Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலக வெளியில் நாங்கள் புறக்கணிக்கத்தக்க துணிக்கைகள். எங்களுக்கு ஏற்கனவே 2009 தீர்ப்பு கொடுக்கப்பட்டுவிட்டது. இனி வெனிசுவெலா என்ன ஈரான் என்ன எது நடந்தாலும் எங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை யாராவது மாற்றி எழுதப்போறாங்களா என்ன.

அது சரி உந்த வெனிசுவலா அதிபரை பார்க்க சதான் குசைனின் முகசாயல் அடிக்கிது. எனக்கு கண்ணில் கோளாறோ அல்லது யாராவது உங்களுக்கும் அப்படி தோன்றுகின்றதோ?

துருத் சோசல் பாவிக்கிற ஆட்க்கள் யாராவது முடியுமானால் டிரம்ப் பார்க்கக்கூடியமாதிரி இலங்கையில் மன்னார் எனும் இடத்தில் வெனிசுவெலாவை விட அதிக எண்ணை உள்ளதாய் எழுதிவிடுங்கோ. என்ன நடக்கிது என்று பார்ப்பம்.

  • Replies 57
  • Views 2.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் அவர்களுக்கும், எனக்கும் இன்று ஒரே விடயம் பற்றியே கவலை என்பதும், அத்துடன் நாங்கள் இருவரும் சிறிது நேரத்திலேயே இதை மறந்து விட்டு, எங்களின் அடுத்த வேலையை பார்க்க போ

  • குமாரசாமி
    குமாரசாமி

    வெனிசுலா எந்த விதத்திலும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் இல்லாத நாடு. இருந்தும் அந்த நாடு மீது அமெரிக்கா ஆக்கிரமித்தது கண்டிக்க வேண்டிய செயல். கேவலம்.....அமெரிக்கர்கள் வீட்டுக்கு 5 வாகனங்கள் வைத்திருப்ப

  • புலவர்
    புலவர்

    உக்ரைனை நீ வச்சுக்கோ!தாய்வானை அவன்வச்சிருக்கட்டும்!!வெனிசுலாவை நான்வச்சிருக்கிறன். பட் இந்த டீல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பேக்கரி டீல் ஓவர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இவர் மூலமாகவே சகல இரகசிய நகர்வுகள் நடந்தாக சொல்கிறார்கள்.

இத்துடன் சிறிய சண்டை நடந்ததாகவும் அமெரிக்க கெலி ஒன்று சுட்டு வீழ்த்ப்பட்டதாகவும் ஊர்ஜிதமில்லாத தகவல்கள் சொல்கின்றன.

ஆனால் அவர் பேசிய பேச்சில் அமெரிக்காவை ஏசியுள்ளார். நடிப்போ தெரியாது.

ஹெலியை கட்டி இழுத்து வந்தாச்சாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

உக்ரேன் எந்த விதத்திலும் அ

ரஸ்யா க்கு அச்சுறுத்தல் இல்லாத நாடு.

இருந்தும் அந்த நாடு மீது ரஸ்யா ஆக்கிரமித்தது கண்டிக்க வேண்டிய செயல்.

கேவலம்.....ரஸ்யர்களின் rare earth elements தேவைக்காக......இந்த வளம் மிக்க வலிமை இல்லாத நாட்டை ஆக்கிரமிப்பது கேவலத்திலும் கேவலம்.

பிழை திருத்தி உள்ளேன் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் 2 மணி 20 நிமிடங்களில் மதுரோவை பிடித்த அமெரிக்கா - ஒரு வீரரை கூட இழக்காமல் செய்து முடித்தது எப்படி?

அமெரிக்கா - வெனிசுவேலா, நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிப்பு, டிரம்ப்

பட மூலாதாரம்,Donald Trump/ Truth Social

கட்டுரை தகவல்

  • கேரத் எவான்ஸ்

  • வாஷிங்டன்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

மாதக்கணக்கில், அமெரிக்க உளவாளிகள் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வந்தனர்.

வெனிசுவேலா அரசுக்குள் இருந்தபடியே உளவு சொன்ன ஒருவரையும் (source) உள்ளடக்கிய ஒரு சிறிய குழு, 63 வயதான மதுரோ எங்கு உறங்குகிறார், என்ன சாப்பிடுகிறார், என்ன உடை அணிகிறார் என்பதோடு, உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் கூறுவதுபோல், "அவரின் செல்லப்பிராணிகள்" வரையிலும் கண்காணித்து வந்தது.

அதன்பிறகு, டிசம்பர் தொடக்கத்தில், 'ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்' என்று பெயரிடப்பட்ட ஒரு திட்டம் இறுதி செய்யப்பட்டது. இது பல மாதங்கள் நீடித்த நுட்பமான திட்டமிடல் மற்றும் ஒத்திகைகளின் விளைவாகும். இந்த ஒத்திகைகளில், அமெரிக்கப் படையினர் (Elite troops), தாங்கள் நுழைய வேண்டிய வழிகளைப் பயிற்சி செய்வதற்காக, மதுரோவின் கராகஸ் பாதுகாப்பு இல்லத்தின் உண்மையான, முழு அளவிலான பிரதியையும் உருவாக்கியிருந்தனர்.

பனிப்போருக்குப் பிறகு இல்லாத வகையில் லத்தீன் அமெரிக்காவில் அசாதாரணமான அமெரிக்க ராணுவத் தலையீட்டிற்கு வழிவகுத்த அந்தத் திட்டம் மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது. இதுபற்றி, அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவோ அல்லது ஆலோசிக்கப்படவோ இல்லை. துல்லியமான விவரங்கள் அனைத்தும் தயாரான நிலையில், உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் தாக்குதலைத் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலைகளுக்காக வெறுமனே காத்திருக்க வேண்டியிருந்தது.

திட்டத்தின் ஆச்சரியக்கூறை (surprise element) அதிகப்படுத்த அவர்கள் விரும்பினார்கள் என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். நான்கு நாட்களுக்கு முன்னதாகவே அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்திருந்த போதிலும், சிறந்த வானிலைக்காகவும், மேகமூட்டம் குறைவாக இருப்பதற்காகவும் அவர்கள் காத்திருக்கத் தீர்மானித்ததால், ஒரு தவறான தொடக்கம் (false start) ஏற்பட்டது.

"கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு முழுவதும் பல வாரங்களாக, அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் தயாராக இருந்தனர். சரியான நேரத்திற்காகவும், அதிபர் உத்தரவுக்காகவும் அவர்கள் பொறுமையாகக் காத்திருந்தனர்" என்று நாட்டின் மிக உயர்ந்த பதவியில் உள்ள ராணுவ அதிகாரியான ஜெனரல் டான் கெய்ன் சனிக்கிழமை காலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

'அதிர்ஷ்டமும் தெய்வ ஆசியும்'

பணியைத் தொடங்குவதற்கான உத்தரவு அதிபரிடமிருந்து இறுதியாக வெள்ளிக்கிழமை இரவு 10:46 மணிக்கு (கிழக்கு நேர மண்டலம் Eastern Daylight Time EDT) வந்தது.

"நாங்கள் இதை நான்கு நாட்களுக்கு முன்பு, மூன்று நாட்களுக்கு முன்பு, இரண்டு நாட்களுக்கு முன்பு செய்யவிருந்தோம். பின்னர் திடீரென்று வாய்ப்பு உருவானது. அவர்களைப் போகச் சொன்னோம்" என்று சனிக்கிழமை அதிகாலைத் தாக்குதலுக்குப் பிறகு, ஃபாக்ஸ் & ஃப்ரெண்ட்ஸ் (Fox & Friends) நிகழ்ச்சியில் கூறினார் டிரம்ப்.

"அவர் எங்களுக்கு அதிர்ஷ்டமும் கடவுள் ஆசியும் உடனிருக்கும் என்று கூறினார்" என்று தெரிவித்தார் ஜெனரல் கெய்ன்.

டிரம்பின் உத்தரவு கராகஸில் நள்ளிரவுக்குச் சற்று முன்பு வந்தது. இது இரவின் பெரும்பகுதி இருளில் செயல்பட ராணுவத்திற்கு அவகாசம் அளித்தது.

அதன்பிறகு, வான்வழி, தரைவழி மற்றும் கடல்வழியாக இரண்டு மணி நேரம் இருபது நிமிடங்கள் நீடித்த அந்தப் பணி, வாஷிங்டனையும் உலகெங்கிலும் பலரையும் திகைக்க வைத்தது. அளவு மற்றும் துல்லியத்தின் அடிப்படையில், இது கிட்டத்தட்ட முன்னெப்போதும் இல்லாத ஒன்றாக இருந்தது.

இது பல பிராந்திய சக்திகளிடமிருந்து உடனடி கண்டனங்களைப் பெற்றது. பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, வெனிசுவேலா தலைவரைக் சிறைபிடித்த வன்முறைச் செயல் முழு சர்வதேச சமூகத்திற்கும் மற்றொரு மிகவும் ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார்.

டிரம்ப் வெள்ளை மாளிகையின் சூழல் அறியும் அறையிலிருந்து (Situation Room) இந்த நிகழ்வைப் பின்தொடரவில்லை. அதற்குப் பதிலாக, அவர் புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள தனது மார்-எ-லாகோ கிளப்பில் தனது ஆலோசகர்களால் சூழப்பட்டிருந்தார். அங்கு அவர் சிஐஏ இயக்குநர் ஜான் ரேட்கிளிஃப் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோருடன் சேர்ந்து ராணுவ நடவடிக்கையை நேரடிலையில் பார்த்தார்.

"பார்க்க நம்ப முடியாத ஒரு விஷயமாக அது இருந்தது" என்று டிரம்ப் சனிக்கிழமை கூறினார். "நடந்ததைப் பார்த்திருந்தால், அதாவது, நான் அதை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்ப்பது போலப் பார்த்தேன். நீங்கள் அந்த வேகம், அந்த வன்முறை... ஆகியவற்றைப் பார்த்திருந்தால், அது ஒரு ஆச்சரியமான விஷயம். இந்த வீரர்கள் செய்தது ஒரு அற்புதமான வேலை."

பட மூலாதாரம்,Donald Trump / TruthSocial

படக்குறிப்பு,டிரம்ப் தனது புளோரிடா பண்ணை வீட்டிலிருந்து நடவடிக்கையை நேரலையில் பார்த்தார்.

கடந்த சில மாதங்களில், அதிபர் டிரம்ப், மதுரோ மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பயங்கரவாதம் (narco-terrorism) ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா ஆயிரக்கணக்கான படைவீரர்களை அந்தப் பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஒரு விமானம் தாங்கிக் கப்பலும் டஜன்கணக்கான போர்க்கப்பல்களும் இணைந்து, அந்த பிராந்தியத்தில் பல தசாப்தங்களில் காணப்படாத அளவிலான மிகப் பெரிய ராணுவ குவிப்பு நடைபெற்றது. மேலும், அந்தப் பிராந்தியத்தின் வழியாக போதைப்பொருள்களை கடத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட டஜன் கணக்கான சிறிய படகுகளையும் அமெரிக்கா அழித்துள்ளது.

ஆனால், 'ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்' நடவடிக்கையின் முதல் அறிகுறிகள் வானில் தென்பட்டன. அமெரிக்க அதிகாரிகளின் தகவலின்படி, அந்த இரவு முழுவதும் நடந்த நடவடிக்கையின் போது, குண்டுவீசும் விமானங்கள், போர் விமானங்கள், கண்காணிப்பு விமானங்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

"இது மிகவும் சிக்கலானது, மிகமிக சிக்கலானது. முழு இயக்கமும், தரையிறக்கங்களும், பயன்படுத்தப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையும்..." என்று ஃபாக்ஸ் செய்திகளுக்கு டிரம்ப் தெரிவித்தார். "எந்தவொரு சூழ்நிலைக்கும் தயாராக, எங்களிடம் ஒரு போர் விமானம் இருந்தது" என்றும் அவர் கூறினார்.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் கராகஸில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும், நகரத்தின் மேல் புகை மேகங்கள் எழுந்ததை காண முடிந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.

"நான் மிகப் பெரிய சத்தத்தைக் கேட்டேன். ஒரு பெரும் வெடிப்புச் சத்தம்," என்று செய்தியாளர் அனா வனெஸ்ஸா ஹெரேரோ பிபிசிக்கு கூறினார். "அது அனைத்து ஜன்னல்களையும் அதிரவைத்தது. உடனே, முழு பார்வையையும் மறைத்துவிடும் அளவுக்கு ஒரு பெரிய புகை மேகத்தை நான் பார்த்தேன். நகரம் முழுவதும் விமானங்களும் ஹெலிகாப்டர்களும் பறந்துகொண்டிருந்தன" என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம்,LUIS JAIMES/AFP via Getty Images

வானில் ஏராளமான விமானங்கள் பறப்பதைக் காட்டும் காணொளிகளும், வெடிப்புகளுக்குப் பிந்தைய நிலையை காட்டும் பிற காணொளிகளும் விரைவில் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின. அவற்றில் ஒன்றில், குண்டுவெடிப்புகளால் எழுந்ததாகத் தோன்றும் புகை மேகங்கள் மேலெழும்ப, கராகஸின் மேல், தாழ்வான உயரத்தில் ஹெலிகாப்டர்கள் ஒரு அணிவகுப்பாகப் பறந்ததை காண முடிந்தது.

"அதிகாலை சுமார் 1:55 மணியளவில், வெடிப்புச் சத்தம், கராகஸின் மேல் பறந்த விமானங்களின் ஓசையும் கேட்டு நாங்கள் விழித்தோம்" என்று டேனியலா என்பவர் பிபிசிக்கு கூறினார். "அனைத்தும் முழு இருளில் மூழ்கியது. அருகில் குண்டுவெடிப்புகளால் ஏற்பட்ட வெளிச்சமே ஒரே ஒளியாக இருந்தது".

"அபார்ட்மெண்ட் வாட்ஸ்ஆப் குழுவில் ஒருவருக்கொருவர் செய்தி அனுப்பிக் கொண்டிருந்தனர். என்ன நடக்கிறது என்பதையே புரியாமல், அந்த சத்தங்களால் அனைவரும் பயந்திருந்தனர்" என்றும் அவர் கூறினார்.

கராகஸின் பல பகுதிகளில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகள், தீப்பற்றல்கள் மற்றும் புகை மேகங்களை காட்டும் பல காணொளிகளை பிபிசி வெரிஃபை ஆய்வு செய்து, சரியாக எந்த இடங்கள் இலக்காகத் தாக்கப்பட்டன என்பதைக் கண்டறிந்துள்ளது.

இதுவரை, ஜெனரலிசிமோ பிரான்சிஸ்கோ டி மிராண்டா விமானப்படைத் தளம், லா கார்லோட்டா என அறியப்படும் விமானத் தளம், லா குவாய்ரா துறைமுகம் உள்ளிட்ட ஐந்து இடங்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன என்பதை அது உறுதிப்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம்,Reuters

அமெரிக்க தாக்குதல்களில் சில வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பிற ராணுவ இலக்குகளைக் குறிவைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பணி தொடங்குவதற்கு முன்பு கராகஸில் உள்ள மின்சாரத்தை துண்டிக்க டிரம்ப் பரிந்துரைத்தார். இருப்பினும் அவர் எப்படி என்று குறிப்பிடவில்லை.

"எங்களிடம் உள்ள ஒரு குறிப்பிட்ட நிபுணத்துவம் காரணமாக கராகஸின் விளக்குகள் பெரும்பாலும் அணைக்கப்பட்டன. இது இருட்டாக இருந்தது மற்றும் அது கொடியது" என்று அவர் கூறினார்.

'நாங்கள் வருவது அவர்களுக்குத் தெரியும்'

கராகஸின் பல பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்த வேளையில், அமெரிக்கப் படைகள் நகருக்குள் நுழைந்தன. அதில், அமெரிக்க ராணுவத்தின் மிக உயரிய சிறப்பு நடவடிக்கை அலகான டெல்டா ஃபோர்ஸின் உறுப்பினர்களும் அடங்கியிருந்தனர் என்று, பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ்-க்கு தகவல் அளித்த வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்கள் கனரக ஆயுதங்களுடன் இருந்ததோடு, மதுரோவின் பாதுகாப்பு இல்லத்தின் உலோகக் கதவுகளை வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்குப் பயன்படுத்துவதற்காக ஒரு ப்ளோடோர்ச்சையும் எடுத்துச் சென்றிருந்தனர்.

ஜெனரல் கெய்னின் தகவலின்படி, உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:01 மணிக்கு தாக்குதல்தொடங்கிய பிறகு, அந்தப் படையினர் மதுரோ இருந்த இடத்தை அடைந்தனர். கராகஸின் மையப் பகுதியில் அமைந்துள்ள அந்தப் பாதுகாப்பு இல்லத்தை, கடுமையாக பாதுகாக்கப்பட்ட ராணுவ கோட்டை என்று டிரம்ப் விவரித்தார்.

"அவர்கள் எங்களுக்காகத் தயாரான நிலையில் காத்திருந்தார்கள். நாங்கள் வருவதை அவர்கள் அறிந்திருந்தார்கள்" என்று அவர் கூறினார்.

படைகள் அங்கு வந்தவுடன் எதிர்தாக்குதல் நடந்தது.. ஒரு அமெரிக்க ஹெலிகாப்டர் தாக்கப்பட்டாலும், அதனால் தொடர்ந்து பறக்க முடிந்தது. "மதுரோவின் வளாகத்திற்குள் நுழைந்த படை, வேகம், துல்லியம் மற்றும் ஒழுக்கத்துடன் செயல்பட்டது" என்று ஜெனரல் கெய்ன் தெரிவித்தார்.

"அவர்கள் அப்படியே உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்கள். உண்மையில் உடைக்க முடியாததாக அமைக்கப்பட்ட இடங்களையும் அவர்கள் உடைத்தனர். இதற்காகவே அமைக்கப்பட்டிருந்த எஃகு கதவுகளைக்கூட" என்று டிரம்ப் கூறினார்.

மதுரோவின் மனைவி சிலியா ஃப்ளோரஸும் பிடிபட்ட இந்த நடவடிக்கை நடைபெற்று கொண்டிருந்த போதுதான், வெளியுறவுத் துறை அமைச்சர் ரூபியோ இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் அளிக்கத் தொடங்கினார். இந்த முடிவு, நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

"நான் தெளிவாகச் சொல்கிறேன்: நிக்கோலஸ் மதுரோ ஒரு சட்டப்பூர்வமற்ற சர்வாதிகாரி. ஆனால் நாடாளுமன்றத்தின் அனுமதி இன்றியும், அதன் பின்பு என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்த திட்டமின்றியும் ராணுவ நடவடிக்கையை தொடங்குவது பொறுப்பற்ற செயல்," என்று செனட்டில் ஜனநாயகக் கட்சித் தலைவராக இருக்கும் சக் ஷூமர் கூறினார்.

முன்கூட்டியே நாடாளுமன்றத்திற்கு விளக்கம் அளித்திருந்தால், அந்த நடவடிக்கை ஆபத்துக்குள்ளாகியிருக்கும் என்று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரூபியோ தெரிவித்தார்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,வெனிசுவேலாவில் தலைநகர் கராகஸைச் சுற்றியுள்ள பல இடங்களை அமெரிக்கா தாக்கியது.

வெனிசுவேலா அதிபர் மதுரோ தன் வளாகத்திற்குள் அமெரிக்காவின் எலைட் படையினர் பெருமளவில் நுழைந்தபோது, ஒரு பாதுகாப்பு அறைக்குத் தப்பிச் செல்ல முயன்றதாக டிரம்ப் தெரிவித்தார்.

"அவர் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல முயன்றார். ஆனால் அது பாதுகாப்பான இடமல்ல. ஏனெனில், சுமார் 47 விநாடிகளில் அந்தக் கதவை நாங்கள் வெடிக்கச் செய்திருப்போம்," என்று அவர் கூறினார்.

மேலும், "அவர் கதவு வரை வந்தார். ஆனால் அதை மூட முடியவில்லை. அவ்வளவு வேகமாக அவரைச் சுற்றி நெருங்கிவிட்டார்கள். அதனால் அவர் அந்த அறைக்குள் செல்லவே முடியவில்லை" என்றும் அவர் கூறினார்.

2013-ஆம் ஆண்டு அதிபர் பதவியை ஏற்றுக்கொண்ட மதுரோ, கைது செய்யப்படும் போது எதிர்த்திருந்தால், அமெரிக்கா அவரை கொல்லக்கூடிய நிலையிலிருந்ததா என்ற கேள்விக்கு, "அது நடந்திருக்க வாய்ப்பு இருந்தது" என்று டிரம்ப் பதிலளித்தார்.

அமெரிக்கா தரப்பில் இரண்டு வீரர்கள் தாக்குதலுக்கு இலக்கானதாக அவர் கூறினார். ஆனால் எந்த அமெரிக்க வீரரும் உயிரிழக்கவில்லை. வெனிசுவேலா அதிகாரிகள் இதுவரை எந்த உயிரிழப்பையும் உறுதிப்படுத்தவில்லை.

மதுரோவைக் கைது செய்ய வழிவகுக்கும் தகவலைத் தந்தால் 5 கோடி அமெரிக்க டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் சனிக்கிழமை அதிகாலை உள்ளூர் நேரப்படி 4:20 மணிக்குள், மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸும் ஹெலிகாப்டர்களில் வெனிசுவேலா எல்லையை விட்டு வெளியேறப்பட்டனர்.

அவர்கள் அமெரிக்க நீதித்துறையின் காவலில், இறுதியாக நியூயார்க் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

சரியாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர், மதுரோவை சிறைபிடித்த செய்தியை டிரம்ப் உலகுக்கு அறிவித்தார்.

"மதுரோவும் அவரது மனைவியும் விரைவில் அமெரிக்க நீதியின் முழு வலிமையையும் எதிர்கொள்ளப் போகிறார்கள்" என்று அவர் கூறினார்.

கூடுதல் தகவல்கள்: ரிஸ்டோபல் வாஸ்கெஸ்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crmlzlyj29go

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

சரி பிழைக்கு அப்பால் - விசேட இராணுவ நடவைடிக்கையை அமெரிக்கா 2 மணி 30 நிமிடத்தில் முடித்துள்ளது.

ரஸ்யா உக்ரேனில் ஐந்து வருடமாக வைச்சு தாளிப்பதை போல அல்லாமல்😂.

அமெரிக்கா போல் அல்ல, புட்டினை நம்பினோர் கைவிடப்படுவதில்லை 😂

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனை நீ வச்சுக்கோ!தாய்வானை அவன்வச்சிருக்கட்டும்!!வெனிசுலாவை நான்வச்சிருக்கிறன். பட் இந்த டீல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

பேக்கரி டீல் ஓவர்.

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் கிந்தியாவுக்குத்தான் பேக்கரி டீல் போடவும், வீரம் விண்ணானம் காட்டவும், வச்சுக்கொள்ளவும் ஒன்றும் இல்லை போல.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, புலவர் said:

உக்ரைனை நீ வச்சுக்கோ!தாய்வானை அவன்வச்சிருக்கட்டும்!!வெனிசுலாவை நான்வச்சிருக்கிறன். பட் இந்த டீல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

பேக்கரி டீல் ஓவர்.

இதைத்தான் உக்ரேன் போர் ஆரம்பித்த நாளில் இருந்து எழுதுகிறேன்.

வல்(லூறு) அரசுகள் எப்போதும் வல்லூறுகளே.

இதில் நாம் ஒடுக்கப்படும் தேசிய இனங்களை ஆதரிப்பது மட்டுமே எடுக்க கூடிய ஒரே ஒரு நியாயமான நிலைப்பாடு.

இதை சொன்னால், புட்டின் மீதுள்ள அதீத காதலில், அல்லது மேற்கு வெறுப்பில் ஒரு பகுதியை மேற்கின் ஆதரவாளர் என பெயிண்ட் அடித்து, ரணகளம் பண்ணி விட்டார்கள்😂.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

ரஸ்யா செய்தால் தக்காளி சட்னி, அமெரிக்கா செய்தால் ரத்தம் என இருக்க முடியாது.

ஆனால் இதே அமெரிக்கா ரஸ்ய ஆக்கிரமிப்பு எதிராக பெருமளவு ஆயுதங்களையும் பொருளாதார உதவிகளையும் செய்தது ரஸ்யா உக்கிரேனை ஆக்கிரமிப்பது தவறானது என்று அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளான ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுத கபாருளாதார உதவிகளை வழங்கியதோடு ஐநாவை உடனடியாக கூட்டி பெரும்குற்றஞ்சாட்டுகளை ரஜயாவுக்கு எதிராக முன்வைத்தன. ஆனால் இப்போது எல்லோரும்நழுவல் போக்கில் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். ஐநாவும் ஒப்புக்கு அறிக்கையை விட்டுவிட்டு நித்திரைக்குப் போய்விட்டது. அமெரிக்கா வெனிசுலாலவை ஆதரித்ததற்கு கூறும் காரணம் முன்னுக்குப்பின் முரணானதும் ஏற்றுக்கொள்ள முடியாதததும் ஆகும். அமெரிக்கா தனது நாட்டுக்குள் போதை வஸ: கடத்தப்படுவதை அதன் எல்லைகளில் ஒழுங்கான பாதுகாப்பை வழங்காததே அதற்குக்காரணம். ஆகவே எந்த நாட்டில் இருந்து போதைப்பொருள் அமெரிக்காவுக்குள் வந்தாலும் அதற்கு அமெரிக்காவின் பாதுகாப்புக் குறைபாடே காரணம். வெனிசுலாலவை அமெரிக்கா அதன்அதிபரைக் கைது செய்தபின் அல்லது முற்றாக வெனிசுலாவை ஆக்கிரமித்தபின்னும் போதைப்பொருள் அமெpரிக்காவுக்குள் கடத்தப்படவில்லை என்று அமெரிக்காவால் உறுதியளிக்க முடியுமா? வேலியை சரியாகப் போடாமல் விட்டு விட்டு அடுத்தவன் தோட்டத்து மாடு எனது பயிரை மேய்ந்து விட்டது என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும.?அமெரிக்காவின் இந்த நடவடிக்கை எந்த ஒரு நாடும் எந்த ஒரு நாடடையும் ஒரு பலவீனமான குற்றச்சாட்டை வைத்து ஆக்கிரமிப்பதற்கு போதுமானதாகும்.ரஸ்யாவுக்கும் சீனாவுக்கும் ரூட்கிளியர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புலவர் said:

வெனிசுலாவில் அமெரிக்கா செய்வது பச்சை காடைத்தனம்.

இதை மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் ஐரோப்பா, யூகே, கனடா, அவுஸ், நியூசிலாந்த் வெளியிட்டுள்ள அறிக்கைகள் சுத்த பயந்தாங்கொள்ளி தனம்.

இரெட்டை நிலைப்பாட்டின் உச்சம்.

அமேரிக்கா போதை பொருள் கடத்தல் என சொல்வது பொய் சாட்டு.

அது உண்மை எனிலும் கூட…

ஒரு நாட்டின் தலைவரை இன்னொரு நாட்டின் உள்நாட்டு சட்டத்துக்கு அமைய, மற்றைய நாட்டில் புகுந்து தூக்கி வந்து வழக்கு போடுவது….

ஐநா சாசனத்தை மீறும் செயல்…

சர்வதேச சட்டத்துக்கு முரணானது….

நிச்சயமாக இது ரஸ்யா, சீனா வுக்கு மட்டும் அல்ல அகண்ட் பாரத் கனவில் இருக்கும் சங்கிகளுக்கு கூட எதிர்காலத்தில் இன்னொரு நாட்டில் அடாவடி செய்ய ஒரு ப்ளூ பிரிண்ட்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சண்டைப்பிரியனை அதிகாரத்தில் இருத்தியபோதே இவை எதிர்பார்க்கப்பட்டவை தான். இன்னும் வரும்......

எனக்கு வெனிசுவேலாவும் இரக்கமற்ற அரக்க நாடு தான்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விசுகு said:

ஒரு சண்டைப்பிரியனை அதிகாரத்தில் இருத்தியபோதே இவை எதிர்பார்க்கப்பட்டவை தான். இன்னும் வரும்......

எனக்கு வெனிசுவேலாவும் இரக்கமற்ற அரக்க நாடு தான்.

Sri Lanka’s Ambassador to Cuba, Sarath Dissanayake who is concurrently accredited to the Bolivarian Republic of Venezuela, presented his Letter of Credence to President of Venezuela, Nicolas Maduro Moros at a simple but elegant ceremony at the President’s Office in Caracas on 2nd October 2013. Earlier in the day, Ambassador handed over a copy of Credentials to Vice Foreign Minister of Venezuela, David Velasquez Caraballo at the Foreign Ministry following a luncheon hosted by the latter for the newly accredited envoys to Venezuela.

During a brief exchange of views and pleasantries with President Maduro, Ambassador Dissanayake conveyed President Mahinda Rajapaksa’s sincere greetings and warm wishes to President Maduro and the people of Venezuela. Recalling the deep rooted friendship and understanding nurtured between the late President Hugo Chavez and President Rajapaksa, Ambassador Dissanayake emphasized the commitment of Sri Lanka to build up even closer relations with Venezuela based on mutual trust, respect and shared values.

President Maduro, on his part commended President’s Rajapaksa’s steadfast and visionary leadership and also Sri Lanka’s post-conflict progress and developments that ushered in a new era for all Sri Lankans. He also noted Venezuela’s firm resolve to further strengthen multifaceted ties and cooperation in all areas of interest with Sri Lanka for mutual benefit.

http://www.mfa.gov.lk/images/stories/cuba200ara.jpg

The Venezuelan President extended his best wishes to President Rajapakse and the people of Sri Lanka for continued happiness, wellbeing and progress. Ambassador Dissanayake conveyed his sincere gratitude to President Maduro for the warm welcome and opportunity to meet him and present Credentials.

During his short stay in Caracas, Sri Lanka’s Ambassador took the opportunity to meet with few other Venezuelan officials and discussed Sri Lanka - Venezuela relations and issues of interest and concern to both countries. During discussions he also emphasized the significance of the upcoming Commonwealth Heads of Government Meeting (CHOGM) scheduled to be held in Sri Lanka from 12th-17th November 2013 and sought Venezuela’s participation at the Commonwealth Business Forum (CBF) which would bring together Heads of Government, Ministers and top business leaders from around the world including over a thousand delegates.

Embassy of Sri Lanka

Havana, Cuba

06th October 2013

  • கருத்துக்கள உறவுகள்

இதை ஈரானுடன் காட்டட்டு பார்ப்போம்.

காட்ட வெளிக்கிட்டு, இஸ்ரேல் வாங்கிய அடியில், அமெரிக்கா சண்டை நிறுத்தம் கேட்டது.

இவ்வளவும் இரானின் உயர்மட்ட இராணுவ தலைமைப்பீடம் அழிக்கப்பா போதும், அதை டதொடர்ந்த்து பார்சியில் ஈரான் அரசியால்/ இராணுவ தலைமை ப்பீடத்துக்கு 12 மணித்தியாலங்களுக்குள் ஓடுமாறு, இல்லை என்றால் பயங்கரவாதாமாக குடும்பத்துடன் அழிக்கப்படுவீர்கள் என்று எச்சரிக்காய் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு விடுத்த போதும்.

2 பெரும் இராணுவ சக்திகள் அசைக்க முடியாத இரான்.

"The twelve-day war on Iran produced two major unexpected results. With their superior airpower and the capacity to decapitate the Iranian military and intelligence apparatus, the Israelis expected a quick dismantling of the regime. They were confident enough to send a voice message to the key military leaders at the commence of operations – instructing them to step down or be killed along with their entire families. The message, leaked to the Washington Post, heard in Farsi, warned: “I can advise you now, you have 12 hours to escape with your wife and child,” said an intelligence operative, whose voice had been altered in the recording. “Otherwise, you’re on our list right now.” Not only did the Iranian military leaders reject that “advice,” but they pulled their wounded command structure together and launched formidable counter offensive missile attacks. Iran inflicted unprecedented destruction deep inside Israel, forcing the Israelis to ask the U.S. for a more direct involvement in the war. As they faced an alarming depletion of their anti-missile interceptors, the Israelis pleaded for an immediate ceasefire. A week into the war, Iran managed to breach the supposedly impenetrable Israeli “iron dome” air defense system."

CounterPunch.org
No image preview

Iran and the Price of Sovereignty: What It Takes Not to B...

On June 12, 2025, for the first time after more than twenty years, the International Atomic Energy Agency (IAEA) board of governors passed a resolution declaring that Tehran was breaching its non-prol

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயம் said:

பாவம் கிந்தியாவுக்குத்தான் பேக்கரி டீல் போடவும், வீரம் விண்ணானம் காட்டவும், வச்சுக்கொள்ளவும் ஒன்றும் இல்லை போல.

1987 இல் ஆசைக்கு வடகிழக்கை வைத்திருந்தவர்கள் தானே.

இந்தவருடம் இலங்கையை யார் வைத்திருப்பார்கள்.

திருகோணமலையை அமெரிக்கா வைத்திருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா அறிவிப்புகள் போன்றவற்றில் இருந்து தெரிவது, (இங்கே சொல்லப்படுவது போல) அமெரிக்கா ஒருபோதும் குழம்பவும் இல்லை, குழப்பப்படவும் முடியாது என்று.

ஆனால், அமெரிக்கா பலம் ஒப்பீட்டளவில் குறைகிறது, அமெரிக்கா சொல்வததை போல மேற்கு கோளத்தில் அமெரிக்கா அசைக்க முடியாக சக்தி என்பது முன்பு அமெரிக்கா குறிப்பறிந்து நடந்தது,

இப்பொது, இராணுவபலம் கொண்டும், வெனிசுவேலாவை அடக்கமுடியாத நிலை.

அனால், அமெரிக்காவின் இப்போதை போக்கில், ஈரான் போன்ற அரசுகளே தாக்குப்பிடிக்கும். 2 பெரும் இராணுவ சக்திகள் அசைக்க முடியாத இரான்.

வெளியே சொல்லப்படாத அமெரிக்கா கொள்கை, இறைமை நிலபுல ஒருமைப்பாட்டை பாதுகாக்க கூடிய அரசுகளே, அவற்றுக்கு உரிமை கொண்டாட முடியும்.

(அப்படி இல்லையேல், மற்ற அரசுகள், குறிப்பாக அமெரிக்கா சொல்லவதை கேட்க வேண்டும்)

முன்பும் இதே தான் கொள்கை, ஆனால் மற்ற அரசுக்கள் எதிர்காத படியால் வெளியில் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சுருக்கம்

வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைப்பற்றப்பட்ட நிலையில் அமெரிக்காவின் மன்ரோ கோட்பாடு என்ன? இந்த விளக்கவுரை, மன்ரோ கோட்பாடு, அதன் தோற்றம், அமெரிக்க கொள்கையில் அதன் பங்கு மற்றும் வெனிசுலா சம்பந்தப்பட்ட ச ..

Read more at:
https://economictimes.indiatimes.com/news/international/us/what-is-the-monroe-doctrine-of-the-us-as-venezuelas-president-nicholas-maduro-is-captured-us-foreign-policy-idea-explosions-in-caracas-latin-america-region-where-the-us-claims-security-interests/articleshow/126321781.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

அமெரிக்க வெளியுறவு கொள்கை பற்றி முன்னரே வேறு ஒரு திரியில் .

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க வெளியுறவு கொள்கை பற்றி முன்னரே வேறு ஒரு திரியில் .

'டோன்ரோ கோட்பாடு' அமெரிக்கா முழுவதும் புதிய பிளவை விதைக்கிறது
வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கும், அதன் ஜனாதிபதி கடத்தலுக்கும் பிராந்தியம் முழுவதும் உள்ள தலைவர்கள் பாராட்டு மற்றும் கண்டனம் இரண்டையும் தெரிவித்து வருகின்றனர்.

82442.jpeg

தாமஸ் கிரஹாமின் புகைப்படம்

தாமஸ் கிரஹாம்

அமெரிக்கா

வெனிசுலா

லத்தீன் அமெரிக்கா

நிக்கோலஸ் மதுரோ

தொடர்புடைய கட்டுரைகள்:

WEB_032404.26004030733681-1.260040307336

மதுரோவைக் கைப்பற்றும் நடவடிக்கை எவ்வாறு நடந்தது

82468.jpeg

கியூபா, கொலம்பியா, கனடா, கிரீன்லாந்து...? 'சமாதானத்தின் ஜனாதிபதி' அடுத்து எங்கு தாக்குவார்?

பகிர்

அமெரிக்க இராணுவம் வெனிசுலாவைத் தாக்கி அதன் தலைவர் நிக்கோலஸ் மதுரோவைப் பதவி நீக்கம் செய்த செய்தியைக் கேட்டு லத்தீன் அமெரிக்கா விழித்தெழுந்தவுடன், பிராந்தியம் முழுவதும் உள்ள தலைவர்களிடமிருந்து உடனடி எதிர்வினை கொண்டாட்டம் முதல் கண்டனம் வரை பரவியது.

அமெரிக்காவிற்கு போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில், டிரம்ப் நிர்வாகம் தெற்கு கரீபியனில் இராணுவ சொத்துக்களைக் குவிக்கத் தொடங்கியது. ஆனால் மதுரோவே போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் என்று அது குற்றம் சாட்டியபோது, வெனிசுலாவில் ஆட்சி மாற்றமே உண்மையான நோக்கமாக இருக்கலாம் என்று பலர் முடிவு செய்தனர்.

மதுரோவைப் பிரித்தெடுத்தல் "டோன்ரோ கோட்பாட்டின்" ஒரு கொடூரமான தெளிவான நிரூபணமாகும்: டொனால்ட் டிரம்ப் 1823 மன்ரோ கோட்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்தார், அதில் அமெரிக்கா அமெரிக்காவை அதன் இணைப்பாகக் குறித்தது - மேலும் பலவந்தமாக தனது விருப்பத்தைத் திணிக்கத் தயாராக இருந்தது.

அமெரிக்க தலையீடுகள் குறித்து இப்பகுதி நீண்ட காலமாக எச்சரிக்கையாக இருந்து வந்தாலும், கிட்டத்தட்ட 8 மில்லியன் வெனிசுலா மக்கள் குடியேறிய தனது நாட்டின் பொருளாதார சரிவுக்கு தலைமை தாங்கிய மதுரோ, செல்வாக்கற்ற, தனிமைப்படுத்தப்பட்ட தலைவராக மாறிவிட்டார்.

இருப்பினும், அமெரிக்க தலையீட்டிற்கு கடுமையான கண்டனம் பிரேசிலிடமிருந்து வந்தது, அதன் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, அமெரிக்கா "ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கோட்டை" தாண்டிவிட்டதாகக் கூறினார்.

"இந்த செயல்கள் வெனிசுலாவின் இறையாண்மைக்கு ஒரு பெரிய அவமானத்தையும், முழு சர்வதேச சமூகத்திற்கும் மற்றொரு மிகவும் ஆபத்தான முன்னுதாரணத்தையும் பிரதிபலிக்கின்றன" என்று லூலா X இல் எழுதினார்.

'இந்த செயல்கள் வெனிசுலாவின் இறையாண்மைக்கு பெரும் அவமானத்தை பிரதிபலிக்கின்றன'

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா

அமெரிக்காவிற்கு போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் தனித்து நிற்கும் இரண்டு நாடுகளான மெக்சிகோ மற்றும் கொலம்பியாவும் சர்வதேச சட்டத்தை மேற்கோள் காட்டி இந்த நடவடிக்கையை கண்டித்தன.

கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, டிரம்புடன் ஆன்லைனில் சண்டையிடுவதை வழக்கமாகக் கொண்டவர், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்க நாடுகளின் அமைப்பின் உடனடி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார், அதே நேரத்தில் X குறித்த கருத்துக்களை மீண்டும் வெளியிட்டார், இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் அகதிகள் வருகை குறித்த கவலைகளுக்கு மத்தியில் வெனிசுலாவுடனான நாட்டின் எல்லைக்கு துருப்புக்களை அனுப்பியது என்றும் விவரித்தார்.

இதற்கிடையில், மெக்சிகன் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் பார்டோ நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையை குறிப்பிட்டார்: “தற்போதுள்ள வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கான ஒரே சட்டபூர்வமான மற்றும் பயனுள்ள வழிமுறைகள் உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தை மட்டுமே என்பதை மெக்சிகோ உறுதியாக மீண்டும் வலியுறுத்துகிறது, எனவே பிராந்திய அமைதியைப் பாதுகாப்பதற்கும் மோதலைத் தவிர்ப்பதற்கும் பங்களிக்கும் உரையாடல், மத்தியஸ்தம் அல்லது துணையை எளிதாக்குவதற்கான எந்தவொரு முயற்சியையும் ஆதரிக்க அதன் விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.”

கியூபாவின் ஜனாதிபதி, ஒருவேளை இந்தப் பிராந்தியத்தில் மதுரோவின் ஒரே தீவிர கூட்டாளியாக இருக்கலாம், அமெரிக்காவின் "குற்றவியல் தாக்குதலுக்கு" எதிராக சர்வதேச சமூகத்திடமிருந்து "அவசர" பதிலை கோரினார். "நமது #சமாதான மண்டலம் கொடூரமாக தாக்கப்படுகிறது. துணிச்சலான வெனிசுலா மக்களுக்கு எதிராகவும் நமது அமெரிக்காவிற்கு எதிராகவும் அரசு பயங்கரவாதம்" என்று மிகுவல் டியாஸ்-கேனல் X இல் எழுதினார்.

'வெனிசுலா மக்களுக்கு: உங்கள் நாட்டை மீட்டெடுக்க வேண்டிய நேரம் இது'

ஈக்வடார் அதிபர் டேனியல் நோபோவா

மறுபுறம், வெனிசுலா மக்கள் மீதான மதுரோ ஆட்சியின் அடக்குமுறையையும், 2024 தேர்தலில் அது பெற்ற மோசடி வெற்றியையும் மேற்கோள் காட்டி, பிராந்தியத்தில் டிரம்பின் சித்தாந்த கூட்டாளிகள் இந்த நடவடிக்கையைக் கொண்டாடினர்.

"சுதந்திரம் முன்னேறுகிறது. சுதந்திர அழிவு வாழ்க" என்று அர்ஜென்டினாவின் சுதந்திரவாத ஜனாதிபதி ஜேவியர் மிலேய் X இல் எழுதினார்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஒரு வலதுசாரி அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்த பொலிவியா - பிராந்தியத்தை டிரம்பை நோக்கித் திருப்பிய தொடர்ச்சியான தேர்தல்களில் ஒன்று - வெனிசுலா மக்களுக்கு தனது ஆதரவை அறிவித்ததுடன், தற்போதைய நெருக்கடிக்கு மதுரோ மற்றும் அவரது சித்தாந்த தந்தை ஹ்யூகோ சாவேஸின் அரசியல் இயக்கத்தைக் குற்றம் சாட்டியது, அவர் ஒரு "போதைப்பொருள் நாட்டை" உருவாக்கியதாகக் கூறியது.

ஈக்வடார் ஜனாதிபதி டேனியல் நோபோவா, வெனிசுலாவின் நாடுகடத்தப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை திரும்பி வந்து ஆட்சியைக் கைப்பற்றுமாறு அழைப்பு விடுத்தார். “[மரியா] கொரினா மச்சாடோ, எட்முண்டோ கோன்சாலஸ் மற்றும் வெனிசுலா மக்களுக்கு: உங்கள் நாட்டை மீட்டெடுக்க வேண்டிய நேரம் இது,” என்று அவர் X இல் எழுதினார். “உங்களுக்கு ஈக்வடாரில் ஒரு நட்பு நாடு உள்ளது.”

கடந்த ஆண்டு தேர்தலில், போட்டியிட தடை விதிக்கப்பட்ட மச்சாடோவின் ஆதரவாளர்கள், 80% க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் இருந்து வாக்குச் சாவடிகளைச் சேகரித்தனர், அதில், எதிர்க்கட்சி வேட்பாளரான கோன்சாலஸ், மதுரோவை விட இரண்டு மடங்கு அதிக வாக்குகளைப் பெற்றதாகக் காட்டப்பட்டது. இருப்பினும், மதுரோ 51% வாக்குகளைப் பெற்றதாகக் கூறி போராட்டங்களை ஒடுக்கினார்.

https://observer.co.uk/news/international/article/the-donroe-doctrine-sows-new-division-across-the-americas

வெனிசுலா நடவடிக்கைக்குப் பிறகு அமெரிக்கா "அடுத்து என்ன செய்வது என்று தெரியும்" என்று ஜெலென்ஸ்கி கூறுகிறார்

Serhiy Sydorenko, KATERYNA TYSHCHENKO — 3 ஜனவரி, 21:06

வெனிசுலா நடவடிக்கைக்குப் பிறகு அடுத்து என்ன செய்வது என்று அமெரிக்காவுக்குத் தெரியும் என்று ஜெலென்ஸ்கி கூறுகிறார்

வோலோடிமிர் ஜெலென்ஸ்கி. புகைப்படம்: உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம்

136123 தமிழ்

வெனிசுலாவில் சர்வாதிகாரிகளை எவ்வாறு கையாள்வது என்பதற்கான பாடப்புத்தக உதாரணத்தை அமெரிக்கா வழங்கியுள்ளதாகவும், "அடுத்து என்ன செய்வது என்று அமெரிக்காவுக்குத் தெரியும்" என்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

மூலம் : கூட்டாளி நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து ஒரு மாநாட்டில் ஜெலென்ஸ்கி.

விவரங்கள் : ஜனாதிபதியின் கருத்துக்கள் உக்ரைனின் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ பதிலுடன் இணைந்தன , இது வெனிசுலாவில் அமெரிக்காவின் சிறப்பு நடவடிக்கைக்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை மற்றும் வெனிசுலா ஆட்சியின் சட்டவிரோதத்தை மீண்டும் வலியுறுத்தியது.

ஜெலென்ஸ்கியின் மேற்கோள் : "சரி, நான் என்ன சொல்ல முடியும். சர்வாதிகாரிகளை இந்த வழியில் சமாளிக்க முடிந்தால், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அமெரிக்கா அறிந்திருக்கிறது."

விவரங்கள் : ஜெலென்ஸ்கி ரஷ்யாவையோ அல்லது அதன் சட்டவிரோதத் தலைவர் விளாடிமிர் புடினையோ நேரடியாகக் குறிப்பிடுவதைத் தவிர்த்தார், ஆனால் அவரது கருத்தின் சூழல் அவர் அவரைக் குறிப்பிடுகிறார் என்பதைத் தெளிவுபடுத்தியது.

பின்னணி :

  • வெனிசுலாவில் அமெரிக்க நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா , நிக்கோலஸ் மதுரோவின் ஜனாதிபதி பதவியின் சட்டவிரோதத்தை நினைவு கூர்ந்தார்.

  • ஜனவரி 3 சனிக்கிழமையன்று, கடந்த காலங்களில் இதேபோன்ற பணிகளை மேற்கொண்ட உயரடுக்கு டெல்டா படை , வெனிசுலாவின் தலைவர் நிக்கோலஸ் மதுரோவைக் கைப்பற்றி நாட்டிலிருந்து வெளியேற்றியது.

  • பின்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிடிபட்ட மதுரோவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

https://www.pravda.com.ua/eng/news/2026/01/03/8014528/

  • கருத்துக்கள உறவுகள்
Al Jazeera
No image preview

China fears spark Indian race for cobalt in contested oce...

India has sought rights to explore an underwater cobalt-rich mountain. But Sri Lanka also has eyes on the region.

இலங்கைக்கு அணமையாக உள்ள கோபால்ட் கனிமவள கட்ல் மலையையைப்பற்றி ட்ரம்மின் காதில் போட்டு விட்டால் என்ன?

இந்துப் பெருங்கடல் கடலடி கனிமவள மலைக்கான போட்டி இவ்வருடம் தீவிரமாகலாம்.

இலங்கைக்கு தெற்கே சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோபால்ட் கனிமவள மலையை இந்தியா அடைவதற்கு எடுத்த முயற்சியை இதுவரை இலங்கை சிறப்பாக ஆப்பு வைத்து தடுத்துள்ளது.

இலங்கையின் தென்முனையான தெய்வந்துறைக்கும் இந்தக் கனிமவள மலைக்கும் உள்ள தூரத்தைவிட வடக்குக் கிழக்கு தமிழர் தாயகத்தின் தென்முனையான குமணவுக்கும் இந்த மலைக்கும் உள்ள தூரம் குறைவு.ஏனென்றால் இந்த மலைப் பகுதி இலங்கைக்கு சரியாக நேர் தெற்கே இல்லாமல் தெற்கே சற்றுக் கிழக்காக உள்ளது.

இந்தியா எமக்கு வைத்ததாக நினைத்த ஆப்புகள் எல்லாம் தனக்குத்தானே வைத்துக்கொண்ட வெடிகுண்டுகள் என்பதை காலம் ஒவ்வொன்றாக நிரூபித்து வருகிறது.அந்தப் பட்டியலில் இந்தக் கோபால்ட் மலை இழப்பும் சேரப்போகிறது.

கோபால்ட் மலைக்கான போட்டி குறித்து சென்ற ஆண்டு அல் ஜஸீராவில் வந்த செய்திக் கட்டுரையின் இணைப்பு

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

அமெரிக்கா போல் அல்ல, புட்டினை நம்பினோர் கைவிடப்படுவதில்லை 😂

🤣

புட்டின் ஒரு நம்ப தகாதவர் என்ற உண்மையை முதலே விளங்கி கொண்ட அந்த அறிவுஜீவிகள் யார்

புட்டினின் ஈழ தமிழ் காதலர்கள்

ஆனால் காதலனின் நாட்டின் பக்கம் தலை கூட வைத்து படுக்க மாட்டார்கள் மேற்குலகநாடுகளில் விரும்பி வாழ்பவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பனிப்போர் காலகட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்ட குறைந்த பட்ச அனைத்துலக மற்றும் ஐநா சாசனங்கள் பனிப்போரிற்கு பின்னர் தேவையற்று போய்விட்டது.

ஆனாலும் ஒற்றை துருவ அமெரிக்க ஏகாதிபத்திய உலக ஒழுங்கில் குறைந்த பட்ச தார்மீக சிந்தனையினடிப்படையில் மனித உரிமைகளை வெளித்தோற்றத்திற்கேனும் கண்டிக்க வேண்டிய தார்மீக தேவை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு காணப்பட்டது.

அதனால் அமெரிக்கா பயன்படுத்திய பின்னோக்கிய இராஜதந்திரம் என்பது சர்வதேச சட்ட விரோதங்கள் ஐநா சாசன விரோதமான விடயங்களை கண்டிக்கும் அதே நேரத்தில் பின் கதவு வழியான இராஜதந்திரம் மூலம் தனிப்பட்ட நபர்கள் அல்லது சர்ச்சைகுரிய நாடுகளினூடாக (இதற்கு உதாரணமாக இந்திய அரசியலில் சுப்பிரமணியசுவாமியினை குறிப்பிடலாம்) குறித்த சர்வதேச சட்டவிர்ரோத மற்றும் ஐநா சாசன விரோத நடவடிக்கைகளை முன்னெடுப்பது.

ஆனால் பாதிக்கப்படும் பிரிவினர் வல்லரசே எமக்கு பின்னால் இருக்கிறது என எண்ணிக்கொண்டிருப்பார்கள், ஆனால் அவர்கள் உண்மையினை உணரும் போது காலதாமாகிவிடும்.

தற்போதய உலக ஒழுங்கு ஒரு வேறுபட்ட உலக ஒழுங்கு.

நாம் 3 வேற்பட்ட உலக ஒழுங்குகளின் போக்கினில் வாழ்கின்ற சந்ததி, இந்த கால மாற்றத்தினை உணராவிட்டால், நட்டம் எமக்குத்தான்.

அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை நிரந்தர நண்பனுமில்லை.

இங்கு fair என்பது subjective.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

சரி பிழைக்கு அப்பால் - விசேட இராணுவ நடவைடிக்கையை அமெரிக்கா 2 மணி 30 நிமிடத்தில் முடித்துள்ளது.

ரஸ்யா உக்ரேனில் ஐந்து வருடமாக வைச்சு தாளிப்பதை போல அல்லாமல்😂.

அமெரிக்கா போல் அல்ல, புட்டினை நம்பினோர் கைவிடப்படுவதில்லை 😂

17 minutes ago, vasee said:

பனிப்போர் காலகட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்ட குறைந்த பட்ச அனைத்துலக மற்றும் ஐநா சாசனங்கள் பனிப்போரிற்கு பின்னர் தேவையற்று போய்விட்டது.

ஆனாலும் ஒற்றை துருவ அமெரிக்க ஏகாதிபத்திய உலக ஒழுங்கில் குறைந்த பட்ச தார்மீக சிந்தனையினடிப்படையில் மனித உரிமைகளை வெளித்தோற்றத்திற்கேனும் கண்டிக்க வேண்டிய தார்மீக தேவை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு காணப்பட்டது.

அதனால் அமெரிக்கா பயன்படுத்திய பின்னோக்கிய இராஜதந்திரம் என்பது சர்வதேச சட்ட விரோதங்கள் ஐநா சாசன விரோதமான விடயங்களை கண்டிக்கும் அதே நேரத்தில் பின் கதவு வழியான இராஜதந்திரம் மூலம் தனிப்பட்ட நபர்கள் அல்லது சர்ச்சைகுரிய நாடுகளினூடாக (இதற்கு உதாரணமாக இந்திய அரசியலில் சுப்பிரமணியசுவாமியினை குறிப்பிடலாம்) குறித்த சர்வதேச சட்டவிர்ரோத மற்றும் ஐநா சாசன விரோத நடவடிக்கைகளை முன்னெடுப்பது.

ஆனால் பாதிக்கப்படும் பிரிவினர் வல்லரசே எமக்கு பின்னால் இருக்கிறது என எண்ணிக்கொண்டிருப்பார்கள், ஆனால் அவர்கள் உண்மையினை உணரும் போது காலதாமாகிவிடும்.

தற்போதய உலக ஒழுங்கு ஒரு வேறுபட்ட உலக ஒழுங்கு.

நாம் 3 வேற்பட்ட உலக ஒழுங்குகளின் போக்கினில் வாழ்கின்ற சந்ததி, இந்த கால மாற்றத்தினை உணராவிட்டால், நட்டம் எமக்குத்தான்.

அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை நிரந்தர நண்பனுமில்லை.

இங்கு fair என்பது subjective.

நான் நினைக்கிறேன் இரஸ்சியா அமெரிக்காவின் இரகசிய கூட்டாளி🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

1987 இல் ஆசைக்கு வடகிழக்கை வைத்திருந்தவர்கள் தானே.

இந்தவருடம் இலங்கையை யார் வைத்திருப்பார்கள்.

திருகோணமலையை அமெரிக்கா வைத்திருக்குமோ?

அது அப்ப. இப்ப தொல்பொருள் திணைக்களத்திற்குத்தான் எல்லாம் சொந்தம். அமெரிக்கா, இந்தியா இனி தொல்பொருள் திணைக்களத்துடன்தான் பேரம் பேச வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, vasee said:

நான் நினைக்கிறேன் இரஸ்சியா அமெரிக்காவின் இரகசிய கூட்டாளி🤣

அமெரிக்கா, ரஸ்யா அல்ல,

புட்டினின் ரகசிய ஏஜெண்ட் டிரம்ப்.

அமெரிக்கா இப்போதும் சீனா, ரஸ்யாவை விட பல மடங்கு இராணுவ பலம் கொண்டுதான் உள்ளது….

ஆனால் அரசியல் ரீதியாக, பூகோள ரீதியாக, இராஜதந்திர ரீதியாக அமெரிக்கா மிகவும் அடிவாங்குகிறது.

இந்தியா முதல் ஐரோப்ப ஒன்றியம் நேட்டோ வரை நண்பர்களை அமெரிக்கா பகைவர்களாக்குகிறது…

அப்பட்டமாக சர்வதேச சட்டத்தை வெனிசுவேலாவில் மீறி அமெரிக்கா 2ம் உலக போருக்கு பின் கட்டமைத்த rules based system என அவர்கள் சொல்லிக்கொள்ளும் அமைப்பை அவர்களே போட்டுடைக்கிறார்கள்.

அடுத்து கீரீன் லாந்தில் கைவைக்கலாம்…

அத்தோடு ஐரோப்பா+அமெரிக்கா இடையான பாரம்பரிய உறவு மீட்க முடியாதவாறு உடையும்.

அதே போல் கிம் ஜப்பான் கடலில் ஏவுகணை விட்டாலும்….

குறித்து வைத்து கொள்ளுங்கள்…

சீனா தாய்வானை பிடிக்கும் போதும்…

அமெரிக்கா முன்னர் போல் எதிர்வினை காட்டாது.

இஸ்ரேலை தவிர அமெரிக்காவின் ஏனைய சகல நட்புந்நடுகளில் இருந்தும் அமெரிக்காவை பிரித்து எடுத்து தனியாக்குவதே டிரம்பிற்கு கொடுக்கப்பட்டுள்ள வேலை.

பொதுவாக சதிகோட்பாட்டை யாழில் எழுதுவது இன்னொருவரின் வேலை😂.

ஆனால் இந்த விடயத்தில் இதுதான் நடக்கிறது என்பதை நான் ஊகிக்கிறேன்.

Majorie Green Taylor போன்ற MAGA வின் அச்சாணியாக இருந்த டிரம்ப் ஆதரவாளர் கூட இப்போ டிரம்பை மிக கடுமையாக எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.

தாமதமாகவேனும் இதை விளங்கி கொண்டனர் என நினைக்கிறேன்.

ஐரோப்பிய தலைவர்கள் இதை எப்போதோ புரிந்து கொண்டார்கள் என நினைக்கிறேன்.

கிரேக்க புராணத்தில் Trojan Horse என ஒரு கதைவரும். அதன் ஒட்டியே கம்யூட்டர் வைரஸ் கூட டிரோஜன் என அழைக்கப்படும்.

அப்படி அமெரிக்காவின் அகொ உச்ச பவர் செண்டருக்குள் புட்டினால் புகுத்த பட்ட டிரோஜந்தான் டிரம் என்பது என் கணிப்பு.

இது நாட்கள் போக போக அதிகரிக்கிறதே அன்றி குறையவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
56 minutes ago, vasee said:

நான் நினைக்கிறேன் இரஸ்சியா அமெரிக்காவின் இரகசிய கூட்டாளி🤣

உலக அரசியலில் ரஷ்யாவும் அமெரிக்காவும் நிறுத்தி நிதானித்து அமைதியாக செயற்படுகின்றார்கள். இடையில் இருப்பவர்கள் தான் பொங்கி எழுகின்றார்கள்.

எதிரியாக இருந்தாலும் சீன வளர்ச்சி விடயத்தில் ஒருவரை ஒருவர் கட்டியணைக்க வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு.....

அமெரிக்க ஆகாயத்தில் பலூன் பறக்க விட்டு அழகு பார்த்தவன் சீனன். அவனுக்கு அமெரிக்க நடவடிக்கைகளை கண்காணிக்க தனி செய்மதி தேவையில்லை.😂

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

அமெரிக்கா, ரஸ்யா அல்ல,

புட்டினின் ரகசிய ஏஜெண்ட் டிரம்ப்.

அமெரிக்கா இப்போதும் சீனா, ரஸ்யாவை விட பல மடங்கு இராணுவ பலம் கொண்டுதான் உள்ளது….

ஆனால் அரசியல் ரீதியாக, பூகோள ரீதியாக, இராஜதந்திர ரீதியாக அமெரிக்கா மிகவும் அடிவாங்குகிறது.

இந்தியா முதல் ஐரோப்ப ஒன்றியம் நேட்டோ வரை நண்பர்களை அமெரிக்கா பகைவர்களாக்குகிறது…

அப்பட்டமாக சர்வதேச சட்டத்தை வெனிசுவேலாவில் மீறி அமெரிக்கா 2ம் உலக போருக்கு பின் கட்டமைத்த rules based system என அவர்கள் சொல்லிக்கொள்ளும் அமைப்பை அவர்களே போட்டுடைக்கிறார்கள்.

அடுத்து கீரீன் லாந்தில் கைவைக்கலாம்…

அத்தோடு ஐரோப்பா+அமெரிக்கா இடையான பாரம்பரிய உறவு மீட்க முடியாதவாறு உடையும்.

அதே போல் கிம் ஜப்பான் கடலில் ஏவுகணை விட்டாலும்….

குறித்து வைத்து கொள்ளுங்கள்…

சீனா தாய்வானை பிடிக்கும் போதும்…

அமெரிக்கா முன்னர் போல் எதிர்வினை காட்டாது.

இஸ்ரேலை தவிர அமெரிக்காவின் ஏனைய சகல நட்புந்நடுகளில் இருந்தும் அமெரிக்காவை பிரித்து எடுத்து தனியாக்குவதே டிரம்பிற்கு கொடுக்கப்பட்டுள்ள வேலை.

பொதுவாக சதிகோட்பாட்டை யாழில் எழுதுவது இன்னொருவரின் வேலை😂.

ஆனால் இந்த விடயத்தில் இதுதான் நடக்கிறது என்பதை நான் ஊகிக்கிறேன்.

Majorie Green Taylor போன்ற MAGA வின் அச்சாணியாக இருந்த டிரம்ப் ஆதரவாளர் கூட இப்போ டிரம்பை மிக கடுமையாக எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.

தாமதமாகவேனும் இதை விளங்கி கொண்டனர் என நினைக்கிறேன்.

ஐரோப்பிய தலைவர்கள் இதை எப்போதோ புரிந்து கொண்டார்கள் என நினைக்கிறேன்.

கிரேக்க புராணத்தில் Trojan Horse என ஒரு கதைவரும். அதன் ஒட்டியே கம்யூட்டர் வைரஸ் கூட டிரோஜன் என அழைக்கப்படும்.

அப்படி அமெரிக்காவின் அகொ உச்ச பவர் செண்டருக்குள் புட்டினால் புகுத்த பட்ட டிரோஜந்தான் டிரம் என்பது என் கணிப்பு.

இது நாட்கள் போக போக அதிகரிக்கிறதே அன்றி குறையவில்லை.

தைவான் தென்சீன கடலில் சீன பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு மிக முக்கிய அமைவிடம் அதனை அமெரிக்கா இலகுவாக கைவிடுமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.