Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/share/v/1DCBLvynAX/?mibextid=wwXIfr டாக்ரர் சுதன்சிவன் பேரிச்சம்பழம் பற்றி சொல்லும் போது நம்புவதா? விடுவதா? என்று முடிவு செய்ய முடியவில்லை.

கடந்த 10 வருடமாக தேநீருடன் சீனிக்கு பதிலாக பேரிச்சம்பழம் ஒன்று கடிப்பேன்.

இனிமேல் என்ன செய்வது?

  • கருத்துக்கள உறவுகள்

"dry fruits (உலர் பழங்கள்) - நல்லதா? என்னென்ன சத்துக்கள் உள்ளன? யார் சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

"Dry fruits - are they good? What nutrients are present and how much?

Who can eat? Who should not eat? How much can we eat?" | Dr Arunkumar

5 hours ago, ஈழப்பிரியன் said:

https://www.facebook.com/share/v/1DCBLvynAX/?mibextid=wwXIfr டாக்ரர் சுதன்சிவன் பேரிச்சம்பழம் பற்றி சொல்லும் போது நம்புவதா? விடுவதா? என்று முடிவு செய்ய முடியவில்லை.

கடந்த 10 வருடமாக தேநீருடன் சீனிக்கு பதிலாக பேரிச்சம்பழம் ஒன்று கடிப்பேன்.

இனிமேல் என்ன செய்வது?

அண்ணை, இரத்தச் சக்கரை கட்டுப்பாட்டில் இருந்தால் 1 பேரீச்சம்பழம் உண்பது பிரச்சனை இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியரே! டாக்குத்தரின் தெளிவுரைப்படி இனிமேல் வாழைப்பழத்தைக் கடியுங்கள் ஆரோக்கியமாக வாழ்வீர்கள்.🏃

பெயர் சூட்டும்போது அறிவுபூர்வமாகவே நம் முன்னோர்கள் பெயரையும் சூட்டி உள்ளார்கள். இன்றைய அறிவுலகில் நாங்கள் வாழ்ந்தாலும் எம் முன்னோரின் அறிவுரைகளை ஆராய்ந்து அதன்படி நடக்கத் தவறிவிட்டோம்.

வாழைப்பழம்- தொடக்கமே வாழ்வைக் குறிக்கிறது.😌

பேரீச்சம்பழம்- தொடக்கமே பேயைக் குறிக்கிறது.🫣

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள்… பேரீச்சம்பழம் சாப்பிட்டால், இடுப்பில் நல்ல பலம் வரும் என்று சொல்கிறார்கள். 💪

அரபுக்காரர் எல்லாரும் ஐந்து பெண்டாட்டியை வைத்து சமாளிப்பதன் இரகசியம் பேரீச்சம்பழம் தான். ❤️

நாங்கள் தான்…. சின்ன 🧅 வெங்காயம் 🧄 போதும் என்று, எமது வாழ்க்கையை வீணடித்து விட்டோம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு வைத்தியரும் ஒவ்வொரு உணவைப் பற்றி தத்தமது படிப்பின் ஊடாக பலதையும் சொல்லத்தான் செய்வார்கள் ........ஆனால் அவர்களைவிட தனக்குத் தனக்குத்தான் தன்னுடைய உடலின் ஒத்துக்கொள்ளக்கூடிய உணவுகள் ஒவ்வாமையான உணவுகள் சரியாகத் தெரியும் அவற்றைப் புரிந்து சாப்பிட்டு வந்தால் பலப்பல உபாதைகளைத் தவிர்க்க முடியும் . ......!

என்ன வயது ஏற ஏற சாப்பிடும் உணவுகளின் அளவை குறைத்துக் கொண்டு வருவது சுகமானது, முக்கியமாய் இரவு உணவை குறைவாகவும் செரிமானம் ஆகக்கூடிய உணவை உட்கொண்டால் காலையில் சுகமாய் எழுந்திருக்கலாம் இது எனது அனுபவ உண்மை . ......!

நீங்கள் ஒரு கிலோ பேரீச்சம் பழத்தை ஒரேயடியாய் உண்ணாமல் இரண்டு மூன்று தாராளமாய் சாப்பிடலாம் .......!

இயற்கை ஒவ்வொரு தேசத்திற்கும் அந்தந்த தட்ப வெப்ப நிலைக்கேற்ப பழங்கள் கறிவகைகள் , புல் பூண்டுகள் என்று படைத்திருக்கு .......அந்தந்த நாடுகளில் வாழும் மனிதர்கள் , விலங்குகள் எல்லாம் அவற்றை சாப்பிட்டு வாழ்ந்து வருகின்றனர் . ...... !

போர், பஞ்சம் போன்ற புற சூழல்களால் இன்று மனித இனம் உலகம் முழுதும் பரந்து பட்டு இரந்துண்டு வாழ்ந்து கொண்டு இருக்கு . ..... ஆனால் இயற்கை ஆடுமாடுகள் இங்கு வாழ எங்கும் புல்லும் தண்ணியும் கொட்டி வைத்திருக்கு ...... அங்கு ஒட்டகங்கள் வாழ எங்கெங்கோ தூரம் தூரமாய் நீரூற்றும் ஈச்சம் சோலையையும் தெளித்து விட்டிருக்கு ....... அவைகள் சரியாகத்தான் வாழ்ந்து வருகின்றன . ..... எமக்கு மனம் என்ற ஒன்றைப் படைத்து விட்டதால் நாம்தான் அங்குமின்றி இங்குமின்றி எதிலும் திருப்தியின்றி அலைகிறோம் . ......!

  • கருத்துக்கள உறவுகள்

சுகர் வருத்தம் இருந்தால் அல்லது அறிகுறி இருப்போர் தவிர்க்க வேண்டிய பழங்களில் முதன்மையானது பேரீச்சை பிளம்ஸ் போன்ற உலர்த்திய பழங்கள். சீனி உலரும் போது மேலும் அடர்தியாகும்.

அதேபோல் வாழை. கிலைசீமிக் இண்டெக்ஸ் மிக அதிகம். சாப்பிட்டவுடன் ரத்த குளுகோஸ் எகிறும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

அரபுக்காரர் எல்லாரும் ஐந்து பெண்டாட்டியை வைத்து சமாளிப்பதன் இரகசியம் பேரீச்சம்பழம் தான். ❤️

நான் ஏழு என்றுதான் அறிந்தேன். மிச்சம் இரண்டும் ஆருக்கு????🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Paanch said:

நான் ஏழு என்றுதான் அறிந்தேன். மிச்சம் இரண்டும் ஆருக்கு????🤣

பாவம்… அவங்களுக்கும் விடுமுறை வேண்டும் அல்லவா. 😂

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Paanch said:

நான் ஏழு என்றுதான் அறிந்தேன். மிச்சம் இரண்டும் ஆருக்கு????🤣

44 minutes ago, தமிழ் சிறி said:

பாவம்… அவங்களுக்கும் விடுமுறை வேண்டும் அல்லவா. 😂

நாலு அல்லவா?

நீங்கள் பிலிப்பைன்ஸ் தாதி, யேமனிய சலவைக்காரி, இத்தாலி செக்கரெட்டரி, எல்லாரையும் சேர்த்து கணக்கு போடுகிறீர்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

நாலு அல்லவா?

“போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து”.

உங்கள் மனம் பொன்போன்றது. வாழ்த்துக்கள்!!😁🙌

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, suvy said:

நீங்கள் ஒரு கிலோ பேரீச்சம் பழத்தை ஒரேயடியாய் உண்ணாமல் இரண்டு மூன்று தாராளமாய் சாப்பிடலாம் .......!

நீங்கள் கூறிய அனைத்தும் எனக்கு சரியாகவே தெரிகின்றது. ஏனெனில் நானும் நீங்கள் கூறும் நடைமுறையைத்தான் நானும் பின்பற்றுகின்றேன். என்னதொரு ஒற்றுமை பார்த்தீர்களா? 😂

எனக்கு இன்னும் சுகர் வருத்தம் வரவில்லை. ஆனால் மூன்று மாதத்திற்கொரு முறை வைத்திய அம்மா என்னை சுகர் போடர்ல நிக்குது என பயமுறுத்துவார். ஆனால் நான் பயப்பிடுவதில்லை.காரணம் உணவு விடயங்களில் நான் விட்டுப்பிடிப்பதுதான். இனிப்பு சாப்பாடுகள் சாப்பிடும் போது ஒரேயடியாக காய்ஞ்ச மாடு கம்பில் விழுந்த மாதிரி சாப்பிடுவதில்லை.உதாரணத்திற்கு சோறு போன்ற மாச்சாப்பாடுகள் சாப்பிட்டால் ஏனைய சீனி எந்த சாப்பாடுகளும் சாப்பிடுவதில்லை.தற்சமயம் அப்படி சாப்பிட்டாலும் நீண்ட நேர நடராசா நடைப்பயணம் நிச்சயம் உண்டு.

மேலே ஒரு பெரியவர் எழுதியது போல் ஆசைகள் வரும் போது இரண்டு பேரீச்சம் பழங்களுடன் வெறும் தேனீர் குடிப்பதுண்டு. அந்த நாளில் நான் வேறு எந்த மா உணவுகளையும்.இனிப்பு சாப்பாடுகளையும் அறவே சாப்பிடுவதில்லை.

அதை விட.... இரவு வேளைகளில் கவுனி அரிசியில் காய்ச்சிய கஞ்சி குடிப்பதுண்டு.

என்ன இருந்தாலும் சுகருக்கான மருந்து மாத்திரைகள் எடுக்கக்கூடாது என்ற பிடிவாதம் என்னிடம் உள்ளது.போராடி பார்க்கலாம் என்றுறிருக்கிறேன்.பிரசருக்கு மாத்திரைகள் எடுப்பவர்களுக்கு சுகர் வரும்/வரலாம் என்ற தத்துவங்களும் பரவலாக உலாவுகின்றது. பார்க்கலாம்.

உங்கள் எழுத்துக்களுக்கு மிக்க நன்றி.🙏


இதெல்லாம் என் சொந்த அனுபவம் மட்டுமே. ஆதாரங்கள் கேட்டு அலுப்பு குடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இரும்பு சத்துக்கு பேரீச்சை பழம் என்பது சுத்த டுபாகூர் உருட்டு நெட் ல் தேடியதில் கிடைத்த தரவுகள் சொல்கின்றன .

அதே போல் கடுமையான மத கட்டு பாடுகளை கொண்ட புகைத்தல் மது அருந்துதல் போன்ற தடை செய்ய பட்ட சில அரபு நாடுகளில் புற்று நோய் குறைவாக காணபடுகிறது பிறகென்ன இனம் பெருக்கம் தான் அவர்களின் ஒரே ஒரு பொழுது போக்கு ஆக இருக்கலாம் .

ஒரு பிடி முருங்கை கீரையில் உள்ள இரும்பு சத்து அதிகம் என்று நம்ம நாட்டு முருங்கை கீரையை கொரியன் வாங்கி கொண்டு செல்கிறான் நம்ம தமிழ் கடைகளில் .

12 hours ago, பெருமாள் said:

அதே போல் கடுமையான மத கட்டு பாடுகளை கொண்ட புகைத்தல் மது அருந்துதல் போன்ற தடை செய்ய பட்ட சில அரபு நாடுகளில் புற்று நோய் குறைவாக காணபடுகிறது பிறகென்ன இனம் பெருக்கம் தான் அவர்களின் ஒரே ஒரு பொழுது போக்கு ஆக இருக்கலாம் .

அரபு / இஸ்லாமிய நாடுகளில் புகைத்தல் மத ரீதியாக தடை செய்யப்பட்ட ஒரு பழக்கம் அல்ல. அதாவது புகைத்தல் ஹராம் அல்ல. அதனால் தான் அரபு நாட்டு முஸ்லீம்கள் தாராளமாக புகைப்பார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.