Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். மாவட்டத்தில்  சுதந்திர தினம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாவட்டத்தில்  சுதந்திர தினம்!

adminFebruary 4, 2026

IMG_4417.jpeg?fit=1170%2C780&ssl=1

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இன்றைய காலை 07.30 மணிக்கு மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது.

இந் நிகழ்வானது அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமாகி – தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல், சர்வ மதத் தலைவர்களின் ஆசியுரை மற்றும் அரசாங்க அதிபர் அவர்களின் உரை உள்ளடங்கலாக சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, கொக்குவில் இந்துக் கல்லூரி, பரியோவான் கல்லூரி மற்றும் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலை மாணவர்களின் பான்ட் (Band) வாத்தியக் குழுவின் அணிவகுப்பும், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் தேசிய மாணவர் படையணியின் (Cadet) அணிவகுப்பும், சாரணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும், இன்றைய அணிவகுப்பில் பங்குபற்றிய மாணவர்களை கெளரவித்து மர நடுகை மற்றும் சிரமதானம் போன்ற நிகழ்வும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பலாலி பாதுகாப்பு படைகளின் தலைமைப்பீடத்தினைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ராசிக், காவற்துறை  கடற்படை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முப்படையின் அதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) உள்ளிட்ட மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

https://globaltamilnews.net/2026/228339/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

யாழ் மாவட்டத்தில் கழுதைகள் கூடாரம்.

சுதந்திரம் என்றால் என்னனவென்று புரியாது. கற்பூர வாசனையும் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்ற 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு

04 Feb, 2026 | 11:12 AM

image

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இன்றைய புதன்கிழமை (04) காலை 07.30 மணிக்கு அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது.

இந் நிகழ்வானது அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமாகி - தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல், சர்வ மதத் தலைவர்களின் ஆசியுரை மற்றும் அரசாங்க அதிபர் அவர்களின் உரை உள்ளடங்கலாக சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, கொக்குவில் இந்துக் கல்லூரி, பரியோவான் கல்லூரி மற்றும் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலை மாணவர்களின் பான்ட் (Band) வாத்தியக் குழுவின் அணிவகுப்பும், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் தேசிய மாணவர் படையணியின் (Cadet) அணிவகுப்பும், சாரணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும், இன்றைய அணிவகுப்பில் பங்குபற்றிய மாணவர்களை கெளரவித்து மர நடுகை மற்றும் சிரமதானம் போன்ற நிகழ்வும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பலாலி பாதுகாப்பு படைகளின் தலைமைப்பீடத்தினைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ராசிக், பொலிஸ் கடற்படை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முப்படையின் அதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) உள்ளிட்ட மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

03__1_.jpg

01__6_.jpg

04__1_.jpg

05__2_.jpg

02__1_.jpg

06__1_.jpg

09.jpg

08.jpg

07__1_.jpg

10.jpg

12.jpg

https://www.virakesari.lk/article/237785

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாண சபை கட்டடத் தொகுதியில் சுதந்திர தின நிகழ்வு

04 Feb, 2026 | 05:42 PM

image

இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபைக் கட்டடத் தொகுதியில் இன்று புதன்கிழமை (4) நடைபெற்றது. 

வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிப்புரைக்கு அமைவாக மாகாண மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கலந்துகொண்டு தேசியக் கொடியை  வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஏற்றி வைத்தார்.

adab124f-a5e4-47bc-8ba5-c9f2cf65c203.jpe

இதன்போது யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளால் தமிழ் மொழியிலும் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களால் சிங்கள மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. 

அத்துடன், தொடர்ந்து நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின்  மேலைத்தேய வாத்திய இசை முழக்கம், தேசிய மாணவர் படையணியின் அணிவகுப்பு மற்றும் கலாசார நிகழ்வுகள் விழாவை அலங்கரித்தன. 

ஹாட்லி கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரி, சாவகச்சேரி இந்து கல்லூரி மற்றும் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளின் மேலைத்தேய வாத்தியக் குழுவினர் இசையை வழங்கினர். 

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மற்றும் உடுவில் மகளிர் கல்லூரி தேசிய மாணவர் படையணியினரின் சீருடை அணிவகுப்பு மரியாதை இதன்போது நடைபெற்றது. 

f87518ff-1ac4-40f8-a8bd-2f749ea171e0.jpe

ஹாட்லி கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரி, தும்பளை சிவப்பிரகாசம் வித்தியாலயம் மற்றும் கல்லடி றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களின் சாரணிய அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றது. 

அத்துடன் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மற்றும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்களால் இன்னியம் இசை அணிவகுப்பு நடத்தப்பட்டதுடன், நாட்டின் அனைத்து இனங்களையும் பிரதிநித்துவப்படுத்தும் வகையிலான டெனியா மற்றும் சிறிமுருகன் முன்பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு கண்காட்சியும் நடைபெற்றது.

மேலும், புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவர்களின் செம்பு நடனம், கோலாட்டம், சிரட்டை கும்மி மற்றும் மயில் நடனம் ஆகியனவும் லயா நாட்டியப் பள்ளி மாணவர்களின் கரகாட்டம் மற்றும் ஒயிலாட்டம், வெலிஓயாவைச் சேர்ந்த ரன்சிலு கலைமன்றம் மற்றும் பரக்கும்பர மகா வித்தியாலய மாணவர்களின் கண்டிய நடன ஆற்றுகை, ஒஸ்மானிய கல்லூரி மாணவர்களின் கோலாட்டம் மற்றும் ரபான் ஆற்றுகை, சிவலீமன் சிலம்பம் கல்லூரி மாணவர்களின் சிலம்பாட்ட ஆற்றுகை, வெலிஓயா மதுரங்க கலாமன்றத்தின் நடன நிறுவன மாணவர்களின் சிங்கள நடனம் ஆகிய பல வண்ணக் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.

b459b889-c88d-48d3-ad8f-7f8fc4e341ef.jpe

இவ்விழாவில் சர்வமதத் தலைவர்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி, யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா, வன்னி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி, கடற்படையின் வடபிராந்திய கட்டளைத் தளபதி, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர், விமானப் படையின் குறூப் கப்டன், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதி பிரதம செயலாளர்கள், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவர், வடக்கு மாகாண திணைக்களத் தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் நிறைவாக ஆளுநரால் தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

b4a3b63c-7ca3-4ccf-a722-c1cf57c09485.jpe

3e47eccd-59cb-4154-a124-606975e394fc.jpe

0f03168b-c344-4a80-b80d-f01000485729.jpe

0863a72e-ade9-4972-a3f3-d9e2b173346f.jpe

6b5f664d-1223-46e4-857e-0ba04741b6d6.jpe

94897577-4fdd-47bd-80c1-11576d5d3dec.jpe

edf7b6f6-442c-4c4e-8622-168dd63be79f.jpe

e02bca90-ecc2-419c-9b4b-b4fe9e9a7cf5.jpe

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு படையினரும்

பாடசாலை மாணவ மாணவியருடன்

சிறப்பாக நடந்தேறியுள்ளது.

54 minutes ago, ஈழப்பிரியன் said:

பாதுகாப்பு படையினரும்

பாடசாலை மாணவ மாணவியருடன்

சிறப்பாக நடந்தேறியுள்ளது.

பார்க்க பார்க்க மனசுக்குள் வேதனை தான் மிஞ்சுகின்றது.

ஈற்றில் இதற்குத்தானா இத்தனை ஆயிரம் போராளிகளின் தியாகங்களும், பொது மக்களின் இழப்புகளும் ??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பாதுகாப்பு படையினரும்

பாடசாலை மாணவ மாணவியருடன்

சிறப்பாக நடந்தேறியுள்ளது.

என்.பி.பி அடியாட்களின் மிரட்டலுக்குப் பயந்து என்பதை சேர்த்துவிடவும்..

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, alvayan said:

என்.பி.பி அடியாட்களின் மிரட்டலுக்குப் பயந்து என்பதை சேர்த்துவிடவும்..

அரச பணியாளர்கள் அரசு சொல்வதைத் தானே செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

அரச பணியாளர்கள் அரசு சொல்வதைத் தானே செய்ய வேண்டும்.

அதுதான் பாயிண்டு பிரியன்சார் ....இந்த இடத்தில் சிறப்பாக நடைபெற்றது என்பது தவிர்க்கப்பட்டால் நல்லது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

என்.பி.பி அடியாட்களின் மிரட்டலுக்குப் பயந்து என்பதை சேர்த்துவிடவும்..

மக்கள் மிகவும் "பயத்துடன்" பங்கு பற்றிய மாதிரித் தான் தெரிகிறது😂!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

மக்கள் மிகவும் "பயத்துடன்" பங்கு பற்றிய மாதிரித் தான் தெரிகிறது😂!

ஆ...அப்படியா...

  • கருத்துக்கள உறவுகள்

காலங்கள் ஓடிவிட்டது காட்சிகளும் மாறிவிட்டது.

இறுதி யுத்தம் நடந்த வருடத்தில் 5 வயசு குழந்தையாக இருந்ததுக்கு இப்போ 22 வயசு வாலிப பருவம், அதற்கு இலங்கையில் என்ன நடந்தது என்றே தெரியாது எடுத்து சொல்லவும் சிங்கள படைகளுக்கும் நாலாம் மாடிக்கும் அஞ்சி எந்த உறவுகளுக்கும் துணிச்சல் இல்லை

இன்றைய தலைமுறை ஓடி ஓடி இன்று பண்ணைக்கடலில் நடந்த சிங்க கொடிகளுடன் நடந்த படகுகளின் காணொலியை தரவேற்றி காசு பார்க்கிறார்கள்.

தமிழர் பிரதிநிதிகள் எனப்படுவோர் தமது வேலைகளில் பிஸி, இலங்கை பிரச்சனையில் பொறுப்புக்கூறல் என்று ஓரளவு நம்பிக்கை தந்த சர்வதேசமும் அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை கவனிக்கவே நேரமில்லாமல் நமது பிரச்சனையை ஏறக்குறைய மறந்துவிட்ட நிலமை.

தாயகம் பற்றி பொங்கியெழுந்த புலம்பெயர் உறவுகளின் எண்ணிக்கையும் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனமாதிரி 95% பேர் எப்போவாச்சும் நேரம் கிடைச்சால் மட்டுமே இலங்கை பிரச்சனைபற்றி பேசும் நிலமை

எவரும் இனப்பிரச்சனைபற்றி பேசுவதாய் காணோம் இன்றைய பிரச்சனை பற்றியே பெரும்பாலானோரின் கவலை.

எந்த ஆட்சி மாறினாலும் சிங்களவன் தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதிலும் மத அடையாளங்களை நிறுவுவதிலும் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும் நிலை.

கொழும்பிலிருந்து யாழுக்கும் யாழில் இருந்து கொழும்புக்குமென தமிழரும் சிங்களவரும் மாறி மாறி களியாட்டம்.

இனி, இலங்கை தமிழருக்கு இங்கே என்ன பிரச்சனை எதுக்கு குட்டையை குழப்புகிறீர்கள் என்று சிங்களவர்கள் அல்ல இன்றைய இளைய தமிழ் சமுதாயமே கேட்கபோகும் ஜீரணித்தே ஆகவேண்டிய கசப்பு உண்மையை காலம் வாயில் திணிக்கும் நிலை, மிக அருகில் உள்ளது , கண்டிப்பாக விழுங்கியே ஆகவேண்டிய பரிதாபம்தான் என் வசம்.

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோக்களில் அடிக்கடி இஸ்லாமிய நபர்கள் தோன்றுகிறார்கள். இங்க சில பேருக்கு gasket போகப் போகுது இண்டைக்கு😂!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, alvayan said:

அதுதான் பாயிண்டு பிரியன்சார் ....இந்த இடத்தில் சிறப்பாக நடைபெற்றது என்பது தவிர்க்கப்பட்டால் நல்லது

நான் எழுதியது உங்களுக்கு புரியவில்லையா?

பொதுமக்கள் இல்லாமல் பாதுகாப்பு படையினரும் மாணவ மாணவிகளோடும் கொண்டாடி உள்ளனர் .

  • கருத்துக்கள உறவுகள்

அனுரவின் ஈரசாக்கு கைமேல் பலன் கொடுக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Justin said:

வீடியோக்களில் அடிக்கடி இஸ்லாமிய நபர்கள் தோன்றுகிறார்கள். இங்க சில பேருக்கு gasket போகப் போகுது இண்டைக்கு😂!

5 hours ago, valavan said:

காலங்கள் ஓடிவிட்டது காட்சிகளும் மாறிவிட்டது.

இறுதி யுத்தம் நடந்த வருடத்தில் 5 வயசு குழந்தையாக இருந்ததுக்கு இப்போ 22 வயசு வாலிப பருவம், அதற்கு இலங்கையில் என்ன நடந்தது என்றே தெரியாது எடுத்து சொல்லவும் சிங்கள படைகளுக்கும் நாலாம் மாடிக்கும் அஞ்சி எந்த உறவுகளுக்கும் துணிச்சல் இல்லை

இன்றைய தலைமுறை ஓடி ஓடி இன்று பண்ணைக்கடலில் நடந்த சிங்க கொடிகளுடன் நடந்த படகுகளின் காணொலியை தரவேற்றி காசு பார்க்கிறார்கள்.

தமிழர் பிரதிநிதிகள் எனப்படுவோர் தமது வேலைகளில் பிஸி, இலங்கை பிரச்சனையில் பொறுப்புக்கூறல் என்று ஓரளவு நம்பிக்கை தந்த சர்வதேசமும் அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை கவனிக்கவே நேரமில்லாமல் நமது பிரச்சனையை ஏறக்குறைய மறந்துவிட்ட நிலமை.

தாயகம் பற்றி பொங்கியெழுந்த புலம்பெயர் உறவுகளின் எண்ணிக்கையும் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனமாதிரி 95% பேர் எப்போவாச்சும் நேரம் கிடைச்சால் மட்டுமே இலங்கை பிரச்சனைபற்றி பேசும் நிலமை

எவரும் இனப்பிரச்சனைபற்றி பேசுவதாய் காணோம் இன்றைய பிரச்சனை பற்றியே பெரும்பாலானோரின் கவலை.

எந்த ஆட்சி மாறினாலும் சிங்களவன் தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதிலும் மத அடையாளங்களை நிறுவுவதிலும் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும் நிலை.

கொழும்பிலிருந்து யாழுக்கும் யாழில் இருந்து கொழும்புக்குமென தமிழரும் சிங்களவரும் மாறி மாறி களியாட்டம்.

இனி, இலங்கை தமிழருக்கு இங்கே என்ன பிரச்சனை எதுக்கு குட்டையை குழப்புகிறீர்கள் என்று சிங்களவர்கள் அல்ல இன்றைய இளைய தமிழ் சமுதாயமே கேட்கபோகும் ஜீரணித்தே ஆகவேண்டிய கசப்பு உண்மையை காலம் வாயில் திணிக்கும் நிலை, மிக அருகில் உள்ளது , கண்டிப்பாக விழுங்கியே ஆகவேண்டிய பரிதாபம்தான் என் வசம்.

இதே கோஸ்டி புதிய உடுப்புகடைகாரர் கேட்டாலும் ஓடும் ....இந்தியப் புரியாணிக்கடைகாரர் கேட்டாலும் ஓடும் ...அவைக்கே அது என்னவென்று விளங்காத நிலை ....இது போலவே சில இங்கும்

1 hour ago, ஈழப்பிரியன் said:

பொதுமக்கள் இல்லாமல் பாதுகாப்பு படையினரும் மாணவ மாணவிகளோடும் கொண்டாடி உள்ளனர் .

இது 2009 இற்கு பின் ...எல்லா சனாதிபதியாலும் ஏற்படுத்தப்படும் கூத்து...விடுங்க பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

என்.பி.பி அடியாட்களின் மிரட்டலுக்குப் பயந்து என்பதை சேர்த்துவிடவும்..

8 minutes ago, alvayan said:

இதே கோஸ்டி புதிய உடுப்புகடைகாரர் கேட்டாலும் ஓடும் ....இந்தியப் புரியாணிக்கடைகாரர் கேட்டாலும் ஓடும் ...அவைக்கே அது என்னவென்று விளங்காத நிலை ....இது போலவே சில இங்கும்

இதனால்தான் யாழ் மாவட்டத்தில் 3 எம்பி ஜேவிபிக்கு கிடைத்தது என்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

இதனால்தான் யாழ் மாவட்டத்தில் 3 எம்பி ஜேவிபிக்கு கிடைத்தது என்கிறீர்களா?

இது என்னைப் பொறுத்தவரை தமிழ்கட்சிகள் மீதான வெறுப்பு என்பது என் அபிப்பிராயம் ...நீங்கள் இதுக்கு அடிஉறுதி இருக்கா என்றும் கேட்பியள் ... நான் அப்புக்காத்தும் இல்லை ...பத்திரிகைஎழுத்தாளருமில்லை ...ஊரில் எனக்கு சகல கட்சி நண்பர்கள் உண்டு ...அவைமூலம் பெறப்படவகளையே இங்கு எழுதுவேன் ...இதற்கான என் விளக்கம் இதுதான் ...உங்களிடம் நியாயத்தை நீங்கள் தாரளமக பதிவிடலாம் ...என்னை இழுக்கவேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, alvayan said:

தமிழ் கட்சிகள் மீது வெறுப்பு என்பதால், யூ என் பி, சஜித், வேறு யாருக்கும் போடவில்லை அல்லவா?

இலங்கையின் சுதந்திர நாளுக்கு அரச அதிகாரிகள் கூப்பிட்டால் போகவேண்டும் என்பது நியதிதான்.

ஆனால் ஒட்டு மொத்த பெற்றாரும் பிள்ளைகளை அனுப்ப மாட்டோம் என முடிவெடுத்தால்?

மக்கள் இயல்பாகவே சிறிலங்கன் என உணர தலைப்பட்டு சில வருடங்கள் ஆகிவிட்டது. வடகிழக்கு எங்கும்.

ஆனால் ஏனைய மாவட்டங்களை விட யாழில் இந்த காவடி ஆட்டம் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது.

இதை சொல்ல அப்புகாத்து தேவையில்லை. ஊருக்கு போய் அவதானித்தாலே போதும்.

நிலமை கைமீறி போய்விட்டதாகவே எனக்கு தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெரும் பண்பாட்டுச் சிதைப்பை அமைதியாக செய்து முடித்திருக்கும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம்.

ஈழத்தமிழர்களின் இன இருப்பு வழிபாட்டிடங்கள் பண்பாடு என பலதளங்களிலும் ஒரு பெரும் அழிவுச்சுட்டியை ஶ்ரீலங்காவின் அரசும் அதன் கட்டமைப்புகளான தொல்லியல் திணைக்களம் வன வளத்திணைக்களம் என ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு ஈழத்தமிழர்கள் மீதும் அவர்களின் மரபு பண்பாட்டுக்கூறுகள் மீதும் திணித்து வரும் நிலையில் அந்த பட்டியலில் தானும் முந்தியிருக்கிறது யாழ்ப்பாண மாவட்ட செயலகம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

நிலமை கைமீறி போய்விட்டதாகவே எனக்கு தெரிகிறது.

அநுர ஆட்சிக்கு முன்னரே நிலைமை மாறி விட்டது. ஒரு உதாரணம். கொத்தலாவல பாதுகாப்புத் துறைப் பல் கலைக்கு வடக்கு கிழக்கில் இருந்தும் இளையோர் கற்கச் செல்கிறார்கள். இது நடக்க முதல் இன்னொரு விடயம் செய்தார்கள். உயர்தர வகுப்பு மாணவர்களை "தலைமைத்துவப் பயிற்சி" என்று அழைத்துச் சென்று, பெரிதாக தேச பக்தி, சிங்கக் கொடி என்று தீத்தாமல், முறையான தலைமைத்துவப் பயிற்சி, நேரம் தவறாமை என்பவற்றைப் பயிற்றுவித்திருக்கிறார்கள். இலங்கை இராணுவமே நடந்தி வரும் ஒரு பயிற்சி இது, சென்று வந்த இளையோர் தங்கள் வாழ்க்கை மாறியிருக்கிறது என்கிறார்கள். இப்படி சிங்களத் தரப்பு கடந்த 16 வருடங்களில் அணுகுமுறையை மாற்றி வென்று வருகிறது.

தமிழ் தரப்பு என்ன செய்கிறது?

தமக்கு கருத்து ரீதியில் ஒத்து வராத ஒரிரு அரசியல் வாதிகளை அகற்றினால் தான் தமிழ் ஈழம் கிடைக்கும் என்ற முட்டாள் தனமான கனவில் குட்டிச் சுவரில் முட்டிக் கொண்டு நிற்கும் காளைமாடுகள் போல நடந்து கொள்கிறது ஒரு தரப்பு. இந்தத் தரப்பிற்கு அருகிலேயே நிற்க விருப்பமில்லாமல் சாதாரண மக்கள் தம் வாழ்வும் என ஒதுங்கி விட்டார்கள்.

#மோட்டுச் சிங்களவன்#ஆளப் போறான் தமிழன்😇!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.