Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcSQK-0Bj7u1SgetBTrjUCq

சுவிற்சர்லாந்தின் செங்காளன் மாநிலத்தின் முதல்வராக...

(City Parliament President) ஈழத்தமிழரான துரைராஜா ஜெயக்குமார் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

வாழ்த்துகள் ஜெயக்குமார்.

Inuvaijur Mayuran

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1769005112-26-6970220425eea.jpg

சுவிட்ஸர்லாந்தில் இலங்கைத் தமிழருக்குக் கிடைத்த கௌரவம் - குவியும் வாழ்த்துக்கள்

சுவிட்ஸர்லாந்தின் செயின்ட் கேலன் (St. Gallen) மாநிலத்தின் முதல்வராக சமூகநலன் செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார் அவர்கள் தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார்.

செயின்ட் கேலன் மாநிலத்தின் துணை முதல்வராக ஈழத்தமிழர் துரைராஜா ஜெயக்குமார் நியமிக்கப்பட்டிருந்தார்.

இவர், செயின்ட் கேலன் நகரசபை தேர்தலில் நான்கு தடவைகள் போட்டியிட்டு தொடராக வெற்றி வாகை சூடி 09 வருடங்கள் நகரசபை உறுப்பினராக கடமையாற்றியுள்ளார்.

துரைராஜா ஜெயக்குமார் நீண்ட காலமாக சுவிஸ் நாட்டில் உள்ள பசுமைக் கட்சியில் அங்கம் வகித்து வருகிறார்.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற அவையில் ஏனைய கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவருடன் இணைந்து பயணிக்கும் நண்பர்கள் கலந்து இந்நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.

நாடாளுமன்ற அவையில் திருக்குறளை மூன்று தடவைகள் முன்மொழிந்து டொச் மொழியிலும் விளக்கியுரைத்துடன் தமிழர் பண்பாட்டுடன் கூடிய இசையும் அவையரங்கில் வழங்கப்பட்டது.

HR Tamil News

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

619350849_894205696430935_48397852900455

இன்றைய Tages Blatt கட்டுரையின் தமிழாக்கம்.

ஜெயகுமார் துரைராஜா – செங்காலனின் புதிய உயரிய தலைவர்

«20 முறை இறந்திருக்கலாம்»

புதிய ஆண்டின் முதல் அமர்வில் செங்காலன் நகர பாராளுமன்றத்தில் பல பதவிகள் புதிதாக நிரப்பப்பட்டன. இதில், பசுமைக் கட்சி (Grüne) சார்ந்த ஜெயகுமார் துரைராஜா, நகர பாராளுமன்றத்தின் புதிய தலைவராக – அதாவது செங்காலனின் உயரிய பதவியாக – தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1988ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு அகதியாக வந்த, ஒருகாலத்தில் எந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களும் இல்லாத ஒரு தமிழர், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் செங்காலன் நகர பாராளுமன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் தான் ஜெயகுமார் துரைராஜா.

தேர்வுக்குப் பிறகு அவர் கூறியதாவது:

«என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய மரியாதை இதுவே.»

ஜெயகுமார் துரைராஜா 2011ஆம் ஆண்டு சுவிஸ் குடியுரிமை பெற்றார். 2016ஆம் ஆண்டு முதல் செங்காலன் நகர பாராளுமன்றத்தில் பசுமைக் கட்சியின் சார்பில் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மூன்று உறுப்பினர்கள் விலகியதைத் தவிர, எந்த எதிர்ப்பு வாக்குகளும் இன்றி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கு முன், பசுமைக் கட்சி மற்றும் இளைய பசுமைக் கட்சியின் பிரிவு தலைவர் கிறிஸ்டியான் ஹூபர், தேர்தல் பரிந்துரையை வழங்கினார். அவர் கூறியதாவது:

«செங்காலன் நகரில் நிரந்தரமாக வசிக்கும் மக்களில் மூன்றில் ஒருபங்கிற்கும் அதிகமானோர் சுவிஸ் குடியுரிமை இல்லாதவர்கள். 15 வயதுக்கு மேற்பட்ட மக்களுள் பாதிக்கும் மேற்பட்டோருக்கு குடியேற்றப் பின்னணி உள்ளது. எனவே இன்று ஒரு ‘கெல்லர்’ அல்லது ‘முல்லர்’ அல்லாமல், ஒரு ‘துரைராஜா’ செங்காலனின் உயரிய பதவிக்குத் தேர்வாகுவது விசேஷமான ஒன்றல்ல. இது இந்த நகரத்தின் மற்றும் இந்த நாட்டின் உண்மையான யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது.»

இந்த யதார்த்தம் எளிதாக உருவானதல்ல; அது முன்பும் இன்றும் போராட்டங்களுக்கு உள்ளாகி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ஜெயகுமார் துரைராஜாவின் அனுபவங்கள் தனிப்பட்டவை அல்ல; அவை சுவிட்சர்லாந்தின் குடியேற்ற வரலாற்றின் ஒரு பகுதியாகும்.

1960களில் வந்த இத்தாலிய காலாண்டுத் தொழிலாளர்கள் முதல், 1980களின் அகதி கொள்கைகள், பால்கன் நாடுகளிலிருந்து வந்த அகதிகள், இன்றைய போர் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வருபவர்கள் வரை—குடியேற்றம் பெரும்பாலும் ஒரு அச்சுறுத்தலாகவே பார்க்கப்பட்டதே தவிர, ஒரு செல்வமாக அரிதாகவே கருதப்பட்டது. இருந்தாலும், குடியேற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது; அது இன்றைய சமூகத்தின் இயல்பான ஓர் அங்கமாக உள்ளது.

«என் இலக்கு வாழ்க்கைத் தப்பிப்பதே»

பதவியேற்பு உரையில், பயிற்சி பெற்ற செவிலியராக இருந்து தற்போது சமூக ஆலோசகராக புதிய பாதையில் தன்னை அமைத்துக்கொண்டு வரும் ஜெயகுமார் துரைராஜா, உள்நாட்டுப் போர் நிலவிய தனது தாயகத்திலிருந்து தப்பியோடிய ஒரு இளைஞனின் கதையை கூறினார். அது உண்மையில், அவர் இளமையில் அனுபவித்த தனது சொந்தக் கதையே.

«நான் என் குடும்பத்தை, நண்பர்களை, எனக்குத் தெரிந்த அனைத்தையும் விட்டுவிட்டு புறப்பட்டேன். பெற்றோர்களும் இல்லை, உடன் பயணிக்க யாருமில்லை. என் இலக்கு ஒரு பதவி அல்லது தொழில்முறை வாழ்க்கை அல்ல; உயிர் தப்பிப்பதே என் ஒரே நோக்கம்.»

அவர் தொடர்ந்து கூறினார்:

«போரின் நடுவிலும், தப்பியோடும் பயணத்திலும், அறியாத எதிர்காலத்தை நோக்கிச் சென்ற வழியிலும், நான் 20 முறை இறந்திருக்கலாம். இருந்தும் உயிர் தப்பினேன்.»

அவரது வார்த்தைகள் மிகுந்த உணர்ச்சியை ஏற்படுத்தின. அவை பாராளுமன்ற உறுப்பினர்களின் மனங்களை ஆழமாகத் தொட்டன. செங்காலனில் அவர் தன்னை வளர்த்துக்கொள்ளவும், ஒரு குடும்பத்தை அமைக்கவும் முடிந்தது. அவர் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. தன்னை நம்பிய மனிதர்களை அவர் சந்தித்தார்; அந்த நம்பிக்கையே அவரை இன்று செங்காலனின் உயரிய பதவிக்கு கொண்டு வந்தது.

«இந்த நாட்டிலும், இந்த நகரமான செங்காலனிலும் வாழ முடிவது ஒரு பெரும் பாக்கியம். நன்றி, செங்காலன்» என்று அவர் கூறினார்.

அவர் ஒரு புகழ்பெற்ற தமிழ் இலக்கிய வரியை (திருக்குறளை) மேற்கோள் காட்டி, அதன் பொருளை விளக்கினார்:

«நன்றி உணர்வு கொண்டவர்களே முன்னேற முடியும்; மற்றவர்கள் முன்னேற முடியாது.»

பாராளுமன்ற உறுப்பினர்களை நேரடியாக நோக்கி அவர் கூறினார்:

«உங்கள் இந்தத் தேர்வின் மூலம், நீங்கள் எனக்கு ஒரு பெரிய மரியாதையை மட்டுமல்ல, ஒரு பொறுப்பையும் ஒப்படைத்துள்ளீர்கள்.»

பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதோடு, செங்காலன் நகரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கடமையும் தன்னிடம் இருப்பதாக அவர் நினைவூட்டினார். செங்காலன் ஒரு குடும்பநேய நகரம் என்றும், சமூக உணர்வும், விளையாட்டு-பண்பாட்டு சங்கங்களும், புதுமை, பசுமை, நிலைத்தன்மை மற்றும் பல்வகைத் தன்மையும் கொண்ட நகரம் என்றும் அவர் பாராட்டினார்.

«இந்த பல்வகைச் செங்காலனையும், செங்காலனுக்குள் உள்ள பல்வகைத் தன்மையையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்» என்று அவர் கூறினார்.

மரியாதை, நம்பிக்கை, மதிப்பு மற்றும் நன்றி – இவைதான் நம்மை முன்னேற்றும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து ஜெயகுமார் துரைராஜாவுக்கு நீண்ட நேரம் கரகோஷம் எழுந்தது.

நன்றி: Tages Blatt

தமிழில்: AI உதவியுடன் இணுவையூர் மயூரன்.

Inuvaijur Mayuran

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்து.

வழமை போலவே இதுவும் நம்மவர்களால் ஊதி பெருப்பிக்கப்படுவதாக எனக்கு படுகிறது.

நான் அறிந்த வகையில்.…

மாநிலம் என நாம் இந்திய, அமெரிக்க, கனடா வில் காண்பது போல் அல்ல சுவிசில். அங்கே கண்டோன் என்பது ஒரு நகரம் அளவிலான சமஸ்டி அலகு. உதாரணமாக சூரிக் ஒரு கண்டோன்.

St. Gallen உம் இப்படி ஒரு நகர-சமஸ்டி அலகு.

அதேபோல் முதல்வர் என்பதும் தமிழில், சீப்மினிஸ்டர், மேயர் இரு பதவிக்கும் பயன்படுகிறது.

ஆனால் இவர் தவிசாளராகத்தான் தேர்வாகியுள்ளார் என நினைக்கிறேன்.

அதாவது சிவிகே சிவனாஞானம் வடமாகாண சபையில் வகித்த சேர்மன், பதவி போன்றது.

இந்த சென் கலான் சமஸ்டி அலகின் பாராளுமன்றின் (ஏனைய நாடுகளில் இதை மா நகரசபை என்பார்கள், ஆனால் சுவிசில் இவற்றின் அதிகாரம் கூட) தவிசாளராக/சேர்மனாக இவர் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். எய் சபாநாயகர் போல அவை நடவைக்கையை கட்டுப்படுத்தும் வேலை.

சீப்மினிஸ்டரோ, மேயரோ இல்லை என நினைக்கிறேன்.

பிழையாயின் திருத்தவும்.

  • கருத்துக்கள உறவுகள்

WTCC (உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு) முன்னர் சுவிசில் ஆவணமோசடி, கடன் பெற்றுக்கொடுத்தது போன்ற வழக்கின் பின்னர் திவாலாகியது. கடந்த வருடத்திலிருந்து மீண்டும் அதே பெயருடன் புதிய நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றது. அந்த நிர்வாகத்தில் அண்ணனும் ஒருவர்.

இண்டையத்தளத்தில் வெளிப்படையாகவே உள்ள பதிவு தான். WTCCஇன் வளர்ப்பே போலி துவாரகா என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த அரசியல் என்னவென்று எனக்கு புரியவில்லை. இவரை எப்படி சுவிஸ் அரசாங்கமும், பத்திரிகைகளும் இது பற்றி கேள்வி எழுப்பாமல் இந்த பதவியில் அமர்த்தியிருக்கின்றன என்பதும் எனக்கு புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஊர்க்காவலன் said:

புலம்பெயர் தமிழர்களை பொறுத்தவரையில் வெளிநாடுகளில் விடுதலை புலிகள் ஆதரவாளர்காக தம்மை இனம் காட்டியோரே அதிகம் அரசியலில் முன்னிலைக்கு வந்துள்ளார்கள். விதிவிலக்குகள் காணப்படலாம். ஆனால் பின்புலம் இல்லாமல் முன்னுக்கு வர முடியாதல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
On 21/1/2026 at 23:56, goshan_che said:

வாழ்த்து.

வழமை போலவே இதுவும் நம்மவர்களால் ஊதி பெருப்பிக்கப்படுவதாக எனக்கு படுகிறது.

நான் அறிந்த வகையில்.…

மாநிலம் என நாம் இந்திய, அமெரிக்க, கனடா வில் காண்பது போல் அல்ல சுவிசில். அங்கே கண்டோன் என்பது ஒரு நகரம் அளவிலான சமஸ்டி அலகு. உதாரணமாக சூரிக் ஒரு கண்டோன்.

St. Gallen உம் இப்படி ஒரு நகர-சமஸ்டி அலகு.

அதேபோல் முதல்வர் என்பதும் தமிழில், சீப்மினிஸ்டர், மேயர் இரு பதவிக்கும் பயன்படுகிறது.

ஆனால் இவர் தவிசாளராகத்தான் தேர்வாகியுள்ளார் என நினைக்கிறேன்.

அதாவது சிவிகே சிவனாஞானம் வடமாகாண சபையில் வகித்த சேர்மன், பதவி போன்றது.

இந்த சென் கலான் சமஸ்டி அலகின் பாராளுமன்றின் (ஏனைய நாடுகளில் இதை மா நகரசபை என்பார்கள், ஆனால் சுவிசில் இவற்றின் அதிகாரம் கூட) தவிசாளராக/சேர்மனாக இவர் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். எய் சபாநாயகர் போல அவை நடவைக்கையை கட்டுப்படுத்தும் வேலை.

சீப்மினிஸ்டரோ, மேயரோ இல்லை என நினைக்கிறேன்.

பிழையாயின் திருத்தவும்.

அது சரி இவர் சுவிசில் மாநில முதல்வர் ஆகும் தகுதி உண்டா? பல தலைமுறையாக தமிழ்நாட்டில் வாழ்ந்து அம்மண்ணின் மைந்தர்களாக தமிழை தவிர வேறு மொழி தெரியாதவர்களையே வந்தேறி, வாழலாம், ஆளக்கூடாது, என்று அடுத்த நாட்டின் அரசியலுக்குள் புகுந்து அதுவே சரி என நாட்டாண்மை காட்டும் கும்பல்கள் எல்லாம் இந்த முதலாம் தலைமுறை வந்தேறித் தமிழர் மாநில முதல்வர் ஆகியதைப் பாராட்டுகிறார்களே! அந்த கொள்கையை தள்ளி வைத்து விட்டார்களா? இந்த அநியாயத்தை கேட்க சுவிசில் ஒரு செபஸ்டியான் இல்லையா? 😂

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் புலம்பெயர் தமிழர் ஏதாவது ஒரு பதவியில் அமர்ந்து விட்டால் உடனே தமிழ் தேசிய எதிர்பாளர்களின் கீறல் விழுந்த கருத்துக்களின் அணிவகுப்பு தொடங்கி விடும் .

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ பாவம் 😂

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

யாரும் புலம்பெயர் தமிழர் ஏதாவது ஒரு பதவியில் அமர்ந்து விட்டால் உடனே தமிழ் தேசிய எதிர்பாளர்களின் கீறல் விழுந்த கருத்துக்களின் அணிவகுப்பு தொடங்கி விடும் .

புலம் பெயர்ந்த தமிழர்கள் உயர் பதவிகளில் அமர்வது இன்னும் உங்கள் போன்றோருக்கு ஆச்சரியமாகத் தெரிவது தான் ஆச்சரியமான விடயம். இப்படியான பின்னணியில், ஒற்றை எஞ்சின் செஸ்னாவை ஓட்டி விட்டு "முதல் தமிழ் விமானி" என்பதும், உள்ளூராட்சி சபையில் தவிசாளர் பதவியைப் பெற்று விட்டு, "மாநில முதல்வர்" என்று பெருப்பிப்பதும் நகைப்பிற்குள்ளாக்கப் படுவது நடக்கும் தானே?

தமிழர்கள் மட்டுமல்ல, இலங்கையில் இருந்து குடிபெயர்ந்த (உங்கள் பாசையில்) "மோட்டுச்" சிங்களவர்களும் வெளிநாடுகளில் உச்ச நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் பிரபல ஆய்வுப் பல்கலைக் கழகமான Caltech இன் அடுத்த தலைவர் ஒரு இலங்கை சிங்களவர்!

California Institute of Technology
No image preview

Ray Jayawardhana Appointed Caltech's Tenth President

The Johns Hopkins University provost, renowned astrophysicist, and award-winning author will begin as the Institute's leader on July 1, 2026.

  • கருத்துக்கள உறவுகள்

செபஸ்டியான் என்றால் சீமான?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

செபஸ்டியான் என்றால் சீமான?

தமிழ் செபஸ்ரியானையும் அவரது கொள்கைகளையும் விழுந்து விழுந்து ஆதரிக்கும் ஒரு சில தமிழர்கள் மேற்கு நாடுகளில் ஒரு செபஸ்ரியான் வந்து அதே செபஸ்ரியான் கொள்கைகளை பேசினால் அந்த செபஸ்ரியானைத் திட்டித் தீர்ப்பார்கள். அது ஏனோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

தமிழ் செபஸ்ரியானையும்

சைமன் செபஸ்டியன் மலையாளி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

சைமன் செபஸ்டியன் மலையாளி.

இவர் தான் தூய தமிழன் யார் யார் மற்றவர்கள் வெறுக்கபட வேண்டியவர்கள் என்று தமிழர்களுக்கு விளக்கம் கொடுத்து கொண்டு திரிகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

சைமன் செபஸ்டியன் மலையாளி.

அவர் இரத்தம் மாற்றி தூய தமிழ் இரத்தம் பெற்று பாற்கடலில் நீத்தி செந்தமிழன் ஆகியது உங்களுக்கு தெரியாது போலும். அவர் மேடையில் பேசும் செந்தமிழை விட டெலிபோனில் தம்பிகளுடன் பேசும் செந்தமிழ் உயர்வானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 27/1/2026 at 21:24, island said:

அது சரி இவர் சுவிசில் மாநில முதல்வர் ஆகும் தகுதி உண்டா? பல தலைமுறையாக தமிழ்நாட்டில் வாழ்ந்து அம்மண்ணின் மைந்தர்களாக தமிழை தவிர வேறு மொழி தெரியாதவர்களையே வந்தேறி, வாழலாம், ஆளக்கூடாது, என்று அடுத்த நாட்டின் அரசியலுக்குள் புகுந்து அதுவே சரி என நாட்டாண்மை காட்டும் கும்பல்கள் எல்லாம் இந்த முதலாம் தலைமுறை வந்தேறித் தமிழர் மாநில முதல்வர் ஆகியதைப் பாராட்டுகிறார்களே! அந்த கொள்கையை தள்ளி வைத்து விட்டார்களா? இந்த அநியாயத்தை கேட்க சுவிசில் ஒரு செபஸ்டியான் இல்லையா? 😂

இலங்கை தமிழ் பகுதிகளில் சிங்கள கட்சிகளுக்கும் இன்றைய ஜனாதிபதி அனுரவிற்கும் ஏகோபித்த ஆதரவு இருக்கின்றது.

எனவே.....? 😎

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இலங்கை தமிழ் பகுதிகளில் சிங்கள கட்சிகளுக்கும் இன்றைய ஜனாதிபதி அனுரவிற்கும் ஏகோபித்த ஆதரவு இருக்கின்றது.

எனவே.....? 😎

எனவே… அவர் தான் எமது ஜனாதிபதி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, island said:

எனவே… அவர் தான் எமது ஜனாதிபதி.

இல்லை.

ஸ்ரீலங்கா சனாதிபதி.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இல்லை.

ஸ்ரீலங்கா சனாதிபதி.

ஆமாம் நீங்கள் ஜேர்மனியர் என்பதால் உங்களது ஜனாதிபதியாக அவர் இருக்கமாட்டார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 31/1/2026 at 06:49, island said:

ஆமாம் நீங்கள் ஜேர்மனியர் என்பதால் உங்களது ஜனாதிபதியாக அவர் இருக்கமாட்டார்.

நான் ஜேர்மனியனாக இருந்தாலும் சுவிற்சர்லாந்து நாட்டின் அரசியல் நடைமுறை போல் இலங்கையிலும் இருக்க வேண்டும் என விரும்புகின்றேன்.ஏனென்றால் அது நான் பிறந்த மண். கரிசனை என்றும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2026 at 00:10, குமாரசாமி said:

நான் ஜேர்மனியனாக இருந்தாலும் சுவிற்சர்லாந்து நாட்டின் அரசியல் நடைமுறை போல் இலங்கையிலும் இருக்க வேண்டும் என விரும்புகின்றேன்.ஏனென்றால் அது நான் பிறந்த மண். கரிசனை என்றும் இருக்கும்.

உங்கள் விருப்பம் நியாயமானது . உங்களை ஜேர்மனியராக ஏற்றுக்கொண்ட ஜேர்மனிக்கும் முதலாம் தலைமுறையாக புலம் பெயர்ந்து வந்த பல ஆசிய ஆபிரிக்க மக்களை சீமான் வகையறா இனவெறி கக்கி பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளின் பிரச்சாரத்துக்கு எடுபடாமல் அந்த மக்களில் உள்ள திறமைகளை மட்டும் அங்கீகரித்து உயர் பதவிகளுக்கு அனுமதிக்க வாக்களிக்கும் மேற்குலக மக்களுக்கு நன்றி. இந்த முன்மாதிரியை விரும்பும் நீங்கள் உண்மையில் உயர்ந்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபான்மையினரின் பாதுகாப்பினை 3 பெரிய அளவுகோலின் அடிப்படையில் கணிப்பதாக கூறப்படுகிறது.

  1. சட்ட அங்கீகாரம்

  2. அரசியல் அதிகார பகிர்வு

  3. சிறுபான்மை மீதான முரண்பாடுகளை கையாளும் முறை (Conflict management outcome)

இதனடிப்படையில் தென்னாசியாவில் மிக மோசமாக சிறுபான்மையினரை நடத்தும் இலங்கையினை எவ்வாறு மேற்கு நாட்டுடன் ஒப்பிட முடியும்?

தென்னாசியாவில் உள்ள மற்ற நாடுகளும் பெருமளவில் இதே நிலையில் இருந்தாலும் அவை ஒப்பீட்டளவில் மேலான நிலையில் இருகின்ற நிலையில், இலங்கை நிலை மோசமாக இருக்கின்றது.

இலங்கையில் ஜனநாயக ஆட்சி முறைமை என கூறப்பட்டாலும் பல கட்சிகள் வந்தாலும் இந்த நிலமை மாறமுடியாத நிலை காணப்படுகிறது.

இது எதனால்?

மதங்களில் இருக்கும் பிற்போக்கான மூட நம்பிக்கை போன்ற நாட்டிற்கான கோட்பாட்டில் (State Doctrine) மகாவம்ச போன்ற கற்பனைக்கதைகளின் (சிங்கமே இல்லாத நாட்டில் சிங்கத்தின் வாரிசுகள் போன்ற கறபனை கதைகள்) பாதிப்பு காரணமாக இருக்குமோ என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/2/2026 at 05:58, island said:

உங்கள் விருப்பம் நியாயமானது . உங்களை ஜேர்மனியராக ஏற்றுக்கொண்ட ஜேர்மனிக்கும் முதலாம் தலைமுறையாக புலம் பெயர்ந்து வந்த பல ஆசிய ஆபிரிக்க மக்களை சீமான் வகையறா இனவெறி கக்கி பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளின் பிரச்சாரத்துக்கு எடுபடாமல் அந்த மக்களில் உள்ள திறமைகளை மட்டும் அங்கீகரித்து உயர் பதவிகளுக்கு அனுமதிக்க வாக்களிக்கும் மேற்குலக மக்களுக்கு நன்றி. இந்த முன்மாதிரியை விரும்பும் நீங்கள் உண்மையில் உயர்ந்தவர்.

நீங்கள் இன வெறிக்கும் இன அழிப்பிற்கும் வித்தியாசம் தெரியாமல் தவிக்கின்றீர்கள் என நினைக்கின்றேன். மேற்குலக நாடுகளில் அரசியல் எல்லோருக்கும் பொதுவாவனது. தென்னிந்திய அரசியலில் அப்படியா?

தமிழ் நாட்டில் இருக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு இருக்கும் உரிமைகளை பற்றி நீங்கள் தெரியாமல் இருப்பதையிட்டு மிக வருத்தமடைகின்றேன். அல்லது அது பற்றி உங்களுக்கு அக்கறையில்லை.

புலம்பெயர்ந்தவர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் மேற்குலகம் ஏன் அவர்களின் சொந்த நாட்டின் உரிமைப்பிரச்சனைகளை அங்கீகரிக்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2026 at 00:41, குமாரசாமி said:

நீங்கள் இன வெறிக்கும் இன அழிப்பிற்கும் வித்தியாசம் தெரியாமல் தவிக்கின்றீர்கள் என நினைக்கின்றேன். மேற்குலக நாடுகளில் அரசியல் எல்லோருக்கும் பொதுவாவனது. தென்னிந்திய அரசியலில் அப்படியா?

தமிழ் நாட்டில் இருக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு இருக்கும் உரிமைகளை பற்றி நீங்கள் தெரியாமல் இருப்பதையிட்டு மிக வருத்தமடைகின்றேன். அல்லது அது பற்றி உங்களுக்கு அக்கறையில்லை.

புலம்பெயர்ந்தவர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் மேற்குலகம் ஏன் அவர்களின் சொந்த நாட்டின் உரிமைப்பிரச்சனைகளை அங்கீகரிக்கவில்லை?

நான் தவிக்கவில்லை. இனவெறி தான் இன அழிப்பை உண்டாக்கும் முக்கிய காரணி என்பதை நன்கே அறிந்துள்ளேன். சிங்கள பெண்ணை கற்பழிப்பேன் என ஒரு இனவெறியன் பகீரங்கமாக பேசி ஈழத் தமிழர் போராட்டதையே ஒரு இனவெறி போராட்டமாக மாற்றி அதை வைத்து அரசியல் செய்து வருவதை தொடர்ந்து வருவதை வெள்ளை உள்ளம் கொண்ட நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். தாம் இனவாதத்தல் பாதிக்கப்படாதாக கூறும் புலம்பெயர் ஈழத்தமிழ் அரசியலை நடத்துவதாக கூறும் சிலர் தாமே வந்தேறியாக மேற்கு நாடுகளில் வாழ்ந்து கொண்டு, தமிழ் நாட்டில் பல தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களை வந்தேறி என்று திட்டுவதன் மூலம் தமது ஈழத்தமிழ் அரசியலானது ஒரு இனவெறி அரசியலே என்று நிரூபித்துக்கொண்டிருப்பதையும் நீங்கள் அறியவில்லைப் போலும்.

Edited by island

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7/2/2026 at 13:40, island said:

நான் தவிக்கவில்லை. இனவெறி தான் இன அழிப்பை உண்டாக்கும் முக்கிய காரணி என்பதை நன்கே அறிந்துள்ளேன். சிங்கள பெண்ணை கற்பழிப்பேன் என ஒரு இனவெறியன் பகீரங்கமாக பேசி ஈழத் தமிழர் போராட்டதையே ஒரு இனவெறி போராட்டமாக மாற்றி அதை வைத்து அரசியல் செய்து வருவதை தொடர்ந்து வருவதை வெள்ளை உள்ளம் கொண்ட நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். தாம் இனவாதத்தல் பாதிக்கப்படாதாக கூறும் புலம்பெயர் ஈழத்தமிழ் அரசியலை நடத்துவதாக கூறும் சிலர் தாமே வந்தேறியாக மேற்கு நாடுகளில் வாழ்ந்து கொண்டு, தமிழ் நாட்டில் பல தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களை வந்தேறி என்று திட்டுவதன் மூலம் தமது ஈழத்தமிழ் அரசியலானது ஒரு இனவெறி அரசியலே என்று நிரூபித்துக்கொண்டிருப்பதையும் நீங்கள் அறியவில்லைப் போலும்.

சிங்களவன் காலம் காலமாக ஈழத்தமிழினத்தின் மீது வன்மத்தையும் இன அழிப்பையும் சட்டவிரோத குடியேற்றங்களையும் செய்யும் போது வராத கோபமும் ரோஷமும்.......ஒரு பேச்சுக்காக கூறியதையெல்லாம் பார்க்க கேட்க உள்ளமெல்லாம் கொதிக்கின்றதோ?

நிற்க....

புலம்பெயர்நாடுகளில் எம் மக்களினால் நடத்தப்படும் நிகழ்வுகள் எனக்கு ஏற்புடையதல்ல. வீதிகளை மறித்து சிதறு தேங்காய் உடைப்பது,தேர் இழுப்பது எல்லாம் அளவிற்கு மீறிய செயல்கள். வந்த இடத்தில் ஆட்சிக்கு வருவதும் தேவையற்ற செயல் என்பது என் நிலைப்பாடு. இவை எல்லாம் எமக்கு தனிநாடு வேண்டும் என்ற கொள்கையாளர்களுக்கு எற்ற செயல் அல்ல.

எனவே சீமானின் ஈழ அரசியலை விடுத்து அவரின் தமிழ்நாட்டு அரசியல் எனக்கு பிடித்த அரசியல்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.