Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகமாலையில் கடந்த புதனன்று 68 படையினர் பலியாம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முகமாலையில் புதனன்று படையினருக்கு பேரிழப்பு

முகமாலையில் கடந்த புதனன்று அரசுப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் படைகளுக்குப் பேரிழப்பு ஏற்பட்ட தாகவும், விடயம் மறைக்கப்பட்டு விட்டதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு உறுப்பினரும் எம்.பியுமான சிறிபதி சூரியாராய்ச்சி நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தச் சமரில் 68 படையினர் உயிரிழந்தனர்; 60 படையினர் காணாமற் போயினர்;

இருநூறு படையினர் வரை காயமடைந்தனர். இரண்டு கவச வாகனங்களைப் புலிகள் கைப்பற்றித் தம்முடன் கொண்டு சென்றனர்.

இப்படி சிறிபதி சூரியாராய்ச்சி நாடாளுமன்றில் நேற்றுத் தெரிவித்தார். (சி)

உதயன்.கொம்

-----

நெருப்பில்லாமல் புகையாது...??! :wub:

விடுதலைப்புலிகளும் சில தந்திரோபாய ரீதியான செயற்பாடுகள் கருதி.. இராணுவத்தின் இழப்புக்களை வெளியிடாமல் இருந்திருக்கலாம்.

புலிகள் வெளியிட்ட கைப்பெற்றப்பட்ட ஆயுதங்களில் பட்டியலில்.. இந்தப் படத்தில் சுவரோடு சாய்த்து வைக்கப்பட்டுள்ள முதலாவது ஆயுதத்தின் விபரம் அடங்கி இருக்கவில்லை..??!

07_11_07_ltte_05.jpg

http://www.tamilnet.com/img/publish/2007/1..._07_ltte_05.jpg

Edited by nedukkalapoovan

நெடுக்காலபோவான்,

சுவருடன் சாத்தி வைக்கப்பட்டு இருப்பது ஆயுதம் அல்ல. அது புட்டு அவிப்பதற்கு பாவிக்கப்படும் குழல். அந்த ஆயுதத்திற்கு அருகில் உள்ள அறைக்கதவு பூட்டுப்போட்டு மூடப்பட்டுள்ளது. கவனித்தீர்களா? அதுதான் குசினி.

எங்கட பெடியங்கள் காலை புட்டு அவிப்பதற்கு ஆயத்தப்படுத்திக்கொண்டு இருந்தவேளையில் ஆமிக்காரங்கள் வேலை இல்லாமல் சும்மா தணகிப்பார்க்க குசினுக்குள் வேலை செய்து கொண்டு இருந்தவங்கள் புட்டுக்குழலை அவசரத்தில சுவரோட சாத்திப்போட்டு, பூனை வந்து சாப்பாட்டில வாய் வைக்காம இருக்க குசினிய பூட்டிப்போட்டு ஆமியக் கலைக்க ஓடீட்டாங்கள்.

இதுதான் நடந்தது.

கண்ணை நம்பாதே. உன்னை ஏமாற்றும். புட்டுக்குழல் படத்தில் ஆயுதம் மாதிரி தெரிவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

பி/கு: எமக்கு இந்த ஆராய்ச்சி எங்களுக்கு தேவையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்,

சுவருடன் சாத்தி வைக்கப்பட்டு இருப்பது ஆயுதம் அல்ல. அது புட்டு அவிப்பதற்கு பாவிக்கப்படும் குழல். அந்த ஆயுதத்திற்கு அருகில் உள்ள அறைக்கதவு பூட்டுப்போட்டு மூடப்பட்டுள்ளது. கவனித்தீர்களா? அதுதான் குசினி.

எங்கட பெடியங்கள் காலை புட்டு அவிப்பதற்கு ஆயத்தப்படுத்திக்கொண்டு இருந்தவேளையில் ஆமிக்காரங்கள் வேலை இல்லாமல் சும்மா தணகிப்பார்க்க குசினுக்குள் வேலை செய்து கொண்டு இருந்தவங்கள் புட்டுக்குழலை அவசரத்தில சுவரோட சாத்திப்போட்டு, பூனை வந்து சாப்பாட்டில வாய் வைக்காம இருக்க குசினிய பூட்டிப்போட்டு ஆமியக் கலைக்க ஓடீட்டாங்கள்.

இதுதான் நடந்தது.

கண்ணை நம்பாதே. உன்னை ஏமாற்றும். புட்டுக்குழல் படத்தில் ஆயுதம் மாதிரி தெரிவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

பி/கு: எதுக்கு இந்த ஆராய்ச்சி எங்களுக்கு தேவையா?

அப்படியா சங்கதி.. அதுதானே பார்த்தன். புட்டுக்குழலை விட எங்ககிட்ட என்ன இருக்க முடியும்..! சாத்திரிக்குக் காணாமல் ஒளிச்சு வைச்சதே பெரிய விசயம். இல்ல அவர் ஐஸ்பழக் காரனட்டக் கொடுத்திருப்பார்..! :wub:

Edited by nedukkalapoovan

நெடுக்காலபோவான்,

சுவருடன் சாத்தி வைக்கப்பட்டு இருப்பது ஆயுதம் அல்ல. அது புட்டு அவிப்பதற்கு பாவிக்கப்படும் குழல். அந்த ஆயுதத்திற்கு அருகில் உள்ள அறைக்கதவு பூட்டுப்போட்டு மூடப்பட்டுள்ளது. கவனித்தீர்களா? அதுதான் குசினி.

எங்கட பெடியங்கள் காலை புட்டு அவிப்பதற்கு ஆயத்தப்படுத்திக்கொண்டு இருந்தவேளையில் ஆமிக்காரங்கள் வேலை இல்லாமல் சும்மா தணகிப்பார்க்க குசினுக்குள் வேலை செய்து கொண்டு இருந்தவங்கள் புட்டுக்குழலை அவசரத்தில சுவரோட சாத்திப்போட்டு, பூனை வந்து சாப்பாட்டில வாய் வைக்காம இருக்க குசினிய பூட்டிப்போட்டு ஆமியக் கலைக்க ஓடீட்டாங்கள்.

இதுதான் நடந்தது.

கண்ணை நம்பாதே. உன்னை ஏமாற்றும். புட்டுக்குழல் படத்தில் ஆயுதம் மாதிரி தெரிவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

பி/கு: எமக்கு இந்த ஆராய்ச்சி எங்களுக்கு தேவையா?

ஆம கலைஞன் சொன்னா சரிதான்.. நிறைய பேருக்கு அவிக்கிறதாலதான் அவ்வளோ பெரிசா இருக்கு...

முகமாலையில.. கிளாலில.. வாங்கிக்கட்டறது சீசன் வேலையாப்போச்சு இராணுவத்துக்கு

  • கருத்துக்கள உறவுகள்

68 ஓட தப்பிவிட்டாங்கள். இல்லாட்டி சுற்றிவளைச்சு ஒரு போடு போட்டிருக்கலாம்....சே.....போன வருஷம் போட்ட பூசை போல குடுத்திருக்க வேணும். சூடு கண்ட பூனை அல்லவா? 68 ஓட ஓடத்தொடங்கி விட்டாங்கள் போல இருக்கு. ஒரு விஷயம்...உந்தப் புட்டுக்குழல் பொடியள் பூசயில அவிச்ச குழலாக் கூட இருக்கலாம். ஒரு தாங்கி அடிபட்டதாகத் தகவல்.

உந்த புட்டுக்குழல் முடிச்சை யாராவது அவிளுங்கோப்பா? :D

தமிழர்கள் இப்ப இராணுவ அறிவில இமயத்தை தொட்டுவிட்டார்கள். :wub: புலிகள் தங்கடை பட்டியலில் சொல்லாமால் ஓரமா சாத்தி வைச்சு படம் எடுத்து விட்டாலே காணும். மிச்சத்தை எப்படி விளங்கிக் கொள்ள வேணும் எண்டு தமிழர்களிற்கு தெரியும். :lol:

எல்லாம் நல்ல செய்திதான் ஆனா உத்தியோக பூர்வமாக வராது நாங்கள் தான் ஊகிக்க வேணும். :D

சா..ம் 37 வேண்... முதல்.... :huh: பரிசேதிச்சு.... பார்க்.... கொடுக்கப்... :lol: பால் நழுவி... பழத்.... இன்ப... திர்ச்... :( ... :blink:

எல்லாம் நல்ல செய்தியாக விரைவில் சொற்ப காலங்களில் வரும் :D

வெற்றி நிச்சயம் அடுத்த வருசம் தீபவளி கொண்டாடுவம் கோணமாமலையில. :lol:

பயங்கரவாத அரசு தனது வரவு செலவு பிரச்சனைகளை முடிச்சுக் கொண்டு வரமட்டும் இருங்கோ. அதற்குப் பின் உண்மையான அழிவு தெரிய வரும். இனி ஓட வெளிக்கிட்டாச்சு சாகிறவையும் அந்தக் கணக்கில தான் போடுப்படும்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

ஆமி புட்டு அவிச்சுதோ இல்லையோ இங்கே கனக்க பேர் அவிக்க வெளிக்கிட்டிருக்கினம். :wub:

ஏம்பா புட்டுக்குழலுக்குப் பக்கத்தில சிக்கன் லெக்கும் கிடக்கிறாப்பல..... அங்கால பொன்னிறமா மொறமொறப்பா மோர்மிளாகாயா? ஆதிக்கு வயித்தக் கிண்டுது அதாம்பா பசி.... :wub:

நெடுக்காலபோவான்,

சுவருடன் சாத்தி வைக்கப்பட்டு இருப்பது ஆயுதம் அல்ல. அது புட்டு அவிப்பதற்கு பாவிக்கப்படும் குழல். அந்த ஆயுதத்திற்கு அருகில் உள்ள அறைக்கதவு பூட்டுப்போட்டு மூடப்பட்டுள்ளது. கவனித்தீர்களா? அதுதான் குசினி.

எங்கட பெடியங்கள் காலை புட்டு அவிப்பதற்கு ஆயத்தப்படுத்திக்கொண்டு இருந்தவேளையில் ஆமிக்காரங்கள் வேலை இல்லாமல் சும்மா தணகிப்பார்க்க குசினுக்குள் வேலை செய்து கொண்டு இருந்தவங்கள் புட்டுக்குழலை அவசரத்தில சுவரோட சாத்திப்போட்டு, பூனை வந்து சாப்பாட்டில வாய் வைக்காம இருக்க குசினிய பூட்டிப்போட்டு ஆமியக் கலைக்க ஓடீட்டாங்கள்.

இதுதான் நடந்தது.

எங்கட வீட்டில இதை வாசித்துவிட்டு எல்லாரும் சிரித்துக்கொண்டிருக்கினம்.. :):)

முகமாலை மோதலில் 46 படையினர் பலி; நூற்றுக்கணக்கானோர் காயம் அரசாங்கம் உண்மையை மறைப்பதாக ஐ.தே.க. கடும் குற்றச்சாட்டு

[saturday November 10 2007 07:28:35 AM GMT] [யாழினி] Tamilwin.com

முகமாலை மோதலில் இராணுவத்தரப்பில் 46 பேர் பலியாகியுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு உண்மையை மறைத்து ஏமாற்றுவித்தை காட்டிக்கொண்டிருப்பதாக சாடியுள்ளது.

விடுதலைப் புலிகள் மோசமாக பலவீனப்பட்டிருப்பதாக அரசு தவறாக எடைபோடுவதாகவும் தென்னிலங்கையில் கூறுவது போன்று புலிகள் பலவீனப்படவில்லை எனவும் பதிலாக அதன் பலம் உறுதியாகக் காணப்படுவதை சமீபத்திய சம்பவங்கள் உறுதிப்படுத்துவதாகவும் ஐக்கியதேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் மாத்தறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சாகிய ரத்னாயக்கா மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

செய்தியாளர் மாநாட்டில் தொடர்ந்து விளக்கமளித்த சாகிய ரத்னாயக்கா மேலும் கூறியதாவது;

"ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது பட்ஜெட்டும் புஷ்வாணமாகியுள்ளது. அதில் அபிவிருத்திக்கான திட்டம் எதுவும் காணப்படவில்லை. பொருளாதார வளர்ச்சிக்கு யோசனைகள் முன்வைக்கப்படவுமில்லை. நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டிருப்பதே மிச்சமாகியுள்ளது.

நாட்டை ஆட்சி செய்வதற்கு வங்கிக்கடன் பெற்றுக் கொள்ளும் நிலைமைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. உலகில் எங்குமே இதுபோன்றதொரு அரசாங்கத்தைக் காண முடியாது. மகிந்தராஜபக்ஷ அதிகாரத்துக்கு வந்த நாள் முதல் பொய்யும் ஏமாற்றமும்தான் மக்களுக்கு கிட்டி வருகின்றது.

ஜனாதிபதி உப்புச்சப்பில்லாத பட்ஜெட்டை சபையில் சமர்ப்பிக்கும்போது மக்கள் அதிருப்தி கொள்வர் என்பதை நன்குணர்ந்ததால் மக்களை போர்க்களத்தின் பக்கம் திசைதிருப்பும் முயற்சியை மேற்கொண்டார். முகமாலையில் படைத்தரப்பு மேற்கொண்ட நடவடிக்கை எதிர்பார்த்த வெற்றிக்குப் பதிலாக பெரும் இழப்புகளையே கொண்டுவந்தது.

இத்தாக்குதல் நடவடிக்கையின்போது படைத்தரப்பில் 46 பேர் பலியாகியுள்ளதாக நம்பிக்கையான வட்டாரங்களிலிருந்து தகவல் கிட்டியுள்ளது. 125 பேருக்கும் கூடுதலானோர் காயமடைந்து கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியிலும் ஜயவர்தனபுர வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமானதென வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து அறியவருகின்றது.

இராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டோர் பற்றிய விபரம் இன்னமும் தெரியவரவில்லை.

முகமாலை இழப்புகள் தொடர்பில் அரசாங்கம் அநுராதபுரச் சம்பவம்போன்று பொய் கூறி உண்மையை மூடி மறைக்கப் பார்க்கின்றது. படையினர் தரப்பில் எட்டுப்பேரே பலியானதாக அரசு கூற முற்படுகின்றது. உண்மையைக் கூற அரசு ஏன் பயப்படுகின்றதோ தெரியவில்லை.

யுத்தம் இன்று முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. தங்களின் அரசியலை உறுதி செய்து கொள்வதற்காக ராஜபக்ஷ குடும்பம் யுத்தத்தை பயன்படுத்திவருகிறது. நாட்டு மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கவே அரசு முயற்சிக்கின்றது.

அரசாங்கமும் விடுதலைப்புலிகள் விடயத்தில் தவறான கண்ணோட்டத்தையே செலுத்தி வருகின்றது. புலிகள் பலவீனமடைந்திருப்பதாக எடைபோடப்படுகிறது. இப்படி தவறாக எடைபோடுவதன் பின் விளைவுகள் குறித்து அரசு சிந்திக்க மறுக்கின்றது.

வயதெல்லை கடக்கும்போது பழையவர்கள் ஓய்வுபெற்று புதியவர்கள் வருவது நிதர்சனமானதாகும். இது இராணுவத்தரப்பாக இருப்பினும் விடுதலைப்புலிகளானாலும் ஒரேவிதமாகத்தான் நோக்கப்படவேண்டும். தற்போது விடுதலைப்புலிகளின் படையில் 21 வயதெல்லை கொண்ட போராளிகள் கூடுதலாக இருக்கும் உண்மையை மறுக்க முடியாது. இதற்காக புலிகளுக்கு ஆதரவாக நாம் செயற்படுவது என்று அர்த்தப்படாது. பலமுள்ள ஒரு எதிரிப்படையை எதிர்கொள்ளும் வகையில் எமது படைத்தரப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்று கூறுகின்றோம்.

விடுதலைப்புலிகள் பலவீனப்படவில்லை. இது விடயத்தில் அரசு நாட்டு மக்களை ஏமாற்றி தவறாக வழி நடத்த முற்படக்கூடாது எனக் கேட்டுக்கொள்கின்றோம். நடக்கக்கூடிய ஒவ்வொரு சம்பவத்தையும் பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் விரிவாகத் தெரிந்து கொண்ட பின்னர் சரியான தகவல்களையே நாம் தெரிவிக்கின்றோம். அநுராதபுர சம்பவம் போன்று காலம் தாழ்த்தியேனும் உண்மையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படவே செய்யும். மக்கள் பக்கம் நின்று நியாயத்தைக் கூறவேண்டிய கடப்பாடு எமக்கிருப்பதால்தான் உண்மை என்ன என்பதை வெளியிடவேண்டுமென அரசை வலியுறுத்துகின்றோம்".

http://www.tamilwin.net/article.php?artiId...;token=dispNews

“40 soldiers sacrifice lives to cover empty budget”- Sagala Ratnayake

[10-11-2007 3.05pm]

UNP MP Sagala Ratnayake charged that President Mahinda Rajapksa attempted to cover the bare budget by breaking the news of a military victory in Muhamalai during his budget speech, by launching operation in the area at the same time.

Speaking at a news briefing at the party headquarters yesterday (November 09th), Mr. Ratnayake said that the President had made a similar attempt by breaking the news of the Silawatura capture, while addressing the 56th SLFP convention.

He further emphasized that the government media had been prepared to broadcast the capture of Muhamalai.

More than 40 soldiers were killed while over a 100 were injured in clashes because of this political decision to cover the budget, which offered no relief to the public and held no hope for development, the UNP MP added.

Even the military chiefs or the commanders in action were not informed of the Muhamalai attack beforehand, defence sources say, adding that the security forces have also lost a considerable amount of arms and ammunition in the attack.

http://lankadissent.com/index.php?option=c...09&Itemid=1

இதே போன்றதொரு அதிரடிச் செய்தியை சிலாவத்துறை மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு 56வது சுதந்திரகட்சியின் மகாநாட்டின் போதும் மகிந்த வெளியிட்டார்.

முகமாலை கைப்பற்றப்பட்ட செய்தியை வெளியிட அரச ஊடகங்கள் தயார் நிலையில் இருந்தன.

முகமாலைத் தாக்குதலுக்கு முன்னர் இராணுவத் தளபதிக்கோ அல்லது ஏனைய தளபதிகளுக்கோ அறிவிக்க பட்டிருக்கவில்லை. பாதுகாப்பு தரப்புகளின் தகவல்களின் படி தாக்குதலின்போது குறிப்பிட்த்தக்க அளவு வெடிபொருட்களும் ஆயுதங்களும் இழக்கப்பட்டுள்ளன.

Edited by சாணக்கியன்

sa-7-DFST8304944_JPG.jpg
  • கருத்துக்கள உறவுகள்

ஓ, இது தானோ கலைஞன் சொன்ன புட்டு குழல்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா சங்கதி.. அதுதானே பார்த்தன். புட்டுக்குழலை விட எங்ககிட்ட என்ன இருக்க முடியும்..! சாத்திரிக்குக் காணாமல் ஒளிச்சு வைச்சதே பெரிய விசயம். இல்ல அவர் ஐஸ்பழக் காரனட்டக் கொடுத்திருப்பார்..! :)

ஒய் நெடுக்கு உந்த சாமான் இருந்தால் ஜஸ்பழ காரனிட்டை குடுத்து ஒரு ஜஸ்பழம் வாங்க தேவையில்லை ஒரு ஜஸ்பழ கொம்பனியே வாங்கலாம். :D:( கலைஞன் இதுதானா பட்டாளத்துக்கு புட்டவிக்கிற குளாய் :):D

  • கருத்துக்கள உறவுகள்
ஒய் நெடுக்கு உந்த சாமான் இருந்தால் ஜஸ்பழ காரனிட்டை குடுத்து ஒரு ஜஸ்பழம் வாங்க தேவையில்லை ஒரு ஜஸ்பழ கொம்பனியே வாங்கலாம். :):) கலைஞன் இதுதானா பட்டாளத்துக்கு புட்டவிக்கிற குளாய் :(:lol:
இங்கபாருங்க ஆளாளுக்கு அவிக்க தொடங்கீட்டினம், ஓய் யாரவது கறி வையுங்கப்பா..... புட்டை தனிய சாப்பிட சுவையிருக்காது.... :):)
எங்கட வீட்டில இதை வாசித்துவிட்டு எல்லாரும் சிரித்துக்கொண்டிருக்கினம்.. :lol::lol:
சரி சரி காணும் நிறுத்த சொல்லுங்க, பக்கத்துவீட்டுக்காரங்க பொலிஸிட்ட சா மனகுன்றியோர் மருத்துவமனைக்கு (அதுதான்பா லூசாஸ்பத்திரி) போன் பன்ன போறாங்க.... :D:D

விடயங்கள் மறைக்கப்படுவதும் அவை காலதாமதமாக வெளிவருவதும் ஒரு யுக்திதான். இருந்தாலும் இராணுவத்தளபதி முகமாலைக்கு சென்றவிடயத்திலிருந்து இழப்பு பாரியதாகத்தனிருக்க வேண்டும். காணாமற்போனவர்கள் என்னவானார்கள். பிடிக்கப்பட்டார்களா? அல்லது சமரிலே அவர்களது உடல்கள் சிதைந்துவிட்டதா? என்றவிடயம் இனித்தான் வெளிவரும். அதென்னப்பா தமிழர் இன்னமும் பி(பு)ட்டு அவிக்கிறதிலேயே நிக்கிறாங்க. ஏதாவது விஞ்ஞான முன்னேற்றம் வேண்டாமா?

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி எங்க முதல் எழுத்து கடைசி எழுத்து யா என்று முடியுற முக்கியமான "குக்" கை காணல்லை? அவரும் ரொம்ப அவிப்பார், ஏதோ எக்ஸ் புலனாய்வு துறை உறுப்பினர் மாதிரி??

பி.கு: யாரும் கள உறுப்பினர்கள் பெயரை பாவிப்பதன்றால் முதல் எழுத்து இரண்டாவது எழுத்து கடைசி எழுத்து என்று குறிப்பிட்டு எழுதவும், அப்பொழுதுதான் நம்ம இணையவன் கண்ணுக்கு அது தெரியாது. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனைவிழுந்தான் குளக்கட்டுநன்றி:ஈழவிசன்சிறப

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தன் வலு வில்லங்கமா சாறி விளக்கமா செய்தியை தந்திருக்கின்றீர்கள், எனக்கெண்டா சென்ற வார யாழ் காலக்கண்ணாடி இப்பவே பார்த்த மாதிரி இருக்கு.... :D:):)

Edited by Danklas

உதென்ன புட்டுக்குழல், முன்பு பூநகரியில எடுத்த புட்டுக்குழலால ஒரு கிராமத்திற்கே புட்டவிக்கலாம்

அவ்வளவு பெரிசு பாருங்கோ... :)

உது பகிடியான விடயமாக எனக்கு பட இல்லை....! ஆப்கானிலும் , ஈராக்கிலும் இந்த ஆயுதங்களால்தான் தேமோபரிக் குண்டுகள் வீசப்படுகின்றன

அனேகமாக மேலை சாத்தி வைச்சு இருப்பது அமெரிக்க தயாரிப்பான Shoulder-Launched Multipurpose Assault Weapon ன் ஒரு பகுதி மட்டுமே....! அதாவது வீசை வில்லு தொகுதியும், குறிகாட்டி ( scope) ம் இல்லாமல் முன் பகுதி மட்டும்...

விபரம் எப்படி எண்டால் பொது பயன்பாட்டு தாக்குதல் ஆயுதம் எனும் இதை தயாரித்தவர்கள் அமெரிக்கர்கள்( இதையொட்டி இஸ்ரேலின் B-300 ஆயுதம் இருக்கிறது) இது இரண்டு தொகுதிகளானது.... தாக்குதல் ஆயுதம்,(படத்தில் இருப்பது) வெடி பொருள் தொகுதி (அதை இனைத்து பயன் படுத்தியபின் மாற்றலாம்)

smaw-c1.jpg

மேலை படத்திலை(சாத்தி வைக்கப்பட்டு) இருக்கும் தொகுதியின் முழு வடிவம்... தாக்குதல் ஆயுதம்...

smaw-c2.jpg

இது பின் பகுதியில் இணைக்க பட வேண்டிய வெடி பொருள் தொகுதி...

இதன் ஆபத்து என்ன எண்டால்.... தமிழ் செல்வன் அண்ணாவை கொலை செய்வதுக்கு பாவிக்க பட்டதாக சந்தேகப்படும் தேமோபரிக் வெடி பொருள்களை செலுத்துவதுக்கு எண்றே விசேடமாக தயாரிக்க பட்ட ஆயுதம் இது....!

ஆப்கானிலும் , ஈராக்கிலும் இந்த ஆயுதங்களால்தான் தேமோபரிக் குண்டுகள் வீசப்படுகின்றன...!

ஆதாரம்..

http://en.wikipedia.org/wiki/Shoulder-Laun..._Assault_Weapon

The Shoulder-launched Multipurpose Assault Weapon (SMAW) is a shoulder-launched rocket weapon, based on the Israeli B-300, with the primary function of being a portable anti-armor rocket launcher. It was introduced to the U.S. armed forces in 1984. It has a maximum range of 500 m against a tank-sized target.

It can be used to destroy bunkers and other fortifications during assault operations as well as other designated targets with the dual mode rocket and to destroy main battle tanks with the HEAA rocket. Recent operations in Afghanistan and Iraq have seen a thermobaric rocket added (described as NE—"Novel Explosive"), which is capable of collapsing a building

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.