுங்கோ. சுமந்திரன் எப்பவாவது சர்வதேச விசாரணை தேவை என்பதுபற்றிக் கதைச்சவரா?இப்ப தேர்தலில்நிறைய அடி விழப்போகுது என்பதால் கதைக்கிறார் அதைத்தான் சொன்னேன்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாதவூரான் said:

அப்பிடியெண்டுநீங்களா கற்பனை பண்ணுங்கோ. சுமந்திரன் எப்பவாவது சர்வதேச விசாரணை தேவை என்பதுபற்றிக் கதைச்சவரா?இப்ப தேர்தலில்நிறைய அடி விழப்போகுது என்பதால் கதைக்கிறார் அதைத்தான் சொன்னேன்

"சர்வதேச விசாரணை வேண்டாம் என்றார்" என்பதில் இருந்து "சர்வதேச விசாரணையைக் கேட்கவில்லை/கதைக்கவில்லை" என்று இறங்கி வந்திருக்கிறீர்கள்😂! இதுவும் கூட தீவிர முகப் புத்தக வாசகர்களின் கருத்தேயொழிய உண்மையல்ல.

2013 இல் இருந்து 2021 வரை ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் முயற்சிகளுக்கு சுமந்திரன் ஆதரவு தெரிவித்த, வரவேற்ற எழுத்துக்களும், பேட்டிகளும் இருக்கின்றன. தேடுவதற்கு உங்களுக்கு மனம் வர வேண்டும்! இதை உங்களுக்கோ, யாருக்குமோ கற்பிக்கும் நோக்கம் எனக்கில்லை.

ஆனால், சுருக்கமாக, 2015 OISL இலும், பின்னர் 2021 SL Accountability project இலும் ஐ.நாவின் மனித உரிமை அமைப்பு சிறிலங்கா அரசை இந்த விசாரணையில் சம்பந்தப் படுத்துவோம் (engage) என்று கூறியதை "சிறிலங்கா நடத்தும் விசாரணை" என்று சிலர் திரிக்க முயற்சித்தனர். அப்படி இல்லை என்று சுமந்திரன் சொன்ன வேளையில் "சுமந்திரன் உள்ளக விசாரணை போதும் என்கிறார்" என்ற வதந்தியை முன்னின்று பரப்பியவர் கஜேந்திரகுமார் பா.உ.

ஏன்? முன்பகை, தொழில்துறை ரீதியான பொறாமை (கோர்ட் படி ஏறாத பரிஸ்ரர் கஜேந்திரகுமார் பா.உ😎), அத்தோடு தேர்தல் வெறுப்புப் பிரச்சாரம். தற்போதும் இதே போல "எக்கிய ராஜ்ஜிய, முக்கிய ராஜ்ஜிய" என்ற சொற்சிலம்பத்தைக் கஜேந்திரகுமார் பா.உ கையிலெடுத்திருக்கிறார் என நினைக்கிறேன்.

இவ்வளவு சுமந்திரனை காய்ச்சி ஊத்தும் கஜேந்திரகுமார், ஒரு பரிஸ்ரராக இருந்தும், எந்த துரும்பையும் இது வரை நகர்த்தவில்லை என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். உதாரணத்திற்கு, காணாமல் போன ஒவ்வொரு தமிழ் நபருக்கும் ஆட்கொணர்வு மனு -Habeas corpus போட்டிருந்தால் கூட ஏதாவது சிறிய மாற்றம் நிகழ்ந்திருக்கும். மறு பக்கம் சுமந்திரன் சில பயங்கரவாத தடைச் சட்ட சந்தேக நபர்களுக்காக ஆஜராகி வென்றது அப்படியே மறக்கப் பட்டு விட்டது!

#சவுண்டுக்கு மரியாதை😎! இதை வைத்தே சில அரசியல்வாதிகள் பிழைத்துக் கொள்வர்!

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Justin said:

"சர்வதேச விசாரணை வேண்டாம் என்றார்" என்பதில் இருந்து "சர்வதேச விசாரணையைக் கேட்கவில்லை/கதைக்கவில்லை" என்று இறங்கி வந்திருக்கிறீர்கள்😂!

இது எப்பநடந்தது? எனக்கே தெரியாமல் எப்பவும் சொன்னனோ? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாதவூரான் said:

இது எப்பநடந்தது? எனக்கே தெரியாமல் எப்பவும் சொன்னனோ? 🤣

இதற்குத் தான் மேலே இருக்கும் கருத்துக்களை வாசித்து விட்டு உரையாடலில் கலந்து கொள்ள வேண்டுமென்பது.

"சுமந்திரன் சர்வதேச விசாரணை வேண்டுமெனக் கேட்கவில்லை" என்று நீங்கள் சொன்னதும் பொய் தானே? அதற்கு என்ன சொல்கிறீர்கள்? அதையும் நான் சொல்லவில்லை என்பீர்களா🤣?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

இதற்குத் தான் மேலே இருக்கும் கருத்துக்களை வாசித்து விட்டு உரையாடலில் கலந்து கொள்ள வேண்டுமென்பது.

"சுமந்திரன் சர்வதேச விசாரணை வேண்டுமெனக் கேட்கவில்லை" என்று நீங்கள் சொன்னதும் பொய் தானே? அதற்கு என்ன சொல்கிறீர்கள்? அதையும் நான் சொல்லவில்லை என்பீர்களா🤣?

நான்நன்றாக வாசித்து விட்டுத்தான் கலந்து கொள்கிறேன். எனக்கு சிலவேளை ஞாபக்குறைபாடோ தெரியவில்லை. சுமந்திரன் இதற்கு முதல் சர்வதேச விசாரணை கோரிய ஆதாரத்தைத் தந்தால்நல்லாயிருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வாதவூரான் said:

நான்நன்றாக வாசித்து விட்டுத்தான் கலந்து கொள்கிறேன். எனக்கு சிலவேளை ஞாபக்குறைபாடோ தெரியவில்லை. சுமந்திரன் இதற்கு முதல் சர்வதேச விசாரணை கோரிய ஆதாரத்தைத் தந்தால்நல்லாயிருக்கும்

நான் உங்களுடைய PA அல்ல😂! இருக்கிறது, தேடுங்கள். அல்லது, தமிழ்சிறியிடம் கேளுங்கள்😎!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.