Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

03 Dec, 2025 | 01:20 PM

image

வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும், முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

அரசாங்கத்திற்கு எதிராக பேசக்கூடாது என்ற தோரணையில் எவரும் எங்களை விமர்சிக்ககூடாது. உண்மை வெளிவந்தால்தான் நிவாரணப்பணிகளும் சரியானமுறையில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஊடாக இந்த நிவாரணப்பொருட்கள் வழங்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன. 

இதன்முதல் கட்டமாக களுவாஞ்சிகுடி பகுதியில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட சுமார் 1000 பேருக்கான நிவாரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தலைமையில் களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் மே.வினோராஜின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தில் போரதீவுப்பற்ற பிரதேசசiபின் தவிசாளர் வி.மதிமேனன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிவாரண வேலைத்திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த சுமந்திரன்,

மலையகத்திற்கு விஜயம்செய்தபோது பல பரிதாபகரமான சம்பங்கள் தொடர்பில் அறிந்துகொண்டோம்.சில இடத்தில் முழு கிராமமுமே புதையுண்ட நிலை காணப்படுகின்றது.

அந்தநேரத்தில் வீடுகளில் இல்லாத சிலர் தப்பி பிழைத்துள்ளனர்.அங்கிருந்த ஒருவர் தனது முழுக்குடும்பமுமே புதையுண்டுள்ளதாகவும் மீட்பு நடவடிக்கைகளுக்கு யாரும் வரவில்லை, மூன்று நாட்களாக எப்படியாவது தமதுகுடும்பத்தினரின் உடல்களை மீட்கவேண்டும் என போராடிவருவதாக தெரிவித்தார். அங்கு சிலர் தமது பணத்தினைக்கொடுத்து டிசல்,இயந்திரங்களை எடுத்து தேடும் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் நிவாரண பணிகளில் அனைவரும் கட்சி பேதங்கள் கடந்து அனைவரும் ஒன்றிணையவேண்டும் என அரசாங்கமும் சொல்கின்றது நாங்களும் கூறுகின்றோம் அனைவரும் கூறுகின்றார்கள்.

ஆனால் இந்த விடயங்களில் ஏனைய கட்சிகளை புறந்தள்ளிவைப்பதில் அரசாங்கம் மும்முரமாக செயற்படுவது வெளிப்படையாக தெரிகின்றது.

நேற்றை தினம் கண்டி அரசாங்க அதிபரை சந்தித்தபோது கம்பளை பகுதியில் 19பேர்தான் உயிரிழந்துள்ளதாக சொல்கின்றார்.நாங்கள் சென்ற முதல் இடத்திலேயே 26 உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் 50க்கும் மேற்பட்டவர்கள் புதையுண்டுள்ளதாக கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு பல கிராமங்கள் பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது. அந்த பகுதிகளில் மக்கள் சென்று மீள வாழமுடியாத வகையில் அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளது.

நேற்று நாங்கள் சென்ற பதுளை மாவட்டம்,நுவரேலியா மாவட்டங்களில் பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதை காணமுடிகின்றது.அங்குள்ள மக்கள் எங்களைக்கண்டதும் கண்ணீருடன் தமது கஸ்டங்களை கூறினார்கள்.

அப்பகுதியில் உடனடி நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்படாதது மக்கள் மூலம் அறியமுடிந்தது.இதனை நாங்கள் கூறைகூறவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை.அரசாங்கத்தினை குறைகூறுவதற்காக இதனை சொல்லவில்லை.

மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் சென்றடையவேண்டும்,மக்களின் உயிரிழப்புகள் எத்தனையென்பது தெளிவாக தெரியவேண்டும்.உண்மையினை முழுப்புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கமுடியாது.

நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கின்றபோது முகத்தினை இறுக்கமாக வைத்துக்கொண்டு பத்து பதினைந்துபேர்தான் உயிரிழந்துள்ளார்கள் என அரசாங்கம் பதில் சொன்னால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்தவேளையில் அரசாங்கத்திற்கு எதிராக பேசக்கூடாது என்ற தோரணையில் எவரும் எங்களை விமர்சிக்ககூடாது.

உண்மை வெளிவந்தால்தான் நிவாரணப்பணிகளும் சரியானமுறையில் நடைபெறும். விசேடமாக ஊடகங்களை இதனை விமர்சிப்பதை பார்க்கமிகவும் அருவறுப்பாக இருக்கின்றது.

செய்தியை பிரசுரிப்பதுதான் அவர்களின் வேலையாக இருக்கவேண்டுமே தவிர செய்திகளின் பின்பக்கமான கிரிக்கட் வர்ணணை போன்று தமது விமர்சனங்களை முன்வைப்பது அருவறுக்கத்தக்க செயலாகும்.

இந்த பேரிடர் எவ்வளவு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரியாமல் அவர்கள் அரசியல் செய்துகொண்டிருப்பதை காணமுடிகின்றது. இந்தநேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்துதான் மக்களை காப்பாற்றவேண்டும்.இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு நாங்கள் தயாராகயிருக்கின்றோம் என்று கூறுகின்றோம்.

சுனாமி அனர்த்தம் வந்தவேளையில் அன்றைய அரசாங்கமே வடகிழக்கில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து கட்டமைப்பினை ஏற்படுத்தியது. அந்த பிரதேசங்களிலே ஆளுகை செய்தவர்கள் அவர்கள்.

அந்தவேளையில் அதனை தடுப்பதற்கு நீதிமன்றபடியேறிய ஜேவிபியினருடன் இணைந்து வேலைசெய்வதற்கு நாங்கள் தாயராகயிருக்கின்றோம் என்றால் வேறு யாருடன் நாங்கள் சேர்ந்து செயற்படமாட்டோம். அனைவருடமும் இணைந்து நாங்கள் செயற்படுவோம் என்றார். 

IMG_2004.JPG

IMG_2019__1_.JPG

IMG_1996.JPG

IMG_2025.JPG

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா! நீங்கள் சொல்வதில் தப்பில்லை, ஆனால் இதை சொல்வதற்கு நீங்கள் கையாளும் சந்தர்ப்பமே எங்களை சிந்திக்க வைக்கிறது.

7 hours ago, பிழம்பு said:

அரசாங்கத்திற்கு எதிராக பேசக்கூடாது என்ற தோரணையில் எவரும் எங்களை விமர்சிக்ககூடாது. உண்மை வெளிவந்தால்தான் நிவாரணப்பணிகளும் சரியானமுறையில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

7 hours ago, பிழம்பு said:

இதனை நாங்கள் கூறைகூறவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை.அரசாங்கத்தினை குறைகூறுவதற்காக இதனை சொல்லவில்லை.

தமிழ் மக்களுக்கெதிராக, தொடர்ந்து அழிவுகள் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டபொழுது அதை திசைமாற்றி அழிவுகளை குறைத்து மறைத்து மனிதநேய அமைப்புகளை வெளியேற்றி கோரத்தாண்டவம் ஆடும்போது நீங்கள் ஏன் மௌனமாக இருந்தீர்கள்? ஏன் விமர்ச்சிக்கவில்லை, கேள்வி கேட்கவில்லை? அந்த ஏதிலி மக்களிடமே வாக்கு வாங்கி, அந்த மக்களின் பிரதிநிதி என்று சொல்லி பதவிகளை அனுபவித்துக்கொண்டு மக்களை ஏமாற்றி அந்த மக்களுக்கெதிராக செயற்பட்டது ஏன்? நீங்கள் நிஞாயம் கேட்டால்; எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் எல்லா சந்தர்ப்பத்திலும் எல்லா அரசாங்கத்திலும் ஒரே மாதிரியாக கேள்வி எழுப்பியிருந்தால் நீங்கள் சொல்வதை நம்பியிருப்போம், அது நிஞாயமானது. ஆனால் நீங்கள் அப்படியல்லவே, இந்த அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டுமென்றே கேள்வி கேட்க்கிறீர்கள், குறை கூறுகிறீர்கள், விமர்சிக்கிறீர்கள். சுனாமி நிவாரணத்தை கொள்ளையடித்தனர். மஹிந்த, தான் அரசியலை கைப்பற்றியவுடன் அதற்குள் மறைந்துவிட்டது. மக்களுக்கு உதவி செய்ய வேண்டியது அரசாங்கத்தினதும் அந்த மக்களின் பிரதிநிதிகளினதும் முக்கிய கடமை. அரசாங்கத்தை விட பிரதிநிதிகளின் பணி முக்கியமானது. அதை ஏன் அவர்கள் செய்யவில்லை? முந்திக்கொண்டு அனுராவையோ அரசாங்கத்தையோ குறை கூறினால்; தங்களை மறைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறார்கள். இந்த நேரத்திலும் குறை கூறுவதும் விமர்சிப்பதும் இவர்களது அரசியல். உதவி செய்யும் இவர்களின் கரங்களை அனுரா கட்டிப்போட்டுவிட்டாராம். அனுரா எதுவுமே செய்ய வில்லையா? அப்படியென்றால் ஒரு விமானி, கடற்படை வீரர்கள் இறந்தது, வெள்ளத்திலடித்துச்செல்லப்பட்டது எப்படி? ஒரு இடத்திலா அழிவு ஏற்பட்டது? நாடு முழுவதும் வெள்ளத்திலும் அழிவுகளிலும் தத்தளிக்கிறது. வடக்கில் இவ்வளவுபேரை கொலை செய்ய வேண்டுமென்று திட்டமிட்டு மக்கள் தொகையை குறைத்து கூறி ஏற்படுத்தப்பட்ட அழிவை, அத்தனை துல்லியமான கணக்கை மறைத்து அழித்த அழிவுகளை மறைத்து சொன்னபோது யாரும் கேள்வி கேட்கவில்லை, விமர்ச்சிக்கவில்லை, அப்போது நிவாரணம் சரியாக சென்றதா? உணவோடு, மருந்தோடு வந்த கப்பலை திருப்பியனுப்பியபோது வராத மனிதநேயம் இப்போது எப்படி வந்தது? எத்தனை பொதுமக்கள், நிறுவனங்கள், விளம்பரம் தேடாமல், விமர்ச்சிக்காமல், குற்றம் கூறாமல், தமது பொறுப்புணர்ந்து செயற்படுகிறார்கள். இவர் படப்பிடிப்பு வைத்து பதவிக்காக, சுற்றி விமர்ச்சிக்கிறார். அதுசரி, இதுவெல்லாம் இவரது சொந்தப்பணத்திலா செய்கிறார்கள்? எதிலும் பதவி, பெயர் வேண்டும். அதற்காகவே கேள்வி கேட்பார், விமர்சிப்பார். அதை அனுரா இவருக்கு வழங்கியிருந்திருந்தால்; இவ்வளவு கேள்வி, விமர்சிப்பு, குறை இருந்திருக்காது. அதனாற்தான் எல்லா ஜனாதிபதிகளும் இவருக்கு பதவி கொடுத்து மக்களின் உரிமைகளுக்கு விலை கொடுத்து இவரை வாங்கி பக்கத்தில் வைத்திருந்திருப்பார்கள் போலுள்ளது. மக்களின் அழிவுகளிக்கிடையில் அரசியல் லாபம் தேடும் சாக்கடைகள்.

இனிமேலாவது நேரம், இடம், காலம், ஆட்கள் பாராது சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கட்டும். இவர் விமர்சிக்கப்போய் தனது சுயரூபத்தை சொல்லிக்காட்டிவிட்டார். இதற்கு பேசாமல் வீட்டிலேயே இருந்திருக்கலாம். உளறுவாயன் தன் வாயால் கெட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

நாக பாம்பை கூட நம்பலாம் இந்த சுமத்திரன் சாணக்கியனை நம்பினால் அங்கிருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழருக்கும் விஷம் வைத்து விடுவார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிழம்பு said:

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

ராஜ பக்சா கூட்டத்தை சர்வதேச விசாரணைகளில் இருந்து தப்ப வைக்க அண்டம் காக்கை பனம் கள்ளு அருந்தி விட்டு கரைவது போல் தமிழர் இனவழிப்பு நடைபெற வில்லை அப்படி நடந்து இருந்தாலும் நிரூபிக்க ஆதரம்கள் இல்லை என்று உள்ள வெளிநாடுகளுக்கு தனியே பறந்து பறந்து பரப்புரை தமிழருக்கு எதிராக பிரசாரம் செய்தவர் இப்ப என்ன சொல்லுகிறார் என்று கேட்டு சொல்லுங்க அவரின் வால்பிடிகளே.................

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுக்கு வாக்குப்போட்ட மக்களுக்கு, தமது கடமையை செய்வதற்கு அனுராவை விமர்சிக்க வேண்டும். அனுராவுக்கு வாக்குப்போட்ட மக்களையும் குறை கூறுவது. இதற்கு மக்கள் அனுரா கட்சிக்கே வாக்களிக்கலாம். இந்த மனிதர் பிழைப்பு நடத்துவதும் கெடுவதும் அவர் வாயாலேயேதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில பெரும்பகிடி என்னவென்றால்; கிழக்கின் முதலமைச்சர் கனவில் மிதக்கிறவர் சொல்லுறார், இந்த அரசு மக்களை படுகொலை செய்துவிட்டதாம். சிரிப்பு சிரிப்பாய் வருகிறது. இயற்கை அழிவினால் பாதிக்கப்பட்ட மக்களை, உயிரிழந்த மக்களை நினைத்து அழுவதா? அல்லது அவர்களின் இழப்பிலும் அரசியல் செய்யும் இந்த வியாதிகளை நினைத்து சிரிப்பதா? தமிழ் மக்களை அள்ளை கொள்ளையாக கொலை செய்த கட்சிகளோடு சேர்ந்து இருந்துகொண்டு, அவற்றை கண்டிக்காமல் ரசித்துக்கொண்டிருந்தவர், இப்போது இயற்கையழிவுக்கு அரசை கண்டிக்கிறார் என்றால் பாருங்கோவன் அரசியல் பதவி ஆசையை. மக்களை முட்டாளாக்கும் செயல். ஆமா.... இது விமர்ச்சிக்கும் நேரமா? விமர்சிப்பதால் இழப்புகள் குறைந்து விடுமா அல்லது மக்கள் அதிலிருந்து மீண்டுதான் விடுவார்களா? எப்போது எதை, எங்கே, எப்படி பேசவேண்டும் என்கிற இங்கிதம் தெரியாதவர்கள், சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டு இவர்களது தனிப்பட்ட வக்கிரத்தை கொட்டுகிறார்கள். இதன் பலன் வெகுவிரைவில் அனுபவிப்பார்கள். எப்போதும் போலவா ஒவ்வொருதடவையும் பருவகால மழை பெய்கிறது? இவர்கள் தங்கள் மாவட்டங்களில் என்ன தயார் படுத்தல்களை செய்து மக்களை அறிவுறுத்தினார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ பூசணிக்காயை பாதியா வெட்டி மறைக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
On 3/12/2025 at 17:50, satan said:

ஐயா! நீங்கள் சொல்வதில் தப்பில்லை, ஆனால் இதை சொல்வதற்கு நீங்கள் கையாளும் சந்தர்ப்பமே எங்களை சிந்திக்க வைக்கிறது.

தமிழ் மக்களுக்கெதிராக, தொடர்ந்து அழிவுகள் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டபொழுது அதை திசைமாற்றி அழிவுகளை குறைத்து மறைத்து மனிதநேய அமைப்புகளை வெளியேற்றி கோரத்தாண்டவம் ஆடும்போது நீங்கள் ஏன் மௌனமாக இருந்தீர்கள்? ஏன் விமர்ச்சிக்கவில்லை, கேள்வி கேட்கவில்லை? அந்த ஏதிலி மக்களிடமே வாக்கு வாங்கி, அந்த மக்களின் பிரதிநிதி என்று சொல்லி பதவிகளை அனுபவித்துக்கொண்டு மக்களை ஏமாற்றி அந்த மக்களுக்கெதிராக செயற்பட்டது ஏன்? நீங்கள் நிஞாயம் கேட்டால்; எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் எல்லா சந்தர்ப்பத்திலும் எல்லா அரசாங்கத்திலும் ஒரே மாதிரியாக கேள்வி எழுப்பியிருந்தால் நீங்கள் சொல்வதை நம்பியிருப்போம், அது நிஞாயமானது. ஆனால் நீங்கள் அப்படியல்லவே, இந்த அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டுமென்றே கேள்வி கேட்க்கிறீர்கள், குறை கூறுகிறீர்கள், விமர்சிக்கிறீர்கள். சுனாமி நிவாரணத்தை கொள்ளையடித்தனர். மஹிந்த, தான் அரசியலை கைப்பற்றியவுடன் அதற்குள் மறைந்துவிட்டது. மக்களுக்கு உதவி செய்ய வேண்டியது அரசாங்கத்தினதும் அந்த மக்களின் பிரதிநிதிகளினதும் முக்கிய கடமை. அரசாங்கத்தை விட பிரதிநிதிகளின் பணி முக்கியமானது. அதை ஏன் அவர்கள் செய்யவில்லை? முந்திக்கொண்டு அனுராவையோ அரசாங்கத்தையோ குறை கூறினால்; தங்களை மறைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறார்கள். இந்த நேரத்திலும் குறை கூறுவதும் விமர்சிப்பதும் இவர்களது அரசியல். உதவி செய்யும் இவர்களின் கரங்களை அனுரா கட்டிப்போட்டுவிட்டாராம். அனுரா எதுவுமே செய்ய வில்லையா? அப்படியென்றால் ஒரு விமானி, கடற்படை வீரர்கள் இறந்தது, வெள்ளத்திலடித்துச்செல்லப்பட்டது எப்படி? ஒரு இடத்திலா அழிவு ஏற்பட்டது? நாடு முழுவதும் வெள்ளத்திலும் அழிவுகளிலும் தத்தளிக்கிறது. வடக்கில் இவ்வளவுபேரை கொலை செய்ய வேண்டுமென்று திட்டமிட்டு மக்கள் தொகையை குறைத்து கூறி ஏற்படுத்தப்பட்ட அழிவை, அத்தனை துல்லியமான கணக்கை மறைத்து அழித்த அழிவுகளை மறைத்து சொன்னபோது யாரும் கேள்வி கேட்கவில்லை, விமர்ச்சிக்கவில்லை, அப்போது நிவாரணம் சரியாக சென்றதா? உணவோடு, மருந்தோடு வந்த கப்பலை திருப்பியனுப்பியபோது வராத மனிதநேயம் இப்போது எப்படி வந்தது? எத்தனை பொதுமக்கள், நிறுவனங்கள், விளம்பரம் தேடாமல், விமர்ச்சிக்காமல், குற்றம் கூறாமல், தமது பொறுப்புணர்ந்து செயற்படுகிறார்கள். இவர் படப்பிடிப்பு வைத்து பதவிக்காக, சுற்றி விமர்ச்சிக்கிறார். அதுசரி, இதுவெல்லாம் இவரது சொந்தப்பணத்திலா செய்கிறார்கள்? எதிலும் பதவி, பெயர் வேண்டும். அதற்காகவே கேள்வி கேட்பார், விமர்சிப்பார். அதை அனுரா இவருக்கு வழங்கியிருந்திருந்தால்; இவ்வளவு கேள்வி, விமர்சிப்பு, குறை இருந்திருக்காது. அதனாற்தான் எல்லா ஜனாதிபதிகளும் இவருக்கு பதவி கொடுத்து மக்களின் உரிமைகளுக்கு விலை கொடுத்து இவரை வாங்கி பக்கத்தில் வைத்திருந்திருப்பார்கள் போலுள்ளது. மக்களின் அழிவுகளிக்கிடையில் அரசியல் லாபம் தேடும் சாக்கடைகள்.

இனிமேலாவது நேரம், இடம், காலம், ஆட்கள் பாராது சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கட்டும். இவர் விமர்சிக்கப்போய் தனது சுயரூபத்தை சொல்லிக்காட்டிவிட்டார். இதற்கு பேசாமல் வீட்டிலேயே இருந்திருக்கலாம். உளறுவாயன் தன் வாயால் கெட்டார்.

@satan இந்த இடத்திலாவது நின்று பதில் சொல்லுங்கள், பெட்டிக் கடையை மூடிவிட்டு ஓடாமல்😂: சுமந்திரன், சாணக்கியன் தமிழ் மக்களின் அழிவுகளை மௌனமாக இருந்து மூடி மறைத்த ஆதாரங்கள் எவை? அதே போல, தமிழ் மக்களின் அழிவுகளை இன்று சுமந்திரனுக்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் அதே கட்சியைச் சேர்ந்த பா.உக்கள் எத்தனை பேர் வெளிக் கொணரப் பாடுபடுகின்றனர்?

அனேகமாக, நீங்கள் சைலன்ற் எஸ்கேப் தான், ஆனாலும் அப்படியான எஸ்கேப் போலி தான் நீங்கள் என வாசகர்கள் அறிய வேண்டுமென்பதால் கேட்டு வைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

சுமந்திரன், சாணக்கியன் தமிழ் மக்களின் அழிவுகளை மௌனமாக இருந்து மூடி மறைத்த ஆதாரங்கள் எவை? அதே போல, தமிழ் மக்களின் அழிவுகளை இன்று சுமந்திரனுக்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் அதே கட்சியைச் சேர்ந்த பா.உக்கள் எத்தனை பேர் வெளிக் கொணரப் பாடுபடுகின்றனர்?

ஒரு சிலர் பதில் சொல்லாமல் கேள்வி கேட்பதிலேயே குறியாக இருப்பார்கள் .

சுமந்திரன் அவர்கள் ஆடிய ஆட்டத்தினால் தான் கடந்த தேர்தலில் மக்களால் தமிழர்களின் அரசியல் மேடையில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர்.

இப்படி நடக்கும் வாய்ப்பு இருக்கும் என்று ஏற்கனவே அவதானமாக இருந்த சுமந்திரன் தமிழரசு கட்சியை தன வசப்படுத்தி இப்போதும் பின் கதவால் நுழைய நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்

எத்தனை தரம் தேர்தலில் போட்டியிட்டாலும் சுமந்திரனுக்கு இனிமேல் தேசியப்பட்டியலைத் தவிர வேறு வழியில்லை

அதனால் தான் இப்போது கிழக்கில் சாணுக்கு முழம் போடுகின்றார்

சரி அய்யா ஜஸ்டின் அவர்களே சுமந்திரனால் தமிழர்களுக்கு நிகழ்ந்த அதிசயங்களை நீங்களே ஒரு பட்டியலில் தாருங்களேன்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

@satan இந்த இடத்திலாவது நின்று பதில் சொல்லுங்கள், பெட்டிக் கடையை மூடிவிட்டு ஓடாமல்

அது சரி, அது என்ன பெட்டிக்கடை சமாச்சாரம்? எதற்கெடுத்தாலும் பெட்டிக்கடையை மறக்க முடியாமலுள்ளது உங்களுக்கு. என்னை நோக்கி வரும் கேள்விகளுக்கு நான் பதிலளித்துக்கொண்டுதான் இருக்கிறேன், ஒருவேளை நீங்கள் கடந்து சென்றீர்களோ தெரியவில்லை. நிதானமாக மீண்டும் சென்று பாருங்கள். ஒரு தலைப்பில் கேள்வி கேட்பீர்கள், பின்னர் வேறு தலைப்புகளுக்கு மாறி குடைவீர்கள், அதற்காக நான் ஒன்றும் செய்ய முடியாது. என்னுடைய பதிவுகள் எப்படியானவை என்பது வாசகர்களுக்குத்தெரியும், நீங்கள் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. சாணக்கியன் சிங்களகட்சியில் இருக்கும்போதுதான் தமிழ் மக்கள் வகைதொகையின்றி கொல்லப்பட்டார்கள், சுமந்திரன் தமிழ் மக்களின் பிரதிநிதியென்று பாராளுமன்றத்தில் இருக்கும்போதுதான் தாங்கள் கொன்றுகுவித்த மக்களின் தொகையை குறைத்து மஹிந்த அரசு கூறியது, அப்போ இந்த சுமந்திரனும் சாணக்கியனும் கேள்வி கேட்டார்களா? விமர்ச்சித்தார்களா? இயற்கையழிவு, யாரும் வெளியே வரமுடியாதநிலை, அழிவு ஒரு மாகாணத்தில் மட்டுமா நடந்தது? ஆளணி பத்தாது எல்லாவறையும் உடனடியாக கணக்கிடுவதற்கு, தமக்கு கிடைக்கும் தகவல்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள், உதவி வேண்டி கோரிக்கை வைக்கப்படுகிறது, மீட்ப்புப்பணி தங்களிடமுள்ள வளங்களை வைத்து தொடர்கிறது, விமர்ச்சிக்கும் நேரமா இது? ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதி விமர்ச்சித்துக்கொண்டிருப்பாரா? அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு கொடுப்பாரா? அவர் தமிழ் மக்களுக்கு நன்மை செய்திருந்தால் ஏன் மக்கள் அவரை நிராகரித்தனர்? கௌரவமாக வெளியேறாமல் ஏன் குறுக்கு வழி தேடுகிறார்? இவர் என்னதான் விமர்ச்சித்தாலும் இவரை யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை, இவர் ஒரு வாய்ச்சவடால்.

2 hours ago, வாத்தியார் said:

சரி அய்யா ஜஸ்டின் அவர்களே சுமந்திரனால் தமிழர்களுக்கு நிகழ்ந்த அதிசயங்களை நீங்களே ஒரு பட்டியலில் தாருங்களேன்

அப்படியேதுமிருந்திருந்தால் என்னை வம்புக்கிழுக்குமுன் அந்த பட்டியலை இணைத்திருப்பார். பாவம் அவர், சுமந்திரனின் மேலுள்ள அனுதாபம் அப்படி அழுக்காறை கொட்டித்தீர்க்கிறார், அவரது குறைகளை சுட்டிக்காடுபவர் மேல்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இரண்டு வரியிலேயே முடித்திருக்க வேண்டிய கறுத்தது வீணாக இரண்டு பந்திகள்

உதவி செய்ய போனவன் பொருட்களுடன் போகிறான்

படம் பிடிக்க போனவன் காமெராவுடன் போகிறான்

  • கருத்துக்கள உறவுகள்
On 5/12/2025 at 16:53, வாத்தியார் said:

ஒரு சிலர் பதில் சொல்லாமல் கேள்வி கேட்பதிலேயே குறியாக இருப்பார்கள் .

சுமந்திரன் அவர்கள் ஆடிய ஆட்டத்தினால் தான் கடந்த தேர்தலில் மக்களால் தமிழர்களின் அரசியல் மேடையில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர்.

இப்படி நடக்கும் வாய்ப்பு இருக்கும் என்று ஏற்கனவே அவதானமாக இருந்த சுமந்திரன் தமிழரசு கட்சியை தன வசப்படுத்தி இப்போதும் பின் கதவால் நுழைய நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்

எத்தனை தரம் தேர்தலில் போட்டியிட்டாலும் சுமந்திரனுக்கு இனிமேல் தேசியப்பட்டியலைத் தவிர வேறு வழியில்லை

அதனால் தான் இப்போது கிழக்கில் சாணுக்கு முழம் போடுகின்றார்

சரி அய்யா ஜஸ்டின் அவர்களே சுமந்திரனால் தமிழர்களுக்கு நிகழ்ந்த அதிசயங்களை நீங்களே ஒரு பட்டியலில் தாருங்களேன்

பதிலுக்கு நன்றி வாத்தியார். சுமந்திரன் மக்களால் நிராகரிக்கப் பட்டவர், சுமந்திரனால் தமிழ் மக்களுக்கு அதிசயம் எதுவும் நிகழவில்லை. இவையிரண்டும் உண்மைகள்.

கேள்வி அதுவல்ல! சுமந்திரன் தமிழ் மக்களின் துன்பங்களைப் பற்றிப் பேசவில்லை என்பது எவ்வளவு தூரம் உண்மை? எவ்வளவு ஆதாரங்கள் இருக்கின்றன இந்தக் கூற்றுக்கு? இது தான் கேள்வி.

On 5/12/2025 at 19:44, satan said:

அது சரி, அது என்ன பெட்டிக்கடை சமாச்சாரம்? எதற்கெடுத்தாலும் பெட்டிக்கடையை மறக்க முடியாமலுள்ளது உங்களுக்கு. என்னை நோக்கி வரும் கேள்விகளுக்கு நான் பதிலளித்துக்கொண்டுதான் இருக்கிறேன், ஒருவேளை நீங்கள் கடந்து சென்றீர்களோ தெரியவில்லை. நிதானமாக மீண்டும் சென்று பாருங்கள். ஒரு தலைப்பில் கேள்வி கேட்பீர்கள், பின்னர் வேறு தலைப்புகளுக்கு மாறி குடைவீர்கள், அதற்காக நான் ஒன்றும் செய்ய முடியாது. என்னுடைய பதிவுகள் எப்படியானவை என்பது வாசகர்களுக்குத்தெரியும், நீங்கள் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. சாணக்கியன் சிங்களகட்சியில் இருக்கும்போதுதான் தமிழ் மக்கள் வகைதொகையின்றி கொல்லப்பட்டார்கள், சுமந்திரன் தமிழ் மக்களின் பிரதிநிதியென்று பாராளுமன்றத்தில் இருக்கும்போதுதான் தாங்கள் கொன்றுகுவித்த மக்களின் தொகையை குறைத்து மஹிந்த அரசு கூறியது, அப்போ இந்த சுமந்திரனும் சாணக்கியனும் கேள்வி கேட்டார்களா? விமர்ச்சித்தார்களா? இயற்கையழிவு, யாரும் வெளியே வரமுடியாதநிலை, அழிவு ஒரு மாகாணத்தில் மட்டுமா நடந்தது? ஆளணி பத்தாது எல்லாவறையும் உடனடியாக கணக்கிடுவதற்கு, தமக்கு கிடைக்கும் தகவல்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள், உதவி வேண்டி கோரிக்கை வைக்கப்படுகிறது, மீட்ப்புப்பணி தங்களிடமுள்ள வளங்களை வைத்து தொடர்கிறது, விமர்ச்சிக்கும் நேரமா இது? ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதி விமர்ச்சித்துக்கொண்டிருப்பாரா? அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு கொடுப்பாரா? அவர் தமிழ் மக்களுக்கு நன்மை செய்திருந்தால் ஏன் மக்கள் அவரை நிராகரித்தனர்? கௌரவமாக வெளியேறாமல் ஏன் குறுக்கு வழி தேடுகிறார்? இவர் என்னதான் விமர்ச்சித்தாலும் இவரை யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை, இவர் ஒரு வாய்ச்சவடால்.

அப்படியேதுமிருந்திருந்தால் என்னை வம்புக்கிழுக்குமுன் அந்த பட்டியலை இணைத்திருப்பார். பாவம் அவர், சுமந்திரனின் மேலுள்ள அனுதாபம் அப்படி அழுக்காறை கொட்டித்தீர்க்கிறார், அவரது குறைகளை சுட்டிக்காடுபவர் மேல்.

"சுமந்திரனும் வேறு சில கூட்டமைப்பு அரசியல்வாதிகளும் யாழ் நூலகத்தில் இருந்து தப்பியோடினர்" என்று எழுதிய உங்கள் கருத்திற்கு படங்களை இணைத்து ஆதாரம் தந்திருந்தேன். அங்கேயும் சரி, வேறு இரு இடங்களிலும் சரி பேசாமல் போய் விட்டு, பின்னர் சுமந்திரனின் படத்தை இங்கே கண்டால் மீண்டும் வருவீர்கள். இது தான் உங்கள் கருத்துப் போக்கு. இந்த ஆண்டில் ஒரு கூடுதல் போக்கு, அப்படி வரும் போது அனுர காவடியோடு வருவீர்கள்😂!

இத்தகைய, தரவுகளைத் தரும் போது "மெள்ள மாறி" விடுதல் தான் பெட்டிக் கடையைப் பூட்டுதல் எனப்படுகிறது. இப்போது கூட, ஆதாரங்களும் இல்லை, தரவுகளும் இல்லை, வெறும் அலட்டல் பாரதம் மட்டும் தான் கொண்டு வந்திருக்கிறீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன் கடைசி சண்டையின் பின் தமிழர்களுக்காக அல்லும் பகலும் பாடு பட்டவர் சிங்களவர்களுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியவர் என்று அவரின் அடிவருடிகளுக்கு சொன்னால் தான் நிம்மதியாய் இருக்கும்கள் .

இங்கு வடகிழக்கு தமிழர்களுக்கு தீர்வு முக்கியமல்ல சுமத்திரன் தலைவராகனும் அதுதான் சுமத்திர விசுவாசிகளுக்கு முக்கியம் .

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

"சிம்ம சொப்பனமாக" பிரபாகரனைத் தவிர யாரும் இருக்கவில்லை. குறைந்த பட்சம் தகவல் கேட்டு வருவோரிடம் பேசுவதற்காகவாவது ஒருவர் தேவையல்லவா? இப்போது யார் இருக்கிறார்கள்? யாரையாவது சுமந்திரன் போல சென்று சந்திக்க, பேச முனையும் பா.உ தற்போது யார் இருக்கிறார்கள்?

உங்களைப் போல "துடிப்பான" யாராவது இனி முன்வந்தால் தான் தமிழர்களுக்கு மீட்சி🤐!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

சுமந்திரன் தமிழ் மக்களின் துன்பங்களைப் பற்றிப் பேசவில்லை என்பது எவ்வளவு தூரம் உண்மை? எவ்வளவு ஆதாரங்கள் இருக்கின்றன இந்தக் கூற்றுக்கு? இது தான் கேள்வி.

இல்லை என்று கூறுபவர்களிடம் எப்படி ஆதாரத்தை எதிர்பார்க்கலாம்

இருக்கு என்பவர்கள் தானே இல்லை என்பதற்கு எதிராக தங்களது ஆதாரங்களை வெளியிட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாத்தியார் said:

இல்லை என்று கூறுபவர்களிடம் எப்படி ஆதாரத்தை எதிர்பார்க்கலாம்

இருக்கு என்பவர்கள் தானே இல்லை என்பதற்கு எதிராக தங்களது ஆதாரங்களை வெளியிட வேண்டும்.

பாராளுமன்றத்தில் பல தடவைகள் ஆதாரங்களுடன் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து சுமந்திரன் ஆற்றிய பல உரைகள் உள்ளனவே. ஹன்சார்ட் இலும் அவை பதியப்பட்டுள்ளனவே! அதை விட அவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்பே நீதிமன்றங்களில் வாதாடிய செய்திகள் வந்தனவே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

சுமந்திரன் தமிழ் மக்களுக்காக பேசியது நான் யாழ்களத்திலேயே படித்து இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தந்தை செல்வா தொடக்கம் இன்றைய அர்ச்சுனா வரைக்கும் எல்லா தமிழ் அரசியல் தலைவர்களும் தமிழ் மக்களுக்காகத்தான் போராடியிருக்கின்றார்கள்.போராடுகின்றார்கள்.

இதில் அமரர் அமிர்தலிங்கம்,அமரர் சம்பந்தன்,காசி ஆனந்தன், அமரர் ஆனந்த சங்கரி,டக்ளஸ் தேவானந்தா,ஸ்ரீதரன் என பலர் இருக்கின்றார்கள்.இன்னும் பலர் இருக்கின்றார்கள்.

இப்ப ...... என்னெண்டால் இந்த ஜாம்பவான்களது தமிழ் அரசியல் போராட்டம் தமிழ் மக்களை இன்று எங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றது என்பதுதான் கேள்வி?

சுமந்திரன் நல்லவர் வல்லவர் கெட்டிக்காரர் எண்டால் தமிழ்மக்கள் ஏன் இவரை தேர்வு செய்யவில்லை?

இன்றைய தமிழ் அரசியல்வாதிகள் ஒழுங்கானவர்களாக இருந்திருந்தால் அனுர எப்படி தமிழர்பகுதிகளில் வெற்றி ஈட்டுவார்?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

அநீதிகள் குறித்து சுமந்திரன் ஆற்றிய பல உரைகள் உள்ளனவே. ஹன்சார்ட் இலும் அவை பதியப்பட்டுள்ளனவே!

இலங்கையில் ஒற்றை ஆட்சி முறை சிறப்பாகச் செயல்படுகின்றது

போர்க் குற்றத்திற்கான விசாரணை உள்நாட்டுப் பொறிமுறையில் இடம்பெறவேண்டும் .

போர்க் குற்றம் தொடர்பாக சிங்கள ராணுவம் மட்டுமல்ல விடுதலைப் புலிகளும் விசாரிக்கப்பட வேண்டும்

இலங்கைத் தமிழ் மக்களுக்கான தீர்வு புதிய அரசியலமைப்பின் பிரகாரம் ஏக்க ராஜ்ஜியத்தில் ஆராயப்படும் .

இப்படியான செய்திகளைத் தான் அதிகமாக வாசிக்கக் கூடியதாக இருக்கின்றது .

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, வாத்தியார் said:

இல்லை என்று கூறுபவர்களிடம் எப்படி ஆதாரத்தை எதிர்பார்க்கலாம்

இருக்கு என்பவர்கள் தானே இல்லை என்பதற்கு எதிராக தங்களது ஆதாரங்களை வெளியிட வேண்டும்.

சாத்தான், பெருமாள் போன்ற உறவுகளைப் பொறுத்த வரை, ஆதாரம் தேடிக் கொடுக்க நான் நேரம் செலவழித்துப் பயனில்லை. மேலே ஏனையோர் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள், யாழிலேயே பகிரப் பட்ட செய்திகள் இருக்கின்றன. 2010 இல் இருந்து ஹன்சாட்டில் பதிவாக இருக்கும் உரைகள் இருக்கின்றன. அவர்களே தங்களுக்குத் தேவையானதைத் தேடிக் கொள்ளட்டும்.

1 hour ago, வாத்தியார் said:

இலங்கையில் ஒற்றை ஆட்சி முறை சிறப்பாகச் செயல்படுகின்றது

போர்க் குற்றத்திற்கான விசாரணை உள்நாட்டுப் பொறிமுறையில் இடம்பெறவேண்டும் .

போர்க் குற்றம் தொடர்பாக சிங்கள ராணுவம் மட்டுமல்ல விடுதலைப் புலிகளும் விசாரிக்கப்பட வேண்டும்

இலங்கைத் தமிழ் மக்களுக்கான தீர்வு புதிய அரசியலமைப்பின் பிரகாரம் ஏக்க ராஜ்ஜியத்தில் ஆராயப்படும் .

இப்படியான செய்திகளைத் தான் அதிகமாக வாசிக்கக் கூடியதாக இருக்கின்றது .

ஒரு வர்ணக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு பார்த்தால்

"புலிகள் பயங்கரவாதிகள்"

முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புப் செய்யப் பட்டார்கள்"

"இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை"

என இன்னும் பல வாக்கியங்களும் தட்டுப் படும். ஆனால், கொஞ்சம் பின்னுக்குத் தள்ளி நின்று முழு உரையையும், முழுப் பேட்டியையும் பார்க்கும் எவருக்கும் பின்னணியை உருவி விட்டு முகனூல் போராளிகள் தூக்கித் திரியும் துரும்புகள் இவை என்பது புரியும்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சுமந்திரன் நல்லவர் வல்லவர் கெட்டிக்காரர் எண்டால் தமிழ்மக்கள் ஏன் இவரை தேர்வு செய்யவில்லை?

இது தேர்தலில் தோற்று (சில சமயங்களில் தோற்றபின்னர் "பின் கதவால்" - அ+து தேசியப் பட்டியலில் உள்ளே வந்த) யோசப் பரராஜசிங்கம், கஜேந்திரன், சசிகலா ரவிராஜ், மாம்பழம் கட்சியின் தலைவர்போன்றோருக்கும் பொருந்தும் என்கிறீர்கள்😂?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாத்தியார் said:

இலங்கையில் ஒற்றை ஆட்சி முறை சிறப்பாகச் செயல்படுகின்றது

போர்க் குற்றத்திற்கான விசாரணை உள்நாட்டுப் பொறிமுறையில் இடம்பெறவேண்டும் .

போர்க் குற்றம் தொடர்பாக சிங்கள ராணுவம் மட்டுமல்ல விடுதலைப் புலிகளும் விசாரிக்கப்பட வேண்டும்

இலங்கைத் தமிழ் மக்களுக்கான தீர்வு புதிய அரசியலமைப்பின் பிரகாரம் ஏக்க ராஜ்ஜியத்தில் ஆராயப்படும் .

இப்படியான செய்திகளைத் தான் அதிகமாக வாசிக்கக் கூடியதாக இருக்கின்றது .

இதில் ஏக்கிய ராஜ்ஜிய அதாவது பிரிக்கப்பட முடியாத நாட்டிற்குள் அதிகார பரவலாக்கல் என்பதை பற்றி சுமந்திரன் பல முறை பேசி உள்ளார். அப்படியான அரசியலமைப்புக்கக முயன்றும் உள்ளார். அதில் தப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

ஆனால் நீங்கள் கூறிய மற்றய விடயங்களை சுமந்திரன் பேசினார் என்பதற்கான காணொளி ஆதாரங்கள் உண்டா? இருக்கு என்று சொல்பவர் தான் ஆதாரம் தரவேண்டும் என்ற உங்கள் கூற்றுப்பட அந்த காணொளி ஆதாரங்களை இங்கு இணைப்பீர்கள் என நம்புகிறேன்.

தாங்களே செய்திகளை உருவாக்கி தாமே அதை பிரசுரித்து பின்பு அதையே ஆதாரமாக தமிழர்களுக்குள் மட்டும் காட்டும் கேவலமான அணுகுமுறை தீவிர தமிழ் தேசியம் பேசுபவர்களிடம் உள்ள ஒரு பொதுவான குணாம்சம். அதனால் தான் கடந்த 75 ஆண்டுகளாக சற்றும் முன்னேறாமல் அதே இடத்தில் நின்றபடி அதே விடயங்களை திருப்பி திருப்பி பேசி ஜோக் அடித்தபடி தமிழ் தேசியம் பேசுபவர்கள் உள்ளார்கள்.

மற்றப்படி எல்லா தமிழ் தேசியக்கடசி அரசியல்வாதிகளைப் போலவே சுமந்திரனும் ஒரு தமிழ் அரசியல்வாதியே.

Edited by island

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, island said:

தாங்களே செய்திகளை உருவாக்கி தாமே அதை பிரசுரித்து பின்பு அதையே ஆதாரமாக தமிழர்களுக்குள் மட்டும் காட்டும் கேவலமான அணுகுமுறை தீவிர தமிழ் தேசியம் பேசுபவர்களிடம் உள்ள ஒரு பொதுவான குணாம்சம். அதனால் தான் கடந்த 75 ஆண்டுகளாக சற்றும் முன்னேறாமல் அதே இடத்தில் நின்றபடி அதே விடயங்களை திருப்பி திருப்பி பேசி ஜோக் அடித்தபடி தமிழ் தேசியம் பேசுபவர்கள் உள்ளார்கள்.

பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்.

தாமே செய்தியை உருவாக்கிய காலம் கைத்தொலைபேசி பொதுமக்களிடம் சரளமாக பாவனைக்கு வந்த காலத்திலிருந்தே தொடங்கியது.

அதற்கு முன் பொய் செய்திகள் பரப்பட்டதில்லை.

75 ஆண்டுகளும் பொய் செய்தி பரப்பப்பட்ட காலங்கள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

75 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் மட்டுமே இலங்கையில் சிங்களவருடன் வாழ்ந்தார்கள். இப்போது தமிழர்களுடன் தமிழ் தேசியம் என்று ஒரு ஆட்களும் வாழ்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2025 at 03:21, Justin said:

சுமந்திரனும் வேறு சில கூட்டமைப்பு அரசியல்வாதிகளும் யாழ் நூலகத்தில் இருந்து தப்பியோடினர்" என்று எழுதிய உங்கள் கருத்திற்கு படங்களை இணைத்து ஆதாரம் தந்திருந்தேன்.

முன்னாள் இங்கிலாந்து பிரதமர் இலங்கை வந்தபோது, அவர் யழ்ப்பாணம் சென்று மக்களை சந்திக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தபோது, இலங்கை அரசாங்கம் அதற்கு பல தடைகளை ஏற்படுத்தியது. ஆனாலும் அவர் அங்கு வந்தபோது தமிழ் மக்கள், செல்வராசா கஜேந்திரன், அனந்தி அவர்களோடு பல மத குருமார் சந்திக்க காத்திருந்தனர். ஆனால் போலீசார் அவர்களை சந்திக்க முடியாமல் அவர்களை தடுத்து தள்ளி விழுத்தினர், அப்போது அனந்தி ஒரு பெண்ணாக இருந்தும் சில ஆவணங்கள் ஓடிச்சென்று டேவிட் கமரூனின் வாகனத்தின் யன்னல் வழியாக கொடுத்தார் . அந்நேரம் அங்கெ தமிழ்பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர் வேறு யாருமிருக்கவில்லை. சுமந்திரன், சம்பந்தன் போன்றவர்கள் யாழ்நூலகத்திலிருந்து பின்கதவு வழியாக சென்றனர். பின்னர் டேவிட் கமரூன், இடம் பெயர்ந்த மக்களின் குடிசைகளுக்கு சென்று அவர்களின் துயரம் நிறைந்த, வெள்ளம் நின்ற இடங்களில் அவர்களின் தற்காலிக குடிசைகளுக்கு சென்று பார்வையிட்டார், அதன் பின் வேறொரு சம்பவத்தில் சம்பந்தனும் சுமந்திரனும் மக்களை சந்திக்க சென்றபோது மாப்பிளை அழைக்கவா பட்டு வேட்டியோடு வந்தீர்கள் என்று மக்கள் கேள்வி கேட்டு அவர்களோடு உரையாட மறுத்து வெளியேற்றியிருந்தனர். நீங்கள் இணைந்திருந்த படம் கமரூன் மக்களோடு உரையாடியதாக இருந்திருக்கலாம். அந்த போராட்டங்களின் பின்னே மக்களை சென்று பார்வையிட்டார் அங்கு சுமந்திரனோ அல்லது வேறு யாருமோ அவர்களை அழைத்து சென்று உரையாடலை ஏற்படுத்தியிருக்கவில்லை.

12 hours ago, Justin said:

சாத்தான், பெருமாள் போன்ற உறவுகளைப் பொறுத்த வரை, ஆதாரம் தேடிக் கொடுக்க நான் நேரம் செலவழித்துப் பயனில்லை.

நாங்கள் உங்களிடம் ஆதாரம் கேட்கவில்லை, அப்படி கேட்டு நான் உங்களுக்காக கருத்து எழுதுவதுமில்லை. சில சமயங்களில் உங்களுக்கு பதில் எழுதாமல் பொதுவாக பதிந்து விட்டு கடந்து செல்வதுண்டு. அதைத்தான் பெட்டிக்கடை மூடுதல் என்று உங்கள் பாஷையில் எழுதுகிறீர்களென நினைக்கிறன். உங்கள் கருத்து அலட்டல், அதை நான் கடந்து செல்வேன் என்பவருக்கு, பதில் எழுதுவதை தவிர்த்தே அப்படி எழுதுவதுண்டு. இனியும் அப்படியே செய்வேன். நீங்கள் உங்கள் பாஷையில் எதை வேண்டுமானாலும் கூறி மகிழ்ந்து கொள்ளுங்கள். அதைப்பற்றி நான் கவலைப்படப்போவதில்லை. தமிழரின் ஏகபிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதையே எழுதுகிறேன், நீங்கள் தான் எனது கருத்துக்களை கடந்து செல்பவர் என பலதடவை அறிக்கையிட்டிருக்கிறீர்கள், பின் அவற்றிற்கு பதில் கருத்தெழுதி விதண்டாவாதம் செய்வீர்கள், வாசகர்களுக்கு என்னை யாரென அறிமுகப்படுத்தப்போகிறீர்கள் என்கிறீர்கள், என்னை வாசகர்களுக்கு தெரியாது ஏனெனில் நான் களத்திற்கு புதியவர் எனவே நீங்கள்தான் என்னை அவர்களுக்கு அறியப்படுத்தவேண்டும் அப்படி நீங்கள் உங்களுக்குள் எண்ணிக்கொள்கிறீர்கள். எனது கருத்தை கடந்து போகும் நீங்கள் எனது கருத்துக்கு ஏன் பதில் எழுதுகிறீர்கள்? ஏன் என்னை வாசகர்களுக்கு அறியதரவேண்டுமென துடிக்கிறீர்கள்? இங்கு எத்தனையோ கருத்து பதிகின்றேன், ஆனால் சுமந்திரனை பற்றி எழுதினால் மட்டும் நின்று வாசிப்பீர்கள் பதில் தருவீர்கள், பின் அலட்டல் என்பீர்கள். அந்த அலட்டலிலும் நீங்கள் பதில் எழுத ஏதோ உண்மை இருக்கிறது, அதை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை அதுதான் உண்மை. எனக்காக நீங்கள் ஆதாரம் தேடவும் வேண்டாம், நான் உங்களிடம் கேட்கவுமில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.