Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, island said:

1977 கலவரத்தில் வந்தவர்கள் கூட திரும்பி மலையகம் செல்ல வேண்டிய நிலையே வந்தது. தோட்டக்காட்டான் என்று அவர்களை வெறுத்த யாழ்ப்பாண dominant சமூகம் அதன் பலனை இன்று அனுபவிக்கிறது.

நீங்கள் சொல்லும் கருத்தில் எனக்கும் உடன்பாடே, ஆனால் நீங்கள் அதைச் சொல்லியிருக்கும் விதம் குத்திக் கிழிப்பது போன்று இருக்கின்றது.

ஊரில் நான் சிறு வயதில் இருந்த ஒழுங்கையின் தொடக்கத்தில், வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி வீதியில் அவர்கள் ஒரு குடும்பமாக வந்து கடை ஒன்றை சொந்தமாக நடத்தினார்கள். அவர்கள் எங்கள் ஒழுங்கையிலேயே ஒரு வீட்டில் வசித்தார்கள். அங்கு பலரும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்தப் பெயரிலேயே அவர்களை பேச்சில் குறிப்பிடுவார்கள். நாங்கள் என்ன ஒரு சமூகமாக இருந்திருக்கின்றோம் என்று இப்பொழுது வேதனையாக இருக்கின்றது.

அவர்களின் வீட்டில் என் வயதை உடைய ஒருவரும் இருந்தார். அந்த வீட்டுக்கார அக்காவின் தம்பி. சில காலத்தில் நானும் அவனும் நல்ல நண்பர்கள் ஆனோம். அவன் பள்ளிக்கூடம் போகவில்லை. அவர்களின் கடையிலேயே வேலை செய்தான். பின்னர் ஊரை விட்டுப் போய்விட்டார்கள்.................

நான் இங்கு யாழில் ஒரு வருடத்தின் முன் இணைந்த போது எழுதிய குறுங்கதை ஒன்று கீழே உள்ளது. இது இன்னொரு நிகழ்வு. இது கற்பனையில்லை. தலைப்பே தலைவிதியாக மாறியது போல இருக்கின்றது....................

Edited by ரசோதரன்

  • Replies 64
  • Views 2.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Kandiah57
    Kandiah57

    அது ரூபாய் இல்லை பவுண்டுகள் பிரித்தானியா நாணயம் .....தயவுசெய்து வடிவாக ஆறுதலாக வாசியுங்கள் 🤣🤣. இப்படி கோஷன் கொடுத்தால் நானும் ஊருக்கு போவேன் குமாரசாமி தமிழ் சிறி. கவி. அரு

  • goshan_che
    goshan_che

    சரி 5000 கூட என்றால் 2500£. இந்தியாவில் இருப்பது 20,000 குடும்பங்கள். அதில் அரைவாசி திரும்பி வந்து, அவர்களை நாட்டில் நிலை நிறுத்த தலா £2500 கொடுத்தால் - மொத்த செலவு £25 000 000. இதை உலகளாவிய தமிழ் அம

  • நியாயம்
    நியாயம்

    மனம் பிரழ்வு அடைந்த, வக்கிர புத்தியுள்ளவர்கள் நீதிபதி பதவியை வகித்தால் இப்படித்தான் தீர்ப்பு வாசிப்பார்கள். இந்த தீர்ப்பு குறிப்பிட்ட நீதிபதிகளின் தனிப்பட்ட கருத்தேயொழிய முழு இந்திய மக்களின் கருத்து அ

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

அது ரூபாய் இல்லை பவுண்டுகள் பிரித்தானியா நாணயம் .....தயவுசெய்து வடிவாக ஆறுதலாக வாசியுங்கள் 🤣🤣. இப்படி கோஷன் கொடுத்தால் நானும் ஊருக்கு போவேன்

குமாரசாமி தமிழ் சிறி. கவி. அருணாச்சலம. ......நிறைய பேர போவார்கள் 🤪🙏

சரி 5000 கூட என்றால் 2500£.

இந்தியாவில் இருப்பது 20,000 குடும்பங்கள்.

அதில் அரைவாசி திரும்பி வந்து, அவர்களை நாட்டில் நிலை நிறுத்த தலா £2500 கொடுத்தால் - மொத்த செலவு

£25 000 000.

இதை உலகளாவிய தமிழ் அமைப்புகள், மாணவர் மன்றங்கள், தொழிலதிபர்கள், கோவில்கள் ஒரு வருடத்தில் திரட்ட முடியும்.

சரியான செயன்முறை இருப்பின், அகதி அமைப்புகள், மேற்குநாட்டு மீள்குடியேற்ற அமைச்சுகளை கூட அணுகலாம்.

தனியே காசாக கொடுக்காமல் - கல்வி அல்லது தொழில் முயற்சி அல்லது ஒரு தொழில் பழக எனும் வகையில் கொடுக்கலாம்.

IOM என்ற அமைப்பு செய்வது போல.

பெரிய எடுப்பில் முடியாவிட்டால் - புலம்பெயர் ஊர் ஒன்றியங்கள் தமது ஊரில் இருந்து இப்படி போனவர்களையாவது மீள் அழைக்க முயலலாம்.

இஸ்ரேல் ஒரு தேசமாக உருவாக முன்னர், கிபுட்ஸ் எனும் பண்ணைகளை உருவாக்கி, அங்கே யூதர்கள் பல நாடுகளில் இருந்தும் மீள் குடியேறினார்கள். இந்த நிலங்கள் அரபிகளிடம் இருந்து விலைக்கு வாங்கப்பட்டன. இந்த விலையை “நீலப்பெட்டிகள்” என்ற மக்கள் நிதிசேகரிப்பின் மூலமும் ஏனைய வழிகளிலும் ஒரு இனமாக அவர்களால் திரட்ட முடியுமாய் இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பலர் நீதிபதியை திட்டுவது எய்தவன் இருக்க அம்பை நோகும் செயல்.

நீதிபதியின் வார்த்தை பிரயோகம் தவறானது ஆனால் தீர்ப்பல்ல.

  1. வழக்கு போட்டவர் இந்திய சட்டப்படி பயங்கரவாதிகளுக்கு துணையானவர். அதற்காக சிறையிடப்பட்டவர். இப்படியானவர்களை மேற்கில் இருந்து கூட நாடு கடத்துவர் (1951 அகதிகள் சாசனம் இவர்களுக்கு செல்லாது, ஆனால் ஐரோப்பிய மனித உரிமை சாசனம் செல்லும்).

  2. இந்திய CAB சட்டம் மிக தெளிவாக வெளிநாட்டவர் ஆகினும், யாருக்கு குடி உரிமை வழங்காலாம் என சொல்கிறது. அதில் இலங்க தமிழர் இல்லை. அண்டை நாடுகளில் இருக்கும் முஸ்லிம்களும் இல்லை. இதை இந்திய நாடாளுமன்றம் மிக தூர நோக்குடன், இந்தியாவை சூழ உள்ள ஆப்கானிஸ்தான், பங்களதேஷ், பாகிஸ்தான் நாடுகளில் இருக்கும் இந்துக்கள், சீக்கியர், ஜைனர் போன்றோர் மத ஒதுக்க்கலுக்கு உள்ளாகும் போது அனுமதிக்கலாம் என்றே சட்டம் ஆக்கியுள்ளது (இதுவும் இன்னுமொரு ஆர் எஸ் எஸ் கொள்கை).

    ஆகவே இந்த சட்டத்தைத்தான் நீதிபதி நடைமுறைபடுத்தி உள்ளார்.

  3. இதற்கு ஒரே வழிதான் உள்ளது. தமிழ்நாட்டில் - திமுக அல்லது அதிமுக வில் மத்திய அரசு தங்கி இருக்கும் ஒரு நிலை மீள வரும் போது, இந்த சட்டத்தில் 2009 ற்கு முன் பதிந்த இலங்கை அகதிகளையும் சேர்க்க வேண்டும் என்பதை ஆட்சிக்கு ஆதரவு தர ஒரு நிபந்தனையாக முன்வைக்கலாம். அதற்கு முதல்படியாக நாம் இவ்விரு திராவிட கட்சிகளையும் இப்போ சீண்டாமல் இருக்க வேண்டும்.

    நடக்கிற காரியாமா…

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

மேலதிக தகவல்.

  1. இந்தியாவில் 12 வருடம் வாழ்ந்தால் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

  2. ஆனால் சட்டவிரோத குடியேறிகள் எத்தனை வருடம் வாழ்ந்தாலும் விண்ணப்பிக்க தகுதியற்றவர் ஆவர்.

  3. ஆனால் விண்ணப்பதாரி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்காலாதேசை சேர்ந்த மத சிறுபான்மை எனில், சட்டவிரோத குடியேறி எனிலும், 6 வருடத்தில் விண்ணப்பிக்கலாம்.

  4. எந்த நாடுமே பயங்கரவதா குற்ற பிண்ணனி உள்ளவருக்கு அவர் சட்டபூர்வ குடியேறி ஆகினும் கூட குடியுரிமை விண்ணப்பத்தை ஏற்காது.

இதை புரிந்து கொண்டால் ஏன் நீதிபதி அப்படி தீர்ப்பு கூறினார் என புரிந்து கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பாவிக்கப்பட்டு இருக்கும் மொழி - சத்திரம் அல்ல என்பது உண்மையில் வலி என்றாலும், விடயங்கள் சொல்லாமல் சொல்லப்பட்டு இருப்பது.

அதட்டும், பரிகசிக்கும் தொனியும்.

இப்படியான மொழி வேறு எந்த அடைக்கலம் கேட்டவர்களுக்கு பாவிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிய வேண்டும்.

(மேற்கில் அடைக்கலம் நிராகரிக்கப்படும் எவருக்கும் தொனி ஒன்று - எப்போதும் தனிமனித மரியாதையை பாதிக்காமல், முடிவு எவ்வளவு கடினமாக இருப்பினும்).

முன்பு சொல்லி இருந்தேன் இந்தியாவின் சனநாயகம் மேற்கு போன்றது இல்லை. அப்படியான தோற்றமே இருக்கிறது.

உண்மையில், ஒரு அதிகாரபீடம் முடிவு எடுத்த போலவே நீதிபதிகளின் அணுகுமுறை, தொனி இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களை ஒடுக்க இந்தியா எடுத்த புதிய ஆயுதம்: நம்பி நம்பி ஏமாறும் தமிழர்கள்.

ஈழத்தமிழர் விவகாரத்தில் தொடர்ந்தும் வெறுப்பை வெளிப்படுத்தி வரலாற்று துரோகங்களை அரங்கேற்றி வரும் இந்தியா தம்மை நம்பி வந்த ஈழ தமிழர்களை 30 ஆண்டுகளுக்கு மேல் அகதிகளாகவே நடாத்துகின்ற அவலம் நேற்று இந்திய உச்சநீதிமன்றத்தில் ஈழ அகதி ஒருவர் தொடர்பான தீர்ப்பின் மூலம் மீளவும் தன்னை ஒரு ஈழத்தமிழர்களுக்கு எதிரான ஒரு நாடாக அடையாளப்படுத்தியிருக்கிறது.

இலங்கையில் காந்தி சதுக்கம் ,காந்தி பூங்கா , மகாத்மா காந்திக்கு சிலை என்று இலங்கையர்கள் இந்தியாவின் மீதான ஆதரவை வெளிப்படுத்தினாலும் இந்தியாவோ ஒரு எதிரியை பாவிப்பது போலவே பாவித்து வருகிறது.

 இந்த நிலையில் ஈழத்தமிழர்களுக்கு இந்தியா இதுவரை என்ன செய்திருக்கிறது என்று கேட்டால் உண்மையில் இதுவரை எதுவுமே செய்யவில்லை என்பதுதான் பதில்.

இந்தியாவின் ஈழத்தமிழர்கள் தொடர்பான நிலைப்பாடுகளை பற்றியும் தமிழரின் தேசிய வேட்கையை சிதைத்த இந்திய நகர்வுகள் தொடர்பாகவும் ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு.

வணக்கம். இன்றைய நாளும் மற்றுமொரு ஐபிசி

தமிழின் இன்றைய அதிர்வின் ஊடாக உங்கள்

அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்று

2052025 இன்றைய நாளை பொறுத்தவரை நாங்கள்

பேச வேண்டிய விடயம் அல்லது பேசுகின்ற மிக

முக்கியமான ஒரு விடயமாக மாறியிருப்பது ஒரு

அகதியினுடைய கோரிக்கை

நிராகரிக்கப்பட்டிருப்பது மாத்திரமல்லாமல்

அதற்கு சொல்லப்பட்டிருக்கக்கூடிய காரணம்

என்பது ஈழத்தமிழ் மக்களிடையே அவர்களுடைய

மனங்களில் இவ்வளவு காலமும் இந்தியா

தன்னுடைய தந்தைய நாடு என்பதும் இந்தியா

எங்களுக்கு ஆதரவாக இப்போதாவது ஒரு நாள்

வரும் என்ற நம்பிக்கையோடும் இருந்த

மக்களுக்கு மிகப்பெரிய அதிர்வலைகளையும்

அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நேற்றைய தினம் இந்தியாவிலிருந்து ஒரு

செய்தி வெளிவந்தது. அந்த செய்தியை நான்

உங்களோடு இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

140 கோடி மக்கள் தொகையுடன் ஏற்கனவே போராடி

வரும் நிலையில் உலகம் முழுவதும் உள்ள

அகதிகளுக்கு இடமளிக்கக்கூடிய இந்தியா

ஒன்றும் தர்மசாலை அதாவது இலவச தங்குமி

இடம் அல்ல என்று இந்திய உச்சநீதிமன்றம்

தெரிவித்திருப்பதாகவும் இலங்கை

தமிழகதியினுடைய தங்குமிடத்திற்கான அனுமதி

கோரிக்கையை நிராகரித்திருப்பதாகவும் அந்த

செய்தி வெளிவந்தது. தமிழில் விடுத்தலை

புலிகள் அமைப்புடன் தொடர்பு

கொண்டிருந்ததாக இலங்கை தமிழரான ஒரு

மனுதாரர் கடந்த 2015ஆம் ஆண்டு கைது

செய்யப்பட்டார். தனிநபர் அல்லது

அமைப்புகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை

தடுத்து நிறுத்தும் யுஏபிஏ என்று

சொல்லக்கூடிய சட்டத்தின் கீழ் 2018ஆம்

ஆண்டு விசாரணை நீதிமன்றத்தினால் அந்த நபர்

குற்றவாளி என தீர்ப்பாளிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம்

அவரது சிறைதண்டனையை 10 ஆண்டுகளில்ிருந்து

ஏழு ஆண்டுகளாக கடந்த 2022 ஆம் ஆண்டு

குறைத்திருந்தது. அதன் அத்தோடு அவரது

சிறைதண்டனை முடிந்தவுடன் நாட்டை விட்டு

வெளியேறும்படி கேட்டுக்கொண்டது. மேலும்

மூன்று வருடங்களாக அகதி முகாமில் தடுத்து

வைக்கப்பட்டிருக்கக்கூடிய அந்த நபர்

இலங்கைக்கு திரும்பினால் தன்னுடைய

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும்

எனவே தன்னை இலங்கைக்கு நாடு கடத்து விளைதை

தடுத்து நிறுத்த கூறியும் உச்ச

நீதிமன்றத்திலே மனுதாக்கல்

செய்திருந்தார்.

தான் முறையான விசாவின் மூலமாக இந்தியா

வந்ததாகவும் தன்னுடைய மனைவி மற்றும்

குழந்தைகள் இப்போது இந்தியாவிலே குடியேறி

விட்டனர் எனவும் அந்த மனுதாரர்

குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை

விசாரித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளான

தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி கே வினோத்

சந்திரன் ஆகியோர் அடங்கிய அந்த அமர்வு

உலகம் முழுவதிலும் இருந்து வரும் அகதிகளை

இந்தியா வரவேற்க வேண்டுமா? நாங்கள் 140

கோடியுடன் போராடுகிறோம். இது எல்லா

இடங்களிலும் இருந்து வரும் வெளிநாட்டினரை

மகிழ்விக்க கூடிய தர்மசாலை அல்ல. இங்கே

குடியேற உங்களுக்கு என்ன உரிமை

இருக்கிறது? இலங்கையில் உங்களது உயிருக்கு

ஆபத்து இருந்தால் வேறு நாட்டுக்கு

செல்லுங்கள் என கூறி இந்த மதுவை தள்ளுபடி

செய்ய உத்தரவிட்டிருக்கிறது என்பதை

சொல்லிக்கொள்ளலாம். அதே நேரம் குறிப்பாக

ஒரு விடயத்தையும் இந்த நேரத்தில்

ஞாபகப்படுத்திக் கொள்கிறேன். கடந்த

2024ஆம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்றத்திலே

ஒரு இலங்கை தமிழர்களுடைய குடியுரிமை மனைவை

பரிசலித்து மத்திய உள்துறை

அமைச்சகத்திற்கு அதனை விரைவாக

தீர்மானிக்குமாறு நீதிமன்றம்

உத்திரவெற்றிருந்த ஒரு வழக்கையும் நான்

உங்களுக்கு மேற்கொள் காட்டி விடுகிறேன்.

ஆக இந்த வழக்கினுடைய தீர்ப்பில் நான்

இறுதியாக கூறியது. இங்கே குடியேற

உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

இலங்கையில் உங்களது உயிருக்கு ஆபத்து

இருந்தால் வேறு நாட்டுக்கு செல்லுங்கள் என

கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்ய

உத்தரவிட்டுருந்தார்கள். ஆக இந்தியா எந்த

ஒரு சந்தர்ப்பத்திலும்

ஈழத்ததமிழர்களுக்கான தீர்வுக்காகவோ அல்லது

ஈழத்ததமிழர்களுடைய பிரச்சனையிலோ தலையிட

போவதில்லை. அவர்களுக்காக பரிந்து பேச

போவதில்லை என்ற ஒரு விடயத்தை மிக் தெளிவாக

இந்திய நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.

ஆக இந்த விவகாரத்திலே இன்று ஒரு நாள்

இந்தியா எங்களுக்காக ஒரு தீர்வை பெற்று

தரும். இந்தியாவால் தான் எங்களுக்கு

விடிவு கிடைக்கும் என்று சொல்லி நம்பி

இருக்கக்கூடிய ஆயிரம் ஆயிரம் ஈழ தமிழ்

உள்ளங்களை இந்தியா இந்த தீர்ப்பின் மூலமாக

மாற்றி இருக்கிறது. குறிப்பாக

சொல்லக்கூடிய வேண்டுமாக இருந்தால் நான்

ஏழவே குறிப்பிட்டிருக்கக்கூடிய ஒரு

விடயம்தான். இந்த இந்தியாவினுடைய

அமைதிப்படை இலங்கைக்கு வந்தது. அப்போது

அந்த அமைதிப்படை இலங்கைக்கு வந்த நாளினை

மிக கோலாகலமாக கொண்டாடினார்கள். அவர்களை

தலையிலே தூக்கி வைத்து கொண்டாடினார்கள்

ஈழத்தின் தமிழ் மக்கள். அதாவது எங்களை

காப்பாற்றுவதற்காக இந்திய ராணுவம்

வந்திருக்கிறது. ஸ்ரீலங்க அரசினுடைய தொடர்

நடவடிக்கைகளில் இருந்து ஈழ தமிழ் மக்களாக

எங்களை காப்பாற்றுவதற்காக இந்திய ராணுவம்

வந்திருக்கிறது என்று சொல்லி அவர்கள்

சந்தோஷப்பட்டார்கள் ஊர்வலங்க செய்தார்கள்

மகிழ்ந்து கொண்டார்கள். ஆனால் அந்த நிலைமை

முற்றாக மாறி ஈழ தமிழ் மக்கள் கண்டு அஞ்சி

ஒழிக்கின்ற ஒரு ராணுவமாக இந்திய ராணுவம்

இருந்தது. இந்திய ராணுவம் படுகொலைகளை

செய்தது பாலியல் வல்லுறவுகளை மேற்கொண்டது.

இன்னும் இன்னும் சொல்லிக்கொள்ள வேண்டுமாக

இருந்தால் மிக காடைனமாக வைத்திய

சாலைக்குள் புகுந்து நோயாளர்களை சுட்டு

கொண்டது. இப்படியான நடவடிக்கைகளை செய்தது.

அந்த நிலைமையிலும் கூட அதன் பின்பதாகவும்

கூட இளதமிழ் மக்கள் இன்றுவரை இந்தியா

எங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவி

செய்யும் என்று சொல்லி நம்புகிறார்கள்.

அன்பான தமிழக உறவுகளே என்னுடைய இந்த

பேச்சை கண்டு நீங்கள் கொதைத்து எழலாம்.

உங்களுடைய ஆக்ரோசமான கருத்துக்களை

வெளிப்படுத்தலாம். ஆனால் நான் சில

விடயங்களை உங்களுக்கு தெளிவுபடுத்திக்

கொள்ள விரும்புகிறேன். நாங்கள் எப்போதும்

இந்தியாவை விரோதிகளாக பார்த்தது இல்லை.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சண்டை

வருகிற போது பெரும்பாலான இழத்து தமிழ்

மக்களுடைய மனநிலை இப்போதும்

ஆகியிருக்கிறது பாகிஸ்தானுடைய பக்கமாக

என்று சொல்லி நீங்கள்

குறிப்பிடுகிறீர்கள். பாகிஸ்தானுக்கும்

இந்தியாவுக்கும் துடுப்பாட்டம் அதாவது

கிரிக்கெட் போட்டி ஒன்று இடம்பெற்றால் கூட

எங்களுடில் பலரினுடைய ஆதரவு என்பது

இந்தியாவினுடைய பக்கமாக இருக்கும்.

ஏனென்று சொன்னால் இந்தியாவினுடைய

எதிரிநாதரி பாகிஸ்தான். ஆகவே எங்களுக்கு

பாகிஸ்தான் மீது விருப்பமில்லை.

பாகிஸ்தானோடு உடன்பட நாங்கள் தயாரில்லை

என்று மனநிலையில் தான் இளத்தமிழர்கள்

இருந்திருக்கிறார்கள்.

எங்களுடைய ஒவ்வொரு வீதிகளிலும் ஒவ்வொரு

ஊர்களிலும் வடக்குக்கிழக்கில்

இருக்கக்கூடிய பெரும்பாலான இடங்களிலே

மகாத்மா காந்திக்கு சிலை

வைத்திருக்கிறார்கள். எங்கெல்லாம்

இருக்கக்கூடிய ஒவ்வொரு இடங்களிலும் ஒரு

வீதிக்கு காந்தி வீதி என்று

பெயரிட்டிருப்பார்கள். அதேபோல காந்தி

சதக்கம் என்று சொல்லி ஒரு சதக்கத்தை

ஒதுக்கி இருப்பார்கள். அதை தாண்டி மகாத்மா

காந்தி பூங்கா என்று சொல்லி பூங்காவை

வைத்திருப்பார்கள். இப்படி நிறையவே

இந்தியாவினுடைய விவகாரங்களிலும் இந்தியாவை

சார்ந்தவர்களையும் அவர்கள்

தூக்கி எறிந்ததாகவோ நிராகரித்ததாகவோ

அல்லாமல் பெருமைப்படுத்தக்கூடிய வகையிலே

செயல்பட்டிருக்கிறார்கள். எங்களுடைய

பலரினுடைய ஒரு தலைமுறைக்கு முற்பட்ட

பெயர்களை பார்க்கிற போது இந்திரா

சந்திரபோஸ் இப்படியான பெயர்களை எங்களுடைய

மக்கள் சூடி இருந்தார்கள். அந்த அளவுக்கு

நாங்கள் இந்தியாவோடு மிக நெருக்கமாக

எங்களுடைய உணர்வுகளை பேணி இருந்தோம்.

ஆனால் இந்தியா தொடர்ந்து

ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்கிறது?

பெரும்பாலான உறவுகள் குறிப்பிடக்கூடிய

விடயம் இந்தியா வீடு கட்டி

கொடுத்திருக்கிறது. சந்தோஷமாக

வைத்திருக்கிறது ஈழத்ததமிழர்களுக்கு நன்றி

இல்லை என்பது. இந்தியா வீடு கட்டி

கொடுத்திருக்கிறது என்பது ஈழதமிழர்களுடைய

தேவை வீடு கட்டி தருவது அல்ல. எங்களால்

உழைத்து எங்களுக்கான வீடுகளை கட்ட

முடியாமல் இல்லை. ஆக இந்த விவகாரத்திலே

வீடு கட்டி கொடுத்தது இந்தியா

தமிழர்களுக்கு நன்றி இல்லை என்ற

வார்த்தைகளை சொல்லுகின்றவர்கள் நீங்கள்

உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

குறிப்பாக ஒரு விடயத்தை நான் இங்கு

மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்த

விரும்புகிறேன். ஈழ தமிழர்கள் தங்களுடைய

கடந்த கால யுத்தத்தின் காரணமாக

உலகமங்கிலுமே பரவிச் சென்றார்கள். அப்படி

அவர்கள் பதவி சென்ற நாடுகளிலே ஒவ்வொரு

நாடுகளிலும் அவர்களுக்கான அங்கீகாரம்

என்பது எந்த அளவுக்கு இருந்திருக்கிறது

என்று சொன்னால் அந்த நாடுகளிலே நாடாளுமன்ற

உறுப்பினர்களாக அந்த நாடுகளினுடைய

அமைச்சர்களாக மாறும் அளவுக்கு

இருந்திருக்கிறது. கனடாவிலே இப்போது

இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இருக்கிறார்கள். இரண்டு அமைச்சர்கள்

இருக்கிறார்கள். பிரதானியாவுக்கு

பார்க்கிற போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்

இருக்கிறார். உமாகுமரன் என்று

சொல்லக்கூடிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்

இருக்கிறார். ஆவஸ்திரேலியாவிலே ஒரு தமிழ்

நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறார்.

அவர்கள் எல்லாம் ஆவஸ்திரேலியாவிலேயும்

பிரதானியாவிலும் கனடாவிலும் பிறந்து

விளந்தவர்கள் அல்ல. இந்த நாட்டில இருந்து

அகதியாக சென்றவர்கள் அந்த நாட்டிலே

இருந்து அகதியாக சென்றவர்களுடைய பிள்ளைகள்

அவர்களுக்கு அந்த நாடுகள் அங்கீகாரம்

கொடுத்திருக்கிறது. பிரதானியாவை

பொறுத்தவரை ஒரு ஐந்து ஆண்டுகள் அந்த

நாட்டிலே அகதியாக இருந்தால் பெர்மனன்ட்

ரெசிடன்ட் என்று சொல்லக்கூடிய பிஆர்

வழங்குவார்கள். அதேபோல 10 ஆண்டுகளிலே அந்த

நாட்டினுடைய குடியுரிமை வழங்குவார்கள்.

ஆனால் இந்த இந்தியாவிலே கடந்த 30

ஆண்டுகளுக்கு மேலாக 84ஆம் ஆண்டுக்கு

பின்பதாக நிறைய பேர் எங்களுடைய தமிழ்

மக்கள் இந்தியாவிலே தஞ்சம் கூறினார்கள்.

அவர்கள் 30 35 ஆண்டுகள் கடந்தும் இன்னமும்

அகதிகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆக

யாரோ யாரோ எல்லாம் அநிய நாடுகள் எல்லாம்

இந்த தமிழர்களுக்குரிய உரிமையையும்

அவர்களுக்கான அகதி அந்தஸ்தை நீக்கி

அவர்களை தங்களுடைய குடிமக்களாக

அரவணைத்துக் கொள்கிற போது நாங்கள்

முழுவதுமாக நம்பி இருந்த இந்தியா எங்களை

அகதிகளாக வைத்து பார்க்கிறது 30 ஆண்டுகள்

கடந்தும் அகதி முகாம்களிலே அடிப்படை

உரிமைகள் இல்லாமல் இருக்கக்கூடிய ஒரு

நிலைமை இருக்கிறது. நிச்சயமாக ஒரு

விடயத்தை நாங்கள் குறிப்பிட்டே ஆக

வேண்டும். இந்த இலங்கையில் இந்திய

தமிழர்கள் இருக்கிறார்கள். இப்போது

அவர்களுக்கு குடியுரிமை இருக்கிறது. ஒரு

காலத்திலே அவர்களுடைய குடியுரிமை

கேள்விக்கு உட்படுத்தப்பட்டபோது இதே

ஈழத்ததமிழர் சமூகம் அவர்களுக்காக

பின்னின்றது. தந்தை செல்வநாயகம் அவர்கள்

எதிர்த்து நின்றார். அந்த தமிழர்களுக்காக

பேசினார். அவர்களும் எங்களுடைய மக்கள்

என்று பேசினார். ஆனால் இந்தியா அப்படியாக

பேசுவதற்கான வாய்ப்பையே

நிராகரித்திருக்கிறது. இப்படி

இருக்கக்கூடிய சூழலில் அன்பான தமிழக

உங்களிடம் விரயமாக வேண்டுகின்ற விடயம்.

உங்களைப் போலவே நாங்களும் இருக்கிறோம்.

உங்களை போல உங்களை மீது நாங்கள் பற்றுத்தி

கொண்டிருக்கிறோம். உங்களை நாங்கள்

நேசிக்கிறோம். உங்களின் மீது மிகுந்த

அன்பு செலுத்துகிறோம். நீங்கள் எங்களுடைய

உணர்வுகளில் கலந்து எங்களுடைய தொப்புள்

கொடி உறவுகளாக நாங்கள் உங்களை

பார்க்கிறோம். இந்தியா எங்களுடைய தந்தையர்

தேசம் என்று சொல்லி நாங்கள் அடிக்கடி

சொல்லி கொள்வோம். அப்பா என்று அழைத்து ஒரு

பிள்ளையை தள்ளிவிட்டு நீ மாற்றான் பிள்ளை

என்று சொல்வதுதான் நியாயமாக இருக்கிறதா

இந்தியாவுக்கு என்ற ஒரு கேள்வி இருந்து

கொண்டிருக்கிறது. ஈழ தமிழர்கள் இன்று ஒரு

நாள் இந்தியா எங்களுடைய விவகாரத்தில்

தலையிடும் எங்களுக்காக ஒரு தீர்வை பெற்று

தரும் நாங்கள் சுதந்திரமாகவும் நிம்மதியான

ஒரு வாழ்க்கையை வாழ வழி அமைத்து தரும்

என்று சொல்லி எதிர்பார்ப்போடுதான்

இருந்தார்கள். ஆனால், இப்போது அந்த நிலைமை

கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறது.

இந்த தீர்வு மிகப்பரிய அதிர்வலைகளையும்,

மிகப்பெரிய மாற்றங்களையும் உண்டு பண்ணும்

என்பதை மறந்து விடாதீர்கள். ஆக அன்பான

சொந்தங்களே எங்களுடைய தமிழ்நாட்டு

சொந்தங்கள் எங்களுக்காக பேசுகிறார்கள்.

அவர்கள் எங்களுடைய வரலாறுகளை

கடத்துகிறார்கள். எங்களுடைய கருத்துக்களை

எங்களுடைய கதைகளை பேசுகிறார்கள் நினைவுகளை

பகிர்ந்து கொள்கிறார்கள். நாங்கள் அவர்களை

குற்றம் சொல்லவில்லை. ஒரு ஒன்றிய நாடாக

ஒருமித்த நாடாக இந்தியாவிடம் இதனை

வலியுறுத்துங்கள் அன்பான உறவுகளே ஈழ

தமிழர்கள் நம்முடைய சொந்தங்கள் நம்முடைய

மக்கள் இந்த நிலைப்பாட்டை அவர்களுக்கு

தெளிவுபடுத்துங்கள். அவர்கள் நிச்சயமாக

இந்தியா எங்களுக்கு என்ன செய்தது என்ற

கேள்வியை நாங்கள் மீண்டும் மீண்டும்

கேட்கிறோம். குறிப்பாக இந்த

இளத்தமிழர்களுடைய போராட்ட வரலாற்றை

பொறுத்தவரை அன்றைய காலகட்டத்திலே

இந்தியாவில் இருந்து பயிற்சி பெற்று வந்த

போராளிகளினுடைய மொத்த எண்ணிக்கை 40,000ஆக

இருந்தது. அந்த நேரத்தில்

ஸ்ரீலங்காவினுடைய ராணுவ எண்ணிக்கை வெறும்

9,000ஆக இருந்தது. அந்த நேரத்தில்

நினைத்திருந்தால் தமிழ் தரப்புகள் எந்த

வகையான போராட்டங்களை எந்த வகையான

நகர்வுகளை மேற்கொண்டிருப்பார்கள் என்று

சிந்தித்து பாருங்கள். ஆனால் இந்தியா

ஒற்றுமைக்கு கொஞ்சம் விளைவிக்க முடியாது

என்ற அடிப்படையில் அவர்களை கட்டுப்படுத்தி

வைத்திருந்தது. அதேபோல பிரட் என்று

சொல்லக்கூடிய அமைப்புக்கு

வந்திருக்கக்கூடிய அந்த காலப்பகுதியிலே

ஆயுதம் ஏakே47 என்று சொல்லக்கூடிய

ஆயுதங்கள் வந்தது. அதனை பறைத்துக்

கொண்டதுமே இந்தியா. இப்படியாக நிறைய

சம்பவங்களை செய்தது. ஒற்றுமையாக இருந்து

அந்த 40,000 போராளிகளை பிளவுபடுத்தி

அவர்களுக்குள் ஒருவருக்குள் ஒருவர்

சண்டையிட்டு ஒருவர் ஒருவர் தங்களுடைய

இனத்தினுடைய கூடாரை காம்புகளாக அவர்களை

மாற்றிய பெருமை இந்தியாவை சார்ந்ததாக

இருக்கிறது. ஆகவேதான் இந்த விவகாரத்திலே

நாங்கள் தொடர்ச்சியான அதிர்வனைகளை

ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. வேந்த

புண்ணிலே வேல் பாற்றுவது போலவே இந்தியா

நடந்து கொண்டே இருக்கிறது. இந்தியா ஈழ

தமிழர்களுடைய சுய நிர்ணயத்தை மறக்கிறது.

ஈழ தமிழர்களுக்கு

இழைக்கப்பட்டிருக்கக்கூடிய இனப்படுகொலையை

நிராகரிக்கிறது. உலக நாடுகள் எல்லாம்

இலங்கையிலே இனப்படுகொலை இடம்பெற்றது என்று

சொல்லுகிற போது இந்தியா அது தொடர்பாக வாயை

துறக்கவில்லை. யாரோ யாரோ என்று

சொல்லக்கூடியவர்கள் எல்லாம் எங்களுக்காக

பரிந்து பேசுகிற போது எங்களுடைய உணர்வோடு

தொடர்புபட்டு எங்களுடைய உறவுகளாக

இருக்கக்கூடிய இந்தியா இந்த விவகாரத்தில்

இப்படியான ஒரு நிலைப்பாட்டையில் இருப்பது

எந்த வகையில் நியாயம் என்பதுதான் ஒவ்வொரு

ஈழ தமிழனின் கேள்வியுமாக இருக்கிறது.

குறிப்பாக சொல்லிக்கொள்ள வேண்டுமாக

இருந்தால் இந்த

விவகாரத்திலே தமிழ்நாட்டு தலைவர்கள்

தங்களுடைய எதிர்ப்புகளையும்

கருத்துக்களையும் பதிவு

செய்திருக்கிறார்கள். அந்த வகையில்

நாங்கள் எப்போதுமே இந்த தமிழ்நாட்டு

தமிழர்களை நாங்கள் குற்றம் சாட்டியதில்லை.

அவர்கள் எங்களுக்காகவே தங்களுடைய

கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள்.

ஈழத்தமிழர்களுடைய சுயநிர்மை

உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் 21க்கும்

அதிகமான தமிழ்நாட்டு தலைவர்கள்

தங்களினுடைய உயிர்களை தியாகம்

செய்திருக்கிறார்கள். அவர்களை நாங்கள்

ஒருபோதும் மறந்து விட மாட்டோம். அவர்கள்

எங்களுடைய நினைவுகளில் கலந்தவர்கள். ஆனால்

இந்தியா என்று ஒருமித்த நாடு என்று வருகிற

போது இந்தியா எங்களுக்காக செய்கின்றது

விடயங்களை பற்றிதான் நாங்கள்

பேசுகின்றோம். எங்களினுடைய உரிமைகளை

பறைக்கிறது எங்களுடைய இறப்பை

கேள்விக்குள்ளாக்குகிறது. மீண்டும்

மீண்டும் இப்படியான சம்பவங்களை இடம்

பெறுகிறது. குறிப்பாக இளத்தமிழனே ஒரு

சோகத்தின் வடுக்களிலே தாங்கி தங்களுடைய

இழப்புகளை பேசி கொண்டிருக்கக்கூடிய

காலப்பகுதியில் இலங்கைக்கான இந்திய

தூதுவர் சந்தோஷ் ஜியா கென்றிக்கு சென்று

அங்கே இருக்கக்கூடிய மகாநாயக தேர்களை

சந்தித்து அவர்களுக்கு தன்னை அவர்களிடம்

அரசு தன்னுடைய எதிர்காலத்திற்காக தன்னுடைய

நாட்டினுடைய எதிர்காலத்திற்காக அவர்களிடம்

ஆசி பெற்று வந்ததாக செய்தி

வெளியிடுகிறார்கள். ஆக ஒரு பக்கமாக

ஈழத்ததமிழ் மக்கள் தங்களுடைய உறவுகளை

தொலைத்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக

வீதிகளில் காத்திருக்கிறார்கள்.

கொல்லப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி ஒரு

பக்கமாக இருக்கிறார்கள். ஆனால் இந்த

விவகாரத்தில் தனக்கு ஏதும் சம்பந்தம்

இல்லை என்பது போல இந்தியா நகர்ந்து

கொண்டிருக்கிறது. இந்தியா இந்த

விவகாரத்தில் தலையிடாமல் ஒரு பக்கமாக

இருந்தால் கூட போதும். ஆனால் மீண்டும்

மீண்டும் ஈழ தமிழர்களுடைய மனதில்

வெஞ்சினத்தை பாற்றி வெந்த புண்ணிலே வேலை

பாற்றுவது போன்ற நகர்வுகளை எப்படி

ஏற்றுக்கொள்வது என்ற ஒரு கேள்வி இருந்து

கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக இந்த

விவகாரத்திலே திமுகாவினுடைய தலைவர் முக

ஸ்டாலின் ஒரு அதிர்விலைகளை வெளிப்படுத்தி

இருந்தார். அதேபோல இன்னும் சொல்லக்கொள்ள

வேண்டுமாக இருந்தால் அன்புமணி ராமதாஸ்

இதனை கண்டித்திருக்கிறார். இப்படிக்காக

சில கருத்துக்கள் இப்போது வந்து

கொண்டிருக்கிறது. அதே நேரத்தில்

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பாஜாகா

தலைவர் அண்ணாமலை இந்த தீர்ப்பை வரவேற்றி

இருப்பதாக சோதி இருக்கிறார்கள்.

இந்தியாவினுடைய சட்டங்களை மதிக்க வேண்டும்

என்று சொல்லியும் வெளிநாட்டவர்களுக்கு

குடியுரிமை வழங்குவது தொடர்பான சட்டங்களை

கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லியும்

அவர் சொல்லியிருக்கிறார். இந்த விவகாரம்

எந்த அளவுக்கு பாரதரமான நிலைமை

ஏற்படுத்துகிறது என்று பாருங்கள். ஒரு

தமிழனாக தமிழனுடைய உணர்வை புரிந்து கொள்ள

முடியாத நிலையில் எங்களுடைய தமிழர்கள்

இருந்து கொண்டிருக்கிறார்களா என்ற

கேள்வியையும் நான் இந்த நேரத்தில்

முன்வைத்து விடுகிறேன். அதே நேரம் நான்

உங்களோடு இன்னும் சில விடயங்களையும்

பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வழக்கு

துருவான செய்தி

வெளியிடப்பட்டிருக்கக்கூடிய ஒரு செய்தி

தளத்திலே சில தமிழ்நாட்டு உறவுகள் இப்படி

கருத்துக்களை இட்டிருந்தார்கள். இதனை

வாசிக்கின்ற போது எங்களுடைய மனம் எந்த

அளவுக்கு வெந்திருக்கும் என்று சொல்லி

நீங்கள் ஊகித்து கொள்ளுங்கள். அதாவது இந்த

சில மேற்கொள் காட்டக்கூடிய கருத்துக்களை

நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அப்போ இதுக்கு அகதிகள் முகாம் கட்டி

இலங்கை அகதிகளை தங்க வைத்திருக்கிறீர்கள்.

அடிச்சு துரத்த வேண்டியதுதானே. ஒருவேளை

இங்கே அகதிகள் முகாம் இருப்பது இந்த

நீதிபதிகளுக்கு தெரியாதா? அடுத்தது

சம்மட்டி வழக்கி பதிவு செய்யும்போது இந்த

மாதிரியான தீர்ப்பை உடனே வழங்கி விட

வேண்டும். இன்னும் ஒரு கருத்து

இந்தியாவில் இலங்கை குடிமகன் தங்க

சட்டபூர்வ உரிமை இல்லை. சட்டபூர்வ விதி

அதிகாரம் இல்லாத கோரிக்கை உச்ச

நீதிமன்றத்தில் வழக்கறிஞன் வனுவாக தாக்கல்

செய்வது சட்ட விரோதம். நீதிபதி கருத்தும்

தீர்வும் சரியானது அப்படிங்கற கருத்து.

அதேபோல திருட்டு ரயிலே வந்த வினைதான்

இலங்கை அகதிகள் அனுபவிக்கிறார்கள்.

மீண்டும் சொல்கிறேன். திருட்டு ரயிலேறி

வந்த வினைதான் இலங்கை அகதிகள் மீண்டும்

அனுபவிக்கிறார்கள். இப்போதாவது நீதிபதிகள்

உணர்ந்தார்களே இதை போல தட்டி வைத்து கொள்ள

வேண்டும் அவர்களை அப்படியும்

கருத்துக்கள். ஆனால் சில கருத்துக்கள்

வந்திருக்கிறது. கேள்விகள் கேட்கும் உரிமை

இந்த நீதிமன்றத்திற்கு இருக்கும் என்று

சொன்னால் இனப்படுகலக்கு இந்திய ராணுவத்தை

அனுப்பியது சரியா? ஒதுங்கி இருந்தால்

அவர்கள் அங்கேயே இருந்திருப்பார்கள் இந்த

விடயத்தை நாங்கள் ஒரு முக்கியமான விடயமாக

பார்க்கலாம். கனம் நீதிபதி அவர்களே

ஏற்கனவே நமது சத்திரத்தில் பல

டோகங்கியாக்கள் இருக்கிறார்கள். அவர்களை

என்ன செய்ய போகிறீர்கள் என்று சொல்லி ஒரு

கேள்வி இருக்கிறது. சில கருத்துக்களைதான்

நான் உங்களோடு பகிர்ந்து

கொண்டிருக்கிறேன். அதாவது எங்களுடைய

விவகாரத்திலே நீங்கள் தலையிடாமல்

இருந்திருந்தால் உங்களுடைய அமைதிப்படை

என்ற போர்டையில் அட்டூடிய படை இலங்கைக்கு

வந்து வடக்கு கிழக்கிலே எங்களுடைய மக்களை

இருப்பை அவர்களின் மீது துப்பாக்கி

சூடுகளை அவர்களுடைய இருப்பின் மீதான ஆயுத

பிரயோகத்தை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால்

எங்களுடைய மக்கள் எங்களுடைய நாட்டில் ஏதோ

ஒன்று செய்து கொண்டிருந்திருப்பார்கள்.

எங்களுடைய மக்களுக்கான போராட்டம்

அவர்களுக்கானதாக இருந்திருக்கும். நீங்கள்

ஆயுதம் கொடுத்து படையினரை அனுப்பி 2009லே

முள்ளிவாய்க்காலிலே அந்த பேரவலத்தை

நிகழ்த்தாமல் இருந்திருந்தால் எங்களுடைய

மக்கள் உங்களிடம் வந்து அகதிகளாக

இருந்திருக்க மாட்டார்கள். இந்த நிலைக்கு

அவர்கள் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள்.

அவர்கள் தங்களுடைய சுய நிர்ணய ஆட்சியை

நிரூபித்திருப்பார்கள். நான் ஒரே ஒரு

விடயத்தை இந்த நேரத்தில்

ஞாபகப்படுத்திவிட்டு வருகிறேன். அதாவது

2009க்கு முற்பட்ட காலப்பகுதியிலே

வடக்கிலே குறிப்பாக இந்த புதுக்குடியி

இருப்பு வந்திரி பிராந்தியத்திலே ஒரு

யாசகம் பெறுகின்ற நபரை கூட நீங்கள்

அடையாளம் காட்ட முடியாது. அந்த அளவுக்கு

எங்களுடைய நிலமும் எங்களுடைய மக்களும்

எங்களை காப்பாற்றிக் கொண்டவர்களும்

எங்களுடைய காவலர்களாக இருந்தவர்களும்

இருந்திருந்தார்கள். இந்த தேசம்

தன்னிறைவான ஒரு தேசமாக எங்களுடைய தேசம்

இருந்தது. நாங்கள் யாருக்கு இடமும்

சோற்றுக்காக பிச்சை எடுக்கவில்லை.

அரிசிதாரங்கள் பரப்பு தாருங்கள் என்று

சொல்லி வீதிக்கு செல்லவில்லை. நாங்கள்

நிறைவானவர்களாக இருந்தோம். ஆனால் அந்த

அத்தனை விடயங்களையும் மாற்றியதில்

இந்தியாவுக்கு மிகப்பெரிய பங்கு

இருக்கிறது. நீங்கள் செய்த இந்த வினைகளின்

பாரதூரங்களை உணர்ந்து என்றாலும் எங்களுடைய

மக்களினுடைய இருப்பின் மீதான கேள்விக்கு

உட்படுத்தலை தொடர்ந்து தவிர்த்து

விடுங்கள். இது ஒரு அன்பான வினயமான

வேண்டுகோள். மீண்டும் மீண்டும் சொல்லிக்

கொடுக்கிறேன். எங்களுடைய தமிழ்நாட்டு

உறவுகளின் மீது எங்களுக்கு மிகப்பெரிய

மதிப்பு இருக்கிறது. உங்களிடம் அன்பான

வேண்டுகோள். எங்களுடைய ஈழத் தமிழ்

மக்களினுடைய அந்த இறப்புக்காக உங்களுடைய

பிராந்திய ஒன்றிய அரசுகளை

வலியுறுத்துங்கள். அன்பான உறவுகளே நாளை

மற்றுமொரு இன்றைய அதிர்வினோடாக உங்கள்

அனைவரையும் சந்திக்கிறேன் அதுவரை வணக்கம்

https://tamilwin.com/

நன்றி: @பெருமாள்

################# #######################

animiertes-lesen-smilies-bild-0013.gif இந்தியாவை நம்பி ஏமாறும்... @Kandiah57 அண்ணை போன்றவர்கள், நேரம் ஒதுக்கி இந்தக் கட்டுரையை வாசிக்க பரிந்துரை செய்கின்றேன். animiertes-lesen-smilies-bild-0018.gif 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் இடமில்லை?சீமான் கடும் கண்டனம்

Vhg மே 21, 2025

1000510558.jpg

ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வாழும் ஈழத்தமிழர்கள், தங்களுக்கு சொந்தமாக குடியுரிமை வழங்க உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். குறித்த மனு மீதான விசாரணையின்போது பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டன.

எனினும் அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன். அத்துடன் இந்திய நாட்டில் குடியுரிமை கேட்க உங்களுக்கு இங்கே என்ன உரிமை இருக்கிறது?’ வேறு நாட்டிற்கு செல்லுங்கள் என உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தன்னை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ” ஈழத்தமிழ் மக்களின் தொப்புள்கொடி உறவுகளான 10 கோடி தமிழர்கள் நாங்கள் வாழ்கின்ற நிலம் தான் தமிழ்நாடு எனவும், இது இந்திய ஒன்றியத்தில் இருக்கிறது எனவும், இதைவிட என்ன உரிமை அவர்களுக்கு வேண்டும்” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் அதிக அளவு வரி செலுத்தும் மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு ஆகும். அங்கு வாழும் நாங்கள் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டு தான் உள்ளோம். நாங்கள் செலுத்தும் வரிப்பணம் மூலம் என் மொழி புரியாத என் இனமல்லாத யார் யாரோ உரிமை பெற்று இந்த நாட்டில் வாழும்போது எங்கள் தொப்புள்கொடி ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு அந்த உரிமை இல்லையா? எனவும், சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் சீனாவின் ஒரு பகுதியில் இருந்து வந்த திபெத்தியர்களுக்கு இந்தியாவில் வாழ்வதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் இந்திய நாட்டில் ஈழத்தமிழர்கள் குடியுரிமை கேட்கும்போது தடுப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு மட்டுமின்றி இந்த நாட்டில் வாழ்ந்து வரும் அத்தனை மக்களுக்கும் குடியுரிமை வழங்காவிட்டாலும், கல்வி, விளையாட்டு அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனித்திறனை வெளிக்காட்ட உதவும் வகையில் இரட்டை குடியுரிமை அல்லது தற்காலிக குடியுரிமை என்று ஏதாவது ஒன்றை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் கோடிக்கணக்கான மக்களின் இறுதி நம்பிக்கையாய் உள்ள இந்திய உச்சநீதிமன்றம் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்ற தனது தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் எனவும்,இரட்டை குடியுரிமை வழங்க அரசிற்கு உத்தரவிட்ட வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

https://www.battinatham.com/2025/05/blog-post_655.html

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழரை பொறுத்தவரை இந்திய அரசின் பார்வை ராஜீவுக் மறைவுக்கு முன், ராஜீவ் மறைவுக்கு பின் என்றும் வேறுபட்ட பார்வைகள்.

இந்திய அரசில் ஈழத்தமிழர் எந்த விடயத்திலும், வெளியில் சொல்லாவிட்டாலும், தேசிய பாதுகாப்பு கோணம் இருக்கிறது எந்த முடிவுகளிலும், தனிநபருக்கோ, குழுவுக்கோ.

(எங்கள் தேசிய தலைமை ஒன்றுக்கு அப்படி ஒன்று நடந்து இருந்தால் ...? மற்றவர்களின் நிலையில் இருந்தும் அணுகுமுறையை சிந்திக்க வேண்டும்.)

இந்த வழக்கு இந்திய அரசின் முடிவுக்கு எதிராக தானே.

இந்திய அரச சார்பில் என்ன சத்திய கடுதாசி (affidavit) கொடுக்கப்பட்டதோ தெரியாது. (அது பொதுக எந்த அரசின் உரிமையும், வெளியில் சொல்லத் தேவை இல்லை, குறிப்பாக இன்ஹியா உச்ச நீதி மன்றத்தில்) . அதுடன் இவரின் பின்னணியும்

இந்த , அதட்டல், பரிகசிக்கும் தொனி அரசு கொடுத்த சத்திய கடுதாசியால் வந்ததாக இருக்கலாம்

அனால், சட்டங்களின் பிரயோகம் சரியாக இருக்கும், (உச்ச) நீதிமன்றம் என்பதால்.

இதில் வருத்தம் தான், இங்கு பலர் தனிமனித வழக்கின் முடிவை, ஈழத்தமிழர் தேச நலனுடன் ஒன்றாக்குவது., இது சரி அல்ல.

மேற்கு நாடுகளும், தனிமனித ஈழத்தமிழர் அடைகலத்தை நிராகரிக்கின்றன,

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

சரி 5000 கூட என்றால் 2500£.

இந்தியாவில் இருப்பது 20,000 குடும்பங்கள்.

அதில் அரைவாசி திரும்பி வந்து, அவர்களை நாட்டில் நிலை நிறுத்த தலா £2500 கொடுத்தால் - மொத்த செலவு

£25 000 000.

இதை உலகளாவிய தமிழ் அமைப்புகள், மாணவர் மன்றங்கள், தொழிலதிபர்கள், கோவில்கள் ஒரு வருடத்தில் திரட்ட முடியும்.

சரியான செயன்முறை இருப்பின், அகதி அமைப்புகள், மேற்குநாட்டு மீள்குடியேற்ற அமைச்சுகளை கூட அணுகலாம்.

தனியே காசாக கொடுக்காமல் - கல்வி அல்லது தொழில் முயற்சி அல்லது ஒரு தொழில் பழக எனும் வகையில் கொடுக்கலாம்.

IOM என்ற அமைப்பு செய்வது போல.

பெரிய எடுப்பில் முடியாவிட்டால் - புலம்பெயர் ஊர் ஒன்றியங்கள் தமது ஊரில் இருந்து இப்படி போனவர்களையாவது மீள் அழைக்க முயலலாம்.

இஸ்ரேல் ஒரு தேசமாக உருவாக முன்னர், கிபுட்ஸ் எனும் பண்ணைகளை உருவாக்கி, அங்கே யூதர்கள் பல நாடுகளில் இருந்தும் மீள் குடியேறினார்கள். இந்த நிலங்கள் அரபிகளிடம் இருந்து விலைக்கு வாங்கப்பட்டன. இந்த விலையை “நீலப்பெட்டிகள்” என்ற மக்கள் நிதிசேகரிப்பின் மூலமும் ஏனைய வழிகளிலும் ஒரு இனமாக அவர்களால் திரட்ட முடியுமாய் இருந்தது.

தற்போது ஒரு மாணவரது (பல்கலைகழக) உயர் கல்வி செலவு மாதம் 25 ஆயிரத்தை தாண்டி விட்டது.அப்படி இருக்கையில் எப்படி ஒரு குடும்பத்திற்கு நீங்கள் சொல்லும் தொகை போதுமானதாக இருக்கும் என்று சொல்வ வாறீயள்..எல்லா நாடுகலும் உள்ளள ஊர் ஒன்றியங்கள் மன்றும் மன்றங்கள் ஒழுங்காக செயல்படுகின்றனவா...சுருக்கமாக சொல்லப் போனால் தாரள மனம் கொண்டவர்களால் கூட அவர்களுக்கு என்று ஒரு குடும்பம் மற்றும் இதர வாழ்க்கை செலவுகளோடு இவ்வாறன பொறுப்புக்களையும் எடுத்து செய்வது மிக மிக கடினம்.சொல்வது மிக இலகு கோசான்..சாத்தியப்படுத்துவது கடினம்.இது எழுத வேணும் என்பதற்காக எழுதப்படுபவையும் அல்ல.அல்வுது ஊர் நிலமைகளை சும்மா றான்டாமாக எழுதப்படுபவையும் அல்ல..

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விசுகு said:

இவ்வாறான இந்தியாவில் இருந்து உலகெங்கும் மாடு மேய்க்க அலைந்து திரிந்து விசா பெறும்

இது உண்மையானால் ...நீதிபதிகளின் தீர்ப்பில். என்ன பிழை உண்டு ?? இப்படி தீர்ப்புகள் வரக் காரணம் .....இதே மாதிரியான எங்கள் கருத்துகள் தான் உங்கள் இந்த கருத்தின் விளைவுகள் என்ன??? ...குறைந்த பட்சம் ஒரு பத்து இந்தியன். இதை வாசித்து கோபமடைந்து இருப்பார்கள் அதாவது எங்களுக்கு ஆதரவாக. இருந்தவர்கள. எதிரிகள் ஆக்குகிறீர்கள். எனவே இப்படியான கருத்துகள் பிரயோஜனமற்றது தேவையற்றது

எனக்கு உங்கள் மாதிரி உணர்வு கவலை உண்டு ஆனால் இந்தியாவுக்கு ஆதரவு தரவிடினும். எதிர்ப்புகள் தெரிவிக்க விரும்பவில்லை ஏனென்றால் அது பிரயோஜனம் அற்றது நன்மைகள் தரமாட்டாது மாறாக தீமைகள் தரும்” அவர்கள் 150 கோடி நாங்கள் வெறும்

1/4 கோடி மட்டுமே நன்றி வணக்கம்… 🙏🙏🙏

8 hours ago, goshan_che said:

இங்கே பலர் நீதிபதியை திட்டுவது எய்தவன் இருக்க அம்பை நோகும் செயல்.

நீதிபதியின் வார்த்தை பிரயோகம் தவறானது ஆனால் தீர்ப்பல்ல.

  1. வழக்கு போட்டவர் இந்திய சட்டப்படி பயங்கரவாதிகளுக்கு துணையானவர். அதற்காக சிறையிடப்பட்டவர். இப்படியானவர்களை மேற்கில் இருந்து கூட நாடு கடத்துவர் (1951 அகதிகள் சாசனம் இவர்களுக்கு செல்லாது, ஆனால் ஐரோப்பிய மனித உரிமை சாசனம் செல்லும்).

  2. இந்திய CAB சட்டம் மிக தெளிவாக வெளிநாட்டவர் ஆகினும், யாருக்கு குடி உரிமை வழங்காலாம் என சொல்கிறது. அதில் இலங்க தமிழர் இல்லை. அண்டை நாடுகளில் இருக்கும் முஸ்லிம்களும் இல்லை. இதை இந்திய நாடாளுமன்றம் மிக தூர நோக்குடன், இந்தியாவை சூழ உள்ள ஆப்கானிஸ்தான், பங்களதேஷ், பாகிஸ்தான் நாடுகளில் இருக்கும் இந்துக்கள், சீக்கியர், ஜைனர் போன்றோர் மத ஒதுக்க்கலுக்கு உள்ளாகும் போது அனுமதிக்கலாம் என்றே சட்டம் ஆக்கியுள்ளது (இதுவும் இன்னுமொரு ஆர் எஸ் எஸ் கொள்கை).

    ஆகவே இந்த சட்டத்தைத்தான் நீதிபதி நடைமுறைபடுத்தி உள்ளார்.

  3. இதற்கு ஒரே வழிதான் உள்ளது. தமிழ்நாட்டில் - திமுக அல்லது அதிமுக வில் மத்திய அரசு தங்கி இருக்கும் ஒரு நிலை மீள வரும் போது, இந்த சட்டத்தில் 2009 ற்கு முன் பதிந்த இலங்கை அகதிகளையும் சேர்க்க வேண்டும் என்பதை ஆட்சிக்கு ஆதரவு தர ஒரு நிபந்தனையாக முன்வைக்கலாம். அதற்கு முதல்படியாக நாம் இவ்விரு திராவிட கட்சிகளையும் இப்போ சீண்டாமல் இருக்க வேண்டும்.

    நடக்கிற காரியாமா…

அருமையான பயன்படும் கருத்துகள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய சட்டத்தை பார்க்கும்போது, நீண்டகாலத்தில் சரி என்று வரும்.

இந்தியாவில் ஈழத்தமிழர் அகதியாக குடியேறி குடியுரிமை கோரலாம் என்றால், இப்பொது இருப்பதிலும் பார்க்க எம் சனத்தொகை குறைந்து இருக்கும். அத்துடன் சிங்களம் எம் சனஹோக்கையை குறைக்க எத்தனிப்பதும்.

(1983 இல் பிரித்தானிய open visa கொடுத்த போது, சிங்களம் உள்ளுக்குள் அரேவேற்றது.1990 களில் சிங்களம் பார்த்தும் பாராமல், காசும் வருகிறது முகவர்களால் என்று, உண்மையில் திறந்த்து விட்டது. சனத்தொகை குறைப்புக்கு.)

ஆ னல் , நாங்கள் மலையகத் தமிழரை (அந்த நேரத்தில்) வேறுபடுத்தி கொண்டு, இந்தியா அவர்களை ஏற்றுக்கொண்டது பிழை என்கிறோம். அதாவது சனத்தொகையாக தேவை , எமது நலனுக்கு எதிராகவும் இருப்பதால். அனால் ஈழத்தமிழருக்கு வரும் போது இந்தியா ஏற்கவேண்டும் என்கிறோம்.

இந்திய சட்டத்தை வெளியில் பார்க்கும் போது பாகுபாடு தன்மை இருப்பதாக தோன்றினாலும் , அதன் நோக்கம் நன்மைக்கே, ஆழ்ந்து (வரலாற்றுடன்) பார்க்கும் போது அப்படி இல்லை.

(இது ஏற்கனவே சென்றவர்களை பாதிக்கிறது என்பது உண்மை)

இந்தியாவுடன் நில எல்லையை கொண்ட நடுகல் முஸ்லிம் நாடுகள்.

திபெத் பௌத்தம் (மகாஞன பௌத்தத்தில் ஒர வடிவமான வஜ்ராயண பௌத்தம், ஆனால் அதில் தேரவாத அம்சங்களும் இருக்கிறது. )

திபெத்தில் சீன வெளிக்கிட விடாது. அத்துடன், சீன திபெத் இல் அதனோடு இணக்கங்க கூடிய லாமா என்றால் பௌத்தத்துக்கு உண்மையில் விருத்தி செய்கிறது.

(ஏனெனில் சீனாவில் ஏனெனில் சீனாவில் கம்யூனிச, அ தாவது cpc ஆட்சிக்கு வந்த போதே சமயம் ( அதாவது பௌத்தம் உட்பட , கிறிஸ்தவமும் சிறுபான்மையாக இருந்தது ) உத்தியோகபூர்வமாக இல்லாமல் செய்யப்பட்டது, அனால், வரலாற்று அடிப்படையில் அது பௌத்தம் , அதாவது ஹான் பௌத்தம். இதுவும் மகாஞன பௌத்தத்தில் ஒர வடிவம. சீன வாழ்கை, அரச தத்துவ அம்ஸங்களான தாவோஸ்ம் (Taoism), கொன்பியூசிநிஸ்ம் (Confucianism) அம்ஸங்கள் உள்ளடக்கியது. சீனாவில் பௌத்தமே மிகப்பெரிய நிறுனமயப்பட்ட சமயம்.)

(மாறாக, சிங்களம் திறந்து விடும், இப்போதும் சிங்களம் இப்போதும் சொல்வது அது தானே. தமிழ்நாடே உங்கள் தாயகம் அங்கு செல்லுங்கள். இது சிங்களத்துக்கு சிறுவயதில் இருந்தே மகாவம்சம் வழியாக ஊட்டப்படுவது).

மியன்மார் முஸ்லீம் இன் வரலாறு - பெங்காலிகள் என்பதில் இருந்து அராக்கன் இராகிய பூர்வீக குடிகள், அதாவது ராக்கின் பிரதேச பூர்வீகம்.

அத்துடன் அந்த பிராந்தியத்தில் 2 முஸ்லீம் நாடுகள்.

பாகிஸ்தான் (UN கோட்பாடே அந்த நேரத்தில் (பாகிஸ்தான்) முஸ்லிகளுக்கு, பெரும்பான்மை இந்து நிலத்தில் அரசு. இதே கோட்பாடு இஸ்ரேல் க்கும், யூதருக்கு பெரும்பான்மை முஸ்லீம் நிலத்தில் அரசு. சொல்லப்படும் வரலாறை கருத்தில் எடுக்கவில்லை 2 க்கும் UN. இதனால் தான் பாகிஸ்தான், இஸ்ரெல் UN இல் மிகவும் நெருங்கிய காலத்தில் உருவாக்கப்பட்டது. அப்படி வரலாற்றை எடுத்து இருந்தால் UN இந்த 2 அரசுகளையும் உருவாக்கி இருக்க முடியாது. பாகிஸ்தானில் இஸ்லாம் பின்பு வந்தது. இஸ்ரேல் க்கு , விவிலியபடியே Arabs ஆபிரகாமின் முதல் பிள்ளை Ishmael இன் அடிகள், பலஸ்தீனியர் ஒரு அரபி குழுமம், அரசு கொடுக்க முடியாது என்று வந்து இருக்கும். இதை அறிந்தே மேற்கு, தென்னமெரிக்க நாடுகள் (எல்லாமே விவிலிய அடிப்படையில் சமயம்) அந்த நேரத்தில் வரலாற்றை தவிர்த்து, பெரும்பான்மை நிலத்தில், சிறுபான்மை பாதுகாப்புக்கு சிறுபான்மைக்கு அரசு என்ற கோட்பாட்டை வைத்தது. சிலர் இங்கு தெரியாமல் கதைப்பது).

பங்களாதேஷ் 77 இல் சமய சார்பு அற்ற பன்முக தன்மை (secularism) இராணுவ சட்டத்தின் கீழ் யாப்பில் இருந்து நீக்கி, பின் 88 இல் இஸ்லாமை அரச மதம் ஆக்கியது.

அதில் இருந்து முஸ்லீம் அல்லாத (சமய) சிறுபான்மைக்கு - இதுவும் சுலபம் அல்ல - முஸ்லீம் அல்லாத (சமய) சிறுபான்மை என்று நிரூபிக்க வேண்டும். எவ்வளவு கடினம் அகதியாக வரும் போது - அநேகமாக முடியாது.

உ.ம். பாகிஸ்தானில் இருக்கும் மிகவும் சிறிய தமிழ் சமூகம் சைவ சமயத்தை பின்பற்றுபவர்கள்.

முஸ்லீம் என்று விட்டால் - பொருளாதார அகதிகள் மற்றும் தீவிரவாத, புலனைக்கு அபைப்பு ஊடுருவல் சாத்திய கூறுகள். முஸ்லிகளுக்கு முஸ்லீம் நாட்டில் துன்புறுத்தல் (persecution) என்று எவ்வாறு ஏற்றுக்கொள்வது?

இதில் எல்லா பக்கத்தையும் பார்க்க வேண்டும்.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

@பெருமாள்

################# #######################

animiertes-lesen-smilies-bild-0013.gif இந்தியாவை நம்பி ஏமாறும்... @Kandiah57 அண்ணை போன்றவர்கள், நேரம் ஒதுக்கி இந்தக் கட்டுரையை வாசிக்க பரிந்துரை செய்கின்றேன். animiertes-lesen-smilies-bild-0018.gif 🙂

வாசித்தேன். இணைப்புக்கு நன்றி சொன்னது அனைத்தும் உண்மை என்றாலும் ஒரு பிரயோஜனம் இல்லை நானும் உங்களை மாதிரி தான் இந்தியாவை நம்பவில்லை ஆனால் ஆதரவு கொடுக்க விடினும். எதிர்க்க வேண்டாம் அதுவும் பகிங்கரமாக. பொது வெளியில் எதிர்ப்பை பதியக்கூடாது ....ஏனெனில் பிரயோஜனம் அற்றது தீமைகள் அளிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

உங்களுடைய கொள்கை அது,

எனக்கு வேஷம் போடத் தெரியாது. சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம்,

இந்தியாவை காறித் துப்பி விட்டு, போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

உங்களுடைய கொள்கை அது,

எனக்கு வேஷம் போடத் தெரியாது. சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம்,

இந்தியாவை காறித் துப்பி விட்டு, போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

நான் மறிக்கவில்லை நீங்கள் உங்கள் விருப்பம் போல் நடந்து கொள்ளலாம்,முடியும் இப்படி பலர் செய்கிறார்கள் ...என்னுடைய கருத்துகளை மட்டும் எழுதினேன் ..அது பிழை என்றால் அதற்கான வாதங்களை முன் வையுங்கள் .....மேலும் நீங்கள் காறித் துப்புவதால். ..இந்தியாவுக்கு ஏதாவது பாதிப்புகளுண்டா ?? இல்லை இலங்கை தமிழர்களுக்கு ஏதாகினும் நன்மைகள் உண்டா ??,. இல்லை எந்தவித நன்மைகளுமில்லை ஆகவே இந்தியா இலங்கை தமிழருக்கு நன்மைகளை செய்யாமல் இருக்க முடியும் இப்படி நடந்து கொள் என்று இந்தியாவை எப்படி கோர முடியும்????

  • கருத்துக்கள உறவுகள்

அகதிகளுக்கு எதிரான உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கள் மனித மாண்புகளுக்கு முற்றிலும் பொருத்தம் இல்லாதவை - வைகோ

21 MAY, 2025 | 02:10 PM

image

அகதிகளுக்கு எதிரான உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கள் மனித மாண்புகளுக்கு முற்றிலும் பொருத்தம் இல்லாதவை. இப்படிப்பட்ட கருத்துக்களை பயன்படுத்துவதை தவிர்க்க தலைமை நீதிபதி அறிவுறுத்த வேண்டும்.” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “இலங்கை தமிழரான சுபாஷ்கரன் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டு, ராமநாதபுரம் நீதிமன்றம் அவருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்தது. சென்னை உயர் நீதிமன்றம் இவர் தண்டனையை ஏழாண்டு காலமாக 2022-ம் ஆண்டில் குறைத்தது

இவரது தண்டனை காலம் இந்த ஆண்டுடன் முடிவதை முன்னிட்டு, தண்டனைக் காலம் முடிந்தவுடன் இந்தியாவிலேயே தங்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில், அவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், அவர் முறையிட்ட போது, அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளான திபங்கர் தத்தா மற்றும் வினோத் சந்திரன் அமர்வு “உலகம் முழுவதிலும் உள்ள அகதிகளை வரவேற்க இந்தியா தர்ம சத்திரம் அல்ல, இந்தியாவில் தொடர்ந்து தங்கும் உரிமை உங்களுக்கு இல்லை, இலங்கையில் உயிருக்கு ஆபத்து என்றால் வேறு நாட்டுக்குச் சென்று புகலிடம் கோருங்கள்” என்று தெரிவித்துள்ள கருத்து கவலைக்கு உரியதாகும்.

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் சிலரை இந்திய அரசு, இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிட்டபோது, இது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், “இலங்கை தமிழ் அகதிகளை அவர்களின் ஒப்புதல் இல்லாமல் திருப்பி அனுப்பும் அதிகாரம் அரசுக்கு உண்டு என்பது ஏற்கத்தக்கது அல்ல. திரும்பிச் செல்ல விரும்பாத அகதிகளை கட்டாயப் படுத்தி வெளியேற்றக் கூடாது” என ஆணை பிறப்பித்தது. இதன் விளைவாக இலங்கை தமிழர்கள் இங்கு வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கள் அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிற மனித மாண்புகளுக்கு முற்றிலும் பொருத்தம் இல்லாத வார்த்தைகள். நீதிபதிகள் இப்படிப்பட்ட கருத்துக்களை பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுறுத்துமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை கேட்டுக்கொள்கிறேன்” என்று வைகோ கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/215325

  • கருத்துக்கள உறவுகள்

499419994_4193998047591653_8717223246602

  • கருத்துக்கள உறவுகள்

494353635_3127121294110577_5180698627721

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

காறித் துப்புவதால். ..இந்தியாவுக்கு ஏதாவது பாதிப்புகளுண்டா ?? இல்லை இலங்கை தமிழர்களுக்கு ஏதாகினும் நன்மைகள் உண்டா ??,. இல்லை எந்தவித நன்மைகளுமில்லை

முதலில் இந்த காறித் துப்பும் கேவலமான பழக்கம் இலங்கை தமிழர்களிடமோ சிங்கலவர்களிடமோ இல்லை இந்தியர்களின் பழக்கமாகும் இந்திய தமிழ் படங்கள் பார்ப்பதனால் ஈழதமிழர்கள் இது பற்றி பேசுகின்றனர் நல்லகாலமாக அதை பழகவில்லை

ஈழதமிழர்கள் இந்தியாவை திட்டுவதால் இந்தியாவுக்கு ஏதாவது பாதிப்புகளுண்டா - கிடையாது

பாகிஸ்தானை ஆதரிப்பதால் புகழ்வதால் ஈழதமிழர்களுக்கு ஏதாவது நன்மை உண்டா - கிடையாது

இந்தியர்களின் வெறுப்பை மட்டும் பெற்று கொள்ள முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தமாக இந்தியாவில் இருக்கும் ஈழத்தமிழர்களில் தமிழ்நாடு அரசு வழங்கும் குடியிருப்புகளில் இருப்பவர்கள் அரைப்பங்கினர். மிகுதி அரைப்பங்கினர் சொந்த வீடுகளில் அல்லது வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். மொத்தமாக ஒரு இலட்சத்திற்கும் சிறிது குறைவு. இரண்டாவது, மூன்றாவது தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் கணக்கெடுப்பில் சரியாக வரவில்லை என்று நினைக்கின்றேன்.

'அகதி முகாம்' என்ற சொல்லைத் தவிர்த்து, அவற்றை அரசு வழங்கும் குடியிருப்புகள் என்று எழுதுகின்றேன்.

வெளியே வீடுகளில் வசிப்பவர்கள் சுயவிருப்பின் அடிப்படையிலேயே அங்கு தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு பெரும்பாலும் புலம் பெயர்ந்து மேற்குப் பக்கமாகச் சென்ற அவர்களின் உறவுகளிடமிருந்து உதவிகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. பலர் சுயமாக தொழிலும் செய்கின்றனர். இவர்களில் பலர் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் உயர் கல்வி, திருமணம், சில வேலை வாய்ப்புகள் என்று தமிழக மக்களுடன் சிறிது சிறிதாக கலந்து போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

அரச குடியிருப்புகளில் இருப்பவர்களில் பல மாவட்டக்காரர்கள் இருந்தாலும், மன்னார், முல்லைத்தீவு அடங்கலாக வன்னி மற்றும் திருகோணமலைப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அதிகம் என்று நினைக்கின்றேன். இவர்கள் தமிழ்நாட்டு அரசிலேயே முற்று முழுதாக தங்கி இருக்கின்றனர். பிள்ளைகளும் அங்கேயே பிறந்து, அதற்குள்ளேயே வளர்கின்றார்கள். மிகக்குறைவானவர்களே உயர்கல்விக்கு போகின்றார்கள்.

தமிழ்நாட்டில் அரச ஆதரவுடன் தங்கி இருப்பவர்களை புலம்பெயர் தமிழர்களின் உதவிகளுடன் இலங்கையில் மீளக் குடியேற்றி, அவர்களுக்கு நிரந்தரமான வாழ்வாதாரங்களையும் உருவாக்கலாம் என்ற யோசனை இடைக்கிடையே பல குழுமங்களிலும் பகிரப்படுவதுண்டு.

ஆனால் ஏற்கனவே இலங்கையில் நாளாந்த வாழ்வே போராட்டமாக இருக்கும் ஒரு பிரிவு மக்களுக்கு புலம்பெயர் தமிழர்களால் என்ன செய்ய முடிந்தது என்ற கேள்வி இங்கு பொருத்தமானது என்று நினைக்கின்றேன். இந்த மக்களில் ஒரு பகுதியினர் போராளிகள். அவர்கள் தங்களை 'முன்னாள் போராளிகள்' என்று சொல்லக் கூடாது என்று சொல்லியிருக்கின்றார்கள். அவர்கள் தங்களை என்றுமே போராளிகள் என்று சொல்வது மிகச்சரியே.

இந்தப் போராளிகளின் வாழ்க்கைகளை புலம்பெயர் தமிழர்களால், இத்தனை வருடங்கள் ஆன பின்னும், பெரிதாக மாற்ற முடியவில்லை என்பது தான் உண்மை. முக்கியமாக பெண் மற்றும் மாற்றுத் திறனாளிகளாக உள்ள போராளிகள். 'பெண் போராளிகளை நோக்கிய எங்கள் சமூகத்தின் உளச்சிக்கல்...............' என்பது போன்ற தலைப்பில் சிலர் எழுதியும் விட்டார்கள். இதே போன்றே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இன்று ஒற்றைத் தலைமையில், பெரும்பாலும் பெண் தலைமையில், இருக்கும் குடும்பங்கள். பதினாறு வருடங்களில் எவ்வளவை எங்களால் மாற்ற முடிந்தது. இதனாலேயே தமிழ்நாட்டிலிருந்து மக்களை இலங்கையில் மீளக் குடியேற்றுவது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒரு விடயமாக இருக்கின்றது.

ஊர்ச் சங்கங்கள், நலன்புரிச் சங்கள், அமைப்புகள், அன்புநெறிகள், மனிதநேயங்கள், ஐஎம்எச்ஓ,......... என்று நூற்றுக் கணக்கானவை இருக்கின்றன. இந்த அமைப்புகள் உதவிகளும் செய்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் கடலில் விழுந்த துளிகள் போலவே இவை போய்க் கொண்டிருக்கின்றன. கடல் அப்படியே கரித்துக் கொண்டே இருக்கின்றது.

ஒரு அரசுக்கு நிகரான ஒரு அமைப்பு வேண்டும் என்றே நினைக்கின்றேன். அப்படி ஒரு அமைப்பை உருவாக்க முடிந்தால் கூட, அந்த அமைப்பின் முதலாவது கடமையாக, செயற்பாடாக இலங்கையிலேயே இன்றும் இருக்கும் மக்களே அமைவார்கள்.

வேறு சில தகவல்கள்:

தமிழ்நாட்டுக்கு 2009ம் ஆண்டின் பின் தான் எம் மக்கள் போனார்கள் என்றில்லை. பெரும்பாலான எம்மக்கள் 90ம் ஆண்டுகளிலேயேயும், அதற்கு முன்னரும் கூட அங்கே போய் விட்டார்கள். முள்ளிவாய்க்கால் கொடுமையை, அழிப்பை இந்தியா தடுக்காமல் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயற்பட்டது ஈழத்தமிழ் மக்களுக்கு இந்தியா செய்த மன்னிக்க முடியாத துரோகமும், வலியும். ஆனால் ஈழத்தமிழ் மக்கள் அதற்கு பல வருடங்கள் முன்னரேயே தமிழ்நாட்டில் தஞ்சம் அடைய ஆரம்பித்துவிட்டார்கள். இவை இரண்டும் இணைந்தவை அல்ல.

தமிழ்நாட்டு அரச குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்று சொல்லும் நாங்கள் இன்றும் இலங்கையில் எம் மக்கள் பலர் இருக்கும் இடங்களை போய்ப் பார்க்கவேண்டும். ஒரே ஒரு குடிசையில் தான் ஒரு குடும்பம் இருந்தது. அருகே தோண்டிய பள்ளம் தான் கிணறு............... தமிழ்நாட்டுக்கும், அந்த சிறிய குடியிருப்புகளுக்கும், அவர்கள் இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கும் இலவச அரிசிக்கும் என்றென்றும் நன்றி. இவற்றை இன்று அந்த மக்களுக்கு கொடுப்பதற்கு இந்த உலகில் வேறு எவருமே இல்லை.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

ஈழத்தமிழர்களுக்கு இந்தியா இதுவரை என்ன செய்திருக்கிறது என்று கேட்டால் உண்மையில் இதுவரை எதுவுமே செய்யவில்லை என்பதுதான் பதில்.

என்ன சிறியர் இப்படி சொல்லிவிட்டீர்கள்? நாங்களும் எங்கள் பாடுமாக இருந்த எங்களை அகதிகளாக்கி, தன் நாட்டுக்கு வரவழைத்து, இந்த ஆராத்தி எடுத்ததே இந்தியாதான். ஒரு உச்சமன்ற நீதிபதி பாவித்த வார்த்தைப்பிரயோகம்? அந்த மனிதனின் தன்மானத்தை கீறிக்கிழித்துள்ளது. ஆமா, இதை அறியாத இந்தியா தன் மக்கள் பிரச்னையோடு நின்று இருக்கவேண்டும். தன் பிரச்சனையை தீர்க்க முடியாத நாடு, எங்கள் விடுதலையில் ஏன் தலையிட்டது? ஏன் எடுத்ததற்கெல்லாம் இங்கே மூக்கை நீட்டுது? அதற்கு இந்த குஜராத் நீதிபதி பதில் சொல்ல கடமைப்படுள்ளார். நாங்கள் இந்தியாவுக்கு எதிராக கருத்து எழுதுவதற்கு காரணம் என்ன? பாகிஸ்தான் ஆயுதம் தூக்குது, எங்கள் ஆயுதங்களை பிடுங்கியெடுத்தால் பேனாவால் தாக்குவோம். நாங்களும் மனிதர்கள், எங்களுக்கும் உணர்வுகள் உண்டு, நாங்கள் எழுதுகிறோம், பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கியிருப்பதுதானே? எதற்கு மீண்டும் மீண்டும் எங்கள் பிரச்சனையை சிக்கலாக்குகிறார்கள்? தனது பாதுகாப்புக்கு எங்களை பணயம் வைக்கிறார்கள், மற்றைய நாடுகளை எங்களுக்கு உதவ விடாமல் தடுக்கிறார்கள், கனடா எங்களுக்கு அனுதாபம் தெரிவிப்பது, ஆதரவு தருவது இவர்களின் குற்ற உணர்வை தாக்குகிறது. அதுவே அவர் பெயர் குறிப்பிடாமல் வேறு நாடுகளுக்கு செல்லுங்கள் என்கிறார். அதை சொல்வதற்கு இவர் யார்? அப்படி செல்ல முடியுமென்றால் அவர்களே போவார்கள். விழுந்தவனை ஏறி மிதிப்பது எல்லோருக்கும் இலகு. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

மொத்தமாக இந்தியாவில் இருக்கும் ஈழத்தமிழர்களில் தமிழ்நாடு அரசு வழங்கும் குடியிருப்புகளில் இருப்பவர்கள் அரைப்பங்கினர். மிகுதி அரைப்பங்கினர் சொந்த வீடுகளில் அல்லது வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். மொத்தமாக ஒரு இலட்சத்திற்கும் சிறிது குறைவு. இரண்டாவது, மூன்றாவது தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் கணக்கெடுப்பில் சரியாக வரவில்லை என்று நினைக்கின்றேன்.

'அகதி முகாம்' என்ற சொல்லைத் தவிர்த்து, அவற்றை அரசு வழங்கும் குடியிருப்புகள் என்று எழுதுகின்றேன்.

வெளியே வீடுகளில் வசிப்பவர்கள் சுயவிருப்பின் அடிப்படையிலேயே அங்கு தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு பெரும்பாலும் புலம் பெயர்ந்து மேற்குப் பக்கமாகச் சென்ற அவர்களின் உறவுகளிடமிருந்து உதவிகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. பலர் சுயமாக தொழிலும் செய்கின்றனர். இவர்களில் பலர் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் உயர் கல்வி, திருமணம், சில வேலை வாய்ப்புகள் என்று தமிழக மக்களுடன் சிறிது சிறிதாக கலந்து போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

அரச குடியிருப்புகளில் இருப்பவர்களில் பல மாவட்டக்காரர்கள் இருந்தாலும், மன்னார், முல்லைத்தீவு அடங்கலாக வன்னி மற்றும் திருகோணமலைப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அதிகம் என்று நினைக்கின்றேன். இவர்கள் தமிழ்நாட்டு அரசிலேயே முற்று முழுதாக தங்கி இருக்கின்றனர். பிள்ளைகளும் அங்கேயே பிறந்து, அதற்குள்ளேயே வளர்கின்றார்கள். மிகக்குறைவானவர்களே உயர்கல்விக்கு போகின்றார்கள்.

👆 சரியான தரவுகள்

5 hours ago, ரசோதரன் said:

தமிழ்நாட்டில் அரச ஆதரவுடன் தங்கி இருப்பவர்களை புலம்பெயர் தமிழர்களின் உதவிகளுடன் இலங்கையில் மீளக் குடியேற்றி, அவர்களுக்கு நிரந்தரமான வாழ்வாதாரங்களையும் உருவாக்கலாம் என்ற யோசனை இடைக்கிடையே பல குழுமங்களிலும் பகிரப்படுவதுண்டு.

ஆனால் ஏற்கனவே இலங்கையில் நாளாந்த வாழ்வே போராட்டமாக இருக்கும் ஒரு பிரிவு மக்களுக்கு புலம்பெயர் தமிழர்களால் என்ன செய்ய முடிந்தது என்ற கேள்வி இங்கு பொருத்தமானது என்று நினைக்கின்றேன். இந்த மக்களில் ஒரு பகுதியினர் போராளிகள். அவர்கள் தங்களை 'முன்னாள் போராளிகள்' என்று சொல்லக் கூடாது என்று சொல்லியிருக்கின்றார்கள். அவர்கள் தங்களை என்றுமே போராளிகள் என்று சொல்வது மிகச்சரியே.

இந்தப் போராளிகளின் வாழ்க்கைகளை புலம்பெயர் தமிழர்களால், இத்தனை வருடங்கள் ஆன பின்னும், பெரிதாக மாற்ற முடியவில்லை என்பது தான் உண்மை. முக்கியமாக பெண் மற்றும் மாற்றுத் திறனாளிகளாக உள்ள போராளிகள். 'பெண் போராளிகளை நோக்கிய எங்கள் சமூகத்தின் உளச்சிக்கல்...............' என்பது போன்ற தலைப்பில் சிலர் எழுதியும் விட்டார்கள். இதே போன்றே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இன்று ஒற்றைத் தலைமையில், பெரும்பாலும் பெண் தலைமையில், இருக்கும் குடும்பங்கள். பதினாறு வருடங்களில் எவ்வளவை எங்களால் மாற்ற முடிந்தது. இதனாலேயே தமிழ்நாட்டிலிருந்து மக்களை இலங்கையில் மீளக் குடியேற்றுவது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒரு விடயமாக இருக்கின்றது.

👆நியாயமான கேள்வியும், சரியான முடிவும் (conclusion).

5 hours ago, ரசோதரன் said:

ஒரு அரசுக்கு நிகரான ஒரு அமைப்பு வேண்டும் என்றே நினைக்கின்றேன். அப்படி ஒரு அமைப்பை உருவாக்க முடிந்தால் கூட, அந்த அமைப்பின் முதலாவது கடமையாக, செயற்பாடாக இலங்கையிலேயே இன்றும் இருக்கும் மக்களே அமைவார்கள்.

நீங்கள் மேலே சொன்னதிலேயே இதற்கான பதில் உள்ளது. அதாவது ஒரு அரசுக்கு நிகராக செயல்பட முடியாத நிலையில் மட்டும் அல்ல, ஒரு அரச அதிகாரமில்லாத இனம் செயற்படும் அளவில் கூட நாம் இல்லை.

ஆக எனக்கு 2 தெரிவுதான் புலப்படுகிறது.

  1. இதை பற்றி நாம் அலட்டி கொள்ளகூடாது. அந்த மக்கள் சந்ததி சந்ததியாக எந்த உரிமையும் அற்ற ஏதிலிகளாகவே இருப்பது அவர்கள் தலைவிதி என விட்டு விடுவதை தவிர வேறு வழியில்லை.

  2. தமிழ் நாட்டு கட்சிகளை லாபி பண்ணி, CAA யில் இவர்களை சேர்க்க கோரிக்கை வைக்க சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

தமிழ்நாட்டுக்கு 2009ம் ஆண்டின் பின் தான் எம் மக்கள் போனார்கள் என்றில்லை

2009 ற்கு முன்பு போனோரைத்தான் CAA யில் சேர்க்க வேண்டும் என்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரசோதரன் said:

மொத்தமாக இந்தியாவில் இருக்கும் ஈழத்தமிழர்களில் தமிழ்நாடு அரசு வழங்கும் குடியிருப்புகளில் இருப்பவர்கள் அரைப்பங்கினர். மிகுதி அரைப்பங்கினர் சொந்த வீடுகளில் அல்லது வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். மொத்தமாக ஒரு இலட்சத்திற்கும் சிறிது குறைவு. இரண்டாவது, மூன்றாவது தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் கணக்கெடுப்பில் சரியாக வரவில்லை என்று நினைக்கின்றேன்.

'அகதி முகாம்' என்ற சொல்லைத் தவிர்த்து, அவற்றை அரசு வழங்கும் குடியிருப்புகள் என்று எழுதுகின்றேன்.

வெளியே வீடுகளில் வசிப்பவர்கள் சுயவிருப்பின் அடிப்படையிலேயே அங்கு தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு பெரும்பாலும் புலம் பெயர்ந்து மேற்குப் பக்கமாகச் சென்ற அவர்களின் உறவுகளிடமிருந்து உதவிகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. பலர் சுயமாக தொழிலும் செய்கின்றனர். இவர்களில் பலர் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் உயர் கல்வி, திருமணம், சில வேலை வாய்ப்புகள் என்று தமிழக மக்களுடன் சிறிது சிறிதாக கலந்து போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

அரச குடியிருப்புகளில் இருப்பவர்களில் பல மாவட்டக்காரர்கள் இருந்தாலும், மன்னார், முல்லைத்தீவு அடங்கலாக வன்னி மற்றும் திருகோணமலைப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அதிகம் என்று நினைக்கின்றேன். இவர்கள் தமிழ்நாட்டு அரசிலேயே முற்று முழுதாக தங்கி இருக்கின்றனர். பிள்ளைகளும் அங்கேயே பிறந்து, அதற்குள்ளேயே வளர்கின்றார்கள். மிகக்குறைவானவர்களே உயர்கல்விக்கு போகின்றார்கள்.

தமிழ்நாட்டில் அரச ஆதரவுடன் தங்கி இருப்பவர்களை புலம்பெயர் தமிழர்களின் உதவிகளுடன் இலங்கையில் மீளக் குடியேற்றி, அவர்களுக்கு நிரந்தரமான வாழ்வாதாரங்களையும் உருவாக்கலாம் என்ற யோசனை இடைக்கிடையே பல குழுமங்களிலும் பகிரப்படுவதுண்டு.

ஆனால் ஏற்கனவே இலங்கையில் நாளாந்த வாழ்வே போராட்டமாக இருக்கும் ஒரு பிரிவு மக்களுக்கு புலம்பெயர் தமிழர்களால் என்ன செய்ய முடிந்தது என்ற கேள்வி இங்கு பொருத்தமானது என்று நினைக்கின்றேன். இந்த மக்களில் ஒரு பகுதியினர் போராளிகள். அவர்கள் தங்களை 'முன்னாள் போராளிகள்' என்று சொல்லக் கூடாது என்று சொல்லியிருக்கின்றார்கள். அவர்கள் தங்களை என்றுமே போராளிகள் என்று சொல்வது மிகச்சரியே.

இந்தப் போராளிகளின் வாழ்க்கைகளை புலம்பெயர் தமிழர்களால், இத்தனை வருடங்கள் ஆன பின்னும், பெரிதாக மாற்ற முடியவில்லை என்பது தான் உண்மை. முக்கியமாக பெண் மற்றும் மாற்றுத் திறனாளிகளாக உள்ள போராளிகள். 'பெண் போராளிகளை நோக்கிய எங்கள் சமூகத்தின் உளச்சிக்கல்...............' என்பது போன்ற தலைப்பில் சிலர் எழுதியும் விட்டார்கள். இதே போன்றே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இன்று ஒற்றைத் தலைமையில், பெரும்பாலும் பெண் தலைமையில், இருக்கும் குடும்பங்கள். பதினாறு வருடங்களில் எவ்வளவை எங்களால் மாற்ற முடிந்தது. இதனாலேயே தமிழ்நாட்டிலிருந்து மக்களை இலங்கையில் மீளக் குடியேற்றுவது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒரு விடயமாக இருக்கின்றது.

ஊர்ச் சங்கங்கள், நலன்புரிச் சங்கள், அமைப்புகள், அன்புநெறிகள், மனிதநேயங்கள், ஐஎம்எச்ஓ,......... என்று நூற்றுக் கணக்கானவை இருக்கின்றன. இந்த அமைப்புகள் உதவிகளும் செய்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் கடலில் விழுந்த துளிகள் போலவே இவை போய்க் கொண்டிருக்கின்றன. கடல் அப்படியே கரித்துக் கொண்டே இருக்கின்றது.

ஒரு அரசுக்கு நிகரான ஒரு அமைப்பு வேண்டும் என்றே நினைக்கின்றேன். அப்படி ஒரு அமைப்பை உருவாக்க முடிந்தால் கூட, அந்த அமைப்பின் முதலாவது கடமையாக, செயற்பாடாக இலங்கையிலேயே இன்றும் இருக்கும் மக்களே அமைவார்கள்.

வேறு சில தகவல்கள்:

தமிழ்நாட்டுக்கு 2009ம் ஆண்டின் பின் தான் எம் மக்கள் போனார்கள் என்றில்லை. பெரும்பாலான எம்மக்கள் 90ம் ஆண்டுகளிலேயேயும், அதற்கு முன்னரும் கூட அங்கே போய் விட்டார்கள். முள்ளிவாய்க்கால் கொடுமையை, அழிப்பை இந்தியா தடுக்காமல் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயற்பட்டது ஈழத்தமிழ் மக்களுக்கு இந்தியா செய்த மன்னிக்க முடியாத துரோகமும், வலியும். ஆனால் ஈழத்தமிழ் மக்கள் அதற்கு பல வருடங்கள் முன்னரேயே தமிழ்நாட்டில் தஞ்சம் அடைய ஆரம்பித்துவிட்டார்கள். இவை இரண்டும் இணைந்தவை அல்ல.

தமிழ்நாட்டு அரச குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்று சொல்லும் நாங்கள் இன்றும் இலங்கையில் எம் மக்கள் பலர் இருக்கும் இடங்களை போய்ப் பார்க்கவேண்டும். ஒரே ஒரு குடிசையில் தான் ஒரு குடும்பம் இருந்தது. அருகே தோண்டிய பள்ளம் தான் கிணறு............... தமிழ்நாட்டுக்கும், அந்த சிறிய குடியிருப்புகளுக்கும், அவர்கள் இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கும் இலவச அரிசிக்கும் என்றென்றும் நன்றி. இவற்றை இன்று அந்த மக்களுக்கு கொடுப்பதற்கு இந்த உலகில் வேறு எவருமே இல்லை.

இந்தியாவில் முகாமிற்கு வெளியே இருப்பவர்கள் மிக செல்வந்த செழிப்புடன் வாழ்பவர்கள் இவர்கள் வெளிநாட்டு பணத்தில் வசதியாக வாழ்ந்தவர்கள் போர் முடிவுடன் பெரும்பான்மையானோர் வெளிநாடுகளிலும் ஒரு பகுதியினர் இலங்கைலும் இன்னொரு பகுதியினர் இன்றும் அங்கு வாழ்கிறார்கள்.

முகாமில் வாழ்பவர்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கும், பல சமூக பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சமூகமாக இருக்கிறார்கள் இவர்கள் வன்னி மற்றும் மன்னார் பகுதிகளை சார்ந்த மலையக பின் புலம் கொண்ட மக்கள்.

குழந்தைகளின் கல்வி தொடர்பில் சரியான புரிதலில்லாதவர்களாகவும் மதுவினால் ஏற்படும் தாக்கம், குடும்ப வன்முறை என மிகவும் சிரமத்தினை எதிர்கொள்ளும் மக்கள்.

புலம்பெயர் தமிழ் மக்களின் உதவி இவர்களை எட்டுவதில்லை, உடல் உழைப்பு சார்ந்த கூலி வேலைகளை (நானும் அந்த வேலைகளுக்கு செல்வேன் வெளிநாட்டில் இருக்கும் எனது சகோதரன் அனுப்பிய காசைக்கூட பயன்படுத்தவில்லை அது முகாமிற்கு வெளியே இருந்த உறவினரிடம் இருந்தது) செய்பவர்களாக இருக்கிறார்கள், குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகளே அனைத்து பிரச்சினைக்கு அடிப்படையாக இருப்பதால் அதனை பற்றி கதைத்தால் உடல் வலிக்காக (கூலி வேலை செய்வதால்) குடிப்பதாக சாட்டு கூறுவார்கள்.

இவர்களில் சிலர் எமது பகுதிகளில் துப்பரவு தொழிலாளர்களாக இலங்கையில் முன்னர் இருந்துள்ளார்கள் அதனால் அவர்கள் எமது சமூகத்தினரால் நடத்தப்பட்ட விடயங்கள் பற்றி கூறுவார்கள்.

குழந்தைகளுக்கான கல்வி உதவி, மற்றும் கூலித்தொழில் தொடர்ந்து நசுங்கி போகாமால் சுயமுயற்சிகளுக்கு உதவினாலும் ஒரு வட்டம் போல மீண்டும் வந்து ஆரம்ப புள்ளியிலேயே நிற்பார்கள், இந்தியாவில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட மதம் இந்து மத பின்னணி கொண்ட இந்த மக்களின் சுய முயற்சிக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தந்து பெரும் உதவி செய்தார்கள் (அவர்களின் உள்ளூர் செல்வாக்கு மூலம்).

கிடைக்கும் வருமானத்தினை அடுத்த சந்ததியின் எதிர்காலத்திற்காக முதலிடாவிட்டால் அந்த மக்களின் வாழ்க்கை மாறாது.

  • கருத்துக்கள உறவுகள்

“காந்தி தேசமே காவல் இல்லையா

நீதிமன்றமே நியாயம் இல்லையா

பதவியின் சிறைகளில்

பாரத மாதா பரிதவிக்கிறாள்

சுதந்திர தேவி சுயநல மனிதரின்

துணி துவைக்கிறாள்” என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.

மனிதத்துவம் மலிவாக மரணித்துக்கொண்டிருக்கிறது பல நாடுகளில்.

  • கருத்துக்கள உறவுகள்

முகாம்களில் இருப்பார்கள், , உறவினர் முகவருடன் பணத்துக்காக சேர்ந்து, அந்த உறவினர்கள் தாமும் சென்ற உறவுகளை பின் தொடர்ந்து வருவோம், வர இருப்பிப்பதாக ஆசை / உறுதி மொழி காட்டி, (முகாம்களில் இருக்கும் நிலை அறிந்தும்) உறவினர்களாலேயே ஏமாற்றப்பட்டு அனுப்பப்பட்டு சென்றார்கள். அப்படியான சந்தர்ப்பங்களும் இருக்கிறது.

இப்படியாக இந்தியா செல்லவிருந்த, எனது தூரத்து உறவினரால் (அவர் சுத்துமாத்து பேர்வழி) ஒழுங்குபடுத்தப்பட்ட 10-12 பயணங்களை எனது மிககிட்ட உறவும், எனது குடும்பத்தில் உள்ளவர்களும் தடுத்து இருக்கிறார்கள்.

முகாம்களின் நிலையை, அந்த நேரத்தில், எனது கிட்ட உறவு, குடுமபத்துக்கு இருந்த தமிழ்நாட்டில் உள்ள தொடர்பின் வழியாக வாய் வழி அறிந்தே (கொழும்பில் இருந்து கடிதம் வழியாக) எனது கிட்ட உறவினரும், எனது குடும்பத்தில் உள்ளவர்களும் தடுத்தனர். அதில் இந்தியாவை உள்ள தொடர்புகள் வரவேண்டாம் என்று சொல்லவில்லை, அனால் முகாம்களின் நிலைபற்றியும், வருவது உசிதம் இல்லாதது என்ற தொனியும்.

அப்போது அப்டி செல்ல இருந்தவர்கள், பயணத்தை கைவிட்டு, சந்தர்ப்பத்தை இழந்து விட்டமோ என்று மனவருத்தம், மற்றும் எனது கிட்ட உறவினர், குடும்பத்துடன் சற்று கடிவாக இருந்தனர்,

ஆனல், காலம் போக அவர்களுக்கே தெரிந்தது, இலங்கையில் இருந்தது நல்லது என்று.

(இதனால் தூரத்து உறவு எனது கிட்ட உறவினரை, என் குடும்பத்தில் தடுத்தவர்களை தாக்க இருப்பதாகவும் அறிந்து, சில முன்னேற்பாடுகளை செய்து இருந்தோம்)

பொதுவாக செல்லாதவர்கள் எல்லோரும் இப்பொது நல்ல நிலையில் இருக்கிறார்கள், இடம் பெயர்ந்தாலும்.

ஏனெனில், அந்த முகாம்களில் வாழ்க்கை தேக்க நிலை (ஏனெனில், தமிழ் நாட்டில் தேவை இருக்கிறது, அவர்களை கடந்தே இவர்களுக்கு எந்த உதவியும்). ராஜீவ் மறைவு மிகவும் நீண்ட காலமாக அவர்களைமுகாம்களுக்கு உள்ளேயே நீண்ட நேரம் முடக்கிவிட்டது. சந்தேகத்துடன் பார்க்கப்பட்டது, அத்துடன் முகாம் நிர்வகிக்கும் அதிகாரிகளின், சூழவுள்ள சமூகத்தில் இருந்த்தும் இவர்களின் நலிவன நிலையை துர்பிரயோகம் செய்வது போன்ற பலவற்றால் வாய்ப்புகள் இல்லை போன்றவையும்.

அனால், உயிருக்கு அஞ்சி போகும் போது வேறு தெரிவில்லை. அனால்,இதில் பெருமளவு மக்கள் உயிருக்கு அஞ்சி மட்டும் போலில்லை. அல்லது உயிர் ஆபத்து 2ம் - 3ம் பட்ச காரணிகள்.

இந்த மக்களுக்கு தமிழ்நாடு கொடுத்ததையும், கொடுப்பதையும் என்றுமே நன்றி மறக்க கூடாது .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.