Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்

18 Dec, 2025 | 05:48 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மலையகம் எமது தாயகம். நாங்கள்  மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை. அதனால் மலையக மக்களுக்கு 7பேர்ச் காணியை பெற்றுக்காெடுத்து, அந்த மக்கள் அங்கே வாழ்வதற்குதேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆளும் தரப்பினரால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

அனத்தத்தில் பாதிக்கப்பட்ட மலையக தோட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறி முகாம்களிலும் பாடசாலைகளிலும் தங்கிவரும் நிலையல், அவர்களுக்கு எந்த வசதியும் செய்துகொடுக்காமல் தற்போது அவர்களை தங்களின் வீடுகளுக்கு செல்லுமாறு அரசாங்கம் தெரிவித்து  வருகிறது.  தேசிய கட்டிட ஆராச்சி நிறுவனத்தின் அறிக்கைக்கு அமையவே  அவர்கள் தங்களின் வீடுகளைவிட்டு முகாம்களுக்கு வந்தார்கள்.அதனால்  கட்டிட ஆராச்சி நிறுவனத்தின் முறையான அறிக்கையை பெற்றுகொண்ட  பின்னரே அந்த  மக்களை அவர்களின் இருப்பிடங்களுக்கு அனுப்புவது பொருத்தமாகும்.

 வேவெண்டன் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் காமினி திஸாநாயக்க பாடசாலைகளில் இருக்கிறார்கள். அவர்களை தற்போது  வேறு பாடசாலைகளுக்கு செல்லுமாறு அல்லது  தொண்டமான் பயிற்சி நிலையத்துக்கு அல்லது வீடுகளுக்கு போங்கல் என  தெரிவிக்கிறார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.அந்த மக்களின் நிலமையை புரிந்து செயற்பட வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் மலையகத்தில் பல பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளன.

மேலும் வரவு செலவு திட்ட விவாதத்தின்போது, மலையக மக்களுக்கு தனியான வீடு நிர்மாணித்து கொடுக்க வேண்டும் என அரசாங்கத்தில் இருக்கும் அனைவரும் தெரிவித்து வந்தார்கள். அதனை நாங்கள் வரவேற்கின்றோம். அதேபோன்று மலையக மக்களுக்கு 7பேர்ச் காணியை பெற்றுக்காெடுத்து, அந்த மக்கள் அங்கே வாழ்வதற்கு தேவையான வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும். மாறாக நாங்கள்  மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை. மலையகம் எமது தாயகம்.  நாங்கள் எமது தாயகத்தில் இருப்பதற்கு தேவையான வசதிகளை செய்துதர வேண்டும்.

தோட்டக் கம்பனிகளுடன் கலந்துரையாடி இந்த காணிகளை பெற்றுக்கொடுக்க  அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். எமது காலத்தில் அதனை மேற்கொள்ள நாங்கள் முயற்சித்தோம். அது  சாத்தியமாகவில்லை. அதனால் அதனை தற்போது  நீங்களாவது செய்யுங்கள்.

நாட்டில் இன்று தேயிலை, இறப்பர் போன்றவை ஒரு லட்சத்தி 3ஆயிரம் ஹெக்டயர்களில்  பயிர்ச் செய்யப்படுகின்றன. அகவே பெருந்தோட்ட மக்களுக்கு அதிலே 7பேர்ச் காணி ஒதுக்குவதாக இருந்தால், வெறும் 5ஆயிரம் ஏக்கர் காணியே தேவைப்படுகிறது.

அதனை ஒதுக்கிக்கொடுப்பதால் எந்த  நட்டமும் ஏற்படப்போவதில்லை. அந்த மக்களும் இந்த நாட்டு பிரஜைகள் என அரசாங்கத்தில் இருக்கும் 159பேரும் பேசி இருக்கிறார்கள்.அதனால்  அந்த மக்களுக்கு காணிகளை பிரித்துக்கொடுப்பதற்கு  நடவடிக்கை எடுக்க  வேண்டும்  என கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால், இந்த  சமூகம் ஒதுக்கப்பட்ட சமூகமாக மாறிவிடும்.

அதேநேரம் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணங்களைவிட வெளி மாவட்டங்களில் இருந்து அதிகமான நிவாரணங்கள் கிடைக்கப்பெற்றன. அவர்கள் அனைவருக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/233750

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ஏராளன் said:

நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்

சுமந்திரன் போன்றோரின் போலி அரசியல் வார்த்தைகளால் உங்கள் வாழ்க்கையை கெடுத்து விடாதீர்கள்.

எம் உதவிக்கரம் என்றும் உங்கள் பக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

உதவி கரம் அல்ல உதவி-வாய் 😂

  • கருத்துக்கள உறவுகள்

[ நாங்கள்  மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை ]

நீங்கள் யாழ்பாணத்தில் குடியேறுவதற்கான நினைப்புக்கள் திட்டங்கள் வைத்து கொள்ளாதீர்கள் என்பதை அவர்கள் தெளிவுபடுத்திவிட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

[ நாங்கள்  மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை ]

நீங்கள் யாழ்பாணத்தில் குடியேறுவதற்கான நினைப்புக்கள் திட்டங்கள் வைத்து கொள்ளாதீர்கள் என்பதை அவர்கள் தெளிவுபடுத்திவிட்டனர்.

ராதாகிருஸ்ணன் ஏன் போக போறார்?

அவர் என்ன லைனிலா வாழ்கிறார்?

அவர் சம்பளம் என்ன 1000 மா?

அந்த மக்கள் கொட்டடியில் மாய்ந்தால்தான், இவர் எம்பி இல்லாவிட்டால்?

ஆகவே அவர் இப்படித்தான் பசப்பு வார்த்தை பேசுவார்.

நாங்களும் பதிலுக்கு நிகர்நிலை உதவி கரம் நீட்டினால் - எல்லாம் சுபம் 😂.

இவர்களின் மலையக மக்கள் மீதான கரிசனையும், கருணாநிதியின் ஈழத்தமிழர் மீதான கரிசனையும் ஒரே வகை.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

அவர் என்ன லைனிலா வாழ்கிறார்?

அவர் சம்பளம் என்ன 1000 மா?

அதனால் தான் நாங்கள்  மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை என்ற பேச்சு

25 minutes ago, goshan_che said:

இவர்களின் மலையக மக்கள் மீதான கரிசனையும், கருணாநிதியின் ஈழத்தமிழர் மீதான கரிசனையும் ஒரே வகை

இதர தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஈழத்தமிழர்கள் மீதான கரிசனையும் அது போன்றதே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனை விட சிங்களவன் எவ்வளவோ பரவாயில்லை.😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தமிழனை விட சிங்களவன் எவ்வளவோ பரவாயில்லை.😎

சுத்துமாத்து சுமந்திரனின்… “லூஸ்” கதையை கேட்டு,

எவனும் வடக்கிற்கு வர மாட்டான் என்று அடித்து சொல்லலாம்.

மலையக மக்களுக்கு… சுமந்திரன், ஒரு முத்தின பைத்தியம் என்று நன்கு தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

சுமந்திரன் போன்றோரின் போலி அரசியல் வார்த்தைகளால் உங்கள் வாழ்க்கையை கெடுத்து விடாதீர்கள்.

எம் உதவிக்கரம் என்றும் உங்கள் பக்கம்.

1 hour ago, குமாரசாமி said:

தமிழனை விட சிங்களவன் எவ்வளவோ பரவாயில்லை.😎

அவர்களையும் சிங்கள வரையும் ஒரு காலத்தில் வீட்டு வேலைக்கு வைத்து பலகிய மோட்டு குடிகளுக்கு, வடகிழக்கில் குடியேற்றுவது வரப்பிரசாதமாக இருக்கலாம்👍

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_9311.jpeg.4f22304773c543053e4c

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Kavi arunasalam said:

large.IMG_9311.jpeg.4f22304773c543053e4c

இன்று நேற்றல்ல...அன்று தொடக்கம் மலையக மக்களின் அன்றாட பிரச்சனையின் முக்கிய பிரச்சனை மண் சரிவுகளும் அழிவுகளும்.

அன்று வராத அக்கறைகளும் அவசரங்களும் இன்று ஏன் வந்தது?

சுமந்திர கோமாவின் விழிப்பா?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

தமிழனை விட சிங்களவன் எவ்வளவோ பரவாயில்லை.😎

தன் இனம் என வந்தால் அவனுக்கு 100, உங்களுக்கு 10.

அந்த பத்தும் புலிகளின் தியாகத்துக்காக மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

சுத்துமாத்து சுமந்திரனின்… “லூஸ்” கதையை கேட்டு,

எவனும் வடக்கிற்கு வர மாட்டான் என்று அடித்து சொல்லலாம்.

மலையக மக்களுக்கு… சுமந்திரன், ஒரு முத்தின பைத்தியம் என்று நன்கு தெரியும்.

கவலையே வேண்டாம், இலங்கையின் வேறு எந்த பகுதி தமிழனும் வடக்குக்கு, குறிப்பாக யாழ்பாணம் வர மாட்டான்.

மலையக மக்களுக்கும் ஏனையவருக்கும் சுமந்திரன் உட்பட்ட உங்கள் அனைவரையும் பற்றிய போதிய பட்டறிவு இருக்கிறது.

ஆகவேதான் 2009க்கு பின் முஸ்லிம்கள், சிங்களவர் வந்த போதும் வேறு எந்த பகுதி தமிழனும் வரவில்லை.

உங்கள் இடங்கள் பறிபோகும்…

அதை என்ன செய்தாலும் தடுக்க முடியாது …

காளி கோவில்கள், மாட்டிறைச்சி கடைகளாக…

கந்தரோடை…கந்துறுகோட்டேயாக

சம்பில்துறை ஜம்புகோளவாக…

நயினாதீவு நாகதீபவாக..

இன்னும்…

தையிட்டி….

வெடுக்கு நாறி…

அலம்பில்…

நாயாறு…

ஒட்டு மொத்த மன்னார் மாவட்டம்…

20, 30 வருடத்தில் எதுவும் மிஞ்சாது.

ஆனால் இங்கே எந்த வேறு மாவட்ட தமிழனும் இருக்க மாட்டன்.

உங்களுக்கு கொடுத்து வாழ தெரியாது…

அடித்து பறித்த பின் அங்கலாய்க்க மட்டுமே தெரியும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

சுத்துமாத்து சுமந்திரனின்… “லூஸ்” கதையை கேட்டு,

எவனும் வடக்கிற்கு வர மாட்டான் என்று அடித்து சொல்லலாம்.

மலையக மக்களுக்கு… சுமந்திரன், ஒரு முத்தின பைத்தியம் என்று நன்கு தெரியும்.

இராணுவத்தின் அடாவடிகளால் தமது நிலங்களை பறி கொடுத்தவர்கள், விகாரைக்கு பறித்து எடுக்கப்பட்ட காணிகள், பிள்ளைகளை கையால் கொடுத்துவிட்டு அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது கதிகலங்கி நிற்கும் உறவுகள், இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்டு தவிப்பவர்கள் அவரது தேர்தல் பகுதியில் இருக்கும்போது, அவர்களை கை விட்டு கண்டியில் போய் நின்று கூவி அழைத்து அரசியல் செய்தால் யார் இவரை அறிவாளி, சுய புத்தியுள்ளவன் என்று என்று நம்புவார்கள்?

1 hour ago, goshan_che said:

இலங்கையின் வேறு எந்த பகுதி தமிழனும் வடக்குக்கு, குறிப்பாக யாழ்பாணம் வர மாட்டான்.

இது தெரியாமலா இவ்வளவு நேரம் பக்கம் பக்கமாய் பாடம் எடுத்தீர்கள்? கேலி பண்ணினீர்கள்? இதற்குத்தான் சொன்னேன் அவர்களுக்கு என்ன தேவை என கேளாமல், அறியாமல் மேதாவித்தனம் காட்டக்கூடாது, அது கோமாளித்தனம். இனி என்ன? சீசீ இந்தப்பழம் புளிக்கும். தானே சொந்த நிலத்தை விட்டு ஓடி விட்டு மற்றவர்களை குடியேற அழைக்கிறாராம். நீங்களே மீண்டும் வந்து குடியேறுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி

காணியும் வீடும் சொந்தமாக தங்கள் பெயரில் எழுதி தந்தால் தாங்கள் யாழ்ப்பாணம் வரை தயார் என்று சொல்லியும் எந்த புலம் பெயர் தமிழர்களும் அதற்கு சார்பாக பதில் தரவில்லையே. மடியில் கை வைத்ததாலோ???

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

மலையக மக்களுக்கும் ஏனையவருக்கும் சுமந்திரன் உட்பட்ட உங்கள் அனைவரையும் பற்றிய போதிய பட்டறிவு இருக்கிறது.

ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் தமிழ் நாட்டிற்கு திருப்பி அனுப்பப் பட்ட மலையாகத் தமிழர்களின் நிலை என்ன என்பது யாருக்காவது தெரியுமா ?

அவர்களுடைய நிலை தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தப்பட்டால் அவர்கள் எப்படி தமிழ் நாட்டிலே வாழ்கின்றார்கள் என்பது தெரியும்

சொந்த மக்களையே சிலோன்காரன் வந்துட்டான் என்று அலறிய தமிழ் நாட்டவர்கள் இருக்க.......

அவர்களை இப்போது சுமந்திரன் இல்லை அனுர அனுப்பினாலும் அவர்களின் வெளியேற்றத்திற்கெதிரான பொறுப்புக்கு கூறலை யாரும் செய்யமாட்டார்கள்.

கோத்தா கொழும்பில் இருந்து தமிழர்களை வெளியேற்ற முயன்று இப்போ அவரின் நிலையே கவலைக்கிடம் 😂

சுமனும் பாத்து சூதானமாக நடந்து கொள்ள வேண்டும் 😅

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

அன்று வராத அக்கறைகளும் அவசரங்களும் இன்று ஏன் வந்தது?

1930-1940 களில் இருந்தே அப்பாவி தமிழனை சிங்களவன் கலவரங்கள் பல உருவாக்கி தாக்குவதும், அழிப்பதுமாகவே வாழ்க்கை ஓட... எங்கோ இருந்து வந்த வண்டுப்பையன் (மேதகு) 1983 இல் நின்று அடித்து சிங்களத்தை ஒரு கணம் நிலை குழையவைத்தான்.

அப்போ அந்த செயலை நித்திரையில் இருந்து எழும்பிய ஒருவரின் செயலாக பார்த்தோமா ? இல்லை தானே.

சுமந்திரனின் அந்த "கருத்து" வெறும் ஆறுதல் படுத்தல் அவ்வளவே. நமக்கு தெரிந்தவர் ஒருவரின் வீட்டில் செத்தவீடு நடந்தால் அவர்கள் துயரத்தில் பங்கு கொண்டு ஏதாவது உதவி வெண்டுமானால் தயங்காமல் அழையுங்கள் என்று சொல்லும் பார்மாலிட்டி போன்றது. ஆனாலும் அந்த சொல்லில் ஒரு ஆற்றுப்படுத்தல், நம்பிக்கையூட்டல், இப்படி பல அம்சங்கள் இருக்கும்.

இதில் பெரும் தலைவர் மேதகுவையும், சுமந்திரனையும் தொடர்பு படுத்தி பேசியதாக நினைக்க வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, விசுகு said:

எந்த புலம் பெயர் தமிழர்களும் அதற்கு சார்பாக பதில் தரவில்லையே. மடியில் கை வைத்ததாலோ???

பிரத்தியோகமாக என் நண்பர்கள் வட்டத்தில் மூவர் வட்டக்கச்சி, துணுக்காய் போன்ற பகுதியில் இருக்கும் விவசாய காணியை (ஒரு பிரிவில்) , கொட்டில் வீடோடு தரும் விருப்பத்தை தெரிவித்துள்ளார்கள் அண்ணண்.

நோர்வேயில் இருக்கும் எனது அண்ணனும் கம்பளை வெள்ளத்தில் அனைத்தையும் இழந்து பௌத்த துறவிகளிடம் தஞ்சம் புகுந்து இருக்கும் 2 குடும்பத்தாரை அவர்கள் விருப்பத்தோடு நாவற்குழி க்கு கொண்டுவரும் யோசனையில் உரையாடிக்கொண்டு இருக்கிறோம்.

பொதுமையாக புலம்பெயர் என்று எல்லாரையும் ஒரே மாதிரி பார்க்க வேணாமே.

சந்தர்ப்பம் கிடைத்தால் நீங்களும் ஏதாவது செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் தமிழ் நாட்டிற்கு திருப்பி அனுப்பப் பட்ட மலையாகத் தமிழர்களின் நிலை என்ன என்பது யாருக்காவது தெரியுமா ?

அவர்களுடைய நிலை தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தப்பட்டால் அவர்கள் எப்படி தமிழ் நாட்டிலே வாழ்கின்றார்கள் என்பது தெரியும்

ஓம் தெரியும்…ஆரம்பத்தில் அவர்கள் கொஞ்சம் தட்டு தடுமாறினாலும்…சிலோன்கார அடையாளம் இருந்தாலும், அடுத்தடுத்த சந்ததிகள் இந்தியரால ஏற்கப்பட்டு விட்டனர். இன்னும் 10,20 வருடத்தில் இந்த வேறுபாடு அறவே அற்றுவிடும்.

போகும் வழியில் மன்னாரில் ரயிலில் இருந்து இறங்கி வன்னிக்குள் போனர்வர்கள் இன்னொரு சிறிய தொகை.

மலையக தோட்டங்களில் தங்கியோரை விட இவ்விரு குழுக்களும் ஒப்பீட்டளவில் மேம்பட்டே உளர்.

21 hours ago, satan said:

இது தெரியாமலா இவ்வளவு நேரம் பக்கம் பக்கமாய் பாடம் எடுத்தீர்கள்? கேலி பண்ணினீர்கள்? இதற்குத்தான் சொன்னேன் அவர்களுக்கு என்ன தேவை என கேளாமல், அறியாமல் மேதாவித்தனம் காட்டக்கூடாது, அது கோமாளித்தனம். இனி என்ன? சீசீ இந்தப்பழம் புளிக்கும். தானே சொந்த நிலத்தை விட்டு ஓடி விட்டு மற்றவர்களை குடியேற அழைக்கிறாராம். நீங்களே மீண்டும் வந்து குடியேறுங்கள்!

உங்களுக்கு புத்தி கொஞ்சம் மந்தமா?

எவ்வளவு விளக்கி சொல்லியும் மீண்டும் அதே இடத்தில் வந்து நிற்கிறீர்கள்?

யாரும் வராமல் இருக்க காரணம் உங்களை போன்றவர்கள் இந்த திரியில் காட்டிய உங்கள் இந்த மையவாத குணத்தின் மீதான பயம், அருவருப்பு.

அதை தூக்கி எறிந்து விட்டு சக தமிழராக அவர்களை நடத்துவோம் என்ற நம்பிகை வரும் படி அழையுங்கள்.

21 hours ago, satan said:

இராணுவத்தின் அடாவடிகளால் தமது நிலங்களை பறி கொடுத்தவர்கள், விகாரைக்கு பறித்து எடுக்கப்பட்ட காணிகள், பிள்ளைகளை கையால் கொடுத்துவிட்டு அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது கதிகலங்கி நிற்கும் உறவுகள், இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்டு தவிப்பவர்கள் அவரது தேர்தல் பகுதியில் இருக்கும்போது, அவர்களை கை விட்டு கண்டியில் போய் நின்று கூவி அழைத்து அரசியல் செய்தால் யார் இவரை அறிவாளி, சுய புத்தியுள்ளவன் என்று என்று நம்புவார்கள்?

மடைமாற்று

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அது சரி

காணியும் வீடும் சொந்தமாக தங்கள் பெயரில் எழுதி தந்தால் தாங்கள் யாழ்ப்பாணம் வரை தயார் என்று சொல்லியும் எந்த புலம் பெயர் தமிழர்களும் அதற்கு சார்பாக பதில் தரவில்லையே. மடியில் கை வைத்ததாலோ???

இந்த கேள்விக்கு பதில் கொடுக்க வேண்டும் என்பதால்தான்…

பல மடைமாற்றுகளை செய்து இந்த கொள்கையை தவறு என அடம் பிடிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

பிரத்தியோகமாக என் நண்பர்கள் வட்டத்தில் மூவர் வட்டக்கச்சி, துணுக்காய் போன்ற பகுதியில் இருக்கும் விவசாய காணியை (ஒரு பிரிவில்) , கொட்டில் வீடோடு தரும் விருப்பத்தை தெரிவித்துள்ளார்கள் அண்ணண்.

நோர்வேயில் இருக்கும் எனது அண்ணனும் கம்பளை வெள்ளத்தில் அனைத்தையும் இழந்து பௌத்த துறவிகளிடம் தஞ்சம் புகுந்து இருக்கும் 2 குடும்பத்தாரை அவர்கள் விருப்பத்தோடு நாவற்குழி க்கு கொண்டுவரும் யோசனையில் உரையாடிக்கொண்டு இருக்கிறோம்.

பொதுமையாக புலம்பெயர் என்று எல்லாரையும் ஒரே மாதிரி பார்க்க வேணாமே.

சந்தர்ப்பம் கிடைத்தால் நீங்களும் ஏதாவது செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.

உங்கள் நண்பர்கள், அண்ணன் இருவரின் முயற்சியும் கைகூட பிரார்திக்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.