Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!

10 Sep, 2025 | 09:58 AM

image

யாழ்ப்பாணம், நல்லுர் பிரதேச சபையின் பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை முகாமிற்கு சமூக நல நோக்கில் பெண் கட்டாகாலி நாய்களைப் பிடித்து தருபவர்களுக்கு ஒரு நாய்க்கு 600 ரூபா வீதம் சன்மானம் வழங்கப்படும் என நல்லூர் பிரதேச சபை அறிவித்துள்ளது.

நாய்களினால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் தொற்று நோய்களைக் கருத்திற் கொண்டு நாய்களின் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் பெண்நாய்களுக்கான கருத்தடை செயற்றிட்டத்தினை நல்லூர் பிரதேச சபை முன்னெடுக்கின்றது.

எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 14 நாம் திகதி வரை நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட இடங்களில் பெண் நாய்களுக் கான இலவச கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது.

பெண் நாய்களுக்கான குறித்த இலவச கருத்தடை சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு பொதுமக்கள் அனைவரும் தங்களால் வளர்க்கப்படும் பெண் நாய்களுக்குரிய கருத்தடை சிகிச்சையினை பெற்றுக்கொள்ளுமாறும் பிரதேச சபை கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் வீதிகளில் காணப்படும் கட்டாக்காலி பெண்நாய்களினை சமூகநலன் நோக்கில் பிடித்து நல்லூர் பிரதேச சபையின் கருத்தடை சிகிச்சை முகாமில் ஒப்படைப்பவர்களுக்கு ஒரு நாய்க்கு 600 வீதம் சன்மானமாக வழங்கப்படும் எனவும் பிரதேச சபை தெரிவித்துள்ளது.

நல்லுர் பிரதேச சபையின் பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்யை முகாம் நடைபெறும் இடங்கள்

10.09.2025 புதன்கிழமை

காலை 8.30 முதல் 1.30 மணிவரை திருநெல்வேலி கம்பன் சனசமூக நிலையம்

மாலை 1.30 முதல் 4.15 வரை திருநெல்வேலி பாரதி சனசமூக நிலையம்

11.09.2025 வியாழன்

காலை 8.30 முதல் 1.00 மணி வரை கலைச்சுடர் சனசமூக நிலையம், திருநெல்வேலி மேற்கு

மாலை 1.30 முதல் 4.15 வரை கொக்குவில் பழைய உப அலுவலகம்

12.09.2025 வெள்ளிக்கிழமை

காலை 8.30 முதல் 1.00 மணி வரை கலைமகள் சனசமூக நிலையம், நல்லூர் வடக்கு

மாலை 1.30 முதல் 4.15 வரை பொதுநோக்கு மண்டபம், கல்வியன்காடு

11.09.2025 சனி

காலை 8.30 முதல் 1.00 மணிவரை உதயஒளி சனசமூக நிலையம், அரியாலை கிழக்கு

https://www.virakesari.lk/article/224693

  • கருத்துக்கள உறவுகள்

23-65111fce0c131.jpeg

ஒரு பெட்டை நாயை பிடித்துக் கொடுத்தால்... 600 ரூபாய் என்பது, நல்ல காசு.

நான் ஊரில் நின்று இருந்தால்.... ஒரு கிழமைக்கு 50 பெட்டை நாயை பிடித்துக் கொடுத்து 30,000 ரூபாய் உழைத்து இருப்பேன்.

😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

23-65111fce0c131.jpeg

ஒரு பெட்டை நாயை பிடித்துக் கொடுத்தால்... 600 ரூபாய் என்பது, நல்ல காசு.

நான் ஊரில் நின்று இருந்தால்.... ஒரு கிழமைக்கு 50 பெட்டை நாயை பிடித்துக் கொடுத்து 30,000 ரூபாய் உழைத்து இருப்பேன்.

😂

இப்போதும் வந்திருக்க மாட்டீர்கள்.

ஊசி போட்டுக் கொண்டு இருந்திருப்பீர்கள்.

இதுவே கடேசி பயணம் என்று பிள்ளைகளும் சொல்லியிருப்பினம்.

3 hours ago, தமிழ் சிறி said:

ஒரு கிழமைக்கு 50 பெட்டை நாயை பிடித்துக் கொடுத்து 30,000 ரூபாய் உழைத்து இருப்பேன்.

உங்கள் டெக்னிக் என்னவென்று சொன்னால் அங்கு விடுமுறைக்குப் போய் வெட்டியாகத் திரிபவர்களுக்குப் பிரயோசனமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

23-65111fce0c131.jpeg

ஒரு பெட்டை நாயை பிடித்துக் கொடுத்தால்... 600 ரூபாய் என்பது, நல்ல காசு.

நான் ஊரில் நின்று இருந்தால்.... ஒரு கிழமைக்கு 50 பெட்டை நாயை பிடித்துக் கொடுத்து 30,000 ரூபாய் உழைத்து இருப்பேன்.

😂

எங்கட வீட்டு பெண் நாயைப் பிடித்தால் தகுந்த சன்மானம் தருவோம் அண்ணை! இலவச விசர்நாய்த் தடுப்பூசி போட அம்பிடுதில்லை(தண்டப் பணம் 25000 ரூபாவாம்), மயக்க ஊசி போட்டு கர்ப்பத்தடை செய்திருக்கிறார்கள் யாரோ புண்ணியவான்.

ஒரு ஐந்து பெட்டை நாயை வைத்துக் கொண்டு ஒவ்வொரு முகாமாக மாறி மாறி ஐம்பது தரம் கொண்டு போனால் 30000 கிடைக்கலாம் ...... பிடிபட்டால் கம்பெனி பொறுப்பல்ல ......! 😃

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இப்போதும் வந்திருக்க மாட்டீர்கள்.

ஊசி போட்டுக் கொண்டு இருந்திருப்பீர்கள்.

இதுவே கடேசி பயணம் என்று பிள்ளைகளும் சொல்லியிருப்பினம்.

நாயை.... கடிக்காமல் பிடிக்க, ஒரு ரெக்னிக் இருக்குது. 😂

அந்த ரெக்னிக்கை பாவித்து பிடித்தால்... வாலை ஆட்டிக் கொண்டு சாதுவாக நிற்கும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

உங்கள் டெக்னிக் என்னவென்று சொன்னால் அங்கு விடுமுறைக்குப் போய் வெட்டியாகத் திரிபவர்களுக்குப் பிரயோசனமாக இருக்கும்.

கம்பெனி ரகசியத்தை வெளியே சொன்னால்... எனக்குத்தான் நட்டம். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

எங்கட வீட்டு பெண் நாயைப் பிடித்தால் தகுந்த சன்மானம் தருவோம் அண்ணை! இலவச விசர்நாய்த் தடுப்பூசி போட அம்பிடுதில்லை(தண்டப் பணம் 25000 ரூபாவாம்), மயக்க ஊசி போட்டு கர்ப்பத்தடை செய்திருக்கிறார்கள் யாரோ புண்ணியவான்.

அடுத்த முறை கொலிடேக்கு, ஊருக்கு வரும் போது... முதல் வேலையாக உங்கள் வீட்டு பெட்டை நாயை பிடித்து, கருத்தடை ஆபரேஷன் பண்ணி விட்டுத்தான் அடுத்த அலுவல் பார்க்கிறது. இப்ப சந்தோசமா ஏராளன். 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

ஒரு ஐந்து பெட்டை நாயை வைத்துக் கொண்டு ஒவ்வொரு முகாமாக மாறி மாறி ஐம்பது தரம் கொண்டு போனால் 30000 கிடைக்கலாம் ...... பிடிபட்டால் கம்பெனி பொறுப்பல்ல ......! 😃

கருத்தடை பண்ணிய நாயை இலகுவில் கண்டு பிடிக்க, காதில் ஓட்டை போடுகிறார்கள் என்பதால்... ஒரு முறை கருத்தடை பண்ணிய நாயை மீண்டும் கொண்டு போக முடியாது.

சுவியர்... மேலே நான் பகிடிக்கு எழுதினேன். சீரியசாக எடுக்காதீர்கள். 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தமிழ் சிறி said:

ஒரு பெட்டை நாயை பிடித்துக் கொடுத்தால்... 600 ரூபாய் என்பது, நல்ல காசு.

நான் ஊரில் நின்று இருந்தால்.... ஒரு கிழமைக்கு 50 பெட்டை நாயை பிடித்துக் கொடுத்து 30,000 ரூபாய் உழைத்து இருப்பேன்.

😂

ஒரு காலத்தில் வயல்,தோட்டங்களில் மேய்ந்து கொண்டிருந்த கட்டாக்காலி மாடுகளையும் பிடித்து அஞ்சு பத்து சம்பாதிச்சவர்களும் உண்டு.

இதே சிஷ்டத்தை பாவிச்சு தான் ஜேர்மனியில வெறும் பிளாஸ்ரிக் போத்திலை சேகரிச்சு குடுத்தால் நல்ல காசு வரும் எண்ட சட்டத்தை கொண்டு வந்தவங்கள்😜. ஒரு பிளாஸ்ரிக் போத்திலுக்கு 25 சென்ற்.நூறு போத்தில் சேகரிச்சால் எவ்வளவு வருமெண்டு கணக்கு பண்ணி பாருங்கோ.ஜேர்மனியிலை இப்ப எங்கையாலும் ரோட்டிலை தெரிவிலை பிளாஸ்ரிக் போத்தில்களை கண்டனீங்களே? குப்பை தொட்டியிலை கூட ஒரு போத்திலை காணேலாது.

இதே மாதிரி உலகம் முழுக்க சட்டம் ஒழுங்கு முறைகளை கொண்டு வந்தால் குப்பைகளும் இருக்காது.கட்டாக்காலி நாய்களும் இருக்காது. கட்டாக்காலி மாடுகளும் இருக்காது.

என்ன நான் சொல்லுறது சரிதானே?😎

🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கருத்தடை பண்ணிய நாயை இலகுவில் கண்டு பிடிக்க, காதில் ஓட்டை போடுகிறார்கள் என்பதால்... ஒரு முறை கருத்தடை பண்ணிய நாயை மீண்டும் கொண்டு போக முடியாது.

சுவியர்... மேலே நான் பகிடிக்கு எழுதினேன். சீரியசாக எடுக்காதீர்கள். 😂

நானும் பகிடிக்குத்தான் எழுதினேன் சிறியர் . ........ !

ஒரு தகவலுக்காக . ..... எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே எங்கள் வீதியால் நாய் பிடிக்கிற கூண்டு வண்டியும் கூடவே நாலு , ஆறுபேர் கையில் கம்பி வளையம் கொண்ட தடியுடனும் வந்து தெரு நாய்களைப் பிடித்துக் கொண்டு போவார்கள் . ..... சிலசமயங்களில் வீடுகளில் வளர்க்கும் நாய்களும் அம்பிடுவதுண்டு , அதை உரிமையாளர் அவர்களிடம் இருந்து வாங்கிக் கொண்டு போவார்கள் ...... சுமார் ஆறுமாதம் ஒருவருடத்துக்கு தெருநாய்த் தொல்லை இருக்காது ........ இது உங்களுக்கும் தெரிந்திருக்கும் .......நீங்களும் பக்கத்து வீதிதானே ........ ஆனால் இப்ப அப்படியில்லை . ...... மிருக அமைப்புகள் அப்படி இப்படியென்று பல அவற்றைக் காப்பாற்றி அதனால் அவை வீதிகளில் பெருகி மனிதர்கள் சிறுவர் எல்லோருக்கும் பயத்தைக் கொடுத்துக் கொண்டு திரிகின்றன . ..... அதையும் தாண்டி முன்பு ஒரு கதை பிரபலம் . ......"சங்கானை சந்தையில் வசித்து வந்த நாய் ஒன்று இந்த பஸ்சுகள் யாழ்ப்பாணத்தில் இருந்து வாறதையும் போறதையும் பார்த்து தானும் ஒருக்கால் யாழ்ப்பாணப் பார்க்க வெளிக்கிட்டு தனது சொந்தபந்தத்துக்கெல்லாம் சொல்லி முதிய நாயன்மார் தடுக்கவும் கேளாமல் கிளம்பிச்சுது . ..... முதல் சண்டிலிப்பாயில் ஒரு தாக்குதல் அடுத்து மானிப்பாய்த் தாக்குதலில் மருதடி வயலுக்குள்ளால் விழுந்து எழும்பி ஒருமாதிரி ஆணைக்கோட்டையில் வந்து நிமிர்ந்தால் அங்கு அகோரமான தாக்குதல் ...... இனித் தாங்கேலாது என்று யாழ்பாணக் கனவும் கலைந்து நடுநிசியில் மீண்டும் தட்டுத் தடுமாறி சங்கானை சந்தைக்கே வந்து படுத்து அனுங்கிக் கொண்டு கிடந்தது . ......காலையில் மற்ற நாய்கள் வந்து இதன் நிலையைப் பார்த்து ஆங்காங்கே கிடந்த நாறின மீன்கள், எலும்புகளைக் கொண்டுவந்து இதுக்கு குடுத்து "ஏனனை நீ நேற்று போயிட்டு அதுக்கிடையில வந்திட்டாய் எப்படி இருக்கு யாழ்ப்பாணம் என்று குசலம் விசாரித்தன ...... அதுக்கு இது சொல்லுது நான் எங்கே யாழ்ப்பாணம் போனேன் ....... ஏன் மனுசர் உனக்கு அடிச்சு திரத்திப் போட்டினமோ என்று கேட்க . ......சீச்சீ ....அப்படியே அவங்கள் அடிச்சிருந்தால் கூட என் மனம் ஆறியிருக்கும் ......ஒருத்தரும் என்னைத் தொடேல்ல ஆனால் நம்ம இனம் இருக்கே அதுதான் நமக்கு எதிரியாய் இருக்கு . ....... காணுற இடமெல்லாம் கடி கடி என்று கடித்து உடம்பை ரணமாக்கிப் போட்டுதுகள் , ஆணைக்கோட்டையோட என் கொட்டமும் அடங்கி அங்கால போக முடியாமல் இங்கால வந்திட்டன்" .......அந்த மாதிரி இப்ப நாய்களே நாய்களுக்கு எதிரிகளாய் இருக்குதுகள் . ........! 😘

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

நானும் பகிடிக்குத்தான் எழுதினேன் சிறியர்

எனக்கு நாய் வளர்க்க நல்ல விருப்பம்.

ஊர் என்றால் தானாக வளரும்.

இங்கே காலை மாலை வெளியே கொண்டு போக வேண்டும்.

டாக்ரர் செலவு ஊசி சாப்பாடு என்று செலவும் கூட.

மற்றும் எங்காவது போவதென்றால் நாளுக்கு 100 டாலர்வரை கொடுக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

😂

ஒரு காலத்தில் வயல்,தோட்டங்களில் மேய்ந்து கொண்டிருந்த கட்டாக்காலி மாடுகளையும் பிடித்து அஞ்சு பத்து சம்பாதிச்சவர்களும் உண்டு.

இதே சிஷ்டத்தை பாவிச்சு தான் ஜேர்மனியில வெறும் பிளாஸ்ரிக் போத்திலை சேகரிச்சு குடுத்தால் நல்ல காசு வரும் எண்ட சட்டத்தை கொண்டு வந்தவங்கள்😜. ஒரு பிளாஸ்ரிக் போத்திலுக்கு 25 சென்ற்.நூறு போத்தில் சேகரிச்சால் எவ்வளவு வருமெண்டு கணக்கு பண்ணி பாருங்கோ.ஜேர்மனியிலை இப்ப எங்கையாலும் ரோட்டிலை தெரிவிலை பிளாஸ்ரிக் போத்தில்களை கண்டனீங்களே? குப்பை தொட்டியிலை கூட ஒரு போத்திலை காணேலாது.

இதே மாதிரி உலகம் முழுக்க சட்டம் ஒழுங்கு முறைகளை கொண்டு வந்தால் குப்பைகளும் இருக்காது.கட்டாக்காலி நாய்களும் இருக்காது. கட்டாக்காலி மாடுகளும் இருக்காது.

என்ன நான் சொல்லுறது சரிதானே?😎

🤣

நாங்கள் பிடிக்காதந கட்டாகாலி மாடுகளா, எத்தனை மாடுகளை பிடித்து கொடுத்து பெடியாள தண்ணி அடிச்சிருப்பம், அப்படியை மாட்டை கலைத்து கொண்டு போய் நான் வலை பிடித்து ஒரு சுற்று சுற்ற மற்றவர் கழுத்தில் கயிறு போட்டு பிடிப்பதே ஒரு திரில்தான், அது ஒரு காலம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, உடையார் said:

நாங்கள் பிடிக்காதந கட்டாகாலி மாடுகளா, எத்தனை மாடுகளை பிடித்து கொடுத்து பெடியாள தண்ணி அடிச்சிருப்பம், அப்படியை மாட்டை கலைத்து கொண்டு போய் நான் வலை பிடித்து ஒரு சுற்று சுற்ற மற்றவர் கழுத்தில் கயிறு போட்டு பிடிப்பதே ஒரு திரில்தான், அது ஒரு காலம்

ஒருவனை மாதிரி ஏழு பேர் உலகத்தில் இருப்பார்கள் என சொல்ல கேள்விப்பட்டுளேன்.

அதே போல் உடையாரை மாதிரி இன்னொருவன் இந்த குமாரசாமி 🙂

எங்களை மாதிரி யாராவது இங்கே இருக்கின்றீர்களா? இருந்தால் வந்து ஒரு வணக்கம் சொல்லுங்கள்.🤣

Edited by குமாரசாமி
மாதிரி என்ற சொல் இணைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

ஒருவனை மாதிரி ஏழு பேர் உலகத்தில் இருப்பார்கள் என சொல்ல கேள்விப்பட்டுளேன்.

அதே போல் உடையாரை மாதிரி இன்னொருவன் இந்த குமாரசாமி 🙂

எங்களை மாதிரி யாராவது இங்கே இருக்கின்றீர்களா? இருந்தால் வந்து ஒரு வணக்கம் சொல்லுங்கள்.🤣

ஐயா உங்களை மாதிரியே நானும்.

ஆனால் வயதில் குறைந்தவன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் நாய்களை பிடிப்பதென்றால் ஈசி நாலு பெட்டைகளை வளர்த்தால் நம்ம கேற்றுக்க காவல் படுப்பாங்கள் என்ற மோட்டார் சைக்கிள் முழுதும் மூத்திர நாத்தம் சைக்

இப்ப என்னைக்கண்டால் நூறு அடி ஓடுறாங்கள் கல் எறியைப் போல ஒரு கருவி இல்லையப்பா

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, உடையார் said:

நாங்கள் பிடிக்காதந கட்டாகாலி மாடுகளா, எத்தனை மாடுகளை பிடித்து கொடுத்து பெடியாள தண்ணி அடிச்சிருப்பம், அப்படியை மாட்டை கலைத்து கொண்டு போய் நான் வலை பிடித்து ஒரு சுற்று சுற்ற மற்றவர் கழுத்தில் கயிறு போட்டு பிடிப்பதே ஒரு திரில்தான், அது ஒரு காலம்

உங்க காலத்தில் கட்டுபடியாகி இருக்கிறது இப்ப அதிவிசேடம் குவாட்டர் 9௦௦ ஆயிரமாம் 6௦௦வெகுமதி கட்டுபடியாகதாம் என்று போனுக்குள்ளால் அழுகிறார்கள் .

முக்கிய குறிப்பு அந்த குவாட்டரையும் தண்ணி கலக்காமல் வெறுமனே வயித்துக்குள் விடுவதை நேரில் பார்த்து சித்தம் கலங்கியது வேறு கதை .

On 10/9/2025 at 13:29, தமிழ் சிறி said:

நான் ஊரில் நின்று இருந்தால்.... ஒரு கிழமைக்கு 50 பெட்டை நாயை பிடித்துக் கொடுத்து 30,000 ரூபாய் உழைத்து இருப்பேன்.

நாயின் காது பக்கமாய் அடையாளம் போட்டு விடுகிறார்கள் என்கிறார்கள் நான் சரியாக கவனிக்கவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, உடையார் said:

நாங்கள் பிடிக்காதந கட்டாகாலி மாடுகளா, எத்தனை மாடுகளை பிடித்து கொடுத்து பெடியாள தண்ணி அடிச்சிருப்பம், அப்படியை மாட்டை கலைத்து கொண்டு போய் நான் வலை பிடித்து ஒரு சுற்று சுற்ற மற்றவர் கழுத்தில் கயிறு போட்டு பிடிப்பதே ஒரு திரில்தான், அது ஒரு காலம்

7 hours ago, குமாரசாமி said:

ஒருவனை மாதிரி ஏழு பேர் உலகத்தில் இருப்பார்கள் என சொல்ல கேள்விப்பட்டுளேன்.

அதே போல் உடையாரை மாதிரி இன்னொருவன் இந்த குமாரசாமி 🙂

எங்களை மாதிரி யாராவது இங்கே இருக்கின்றீர்களா? இருந்தால் வந்து ஒரு வணக்கம் சொல்லுங்கள்.🤣

7 hours ago, ஈழப்பிரியன் said:

ஐயா உங்களை மாதிரியே நானும்.

ஆனால் வயதில் குறைந்தவன்.

அடப்பாவிகளா அது நீங்கள்தானா . ...... நீங்கள் பிடித்துக் குடுத்த என்ர மாடுகளை விதானைக்கு காசும் குடுத்து போத்திலும் குடுத்து அவிழ்த்துக் கொண்டுவந்த அப்பாவி நான்தான் ..........! 😂

joGTpY.gif cow-horse-hybrid-video.gif

  • கருத்துக்கள உறவுகள்

546124870_25602629522659063_116051245863

ஞாயிற்றுக்கிழமை... நாய் பிடிக்க கிளம்பியாச்சு. 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 10/9/2025 at 06:59, கிருபன் said:

யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம்

செய் எந்த உலகம் என்றாலும் பெண்கள் தான் பாவம் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.