Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஈரானின் இன்றைய காலாச்சாரம் என்பது 1979 இன் பின் வலிந்து திணிக்கப்பட்டது.

தன் சொந்த மகள்களை இரெண்டாம் தர பிரசையாக நடத்தும் எந்த கொடுங்கோன்மையும் அழிக்கப்பட வேண்டியதே.

உண்மை முல்லாக்கள் ஆறாம் நூற்றாணடின் இருண்ட காலத்திற்கு ஈரானிய பெண்களையும் மக்களையும் கொண்டு சென்றனர்.

  • Replies 454
  • Views 18.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    மக்களாட்சி மீது நம்பிக்கை குறைந்து வருவதனால், அதிக பணமும், பலமும் உள்ளவர்கள் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளனர். இது ஏகாதிபத்ய அரசுகளுக்கு வழி கோலுகின்றது. அரபு நாடுகளில் ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் ஆட்சி

  • எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது. பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    டிரம்ப் சீற்றம் கமெனி காட்டம் இடியை இறக்கிய இஸ்ரேல் .. ஈரான் சரவெடி .. இஸ்ரெல் அதிரடி.. இறங்கி அடிக்கும் ஈரான்.. சண்டை பிடிப்பவர்களை விட இவர்கள் "தலைப்பு" இம்சை தாங்கல சாமீ..

  • கருத்துக்கள உறவுகள்

நான் நாத்த‌த்தை விரும்ப‌ல‌ , க‌ற்பூர‌ வாச‌னைய‌ விரும்புப‌வ‌ன்🙏🥰👍 ,

சாக்க‌டை அடைப்பு அர‌சிய‌ல் நாத்தாம்😉 , க‌ற்பூர‌ வாச‌னை நான் நேசிக்கும் ப‌ல‌ விளையாட்டுக்க‌ள்🥰..................காலையில் எழுந்த‌தும் விளையாட்டு செய்திக‌ள் விளையாட்டு highlights பார்த்து விட்டு தான் செய்ய‌ வேண்டிய‌தை செய்வேன் ,

ஏதும் சாக்க‌டை அடைப்பு அர‌சிய‌ல் பூதாக‌ர‌மாய் வெடித்தால் என்ன‌ ந‌ட‌க்குது என்று ப‌ல‌ த‌ள‌ங்க‌ள் போய் பார்ப்ப‌தோடு ச‌ரி , ம‌ற்ற‌ம் ப‌டி சாக்க‌டை அடைப்பு அர‌சிய‌ல் என‌க்கு ச‌ரி வ‌ராது😁😛...................................

இர‌ண்டு நாளுக்கு முத‌ல் ர‌ம்ப் த‌ங்க‌ளின் த‌ள‌ங்க‌ளை தொட்டால் ஈரான் பெருத்த‌ அழிவை ச‌ந்திக்கும் என்று சொன்னார் , இன்று அவ‌ரே போரை நிறுத்துங்க‌ள் என்று சொல்லி விட்டார் , ஊட‌க‌ங்க‌ள் கேட்க்க‌ தூச‌ன‌த்தில் ப‌தில் அளித்து போட்டு போகிறார்😁😛..............இது தான் நாத்த‌ம் பிடித்த‌ சாக்க‌டை அடைப்பு அர‌சிய‌ல் 😁😛, இதை பின் தொட‌ர்ந்தால் ம‌னித‌ர்க‌ளுக்கு இருக்கும் நின்ம‌தியே போய் விடும் , இங்க‌த்தை வெள்ளைய‌ல் சாக்க‌டை அடைப்பு அர‌சிய‌லை எட்டியும் பார்க்க‌ மாட்டின‌ம் , கேட்டால் அர‌சிய‌ல் பிடிக்காது என்ர‌ ஒரு வார்த்தையோட‌ முடிப்பின‌ம்👍.....................அதுக‌ளும் என்னை போல் விளையாட்டின் மீது பெரிய‌ ஆர்வ‌ம் , சின்ன‌ நாடு , 58ல‌ச்ச‌ ம‌க்க‌ள் இருந்தாலும் ஒலிம்பிக்கில் 9 , 10 ப‌த‌க்க‌ம் வெல்லுவின‌ம்👍...........................

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, வீரப் பையன்26 said:

என‌க்கு விளையாட்டுக்க‌ள் மீது தான் அதிக‌ ஆர்வ‌ம் , அமெரிக்கா விளையாட்டான‌ NBA விளையாட்டில் நான் ர‌சோத‌ர‌ன் அண்ணாவுக்கு சொன்னேன் மூன்று மாத‌த்துக்கு முத‌ல் OklaHoma City Thunder அணி தான் கோப்பை வெல்லும் என‌ இதுவொன்றும் IPL கிடையாது 10 அணிக‌ள் விளையாட‌ , 30அணிக‌ள் விளையாடும் 8மாத‌ நீண்ட‌ தொட‌ர் , அதில் இந்த‌ அணி தான் வெல்லும் என்று முன் கூட்டி க‌ணிப்ப‌து ஈசிய‌ல்ல‌ , நான் ர‌சோத‌ர‌ன் அண்ணாவுக்கு சொன்ன‌து போல் OklaHoma City Thunder அணி நேற்று கோப்பை வென்று விட்டின‌ம்.

பையன் சார், நீங்கள் சொன்னது போலவே நடந்தது. இது போலவே உங்களுக்கு வேறு பல உலக விளையாட்டுகளில் இருக்கும் பரிச்சயமும், தெரிந்திருக்கும் தகவல்களும் ஆச்சரியமானவை..........👍.

அரசியல் மற்றும் வரலாறு என்று வரும் போது பலரும் ஏற்கனவே ஒரு நிலைப்பாட்டில் இருந்து கொண்டிருப்பார்கள், நான் உட்பட. பார்வைகளும் அவரவர் நிலைப்பாட்டின் வழியே தான் பெரும்பாலும் செல்லும். சிலருக்கு பரந்த வாசிப்பு இருக்கும். சிலரிடம் மிக அதிக ஞாபகசக்தி இருக்கும். இன்னொரு பார்வையில் ஒரு உறுதியான கருத்து சரியான தரவுகளுடன் வரும் போது அதையிட்டு அமைதியில்லாமல் தவிக்க வேண்டிய அளவிற்கு நாங்கள் ஒருவரும் தொழில்முறை அரசியல்வாதிகள் இல்லைத்தானே..................... மாற்றுக் கருத்துகளையும் இலேசாகக் கடந்து போவது தான் சிறப்பு. இதற்காக எங்களின் உடல், மன ஆரோக்கியத்தை இழப்பது தேவையற்றது.

சரியான தரவுகளின் பின்புலம் இல்லாமல் வரும் கருத்துகள்/காணொளிகள் அம்புலிமாமா கதைகள் போல, வாசித்தவுடன்/பார்த்தவுடன் மறந்துவிடவேண்டும்................🤣.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, விசுகு said:

இங்கே முல்லாக்களின் அதிகாரம் பிடுங்கப்பட்டு, அவர்களின் ஆட்சி அழிக்கப்பட வேண்டும் என்பது பலராலும் வைக்கப்படும் கருத்தாக இருக்கிறது.

இதில் எனக்கு உடன்பாடில்லை. உண்மையில் இது குரங்கின் கையில் கொடுக்கப்பட்ட அப்பமாகவோ ஒட்டகத்துக்கு தலை வைக்க இடம் கொடுத்த கதையாகத்தான் முடியும்.

எனக்கு ஈரானை பிடிக்காது அதற்காக சுயநலன்களுக்காக அந்த மக்களுக்கு அவலங்களை கொடுப்பதை ஏற்கமுடியாது.

இதுதான் என் கருத்தும் விசுகர்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரசோதரன் said:

பையன் சார், நீங்கள் சொன்னது போலவே நடந்தது. இது போலவே உங்களுக்கு வேறு பல உலக விளையாட்டுகளில் இருக்கும் பரிச்சயமும், தெரிந்திருக்கும் தகவல்களும் ஆச்சரியமானவை..........👍.

அரசியல் மற்றும் வரலாறு என்று வரும் போது பலரும் ஏற்கனவே ஒரு நிலைப்பாட்டில் இருந்து கொண்டிருப்பார்கள், நான் உட்பட. பார்வைகளும் அவரவர் நிலைப்பாட்டின் வழியே தான் பெரும்பாலும் செல்லும். சிலருக்கு பரந்த வாசிப்பு இருக்கும். சிலரிடம் மிக அதிக ஞாபகசக்தி இருக்கும். இன்னொரு பார்வையில் ஒரு உறுதியான கருத்து சரியான தரவுகளுடன் வரும் போது அதையிட்டு அமைதியில்லாமல் தவிக்க வேண்டிய அளவிற்கு நாங்கள் ஒருவரும் தொழில்முறை அரசியல்வாதிகள் இல்லைத்தானே..................... மாற்றுக் கருத்துகளையும் இலேசாகக் கடந்து போவது தான் சிறப்பு. இதற்காக எங்களின் உடல், மன ஆரோக்கியத்தை இழப்பது தேவையற்றது.

சரியான தரவுகளின் பின்புலம் இல்லாமல் வரும் கருத்துகள்/காணொளிகள் அம்புலிமாமா கதைகள் போல, வாசித்தவுடன்/பார்த்தவுடன் மறந்துவிடவேண்டும்................🤣.

35 minutes ago, ரசோதரன் said:

ந‌ன்றி குரு

உங்க‌ளுக்கு தனிப்ப‌ட்ட‌ முறையில் இப்போது நான் என்ன‌ நிலையில் இருக்கிறேன் என்று உங்க‌ளுக்கும் தெரியும் ,

இதே நிலையில் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் இருந்தால் யாழையே எட்டியும் பார்க்க‌ மாட்டின‌ம்😉..................

நான் ந‌ல்ல‌துக‌ளை நினைவில் வைத்து இருப்பேன் தேவை இல்லாத‌தை அந்த‌ இட‌த்திலே விட்டு விடுவேன் 👍

யாழில் கிட்ட‌ த‌ட்ட‌ 4வ‌ருட‌ம் எழுதாம‌ இருந்த‌ நான் , 2019ம் ஆண்டு இங்லாந்தில் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கிண்ண‌ கிரிக்கேட் போட்டியின் போது மீண்டும் யாழில் எழுத‌ தொட‌ங்கி நான் ,

அர‌சிய‌ல் திரிக்குள் பெரிசா எழுதின‌து கிடையாது , கூட‌ விளையாட்டு திரிக்குள்ள‌ தான் அதிக‌ம் எழுதி இருக்கிறேன்.....................சில‌ர் விளையாட்டு திரிக்குள் பிழையான‌ த‌க‌வ‌லை சொல்ல‌ , நான் ம‌றுத்து ந‌க்க‌ல் நையாண்டி செய்யாம‌ ச‌ரியான‌ த‌க‌வ‌லை சொல்லி இருக்கிறேன் அவைக்கு............................உங்க‌ளுக்கு பொறுமையா ப‌தில் அளிப்ப‌துக்கு என் ம‌ன‌ம் இட‌ம் கொடுக்குது , சில‌ருக்கு ப‌தில் அளிக்காம‌ க‌ட‌ந்து செல்ல‌வே விரும்புகிறேன்..........................ம‌ன‌ம் விட்டு ப‌ழ‌கின‌ உற‌வுக‌ள் என்னை ந‌க்க‌ல் செய்தால் வாசித்து சிரித்து விட்டு போவேன் , சும்மா ம‌ற்ற‌வைக்கு இல‌வ‌ச‌ அறிவுரை சொல்லுகிறோம் என‌ ந‌க்க‌ல் ப‌ண்ணுபர்க‌ளை க‌ட‌ந்து விட்டு போக‌ முடியாது , என‌து பாணியில் அவைக்கு ப‌தில் எழுதி விட்டு தான் அந்த‌ திரிய‌ விட்டு வில‌குவேன்......................

யாழில் எவ‌ள‌வோ அவ‌தூறுக‌ள் பொய்க‌ளை க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் பார்த்து இருக்கிறேன் , அதுக்கு த‌க்க‌ ப‌திலும் எழுதி இருக்கிறேன்........................

இதுக்கை நாம‌ என்ன‌ தான் எழுதினாலும் ஒரு மாற்ற‌மும் நிக‌ழ‌ போவ‌து கிடையாது அண்ணா...................அமெரிக்காவில் வ‌சிக்கும் இன்னொரு வ‌ய‌தான‌வ‌ர் என‌க்கு சொன்ன‌து தான் யாழ்க‌ள‌த்தை சும்மா பொழுது போக்குக்கு ப‌ய‌ன் ப‌டுத்துகிறேன் என‌ , அவ‌ரும் உங்க‌ளை மாதிரி ந‌ல்ல‌ எழுத்தாள‌ர் , இப்ப‌ அவ‌ர் எழுதாம‌ விட்டு ப‌ல‌ வ‌ருட‌ம்☹️.....................

யாழில் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் விளையாட்டு திரிக‌ளில் எழுதி மிம்ஸ் செய்து ப‌ம்ப‌ல் அடிச்ச‌ கால‌ங்க‌ள் என் வாழ் நாளில் ம‌ற‌க்க‌ முடியாத‌ கால‌ங்க‌ள் அவை🥰👍........................

ச‌த்திய‌மாய் அண்ணா என‌க்கு சாக்க‌டை அடைப்பு அர‌சிய‌லை பிடிக்காது , ஈரானுக்கு இழைக்க‌ப் ப‌ட்ட‌ அநீதிக்காக‌ சில‌ முக‌ம் தெரிந்த‌ உற‌வுக‌ளுட‌ன் விவாதிச்சேன் , ம‌ற்ற‌ம் ப‌டி சாக்க‌டை அடைப்பு அர‌சிய‌லை விட்டு நீண்ட‌ தூர‌ம் வ‌ந்து விட்டேன்..........................விளையாட்டு திரியில் மீண்டும் ச‌ந்திப்போம் குரு..................இந்த‌ திரியில் எழுதுதை இத்தோடு நிறுத்தி கொள்ளுகிறேன்👍........................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

உண்மை முல்லாக்கள் ஆறாம் நூற்றாணடின் இருண்ட காலத்திற்கு ஈரானிய பெண்களையும் மக்களையும் கொண்டு சென்றனர்.

ஆறாம் நூற்றாண்டுக்கு எந்த பெண்களையும், மக்களையும் முல்லாக்கள் கொண்டு சென்றார்கள்? தமிழ் பெண்களையா? தமிழ் மக்களையா?

ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் அமெரிக்கா சாதித்தது என்ன என்று கூறுங்கள்? அங்கே உள்ள பெண்கள், மக்கள் அமெரிக்க அரசின் போர் தொடுப்பின் பின் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக முல்லாக்களின் கட்டுப்பாடுகள் இல்லாமல் இப்போது வாழ்கின்றார்களா?

இஸ்ரேலில் உள்ள மக்கள் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக வாழ்கின்றார்களா?

ஆயுத பலம் உள்ள இடத்தில் மகிழ்ச்சி, சுதந்திரம் உள்ளதா?

இங்கு உள்ள வெவ்வேறு கருத்துக்கள் ஒவ்வொருவரின் விருப்பு, வெறுப்புக்களை காட்டுகின்றன.

இவை 2009 போரின் முடிவுகளை மாற்றியமைக்குமா தெரியவில்லை.

அண்மையில் வவுனியாவில் மனைவி தலையை கொய்த தமிழ்மகனின் செயலுக்கு வந்து குவிந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்களை பார்த்தால் தமிழ் சமுதாயம் ஆறாம் நூற்றாண்டையும் தாண்டி பின்னால் ஓடும்போல் உள்ளதே.

  • கருத்துக்கள உறவுகள்

தட்…தொப்பியை மறைக்க மறந்த தருணம்🤣

இங்கே பலர் மேற்கு புலிகளுக்கு ஆப்பு அடித்த கடுப்பில் முல்லாக்களுக்கு குல்லா போடுவார்கள்.

இன்னும் சிலரோ குல்லா போடுவதால் முல்லாக்களை நியாயபடுத்துவார்கள்.

யார் எவர் என்பதை சற்று விலகி நிண்டு அவதானித்தால் கண்டு கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நியாயம் said:

ஆறாம் நூற்றாண்டுக்கு எந்த பெண்களையும், மக்களையும் முல்லாக்கள் கொண்டு சென்றார்கள்? தமிழ் பெண்களையா? தமிழ் மக்களையா?

ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் அமெரிக்கா சாதித்தது என்ன என்று கூறுங்கள்? அங்கே உள்ள பெண்கள், மக்கள் அமெரிக்க அரசின் போர் தொடுப்பின் பின் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக முல்லாக்களின் கட்டுப்பாடுகள் இல்லாமல் இப்போது வாழ்கின்றார்களா?

இஸ்ரேலில் உள்ள மக்கள் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக வாழ்கின்றார்களா?

ஆயுத பலம் உள்ள இடத்தில் மகிழ்ச்சி, சுதந்திரம் உள்ளதா?

இங்கு உள்ள வெவ்வேறு கருத்துக்கள் ஒவ்வொருவரின் விருப்பு, வெறுப்புக்களை காட்டுகின்றன.

இவை 2009 போரின் முடிவுகளை மாற்றியமைக்குமா தெரியவில்லை.

அண்மையில் வவுனியாவில் மனைவி தலையை கொய்த தமிழ்மகனின் செயலுக்கு வந்து குவிந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்களை பார்த்தால் தமிழ் சமுதாயம் ஆறாம் நூற்றாண்டையும் தாண்டி பின்னால் ஓடும்போல் உள்ளதே.

இந்த பழமைவாத துருப்பிடித்த சிந்தனைக்கு மாற்றீடான சிந்தனைகளை உக்குவிக்கும் நிலைக்கு சமூகம் வளர வேண்டும் ஆனால் மத அடிப்படைவாதிகள் அதனை கேள்விக்கெ இடமளிப்பதில்லை, கேள்வி கேட்டால் அதற்Kஉ ஏதாவது காராம் என கூறி கொல்லுகின்ற நிலை காணப்படுகிறது, மத அடிப்படைவாத ஆட்சியினை இதனாலேயே பலர் வெறுக்கின்றனர், இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் பி ஜே பி க்கு பெரியளவில் எதிர்ப்பு உள்ளது, தமிழ் சமூகம் மாற்றம் வேண்டி நிற்கும் சமூகம், மாற்றம் தான் ஒரு நிரந்தரமான வலிமையான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும், மாற்றங்களை அங்கீகரிக்காமல் அனைத்தையும் மதத்தின் பெயரால் பழமைவாத சிந்தனையுடன் இருந்தால் மதம் வேணுமென்றால் நிலைத்திருக்கும் ஆனால் அதனை பின்பற்றத்தான் மக்கள் இருக்கமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

32 minutes ago, நியாயம் said:

ஆறாம் நூற்றாண்டுக்கு எந்த பெண்களையும், மக்களையும் முல்லாக்கள் கொண்டு சென்றார்கள்? தமிழ் பெண்களையா? தமிழ் மக்களையா?

1979 இற்கு முன் மேற்கு நாடுகளை போல, இன்றைய துருக்கி, மலேசியா போல சுதந்திரமாக வாழ்ந்த ஈரானிய பெண்களை.

34 minutes ago, நியாயம் said:

ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் அமெரிக்கா சாதித்தது என்ன என்று கூறுங்கள்? அங்கே உள்ள பெண்கள், மக்கள் அமெரிக்க அரசின் போர் தொடுப்பின் பின் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக முல்லாக்களின் கட்டுப்பாடுகள் இல்லாமல் இப்போது வாழ்கின்றார்களா?

ஈராக் ஒரு போதும் முல்லாக்கள் கையில் இருக்கவில்லை. ஷியா முல்லாக்களை ஓட விரட்டிய பாஆத் அரசியலை முன்னெடுத்தவர் சதாம். அமெரிக்கா தலையிட்ட பின் IKR என அழைக்கபடும் குர்தீஷ் பகுதியில் பெண்கள் நல்ல நிலையிலும், இதர அரபு ஸுன்னி மக்கள் வாழும் இடங்களில் சுமாராகவும் முல்லாக்கள் கட்டுப்படுத்தும் ஷியா மக்களின் இடங்களில் மோசமான நிலையிலும் உள்ளார்கள்.

ஆப்கானிஸ்தான் - நிச்சயமாக பெண்கள், குழந்தைகள் கல்வி, இதர உரிமைகள் 1996-2001, தற்போது உள்ள தலிபான் ஆட்சியை விட, அமெரிக்கா அங்கே நிண்ட போது, மிக, மிக மேம்பட்டே இருந்தது.

இங்கே பெண்கள் ஒடுக்கப்பட காரணம் - முல்லாக்களும், தலிபான்களும், ஐ எஸ் சும் - அவர்களை இப்படி நடக்க தூண்டும் குரானின், ஹதீஸ்களின் வழிகாட்டலுமே ஒழிய, அமேரிக்கா அல்ல.

42 minutes ago, நியாயம் said:

இஸ்ரேலில் உள்ள மக்கள் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக வாழ்கின்றார்களா?

ஆயுத பலம் உள்ள இடத்தில் மகிழ்ச்சி, சுதந்திரம் உள்ளதா?

நிச்சயமாக ஒரு தேர்தல் ஜனநாயக நாட்டில், எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு, நெதன்யாஹுவை எதிர்த்து பெரும் ஆர்பாட்டம் செய்யும் அளவுக்கு சுதந்திரமாக வாழ்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, நியாயம் said:

இங்கு உள்ள வெவ்வேறு கருத்துக்கள் ஒவ்வொருவரின் விருப்பு, வெறுப்புக்களை காட்டுகின்றன.

இவை 2009 போரின் முடிவுகளை மாற்றியமைக்குமா தெரியவில்லை.

உண்மைதான்.

அதே போல் 1990 இல் அநியாயமாக ஊரை விட்டு விரட்டியதால் உங்களுக்குள் எரிந்து கொண்டிருக்கும் பழிவாங்கும் உணர்வையும் இந்த தலைப்புக்கு சம்பந்தமே இல்லாத வரிகள் காட்டி நிற்கிறன.

நீங்கள் எழுதுபவையும் 1990ம் ஆண்டின் நிகழ்வுகளை மாற்றி அமைக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

பையன் சார், நீங்கள் சொன்னது போலவே நடந்தது. இது போலவே உங்களுக்கு வேறு பல உலக விளையாட்டுகளில் இருக்கும் பரிச்சயமும், தெரிந்திருக்கும் தகவல்களும் ஆச்சரியமானவை..........👍.

அரசியல் மற்றும் வரலாறு என்று வரும் போது பலரும் ஏற்கனவே ஒரு நிலைப்பாட்டில் இருந்து கொண்டிருப்பார்கள், நான் உட்பட. பார்வைகளும் அவரவர் நிலைப்பாட்டின் வழியே தான் பெரும்பாலும் செல்லும். சிலருக்கு பரந்த வாசிப்பு இருக்கும். சிலரிடம் மிக அதிக ஞாபகசக்தி இருக்கும். இன்னொரு பார்வையில் ஒரு உறுதியான கருத்து சரியான தரவுகளுடன் வரும் போது அதையிட்டு அமைதியில்லாமல் தவிக்க வேண்டிய அளவிற்கு நாங்கள் ஒருவரும் தொழில்முறை அரசியல்வாதிகள் இல்லைத்தானே..................... மாற்றுக் கருத்துகளையும் இலேசாகக் கடந்து போவது தான் சிறப்பு. இதற்காக எங்களின் உடல், மன ஆரோக்கியத்தை இழப்பது தேவையற்றது.

சரியான தரவுகளின் பின்புலம் இல்லாமல் வரும் கருத்துகள்/காணொளிகள் அம்புலிமாமா கதைகள் போல, வாசித்தவுடன்/பார்த்தவுடன் மறந்துவிடவேண்டும்................🤣.

நல்ல கருத்து!

நம்பிக்கைகளுக்கு வலு உள்ளது, சிலர் தமது நம்பிக்கைக்காக மற்றவர்களின் உயிர்களையே எடுக்கிறார்கள், பொதுவாக சாவிற்கு அடுத்தபடியாக மக்கள் வெறுக்கும் விடயம், தமது நிலைப்பாடு தவறு என உணரும் நிலை, இதற்கு காரணமாக கூறப்படுவது எமது கல்வி முறை, தவறாக இருப்பதில் தவறில்லை எனும் உனர்வினை சாதாரண மனிதர்களிடம் ஏற்படுத்துவது கடினம்.

Bigger loser win என்பது தற்கால நவீன வியாபாரத்தின் மாதிரி, அதனாலேயே அவர்கள் நஸ்டத்தினை உடனடியாக வெட்டி விடுகிறார்கள், தனது முடிவு தவறென தெரிந்தவுடன் அதிலிருந்து எந்தவித மனக்கிலேசமும் இல்லாமல் வெளியே வருபவர்களால்தான் சரியான முடிவினை இறுதியில் எடுக்க முடியும், தான் எடுத்த தவறான முடிவினை நியாயப்படுத்த அதனை பிடித்து தொங்கி கொண்டிருப்பது ஒரு சூதாடியின் மனநிலை, பெரும்பாலும் படித்தவர்களிடம் (மரபு சார்) இந்த வியாதி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நியாயம் said:

அண்மையில் வவுனியாவில் மனைவி தலையை கொய்த தமிழ்மகனின் செயலுக்கு வந்து குவிந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்களை பார்த்தால் தமிழ் சமுதாயம் ஆறாம் நூற்றாண்டையும் தாண்டி பின்னால் ஓடும்போல் உள்ளதே.

அடிப்படைவாத முஸ்லிம்கள் போல இந்து முல்லாக்கள், தமிழ் தலிபான்களை நாமும் உருவாக்கி விடகூடாது என்ற கருத்துக்கள் அந்த விவாதத்தை வென்றதை பார்க்க உங்கள் பழிவாங்கும் உணர்சி விடவில்லை போலும்.

எமது சமுதாயத்தை நாம் பார்த்து கொள்கிறோம்.

மதத்தின் பெயரால் சிறுமிகளை தாயாக்குவதும், அதை நபி (சல்) வாழ்வில் இருந்து ஆதாரம் காட்டி நியாயப்படுத்துவததும்.

மேற்கு நாட்டில் அநாதை வெள்ளை சிறுமிகளை, அண்ணன், தம்பி, மாமன், தகப்பன், மனைவியின் தகப்பன் என ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆண்களே நாசம் பண்ணுவதும் என உங்கள் உம்மாவிம் உள்ளே சீழ் கட்டி நாற்றம் எடுக்கிறது.

இந்த நாத்தம் பிடித்த நிலைக்கு பிரதான காரணமாக உங்கள் காபீர்கள் முஸ்லிம்களை விட கீழானவர்கள் என்ற குரானிய போதனைகளே காரணம்.

இதை என்ன செய்வது என யோசியுங்கள்.

பிறகு மற்றவனுக்கு யோசனை கூறலாம்.

Edited by goshan_che
(சல்) சேர்க்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
39 minutes ago, goshan_che said:

அடிப்படைவாத முஸ்லிம்கள் போல இந்து முல்லாக்கள், தமிழ் தலிபான்களை நாமும் உருவாக்கி விடகூடாது என்ற கருத்துக்கள் அந்த விவாதத்தை வென்றதை பார்க்க உங்கள் பழிவாங்கும் உணர்சி விடவில்லை போலும்.

எமது சமுதாயத்தை நாம் பார்த்து கொள்கிறோம்.

மதத்தின் பெயரால் சிறுமிகளை தாயாக்குவதும், அதை நபி (சல்) வாழ்வில் இருந்து ஆதாரம் காட்டி நியாயப்படுத்துவததும்.

மேற்கு நாட்டில் அநாதை வெள்ளை சிறுமிகளை, அண்ணன், தம்பி, மாமன், தகப்பன், மனைவியின் தகப்பன் என ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆண்களே நாசம் பண்ணுவதும் என உங்கள் உம்மாவிம் உள்ளே சீழ் கட்டி நாற்றம் எடுக்கிறது.

இந்த நாத்தம் பிடித்த நிலைக்கு பிரதான காரணமாக உங்கள் காபீர்கள் முஸ்லிம்களை விட கீழானவர்கள் என்ற குரானிய போதனைகளே காரணம்.

இதை என்ன செய்வது என யோசியுங்கள்.

பிறகு மற்றவனுக்கு யோசனை கூறலாம்.

அமெரிக்க இஸ்ரேல் - ஈரான் போர் எதற்காக நடக்கின்றது?

மனித உரிமைகளுக்காகவா அல்லது ஆயுத பலத்திற்காகவா? ஒவ்வொரு இனத்திற்கும் மதத்திற்கும் அது சார்ந்த நடைமுறைகள் இருக்கும். அதற்காக மனித உரிமைகள் எனும் பெயரில் மேற்குலகு ஓநாய் ஊளையிடத்தேவையில்லை.இதுதான் நாடு.இதுதான் சட்டம். விரும்பினால் இருங்கள் இல்லையேல் வெளியேறுங்கள் எனும் சுதந்திரம் கொடுத்துள்ளார்கள். இதற்கு மேல் என்ன சுதந்திரம் வேண்டும்?

மேற்குலகை போல் அவிழ்த்து விட்டு ஆடும் கலாச்சாரத்தை ஏற்கவில்லை என்றால் அது அவர்கள் தனிமனித சுதந்திரம் தானே?

அமெரிக்காவினது ஆயுதங்களை களைந்துவிட்டால் அதன் பலம் தெரியும்.🤣

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-333.jpg?resize=750%2C375&ssl

ஈரான் மீதான தாக்குதல்கள் அணுசக்தி தளங்களை அழிக்கவில்லை -பென்டகன் தகவல்.

ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்ட வான்வழித் தாக்குதல்களில் இரண்டு அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்கவில்லை என்று ஒரு புதிய அமெரிக்க உளவுத்துறை அறிக்கை கூறியுள்ளது.

இருப்பினும், குண்டுவெடிப்பு மேற்காசிய நாட்டின் அணுசக்தி திட்ட செயற்பாடுகளை சில மாதங்களுக்குள் பின்னுக்குத் தள்ளக்கூடும் என்று தி நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் (DIA) தயாரித்த அறிக்கை, இரண்டு முக்கிய அணுசக்தி தளங்களான ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று கூறுகிறது.

DIA என்பது பென்டகனின் உளவுத்துறைப் பிரிவாகும்.

மேலும், மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க மத்திய கட்டளையுடன் இணைந்து, தாக்குதல்களுக்குப் பின்னர் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்கு பணியாற்றியது.

அறிக்கையின்படி, யுரேனியத்தை செறிவூட்டப் பயன்படுத்தப்படும் முக்கிய உபகரணங்களை சில மாதங்களுக்குள் மீண்டும் இயக்க முடியும்.

இதன் பொருள் ஈரான் எதிர்பார்த்ததை விட விரைவில் அதன் அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கக்கூடும் என்பதாகும்.

அமெரிக்க விமானத் தாக்குதல்களுக்கு முன்னர் ஈரான் 400 கிலோ யுரேனியக் குவியலை, 60 சதவீதம் செறிவூட்டப்பட்டதாக மாற்றியதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

தாக்குதல்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஃபோர்டோவின் செயற்கைக்கோள் படங்கள், தளத்தின் நுழைவாயிலில் நிலைநிறுத்தப்பட்ட 16 சரக்கு லொறிகளைக் காட்டியது.

அவை கையிருப்பை ரகசிய இடங்களுக்கு கொண்டு சென்றிருக்கலாம் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இது ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது என்ற ஜனாதிபதி ட்ரம்பின் கூற்றுக்கு முரணானது.

சனிக்கிழமை இரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய ட்ரம்ப், ஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை மிகப்பெரிய வெற்றியாகப் பாராட்டினார்.

“இந்தத் தாக்குதல்கள் ஒரு அற்புதமான இராணுவ வெற்றியாகும், இதன் மூலம் ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் வசதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன” என்று ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து கூறினார்.

ஈரானின் மிக முக்கியமான அணுசக்தி தளங்களில் மூன்று, நடான்ஸ், ஃபோர்டோ மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களில் உள்ள அணுசக்தி செறிவூட்டல் வசதிகளை அமெரிக்கா அழித்துவிட்டதாகவும் மார்தட்டிக் கொண்டார்.

ஆனால், பென்டகனின் உள் அறிக்கை வேறுபட்ட கோணத்தை தற்சமயம் வெளிக்காட்டுகிறது.

குறிப்பாக ஃபோர்டோ, தாக்குதல்களில் இருந்து தப்பியதற்கான அறிகுறிகளைக் காட்டியதாகவும் அறிக்கை கூறியது.

ஃபோர்டோ குறித்து பென்டகன் எச்சரிக்கை

ஃபோர்டோ ஈரானின் மிகவும் பாதுகாக்கப்பட்ட வசதிகளில் ஒன்றாகும்.

இது ஜாக்ரோஸ் மலைகளுக்கு அடியில் சுமார் 45 முதல் 90 மீட்டர் (தோராயமாக 150 முதல் 300 அடி) கடினமான பாறையின் கீழ் கட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஃபோர்டோவின் நிலத்தடி இருப்பிடம் பென்டகனுக்கு ஏற்கனவே ஒரு கவலையாக இருந்தது.

ஜனவரி மாதம் நடந்த ஒரு மாநாட்டில், அமெரிக்காவின் வலிமையான அணுசக்தி அல்லாத குண்டு – 30,000 பவுண்டுகள் எடையுள்ள GBU-57 ‘பதுங்கு குழி வெடிப்பு’ – கூட அந்த வசதியை முழுமையாக அழிக்காது என்று பென்டகனின் உயர் அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டனர்.

கடந்த வார இறுதியில் நடந்த தாக்குதலில், B-2 குண்டுவீச்சு விமானங்கள் இந்த GBU-57 குண்டுகளில் 12 குண்டுகளை ஃபோர்டோ மீதும், மேலும் இரண்டு நடான்ஸ் மீதும் வீசின.

இதற்கிடையில், அமெரிக்க கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் இஸ்பஹானில் சுமார் 30 டோமாஹாக் ஏவுகணைகளை ஏவியது.

GuPS55TXoAA1Nob?format=jpg&name=medium

அறிக்கையை கடுமையாக சாடிய ட்ரம்ப்

வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இராணுவத் தாக்குதல்களை அவமானப்படுத்தியதற்காக நியூயோர்க் டைம்ஸ் மற்றும் சிஎன்என் செய்திச் சேவை ஆகியவற்றை ட்ரம்ப் கடுமையாக சாடினார்.

“ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன! டைம்ஸ் மற்றும் சிஎன்என் இரண்டும் பொதுமக்களால் தாக்கப்படுகின்றன,” என்று அவர் ட்ரூத் சமூக ஊடகத்தளத்தில் பதிவிட்டார்.

அதேநேரம், வெள்ளை மாளிகையும் உளவுத்துறை மதிப்பீட்டை மறுத்து, அந்த அறிக்கையை “போலி செய்தி” என்று அழைத்தது.

வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் ஒரு அறிக்கையில்,

இந்த அறிக்கை ஜனாதிபதி ட்ரம்பை இழிவுபடுத்துவதற்கும், ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க ஒரு கச்சிதமாக செயல்படுத்தப்பட்ட பணியை நடத்திய துணிச்சலான போர் விமானிகளை இழிவுபடுத்துவதற்கும் ஒரு தெளிவான முயற்சியாகும் – என்று கூறினார்.

இதேவ‍ேளை ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஈரான் மீதான தாக்குதல் பணியை வழிநடத்த உதவிய கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவரான ஜெனரல் டான் கெய்ன், அணுசக்தி தளங்கள் “கடுமையான சேதத்தையும் அழிவையும் சந்தித்துள்ளன” என்று கூறினார்.

ஆனால், இறுதி சேத மதிப்பீடு இன்னும் முடிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

https://athavannews.com/2025/1436979

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

இந்த பழமைவாத துருப்பிடித்த சிந்தனைக்கு மாற்றீடான சிந்தனைகளை உக்குவிக்கும் நிலைக்கு சமூகம் வளர வேண்டும் ஆனால் மத அடிப்படைவாதிகள் அதனை கேள்விக்கெ இடமளிப்பதில்லை,

மத அடிப்படைவாதிகள் ஈரானில் முல்லாக்கள் செய்தது போன்று இருண்ட காலத்திற்கே மக்களை கொண்டு சென்று தங்களது அடிமைகளாக வைத்திருக்கவே முயற்சிப்பார்கள் மதவாதிகளின் கீழ் ஒடுக்கபட்டுவாழ்வதே உண்மையான மகிழ்ச்சியும் சுதந்திரமும் என்று போதிப்பார்கள் அதன் விளைவுகளே வவுனியாவில் மனைவி தலையை வெட்டியவரை ஹீரோவாக கொண்டாடிய நிலையும் யாழ்களத்தில் முல்லாக்கள் ஆட்சியை போற்றியதும்

6 hours ago, vasee said:

இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் பி ஜே பி க்கு பெரியளவில் எதிர்ப்பு உள்ளது, தமிழ் சமூகம் மாற்றம் வேண்டி நிற்கும் சமூகம், மாற்றம் தான் ஒரு நிரந்தரமான வலிமையான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும், மாற்றங்களை அங்கீகரிக்காமல் அனைத்தையும் மதத்தின் பெயரால் பழமைவாத சிந்தனையுடன் இருந்தால் மதம் வேணுமென்றால் நிலைத்திருக்கும் ஆனால் அதனை பின்பற்றத்தான் மக்கள் இருக்கமாட்டார்கள்.

👍

தனிய பிஜேபிடம் மட்டுமல்லாமல் இதர மதவாதிகளிடமும் அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

511723256_1142783081219996_3931674102439

512679622_1142526487912322_1936130928420

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் குறித்த இலக்குகளை எய்தியுள்ளோம் - யுத்த நிறுத்தத்திற்கு இணங்குகின்றோம் - இஸ்ரேல்

24 JUN, 2025 | 12:19 PM

image

ஈரான் குறித்த தனது இலக்குகளை எய்திய பின்னர் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரானிடமிருந்து இஸ்ரேலிற்கு உருவாகிய இருப்பு குறித்த இரட்டை ஆபத்துக்களான அணுவாயுத ஆபத்து மற்றும் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணை ஆபத்து ஆகியவற்றை அகற்றியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரானின் இராணுவதலைமைக்கு  கடும் சேதத்தை  ஏற்படுத்தியுள்ளோம்,அந்த நாட்டின் பல இலக்குகளை அழித்துள்ளோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/218307

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் நிபந்தனைகளை நிறைவேற்றினால் ஈரான் போர் நிறுத்தத்தை மதிக்கும்

Published By: VISHNU

24 JUN, 2025 | 08:18 PM

image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த போர் நிறுத்தம் இஸ்ரேலும் அதே நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே மதிக்கப்படும் என்று ஈரானிய அதிபர் மசூத் பெசெகியான் கூறியுள்ளார்.

"சியோனிச ஆட்சி போர் நிறுத்தத்தை மீறவில்லை என்றால், ஈரானும் அதை மீறாது" என்று மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடனான தொலைபேசி உரையாடலில் பெசெகியான் கூறியதாக வெளிநாட்டு வலைத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/218366

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

எமது சமுதாயத்தை நாம் பார்த்து கொள்கிறோம்.

மதத்தின் பெயரால் சிறுமிகளை தாயாக்குவதும், அதை நபி (சல்) வாழ்வில் இருந்து ஆதாரம் காட்டி நியாயப்படுத்துவததும்.

மேற்கு நாட்டில் அநாதை வெள்ளை சிறுமிகளை, அண்ணன், தம்பி, மாமன், தகப்பன், மனைவியின் தகப்பன் என ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆண்களே நாசம் பண்ணுவதும் என உங்கள் உம்மாவிம் உள்ளே சீழ் கட்டி நாற்றம் எடுக்கிறது.

இந்த நாத்தம் பிடித்த நிலைக்கு பிரதான காரணமாக உங்கள் காபீர்கள் முஸ்லிம்களை விட கீழானவர்கள் என்ற குரானிய போதனைகளே காரணம்.

தரமான குறிப்புகள்

சிறுபான்மையாக இருக்கும்வரை லக்கும் தீனுக்கும் வலியத்தீன் என்பது அதுவே பெரும்பான்மையானதும்

காபிர்களை மூட்டுமூட்டாக தறியுங்கள் உங்கள் கொடூரத்தை அவர்கள் காணட்டும் என்பது.

முஸ்லீம்நாடுகளில் வாழமுடியாமல் ஐரோப்பிய, அமெரிக்க, ஆசிய பசுபிக் நாடுகளுக்கு போய் அகதி அந்தஸ்த்து பெற்றுவிட்டு தங்களுடைய விளைநிலங்களை ஒன்றுக்கு நான்காக பெருக்கி அதை வைத்து குழந்தை அறுவடையையும் பெருக்கி அந்தந்த நாடுகளை இவர்கள் தப்பித்து வந்த இஸ்லாமிய நாடுபோல் மாற்றியே தீருவோம் என்று வீதியில் இரங்கி சூளுரைப்பது. இந்த மதவாதம் , அடிப்படைவாதம் என்று ஒரு மும்மீனை பொறுத்தவரை ஒன்றே இல்லை. எல்லா முஃமீன்களும் மத அடிப்படைவாதிகள் தான் இல்லாவிட்டால் அவர்கள் முஃமின்களாக இருக்க முடியாது. இஸ்லாத்தை முற்றிலுமாக திறந்தால் தான் அப்படி இருக்க முடியும்.

இன்றும் U .K யில் தெருவில் செல்லும் ஒரு சாதாரண முஸ்லிமிடம் சரியாச்சட்டம் கொண்டுவந்து முஸ்லீம் நாடாக அறிவிப்போமா என்று கேட்டுப்பாருங்கோ. உடனே சிலிர்த்துக்கொண்டு முதல் ஆளாக கையைதூக்குவினம். மத அடிப்படை என்பதே இஸ்லாத்தின் அத்திவாரம். Arebian Supremacy க்கு பிறந்த மதம் அது அப்படித்தான் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

அமெரிக்க இஸ்ரேல் - ஈரான் போர் எதற்காக நடக்கின்றது?

மனித உரிமைகளுக்காகவா அல்லது ஆயுத பலத்திற்காகவா? ஒவ்வொரு இனத்திற்கும் மதத்திற்கும் அது சார்ந்த நடைமுறைகள் இருக்கும். அதற்காக மனித உரிமைகள் எனும் பெயரில் மேற்குலகு ஓநாய் ஊளையிடத்தேவையில்லை.இதுதான் நாடு.இதுதான் சட்டம். விரும்பினால் இருங்கள் இல்லையேல் வெளியேறுங்கள் எனும் சுதந்திரம் கொடுத்துள்ளார்கள். இதற்கு மேல் என்ன சுதந்திரம் வேண்டும்?

மேற்குலகை போல் அவிழ்த்து விட்டு ஆடும் கலாச்சாரத்தை ஏற்கவில்லை என்றால் அது அவர்கள் தனிமனித சுதந்திரம் தானே?

அமெரிக்காவினது ஆயுதங்களை களைந்துவிட்டால் அதன் பலம் தெரியும்.🤣

இஸ்ரேல்-ஈரான் யுத்தம் ஈரானிய மக்களின், குறிப்பாக பெண்களின் சுதந்திரத்துக்கான போர் என நான் எங்கும் எழுதவில்லை. அது இஸ்ரேலின் பாதுகாப்பு, நெதன்யாஹுவின் அரசியல் இருப்பு சம்பந்தமானது.

ஆனால் ஈரானியர் நீங்கள் நினைப்பது போல் பிற்போக்குத்தனத்தை கலாச்சாரமாக கொண்டவர்கள் அல்ல.

மேலே துருக்கி, மலேசியா என இரு உதாரணங்களை தந்துள்ளேன். இவை இரெண்டும் அமேரிக்க அடிவருடிகள் அல்ல. ஆனால் முற்போக்காக மிதவாத இஸ்லாமிய நாடுகள். இப்படித்தான் முல்லாக்கள் பதவிக்கு வரமுன் ஈரானும் இருந்தது.

அதே நிலைக்கு திரும்பவே மீண்டும், மீண்டும் போராடி மடிகிறார்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் ஈரானிய இளையவர்கள்.

நம்மை போல “வெளியேறும் சுதந்திரத்தை” பாவித்து மேற்கு நாட்டுக்கு ஓடி வராமல் 🤣, தமது நாட்டில் தம் சுதந்திரவாழ்வுக்காக அவர்கள் போராடி மடிகிறார்கள், நீங்கள் சொல்வது போல் ஆடைகளையும் ஆசையில் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

நம்மை போல “வெளியேறும் சுதந்திரத்தை” பாவித்து மேற்கு நாட்டுக்கு ஓடி வராமல் 🤣,

மேற்குலகமே ஈழ தமிழர்கள் தாகம்

ஈரானியர்கள் 👍

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

இப்ப நிலமை வேறமாதிரி இருக்கே!!!

ஈரான் Unconditional surrender செய்ய வேண்டும் என்ற ட்ரம்ப் அமெரிக்கத் தளங்களைத் தாக்கினால் ஈரானைத் தாக்குவோம் என்ற ட்ரம்ப் இரான் அமெரிக்கத் தளங்களைத் தாக்கிய மறுநாளே போர்நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கிறார் ஆட்சி மாற்றம் கோரியவர் யுரேனியம் செறிவாக்குவதை நிறுத்த வேண்டும் என்றவர் அடக்கி வாசிக்கிறார்.வென்றது ஈரான்.

3 hours ago, புலவர் said:

ட்ரம்ப் தன்பாட்டுக்கு போர் நிறுத்தத்தை அறிவிக்கிறார்.ஈரான் கண்டும் காணாததுபோல் இஸ்ரேல் மீது சரமாரித் தாக்குதலை நிகழ்த்தி விட்டுதான் ஓய்ந்திருக்கிறது.25 வருட பொருளாதார தடைக்கு மத்தியிலும் ஈரான் நின்று பிடித்தது ஆச்சரியம்தான்.இந்திய பாகிஸ்தான் போரிலும் இஸ்ரேல் ஈரான் போரிலும் ஒரு மறைகரம் இருக்கின்றது.பின்பலம் தெரிந்தே ட்ரம்ப் போர்நிறுத்ததுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

உங்களுக்கு இந்த தெளிவு, இங்கே பந்தி பந்தியாக எழுதுவோருக்கு புரியவில்லை என்பது தான் ஆச்சரியம்.

உண்மையில், ஈரான் அதன் முதல் படி கேந்திர இலக்குகளை அடைந்து உள்ளது.

பேச்சுவார்த்தை நடந்தால், அணுத்துறை பற்றி மட்டும்.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்

வேதாளம் புதிய விக்ரமாதித்தனை தேடுகிறது🤣.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Justin said:

இவர்களிடம் போய் அணு குண்டு கிடைத்தால் அல்லது கொஞ்சம் யுரேனியம் கிடைத்தால் கோசான் சொல்வது போல "நம் ஒவ்வொருவர் பிருஷ்டத்திற்கு அடியிலும்" அது வெடிக்கும்😂!

நம்ம தமிழ் ஆயுத இயக்கங்களிடம் அணுவாயுதம் இருந்திருந்தால் தமிழர் பிரச்சனை ஒட்டுமொத்தமாக இருந்த இடம் தெரியாத அளவுக்கு தீர்ந்திருக்கும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

அமெரிக்க இஸ்ரேல் - ஈரான் போர் எதற்காக நடக்கின்றது?

மனித உரிமைகளுக்காகவா அல்லது ஆயுத பலத்திற்காகவா? ஒவ்வொரு இனத்திற்கும் மதத்திற்கும் அது சார்ந்த நடைமுறைகள் இருக்கும். அதற்காக மனித உரிமைகள் எனும் பெயரில் மேற்குலகு ஓநாய் ஊளையிடத்தேவையில்லை.இதுதான் நாடு.இதுதான் சட்டம். விரும்பினால் இருங்கள் இல்லையேல் வெளியேறுங்கள் எனும் சுதந்திரம் கொடுத்துள்ளார்கள். இதற்கு மேல் என்ன சுதந்திரம் வேண்டும்?

மேற்குலகை போல் அவிழ்த்து விட்டு ஆடும் கலாச்சாரத்தை ஏற்கவில்லை என்றால் அது அவர்கள் தனிமனித சுதந்திரம் தானே?

அமெரிக்காவினது ஆயுதங்களை களைந்துவிட்டால் அதன் பலம் தெரியும்.🤣

உலக அரசியல் பூவியல் உளவியல் விஞ்ஞான அறிஞர்கள் யாழில் பந்தி பந்தியாக எழுதும் கருத்துக்களை கடந்த 20 வருசமாக வாசித்து வந்தும் உங்களால் எப்படித்தான் இப்படி எழுத முடிகிறதோ தெரியவில்லை.

செப்டம்பர் 11/2001 தாக்குதலுக்கு முன்பு ராம்போக்களாக கோலிவூட் சினிமா தொடங்கி அமெரிக்க அரசியல் தலைவர்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரேவேற்ற உலக முஸ்லிம்கள். எப்படி அதி தீவிர பயங்கரவாதிகள் ஆனார்கள்? 2014 இல் சிரியாவின் 6௦ வீத எண்ணையையும் ஈராக்கின் 4௦ வீத எண்ணையையும் விற்று ஒரு நாளுக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலாக பணம் ஈட்டி உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பாக இருந்த ஐஸ்ஐஸ் இன்று எங்கே? அவர்கள் பணம் தலைவர்கள் எல்லோரும் எங்கே? அவர்கள் கொன்று குவித்தது மூன்று லடசத்திற்குக்கும் மேலான இசுலாமியர்களை. இன்று சிரியாவை கைப்பற்றிய தீவிரவாதிகள் திடீரெனெ இவ்வளவு ஆயுத பலத்துடன் எங்கிருந்து வந்தார்கள்? அமரிக்காவின் தேடல் பட்டியலில் முதலாம் இரண்டாம் இடத்தில இருந்தவர்களுக்கு இன்று அமரிக்க ஜனாதிபதி வாழ்த்து தெரிவிக்கிறார்.

மேற்குலகின் பிரச்சார மூளைசலவைக்கு உள்ளாகி உலகில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் கிணற்று தவளைகள் போல் இருந்து கொண்டு பந்தி பந்தியாக யாழில் எழுதிக்கொண்டிருக்கும் உலக அரசியலை வாசித்தும் உங்களால் எப்படி இப்படி எழுத கேள்வி கேட்க முடிகிறது?

வெறும் பத்து நாட்கள் முன்பு தலையில் முடடாக்கு அணியாது ஈரானின் தலைநகரில் திரிந்த்த ஆயிரக்கணக்கான பெண்களை பிடித்து எவ்வளவு சித்தரவதை செய்து கொல்கிறார்கள் என்பதை தயவு செய்து கீழ் இருக்கும் வீடியோவில் ஒருமுறை பார்த்தாவது உங்கள் நிலைபாடடை கொஞ்சம் மாற்றுங்கள். ஈரானில் யாழ்கள அறிஞர்கள் போல படித்து அறிவு பெறுவதற்கு பெண்களுக்கு 1979 இல் இருந்து தடை விதித்து வந்துள்ளார்கள் பெண்கள் புத்தகத்தை தொடடால் கையை வெட்டி எறிவார்கள் யூனிவர்சிட்டி என்பதே ஈரானில் இல்லை....... தலையை மூடாமல் பெண்கள் வெளியே வந்தால் வீதியிலே தலைவெட்டு

அண்ணளவாக ஈழத்தில் தமிழகத்தில் இன்று இருக்கும் நிலைதான் சேலை இன்றி பெண்கள் வெளியில் வந்தால் வெட்ட படுவார்கள் பொட்டு வைக்காது வெளியில் வந்தால் கொல்லபடுவார்கள் எனும் அச்சத்தில்தான் இன்று ஈழத்திலும் இந்தியாவிலும் பெண்கள் சேலை கட்டி வருகிறார்கள் பொட்டு வைத்துக்கொண்டு வெளியில் வருகிறார்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.