Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்

1168935243.jpg

யாழ்ப்பாணம் - நல்லூரில், யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு அமைக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூடுமாறு வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததாவது:-
யாழ்ப்பாணம் நல்லூர் என்பது இந்துக்களின் புனித பூமியாகும். ஆனால், ஒட்டுமொத்த இந்துக்களின் மனங்களை நோகடிக்கும்படியாக, இங்கு அசைவ உணவகமொன்றைத் திறந்துள்ளனர். மிக இரகசியமான வகையில் இந்தப் ணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மொருத்தமில்லாத இடத்தில், பொருத்தலாத சூழலில் இந்த அசைவ உணகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனடியாக அகற்றவேண்டும் என்று வலியுறுத்தி நாங்கள் போராட்டத்தில் ஈடுட்டுள்ளோம்.

எமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்று யாழ்ப்பாணம் ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த உணவகம் அகற்றப்படவேண்டும். இல்லையேல், இனிவரும் காலங்களில் பரந்துபட்ட போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் - என்றார்.

https://newuthayan.com/article/அசைவ_உணவகத்தை_உடனடியாக_மூடுங்கள்!__நல்லூரில்_நேற்றுப்_போராட்டம்

  • Replies 218
  • Views 9.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Justin
    Justin

    இங்கே வேலன் விசிறிகளாக இருப்போருக்கு விளங்காத ஒரு விடயம்: தனி மனித எல்லைகள் - boundaries. மற்றவன் உணவு, மற்றவனின் மத நம்பிக்கை/ நம்பிக்கையின்மை, மற்றவனின் படுக்கையறையில் யார் போன்ற விடயங்களில் மூக்கை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Sasi_varnam
    Sasi_varnam

    இப்பொழுதுதான் Barista நிறுவனத்தின் தலைமை நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் அழைத்துப்பேசினேன். என்னுடன் பேசிய விளம்பர பகுதியின் இயக்குனர் Ms.திலந்தி ஏற்கனவே தாங்கள் இந்த நிகழ்வு பற்றி அறிந்து கொண்டதாகவும்

  • கருத்துக்கள உறவுகள்

உடனடியாக.... நல்லூரில் திறக்கப் பட்ட மாமிசக் கடை, மூடப் பட வேண்டும்.

நல்லூரில்.... மாமிசக் கடையை வைத்தவன்,

முதலில்... சோனக தெருவில், பன்றி இறைச்சி கடையை திறந்து விட்டு வரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் ஆலய சூழலில் அசைவ உணவகம்; பெயர் பலகையை அதிரடியாக அகற்றிய மாநகர சபை

Published By: DIGITAL DESK 3

22 MAY, 2025 | 10:59 AM

image

யாழ்ப்பாணத்தில், நல்லூர் ஆலய சூழலில் மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய சூழலில் மாநகர சபையிடம் அனுமதி பெறாது, அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், உணவகத்திற்கான அனுமதிகளை பெறுமாறு மாநகர சபை உணவகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், அனுமதி இன்றி உணவகத்திற்கு முன்பாக வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த நிறுவனத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் இன்று வியாழக்கிழமை அகற்றப்பட்டுள்ளது.

அதேவேளை, குறித்த உணவகத்தில் சில சுகாதார குறைபாடுகள் காணப்பட்டமை தொடர்பில் மாநகர சபை பொது சுகாதார பரிசோதகரினால், யாழ். நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை நல்லூர் ஆலய சூழலில் புனித தன்மையை பேணும் வகையில் குறித்த உணவகத்தினை அகற்ற கோரி கடந்த செவ்வாய்க்கிழமை கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், நேற்று புதன்கிழமை (22) மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

84.jpg

https://www.virakesari.lk/article/215375

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%

காலையில் நல்ல செய்தியை தந்த ஏராளனுக்கும், யாழ்.மாநகர சபைக்கும் நன்றிகள். 🙂

நல்லூரில்... அசைவ கடை திறந்த, அந்தக் கடை முதலாளியை... ஆனையிறவில் ஆறுமாதம் உப்பு அள்ள விடுங்க சார். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

மாநகரசபை நரகசபையாக மாறிவிடுமோ? என்றொரு ஐயம் எழுந்தது! நாங்கள் அப்படி அல்ல என்பதை உணரச் செய்ததுள்ளார்கள். வாழ்த்துக்கள்!!

இந்தச் சம்பவம் நீதி மன்றம்வரை செல்லும் என்றொரு செய்தி வந்தது, நீதிபதிகள் இந்தியாவில் படித்துப் பட்டம் பெற்றவர்களாக இருக்கக் கூடாது என்பது எனது பிரார்த்தனை.😌

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%

காலையில் நல்ல செய்தியை தந்த ஏராளனுக்கும், யாழ்.மாநகர சபைக்கும் நன்றிகள். 🙂

நல்லூரில்... அசைவ கடை திறந்த, அந்தக் கடை முதலாளியை... ஆனையிறவில் ஆறுமாதம் உப்பு அள்ள விடுங்க சார். 😂 🤣

நானும் நல்லூரில் எங்காவது தெரு ஒன்றிலாக்கும் என நினைத்தேன்.

ஆனால் வெளிவீதியிலேயே அமைத்துள்ளார்கள் போல இருக்கு.

கடையின் அமைவிடம் எங்கே என யாருக்காவது சரியாக தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நானும் நல்லூரில் எங்காவது தெரு ஒன்றிலாக்கும் என நினைத்தேன்.

ஆனால் வெளிவீதியிலேயே அமைத்துள்ளார்கள் போல இருக்கு.

கடையின் அமைவிடம் எங்கே என யாருக்காவது சரியாக தெரியுமா?

அந்த அமைவிடம் எனக்கு சரியாக தெரியவில்லை கோசான்.

ஆனால் அந்த இடம்... நல்லூர் திருவிழாவின் போது, வாகனங்கள் செல்லாமல் வீதித் தடை ஏற்படுத்தும் எல்லைக்குள் வருகின்றதாம். அப்படி என்றால்... நிச்சயம் நல்லூர் கோவிலில் இருந்து 300 - 400 மீற்றர் அளவான இடத்தில் அமைந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

அந்த அமைவிடம் எனக்கு சரியாக தெரியவில்லை கோசான்.

ஆனால் அந்த இடம்... நல்லூர் திருவிழாவின் போது, வாகனங்கள் செல்லாமல் வீதித் தடை ஏற்படுத்தும் எல்லைக்குள் வருகின்றதாம். அப்படி என்றால்... நிச்சயம் நல்லூர் கோவிலில் இருந்து 300 - 400 மீற்றர் அளவான இடத்தில் அமைந்திருக்கலாம்.

ம்ம்ம்…வெளி வீதிக்கு அப்பால் என்றால்…அங்கே மாமிச உணவகம் வைக்க கூடாது என்பது கொஞ்சம் “சங்கி” தனமாக எனக்குப்படுகிறது.

இந்த கடைக்கு அருகில் உள்ள வீடுகளில் மச்சம் சமைப்பாகள்தானே?

அத்தோடு தனியே நல்லூர் மட்டும் அல்ல அனைத்து கோவில்களும் புனிதமானதுதான். யாழில் மூலைக்கு ஒரு கோவில் இருக்கும் போது, எப்படி பார்த்தாலும் இப்போ இருக்கும் பல மாமிச உணவு கடைகள் ஒரு கோவிலில் இருந்து 400 மீட்டருக்குள் வரும். அவற்றையும் அல்லவா நீக்க வேண்டும்?

பிகு

கடைக்காரர் சும்மின் கூட்டாளி என்பதை நான் கருத்தில் எடுக்கவில்லை🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

வீட்டுக்காரன் மாமிசம் சாப்பிடுவதையும், கோவில் அருகில் கடைக்காரன் இறைச்சிக் கடை வைப்பதையும் ஒரே தராசில் வைத்து குழப்பிக் கொள்ளாதீர்கள்.

கடை என்றால்... 100 - 200 பேர் வந்து மாட்டு எலும்பை உறிஞ்சி திண்டுவிட்டுப் போக, கழிவு எலும்பையும் வாழை இலையையும் வீதியில்தான் போடுவார்கள். அதை தெருநாய் தூக்கிக் கொண்டு போய் கோவில் வாசலில் இருந்து சாப்பிட்டால் நல்லாவா இருக்கும். 😂

அதற்காக வருமுன் காப்பதே சிறந்தது. இப்ப தடுக்காவிடில்.... ஒட்டகத்துக்கு இடம் கொடுத்த கதையாக... கச்சான் கடை கூட வைக்க இடம் இல்லாமல்... எல்லா இடமும் கவுச்சி கடை வைக்க, புலம் பெயர் தேசத்தில் இருந்து புற்றீசல் போல் கிளம்பி வந்திடுவார்கள். 🤣

பிகு:

அந்தக் கடைக்கும் சுமந்திரனுக்கும் தொடர்பு உள்ளது என்று நானும் வாசித்தேன். அதன் நதிமூலம், ரிஷிமூலம் தேடிக் கொண்டு இருக்கின்றேன். கிடைத்தவுடன்... ஆதாரத்துடன் பதிகின்றேன். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரில் திட்டமிட்டு நடக்கும் சதி..! அசைவ உணவகத்தின் பின்னணி

நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக அசைவ உணவகம் திறக்கப்பட்டிருப்பது ஒரு சதித்திட்டமாக இருக்கலாம் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.

லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் ஒரு பல்தேசிய கம்பனியின் அசைவ உணவகம் எந்தவித அனுமதியும் இன்றி திறக்கப்பட்டிருந்தது. குறித்த உணவகத்தில் மாட்டிறைச்சியும் விற்கப்படுகின்றது.

ஒரு ஆலய சூழலுக்குள் அசைவ உணவகம் இருக்க கூடாது என்பது எமது அடிப்படை பண்பாக பின்பற்றப்பட்டு வருகின்றது.

இந்துக்களினதும் தமிழர்களினதும் ஒரு தேசிய அடையாளமாக நல்லூர் ஆலயம் உள்ள நிலையில், அதற்கு முன்னால் இவ்வாறு அசைவ உணவகம் திறக்கப்பட்டிருப்பது இனவாதத்தை தூண்டும் ஒரு சதித்திட்டமாகவே புலப்படுகின்றது” எனத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

https://tamilwin.com/article/nallur-barista-cafe-issue-1747908112#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

வீட்டுக்காரன் மாமிசம் சாப்பிடுவதையும், கோவில் அருகில் கடைக்காரன் இறைச்சிக் கடை வைப்பதையும் ஒரே தராசில் வைத்து குழப்பிக் கொள்ளாதீர்கள்.

கடை என்றால்... 100 - 200 பேர் வந்து மாட்டு எலும்பை உறிஞ்சி திண்டுவிட்டுப் போக, கழிவு எலும்பையும் வாழை இலையையும் வீதியில்தான் போடுவார்கள். அதை தெருநாய் தூக்கிக் கொண்டு போய் கோவில் வாசலில் இருந்து சாப்பிட்டால் நல்லாவா இருக்கும். 😂

அதற்காக வருமுன் காப்பதே சிறந்தது. இப்ப தடுக்காவிடில்.... ஒட்டகத்துக்கு இடம் கொடுத்த கதையாக... கச்சான் கடை கூட வைக்க இடம் இல்லாமல்... எல்லா இடமும் கவுச்சி கடை வைக்க, புலம் பெயர் தேசத்தில் இருந்து புற்றீசல் போல் கிளம்பி வந்திடுவார்கள். 🤣

பிகு:

அந்தக் கடைக்கும் சுமந்திரனுக்கும் தொடர்பு உள்ளது என்று நானும் வாசித்தேன். அதன் நதிமூலம், ரிஷிமூலம் தேடிக் கொண்டு இருக்கின்றேன். கிடைத்தவுடன்... ஆதாரத்துடன் பதிகின்றேன். 😂 🤣

🤣

உணவகம் எந்த ரகமாம்? சும்மா தேத்தண்ணி கடை டைப் எண்டால் நீங்க சொன்ன பிரச்சனைகள் இருக்கும்.

நல்லூரில் சும்மின் நண்பர் வைப்பது எண்டால் posh மேனாட்டு பாணியில்தான் இருக்கும். அங்க ஆட்களையே தரம் பார்த்துதான் விடுவாங்கள், நாயை எல்லாம் 🤣.

எனது கவலை எல்லாம் :

  1. திருப்பரங்குன்றத்தில் பிரியாணி கடை என சங்கிகள் ஆடும் ஆட்டம் போல ஈழத்து சங்கிகள் நல்லூரில் ஆட முனைகிறார்களா?

    இதை இப்படியே விட்டால் நல்லூரில் இருந்து 1 கிமிக்குள் ஜீன்ஸ் போடக்கூடாது, ஷோர்ட்ஸ் போடக்கூடாது என்பதில் போய் நிற்க கூடும்.

  2. இப்படி சகல கோவில்களும் வெளிகிட்டா - நம்ம வயித்திலதான் அடி🤣

15 minutes ago, ஏராளன் said:

பல்தேசிய கம்பனியின்

அட நம்ம காப்பரேட்….யார் அது? மக்டொனால்ட் இலங்கையில் இப்போ இல்லை. கே எப் சியில் மாடு இல்லை.

பீசா ஹட்?

மறைக்கப்பட்ட போர்ட்டை பார்த்தால் பீஸா ஹட் போலத்தான் தெரியுது?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

பிற்குறிப்பு

இலண்டன் வெம்பிளி நடராஜருக்கு பக்கத்து வீடு முஸ்லிம்கள், முன்பக்கம் ரோடு, பின்பக்கம் தமிழரின் மீன்கடை, மற்றபக்கம் கொத்து ரொட்டி கடை.

ஈழமதீஸ்வருக்கு பக்கத்தில் (அதே கட்டிடத்தில் மசூதி, நல்லா நோன்பு கஞ்சி பரிமாறுவார்கள்).

இந்த கோவில்களின் புனிதம் கெடாதா?

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_8365.jpeg.6e11f4acfa36e579ac23

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அங்கெல்லாம் எமக்கு அதிகாரம் இல்லை. அதிகாரத்தை வாங்கி தாங்கோ, அப்புறம் நாங்கள. யார் என்று காட்டுகிறோம். 😂

போதுவாக இப்படியான விடயங்களுக்கு ஓவரா பொங்குறவர்கள. யாரெண்டா 25 நாள் திருவிழா எப்ப முடியும் என்று காத்திருந்து 26 ம் நாள் பூங்காவனம் முடிய மீன்சந்தைக்கும் இறைச்சிகடைக்கும் படையெடுப்பவர்களாக தான் இருக்கும். அதுக்குள்ள சதி அது இது என்று வேலன் சாமி என்ற **** பொங்கு***

  • கருத்துக்கள உறவுகள்

அவிங்க தான் சொல்லீட்டாங்களே? இதில் "மத வாதம்" இல்லை! தீவகத்தில் அரச பாடசாலையில் நடந்தது போலவே, பொதுச் சுகாதாரத்தை காக்கும் ஒரு நடவடிக்கை மட்டுமே😎!

NB: நல்லூர் சுற்றாடலில் திரியும் கட்டாக்காலி நாய்கள் மரக்கறி மட்டும் தான் உண்ணும் என அறிந்திருக்கிறேன். அணில், ஓணான் ஓடினால் கூட, அவை கோவிலில் இருந்து 500 மீற்றர்களுக்கு வெளியே ஓடிய பின்னர் தான் அவை துரத்தவே ஆரம்பிக்குமாம்😂!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

அட நம்ம காப்பரேட்….யார் அது? மக்டொனால்ட் இலங்கையில் இப்போ இல்லை. கே எப் சியில் மாடு இல்லை.

பீசா ஹட்?

மறைக்கப்பட்ட போர்ட்டை பார்த்தால் பீஸா ஹட் போலத்தான் தெரியுது?

493679850_687033604190516_79464852005571

499870209_687033744190502_33071958635300

கடையின் பெயர் BARISTA.

பெயரிலேயே... Bar உள்ளதை பார்த்தால், மாட்டு இறைச்சியுடன், மதுபானமும் இருக்கும் போலுள்ளது.

மானிப்பாயில், சுமந்திரன் இப்பிடி ஒன்றைத்தான் திறந்து வைத்தது பழைய செய்தி. 😜 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

493679850_687033604190516_79464852005571

499870209_687033744190502_33071958635300

கடையின் பெயர் BARISTA.

பெயரிலேயே... Bar உள்ளதை பார்த்தால், மாட்டு இறைச்சியுடன், மதுபானமும் இருக்கும் போலுள்ளது.

மானிப்பாயில், சுமந்திரன் இப்பிடி ஒன்றைத்தான் திறந்து வைத்தது பழைய செய்தி. 😜 😂

அட கருமமே🤣

இது ஒரு கோப்பி கடை. பல்தேசியம் எல்லாம் இல்லை இந்தியா, இப்போ இலங்கையில் உள்ளது.

இலங்கையில் நெஸ்கபே, நெஸ்டி என சீனிபாணியை தரும் கடைகளுக்கு மத்தியில் ஓரளவு தரமான மேற்கத்திய பாணியில் காப்பி பருக உகந்த இடம்.

உண்மையில் நல்லூர் போன்ற ஒரு செல்வ செழிப்பான இடத்தில் இது அமைவதுதான் பொருத்தம்.

இதில் மொக்கன் கடை போல் மிச்ச எலும்பை நாய் தூக்கி போக எல்லாம் வாய்பில்லை.

Beef panini, sandwich, மிஞ்சி போனால் ரோல்ஸ்…

ஐரோப்பாவில் Cafe Nero, Costa, Starbucks போல ஒரு கடை அவ்வளவுதான்.

கோவிலில் இருந்து 300,400 மீட்டருக்கு அப்பால் கூட இப்படி ஒரு கடை வருவதை எதிர்ப்பது உண்மையிலே தமிழர்கள், குறிப்பாக யாழ்பாண தமிழர்கள் பிற்போக்குவாதிகள் என கூவவே வழி செய்யும்.

இப்படி தமிழ் (சைவ) தலிபான்களாக மாறி எல்லா தொழில் முயற்சியையும் அடித்து நூத்தால் - ஆப்கானிஸ்தான் மாதிரி இருக்க வேண்டியதுதான்.

பிகு

படத்துக்கும் தகவலுக்கும் நன்றி.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

கடையின் பெயர் BARISTA.

பெயரிலேயே... Bar உள்ளதை பார்த்தால், மாட்டு இறைச்சியுடன், மதுபானமும் இருக்கும் போலுள்ளது.

மானிப்பாயில், சுமந்திரன் இப்பிடி ஒன்றைத்தான் திறந்து வைத்தது பழைய செய்தி. 😜 😂

IMG-8367.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாரிஸ்டா என்ற சொல் பற்றி ஒரு துணுக்கு. பலருக்கு தெரிந்திருக்கும்.

Barista - பாரிஸ்டா - ஒரு கபேயில் கோப்பி போட்டுத்தருபவர். டீ மாஸ்டர் போல கோப்பி மாஸ்டர்.

Barrister - யுகே போன்ற நாடுகளில் கோர்ட்டுக்கு போய் வாதாடும் வழக்குரைஞர்.

சொல்லும் போது, குறிப்பாக இலண்டன் நகர பேச்சு வழக்கில் ஒரே மாதிரி தொனிக்கும்.

1 hour ago, goshan_che said:

கோவிலில் இருந்து 300,400 மீட்டருக்கு அப்பால் கூட இப்படி ஒரு கடை வருவதை எதிர்ப்பது உண்மையிலே தமிழர்கள், குறிப்பாக யாழ்பாண தமிழர்கள் பிற்போக்குவாதிகள் என கூவவே வழி செய்யும்.

இப்படி தமிழ் (சைவ) தலிபான்களாக மாறி எல்லா தொழில் முயற்சியையும் அடித்து நூத்தால் - ஆப்கானிஸ்தான் மாதிரி இருக்க வேண்டியதுதான்.

பிகு

படத்துக்கும் தகவலுக்கும் நன்றி.

கொழும்பு மயூராபதி அம்மன் கோவில் அயலில், பொன்னம்பலவாணேச்சர் கோயில் அயலில், மற்றும் வெவ்வேறு இடங்களில் உள்ள பிரசித்த பெற்ற இந்துக் கோவில் அருகில் எல்லாம் இப்படி எத்தனை கோப்பிக் கடைகளும், அசைவ உணவகங்களும் உள்ளன!

யாழில் எனக்கு தெரிந்த பல சின்ன மற்றும் நடுத்தர இந்துக் கோவில்களின் அருகில் எத்தனை பேக்கரிகள் உள்ளன. அதில் எப்பவும் 'மாலு பாண்' விற்பார்கள். சாமியை கும்பிட்டுப் போட்டு பசிக்கு மாலுபாணும் ரோல்ஸும் வாங்கி சாப்பிடுகின்ற எண்ணற்றவர்கள் உள்ளனர்.

இதை எதிர்க்கும் கூட்டத்திடம் போய் கவுணாவத்தையில் செய்யப்படும், ஆடு மாடு சேவல்களை அறுத்து செய்யப்படும் வேள்வி தவறாகாதா என கேட்டுப் பாருங்கள். அதை நியாயப்படுத்த இன்னொரு லொஜிக் சொல்வார்கள்.

வர வர யாழ்பாணம் சங்கிகளின் கூடாரமாக மாறிக் கொண்டு வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

இப்படியான மதவாத செயல்கள் ஈற்றில் தமிழ் /யாழ்ப்பாண சமூகத்தை மேலும் மேலும் ஒதுக்கப்படும் சமூகமாகவும் நலிவுற்ற சமூகமாகவும் மாறவே உதவி செய்யும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

பச்சை தீர்ந்து விட்டது.

சுமந்திரனை எதிர்க்க வேண்டும் என்பதற்காக…வேலன்…

(எதுகை மோனையில் எழுதாலாம் சபை நாகரீகம் கருதி தவிர்க்கிறேன்)….

போன்ற குடுகுடுப்பைகாரர்களை எல்லாம் களத்தில் இறக்கி விட்டுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

large.IMG_8365.jpeg.6e11f4acfa36e579ac23

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்

என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி

வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்

சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

கோத்தும்பீ - அரச வண்டே! கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு - கண்ணப்பருடைய அன்புக்கு ஒப்பான அன்பு, இன்மை கண்டபின் - என்னிடத்தில் இல்லாமை அறிந்தும், என் அப்பன் - என் தந்தை, என் ஒப்பில் - எதனோடும் ஒப்பில்லாத, என்னையும் ஆட்கொண்டருளி - என்னையும் அடிமையாகக் கொண்டருளி, வண்ணம் பணித்து - யான் ஒழுக வேண்டிய வகையைத் தெரிவித்து, என்னை வாவென்ற - என்னைத் தில்லைக்கு வருக என்று அருளிய, வான் கருணை - மேலாகிய கருணையையுடைய, சுண்ணம் - பொடியாகிய, பொன் நீற்றற்கே - அழகிய திருநீற்றையணிந்தவனிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

பிகு

இந்த யாழ்பாணத்து சங்கிகள், 10 வகுப்பு சைவ சமயம் கூட ஒழுங்கா படிக்கவில்லை என நினைக்க்கிறேன்.

படித்திருப்பின் இந்த திருகோத்தும்பீ செய்யுளும் அதன் பொருளும் விளங்கி இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

இப்படி தமிழ் (சைவ) தலிபான்களாக மாறி எல்லா தொழில் முயற்சியையும் அடித்து நூத்தால் - ஆப்கானிஸ்தான் மாதிரி இருக்க வேண்டியதுதான்.

அடுத்த நல்லூர் திருவிழாவுக்கு அன்னதான மடங்களிலை சிக்கன் மட்டன் எண்டு அமர்க்களம் பண்ணத்தான் இருக்கு....😎

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்தவரை (என் உறவினர்கள் உட்பட) நல்லூர் கந்தசுவாமி கோயிலின் அருகில் வசிப்பவர்கள் மாமிசம் சமைப்பதில்லை. அங்கே புதிதாக குடி புகுவோரும் இதை கடைப்பிடிக்கும் மனநிலை இருந்தால் மட்டுமே குடிபுகுவர். இது நல்லூர் கந்தனுக்கு கொடுக்கப்படக்கூடிய ஒரு வகை கௌரவம் அல்லது சம்பிரதாய முறை. மற்றும் படி இதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் நல்லூர் செட்டித்தெருவில் உள்ள எனது அக்கா வீட்டில் எனக்கு அசைவம் கிடைப்பதில்லை நானும் கேட்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விசுகு said:

நான் அறிந்தவரை (என் உறவினர்கள் உட்பட) நல்லூர் கந்தசுவாமி கோயிலின் அருகில் வசிப்பவர்கள் மாமிசம் சமைப்பதில்லை. அங்கே புதிதாக குடி புகுவோரும் இதை கடைப்பிடிக்கும் மனநிலை இருந்தால் மட்டுமே குடிபுகுவர். இது நல்லூர் கந்தனுக்கு கொடுக்கப்படக்கூடிய ஒரு வகை கௌரவம் அல்லது சம்பிரதாய முறை. மற்றும் படி இதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் நல்லூர் செட்டித்தெருவில் உள்ள எனது அக்கா வீட்டில் எனக்கு அசைவம் கிடைப்பதில்லை நானும் கேட்பதில்லை.

இது நூறு சதவீத தவறான தகவல்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.