Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வத்திகனில் கர்தினால்கள் கூடி பாப்பரசரை தேரும் கூட்ட கட்டிடத்தின் புகைகூண்டில் இருந்து வெள்ளை புகை வெளியேறியது.

புதிய பாப்பரசர் தெரிவானதை இது குறிக்கிறது.

BBC News
No image preview

Pope conclave live: White smoke emerges as a new pope is...

The new pope is expected to emerge on the balcony of the Vatican shortly - after a series of ballots by 133 cardinals.
  • கருத்துக்கள உறவுகள்

நல்லது . ........ அவர் யாரென்று பார்க்க ஆவல் ......... ! 😄

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, suvy said:

நல்லது . ........ அவர் யாரென்று பார்க்க ஆவல் ......... ! 😄

நிச்சயமாக அவர் ஒரு வெள்ளைத் தோலுடையவராகத்தான் தான் இருப்பார்.

வத்திக்கானிலும் நிறவெறி உள்ளது என்பது, கசப்பான உண்மை.

பாப்பரசர் தெரிவை... ஒவ்வொரு கண்டமாக, சுழற்சி முறையில் கொண்டு வர வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

நிச்சயமாக அவர் ஒரு வெள்ளைத் தோலுடையவராகத்தான் தான் இருப்பார்.

வத்திக்கானிலும் நிறவெறி உள்ளது என்பது, கசப்பான உண்மை.

பாப்பரசர் தெரிவை... ஒவ்வொரு கண்டமாக, சுழற்சி முறையில் கொண்டு வர வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

உண்மைதான்.

ஆனால் இந்த முறை ஆளுபவர்களின் கையாக இருக்கும் ஆண்டகை ரஞ்சித்துக்கும் வாய்ப்பு இருப்பதாக சொன்னார்கள்.

இந்த கறுப்புத்தோல் இனவாதிக்கு வேறு யாரும் வெள்ளை வந்தால் பரவாயில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

நல்லது . ........ அவர் யாரென்று பார்க்க ஆவல் ......... ! 😄

Robert Prevost - எனும் அமெரிக்க கார்தினெலே பாப்பரசராக தெரிவாகியுள்ளார். இவர் பதின்நான்காம் லியோ என அறியப்படுவார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதிய பாப்பரசரால் உலகிற்கு ஏதும் மாற்றங்கள் வருமா என தெரியவில்லை?ஆக குறைந்த பட்சம் உலகம் சமாதானமாக சுற்றட்டும் என வேண்டுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

Robert Prevost - எனும் அமெரிக்க கார்தினெலே பாப்பரசராக தெரிவாகியுள்ளார். இவர் பதின்நான்காம் லியோ என அறியப்படுவார்.

புதிய பாப்பரசர் தன்னை பதின்னாலாவது லியோ என்று அழைப்பதில் பிரச்னை இல்லை,

அமெரிக்காவின் இரண்டாம் த்ரம்ப் வத்திக்கானை அமெரிக்காவுடன் இணைப்பாரா இல்லையா அல்லது ஏதாவது பிசகு இருக்கா என்று இவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்

அதுவரைக்கும் தெரிவான பாப்பரசர் உலக சமாதானத்தை நிலை நிறுத்த தன்னுடைய ஆளுமையை பிரயோகிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

பாப்பரசர் கர்தினாலாக இருக்கும் போது யேசு ஒரு குடியேறி என்றவகையில் பல கருத்துக்களை சொல்லி உள்ளார்.

டிரம்பின் மாகா கூட்டம் இவர் தெரிவானதில் ரொம்பவே அப்செட்.

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-114.jpg?resize=750%2C375&ssl

கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் போப்பாக தேர்வு!

கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் அடுத்த போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப்பாண்டவர் இவர் ஆவார்.

அவர் போப் லியோ XIV என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார்.

அமெரிக்க கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் போப் லியோ XIV ஆக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பு உலகம் முழுவதும் நம்பிக்கையுடன் கூடிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏராளமான நாடுகளின் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

69 வயதான ரொபர்ட் பிரீவோஸ்ட், செயிண்ட் பீட்டர் சிம்மாசனத்தின் 267 ஆவது தலைவராக இருப்பார்.

போப் பதவியை வகிக்கும் முதல் அமெரிக்கர் இவர்தான்.

எனினும், அவர் பெருவில் ஒரு மிஷனரியாக பல ஆண்டுகள் கழித்ததன் காரணமாக, அங்கு பிஷப்பாக மாறுவதற்கு முன்பு லத்தீன் அமெரிக்காவிலிருந்து ஒரு கார்டினலாகக் கருதப்படுகிறார்.

ஸ்பானிஷ் மற்றும் பிராங்கோ-இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த பெற்றோருக்கு 1955 இல் சிகாகோவில் பிறந்த பிரீவோஸ்ட், பலிபீடப் பையனாகப் பணியாற்றினார்.

1982 இல் பாதிரியாராக நியமிக்கப்பட்டார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் பெருவுக்குச் சென்றாலும், அவர் தனது சொந்த நகரத்தில் ஒரு போதகராகவும், ஒரு முன்னோடியாகவும் பணியாற்ற அமெரிக்காவிற்குத் தொடர்ந்து திரும்பி வந்தார்.

அவர் பெருவியன் குடியுரிமை பெற்றவர், மேலும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுடன் பணியாற்றிய மற்றும் தொடர்புகளை பேண உதவிய ஒரு நபராக அன்புடன் நினைவுகூரப்படுகிறார்.

அவர் உள்ளூர் திருச்சபை போதகராகவும், வடமேற்கு பெருவில் உள்ள ட்ருஜிலோவில் உள்ள ஒரு செமினரியில் ஆசிரியராகவும் 10 ஆண்டுகள் பணியாற்றினார்.

லத்தீன் அமெரிக்காவில் உள்ள ஆயர்களுக்கான டிகாஸ்டரியின் தலைமைப் பொறுப்பாளராக அவர் வகித்த உயர் பதவி காரணமாக அவர் கார்டினல்களுக்கு நன்கு அறியப்பட்டவர்.

இந்த அமைப்பு ஆயர்களைத் தேர்ந்தெடுத்து மேற்பார்வையிடும் முக்கியமான பணியைக் கொண்டுள்ளது.

2023 ஜனவரியில் அதே நேரத்தில் அவர் பேராயரானார்.

மேலும் சில மாதங்களுக்குள் பிரான்சிஸ் அவரை ஒரு கார்டினலாக ஆக்கினார்.

தன்னை கத்தோலிக்க திருச் சபையின் தலைவராக தேர்ந்தெடுத்ததற்காக சக கார்டினல்களுக்கு நன்றி தெரிவித்த அவர், இத்தாலியன், ஸ்பானிஷ் மற்றும் லத்தீன் மொழிகளில் பேசினார்.

மறைந்த போப் பிரான்சிஸைப் பற்றியும் அவர் அன்புடன் பேசினார், மேலும் கூட்டத்தை ஜெபத்தில் வழிநடத்தி முடித்தார்.

சிஸ்டைன் தேவாலயத்தின் மேல் உள்ள புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை வெளியேறிய பின்னர் புனித பீட்டர்ஸ் பசிலிக்காவின் பால்கனியில் தோன்றினார்.

இது உள்ளே இருந்த 133 கார்டினல்கள் ஒரு புதிய போப்பைத் தேர்ந்தெடுத்ததைக் குறிக்கிறது.

https://athavannews.com/2025/1431327

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தமிழ் சிறி said:

69 வயதான ரொபர்ட் பிரீவோஸ்ட், செயிண்ட் பீட்டர் சிம்மாசனத்தின் 267 ஆவது தலைவராக இருப்பார்.

பாப் அரசருக்கும் எனக்கும் ஒரே வயது.

முதல்ல போறது யாரென்று பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

புதிய பாப்பரசராக அமெரிக்காவைச் சேர்ந்த கர்தினால் ரொபர்ட் பிரான்ஸிஸ் பிரீவோஸ்ட் தெரிவு : பாப்பரசர் 14 ஆம் லியோ என அழைக்கப்படுவார் 

Published By: VISHNU

09 MAY, 2025 | 11:12 AM

image

புதிய பாப்பரசராக அமெரிக்காவைச் சேர்ந்த கார்தினால் ரொபர்ட் பிரீவோஸ்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டுள்ள முதல் அமெரிக்கர் இவராவர்.

புதிய பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டுள்ள கர்தினால் ரொபர்ட் பிரீவோஸ்ட் பாப்பரசர் 14 ஆம் லியோ (14 ஆம் சிங்கராயர்) என அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 267 ஆவது பாப்பரசராக 69 வயதுடைய பாப்பரசர் 14 ஆம் லியோ தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

494357993_1113995197413343_5599716889362

496515997_993349942781213_65310509683032

494361405_1435341977843692_6827252764218

494357283_1217883839982662_7826023112300

494571892_1788920328502166_4593879209101

494570888_997516402492874_74865896807628

494576878_574638388986810_24326237219419

494574691_1160081002471168_2842858865362

https://www.virakesari.lk/article/214242

801fb2ed179cc66e103cdaf90a4051a5

அப்ப புரியல இப்ப புரியுது!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

பாப் அரசருக்கும் எனக்கும் ஒரே வயது.

முதல்ல போறது யாரென்று பார்ப்போம்.

ஈழப்பிரியன்.... உங்களது படத்தையும், புதிய பாப்பரசரின் படத்தையும் நான் ஒப்பிட்டுப் பார்த்தபோது... உங்கள் முகத்தில் இளமையும், உற்சாகமும் தெரிகின்றது.

ஆனபடியால்... பாப்பாரசருக்குப் பிறகுதான் நீங்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த புதிய பாப்பரசர் 14 ஆம் சிங்கராயர்?

Published By: DIGITAL DESK 3

09 MAY, 2025 | 04:27 PM

image

அமெரிக்காவிலிருந்து தெரிவான முதல் பாப்பரசர் இவர் ஆவார்.

பாப்பரசர் 14 ஆம் சிங்கராயர் ( 14 ஆம் லியோ ) வின் இயற்பெயர் ரொபர்ட் பிரான்சிஸ் பிரெவஸ்ட் ஆகும்.

1955 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 14 ஆம் திகதி சிக்காக்கோவில் பிறந்தார். 

இவரது தந்தையின் பெயர் லூயி மாரியஸ் பிரெவஸ்ட், தாயாரின்  பெயர் மில்ட்ரெட் மார்டினெஸ் ஆகும்.

இவர் தனது சிறுவயதில் சிக்காக்கோவிலுள்ள விண்ணேற்ப்பு அன்னை ஆலயத்தில் பீடப்பணியாளராக பணியாற்றினார்.

1973இல் புனித ஆகுஸ்தினார் துறவர சபையின் சிறிய குருமடத்தில் தன்னுடைய உயர்நிலை கல்வியை முடித்தார். 

1977இல் வில்லனோவா பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பட்டப்படிப்பை (B.Sc.) பெற்றார்.

இவர் ஜூன் மாதம் 19 ஆம் திகதி 1982 ஆம் ஆண்டு அருட்பணியாளராக திருநிலை படுத்தப்பட்டார்.

புதிய ஆகுஸ்தீனார் சபையில் துறவியாக இணைந்து, அவரது ஆரம்ப கால பணியை பெரு நாட்டில் ஆற்றினார். 

1985–1986 மற்றும் 1988–1998 காலப்பாகுதிகளில் பெரு நாட்டில் பங்கு தந்தையாகவும் , மறைமாவட்ட அதிகாரியாகவும் , குருமட ஆசிரியராகவும் ,நிர்வாகியாகவும் பணியாற்றினார் .

2001 முதல் 2013 வரை ஆகுஸ்தீனார் துறவர சபை தலைவராகவும் பணியாற்றினார் .

இவர் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி 2014 ஆம் ஆண்டு ஆயராக அபிஷேகம் செய்யப்பட்டார். 

2015 முதல் 2023 வரை பெரு நாட்டின் சிக்லாயோ மறைமாவட்டத்தில் ஆயராகவும் பணியாற்றினார். 

இவர் 2023இல் மறைந்த பாப்பரசர் பிரான்சினால் கர்த்தினாலாக  நியமிக்கப்பட்டார். 

இவர் ஆங்கிலம், ஸ்பானிஷ், இத்தாலி, பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கீஸ் மொழிகளில் பேசக்கூடியவரும், லத்தீன் மற்றும் ஜேர்மன் மொழிகளை வாசிக்கக்கூடியவருமாவார்.

பாப்பரசர் பிரான்ஸிஸ் மறைவுக்குப் பின்னர் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் திகதி புதிய பாப்பரசராக தெரிவானார்.

https://www.virakesari.lk/article/214262

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான்......என் மதம் சைவமதம். அது எனது நம்பிக்கை.என் மத நடைமுறைகள்.நூறு தேங்காய் உடைக்கிறேன். காவடி எடுக்கிறேன்.தீ மிதிக்கின்றேன்.மாமிசம் சாப்பிடுவதில்லை.தேர் இழுக்கின்றேன். சாமியோடு ஊர் ஊராக போகின்றேன் என நான் சொன்னால் மூட நம்பிக்கை என கைதட்டி சிரிப்பவர்கள். எதிர்க்கருத்து வைப்பவர்கள்.......

இந்த பாப்பரசர் விடயத்தில் வாயே திறப்பதில்லை. ஏன்??? ☹️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2025 at 17:13, ஏராளன் said:

சிங்கராயர்

ஓ…லியோ என்பதன் தமிழ் பதமா சிங்கராயர்?

மன்னாரில் தள்ளாடி முகாமில் வைத்து ஒரு பாதர் சிங்கராயர் போராளிகளுக்கு உதவினார் என்று சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்.

அதெல்லாம் எங்க இப்ப நினைவு இருக்க போவுது…இப்பெல்லாம் மறைகழண்ட புலவு சச்சி போல கதைப்பதுதானே பேஷன்.

ஜான் பாலை - அருளப்பர் சின்னப்பர் என்பார்கள். சிறு வயதில் தமிழர்தான் பாப்பரசர் என நினைத்த காலமும் உண்டு.

பெனடிக்ட், பிரான்ஸிசை தமிழில் என்னவென்று அழைத்தார்கள்?

பெனடிக்ட் - ஆசீர்வாதப்பர்

பிரான்ஸிஸ் - பிரான்சிஸியார்

  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2025 at 20:09, goshan_che said:

ஓ…லியோ என்பதன் தமிழ் பதமா சிங்கராயர்?

மன்னாரில் தள்ளாடி முகாமில் வைத்து ஒரு பாதர் சிங்கராயர் போராளிகளுக்கு உதவினார் என்று சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்.

அதெல்லாம் எங்க இப்ப நினைவு இருக்க போவுது…இப்பெல்லாம் மறைகழண்ட புலவு சச்சி போல கதைப்பதுதானே பேஷன்.

வண சிங்கராயர் வெலிக்கடையில் இருந்தார் என நினைக்கிறேன். சிறையுடைப்பின் போது தப்பிப் போக மறுத்தவர்களில் ஒருவராக இருந்தார் என அந்த நேரத்தில் பேசிக் கொண்டார்கள். இது பற்றிய என் நினைவு பிழையாக இருக்கலாம்.

ஆனால், அவர் மன்னார் சிறையில் சாகவில்லை என்பது உறுதியாக தெரியும்.

ஏனெனில், வண சிங்கராயர் சிறையில் இருந்து வெளிவந்த பின்னர், ஆயுதப் போராட்டத்தை வெளிப்படையாக ஆதரிக்க ஆரம்பித்தார். வழிபாடுகளின் போது செய்யும் பிரசங்கத்தில் (sermon) ஆயுதப் போராட்டத்தை வெளிப்படையாக ஆதரித்தார் என்பதற்காக வத்திக்கான் அவரை பிரசங்கம் செய்யாமல் தடை (censure) விதித்தது. அவர் தொடர்ந்து செயல்பட்டு, யாழ் மருத்துவ மனைக்கு முன்னால் அலுவலகம் அமைத்து செயல்பட்ட "பாலம்" என்ற சேவை அமைப்பை புலிகளின் சலீம் அவர்களோடு சேர்ந்து உருவாக்கினார். இதன் பின்னர் அவரை முழுவதும் கத்தோலிக்க குரு சேவைகளில் இருந்து நீக்கினார்கள் (defrocking). உள்ளூரில் தியோகுப் பிள்ளை என்ற போராட்ட ஆதரவாளரான பிஷப் இருந்த வேளையிலேயே , வத்திக்கான் (அப்போது ஜோன் போல் II என்ற போலந்துக் காரர் தான் பாப்பரசர்) சிங்கராயரைப் பதவி நீக்கியது. பின்னர் அவர் இயற்கையாக மரணமானார். அவரது மரண வீடு சாதாரணமாக நிகழ்ந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

தகவலுக்கும் பிழையை திருத்தியமைக்கும் நன்றி.

நான் கேள்விப்பட்ட அல்லது வாசித்த இரு சம்பவங்களின் நியாபக வயர்கள் குறுக்கால் ஓடிவிட்டது என நினைக்கிறேன்.

வெலிக்கடை சிறை உடைக்கப்படவில்லை?

முடிந்தால் இந்த தகவலை சரிபார்க்கவும்.

கடுமையான சித்திரவதைக்கு உள்ளானார் என கேள்விபட்டது நல்ல நினவு இருக்கிறது.

இயற்கையாக மரணம் என்பது ஆறுதலான செய்தி.

நாம் இருவேறு சிங்கராயர் பற்றி கதைக்கிறோமோ?

ஒருவர் தாவீது அடிகளார் - யாழ் நூலகம் எரிந்த செய்தியோடு படுக்கைக்கு போய் அப்படியே சாவடைந்த தமிழ் அறிஞர்.

இன்னொருவர் ஆ. சிங்கராயர்?

மட்டகளப்பு சிறை உடைப்பில் தப்பி போகாமல் இருந்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2025 at 03:32, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்.... உங்களது படத்தையும், புதிய பாப்பரசரின் படத்தையும் நான் ஒப்பிட்டுப் பார்த்தபோது... உங்கள் முகத்தில் இளமையும், உற்சாகமும் தெரிகின்றது.

ஆனபடியால்... பாப்பாரசருக்குப் பிறகுதான் நீங்கள். 😂

ஆகா மனைவிக்கு இதை படமெடுத்து அனுப்பப் போகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

தகவலுக்கும் பிழையை திருத்தியமைக்கும் நன்றி.

நான் கேள்விப்பட்ட அல்லது வாசித்த இரு சம்பவங்களின் நியாபக வயர்கள் குறுக்கால் ஓடிவிட்டது என நினைக்கிறேன்.

வெலிக்கடை சிறை உடைக்கப்படவில்லை?

முடிந்தால் இந்த தகவலை சரிபார்க்கவும்.

கடுமையான சித்திரவதைக்கு உள்ளானார் என கேள்விபட்டது நல்ல நினவு இருக்கிறது.

இயற்கையாக மரணம் என்பது ஆறுதலான செய்தி.

நாம் இருவேறு சிங்கராயர் பற்றி கதைக்கிறோமோ?

ஒருவர் தாவீது அடிகளார் - யாழ் நூலகம் எரிந்த செய்தியோடு படுக்கைக்கு போய் அப்படியே சாவடைந்த தமிழ் அறிஞர்.

இன்னொருவர் ஆ. சிங்கராயர்?

மட்டகளப்பு சிறை உடைப்பில் தப்பி போகாமல் இருந்தவர்.

ஓம். இரண்டும் வெவ்வேறு சிங்கராயர்கள். ஆ.சிங்கராயர் பற்றிய பதிவுகள் கத்தோலிக்க திருச்சபையின் தளங்களில் தற்போது பெரிதாக இல்லை. "டேவிட்" அல்லது தாவீது அடிகளார் என்று அழைக்கப் பட்ட முன்னைய சிங்கராயரின் வரலாறு தான் இருக்கிறது. நான் நினைக்கிறேன் இருவரும் அமல மரித்தியாகிகள் (OMI) சபையைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

மேலும், உடைக்கப் பட்டது மட்டக் களப்புச் சிறை. வெலிக்கடைச் சிறை தமிழ் கைதிகள் கொலை நடந்த இடம் (நியூரல் கனெக்ஷன் எப்படி ஷோர்ட் சேர்க்கிற் ஆகிறது பாருங்கள்😂? இதற்குத் தான் "மக்கள் வரலாற்றை" எழுத்தில் வைத்திருக்க வேணுமென்பது!)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

வண சிங்கராயர் வெலிக்கடையில் இருந்தார் என நினைக்கிறேன். சிறையுடைப்பின் போது தப்பிப் போக மறுத்தவர்களில் ஒருவராக இருந்தார் என அந்த நேரத்தில் பேசிக் கொண்டார்கள். இது பற்றிய என் நினைவு பிழையாக இருக்கலாம்.

உங்கள் நினைவு சரியானது. மட்டக்களப்பு சிறையுடைப்பில் தப்பிப் போக மறுத்தவர். ஈபிஆர்எலெவ் அமெரிக்க அலன் தம்பதியரை கடத்திய பின்னர் வைத்த கோரிக்கைகளில் ஒன்று இவரை விடுதலை செய்யவேண்டும் என்பது. அந்நேரத்தில் சிறையில் இருந்தபடி, அலன் தம்பதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கடத்தல்காரர்களுக்கு இவர் வேண்டுகோள் விடுத்தார். இவரது வேண்டுகோள் அடங்கிய குரல் பதிவை இலங்கை வானொலி பலமுறை ஒலிபரப்பியது.

இவர் பின்னர் இயற்கை மரணமடைந்ததாக ஊடகங்களில் வாசித்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, island said:

நன்றி.

இவர் சிறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளானாரா. நகங்களை பிடுங்கினர் என கேள்விபட்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தியாகதீபம் திலீபனின் ஈகை பற்றிய நேரடி குறிப்பில் வண. ஆ சிங்கராயர் பற்றி இப்படி வருகிறது.

கிறிஸ்தவ பாதிரியாரும், பல வருடங்காய் சிறையில் அடைபட்டுத் தாங்க முடியாத சித்திரவதைகளை அனுபவித்தவரும், 1983 ஜூலையில் வெளிக்கடைச் சிறைச்சாலையில் 52 தமிழ்க் கைதிகள் சிங்கள இனவாதப் பூதங்கால் கொல்லப்பட்ட சமயம் எதிர்பாராத விதமாகத் தம்பியவரும் ஆகிய, வண, பிதா சிங்கராயர் அவர்கள், திலீபனை பார்ப்பதற்காக மேடைக்கு வந்தார்.

 https://thodarum.com/thileepan-unnanilai-arapporaattam-6/

ஒருவேளை வண சிங்கராயர் மன்னாரில் கைதாகி, தள்ளாடியில் கொடுமைப்படுத்த பட்டபின் மட்டகளப்பு, வெலிக்கடை என மாறி இருப்பாரோ?

மேலும் தேடிப் பார்க்கலாம்.

இந்த மன்னார் கதையை எனக்கு சொன்னவர் என் அம்மா. அவர் இப்போ உயிருடன் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் அண்ணா சொன்னதை போல் வண. ஆ சிங்கராயர் மாரடப்பால் மரணமானதை செய்தியாக வெளியிட்டுள்ளது “களத்தில்”.

article_6fd4f2b471d2ffd17bfae71688b881f4

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய வண சிங்கராயர் + மன்னார் கொனெக்சன், குரொஸ் கொனெக்சந்தான் என்பது கிட்டதட்ட நிருபணமாகி விட்டது.

சவாககச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதலில் காயம் அடைந்த போராளிகள் சீலன், குண்டப்பா, புலேந்தி அம்மானை காப்பாற்ற மருந்து வாங்கிய வகையில் வண பிதா ஆ சிங்கராயர் யாழில் கைதாகியுள்ளார்.

புலிகளுக்கு உறுதுணையாக இருந்த மரு ஜெயகுலராஜா பற்றிய குறிப்பில் இருந்து 👇

(27-10-1982 )ஆம் திகதி அன்று நடைபெற்ற சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் சீலன், புலேந்திரன், ரகு (குண்டப்பா) ஆகிய போராளிகள் காயமடைந்தனர்.

முப்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ். குடாநாட்டில் காயமடைந்த இவர்கள் மூவரையும் காப்பாற்றுவது இலகுவான விடயமல்ல. மேலதிக சிகிச்சைக்காக தமிழகத்துக்கு அனுப்பும்வரை தேவையான வைத்தியத்தை மேற்கொள்ள வேண்டும். இப்பணியில் டாக்டர் ஜெயகுலராஜா, அவரது சகோதரர் போதகர் ஜெயதிலகராஜா, யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மு. நித்தியானந்தன் அவரின் துணைவியாக விளங்கிய நிர்மலா ஆகியோர் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டனர். 

போராளிகள் காயமடைந்ததால் அதற்குத் தேவையான மருந்துகளைப் பெற முயற்சிப்பர் எனக் கருதிய உளவுத்துறையினர் மருந்தகங்களை கண்காணித்தனர். குறிப்பிட்ட வகை மருந்துகளை கொள்வனவு செய்தவர் யார் என ஆராய்ந்தனர். அந்த வகையில் வண. பிதா சிங்கராயர் கைதானார். அதன் தொடர்ச்சியாக வண. பிதா சின்னராசாவும் மேற்குறிப்பிட்ட அனைவரும் கைதாகினர். 

https://www.battinatham.com/2024/06/blog-post_671.html?m=1

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.