Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20 JUL, 2025 | 10:41 AM

image

(இராஜதுரை ஹஷான்)

குழந்தை பிறந்தவுடன் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும்போது பெற்றோர் திருமணம்  முடித்துள்ளார்களா என்பது தற்போது கேட்கப்படுவதில்லை. தந்தையின் பெயர் இல்லாவிடினும்,  தாயின் குடும்ப வழி பெயர் மற்றும் விபரங்கள் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும் போது பயன்படுத்த முடியும். அதற்கான வசதிகள் காணப்படுகின்றன என்று மகளிர்  விவகாரம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

மகளிர் விவகாரம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

குருணாகல் மாவத்தகம பகுதியில் கடந்த 17 ஆம் திகதியன்று பிறந்து இரண்டு நாட்களான சிசு ஒன்று வயல்வெளியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து  சமூகத்துக்கு ஒரு அறிவுறுத்தலை வழங்க வேண்டிய பொறுப்பு மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சுக்கு உண்டு.

பெண்கள் தந்தையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் அல்லது பொறுப்பேற்க முடியாத நிலையில் குழந்தையை பிரசவிக்க நேரிட்டால் பாரதூரமான சுகாதார பாதிப்புக்கும், சமூக நெருக்கடிகளுக்கும் உள்ளாக நேரிடும். ஆகவே இவ்வாறான சம்பவங்கள் குறித்து அமைச்சுக்கு பாரியதொரு பொறுப்பு காணப்படுகிறது.

பொறுப்பேற்க முடியாத நிலை மற்றும் உறுதிப்படுத்த முடியாத சூழல் ஆகிய காரணிகள் பெண்கள் அச்சமடைந்து இவ்வாறு தாம் பெற்ற குழந்தையை கைவிட்டுச் செல்கிறார்கள். மனிதர்களின் உளவியல் தொடர்புகளை தடுக்க முடியாது, சட்டமியற்ற முடியாது.

இருப்பினும் அந்த உளவியல் ரீதியிலான தொடர்பில் பிரதிபலனாக  பிள்ளைகளை பாதுகாப்பற்ற வகையில் விட்டுச் செல்லும் நிலையை ஏற்படுத்திக் கொள்ள  வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

குழந்தை பிறந்தவுடன் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் பதியும்போது பெற்றோர் திருமணம் முடித்துள்ளார்களா என்பது தற்போது கேட்கப்படுவதில்லை. தந்தையின் பெயர் இல்லாவிடினும்,தாயின் குடும்பவழி பெயர் மற்றும் விபரங்கள் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும் போது பயன்படுத்த முடியும். அதற்கான வசதிகள் காணப்படுகின்றன. பெண்கள் பிள்ளை பெற்றவுடன் அனைத்தையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.

பெற்ற குழந்தையை வளர்க்க முடியாவிடின் பிறிதொரு தரப்பினருக்கு அந்த குழந்தையை கையளிக்கும் சட்டத்திலான நிறுவன கட்டமைப்பு நாட்டில் உள்ளது. நீதிமன்ற கட்டமைப்பின் ஊடாக இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதற்கான வசதிகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் வழங்கப்படும்.

குருநாகல் மாவத்தகம பகுதியில் வயல்வெளியில் கைவிடப்பட்ட சிசு தற்போது வைத்தியசாலை கண்காணிப்பில் ஆரோக்கியமாக உள்ளது. இந்த சிசுவின் தாயை தேடி விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தாயை கண்டுப்பிடித்தவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த தாய் மாத்திரம் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிடும் சமூக நிலையே காணப்படுகிறது. இந்நிலைமை மாற்றம் பெற வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/220434

  • கருத்துக்கள உறவுகள்

எம் முன்னோர்கள் எதற்காக ஒரு குழந்தையின் பிறப்பிற்கு தந்தையின் பெயரை அத்தாட்சிப்படுத்தினார்கள். அவர்கள் என்ன முட்டாள்களா? தந்தை எவர் என்று தெரியாத, அறியமுடியாதவிடத்து அந்தத் தாயை எங்கள் சமூகம் எப்படி அழைக்கும்.?????🫣

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒருவகையில் முற்போக்கு சிந்தனை வடிவம் தான். இளவயது மகப்பேறு, பாலியல் துஸ்பிரயோக விளைவு போன்ற இக்கட்டான நிலையை சந்திக்கும் பெண்ணுக்கு இது அனுகூலமாக கூட அமையலாம்.

குழந்தையின் வளர்ச்சியில், பராமரிப்பில் நேரத்தை, செலவுகளை பகிர்ந்து கொள்ளாத ஒரு ஆண்வெறும் பத்திரத்தில் மட்டும் தன்னுடைய பெயரை போட்டு "ஆண்மையை" காட்டுவதில் என்ன பலன்.

சமூகம் எல்லாவற்றிட்கும் எதோ ஒரு பெயர் வைத்து அழகு பார்க்கும்... அது அவர்கள் மனப் பிறழ்வு.

இது என்னுடைய தாழ்மையான கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Paanch said:

எம் முன்னோர்கள் எதற்காக ஒரு குழந்தையின் பிறப்பிற்கு தந்தையின் பெயரை அத்தாட்சிப்படுத்தினார்கள். அவர்கள் என்ன முட்டாள்களா? தந்தை எவர் என்று தெரியாத, அறியமுடியாதவிடத்து அந்தத் தாயை எங்கள் சமூகம் எப்படி அழைக்கும்.?????🫣

உலகிலேயே ஆணின் பெயரை மட்டும் சந்ததி பெயராக எடுத்து செல்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

எம் முன்னோர்கள் எதற்காக ஒரு குழந்தையின் பிறப்பிற்கு தந்தையின் பெயரை அத்தாட்சிப்படுத்தினார்கள். அவர்கள் என்ன முட்டாள்களா? தந்தை எவர் என்று தெரியாத, அறியமுடியாதவிடத்து அந்தத் தாயை எங்கள் சமூகம் எப்படி அழைக்கும்.?????🫣

ஆபிரிக்க நாடுகளில் இந்த வழக்கம் உள்ளது. பள்ளி மாணவிகளுக்குக் குழந்தைகள் பிறந்தால் காலை நேரப் பிரார்த்தனையின் போது எல்லா மாணவர்களுக்கும் அறிவிப்பார்கள். மாணவியியும் தனது குடும்பப் பெயரை தந்தையாரின் பெயராக உபயோகிக்க அனுமதியும் உண்டு..! பார்ப்பனரால் அறிமுகப் பட்ட எமது பெயர் வைக்கும் முறையால், எங்களுக்குப் பிரச்சனைகள் ஏற்படக் கூடும் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

உலகிலேயே ஆணின் பெயரை மட்டும் சந்ததி பெயராக எடுத்து செல்கின்றார்கள்.

நான் ஆணாகப் பிறந்திருப்பதினால் ஆண்களுக்கு வக்காலத்து வாங்க வந்ததாக எண்ணவேண்டாம். இயற்கையின் படைப்பில், அதிகமாக உயிரினங்கள் அனைத்திலும், ஆணைப் பலம்கொண்ட பாதுகாக்கும் இனமாகவும், பெண்ணை மென்மையான பாதுகாக்கப்படும் இனமாகவும் படைத்திருப்பதின் நோக்கம் என்ன??

என் சிறு வயதில் நான் ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன், (Jungle cat) அதில் முதலை ஒன்றைக்கண்ட பெண்புலி, தன் குட்டிக்கு அதனால் ஆபத்துவருமோ என்று பயந்து ஏதோ ஒரு சமிக்கை கொடுத்து ஆண்புலியை வரவழைத்தது, ஆண்புலிவந்து அந்த முதலையோடு சண்டையிட்டு அதனைக் கடித்துக் குதறிக் கொன்றது. பயம் நீங்கிய பெண்புலி ஆண்புலியைக் கட்டித் தழுவி தன் ஆனந்தத்தை வெளிப்படுத்தியது. இயக்குனர் சில காலம் காட்டுக்குள் ஒழிந்திருந்ததாலேயே இந்தக் காட்சியைப் படம் பண்ண முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
On 20/7/2025 at 19:08, Paanch said:

எம் முன்னோர்கள் எதற்காக ஒரு குழந்தையின் பிறப்பிற்கு தந்தையின் பெயரை அத்தாட்சிப்படுத்தினார்கள். அவர்கள் என்ன முட்டாள்களா? தந்தை எவர் என்று தெரியாத, அறியமுடியாதவிடத்து அந்தத் தாயை எங்கள் சமூகம் எப்படி அழைக்கும்.?????🫣

ஐயா,

உங்கள் சமூகம் எண்டால் ஜேர்மனியை சொல்கிறீர்களா?

17 hours ago, குமாரசாமி said:

உலகிலேயே ஆணின் பெயரை மட்டும் சந்ததி பெயராக எடுத்து செல்கின்றார்கள்.

. அமேசன் பழங்குடிகள் உட்பட பல தாயாதி (matriarchal ) சமூகங்கள் உள்ளன.

தமிழர் கூட தந்தை பெயரை காவும் மரபினர் அல்ல.

இடுபெயர் (given name ) மட்டும்தான்.

நீங்கள் அடிக்கடி சிலாகிக்கும் வெள்ளைகார அடிமைத்தனத்தின் ஒரு கூறுதான் surname போடும் வழக்கம்.

12 hours ago, Paanch said:

நான் ஆணாகப் பிறந்திருப்பதினால் ஆண்களுக்கு வக்காலத்து வாங்க வந்ததாக எண்ணவேண்டாம். இயற்கையின் படைப்பில், அதிகமாக உயிரினங்கள் அனைத்திலும், ஆணைப் பலம்கொண்ட பாதுகாக்கும் இனமாகவும், பெண்ணை மென்மையான பாதுகாக்கப்படும் இனமாகவும் படைத்திருப்பதின் நோக்கம் என்ன??

என் சிறு வயதில் நான் ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன், (Jungle cat) அதில் முதலை ஒன்றைக்கண்ட பெண்புலி, தன் குட்டிக்கு அதனால் ஆபத்துவருமோ என்று பயந்து ஏதோ ஒரு சமிக்கை கொடுத்து ஆண்புலியை வரவழைத்தது, ஆண்புலிவந்து அந்த முதலையோடு சண்டையிட்டு அதனைக் கடித்துக் குதறிக் கொன்றது. பயம் நீங்கிய பெண்புலி ஆண்புலியைக் கட்டித் தழுவி தன் ஆனந்தத்தை வெளிப்படுத்தியது. இயக்குனர் சில காலம் காட்டுக்குள் ஒழிந்திருந்ததாலேயே இந்தக் காட்சியைப் படம் பண்ண முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

நான் சின்ன வயதில் பார்த்த ஒரு விபரணத்தில் பெண் சிங்கம் வேட்டையாடி கொண்டு வரும் உணவை குட்டிகளை விலக்கி போட்டு தான் முதலில் தின்றுவிட்டு, சோம்பேறியாக ஓய்வெடுக்கும் ஆண் சிங்கம்.

ஆகவே சோம்பேறி ஆண்களை விட சோறு போடும் பெண்கள் பெயரை வைப்பதே நியாயம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஐயா,

உங்கள் சமூகம் எண்டால் ஜேர்மனியை சொல்கிறீர்களா?

. அமேசன் பழங்குடிகள் உட்பட பல தாயாதி (matriarchal ) சமூகங்கள் உள்ளன.

தமிழர் கூட தந்தை பெயரை காவும் மரபினர் அல்ல.

இடுபெயர் (given name ) மட்டும்தான்.

நீங்கள் அடிக்கடி சிலாகிக்கும் வெள்ளைகார அடிமைத்தனத்தின் ஒரு கூறுதான் surname போடும் வழக்கம்.

நான் சின்ன வயதில் பார்த்த ஒரு விபரணத்தில் பெண் சிங்கம் வேட்டையாடி கொண்டு வரும் உணவை குட்டிகளை விலக்கி போட்டு தான் முதலில் தின்றுவிட்டு, சோம்பேறியாக ஓய்வெடுக்கும் ஆண் சிங்கம்.

ஆகவே சோம்பேறி ஆண்களை விட சோறு போடும் பெண்கள் பெயரை வைப்பதே நியாயம்.

ஒரு காலத்தில் இவை தேவையானவையாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று பிள்ளை பெற்றுக் கொள்ள மணம் முடித்து இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதும் அதற்கும் மேலாக பிள்ளையின் தகப்பனாரின் தகவல்கள் தாய்க்கே தெரிந்து இருக்க வாய்ப்பில்லை என்றாகிவிட்ட நிலையில்...?

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, விசுகு said:

ஒரு காலத்தில் இவை தேவையானவையாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று பிள்ளை பெற்றுக் கொள்ள மணம் முடித்து இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதும் அதற்கும் மேலாக பிள்ளையின் தகப்பனாரின் தகவல்கள் தாய்க்கே தெரிந்து இருக்க வாய்ப்பில்லை என்றாகிவிட்ட நிலையில்...?

மேற்கு நாட்டு குடியுரிமை சட்டங்கள் கூட ஒரு காலத்தில் தகப்பன் சார்பாகவே இருந்தன. இப்போ எல்லாமும் ஒன்றே.

எமது சமூகத்தில் முன்னர் கூட மிக அரிதாகவே தாயார் கைவிட்ட பிள்ளைகள் இருந்தார்கள்.

ஆனால் ஒப்பீட்டளவில் இனிசலுக்கு மட்டுமே உபகோகப்பட்ட “ஆண் சிங்கங்கள்” அதிகம் இருந்தார்கள்.

இவர்களை எல்லாம் பிறப்பு சான்றிதழில் இருந்து தூக்கினால் கூட ஒன்றும் குடி மூழ்கிபோகாது🤣.

  • கருத்துக்கள உறவுகள்

அரசு இந்த முடிவு எடுக்க காரணம். யாரோ ஒரு பெண் குழந்தையை பெற்று வயல் வெளியில் வீசி விட்டு சென்றதினால் தான். மிருகங்கள் கூட இப்படி செய்யாதே. ஆண்சிங்கம், பெண்சிங்கம் என்ன்றில்லை. கிறிமினல் வேலை செய்ய ஆண் பெண் இருபாலரிலும் இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, colomban said:

அரசு இந்த முடிவு எடுக்க காரணம். யாரோ ஒரு பெண் குழந்தையை பெற்று வயல் வெளியில் வீசி விட்டு சென்றதினால் தான். மிருகங்கள் கூட இப்படி செய்யாதே. ஆண்சிங்கம், பெண்சிங்கம் என்ன்றில்லை. கிறிமினல் வேலை செய்ய ஆண் பெண் இருபாலரிலும் இருக்கின்றார்கள்.

ஆண் சிங்கம் இன்னொரு ஆணுக்கும் தன் துணைக்கும் பிறந்த குட்டிகளை கொல்லும்.

சில சமயம் தன் குட்டிகளை கூட என நினைக்கிறேன்.

அதேபோல் ஏனைய சில மிருகங்களிடமும் குட்டிகளை கொல்லும் வழக்கம் உண்டு.

அத்துடன், பிறப்பின் போதே குட்டிகளை கைவிடும் உயிரினங்களும் உண்டு.

பென்குவின் போல உறைபனியில் நின்றபடி, ஆண் அதன் குஞ்சுகளை அடைகாக்கும் இனக்களும் உண்டு.

பொதுப்படையாக “மிருகங்கள் கூட செய்யாது” என்பது ஒரு பேச்சுக்காக சொல்வது மட்டுமே.

Edited by goshan_che

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.