Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

July 21, 2025 10:17 pm

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் ராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட ரமேஷ் என்பவர் சற்று முன்னர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியாகொடை பொலிசார் சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்துள்ளனர்.

அவரிடம் இருந்து டி- 56 ரக துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குற்றச் செயல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடன் குறித்த நபர் துப்பாக்கியொன்றைத் தம் வசம் வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்

சிவப்பு நிறக் கார் ஒன்றில் வந்தவர்கள் அவரிடம் துப்பாக்கியைக் கையளித்து தங்களிடம் இருந்து தகவல் வரும் வரை ஹோட்டல் அறையில் ரமேஷைத் தங்கியிருக்குமாறு கூறிச் சென்றுள்ளனர்.

இதற்கிடையே பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

https://oruvan.com/rehabilitated-ltte-member-arrested-with-gun-in-colombo/

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

சிவப்பு நிறக் கார் ஒன்றில் வந்தவர்கள் அவரிடம் துப்பாக்கியைக் கையளித்து தங்களிடம் இருந்து தகவல் வரும் வரை ஹோட்டல் அறையில் ரமேஷைத் தங்கியிருக்குமாறு கூறிச் சென்றுள்ளனர்.

இன்றைய பரிதாப நிலை! புலிகள் மீள எழுகிறார்கள் என காண்பிப்பதற்காக நடத்தப்பட்ட நாடகமா?

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, satan said:

இன்றைய பரிதாப நிலை! புலிகள் மீள எழுகிறார்கள் என காண்பிப்பதற்காக நடத்தப்பட்ட நாடகமா?

அதே...செம்ம்ணி வெளிக்க ...வெளிக்க ...இப்படியே வரும்..

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-265.jpg?resize=750%2C375&ssl

டி-56 துப்பாக்கியுடன் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் கைது?

பேலியகொட பகுதியில் T-56 துப்பாக்கியுடன் ஒருவர் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, குறித்த நபர் நேற்று (21) மாலை கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்து ஒரு T-56 துப்பாக்கி, 30 தோட்டாக்கள், ஒரு மெகசின் மற்றும் 5 கிராம் 560 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.

குறித்த நபர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் என்றும், பின்னர் இராணுவத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டவர் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் ஆவார்.

மேலும், அவர் ஒரு குற்றத்தைச் செய்வதற்காக துப்பாக்கியுடன் வந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறெனினும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2025/1440095

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

அவரிடம் இருந்து ஒரு T-56 துப்பாக்கி, 30 தோட்டாக்கள், ஒரு மெகசின் மற்றும் 5 கிராம் 560 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.

பிரபாகரன் படைகள் போதைப் பொருளுக்கும் அடிமையானவர்கள் என்று நசூக்காக ஒரு விடயம் இதற்குள் செருகப்பட்டுள்ளது. இனி நாடகங்கள் பெரிதாக மேடைபோட்டு நடாத்தப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

சிவப்பு நிறக் கார் ஒன்றில் வந்தவர்கள் அவரிடம் துப்பாக்கியைக் கையளித்து தங்களிடம் இருந்து தகவல் வரும் வரை ஹோட்டல் அறையில் ரமேஷைத் தங்கியிருக்குமாறு கூறிச் சென்றுள்ளனர்.

ரமேஷ் என்பவருக்கு தற்போது 30 வயது என்று தெரிகிறது. இன்னமும் பால்குடி மறக்கவில்லையா.??🤔

  • கருத்துக்கள உறவுகள்

முப்பது வயதிற்குள் புலியில் போராடி, புனர்வாழ்வு அளித்து..... இவர்கள் கதை புனையும்போது மற்றவர்கள் முட்டாள்கள் என்று நினைத்து புனைகிறார்களா அல்லது முட்டாள்தனமாக புனைகிறார்களா? இவர்களது கதையை பார்க்கும்போது இவர்கள் தங்கள் முட்டாள் கதைகளை மற்றவர்கள் நம்ப வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கி, தோட்டாக்கள், போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

22 JUL, 2025 | 12:45 PM

image

பேலியகொடை பிரதேசத்தில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கிரிபத்கொடை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (21) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிரிபத்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பேலியகொடை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் வவுனியாவைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஆவார்.

சந்தேக நபரான இளைஞனிடமிருந்து ரி - 56 ரக துப்பாக்கி, 30 தோட்டாக்கள் மற்றும் 5 கிராம் 560 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

WhatsApp_Image_2025-07-22_at_12.27.48__1

WhatsApp_Image_2025-07-22_at_12.27.48.jp

11111.jpg

https://www.virakesari.lk/article/220608

  • கருத்துக்கள உறவுகள்

1000494862.jpg?resize=725%2C375&ssl=1

வவுனியாவில் 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது!

வவுனியா நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பரல் ஒன்றில் நிலத்தின்கீழ் புதைக்கப்பட்ட 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் வவுனியா மாவட்ட குற்ற தடுப்பு விசாரணை பிரிவால் கைதுசெய்யப்பட்டார்.

நேற்றைய தினம் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி போராளி வழங்கிய தகவலின் அடிப்படையில் கொழும்பிலிருந்து வருகைதந்த புலனாய்வுத்துறை அதிகாரிகளோடு வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு பொலிஸாரும் இணைந்து செட்டிகுளம் துட்டுவாகை மற்றும் நேரியகுளம் பகுதிகளில் உள்ள இரு வீடுகளில் சோதனையை மேற்கொண்டனர்.

இதன்போது நேரியகுளத்தில் வீடு ஒன்றின் அருகாமையில் பிளாஸ்டிக் பரல் ஒன்றினுள் 86 கைக்குண்டுகள் ரி56 ரக துப்பாக்கிக்கான ரவைகள், கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5600 போதை மாத்திரைகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன நிலத்தின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன.

இதனை அடிப்படையாகக் கொண்டு குறித்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது வவுனியா குற்ற தடுப்பு விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக தலைமையில்  பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச மற்றும் ராஜகுரு, பொலிஸ் அதிகாரிகளான ரன்வேல, ரூபசிங்க, பாலசூரிய, சனுஷ், கேரத், சனத், பண்டார, திசாநாயக ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1440191

  • கருத்துக்கள உறவுகள்

518407040_763998846300619_79567128841963

கொழும்பில் ஒரு தமிழர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார்.

அவர் வழங்கிய தகவலின் பேரில் வவுனியாவில் ஒரு வீட்டில் 5600 போதை மாத்திரைகள் , 10கிராம் ஐஸ் போதைப் பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இது முழுக்க முழுக்க பாதாள உலக கோஸ்டியினரின் போதைப் பொருள் கடத்தல் கும்பல் என்று தெரிந்தும் வேண்டுமென்றே மீண்டும் புலிகள் என்று வதந்தி பரப்பப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பிள்ளையான் வழங்கிய தகவலின் பேரில் ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அடுத்து சுரேஸ்சாலே எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

இதனால் தமக்கு ஆபத்து வந்துவிட்டது என்பதை உணர்ந்த கோத்தபாயா கும்பல் அதில் இருந்து தப்புவதற்காக மீண்டும் புலிகள் என்ற வதந்தியைப் பரப்புகின்றனர்.

இதற்காக அவர்கள் ஒரு தாக்குதலைக்கூட தென்னிலங்கையில் நிகழ்த்தலாம் என்பதால் அரசு இதற்கு இடங்கொடாது விரைந்து கோத்தபாயாவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

தோழர் பாலன்

  • கருத்துக்கள உறவுகள்

புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர் என்பதால் அவரை அவர்களே இருக்கமுடியும். அதற்கான பயிற்சி மற்றும் செயற்பாடுகள் அங்கிருந்தே தொடங்கி இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வவுணதீவு இரட்டைக் கொலை சம்பவத்திலும்... விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது இந்தக் கொலைகள் சுமத்தப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

குற்றம் செய்யாதவர்களை மாட்டி விட்டதில்... அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியும், சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான பயங்கரவாதக் குழுவிற்கும் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

2018 ஆம் ஆண்டு நடந்த கொலையின் உண்மை 2025,ம் ஆண்டுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதுவரை தமிழ் அப்பாவிகளை போட்டு சிங்களவனும், சோனகனும் சித்திரவதை செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2025 at 10:25, satan said:

முப்பது வயதிற்குள் புலியில் போராடி, புனர்வாழ்வு அளித்து..... இவர்கள் கதை புனையும்போது மற்றவர்கள் முட்டாள்கள் என்று நினைத்து புனைகிறார்களா அல்லது முட்டாள்தனமாக புனைகிறார்களா? இவர்களது கதையை பார்க்கும்போது இவர்கள் தங்கள் முட்டாள் கதைகளை மற்றவர்கள் நம்ப வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

2009´ல் இவர் ஆறு வயது சிறுவன். தற்போது புனர்வாழ்வு அளிக்கப் பட்ட முன்னாள் போராளியாம்.

கேட்கிறவன் கேனையன் என்றால்......

  • கருத்துக்கள உறவுகள்

அருண் சித்தார்த் சொல்லியிருக்கு, கிழக்கு முஸ்லீம் படுகொலைகளுடன் தொடர்புடைய புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், புலம்பெயர் புலிகள் தண்டிக்கப்படவேண்டுமாம். ஆனால் இராணுவத்துடன் இயங்கும் புலிகள் தண்டிக்கப்படக்கூடாதாம். அதாவது இராணுவத்தோடு இயங்கும் முன்னாள் போராளிகள், இராணுவம் எனும் பெயரில், முன்னாள் போராளிகளுடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார் அல்லது இராணுவத்தின் தாக்குதலில் புலிப்பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். நாட்டில் அப்பப்போ தமக்கு ஆதரவாக அல்லது தமக்கு நேரும் விசாரணைகளை திசை திருப்ப மோதல்களை உருவாக்க இப்படியான தமிழரை பயன்படுத்த இவ்வாறு செயற்படுத்துகிறார்கள். ஆனால் இவர்கள் யாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள், இயங்குகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்கள் தாங்களாக சிந்திக்கவோ, இயங்கவோ முடியாத நிலை. ஆகவே முன்னாள் புலிகளை சாட்டி செய்ய்யப்படும் குற்றச்செயல்களுக்கு இராணுவ புலனாய்வே பொறுப்பெடுக்க வேண்டும். அதோடு இவர் முன்னாள் புலி, தாக்குதலை நடத்தவே வந்தார் என்று சொன்னால்; வடக்கிலுள்ள இராணுவம் அதற்கு பொறுப்பெடுத்து வெளியேற வேண்டும். அவர்களால் எந்தப்பயனுமில்லை, அவர்களே முன்னாள் புலிகளை போதைப்பொருள் கடத்தவும், இப்படியான தாக்குதல்களை நடத்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதற்கு இதுவே தகுந்த ஆதாரம். தமிழரை கொத்துக்கொத்தாக அழித்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையேல் தர்மம் அவர்களை எந்த வழியிலேனும் தண்டிக்கும். அப்போ யாரும் யாரையும் குற்றம் சாட்டி கலவரங்களை ஏற்படுத்தவோ, ஊழையிடவோ முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/7/2025 at 02:18, தமிழ் சிறி said:

சுரேஸ்சாலே எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

தாம் குற்றச்செயலுக்கு பயன்படுத்தும் தமிழருக்கு, இராணுவ புலனாய்வு என்கிற பெயரில் சம்பளம் வழங்கி, இப்படியான தாக்குதலுக்கு பயன்படுத்துகிறார்கள். டக்கிளஸ் கூட இப்படி சிலரை பயன்படுத்தி அவர்களின் பணத்தில் பல லட்ஷங்களை கொள்ளையடித்திருக்கிறார். சுரேஷ் சாலேயே இந்த வேலைகளை கவனித்து வந்திருக்கிறார். இப்போ பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தாறுமாறாக ஓடி தாங்களாகவே மாட்டுப்படப்போகிறார்கள். சுரேஷ் சாலேயை கைது செய்வதற்கு பலமான சாட்சிக்காக காத்திருக்கிறார்கள். அதற்கிடையில் சுரேஷே பலமான ஆதாரத்தை கொடுக்கப்போகிறார் போலுள்ளது. அவன் கைது செய்யப்பட்டால், ராஜபக்ச குடும்பம் சிக்கும். அதற்கிடையில் ஏதோ ஒரு அனர்த்தம் நிகழ்த்த முயல்வார்கள், முடிந்தால் சாலேயின் கதையே முடியலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

றக்பி வீரரின் கொலையோடு தொடர்பு பட்ட, சாட்சியங்களை அழித்த போலீஸ் அதிகாரியே நோயினால் இறந்ததாக முடித்தார்கள். அதனோடு தொடர்பு பட்ட புலனாய்வு அதிகாரிகளில் ஒருவர் தூக்கில் தொங்கினார். தாக்குதலாளி ஒருவரை காப்பாற்ற கொலைசெய்யப்பட்டாரா அல்லது அவரும் சேர்ந்தே தான் கொலை செய்தாரா என்பது வெகு விரைவில் வெளிவரும். நாளுக்கு நாள் திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன. அன்று அவை காதோடு காதாக பேசி செய்யப்பட்டவை. இன்று எல்லாமே பகிரங்கப்படுத்தப்படுகிறது. இதை அனுரா முடித்து வைக்கவேண்டும் இல்லையேல் அனுராவும் இலக்கு வைக்கப்படுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

2009´ல் இவர் ஆறு வயது சிறுவன். தற்போது புனர்வாழ்வு அளிக்கப் பட்ட முன்னாள் போராளியாம்.

கேட்கிறவன் கேனையன் என்றால்......

உங்களை மாதிரி ஒரு "கணக்குப் புலியும்", வன்னியில் இறுதிப் போர் காலத்தில் நிகழ்ந்தவை பற்றி எதுவும் அறியாத @satan உம் இருக்கும் போது, வாசகர்களை யாருமே கேனையர்களாக்கி விட முடியாது😂!

  • கருத்துக்கள உறவுகள்

44 minutes ago, Justin said:

உங்களை மாதிரி ஒரு "கணக்குப் புலியும்", வன்னியில் இறுதிப் போர் காலத்தில் நிகழ்ந்தவை பற்றி எதுவும் அறியாத @satan உம் இருக்கும் போது, வாசகர்களை யாருமே கேனையர்களாக்கி விட முடியாது😂!

ஜஸ்ரின்... அதிகப் பிரசங்கித்தனமும், தேவையில்லாத அலட்டல்களும் வேண்டாம்.

***

################### ###################

521932264_122164299812429019_62210781480

போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கைதுசெய்யப்பட்டு காவலில் இருக்கும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினருக்கு 22 வயது.

போர் முடிவடையும் போது 06 வயது பையன்

தவழ்ந்து கொண்டு இருந்தபோதே அந்தச் சிறுவன் விடுதலைப் புலிகள் அமைப்பால் பயிற்சி பெற்றிருக்க வேண்டும், இல்லையா?

Selvanajakam Nijanthan

Kunalan Karunagaran

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

On 22/7/2025 at 01:38, தமிழ் சிறி said:

சந்தேக நபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் ஆவார்.

2 hours ago, தமிழ் சிறி said:

ஜஸ்ரின்... அதிகப் பிரசங்கித்தனமும், தேவையில்லாத அலட்டல்களும் வேண்டாம்.

***

################### ###################

521932264_122164299812429019_62210781480

போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கைதுசெய்யப்பட்டு காவலில் இருக்கும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினருக்கு 22 வயது.

போர் முடிவடையும் போது 06 வயது பையன்

தவழ்ந்து கொண்டு இருந்தபோதே அந்தச் சிறுவன் விடுதலைப் புலிகள் அமைப்பால் பயிற்சி பெற்றிருக்க வேண்டும், இல்லையா?

Selvanajakam Nijanthan

Kunalan Karunagaran

எப்படி 30 வயது ஆள் 22 வயது ஆளானார்? 😎

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் மீண்டும் நாட்டில் தாக்குதலை நடத்துகிறார்கள் என்று பிரச்சனையை திசை திருப்புவது, அல்லது அவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டு பிள்ளையானை போட்டுத்தள்ளி அதை புலிகளின்மேல் சுமத்துவது, ஏதோ ஒரு பயங்கரத்திடம் தீட்டப்பட்டிருக்கிறது இதன் பின்னணியில். இப்போ எதிரிகளுக்கு எதிராக நாளாந்தம் சாட்சிகளும் ஆதாரங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கிழக்கில் ஊர்காவல் படை, ஹிஸ்புல்லா செய்த அட்டூழியங்களும் வருகின்றன. என்ன செய்து தம்மை காப்பாற்றலாம் என்கிற நிலையில் பலர் அறிவிழந்து விசர் பிடித்த ந** போல ஓடுகிறார்கள். அதற்கு வக்காலத்து வாங்க அதன் ஏவல்களும், இந உணர்வாளர்களும் சிலதை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். புலிகள் சிறாரை போராட்டத்தில் இணைத்தார்கள் என்று குற்றம் சுமத்தியவர்கள், செம்மணியில் பொம்மைகளோடும் பள்ளி பைகளோடும் இணைந்த சிறுவர்களின் உடல்களை இராணுவத்தினரின் உடல்கள் என்று உரிமை கொண்டாடுவது எந்த வகையில் ஏற்றுக்கொள்ளலாம்? சிங்களம் எது வேண்டுமானாலும் சொல்லும் செய்யும். அதனை சார்ந்தவர்களும் அதனை ஆமோதிப்பார்கள். இங்கு வயது முக்கியமல்ல அதன் பின்னால் உள்ள செயலே முக்கியம்!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

ஜஸ்ரின்... அதிகப் பிரசங்கித்தனமும், தேவையில்லாத அலட்டல்களும் வேண்டாம்.

***

################### ###################

521932264_122164299812429019_62210781480

போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கைதுசெய்யப்பட்டு காவலில் இருக்கும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினருக்கு 22 வயது.

போர் முடிவடையும் போது 06 வயது பையன்

தவழ்ந்து கொண்டு இருந்தபோதே அந்தச் சிறுவன் விடுதலைப் புலிகள் அமைப்பால் பயிற்சி பெற்றிருக்க வேண்டும், இல்லையா?

Selvanajakam Nijanthan

Kunalan Karunagaran

ஸ்ரீ அண்ணேய் சிலருக்கு எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் ஏற்று கொள்ள மாட்டினம் இங்கு சிலருக்கு பதிலே போடுவதில்லை புலிகள் தான் இவ்வளவு அழிவுக்கும் காரணம் எனும் மன நோயாளிகளுடன் தர்க்கம் பண்ணி பலனில்லை விட்டு விடுங்க ஓராமாய் நின்று குரைத்து கொள்ளட்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று கம்மன்பில சொல்லியிருக்கிறார், அதாவது வெகு விரைவில் செம்மணி புதைகுழியிலிருந்து இராணுவத்தினரின் இலக்க தகடு வெளிவருமாம். எல்லாம் ஒரு நிகழ்ச்சி நிரலில் நகருகிறது என்பது உண்மை. முஸ்லிம்களை காக்க ஆயுதம் தாருங்கள், செம்மணியில் இராணுவத்தினரின் உடல்கள் என்று அடம் பிடித்தார், இப்போ இராணுவத்தகடு வெளிவருமாம். இராணுவத்தினரை வைத்து தம்மையும் அரசியலையும் பாதுகாக்க முனைகின்றனர். இராணுவ புலனாய்வினர் நாட்டை காப்பாற்றினர், இராணுவம் போரிட்டது என்று புழுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கும் போது, புலனாய்வுப்பிரிவே நாட்டில் பிரிவினையையும் அழிவுகளையும் ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டனர் எனும் ஆதாரங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் போது, நிலைமையை உணராமல் உளறுது சில பூச்சியங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

ஸ்ரீ அண்ணேய் சிலருக்கு எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் ஏற்று கொள்ள மாட்டினம் இங்கு சிலருக்கு பதிலே போடுவதில்லை புலிகள் தான் இவ்வளவு அழிவுக்கும் காரணம் எனும் மன நோயாளிகளுடன் தர்க்கம் பண்ணி பலனில்லை விட்டு விடுங்க ஓராமாய் நின்று குரைத்து கொள்ளட்டும் .

😎யாரது? 1+1=11 என்று உயர்கணிதம் படிப்பித்த பெருமாளா இப்ப 30-16=6 என்ற அதியுயர் கணிதத்தை விளக்கியிருப்பது?

விளக்க முடியாத விடயங்களை இலகுவாக இங்கே குப்பை போலக் கொட்டி விட்டுக் கடந்து போக ஒரு சாட்டுத் தான் "இவரோட நாங்கள் டூ, எனவே பதில் சொல்ல மாட்டம்!" என்ற சளாப்பல்! "பதில் இல்லை, அதனால் சொல்லவில்லை" என்று சொன்னால் உங்கள் "கௌரவம்" என்ன ஆகிறது😂?

இந்த 30-16-=6 தியரிக்கு, அது பற்றிய பதிலுக்கு சிரிப்புக் குறி இட்டிருப்பது ஒரு மொரட்டுவ எந்திரி என்றால் இலங்கையின் இலவசக் கல்வி எவ்வளவு வீணடிக்கப் பட்டிருக்கிறது என்று புரிகிறது😂!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, satan said:

நேற்று கம்மன்பில சொல்லியிருக்கிறார், அதாவது வெகு விரைவில் செம்மணி புதைகுழியிலிருந்து இராணுவத்தினரின் இலக்க தகடு வெளிவருமாம். எல்லாம் ஒரு நிகழ்ச்சி நிரலில் நகருகிறது என்பது உண்மை. முஸ்லிம்களை காக்க ஆயுதம் தாருங்கள், செம்மணியில் இராணுவத்தினரின் உடல்கள் என்று அடம் பிடித்தார், இப்போ இராணுவத்தகடு வெளிவருமாம். இராணுவத்தினரை வைத்து தம்மையும் அரசியலையும் பாதுகாக்க முனைகின்றனர். இராணுவ புலனாய்வினர் நாட்டை காப்பாற்றினர், இராணுவம் போரிட்டது என்று புழுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கும் போது, புலனாய்வுப்பிரிவே நாட்டில் பிரிவினையையும் அழிவுகளையும் ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டனர் எனும் ஆதாரங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் போது, நிலைமையை உணராமல் உளறுது சில பூச்சியங்கள்.

சாத்தான், நீங்கள் சிங்களவரைப் பற்றி எழுதியிருப்பவையெல்லாம் சரி!

ஆனால், வயதுக் கணக்கு பிழையல்லவா? தமிழர் ஒருவரை அப்பாவியாகக் காட்ட, அரிவரியில் படித்த எண்கணிதத்தை அப்படியே மறந்து விடுவோம் என்கிறீர்களா? இந்த முட்டாள் தனங்களால் சிங்களவன் அலறி அடித்துப் பயந்து விடுவான் என்கிறீர்களா அல்லது, உங்களைப் போன்ற தமிழர்கள் "புதுக் கணக்கு" சிஸ்ரத்தைக் கண்டு பிடிப்பார்கள் என்கிறீர்களா😂?

உங்களிடமே முட்டாள் தனத்தையும், வெறுமையையும் வைத்துக் கொண்டு ஏனையோரை "பூச்சியங்கள்" என்று சொல்வதற்கும் ஒரு தனித்துவமான devil may care மனநிலை வேண்டும்! உங்களிடம் அது மட்டும் நிறைய இருக்கிறது என நினைக்கிறேன்😎!

  • கருத்துக்கள உறவுகள்

பொம்மை விளையாடும், புட்டியில் பாலருந்தும் குழந்தையும் பயங்கரவாதி, செஞ்சோலையில் கல்வி கற்ற குழந்தைகளும் பயங்கரவாதிகள் சிங்களத்திற்கு. தற்போது முப்பது வயதுள்ளவருக்கு, பதினாறு ஆண்டுகளுக்கு முன் எத்தனை வயது? அதற்கு முன் அவர் புலி இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி எடுத்து களத்திற்கு போக எத்தனை வருடம் எடுத்திருக்கும்? அப்போ எத்தனை வயதில் அவர் புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருப்பார்? முள்ளிவாய்க்கால் வீழ்ச்சியின் பின், வயதானோர், பெண்கள், குழந்தைகள், மத குருமார் எந்த பாகுபாடுமில்லாமல் கைது செய்து புலிகள் என்று முத்திரை குத்தியது, கொன்றது, காணாமலாக்கியது சிங்களம். அது எந்தக்கணக்கு?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.