Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

நீலமானின் மாயப்பொதிகள்


நீலனும் ஜி.எல்.பீரிஸும் 1995ம் ஆண்டு கொண்டுவந்த தீர்வுப் பொதியானது (அரசமைப்பு திருத்த வரைபுகள்) பல்வேறு மாறுதல்கள், சுரண்டல்களுக்கு உட்பட்டு சந்திரிக்கா மாமியின் ஆட்சிக்காலத்தில் மொத்தம் நான்கு விருத்துக்களான (Version) தீர்வுப்பொதிகளாக (1995, 1996, 1997, 2000 முறையே), பல்வேறு காலகட்ட சிங்களப் படைத்துறையின் சமர்க்கள முன்னேற்றங்களுக்கு ஏற்ப, கொண்டுவரப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அஃது முதன் முதலில் ஓகஸ்ட் 3 1995 அன்று சிறிலங்கா அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கவால் முன்மொழியப்பட்டது. (முன்மொழிவு)

எவ்வாறெயினும் இது தனது மெய்யான முன்மொழியப்பட்ட மிளிர்வில் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை. பல சுரண்டல்களுக்கு உட்பட்டு அதனது தொடக்கப் பொலிவான தீர்வுகளை எல்லாம் இழந்துதான் முழுமையடையாத வரைவுச் சட்டம் 1996 ஜனவரி 16 அன்று சிங்கள நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்காக வெளியிடப்பட்டது.

பின்னர் நாடாளுமன்றத்திற்கு போன போது, மார்ச் 1997ம் ஆண்டு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் வடிகட்டல்களின் இறுதி அறிக்கை நிலுவையில் இருந்த நிலையில், சிறிலங்கா அதன் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு வரைவை வெளியிட்டது. பின்னர் ஒக்டோபர் 1997 அன்று முழுமையடைந்த வரைபு வெளியானது. 7 ஓகஸ்ட் 2000ம் ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இறுதித் தீர்வுப் பொதியானது (நீலன் சாக்கொல்லப்பட்ட பின்னர் வந்தது) அரைகுறையான ஒன்றாகும். அதையும் கூட சிங்களம் நிறைவேற்றவில்லை. மட்டுமின்றி சந்திரிக்காவின் முதன்மை அமைச்சரான ரட்ணசிறி விக்கிரமநாயக்க இதிலுள்ள ஒவ்வொரு வரியையும் மகாநாயக்க தேரர்களின் கருத்திற்குட்படுத்தியே செய்வோம் என்றார், 13 ஓகஸ்ட் 2000ம் ஆண்டு அன்று.

இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் "சமச்சீரான சமஸ்டி" என்ற நன்மை பயக்கக்கூடிய இதனது மூல வடிவம் என்றுமே தமிழரின் நிகராளிகளாக இருந்த விடுதலைப்புலிகளிடம் அலுவல்சாராக கையளிக்கப்படவில்லை. வெறும் நாளேட்டு செய்திகளாகவும் வாய்மொழி அறிவிப்புகளாகவுமே வெளியாகின. அவற்றையும் புலிகளும் தம் போக்கிற்கு அலுவல்சார் ஊடக வெளியீடுகள் மூலம் மறுதலித்தனர். ஆயினும் போர் நிறுத்தத்தை சிங்கள அரசு செய்தால் தொடர் பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் என்பதை அப்போதே தெரிவித்துவிட்டனர்.

புலிகளால் ஏன் நிராகரிக்கப்பட்டதெனில்; குறிப்பாக இப்பொதிகளின் வரிசையில் முதல் பொதியின் அறிவிப்பு அலுவல்சாராக (official) வெளியாக முன்னரே சந்திரிக்கா மாமியை அப்போதைய சிங்கள அஸ்கிரிய பீடாதிபதி சிறி சந்தானந்த மகாநாயக்க தேரர் சந்தித்தார். அவர் இப்பொதியின் அலுவல்சார் அறிவிப்பினை வெளியிட முன்னர் விடுதலைப்புலிகளை தோற்கடித்திட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு சந்திரிக்கா மாமியும் புலிகளை படைய நடவடிக்கை மூலம் "மண்டியிட" செய்த பின்னரே இத்தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்! இது புலிகளுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் இதனை "படைய வடிவமைப்புகளை மறைக்க ஒரு அரசியல் முகமூடி" என்று 14 ஓகஸ்ட் 1995இல் அழைத்தனர். (இத்தகவல் அவர்களின் ஊடக வெளியீட்டில் உள்ளது).

(1997 ஆம் ஆண்டின் முற்பகுதியில் எந்தவொரு முன்மொழிவும் அரசாங்கம், பிரதான சிங்கள எதிர்க்கட்சி மற்றும் புலிகள் ஆகிய மூன்று முக்கிய கன்னைகளின் அங்கீகாரத்துடனேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பீரிஸ் தெரிவித்தார். எனினும் சில மாதங்களுக்குப் பிறகு புலிகள் சட்டத்திற்குப் புறம்பான மற்றும் பயங்கரவாத அமைப்பாக சாற்றாணைப் படுத்தப்பட்டதால் அதனுடன் எந்தவிதமான நடவடிக்கைகளும் குற்றமென வரையறைப்படுத்தப்பட்டு விட்டதாலும் இந்தப் பொதியை நடைமுறைப்படுத்துவது சிக்கலாகியது.)

முன்மொழிவை புலிகளின் மதியுரைஞரான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தொடக்க கட்டத்தில், 1995 ஓகஸ்ட் 11, மறுத்தாலும் போர்நிறுத்த மற்றும் அமைதி உடன்படிக்கை ஒன்றிற்கு ஓமென்றிருந்தார். பின்னாளில் ,மார்ச் 13, 2003 ஆம் ஆண்டு,வணிகக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது தொடர்பில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் வழங்குகையில் இவ்வரைபின் "தொடக்க வடிவம்" ஏற்கக்கூடியது என்றார் (உதயன் 13/03/2003 பக் - I). அப்போது கூறியதாவது:

…..1995 ஆம் ஆண்டு நீலன் திருச்செல்வம் அரசமைப்புத் திருத்த வரைபு ஒன்றை சமர்ப்பித்தார். அது சரியான வரைபு. அது ஏற்கக்கூடியது. ஆனால் பின்னர் 2000 ஆம் ஆன்டு அந்த வரைபின் அடிப்படையில் சந்திரிக்க ஒரு திருத்த வரைபை சமர்ப்பித்தார். அந்த வரைபு நீலன் திருச்செல்வத்தின் வரைபின் ஒரு அரைகுறையான ஒரு தொகுதியாகும். …….."

உந்த மூலப் பொதி நாடாளுமன்றத்தில் அதன் மிளிர்வான வடிவத்திலேயே சமர்ப்பிக்கப்பட்டிருப்பின் எப்படியும் நாடாளுமன்ற தெரிவுக்குழு அதன் தமிழருக்கு நன்மை பயக்கக்கூடிய கூறுகளை நீக்கியிருக்கும் (1997ம் ஆண்டு செய்தது போன்றே). அதையும் தாண்டினால் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை வாக்குகளை பெற்றால்தான் மக்களிடம் இதனைக் கொண்டுசெல்ல வேண்டும். சிங்கள மக்களிடம் பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இது செல்லுபடியாகும். இதெல்லாம் காற்றில் கோட்டை கட்டும் விடையங்களாகும்.

மேலும், இதில் தனி இனக்குழுவான முஸ்லிம்களின் தனியான வகிபாகம் பற்றி ஏதும் சொல்லப்படவில்லை. தமிழரோடு ஒன்றிணைந்த தீர்வொன்றிற்கு முஸ்லிம்கள் எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் (ஜெனிவா பேச்சுவார்த்தையினை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்). தமக்கான தனி அலகு ஒன்றை எப்படியும் கேட்டிருப்பார்கள். அந்த விடயம் தொடர்பில் இத்தீர்வில் எதுவும் குறிக்கப்படவில்லை.

இன்னும் சொல்லப்போனால், எந்த நீலனின் செல்வாக்கால் அரசமைப்பு திருத்த வரைபு கொண்டுவரப்பட்டதோ அதே நீலன் உயிருடன் இருக்கையில் அவர் கண்முன்னே தான் சில மாதங்களிலேயே அந்த அரசமைப்பு திருத்த வரைபு நீர்த்துப்போகச் செய்யப்பட்டது. பின்னர் அவர் கைலாயம் கண்டவுடன் அது குப்பையில் தூக்கியெறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் உண்மையிலேயே தமிழருக்கு நன்மை செய்ய விரும்பியிருப்பின் தான் வரைந்ததை முற்றாக நிறைவேற்ற பாடாவது பட்டிருக்க வேண்டும். மாறாக அதை வைத்து சிங்களவர் ஏலுமான வழிகளில் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிட மறைமுக ஆதரவு நல்கினார்.


அடுத்து, இதை வைத்து ஜி.எல். பீரிஸ் மற்றும் கதிர்காமர் ஆடிய திரு விளையாடல்கள் பற்றிப் பார்ப்போம்:

இந்தத் தீர்வுப் பொதியின் மிளிர்வான வடிவம் 1995ம் ஆண்டு வெளியானதும் கதிர்காமர் நாடு நாடாக சென்று தவறுத்தகவல் (disinformation) பரப்புரையில் ஈடுபட்டார். வெளிநாடுகளில் இருந்த தவிபு இன் வெளிநாட்டுக்கிளை அலுவலகங்களை மூட வைக்குமாறு அந்நாடுகளிடம் கோரிக்கை விடுத்தார்: புலிகளை தடை செய்யவும் கோரிக்கை விடுத்தார். தானொரு தமிழர் என்றும் சிங்கள அரசாங்கம் தமிழரிற்கான தீர்வினைக் கொண்டுவரப் போவதாகவும் எனவே இனிமேல் புலிகள் தேவையில்லை என்றும் பரப்புரை செய்தார். தமக்கு அமைதிக்கான முறைமை ஒன்றைக் கொண்டுவர போர் வேண்டுமென்றும் புலிகளுடனான நெடுங்கால போரிற்கு தேவையான போர்த்தளவாடங்களை வழங்குமாறும் கோரிக்கைகளை விடுத்தார்.

அதே நேரம் சிங்கள ஊடகங்களும் போர் முழக்கமிட்டுக்கொண்டிருந்தன.

இவ்வாறு கதிர்காமர் ஆயுத திரட்டலிற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க இங்கால் பீரிஸோ (இதை தயாரித்தவர்களில் ஒருவர்) இந்த தீர்வுப் பொதியை பின்னடிக்க வைக்கும் தந்திரங்களை முன்னெடுத்தார். இப்பொதிக்கு ஒற்றையாட்சி சிறிலங்காவிற்குள் சிறுபான்மையினரின் கட்சிகள் அரசிற்கு ஆதரவு கொடுக்க பீரிஸோ அதை ஏலுமானவரை பிற்போடச்செய்ய எத்தனித்தார். குறிப்பாக 1999ம் ஆண்டில் இவர் எதிர்க்கட்சியான ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, பொதி முதலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் எனத் தெரிவித்தார். இதன் மூலம் மிளிர்விழந்துவிட்ட தீர்வுப் பொதி வெளிவருவதற்கான கால அமையத்தை இவர் மேலும் நீடிக்கச் செய்தார்.


இவ்வாறாக தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க கொண்டுவரப்பட்ட இம்மாயப் பொதியை தோற்றுவித்த "கோழைத்தனமன வன்முறையாளரான" 😉 (கொட் ஸ்பிரிங், ஓகஸ்ட்- செப் 1999, எஸ்.கே. ரத்தினம்) நீலன் திருச்செல்வம் என்பவர் இறுதிவரை எந்தவொரு நன்மையையும் தமிழருக்கு பெற்றுத்தவில்லை. மாறாக பொதி மூலம் சிங்களப் படைத்துறைக்கு போர்த்தளபாடங்கள் பெற்றுக்கொடுத்தலையும் தமிழர் விடுதலைப் போராட்டத்தை தாக்காட்டுதல் மூலம் சிங்களப் படைதுறைக்கு போதிய கால அமையம் வழங்கல் என்ற அரசியலையுமே தனது காலத்தில் செய்தார். மேலும் நேரடியில்லாமல் புலிகளின் படிமத்திற்கு உலக அரங்கில் சேறு பூசுவதில் பங்காற்றினார்.

நிறைவேறும் அச்சட்டத்தை புலிகள் ஏற்காமல் மறுக்க வெளிக்கிடும் போது அரசாங்கம் ஏற்கனவே மேலை நாடுகளில் செய்து கொண்டிருந்த இத்தீர்வு தொடர்பான பரப்புரையால் (இத்தீர்வு வெற்றுக் காகிதம் ஆகிய பின்னரும் மூல வரைபை காட்டியே கதிர்காமர் பரப்புரை மேற்கொண்டார்) ஆட்கொள்ளப்படும் நாடுகள் புலிகளுக்கு தடைவிதித்தும் சிங்கள அரசிற்கு போர்த்தளவாட உதவிகளை செய்தும் (அதைத்தான் கதிர்காமர் நாடு நாடாக சென்று கேட்டார்) புலிகளை அழிக்க துணை நிற்கும்.

அதாவது அரசு கொடுக்கும் "விடியல் தீர்வை" கிளர்ச்சியாளர்கள் ஏற்க மறுக்கின்றனர் என்ற பரப்புரையை உலகநாடுகள் ஏற்றுக்கொள்ளும் வழியை உண்டாக்கிக்கொண்டிருந்தார்!

புலிகள் படைய வகையில் வலுவாக எழும்பிவிட்டிருந்த போது இத்தீர்வு முற்றாகவே நீர்த்து போயிருந்தது. உப்பச்சப்பில்லாத பயனற்ற ஒன்றைத்தான் எமக்கு தீர்வெனத் தர சிங்களவர் முன்வந்தனர். எனவே தான் அது நிறைவேறும் முன்னர் நீர்த்துப்போன இம்மாயத் தீர்விற்கு காரண கர்த்தாவாக தொடர்ந்தும் உழைத்துக்கொண்டிருந்த நீலனை புலிகள் அகற்றினர்.

இவர் சிங்களவர் வெற்றுச் சட்டம் ஆக்கிய பின்னராவது அதிலிருந்து பின்வாங்கி மக்களுக்கு உண்மை நிலையை தெரியப்படுத்தி எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. மாறாக அவ்வெற்றுச் சட்டத்திற்கு சாகும்வரை ஆதரவு கொடுத்து விடுதலைப் போரை நீர்த்துப் போகச்செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தார். அதனால் தான் இவர் செத்தவுடன் தமிழர் தரப்பு கண்டுகொள்ளாததும், சிங்களவர் நீலிக்கண்ணீர் வடித்ததும் குறிப்பிடத்தக்கது.

வாழ்ந்த வரை சிங்கள அரச அதிபரை காப்பாற்றும் வேலையையே செய்து வந்தார். இவரது "செல்வாக்கான" என்ற காலத்திலேயே, 1996, யாழில் 812 தமிழர்கள் காணாமல் போயும் தீவெங்கும் பல்லாயிரம் தமிழர் கொத்துக்கொத்தாக செத்தொழிந்த போதும் வாயே திறக்காத இந்த நீலமானின் சாவால் தமிழராகிய நாங்கள் ஒன்றையும் இழந்துவிடவில்லை. அதற்கு இவரது இழவு வீட்டிற்கும் தமிழர் பெருமெடுப்பில் செல்லவில்லை என்பதுவே சிறந்த சான்று.

மேலும், இவரது சாவிற்கு கூறப்படும் இன்னுமொரு காரணம்; இவர் அமெரிக்கவிற்கு ஏதோ ஒரு தேவைக்காக பயணப் பட காத்திருந்தாராம், 1999 ஓகஸ்ட்/ செப். அது பல்கலைக்கழகம் ஒன்றில் உரையாற்றுகைக்கானது என்று கூறப்படுகிறது, அதே நேரம் இவர் நேரில் சென்று புலிகளுக்கு எதிரான செய்ய வேண்டிய பரப்புரையே அப்பயணத்தின் மெய்யான நோக்கம் என்றும் மறுத்துக் கூறப்படுகிறது.

மொத்தத்தில் திரு. லக்ஸ்மன் குணசேகர என்ற சிங்களவர் கூறியது போன்று "தமிழரின் கண்களில் நீலன் சிங்களவருடன் சேர்ந்த ஒரு 'உடனுழைப்பாளர்' " (Collaborator) ஆவார் (கொட் ஸ்பிரிங், ஓகஸ்ட்- செப் 1999) . அவர்களிடமிருந்து நல்லவன் என்ற பெயரை மட்டும் உழைத்துக்கொண்டார். உலகெங்கிலும் உடனுழைப்பாளர்கள் அவரது சொந்த இனத்தாலேயேதான் கைலாயம் அனுப்பப்பட்டனர் என்பது வரலாறு!


பாவிக்கப்பட்ட முதன்மை உசாத்துணை:

ஆக்கம் & வெளியீடு: 

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்

  • Replies 134
  • Views 5.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Thumpalayan
    Thumpalayan

    இதை எழுதுவதால் பல விமர்சனங்கள் வரும், ஆனாலும் அந்த சமயம் நடந்த விடயங்கள் எனது கண் முன்னாலேயே நடந்ததால் எழுதுகிறேன் 2002 O/L படித்துக்கொண்டிருந்தேன். யுத்த நிறுத்தம் ஆரம்பித்து புலிகளின் அரசியல் துறை ந

  • goshan_che
    goshan_che

    நன்னிக்கு நன்றி. உங்கள் கருத்தும் நியாயப்படுத்தலும் ஏற்றுகொள்ளவே முடியாதது. ஆனால் பல தரவுகளை தந்துள்ளீர்கள். அதற்குதான் நன்றி. இந்த தரவுகளின் அடிப்படையில்: பாலா அண்ணை “ஏற்புடையது” என கூறிய தீர்வைத்தான

  • நிழலி
    நிழலி

    ஆயுத வழியின்றி அரசியல் வழியில் தன்னால் முடிந்த அளவுக்கு தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற முனைந்த ஒரு தமிழர் இன்னொரு தமிழ் தாய் பெற்ற ஒருவரால் தற்கொலைத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட அவலமும் விடுதலையின் ப

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இந்தக் கட்டுரையானது தொடர்ந்தும் நீலன் திருச்செல்வம் என்ற உடனுழைப்பாளரால் கொணரப்பட்டதாகக் கூறப்படும் கொணரப்படாத தீர்வுப் பொதி பற்றி என்றும் கொக்கரித்துக் கொண்டிருக்கும் புலி எதிர்ப்புவாத தமிழர்களிற்கு அறிவூட்டும் வகையில் எழுதப்பட்டது.

இவரை புலிகள் "துரோகி/ வஞ்சகன்" என்று அவர்களின் அலுவல்சார் ஊடக வெளியீடுகளிலும் அவர்களின் நேரடி கண்காணிப்பிலிருந்த இதழ்களிலும் அழைத்ததாக எங்கும் தெரியவுமில்லை. என்னால் காணவும் இயலவில்லை! (வெளிநாடுகளிலிருந்து வெளியான தமிழர் ஆதரவு இதழ்களில் இச்சொல் தாராளமாக காணக்கிடைக்கிறது) எங்கினும் இருந்தால் எனக்கும் வாசகர்கள் அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

திரு. நீலன் திருச்செல்வம் சர்வதேச ரீதியில் அறியப்பட்ட அரசியலமைப்பு சட்ட நிபுணர். உலகப் புகழ் மிக்க சட்ட அறிஞர். இவரது நூல்கள், கட்டுரைகள் சர்வதேச ரீதியில் அரசியலமைப்பு சட்ட மாணவர்களால் தேடி வாசிக்கப்படும் அளவுக்கு பிரபலமானவை.

அவர் பல்வேறு நாடுகளில், குறிப்பாக கஜகஸ்தான், தென்னாபிரிக்கா, சிலி போன்ற நாடுகளில் அரசியலமைப்பு சட்டங்களை உருவாக்குவதில் பங்கு வகித்தார்.

இவ்வாறு உலகம் அறியப்பட்ட ஒருவரை தற்கொலை குண்டு மூலம் படுகொலை செய்த செயலானது. தமிழீழ விடுதலைப் போராட்டம் தனக்கு தானே குழி பறித்த பல செயல்களில் ஒன்றாகும். இவரது கொலையினல் பலன் அடைந்தது இலங்கை அரசு.

படுகொலை நடந்த உடனேயே ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் கொபி அன்னான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்ரன் ஆகியோர் கடும் கண்டனங்களை தெரிவித்திதில் இருந்து இவரது அனைத்துலக முக்கியத்துவம் உணரப்பட்டது.

சகிப்பு தன்மை அற்று தாம் செய்த படுகொலைகளை மறைக்க கொலை செய்யப்பட்டவர் மீது அபாண்டமாக பழி போடுவது தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அனைத்து ஆயுத இயக்கங்களாலும் மேற்கொள்ளப்பட்ட இத்துப்போன தந்திரம் என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள். அதை போன்ற ஒன்றே இந்த படுகொலையின் நியாயப்படுத்தலும்.

ஆயுத வழியின்றி அரசியல் வழியில் தன்னால் முடிந்த அளவுக்கு தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற முனைந்த ஒரு தமிழர் இன்னொரு தமிழ் தாய் பெற்ற ஒருவரால் தற்கொலைத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட அவலமும் விடுதலையின் பேரால் நிகழ்த்தப்பட்டது.

நீலன் பங்களித்த தீர்வு மீது கடுமையான விமர்சனங்களும் அந்த தீர்வில் பல குறைபாடுகளும் இருப்பினும், அதை ஆரோக்கியமான விவாதங்களு உட்படுத்தப்படாமல், அதை தயாரிக்க துணை புரிந்தார் என்பதற்காகவே கொல்லப்பட்டார்.

இவரது கொலையால் தமிழ் மக்களுக்கு ஒரு சதம் கூட பிரயோசனம் ஏற்படவில்லை. ஆனால் சிங்களம் இதனை தனக்கு சார்பாக பயன்படுத்தி ராஜதந்திர ரீதியில் பயனடைந்தது.

இவ்வாறு நிகழ்ந்தது முதல் தடவையும் அல்ல, இறுதித் தடவையும் அல்ல.

இன்றும் இந்த படுகொலைகளை நியாயப்படுத்தும் அரசியலும் குரல்களும் எம்மிடம் இருந்து நீங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பொதியைத் தானே ரணில் பாராளுமன்றில் வைத்தே கொழுத்தினார் என்கிறார்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

நீலன். எப்படி பேச. முடியும் ??? கூடாது கூடாவே கூடாது,....

பேசிப். பலனில்லை என்று தான் பல கட்சிகள் இணைந்து வட்டுக்கோட்டையில். இனியும் பேசி பலனில்லை ஆயதப்போராட்டத்தின். மூலம் தமிழ் ஈழம். காண்போம் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். இந்த தீர்மானம் இந்த தமிழ் தலைவர்கள் மீறிவிட்டார்கள்.

எப்படி ???? 1,..ஆயுதப்பயிற்சியை. பெறவில்லை ஆயுதமேத்தி போராவுமில்லை

2,...இயங்கங்கள். தீர்மானம் நிறைவேறாமல் இந்த தமிழ். தலைவர்களின் தீர்மானங்களை. பூரணமாக நம்பிக்கை வைத்து படிப்பைக்கூட இடைநிறுத்தம் செய்து பயிற்சி எடுத்து போராடினார்கள்.

3,...போராட்டம் நடந்த போது நீலன். பேச்சுவார்த்தை நடத்தியது குற்றம் இந்த பேச்சுவார்த்தை போராட்டங்களை குழப்ப. நடத்தப்பட்டுள்ளது சம்பளத்துக்கு நடத்தப்பட்டது இது ஒரு உழைப்பு இவர்களின் நோக்கம் வாழ் நாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பதே

4,.....நீலன். படித்தவர். பல நாடுகளில் ஆலோசனைகளையும். வரைபுகளையும் வழங்கியவர்

அந்த நாட்டு தலைவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் நடைமுறைப்படுத்தியுள்ளார்கள் அந்த நாடுகளில் ஆனால் இலங்கையில் இலங்கையின் தலைவர்கள் எற்றுக்கொண்டு நடைமுறை படுத்துவார்களா??? இல்லை ஒருபோதும் இல்லை கிழிச்சே ஏறிவார்கள். ஆகவே நீலனின்

யோசனைகள் கிழிச்சே ஏறியப்பட்டிருக்கும். இது என்னை விட நீலனுக்கு நன்கு தெரியும் ஆனாலும் அவருக்கு உழைப்பு முக்கியம் பணம் முக்கியம் இந்த பதினாறு  ஆண்டுகளில் நீலனின். யோசணைகள். ஏன். நிறைவேற்றப்படவில்லை ??

1,...புத்த. பிக்குகள். அனுமதியில்லை

2,..பாராளுமன்றம் அனுமதியில்லை இந்த இரண்டுமே அனுமதிக்காது என்பது நீலனுக்கு தெரியும் ஆகவே தனது யோசணைகள். நிறைவேற்றப்படாது என்பதும் நீலனுக்கு தெரியும் ஆனாலும் இதை அவர் தமிழ் மக்களுக்கு சொல்லவில்லை சொல்லமாட்டார். ஏனெனில்  அது வருமானம் வரும் வழி இல்லை

நீலன். தமிழ் மக்களுக்குக்காக போராடிய தலைவர் இல்லை அவர் தான் பாராளுமன்றம் போகத்தான் தமிழ் மக்களை பயன்படுத்தி உள்ளார் ஒன்றுயரை இலட்சம் தமிழ் மக்களின் இறப்பில். நீலனுக்கும் பங்குண்டு ஏனெனில் ஆயுதப் போருக்கு விதைகளை போட்டவர்களில். இவரும் ஒருவர் முப்பது ஆண்டு ஆயுதப் போராட்டத்தில் ஆயுதப்பயிற்சியைப் பெற்று இளைஞர்களுடன் தோளேடு தோள் நின்று போரடிய. ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை சொல்லுங்கள் பார்ப்போம்

இவர் சுடப்பட்டிருக்க. வாய்ப்புகள் இல்லை தன்தோன்றிதனாமாக. தன்னிச்சையாக இடையில் புகுந்து தீர்வு என்று போராட்டத்தை. குழப்பினார்கள் இது ஏற்றுக்கொள்ள முடியாது உயிர்கள் எல்லாம் சமம் எத்தனையோ போராளிகள் இறக்கவில்லையா??? 🙏

  • கருத்துக்கள உறவுகள்

நன்னிக்கு நன்றி.

உங்கள் கருத்தும் நியாயப்படுத்தலும் ஏற்றுகொள்ளவே முடியாதது.

ஆனால் பல தரவுகளை தந்துள்ளீர்கள். அதற்குதான் நன்றி.

இந்த தரவுகளின் அடிப்படையில்:

  1. பாலா அண்ணை “ஏற்புடையது” என கூறிய தீர்வைத்தான் நீலன் தயாரிக்க உதவினார்.

  2. அதை சந்திரிக்கா நீர்த்து போகவைத்தார் எனில் அதற்கு நீலன் பொறுப்பாக முடியுமா?

  3. நியாயமான தீர்வை அவர்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை எனிலும், அதை முன் வைக்கவாவது தன் உழைப்பை கொடுக்கலாம், புலிகளின் பலத்தை ஒரு காரணியாக வைத்து ஒரு நியாயமான தீர்வை பெறலாம் என முயற்சிப்பது, எமக்கு விருப்பம் இல்லாத நகர்வாய் இருக்கலாம் - ஆனால் அது மரண தண்டைக்குரிய குற்றம் அல்ல. குறிப்பாக இன்னொரு மாவீரரை பலி கொடுத்து.

  4. இந்த ஆரம்ப வரைபு கொடுத்த தீர்வை ஒத்த ஒரு தீர்வைதான் புலிகள் ஆஸ்லோ பிரகடனம் மூலம் கோரி நின்றனர்.

  5. நீலனோடு அதே நிலைப்பாட்டில் 1995 இருந்த சிவசிதம்பரம், சம்பந்தர், மாவை இதர ஆட்களை நீலன் கொல்லப்பட்டு இரு வருடங்களுக்குள் புலிகள் அரவணைத்தனர். இதே காலகட்டாதில் புலிகளை எதிர்த்து யாழ் மேயர் ஆகி, கடும் விமர்சனங்களை வைத்த ரவிராஜை பின்னாளில் மாமனிதர் ஆக்கினர். நீலன் மீது கட்டுரையாளர் கூட “இலங்கையின் அரசுக்கு மறைமுகமாக உதவினார்” என்பதை தவிர வேறு எந்த தமிழர்/புலிகள் விரோத நடவடிக்கை குற்றசாட்டையும் வைக்க முடியவில்லை.

  6. நீலன் அமெரிக்காவில் அதிகாரத்தில் உள்ள பலரின் உற்ற நண்பர். அனைவருக்கும் தெரிந்த உண்மை, புலிகளுக்கும் தெரிந்திருந்தது. நீலன் சி ஐ ஏ என பரவலாக சந்தேகிக்கப்பட்டது. நிச்சயம் இதுவும் புலிகளுக்கு தெரியும். அவர் இலங்கை வந்து இப்படி பட்ட அரசியலில் ஈடுபட்டதும் இதற்கே எனவும் பலர் சந்தேகித்தனர்.

    இப்படி பட்ட அமெரிக்காவின் இலங்கை நண்பரை கொல்லுவது, கிட்டதட்ட அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவரை கொல்லுவது போன்றது.

    இது புலிகளால் அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவால் என்றே கருதப்பட்டிருக்கும்.

இவ்வளவு நடந்த பின்னும், நமக்கு ஏன் அமெரிக்கா நம்மை தடை நீக்கவில்லை, உதவி வழங்கும் மாநாட்டுக்கு அழைக்கவில்லை, முள்ளிவாய்க்காலை தடுக்கவில்லை என்பது புரியவில்லை என்பது ஒரு துன்பியல்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

நன்னிக்கு நன்றி.

உங்கள் கருத்தும் நியாயப்படுத்தலும் ஏற்றுகொள்ளவே முடியாதது.

அதே கருத்து தான் எனதும் உங்களுக்கு நன்றி

22 hours ago, Kandiah57 said:

பேசிப். பலனில்லை என்று தான் பல கட்சிகள் இணைந்து வட்டுக்கோட்டையில். இனியும் பேசி பலனில்லை ஆயதப்போராட்டத்தின். மூலம் தமிழ் ஈழம். காண்போம் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். இந்த தீர்மானம் இந்த தமிழ் தலைவர்கள் மீறிவிட்டார்கள்.

இல்லை நன்னிச் சோழன் தகவலை படிக்கவும் 👇

வட்டுக்கோட்டைத் தீர்மானம்- இத்தீர்மானமானது யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டை தொகுதியிலுள்ள தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் கோயிலிற்கு அருகில் பண்ணாகத்தில் நிறைவேற்றப்பட்டது. அங்கு 1976 மே 14 ம் திகதி எஸ். ஜே. வி. செல்வநாயகம்இ ஜீ. ஜீ. பொன்னம்பலம்இ சௌ. தொண்டமான் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி நடாத்திய தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. எங்கள் இயக்கம் முழுவதும் வன்முறையற்றதாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அதே கருத்து தான் எனதும் உங்களுக்கு நன்றி

இல்லை நன்னிச் சோழன் தகவலை படிக்கவும் 👇

வட்டுக்கோட்டைத் தீர்மானம்- இத்தீர்மானமானது யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டை தொகுதியிலுள்ள தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் கோயிலிற்கு அருகில் பண்ணாகத்தில் நிறைவேற்றப்பட்டது. அங்கு 1976 மே 14 ம் திகதி எஸ். ஜே. வி. செல்வநாயகம்இ ஜீ. ஜீ. பொன்னம்பலம்இ சௌ. தொண்டமான் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி நடாத்திய தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. எங்கள் இயக்கம் முழுவதும் வன்முறையற்றதாக இருக்கும்

எனக்கு இது தெரியாது இப்ப தான் தெரியும் தகவலுக்கு நன்றிகள் பண்டாவுடனும்,..டல்லியுடனும். ஒப்பந்தம் செய்து உப்பு சப்பற்ற. மாநில சுயாட்சி பெற முடியவில்லை கிழிச்சே ஏறியப்பட்டது .....அதை வன்முறை இல்லாமல் பெறமுடியவில்லை அப்படியிருக்க. வன்முறை இன்றி ஒரு தனி நாடு எப்படி பெற முடியும் ???? எந்தவொரு தமிழனாவது இந்த கேள்வியை கேட்டு இருந்தனா ??? இந்த தீர்மானம் ஒரு மூடத்தனமானது ஆகும் .....சரியா ?? இல்லை பிழையா???

குறிப்பு,.....நான் சுதந்திரன். பத்திரிகையின். வாசகன். கோவை மகேசன். பல கட்டுரைகள் எழுதுவது உண்டு” தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்கள் முழுவதும் அதில் வரும் இடைக்கிடை விஷேட. பதிப்புகள். அதிக பக்கங்களுடன் வரும்.

மேலும் நீலன். உயிருடன் இருந்தால் அவர் எழுதிய தீர்வு நடைமுறையில் வந்து இருக்குமா ???

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

சந்திரிக்கா நீர்த்து போகவைத்தார் எனில் அதற்கு நீலன் பொறுப்பாக முடியுமா

சந்திரிக்கா இப்படி செய்வார் என்பது நீலனுக்கு வரைபு எழுத முன்பே தெரியுமா இல்லை தெரியாத. ?? தெரியும் என்றால் ஏன் எழுதினார்??

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kandiah57 said:

நீலன். தமிழ் மக்களுக்குக்காக போராடிய தலைவர் இல்லை அவர் தான் பாராளுமன்றம் போகத்தான் தமிழ் மக்களை பயன்படுத்தி உள்ளார் ஒன்றுயரை இலட்சம் தமிழ் மக்களின் இறப்பில். நீலனுக்கும் பங்குண்டு ஏனெனில் ஆயுதப் போருக்கு விதைகளை போட்டவர்களில். இவரும் ஒருவர்

ஆயுத போருக்கு விதை போட்டதால் மக்கள் அழிவில் இவருக்கு பங்கு உண்டு என்றால் மக்கள் அழிவார்கள் என்று தெரிந்தும், அந்த ஆயுத போரை பல வருடங்களாக கொண்டு நடத்தியவர்களுக்கும் அதில் மிகக் கூடுதல் பொறுப்பும் பங்கும் உள்ளது.

(ஆனால், நீலன்ஆயுத போரை ஆதரித்ததாக எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை)

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kandiah57 said:

சந்திரிக்கா இப்படி செய்வார் என்பது நீலனுக்கு வரைபு எழுத முன்பே தெரியுமா இல்லை தெரியாத. ?? தெரியும் என்றால் ஏன் எழுதினார்??

யாரும் இந்த கேள்வியை நீலனிடம் கேட்டதாகவோ அவர் பதில் சொன்னதாகவோ நான் அறியவில்லை.

ஆனால் இரெண்டு விடயங்கள் சாத்தியம்.

  1. 1994/95 இல் சந்திரிகா ஒரு நேர்மையான தீர்வை தர முயல்வார் என சகல வகையான தமிழ் மக்களும் நம்பினார்கள். சந்திரிகா அனுப்பிய பாலபட்டபெந்தி தலைமையிலான சமாதான குழுவுக்கு யாழில் ஹெலிகொப்டர் இறங்கிய பல்கலைகழக வளாகத்திலேயே மக்கள் கூடி ஆரவார வரவேற்பு கொடுத்தனர்.

    புலிகளின் ஆளுகைக்கு வெளியே இருந்த தமிழர்களும் ஏகோபித்து சந்திரிகாவை வாக்கு போட்டு ஆதரித்தனர்.

    இப்படி பலர் தனிப்பட்டும் நம்பினர். பிபிசி சிங்கள சேவை சந்தேசியவின் பணிப்பாளர் வசந்தராஜ இலங்கை திரும்பி ரூபவாகினியை பொறுப்பேற்றார். ஆனால் சில காலம் போக, வெறுத்து போய் இலண்டன் திரும்பி தமிழ் கார்டியனில் எழுத தொடங்கினார்.

    இப்படி ஒரு நம்பிக்கை. அல்லது அமெரிக்கா மூலம் சந்திரிக்காவை பணிய வைக்கலாம் என நீலம் நம்பி இருக்கலாம்.

சாகும் போது நீலனும், சந்திரிகா இனவாதிகள் குறிப்பாக ரத்வத்தை, பீடாபதிகள், கொட்டகதேனிய போன்றோரின் பேச்சுக்கு ஆடுவதால் நீலன் வெறுப்படைந்து இருந்தார் என்போரும் உளர்.

  1. முழுக்க முழுக்க பொய்யான நாடகம் ஒன்றை சந்திரிகாவுடன் சேர்ந்து ஆடி இருக்கலாம்.

    அப்படி இருப்பினும் கூட, அரசியல் கொலைகள் சரியா பிழையா என்பதற்கு அப்பால்,

    நீலன் யாரின் ஆள் என தெரிந்தே அவரில் கைவைத்தது அறிவார்ந்த செயலா?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, island said:

என்றால் மக்கள் அழிவார்கள் என்று தெரிந்தும்

யாருக்கு தெரியும் ???? நான் தமிழ் ஈழம் கிடைக்கும் என்று நம்பினேன் எனக்கு தெரிந்த பலரும் நம்பினார்கள்

பல நாடுகள் சேர்த்து போர் செய்வார்கள் என்று நம்பவில்லை தெரியாது

இலங்கை தனியாக புலிகளுடன். போராடி இருந்தால் நாடு பிரிந்து இருக்குமா ?? அல்லது இல்லையா?? இப்படி பல நாடுகளுடன். போராடும் சந்தர்ப்பம். வரும் என்று எவருக்கும் தெரியாது தெரிந்து இருந்தால் ஆயுதத்தில். கை வைத்திருக்க. மாட்டார்கள்

9 minutes ago, goshan_che said:

நீலன் யாரின் ஆள் என தெரிந்தே அவரில் கைவைத்தது அறிவார்ந்த செயலா?

இல்லை தான்

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிக்கா செம்மணி கொலைகள், பொருளாதார தடைகள் என தமிழ் மக்களை வாட்டி வதைத்தவர். இவர் ஒரு தீர்வு பொதியை தருவார் என தமிழ் மக்கள் எப்படி நம்புவது??

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

யாருக்கு தெரியும் ???? நான் தமிழ் ஈழம் கிடைக்கும் என்று நம்பினேன் எனக்கு தெரிந்த பலரும் நம்பினார்கள்

பல நாடுகள் சேர்த்து போர் செய்வார்கள் என்று நம்பவில்லை தெரியாது

இலங்கை தனியாக புலிகளுடன். போராடி இருந்தால் நாடு பிரிந்து இருக்குமா ?? அல்லது இல்லையா?? இப்படி பல நாடுகளுடன். போராடும் சந்தர்ப்பம். வரும் என்று எவருக்கும் தெரியாது தெரிந்து இருந்தால் ஆயுதத்தில். கை வைத்திருக்க. மாட்டார்கள்

நானும் உங்களைப் போலவே தமிழ் ஈழம் கிடைக்கும் என்று பேதை த்தனமாக ஆரம்பத்தில் நம்பினேன். சற்று maturity வந்த பின்னர் உலக நாடுகளை அரசியல் ராஜதந்திர ரீதியில் வெல்லாமல் அது சாத்தியமல்ல என்பதை புரிந்து கொண்டாலும் எம்மவர்கள் இராணுவபலத்தை துரும்பு சீட்டாக வைத்து உலகளவில் அரசியல் பலத்தை அபைத்துலக நல்லுறவையும் தமிழர் சார்பில் உருவாக்குவார்கள் என நம்ப தொடங்கினேன். உலக சூழல் இந்த விடயத்தில் எமக்கு சாதகமாக இல்லை என்பது இயல்பாக புரிய ஆரம்பித்தது. நாம் இருவரும் சாதாரண குடிமக்களாதலால் அப்படி நம்பியதில் தவறே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

சந்திரிக்கா செம்மணி கொலைகள், பொருளாதார தடைகள் என தமிழ் மக்களை வாட்டி வதைத்தவர். இவர் ஒரு தீர்வு பொதியை தருவார் என தமிழ் மக்கள் எப்படி நம்புவது??

இதை உலகம் புரியும் வண்ணம் எடுத்துரைக்க வேண்டிய முன்னெடுப்பை பொறுப்புடன் செய்ய வேண்டிய நாம் சந்திரிகா காரில் ஏறும் போது தற்கொலை குண்டுதாரி மூலம் அவரை படு கொலை செய்ய முயற்சித்து உலகிற்கு எமது செய்தியை தெரிவித்தோம். சந்திரிகாவை படுகொலை செய்தால் செம்மணி படுகொலைகளை உலக நாடுகள் கண்டித்து தற்கொலை குண்டு தாரியை உலகம் பாராட்டும் என எதிர்பார்ததோம்.

  • கருத்துக்கள உறவுகள்

குறிக்கு தெரிந்தது கொக்கின் கழுத்து மட்டுமே.

மக்களின் அனுமதியின்றி களத்தில் நின்றவர்களுக்கே தெரியாது இதில் இடையே புகுந்து நான் அவனது கூட்டாளி இவன் என்னுடன் இருந்தவன் படித்தவன் ஏன் படைத்தவன் என்பதெல்லாம் எடுபடாது. தன்னில் ஒருவரை கொடுத்தாவது அவனை அகற்றவேண்டும் என்ற முடிவை புரிந்தவனுக்கு அவன் எவ்வளவு ஆபத்தானவன் என்பது புரியும். டொட்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் குறி ஆட்களை அகற்றுவதில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தியதால் குறிக்கு தனது மக்களின் அரசியல் அபிலாசையே கேள்விக்குறியாகியது கூடப் புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, island said:

அந்தக் குறி ஆட்களை அகற்றுவதில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தியதால் குறிக்கு தனது மக்களின் அரசியல் அபிலாசையே கேள்விக்குறியாகியது கூடப் புரியவில்லை.

மக்கள் அபிலாஷைகளை முன்னுறுத்தி குறியை அது வைத்திருந்ததால் தான் இன்றும் அதன் இடம் நிரப்பப்படாமல் கண்டால் வரச்சொல்லி வானத்தை பார்த்தபடி அந்த மக்கள்......

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

மக்கள் அபிலாஷைகளை முன்னுறுத்தி குறியை அது வைத்திருந்ததால் தான் இன்றும் அதன் இடம் நிரப்பப்படாமல் கண்டால் வரச்சொல்லி வானத்தை பார்த்தபடி அந்த மக்கள்......

இப்படி படுத்திருந்து கற்பனையில் சுகம் காண மட்டுமே பாவம் இனி உங்களால் முடியும். சரி நீங்கள் அதையாவது செய்து பொழுதை போக்குங்கள். மக்களின் அரசியல் என்பது நீங்கள் நினைப்பது போல் ஒரு தனிநபரில் மட்டும் தங்கி இருக்கும் சென்றிமென்ற் அல்ல.

வருங்கால சந்ததியாவது அறிவுத்திறனுடனும் பொறுப்புணர்வுடனும் சுயமாக சிந்தித்து தமது அரசியலை செய்யட்டும் என்று கூறி விட்டு போய் சேருவதே இந்த தலைமுறை அவர்களுக்கு செய்யும் குறைந்த பட்ச உதவி என்ற நிலை தான் தற்போதைய ஜதார்த்தம்.

நீங்கள் கூறியது போல் வானத்தை பார்ததபடி மடையர்களாக எமது எதிர்கால சந்ததி இருக்கும் என்று நான் நம்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, island said:

இதை உலகம் புரியும் வண்ணம் எடுத்துரைக்க வேண்டிய முன்னெடுப்பை பொறுப்புடன் செய்ய வேண்டிய நாம் சந்திரிகா காரில் ஏறும் போது தற்கொலை குண்டுதாரி மூலம் அவரை படு கொலை செய்ய முயற்சித்து உலகிற்கு எமது செய்தியை தெரிவித்தோம். சந்திரிகாவை படுகொலை செய்தால் செம்மணி படுகொலைகளை உலக நாடுகள் கண்டித்து தற்கொலை குண்டு தாரியை உலகம் பாராட்டும் என எதிர்பார்ததோம்.

உலகம் உக்ரேனுக்கு ஒரு முடிவை கொடுத்தது போலவாக இருக்குமோ??

அல்லது அன்றாடும் இறக்கும் பலஸ்தீனியர்களுக்கு கொடுக்கும் முடிவாக இருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

இப்படி படுத்திருந்து கற்பனையில் சுகம் காண மட்டுமே பாவம் இனி உங்களால் முடியும். சரி நீங்கள் அதையாவது செய்து பொழுதை போக்குங்கள். மக்களின் அரசியல் என்பது நீங்கள் நினைப்பது போல் ஒரு தனிநபரில் மட்டும் தங்கி இருக்கும் சென்றிமென்ற் அல்ல.

வருங்கால சந்ததியாவது அறிவுத்திறனுடனும் பொறுப்புணர்வுடனும் சுயமாக சிந்தித்து தமது அரசியலை செய்யட்டும் என்று கூறி விட்டு போய் சேருவதே இந்த தலைமுறை அவர்களுக்கு செய்யும் குறைந்த பட்ச உதவி என்ற நிலை தான் தற்போதைய ஜதார்த்தம்.

நீங்கள் கூறியது போல் வானத்தை பார்ததபடி மடையர்களாக எமது எதிர்கால சந்ததி இருக்கும் என்று நான் நம்பவில்லை.

உண்மை சுடும்.

களநிலை அதுவே. அவரில்லாமல் கடந்த 16 வருடங்களாக ஒரு உரோமம் கூட நகரவில்லை. நகர்த்தி விட்டு வந்து எழுதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

நானா இங்க எதுக்கு முக்கி முனகிறார் என்று புரியவில்லையா!

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, விசுகு said:

உண்மை சுடும்.

களநிலை அதுவே. அவரில்லாமல் கடந்த 16 வருடங்களாக ஒரு உரோமம் கூட நகரவில்லை. நகர்த்தி விட்டு வந்து எழுதவும்.

ஆயுதப் போராட்டம் தொடங்கியபோது இருந்த நிலையை அடையவே ஒரு நூற்றாண்டு எடுக்கும். அந்தளவுக்கு போராட்டதை பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டே ஆயுத போராட்டம் Bitter end க்கு வந்தது. அதற்குள் இது போதாதென்று இன்னும் பின்னோக்கி கொண்டு போக ஆசை உங்களுக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

ஆயுதப் போராட்டம் தொடங்கியபோது இருந்த நிலையை அடையவே ஒரு நூற்றாண்டு எடுக்கும். அந்தளவுக்கு போராட்டதை பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டே ஆயுத போராட்டம் Bitter end க்கு வந்தது. அதற்குள் இது போதாதென்று இன்னும் பின்னோக்கி கொண்டு போக ஆசை உங்களுக்கு .

. ஒரு சர்வதேச பிரச்சினை உங்களுக்கு 100 வருடங்கள் பின்னால்.....

ஆடத்தெரியாதவரின் மேடைப் பேச்சு கனக்க கேட்டாச்சு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.