Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குளோரினை குடித்து குளோரினில் குளித்த கொழும்பு கோலமயிலே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோரினை குடித்து குளோரினில் குளித்த கொழும்பு கோலமயிலே

இந்்தவார ஒரு பேப்பரிற்காக

83ம் ஆண்டு கொழும்பில் தமிழர்களிற்கு நடந்த அவலத்தை தமிழின வரலாற்றில் மறந்துவிட முடியாது அந்த கலவரத்தில் உறவுகளை உடைமைகளை இழந்து வடக்கு நோக்கி வந்த பல்லாயிரம் தமிழ்குடும்பங்களில் எங்கள் ஊரிலும் பல குடும்பங்கள் வந்து குடியேறினார்கள் அதில் ஊர்மண்ணின் வாசத்தை மறந்து பலவருடங்களாகிப்போன தமிழர்களும் அடங்குவர்.அப்படி வந்த தமிழ் குடும்பங்கள் பலர் உறவினர்வீடுகளில் தங்கினர் உறவினர்கள் இல்லாத அல்லது உறவினர்களுடன் தொடர்புகள் அற்ற பலகுடும்பங்களிற்கு ஊர் இளைஞர்கள் நாங்கள் தங்குமிட வசதிகள் மற்றும் உதவிகளை செய்து கொடுத்திருந்தோம். அப்படி அகதியாய் வந்திருந்த மாணவர்களிற்கு அவர்களது கல்வியை தொடர ஊர்பாடசாலைகளில் விசேடமாக ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தது.

எங்கள் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் அப்படி பல மாணவர்கள் வந்து சேர்ந்தனர் அதைப்பற்றி எங்களிற்கு கவலையில்லை ஆனால் அதே போல அருகில் இருந்த மானிப்பாய் மகளிர் பாடசாலையிலும் பல மாணவிகள் சேர்ந்திருந்தனர்.இதுதான் விடயமே.அதுவரை காலமும் சீயாக்காய் வைத்து தோய்ந்து கருவேப்பிலை போட்டு காச்சிய தேங்காய் எண்ணெயை தலைக்கு வைத்து வழித்திழுத்து கன்னத்தில் வழியும் எண்ணெயை கைக்குட்டையால் துடைத்தபடி.இரட்டை பின்னலுடன்.நெற்றியில் மெல்லிதாய் ஒரு திருநீற்று கீறல் அதில் சின்னதாய் சந்தணப்பொட்டு.லேடீஸ் சைக்கிளை ஓடிக்கொண்டு ஒரு கையால் காண்டிலை பிடித்தபடி மறுகையால் மேலெழும்பும் பாவாடையை மாறி மாறி இழுத்துவிட்டபடி வந்து.எங்களைக்கண்டதுமே ஏதோ கொட்டிய சில்லறையை தேடுவது போல குனிந்து கொண்டு .கதைகேட்டால் எதையாவது சுரண்டியபடி படபடப்பாய் பதில் சொல்லிவிட்டு பறந்தோடும் எங்கள்ஊர்பெண்களையே பார்த்து பழகிப்போய்விட்ட எங்களிற்கு.(இப்போ அந்தக்காலம் எல்லாம் மலையேறிவிட்டது இப்போதெல்லாம் எங்கள்ஊர்பெண்கள் அழகுசாதனமாய் பயன்படுத்துவது 50 கலிபர்.ஆர்.பி.ஜு. ஆட்லெறிகள்)

புதிய கொழும்பு வரவுகளோ ஷாம்பூ வைத்து தோய்ந்து பறக்கவிட்ட தலை. தமிழ்பாதி ஆங்கிலம்பாதி கலந்துசெய்த தமிங்கிலம்.குளோரின் தண்ணீரை குடித்தும் குளித்தும் வளர்ந்ததால் கொஞ்சம் கலராய் உள்ள நெற்றியில் கலர்கலராய் ஒட்டுப்பொட்டு .நேருக்கு நேரே `ஹாய் " சொல்லி கலகலப்பாய் கதைக்கும் சுபாவம்.இதெல்லாம் எங்கள் உள்ளுர்ப்பெண்களின் மவுசை குறைத்து கொழும்பு வரவுகளின்மீது இளைஞர்களின் பார்வை திரும்பத்தொடங்கியது.அதுவரை காலமும் ஆங்கிலப்பாடம் தொடங்கியதும் களவாய் விழாங்காய்க்கு கல்லெறியப்போய்விடும் மாணவர்கள் எல்லாம் அக்கறையாய் வகுப்பில் ஆங்கிலவாத்தியாரிடம் சந்தேகங்கள் கேட்டுப்படிக்கதொடங்கியிரு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
<_<<_<
  • கருத்துக்கள உறவுகள்

"அந்த பூராயம் உனக்கு எதுக்கு ஆனால் அந்த வீட்டுப்பக்கம் போகாதை ஏதும் தந்தாலும் வாங்கிக் குடிக்காதை உன்னை பாயோடை ஒட்டவைச்சிடுங்கள் அதுகள் மந்திரம் செய்யிற ஆக்கள்" எண்டார்.மந்திரம் செய்யிற ஆக்களா?? ஏதும் வாங்கிக் குடிச்சா பாயோடை ஒட்ட என்ன பிசினா குடிக்க தாறவை எண்டு யோசிச்சபடி

<_<<_<:(

நான் அதிபர் அறைக்கு போனதும் அங்கை இருள்அழகன் மேசைக்கு கீழே தலையை குனிந்தபடி நிக்க அதிபரின் பிரம்பு இருள்அழகனின் பின்பக்கத்தில் தூசு கிழப்பிக்கொண்டிருந்தது. என்னைக்கண்டதும் அதிபர் அடியை நிப்பாட்டிவிட்டு என்னைப்பாத்து வாங்கோ கவிஞரே எண்டார். அதைகேட்டு சந்தோசப்படவா முடியும். எனக்கும் தூசு பறக்கபோகுது எண்டு பயந்தபடி நிக்க அதிபர் என்னைப்பாத்து உனக்கு அடிச்சு பிரயோசனமில்லை அதாலை நீ வீட்டைபோய் அப்பாவை கூட்டிக்கொண்டுவா எண்டார். எதுக்கு எண்டு யோசிக்கிறீங்களா??வேறையெதுக்கு பள்ளிக்கூடத்தை விட்டு நிப்பாட்டத்தான்.

:(:D:lol:

நன்றி சாத்திரி.மிகவும் நகைச்சுவையான கதை.இணைப்புக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாத்திரி நகைச்சுவை உணர்வுடன் உங்கள் அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள். அது சரி நீங்கள் குறிப்பிட்ட காலப் பகுதிக்கு முன்பே நான் மானிப்பாய் மகளிர் கல்லூரியில்தான் படித்தேன். கன்னத்தில் வழிந்த எண்ணையைக் கைக்குட்டையால் துடைத்தபடி வரும் எந்த மாணவியையும் நான் சந்திக்கவில்லை. நீங்கள் மட்டும் எப்படிச் சந்தித்தீர்கள். இணைப்பிற்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

எழுதிய விதம் நல்ல நகைச்சுவையாக உள்ளது. கதை உண்மையானால் முறையை தவறாக பார்த்து கோட்டை விட்டுடிங்கள் போல இருக்கு. :D

உங்கள் அம்மம்மாக்கு பெறா மகன் எண்டால் உங்கள் அம்மாக்கு அண்ணனோ தம்பியோ முறை வரும். அப்பிடியெண்டால் உங்களுக்கு மாமா முறை -> ரேகா மச்சாள் முறை. :rolleyes:

  • தொடங்கியவர்

உண்மையாகவா கண்மணியக்ககா . :D நீங்கள் எண்ணெயே வைக்காமல் பரட்டைத்தலையோடை திருஞ்சிருக்கிறீங்கள் போலை :rolleyes::D நல்லவேளை நாான் பாக்கேல்லை :D ஆனால் எங்கடை காலகட்டத்திலை கனபேர் எண்ணை வைக்கிறவை மூளை காய்ந்து போகாமல் இருக்கவாம். :D

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எழுதிய விதம் நல்ல நகைச்சுவையாக உள்ளது. கதை உண்மையானால் முறையை தவறாக பார்த்து கோட்டை விட்டுடிங்கள் போல இருக்கு. :D

உங்கள் அம்மம்மாக்கு பெறா மகன் எண்டால் உங்கள் அம்மாக்கு அண்ணனோ தம்பியோ முறை வரும். அப்பிடியெண்டால் உங்களுக்கு மாமா முறை -> ரேகா மச்சாள் முறை. :rolleyes:

உண்்மையாகவா சபேஸ் :D எனக்கு தங்கச்சி முறையெண்டு சொல்லிஅம்்மம்மா கிழவி சதி செய்து போட்டுது. :D சரி இருபத்்தைஞ்சு வருசமாச்சு ரேகாவே இப்ப அம்மம்மாவாகி இருப்பா இனி என்னத்தை செய்ய :D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் பழசுகளை தோண்டி எடுத்து நினைவில் நிறுத்திய சாத்திரிக்கு நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் பழசுகளை தோண்டி எடுத்து நினைவில் நிறுத்திய சாத்திரிக்கு நன்றி

எது பாலாஜியின் 60 நாளில் ஆங்கிலம் கற்றகலாம் புத்தகத்தோடை திரிஞ்சதையா?? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உங்க அனுபவங்கள் கதையா வாரது அழகு சாத்திரி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எது பாலாஜியின் 60 நாளில் ஆங்கிலம் கற்றகலாம் புத்தகத்தோடை திரிஞ்சதையா?? :lol:

நோ..நோ...

இதுதான் விடயமே.அதுவரை காலமும் சீயாக்காய் வைத்து தோய்ந்து கருவேப்பிலை போட்டு காச்சிய தேங்காய் எண்ணெயை தலைக்கு வைத்து வழித்திழுத்து கன்னத்தில் வழியும் எண்ணெயை கைக்குட்டையால் துடைத்தபடி.இரட்டை பின்னலுடன்.நெற்றியில் மெல்லிதாய் ஒரு திருநீற்று கீறல் அதில் சின்னதாய் சந்தணப்பொட்டு.லேடீஸ் சைக்கிளை ஓடிக்கொண்டு ஒரு கையால் காண்டிலை பிடித்தபடி மறுகையால் மேலெழும்பும் பாவாடையை மாறி மாறி இழுத்துவிட்டபடி வந்து.எங்களைக்கண்டதுமே ஏதோ கொட்டிய சில்லறையை தேடுவது போல குனிந்து கொண்டு .கதைகேட்டால் எதையாவது சுரண்டியபடி படபடப்பாய் பதில் சொல்லிவிட்டு பறந்தோடும் எங்கள்ஊர்பெண்களையே பார்த்து பழகிப்போய்விட்ட எங்களிற்கு .(இப்போ அந்தக்காலம் எல்லாம் மலையேறிவிட்டது இப்போதெல்லாம் எங்கள்ஊர்பெண்கள் அழகுசாதனமாய் பயன்படுத்துவது 50 கலிபர்.ஆர்.பி.ஜு. ஆட்லெறிகள்)

:D:D:D:lol::lol::lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்க அனுபவங்கள் கதையா வாரது அழகு சாத்திரி

கப்பியக்கா உங்கடை அனுபவங்களையும் கொஞ்சம் இழுத்து விடுறதுதானே :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி

நீங்கள் சொல்லுகின்றபோது தான் எனக்கும் ஒரு சம்பவம் ஞாபகம் வருகின்றது.

10ம் ஆண்டு படிக்கின்ற போது லவ் லெட்டரை நண்பனுக்கு, வகுப்பில் உள்ள பெண் ஒருத்தி எழுதிப் போடுகின்ற மாதிரி எழுதிப் போட்டு, பிற்பாடு அவன் அவளில் காதலாக அலைந்ததும், அது பள்ளியில் பிடிபட்டுப் போய், தினமும் முரட்டு வாத்தி ஒருவர் கூப்பிட்டு வைத்து அடித்ததும் சோகமான நினைவுகள். நான் இதில் சம்பந்தப்படாதபோதும், கூடத் திரிந்ததால் விளைவுகளும் என்னையும் பாதித்திருந்தது. அந்த நேரம் பார்த்து கொழும்பு ஓடி வந்ததால் தப்பித்து விட்டேன்.

எழுதிய விதம் நல்ல நகைச்சுவையாக உள்ளது. கதை உண்மையானால் முறையை தவறாக பார்த்து கோட்டை விட்டுடிங்கள் போல இருக்கு. :D

உங்கள் அம்மம்மாக்கு பெறா மகன் எண்டால் உங்கள் அம்மாக்கு அண்ணனோ தம்பியோ முறை வரும். அப்பிடியெண்டால் உங்களுக்கு மாமா முறை -> ரேகா மச்சாள் முறை. :lol:

கதையை ஆளமாகப் படித்திருக்கின்றீர்கள் போல.

கதை கதைதான் கதையை உண்மையாக நினைத்து உங்களை நீங்களே குளப்பிக் கொண்டால் உங்கள் தவறாகும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

குளோரின் தண்ணிக்கு வெழுத்ததுக்கே இவ்வளவு மவுசென்றால்.. புகலிடத்தில் பனிக்குளிருக்க பிறீஸ் ஆகி வெளுக்கிறதுகளுக்கு ஊரில எவ்வளோ மவுசிருக்கும்..??!

சாத்திரிக்கு பொம்பிளப் பிள்ளை இருக்கோ.. இருந்தா ஊருக்குக் கூட்டிக் கொண்டு போய் ஊர் காட்டினால்... ஊர்ப் பெடியளுக்கு.. தரிசனம் கிடைச்ச மாதியும் ஆகிடும்..! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது இதைதான். :D

மட்டக்களப்பும் மந்திரமும்.. இப்பவும் சொல்வாங்க...! :lol:

குறுக்காலைபோவான் முற்பகல் செயின்(சங்கிலி) பிற்பகல் காப்பு மோதிரம் இப்பிடித்தான் எனக்கு பழமொழி தெரியும். எனக்கும் மகள் இருக்கு இப்பதான் ஆறு வயது இன்னும் ஒரு பத்து வருசம் போகட்டும் ஊருக்கு கொண்டு போய் விடுறன். :D:D

  • கருத்துக்கள உறவுகள்

கதையை ஆளமாகப் படித்திருக்கின்றீர்கள் போல.

அந்தாள் பீல் பண்ணி எழுதியிருக்கெண்ட ஆளமாகப் படிச்சிட்டேன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கப்பியக்கா உங்கடை அனுபவங்களையும் கொஞ்சம் இழுத்து விடுறதுதானே :lol::D

ஊர் அனுபவங்கள் எல்லாம் நமக்கு குறைவுங்க

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி இதுவும் நல்ல நகைச்சுவையாக உள்ளது.அந்த காலப்பகுதி கவலைகளுக்கு நடுவிலும் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்த காலகட்டம்.

குறுக்காலைபோவான் முற்பகல் செயின்(சங்கிலி) பிற்பகல் காப்பு மோதிரம் இப்பிடித்தான் எனக்கு பழமொழி தெரியும். எனக்கும் மகள் இருக்கு இப்பதான் ஆறு வயது இன்னும் ஒரு பத்து வருசம் போகட்டும் ஊருக்கு கொண்டு போய் விடுறன். :lol::D

அது குறுக்கு இல்லை நெடுக்கு :D

வணக்கம் சாத்திரி நகைச்சுவை உணர்வுடன் உங்கள் அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள். அது சரி நீங்கள் குறிப்பிட்ட காலப் பகுதிக்கு முன்பே நான் மானிப்பாய் மகளிர் கல்லூரியில்தான் படித்தேன். கன்னத்தில் வழிந்த எண்ணையைக் கைக்குட்டையால் துடைத்தபடி வரும் எந்த மாணவியையும் நான் சந்திக்கவில்லை. நீங்கள் மட்டும் எப்படிச் சந்தித்தீர்கள். இணைப்பிற்கு நன்றிகள்.

அப்ப நானும் உங்கள் காலத்தில் படித்து(?)இருப்பேன் என்று நினைக்கிறேன்.நானும் சாத்திரி சொன்ன மாதிரி

பார்த்து இருக்கிறேன்.சில வேளை எண்ணய் இல்லாமல் வியர்வையாக இருக்குமோ :(

சாத்திரி,

தங்களின் எழுத்தில் உள்ள முக்கிய அம்சமும் தனித்தன்மையும் தங்கள் எழுத்துள் கிடக்கும் நளினச் சிரிப்புத்தான். நீங்கள் கதைகூறும் முறையையும் அதுவே வழிநடத்துகிறது. இவ்வாறான ஒரு விடயம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. சில நாவல்களை வாசிக்கும் போது வாய்விட்டுச் சிரிப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். உங்களது எழுத்திலும் அவ்வாறான ஒரு தன்மை ஒழிந்து கிடக்கிறது. சுயத்தை இழக்காது தொடருங்கள்.

நன்றிகள் வாசுதேவன் என் சுயம் ஒருநாளும் இழந்து போகாது

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இருள் அழகன் எங்கே இருக்கிறார் சாத்திரி?

இப்ப இருள் அழகன் எங்கே இருக்கிறார் சாத்திரி?

ஓ..அவரோ கதிரையில் இருக்கிறார் கந்தப்பு தாத்தா.. :rolleyes::lol:

அப்ப நான் வரட்டா!!

சாத்திரியின் இக்கதையினை வாசிக்கும் போது சென்னையில் நடந்த ஒரு சம்பவம் யாபகத்துக்கு வருகிறது.

சென்னையில் 12ம் வகுப்பில் படித்த ஈழத்தமிழர் ஒருவருக்கு அவ்வகுப்பில் படித்த கன்னடப் பெண் மீது ஒரு தலைக்காதல் ஏற்பட்டது. அப்பெண் மிக அழகானவர். இதயம் படத்தில் அவரைத்தான் முதலில் நடிக்கக் கேட்டிருந்தார்கள். ஈழத்தமிழருக்கு ஆங்கில அறிவும் மிகவும் குறைவு. தமிழ் மொழியில் படித்தவுடன் அவ்வருடம் தான் சென்னை வந்து 12ம் வகுப்பில் (+2) ஆங்கில மொழியில் கல்வி கற்றார். அவருக்கும் சாத்திரி மாதிரி ஒரு நண்பர் இருந்தார். அவரிடம் இப்பெண்ணுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதித் தரும் படி கேட்டிருந்தார். அவரும் எழுதிக் கொடுக்க, இவர் தயங்கித்தயங்கிப் போய் கடிதத்தினை அப்பெண்ணிடம் கொடுக்க, அப்பெண் வாசித்து விட்டு முழிக்கத் தொடங்கினார். எழுதிக் கொடுத்தவருக்கும் ஆங்கில அறிவு மிக மிகக்குறைவு. அக்கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறார் என்பது அக்கடித்தை வாசிப்பவர்கள் ஒருவருக்கும் விளங்காது . அப்படி ஒரு ஆங்கில அறிவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளோரின் தண்ணிக்கு வெழுத்ததுக்கே இவ்வளவு மவுசென்றால்.. புகலிடத்தில் பனிக்குளிருக்க பிறீஸ் ஆகி வெளுக்கிறதுகளுக்கு ஊரில எவ்வளோ மவுசிருக்கும்..??!

சாத்திரிக்கு பொம்பிளப் பிள்ளை இருக்கோ.. இருந்தா ஊருக்குக் கூட்டிக் கொண்டு போய் ஊர் காட்டினால்... ஊர்ப் பெடியளுக்கு.. தரிசனம் கிடைச்ச மாதியும் ஆகிடும்..! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது இதைதான். :huh:

மட்டக்களப்பும் மந்திரமும்.. இப்பவும் சொல்வாங்க...! :o

ஊரில மவுசு இருந்தாலும் எட்டா பழம் என்று பசங்களுக்கு நல்லா தெரியுமே அப்படி எட்டினாலும் அடி பட்ட பழமா இருக்கும் என்பதும் தெரியாமலில்லையே....... பி எம் டபிள்யுவிற்கு எங்க போறது.....ஊரில் அவ்வளவு சுலபமாக வாகன கடன் கொடுப்பதில்லையே வெட்டிப்பயலுகளுக்கு....

எனக்கு தெரிந்த மட்டக்களப்பு குடும்பஸ்தர் ஒருவர் அவராகவே சொல்லுவார்.. தம்பி மட்டக்களப்பானை நம்பாதீங்க என்று... கடைசியில் அவர் சொல்வதை கேட்டு ரசித்த யாழ்ப்பாணத்தவர் மட்டக்களப்பு மனிதரின் 19 வயது பெண்ணை தள்ளிக்கொண்டு போய் விட்டார்.....தள்ளிக்கொண்டு போனவர் ஒரு பொறியியலாளர்...அவருடைய தாய் இன்றும் சொல்கின்றார்... அட என்ட பொடியன் என்ஞினியர் என்ற உடன மருந்து போட்டு விட்டாங்கள் என்று.. உண்மையில் என்ன நடந்தது என்று எங்களுக்கு தானே தெரியும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.