Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பேசப்படுவது ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுதது தானே தவிர....

மேலும் மலையகத்தின் வளம் மற்றும் மண் சார்ந்த தெளிவுள்ளவர்கள் அவர்களை காய்ந்த நிலப்பரப்பு களில் குடியேற்ற நினைக்கவே மாட்டார்கள்.

  • Replies 56
  • Views 2.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • என்னை பொறுத்தவரையில் இது எப்போதோ நடந்திருக்க வேண்டிய ஒரு காலக் கடமை. 200 வருட அடிமை சாசன வாழ்க்கையில் அந்த பெருந்தோட்ட மக்கள் கூட்டம் அடைந்த முன்னேற்றம் என்பது ஆமை வேகத்தில் தான் நடந்திருக்கிறது. இன்ற

  • இவ் வகையான குடியேற்றங்கள் முன்னரும் நிகழ்ந்தது. டேவிட் ஐயாவின் 'காந்தியம்' அமைப்பு, 1970கள் மற்றும் 1980களில் வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்தது. 1977 ஆம் ஆண்டில்

  • உள்நாட்டு யுத்தத்தால், புலம் பெயர்ந்து தமிழர்கள் இலட்சக்கணக்கில் இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழமுடியுமென்ற நிலை இருக்கும் போது. இது முடியாதா என்ன? சுமந்திரனுக்கு ஒரு ‘சபாஸ்’👏

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che யின் குளிர்கால தூக்கம் (Winterschlaf) இடையில் சுமந்திரனால் குழம்பி விட்டதா. 😂 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 13/12/2025 at 07:12, தமிழ் சிறி said:

வாயால், வடை சுடுவதில்…. சுமந்திரன் கில்லாடி. 😁

இப்பிடி இவர் சுட்ட வடைகள்… ஏராளம். 😂

அதை தின்னத்தான் ஆட்கள் கிடைக்குதில்லை. 🤣

நடக்காத முடியாத விடயத்தை பேசு பொருளாக்கி தன்னை பிரபல்யமாக்குவதில் சுமந்திரனார் ஒரு நடிகர் திலகம்.

பிரதேசவாதம் பிரதேசவாதம் என யார் அலறுபவர்கள் யாரென்று பார்த்தால் எல்லாம் சுமந்திரன் போராளிகள் தான்.அன்றைய ஆயுத போராட்டத்தை அடியோடு வெறுக்கின்றேன் என கூறும் சுமந்திரன் தான் அந்த அவலத்தில் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, தமிழ் சிறி said:

@goshan_che யின் குளிர்கால தூக்கம் (Winterschlaf) இடையில் சுமந்திரனால் குழம்பி விட்டதா. 😂 🤣

கோசான் சார்! நீர்மூழ்கி கப்பல்ல கப்டனாய் வேலை செய்யுறார் எண்டு நான் நினைக்கிறன்.😂

  • கருத்துக்கள உறவுகள்

நாற்பது, ஐம்பதுகளின் இலங்கையின் இருந்த பிரதேச பாகுபாடுகள் மலையகத் தமிழர்களின் வாழ்க்கையை ஆழமாக பாதித்திருந்தது. குறிப்பாக யாழ்ப்பாணப் பகுதியில் சில யாழ்ப்பாணத் தமிழர்கள், தேயிலைத் தோட்டங்களில் இருந்து மலையகத் தமிழர்களை வீட்டு வேலைக்கும், கழிவுகளை அகற்றும் பணிகளுக்கும் அழைத்து வந்து அமர்த்திய நிகழ்வுகள் நிறைய இருக்கின்றன. அப்பொழுதெல்லாம் யாழ்ப்பாணம் வறண்ட பிரதேசம். மலையகம் செழிப்பான பூமி என்று யாரும் பேசவில்லை.

தாய் தந்தையை உறவுகளை மலையகத்திலேயே விட்டு விட்டு,சிறுமியையோ, சிறுவனையோ பிரித்து கூட்டிக் கொண்டு வந்து வேலை செய்ய விட்டு தன் பிள்ளைகளை படிக்க விட்ட போது யாருமேகுய்யோ முறையோஎன்று கத்தவில்லை.

தாயக விடுதலைக்காக கரும்புலியாகப் போனவனை, “இது எங்கள் போராட்டம் நீ வளமும், உன் வாழ்வும் உள்ள உன் மலையகத்துக்குப் போஎன்று சொல்ல பிரபாகரனே சொல்லவில்லை.

புலிகள் அறிவித்தவுடன், “ஊரில் உழாத மாடு வன்னியில் எப்படி உழும்என்று சொன்னவர்கள் வன்னிக்கு இடம் பெயர்ந்து  வாழவில்லையா?

புகையிலைத் தோட்டம், மிளகாய் தோட்டம் என்று வாழ்ந்தவன் இடம் பெயர்ந்து 10,000 கிலோ மீற்றர்கள் பறந்து வந்து சீமையிலே வாழ முடிந்தது என்றால்,தேயிலைத் தோட்டத்தில் வாழ்ந்தவன் உள்ளூரில் இடம் பெயர்ந்து வாழ முடியாதா?

சுமந்திரனை நீங்கள் தூற்றுங்கள். பாரளுமன்றத்தில் யாராவது பிரபாகரனுக்கு பிறந்தநாள் சொன்னால் போற்றுங்கள். அது உங்கள் விருப்பம். சுமந்திரன் சொன்னார் என்பதற்காக நல்லதை எதிர்ப்பது எந்தவகையில் நியாயம்?

ஒன்று நிச்சயம் கால் மேல் கால் போட்டு மல்லாக்காகப் படுத்திருந்து வானத்தை நோக்கி துப்பிக் கொண்டிருப்பவர்களால் ஈழத் தமிழர்களுக்கு எந்த பிரயோசனமும் கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

லைன் ஒற்றை அறைக்குள் பல சந்ததிகள் குடும்பம் நடத்த வேண்டிய கலாச்சார கேடான நிலை.

மலை சரிவுகளில் லைன்கள்.

1000 ரூபாய் வேதனம்.

வெளிநாடுகாள் சொல்லும் modern slavery தான் மலையகத்தில் நடப்பது.

அந்த நரகத்தில் இருந்து அவர்களை மீட்டு நாம் அவர்களுக்கு ஒரு கெளரவமான வாழ்வை கொடுத்த படி, வடக்கில் எம் இனப்பரம்பலையும் பேண முடியாதா?

முதலில் நடக்கக் கூடிய விஷயங்களை பற்றிப் பேசுவோம்

வடக்கிலேயே காணிகள் அற்ற..... வீடுகள் அற்ற..... பல குடும்பங்கள் வீடமைப்புத் திட்டங்கள் மூலம் அதனப் பெற்று வாழும் இடங்களை பாருங்கள்.

மழைக்காலம் வெளியே செல்ல முடியாத அளவில் வெள்ளம் .....சரியான வீதிகள் இல்லை..... மின்சாரம் இல்லை...... போக்குவரத்து சுத்தமாக இல்லை

இப்படியான நிலையில் இருக்கும் போது-----

இன்னும் குடியேற்றம் வீடமைப்பு என்று வாய்ச சவடால் விடுவது சுமோவிற்கும் மனோவிற்கும் புதிதல்ல

ஏற்கனவே முஸ்லீம்கள் ஓட்டுமடத்தில் வாழும் நிலையைப் பாருங்கள்

முதலில் அவர்களுக்கு ஒரு சுகாதாரமான வாழ்க்கை வாழ ஆவன செய்ய வக்கில்லாத சுமோ........

மலையகத்தில் இருந்து மக்களை வரச் சொல்வது எப்படியான ஒரு கயமைத் தனமானது என்று எல்லோருக்கும் விளங்கும் 😂

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவிற்கு 1970ம் ஆண்டுகளில் குடிபெயர்ந்து காட்டு பகுதியை வளப்படுத்தி வயல், தோட்டம் செய்தார்கள் மலையகத்து மக்கள் பகுதியினர். இப்போது மூன்றாம் தலைமுறையும் வந்துவிட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.