Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Trump-Nobel-Peace-prize-4.webp?resize=75

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை!

அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் பெயரை சமீபத்தில் பாகிஸ்தான் பரிந்துரைத்தது.

ஆனால் பல போர்களை நிறுத்த முயற்சி மேற்கொண்டாலும் தனக்கு நோபல் பரிசு தர மாட்டார்கள் என்று ட்ரம்ப் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயர் முறைப்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான கார்ட்டர், நோபல் குழுவிற்கு எழுதிய கடிதத்தில் ட்ரம்பின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு வந்த ட்ரம்பின் பங்கு வரலாற்று சிறப்புமிக்கது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இதுவரை 338 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்று நோபல் குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1437036

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோபல் பரிசு எல்லாம் கெஞ்சிக் கேட்டு பெறுகின்ற கேவலமான நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். . 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 25/6/2025 at 20:53, தமிழ் சிறி said:

அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் பெயரை சமீபத்தில் பாகிஸ்தான் பரிந்துரைத்தது.

உலகம் எங்கே போகிறது? நோபல் பரிசுக்கே, அல்லது இதுவரை அந்த பரிசை பெற்றவர்களுக்கே அவமானம். அமெரிக்காவின் அடுத்த இலக்கு பாகிஸ்தான் தானாம். அது அணு ஆயுதம் தயாரிப்பதாக ஒரு செய்தி உலா வருகிறது. அதனால பாகிஸ்தான் ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்து கோபத்தை, தாக்குதல் இலக்கை திசை திருப்ப பார்க்கிறதா?

பாகிஸ்தான் சில தினங்களுக்கு முன் ட்ரம்பைப் புகழ்ந்து நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்தது. அதன்பின் பாகிஸ்தான் அணுகுண்டினைச் சுமந்து நீண்டதூரம் செல்லக் கூடிய ஏவுகணையை உருவாக்குவது பற்றி அமெரிக்காவ்லிருந்து கண்டனம் எழுந்தவுடன் பாகிஸ்தான் ட்ரம்பைத் திட்ட ஆரம்பித்துள்ளது.

4 hours ago, தமிழ் சிறி said:

நோபல் பரிசு எல்லாம் கெஞ்சிக் கேட்டு பெறுகின்ற கேவலமான நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். . 😂

தமிழ் சிறி,

இவர் அமெரிக்க அதிபராக வரவேண்டும் என்று மிகவும் விரும்பியர்களில் நீங்களும் ஒருவர் என நினைவு. ஆனால் இப்ப ஏன் இந்த திடீர் மாற்றம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

தமிழ் சிறி,

இவர் அமெரிக்க அதிபராக வரவேண்டும் என்று மிகவும் விரும்பியர்களில் நீங்களும் ஒருவர் என நினைவு. ஆனால் இப்ப ஏன் இந்த திடீர் மாற்றம்?

நிழலி… ட்றம்பின் ஆட்சியை, இரண்டாக பிரிக்கலாம்.

1) பைடனுக்கு முன். 2) பைடனுக்கு பின்.

பைடனுக்கு முன்… ட்றம்பின் ஆட்சியில் போர் வெறி இல்லாமல் உலகம் அமைதியாக இருந்தது.

இடையில் வந்த பைடன், உக்ரைன் - ரஷ்யப் போருக்குள் உலகத்தையே இழுத்து விட்டு போர் வெறி கொண்டு ஆடி, அதன் மறைமுக பாதிப்புக்களை ஒவ்வொரு ஐரோப்பியருக்கும் கொடுத்தது மிகவும் எரிச்சலூட்டியதால் ட்றம்ப் ஆதரவு நிலை எடுத்திருந்தேன்.

ஆனால் நான் எதிர்பார்த்த மாதிரி ட்றம்பின் இரண்டாவது ஆட்சி அமையாமல்… அவரின் செய்கைகள் மிகவும் அருவருக்கத்தக்க, கேலித்தனமாக உள்ள ஆட்சியாக அமைந்துள்ளதை பார்த்து… ட்றம்புக்கு எதிர் நிலை எடுக்க வேண்டி வந்துள்ளது. 🙂

நாம் வெட்டிய கிணற்றில்…. உப்புத் தண்ணீர் வந்தால், அதனை குடித்துக் கொண்டு இருக்க முடியாது தானே… 😂 அதனை மூடி விட்டு, அடுத்த கிணற்றை வெட்ட வேண்டியதுதான். 🤣

அரசியலில்…. இதெல்லாம் சகஜமப்பா. 😂 🤣

Edited by தமிழ் சிறி

55 minutes ago, தமிழ் சிறி said:

நாம் வெட்டிய கிணற்றில்…. உப்புத் தண்ணீர் வந்தால், அதனை குடித்துக் கொண்டு இருக்க முடியாது தானே… 😂 அதனை மூடி விட்டு, அடுத்த கிணற்றை வெட்ட வேண்டியதுதான். 🤣

அரசியலில்…. இதெல்லாம் சகஜமப்பா. 😂 🤣

ஆஹா... நல்லதொரு உதாரணம். ரசித்து சிரிக்க முடிந்தது.😆

56 minutes ago, தமிழ் சிறி said:

நிழலி… ட்றம்பின் ஆட்சியை, இரண்டாக பிரிக்கலாம்.

1) பைடனுக்கு முன். 2) பைடனுக்கு பின்.

பைடனுக்கு முன்… ட்றம்பின் ஆட்சியில் போர் வெறி இல்லாமல் உலகம் அமைதியாக இருந்தது.

ட்றம் தன் முதல் ஆட்சியில் செய்த வேலைகளில் ஒன்று, ஈரானின் தலைமை அணு விஞ்ஞானியை கொன்றது. அத்துடன் ஈரானுடனான அணு ஆயுதம் தொடர்பான உடன்படிக்கையில் இருந்து வெளியேறியது.

இரண்டாம் தடவை ட்றம் வந்தால் கண்டிப்பாக ஈரானின் முல்லாக்களுக்கு அடி இருக்கு என்று அவர் வர முன்னரே சில தடவைகள் யாழில் எழுதியிருந்தேன். இதே கருத்தை வாலியும் தெரிவித்து இருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

ரம்ப் ஆட்சியில் தான் ஈரான் இராணுவ‌ தள‌ப‌தி 2020ம் ஆண்டு ஈராக்கில் வைத்து கொல்ல‌ப் ப‌ட்டார் , அத‌ன் பின் ஈரானிய‌ர்க‌ள் கோவ‌த்தின் உச்சிக்கு போன‌தை ம‌ற‌க்க‌ முடியாது , ஈரான் அர‌சு ஈரான் ம‌க்க‌ளிட‌ம் ஒவ்வொருத‌ரும் 1டொல‌ர் தாருங்க‌ள் அமெரிக்காவை ப‌ழி தீர்க்க‌ என வெளிப்ப‌டையா அறிவித்த‌வை......................

யார் என்ன‌ சொன்னாலும் , என‌து ஆத‌ர‌வு எப்ப‌வும் ஈரானுக்கு தான் , ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ குர‌ல் கொடுக்கும் முத‌ல் நாடு ஈரான் ம‌ற்ற‌து க‌ட்டார்..........................................

  • கருத்துக்கள உறவுகள்

அமைதிக்கான நோபல் பரிசை மட்டும் அல்ல, கொடுக்கப்படும் மற்ற நோபல் பரிசுகளும் தனக்கே வேண்டும் என்று அடம்பிடிப்பார் அதிபர் ட்ரம்ப். அடுத்த மூன்று வருடங்களில் ஏதோ ஒரு நாள் காலையில் இந்த மனிதன் வேறு ஒரு எழுத்தாளரை வைத்து எழுதிய கவிதையோ அல்லது கதையோ கூட இவரின் பெயரில் வெளிவரலாம், இலக்கிய பரிசுக்காக. இவரின் பெயரில் வந்த 'Art of the Deal' போல. 'He doesn't have a soul...........' என்று பின்னர் சொல்லியிருந்தார் இந்தப் புத்தகத்தை உண்மையில் எழுதிய எழுத்தாளர்.

'ஆன்மா அற்ற ஒரு மனிதன்...............' என்ற இந்த வசனம் இதை வாசித்த அந்தக் கணத்தையே அப்படியே சில்லிடவைத்தது.

இவரால் உலகத்திற்கு பெரும் அழிவு கிட்டும் என்று யாழ் களத்தில் இவர் மீண்டும் வருவதற்கு முன்னர் எழுதியிருக்கின்றேன். இவரின் முன்னைய ஆட்சியில் கூட உலகம் சமாதானப் பூங்காவாக இருந்துவிடவில்லை. இவரின் முன்னைய ஆட்சிக் காலத்திலேயே அமெரிக்கா மிக அதிகமான ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டது. அப்போது ட்ரோன் தாக்குதல்கள் பற்றிய முழுமையான செய்திகள் வெளியே வருவது கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் அந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

உக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவே அமெரிக்காவின் வெளியே வாழும் ஈழத்தமிழர்கள் பலருக்கும் பைடன் மற்றும் ஜனநாயகக்கட்சியை புறம் தள்ளி, ட்ரம்பை சமாதானத்தின் தூதுவராக நினைக்கவைத்தது. அதிபர் ட்ரம்ப் வெறும் வாக்குறுதிகளைக் கொடுப்பவர், அடுத்த நாட்களிலேயே அவற்றை மறந்து விடுபவர், இந்த இயல்பு அவருடன் கூடவே என்றும் இருக்கின்றது. அவருடைய உண்மையான அக்கறை அவரின் மேலே மட்டுமே என்ற விடயத்தை எம் மக்கள் காணத் தவறினார்கள். உக்ரேனின் மீதோ, ரஷ்யாவின் மீதோ அல்லது உலகத்தின் மீதோ அல்ல.

எங்களின் தனிப்பட்ட விருப்பு - வெறுப்புகளைக் கொண்டு, நிகழ்வுகளையும், மனிதர்களையும் கணிப்பது பெரும்பாலும் தவறான முடிவுகளுக்கே இட்டுச்செல்லும்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

முன்னுக்கு பின் முர‌னாக‌ பேசுவ‌து ,

நான் பார்த்த‌ அமெரிக்கா ஜ‌னாதிப‌திக‌ளில் ர‌ம்ப் தான் தூச‌ன‌ சொல்லை பொது வெளியில் பாவித்தார்.......................இவ‌ர் கெட்ட‌ கேடுக்கு......................நோபல் ப‌ரிசு ஒரு கேடு.....................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நிழலி… ட்றம்பின் ஆட்சியை, இரண்டாக பிரிக்கலாம்.

1) பைடனுக்கு முன். 2) பைடனுக்கு பின்.

பைடனுக்கு முன்… ட்றம்பின் ஆட்சியில் போர் வெறி இல்லாமல் உலகம் அமைதியாக இருந்தது.

இடையில் வந்த பைடன், உக்ரைன் - ரஷ்யப் போருக்குள் உலகத்தையே இழுத்து விட்டு போர் வெறி கொண்டு ஆடி, அதன் மறைமுக பாதிப்புக்களை ஒவ்வொரு ஐரோப்பியருக்கும் கொடுத்தது மிகவும் எரிச்சலூட்டியதால் ட்றம்ப் ஆதரவு நிலை எடுத்திருந்தேன்.

ஆனால் நான் எதிர்பார்த்த மாதிரி ட்றம்பின் இரண்டாவது ஆட்சி அமையாமல்… அவரின் செய்கைகள் மிகவும் அருவருக்கத்தக்க, கேலித்தனமாக உள்ள ஆட்சியாக அமைந்துள்ளதை பார்த்து… ட்றம்புக்கு எதிர் நிலை எடுக்க வேண்டி வந்துள்ளது. 🙂

நாம் வெட்டிய கிணற்றில்…. உப்புத் தண்ணீர் வந்தால், அதனை குடித்துக் கொண்டு இருக்க முடியாது தானே… 😂 அதனை மூடி விட்டு, அடுத்த கிணற்றை வெட்ட வேண்டியதுதான். 🤣

அரசியலில்…. இதெல்லாம் சகஜமப்பா. 😂 🤣

இது "உப்புத் தண்ணி தரப் போகும் கிணறு தான்" என்று இங்கே அந்த நேரம் சொன்னவர்கள் மூக்குச் சாத்திரம் பார்த்துச் சொல்லவில்லை, உலகிலும் அமெரிக்காவிலும் நிகழ்ந்த சம்பவங்களைப் பார்த்தே சொல்லியிருந்தார்கள். சும்மா பைடனின் மேலிருந்த கடுப்பில் ட்ரம்பைப் பெரிய ஆளாகக் காட்டியவர்கள் களைத்து விழுந்து கிணறு வெட்டித் தண்ணியைச் சுவைத்த பின்னர் தான் நம்பியிருக்கிறார்கள்!

இதைத் தான் சொல்வது, மூடனுக்கு காலில் அசுத்தம் அப்பினால் 3 இடங்களில் அப்புமாம் என்று😂!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

அமைதிக்கான நோபல் பரிசை மட்டும் அல்ல, கொடுக்கப்படும் மற்ற நோபல் பரிசுகளும் தனக்கே வேண்டும் என்று அடம்பிடிப்பார் அதிபர் ட்ரம்ப். அடுத்த மூன்று வருடங்களில் ஏதோ ஒரு நாள் காலையில் இந்த மனிதன் வேறு ஒரு எழுத்தாளரை வைத்து எழுதிய கவிதையோ அல்லது கதையோ கூட இவரின் பெயரில் வெளிவரலாம், இலக்கிய பரிசுக்காக. இவரின் பெயரில் வந்த 'Art of the Deal' போல. 'He doesn't have a soul...........' என்று பின்னர் சொல்லியிருந்தார் இந்தப் புத்தகத்தை உண்மையில் எழுதிய எழுத்தாளர்.

'ஆன்மா அற்ற ஒரு மனிதன்...............' என்ற இந்த வசனம் இதை வாசித்த அந்தக் கணத்தையே அப்படியே சில்லிடவைத்தது.

இவரால் உலகத்திற்கு பெரும் அழிவு கிட்டும் என்று யாழ் களத்தில் இவர் மீண்டும் வருவதற்கு முன்னர் எழுதியிருக்கின்றேன். இவரின் முன்னைய ஆட்சியில் கூட உலகம் சமாதானப் பூங்காவாக இருந்துவிடவில்லை. இவரின் முன்னைய ஆட்சிக் காலத்திலேயே அமெரிக்கா மிக அதிகமான ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டது. அப்போது ட்ரோன் தாக்குதல்கள் பற்றிய முழுமையான செய்திகள் வெளியே வருவது கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் அந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

உக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவே அமெரிக்காவின் வெளியே வாழும் ஈழத்தமிழர்கள் பலருக்கும் பைடன் மற்றும் ஜனநாயகக்கட்சியை புறம் தள்ளி, ட்ரம்பை சமாதானத்தின் தூதுவராக நினைக்கவைத்தது. அதிபர் ட்ரம்ப் வெறும் வாக்குறுதிகளைக் கொடுப்பவர், அடுத்த நாட்களிலேயே அவற்றை மறந்து விடுபவர், இந்த இயல்பு அவருடன் கூடவே என்றும் இருக்கின்றது. அவருடைய உண்மையான அக்கறை அவரின் மேலே மட்டுமே என்ற விடயத்தை எம் மக்கள் காணத் தவறினார்கள். உக்ரேனின் மீதோ, ரஷ்யாவின் மீதோ அல்லது உலகத்தின் மீதோ அல்ல.

எங்களின் தனிப்பட்ட விருப்பு - வெறுப்புகளைக் கொண்டு, நிகழ்வுகளையும், மனிதர்களையும் கணிப்பது பெரும்பாலும் தவறான முடிவுகளுக்கே இட்டுச்செல்லும்.

உண்மையை எழுதிய‌மைக்கு பாராட்டுக்க‌ளும் ந‌ன்றிக‌ளும்👍..................

இவ‌ர் தான் உல‌கில் அமைதியை நிலை நாட்ட‌ போகிறேன் என‌ சொல்லி தான் ஆட்சிக்கு வ‌ந்தார் , தான் வ‌ந்த‌ கையோட‌ உக்கிரேன் ர‌ஸ்சிய‌ போரை நிறுத்துவேன் என்றார் , நேற்று ந‌ட‌ந்த‌ நேட்டோ நாட்டு மீரிங்கில் , உக்கிரேன் செல‌ஸ்கியும் க‌ல‌ந்து கொண்டார் , உக்கிரேன் எப்ப‌ நேட்டோ அமைப்பில் சேர்ந்து................உல‌கில் என்ன‌ ந‌ட‌க்குது என்று தெரிய‌ல‌😁😛..................................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ட்றம் தன் முதல் ஆட்சியில் செய்த வேலைகளில் ஒன்று, ஈரானின் தலைமை அணு விஞ்ஞானியை கொன்றது. அத்துடன் ஈரானுடனான அணு ஆயுதம் தொடர்பான உடன்படிக்கையில் இருந்து வெளியேறியது.

ஈரான் 2015 வரை JCPOA என்ற ஒபாமா அரசுடனான ஒப்பந்தப் படி பிசகாமல் நடந்திருக்கிறது. இதற்குக் காரணம், ஈரானின் நேர்மை என்பதை விட, 200 வரையான அணு விஞ்ஞானிகளாலும், நிபுணர்களாலும் தயாரிக்கப் பட்ட கண்காணிப்பு (monitoring) நுட்பங்கள் மிக நுணுக்கமானவையாக இருந்தமை தான் காரணம் என்கிறார்கள். அந்த கண்காணிப்பை மீறி, ஈரான் யுரேனியத்தை உள்நாட்டில் செறிவாக்கியிருக்க இயலாது என்று தான் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

ட்ரம்ப் அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்ட நாளில் இருந்தே ஈரான் செறிவாக்கலை வெளிப்படையாகச் செய்ய ஆரம்பித்திருக்கிறது. அப்படிச் செறிவாக்கிய யுரேனியம் தான் இப்போது அமெரிக்கா தேடிக் கொண்டிருக்கும் 600 kg செறிவாக்கிய யுரேனியம். இதை எந்த அமெரிக்க ஊடகங்களிலும் யாரும் சுட்டிக் காட்டியதாகத் தெரியவில்லை. நேச்சர் இதழில், ஈரானின் யுரேனியம் செறிவாக்கல் வரலாற்று பற்றி ஒரு நல்ல கட்டுரை வந்திருக்கிறது, நேரம் இருக்கும் போது தமிழில் மாற்றிப் போடுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமைதி பேச்சுவார்த்தை மூலம் பலஸ்தீனத்தை அமைதிப் பூங்காவாக்கிய பில் கிளின்டனுக்கு நோபல் பரிசு கிடைத்தது( பலஸ்தீனம் இன்று சாம்பல் பூங்கா என்பது வேறு விடயம்)

ஆட்சிக்கு வந்து இருண்ட விடிஞ்ச நிலை தெரியாமல் இருந்த ஒபாமாவிற்கு நோபல் பரிசு( அந்த நோபல் பரிசு எதற்கு என்று ஓபாமாவிற்கே தெரியாது என்கிறார்கள்)

இப்படியான அதிசய நோபல் பரிசுகள் கிடைக்கும் போது சிங்கத்தலைவன் டொனால்ட் ரம்ப் நோபல் பரிசிற்கு ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்கின்றது.

கவனிக்க👉 டொனால்ட் ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் ஈரானால் இஸ்ரேலின் கொட்டம் அடக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

பில் கிளின்டனுக்கு நோபல் பரிசு எதுவும் வழங்கப்படவில்லை. அமெரிக்க ஜனாதிபதிகளில் ஜிம்மி கார்ட்டருக்கு கொடுத்திருந்தார்கள். பின்னர் ஓபாமாவிற்கு கொடுத்தார்கள். மேலும் இருவருக்கு 100 வருடங்களின் முன் கொடுத்திருந்தார்கள்.

எம்ஜிஆருக்கு இந்தியாவின் சிறந்த நடிகர் விருது ஒரு முறை கொடுக்கப்பட்டிருக்கின்றது. சிவாஜிக்கு இந்த விருது ஒரு தடவையும் கொடுக்கப்படவில்லை. இதில் எது அதிகொடுமை.........🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புலவர் said:

ஒன்றும் தெரியுது இல்லை புல‌வ‌ர் அண்ணா.....................என்ன‌ இணைத்தீர்க‌ள்.............................

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வீரப் பையன்26 said:

ஒன்றும் தெரியுது இல்லை புல‌வ‌ர் அண்ணா.....................என்ன‌ இணைத்தீர்க‌ள்.............................

க்கும்! இணைத்த எனக்கே ஒன்றும் தெரியவில்லை.யாழில் என்னால் படங்களை இணைக்க முடியவில்லை.இலகுவாக படங்கள் இணைக்க சினனப்பிள்ளைகளுக்கு விளங்கிற மாதிரியாராவது சொல்லித் தாங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
51 minutes ago, ரசோதரன் said:

பில் கிளின்டனுக்கு நோபல் பரிசு எதுவும் வழங்கப்படவில்லை.

பலஸ்தீன் சமாதான விடயத்தில் யசீர் அரபாத்திற்கும் ராபினுக்கு மட்டுமே நோபல் பரிசு வழங்கப்பட்டது. தவறான தகவல் தந்ததிற்கு மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அமைதி பேச்சுவார்த்தை மூலம் பலஸ்தீனத்தை அமைதிப் பூங்காவாக்கிய பில் கிளின்டனுக்கு நோபல் பரிசு கிடைத்தது

குசா அண்ணை வீட்டில சரி கட்டி கொடுத்தனியளோ?

8 hours ago, தமிழ் சிறி said:

நிழலி… ட்றம்பின் ஆட்சியை, இரண்டாக பிரிக்கலாம்.

1) பைடனுக்கு முன். 2) பைடனுக்கு பின்.

பைடனுக்கு முன்… ட்றம்பின் ஆட்சியில் போர் வெறி இல்லாமல் உலகம் அமைதியாக இருந்தது.

இடையில் வந்த பைடன், உக்ரைன் - ரஷ்யப் போருக்குள் உலகத்தையே இழுத்து விட்டு போர் வெறி கொண்டு ஆடி, அதன் மறைமுக பாதிப்புக்களை ஒவ்வொரு ஐரோப்பியருக்கும் கொடுத்தது மிகவும் எரிச்சலூட்டியதால் ட்றம்ப் ஆதரவு நிலை எடுத்திருந்தேன்.

ஆனால் நான் எதிர்பார்த்த மாதிரி ட்றம்பின் இரண்டாவது ஆட்சி அமையாமல்… அவரின் செய்கைகள் மிகவும் அருவருக்கத்தக்க, கேலித்தனமாக உள்ள ஆட்சியாக அமைந்துள்ளதை பார்த்து… ட்றம்புக்கு எதிர் நிலை எடுக்க வேண்டி வந்துள்ளது. 🙂

நாம் வெட்டிய கிணற்றில்…. உப்புத் தண்ணீர் வந்தால், அதனை குடித்துக் கொண்டு இருக்க முடியாது தானே… 😂 அதனை மூடி விட்டு, அடுத்த கிணற்றை வெட்ட வேண்டியதுதான். 🤣

அரசியலில்…. இதெல்லாம் சகஜமப்பா. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புலவர் said:

க்கும்! இணைத்த எனக்கே ஒன்றும் தெரியவில்லை.யாழில் என்னால் படங்களை இணைக்க முடியவில்லை.இலகுவாக படங்கள் இணைக்க சினனப்பிள்ளைகளுக்கு விளங்கிற மாதிரியாராவது சொல்லித் தாங்கோ.

கூட்டில‌ போய் Pic upload எழுதுங்கோ இந்த‌ இணைய‌ம் வ‌ரும் , உங்க‌ட‌ கைபேடியில் இருக்கும் ப‌ட‌மோ அல்ல‌து கொம்பியூட்ட‌ரில் இருக்கும் ப‌ட‌த்தை தெரிவு செய்துவிட்டு

Screenshot-20250627-080636-Chrome.jpg

Direct link கொப்பி ப‌ண்ணி யாழில் இணைத்தால் ப‌ட‌ம் தெரியும் புல‌வ‌ர் அண்ணா , முய‌ற்ச்சி செய்து பாருங்கோ ச‌ரி வ‌ரும்👍...................

Screenshot-20250627-080726-Chrome.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, goshan_che said:

குசா அண்ணை வீட்டில சரி கட்டி கொடுத்தனியளோ?

நான் லூசுத்தனமாக எழுதுறதால தான் பல இடங்களில் நல்ல தகவல்களும் கருத்துக்களும் பிறக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
IMG 2320 — Postimages
No image preview

IMG 2320 — Postimages

15 hours ago, வீரப் பையன்26 said:

கூட்டில‌ போய் Pic upload எழுதுங்கோ இந்த‌ இணைய‌ம் வ‌ரும் , உங்க‌ட‌ கைபேடியில் இருக்கும் ப‌ட‌மோ அல்ல‌து கொம்பியூட்ட‌ரில் இருக்கும் ப‌ட‌த்தை தெரிவு செய்துவிட்டு

Screenshot-20250627-080636-Chrome.jpg

Direct link கொப்பி ப‌ண்ணி யாழில் இணைத்தால் ப‌ட‌ம் தெரியும் புல‌வ‌ர் அண்ணா , முய‌ற்ச்சி செய்து பாருங்கோ ச‌ரி வ‌ரும்👍...................

Screenshot-20250627-080726-Chrome.jpg

நன்றி பையா ! இதில் தொலைபேசியிலோ கொம்பியூட்டரிலோ சேமிக்காது நேரடியாக கொப்பி பேஸ்ட் முறையில் சொல்லித்தந்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

தொலைபேசியிலோ கொம்பியூட்டரிலோ சேமிக்காது நேரடியாக கொப்பி பேஸ்ட் முறையில் சொல்லித்தந்தால் நல்லது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.