Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

கோசான்…. இந்தியனும், பாகிஸ்தான்காரனும்…

உக்ரைன், ரஷ்யா, இஸ்ரேல், பாலஸ்தீன சண்டையில் எரியும் சண்டை காட்சிகளையும் இடையில் சொருகி விட்டு, நமது காதில் பூ சுற்றப் பார்ப்பார்கள், நாங்கள்தான் உசாராக இருக்க வேண்டும். ஏனென்றால்… திருட்டு வீடியோ தயாரிப்பதில் இவர்கள் பயங்கர கில்லாடிகள். 😂 🤣

ஓம்… இந்த விடயத்தில் இவர்கள் உலக சாம்பியன்கள்🤣.

சண்டை தொடங்கி ஐந்து நிமிடத்தில் போலி ஆதாரங்களால் இணையத்தை நிரப்பி விட்டார்கள்.

  • Replies 575
  • Views 23.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    ஒரு காலத்தில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடினாலும், கண்ணை மூடிக் கொண்டு இந்தியாவை ஆதரித்த ஈழத்தமிழினம், இன்று போரின் போது கூட இந்தியா மோசமாக அடி வாங்க வேண்டும் என்று நினைக்கும் வன்ம மனநிலை எ

  • vasee
    vasee

    தமது அரசியல் இலாபங்களுக்காக உயிர்களை பலியிடும் அரசியல்வாதிகளை விடவா மோசமாகியுள்ளோம், இரண்டு நாட்டு முட்டாள் அரசியல்வாதிகளும் அவர்களை தெரிவு செய்த முட்டாள்களும்தான் இந்த போருக்கு எண்ணெய் ஊற்றி கொழு

  • நிழலி
    நிழலி

    இந்தியா சொன்ன மாதிரி பாகிஸ்தானை தாக்கிவிட்டது. பாகிஸ்தான் அணுகுண்டு எல்லாம் தங்களிடம் உள்ளது, அவற்றால் திருப்பி தாக்குவோம் என்ற மாதிரி சொன்ன கதையை எப்போது செய்து காட்டப் போகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, இணையவன் said:

பாகிஸ்தான் எல்லையைத் தாக்க ஏன் ரபேல் விமானத்தைப் பாக்கிஸ்தான் எல்லைக்குள் கொண்டு சென்றார்கள் என்று பிரான்சில் கேள்வி எழுப்புகிறார்கள். ஏனென்றால் இந்த விமானங்களிலிருந்து 400 கி.மீ எல்லையைத் துல்லியிமாகத் தாக்க முடியும்.

ஆர்வக் கோளாறில்… பக்கத்தில் போய் நின்று, குண்டு போட்டிருப்பார்களோ. 😂 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறைந்தது ஒரு ரபேல் விழுந்தது உறுதி போல தெரிகிறது.

ரபேலுக்கு ejector seat கொடுக்கும் நிறுவனம், ஒவ்வொரு முறை தமது சீட் எஜெக்ட் ஆகும் போதும் ஆன்லைனில் அதை கணக்கு கூட்டுவார்களாம்.

இப்போ கணக்கு 3 ஆல் கூடி உள்ளதாம்.

22 minutes ago, இணையவன் said:

பாகிஸ்தான் எல்லையைத் தாக்க ஏன் ரபேல் விமானத்தைப் பாக்கிஸ்தான் எல்லைக்குள் கொண்டு சென்றார்கள் என்று பிரான்சில் கேள்வி எழுப்புகிறார்கள். ஏனென்றால் இந்த விமானங்களிலிருந்து 400 கி.மீ எல்லையைத் துல்லியிமாகத் தாக்க முடியும்.

தேத்தண்ணி விடாய்த்திருக்குமோ🤣.

விழுந்தது இந்திய எல்லைக்குள்தான். 400 கிமி உள்ளே நிற்கும் போதே பாகிஸ்தானிய (சீன) மிசைல்கள் தாக்கி இருக்குமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, goshan_che said:

விழுந்தது இந்திய எல்லைக்குள்தான். 400 கிமி உள்ளே நிற்கும் போதே பாகிஸ்தானிய (சீன) மிசைல்கள் தாக்கி இருக்குமோ?

அப்பவும் நான் சொன்னனாலெல்லே....சீனா இருக்கும் மட்டும் பாக்கிஸ்தான் ஸ்ரீலங்கா ஈரான் எல்லாம் ஒரு குஞ்சு குருமனுக்கும் பயப்பிடாது எண்டு..🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் இராணுவத்தின் கணக்கு என சொல்லி கொள்ளும் இந்த கணக்கு, பூடகமான பதிவுகளை சில நிமிடம் முன் வெளியிட்டுள்ளது.

ஒரு ரபேல் வீழ்ந்ததை பிரெஞ் அதிகாரிகள் உறுதிபடுத்தினர் என்கிறது இந்த கணக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கன்களின் வாய்க்கு வாய்க்கரிசி போடவேணும். சும்மா அலம்பிக்கொண்டு நிக்குதுகள்!

குறிப்பு: யாழ்குடாநாட்டுக்கு வடக்கில இருக்கிறவன்கள் எல்லாம் வடக்கன்கள் தான்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பரேசன் சக்ஸஸ் பேசன்ற் டெட்.🤣

  • கருத்துக்கள உறவுகள்+

4 hours ago, goshan_che said:

குறைந்தது ஒரு ரபேல் விழுந்தது உறுதி போல தெரிகிறது.

ரபேலுக்கு ejector seat கொடுக்கும் நிறுவனம், ஒவ்வொரு முறை தமது சீட் எஜெக்ட் ஆகும் போதும் ஆன்லைனில் அதை கணக்கு கூட்டுவார்களாம்.

இப்போ கணக்கு 3 ஆல் கூடி உள்ளதாம்.

தேத்தண்ணி விடாய்த்திருக்குமோ🤣.

விழுந்தது இந்திய எல்லைக்குள்தான். 400 கிமி உள்ளே நிற்கும் போதே பாகிஸ்தானிய (சீன) மிசைல்கள் தாக்கி இருக்குமோ?

தரமான செய்தி...

அதிலையும் அந்த 3 ejection தான் அதிசிறப்பு செய்தி

Just now, vasee said:

ஆப்பரேசன் சக்ஸஸ் பேசன்ற் டெட்.🤣

🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்+

மக்களே... மிராஜ் 2000வீழ்த்தப்பட்டது அதன் கிடைக்கப்பெற்ற பொறியிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ...

வெளுத்துப் போட்டாங்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்+

இதோ அடுத்த வானூர்தி வீழ்ந்ததை கண்ட இந்தியர்கள் தெரிவிக்கும் வாக்குமூலங்கள் ....

அடேய் 25 அப்பாவிகளை கொல்ல 5 தாரை வானூர்திகளை தாரைவார்த்த தாராள மனம்கொண்டவர்களே இந்தியர்கள்!!!

ஆக மொத்தம் 3 உறுதி...😂🫡

கடைசி வரை மறுக்க முடியாத ஆதாரங்கள்

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இஸ்ரேலும் அல்ல. பாகிஸ்தான் லெபனானும் அல்ல. விரைவில் நிலமை அமைதி அடையும் என ஊகிக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்+

  • கருத்துக்கள உறவுகள்+

ஓடியாங்கோ ஓடியாங்கோ

இரண்டாவது ரபேல் விழுந்ததற்கான ஆதாரத்தை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

சிறிநகருக்கும் பஞ்சாப்பிற்குமான தொலைவு ~500 கிமீ!!!

  • கருத்துக்கள உறவுகள்+

இது நேற்று பாக்கிகுள்ள சுட்டு வீழ்த்தப்பட்ட இரு இந்திய வண்டுகள்:

இந்தியனை முல்லாக்கள் மொங்குறாங்கள் :

அடி விழுந்துகொண்டே இருக்குது ...

இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் இன்னுமொரு வண்டை வீழ்த்திவிட்டதாக பாக். அறிவித்துள்ளது:

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்+

நேற்றிரவு மட்டும் மொத்தம் 8 வண்டுகளை (பல வகை) பாக்கிகள் வீழ்த்தியுள்ளார்கள்:

படங்கள் வெளியாகியுள்ளன :

ஒரே இரவில்:

5 தாரை வானூர்திகள்

8 வண்டுகள் ...

அம்மாடியோவ் ... இந்தியருக்கு மொங்கிற்றாங்கள் 🤣

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்+

52 இந்தியப் படையினர் கொல்லப்படுள்ளனர் என்றும் இந்தியாவின் ஒர் படைத்தொகுதி தலைமையகம் (Brigade headquaters) மற்றும் சில முன்னணி காவலரண்களை தாம் அழித்துள்ளதாகவும் பாக். கோரியுள்ளது.

எனினும் இந்தியா இதுவரை 5 வீரர்களின் பெயர்விரிப்புகளையே வெளியிட்டுள்ளது

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

நேற்றிரவு மட்டும் மொத்தம் 8 வண்டுகளை (பல வகை) பாக்கிகள் வீழ்த்தியுள்ளார்கள்:

படங்கள் வெளியாகியுள்ளன :

ஒரே இரவில்:

5 தாரை வானூர்திகள்

8 வண்டுகள் ...

அம்மாடியோவ் ... இந்தியருக்கு மொங்கிற்றாங்கள் 🤣

இந்தியன்… வாயாலை வடை சுடத்தான் லாயக்கு.

இப்படி நடக்கும் என்று, கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இருந்த மானமும் கப்பல் ஏறி விட்டது. 😂

  • கருத்துக்கள உறவுகள்+
1 minute ago, தமிழ் சிறி said:

இந்தியன்… வாயாலை வடை சுடத்தான் லாயக்கு.

இப்படி நடக்கும் என்று, கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இருந்த மானமும் கப்பல் ஏறி விட்டது. 😂

உண்மை அடி வலுவா விழுந்திருக்கிறது ... 24மணித்தியாலம் ஆச்சிது இன்னும் இந்தியன் வான்சண்டை பற்றி வாய் திறக்கேல.

ஆனால் சீனன் அறிக்கை விட்டிருக்கிறான், 160கிமீ பரப்பளவான வான்வெளியில் நடந்த வான்சண்டையில் மொத்தம் 125 வானூர்திகள் ஈடுபட்டதாம் என்று.

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, இணையவன் said:

பாகிஸ்தான் எல்லையைத் தாக்க ஏன் ரபேல் விமானத்தைப் பாக்கிஸ்தான் எல்லைக்குள் கொண்டு சென்றார்கள் என்று பிரான்சில் கேள்வி எழுப்புகிறார்கள். ஏனென்றால் இந்த விமானங்களிலிருந்து 400 கி.மீ எல்லையைத் துல்லியிமாகத் தாக்க முடியும்.

விற்றால் மட்டும் போதுமா?🤣

  • கருத்துக்கள உறவுகள்

ipl2025.webp?resize=640%2C360&ssl=1

எல்லையில் பதற்றம் – ஐ.பி.எல் போட்டிகளில் மாற்றம்?

ஓப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது . இந்த நிலையில்,  ஐ.பி.எல் போட்டி மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது .

நாளை டெல்லி-பஞ்சாப் இடையே தர்மசாலாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி மும்பைக்கு மாற்றப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. போட்டியை மாற்றுவது தொடர்பாக பி.சி.சி.ஐ ஆலோசனை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1431182

😂

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-96.jpg?resize=750%2C375&ssl=

வானில் விமானப்படை, தரையில் இராணுவம் – இந்தியாவின் இருமுனை தாக்குதல்!

ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா ஒரு தீர்க்கமான தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதல் இரு முனைகளைக் கொண்டது.

இதில் வானத்தில் விமானப்படை மற்றும் தரையில் இராணுவம் ஈடுபட்டதாக அரசாங்க உயர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விமானப்படை (IAF) ஆகாயத்திலிருந்து தரைக்கு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய அதே வேளையில், இந்திய இராணுவம் ஒரே நேரத்தில் தரையிலிருந்து தரைக்கு ஏவுகணைகளை ஏவியதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கொள்ளிட்டு இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெய்ஷ்-இ-மொஹமட், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய பயங்கரவாத உள்கட்டமைப்புகளை குறிவைத்து துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இரவு முழுவதும் நடந்த இந்த நடவடிக்கையில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த பன்முக தாக்குதல், பயங்கரவாத இயந்திரங்களை ஆதரிப்பதை நிறுத்துமாறு பாகிஸ்தானுக்கு ஒரு எச்சரிக்கையாகும், இது பாகிஸ்தானின் பயங்கரவாத இயந்திரத்தை முடக்கும் என்று இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிப்பதை நிறுத்துமாறு இஸ்லாமாபாத்திற்கு தெளிவான செய்தியை அனுப்புவதே இதன் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாக்குதல்கள் தொடங்கப்படுவதற்கு முன்பு, புது டெல்லி முக்கிய உலக சக்திகளிடமிருந்து இராஜதந்திர ஆதரவைப் பெற்றதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு வெளிப்படையான ஆதரவு கிடைத்தது, சீனாவின் பதில் நடுநிலையானது என்று விவரிக்கப்பட்டாலும், வளைகுடா நாடுகள் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதைக் காண முடிந்தது.

இதனால் பாகிஸ்தான் இராஜதந்திர முன்னணியில் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்டது.

துருக்கியைத் தவிர, வேறு எந்த நாடும் இஸ்லாமாபாத்தை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இது இந்தியாவுக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க இராஜதந்திர வெற்றி என்று கூறியது.

GqXxjIQWYAANtH7?format=jpg&name=900x900

தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த நடவடிக்கையை “அப்பட்டமான போர் நடவடிக்கை” என்று கூறி, பொதுமக்கள் உயிரிழப்புகளைக் கூறினார்.

பாகிஸ்தான் “அதன் விருப்பப்படி சரியான நேரத்தில் மற்றும் இடத்தில்” பதிலடி கொடுக்கும் என்று அச்சுறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் பதிலடி கொடுத்தால் இந்தியா கடுமையாக பதிலளிக்கத் தயாராக உள்ளது என்று இந்தியா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார்.

எவ்வாறெனினும், இந்தியாவின் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டதில் அசாரின் உறவினர்கள் பத்து பேர் அடங்குவர் என்று பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் ஒரு விளையாட்டு மைதானத்தில் அவரது இறுதிச் சடங்கிற்காக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து.

“அல்லாஹ் அக்பர்” அல்லது கடவுள் பெரியவர் என்று கோஷமிட்டனர்.

மேலும் பிற மத கோஷங்களையும் எழுப்பினர்.

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கொடூரம் அனைத்து விதிமுறைகளையும் மீறியுள்ளது” என்று அந்தக் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“துக்கமும் அதிர்ச்சியும் விவரிக்க முடியாதவை”. கொல்லப்பட்டவர்களில் ஐந்து பேர் குழந்தைகள் என்றும், மற்றவர்களில் அசாரின் சகோதரி மற்றும் அவரது கணவர் அடங்குவதாகவும் அது கூறியது.

பல ஆண்டுகளாகக் காணப்படாத அசார் மற்றும் அவரது சகோதரர், குழுவின் துணைத் தலைவரான அப்துல் ரவூப் அஸ்கர் ஆகியோர் இறுதிச் சடங்கு பிரார்த்தனைகளில் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை.

தாக்குதலுக்குப் பின்னர் அந்த இடத்திற்குச் செல்லும் சாலை முற்றுகையிடப்பட்டது.

மேலும் வடக்கே, நள்ளிரவுக்குப் பிறகு சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு, நான்கு இந்திய ஏவுகணைகள் முரிட்கேயில் உள்ள ஒரு பரந்த வளாகத்தை ஆறு நிமிடங்களுக்குள் தாக்கியதாக உள்ளூர் அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் ஒரு மசூதியையும் அருகிலுள்ள நிர்வாகக் கட்டிடத்தையும் இடித்து, மூன்று பேரை இடிபாடுகளுக்குள் புதைத்தது.

https://athavannews.com/2025/1431218

################### ################## ###################

EKb0fhaUUAALzQ0.jpg

😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் இந்திய தாக்குதலில் குறிவைக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசாரின் பின்னணி

மசூத் அசார், பாகிஸ்தான், இந்தியா, ஜம்மு காஷ்மீர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

8 மே 2025, 04:30 GMT

புதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையில், பஹாவல்பூரில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் மற்றும் நான்கு நெருங்கிய கூட்டாளிகள் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலை ஜெய்ஷ்-இ-முகமது (JEM) புதன்கிழமையன்று உறுதி செய்ததாக பிபிசியின் உருது சேவை கூறுகிறது. மசூத் அசாரின் மூத்த சகோதரி, அவரது கணவர், மருமகனின் மனைவி, மருமகள் மற்றும் ஐந்து குழந்தைகள் கொல்லப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

அந்த அறிக்கையின் படி பாகிஸ்தானின் பஹாவல்பூரில் உள்ள சுப்ஹான் அல்லா மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மசூத் அசாரின் உறவினர்கள் இறந்துவிட்டனர்.

யார் இந்த மசூத் அசார்?

கடந்த 1968 ஜூலை 10 அன்று பஹாவல்பூரில் அல்லாபக்ஷ் சபீரின் குடும்பத்தில் மசூத் அசார் பிறந்தார். அசாரின் தந்தை சபீர், பஹாவல்பூரில் உள்ள ஓர் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

இந்திய உள்துறை அமைச்சகம், 2024 மார்ச் 7ஆம் தேதியன்று வெளியிட்ட 'மிகவும் தேடப்படும் குற்றவாளிகள்' பட்டியலில் 57 வயது மசூத் அசாரின் பெயர் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவுக்கு எதிராக மசூத் செய்த குற்றங்களின் பட்டியல் நீண்டது. பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் மசூத் அசாரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதியன்று ஸ்ரீநகரில் அப்போதைய ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்ற வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டனர். இதில் மசூத் அசாருக்கும் பங்கு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதன் பிறகு, 2001 டிசம்பர் 12இல், இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தீவிரவாதத் தாக்குதலிலும் அசாரின் பங்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தாக்குதலில், இந்தியாவின் ஆறு பாதுகாப்புப் படையினர் மற்றும் மூவர் உயிரிழந்தனர்.

புல்வாமா தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றச்சாட்டு

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,பிப்ரவரி 14, 2019 அன்று, புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, அதில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர்.

நாற்பது பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதலிலும் மசூத் அசாரின் பங்கு உள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இவை அனைத்திற்கும் முன்னதாக, காந்தஹார் விமானக் கடத்தலின்போது மௌலானா மசூத் அசார் பெயர் பரபரப்பாகப் பேசப்பட்டது. 1999ஆம் ஆண்டு காந்தஹார் விமானக் கடத்தலின்போது விடுவிக்க வேண்டுமெனக் கோரப்பட்ட மூன்று தீவிரவாதிகளில் மசூத் அசாரும் ஒருவர்.

காந்தஹார் விமானக் கடத்தலின்போது, இந்திய அரசால் விடுவிக்கப்பட்ட மசூத் அசாரை அப்போதைய இந்திய அரசின் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங், சிறப்பு விமானத்தில் காந்தஹாருக்கு அழைத்துச் சென்றார். அன்று முதல், இந்திய பாதுகாப்பு அமைப்புகளால் தேடப்படும் குற்றவாளியாக மசூத் அசார் இருக்கிறார்.

மசூத் அசார் தலைவராக இருக்கும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையகம் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹாவல்பூரில் இருப்பதாக இந்திய அரசு தொடர்ந்து கூறி வந்தது.

பாகிஸ்தான் எல்லைக்குள் 100 கிலோமீட்டர் உட்புறமாக அமைந்திருக்கும் பஹாவல்பூரில் இந்தியா முதன்முறையாகத் தாக்குதல் நடத்தியதற்கு ஜெய்ஹ்-இ-முகமது அமைப்பு அங்கு இருப்பதும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

மசூத் அசாரை ஒப்படைக்குமாறு இந்தியா பலமுறை பாகிஸ்தானிடம் கேட்டுக் கொண்டாலும், அவர் பாகிஸ்தானில் இல்லை என்றே பாகிஸ்தான் கூறி வந்தது.

ஜிஹாதி நடவடிக்கைகளின் தொடக்கம்

படக்குறிப்பு,மசூத் அசாரை ஒப்படைக்குமாறு இந்தியா பலமுறை பாகிஸ்தானிடம் கேட்டுக் கொண்டாலும், அவர் தங்கள் நாட்டில் இல்லை என்றே பாகிஸ்தான் கூறி வந்தது

மௌலானா மசூத் அசாரின் ஜெய்ஷ்-இ-முகமதுவை ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று இந்தியா கோரி வருகிறது. ஆனால் இந்தியாவின் இந்தக் கோரிக்கைக்கு எதிராகத் தனது வீட்டோ அதிகாரத்தை சீனா பயன்படுத்தி வருகிறது.

இந்தியாவின் சுமார் பத்தாண்டு கால முயற்சிகள் மற்றும் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, கடந்த 2019 மே 1ஆம் தேதியன்று ஐ.நா சபை மௌலானா மசூத் அசாரின் அமைப்பை 'பயங்கரவாத அமைப்பு' என்று அறிவித்தது.

இந்திய உள்துறை அமைச்சகத்தால் மிகவும் தேடப்படும் நபர்கள் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள மசூத் அசாரின் செயல்பாடுகளின்படி, அவர் தலைமையில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு மிகப்பெரிய ஆட்சேர்ப்பு இயக்கத்தை நடத்தி வருகிறது. மேலும் இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இளைஞர்களைத் தூண்டி வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 2002இல், மௌலானா மசூத் அசார் பற்றிய விரிவான கட்டுரையை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டது. இந்தக் கட்டுரையின்படி, மசூத் அசார் கராச்சியில் படிக்கும்போது ஜிஹாதி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

படக்குறிப்பு,மசூத் அசார் கராச்சியில் படிக்கும்போது ஜிஹாதி நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்று தெரிவிக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி

மசூத் அசார் கைது

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, மசூத் அசார் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையவில்லை, 1994 ஜனவரியில் டாக்காவில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் வந்தார்.

டெல்லியின் பிரபல ஹோட்டல்களில் சில நாட்கள் தங்கிய மசூத் அசார், முதலில் தேவ்பந்த் நகருக்குச் சென்றார், அங்கிருந்து காஷ்மீர் சென்றார். 1994 பிப்ரவரி 10ஆம் தேதி இந்திய பாதுகாப்புப் படையினரால் காஷ்மீரில் அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட மசூத் அசாரை விடுவிப்பதற்குப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மசூத் கைது செய்யப்பட்ட 10 மாதங்களில், தீவிரவாதிகள் டெல்லியில் சில வெளிநாட்டினரைக் கடத்திச் சென்று, அவர்களை விடுவிப்பதற்கு ஈடாக மசூத் அசாரை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.

சஹாரன்பூரில் இருந்து பணயக் கைதிகளை மீட்க உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி காவல்துறையின் முயற்சிகள் வெற்றியடைந்தன. மசூத் அசார் சிறையிலேயே இருந்தார். அதன்பிறகு ஓராண்டில் ஹர்கத்-உல்-அன்சார் மீண்டும் சில வெளிநாட்டினரைக் கடத்தி, மசூத் அசாரை விடுவிக்க முயன்றபோது, அந்த முயற்சியும் தோல்வியடைந்தது.

அப்போதிருந்து, 1999இல் விடுவிக்கப்படும் வரை மசூத் அசார் ஜம்முவில் உள்ள கோட் பல்வால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்தச் சிறையில், காஷ்மீரில் கைது செய்யப்பட்ட காஷ்மீரி, ஆப்கன் மற்றும் பாகிஸ்தானி தீவிரவாதிகளின் மொத்த குழு ஒன்று சிறை வைக்கப்பட்டிருந்தது.

அந்தக் குழுவில் ஹர்கத்-உல்-முஜாஹிதீன் என்ற தீவிரவாத அமைப்பின் ஸ்ரீநகர் தளபதி என்று அழைக்கப்படும் சைஃபுல்லா கான் மற்றும் அவரது இரண்டு சகோதரர்களும் இருந்தனர்.

மசூத் அசார் தீவிரவாதிகள் மீது ஏற்படுத்திய தாக்கம்

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,மசூத் அசார், 1994 பிப்ரவரி 10 அன்று இந்திய பாதுகாப்புப் படையினரால் காஷ்மீரில் வைத்து கைது செய்யப்பட்டார்

மசூத் அசார் சிறையில் இருந்தபோது அவருடன் முக்கியமான சில விஷயங்களை கலந்தாலோசித்ததாக சைஃபுல்லா, ஸ்ரீநகரில் பிபிசி செய்தியாளர் ஜுபைர் அகமதுவுடனான உரையாடலில் கூறியிருந்தார்.

"மௌலானா மசூத் அசார் உரை நிகழ்த்துவார், ஜிஹாத் சித்தாந்தம் குறித்து விரிவாகப் பேசுவார், அவர் துப்பாக்கியை எடுக்கவில்லை, யாரையும் கொல்லவில்லை" என்று சைஃபுல்லா தெரிவித்திருந்தார்.

மௌலானா அசாரின் பேச்சு, சிறையில் இருந்த தீவிரவாதிகளிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக சைஃபுல்லா கூறியிருந்தார். யூடியூபில் மௌலானாவின் வீடியோ துணுக்குகள் இந்தியாவுக்கு எதிரான போக்கை ஏற்படுத்தும் ஆத்திரமூட்டும் பேச்சாக இருந்ததாக ஜுபைர் அகமது தனது செய்தியில் தெரிவித்திருந்தது கவனத்தில் கொள்ளத்தக்கது.

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிற்கு பாகிஸ்தானில் தடை இருந்த போதிலும், அந்த அமைப்பு அங்கு சில நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது என்று கூறும் பிபிசி உருது சேவையின் தற்போதைய ஆசிரியர் ஆசிஃப் ஃபரூக்கி, பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்பின் உதவிகளைத் தொடர்ந்து அந்த அமைப்பு பெற்று வருவதாகவும் கூறுகிறார். ஆனால் இதற்கு ஆதாரமோ அல்லது எந்தவித சான்றுகளோ இல்லை.

"கடந்த 1999இல் காந்தஹார் சம்பவத்திற்குப் பிறகு, மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் உதவியுடன் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை உருவாக்கினார். பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தானில் மசூத் அசார் கைது செய்யப்பட்டார், அவரது அமைப்பும் தடை செய்யப்பட்டது. அதன் பிறகு இன்றுவரை மசூத் அசாருக்கு ஆதரவாக வெளிப்படையாகவோ அல்லது ரகசியமாகவோ பாகிஸ்தான் தலைவர்கள் யாரும் பேசியதில்லை" என்று ஆசிஃப் ஃபரூக்கி தெரிவிக்கிறார்.

பாகிஸ்தானில் ஆதரவு இல்லை

பட மூலாதாரம்,ANI

"பாகிஸ்தானில் மசூத் அசாருக்கு பெரிய அளவில் ஆதரவில்லை. ஒரு தீவிரவாதக் குழுவின் தலைவர் என்பதும், அவர் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதும் அனைவருக்கும் தெரியும்" என்று ஆசிஃப் ஃபரூக்கி கூறுகிறார்.

"பல தீவிரவாத சம்பவங்களில் ஈடுபட்டுள்ள மசூத் அசாருக்கு இளைஞர்களிடம் அபிமானம் இல்லை. ஆனால் இந்தியாவை தங்கள் எதிரியாகக் கருதும் ஒரு பிரிவினர் அசாரை ஆதரிக்கின்றனர்" என்கிறார் அவர்.

மௌலானா மசூத் அசார் பொது இடங்களில் பெரிய அளவில் நடமாடுவதில்லை. ஹபீஸ் சயீதை போலன்றி, மௌலானா தொடர்பான செய்திகள் பாகிஸ்தான் ஊடகங்களில் பெரிய அளவில் வெளியாவதும் இல்லை.

கடந்த இருபது ஆண்டுகளில் மசூத்தின் இருப்பு குறித்து பொதுவெளியில் இரண்டு முறை மட்டுமே விவாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசும் ஆசிஃப் ஃபரூக்கி, "கராச்சியில் நடைபெற்ற ஒரு கூட்டத்திலும், அதன் பிறகு முசாஃபராபாத்தில் நடைபெற்ற ஜிஹாதி அமைப்புகளின் மாநாட்டிலும் காணப்பட்டார்" என்று தெரிவித்தார்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c87p7qw4n74o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இருந்த மானமும் கப்பல் ஏறி விட்டது.

விமானம் ஏறி விட்டது🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ரோவின் கட்டுப்பாட்டில் உள்ள பிபிசி தமிழும் முடிந்தளவு முக்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் நேற்று இரவு 12 இந்திய ட்ரோன்களை அழித்ததாக கூறுகிறது.

-bbc.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.