Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Kadancha said:

இதை செய்வது நீங்கள் நானல்ல.

சொல்லிய அனைத்தும் உங்களிடம்.

வரலாற்று நூல்களில் (இந்த விடயத்தில், கலவாதியாகிய பழைய) treaty வரலாற்று பார்வையில், நியாதிக்கத்தில்.

அதை ஒரு இப்போதைய treaty (இதில், பொதுவாகவும் ) காற்றுபுகமுடியாத (அரச) இறுக்க தன்மையான பார்வை, கடப்பாடுகள், நிபந்தனைகலோடு ஒப்பிடுவது.

(வரலாற்று நூலில் வந்த புரிவினால் தான் தான் உங்களை அறியாமலே உங்களுக்கு இந்த குழப்பம். அதுவும் அறியாது. நீங்கள் வரலாற்று நூல் சொல்லுவதை தூக்கிப்பிடிப்பதன் காரணம்)

அத்துடன் தொழில்நுட்பத்திலும் பாரிய மாற்றம் (இதில் குறிப்பாக)

(நீங்கள் சொல்லும் வரலாற்று நூல் treaty அந்த நேரத்துக்கு சரியாக இருக்கும்.)

இது போன்றவற்றை அறியாது கதைப்பது.

பொதுவாக இப்பொது இருப்பதை (treaty), வரலாற்று நூல் சொல்லுவது பழைய treaty க்கு ஒப்பிட முடியாது / கூடாது என்பதை கூட தெரியாது ....

தான் செய்வது. பின் மற்றவர்கள் செய்வதாக சொல்வது.

குறிப்பு:

இப்பொது வாசிப்பது மட்டும் தான் என்று இல்லை. உண்மையில் வேறு வடிவ கிரகிப்பு அதே வரலாற்று நூல்களுக்கு முன்பு ஏற்பட்டு இருக்காதா பார்வையை உருவாக்கும், ஏனெனில் வாசிப்பு ஒரு பரிமாணம் மட்டுமே. உ.ம். இப்போது youtube இல் இருக்கும் தெனாலி ராமன். தெனாலி ராமனுக்கு வேறு பார்வை, புரிதலை உருவாகும். வாசிப்பில் தெனாலி விகடன் (கவி) மாத்திரம் என்ற பார்வை மட்டுமே உருவாகும். இது உதாரணத்துக்கு.

முதலில் ஒப்பந்தங்களில் "எழுதாத" விடயங்களை வைத்துக் கொண்டு ஒப்பந்த மீறலைக் கண்டறியும் "தங்க மலை இரகசியத்தைச் சொல்லி விட்டு, மற்றவர்களுக்கு தெனாலி கதை சொல்லுங்கள்😂.

வரலாற்று நூல் என்றால் நான் மார்க்கோ போலோ எழுதிய வரலாற்றைச் சொல்லவில்லை. 1991 இல் ரஷ்யா உடைந்த கதை 2010 இல் வரலாறாக வெளி வந்திருக்கிறது (இதை 1992 இல் ராணி கொமிக்ஸ் போல யாரும் எழுதியுமிருக்கலாம், ஆனால் அதை யாரும் சீரியசான வரலாறாகக் கற்பதில்லை).

நான் முன்னரே சொன்னது போல, உங்களுக்கு வாசிப்பு மிகவும் குறைவு. ஆனால், வாசிக்காத, இல்லாத விடயங்களை வைத்துக் கொண்டு பெட்டி, கடகம், பாய் என்று பின்னும் திறன் அதீதம்😎!

  • Replies 79
  • Views 4.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    எங்களின் போராட்டத்திற்கு இந்திய மத்திய அரசின் ஆதரவு மட்டுமே போதுமானது, அண்ணா. வேறு எந்த நாடுகளின் ஆதரவும் கிடைக்காமல் இருந்திருந்தால் கூட நாங்கள் சமாளித்திருப்போம். இன்று கூட அது தான் நிலை. ஆனால் இந்த

  • goshan_che
    goshan_che

    இல்லை. அப்போ இராணுவத்திடம் புலிகளை விட மேலதிகமாக இருந்தது சியாமாசெட்டி, அவ்ரோ ரக விமானங்களும், ஹெலிகாப்டர்களும், ராடார் கருவிகளும், ரன்வேக்களும், முக்கியமாக வெளிநாட்டு உள்நாட்டு இராணுவ கல்லூரிகளில் க

  • வைரவன்
    வைரவன்

    ஐயா, நீங்கள் எந்த மொழியில் எழுதுகின்றீர்கள் என சொல்ல முடியுமா? அல்லது, நீங்கள் மர்ம மொழியில் எழுதிய பின் தமிழில் பொழிப்புரை யை சுருக்கமாகவேனும் தர முடியுமா? நான் ஒரு பாமரன் எனக்கு மண்டை காயுது ஐயா கரு

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, விசுகு said:

இராணுவத்தினர் தற்கொலையாளிகளை கொண்டா புலிகளின் முகாம்களை தகர்த்தனர். அவர்களிடம் இருந்த அனைத்தையும் நாமும் பெற்றிருக்க முடியும். ஏன் வாங்காமல், ஆட்பலம் இல்லாதபோதும் ஆட்களை கொடுத்தோம் மனிதர்களை அனுப்பினோம் என்றால் ஒரே விடை மட்டுமே பணபலமில்லை.

கோசானே எழுதி விட்டார் பல விடயங்களை.

மேலதிகமாக, இராணுவத்திடம் இருந்தது போன்ற பார வாகனங்கள் முதல் கொண்டு, தாங்கிகள் , பீரங்கிகளை எப்படி ஒரு தடை செய்த அமைப்பு சந்தையில் வாங்கியிருக்க முடியும்? வாங்கினாலும் எப்படி சமுத்திரங்களூடாகக் கொண்டு வந்திருக்க முடியும்? நீங்கள் புலிகள் அமைப்பின் உள் நிலைமைகள் தெரிந்த ஒருவராக இருந்தவர், இப்படியாக எங்கே பலவீனம் இருந்தது என்பதை அறியாமல் இருப்பது ஆச்சரியம் தருகிறது.

1991 இல் சோவியத் ஒன்றியம் உடைந்து, உக்ரைன் போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கைவிடப் பட்ட ஆயுதங்கள் சட்ட விரோத ஆயுதக் கடத்தல் காரர்களிடம் மாட்டிக் கொண்ட பின்னர் தான், புலிகளுக்கு ஆயுதங்கள் சர்வதேசச் சந்தையில் இலகுவாகக் கிடைக்க ஆரம்பித்தன என ஊகிக்கிறேன்.

இத்தகைய சோவியத் ஆயுதங்களை, கைவிடப் பட்ட அன்ரனோவ் சரக்கு விமானங்களில் கூலிக்கு விமானிகளை வைத்து உலகம் முழுவதும் கடத்திய ரஷ்யர் Victor Bout, அண்மையில் தான் அமெரிக்க சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டார். கிழக்கு, தெற்கு ஆசியாவிலும் இவருக்கு வாடிக்கையாளர்கள் இருந்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

ரஸ்ஸியாவுக்கு விழுந்த அடியைப் பார்த்து ரஸ்ஸியர்கள் என்ன சொல்கிறார்களோ எனக்குத் தெரியவில்லை, ஆனால் இந்தியாவில் பலர், "ஏன் ரஸ்ஸியா தனது விஸ்வரூபத்தைக் காட்டவில்லை, ஏன் புட்டின் ஐயா பொறுமை காக்கிறார்? ஏன் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையை முழுப்போராக மாற்றவில்லை? ஏன் அணுவாயுதத்தைப் பாவிக்கவில்லை?" என்று கோபம்கொண்டு கேள்விக்கு மேல் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.

🤣

தமிழ் ஹிந்தி திராவிடமாக இருந்தாலும் அவாகளுக்கு இந்தியர்களின் உயிர் நண்பன் ரஷ்யா புட்டினுக்கு ஏதாவது என்றால் துடித்து போய் விடுவார்கள்.ஆனால் சமீபத்தில் நடந்த அவர்களின் பாக்கிஸ்தானுடனான சண்டையில் அவர்களை ரஷ்யா பெரிதாக ஆதரித்தாக தெரியவில்லை

2 hours ago, ரஞ்சித் said:

விட்டால் புட்டின் ஒரு கையை பின்னால் மடித்துக்கொண்டு, மற்றைய கையினால் மட்டுமே போராடி வருகிறார் என்று சொன்னாலும் சொல்வார்கள். ஏனென்றால், இந்திய அமைதிப்படை அப்படித்தான் இலங்கையில் போராடியதாம்!

🤣 அதோ போன்று புட்டினை பற்றி அடித்துவிடும் தமிழ் பொக்கிசத்தார் என்று ஒருவரின் காணொளி ஒன்று பார்த்தேன். இப்போது என்ன சொல்லுவாரோ என்று தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Justin said:

1991 இல் ரஷ்யா உடைந்த கதை

91 கதையை இப்பொது கதைக்க முடியாது. அதையே நான் சொல்வது.

(அப்போது ஏன் அமெரிக்காவே தொடர்ந்து அந்த 91 91 அளவில் treaty ஐ வைத்து இருந்து இருக்கலாமே இப்போதும்?

ஏன் அவ்வளவு சிந்திப்புகள், brain storming ஒவொன்றுக்கும் பல்வேறு அரச / துறை சார் மட்டத்தில்?

பின்பு ratify பண்ணும் போதும் அப்படியே காங்கிரஸ், செனட் பல்வேறு விளக்கங்கங்கள்)

ஒவ்வொன்றும் ஆககூடியது 10 வருடங்கள்.

இப்பொது செய்ப்படும் ஒரு treaty (குறிப்பாக அணு ஆயுத்தக்கு) அடுத்த 10 வருடங்களுக்கு பலவேறு சவால்களுக்கு மத்தியில் நிற்க கூடியதாக, இறுக்கமாக நடைமுறைபடுத்த கூடியதாக இருக்க வேண்டும்.

(இதில் பூகோள , தொழில்நுட்ப / பொருளாதார மாற்றங்கள், வளர்ச்சிகள், அரசியல் தலைமை மாற்றம் போன்ற பல்வேறு காரணிகள் கருத்தில் எடுக்கப்படும்)

சும்மா தெரியாது கதைப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு ட்ரோனும் சில நூறு ஈரோ செலவில் செய்யப்பட்டவை. மொத்தமாக 117 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று உக்ரேன் அதிகாரிகள் சொல்லியிருக்கின்றனர். இந்தச் சிறிய ட்ரோன்கள் ஒரு வீட்டின் அடுப்படி வரை போகுமே............ இதில் ரஷ்யர்கள் அவர்களின் விமானங்களை எங்கே நிற்பாட்டி இருந்தார்கள், ஏன் அப்படி நிற்பாட்டி இருந்தார்கள் என்பது தான் பிரச்சனையா...........

ரஷ்யாவின் ஆதிக்கத்திற்கு எதிராக உக்ரேனிய மக்களும், அரசும் தொடர்ந்து காட்டிக் கொண்டிருக்கும் எதிர்ப்பு மிகவும் ஆச்சரியமாக, பிரமிப்பாக இருக்கின்றது. அதுவும் அமெரிக்காவின் சமீபத்திய மிகத் தளம்பலான ஒரு நிலைப்பாட்டின் பின்னும் கூட. ஒரு எல்லை நாடாக இருந்து கொண்டே ஒரு பெரிய வல்லரசுடன் இப்படி மோதுவது என்பது ரஷ்யாவிற்கு மட்டும் இல்லை, அமெரிக்காவிற்கும் ஒரு பாடமே.

உக்ரேன் ஒரு வருடத்தில் இப்படியான ஐந்து மில்லியன் ட்ரோன்களை தயாரிக்கும் வல்லமை தங்களுக்கு இருக்கின்றது என்று சொல்லியிருக்கின்றது. உலகமே பெரிய ஒரு சிக்கலில் மாட்டுப்பட்டிருக்கின்றது. எந்த நாட்டிலும், எந்த தளமும் பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது போல.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

கோசானே எழுதி விட்டார் பல விடயங்களை.

மேலதிகமாக, இராணுவத்திடம் இருந்தது போன்ற பார வாகனங்கள் முதல் கொண்டு, தாங்கிகள் , பீரங்கிகளை எப்படி ஒரு தடை செய்த அமைப்பு சந்தையில் வாங்கியிருக்க முடியும்? வாங்கினாலும் எப்படி சமுத்திரங்களூடாகக் கொண்டு வந்திருக்க முடியும்? நீங்கள் புலிகள் அமைப்பின் உள் நிலைமைகள் தெரிந்த ஒருவராக இருந்தவர், இப்படியாக எங்கே பலவீனம் இருந்தது என்பதை அறியாமல் இருப்பது ஆச்சரியம் தருகிறது.

1991 இல் சோவியத் ஒன்றியம் உடைந்து, உக்ரைன் போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கைவிடப் பட்ட ஆயுதங்கள் சட்ட விரோத ஆயுதக் கடத்தல் காரர்களிடம் மாட்டிக் கொண்ட பின்னர் தான், புலிகளுக்கு ஆயுதங்கள் சர்வதேசச் சந்தையில் இலகுவாகக் கிடைக்க ஆரம்பித்தன என ஊகிக்கிறேன்.

இத்தகைய சோவியத் ஆயுதங்களை, கைவிடப் பட்ட அன்ரனோவ் சரக்கு விமானங்களில் கூலிக்கு விமானிகளை வைத்து உலகம் முழுவதும் கடத்திய ரஷ்யர் Victor Bout, அண்மையில் தான் அமெரிக்க சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டார். கிழக்கு, தெற்கு ஆசியாவிலும் இவருக்கு வாடிக்கையாளர்கள் இருந்திருக்கிறார்கள்.

இவை அனைத்தும் தெரிந்தவை தான். ஆனால் இயக்கம் பணத்தில் திணைத்திருந்தது அங்காங்கே பணம் இருந்தபோதிலும் அவை பயன்படுத்தப்படவில்லை என்பது போன்ற கருத்ததையே நான் மறுதலித்தேன். அதற்கு சாட்சியாக வீட்டிற்கு ஒரு பவுண் மற்றும் புலத்தில் சில மக்கள் பாதிக்கப்படக்கூடிய பணச்சேர்ப்புக்கள் அனைத்தும் பணத்தேவையால் அல்லது பணப்பற்றாக்குறையால் முன் தள்ளப்பட்டவையே. அங்கே இருந்தவன் என்ற அடிப்படையில் இதை தான் என்னால் சொல்லமுடியும்.

மற்றும் படி சண்டை பிடித்த ஒரு தரப்பினர் உலகமே கூட நின்ற போதும் வங்குரோத்து நிலையடைந்து பிச்சை எடுக்கும் நிலையில் மக்களின் ஒரு பகுதியினரின் பங்களிப்புடன் அதே சண்டையை எதிர்கொண்ட தரப்பு செல்வச் செழிப்பானது என்பதை யாரும் நம்ப மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, விசுகு said:

பாதிக்கப்படக்கூடிய பணச்சேர்ப்புக்கள் அனைத்தும் பணத்தேவையால் அல்லது பணப்பற்றாக்குறையால் முன் தள்ளப்பட்டவையே. அங்கே

அது சரி விசுகர் ....ஜேர்மனியில்

புலிகளின். உணகவம்.

புலிகளின். கடை.

புலிகளின். கோயில் ....

இப்படி நிறையவே முதலீடுகள் இருந்தது இது இங்குள்ள மக்கள் கொடுத்த பணம,.

என்னிடம் பணம் சேர்க்க வந்தவர் 30 யூரோ  இருந்து 50 யூரோ  மாதக் கொடுப்பனவு உயர்ந்தப்படவேண்டும் என்றார் நான் சொன்னேன் சரி தரலாம். ஆனால் இந்த முதலீடுகளை ஏன் செய்கிறீர்கள் ?? இதனால் தான் பணம் பற்றாக்குறை. ஏற்படுகிறது அல்லது தேவைப்படுகிறது என்றேன் அவர் சொன்னார் .....இலங்கையில் புலிகள் இயங்க முடியாத நிலை ஏற்ப்பட்டாலும். விடுதலை போராட்டம் தொடர வேண்டும் அதற்கு நிதி வேண்டும் அந்த நேரத்தில் இந்த முதலீடுகள். வருமானம் தரும் என்றார் .....வெளிநாடுகளில் புலிகளின் முதலீடுகள். எத்தனை பில்லியன் டொலர் ..??,.....இந்த பணம் யார் கொடுத்தார்கள்???? ஆகவே மக்கள் பணம் கொடுக்கவில்லை என்பது சரியா??? இல்லை வெளிநாட்டில் புலிகளின். நிர்வாகிகள் ... நிதியை கையாண்ட விதம் பிழையா ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இயக்கம் பணத்தில் திணைத்திருந்தது அங்காங்கே பணம் இருந்தபோதிலும் அவை பயன்படுத்தப்படவில்லை என்பது போன்ற கருத்ததையே நான் மறுதலித்தேன்

இந்த திரியில் இது போன்ற ஒரு கருத்தை யாருமே எழுதவில்லை.

நீங்கள் கற்பனையில் கத்தி சுத்துகிறீர்கள் என நினைக்கிறேன்.

செல்லக்கிளி அம்மானின் பிஸ்டல் தொடங்கி, இறுதிவரை இயக்கமும், அதற்கு நிதி வழங்கியமக்களும் எப்போதும் போதியளவு நிதி இல்லாமல்தான் இருந்தார்கள் என்பது 2000 க்கு முன் பிறந்த ஈழ தமிழர் அனைவருக்கும் தெரியும்.

மேலே ரஞ்சித், புலிகள் கரும்புலிகளையும், உக்ரேன் டிரோன்களையும் மட்டும் பயன்படுத்துகிறது என்ற வேற்றுமையை மட்டுமே எழுதினார்.

அதுதான் உண்மை.

நீங்கள்தான் டிரோன்களை பாவிக்கும் கருத்தை ஒட்டி, புலிகளுக்கு பணம் வழங்க மக்களுக்கு மனம் இருந்திருந்தால் அவர்களும் கரும்புலிகளை அனுப்பி இருக்க வேண்டி வராது என எழுதினீர்கள்.

அப்படி அல்ல. மக்கள் தம் இயலுமைக்கு மேலாகவே, ஒரு குழுவாக பணம் கொடுத்தனர்.

ஆனால் சந்தையில் அப்போ கரும்புலிகளுக்கு நிகரான ஒரு கருவி இருக்கவில்லை என்பதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, ரசோதரன் said:

ரஷ்யாவின் ஆதிக்கத்திற்கு எதிராக உக்ரேனிய மக்களும், அரசும் தொடர்ந்து காட்டிக் கொண்டிருக்கும் எதிர்ப்பு மிகவும் ஆச்சரியமாக, பிரமிப்பாக இருக்கின்றது. அதுவும் அமெரிக்காவின் சமீபத்திய மிகத் தளம்பலான ஒரு நிலைப்பாட்டின் பின்னும் கூட. ஒரு எல்லை நாடாக இருந்து கொண்டே ஒரு பெரிய வல்லரசுடன் இப்படி மோதுவது என்பது ரஷ்யாவிற்கு மட்டும் இல்லை, அமெரிக்காவிற்கும் ஒரு பாடமே.

உக்ரேனும் உக்ரேன் மக்களும் தனித்து நின்று போராடினால் பாராட்டலாம். வாழ்த்தலாம்.வணங்கலாம். 😁

உக்ரேனுக்கு பின் பலமாக நிற்பது ஐரோப்பிய ஒன்றியம். அதன் இராணுவ உதவிகளும் பண உதவிகளும் தொழிநுட்ப உதவிகளும் எண்ணிலடங்காதவை. அதிலும் ஐரோப்பாவில் இருக்கும் முன்னணி நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு உக்ரேனுக்கு உதவிகள் செய்கின்றன.அதிலும் ஜேர்மனியின் உதவிகள் கணக்கற்றவை.

அதிலும் அமெரிக்கா உக்ரேனுக்கான ஆயுத விடயத்தில் தளம்பினாலும் உளவு விடயத்தில் அமெரிக்கா தான் முன்னணி வகிப்பதாக கூறுகின்றார்கள்.

இப்படியிருக்கும் போது தனியே உக்ரேனை மட்டும் பார்த்து பிரமிப்பது சரியல்ல. 😂

இப்படியாக பல உந்து சக்திகள் ஈழப்போராட்டத்திற்கும் இருந்திருக்குமேயானால் இன்றைய நிலை வேற லெவல்ல இருந்திருக்கும்.cool

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஒரு மாபெரும் எதிரியை எதிர்க்க துணிந்த பின், தனித்து நிற்காமல், ஏனைய நாடுகளின் நலனினை தமது நலனுடன் சமாந்திரபடுத்த, இடைவிடாது உழைப்பதே, ஒரு அசாத்திய திறமைதான்.

குறிப்பாக டிரம்பின் அத்தனை தகிடுதத்தங்களுக்கு பின்னும் - இந்த சமாந்தரப்படுத்தலை உந்திதள்ளுவது, உக்ரேனின் சகல இராணுவ நகர்வுகளையும் விட பிரமிக்கதக்க விடயம்.

ஆனால் உக்ரேன் ஐரோப்பாவில் இருப்பதும், அதன் எதிரியால் பாதிக்க படக்கூடிய ஏனைய பலமிக்க நாடுகள் அதை சூழ இருப்பதும் உக்ரேனின் அமைவிட-அதிஸ்டம்தான் என்பதில் மாற்று கருத்து இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

உக்ரேனுக்கு பின் பலமாக நிற்பது ஐரோப்பிய ஒன்றியம். அதன் இராணுவ உதவிகளும் பண உதவிகளும் தொழிநுட்ப உதவிகளும் எண்ணிலடங்காதவை. அதிலும் ஐரோப்பாவில் இருக்கும் முன்னணி நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு உக்ரேனுக்கு உதவிகள் செய்கின்றன.அதிலும் ஜேர்மனியின் உதவிகள் கணக்கற்றவை.

ஏன் உதவி செய்கிறார்கள்???

உக்கிரேன். சுதந்திர நாடாக விடுதலை பெற்ற நாடாக வேண்டும் என்றா. ?? இல்லை

வேறு காரணங்கள் உண்டா ??? ....பிரித்தானியா பிரான்ஸ் ஜேர்மனி ...ஆகிய நாடுகளை. 200. செக்கன்களில். அழிக்க முடியும் என்று ரஷ்யா கூறியது உண்மையானல். ...அதன் பொருள் கருத்துகள் உக்கிரேனுக்கு. உதவுங்கள் என்று ரஷ்யா சொல்வதாகும். நீங்கள் சொல்லும் நாடுகள் காரணம் இன்றி உதவ இல்லை ...இவர்கள் தங்களை பாதுகாப்பை உறுதி படுத்த தான் உதவுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kadancha said:

இதை செய்வது நீங்கள் நானல்ல.

சொல்லிய அனைத்தும் உங்களிடம்.

வரலாற்று நூல்களில் (இந்த விடயத்தில், கலவாதியாகிய பழைய) treaty வரலாற்று பார்வையில், நியாதிக்கத்தில்.

அதை ஒரு இப்போதைய treaty (இதில், பொதுவாகவும் ) காற்றுபுகமுடியாத (அரச) இறுக்க தன்மையான பார்வை, கடப்பாடுகள், நிபந்தனைகலோடு ஒப்பிடுவது.

(வரலாற்று நூலில் வந்த புரிவினால் தான் தான் உங்களை அறியாமலே உங்களுக்கு இந்த குழப்பம். அதுவும் அறியாது. நீங்கள் வரலாற்று நூல் சொல்லுவதை தூக்கிப்பிடிப்பதன் காரணம்)

அத்துடன் தொழில்நுட்பத்திலும் பாரிய மாற்றம் (இதில் குறிப்பாக)

(நீங்கள் சொல்லும் வரலாற்று நூல் treaty அந்த நேரத்துக்கு சரியாக இருக்கும்.)

இது போன்றவற்றை அறியாது கதைப்பது.

பொதுவாக இப்பொது இருப்பதை (treaty), வரலாற்று நூல் சொல்லுவது பழைய treaty க்கு ஒப்பிட முடியாது / கூடாது என்பதை கூட தெரியாது ....

தான் செய்வது. பின் மற்றவர்கள் செய்வதாக சொல்வது.

குறிப்பு:

இப்பொது வாசிப்பது மட்டும் தான் என்று இல்லை. உண்மையில் வேறு வடிவ கிரகிப்பு அதே வரலாற்று நூல்களுக்கு முன்பு ஏற்பட்டு இருக்காதா பார்வையை உருவாக்கும், ஏனெனில் வாசிப்பு ஒரு பரிமாணம் மட்டுமே. உ.ம். இப்போது youtube இல் இருக்கும் தெனாலி ராமன். தெனாலி ராமனுக்கு வேறு பார்வை, புரிதலை உருவாகும். வாசிப்பில் தெனாலி விகடன் (கவி) மாத்திரம் என்ற பார்வை மட்டுமே உருவாகும். இது உதாரணத்துக்கு.

ஐயா,

நீங்கள் எந்த மொழியில் எழுதுகின்றீர்கள் என

சொல்ல முடியுமா?

அல்லது,

நீங்கள் மர்ம மொழியில் எழுதிய பின்

தமிழில் பொழிப்புரை யை

சுருக்கமாகவேனும் தர முடியுமா?

நான் ஒரு பாமரன்

எனக்கு மண்டை காயுது ஐயா

கருணை காட்டுங்கள்

Edited by வைரவன்

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனுக்குப் பதிலடி குடுக்க செத்தகிளியிட்ட காசில்லையாம். செத்தகிளி லவ்வர்ஸ் ஆளாளுக்கு பத்துப் பவுண் அனுப்பினால் தாக்குதல் செய்யலாமாம். இவையளோட சேர்ந்து வாயாலை வடைசுடும் இந்தியனுகளும் அனுப்பினால் செத்தகிளியை காப்பாற்றலாம். செய்வார்களா?😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வைரவன் said:

ஐயா,

நீங்கள் எந்த மொழியில் எழுதுகின்றீர்கள் என

சொல்ல முடியுமா?

அல்லது,

நீங்கள் மர்ம மொழியில் எழுதிய பின்

தமிழில் பொழிப்புரை யை

சுருக்கமாகவேனும் தர முடியுமா?

நான் ஒரு பாமரன்

எனக்கு மண்டை காயுது ஐயா

கருணை காட்டுங்கள்

ஒரு வேளை நடிகர் கமலஹாசந்தான் இப்படி ஒரு பெயரில் வந்து யாழ் கள உறுப்பினர்களுக்கு மண்டைகாய வைக்கிறாரோ என நான் சந்தேகிக்கிறேன்🤣.

நுனிப்புல் மேய்வதும்…

அதைவைத்து கொண்டு மேதாவி போல காட்ட முனைந்து மூக்குடை படுவதும்….

தனக்கென புதிய மொழி ஒன்றை உருவாக்கி கொள்வதும்….

பத்து பொருத்தமும் பொருந்துகிறதா இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

ஒரு மாபெரும் எதிரியை எதிர்க்க துணிந்த பின், தனித்து நிற்காமல், ஏனைய நாடுகளின் நலனினை தமது நலனுடன் சமாந்திரபடுத்த, இடைவிடாது உழைப்பதே, ஒரு அசாத்திய திறமைதான்.

குறிப்பாக டிரம்பின் அத்தனை தகிடுதத்தங்களுக்கு பின்னும் - இந்த சமாந்தரப்படுத்தலை உந்திதள்ளுவது, உக்ரேனின் சகல இராணுவ நகர்வுகளையும் விட பிரமிக்கதக்க விடயம்.

உக்ரேனின் ஜனநாயக நியாயத்தன்மையை மறுப்பது தவறானது மட்டுமல்ல டொனால்ட் ரம்பாலேயே பைத்தியம் என்று அழைக்கபட்ட கொடியவனை ஊக்குவிக்கும் ஆபத்தானதும் ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இப்படியிருக்கும் போது தனியே உக்ரேனை மட்டும் பார்த்து பிரமிப்பது சரியல்ல. 😂

இப்படியாக பல உந்து சக்திகள் ஈழப்போராட்டத்திற்கும் இருந்திருக்குமேயானால் இன்றைய நிலை வேற லெவல்ல இருந்திருக்கும்.cool

எங்களின் போராட்டத்திற்கு இந்திய மத்திய அரசின் ஆதரவு மட்டுமே போதுமானது, அண்ணா. வேறு எந்த நாடுகளின் ஆதரவும் கிடைக்காமல் இருந்திருந்தால் கூட நாங்கள் சமாளித்திருப்போம். இன்று கூட அது தான் நிலை. ஆனால் இந்திய மத்திய அரசு என்றும் அப்படியான ஒரு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் என்று நான் நம்பவில்லை.

எங்களின் நிலை மட்டும் இல்லை, காசாவில் பாலஸ்தீன மக்களின் நிலையைப் பாருங்கள், அண்ணா. நேற்று நிவாரணம் பெற வரிசையில் நின்ற அந்த மக்கள் வரிசையை மீறி விட்டார்கள் என்று சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதற்கு முதல் நாளும் அந்த மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அங்கு மருத்துவமனை வாசலிலேயே அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றார்கள். உலகமும், அராபியர்களும் பாலஸ்தீனியர்களுக்கு உதவி செய்து இதைத் தடுக்க முடியாதா?

மணிப்பூரிலும் இதே நிலை தான். ஒரு மொழி, ஒரு மதம், ஒரு கலாச்சாரம் என்று இருக்கும் பெரும் தேசங்களில் எல்லாம் இந்தக் கொடுமைகள் தினமும் நடந்து கொண்டேயிருக்கின்றன. வெகு சில செய்திகளும், நிகழ்வுகளுமே வெளியே தெரியவருகின்றன. ஆதிக்கங்களின் அடக்குமுறைகளுக்குள் எத்தனையோ மக்கள் திரள்கள் தங்களின் அடையாளங்களை இழந்து வாழ்ந்து மடிகின்றார்கள்.

ஆனாலும் இவற்றில் சில மக்கள் திரள்கள் பெரும் இழப்புகள் தங்களுக்கு வரும் என்று தெரிந்தும் முடிந்தவரை ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் போராடுகின்றார்கள். உலகம் ஒரு முள்ளிவாய்க்காலையோ அல்லது ஒரு காசாவையோ மட்டும் கண்டுவிடவில்லை. இவை திரும்பத் திரும்ப நடந்து கொண்டேயிருக்கின்றன.

உக்ரேனுக்கு தற்காலிகமாகவேனும் உதவிகள் கிடைப்பது அந்த உக்ரேனிய மக்களுக்கு கிடைத்த ஒரு கொடை. என்ன தான் உதவிகள் கிடைத்தாலும் களத்தில் போராடுவதும், இழப்பதும் அந்த மக்கள் மட்டும் தானே, உதவும் உலகம் எதையும் இழக்கவில்லை. கொடுத்த உதவிக்கு கணக்கு எழுதி, அவர்களின் வளங்களையல்லவா ஈடாகக் கேட்கின்றது இந்த உலகம். இந்த உலகில் எந்த ஒடுக்கப்படும் மக்கள் திரளுக்கும் ஒரு தார்மீக ஆதரவு கூட காட்ட முடியாவிட்டால், நான் கடந்து வந்த பாதைதான் என்ன.................

இந்த தாக்குதல் நடப்பதற்கு முதல் நாளும் ரஷ்யா உக்ரேன் குடியிருப்புகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அப்பாவி உக்ரேனிய மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் உக்ரேன் தெரிந்தெடுத்த ரஷ்ய இராணுவ விமான இலக்குகள் மீதே தனது தாக்குதலை நடத்தியது. இப்போது 'உக்ரேன் செய்தது ஒரு பயங்கரவாதச் செயல்................' என்று சொல்லிக் கொண்டிருக்கின்றது ரஷ்யா. இப்படித்தானே நாங்களும் இலங்கை அரசால் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டோம்.

Edited by ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

இந்த உலகில் எந்த ஒடுக்கப்படும் மக்கள் திரளுக்கும் ஒரு தார்மீக ஆதரவு கூட காட்ட முடியாவிட்டால், நான் கடந்து வந்த பாதைதான் என்ன.................

அருமை 👏

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

இந்த திரியில் இது போன்ற ஒரு கருத்தை யாருமே எழுதவில்லை.

நீங்கள் கற்பனையில் கத்தி சுத்துகிறீர்கள் என நினைக்கிறேன்.

செல்லக்கிளி அம்மானின் பிஸ்டல் தொடங்கி, இறுதிவரை இயக்கமும், அதற்கு நிதி வழங்கியமக்களும் எப்போதும் போதியளவு நிதி இல்லாமல்தான் இருந்தார்கள் என்பது 2000 க்கு முன் பிறந்த ஈழ தமிழர் அனைவருக்கும் தெரியும்.

மேலே ரஞ்சித், புலிகள் கரும்புலிகளையும், உக்ரேன் டிரோன்களையும் மட்டும் பயன்படுத்துகிறது என்ற வேற்றுமையை மட்டுமே எழுதினார்.

அதுதான் உண்மை.

நீங்கள்தான் டிரோன்களை பாவிக்கும் கருத்தை ஒட்டி, புலிகளுக்கு பணம் வழங்க மக்களுக்கு மனம் இருந்திருந்தால் அவர்களும் கரும்புலிகளை அனுப்பி இருக்க வேண்டி வராது என எழுதினீர்கள்.

அப்படி அல்ல. மக்கள் தம் இயலுமைக்கு மேலாகவே, ஒரு குழுவாக பணம் கொடுத்தனர்.

ஆனால் சந்தையில் அப்போ கரும்புலிகளுக்கு நிகரான ஒரு கருவி இருக்கவில்லை என்பதுதான் உண்மை.

சகோ தொடர்ந்து இது பற்றி பேச விரும்பவில்லை

நான் உயிர் கொடுப்பதை தடுக்கும் ஆயுதங்கள் இருந்தன என்று தான் சொல்கிறேன். நீங்கள் விமானங்கள் மற்றும் டிரோன்கள் பற்றி பேசுகிறீர்கள்.

ஒவ்வொரு தற்கொலை போராளியும் தம்முயிரை கொடுத்த நாட்கள் நாங்கள் தூக்கத்தை விட்டு அழுத நாட்களாக இருந்தன. இதை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் மேலும் மேலும் ஓடிய நாட்களாக இருந்தன. இதற்கு மேல் இது பற்றி எழுத எதுவுமில்லை. நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, goshan_che said:

ஒரு மாபெரும் எதிரியை எதிர்க்க துணிந்த பின், தனித்து நிற்காமல், ஏனைய நாடுகளின் நலனினை தமது நலனுடன் சமாந்திரபடுத்த, இடைவிடாது உழைப்பதே, ஒரு அசாத்திய திறமைதான்.

உக்ரேனியர்கள் உழைக்கா விட்டாலும் ஐரோப்பிய ஒன்றியமும் இங்கிலாந்தும் தொடர்ந்து உக்ரேனுக்காக உழைத்துக்கொண்டே இருக்கும்.😁

9 hours ago, goshan_che said:

குறிப்பாக டிரம்பின் அத்தனை தகிடுதத்தங்களுக்கு பின்னும் - இந்த சமாந்தரப்படுத்தலை உந்திதள்ளுவது, உக்ரேனின் சகல இராணுவ நகர்வுகளையும் விட பிரமிக்கதக்க விடயம்.

பிரான்ஸ்,இங்கிலாந்து,ஜேர்மனி அதை செவ்வனே செய்கின்றது.செய்யும். செய்ய வேண்டிய கடப்பாடு அவர்களுக்குள்ளது. எம்மைப்போல் நாட்டை விட்டுட்டு ஓடியவர்கள் பட்டியலில் உக்ரேனியர்களும் அடங்குவர்.😂

9 hours ago, goshan_che said:

உக்ரேன் ஐரோப்பாவில் இருப்பதும், அதன் எதிரியால் பாதிக்க படக்கூடிய ஏனைய பலமிக்க நாடுகள் அதை சூழ இருப்பதும் உக்ரேனின் அமைவிட-அதிஸ்டம்தான் என்பதில் மாற்று கருத்து இல்லை.

உக்ரேன் விடயத்தில் நீங்கள் கூறியதுதான் சரியான கருத்து. 👍

மற்றும் படி உலகில் இல்லாத அத்துமீறல் என உக்ரேனில் புதிதாக ஒன்றுமில்லை. நீதிமான்களும் உக்ரேனுக்காக மட்டும் கண்ணை திறக்க வேண்டிய அவசியமும் இல்லா.😎

6 hours ago, Kandiah57 said:

ஏன் உதவி செய்கிறார்கள்???

உக்கிரேன். சுதந்திர நாடாக விடுதலை பெற்ற நாடாக வேண்டும் என்றா. ?? இல்லை

வேறு காரணங்கள் உண்டா ??? ....பிரித்தானியா பிரான்ஸ் ஜேர்மனி ...ஆகிய நாடுகளை. 200. செக்கன்களில். அழிக்க முடியும் என்று ரஷ்யா கூறியது உண்மையானல். ...அதன் பொருள் கருத்துகள் உக்கிரேனுக்கு. உதவுங்கள் என்று ரஷ்யா சொல்வதாகும். நீங்கள் சொல்லும் நாடுகள் காரணம் இன்றி உதவ இல்லை ...இவர்கள் தங்களை பாதுகாப்பை உறுதி படுத்த தான் உதவுகிறார்கள்.

ஒரு பக்கம் ரஷ்யாவை செத்த கிளி என்கிறார்கள். 😜

இன்னொரு பக்கம் உங்களை போன்றோர் ரஷ்யா 200 செக்கனில் ஜேர்மனி,பிரான்ஸ்,இங்கிலாந்து போன்ற நாடுகளை அழிப்பார்கள் என்பதால் தான் தங்கள் பாதுகாப்பிற்காக உக்ரேனுக்கு உதவுகின்றார்கள் என நியாயம் பிளக்கின்றீகள். எனவே முதலில் உங்களுக்குள் கூடி பறைஞ்சு ஒரு முடிவிற்கு வாருங்கள் கந்தையர்!

1 hour ago, ரசோதரன் said:

எங்களின் போராட்டத்திற்கு இந்திய மத்திய அரசின் ஆதரவு மட்டுமே போதுமானது, அண்ணா. வேறு எந்த நாடுகளின் ஆதரவும் கிடைக்காமல் இருந்திருந்தால் கூட நாங்கள் சமாளித்திருப்போம். இன்று கூட அது தான் நிலை. ஆனால் இந்திய மத்திய அரசு என்றும் அப்படியான ஒரு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் என்று நான் நம்பவில்லை.

எங்களின் நிலை மட்டும் இல்லை, காசாவில் பாலஸ்தீன மக்களின் நிலையைப் பாருங்கள், அண்ணா. நேற்று நிவாரணம் பெற வரிசையில் நின்ற அந்த மக்கள் வரிசையை மீறி விட்டார்கள் என்று சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதற்கு முதல் நாளும் அந்த மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அங்கு மருத்துவமனை வாசலிலேயே அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றார்கள். உலகமும், அராபியர்களும் பாலஸ்தீனியர்களுக்கு உதவி செய்து இதைத் தடுக்க முடியாதா?

மணிப்பூரிலும் இதே நிலை தான். ஒரு மொழி, ஒரு மதம், ஒரு கலாச்சாரம் என்று இருக்கும் பெரும் தேசங்களில் எல்லாம் இந்தக் கொடுமைகள் தினமும் நடந்து கொண்டேயிருக்கின்றன. வெகு சில செய்திகளும், நிகழ்வுகளுமே வெளியே தெரியவருகின்றன. ஆதிக்கங்களின் அடக்குமுறைகளுக்குள் எத்தனையோ மக்கள் திரள்கள் தங்களின் அடையாளங்களை இழந்து வாழ்ந்து மடிகின்றார்கள்.

ஆனாலும் இவற்றில் சில மக்கள் திரள்கள் பெரும் இழப்புகள் தங்களுக்கு வரும் என்று தெரிந்தும் முடிந்தவரை ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் போராடுகின்றார்கள். உலகம் ஒரு முள்ளிவாய்க்காலையோ அல்லது ஒரு காசாவையோ மட்டும் கண்டுவிடவில்லை. இவை திரும்பத் திரும்ப நடந்து கொண்டேயிருக்கின்றன.

உக்ரேனுக்கு தற்காலிகமாகவேனும் உதவிகள் கிடைப்பது அந்த உக்ரேனிய மக்களுக்கு கிடைத்த ஒரு கொடை. என்ன தான் உதவிகள் கிடைத்தாலும் களத்தில் போராடுவதும், இழப்பதும் அந்த மக்கள் மட்டும் தானே, உதவும் உலகம் எதையும் இழக்கவில்லை. கொடுத்த உதவிக்கு கணக்கு எழுதி, அவர்களின் வளங்களையல்லவா ஈடாகக் கேட்கின்றது இந்த உலகம். இந்த உலகில் எந்த ஒடுக்கப்படும் மக்கள் திரளுக்கும் ஒரு தார்மீக ஆதரவு கூட காட்ட முடியாவிட்டால், நான் கடந்து வந்த பாதைதான் என்ன.................

இந்த தாக்குதல் நடப்பதற்கு முதல் நாளும் ரஷ்யா உக்ரேன் குடியிருப்புகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அப்பாவி உக்ரேனிய மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் உக்ரேன் தெரிந்தெடுத்த ரஷ்ய இராணுவ விமான இலக்குகள் மீதே தனது தாக்குதலை நடத்தியது. இப்போது 'உக்ரேன் செய்தது ஒரு பயங்கவரவாதச் செயல்................' என்று சொல்லிக் கொண்டிருக்கின்றது ரஷ்யா. இப்படித்தானே நாங்களும் இலங்கை அரசால் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டோம்.

மனிதாபிமானத்திற்காக உக்ரேன் மீது பரிதாபப்படுகின்றீர்கள் என நினைக்கின்றேன்.

மனிதாபிமானம் என வந்தால் நானும் அவர்களுக்காக பரிதாபப்படுகின்றேன்.

அரசியல் என பார்த்தால் உலகில் உள்ள நாடுகளை விட உக்ரேனில் அதுமீறல்களும் பரிதாபங்களும் கொட்டிக்கிடக்கவில்லை.

மற்றும்படி உங்கள் மனிதாப உணர்வு எழுத்துக்களுக்கு நன்றி ரசோதரன்.🙏

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

வாருங்கள் கந்தையர்!

வந்து என்ன பலன,.?? உக்கிரேனை ரஷ்யா ஏன் தாக்குகிறது?? என்று எனக்கு விளங்கவில்லை உதாரணமாக எனக்கு ஒருவன் அடித்தால். நான் மற்ற கன்னத்தையும் காட்ட மாட்டேன் அவன் திரும்ப அடிக்காதபடிக்கு முஞ்சையை பொத்தி. ஒன்று கொடுப்பேன் வாழ் நாளில் மறக்க முடியாதபடி 🤣🤣. இதை தான் உக்கிரேன். செய்கிறது இதை புட்டின். மறப்பாரா?? முடியாது அவருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் இது மட்டும் தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, Kandiah57 said:

வந்து என்ன பலன,.?? உக்கிரேனை ரஷ்யா ஏன் தாக்குகிறது?? என்று எனக்கு விளங்கவில்லை உதாரணமாக எனக்கு ஒருவன் அடித்தால். நான் மற்ற கன்னத்தையும் காட்ட மாட்டேன் அவன் திரும்ப அடிக்காதபடிக்கு முஞ்சையை பொத்தி. ஒன்று கொடுப்பேன் வாழ் நாளில் மறக்க முடியாதபடி 🤣🤣. இதை தான் உக்கிரேன். செய்கிறது இதை புட்டின். மறப்பாரா?? முடியாது அவருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் இது மட்டும் தான்

ரஷ்யாவால் உக்ரேனுக்கு விழும் ஒவ்வொரு அடியும் ஜேர்மன்,பிரான்ஸ்,இங்கிலாந்து விடும் சேட்டைகளுக்கு.... 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

நான் உயிர் கொடுப்பதை தடுக்கும் ஆயுதங்கள் இருந்தன என்று தான் சொல்கிறேன்.

அப்படி இருக்கவில்லை. இருப்பின் அவை என்ன என பட்டியல் இடுங்கள் என்றேன்.

உங்களால் முடியவில்லை.

10 hours ago, விசுகு said:

ஒவ்வொரு தற்கொலை போராளியும் தம்முயிரை கொடுத்த நாட்கள் நாங்கள் தூக்கத்தை விட்டு அழுத நாட்களாக இருந்தன. இதை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் மேலும் மேலும் ஓடிய நாட்களாக இருந்தன. இதற்கு மேல் இது பற்றி எழுத எதுவுமில்லை. நன்றி.

❤️🙏

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வைரவன் said:

ஐயா,

நீங்கள் எந்த மொழியில் எழுதுகின்றீர்கள் என

சொல்ல முடியுமா?

அல்லது,

நீங்கள் மர்ம மொழியில் எழுதிய பின்

தமிழில் பொழிப்புரை யை

சுருக்கமாகவேனும் தர முடியுமா?

நான் ஒரு பாமரன்

எனக்கு மண்டை காயுது ஐயா

உண்மையில் அக்கறை கொண்டு தான் உங்கள் கேள்வியும் என்ற அடிப்படையில். ஆனால், இதை ஓரளவு விபரம் இல்லாமல் அறிவது கடினம், ஆயினும், இயன்ற அளவு சுருக்கி விளக்கம்.

முதலில் உங்களுக்கு treaty என்றால் என்ன என்பதற்கு உங்களுக்கு அடிப்படையான புரிவு இருக்க வேண்டும்

மிகவும் சுருக்கமாக, அடிப்படையாக, treaty என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அரசுகளுக்கு இடையில் செய்யப்படும் ஒப்பந்தம். ஒப்பந்தம் அமுலுக்கு வரும் நேரத்தில் இருந்து, குறித்த காலம் வரையுள்ள எதிர்காலத்தில் (treaty காலாவதி ஆகும் வரையும். காலாவதி இல்லாததும் இருக்கிறது) கட்டாயமாக, துல்லியமாக நடக்க அல்லது செய்யப்பட வேண்டிய விடயத்தையும், அதனுடன் சம்பந்த்ப்பட்ட அனைத்து விபரங்கள், செயற்பாடுகள் போன்றவற்றை ஆவணமாக உள்ளடக்கியது (சர்வதேச சட்ட வலுவுள்ளது). அரசுகளுக்கு இடையில் செய்யப்படுவதால், இதில் அரசுகளுக்கு சிறப்புரிமை, ஏகோபித்த உரிமை (உ.ம். காலவதியாக முதல் விலத்துவது, அப்படி விலத்துவதற்கு இடம் இருந்தால்). இந்த treaty இல் மிக முக்கியமானது, முழு அரசும் ஏற்றுக்கொள்வது என்பது.

(அதை, முழு அரசும் ஏற்றுக்கொள்வது என்பதை, ratification என்று ஆங்கிலத்தில் அழைப்பது). ஒவ்வொரு அரசுக்கும், அதன் தமையை பொறுத்து, இந்த முழு அரசும் ஏற்றுக்கொள்ளும் ( ratification) முறை வேறுபாடும். மேற்கில், பாராளுமன்றம் அல்லது அதை ஒத்த அரசாங்க அவையால் பெரும்பான்மையால் ஏற்றுக்கொள்ளப்டுவது முழு அரசும் ஏற்றுக்கொள்வது என்பதாகும. (UK) போல முடியும் அரசில் ஒரு பகுதியாக இருந்தால், அதுவும் ஏற்றுக்கொள்ளவேண்டும்; இது இப்பொது சம்பிரதாய ஏற்பாடு. அப்படி முழு அரசாலும் ஏற்றுக்கொள்ளப்படாத ஒப்பந்தங்கள் treaty அல்ல.

இது (treaty) எவ்வாறு அரசுகளுக்கு இடையில் வந்தது என்பதற்கே தனி வரலாறு இருக்கிறது. ஒரு காலம் இருந்தது treaty ஐ ஒரு அரசு (அல்லது அரசுகள்) நிறைவேற்றவில்லை என்றால், வலோற்கராமாக நிறைவேற்ற படைபலத்தை மற்ற அரசு அல்லது அரசுக்கள் பிரோயோகிக்கலாம் என்று.

(இப்பொது treaty ஐ நிறைவேற்ற படைபலம் பாவிப்பது மிக அரிது ஆயினும், ஏனெனில் சர்தேச சட்டம் மற்றும் UN தடுப்பதால். ஆனால் வெளிப்படையாக நடப்பது உக்கிரைன் இல், அதன் முன் நடந்தது இராக்கில் மேற்கால், நேட்டோ ஆல் 2003 இல். இரண்டு சந்தர்ப்பத்திலும் வேறு முக்கிய நோக்கங்கள் இருந்தாலும்.)

இனி சொன்ன விடயத்துக்கு அல்லது நீங்கள் கேட்ட விடயத்துக்கு.

வரலாற்று நூலில் சொல்லப்பட்டு இருக்கும் 1991 ஆம் ஆண்டு அளவில், மற்றும் அதுக்கு முதல் இருந்த அணுஆயுத ஒப்பந்தங்களை (treaty). அந்த நூல்களில் அவற்றை பற்றி சொல்லப்பட்டு இருப்பதை கொண்டு, இப்போது இருக்கும் அணுஆயுத ஒப்பந்தங்களுடன் (treaty) ஒப்பிட முடியாது, கூடாது என்பதே சொல்லியது.

1. ஒரு ஒப்பந்தத்தை (treaty) வரலாற்று நூலில் முழுமையாக சொல்ல முடியாது.

2. அப்படி வரலாற்று நூலில் சொல்லப்பட்ட இருக்கும் அணுஆயுதா ஒப்பந்தங்களை பற்றி வரலாற்று பார்வை, நியாயாதிக்கமே தவிர, அந்த ஒப்பந்தங்களின் (சட்ட பூர்வ) இறுக்க தன்மை பற்றி அல்ல.

3. அவை 1991 காலப்பகுதி ஒப்பந்தங்கள் (அநேகமாக 1991 க்கு முதல் அமுலுக்கு வந்து இருக்கும்), அவை காலாவதி ஆகி விட்டன

4. இவற்றின் அடிப்படையில் இப்போதைய அணுஆயுத ஒப்பந்தங்கள் (treaty) பற்றி சொல்ல முடியாது, கூடாது

5. ஏனெனில் தொழில்நுட்பம், பொருளாதாரம், பூகோள அரசியல் போன்றவை பெருமாற்றம் கண்டுவிட்டது. இதனால் தான் ஒவொரு குறிப்பிட்ட காலத்துக்கு (பொதுவாக 10 வருடங்களுக்கு) அணுஆயுத ஒப்பந்தம் (treaty). பின்பு புதிய ஒப்பந்தம் அல்லாதது முந்தைய ஒப்பந்த மீட்கப்பட்டு காலமாற்றத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டு நீடிக்கப்படுவது. சிலவேளைகளில், ஒப்பந்தங்கள் அமுலில் இருக்கும் போதே திருத்தங்கள், மாற்றங்கள், உ.ம். புதிய தொழில்நுட்ப வளர்ச்சி (உ.ம். ஆக அணுஆயுதம் மறைக்கப்படுவதை) மறைப்பதை சாத்தியம் ஆகிவிட்டது என்பதால். இன்னொரு உதாரணம், புதிய தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் மரபு வழி ஏவுகணையும், அணு ஆயுத ஒப்பந்தத்துக்குள் (treaty) வரும் அணு ஆயுத ஏவுகணைகளும் உ.ம் தூரம், வீச்சால் குறுக்கிட்டால், அவற்றை வேறுபடுத்துவதற்கு. வேறு உதாரணமாக, ஒரு அரசு, மற்ற அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதை உளவு மூலம் சந்தேகித்து அல்லது உறுதிப்படுத்தி, நேரடியாக சரிபார்க்கும் முறையை மாற்றுவது அல்லது நேரடி சரிபார்த்தலுக்கு மற்ற அரசுக்கு கொடுக்க வேண்டிய அறிவுறுத்தல் அவகாசத்தை (notice) குறைப்பது. இது தன மாற்றம் என்பதை குறித்து சொல்லமுடியாது.

6. 1991 அம ஆண்டு ஒப்பந்தங்கள் அந்த நேரத்துக்கு சரி.

7. அவற்றை (1991 அம ஆண்டு ஒப்பந்தங்கள்) வரலாறு நூல்கள் வழியாக அறிந்து, இப்போதைய ஒப்பந்தங்களுடம் ஒப்பிடுவது மிகவும் தவறான முறை, உண்மையில் செய்யக் கூடாது.

இதையே சொன்னது. ஆனால், இது வெளிப்படை.

இதுக்கு பின்னணியாவது -

எல்லா அரசுகள் எப்போதுமே கபடத்தனம் கொண்டு இருப்பது.

வரலரசுகளுக்கு, அணுஆயுத வல்லரசுகளுக்கு எப்போதுமே பாதுகாப்பு போதாது. அவற்றின் அடிப்படை பார்வை அவற்றின் இருப்பை தக்கவைகப்பது எப்போதுமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது என்பது .

எனவே எந்த வல்லரசும் எவ்வளவு ஏமாற்ற முடியுமோ அந்த அளவுக்கு எத்தனிக்கும்.

அணு ஆயுதத்தில் இருப்பை அடகுவைத்தே ஒப்பந்தம் (treaty) செய்வது.

எனவே காற்றுபுக முடியாத இறுக்கமாக ஒப்பந்தம் இருக்க வேண்டும். முக்கியமாக நிறைவேற்றுவது (அணுஆயுதம், மற்றும் அதன் வழங்கல் அமைப்பை எண்ணிக்கை, வினைத்திறன் போன்றவற்றை சரிபார்ப்பது அல்லத் குறைப்பது. ஏனெனில் ஒரு அரசு குறைத்து, மற்ற அரசு அதே அளவு குறைக்கவில்லை என்றால், குறைத்த அரசின் பயம் இன்னும் கூடும்) காற்றுப்புகமுடியாத தன்மை கொண்டதாக இருத்தல் வேண்டும்.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
On 2/6/2025 at 21:02, Justin said:

முதலில் ஒப்பந்தங்களில் "எழுதாத" விடயங்களை வைத்துக் கொண்டு ஒப்பந்த மீறலைக் கண்டறியும் "தங்க மலை இரகசியத்தைச் சொல்லி விட்டு

வரலாறு நூல் வழியாக, வரலாற்று பார்வையில், treaty இன் சில அம்சங்களை தெரிந்து விட்டு,

எந்த ஒரு treaty இன் அடிப்படை தன்மையை பற்றி (என்னவென்று சொல்வது) மு... கதை சொல்லுபவரை என்னவென்று சொல்லுவது.

நீங்கள் சொல்லி இருப்பதில் இருந்து தெரிவது ஒரு treaty என்றால் என்ன என்பது அடிப்படையாக தெரியாத கதை.

எந்த அறிவை எங்கு பாவிக்க கூடாது என்று தெரிய வேண்டும். எந்த அறிவை எங்கு பெறவேண்டும் என்பதும் தெரிய வேண்டும்.

(

அதுக்கு முதலில் சிந்தனை (எதை அறிந்தாலும்) இருக்க வேண்டும். (நான்) குறிப்பிட்ட உகாரணத்தில், குறிப்பிட்ட இடங்களுக்கு என்று சொல்லப்பட்டு இருந்தால் அல்லது குறிப்பிட்ட செய்ம்மதி முறைகள் என்று சொல்லி இருந்தால், வெளிப்படையாவே கண்காணிப்பு புலத்தை குறுகச் செய்கிறது. சாதாரண விளைவு.

அனால் நான் சொல்லியது, (இணைக்கப்பட்ட) அமெரிக்கா ராஜாங்க அமைச்சின் மிக உயரத்த ஒப்பந்த அமைப்பின் விளக்கம் மற்றும் வரைவிலக்கணத்தை கொண்டு. இந்த treaty இன் annexes, appendices, schedules இல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கலாம்.

)

On 2/6/2025 at 21:02, Justin said:

நான் முன்னரே சொன்னது போல, உங்களுக்கு வாசிப்பு மிகவும் குறைவு. ஆனால், வாசிக்காத, இல்லாத விடயங்களை வைத்துக் கொண்டு பெட்டி, கடகம், பாய் என்று பின்னும் திறன் அதீதம்

அறிந்தவற்றை எங்கு பாவிக்க கூடாது என்று தெரிவதும்,

குறிப்பிட்ட அறிவை எங்கு பெற வேண்டும் தெரிவதும்,

எந்த வழியாகவும் (வாசிப்பும் உள்ளடக்கம்) அறிவை பெறுவதிலும் முக்கியம்.

சுருக்கமாக, சிந்தனை முக்கியம்.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
On 2/6/2025 at 21:02, Justin said:

மற்றவர்களுக்கு தெனாலி கதை சொல்லுங்கள்😂

தெனாலி ஒத்துவரவில்லை என்றால் வேறு இருக்கிறது உ.ம். Dancing With Wolves (இது வரலாற்று நிகழ்வுகளை ஒற்றிய படம்).

அனால், தெனாலி பற்றி நான் சொன்னது சரி, தெனாலி என்றவுடன் உங்களிடம் உருவாகிய பிம்பம் கோமாளி விகடன்.

அனால் தெனாலி, உண்மையில் அந்த நேர அதி புத்திக்கூர்மை, சமயோசிதம, சாதுரியம் வாய்ந்த ராஜதந்திரி, உள்ளூரில் தலைசிறந்த நிர்வாகி, அரசுக்கு / அரசனுக்கு (புத்தியால்) பாதுகாவலர். இந்த (பார்வைப்) புரிவு கொண்டவர்களை இதுவரை காணவில்லை. இந்த புரிவு காணொளி தொடரால் மாத்திரமே சாத்தியம். கதையாக வாசித்தால் (தெனாலி) விகடன் எனும் திரை மறைத்துவிடும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.