Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 24/5/2025 at 20:49, goshan_che said:

காரை தீவு தான் நாம் என பெருமிதம் கொள்ளாமல் காரை நகர் என தாமே பெயர் மாற்றி கொண்டதில் நான் ஒரு கூட்டு தாழ்வு மனச்சிக்கலை காண்கிறேன் தமிழ் குரவரே.

இலங்கையில் புத்தளத்தில் ஒரு காரைதீவும், கிழக்கே மட்டக்களப்பில் ஒரு காரைதீவும் வடக்கே தீவுப்பகுதிகளில் ஒரு காரை தீவும் ஆக மூன்று காரைதீவுகளும் சேர்ந்து அரசினரின் தபால் தந்திப் போக்குவரத்திற்கு பெரிய தொல்லைகளையும் தாமதங்களையும் எற்படுத்திக் கொண்டிருந்தன.

ஆங்கிலேயரின் ஆட்சியில் 1869 ஆம் ஆண்டில் அப்போது அரசாங்க அதிபராக இருந்த துனவைந்துரையால் பொன்னாலைக் கடலுக்கூடாக கற்தெருவும், ஒன்பது பாலங்களும் அமைந்து காரைதீவினைக் குடாநாட்டுடன் இணைத்தனர். இவ்விணைப்பு தெருவினது நீளம் சுமார் 2,5 கிலோ மீட்டர் ஆகும்.

இத்தரைத் தொடர்பினை அடுத்து சேர் பொன் இராமநாதனின் விதைந்துரைப்புடன் இலங்கையின் வடக்கே தீவுப்பகுதிகளில் அமைந்திருந்த காரை தீவு என்பது 1923ம் ஆண்டு தொடக்கம் காரைநகர் என்று பெயர் மாற்றம் பெற்றது

  • Replies 218
  • Views 9.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Justin
    Justin

    இங்கே வேலன் விசிறிகளாக இருப்போருக்கு விளங்காத ஒரு விடயம்: தனி மனித எல்லைகள் - boundaries. மற்றவன் உணவு, மற்றவனின் மத நம்பிக்கை/ நம்பிக்கையின்மை, மற்றவனின் படுக்கையறையில் யார் போன்ற விடயங்களில் மூக்கை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Sasi_varnam
    Sasi_varnam

    இப்பொழுதுதான் Barista நிறுவனத்தின் தலைமை நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் அழைத்துப்பேசினேன். என்னுடன் பேசிய விளம்பர பகுதியின் இயக்குனர் Ms.திலந்தி ஏற்கனவே தாங்கள் இந்த நிகழ்வு பற்றி அறிந்து கொண்டதாகவும்

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kandiah57 said:

உங்கள் தரவுகள். சரி

ஜேர்மனியில் ஒரு தமிழர் இருக்கிறார் அவரின் வீட்டை சுற்றி அசைவம் சாப்பிடுவார்கள் தான் வாழ்கிறார்கள் அருகில் மாமிசம் விற்கும் கடைகள் உண்டு” அசைவவ சாப்பாடு விற்க்கும் சிறிய பெரிய உணவகங்களும். அருகில் உண்டு இருந்தாலும் அந்த நபரை இவை எதுவுமே பாதிப்பதில்லை அவர். வெள்ளிக்கிழமை வந்தால் இதை எல்லாம் மறந்து விடுவார் முழுக்க சைவ சாப்பாடு விரதம் இப்படி வாழ்க்கை… வாழ்கின்றர். இது தான் உண்மையான பக்தி

திரிஷா நயன்தாரா கட்டை பாவாடை உடனே வந்து அவர் முன்பே ஆடினாள் கூட வெள்ளிக்கிழமையில். அவர் அசைந்து கொடுக்க மாட்டார் அது தான் பக்தி 🤣

நீங்கள் சிறந்த பக்திமான்கள் என்றால் எதுவுமே உங்களை பாதிக்காது உங்கள் சிந்தனை இறைவனை பற்றி இருக்கும் உங்களை புற நிகழ்வுகள் பாதிக்காது

ஜேமனியும் நல்லூரும் ஒன்றா கந்தையர்?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, வாத்தியார் said:

இலங்கையில் புத்தளத்தில் ஒரு காரைதீவும், கிழக்கே மட்டக்களப்பில் ஒரு காரைதீவும் வடக்கே தீவுப்பகுதிகளில் ஒரு காரை தீவும் ஆக மூன்று காரைதீவுகளும் சேர்ந்து அரசினரின் தபால் தந்திப் போக்குவரத்திற்கு பெரிய தொல்லைகளையும் தாமதங்களையும் எற்படுத்திக் கொண்டிருந்தன.

ஆங்கிலேயரின் ஆட்சியில் 1869 ஆம் ஆண்டில் அப்போது அரசாங்க அதிபராக இருந்த துனவைந்துரையால் பொன்னாலைக் கடலுக்கூடாக கற்தெருவும், ஒன்பது பாலங்களும் அமைந்து காரைதீவினைக் குடாநாட்டுடன் இணைத்தனர். இவ்விணைப்பு தெருவினது நீளம் சுமார் 2,5 கிலோ மீட்டர் ஆகும்.

இத்தரைத் தொடர்பினை அடுத்து சேர் பொன் இராமநாதனின் விதைந்துரைப்புடன் இலங்கையின் வடக்கே தீவுப்பகுதிகளில் அமைந்திருந்த காரை தீவு என்பது 1923ம் ஆண்டு தொடக்கம் காரைநகர் என்று பெயர் மாற்றம் பெற்றது

ஆனால் சொந்த ஊர் பெயரை யாரோ மானிப்பாய்/கொழும்பு 7 துரை வந்து சொன்னார் என்பதால் ஏன் விட்டு கொடுப்பான்.

பழைய பெயரின் மீது உண்மையில் ஊர் மக்களுக்கு பற்று இருப்பின் அதை தக்க வைக்க அல்லவா போராடி இருப்பார்கள்.

ஆகவே, இந்த காரை -தீவை தூக்கி போட்டு விட்டு நகரமாவதில், காரைநகர் வாழ் மக்களுக்கும் விருப்பம் இருந்தது என நினைக்கிறேன்.

எனது மகனின் பெயர் சுரேன். பக்கத்து ஊரில் இரெண்டு சுரேன் இருப்பதால் நான் என் மகனின் பெயரை ஏன் நரேன் என மாற்ற வேண்டும்?

அதே போல் கிழக்கிலங்கை, புத்தள காரைதீவுகள் பூகோளவியல் படி தீவுகளே அல்ல, ஆனாலும் அவை இன்று வரை தம் முன்னோர் பாவித்த பெயரையே பாவிக்கின்றனர்.

முல்லைதீவும் அப்படித்தான். ஆகவே பாலம் கட்டியதால் பெயர் மாற்றியதை ஒரு தக்க காரணமாக என்னால் கருத முடியவில்லை.

அப்படி என்றால் புங்குடுதீவை புங்கைநகர், மண்டைதீவை தலைநகர் என்றா அழைப்பது?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

உங்களுக்கு இந்த கேள்வி

எனக்கு வந்தான் வரத்தானுக்கும் வந்தேறிகளுக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி.

2 hours ago, விசுகு said:

நன்றி அண்ணா

நான் உங்களிடம் கேட்டிருக்க கூடாது தான்.

இனியாவது சரியான நபரிடம் கேட்க பழகுங்கள் அண்ணா 🤣.

பதில் - வந்தான் வரத்தானுக்கும், வந்தேறிக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

வித்தியாசம் எங்கே வருகிறது என்றால் வந்தான் வரத்தான்/ வத்தேறிகள் வாழலாம், ஆழ முடியாது என கூறும் போது மட்டுமே.

நான் நல்லூரில் பிரதேச சபை, மாநகரசபை, சமூக, கோவில் பொறுப்புகளுக்கோ, எம்பி யாகவோ வந்தான் வரத்தான் வரக்கூடாது என சொன்னேனா?

இல்லை. இதுதான் வந்தேறி-வெறுப்பரசியல் செய்யும் உங்களுக்கும், எனக்கும் உள்ள வித்தியாசம்.

விளக்கம் போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன். இன்னும் தேவைபட்டால் மேலும் என்னையே அணுகவும். கந்தையா அண்ணை எனது வக்கீல் அல்ல 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அப்படியானால் அவர்கள் வந்தான் வரத்தான் மட்டுமே. வந்தேறிகளால் அந்தந்த பகுதி மக்களின் வாழ்க்கை வரலாற்றை புரிந்து கொள்ளவோ அறிந்து கொள்ளவோ முடியாது என்ற உங்கள் நிலைப்பாடு????

52 minutes ago, வாத்தியார் said:

இலங்கையில் புத்தளத்தில் ஒரு காரைதீவும், கிழக்கே மட்டக்களப்பில் ஒரு காரைதீவும் வடக்கே தீவுப்பகுதிகளில் ஒரு காரை தீவும் ஆக மூன்று காரைதீவுகளும் சேர்ந்து அரசினரின் தபால் தந்திப் போக்குவரத்திற்கு பெரிய தொல்லைகளையும் தாமதங்களையும் எற்படுத்திக் கொண்டிருந்தன.

ஆங்கிலேயரின் ஆட்சியில் 1869 ஆம் ஆண்டில் அப்போது அரசாங்க அதிபராக இருந்த துனவைந்துரையால் பொன்னாலைக் கடலுக்கூடாக கற்தெருவும், ஒன்பது பாலங்களும் அமைந்து காரைதீவினைக் குடாநாட்டுடன் இணைத்தனர். இவ்விணைப்பு தெருவினது நீளம் சுமார் 2,5 கிலோ மீட்டர் ஆகும்.

இத்தரைத் தொடர்பினை அடுத்து சேர் பொன் இராமநாதனின் விதைந்துரைப்புடன் இலங்கையின் வடக்கே தீவுப்பகுதிகளில் அமைந்திருந்த காரை தீவு என்பது 1923ம் ஆண்டு தொடக்கம் காரைநகர் என்று பெயர் மாற்றம் பெற்றது

நன்றி வாத்தி தம்பி

இதுவரை நானும் இவர்கள் தீவார் என்று சொல்ல வெட்கப்பட்டே நகராக்கினார்கள் என்று தான் நினைத்திருந்தேன்.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அப்படியானால் அவர்கள் வந்தான் வரத்தான் மட்டுமே. வந்தேறிகளால் அந்தந்த பகுதி மக்களின் வாழ்க்கை வரலாற்றை புரிந்து கொள்ளவோ அறிந்து கொள்ளவோ முடியாது என்ற உங்கள் நிலைப்பாடு????

புரிந்து கொள்ளவோ, அறிந்து கொள்ளவோ முடியாது என நான் எழுதவில்லை.

இப்படியாக புதிதாக வதவர்கள் “வரலாறை, வழமையை சரிவர அறிந்து கொள்ளாமல் இருந்தால் அதில் ஆச்சரியம் இல்லை” என்றே எழுதினேன்.

உண்மையில் நல்லூரின் வழமை அறியாமல் “எனது சகோதரம், உறவினர் வீட்டில் மச்சம் இல்லை” எனவே அதுதான் நல்லூரில் வழமை என நீங்கள் எழுதியதே நான் அப்படி எழுத காரணமாகியது.

நீங்கள் நல்லூருக்கு அயலான், உங்கள் உறவினர் வந்தான் வரத்தான். அவரின் வீட்டில் நடப்பதே நல்லூரின் வழமை என அவர் உங்களுக்கு சொல்லி இருப்பார் (நீங்களாக இட்டு கட்டவில்லைதானே). ஆக, இதுதான் ஒரு வந்தான் வரத்தான் நல்லூரின் வழமையை அறியாமல் இருப்பதற்கான சான்று.

அவர் புதியவர் என்பதால் அவருக்கு வழமை தெரியாமல் இருப்பது ஆச்சரியமில்லை என்றே நான் எழுதினேன்.

On 23/5/2025 at 17:14, goshan_che said:

நல்லூரில் இப்போ ஒரு 50 வருடமாக இருப்பது எல்லாம் வந்தான், வரத்தாந்தானே? பெரும்பாலும் தீவக மக்கள். அவர்களுக்கு நல்லூரின் வரலாறு அதிகம் தெரியாது இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

உண்மையில் உங்களுக்கும் சகபாடிகளுக்கும் என்னதான் பிரச்சனை🤣.

  1. தீவக மக்கள் என எழுதினால்…ஐயோ தீவான் என எழுதுகிறார் என பொய்யாக victim card ஐ பிளே பண்ணுகிறீர்கள். இல்லை என்பதை மேற்கோளோடு நிறுவினாலும்…இல்லை “நீ என்ன எழுதினாலும், நாங்கள் அதை தீவார் என்றே வாசிப்போம், விளங்குவோம்” என எழுதுகிறீர்கள்.

  2. அதே போல் வந்தான் வரத்தானுக்கு ஊர் வழமை தெரியாது இருப்பதில் ஆச்சரியம் இல்லை என எழுதினால், வந்தான் வரத்தானால் ஊர் வழமையை தெரிந்து கொள்ளவே முடியாது என எழுதினேன் என இல்லாத இன்னொன்றை சொல்லி மாய்மாலம் போடுகிறீர்கள்.

சில கறுப்பினத்தவர், முஸ்லிம்கள் - பொலிஸ் காரை நிப்பாட்டின உடனேயே “ஐயோ என்னை இன, மத அடிப்படையில் வஞ்சிக்கிறார்கள்” என race card ஐ பாவிப்பது போல இருக்கிறது இந்த செய்கைகள்.

பிகு

இத்தனைக்கும் உங்களுக்கு துளியும் சம்பந்தமில்லாத தமிழ்நாட்டில் 600 வருடம் முன் வந்தவன் தமிழனே இல்லை, ஆளக்கூடாது என நடக்கும் வெறுப்பரசியலின் தற்போது யாழ் கால நம்பர் 1 cheer leader நீங்கள் 🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

நன்றி வாத்தி தம்பி

இதுவரை நானும் இவர்கள் தீவார் என்று சொல்ல வெட்கப்பட்டே நகராக்கினார்கள் என்று தான் நினைத்திருந்தேன்.

ஒரு சின்ன டெஸ்ட் வைத்து பாருங்கள்.

இங்கே அதன் ரிசல்டை பதிய வேண்டிய அவசியம் இல்லை.

ஊர் அபிமானம் உள்ள ஒரு காரைநகர் ஆளிடம் போய், “யாழ்பாணத்தில் உங்கள் ஊர் காரைதீவுதானே?” என கேட்டுப்பாருங்கள்.

அவர் கொடுக்கும் எதிர்வினை - உண்மை எது என்பதை உணர்த்தும்.

2 hours ago, நிழலி said:

எனக்குள் இருக்கும் தீவான் Gene தான் காரணம் என நினைப்பேன்.

பாதி ஜோக், பாதி சீரியசாக ஒரு கேள்வி…

உங்களில் ஓடும் சுண்டுகுளி ஜீன் சொத்தையானது என நீங்களே unconscious bias இல் இருப்பது போல் தெரியவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

பிகு

எனக்கு எந்த ஊர்ரை இட்டும் எந்த கெத்தும் இல்லை.

சாதி/மாவட்ட கெத்தை போல ஒன்றுதான் இந்த ஊர் கெத்தும்.

யாழில் அந்த ஊரான், இந்த ஊரான் என அல்லது ஏதோ ஒருவகையில் தம் ஊரை இணைத்து பெயர் வைப்போரை பார்க்க சிரிப்பாகவே இருக்கும்.

விசுகு அண்ணா என்னை அவமானபடுத்துவதாக நினைத்து சொல்லிய வார்த்தைப்படி…

நான் வந்தான் வரத்தான்களின் ராஜாவாக்கும்🤣.

அதனால்தான் இன்றுவரை என் சொந்த ஊர், மாவட்டம் பற்றி எதுவும் சொல்வதில்லை.

யாழ் உறுப்பினருக்கும் எனக்கும் இடையான ஒரே பந்தம் நான் ஈழத்தமிழன் என்பது மட்டுமே. அதுவும் கெத்தாக அல்ல. ஒரு அடையாளமாக.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

ஜேமனியும் நல்லூரும் ஒன்றா கந்தையர்?

இல்லை ஆனால் சமயம் அதை கைக்கொள்ளும். கடைப்பிடிக்கும். முறை உலகம் முழுவதும் ஒன்று தான் உங்களை இறைச்சியும் பெண்களும் ........இது போன்ற பிறவும் இறைவனை தியானம் செய்வதிலிருந்து திசை திருப்புமெனறான். நீங்கள் உண்மையான பக்தர்கள் இல்லை மற்றும் எனது கேள்வி ஜேர்மனியில் முடியும் என்றால் ஏன். நல்லுரில். முடியாது?? ஜேர்மனி போல் நிறைய விடயங்களையும் இலங்கையில் செயகிறார்கள். என்பது உங்களுக்கு தெரியவில்லையா ?? அதுகளை எப்படி செய்ய முடியும் ??

25 minutes ago, goshan_che said:

உங்களில் ஓடும் சுண்டுகுளி ஜீன் சொத்தையானது என நீங்களே unconscious bias இல் இருப்பது போல் தெரியவில்லையா?

சுண்டிக்குளி நகரம் சார்ந்த மேட்டுக் குடிகளின் இடம். ஆனால் வேலணை அப்படி அல்ல. பலரால் கொஞ்சம் குறைத்து மதிக்கப்படும் தீவகத்தை சேர்ந்த இடம். அதனால் தன்னை முன்னிலைக்கு நகர்த்த போராட வேண்டிய தேவையுள்ள, மூர்க்கம் உள்ள இடம்.

எனவே நான் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருப்பதற்கு அந்த மூர்க்கம் தான் காரணம் என நம்புவதால் இந்த எண்ணம் வந்திருக்கலாம்.

இதே போன்ற ஒன்றைத்தான் நான் இளையராஜாவிடமும் அவர் சமூகம் சார்ந்து எதிர்பார்த்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kandiah57 said:

இல்லை ஆனால் சமயம் அதை கைக்கொள்ளும். கடைப்பிடிக்கும். முறை உலகம் முழுவதும் ஒன்று தான் உங்களை இறைச்சியும் பெண்களும் ........இது போன்ற பிறவும் இறைவனை தியானம் செய்வதிலிருந்து திசை திருப்புமெனறான். நீங்கள் உண்மையான பக்தர்கள் இல்லை மற்றும் எனது கேள்வி ஜேர்மனியில் முடியும் என்றால் ஏன். நல்லுரில். முடியாது?? ஜேர்மனி போல் நிறைய விடயங்களையும் இலங்கையில் செயகிறார்கள். என்பது உங்களுக்கு தெரியவில்லையா ?? அதுகளை எப்படி செய்ய முடியும் ??

உண்மையில் இவர்கள் சொல்வதை பார்த்தால் சாமிகளுக்குள்ளும் சாதி, வர்க்க வேறுபாடு உள்ளது என நினைக்கிறேன்.

இலண்டன் ஹைகேட் முருகன் இருக்கும் இடத்தில் இருந்து 100 மீட்டருக்குள் வேற்றினதவரின் மாமிச சாப்பாடு கடை இருக்கலாம்.

ஆனால் நல்லூர் முருகனின் இருந்து 300 மீட்டர் தாண்டியும் மாமிச சாப்பாட்டு கடை இருக்க கூடாது.

ஆனால் உலகெங்கும் முருகன் ஒருவர்தானே?

அல்லது

High class முருகன், low class முருகன் என இரு வேறு தெய்வங்கள் உளரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, goshan_che said:

ஆனால் உலகெங்கும் முருகன் ஒருவர்தானே?

அல்லது

High class முருகன், low class முருகன் என இரு வேறு தெய்வங்கள் உளரா?

கலிகை கந்தனுக்கும்....

சந்நிதி கந்தனுக்கும்....

நல்லூர் கந்தனுக்கும்....

இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளது. cool

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

நீங்கள் தேவையில்லாமல் அடி படுகிறீர்கள்,......ஜேர்மனியில் 1975 ஆம் ஆண்டளவில். வந்தவர். ஒரு புங்குடுதீவான். முதலில் வெளிநாட்டிற்கு வந்தவர். புங்குடுதீவான். அவர் பிரங்போட். நகரில் பெற்றோல். நிலையத்தில் வேலைவாய்ப்பு கிடைத்தது செய்தார் ....அந்த முதலாளியின். மகளை மனைவி ஆக்கி கொண்டார். அவரின் பிள்ளைகளுக்கும். தமிழ் பெயர் தான் நான் அவரை நேரில் காணவில்லை ஆனால் நிறையவே கேள்விபட்டு உள்ளேன் அவரை தீவான். சிவனாடியன். என்று சொல்வதுண்டு நன்றாக உழைத்து பணக்காரர் ஆகி விட்டார் என்று கேள்வி

சிவனாடியன். புங்குடுதீவான். என்றால் மகிழ்ச்சி அடைகிறார்கள்

தலைவரின் மனைவி மதிவதனி புங்குடுதீவாள் என்றால் மகிழ்ச்சி அடைகிறார்கள்

கனடாவில் பல தொழில் நிறுவனங்கள் புங்குடுதீவாருடையது என்றால் மகிழ்ச்சி அடைகிறார்கள்

புங்குடுதீவு மக்களுக்கு தனி திறமைகளுண்டு ....[.ஒவ்வொரு கிராம மக்களுக்கும் தனி திறமைகளுண்டு ] உதாரணமாக ஒரு லட்சம் ரூபாய் செலவில் தொடங்க வேண்டிய தொழிலை புங்குடுதீவு மக்கள் வெறும் பத்தாயிரம் ரூபாய்யில். தொடங்கக்கூடியவர்கள். அதற்கு காரணம் அவரகளின் திட்டமிடல் கடின உழைப்பு .........தன்னம்பிக்கை போன்றன

உங்களை புங்குடுதீவு என்று சொல்ல வேண்டாம் என்றால் விட்டு விடலாம் பாரிஸ்க்காரன். என்று அழைக்கிறோம் .....சரியா??? 🤣🤣🤣

மேலும் நீர்வேலியன்

புங்கையூரன்

நுணவிலான்

மதுரங்கேணி

இப்படி எல்லாம் ஏன் பெயர் வைத்து உள்ளார்கள் ......அந்தந்த ஊர் பெயரில் அழைக்கும் போது ஒரு பெருமை தடிப்பு ..காம்பீரம் .........கௌரவம்’ அடைகிறார்கள்

நான் கைதடியன். என்பதில் ரொம்பவும் மகிழ்ச்சி அடைகிறேன். கைதடிக்கு பல சிறப்புகள் உண்டு” என்னை நல்லுரன் என்று சொல்ல முடியாது ஊர் பெயரை பிறந்த ஊர் பெயரை

மாற்ற முடியாது அது தாய் தந்தையர் பெயர் போன்றது இனிமேல் நான் உங்களை

புங்குடுதீவு என்று சொல்லவில்லை 🤣🤣🙏

ஏன் கொழும்பை தவிர்த்து விட்டீர்கள்? முன்பு கொழும்பில் பல சைவ உணவகங்கள், பயணிகள் தங்கும் விடுதிகள் கூட புங்குடு தீவாருடையதாம். இப்போ பிரான்ஸிலுள்ள தமிழரில் பாதிக்குமேல் பெரும் பணக்காரர்  அவர்கள்தானாம். எனது தூரத்து உறவினர்கள் கூட புங்குடுதீவில் காதல் திருமணம் செய்துள்ளார்கள். பணத்துக்காக அல்ல பழக்கம். நாங்கள் இடம்பெயர்ந்து இருந்தபோது, பல குடும்பங்கள் எமது வீட்டை சுற்றி வசித்தார்கள். அவர்களும் இடம்பெயர்ந்தவர்களே. அருமையான, இரக்கமுள்ள குடும்பம் ஒன்று. அவர்கள் இப்போ பிரான்சில் இருப்பார்கள் என நினைக்கிறன். அப்பவே அவர்களது பெரும்பாலான உறவினர் பிரான்சில் இருந்தார்கள், இவர்களும் அங்கு போகப்போவதாக கூறியிருந்தார்கள். கந்தையர், இனிமேல் நீங்கள் எத்தனை தடவை வேண்டுமானாலும் புங்குடுதீவை குறிப்பிடலாம் அவர் கோவிக்கமாட்டார் பெருமைப்படுவார்.  

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நியாயம் said:

ஜேமனியும் நல்லூரும் ஒன்றா கந்தையர்?

ஜேர்மனியின் முருகனும் நல்லூர் முருகனும் வேறு வேறு ஆட்களா நியாயம்?

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ யாழின் பாரம்பரிய சைவ உணவகங்களை போல் அசுத்தமாக இருக்காமல் மிகவும் அழகாகவும் சுத்தமாகவும் காட்சி தரும் ஒரு ஒரு சைவ உணவகம் வந்தது யாழ்பாண மக்களுக்கு கெத்தும் மகிழ்ச்சியும் தான். 😁

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

கலிகை கந்தனுக்கும்....

சந்நிதி கந்தனுக்கும்....

நல்லூர் கந்தனுக்கும்....

இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளது. cool

ஆதாரத்துடன், சமய நூல்களின் பின் புலத்துடன் விளக்க முடியுமா?

நக்கல் இல்லை. உண்மையான கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

1- நீங்கள் நல்லூருக்கு அயலான், உங்கள் உறவினர் வந்தான் வரத்தான்.

2- இத்தனைக்கும் உங்களுக்கு துளியும் சம்பந்தமில்லாத தமிழ்நாட்டில் 600 வருடம் முன் வந்தவன் தமிழனே இல்லை, ஆளக்கூடாது என நடக்கும் வெறுப்பரசியலின் தற்போது யாழ் கால நம்பர் 1 cheer leader நீங்கள் 🤣.

குழப்பமான கருத்தியல் உங்களுக்கு தான் சகோ.

ஒரே இனம் மொழி தாயகத்தில் ஒரே கல்விமுறையில் பயின்ற பக்கத்து கிராமத்தவனுக்கு அயல் கிராமத்தில் அதுவும் மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் வரலாற்றை கொண்ட ஊரை தெரியாமல் இருக்கலாம் அல்லது வந்தேறிகளுக்கு அதன் மீது அக்கறை இருக்காது என்றபடி மறுபக்கம் அதே காலத்தில் தமிழகத்துக்கு வந்தவர்களுக்கு தமிழர்களை ஆளும் தகுதி இருந்தது இருக்கிறது என்பதை.....?

பி கு: கருணாநிதி எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா தமிழகம் வந்து 600 வருடங்கள் என்பது எவ்வளவு முட்டுக்கோடுப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

இது சமயம் மட்டும் அல்ல, சூழல், கலாசாரத்துடன் சம்பந்தப்ப விடயம், வெளிப்படை.

உ,ம். முன்பு நல்லூரில் பலியிடும் வழக்கம் இருந்தது (சமய நம்பிக்கை கொல்லாமை என்று இருந்த போதும்).

சமூக நம்பிக்கை, பார்வை மாறி காலப்போக்கில் கைவிடப்பட்டது.

அதேபோல முருகவழிபாடிலும்.

இதனால், மேற்கு கோயிகள், அங்கு உள்ள கோயிகள்களை ஒப்பிட முடியாது.

மறுவளமாக மேர்க்கிலும், அருமையாக, தனியே எந்த அசைவ உணவும் வளாகத்துக்கு அருகில் இருக்க கூடாது என்று இருக்கிறது - உ.ம். wales camarthen இல், எல்லாமே அந்தந்த சூழல், கலாசாரம், அமையப்பெற்ற வரலாறுகள் போன்றவற்றை பொறுத்தது.

அதுக்காக, நல்லூர் - camarthen ஒப்பிட முடியாது, கூடாது. ஏனெனில் அவை இருக்கும் பரந்த சூழல், கலாசாரம், நாடு போன்றவை.

இதில் உள்ள பிரச்சனை, வேலன்சாமி மாநகர சபை எல்லையை இழுத்து இருப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

499673404_10171121056245368_659993684940

யாழ்ப்பாணத்தில் புதிதாக திறந்துள்ள "Barista" சைவ உணவகம்...

மலையான் கபே, தாமோதர விலாஸ் போன்ற சைவ உணவகங்களுக்கு இணையாக...

மணமணக்கும் மசால் தோசை, மல்லிகைப் பூ போல இட்லி, உளுந்து வடை, யாழ்ப்பாண மரக்கறி கூழ் போன்றவற்றை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று வேண்டுகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இஹில், சட்ட பிரயோகத்தில் அந்த நிலையற்ற தன்மை இருக்க வேண்டும்.

ஏதாவது ஒரு பக்கத்துக்கு இருந்தால் - வேல ண் சமிக்கோ அல்லது அந்த போக்கை எதிர்பவர்களுக்கோ வாய்ப்பாகி விடும்.

அதாவது , நல்லோருக்கு வந்தால் (அல்லது இல்லை என்று நீதி மன்றம் தீர்ப்பு அளித்தால்), மற்ற கோயிகள், இடங்களுக்கும் வருமோ, வராதோ என்பதை சொல்லமுடியாத நிலை இருக்க வேண்டும்.

வரும் என்று வந்தால் - வேளாண் சாமி போன்றவர்கள், உ.ம். கள்ளியங்காடு சந்தையை , அகில் உள்ள வைரவருக்கு அந்த குறிப்பிட்ட தூரத்துக்கு அப்பால் தள்ள வேண்டும் என்று நிற்பார்கள்.

அல்லது கோயில்களில் இருந்து குறிப்பிட்ட தூரதத்துக்குள் (அசைவ) கடைகள் வைக்க கூடாது என்று நிற்பார்கள்

(அதனால் தான் தூரம் போன்ற (நிச்சயமான தன்மை) உள்ள அடிப்படைகளை வைத்து இது போன்றவற்றுக்கு முடிவுக்கு வரக் கூடாது.)

சுமந்திரன் போன்றவர்கள் அரசியலுக்காக வழக்கை கையில் எடுப்பார்கள்.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

499673404_10171121056245368_659993684940

யாழ்ப்பாணத்தில் புதிதாக திறந்துள்ள "Barista" சைவ உணவகம்...

மலையான் கபே, தாமோதர விலாஸ் போன்ற சைவ உணவகங்களுக்கு இணையாக...

மணமணக்கும் மசால் தோசை, மல்லிகைப் பூ போல இட்லி, உளுந்து வடை, யாழ்ப்பாண மரக்கறி கூழ் போன்றவற்றை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று வேண்டுகின்றோம்.

தாவரங்கள் உயிர் உள்ளவை என்று இந்தியா விஞ்ஞானி ஒருவர் எப்போது என்று தெரியாது பிரித்தானியாவில் நிறுவி உளளார். அதை அனைத்து விஞ்ஞானிகளும் ஏற்றுக கொண்டுள்ளார்கள் ஆகவே உயிர் உள்ளவை எல்லாம் அசைவம. தான் பிடுங்கி வைத்த கீரைகள் கூட. வளர்ச்சி அடைகிறது காரணம் அதற்கு உயிர் உண்டு உயிரை கொல்வது பாவம் காய்கறிகள் கொன்று தான் சாப்பிடுகிறோம். இல்லையா ???????????? எனவே காய்கறிகளை. சைவம் சைவச் சாப்பாடு என்று சொல்ல முடியாது 🙏 உங்களின் பதிவுகளை மிக்க ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

உங்களின் பதிவுகளை மிக்க ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது

கோவில் திருவிழாவிற்கு வந்த மேளகாரருக்கு,

ஆடு வெட்டி விருந்து வைத்த பரம்பரையில் வந்த ஆட்களுக்கு, பதில் சொல்லுறது இல்லை. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

கோவில் திருவிழாவிற்கு வந்த மேளகாரருக்கு,

ஆடு வெட்டி விருந்து வைத்த பரம்பரையில் வந்த ஆட்களுக்கு, பதில் சொல்லுறது இல்லை. 😂 🤣

எனக்கு சொல்ல வேண்டாம் ......குமாரசாமி அண்ணைக்கு மட்டும் சொல்லுங்கப்பா 🙏🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

பக்கத்து கிராமத்தவனுக்கு அயல் கிராமத்தில்

தீவகமும் நல்லூரும் அயற்கிராமங்கள் இல்லை 🤣. அப்படி எண்டால் தீவக மக்கள் நல்லூருக்கு ஏன் குடி பெயர்கிறார்கள்.

யாராவது தான் வாழும் கிராமத்தை விட்டு பக்கத்து கிராமத்துக்கு இடம் பெயர்வார்களா?

10 hours ago, விசுகு said:

வந்தேறிகளுக்கு அதன் மீது அக்கறை இருக்காது என்றபடி

மறுபடியும் பச்சை பொய்.

இப்படி நான் எழுதவில்லை.

ஆதாரம் காட்டவும் அல்லது மன்னிப்பு கேட்கவும்.

10 hours ago, விசுகு said:

கு: கருணாநிதி எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா தமிழகம் வந்து 600 வருடங்கள் என்பது எவ்வளவு முட்டுக்கோடுப்பு.

மீண்டும் பச்சை பொய்!

நான் இங்கே இவர்கள் இருவரும் 600 வருடத்துக்கு முன் வந்தவர் என எங்கும் எழுதவில்லை. நீங்கள் எதிர்க்கும் தெலுங்கு வம்சாவழியினர் பல விஜய நகர அரசோடு வந்தவர்கள். அதைதான் சொல்லி உள்ளேன்.

இவர்கள் இருவரும் எப்போ வந்தார்கள் என எனக்கு தெரியாது.

பொய்யே உன் மறுபெயர்தான் விசுகு அண்ணா வா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

கோவில் திருவிழாவிற்கு வந்த மேளகாரருக்கு,

ஆடு வெட்டி விருந்து வைத்த பரம்பரையில் வந்த ஆட்களுக்கு, பதில் சொல்லுறது இல்லை. 😂 🤣

நீங்க வேற, இதை அறிந்ததில் இருந்து எனக்கு கந்தையா அண்ணை மேல் உள்ள மதிப்பு பலமடங்கு எகிறி உள்ளது.

மேளகாரருக்கே இந்த உபசரிப்பு எண்டால் நாங்கள் விருந்தினராக போனால் தடல்புடல் பண்ணி விடுவார் என நினைக்கவே வாயூறுது🤣.

5 hours ago, Kandiah57 said:

தாவரங்கள் உயிர் உள்ளவை என்று இந்தியா விஞ்ஞானி ஒருவர் எப்போது என்று தெரியாது பிரித்தானியாவில் நிறுவி உளளார். அதை அனைத்து விஞ்ஞானிகளும் ஏற்றுக கொண்டுள்ளார்கள் ஆகவே உயிர் உள்ளவை எல்லாம் அசைவம. தான் பிடுங்கி வைத்த கீரைகள் கூட. வளர்ச்சி அடைகிறது காரணம் அதற்கு உயிர் உண்டு உயிரை கொல்வது பாவம் காய்கறிகள் கொன்று தான் சாப்பிடுகிறோம். இல்லையா ???????????? எனவே காய்கறிகளை. சைவம் சைவச் சாப்பாடு என்று சொல்ல முடியாது 🙏 உங்களின் பதிவுகளை மிக்க ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது

உண்மையிலேயே கிடுக்கு பிடி கேள்வி.

2 hours ago, Kandiah57 said:

எனக்கு சொல்ல வேண்டாம் ......குமாரசாமி அண்ணைக்கு மட்டும் சொல்லுங்கப்பா 🙏🤣

இரெண்டு பேரும் எங்களுக்கு விருந்து வையுங்கோ, சாப்பிட்டு பார்த்து ஆர் பெரிய கிடா வெட்டி எண்டு நாங்கள் சொல்லுறம்🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.