Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: 17 வயது இளைஞன் உயிரிழப்பு

Feb 10, 2026 - 06:33 AM

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: 17 வயது இளைஞன் உயிரிழப்பு

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று (10) அதிகாலை ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காட்டிய போதிலும், அந்த வேன் பொலிஸாரின் கட்டளையை மீறி மண்டைதீவு திசை நோக்கிச் சென்றுள்ளது.

அந்த நேரத்தில் மண்டைதீவு வீதித் தடையைப் பரிசோதித்துவிட்டு அல்லைப்பிட்டி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஜீப் வண்டிக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய, குறித்த ஜீப் வண்டி அந்த வேனை நிறுத்த முயற்சித்த போதிலும், அது தொடர்ந்தும் நிறுத்தாமல் தப்பிச் சென்றதால், பொலிஸார் வேனை நிறுத்துவதற்காக வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

அப்போதும் நிறுத்தாமல் தப்பிச் சென்ற வேனை நிறுத்துவதற்காகப் பொலிஸார் வேன் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அதன் சாரதி காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வேனின் பின் இருக்கைகள் கழற்றி அகற்றப்பட்டிருந்த நிலையில், வேனில் இருந்த மேலும் இருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸாரும் யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmlfwcg2k0001356n42mmgnrq

  • Replies 80
  • Views 3.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நியாயம்
    நியாயம்

    குருவி சுடுவது போல் சுட்டு பொசுக்கி உள்ளார்கள். சோசல் மீடியாவில் போலீசுக்கு முண்டு கொடுத்து துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தி உள்ளார்கள். இலங்கையில் கொலை குற்றம் செய்து மரண தண்டனை தீர்ப்பு கொடுக்கப்பட்

  • இவை எல்லாமும் மட்டும் அல்ல அதிபர் ஆனந்தராஜா போன்றோர் கொலைகளும் அரங்கேறின. இவை அரசியல் கொலைகள். ஆனால் களவுக்கு புலிகள் மரண தண்டனை வழங்கியதாக நான் அறியவில்லை. கப்பம் கேட்டு கொடுக்காத போது புளொட் சுட்டு

  • கள்ள மாடு உட்பட திருட்டுக்கு சிங்கள தேசத்தில் தினமும் சிங்கன பொலிஸ் சிங்களவரை சுடுகுதா??? வாகனம் நிற்காமல் போனால் துரத்தி பிடிக்கலாம். தீவகத்துக்க வர போக ஒற்றை வீதி தானே இருக்கு. அதில தடை போட்டு வாகனத

  • கருத்துக்கள உறவுகள்

இது கள்ளமாடு பிடிக்கிற கூட்டம் போலிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

வாகனத்தை ஓடியவர் 17 வயது சிறுவன் போலுள்ளது.

இலங்கையில் எத்தனை வயதில், வாகன அனுமதிப் பத்திரம் கொடுப்பார்கள்?

இங்கு 16 வயதில் அனுமதி எடுத்தாலும், 18 வயது வரை அவர் தனியே ஓட முடியாது. அருகில் வாகன அனுமதி பத்திரம் உள்ள ஒருவர் இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

0001.jpg?resize=750%2C375&ssl=1

தனது பெறாமகன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக சிறுவனின் உறவினர் தெரிவிப்பு!

அருவி வெட்டுக்கு வேலையாட்களை ஏற்ற சென்ற போதே தனது பெறாமகன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக , உயிரிழந்த சிறுவனின் சித்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்திய போது வாகனத்தினை ஓட்டி சென்ற சிறுவன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான்.

அந்நிலையில் சிறுவனின் உயிரிழப்பு தொடர்பில் சித்தியார் தெரிவிக்கையில் ,

சிறுவனுக்கு சாரதி அனுமதி பத்திரம் இல்லாத போதிலும் , அவர் வாகனம் ஓட்டுவதனை தொழிலாக செய்து வந்தார். எனவும் பொலிஸாருக்கு கையூட்டுக்களை வழங்கி சாரதி அனுமதி பத்திரம் இன்றி சாரத்தியம் செய்து வந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அருவி வெட்டு நடவடிக்கைக்காக வேலணையில் வேலையாட்களை ஏற்றுவதற்காக சென்ற போது தன்னிடம் பணம் இல்லாததால் தான் பொலிஸார் மறித்த போது நிறுத்தாமல் பயணித்துள்ளனர் எனவும் அதனாலயே பொலிஸார் சுட்டுள்ளனர் எனவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதேவேளை, அவருடன் வாகனத்தில் பயணித்த ஏனைய இருவரும் நெருங்கிய உறவினர்களே எனவும் குடும்ப கஷ்டம் காரணமாகவே 17 வயதில் அவர் உழைக்க சென்றதாகவும் அவரை அநியாயமாக சுட்டு கொன்று விட்டார்கள் எனவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இன்று காலை பொலிசாரின் கட்டளையை மீறி சென்றதாக தெரிவித்து ஹயஸ் ரக வாகனம் ஒன்றின்மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட நிலையில் குறித்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2026/1464076

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கிச் சூடு நடாத்தப் பட்ட பின்... வாகனத்தின் காணொளி:

👉 https://www.facebook.com/reel/1508123317691140 👈

Reborn Visu Ranjith Guna
ஓடும் போது சுட்டிருந்தால் வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கும்!!!!

############

Reegan Devadas
இந்த வானம் நிறுத்தி வைக்கப்பட்டதை பார்க்கும் போது... தேவையின் அடிப்படையில் செய்யப்பட்ட கொலை

###############

Kogi Kogi
சிறுவனை சுட்டுக் கொல்லவா போலீசாருக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது 😡😡😡😡

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வட்ஸப்பில் இருந்து..

தற்போது மாடு களவில் ஈடுபடும் குழுவினர் சொகுசு கார்கள் மற்றும் வேன்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்...

நள்ளிரவு 1.18 மணியளவில் வயல் அரிவு வெட்டுக்கு ஆட்களை ஏற்ற சீட்கள் இல்லாத வாகனத்தில் சென்றார்கள் எனும் கதை சிறு பிள்ளையும் ஏற்றுக்கொள்ளாது.

வடக்கில் சட்டவிரோத தொழில்கள் இளவயதினர் அதிகம் ஈடுபட்டு வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. குடும்பத்தினர் எவ்வளவு பணம் சம்பாதிக்கின்றனர் என்று பார்க்கின்றனரேயொழிய எவ்வகையில் சம்பாதிக்கின்றனர் என்று பார்ப்பதில்லை.

ஒரு குடும்பத்தின் ஜீவனோபாயமாக இருக்கும் ஒரு மாட்டினை களவெடுத்து சென்று இறைச்சிக்காக விற்பவர்கள் அறிவதில்லை அந்த மாட்டை நம்பி இருக்கும் குடும்பத்தின் வலியினை.

சாதாரணமாக மாட்டை கடத்தி பிடிபட்டால் நீதிமன்றம் ஊடாக கிடைக்கும் தண்டனை மிகவும் சொற்பமானது.

கடத்தலில் ஈடுபட்டவர் அன்றே பிணையில் வெளியே வரலாம் குற்றக்காசும் மிகவும் குறைவே. இவ்வாறான சட்ட நிலைமை இருப்பதால்தான் துணிவாக மாடுகளை திருடி இறைச்சிக்கு விற்பனை செய்கின்றனர்.

இந்த துப்பாக்கிச்சூடு எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ளமுடியாதோ அந்தளவுக்கு இவர்கள் செய்த சட்டவிரோத செயலும் ஏற்றுக்கொள்ள முடியாததே...

தகவல்

சுப்பிரமணிய பிரபா

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

குருவி சுடுவது போல் சுட்டு பொசுக்கி உள்ளார்கள். சோசல் மீடியாவில் போலீசுக்கு முண்டு கொடுத்து துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தி உள்ளார்கள். இலங்கையில் கொலை குற்றம் செய்து மரண தண்டனை தீர்ப்பு கொடுக்கப்பட்டவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இல்லை. ஆனால், போலிசார் நடுத்தெருவில் சிறுவனுக்கு மரண தண்டனை கொடுத்துள்ளார்கள்.

போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டால் திருப்பி சுடுவதை நியாயப்படுத்தலாம். இலங்கையில் தமிழ் பகுதியில் நிராயுதபாணி மீது துப்பாக்கி சூடு செய்யும் அதிகாரம் எதை குறிக்கின்றது? போலிசார் மறிக்கும்போது வாகனத்தை நிறுத்தாவிட்டால் மரண தண்டனை வழங்கப்படவேண்டும் என இலங்கை சட்டம் கூறுகின்றதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நியாயம் said:

குருவி சுடுவது போல் சுட்டு பொசுக்கி உள்ளார்கள். சோசல் மீடியாவில் போலீசுக்கு முண்டு கொடுத்து துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தி உள்ளார்கள். இலங்கையில் கொலை குற்றம் செய்து மரண தண்டனை தீர்ப்பு கொடுக்கப்பட்டவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இல்லை. ஆனால், போலிசார் நடுத்தெருவில் சிறுவனுக்கு மரண தண்டனை கொடுத்துள்ளார்கள்.

போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டால் திருப்பி சுடுவதை நியாயப்படுத்தலாம். இலங்கையில் தமிழ் பகுதியில் நிராயுதபாணி மீது துப்பாக்கி சூடு செய்யும் அதிகாரம் எதை குறிக்கின்றது? போலிசார் மறிக்கும்போது வாகனத்தை நிறுத்தாவிட்டால் மரண தண்டனை வழங்கப்படவேண்டும் என இலங்கை சட்டம் கூறுகின்றதா?

துப்பாக்கிச் சூட்டால் தலையில் காயம் உள்ளதாக கூறுகிறார்கள்.

காலின் கீழ் அல்லது வாகன ரயரிற்கு சுடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அனுமதிப் பத்திரம் இல்லாமல் லஞ்சத்தை மட்டும் நம்பி வண்டி ஓட்டியிருக்கிறார். இலங்கைப் பொலிசிடம் மேற்கு நாட்டுத் தராதரத்தை எதிர்பார்த்து (வண்டியின் பதிவைப் பார்த்து வீடு தேடி வந்து கைது செய்வார்கள் என்று) நிறுத்தாமல் சென்றிருக்கிறார்.

விதிகளை மீற நினைக்கும் ஏனையோருக்கு இது தான் பாடம்: விதிகளை இப்படிப் பட்ட பிரச்சினைகள் வரும் வரை மீறலாம், ஒரு விக்கினமும் இல்லை, ஆனால், இப்படி எங்காவது மாட்டுப் பட்டால் உயிரே போய் விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லபட்டவரின் சித்தி கவலை தெரிவித்து பேசியதால் அவாவையும் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என்று ஜேவிபி தமிழ் ஆதரவாளர்கள் எழுதுகின்றனராம் .

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

இது கள்ளமாடு பிடிக்கிற கூட்டம் போலிருக்கு

கள்ள மாடு உட்பட திருட்டுக்கு சிங்கள தேசத்தில் தினமும் சிங்கன பொலிஸ் சிங்களவரை சுடுகுதா???

வாகனம் நிற்காமல் போனால் துரத்தி பிடிக்கலாம். தீவகத்துக்க வர போக ஒற்றை வீதி தானே இருக்கு. அதில தடை போட்டு வாகனத்தை பிடிக்க முடியாதோ?

சரி ... அதுக்கு சிங்கள பொலிஸ்ஸுக்கு திறனில்லை என்றால்.. 4 ரயரில 1 யாவது சுட்டு வாகனத்தை நிறுத்த ஏலாதோ??

16 வேட்டுக்கள் தீர்க்கப்பட்டிருக்கு வாகன மேற்பகுதி நோக்கி.

இது வாகனத்தை நிறுத்த அல்ல.. வாகனத்தில் இருந்தோரை கொல்வதையே நோக்காக கொண்டிருக்கு.

இதை சிங்கள தேசத்தில் தமிழ் பொலிஸ் செய்திருந்தால்....??? இப்படி சாதாரணமாக போய் இருக்குமா???

அண்மையில் அமெரிக்காவில் ICE ஏஜென்டுகள் இரண்டு வெள்ளயரை சுட்டதால்... என்ன நடந்தது..BBC breaking news வரை ஆனது...!

அந்த வகையில்...1. நீதிமன்ற உத்தரவின்றி சொறிலங்கா பொலிஸுக்கு சுடுவதற்கு அனுமதிக்க கூடாது. ( சொறிலங்கா பொலிஸை தாக்க வந்தால் அன்றி)

  1. தமிழர் பகுதிகளில் இனப்படுகொலை சிங்கள பொலிஸ் கடமையில் இருக்க கூடாது.

  2. சொறிலங்கா பொலிஸ் மற்றும் ஆயுதம் தரித்த தரிக்காத சொறீலங்கா அரச கூலிகள் கடமை நேரம் முழுக்க Operational Body camera அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நிறுத்தாமல் சென்ற ஒரு வாகன சாரதியின் தலையை குறிவைத்து துப்பாக்கிசூடு நடத்த இது போர் காலமும் அல்ல ,பெரும் போதைவஸ்துகூட்ட சுற்றிவளைப்பும் அல்ல, கண்டிப்பாக காவல்துறையின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது.

அதேநேரம் ஒரு பதினேழு வயது சிறுவன் வண்டி ஓட்டியிருக்கிறான்,

அவனுக்கு சாரதி அனுமதி பத்திரம் கிடையாது, காசு கொடுத்து கொடுத்துதான் ஓடினான் என்று அவன் சித்தியே வாக்குமூலம் கொடுக்கிறார், 17 வயசுக்காரன்கிட்ட ஒரு வாகனத்தை கொடுத்தது யார்? யாருடைய வாகனம் அது?

சாரதி அனுமதி பத்திரமும் இன்றி அதை ஓட்டும் வயசும் இன்றி லஞ்சம் கொடுத்து கொடுத்து வண்டி ஓட்டியிருக்கிறான் என்றால் என்றாவது ஒருநாள் எதிரே வரும் எத்தனையோபேரை கொல்லும் ஒரு அப்பட்டமான சட்டமீறலை செய்திருக்கிறான் என்பதை புரிந்துகொள்ளாமல் இதற்கு அவனின் சித்திவேறு நியாயம் கூறுகிறார்.

ஏற்றுக்கொள்ளமுடியாத நியாயங்கள் எந்த சபை ஏறி வாதிட்டாலும் நீதி கிடைக்காது. கொடுக்கவும் கூடாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் திடுக்கிடும் பிரேத பரிசோதனை அறிக்கை

Feb 11, 2026 - 06:37 AM

யாழ். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் திடுக்கிடும் பிரேத பரிசோதனை அறிக்கை

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனையில், துப்பாக்கிச் சன்னம் நெற்றியில் பாய்ந்து, தலைக்குள் ஊடுருவி மூளையைத் துளைத்துச் சென்றமையாலேயே மரணம் சம்பவித்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்த வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் என்ற 17 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளான்.

குறித்த இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனை, யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று சட்ட வைத்திய அதிகாரி எம். மயூரதன் முன்னிலையில் நடைபெற்றது.

இதன்போது, துப்பாக்கிச் சன்னம் இளைஞனின் நெற்றியில் பட்டு ஊடுருவி, மூளையைத் தாக்கியமையாலேயே மரணம் சம்பவித்துள்ளது என உடற்கூற்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmlhbww8s000n356ngjutpm7k

  • கருத்துக்கள உறவுகள்

வட்ஸப்பில் இருந்து..

🚨 Van துப்பாக்கிச்சூடு சம்பவம் – போலீஸ் விளக்கம் வெளியீடு

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வேன் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இலங்கை போலீசார் புதிய விளக்கத்தை வெளியிட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் 17 வயது ஓட்டுநர் சம்பந்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அது தவறான தகவல் என போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்டவர் 19 வயதுடைய பயணி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

போலீசார் தெரிவித்ததாவது:
அல்லைப்பிட்டி சந்திப்பிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றை நிறுத்துமாறு சைகை செய்யப்பட்டது. ஆனால் வாகனம் நிற்காமல் சென்றதால் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

அதில் காயமடைந்த 19 வயது இளைஞர் பின்னர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாளில் இரண்டு வயது கூடிவிட்டது,

ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை அத்னால் உயிரிழந்து விட்டார்..

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20260210-WA0086.jpg?resize=750%2C375

அல்லைப்பிட்டி சிறுவன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை!

யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தில் பயணித்த இருவரையும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் தலா 2 ஆள் பிணையிலும் செல்ல ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது.

அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் கட்டளையை மீறி பயணித்த வாகனம் மீது பொலிஸார் நேற்றைய தினம் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில், வாகனத்தில் பயணித்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்

கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , அவர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

இந்நிலையில் குறித்த இருவர் சார்பிலும் முன்னிலையான சட்டத்தரணி இன்றைய தினம் நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கினை மன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்து , பிணை விண்ணப்பம் செய்ததனை அடுத்து இருவருக்கும் நீதிமன்று பிணை வழங்கியுள்ளது.

இதேவேளை, துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான ஹயஸ் வாகனத்தை வவுனியாவில் உள்ள நபர் ஒருவரிடம் இருந்து தாம் புதிதாக கொள்வனவு செய்ததாகவும் , கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் தமக்கு சொந்தமான வயலில் நெல் அறுவடை செய்வதற்காக வேலணை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வேலையாட்களை ஒழுங்கு படுத்தி தருவதாக கூறியதால் , அவரை ஏற்ற சென்ற வேளையே சம்பவம் இடம்பெற்றதாக கைதான இருவரும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், உயிரிழந்த சிறுவனின் சிறிய தந்தை தான் முன்னதாக வாகனத்தை ஓடியதாகவும் , தீவு பகுதியில் வீதியில் சிறுவன் தான் வாகனம் ஓட விரும்பி கேட்ட போது வாகனத்தை வழங்கிய நிலையில் வாகனத்தை ஓட்டி சென்ற வேளை அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் மறித்த போது வாகனத்தை நிறுத்தாது தொடர்ந்து செலுத்தினார் அவ்வேளை மண்டைதீவு பொலிஸ் காவலரணில் நின்ற பொலிஸார் வாகனத்தை மறிக்க தயாராக இருந்த வேளை மீண்டும் வாகனத்தை அல்லைப்பிட்டி பக்கம் நோக்கி திருப்பிய வேளை எம்மை பின் தொடர்ந்து வந்த பொலிஸார் எமது வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

ஒரே ஒரு துப்பாக்கி சூட்டு சத்தம் மாத்திரமே எமக்கு கேட்டது. அதன் போதே பெறாமகன் வீதியோரமாக வாகனத்தை நிறுத்தி மயங்கி சரிந்தார்.

பின்னர் பொலிஸார் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதுடன் , எம்மை கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விட்டனர்.

வாகனத்தில் இருந்த சாணகம் , கயிறு , வாள் , வாகனத்தில் விழுந்துள்ள துப்பாக்கி சூடுகள் பற்றி எவையும் எமக்கு தெரியாது என தெரிவித்துள்ளனர்.

அதேவேளை , குறித்த நபர்கள் தீவகத்தில் சட்டவிரோதமாக மாடுகளை பிடித்து இறைச்சியாக்கும் கும்பல்களுடன் தொடர்பு என சமூக வலைத்தளங்களில் செய்திகளை பலரும் பதிவிட்டு வரும் நிலையில் , கைதான இருவர் மற்றும் உயிரிழந்த சிறுவன் தொடர்பில் முன்னர் குற்றச்சாட்டுக்கள் ஏதேனும் இருந்தாக பொலிஸார் நீதிமன்றில் எந்த தகவலையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் உயிரிழந்த சிறுவனின் இறுதி கிரியைகள் நாளைய தினம் வட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2026/1464397

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

யாழ். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் திடுக்கிடும் பிரேத பரிசோதனை அறிக்கை

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனையில், துப்பாக்கிச் சன்னம் நெற்றியில் பாய்ந்து, தலைக்குள் ஊடுருவி மூளையைத் துளைத்துச் சென்றமையாலேயே மரணம் சம்பவித்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.

இதன்போது, துப்பாக்கிச் சன்னம் இளைஞனின் நெற்றியில் பட்டு ஊடுருவி, மூளையைத் தாக்கியமையாலேயே மரணம் சம்பவித்துள்ளது என உடற்கூற்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸார் வாகனத்தை மறித்த போது... நிற்காமல் போயிருந்தால், பின்னுக்கு இருந்துதான் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருப்பார்கள்.

அப்படியிருக்க... சிறுவனின் நெற்றியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, மூளையை தாக்கியமையாலேயே மரணம் சம்பவித்துள்ளது என உடற்கூற்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸார் கொலை செய்து விட்டு இப்போ... தமக்கு சாதகமாக இச் சம்பவத்தை திசை திருப்புகின்றார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

ஒரே ஒரு துப்பாக்கி சூட்டு சத்தம் மாத்திரமே எமக்கு கேட்டது. அதன் போதே பெறாமகன் வீதியோரமாக வாகனத்தை நிறுத்தி மயங்கி சரிந்தார்.

வாகனத்தில் இருந்த சாணகம் , கயிறு , வாள் , வாகனத்தில் விழுந்துள்ள துப்பாக்கி சூடுகள் பற்றி எவையும் எமக்கு தெரியாது என தெரிவித்துள்ளனர்.

வாகனத்தில் இருந்த சாணகம் , கயிறு , வாள், வாகனத்தில் விழுந்துள்ள துப்பாக்கி சூடுகள் பற்றி எவையும் எமக்கு தெரியாது என வாகனத்தில் இருந்த சிறிய தந்தை தெரிவித்துள்ளார்.

பொலீசாரே... துப்பாக்கிச் சூடு நடாத்தி சிறுவனை கொன்று, மற்றையவர்களை கைது பண்ணிய பின்... யாரும் அவ்விடத்தில் இல்லாத நிலையில், அந்த வாகனத்த்துள்... சாணகம், கயிறு , வாள் போன்ற்வற்றை கொண்டு போய் வைத்து.. அவர்களை மாட்டுக் கள்ளர் என நிறுவ பார்க்கிறார்கள். இலங்கை போலீசார்.. வழக்குகலாய் திசை திருப்பி தாம் தப்புவது இது முதல் முறையல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

629982417_27025713030350698_331857957232

631545055_27025712973684037_444740224283

629889797_27025713070350694_298355841733

631641814_27025713297017338_183888457774

629788864_27025713467017321_500991992525

632794686_27025713417017326_757418345584

632591916_27025713633683971_568430830065

"வாகனத்தை பொக்ஸ் அடிச்சு தான் வெடி வைச்சு இருக்கிறாங்க ?"

தீவகத்தில் இருந்து யாழ்.நோக்கி பயணித்த வாகனத்தை அல்லைப்பிட்டி பகுதியில் நின்ற பொலிஸார் மறிச்சு இருக்கிறாங்க. வாகனம் நிற்காது தொடர்ந்து பயணித்துள்ளது.

அது தொடர்பில் மண்டைதீவு பொலிஸ் காவலரனுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் உஷார் நிலையில் இருந்ததும். வந்த வாகனம் மண்டைதீவில் பொலிஸார் உசார் என்றதும் , மீண்டும் அல்லைப்பிட்டி பக்கம் வாகனத்தை திருப்பி செல்ல முற்பட்டுள்ளனர்.

அந்த நேரம் அல்லைப்பிட்டியில் இருந்து வாகனத்தை துரத்தி வந்த பொலிஸ் குழு வாகனத்தை நோக்கி சூட்டுள்ளனர். அதோடு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. (சம்பவம் நடந்தது யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில்)

வாகனத்தினுள் உள்ளவர்கள் தமக்கு ஒரு துப்பாக்கி சூட்டு சத்தமே கேட்டதாகவும். அதோடு வாகனத்தை வீதியோரமாக நிறுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் பொலிஸ் தரப்பு தகவலின் அடிப்படையில் ஒரு கைத்துப்பாக்கி சூடும் , ஏகே துப்பாக்கி சூடு 08ம் நடத்தப்பட்டதாக

படம் 1 :- வாகனத்தின் முன் பக்க கண்ணாடியில் உள்ள காயம். அது முன் பக்கத்தால் ஏதோ ஒரு பொருள் தாக்கியுள்ளது (?) உள்பக்கத்தால் வந்த சன்னம் ஏதேனும் தாக்கி இருந்தால் கண்ணாடியில் உள்ள ஓட்டை வெளிப்பக்கம் தள்ளி இருக்கும். முன் பக்கத்தால் ஏதோ ஒரு பொருள் தாக்கி இருக்கலாம்

படம் 2 :- நின்ற வாகனத்தின் பின் பக்க கண்ணாடி அடித்து உடைக்கப்பட்டு இருக்கலாம். ஏனெனில் கண்ணாடி சிதறல்கள் அவ்விடத்தில் காணப்படுகிறது.

படம் 3 :- துருப்பிடித்த வாள்

படம் 4 :- வீதியில் படிந்துள்ள இரத்த கறை வாகனம் இரத்த வடிய வடிய சில தூரம் பயணித்து இருக்கலாம்..

படம் 5 ;- வாகனத்தின் பின் பக்க கண்ணாடி உடைவு.

இது துப்பாக்கி சூட்டால் ஏற்பட்ட உடைவு போன்று இல்லை. இந்த கண்ணாடி உடைவு துண்டுகள் தான் படம் 2 இல் வீதியில் சிதறி இருக்கும் கண்ணாடி துண்டுகள், நின்ற வாகனத்தின் கண்ணாடி அடித்து உடைத்து இருந்தாலே , அவ்வாறு காணப்படும்.

படம் 6 :- துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான வாகனம் நின்ற இடம். அதில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் உள்ள பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் , பொலித்தீன் பையில் சாணகம் காணப்பட்டுள்ளது.

படம் 7 ;- பொலித்தீன் பையில் காணப்படும் சாணகம்

படம் 8 :- சம்பவம் இடம்பெற்ற பகுதி. சிவத்த வட்டத்திற்குள் இருப்பது தான் பேருந்து நிலையம். அதற்கு அருகில் தான் பொலித்தீன் பைக்குள் சாணகம் இருந்தது.

படம் 09 :- மண்டைதீவு பொலிஸ் காவலரண். அங்கு வீதி தடைகள் தயார் நிலையில், மண்டைதீவு பொலிஸ் காவலரணில் 24 மணி நேரமும் பொலிஸார் கடமையில் இருப்பார்கள் ஏதேனும் சம்பவம் என்றால் வீதி தடைகளை வீதிக்கு உடனே இழுத்து விடுவார்கள். அதற்கு ஏதுவாக சில்லுகள் எல்லாம் பூட்டப்பட்டுள்ளன.

இப்படி நிறைய விடயங்கள் இருக்கு. இருக்கட்டும்.

கைதானவர்கள் தொடர்பில் பலரும் முன் வைக்கும் குற்றச்சாட்டு " மாட்டு கள்ளர்" பொலிஸார் நேற்றைய தினம் நீதிமன்றில் கைதான இருவரையும் முற்படுத்திய வேளை அவர்களுக்கு முற்குற்றம் உள்ளதாக தெரிவிக்கவில்லை. உயிரிழந்த சிறுவனுக்கும் இருந்ததாக தெரிவிக்கவில்லை

விளக்கமறியலில் வைக்கப்பட்ட இருவருக்கும் பிணை கோரி இன்றைய தினம் புதன்கிழமை சட்டத்தரணி பிணை விண்ணப்பம் செய்த போதிலும் , பிணைக்கு எதிர்ப்பு தெரிவித்த பொலிஸார் உயிரிழந்த மற்றும் விளக்கமறியலில் இருந்த இருவருக்கும் எதிராக எந்தவொரு முற்குற்றங்கள் இருந்ததாகவும் மன்றில் தெரிவிக்கவில்லை.

அத்தோடு , பொலிஸ் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கைகளிலும் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு முற்குற்றம் இருப்பது தொடர்பில் எந்த விடயத்தையும் குறிப்பிடவில்லை.

அதை விட சம்பவம் இடம்பெற்ற வேளை ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சம்பவ இடத்தில் சம்பவத்துடன் தொடர்பு பட்ட பொலிஸ் குழுவில் ஒருவராக இருந்துள்ளார். அவரது உத்தரவிலையே துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் ஊடாக அறிய முடிகிறது.

சம்பவம் தொடர்பில் முதல் கட்டமாக குறைந்த பட்சம், பொலிஸ் விசேட விசாரணை குழு ஒன்று அமைத்து , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து இருக்க வேண்டும்.

விசாரணைங்களில் தலையீடு இருக்க கூடாது என்பதற்காக சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவை இடை நிறுத்தியோ , வேறு பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றம் செய்தோ விசாரணைகளை முன்னெடுத்து இருக்க வேண்டும்.

ஊர்காவற்துறை பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடாத்தி இருக்க முடியாது. பிறிதொரு விசேட பொலிஸ் குழுவே விசாரணைகளை முன்னெடுத்திருக்க வேண்டும்.

ஏனெனில் சம்பவத்துடன் தொடர்பு பட்ட பொலிஸ் குழுவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் காணப்படுவதனால் , அந்த பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொள்ளும் விசாரணைகள் எவ்வளவு தூரம் நியாயமாக இருக்க முடியும் ??

ஆ.. அப்புறம் வாகனத்தின் பின் சீட் எங்கே என கேட்டதற்கு , உமையாள்புரத்தில் வயல் உள்ளதாம், அங்கிருந்து நெல் மூட்டை ஏற்றி வர ஏதுவாக கழட்டி வைச்சது என வாகனத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகனம் கூட ஓரிரு நாட்களுக்கு முன்னர் தான் வவுனியாவை சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து விலைக்கு வாங்கியுள்ளனர்.

Sriramachandaran Mayutharan 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். துப்பாக்கி சூட்டு சம்பவம் – மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

written by admin February 11, 2026

Global-34.png?fit=940%2C788&ssl=1

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் 17 வயது சிறுவன் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தனது விசாரணைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தலைமையிலான குழுவினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடம் மற்றும் வாகனத்தின் நிலை ஆகியவற்றை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.

சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் அந்தப் பகுதியில் கடமையில் இருந்தவர்களிடம் ஆரம்பகட்ட தகவல்கள் கோரப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது வாகனத்தில் பயணித்த ஏனைய இருவரிடமும், உயிரிழந்த சிறுவன் அல்பினோ அருள் பயாஸின் உறவினர்களிடமும் விரிவான வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

உயிரிழந்த சிறுவனின் நெற்றியில் தோட்டா பாய்ந்திருப்பதாக உடற்கூற்று ஆய்வில் தெரியவந்துள்ள நிலையில், இது திட்டமிட்ட கொலையா அல்லது தற்காப்பு நடவடிக்கையா என்பது குறித்து ஆணைக்குழு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

இந்தச் சம்பவம் இலங்கையின் மனித உரிமை வரலாற்றில் மீண்டுமொரு கறையாகப் பார்க்கப்படுகிறது. காவல்துறையினா் ஒரு வாகனத்தை நிறுத்த முற்படும்போது, வாகனத்தின் டயர்களை இலக்கு வைக்காமல் பயணிகளின் தலையை இலக்கு வைத்துச் சுடுவது “அதிகார துஷ்பிரயோகம்” என மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த அறிக்கை, நீதிமன்ற விசாரணைகளில் ஒரு முக்கிய ஆவணமாகப் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை படைகள் தொழிலுக்கு சென்ற சாதாரண தமிழ் பொதுமக்களை சுட்டுக்கொன்றுவிட்டு அவர்களுக்கு இராணுவ உடை அணிவித்து விடுதலை புலிகள் உறுப்பினர்கள் என ரூபவாஹினியில் காட்டி பெருமை கொண்டாடிய காலம் முன்பு காணப்பட்டது. இதே படைகளுக்கு சாதாரண பொதுமக்களை சுட்டுக்கொன்றுவிட்டு வாள்வெட்டு கோஷ்டி அல்லது மாட்டுக்கள்ளர் என நிறுவுவது எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு செய்யக்கூடிய வித்தைகள். சிறீ லங்கா போலீசை கண்டிக்காமல் கொல்லப்பட்ட சிறுவன் மீதும், அவன் சார்ந்தோர் மீதும் சேற்றை வாரி இறைக்கின்றார்கள் பாருங்கள் சிலர். இவர்கள்தான் உண்மை தமிழர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, நியாயம் said:

இலங்கை படைகள் தொழிலுக்கு சென்ற சாதாரண தமிழ் பொதுமக்களை சுட்டுக்கொன்றுவிட்டு அவர்களுக்கு இராணுவ உடை அணிவித்து விடுதலை புலிகள் உறுப்பினர்கள் என ரூபவாஹினியில் காட்டி பெருமை கொண்டாடிய காலம் முன்பு காணப்பட்டது. இதே படைகளுக்கு சாதாரண பொதுமக்களை சுட்டுக்கொன்றுவிட்டு வாள்வெட்டு கோஷ்டி அல்லது மாட்டுக்கள்ளர் என நிறுவுவது எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு செய்யக்கூடிய வித்தைகள். சிறீ லங்கா போலீசை கண்டிக்காமல் கொல்லப்பட்ட சிறுவன் மீதும், அவன் சார்ந்தோர் மீதும் சேற்றை வாரி இறைக்கின்றார்கள் பாருங்கள் சிலர். இவர்கள்தான் உண்மை தமிழர்கள்!

இதை சிறிலங்கா பொலிசுக்கு வக்காலத்தாகப் பார்க்காதீர்கள். இரண்டு இடங்களில் பொலிஸ் நிறுத்தும் படி கட்டளை கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.

மிக இலகுவான கேள்விகள்: ஏன் நிறுத்தவில்லை? தப்பி ஓட வேண்டிய தேவை என்ன இருந்தது?

மரணம் துயரத்திற்குரியது தான். ஆனால், மரணத்தை விட மோசமா சார் சிங்களப் பொலிஸ் நிறுத்தச் சொன்னால் நிறுத்துவது? இதே போல ஒரு யாழ் பல்கலை மாணவர் சில ஆண்டுகள் முன்னர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்று பொலிஸ் சுட்டதும், மக்கள் கொதித்ததும் நடந்தது.

லைசென்ஸ் இருந்தால் பொலிஸ் நிறுத்தச் சொன்னால் என்ன செய்ய வேண்டுமென்றும் தெரிய வேண்டுமல்லவா? விதியை மீறி விட்டு இனி அழுது என்ன பயன்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். துப்பாக்கி சூட்டு சம்பவம் ; சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவற்றை நாங்கள் எடுப்போம் - பவானந்தராஜா எம்.பி!

11 Feb, 2026 | 04:23 PM

image

யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவற்றை நாங்கள் எடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை (11) வட்டுக்கோட்டை - இன்பச்சோலை வீதி புனரமைப்பில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரியவருகையில்,

சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என ஜனாதிபதியும் சொல்லியிருந்தார். சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ நாங்கள் அதை எடுப்போம். யாரில் பிழை இருக்கிறதோ அவர்களுக்கான தண்டனையை நாங்கள் கொடுப்போம். இந்த விடயத்தில் சட்டம் தனது வேலையை சரியாக செய்யும்.

பொலிஸாரோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்லது பிரதேச சபை உறுப்பினர்களோ யார் பிழை செய்தாலும், யார் பிழை செய்தது என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றம். எனவே நீதிமன்றம் சரியான நடவடிக்கை எடுக்கும் என்றார்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர், "சங்கானை பிரதேச செயலர் பிரிவில் திடீர் பணக்காரர்கள் உருவாகியுள்ளதாகவும், அவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வலி மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கூறினீர்கள். அது தொடர்பான முன்னேற்றம் என்ன?" என் கேள்வி எழுப்பினார்.

அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதில் தெரிவிக்கையில்,

நாங்கள் இது தொடர்பான சில விபரங்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு இரவிலோ அல்லது ஒரு கிழமையிலோ நடவடிக்கையை எடுக்க முடியாது. ஆறுதலாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/238406

  • கருத்துக்கள உறவுகள்

632372976_27027573380164663_483926595358

634109425_27027622233493111_267708657505

அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனின் கண்ணீர் அஞ்சலி பதாகை.

09.11.2008ஆம் ஆண்டே பிறந்துள்ளான். வாற நவம்பர் 09ஆம் திகதிக்கு பின்னரே 18 வயது.

தற்போது 17வயது +

ஆக 19 வயது என இன்றைக்கு அறிக்கை விட்டதும் பொய்யா ??

Sriramachandaran Mayutharan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

இதை சிறிலங்கா பொலிசுக்கு வக்காலத்தாகப் பார்க்காதீர்கள். இரண்டு இடங்களில் பொலிஸ் நிறுத்தும் படி கட்டளை கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.

மிக இலகுவான கேள்விகள்: ஏன் நிறுத்தவில்லை? தப்பி ஓட வேண்டிய தேவை என்ன இருந்தது?

மரணம் துயரத்திற்குரியது தான். ஆனால், மரணத்தை விட மோசமா சார் சிங்களப் பொலிஸ் நிறுத்தச் சொன்னால் நிறுத்துவது? இதே போல ஒரு யாழ் பல்கலை மாணவர் சில ஆண்டுகள் முன்னர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்று பொலிஸ் சுட்டதும், மக்கள் கொதித்ததும் நடந்தது.

லைசென்ஸ் இருந்தால் பொலிஸ் நிறுத்தச் சொன்னால் என்ன செய்ய வேண்டுமென்றும் தெரிய வேண்டுமல்லவா? விதியை மீறி விட்டு இனி அழுது என்ன பயன்?

போர் நிறைவடைந்த பின் நான் பல தடவைகள் இலங்கை சென்று வந்துள்ளேன். பல தடவைகள் வாகனம் வாடகைக்கு எடுத்து ஓடியுள்ளேன். நான் வாகனம் ஓடியபோது போலிசார் என்னை மறித்த தருணங்களில் பல தடவைகள் தமக்கு காசு உதவி செய்யுமாறு/காசு தருமாறு நேரடியாகவோ/மறைமுகமாகவோ கேட்டார்கள். அனைத்து தருணங்களிலும் என்னிடம் தேவையான ஆவணங்கள் காணப்பட்டன. நான் வீதி நடைமுறைகளை அனுசரித்து வாகனம் ஓட்டினேன்.

வாகனத்தை மறிக்கும் போது காசு கேட்கிறார்களேயென நான் இவர்களின் ரோதனை தாங்க முடியாமல் மறிக்கும்போது நான் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டினால் என்னை போலிசார் தலையில் சுட்டு கொலை செய்ய வேண்டுமா?

வாகனத்தை மறிக்கும்போது நிறுத்தாவிட்டால் மறித்தது ஒரு தடவையாகட்டும், அல்லது பத்து தடவைகள் ஆகட்டும் வாகனம் ஓடுபவரை சுட்டு கொலை செய்யவேண்டும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமா?

சிறுவனை சுட்டு கொலை செய்த சம்பவம் போலிசாரின் ஆணவ கொலை என்பது தவிர வேறு ஏதாக அமையமுடியும்?

யாழ்ப்பாணத்தில் சிறப்பாக இலங்கை சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டாட்டத்துடன் கொண்டாட்டமாய் ஒரு கிழமையில் போலிசார் சிறுவனை சுட்டு கொலை செய்து சிறுவனுக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.