Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தமிழ் சிறி said:

பொலிஸார் கொலை செய்து விட்டு இப்போ... தமக்கு சாதகமாக இச் சம்பவத்தை திசை திருப்புகின்றார்கள்.

இலங்கை பொலிசார் மிக மோசமானவர்கள்.அதை விட இராணுவத்தினர் இன்னும் மோசமானவர்கள். நீதி நேர்மை நியாயம் இல்லாமல் நடப்பவர்கள்.

லஞ்சம் கொடுத்தால் மட்டும் நேர்மையாக நடப்பது போல் தெரியும். லஞ்சமாக கருவாடு கொடுத்தாலும் சந்தோசமாக ஏற்கும் காவல்துறையுள்ள நாடு அது.

  • Replies 80
  • Views 3.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நியாயம்
    நியாயம்

    குருவி சுடுவது போல் சுட்டு பொசுக்கி உள்ளார்கள். சோசல் மீடியாவில் போலீசுக்கு முண்டு கொடுத்து துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தி உள்ளார்கள். இலங்கையில் கொலை குற்றம் செய்து மரண தண்டனை தீர்ப்பு கொடுக்கப்பட்

  • இவை எல்லாமும் மட்டும் அல்ல அதிபர் ஆனந்தராஜா போன்றோர் கொலைகளும் அரங்கேறின. இவை அரசியல் கொலைகள். ஆனால் களவுக்கு புலிகள் மரண தண்டனை வழங்கியதாக நான் அறியவில்லை. கப்பம் கேட்டு கொடுக்காத போது புளொட் சுட்டு

  • கள்ள மாடு உட்பட திருட்டுக்கு சிங்கள தேசத்தில் தினமும் சிங்கன பொலிஸ் சிங்களவரை சுடுகுதா??? வாகனம் நிற்காமல் போனால் துரத்தி பிடிக்கலாம். தீவகத்துக்க வர போக ஒற்றை வீதி தானே இருக்கு. அதில தடை போட்டு வாகனத

  • கருத்துக்கள உறவுகள்
On 10/2/2026 at 16:55, Justin said:

அனுமதிப் பத்திரம் இல்லாமல் லஞ்சத்தை மட்டும் நம்பி வண்டி ஓட்டியிருக்கிறார். இலங்கைப் பொலிசிடம் மேற்கு நாட்டுத் தராதரத்தை எதிர்பார்த்து (வண்டியின் பதிவைப் பார்த்து வீடு தேடி வந்து கைது செய்வார்கள் என்று) நிறுத்தாமல் சென்றிருக்கிறார்.

விதிகளை மீற நினைக்கும் ஏனையோருக்கு இது தான் பாடம்: விதிகளை இப்படிப் பட்ட பிரச்சினைகள் வரும் வரை மீறலாம், ஒரு விக்கினமும் இல்லை, ஆனால், இப்படி எங்காவது மாட்டுப் பட்டால் உயிரே போய் விடும்.

நீங்களா இப்படி எழுதுவது என சந்தேகமாக உள்ளது.

அண்மையில் அமெரிக்காவில் ஒரு பெண்ணை ICE கொலை செய்தது போலத்தான் இதுவும்.

மாடு திருடுவதோ, அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதோ, பொலிஸ் மறிக்கும் போது நிப்பாட்டாது போவதோ மரண தண்டனைக்குரிய குற்றம் அல்ல.

இந்த வாகனத்தால் பொலிசுக்கு ஆபத்தும் இல்லை. ஆகவே தற்காப்பு சூடும் இல்லை.

வாகனத்தை நிறுத்த எத்தனையோ இடங்களில் சுட்டிருக்கலாம்.

உடற்கூராய்வு நெற்றியில் சுட்டதாக சொல்கிறதாம்.

வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ரவைகள் உள்ளே போன துளைகள் தெரிகிறன.

இது நிச்சயமாக ஒரு execution தான்.

இலங்கை பொலிஸ் மேற்கு நாடுகள் போல இல்லைத்தான்.

ஆனால் இலங்கை பொலிஸின் அளவுகோலின் படி கூட இது அராஜகம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு: விசாரணைகள் தீவிரம்!

Feb 12, 2026 - 08:17 AM

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு: விசாரணைகள் தீவிரம்!

அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில், சம்பவ தினத்தில் கடமையில் இருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபர் தொடர்பான விசாரணைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், உயிரிழந்த நபர் பயன்படுத்திய வாகனத்தை நேரில் சென்று பார்வையிட்டதுடன், அதில் காணப்பட்ட தடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறோம்.

உயிரிழந்த நபரின் உறவினர்களிடம் ஏற்கனவே வாக்குமூலங்கள் பெறப்பட்ட நிலையில், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களிடமும், சம்பவ தினத்தன்று கடமையில் இருந்த ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்களிடமும் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன.

மேலும், உயிரிழந்த நபரின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை. அந்த அறிக்கை கிடைத்ததும், அது தொடர்பில் மேலதிக கவனம் செலுத்தப்படும்" என அவர் தெரிவித்தார்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmliuv1140004356n4urg9d74

  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2026 at 07:21, putthan said:

இரண்டு நாளில் இரண்டு வயது கூடிவிட்டது,

ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை அத்னால் உயிரிழந்து விட்டார்..

சமூக வலைத்தளங்கள், வட்ஸப் எல்லாம் பிழையான தகவல்கள் வருகின்றன. நம்பகத்தன்மையானவர்களே பிழையான தகவல்களை பரப்புகின்றனர். பையனுக்கு 17 வயதுதான்..

அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவருக்கு 17 வயது 3 மாதங்கள்! வீட்டாருக்கு அச்சுறுத்தல்!

அவதூறு பரப்பப்படுவதாக கவலை!

adminFebruary 11, 2026

3-5.jpg?fit=1170%2C527&ssl=1

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் போலீசாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு 17 வயது என்பது உறுதியாகியுள்ளது.

காவற்துறையினரின் கட்டளையை மீறி வாகனத்தை செலுத்தி சென்றார்கள் என நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை காவற்துறையினர் வாகனத்தின் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் வட்டுக்கோட்டையை சேர்ந்த அருள்பயஸ் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளான்.

அது தொடர்பில் 10ஆம் திகதி காவற்துறையினர் வெளியிட்ட ஊடக அறிவித்தலில் 17 வயது என குறிப்பிட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் 11ஆம் திகதி வெளியிட்ட மற்றுமொரு ஊடக அறிவித்தலில் 19 வயது என குறிப்பிட்டுள்ளார்கள்.

அந்நிலையில் உயிரிழந்த சிறுவன் 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09ஆம் திகதியே பிறந்தார் என வீட்டார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதன் அடிப்படையில் வருகின்ற நவம்பர் 09ஆம் திகதிக்கு பின்னரே 18 வயதாக உள்ளது. தற்போது சிறுவனுக்கு 17 வயதும் 3 மாதங்களுமே ஆகின்றன.

அல்லைப்பிட்டியில் உயிரிழந்த சிறுவனனின் குடும்பத்திற்கு மறைமுக அச்சுறுத்தல் ?

அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என வட்டுக்கோட்டை பொலிஸார் மறைமுக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காவற்தறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் வீட்டாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தன்னை வட்டுக்கோட்டை காவல் நிலைய உத்தியோகஸ்தர் என அடையாளப்படுத்திக்கொண்டு , சிறுவனின் உடலத்துடன் நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க உள்ளீர்களா என வினாவியுள்ளார். அதற்கு வீட்டார் தாம் அப்படி எதுவும் ஏற்பாடு செய்ய வில்லை என வீட்டார் கூறியுள்ளனர்.

அதனை தொடர்ந்து , சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் விசாரணைகள் நடக்கின்றன. நாங்கள் ஒரு திகதி சொல்லுவோம். அந்த திகதியில் நீதவானை சந்திக்க ஏற்பாடு செய்வோம். அன்றைய தினம் நீங்கள் நீதவானை சந்தித்து முழு விடயத்தையும் சொல்லலாம்.

இப்ப போராட்டம் எதுவும் செய்ய வேண்டாம். அரசியல்வாதிகள் எவரேனும் வந்தால் அவர்களுடன் கதைக்க வேண்டாம்.அவர்கள் தங்கள் அரசியலுக்காக உங்களை குழப்பலாம். நாங்கள் உங்கள் மகனின் விடயத்திற்கு நீதியை பெற்று தருவோம். நீங்கள் எந்த போராட்டங்கள் எதிர்ப்புக்கள் இன்றி மகனின் இறுதி கிரியைகளை செய்யுங்கள் என மறைமுகமாக அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

அல்லைப்பிட்டி சம்பவம் – உயிரிழந்த சிறுவன் தொடர்பில் அவதூறுகள் பரப்பபடுவதாக வீட்டார் கவலை!

எமது பிள்ளையை பற்றி தவறான செய்திகளை பரப்பி வருவதால் , பிள்ளையை இழந்து வாடும் எமக்கு அந்த செய்திகள் மிக மனவருத்தத்தை தருகிறது என அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் வீட்டார் கவலை தெரிவித்துள்ளனர்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் உள்ள ஒருவரிடம் சம்பவ தினம் நடந்த அன்றே அந்த ஹயஸ் வாகனத்தை வாங்கி இருந்தோம். அன்று இரவு தான் வேலணைக்கு செல்லும் போது, உயிரிழந்த சிறுவனின் சிறிய தந்தையே வாகனத்தை செலுத்தி சென்றார். ஆள் நடமாட்டம் அற்ற வீதியில் வாகனத்தை தான் செலுத்த போவதாக கேட்டதால் , வாகனத்தை கொடுத்தார்.

காவற்துறையினர் மறித்த போது நிற்காமல் ஓடியது மாத்திரமே அவன் செய்த தவறு. அதற்காக அவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவன் உயிரிழந்து விட்டான். ஆனால் சில ஊடகங்கள் அவன் தொடர்பில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

எமது காணி எல்லையில் நின்ற வேப்ப மரத்தை அயலவர் வெட்டினார். அந்த மரத்தின் விறகுகளில் பாதியை எமக்கு அவர் தந்திருக்க வேண்டும். அதனை அவர் தரவில்லை. அந்த கோவத்தில் , மகன் சில விறகுகளை தூக்கி எமது காணிக்குள் போட்டான்.

அது தொடர்பில் அந்த காணி உரிமையாளர் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அதன் பிரகாரம் மகனை அழைத்து விசாரித்தார்கள். அது மாத்திரமே அவனுக்கு எதிரான காவற்துறை முறைப்பாடு. இது நடந்து கூட சில வருடங்கள் ஆகி விட்டன என வீட்டார் தெரிவித்துள்ளனர்

https://globaltamilnews.net/2026/228929/

சவப்பெட்டியுடன் வீதியில் ஆர்ப்பாட்டம்

Janu   / 2026 பெப்ரவரி 12 , பி.ப. 12:18

அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (12) அன்று இடம்பெற்றது.

அதன் பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சவப்பெட்டியுடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து "பொலிஸாரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது" என கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பு.கஜிந்தன்

image_aaf56522ba.gif

image_bbb08f51b3.gif

https://www.tamilmirror.lk/செய்திகள்/சவப்-பெட்டியுடன்-வீதியில்-ஆர்ப்பாட்டம்/175-372375

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20260212-WA0014-scaled.jpg?resize=75

சிறுவனை கொலை செய்த பொலிஸாரை கைது செய்யுமாறு போராடிய உறவுகள்!

அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது.

அதன்பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சடலத்துடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து ‘பொலிஸாரை கைது செய்து எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது’ என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது உடலம் நவாலி இந்து மயானத்தில் புதைப்பதற்காக கொண்டு செல்லப்படுகிறது.

https://athavannews.com/2026/1464472

  • கருத்துக்கள உறவுகள்

வாகனம் ஒழுங்காகவே நிறுத்தப்பட்டிருக்கிறது. வாகனம் நிறுத்தப்பட்டபின் துப்பாக்கிச்சூடு நடந்ததா என்கிற சந்தேகமும் எழுகிறது. வாகனம் நிறுத்தாமல் சென்றிருந்தால் வாகனத்தின் சில்லுகளுக்கு சூடு நடத்தி வாகனத்தை நிறுத்தியிருக்கலாம். ஆனால் சாரதியை இலக்கு வைத்து வேண்டுமென்றே சூடு நடத்தியிருக்கிறார்கள். துருப்பிடித்த வாள், மற்றொன்று பிடியற்ற கத்திபோல் தெரிகிறது, அதுவும் கதவுக்கருகில் சாதாரணமாக கிடக்கிறது. மரணத்தை ஏற்படுத்தி அதன்பின் சான்றுகளை சோடித்துள்ளனர். குறிப்பிட்ட பொலிஸாருக்கு போதைப்பொருள் பரிசோதனை நடத்தியிருக்க வேண்டும். கொல்லப்பட்டவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாகவும், உடன் சென்ற மற்றுமொருவர் போதைப்பொருள் பரிசோதனையில் உட்கொண்டிருப்பது பரிசோதனையில் வெளிவந்ததாகவும், குறிப்பிட்டளவு போதைப்பொருளை வாகனத்திலிருந்து கைப்பற்றியதாகவும் போலீசார் முதலில் அறிவித்திருந்தனர், பின்னர் வேறு விதமாக சோடித்துள்ளனர். எதற்காக இத்தனை குழப்பமான வெளிப்படுத்தல்கள்? தங்களுக்கு வேண்டுமென்றால் போலீசார் மாத்தையா சலாம் போடுவார்கள், எது வேண்டுமானாலும் செய்யலாம் போலீசார் கண்டுகொள்ளவே மாட்டார்கள். எப்போ வரவு குறைகிறதோ அப்போ இல்லாத குற்றத்தை சுமத்தி சுடுவார்கள். போலீஸ், இராணுவம் பாம்பு போன்றவர்கள் பாலாய் வார்த்து தேனாய் ஊற்றினாலும் ஒருநாள் துப்பாக்கியை அவர்களுக்கு எதிராக உயர்த்துவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி சிறுவனின் சடலத்துடன் போராடிய உறவுகள்!

Published By: Digital Desk 3

12 Feb, 2026 | 02:16 PM

image

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்று வியாழக்கிழமை (12)  வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது.

அதன்பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சடலத்துடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து "பொலிஸாரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது" என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது உடலம் நவாலி இந்து மயானத்தில் புதைப்பதற்காக கொண்டு செல்லப்படுகிறது.

IMG-20260212-WA0015.jpg

IMG-20260212-WA0012.jpg

IMG-20260212-WA0014.jpg

IMG-20260212-WA0018.jpg

IMG-20260212-WA0019.jpg

IMG-20260212-WA0020.jpg

IMG-20260212-WA0021.jpg

IMG-20260212-WA0022.jpg

https://www.virakesari.lk/article/238471

  • கருத்துக்கள உறவுகள்
On 10/2/2026 at 21:45, விளங்க நினைப்பவன் said:

கொல்லபட்டவரின் சித்தி கவலை தெரிவித்து பேசியதால் அவாவையும் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என்று ஜேவிபி தமிழ் ஆதரவாளர்கள் எழுதுகின்றனராம் .

14 hours ago, குமாரசாமி said:

இலங்கை பொலிசார் மிக மோசமானவர்கள்.அதை விட இராணுவத்தினர் இன்னும் மோசமானவர்கள். நீதி நேர்மை நியாயம் இல்லாமல் நடப்பவர்கள்.

லஞ்சம் கொடுத்தால் மட்டும் நேர்மையாக நடப்பது போல் தெரியும். லஞ்சமாக கருவாடு கொடுத்தாலும் சந்தோ

5 hours ago, கிருபன் said:

சமூக வலைத்தளங்கள், வட்ஸப் எல்லாம் பிழையான தகவல்கள் வருகின்றன. நம்பகத்தன்மையானவர்களே பிழையான தகவல்களை பரப்புகின்றனர். பையனுக்கு 17 வயதுதான்..

எண்பது வீதமான எம்மவர்களும், ஊடகம் நடத்துபவர்களும்....

நேரில் பார்த்த மாதிரி... போதை வஸ்து கடத்துபவன். வாள் வெட்டுக்காரன், மாட்டு கள்ளன் என்றெல்லாம் எழுதி பொலிஸ்காரனுக்கு வக்காலத்து வாங்குவதைப் பார்க்க... அனுரா கட்சியின் அனுதாபிகள் போல் தெரிகின்றது.

ஸ்ரீலங்கா பொலிஸ், இராணுவம் சொல்வதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு.. கொல்லப் பட்ட அந்தச் சிறுவன் மீது அபாண்டமாக பழி சுமத்திக் கொண்டிருப்பதை பார்க்க... தமிழர் மத்தியில் உண்மையான செய்திகளை எதிர்பார்ப்பது கடினம் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

633917855_1486052526419877_7641134845555

நிற்காமல் போனால் ஆளுக்கு சுடலாம்தானே? - என வாதிடுவோர் கவனத்துக்கு..
இலங்கையில் பொலிஸ் கட்டளையை மீறிச் சென்ற வாகனங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சட்ட ரீதியான நீதி கிடைத்த அல்லது அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட சில முக்கிய உதாரணங்களை முதலில் குறிப்பிடுகிறேன்.
1. நாரம்மல துப்பாக்கிச் சூடு (2024)
நாரம்மல பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்றதாகக் கூறப்பட்ட லொறி மீது சிவில் உடையில் இருந்த பொலிஸ் அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தச்சர் ஒருவர் (K.A. Roshantha Kumarasiri) உயிரிழந்தார். January 18, 2024
⚖️ நீதிமன்ற நடவடிக்கை: இச்சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் (SI) மற்றும் பொலிஸ் கொஸ்தாபல் ஆகியோர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
⚖️ உடனடி நஷ்டஈடு: சம்பவத்தைத் தொடர்ந்து, அப்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் உயிரிழந்தவரின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று முதற்கட்டமாக 1 மில்லியன் ரூபா (10 இலட்சம்) நஷ்டஈட்டுச் காசோலையை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.
⚖️ உயர் நீதிமன்றத்தில் வழக்கு: உயிரிழந்தவரின் மனைவி காமனி ரூபிகா பிரியங்கனி, தனது கணவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் (FR) மனுவைத் தாக்கல் செய்தார். இதில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரசினால் 200 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
⚖️ வழக்கின் தற்போதைய நிலை:
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இது தொடர்பில் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் விடுத்திருந்தது.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்காக முன்னிலையாகப் போவதில்லை எனச் சட்டமா அதிபர் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அடுத்த வழக்குத்தவணை April 4, 2026.
---------------------------------------------------
2. ரம்புக்கனை சம்பவம் (2022):
எரிபொருள் வரிசையில் ஏற்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் (Chaminda Lakshan) கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணையில், பொலிஸார் தேவையற்ற மற்றும் அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டது.
⚖️ துப்பாக்கிச் சூட்டில் இறந்த 41 வயதுடைய சமிந்த லக்ஷனின் மனைவி மற்றும் சம்பவத்தில் காயமடைந்த பலரால் தாக்கல் செய்யப்பட்ட ஏழு அடிப்படை உரிமை மனுக்களை தொடர உச்ச நீதிமன்றம் (SC) 28-07-2025 அனுமதி அளித்தது.
அடுத்த வழக்குத்தவணை February 27, 2026.
⚖️ கேகாலை நீதிவான் நீதிமன்றில் இவ்வழக்கு குற்றவியல் வழக்காகவும் விசாரிக்கப்படுகிறது.
சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து போலீசார்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு.
பொலிஸ் அதிகாரிகள் சார்பில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வழக்கு விசாரணைகள் தொடர்கின்றன.
---------------------------------------------------------------
இராணுவத்துடன் சம்பந்தப்பட்ட இத்தகைய வழக்கு
1. ரதுபஸ்வல துப்பாக்கிச் சூடு (Rathupaswala Shooting)
2013 ஆம் ஆண்டு சுத்தமான குடிநீர் கோரிப் போராடிய மக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர். பல வருட போராட்டத்திற்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டு மே மாதம், இதற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி ஒருவருக்கும் மற்றுமொரு சிப்பாய்க்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
இது இராணுவத்தினர் சிவில் கடமைகளின் போது அத்துமீறினால் தண்டிக்கப்படுவார்கள் என்பதை உறுதிப்படுத்தியது.
---------------------------------------------------------------
நீதிமன்றம் தனது தீர்ப்புகளில் மேற்கோள் காட்டும் சட்டப்பிரிவுகள்:
⚖️ இலங்கையின் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் (Code of Criminal Procedure Act) பிரிவு 23: Arrest how made.
கைது செய்யப்படுவதை ஒருவர் பலமாக எதிர்க்கும் போது மட்டுமே பலத்தைப் பயன்படுத்தலாம். ஆனால், மரண தண்டனைக்குரிய குற்றத்திற்காக குற்றம் சாட்டப்படாத ஒரு நபரின் மரணத்தை ஏற்படுத்தும் உரிமையை இந்தப் பிரிவில் உள்ள எதுவும் வழங்காது.
⚖️ Constitution CHAPTER III, FUNDAMENTAL RIGHTS Article 11: எவரும் சித்திரவதைக்கு அல்லது மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படக் கூடாது.
Article 13 (1) : சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி தவிர வேறு எந்த நபரையும் கைது செய்யக்கூடாது.
Article 13 (4) சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி, தகுதிவாய்ந்த நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தவிர, எந்தவொரு நபருக்கும் மரண தண்டனை அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடாது.
-------------------------------------------------------------------
⚖️ சர்வதேச மனித உரிமைத் தரநிலைகள்:
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டல்களின்படி, உயிர்ச்சேதம் விளைவிக்காத வகையில் எச்சரிக்கை விடுத்து, பிற வழிகள் இல்லாத பட்சத்தில் மட்டுமே துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட வேண்டும். நிராயுதபாணியான ஒருவரைச் சுடுவது சட்டப்படி குற்றமாகும்.
சுருக்கமாகக் கூறினால்,
மார்ச் 28, 2010 தேதியிட்ட IGP சுற்றறிக்கை 843 இன் படி, காவல்துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் அது தடைசெய்யப்படவில்லை,
நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க தேவைப்பட்டால் துப்பாக்கிகளைப் பயன்படுத்த ஒரு காவல்துறை அதிகாரிக்கு அதிகாரம் உண்டு. என்றபோதிலும்...
சாதாரண சூழ்நிலையில் கட்டளையை மீறி ஓடும் ஒருவரைக் கொல்லும் அதிகாரம் இராணுவத்திற்கும் இல்லை.. பொலிசாருக்கும் இல்லை. அவ்வாறு செய்வது கொலைக்கு சமமான குற்றமாகக் கருதப்படவே வாய்ப்புள்ளது.

இவை அனைத்தும், பொலிஸார் வாகனத்தின் டயர்களை நோக்கிச் சுடுவதன் மூலம் வாகனத்தை நிறுத்த முயற்சிக்கலாமே தவிர, ஓட்டுநரை அல்லது பயணிகளைக் குறிவைத்துச் சுடுவது சட்டவிரோதமானது என்பதை வலியுறுத்துகின்றன.
ஆகவே, நிற்காமல் போனால் ஆளுக்கு சுடலாம்தானே? - என வாதம் செய்வதானது ஒரு சட்டமீறல் செயலை தடுக்க, மற்றுமொரு சட்டமீறல் செயலை தெரிவு செய்வதையே ஊக்குவிக்கும்.
எடுத்ததும் சுடவும், நெற்றிப் பொட்டில் சுட வேண்டும் என்றெல்லாம்... விருப்பம் கொள்வதற்கு நீங்களொன்றும் ஆயுதப் புரட்சி நாட்டில் வாழவில்லை.
சட்ட உருவாக்கத்துக்கான தேர்தல்களில் வாக்களித்து சட்ட ஆட்சி நாட்டில் வாழ்கிறீர்கள் என்பதால் சட்ட மீறல்கள் குறித்து பேசுவதே சரியானது.

நம்ம யாழ்ப்பாணம்

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். அல்லைப்பிட்டியில் சிறுவன் படுகொ*லை - மர்ம முடிச்சுகள் அவிழுமா?

காணொளி: 👉 https://www.facebook.com/reel/2224159248112226 👈

  • கருத்துக்கள உறவுகள்

633792065_1372065094723099_2807679673776

அல்லைப்பிட்டியில் பொலிஸாரினால் சிறுவன் ஒருவன் சு*ட்டு கொ*ல்லப்பட்டமையை... நியாயப்படுத்த இராணுவ புலனாய்வார்கள் முதல் சமூக மயப்படாத ஜேவிபி உறுப்பினர்கள் வரை பலரும் முயற்சிக்கின்றார்கள்.

இராணுவ புலனாய்வாளன்... அருண் சித்தார்த், பொலிஸ் அதிகாரிகளை நியாயப்படுத்த கொ*ல்லப்பட்ட சிறுவன் போ*தைப்பொருள் பாவனையாளன் என வெளியிட்ட அறிக்கையை Capital TV வெளியிட்டு இருக்கின்றது.

இதில் இருக்கும் உண்மை பொய்களுக்கு அப்பால் 2017-ம் ஆண்டு, காக்கைத்தீவு பகுதியில், க*ஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட (யாழ்ப்பாண MC நீதிமன்றம் வழக்கு இலக்கம் 292/17) புலனாய்வாளன் அருண் சித்தார்த்துக்கு இருக்கும் வாழும் உரிமை ஒரு 17 வயது சிறுவனுக்கு இருக்க கூடாதா ?

திரு ரணில் விக்கிரமசிங்கே அதிகாரத்திலிருந்து போது 1,000 kg 'குஷ்' ரக போ*தை பொருள் கடத்திய Capital TV உரிமையாளர் திரு வின்சேந்திரராஜன் அவர்களின் மகனுக்கு இருக்கும் உரிமை ஒரு 17 வயது சிறுவனுக்கு இருக்க கூடாதா ?

குடி போ*தையில் வாகனத்தை மோதி பெண் மற்றும் குழந்தையை காயப்படுத்திய ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் அசோகா ரன்வாலா (முன்னாள் சபாநாயகர்) விற்கு இருக்கும் வாழும் உரிமை ஒரு 17 வயது சிறுவனுக்கு இருக்க கூடாதா ?

இது போதாதாதென்று மறுபுறம் குறித்த சிறுவனை கள்ள மாடு கடத்துபவன் என Narrative set பண்ண ஜேவிபி தரப்பு முயற்சிக்கின்றது.

மட்டக்களப்பில் மாதவனை மயிலத்தமடுவை ஆக்கிரமித்து நீதிமன்ற உத்தரவுகளை மீறி நுற்றுக்கணக்கான மாடுகளை சிங்கள குடியேற்றவாசிகள் சு*ட்டு கொ*ன்று இருக்கின்றார்கள்.

ஜேவிபி அதிகாரத்தில் ஒரு வருடம் கடந்து விட்ட பின்னரும் கூட இந்த தமிழ் பண்ணையாளர்களின் வாழ்வாதார நெருக்கடிக்கு தீர்வு இல்லை.

இந்த அவலங்கள் பற்றியெல்லாம் பேசாத ஜேவிபி புத்திசாலிகள் நேற்றும் இன்றும் பசு மாடுகளுக்காக உருகின்றார்கள்.

நூற்றுக்கணக்கான மாடுகளை கொ*ன்று மட்டக்களப்பு 1000 ற்கு மேற்பட்ட பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்த சிங்கள குடியேற்றவாசிகள் மீது நீட்டப்படாத துப்பாக்கிகள் வெறும் 17 வயது சிறுவன் மீது கள்ள மாடு கடத்துபவன் என்கின்ற பெயரில் நீட்டப்பட்டதை எப்படி நியாயப்படுத்த முடியும்?

இங்கே கொல்லப்பட்ட சிறுவன் உட்பட குடும்ப உறுப்பினர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க கூடாது என யாரும் சொல்ல வில்லை.

அவர்கள் போதை வியாபாரிகளாகவோ அல்லது , மாடு கடத்துபவர்களாக இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவதில் எந்த தவறும் இல்லை.

குறிப்பாக நிறை மாத பசு மாடுகளை திருட்டு தனமாக கொன்று கடத்துபவர்களாக இருந்தால் மன்னித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.

ஆனால் இங்கு பொலிஸ் தொழிலுக்குரிய நெறிமுறைகளிற்கு மாறாக எழுந்தமனாக ஒரு சிறுவனை சு*ட்டு கொ*ன்று இருப்பதே கேள்விக்கு உட்படுத்த படுகின்றது.

குறிப்பாக பல இடங்களில் சமூக குற்றவாளிகளுக்கு துணை நின்று பாதுகாக்கின்ற பொலிஸ் 17 வயது சிறுவனை சுட்டு கொன்றது தான் சர்ச்சையாகி இருக்கின்றது.

தங்களுடைய தேவைகளுக்காக ரவுடி தனங்களில் ஈடுபடும் அருண் சித்தார்த்தின் ஆவா குழு உட்பட பெரும்பாலான சமூக விரோத குழுக்களை வளர்த்து விடும் இராணுவ புலனாய்வு கட்டமைப்புக்களை பாதுகாத்து கொண்டு ஒரு சிறுவனை சு*ட்டு கொ*ன்று நியாயம் பேச முடியாது.

அதாவது போதை பொருள் வியாபாரிகளுக்கு அரணாக இருக்கும் கடற்படை கட்டமைப்புகளை பாதுகாத்து கொண்டு, வாகனத்தை நிறுத்தவில்லை என்கின்ற ஒற்றை காரணத்திற்காக ஒரு சிறுவனை சு*ட்டு கொன்று விட்டு அவன் போ*தை பொருள் பாவித்த (?) ஆள் என சப்பை காரணங்களை சொல்ல முடியாது.

இனமொன்றின் குரல்

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

அரசியல்வாதிகள் எவரேனும் வந்தால் அவர்களுடன் கதைக்க வேண்டாம்.அவர்கள் தங்கள் அரசியலுக்காக உங்களை குழப்பலாம்.

என்ன இந்த வசனம் நம்ம யாழ்களத்தில்,மற்றும் ஏனைய அரசியல் கருத்து ஜான்பவான்களின் கருத்து போல இருக்கு..சிவப்பு கட்சி பிரதமரும் இப்படி கருத்தை சில காலங்களுக்கு முன் சொல்லியிருந்தார் (விகாரை விடயத்தில்).இப்ப பொலிசாரும் அரசியல் கருத்துக்களை அன்பான ஆனால் மிறட்டல் பாணியில் சொல்லுகின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்

பொலிசாரின் செயல் அத்து மீறல் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த சம்பவம் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படல் வேண்டும் இதுவே இனிமேல் இப்படியான சம்பவங்கள் நிகழாமல் தடுக்க உதவும்.

ஒரு காலத்தில் கோழிக்கள்ளன், நகை களவெடுத்தான் என சிறு குற்றங்களுக்கெல்லாம் எந்த நம்பகமான விசாரணையும் இன்றி தான் தோன்றித தனமாக மின்கம்பங்களில் கட்டி படுகொலை செய்த காட்டுமிராண்டி தனம் போல் பொலிசார் செய்வது நியாயமாகாது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தீவுக்கு ஒரு சட்டம்,வட பகுதியில் உள்ள தீவுகளுக்கு ஒர் சட்டம் நியாயமானதாக தெரியவில்லை....40 வருடங்களுக்கு முன்பு யாழ் பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் காவலாளியாக கடமையில் நின்ற வயோதிபரை கொலை செய்து விட்டு பயங்கரவாதி என பிரச்சாரம் செய்த அரச கட்டமைப்பு இன்னும் தொடர்கின்றது ...

பயங்கரவாதிகளை உருவாக்கும் இலங்கை தீவின் அரச முயற்சி தொடர்கின்றது ....

  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2026 at 18:17, Justin said:

லைசென்ஸ் இருந்தால் பொலிஸ் நிறுத்தச் சொன்னால் என்ன செய்ய வேண்டுமென்றும் தெரிய வேண்டுமல்லவா? விதியை மீறி விட்டு இனி அழுது என்ன பயன்?

அமெரிக்காவில் ICE செய்வதை டிரம்ப் கோஷ்டி நியாயயப்படுத்துவதுபோல் இங்கும் பாடம் எடுக்கிறார்! போலீஸ் நிறுத்தும்படி சொல்ல, நிறுத்தாமல் செல்வது மரண தண்டனைக்குரிய குற்றமல்ல! வாகனத்தை நிறுத்த டயரை சுட்டாலே போதுமானது! ICE செய்வதுபோல் நெற்றியில் சுட வேண்டியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, island said:

ஒரு காலத்தில் கோழிக்கள்ளன், நகை களவெடுத்தான் என சிறு குற்றங்களுக்கெல்லாம் எந்த நம்பகமான விசாரணையும் இன்றி தான் தோன்றித தனமாக மின்கம்பங்களில் கட்டி படுகொலை செய்த காட்டுமிராண்டி தனம் போல் பொலிசார் செய்வது நியாயமாகாது.

நானா வந்திட்டார் பழையபடி புலிவாந்தியெடுக்க! நாய்வாலை நிமிர்த்த முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வருடம் மனைவி மீது சந்தேகப்பட்டு அவரின் தலையை வெட்டிய வரை வீரத்தமிழன் என்று தமிழ் முக நூல்களில் பலர் எழுதினார்கள். செய்தி பின்னோட்டத்தில் பெரும்பாலானோர் அந்த கொலை செய்த கொலைகாரனுக்கு வக்காலத்து வாங்கினார்கள். சிலர் ஒரு படி மேலே போய் தலைவன் வழி வந்த வீரத்தமிழன் இப்படித்தான் தண்டனை கொடுக்க வேண்டும் என்று போற்றிப் புகழ்ந்தாரகள். இப்போது அதே நபர்களின் முகநூல்கள் அப்படியே பிளேட்டை மாற்றி அந்த 17 வயது சிறுவன் தப்புசெய்தாலும் இப்படி தண்டனை கொடுக்க கூடாது, நாட்டில் சட்டம் எதுக்கு இருக்கு, நீதி மன்றம் எதுக்கு இருக்கு இதென்ன காட்டுமிராண்டித்தனம் என்றெல்லாம் கெம்புகிறார்கள்.

கண்மூடித்தனமான ஒருதலைப்படச கொலைகளுக்கு அன்றும் இன்றும் வக்காலத்து வாங்கியவர்கள் வாங்குபவர்கள் எல்லாம் துப்பாக்கி பாவிப்பதற்கு உலகில் உள்ள புரொட்டகோல் பற்றி எல்லாம் வகுப்பு எடுக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/2/2026 at 10:22, satan said:

வாகனம் ஒழுங்காகவே நிறுத்தப்பட்டிருக்கிறது. வாகனம் நிறுத்தப்பட்டபின் துப்பாக்கிச்சூடு நடந்ததா என்கிற சந்தேகமும் எழுகிறது. வாகனம் நிறுத்தாமல் சென்றிருந்தால் வாகனத்தின் சில்லுகளுக்கு சூடு நடத்தி வாகனத்தை நிறுத்தியிருக்கலாம். ஆனால் சாரதியை இலக்கு வைத்து வேண்டுமென்றே சூடு நடத்தியிருக்கிறார்கள். துருப்பிடித்த வாள், மற்றொன்று பிடியற்ற கத்திபோல் தெரிகிறது, அதுவும் கதவுக்கருகில் சாதாரணமாக கிடக்கிறது. மரணத்தை ஏற்படுத்தி அதன்பின் சான்றுகளை சோடித்துள்ளனர். குறிப்பிட்ட பொலிஸாருக்கு போதைப்பொருள் பரிசோதனை நடத்தியிருக்க வேண்டும். கொல்லப்பட்டவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாகவும், உடன் சென்ற மற்றுமொருவர் போதைப்பொருள் பரிசோதனையில் உட்கொண்டிருப்பது பரிசோதனையில் வெளிவந்ததாகவும், குறிப்பிட்டளவு போதைப்பொருளை வாகனத்திலிருந்து கைப்பற்றியதாகவும் போலீசார் முதலில் அறிவித்திருந்தனர், பின்னர் வேறு விதமாக சோடித்துள்ளனர். எதற்காக இத்தனை குழப்பமான வெளிப்படுத்தல்கள்? தங்களுக்கு வேண்டுமென்றால் போலீசார் மாத்தையா சலாம் போடுவார்கள், எது வேண்டுமானாலும் செய்யலாம் போலீசார் கண்டுகொள்ளவே மாட்டார்கள். எப்போ வரவு குறைகிறதோ அப்போ இல்லாத குற்றத்தை சுமத்தி சுடுவார்கள். போலீஸ், இராணுவம் பாம்பு போன்றவர்கள் பாலாய் வார்த்து தேனாய் ஊற்றினாலும் ஒருநாள் துப்பாக்கியை அவர்களுக்கு எதிராக உயர்த்துவார்கள்.

தெற்கில் ஜேவிபி ஆட்சிக்கு வந்த பின் போதை பொருள் மாபியா என பலரை போட்டு தள்ளிய போது, களை எடுப்பு என்று ஆதரித்தோர்…இது அனைவருக்கும் நடக்க அதிக காலம் செல்லாது என நான் எச்சரித்ததை கண்டு கொள்ளவே இல்லை.

இனி மாடு பிடிக்கிறான், கண்டு பிடிக்கிறான் என கண்ட மேனிக்கு சுடுவார்கள் போல் உள்ளது.

இந்த கொலைக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஏன் ஜனாதிபதியால் ஒரு நேரடி விசாரணைக்கு உத்தரவிட முடியவில்லை?

21 hours ago, தமிழ் சிறி said:

தமிழர் மத்தியில் உண்மையான செய்திகளை எதிர்பார்ப்பது கடினம் போலுள்ளது.

இப்போது புரிகிறதா ஏன் அத்தனை அடியையும் வாங்கி கொண்டு யாழ்களத்தில் ஜஸ்டின் அண்ணா போன்றோர் fact checking செய்கிறார்கள் என்பது.

தமது அரசியல் எதிரிகள் என்பதால் யாழில் மீண்டும், மீண்டும் சுமந்திரன், கருணாநிதி மீது பொய் தகவலைகளை (உண்மையான தகவல்களை சொல்ல இல்லை) தெரிந்து கொண்டே பரப்புவதும் இந்த வகையே.

மொத்தத்தில் ஒட்டு மொத்தன் இனத்தையும் பொய்யை நம்பும் மூடர் கூட்டம் ஆக்கி விடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

633917855_1486052526419877_7641134845555

நிற்காமல் போனால் ஆளுக்கு சுடலாம்தானே? - என வாதிடுவோர் கவனத்துக்கு..
இலங்கையில் பொலிஸ் கட்டளையை மீறிச் சென்ற வாகனங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சட்ட ரீதியான நீதி கிடைத்த அல்லது அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட சில முக்கிய உதாரணங்களை முதலில் குறிப்பிடுகிறேன்.
1. நாரம்மல துப்பாக்கிச் சூடு (2024)
நாரம்மல பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்றதாகக் கூறப்பட்ட லொறி மீது சிவில் உடையில் இருந்த பொலிஸ் அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தச்சர் ஒருவர் (K.A. Roshantha Kumarasiri) உயிரிழந்தார். January 18, 2024
⚖️ நீதிமன்ற நடவடிக்கை: இச்சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் (SI) மற்றும் பொலிஸ் கொஸ்தாபல் ஆகியோர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
⚖️ உடனடி நஷ்டஈடு: சம்பவத்தைத் தொடர்ந்து, அப்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் உயிரிழந்தவரின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று முதற்கட்டமாக 1 மில்லியன் ரூபா (10 இலட்சம்) நஷ்டஈட்டுச் காசோலையை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.
⚖️ உயர் நீதிமன்றத்தில் வழக்கு: உயிரிழந்தவரின் மனைவி காமனி ரூபிகா பிரியங்கனி, தனது கணவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் (FR) மனுவைத் தாக்கல் செய்தார். இதில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரசினால் 200 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
⚖️ வழக்கின் தற்போதைய நிலை:
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இது தொடர்பில் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் விடுத்திருந்தது.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்காக முன்னிலையாகப் போவதில்லை எனச் சட்டமா அதிபர் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அடுத்த வழக்குத்தவணை April 4, 2026.
---------------------------------------------------
2. ரம்புக்கனை சம்பவம் (2022):
எரிபொருள் வரிசையில் ஏற்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் (Chaminda Lakshan) கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணையில், பொலிஸார் தேவையற்ற மற்றும் அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டது.
⚖️ துப்பாக்கிச் சூட்டில் இறந்த 41 வயதுடைய சமிந்த லக்ஷனின் மனைவி மற்றும் சம்பவத்தில் காயமடைந்த பலரால் தாக்கல் செய்யப்பட்ட ஏழு அடிப்படை உரிமை மனுக்களை தொடர உச்ச நீதிமன்றம் (SC) 28-07-2025 அனுமதி அளித்தது.
அடுத்த வழக்குத்தவணை February 27, 2026.
⚖️ கேகாலை நீதிவான் நீதிமன்றில் இவ்வழக்கு குற்றவியல் வழக்காகவும் விசாரிக்கப்படுகிறது.
சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து போலீசார்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு.
பொலிஸ் அதிகாரிகள் சார்பில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வழக்கு விசாரணைகள் தொடர்கின்றன.
---------------------------------------------------------------
இராணுவத்துடன் சம்பந்தப்பட்ட இத்தகைய வழக்கு
1. ரதுபஸ்வல துப்பாக்கிச் சூடு (Rathupaswala Shooting)
2013 ஆம் ஆண்டு சுத்தமான குடிநீர் கோரிப் போராடிய மக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர். பல வருட போராட்டத்திற்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டு மே மாதம், இதற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி ஒருவருக்கும் மற்றுமொரு சிப்பாய்க்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
இது இராணுவத்தினர் சிவில் கடமைகளின் போது அத்துமீறினால் தண்டிக்கப்படுவார்கள் என்பதை உறுதிப்படுத்தியது.
---------------------------------------------------------------
நீதிமன்றம் தனது தீர்ப்புகளில் மேற்கோள் காட்டும் சட்டப்பிரிவுகள்:
⚖️ இலங்கையின் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் (Code of Criminal Procedure Act) பிரிவு 23: Arrest how made.
கைது செய்யப்படுவதை ஒருவர் பலமாக எதிர்க்கும் போது மட்டுமே பலத்தைப் பயன்படுத்தலாம். ஆனால், மரண தண்டனைக்குரிய குற்றத்திற்காக குற்றம் சாட்டப்படாத ஒரு நபரின் மரணத்தை ஏற்படுத்தும் உரிமையை இந்தப் பிரிவில் உள்ள எதுவும் வழங்காது.
⚖️ Constitution CHAPTER III, FUNDAMENTAL RIGHTS Article 11: எவரும் சித்திரவதைக்கு அல்லது மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படக் கூடாது.
Article 13 (1) : சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி தவிர வேறு எந்த நபரையும் கைது செய்யக்கூடாது.
Article 13 (4) சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி, தகுதிவாய்ந்த நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தவிர, எந்தவொரு நபருக்கும் மரண தண்டனை அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடாது.
-------------------------------------------------------------------
⚖️ சர்வதேச மனித உரிமைத் தரநிலைகள்:
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டல்களின்படி, உயிர்ச்சேதம் விளைவிக்காத வகையில் எச்சரிக்கை விடுத்து, பிற வழிகள் இல்லாத பட்சத்தில் மட்டுமே துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட வேண்டும். நிராயுதபாணியான ஒருவரைச் சுடுவது சட்டப்படி குற்றமாகும்.
சுருக்கமாகக் கூறினால்,
மார்ச் 28, 2010 தேதியிட்ட IGP சுற்றறிக்கை 843 இன் படி, காவல்துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் அது தடைசெய்யப்படவில்லை,
நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க தேவைப்பட்டால் துப்பாக்கிகளைப் பயன்படுத்த ஒரு காவல்துறை அதிகாரிக்கு அதிகாரம் உண்டு. என்றபோதிலும்...
சாதாரண சூழ்நிலையில் கட்டளையை மீறி ஓடும் ஒருவரைக் கொல்லும் அதிகாரம் இராணுவத்திற்கும் இல்லை.. பொலிசாருக்கும் இல்லை. அவ்வாறு செய்வது கொலைக்கு சமமான குற்றமாகக் கருதப்படவே வாய்ப்புள்ளது.

இவை அனைத்தும், பொலிஸார் வாகனத்தின் டயர்களை நோக்கிச் சுடுவதன் மூலம் வாகனத்தை நிறுத்த முயற்சிக்கலாமே தவிர, ஓட்டுநரை அல்லது பயணிகளைக் குறிவைத்துச் சுடுவது சட்டவிரோதமானது என்பதை வலியுறுத்துகின்றன.
ஆகவே, நிற்காமல் போனால் ஆளுக்கு சுடலாம்தானே? - என வாதம் செய்வதானது ஒரு சட்டமீறல் செயலை தடுக்க, மற்றுமொரு சட்டமீறல் செயலை தெரிவு செய்வதையே ஊக்குவிக்கும்.
எடுத்ததும் சுடவும், நெற்றிப் பொட்டில் சுட வேண்டும் என்றெல்லாம்... விருப்பம் கொள்வதற்கு நீங்களொன்றும் ஆயுதப் புரட்சி நாட்டில் வாழவில்லை.
சட்ட உருவாக்கத்துக்கான தேர்தல்களில் வாக்களித்து சட்ட ஆட்சி நாட்டில் வாழ்கிறீர்கள் என்பதால் சட்ட மீறல்கள் குறித்து பேசுவதே சரியானது.

நம்ம யாழ்ப்பாணம்

உதாரண வழக்குகள் எல்லாம் சிங்களவர் மீது பொலிஸ் சுட்ட நிகழ்வுகள்.

தமிழர் என்பதால் ஏதாவது நாயை சுட்ட வழக்கு இருந்தால் - அதுதான் செல்லுபடியாகும்😂.

12 hours ago, island said:

ஒரு காலத்தில் கோழிக்கள்ளன், நகை களவெடுத்தான் என சிறு குற்றங்களுக்கெல்லாம் எந்த நம்பகமான விசாரணையும் இன்றி தான் தோன்றித தனமாக மின்கம்பங்களில் கட்டி படுகொலை செய்த காட்டுமிராண்டி தனம் போல் பொலிசார் செய்வது நியாயமாகாது.

நான் அறிய காட்டி கொடுத்தோர், அரசியல் எதிரிகள்தான் இப்படி கொலை செய்யப்பட்டனர்.

கோழி, நகை கள்ளர் இப்படி சுட்டு கொல்லப்பட்ட சம்பவங்கள் ஏதேனும் ஆவணப்படுத்த பட்டுள்ளதா?

58 minutes ago, island said:

சென்ற வருடம் மனைவி மீது சந்தேகப்பட்டு அவரின் தலையை வெட்டிய வரை வீரத்தமிழன் என்று தமிழ் முக நூல்களில் பலர் எழுதினார்கள். செய்தி பின்னோட்டத்தில் பெரும்பாலானோர் அந்த கொலை செய்த கொலைகாரனுக்கு வக்காலத்து வாங்கினார்கள். சிலர் ஒரு படி மேலே போய் தலைவன் வழி வந்த வீரத்தமிழன் இப்படித்தான் தண்டனை கொடுக்க வேண்டும் என்று போற்றிப் புகழ்ந்தாரகள். இப்போது அதே நபர்களின் முகநூல்கள் அப்படியே பிளேட்டை மாற்றி அந்த 17 வயது சிறுவன் தப்புசெய்தாலும் இப்படி தண்டனை கொடுக்க கூடாது, நாட்டில் சட்டம் எதுக்கு இருக்கு, நீதி மன்றம் எதுக்கு இருக்கு இதென்ன காட்டுமிராண்டித்தனம் என்றெல்லாம் கெம்புகிறார்கள்.

கண்மூடித்தனமான ஒருதலைப்படச கொலைகளுக்கு அன்றும் இன்றும் வக்காலத்து வாங்கியவர்கள் வாங்குபவர்கள் எல்லாம் துப்பாக்கி பாவிப்பதற்கு உலகில் உள்ள புரொட்டகோல் பற்றி எல்லாம் வகுப்பு எடுக்கிறார்கள்.

உண்மை.

சாவில் கூட அரசியல் பார்த்துத்தான் இந்த உலகம் நிலை எடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நான் அறிய காட்டி கொடுத்தோர், அரசியல் எதிரிகள்தான் இப்படி கொலை செய்யப்பட்டனர்.

கோழி, நகை கள்ளர் இப்படி சுட்டு கொல்லப்பட்ட சம்பவங்கள் ஏதேனும் ஆவணப்படுத்த பட்டுள்ளதா?

இவையெல்லாம் முறையாக ஆவணப்படுத்தப்பட்டதா? விசாரணை செய்யப்பட்டதே எவருக்கும் தெரியாது எமது ஊரில் வீடு உடைத்து களவு செய்பவர் என ற குற்றச்சாட்டுகள் எழுதி அவர் மீது ஒட்டி கொலை செய்யப்பட்டார். சுட்டவரை கண்டவர்களும் உள்ளார்கள். சுட்டவரும் ஊராருக்கு அறிமுகம் ஆனவர்தான். ஆனால் அந்த நேரம் இவையெல்லாம் தவறோ சரியோ ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை. 1983 -1985 ல் இவாறான கொலைகள் பல நடந்தன. இன்று பெயர் விபரங்கள் கூட ஆவணப்படுத்தப்படவில்லை. அவரவர் அந்தந்த ஊராருக்கு மட்டும் ஞாபகம் இருக்கும்.

1986 என்று நினைக்கிறேன் ஜேர்மன் தொலைக்காட்சி ஒன்று ஒரு விவரணத்தில் இந்த செயற்பாட்டை ஆவணப்படமாக வெளியிட்டு கண்டித்திருந்தது.

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, island said:

உங்கள் ஊரில் இப்படி செய்த இயக்கம் எது?

உங்கள் வாழ்ந்த அனுபவத்தினை ந்நாஅன் மறுக்க முடியாது கூடாது,

ஆனால் எனது அனுபவத்தில், அறிந்த மட்டில் புலிகளோ, 1987 க்கு முந்திய ஈபியோ சின்ன களவுகளுக்கு மரண தண்டனை வழங்கியதாக அறியவில்லை.

இப்படியானவர்களை பொது இடங்களில் கட்டி வைத்து அடித்தார்கள், நான் கள்ளன் என அறிவிப்பு கழுத்தில் கட்டினார்கள்.

இவை பல உதயன், முரசொலியில் செய்தியாக வந்தன.

ஆனால் மரண தண்டனை, இராணுவ, அரசியல் காரணங்களுக்காகவே அரங்கேறின என்பது என் அனுபவம்.

நான் அறியவில்லை என்பதால் நடக்கவில்லை என்றாகாது.

  • கருத்துக்கள உறவுகள்

615843060_1055924210927297_4258161389310

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

உங்கள் ஊரில் இப்படி செய்த இயக்கம் எது?

உங்கள் வாழ்ந்த அனுபவத்தினை ந்நாஅன் மறுக்க முடியாது கூடாது,

ஆனால் எனது அனுபவத்தில், அறிந்த மட்டில் புலிகளோ, 1987 க்கு முந்திய ஈபியோ சின்ன களவுகளுக்கு மரண தண்டனை வழங்கியதாக அறியவில்லை.

இப்படியானவர்களை பொது இடங்களில் கட்டி வைத்து அடித்தார்கள், நான் கள்ளன் என அறிவிப்பு கழுத்தில் கட்டினார்கள்.

இவை பல உதயன், முரசொலியில் செய்தியாக வந்தன.

ஆனால் மரண தண்டனை, இராணுவ, அரசியல் காரணங்களுக்காகவே அரங்கேறின என்பது என் அனுபவம்.

நான் அறியவில்லை என்பதால் நடக்கவில்லை என்றாகாது.

நீங்கள் கூறியவை பிற்காலங்களில் நடந்தவை. ஆரம்பத்தில் பல குற்றவாளிகள் கொலை செய்யப்பட்டார்கள். ஆனால் இவற்றுக்கு எனது ஞாபகத்தை தவிர ஆவணங்கள் இல்லை. கோபு என்ற நபர் பல குற்றச்செயல்களுக்காக புலிகளால் கொல்லப்பட்டார். போயா என்ற நபரும் இதே காரணத்துக்காக ரெலோ அல்லது ரெலியால் முதல் முறை சுடப்பட்டு யாழ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அன று இரவு ஆஸபத்திரிக்குள் நுளைந்து மீண்டும் சுட்டு கொல்லப்படார். இவர்கள் இருவருக்கும் அரசியல் தொடர்பு இருக்கவில்லை. நீங்கள் கேட்டதால் இதை பதிந்தேன். மற்றப்படி நான் கூற வந்த முக்கிய விடயம் இன்று மனித உரிமை, நீதிமன்றம், உலகில் துப்பாக்கி பாவிக்கும் புரொட்டோகோல் எப்படி என்றெல்லாம் முகநூல்களில் வகுப்பு எடுபவர்கள் எல்லோருமே இந்த கொலைகளையும் கடந்த வருடம் நடைபெற்ற மனைவியின் தலையை வெட்டிய குற்றத்தையும் ஒப்பிட்டு பாராட்டி எழுதியவர்கள் தான். அதுவே நான் கூற வந்த கருத்து. அதில் ஒரு முக நூல்க்கருத்து பின்வருமாறு இருந்தது.

உது தமிழ் ஈழத்தின் தண்டனை தமிழன் கெத்து 🎉🎉🎉🎉🎉 இனி இப்படித்தான் 💪🏽🎉பயப்பட வேண்டும் தமிழ்ப்பெண்கள் 👌🏼👌🏼👌🏼
-----
தன்மான தமிழ் ஈழத்தமிழன் நம் தலைவரின் சட்டப்படி அவர் செய்திருக்கின்ரார் 🎉🎉🎉

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, island said:

ஈழத்தின் தண்டனை தமிழன் கெத்து 🎉🎉🎉🎉🎉 இனி இப்படித்தான்

பெயர் தெரியாத முகநூல் தளத்தில், யாரோ நா... தாரி (மொக்கை) கருத்தை இப்படி ஒரு சமூகத்தின் கொள்கை தீர்மானமாக நீங்கள் எடுத்து காவித்திரிவது சிரிப்பை உண்டாகிறது சகோ. இதை எழுதியவன் நோக்கம் கூட இந்த சமூகத்தை அசிங்கப்படுத்திடுவதாகவும் இருக்கலாம்.

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Sasi_varnam said:

பெயர் தெரியாத முகநூல் தளத்தில், யாரோ நா... தாரி (மொக்கை) கருத்தை இப்படி ஒரு சமூகத்தின் கொள்கை தீர்மானமாக நீங்கள் எடுத்து காவித்திரிவது சிரிப்பை உண்டாகிறது சகோ. இதை எழுதியவன் நோக்கம் கூட இந்த சமூகத்தை அசிங்கப்படுத்திடுவதாகவும் இருக்கலாம்.

இது ஒருவரது கருத்து என்றால் அதை கணக்கெடுக்கவே தேவையில்லை. இது சிறு உதாரணம் மட்டுமே. அந்த கொலை நடந்த பின்னர் சமூக ஊடகங்களில் பெரும்பாலான தமிழ் மக்களின் கருத்துகள் இக்கொலைக்கு ஆதரவாகவே இருந்தன. இங்கு இணைத்த கருத்தை விட மோசமான பல கருத்துகளும் வந்திருந்தன. இப்போதும் அந்த சமூக ஊடகங்களை சென்று பார்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.