Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? - ஓர் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1982ம் ஆண்டில் பிரபாகரன் முதலும் கடைசியுமாக அப்போதைய மெட்ராஸுக்கு வந்தார்

கட்டுரை தகவல்

  • ரெஹான் ஃபசல்

  • பிபிசி ஹிந்தி

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

எச்சரிக்கை: இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள சில விவரிப்புகள் உங்களுக்கு சங்கடம் தரலாம்.

2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களில் ஒருபிரிவினர் இன்றும் அதனை ஏற்க மறுக்கின்றனர்.

இப்படியான சூழலில், பிரபாகரனின் கடைசி தருணங்கள் குறித்து இந்த கட்டுரை அலசுகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் 2008ம் ஆண்டு, நவம்பர் 27-ஆம் தேதி மாவீரர் தினத்தை முன்னிட்டு ஆற்றிய உரையே அவருடைய கடைசி உரையாக பதிவாகியுள்ளது.

அதற்கடுத்த சில மாதங்களில் அவருடைய வாழ்க்கை முடிவுக்கு வரும் என்று யாரும் நினைக்கவில்லை, ஆனால் அவருடைய வாழ்வின் கடைசி தருணம் வரை அவருடைய மனோபாவம் மாறவே இல்லை.

1976-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை தொடங்கினாலும் கூட பிரபாகரன் நீண்ட காலமாக பெரிதும் அறியப்படாத ஒருவராகவே திகழ்ந்தார்.

1982 மே மாதம் சென்னையில் முதலும் கடைசியுமாக பிரபாகரன் பிடிபட்ட போது, இந்திய அரசு அவர் மீது அதிக கவனம் செலுத்தவில்லை.

அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவத்திற்கு சவால் விடுவதற்கும் தயங்காத வகையில், பிரபாகரனின் செல்வாக்கு மற்றும் நம்பிக்கை அபரிமிதமாக அதிகரித்தது.

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? - ஓர் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் ராணுவ சக்திக்கு சவால் விடுக்கும் அளவுக்கு பிரபாகரனின் செல்வாக்கு இருந்தது

பிரபாகரனின் பாணி

இலங்கையின் புனித நகரமான அனுராதபுரத்தில் சிங்களர்கள் கொலைக்குப் பிறகு, பிரபாகரன் குறித்து பெரும் விவாதம் எழுந்தது.

அதன்பிறகு, இலங்கையில் போட்டி தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இது, தமிழர்கள் மத்தியில் தனிப்பெரும் தலைவராக உருவாவதற்கான முயற்சியாகவே நம்பப்பட்டது.

பிரபல பத்திரிகையாளர் எம்கே நாராயண் சுவாமி தன்னுடைய 'தி ரௌட் ஆஃப் பிரபாகரன்' (The Route of Prabhakaran) எனும் புத்தகத்தில், "பிரபாகரனின் ஒவ்வொரு வார்த்தையும் சட்டம் போன்றது. அவரை யாரும் சவால் செய்ய முடியாது. அவருக்கு முன் தலை தாழ்ந்து, அவர் சொல்லும் அனைத்தையும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, உங்களால் தமிழ் ஈழத்துக்காக போராட முடியும்," என எழுதியுள்ளார்.

"அவருடன் உடன்படவில்லையென்றால், ஒன்று நீங்கள் விடுதலைப் புலிகளை விட்டு வெளியேற வேண்டும், அல்லது உலகை விட்டு நீங்க வேண்டும். அவரை எதிர்க்கும் யாராக இருந்தாலும் அவர் 'துரோகி' என அறிவிக்கப்படுவார். சோவியத் முன்னாள் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தன்னுடைய எதிரிகளை எப்படி நடத்தினாரோ, அவர் அப்படி நடத்தப்படுவர்."

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? - ஓர் ஆய்வு

பட மூலாதாரம், konark

படக்குறிப்பு, பிரபல பத்திரிகையாளர் எம்கே நாராயண் சுவாமி எழுதிய 'தி ரௌட் ஆஃப் பிரபாகரன்' புத்தகம்

அடுத்தடுத்து நடந்த கொலைகள்

விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் மட்டுமல்லாது, இந்தியாவிலும் குறிப்பிட்ட சிலருக்கு குறிவைத்தது. பிரபாகரனுக்கோ அல்லது விடுதலைப் புலிகள் அமைப்புக்கோ சில சமயங்களில் உதவியிருந்தவர்களும் கூட இலக்காயினர்.

பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அனிதா பிரதாப், தன்னுடைய 'ஐலாண்ட் ஆஃப் பிளட்' (Island of Blood) எனும் புத்தகத்தில், "பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கை குறித்து புத்தகம் எழுத திட்டமிட்டிருந்த நபர் ஒருவர், பாரிஸில் தன்னுடைய இல்லத்தின் முன்பாக சுட்டு கொலை செய்யப்பட்டார்." என எழுதியுள்ளார்.

இலங்கை பாதுகாப்பு அமைச்சர் தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டார். வெளியுறவு அமைச்சர் (தமிழர்) ஒருவர் நீச்சல் குளத்தில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இலங்கை ஜனாதிபதி ஒருவரும் மே தின பேரணியில் உரையாற்றியபோது கொலை செய்யப்பட்டார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது தற்கொலை தாக்குதலில் கொலை செய்யப்பட்டார்.

ராஜிவ் காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராஜிவ் காந்தி கொலையிலும் பிரபாகரன் தொடர்புபடுத்தப்படுகிறார்.

பிரபாகரனின் சரிவு

ஒரு கட்டத்தில், இலங்கையின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பிரபாகரனின் கட்டுப்பாடு ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கு சுருங்கும் நேரம் வந்தது.

"முதன் முறையாக விடுதலைப் புலிகள் அமைப்பு போராளிகளின் கண்களில் நான் பயத்தை பார்த்தேன். பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளை நெருங்கி பார்த்துவரும் எனக்கு இது முற்றிலும் புதிய விஷயமாக இருந்தது," என பெயர் குறிப்பிட வேண்டாம் என கேட்டுக்கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.

"மே 17 அன்று, பிரபாகரன் தன் நெருங்கிய கூட்டாளிகளிடையே, தான் போர்க்களத்திலிருந்து ஓடவோ அல்லது ஆயுதங்களை கைவிடவோ மாட்டேன் என்றும், யாராவது போராட்டத்திலிருந்து விலகிக்கொள்ள விரும்பினால், அதை அவர்கள் தாராளமாக செய்யலாம் என்றும் கூறினார். குடிமக்களுடன் இணைய யாராவது விரும்பினால், அவர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அங்கே செல்லலாம். எதிரியின் கைகளால் வீழ்த்தப்படுவதை தவிர்க்கும் விதமாக யாரேனும் இறக்க விரும்பினால், சயனைடை உட்கொண்டு இறக்கலாம்."

சூரிய கடவுளின் அவதாரம் என்றும் யாராலும் வீழ்த்தப்பட முடியாதவர் என்றும் தன் ஆதரவாளர்களால் அழைக்கப்பட்ட ஒருவருக்கு இது மோசமான பிரியாவிடையாக இது இருந்தது.

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? - ஓர் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தான் விரும்பிய அனைத்தையும் சொல்வதற்கு மே 17-ஆம் தேதியை பிரபாகரன் தேர்ந்தெடுத்தது தற்செயல் நிகழ்வு அல்ல.

பிரபாகரனும் எட்டாம் எண்ணும்

தான் விரும்பிய அனைத்தையும் சொல்வதற்கு மே 17-ஆம் தேதியை பிரபாகரன் தேர்ந்தெடுத்தது தற்செயல் நிகழ்வு அல்ல.

பிரபாகரனின் பழைய கூட்டாளியான ராஜேஷ் குமார் பிரிட்டனில் வசிக்கிறார், அவர் தற்போது ராகவன் எனும் பெயரில் அறியப்படுகிறார்.

அவர் கூறுகையில், "பிரபாகரன் 8 எனும் எண்ணை துரதிருஷ்டவசமான எண்ணாக கருதினார். பிரபாகரன் எந்தவொரு வேலையையும் 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் செய்வதை தவிர்ப்பார், அது எதிர்காலத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தும் என கருதினார். இந்த நாட்களில் மறைவிடத்திலேயே நாள் முழுவதும் பதுங்கியிருந்து அடுத்த நாளே வெளியில் வரும் அளவுக்கு அவருக்கு அதன் மீது வலுவான மூடநம்பிக்கை இருந்தது" என்றார்.

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? - ஓர் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மெய்க்காப்பாளருடன் பிரபாகரன்

தோல்விகளால் குலைந்த மன உறுதி

2008-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மன்னார் மாவட்டம் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதன்பின், நவம்பர் மாதத்தில் விடுதலைப் புலிகள் வியூக ரீதியாக தங்களின் முக்கிய இடங்களான பூநகரி மற்றும் மாங்குளத்திலிருந்து வெளியேற வேண்டியிருந்தது.

2008-ஆம் ஆண்டு மே மாதம், விடுதலைப் புலிகளின் மிகவும் அனுபவம் வாய்ந்த தளபதி கந்தையா பாலசேகரன் எனும் பால்ராஜ் மாரடைப்பில் இறந்தது பிரபாகரன் பெரும் பின்னடைவாக அமைந்தது.

பாலசேகரனின் நினைவாக மூன்று நாள் துக்கம் அனுசரிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்தது. பாலசேகரன் இறந்திருக்காவிட்டால், இலங்கை ராணுவத்துடனான போரின் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும் என, அந்த அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் நம்புகின்றனர்.

2009-ஆம் ஆண்டுவாக்கில் பிரபாகரன் மேலும் அதிகமான பின்னடைவுகளை சந்திக்க ஆரம்பித்தார். இலங்கை அரசுப் படைகள், முதலில் பரந்தன் நகரத்தையும் பின்னர் அதன் அருகிலுள்ள கிளிநொச்சியையும் கைப்பற்றின. இதில், கிளிநொச்சி, விடுதலைப் புலிகளால் நிர்வகிக்கப்படும் பகுதிகளின் தலைநகரமாக கருதப்பட்டது. கிளிநொச்சியில் தோல்வியடைந்தது, விடுதலைப் புலிகள் அமைப்பினரின் மன உறுதியை கடுமையாக குலைத்தது.

இந்த நகரத்தில் தான் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை பிரபாகரன் சந்தித்தார்.

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? - ஓர் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விடுதலைப் புலிகளின் மிகவும் அனுபவம் வாய்ந்த ராணுவப் பிரிவு தலைவராக கந்தையா பாலசேகரன் இருந்தார்.

இலங்கைக்கு அமெரிக்கா நெருக்கடி

விடுதலைப் புலிகளின் முக்கியமான ஊடக ஒருங்கிணைப்பாளராக இருந்த வேலாயுதன் தயாநிதி எனும் தயா மாஸ்டர் மற்றும் பிரபாகரனின் உரைகளை மொழிபெயர்த்த குமார் பஞ்சரத்னம் எனும் ஜார்ஜ் இருவரும் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்ததால் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது.

அப்போது ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஸவும், அவரது இளைய சகோதரர் கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தனர். விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஸ தலைமை வகித்தார்.

எம்ஆர் நாராயண் சுவாமி எழுதுகையில், "சண்டையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு அமெரிக்காவிடமிருந்து கோட்டாபய ராஜபக்ஸ பெரும் அழுத்தத்தை சந்தித்தார். அமெரிக்க குடியுரிமையையும் கொண்டுள்ள கோட்டாபய ராஜபக்ஸ, பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க பிரதிநிதிகளிடம் எவ்வித உறுதியையும் அளிக்கவில்லை. எனினும், இதுதொடர்பான தன்னுடைய கவலைகளை ராணுவ தளபதிகளிடம் மே 14-ஆம் தேதி பகிர்ந்துகொண்டார்," என எழுதியுள்ளார்.

"இன்னும் எவ்வளவு காலம் இந்த போர் தொடரும் என அவர் கேள்வியெழுப்பினார். இந்த போர் கூடிய விரைவில் வெற்றியுடன் முடிவுற வேண்டும், இல்லையெனில், அமெரிக்காவின் அழுத்தத்தை எதிர்கொள்வது கடினமாகிவிடும்."

கோட்டாபய ராஜபக்ஸ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அப்போது கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்

சண்டையை தொடர பிரபாகரன் முடிவு

மே 16 அன்று, இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளின் கடைசி கட்ட பாதுகாப்பையும் அழித்தது.

ஜி-11 மாநாட்டில் பங்கேற்றிருந்த நிலையில், இந்த செய்தியை அறிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, விடுதலைப் புலிகளை ராணுவம் வெற்றி கொண்டதாக முன்கூட்டியே அறிவித்தார்.

விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்கள் தலைவர் குமரன் பத்மநாதன் எனும் கேபி, கோலாலம்பூரில் அதே நாள், "சண்டை இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. எங்களது துப்பாக்கிகளை கைவிடுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்." என தெரிவித்தார்.

பிரபாகரன் இந்த சண்டையை தொடர முடிவெடுத்ததால், மஹிந்த ராஜபக்ஸவும் குமரன் பத்மநாதனும் இவ்வாறு பேசியதாக தெரிகிறது.

விடுதலைப் புலிகள் பல நாட்களாக குளிக்கக் கூட முடியாத அளவுக்கு சண்டை கடுமையானதாக இருந்தது. அவர்களுக்கான உணவுப் பொருட்கள் கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டன. விடுதலைப் புலிகளின் கொரில்லா படையினர் (எதிரிகள் மீது திடீர் தாக்குதல் நடத்துபவர்கள்) சிலர், இலங்கை படையினரால் பிடிக்கப்படக் கூடாது என்பதற்காக, தற்கொலை செய்துகொண்டனர்.

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? - ஓர் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மே 17 அன்று இரவு, விடுதலைப் புலிகளின் கடைசிப் படைகளை 1600 சதுர மீட்டருக்குள் இலங்கை ராணுவம் நெருக்கியது.

கடைசியாக உயிருடன் பார்க்கப்பட்டது எப்போது?

மே 17 அன்று இரவு, விடுதலைப் புலிகளின் கடைசிப் படைகளை 1600 சதுர மீட்டருக்குள் இலங்கை ராணுவம் நெருக்கியது. இலங்கை ராணுவம் மூன்று புறங்களில் சூழ்ந்திருந்தது. நான்காவது பக்கத்தில், இலங்கை கடற்படை தொடர்ந்து கண்காணித்து வந்த நந்திக்கடல் இருந்தது.

மே 17 அன்று விடுதலைப் புலிகளின் பல தளபதிகள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதையடுத்து, அந்நாள் அந்த அமைப்புக்கு மிகவும் துரதிருஷ்டவசமான நாளாக அமைந்தது.

விடுதலைப் புலிகளின் கொரில்லா படையை சேர்ந்த 'எஸ்கே' பின்னொரு நாளில் அளித்த நேர்காணலில், "மே 17 அன்று கடைசியாக பிரபாகரன் உயிருடன் காணப்பட்டார். 6 மணிக்கு பிரபாகரன் இருந்த இடத்தை நான் அடைந்தேன். எங்களுடைய உணவு முழுவதும் தீர்ந்துவிட்டது" என்றார்.

"நம்பினால் நம்புங்கள், தமிழ் ஈழம் எனும் கனவு சிதைய போகிறது என்பதை உணர்ந்திருந்த போதிலும், பிரபாகரன் மிகவும் சாதாரணமாகவே காணப்பட்டார்."

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? - ஓர் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

பிரபாகரனின் மகன் மரணம்

அடுத்த நாள், மீதமுள்ள விடுதலைப் புலிகள், ராணுவ முற்றுகையை தகர்க்க முயற்சித்தனர். அதில் அவர்கள் வெற்றியடைந்தனர், ஆனால், 30 நிமிடங்களில் இலங்கை படையினர் மீண்டும் குழுக்களாக இணைந்தனர்.

இந்த முறை இலங்கை படையின் எதிர் தாக்குதலில், விடுதலைப் புலிகள் படையை சேர்ந்த தளபதிகள் பலரும் பிரபாகரனின் 24 வயது மகன் சார்லஸ் ஆண்டனியும் கொல்லப்பட்டார்.

ஆண்டனியின் உடலை இலங்கை படையினர் தேடியபோது, அவரிடம் 23 லட்சம் இலங்கை பணம் இருந்ததை கண்டறிந்தனர்.

53வது பிரிவின் படைத்தளபதியாக இருந்த கமல் குணரத்ன, அச்சமயத்தில் பிரபாகரன், பொட்டு அம்மான் மற்றும் சூசை தவிர விடுதலைப் புலிகளின் தலைமை பொறுப்பில் இருந்த பலரும் அழிக்கப்பட்டதாக கூறினார்.

இலங்கை ராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, பிரபாகரன் குறித்த செய்தி வரும் வரை சண்டை தொடரும் என தெளிவாக கூறினார்.

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? - ஓர் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி (வலதுபக்கம் உள்ளவர்)

பிரபாகரன் மரணம் குறித்த செய்தியை பெற்ற குணரத்ன

மே 19 அன்று வரை பிரபாகரன் எங்கிருக்கிறார் என்ற செய்தி மேஜர் குணரத்னவுக்கு சிறிதும் தெரியவில்லை. இதையடுத்து, நந்திக்கடல் பகுதியின் சேறு நிறைந்த உவர் நீரில் கடுமையான சண்டை வெடித்ததாக இளநிலை அதிகாரி ஒருவர் அவரிடம் தெரிவித்தார். விடுதலைப் புலிகளை சேர்ந்த பலரும் அங்கே சிக்கியிருந்தனர். அவர்களுள் யாரும் ஆயுதத்தைக் கைவிட தயாராக இல்லை.

இறுதியில் சண்டை முடிந்து ஒரு மணிநேரம் கழித்து, தான் காத்திருந்த செய்தி குணரத்னவுக்கு கிடைத்தது.

தன்னுடைய 'தி கேஜ், தி ஃபைட் ஃபார் ஸ்ரீ லங்கா அண்ட் தி லாஸ்ட் டேஸ் ஆஃப் தமிழ் டைகர்ஸ்' (The Cage, The Fight for Sri Lanka and the Last Days of the Tamil Tigers) எனும் தன் புத்தகத்தில் கார்டன் வெய்ஸ், "கர்னல் ரவிப்ரியா மேஜர் ஜெனரல் குணரத்னவிடம், 'சார், நாங்கள் பிரபாகரனை கொலை செய்துவிட்டோம்'. என கூறினார்," என எழுதியுள்ளார்.

ஆச்சர்யமடைந்த குணரத்ன, 'உறுதியாக கூறுகிறீர்களா' என கேட்டதற்கு, 'ஆமாம், உறுதியாக,' என பதிலளித்துள்ளார்.

ஆனால், குணரத்ன இதனை உறுதியாக அறிய விரும்பியதால், கர்னல் லலிந்த கமகேவை சம்பவ இடத்துக்கு அனுப்பினார். சில நிமிடங்களிலேயே கமகேயின் குரல் ராணுவ தொலைபேசியில் ஒலித்தது: 'சார், அது சரியான செய்திதான், பிரபாகரன் தான்.' என தெரிவித்தார்.

பிரபாகரனின் உடல் கண்டறியப்பட்டது

ஜெனரல் சரத் ஃபொன்சேகா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெனரல் சரத் பொன்சேகா

முற்றிலும் உறுதிப்படுத்திய பின் குணரத்ன இந்த செய்தியை ராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அனுப்பினார். அதற்கு முன்பு, பிரபாகரனின் உடலை கொண்டு வருமாறு படையினரை கேட்டுக்கொண்டார்.

எம்ஆர் நாராயண் சுவாமி எழுதுகையில், "அந்த சமயத்தில் இலங்கை படையினர் சுமார் மூவாயிரம் பேர் பிரபாகரனின் உடல் கிடத்தப்பட்டிருந்த இடத்தில் திரண்டிருந்தனர். சேறு நிறைந்த ஆழமற்ற நீரில் இறங்கி படையினர் உடலை வெளியே எடுத்தனர்." என குறிப்பிட்டுள்ளா.

"பிரபாகரனின் உடலை படையினர் பார்த்த உடனேயே, அவர்கள் வானத்தை நோக்கி சுட ஆரம்பித்தனர். படையினரை ஒருங்குபடுத்த அதிகாரி முயற்சி மேற்கொண்டார், ஆனால் அவரின் வார்த்தைகளுக்கு பயனில்லாமல் போனது."

ஜெனரல் பொன்சேகா இந்த செய்தியை அறிந்தபோது இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்தார். பொன்சேகாவிடம் குணரத்ன சிங்கள மொழியில் தொலைபேசியில், 'மஹா எஸ் இவராய்' என்றார், அதாவது, 'பெரியவன் முடிந்து விட்டான்'.

அடையாள அட்டை

பிரபாகரனின் அடையாள அட்டை

பட மூலாதாரம், Ministry of Defence Sri Lanka

படக்குறிப்பு, பிரபாகரனின் அடையாள அட்டை

பிரபாகரன் சுமார் 9.15 மணியளவில் இறந்தார். அவருக்கு அப்போது வயது 54.

எம்ஆர் நாராயண் சுவாமி எழுதுகையில், "அவருடைய நெற்றியில் பெரிய காயம் இருந்தது, இதனால் அவருடைய தலை இரண்டு பாகங்களாக பிளவுபட்டிருந்தது. அவருடைய வாய் திறந்திருந்தது, அவருடைய கண் மேல் நோக்கி இருந்தது. அவருடைய தாடி வெள்ளை நிறத்தில் இருந்தது." என எழுதியுள்ளார்.

"குணரத்ன அவருடைய உடலை தொட்ட போது, அது இன்னும் சூடாக இருந்தது. அவருடைய நெற்றி தவிர வேறெங்கும் துப்பாக்கி குண்டு காயம் இல்லை. பிரபாகரன் அப்போது ராணுவ உடையில் இருந்தார். அவருடைய பாக்கெட்டில் தேடியபோது, 001 எனும் வரிசை எண்ணுடன் விடுதலைப் புலிகளின் அடையாள அட்டை கண்டறியப்பட்டது, அந்த அடையாள அட்டை ஜனவரி 1, 2007 அன்று வழங்கப்பட்டது."

இதுதவிர, நீரிழிவு மருந்துகள் சிலவும் கண்டறியப்பட்டன. சிங்கப்பூரிலிருந்து வாங்கப்பட்ட திராட்சை மணத்துடன் கூடிய லோஷனும் (hand lotion) இருந்தது. அவரின் தலையில் இருந்த காயம் நீல நிற துணியால் மூடப்பட்டிருந்தது.

கார்டன் வெய்ஸ் எழுதுகையில், "12.7 எம்எம் தோட்டாவால் பிரபாகரன் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்தார்." என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ராணுவத்தின் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, பிரபாகரனின் ராணுவ உடையை கழற்றுமாறு உத்தரவிட்டார். இலங்கை படையினரை தவிர, ராணுவ உடையணிய யாருக்கும் உரிமை இல்லை என்பது அவரின் வாதமாக இருந்தது.

பிரபாகரனின் உடல் அடையாளம் காணப்பட்டது

நாராயண் சுவாமி எழுதுகையில், "பிரபாகரனின் உடலை அடையாளம் காண கர்னல் கருணா மற்றும் தயா மாஸ்டர் எனும் விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களை அனுப்புவதாக பொன்சேகா குணரத்னேவிடம் தெரிவித்தார்." என குறிப்பிட்டுள்ளார்.

"இருவரும் ராணுவ விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர். அந்த உயிரற்ற உடலை அடையாளம் காண அவர்கள் ஒரு நொடி கூட எடுத்துக்கொள்ளவில்லை."

பிரபாகரனின் மரணத்தால் தமிழ் ஈழத்துக்கான ஆயுத போராட்டமும் இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gvrppzdgno

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

"இருவரும் ராணுவ விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர். அந்த உயிரற்ற உடலை அடையாளம் காண அவர்கள் ஒரு நொடி கூட எடுத்துக்கொள்ளவில்லை."

கருனா அந்த உடலைப் பார்த்ததும் “மோடன்கள்” என்று கூறியதை வீடியோவுடன் பார்த்த ஞாபகம் உள்ளது. வேறு பலரும் இதனைப் பார்த்திருப்பார்கள் என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Paanch said:

கருனா அந்த உடலைப் பார்த்ததும் “மோடன்கள்” என்று கூறியதை வீடியோவுடன் பார்த்த ஞாபகம் உள்ளது. வேறு பலரும் இதனைப் பார்த்திருப்பார்கள் என நம்புகிறேன்.

🤣 அந்த வீடியோவை இங்கே இணைப்பதில் உங்களுக்கு என்ன தயக்கம்?

"ஞாபகம்" என்பது கொஞ்சம் சிக்கலான விடயம். நீங்கள் கனவில் கண்டது கூட "ஞாபகம்" ஆக பின்னர் தெரியக் கூடும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு வேளை தமிழர்கள் தலைவர் பிரபாகரனை மறந்தாலும் ஹிந்தியும் சிங்களமும் வாழ்க்கையில் மறக்கவே மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஏராளன் said:

"அவருடைய நெற்றியில் பெரிய காயம் இருந்தது, இதனால் அவருடைய தலை இரண்டு பாகங்களாக பிளவுபட்டிருந்தது. அவருடைய வாய் திறந்திருந்தது, அவருடைய கண் மேல் நோக்கி இருந்தது.

அப்போ, கோடரியும் கொண்டுதான் இலங்கை இராணுவம் போரிட்டுள்ளதா? ஏதோ இலங்கைப்படை சாதித்ததாக எழுதியுள்ளனர். விநாயக மூர்த்தி முரளிதரன் இராணுவ கூட்டிலேயே இருந்துள்ளான். தலைவருடன் ஒன்றாக இருந்து உண்டு, குடித்து அவரையே காட்டிக்கொடுத்த துரோகி, அவரை அடையாளம் காட்ட வந்தானாம். சரத் பொன்சேகா சொன்னது, நாங்கள் கிளிநொச்சியுடன் எங்கள் போரை நிறுத்திக்கொள்ள நினைத்தோம், ஆனால் இந்தியாவே எங்களை வற்புறுத்தி போரை தொடரச்செய்தது. மஹிந்தா அறிவித்தது, நாங்கள் கேட்க்காமலேயே இந்தியா போருக்கான எல்லா உதவிகளையும் செய்தது. நாங்கள் செய்தது இந்தியாவுக்கான போர். ஏன், அமெரிக்கா, பாகிஸ்தான்,பலஸ்தீன், இஸ்ரேல் இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம். அதைவிட நாடு முழுவதும் கடனால் நிறைந்திருக்கிறது. ஆனால் புலிகள் தங்கள் சொந்த முயற்சியினால் முப்பது ஆண்டுகள் தமிழருக்கெதிரான வன்முறையை கட்டுபாட்டில் வைத்திருந்தனர். ஒரு விடுதலை போராட்டம் துரோகத்தினாலேயே முடிவுக்கு வந்தது. இனிமேல் துரோகத்தின் பலனை அனுபவிக்கும் போது அதன் வலி புரியும். என் தலைவன், குளிரூட்டிய அறையிலிருந்து போர் புரியவில்லை, போராளிகளின் இழப்பில் புகழ் தேடவில்லை, பிள்ளைகளை வெளிநாட்டில் சுகம் தேட அனுப்பவில்லை. தானும் குடும்பமும் சேர்ந்தே போராடினார். உலகிலேயே சிறந்த எடுத்துக்காட்டு.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:

🤣 அந்த வீடியோவை இங்கே இணைப்பதில் உங்களுக்கு என்ன தயக்கம்?

"ஞாபகம்" என்பது கொஞ்சம் சிக்கலான விடயம். நீங்கள் கனவில் கண்டது கூட "ஞாபகம்" ஆக பின்னர் தெரியக் கூடும்!

அந்த வீடியோவை நீங்கள் பார்க்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Paanch said:

கருனா அந்த உடலைப் பார்த்ததும் “மோடன்கள்” என்று கூறியதை வீடியோவுடன் பார்த்த ஞாபகம் உள்ளது. வேறு பலரும் இதனைப் பார்த்திருப்பார்கள் என நம்புகிறேன்.

கருணா அவரின் பார்வையை, விளக்கத்தையே சொல்லி இருக்க மிக கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கிறது.

ஆகவே, அதில் மோடன்கள் என்று கருணாவால் குறிக்கப்பட்டது எவர்?

(சிலருக்கு நான் சொல்வது சகிக்க முடியாமல் இருக்கலாம். அனால், அது தானே யதார்த்தம்.)

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

கருணா அவரின் பார்வையை, விளக்கத்தையே சொல்லி இருக்க மிக கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கிறது.

ஆகவே, அதில் மோடன்கள் என்று கருணாவால் குறிக்கப்பட்டது எவர்?

(சிலருக்கு நான் சொல்வது சகிக்க முடியாமல் இருக்கலாம். அனால், அது தானே யதார்த்தம்.)

அது பிரபாகரனே என்று அறிவித்த சிங்களப்படை அதிகாரிகளை.

24 minutes ago, Paanch said:

அது பிரபாகரனே என்று அறிவித்த சிங்களப்படை அதிகாரிகளை.

ஆக, இறுதிவரைக்கும் சரணடையாது சண்டை செய்து போராடி இறந்த எம் தலைவரின் உடல் அது இல்லை என்கின்றீர்கள்?

12 hours ago, satan said:

அப்போ, கோடரியும் கொண்டுதான் இலங்கை இராணுவம் போரிட்டுள்ளதா?

கோடாரியால் தான் இந்த காயம் வர வேண்டும் என்றில்லை. இறுதி வரைக்கும் போராடி, சரணடைய விரும்பாது முகத்தில், நாடியின் கீழ், துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டாலும், இந்த வகையான காயம் ஏற்படும்.

தலைவர் ஒரு உண்மையான வீரன். இறுதி வரைக்கும் போராடி வீர மரணம் அடைந்த ஒப்பற்ற தலைவன்!

எம் இனத்தின் காலப் பிழையால் உதித்த உண்மைத் தமிழன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

அந்த வீடியோவை நீங்கள் பார்க்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்.

பார்க்காமையால் தான் இங்கே இணையுங்கள் என்றேன். இப்போது தான் இது புரிந்ததா😂? இப்பவாவது இணையுங்கள், என்ன சொல்லியிருக்கிறார், யாரைச் சொல்லியிருக்கிறார் என்று பார்ப்பம்!

14 hours ago, satan said:

அப்போ, கோடரியும் கொண்டுதான் இலங்கை இராணுவம் போரிட்டுள்ளதா? ஏதோ இலங்கைப்படை சாதித்ததாக எழுதியுள்ளனர். விநாயக மூர்த்தி முரளிதரன் இராணுவ கூட்டிலேயே இருந்துள்ளான். தலைவருடன் ஒன்றாக இருந்து உண்டு, குடித்து அவரையே காட்டிக்கொடுத்த துரோகி, அவரை அடையாளம் காட்ட வந்தானாம். சரத் பொன்சேகா சொன்னது, நாங்கள் கிளிநொச்சியுடன் எங்கள் போரை நிறுத்திக்கொள்ள நினைத்தோம், ஆனால் இந்தியாவே எங்களை வற்புறுத்தி போரை தொடரச்செய்தது. மஹிந்தா அறிவித்தது, நாங்கள் கேட்க்காமலேயே இந்தியா போருக்கான எல்லா உதவிகளையும் செய்தது. நாங்கள் செய்தது இந்தியாவுக்கான போர். ஏன், அமெரிக்கா, பாகிஸ்தான்,பலஸ்தீன், இஸ்ரேல் இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம். அதைவிட நாடு முழுவதும் கடனால் நிறைந்திருக்கிறது. ஆனால் புலிகள் தங்கள் சொந்த முயற்சியினால் முப்பது ஆண்டுகள் தமிழருக்கெதிரான வன்முறையை கட்டுபாட்டில் வைத்திருந்தனர். ஒரு விடுதலை போராட்டம் துரோகத்தினாலேயே முடிவுக்கு வந்தது. இனிமேல் துரோகத்தின் பலனை அனுபவிக்கும் போது அதன் வலி புரியும். என் தலைவன், குளிரூட்டிய அறையிலிருந்து போர் புரியவில்லை, போராளிகளின் இழப்பில் புகழ் தேடவில்லை, பிள்ளைகளை வெளிநாட்டில் சுகம் தேட அனுப்பவில்லை. தானும் குடும்பமும் சேர்ந்தே போராடினார். உலகிலேயே சிறந்த எடுத்துக்காட்டு.

நீங்கள் தாயகத்தில் யுத்த காலத்தில் வசித்து யுத்தத்தில் இறந்த, மின் கம்பத்தில் கட்டப் பட்ட உடல்களுள் ஒன்றைத்தானும் பார்த்தறியாத ஒருவர் போலத் தெரிகிறது (உங்கள் ஏனைய பாரதங்களும் அதைத் தான் காட்டுகின்றன😎).

"12.7 mm தோட்டா" என்று செய்தியில் இருக்கிறது. இந்தத் துப்பாக்கி ரவை ஏற்படுத்தும் வெளியேறும் காயம் (exit wound) எவ்வளவு பெரிதாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

கூட இருந்து குழி பறிப்போர், காட்டிக்கொடுப்போர், துரோகிகளுக்கு கிடைக்கும் தண்டனைகள் அவர்கள் சார்ந்தவர்களையும் நோகடித்து வேதனைப்படுத்துவதைத் தவிர்க்க முடியாது.

ஒரு இனத்தையே அழிவிலிருந்து பாதுகாக்க தன் உயிரையே துச்சமென எண்ணிப் போராடும் ஒரு போராளிகள் இயக்கத்தைத் தூற்றுபவர்களை உலகமே தூற்றும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

து பிரபாகரனே என்று அறிவித்த சிங்களப்படை அதிகாரிகளை.

இது கருணா சொன்னதை நீங்கள் புரிந்து கொண்டது.

அனால் கருணாவின் மதியில், மனதில் அந்த நேரத்தில் இருந்தது என்ன?

நான் யதார்த்தம் என்றதும், பொதுவானது அல்ல.

கருணாவின் பார்வையில் , விளக்கத்தில், கருணாவின் மதியில், மனதில் அந்த நேரத்தில் இருந்த விளக்கம், புரிவு.

  • கருத்துக்கள உறவுகள்

கருணா ஒரு தீர்க்கதரிசி….

(டக்கெண்டு பாய்ந்து பிராண்ட வேண்டாம், கீழே வாசிக்கவும்)

கருணா மோடங்கள் என சொல்லியது….

2009 இல் தலைவர் வீரச்சாவை அடையவில்லை என, 2025, 2055 இலும் நம்பி கொண்டு இருக்க போகும் புலம்பெயர் தமிழர் சிலரை.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:

நீங்கள் தாயகத்தில் யுத்த காலத்தில் வசித்து யுத்தத்தில் இறந்த, மின் கம்பத்தில் கட்டப் பட்ட உடல்களுள் ஒன்றைத்தானும் பார்த்தறியாத ஒருவர் போலத் தெரிகிறது (உங்கள் ஏனைய பாரதங்களும் அதைத் தான் காட்டுகின்றன😎).

ஐயா! நான் ஆயுதம் ஏந்தி போராடவில்லை, அதனால் அது ஏற்படுத்தும் காயங்கள் எப்படிப்பட்டது என தெரியாமல் இருக்கலாம். ஆனால் போராட்டத்தின் வலி, இடப்பெயர்வு, பசி, இல்லாமை, உயிர் பிழைக்க ஓடிய ஓட்டம், ஒழிந்த மறைவிடங்கள், கண்ணெதிரே உறவுகளின் உயிரற்று சரிந்த உடலங்கள், அழிவுகள், இழப்புகள், துயர்கள் போராளிகளின் வீரம், மனவுறுதி அனைத்தையும் நேரடியாகவே கண்டு அனுபவித்த நபர். பல போராளிகளை கட்டி வைத்து வெட்டி அந்தகாயத்திலிருந்து இரத்தம் வழிவதை பார்த்து ரசித்த கூட்டம் இது. பல அப்பாவிப்பெண்களை துகிலுரித்து பாலியல் துஸ்பிரயோகம் செய்து ரசித்த இனமிது, மணலாற்றில் மரணமடைந்த பெண்போராளிகளின் அந்தரங்க பகுதியில் வெடிகுண்டுகளை வைத்து ரசித்த கூட்டம் இது. சரணடைந்த போராளிகளை நிர்வாணமாக்கி, கைகளை பின்னால் பிணைத்து, கண்களை கட்டி, முட்டிக்கால் போட வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தி உடலை காலால் உதைத்து வீழ்த்தி வீரம் காட்டிய வீரர்கள் இவர்கள், அப்பாவிகளை விரட்டி விரட்டி கொன்றுவிட்டு பயங்கரவாதிகளை அழித்தேன் என்று முரசு கொட்டிய கூட்டமிது. இதற்கு பெயர் மனிதாபிமானப் போர், வீரர்கள். தங்களுக்குத்தாங்களே கொடுத்துக்கொள்ள வேண்டிய பட்டம். அதன் தண்டனை என்னவென்று தானே தன் வாயால் கூறிக்கொள்கிறார். மின்சாரக்கதிரை! அவரே, அது தான் தனக்குரிய தண்டனையென்கிறார்.

On 15/9/2025 at 16:43, ஏராளன் said:

அவருடைய நெற்றி தவிர வேறெங்கும் துப்பாக்கி குண்டு காயம் இல்லை.

ஒருவேளை தலைவர் தன்னைத்தானே சுட்டுதற்கோலை செய்து கொண்டிருக்கலாம். ஒரு மாபெரும் வீரன், தான் எதிரியிடம் உயிரோடு பிடிபட்டு அவமானப்படுவதையோ, அல்லது அடிமை வாழ்வு, சுகபோக வாழ்வு எதையோ வாழ்வதை விரும்பாமல் இருந்திருக்கலாம். இது எனது தனிப்பட்ட கருத்து. என் தலைவர் இறந்தபின்பு இராணுவமும், அரசியல், போர் கதாநாயகர்களும் நடந்து கொண்ட விதம், சொல்லப்பட்ட முரண்பாடான கதைகள், இந்தியவுக்கு சொல்லப்பட்ட கதை, அன்றைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட ஏமாற்றமான கருத்து, அதையே எனக்கு உணர்த்துகிறது. இந்தியாவும் இலங்கையும் எதிர்பார்த்த குறிக்கோளை அடைய என் தலைவன் அனுமதிக்கவில்லை. நெற்றியில் சூடு. ஒன்று, வேறொருவர் நேருக்கு நேர் நின்று அவரை சுட்டிருக்க வேண்டும். அது ஒரு போராளியால் அவரின் வேண்டுகோளுக்கமைய, அல்லது அவரே தன்னைத்தான் சுட்டிருக்க வேண்டும்!

On 15/9/2025 at 16:43, ஏராளன் said:

அவருடைய நெற்றி தவிர வேறெங்கும் துப்பாக்கி குண்டு காயம் இல்லை.

ஒரு போராட்ட களத்தில், அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட போராட்டம். நெற்றி தவிர வேறெங்கும் காயமில்லை. ஆயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு ஆயுதங்கள், இராணுவம். ம் .... கதையெழுதுகிறோமென உண்மையை ஒப்புக்கொள்கிறார்களா இவர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kadancha said:

ஆகவே, அதில் மோடன்கள் என்று கருணாவால் குறிக்கப்பட்டது எவர்?

அவர் எவர் என்று நீங்களே குறிப்பிட வேண்டியது. வி. முரளி, பகிரங்கமாக கூறியது. தலைவர் ஒரு சர்வாதிகாரி, தான், ஆயதப்போராட்டம் தவறானது என திருந்தி ஜனநாயகத்துக்கு திரும்பினேன் என்று பலதடவை கூறியுள்ளான். சரி, ஜனநாயகத்துக்கு திரும்பி என்ன சாதித்தார்? கோடீஸ்வரர். அது எங்கிருந்து வந்தது? பல கொலைக்குற்றச்சாட்டுகள் இவர்மேல். அத்தனையும் புலிகளிலிருந்து பிரிந்து, அப்பாவி மக்களை, அரசியல் பழிவாங்கல், பணத்துக்காக செய்யப்பட்டவை. ஜனநாயகம் நாட்டில் இருந்திருந்தால்; ஏன் புலிகளில் இணைந்தார் என்றொரு கேள்வியுண்டு. போராளிகள் மூடன்கள், என்னைப்போல் நக்கிப்பிழைத்திருக்கலாம் என எண்ணியிருப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்

2-praba1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் போன்ற தோற்றமுடைய சிங்கள இராணுவ வீரர் குறித்த கோட்பாடுகள் உள்ளன, 2010 இல், ஒரு விடுதலைப்புலிகள் ஆதரவு இணையதளம், பிரபாகரனின் சடலம் என்று காட்டப்பட்ட ஒன்று ஒரு சிங்கள இராணுவ வீரருடையது என்றும், அவர் பிரபாகரனைப் போலவே தோற்றமளித்தார் என்றும் கூறியது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

அவர் எவர் என்று நீங்களே குறிப்பிட வேண்டியது. வி. முரளி, பகிரங்கமாக கூறியது. தலைவர் ஒரு சர்வாதிகாரி, தான், ஆயதப்போராட்டம் தவறானது என திருந்தி ஜனநாயகத்துக்கு திரும்பினேன் என்று பலதடவை கூறியுள்ளான். சரி, ஜனநாயகத்துக்கு திரும்பி என்ன சாதித்தார்? கோடீஸ்வரர். அது எங்கிருந்து வந்தது? பல கொலைக்குற்றச்சாட்டுகள் இவர்மேல். அத்தனையும் புலிகளிலிருந்து பிரிந்து, அப்பாவி மக்களை, அரசியல் பழிவாங்கல், பணத்துக்காக செய்யப்பட்டவை. ஜனநாயகம் நாட்டில் இருந்திருந்தால்; ஏன் புலிகளில் இணைந்தார் என்றொரு கேள்வியுண்டு. போராளிகள் மூடன்கள், என்னைப்போல் நக்கிப்பிழைத்திருக்கலாம் என எண்ணியிருப்பான்.

கருணா என்ற தன மனிதன் ஆயுத போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திருப்பியதால் அவரால் எதையும் சாதிக்க முடியாது தன்னைக் காப்பாற்றியதைத் தவிர, ஆனால், விடுதலைப்புலிகள் என்ற இயக்கம் அன்று இருந்த நிலையில் உரிய வேளையில் உலக ஜதார்த்ததை புரிந்து தீர்வை நோக்கிய பாதையில் அதை செய்திருந்தால் நிச்சயமாக தமிழர் வாழ்வில் பல வினை திறனான positiv ஆன பாரிய மாற்றங்களை செய்திருக்க முடியும்.

கருணா உண்மையில் என்ன கூறினோரோ என்பது தெரியாது. ஆனால் அப்படிக் கூறியிருந்தால், 2002/ 2003 காலப் பகுதியில் தமது இயக்கத்திற்கு இருந்த பேரம் பேசும் வலிமையையும் உலக அங்கிகாரத்தை நோக்கிய நிலையையும், கெளரவத்தையும் ஒப்பு நோக்கி, அதை மனமார்ந்து உணர்ந்து, அந்த நிலையை இப்படி பாழாக்கிய மடைத்தனமான அரசியல் தீர்மானங்களை எடுத்தவர்களை நோக்கி அப்படிக் கூறியிருந்தால் நிச்சயமாக அது சரி தான்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரிடமிருந்து எதை பிடுங்குவேன் என்று அலையும் சிங்களத்திடம் தமிழருக்கு கொடுப்பதற்கு ஒன்றுமேயில்லை. அவர்கள் பேச்சுமேடைக்கு போவதே புலிகளை பெலவீனப்படுத்துவதற்கே. கொடுப்பதற்கு எதுவும் இருந்திருந்தால்; புலிகளை அழித்த பின்தான் தீர்வு என்று ஏன் சொல்ல வேண்டும்? சரி, சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்கின்படி, அவர்களை அழித்த பின் ஏன் கொடுக்கவில்லை கொடுக்க இருந்ததை உறுதியளித்ததை? இன்னும் மக்களின் காணிகளை ஏன் விகாரைகளிற்கும் இராணுவத்திற்கும் அபகரிக்கிறார்கள்? இடைத்தரகர்களிற்கும் தெரியும், அவர்களும் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்களை களையுங்கள் என்று கேட்டபோதே மறுத்து விட்டார்கள். புலிகள் இருந்தால் ஏமாற்ற முடியாது, உடன்படிக்கைகளை கிழித்தெறிய முடியாது என்பதற்காக அவர்களை அழித்தார்கள். இந்தப்பிரச்சனை இயற்கையால் தீர்த்து வைக்கப்பட்டால் அன்றி எந்த சிங்களமும் இனப்பிரச்சினையை தீர்க்காது. இல்லை சிங்கள மக்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு உண்மையான வரலாறு தெரியாது. தெரியவும் வாய்ப்பில்லை. இது மிகவும் துரதிஷ்டம். அதற்காகவே திட்டமிட்டு நூலகத்தை தீக்கிரையாக்கி வரலாற்றைத்திரித்து, புதிய குடியேற்றங்களையும் விகாரைகளை நிறுவியுள்ளார்கள். இயற்கையின் சீற்றம் ஒருநாள் இந்த இனத்திற்கு எதிராக திரும்பி வரலாற்றை எழுதும். அப்போது இதை எழுதும் நான் உயிரோடு இருக்கப்போவதில்லை.

சிங்களத்திற்கு முண்டு கொடுத்த கதிர்காமருக்கு பிரதமர் பதவியை அளிக்க விரும்பாத சிங்களம், எதை தமிழருக்கு கொடுத்திருக்கும்? புலம்பெயர் தமிழரின் பணத்தை வாரிக்கொடுத்த பத்மநாதன், வி. முரளிதரன், டக்கிளஸ் போல நக்கிப்பிழைத்துக்கொண்டிருந்திருக்க வேண்டும். இத்தனை மக்களை, சொத்துக்களை பலி கொடுத்து, தன்னை காப்பாற்றிக்கொள்ள என்தலைவன் நினைக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால்; அவரை யாரும் தலைவன் என்று பெருமை பாராட்ட வாய்ப்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் என்னை தான் சொல்கிறார். இதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. ஏனெனில் அவர் மோடன் என்று சொல்வது நான் அவர் மீது வைத்த நம்பிக்கையை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

2-praba1.jpg

சனல் 4 காட்டிய படத்தில் இருப்பது பிரபாகரன் அல்ல, அது வேறு யாரோ (இறந்த ஒருவரின் உடலா என்பதும் சந்தேகம்) ஆனால், சனல் 4 ஐ ஏன் பார்க்கிறீர்கள்? ரூபவாகினி உட்பட்ட உள்ளூர் ஊடகங்களில் காட்டப் பட்ட வீடியோக்கள் இன்னும் இணையத்தில் இருக்கின்றன. அவற்றைக் கண்டால் இறுக கண்களை மூடிக் கொண்டிருக்கிறீர்கள் போல தெரிகிறது😂!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

சனல் 4 ஐ ஏன் பார்க்கிறீர்கள்? ரூபவாகினி உட்பட்ட உள்ளூர் ஊடகங்களில் காட்டப் பட்ட வீடியோக்கள் இன்னும் இணையத்தில் இருக்கின்றன. அவற்றைக் கண்டால் இறுக கண்களை மூடிக் கொண்டிருக்கிறீர்கள் போல தெரிகிறது😂!

உள்ளூர் ஊடகங்களில் காட்டப் பட்ட வீடியோக்கள் இன்னும் இணையத்தில் இருந்தால் அவற்றை நீங்கள் ஏன் வெளியிடவில்லை? வெளியிட்டால் உண்மைகள் வெளிப்பட்டு விடுமே என்ற பயமா? அதனால் நீங்கள்தான் இறுக கண்களை மூடிக் கொண்டிருப்பதுபோல் தெரிகிறது.😣

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Paanch said:

உள்ளூர் ஊடகங்களில் காட்டப் பட்ட வீடியோக்கள் இன்னும் இணையத்தில் இருந்தால் அவற்றை நீங்கள் ஏன் வெளியிடவில்லை? வெளியிட்டால் உண்மைகள் வெளிப்பட்டு விடுமே என்ற பயமா? அதனால் நீங்கள்தான் இறுக கண்களை மூடிக் கொண்டிருப்பதுபோல் தெரிகிறது.😣

உங்கள் போன்ற கற்பனையுலகில் வாழும் ஆட்களுக்குப் பதில் எழுதும் நோக்கில், இறந்த ஒருவரின் படங்கள் வீடியோக்களை மீண்டும் இங்கே இழுத்து வரவேண்டிய அவசியம் இல்லை என்பதால் நான் இணைக்கப் போவதில்லை!

ஆனால், இணையத்தில் "பிரபாகரன் இறப்பு" என்ற தேடற்சொல் மூலம் எப்படித் தேடல் செய்வது என்பது கூடத் தெரியாமலா "சனல் 4" பார்க்கிறீர்கள்😂?

  • கருத்துக்கள உறவுகள்
On 17/9/2025 at 20:00, Justin said:

உங்கள் போன்ற கற்பனையுலகில் வாழும் ஆட்களுக்குப் பதில் எழுதும் நோக்கில், இறந்த ஒருவரின் படங்கள் வீடியோக்களை மீண்டும் இங்கே இழுத்து வரவேண்டிய அவசியம் இல்லை என்பதால் நான் இணைக்கப் போவதில்லை!

தலைவர் சூரியதேவன்.

இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன். சூரியன் உள்ளவரை இந்தப் பூமியில் இருப்பார்.

கற்பனை என்பது மனதில் புதிய கருத்துக்கள், பொருள்கள், உருவங்களை உருவாக்கும் திறன் கொண்டது. இது கதைகளை உயிர்ப்பிக்கவும், உணர்ச்சிகளைத் தூண்டவும், படிப்பவர்களை ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்தவும் உதவுகிறது.😌

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

தலைவர் சூரியதேவன்.

இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன். சூரியன் உள்ளவரை இந்தப் பூமியில் இருப்பார்.

கற்பனை என்பது மனதில் புதிய கருத்துக்கள், பொருள்கள், உருவங்களை உருவாக்கும் திறன் கொண்டது. இது கதைகளை உயிர்ப்பிக்கவும், உணர்ச்சிகளைத் தூண்டவும், படிப்பவர்களை ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்தவும் உதவுகிறது.😌

ஓம், பல சமயங்களில் வலி தரும் யதார்த்தத்தில் இருந்து தப்பி ஒரு "குமிழிக்குள்" வாழவும் கற்பனை உதவுகிறது😂!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.