Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விம்பம்

இதமான காலை நேரம். இளவேனிற் காலத்தின் ஆரம்பம். ஆங்காங்கு புள்ளினங்களின் கீச் ;கீச்’ ஒலி. ஐன்னல் திரைச்சீலை இடைவெளிகளினூடாககதிரவனின் ஒளிக்கீற்று கட்டிலில் விழ ஆரம்பித்தது. ராதி மெதுவாகப் புரண்டு படுத்தாள். மெல்லிய திரும்பலிலேயே வயிற்றுக்குள் குழந்தை உதைத்தது.‘’அம்மா’’ என்ற வார்த்தை அவளையறியாமலேயே தன்னிச்சையாய் உதிர்ந்தது.

ரமேஸ் அதிகாலையிலேயே எழுந்து வேலைக்குப் போய்விட்டதால் பக்கத்துப் படுக்கை வெறுமையாய்க் கிடந்தது.

ரமேஸ் அவன்தான் எவ்வளவு நல்ல கணவன். மெல்ல எழுந்து திரைச்சீலைகளை நீக்கி விட்டாள். கண்ணாடி ஐன்னலூடாக வீதியில் அவசரம் அவசரமாக அசையும் மக்கள் கூட்டம். அவளது நினைவுகள் தான் பிறந்து வளர்ந்த அந்த அழகிய கிராமத்தை அசை போட்டது.

பச்சைப்பசேல் என்று காட்சிதரும் அந்தப் பூமியில் இருக்கும் வரை அதன் அருமையை உணரத்தவறி விட்டாள். அந்த மண்ணின் அருமை மட்டுமா? மனம் இப்பொழுதெல்லாம் கொஞ்சக் காலமாக ஏதோ ஏக்கத்தில் தவித்தது. அதிலும் தாய்மை அடைந்ததிலிருந்து அவளுக்குள் தவிப்பு அதிகமாக இருந்தது, செற்றியிலிருந்து எழும்பும்போதும் படுக்கையில் புரண்டு படுக்கும்போதும் அடிக்கடி அவளது வாய் தன்னிச்சையாய் உதிர்க்கும் ‘’அம்மா’’என்ற அந்தச் சொல்.

‘’ராசாத்தி கெதியா குளிச்சுக்போட்டு வா சாப்பாடு ஆறுது’’

‘’ஓ பெரிய நினைப்பில ராசாத்தி என்று பேர் மட்டும் வச்சுப் போட்டினம்’’

‘’ஏன் பிள்ளை பெயருக்கென்ன?’’அம்மா ஆற்றாமையுடன் கேட்டாள்.

ராசாத்திக்கு விபரம் தெரிந்த நாளிலி;ருந்து அவளுக்குள் ஏனோ பெரிய குறை.

ராசாத்தி அழகில் ராசாத்திதான் ஏன் அறிவிலுங்கூட.

ஆனால் ஏழ்மை அவளை இயலாதவளாக்கி விட்டது.

‘’வா பிள்ளை சாப்பிட’’

‘’பெரிய விருந்து சமைச்சு வச்சிருக்கு சாப்பிட தினமும் இந்த ரொட்டிதானே

அதுக்குள்ள ஆறிப்போகுதென்ற அழைப்பு வேற’’

கமலம் என்ன செய்வாள். ஏழ்மையுடன் போராடிப் போராடி களைத்து விட்டாள்.

கணவனை இளமையிலேயே இழந்து விட்டவள்.

ராசாத்தியின் குத்தல்பேச்சுக்கள் அவளை வேதனை அடைய வைத்தாலும்

‘’பாவம் ராசாத்தி மற்றப்பிள்ளையளப்போல வடிவா உடுத்த சாப்பிட ஆசைப்படுற வயதுதானே நான் என்ன செய்வன்?’’என்று தனது ஆற்றாமையை எண்ணி மனதுக்குள் மறுகினாள்.

தோட்டத்தில் வேலை செய்து வரும் கூலிக் காசு இல்லாவிட்டால் முதலாளியம்மாவுக்கு மா இடித்து அரைத்து ஏதோ கிடைக்கும் கூலி.

இல்லாமையுடன் அவளது வாழ்க்கை ஓடியது.

அன்றும் வழக்கம் போல் தோட்ட வேலையை முடித்துக்கொண்டு களைக்கட்டை தலையில் வைத்தபடி வயல்வரப்புகளினூடாக ஓட்டமும் நடையுமாக வந்துகொண்டிருந்தாள் கமலம்.

பள்ளிக்கூடம் விட்டாச்சு ராசாத்தி பசியில வரப் போறாள் போய் சமைக்க வேணும் என்ற அவசரம் நடையை விரைவாக்கியது.

மாணவ மாணவிகள் சிட்டுக்குருவிகள் போல சிறகடித்து வீதியில் துள்ளலுடன் வரும் காட்சி கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.

நாள் முழுவதும் வெய்யிலில் காய்ந்து கறுத்து களைத்த தோற்றமும் பரட்டைத் தலையுமாக வந்த கமலத்தைப் பார்த்த மாணவிகள் சிலர் தமக்குள் ஏதோ சொல்லிச் சிரித்துக் கொண்டனர்.

அவள் உடுத்தியிருந்த கிழிந்த சேலையும் இயற்கையிலேயே மிதந்த பல்லும் அவளது தோற்றத்தை அலங்கோலமாகக் காட்டியது.

பின்னால் வந்துகொண்டிருந்த ராசாத்திக்கு அவமானம் பிய்த்துத் தின்றது.

‘’சீ எப்ப இந்த மனுசி திருந்தப்போகுது? சுமதியின் அம்மா என்ன வடிவா சாறி உடுத்தி கொண்டை போட்டு வேலைக்குப் போறா. ஐனனியின் அம்மா காரிலதான் எங்க வேணுமென்றாலும் போறா. என்ர வகுப்பில எல்லோரும் விதம் விதமா உடுத்தினம் விதம்விதமா சாப்பாடு கொண்டு வருகினம்.

நான்- நான் மட்டும் ஏன் இப்படி?

கழுவிக் கழுவி கலர் மங்கிய உடை.

காலில் தேய்ந்த இரப்பர் செருப்பு.

தலைக்கு எண்ணை கூட இல்லை.

அறியாப் பருவம் அவளை ஏங்க வைத்தது.

வீட்டிற்கு வந்ததும் கமலம் புல்லுக்கட்டை போட்டு விட்டு அவசர அவசரமாக

அடுப்பைப் பற்ற வைத்தாள். அரிசியை உலையில் போட்டு விட்டு கூடைக்குள் கிடந்த கிழங்கை எடுத்து அவசரமாக கறி சமைத்தாள்.

‘’பிள்ளை சாப்பிட வாவன்’’

‘’எனக்கு சாப்பாடும் வேணாம் ஒரு இழவும் வேணாம்’’

‘’ஏன் பிள்ளை பசியோட இருக்கக் கூடாது சாப்பிட வா’’

‘’என்ர வகுப்பில படிக்கிற பிள்ளைகளெல்லாம் விதவிதமா பலகாரம் கொண்டு வருகினம் விதவிதமா உடுத்தினம் எனக்கு மட்டும் இரண்டு தேய்ந்து ஒட்டுப் போட்ட சட்டை. எனக்கு சாப்பாடும் வேணாம் ஒண்ணும் வேணாம்.’’

‘’ராசாத்தி’’

‘’இனி என்னை ராசாத்தி எண்டு கூப்பிட வேணாம்’’

‘’ஏன் பிள்ளை’’கமலத்தின் கண்கள் குளமாகியது.

‘’ராசாத்தி எண்டா மாளிகை இருக்க வேணும் பஞ்சு மெத்தை இருக்க வேணும் பகட்டான உடுப்புகள் இருக்க வேணும் .இங்க எதுவுமே இல்லை.

ஓலைக் குடிசை தலையில இடிக்குது. கிழிந்த ஓலைப்பாய் உடம்பெல்லாம் குத்துது. உடுப்பு அதைப்பற்றி நான் சொல்லத் தேவையில்லை.’’படபட என்று பேசிய ராசாத்தி சாப்பிடப் பிடிக்காமல் குப்புறப் படுத்துக் கொண்டாள்’

அவளுக்கு எல்லாவற்றிலும் வெறுப்பு வந்தது.

கொஞ்ச நாட்களாக அவள் தனக்குள்ளேயே தன்னைப் பற்றி கற்பனைக்கோட்டை கட்டத்தொடங்கி இருந்தாள்.

அவளது அழகும் மெருகு படத்தொடங்கியது. ராசாத்திக்கு மட்டும் நல்ல உடை நகைகள் பூட்டி விட்டால் உண்மையிலேயே சிறந்த அழகிதான்.

சென்ற வாரம் ஐனனி வீட்டுக்குச் சென்றபொழுது அங்கிருந்த ஆளுயர நிலைக் கண்ணாடியில் தன்னை முழுமையாகப் பார்க்க முடிந்தது. நெடு நெடு என்ற உயரம். எடுப்பானதோற்றம் அந்த விழிகள் நாசி எல்லாமே பார்ப்போரை மயக்கின.

கமலம்; என்ன செய்வாள்? பாவம் தனக்குள் அழுதாள். தனது ஏழ்மை தன் மகளை அவளது எதிர்காலத்தை பாதிக்கக் கூடாது என்று இறைவனை வேண்டுவதைத் தவிர அவளால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

கமலத்தின் வேண்டுதலோ அல்லது ராசாத்தியின் அதிஸ்டமோ ராசாத்தி வகுப்பில் சிறந்த மாணவியாகச் சித்தியடைந்திருந்தாள். கமலம் பல நாளாக

யார் யாரையோ பிடித்து அதிபர்;ஆசிரி;யர்களின் உதவியுடன் மறு வருடம் பட்டணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் அனுமதி பெற்று விட்டாள்.

ராசாத்திக்கோ கொள்ளை மகிழ்ச்சி.

‘’சீ இனி இந்தக்குடிசை வாழ்வு எனக்கு வேண்டாம்.’’

கமலம் தன் முதலாளியம்மாவிடம் கைமாற்றாக வேண்டிய கடன் மூலம் சில உடைகளும் தேவையான பொருட்களும் ராசாத்திக்கு வாங்கிக் கொடுத்தாள்.

ராசாத்தி சிறகு முளைத்த சிட்டுக் குருவியானாள்.

காலம் யாருக்காகவும் காத்திருக்காமல் வேகமாக சுழன்றது.

ஆறு மாதங்கள் ராசாத்தியைப் பார்க்காதது கமலத்திற்கு வேதனையாக இருந்தது.

தன்னால் முடிந்தளவு கொஞ்சம் பலகாரம் செய்து கையில் எடுத்துக்கொண்டு

ராசாத்தியைப் பார்க்க பட்டணம் ;போனாள்.

பாடசாலை விடுதி வாசலில் வாடனிடம் தன்னை அறிமுகப்படுத்தி விட்டு

வாங்கில் ஓரமாக உட்கார்ந்தாள்.

மகளைக் கண்டதும்’’ராசாத்தி’’என்றபட

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணியக்கா தொடர்ந்து உங்கள் படைப்புக்களை தாருங்கள் காவலூர் என்பது எந்த ஊர் காரைநகரா??அல்லது நல்லூரா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காவலூர் என்று இன்று அழைக்கப்படுவது ஊர்காவற்றுறை.

  • கருத்துக்கள உறவுகள்

காவலூர் என்று இன்று அழைக்கப்படுவது ஊர்காவற்றுறை.

ஓ நீங்கள் ஊர்காவற்துறையா நல்லது :D

கதை நெஞ்சை ஒரு கணம் உலுக்கிவிட்டது உங்கள் எழுத்து நடையில் வாழ்த்துகள் :) ......இது கதை அல்ல பல தாய்மார்களின் ஏக்கம் நிஜத்தில் நடக்கும் நாடகங்கள் கண்மணி அக்கா. :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துத் தெரிவித்த சாத்திரி யமுனா இருவருக்கும் நன்றிகள்

நெஞ்சை தொட்டு நிற்கின்றது கதையும் உங்கள் தொய்வில்லாத எழுத்தும். தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சத்தை கனமாக்கிய கதை வாழ்த்துக்கள் காவலூர் கண்மனி அக்கா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் சுகன் இன்னிசை

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணிக்கு வாழ்த்துக்கள்.

எதுவும் அருகாமையில் இருக்கும் போது அதன் கனதி யாருக்கும் புரிவதில்லை. தூரங்கள் ஆகும் போதுதான் தேவையும் துயரமும் மனிதரை துரத்துகிறது.

உங்கள் கதையின் ராசாத்தியும் அவள் அம்மாவும் எங்கள் மனங்களுக்குள் சிம்மாசனமிடுகிறார்கள்.

வாழ்த்துக்கள்.

Edited by shanthy

கதை மனதை கனமாக்கியது. கதைநடையும் கதையுடன் ஒன்றிப்போகவைத்தது வாழ்த்துக்கள் தொடர்ந்தும் எழுதுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கௌரிபாலன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாந்தி

உங்கள் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

அவ் ஏழைத் தாயின் மனநிலையை மனத்திரை முன் கொணர்ந்து பார்த்தபோது கண்களில் கண்ணீரை வரவழித்து விட்டீர்கள் கண்மணி.

அன்று அத்தாயை ஒதுக்கியவள் இன்று தன் குழந்தையை என்ன செய்வாள்?

  • 5 years later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக எழுதி இருக்கிறீர்கள்..கண்கள் பனித்தன...கண்மணி அக்கா..நீண்ட நாட்கள் ஆகிவிட்டது உங்கள் ஆக்கம்கள் படித்து..வாழ்க்கை ஆற்றுக்குள் தொலைந்துபோய்விட்ட பல யாழ்கள படைப்பாளர்கள் போல் நீங்களும் காணாமல் போய்விட்டது கவலையாக இருக்கிறது...யாழ் வந்த ஆரம்பகாலங்களில் என்னைகவர்ந்த ஒருசில யாழ்கள படைப்பாளர்களில் கணமணி அக்காவும் ஒருவர். நன்றி நியாணி...

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தெரிவாக எனது சிறுகதையை எடுத்துவந்த நியானிக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இக் கதையைப் படித்தேன். நெஞ்சைப் பிசைந்துவிட்டது. வாழ்த்துக்கள் சகோதரி...!

 

ஊர்காவற்துறை , காரைநகர். இடையில் இருக்கும் ஜெற்றி பாதைப் பயணம், கடற்கோட்டை வாழ்வுடன் கலந்துவிட்ட காலங்கள்...! :rolleyes::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் சுவி. நீங்களும் எங்கள் ஊரின் சுற்றாடலைச் சேர்ந்தவர் என நினைக்கிறேன். அந்த அலை ஓசையையும் ஆலய மணியோசையும் இன்னும் எம் காதுகளில் ஒலித்தபடி......நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை சகோதரி ! நான் காரைநகர்  n.r.t.b. யில்  சில வருடங்கள் பணிபுரிந்தேன். kayts பக்கம் எல்லாம் நன்பர்கள் உண்டு....!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கண்மணி

என்னத்தை ஒதுக்குகிறோமோ அது வலிய தேடி வரும் என்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஈழப்பிரியன் உங்கள் கருத்துப்பதிவுக்கு நன்றிகள். தாய்மையில்தான் தாயின் பாசத்தை முழுமையாக உணரமுடியும்.

சுவி நீங்கள் காரைநகரா? கூப்பிடு தூரத்தில்தான் உள்ளது. சென்றவருடம் கசுனாபீச்சுக்கு போய் வந்தோம். அழகான அந்த சவுக்குத் தோப்பு மனதில் நிற்கிறது. பதிவுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

காரைநகரில் வேலை செய்தேன்...!  எனது பிறப்பிடம் யாழ்ப்பாணம்  நீராவியடி...! :)

கண்மணி அக்காவின் கதைக்கருக்கள் எல்லாம் கனதியாக இருக்கிறது. எனது நண்பனொருவனின் தாயை நினைவு படுத்தியது கதை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையை படீத்து கருத்தெழுதியமைக்கு நன்றிகள் விஸ்வா. இது என் வெள்ளைபுறா ஒன்று.. சிறுகதைத்தொகுதியில் உள்ளது. நன்றிகள்

கதையை படீத்து கருத்தெழுதியமைக்கு நன்றிகள் விஸ்வா. இது என் வெள்ளைபுறா ஒன்று.. சிறுகதைத்தொகுதியில் உள்ளது. நன்றிகள்

 

நீங்கள் அண்மையில் எழுதிய  மற்றுமொரு கதையிலும் கூட கதையின் முடிவு இதே போல் அவர்களின் முன்வினை  பிள்ளையை  பாதித்திருந்தது போல் எழுதினீர்கள்.... மற்றுமொன்று கதையில் கதை மாந்தர்களை பற்றிய விவரணங்களை, அவரகளது  குணநலன்களை   அதிகமாக  சேர்க்கலாம்.... கதையில் பொதுவாக உரையாடல்கள் குறைவாக வருகிறது, கதை கதையாசிரியர் சொல்வது போல் இல்லமால் கதை மாந்தர் வாயிலாக வரும்  போது அவர்களது குணாதிசயங்கள் படிப்பருள்  நன்கு  உள்வாங்கப்படும்.... இவை எனக்கு தோன்றியவை கண்மணி அக்கா, தவறிருப்பின்  மன்னிக்க... 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.