Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலர் தினம் 2008: இணையம் மூலம் காதல் செய்வது நல்லதா? கெட்டதா??

இணையம் மூலம் காதல் செய்வது நல்லதா? கெட்டதா? 27 members have voted

  1. 1. இணையம் மூலம் காதல் செய்வது நல்லதா? கெட்டதா?

    • நல்லது!
      9
    • கெட்டது!
      10
    • தெரியவில்லை!
      6
    • வேறு ஏதாவது பதில்!
      2

Please sign in or register to vote in this poll.

Featured Replies

எல்லாருக்கும் வணக்கம்,

காதலர் தினம் 2008 சம்மந்தமாக யாழ் இணையத்தில் ஒரு பட்டிமன்றம்... தலைப்பு: "இணையம் மூலம் காதல் செய்வது நல்லதா? அல்லது கெட்டதா?? .."

நான் இணையம் மூலம் காதல் செய்வது நல்லது என்ற தலைப்பில் எனது கருத்துக்களை இங்கு எழுதுகின்றேன். எனக்கு ஆதரவாக எழுதவிரும்புபவர்கள் எனது கூட்டணியில் சேர்ந்துகொள்ளவும்.

மாண்புமிகு நெடுக்காலபோவானை (காதலே கெட்டது என்று கூறுபவர்.. :D:D ) முடியுமானால், எமது வாதாங்களை மறுதலித்து வாதாடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். கெட்டது என்ற தலைப்பில் உங்கள் கருத்துக்களை வைப்பவர்கள் நீங்களும் ஓர் கூட்டணியாக சேர்ந்து வாதாடலாம்.

இந்தக்கருத்தாடல் இன்னும் இரண்டு கிழமைகளிற்கு இங்கிருந்து இழுபடும். ரசிகப்பெருமக்கள் எமது பட்டிமன்றத்திற்கு பேராதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

யாழில் உறுப்பினர்களாக இல்லாத வாசகர்கள் யாராவது இந்தப்பட்டிமன்றம் பற்றிய உங்கள் தரப்பு வாதங்களை கூறவிரும்பினால் அவற்றை kalainjan@yarl.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் சந்தர்ப்பத்தில் நான் அவற்றை இங்கு இணைத்துவிடுவேன்.

இணையம் மூலம் காதல் செய்து சென்றவருடம் இல்வாழ்வில் இணைந்த இரசிகை, மணிவாசகன் தம்பதியினர் இந்தப்பட்டிமன்றத்திற்கு நடுவர்களாக செயற்பட்டு பெப்ரவரி 14ம் திகதி தமது இறுதித்தீர்ப்பை கூறுவார்கள்!

நடுவர்கள் எப்போது வருவார்கள் என்று தெரியாது. அதுவரை காத்து இருக்கமுடியாது. நாம் எமது வாதங்களை ஆரம்பிப்போம். அவர்கள் எமக்குப் பின்னால் வந்து இணைந்துகொள்வார்கள். :(

எழுதும்போது உங்கள் கருத்துக்களிற்கு நீங்களே மட்டறுத்துனர்களாக இருந்து யாழ் மட்டறுத்துனர்களிடம் வெட்டுவாங்க வேண்டாம் என்று யாழ்கள உறவுகளை (என்னையும் சேர்த்து) அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

உங்கள் ஆதரவுக்கு நன்றி!

பிகு: எனது சீடர்களையும் குருநாதனின் கூட்டணியில் சேர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றேன். குருநாதன் கவிழ்ந்தால் உங்களுக்குத்தான் வெக்கக்கேடு! ^_^

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கலைஞர், யாரையாவது இணையம் மூலம் கல்யாணம் செய்கிற முயற்சியில் இருக்கிறீர்களா?. எதுக்கும் கவனமாக இருங்கோ.

  • தொடங்கியவர்

என்ன கலைஞர், யாரையாவது இணையம் மூலம் கல்யாணம் செய்கிற முயற்சியில் இருக்கிறீர்களா?. எதுக்கும் கவனமாக இருங்கோ.

ஒரு லியோனி மாதிரி வருவம் எண்டால் விடமாட்டீங்கள் போல இருக்கிது. ^_^

ஜெனரல்!!

பட்டிமன்றம் தொடங்கியாச்சோ என்னும் பெப்பிரவரி ஆகவில்லை எனிவே உங்களின்ட ஆர்வத்தை நான் அபிரிசியேட் பண்ணுறேன் :D ..பட் நீங்க வந்து குருவிற்கு ஆதரவா கதைக்க சொன்னபடியா குரு வந்து இணைய மூலம் காதலிற்கு ஆதரவா அல்லது இல்லையா அதை சொல்லுங்கோ ஏனேன்றா அதற்கேற்றமாதிரி வாதாடா :( ஏனேன்றா நிஜத்தில இணைய மூலமான காதல் நேக்கு பிடிக்காது பட் குருவிற்காக உது கூட செய்யாட்டி சோ உங்கள் சார்பாக நான் களத்திள் இறங்கிறேன் சரியோ... :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"காதலிற்கு கண் இல்லை காதலித்தா பிறகு ஒன்றுமே இல்லை" ^_^

இணையம் மூலம் காதல் செய்வது நல்லதே. ஆனால் இணையம் மூலம் திருமணம் செய்வது தவறு. என்னைப் பொறுத்தவரை காதல் வேறு. திருமணம் வேறு. காதலிற்கு லுக்கும் பணமும் இருந்தால் போதும். ஆனால் திருமணத்திற்குப் பல அடிப்படைத்தேவைகள் இருக்கின்றன. ஆகவே இந்தத் தலைப்பிற்கு எனது பதில் நல்லது என்பதே. ஆனால், இதே கேள்வியைத் திருமணத்திற்குக் கேட்டிருந்தால் எனது பதில் இல்லை என்பதே. இணையம் மூலம் காதலித்தாலும், திருமணம் என்று வரும்போது, ஒருவருக்கொருவர் சந்தித்துப் பழகிய பின்பு முடிவெடுப்பதே நல்லது. ஏனென்றால், நேரடியாகப் பழகும்போதுதான், அவர்களுக்குள் ஓரு புரிந்துணர்வு ஏற்படும். திருமணத்திற்கு மிகவும் முக்கியமானது புரிந்துணர்வே. அது மட்டுமின்றி, நேரடியாகப் பழகும்போதுதான் அவர்களுடைய பழக்கவழக்கங்கள் எமக்கு ஏற்றவையா அல்லது எம்மால் பொறுத்துக் கொள்ள முடியுமா என்பதை அறிய முடியும். இவற்றையெல்லாம் பார்த்துக் காதல் வருவது காதலே அல்ல எனச் சிலர் வாதாடலாம். ஆனால் இவை திருமண வாழ்க்கையைப் பாதிக்கக் கூடிய விடயங்கள். திருமணம் என்பது இருவர் சேர்ந்து வாழ்வது அல்ல. இருவர் மனமொத்து மகிழ்ச்சியாக வாழ்வது.

  • கருத்துக்கள உறவுகள்

என்னது, இணையம் மூலம் காதலா..? சும்மா இணையத்தில டைப் அடிக்கிறதுக்கு என்னத்துக்கு காதல்? முதுகெலும்பில்லாத கோழைப்பசங்கள் செய்யுற வேலை அது.. நமக்கெல்லாம் நேருக்கு நேர்தான்.. எதுவெண்டாலும் பரவாயில்லை.. ஒண்டிக்கு ஒண்டி மோதிப் பாக்கோணும்.. நேருக்கு நேரா டீல் பண்ணோணும்.. ^_^

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞன் இது நல்ல விவாதம்

என் அனுவப்படி இணைய காதல் என்பது ஒரு வித மயக்கம் தான். எனக்கு தெரிந்த பலர் இணையத்தின் ஊடாக காதலித்து திருமணம் செய்து பின்னர் பிரிந்து வாழ்கின்றனர்.

கனடா - கனடா (இதில் ஒரு ஜோடி ஆண் 41 வயது பெண்ணுக்கு 19 வயது)

அமெரிக்கா - பிரான்ஸ்

லண்டன் - டுபாய் ( இந்த ஜோடி இருவரும் திருமணமானவர்கள்.)

கனடா - அவுஸ்ரேலியா

கனடா - இந்தியா (இதில் ஒரு ஜோடிக்கு வயசு 55+)

கனடா - ஜேர்மனி

இன்னும் இப்படி எத்தனை உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

இணையம் ஒரு தகவல் பரிமாற்ற ஊடகமே தவிர.. நம்பிக்கையோடு காதல் செய்யுறதுக்கு அது உகந்த இடமல்ல..! ^_^

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணையம் ஒரு தகவல் பரிமாற்ற ஊடகமே தவிர.. நம்பிக்கையோடு காதல் செய்யுறதுக்கு அது உகந்த இடமல்ல..! :blink:

உண்மை தான். தொலைக் காட்சியில் பாருங்கள் எத்தனை சிறுவர்கள் இதனால் காணாமல் போகின்றார்கள் அல்லது சீரழிந்து போகின்றார்கள்.

சிறிது காலத்திற்கு முன்னர் ஒரு நிகழ்சியை ஒளிப் பதிவு செய்து காட்டினார்கள். இப்படி இணையத்தில் ஈடுபடும் பலர் மிக உயர் பதவிகளில் இருப்பவர்கள் என்று.

வைத்தியர் பொறியியளாளர் பொலிஸ் அதிகாரி இப்படி பலர்

  • கருத்துக்கள உறவுகள்

இயந்திரமயமான உலகில் ஒருவரை ஒருவர் சந்திக்க கூடிய நிலையில் இக்கால இளைஞர், யுவதிகள் இல்லை.ஆனால் ஒவ்வொருவரும் எதோ வகையில் இணையத்தை பாவிக்கிறார்கள். அது வேலையாகட்டும், வீடாகட்டும்.ஆகவே ஒருவரை ஒருவர் தொடர்பு படுத்தி கொள்ள இணையம் மிக பெரிய பாலமாக உள்ளது.காதலும் செய்யலாம்.அதன் அடுத்த கட்டமாக நேரடியாக சந்தித்து கொள்ளாம்.திருமணமும் செய்து கொள்ளலாம்.

  • தொடங்கியவர்

ரசிகப்பெருமக்களிற்கு வணக்கம்...

எமது நடுவர்கள் இன்னும் பிரசன்னம் ஆகாத நிலையில் நாம் இந்த பட்டிமன்றத்தை கொண்டுசெல்லவேண்டியுள்ளது. இப்போது கையில் வேலையாக இருப்பதால் நடுவர்கள் பின்னால் வந்து இணைந்துகொள்வார்கள்.

இதுவரை, எனது அணியில் எனது சீடன் யமுனா, தமிழச்சி, நுணாவிலான் ஆகியோர் இருக்கின்றார்கள். கந்தப்பு அவர்கள் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக சொல்லி இருக்கின்றார்.

எதிர்தரப்பில் நெடுக்காலபோவான், தமிழ்நெக்ஸ், டங்குவார் ஆகியோர் ஒரு அணியை உருவாக்கி உள்ளார்கள். மற்றவர்களும் தொடர்ந்து இணைந்து கொள்ளுங்கள்.

முதலாவது விசயத்தை நான் தெளிவுபடுத்துகின்றேன்...

இந்தபட்டிமன்றத்தின் தலைப்பு இணையம் மூலம் காதல் செய்வது நல்லதா? கெட்டதா? என்பதே!

இணையம் மூலம் கலியாணம் செய்வது நல்லதா? கெட்டதா? என்பது அல்ல. முதலில் காதல் பற்றி பேசலாம். இதன்பிறகு கலியாணம் பற்றி சிந்திக்கலாம். ஹாஹா..

முதலாவதாக நெடுக்காலபோவான் என்ன சொல்லிறார் எண்டு பாருங்கோ.

இணையம் ஒரு தகவல் பரிமாற்ற ஊடகமே தவிர.. நம்பிக்கையோடு காதல் செய்யுறதுக்கு அது உகந்த இடமல்ல..!

இவர் இப்பிடி மட்டும் அல்ல இப்பிடியும் சொல்லக்கூடியவர்...

இதயம் ஒரு தகவல் பரிமாற்ற ஊடகமே தவிர.. நம்பிக்கையோடு காதல் செய்யுறதுக்கு அது உகந்த இடமல்ல..!

இணையம் என்பது எங்கட வாழ்க்கையின் இதயமாக இருக்கின்ற இந்த நிலையில் இப்படி ஒருதலைப்பட்சமாக அறிக்கைவிடுவது நெடுக்காலபோவானிற்கு தனது இதயத்தின் மீதே நம்பிக்கை இல்லை என்பதை காட்டுகின்றது. முதலில இவருக்கு இதயம் இருக்கிறதா எண்டு நீங்கள் கேட்பது விளங்கிது... எனக்கும் சந்தேகமாகவே இருக்கின்றது.. :blink:

அடுத்ததா டங்குவார் என்ன சொல்லிறார் என்றால் நேரடியாக முட்டி மோதிப்பார்க்கபோறாராம். முட்டிமோதிறதுக்கு காதல் என்ன தள்ளுவண்டியா?

நேருக்கு நேராக டீல் பண்ணி சட்டு புட்டு எண்டு விசயத்தை முடிப்பதற்கு காதல் என்ன கடையில் வாங்குகின்ற ஒரு பொருளா?

சும்மா இணணயத்தில டைப் மாத்திரம்தான் அடிக்கிறீங்கள் எண்டால் ஏன் இருபத்துநாலு மணித்தியாலமும் எல்லாரும் இணையத்துக்க படுத்துகிடக்கிறீங்கள்? உங்கள் இதயத்தை இணையத்தில் பறிகொடுத்து இருப்பதால்தானே இணையத்திற்கு நீங்கள் எல்லாரும் அடிக்கடி வாறீங்கள்?

நாங்கள் காதல் பற்றியே இன்னும் கதைச்சு சரியான முடிவுக்கு வர இல்லை. தமிழ்நெக்ஸ் அவர்கள் கலியாணம் மட்டும் போட்டார். மேலும், ஆக்கள் காணாமல் போறதுக்கு இணையம் காரணமா இருக்கிதாம். உங்களுக்கு தெரியுமோ காணாமல் போன ஆக்கள் ஒன்று சேருவதற்கும் இணையம்தான் காரணமாக இருக்கின்றது. இதவிட.. இணையம் வருவதற்கு முன்னர் ஆக்கள் காணாமல் போக இல்லையா?

அண்ணைமார்.. திரும்பவும் சொல்லிறம்..

இணையம் மூலம் காதல் செய்வது நல்லது! நல்லது! நல்லது!

அப்ப நான் வரட்டா.. :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணையம் மூலம் கலியாணம் செய்வது நல்லதா? கெட்டதா? என்பது அல்ல. முதலில் காதல் பற்றி பேசலாம். இதன்பிறகு கலியாணம் பற்றி சிந்திக்கலாம். ஹாஹா..

இணையம் மூலம் காதல் செய்வது நல்லது! நல்லது! நல்லது!

நாங்கள் காதல் பற்றியே இன்னும் கதைச்சு சரியான முடிவுக்கு வர இல்லை. தமிழ்நெக்ஸ் அவர்கள் கலியாணம் மட்டும் போட்டார். மேலும், ஆக்கள் காணாமல் போறதுக்கு இணையம் காரணமா இருக்கிதாம். உங்களுக்கு தெரியுமோ

அப்ப நான் வரட்டா.. :wub:

அப்போ நீங்க இதில் குஷ்புவையும் உங்கள் பக்கம் சேர்க்கலாம் :blink:

எங்கள் பக்கம் சிம்புவை சேர்க்கலாம் போல இருக்கு :huh:

நான் சொன்னது இணையத்தில் காதல் ஏற்பட்டு ஓடிப் போய் காணாமல் போன அல்லது வஞ்சிக்கப்பட்ட அல்லது கொலை செய்யப்பட்ட காதலர்களை

Edited by tamillinux

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரசிகப்பெருமக்களிற்கு வணக்கம்...

எமது நடுவர்கள் இன்னும் பிரசன்னம் ஆகாத நிலையில் நாம் இந்த பட்டிமன்றத்தை கொண்டுசெல்லவேண்டியுள்ளது. இப்போது கையில் வேலையாக இருப்பதால் நடுவர்கள் பின்னால் வந்து இணைந்துகொள்வார்கள்.

நடுவர்கள் ஒலிப்பதிவில் தான் தமது நிலையை வெளிப்படுத்தல் வேண்டும். இல்லாவிட்டால் இதை நம்ப முடியாது.

இப்படி பல சுத்துமாத்துக்களை இணையத்தில் பார்த்திருக்கின்றோம் :blink:

Edited by tamillinux

என்னுடைய காதலும் ஒரளவு இணையக்காதல் மாதிரித்தான் ஏனெனில் 6 வருடங்கள் இணையத்திலும் தொலைபேசியிலும் காலத்தை ஓட்டினன் ஆனா முதலில் வகுப்பில் இருவரும் பார்த்திருக்கிறோம். என்னை பொருத்தவரை நாம் சந்தோசமா இருக்கிறோம் .மற்றவர்களின் வாழ்க்கை எப்படி என்று தெரியவில்லை அதனால் தெரியவில்லை என்றே வாக்களித்திருக்கிறேன் :huh::wub:

ஆனால் இணையத்தில் காதல் செய்வது நல்லதே :blink:

இதயதால காதல் செய்தால் இணையம் மூலமும் காதல் செய்யலாம். நம்ம மாதிரி இதயமில்லாத ஆக்களை எந்த முறையில் காதல் செய்தாலும் ஆப்புதான்.

கேள்வி: அப்ப நாங்க எப்படி உண்மையான காதலர்களை இணையத்தில் கண்டுபிடிக்கிறது???

கு.மா பாணி பதில்: உந்த கோதாரிக்குதான் காதலிக்கவே வேண்டாம் என்டு நான் சொல்லுறது.

:wub:

கண்டவுடன் காதல் செய்வதும் இணையத்தில் காதல் செய்வதும் ஒன்றே. ஒருவரைப் பற்றி எதுவுமே தெரியாமல் கண்டவுடன் காதல் செய்வதிலும் பார்க்க, இணையத்தின் மூலம் ஒருவரையொருவர் அறிந்து காதல் செய்வது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததா டங்குவார் என்ன சொல்லிறார் என்றால் நேரடியாக முட்டி மோதிப்பார்க்கபோறாராம். முட்டிமோதிறதுக்கு காதல் என்ன தள்ளுவண்டியா?

நேருக்கு நேராக டீல் பண்ணி சட்டு புட்டு எண்டு விசயத்தை முடிப்பதற்கு காதல் என்ன கடையில் வாங்குகின்ற ஒரு பொருளா?

சும்மா இணணயத்தில டைப் மாத்திரம்தான் அடிக்கிறீங்கள் எண்டால் ஏன் இருபத்துநாலு மணித்தியாலமும் எல்லாரும் இணையத்துக்க படுத்துகிடக்கிறீங்கள்? உங்கள் இதயத்தை இணையத்தில் பறிகொடுத்து இருப்பதால்தானே இணையத்திற்கு நீங்கள் எல்லாரும் அடிக்கடி வாறீங்கள்?

யோவ் மாப்பு, என்ன நக்கலா..? காதல் கத்தரிக்காயெல்லாம் வெறும் புருடா.. 99% காதல் இனக்கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. இப்ப ஒரு கதைக்கு கோவக்கார அசினும் சாந்தமான கஸ்தூரியும் உங்கள ஒரே நேரத்தில காதலிக்கிறதாச் சொன்னால் ஆரை லவ் பண்ணுவீங்கள். அவள் பிள்ளை இப்பக் கோவக்காரியா இருந்தாலும் கல்யாணத்துக்குப் பின்னால சரி யாப் போகும் எண்டு அசினை லவட்ட மாட்டீங்கள்? :lol: இதுதானே உங்கட கத்தரிக்காய் காதல்..

இதுக்குப் போய் ஏன் இணையத்தில மினக்கடுவான்? நேராப் போய் அடியே அசின்.. உன்னை எனக்கு இன்ன இன்ன ரீசனால பிடிக்குது எண்டு சொல்லி பிக்கப் பண்ணவேண்டியதுதானே.. :wub: எதுக்கு இணையத்தில போய் புனிதமான காதல் அது இது எண்டு இணையத்தில டைப் அடிக்கோணும்..! :o

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தினூடாக காதல் செய்யலாம். ஆனால் திருமணத்திற்கு முடிவெடுக்க முன் அவர்கள் சிலமுறையாவது சந்தித்துப் பழகுவது முக்கியம். கருத்து வேறுபாடுகள் ஏற்படின் நன்பர்களாகவே இருந்து விடலாம். :wub::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தெரியவில்லை என்றுதான் ஓட்டுப்போட்டனான்.ஏன் என்றால் எனக்கு உண்மையாகவே தெரியாது :wub:

  • கருத்துக்கள உறவுகள்

லொக் இன் (log in) செய்தே

காதல் செய் காதல் செய் இன்ரநெற்றில் காதல் செய்..

கழற்றி விடு கழன்று விடு கண் மறைந்துவிடு

லொக் அவுட் (log out) செய்தே.!

மீண்டும்...

லொக் இன் (log in) செய்தே

காதல் செய் காதல் செய் பிறிதொன்றை

கழற்றி விடு கழன்று விடு கண் மறைந்துவிடு

ஐடி (ID) யை புளக் (block) செய்தே..!

மீண்டும்..

லொக் இன் (log in) செய்தே....

காதல் செய் காதல் செய் செல்போன் நம்பர் (cell phone number) கொடுத்தே

கழற்றி விடு கழன்று விடு கண் மறைந்து விடு

சிம் காட்டை (SIM card) மாற்றியுமே..!

மீண்டும்..

லொக்கின் (log in) செய்தே

காதல் செய் காதல் செய் டேற்றிங் பிக்ஸ் (dating fix) பண்ணி

கழற்றி விடு கழன்று விடு கண் மறைந்துவிடு

பிசா கட் (pizza hut), மக்டொலாட் (McDonalds), Coffee bar சுத்தி ரா ரா காட்டிடதுமே..!

மீண்டும்..

லொக்கின் (log in) செய்தே

காதல் செய் காதல் செய் கதையளந்தே

கழற்றி விடு கழன்று விடு கண் மறைந்து விடு

காரணங்கள் பல டிஸ்கவர் (Discover) பண்ணியே.

எல்லாம் அலுக்க..

இறுதியில்..

லொக்கின் (log in) செய்தே

கலியாணம் செய் கலியாணம் செய் மற்றிமனியில் (matrimony) தேடியே

கழற்றி விடு கழன்று விடு கண் மறைந்து விடு

கோட்டில் (court) டிவேஸ் (Divorce) செய்துமே.

மீண்டும்...

பழைய குருடி கதவைத் திறவடி கணக்காய்..

லொக்கின் (lon in) செய்தே

காதல் செய் காதல் செய் இன்ரநெற்றில்

போக்கிவிடு போக்கிவிடு பொழுதைப் போக்கிவிடு

கணணியில் கன்னியரோடே (காளையரோடே)

கழற்றி விடு கழன்று விடு கண் மறைந்துவிடு

லொக் அவுட் (log out) செய்துமே..!

மீண்டும்...

போதையோடே..

லொக் இன் (log in) செய்தே..

காதல் செய் காதல் செய் இன்ரநெற்றில் காதல் செய்

வெப் கம் (webcam) சில்மிசங்களூடே

வருவார் போவார் எண்ணிக்கை பார்க்காமல்

முடிஞ்சா 10 பேரோடும்..

வேளை தவறாமல் எம் எஸ் என் ஜன்னலில்

காதல் செய் கின்னஸ் சாதனை செய்..!

நீண்டு போச்சுது உன் காதல் கதை..

உடனடியே..

லொக் அவுட் (log out) செய்

இன்ரநெட் பில் (bill) எகிற முதலே..! :o:wub:

(இதை விட அசிங்கமா எல்லாம் நடக்குது.. எழுத்தில எழுத முடியல்ல அவற்றை) :lol:

---------

இந்த இணையக் காதல் செய்யுற கூத்தைப் பாருங்க..

'இணையத்தளம் மூலமாக ஏற்பட்ட காதலுக்கு காதலரின் மனைவி தடையாக இருக்கும் காரணத்தால் அவரை சந்தேகத்துக்கு இடமற்ற முறையிலும்,தடயங்கள் ஏதுமற்ற முறையிலும் கொலை செய்ய ஆள் தேவை.கூலியாக நான்கு இலட்சம் வழங்கப்படும்'என விளம்பரம் கொடுத்த பெண் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் மிச்சான் மாநிலத்தில் 49 வயதுடைய ஆன்மேரி லின்ஸ்காட் என்ற பெண்ணே தனது காதலனை அடைவதற்காக அவரது மனைவியைக் கொலை செய்வதற்கு இவ்வாறு விளம்பரம் கொடுத்துள்ளார்.

இப்பெண்ணுக்கு இணையத்தளம் மூலமாக ஒருவருடன் காதல் ஏற்பட்டது.ஆனால் அவர் ஏற்கெனவே திருமணமானவராக இருப்பதுடன் இவ்விடயம் அவரின் மனைவிக்கும் தெரியாது.

தனது காதலுக்கு காதலரின் மனைவி தடையாக இருக்கிறாரே என்ற கோபத்தால் காதலரின் மனைவியைக் கொலைசெய்ய அப்பெண் திட்டமிட்டார்.

இதற்காக பிரபலமான "கிரைக்ஸ்லிஸ்ட்" இணையத்தளத்தில் விளம்பரம் கொடுத்ததுடன் கொலைசெய்ய வேண்டிய பெண்ணின் பெயர்,முகவரி,படம் என்பவற்றையும் விளம்பரத்தில் கொடுத்தார்.

இவ்விளம்பரத்தைப் பார்த்த அமெரிக்க,பொலிஸ் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் ஆன்மேரியைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதுடன், விசாரணைகளுக்காக கலிபோர்னியா அனுப்பிவைக்க உள்ளனர்.

மூலம்: எம்.ரிஷான் ஷெரீப் அவர்களின் வலைப்பூ.

Edited by nedukkalapoovan

எல்லாருக்கும் வணக்கம்...அட நான் தான் வணக்கம் குருவே என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கோ :o அது தான் நானும் டிபேட்டில கலந்து கொள்ள போறேன் அது தான்...(கொஞ்சம் ஓவரா ரியாக்சன் கொடுத்திவிட்டோமோ :wub: )..

இணையம் மூலம் காதல் செய்வது வெரிகுட்...முதலாவது காரணம் இணையத்தில் வாற காதல் தகுதி பார்த்து வராது என்பது எனது முதலாவது சிந்தனை..(சிந்தனை சரியோ பிழையோ என்று எனக்கே டவுட்டா இருக்கு :lol: )..ஆனாலும் அதிக இணைய காதல்கள் அவ்வாறு தான் அமைய பெறுகின்றன...சில இணைய காதல்கள் பிழையான தகவல்களை காதலிப்பவர்கள் இருவரும் பரிமாறி கொள்வதால் இறுதியில் அது முறிவடையும் நிலைக்கு வருவது உண்மை ஆனாலும் முற்றுமுழுதாக எல்லாவற்றையும் குறை சொல்ல முடியாது :o ..அக்சுவலா நாம இருக்கிற லோகம் வாஸ்ட் மூவிங் லோகம் இப்படியான லோகத்தில..பிகருக்கு பின்னால போய் நின்று கொண்டிருக்க நோ டைம் பாருங்கோ :D சோ இணையத்திற்கு வந்தோமா காதலித்தோமா கடலை போட்டோமா என்று ஈசியா வாழ்கையை கொண்டு போகலாம் பாருங்கோ... :)

காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்து வேஸ் நல்லா இருந்தா வருவது எல்லாம் காதல் இல்லை பாருங்கோ அப்படி பார்க்கும் போது இணையத்தில ஒருவரை ஒருவர் பார்க்காமலே எத்தனையோ காதல்கள் மலர்ந்துள்ளன..(அது தான் நிஜமான காதல்)...அதே நேரம் சில கேஸ் பிரேக்கிலையும் போய் முடிந்திருக்கின்றன ஏனேன்றா கடலை போடக்க தெரியாது காதலி போட்டோவை அனுப்பினா பிறகு முகத்தை பார்த்து போட்டு எல்லாம் போச்சு..(இதை காதல் என்று சொல்ல ஏலாது தானெ)...ஆகவே இதனை நான் பிழையாக எடுத்து கொள்ள முடியாது... :o

அத்தோட இன்னொரு விசயம் சேவ்டி எப்படி தெரியுமா இப்ப குரு போய் ஒருவாவிட்ட காதலை சொல்லுறார் நேரா என்று வையுங்கோவேன் அவா செருப்பை தூக்கி காட்டிட்டாலும் பரவாயில்லை வீட்டை வந்து போட்டு கொடுத்துவிட்டா என்றா...ஆனா இணையத்தில அப்படி எல்லாம் நடக்குமா இல்லை கேட்டு பார்க்கிறது அவா நோ என்றா போடி என்று போட்டு என்னொன்றை பார்கிறது என்ன சுண்டல் அண்ணா நான் சொல்லுறது சரி தானே... :)

அத்தோட முக்கியமான விசயம் காதலித்தா பிறகு காதலியோட இலகுவா கதைத்து கொள்ளளாம் பாருங்கோ...ஏனென்றா போனை எடுத்து கதைத்தா "மம்மி" கேட்பா யாரோட உவ்வளவு நேரம் அலம்புறாய் என்று எல்லாம் ஆனா இணையத்தில என்னவும் செய்யலாம் பாருங்கோ அப்படிபட்ட இணைய காதலை பிழையான கண்ணோட்டத்தில பார்க்க கூடாது என்று கூறி...இணைய காதல் சிறந்தது..சிறந்தது..சிறந்தது என்று கூறி அவையோருக்கு நடுவர்களிற்கு வணக்கத்தினை தெரிவித்து விடைபெறுகின்றேன்...மறுபடி வருவேன் வாதாட.....(திருப்பி வருவானோ என்று யோசிக்கிறியளோ என்ன செய்ய வருவேன் :) )...

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"காதலிற்கு எதுவும் தேவையில்லை அன்பு மட்டும் போதும்"

  • தொடங்கியவர்

காதலர் தினம் 2008: யாழ் பட்டிமன்ற ரசிகப் பெருமக்களிற்கு மீண்டும் அன்பு வணக்கம்!

எமது பட்டிமன்றம் இப்போது சற்று சூடு பிடித்துள்ளது. எனது சீடர்கள் மற்றும் குழுவினர், எதிர்த்தரப்பினர் உட்பட பல வாதங்களை முன்வைத்து உள்ளார்கள். இவற்றிற்கு எனது சுருக்கமான ( :huh: ) பதில்களை உங்கள் முன் வைக்கின்றேன்.

முதலாவதாக, எதிரணியில் உள்ள மதிப்புக்குரிய tamillinux கேட்கின்றார் குஷ்புவை எங்கள் பக்கமும், சிம்புவை தங்கள் பக்கமும் சேர்க்கலாமா என்று... ?? தாராளமாக!!

மேலும், காணாமல் போன அல்லது வஞ்சிக்கப்பட்ட காதலர்களை காரணம் காட்டி இணையக்காதல் கூடாதது என்று சொல்கின்றார். வாசகர்களே, யோசிச்சு பாருங்கள்... நேருக்கு நேர் சந்திக்கின்ற காதலில் கூட வஞ்சிக்கப்படுதல், ஏமாற்றப்படுதல், கடத்தப்படுதல், கொலை செய்யப்படுதல் என்பன வழமைதானே? வழமையாக உள்ள ஒரு விடயம் இணையம் காரணகவே ஏற்படுகின்றது என்பதை கேட்க சிரிப்பாக இல்லையா? உலகில் நல்லவர்களும் உள்ளார்கள், கெட்டவர்களும் உள்ளார்கள். ஆனால், கெட்டவர்கள் இருக்கின்றார்கள் என்பதற்காக நல்லவர்கள் வாழ்க்கையை வாழாது ஒதுக்கிவிட முடியுமா? ஒளிந்துகொள்ளத்தான் முடியுமா?

மதிப்புக்குரிய இல்லத்தரசி செவ்வந்தி அவர்கள் கூட யாழ் களத்தில் வந்து தனது காதலைப்பற்றி எல்லாம் கருத்து எழுதுகின்றார் என்றால், இணையத்தின் மீது அவர் கொண்ட நம்பிக்கைதானே காரணம்? எதற்கும் முதலில் எமக்கு நம்பிக்கை வேண்டும். அவநம்பிக்கையுடன் எதை அணுகினாலும் அது எமக்கு சிக்கலாகவே இருக்கும். உங்களுக்கு முதலில் உங்களில் நம்பிக்கை இருந்தால், பின் இணையத்தின் மீதும் நம்பிக்கை இருந்தால் நிச்சயம் இணையம் மூலம் காதல் செய்வது நல்லதாகவே இருக்கும்.

அடுத்ததாக மதிப்புக்குரிய வாசகன் அவர்களும் எங்கும் நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவர்களும் இருப்பார்கள் என்ற பொதுவான கருத்தை கூறி, "அப்ப நாங்க எப்படி உண்மையான காதலர்களை இணையத்தில் கண்டுபிடிக்கிறது??? " எப்படி கண்டுபிடிக்கின்றது என்ற ஒரு கேள்வியையும் விட்டுச்செல்கின்றார். இந்தக் கேள்விக்கு விடைகாண்பது அவரவர் திறமையைப் பொறுத்து உள்ளது. இணையம் அல்லாத காதலில் எப்படி நீங்கள் உண்மையான காதலர்களை கண்டுபிடிப்பீர்கள்? இதற்குரிய பதிலாக வரக்கூடியவற்றை முதலில் சிந்தித்துப் பாருங்கள்.. நீங்கள் கேட்ட கேள்விக்கு விடை கிடைக்கும்.

அடுத்ததாக எமது தரப்பில் வாதம் செய்யும் மதிப்புக்குரிய தமிழச்சி அவர்கள் "ஒருவரைப் பற்றி எதுவுமே தெரியாமல் கண்டவுடன் காதல் செய்வதிலும் பார்க்க, இணையத்தின் மூலம் ஒருவரையொருவர் அறிந்து காதல் செய்வது நல்லது" என்ற நடைமுறைக்கு சாத்தியமான அருமையான கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

எதிர்த்தரப்பு வாதி மதிப்புக்குரிய டங்குவார் அவர்கள் காதல் வெறும் கத்தரிக்காய் என்றும், இதை நேரடியாகவே கடையில் போய் வாங்கமுடியும் என்றும் இணையத்துக்கு வந்து கஸ்டப்பட்டு டைப் எல்லாம் அடிச்சு பெறத்தேவையில்லை என்றும் ஓர் மூர்க்கத்தனமான பொறுப்பற்ற ஆலோசனை ஒன்றை கூறியுள்ளார். இதே ஆலோசனையை இவர் தனது பிள்ளைகளிற்கு கூறுவாரா? காதல் கத்தரிக்காயா அல்லது புடலங்காயா என்பது அல்ல இந்தப் பட்டிமன்றத்தின் தலைப்பு. இணையம் மூலம் காதல் செய்வது நல்லதா? கெட்டதா? என்பதே! இந்தப் பட்டிமன்றத்திற்கு வாதிட வந்த எதிர்த்தரப்பினருக்கு முதலில் காதல் நல்லதா அல்லது கெட்டதா என்று கூட ஒரு சரியான முடிவுக்கு வரமுடியவில்லை என்பதை நினைக்க வேடிக்கையாக உள்ளது.

மதிப்புக்குரிய திருவாளர் சுவை அவர்கள் இணையத்தின் மூலம் காதல் செய்தாலும், கலியாணம் செய்யும் முன் ஒருவருடன் மற்றையவர் கதைத்து பழகவேண்டும் என்று ஓர் ஆலோசனை கூறி இருக்கின்றார். இது வாஸ்தவமே! ஆனால்.. எமது தற்போதைய பிரச்சனை காதல் சம்மந்தப்பட்டதே! கலியாணம் பற்றியது அல்ல என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். முதலில் மரத்தை நாட்டவேண்டும். இதன்பின்னர்தான் பழம் பறிக்க முடியும். அவசரப்பட்டு என்ன செய்வது?

அடுத்ததாக எதிர்த்தரப்பு பிரச்சாரப் பீரங்கி திருவாளர் நெடுக்காலபோவான் அவர்கள் மிகவும் விசமத்தனமான முறையில் நையாண்டி செய்து கவிதை வேறு ஆக்கியுள்ளார். இந்தக் கவிதையை இப்போது சிறிது ஆராய்ந்து பார்ப்போம்... இதை மீண்டும் நீங்கள் எல்லாரும் ஒருதடவை வாசித்து பாருங்கள்...

லொக் இன் (log in) செய்தே

காதல் செய் காதல் செய் இன்ரநெற்றில் காதல் செய்..

கழற்றி விடு கழன்று விடு கண் மறைந்துவிடு

லொக் அவுட் (log out) செய்தே.!

மீண்டும்...

லொக் இன் (log in) செய்தே

காதல் செய் காதல் செய் பிறிதொன்றை

கழற்றி விடு கழன்று விடு கண் மறைந்துவிடு

ஐடி (ID) யை புளக் (block) செய்தே..!

மீண்டும்..

லொக் இன் (log in) செய்தே....

காதல் செய் காதல் செய் செல்போன் நம்பர் (cell phone number) கொடுத்தே

கழற்றி விடு கழன்று விடு கண் மறைந்து விடு

சிம் காட்டை (SIM card) மாற்றியுமே..!

மீண்டும்..

லொக்கின் (log in) செய்தே

காதல் செய் காதல் செய் டேற்றிங் பிக்ஸ் (dating fix) பண்ணி

கழற்றி விடு கழன்று விடு கண் மறைந்துவிடு

பிசா கட் (pizza hut), மக்டொலாட் (McDonalds), Coffee bar சுத்தி ரா ரா காட்டிடதுமே..!

மீண்டும்..

லொக்கின் (log in) செய்தே

காதல் செய் காதல் செய் கதையளந்தே

கழற்றி விடு கழன்று விடு கண் மறைந்து விடு

காரணங்கள் பல டிஸ்கவர் (Discover) பண்ணியே.

எல்லாம் அலுக்க..

இறுதியில்..

லொக்கின் (log in) செய்தே

கலியாணம் செய் கலியாணம் செய் மற்றிமனியில் (matrimony) தேடியே

கழற்றி விடு கழன்று விடு கண் மறைந்து விடு

கோட்டில் (court) டிவேஸ் (Divorce) செய்துமே.

மீண்டும்...

பழைய குருடி கதவைத் திறவடி கணக்காய்..

லொக்கின் (lon in) செய்தே

காதல் செய் காதல் செய் இன்ரநெற்றில்

போக்கிவிடு போக்கிவிடு பொழுதைப் போக்கிவிடு

கணணியில் கன்னியரோடே (காளையரோடே)

கழற்றி விடு கழன்று விடு கண் மறைந்துவிடு

லொக் அவுட் (log out) செய்துமே..!

மீண்டும்...

போதையோடே..

லொக் இன் (log in) செய்தே..

காதல் செய் காதல் செய் இன்ரநெற்றில் காதல் செய்

வெப் கம் (webcam) சில்மிசங்களூடே

வருவார் போவார் எண்ணிக்கை பார்க்காமல்

முடிஞ்சா 10 பேரோடும்..

வேளை தவறாமல் எம் எஸ் என் ஜன்னலில்

காதல் செய் கின்னஸ் சாதனை செய்..!

நீண்டு போச்சுது உன் காதல் கதை..

உடனடியே..

லொக் அவுட் (log out) செய்

இன்ரநெட் பில் (bill) எகிற முதலே..!

வாசிப்பதற்கு கவிதை மிகவும் சுவையாக உள்ளது. ஆனால் வாசிப்பதற்கு மட்டுமே!

இப்போது பாருங்கள்... தினமும்... ஒவ்வொரு செக்கன்களும் உலகில் குழந்தைகள் பிறக்கின்றன... பிறக்கும் குழந்தைகளில் எத்தனை உடனடியாக இறக்கின்றன? எத்தனை குழந்தைகள் சிறுவயதிலேயே இறக்கின்றன? எத்தனை குழந்தைகள் வாலிபப் பருவத்தில் இறக்கின்றன? எத்தனை குழந்தைகள் திருமண வாழ்வை காணாமலே இறக்கின்றன? அதாவது பிறக்கும் குழந்தைகளில் இறுதியில் மிஞ்சப்போவது... மனித வாழ்வை ஒழுங்காக மகிழ்ந்து அனுபவிக்கப்போவது ஒரு சில குழந்தைகளே!

இதுபோலவே... இணையத்தில் காதல் காதல் என்று நடந்தாலும்... இறுதியில் கலியாணம் வரை சென்று இறுதியில் நீண்டகாலம் தம்பதியராக நிலைக்கபோவது குறிப்பிட்ட தொகையினரே! இதற்கு இணையத்தை குறை சொல்லி குற்றமில்லை. இது இயற்கையின் நியதி! அதாவது எல்லோரும் எல்லாவற்றிலும் வெற்றி பெறுவதில்லை. வெற்றிபெறவும் முடியாது. குறிப்பிட்ட குறிப்பிட்ட தடைகளை எல்லாம் தாண்டி சளைக்காது போராடுபவர்களே இறுதியில் வெற்றிக்கனியை பறிக்கின்றார்கள். இணையத்து காதல் இதற்கு விதிவிலக்கு அல்ல. இணையம் அல்லாத காதலில் கூட தடைகள், சோதனைகள், துன்பங்கள், விபத்துக்கள், ஏமாற்றுக்கள், சுத்துமாத்துக்கள்.. இவை எல்லாம் உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்!

நீங்கள் திடகாத்திரமான... முயற்சியுள்ள, தொடந்துபோராடி வெற்றிபெற வேண்டும் என்ற உந்துசக்தியை கொண்டவர்களாக இருந்தால் நிச்சயம் இணையம் மூலம் நீங்கள் காதல் செய்வது நல்லதே! உங்களிற்கு இணையம் மூலம் காதல் செய்வதோ அல்லது நேரடியாக காதல் செய்வதோ பிரச்சனையாக இருக்காது.

கவனியுங்கள்... எமது வாதம் இணையம் மூலம் காதல் செய்வது நல்லது என்று அடித்துக் கூறுவதேயொழிய இணையம் மூலம் காதல் செய்வது மட்டுமே நல்லது என்று கூறுவது அல்ல!!!

மேலும் திருவாளர். மதிப்புக்குரிய நண்பர் நெடுக்காலபோவான் அவர்கள் உலகில் நடக்கும் சில சம்பவங்களை உதாரணமாகக் காட்டி இணையக் காதல் கூடாதது என்று கூறுகின்றார்!

நாங்கள் இணையத்தில் கூடாத விசயங்கள் இல்லை என்று கூறவில்லையே! தீமையானைவை எங்கும் பரவியுள்ளன. நாம் விழிப்பாக இருந்து எமது காரியங்களில் வெற்றி பெறுவதை குறிக்கோளாக கொள்ளவேண்டுமேயொழிய எம்மைச் சுற்றி தீய விசயங்கள் இருக்கின்றன என்று பயந்துவிட்டு கட்டில் போர்த்துக்கொண்டு படுக்க முடியாது. நாம் வெளியே வந்து போராடி வாழ்ந்து எமது வாழ்க்கையில் வெற்றிபெறவேண்டும். இதுவே முக்கியம்!

இறுதியான எனது அன்புக்குரிய சீடன் அவர்கள் அருமையாக இணையக்காதல் பற்றி சில விசயங்களை விளக்கியுள்ளார். இதை மீண்டும் நீங்கள் எல்லாரும் ஒரு தடவை வாசித்து - கிரகித்து - சிந்தித்து பாருங்கள்...!!

* இணையம் மூலம் காதல் செய்வது வெரிகுட்...முதலாவது காரணம் இணையத்தில் வாற காதல் தகுதி பார்த்து வராது என்பது எனது முதலாவது சிந்தனை. சிந்தனை சரியோ பிழையோ என்று எனக்கே டவுட்டா இருக்கு.. ஆனாலும் அதிக இணைய காதல்கள் அவ்வாறு தான் அமைய பெறுகின்றன...சில இணைய காதல்கள் பிழையான தகவல்களை காதலிப்பவர்கள் இருவரும் பரிமாறி கொள்வதால் இறுதியில் அது முறிவடையும் நிலைக்கு வருவது உண்மை ஆனாலும் முற்றுமுழுதாக எல்லாவற்றையும் குறை சொல்ல முடியாது :wub: ..அக்சுவலா நாம இருக்கிற லோகம் வாஸ்ட் மூவிங் லோகம் இப்படியான லோகத்தில..பிகருக்கு பின்னால போய் நின்று கொண்டிருக்க நோ டைம் பாருங்கோ :wub: சோ இணையத்திற்கு வந்தோமா காதலித்தோமா கடலை போட்டோமா என்று ஈசியா வாழ்கையை கொண்டு போகலாம் பாருங்கோ...

* காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்து வேஸ் நல்லா இருந்தா வருவது எல்லாம் காதல் இல்லை பாருங்கோ அப்படி பார்க்கும் போது இணையத்தில ஒருவரை ஒருவர் பார்க்காமலே எத்தனையோ காதல்கள் மலர்ந்துள்ளன..(அது தான் நிஜமான காதல்)...அதே நேரம் சில கேஸ் பிரேக்கிலையும் போய் முடிந்திருக்கின்றன ஏனேன்றா கடலை போடக்க தெரியாது காதலி போட்டோவை அனுப்பினா பிறகு முகத்தை பார்த்து போட்டு எல்லாம் போச்சு..(இதை காதல் என்று சொல்ல ஏலாது தானெ)...ஆகவே இதனை நான் பிழையாக எடுத்து கொள்ள முடியாது...

* அத்தோட இன்னொரு விசயம் சேவ்டி எப்படி தெரியுமா இப்ப குரு போய் ஒருவாவிட்ட காதலை சொல்லுறார் நேரா என்று வையுங்கோவேன் அவா செருப்பை தூக்கி காட்டிட்டாலும் பரவாயில்லை வீட்டை வந்து போட்டு கொடுத்துவிட்டா என்றா...ஆனா இணையத்தில அப்படி எல்லாம் நடக்குமா இல்லை கேட்டு பார்க்கிறது அவா நோ என்றா போடி என்று போட்டு என்னொன்றை பார்கிறது.

* அத்தோட முக்கியமான விசயம் காதலித்தா பிறகு காதலியோட இலகுவா கதைத்து கொள்ளளாம் பாருங்கோ...ஏனென்றா போனை எடுத்து கதைத்தா "மம்மி" கேட்பா யாரோட உவ்வளவு நேரம் அலம்புறாய் என்று எல்லாம் ஆனா இணையத்தில என்னவும் செய்யலாம் பாருங்கோ அப்படிபட்ட இணைய காதலை பிழையான கண்ணோட்டத்தில பார்க்க கூடாது.

இப்போதைக்கு இவ்வளவு போதும் என்று நினைக்கின்றேன். எதிர்த்தரப்பினரின் வாதங்களை பார்த்து மீண்டும் களம் இறங்கி போராடுவோம் என்று கூறி தற்காலிகமாக விடைபெறுகின்றேன்.

இணையம் மூலம் காதல் செய்வது நல்லது! நல்லது! நல்லது!

நன்றி! வணக்கம்! அப்ப நான் வரட்டா! :lol:

முதலாவது காரணம் இணையத்தில் வாற காதல் தகுதி பார்த்து வராது என்பது எனது முதலாவது சிந்தனை..(சிந்தனை சரியோ பிழையோ என்று எனக்கே டவுட்டா இருக்கு :mellow: )..

காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்து வேஸ் நல்லா இருந்தா வருவது எல்லாம் காதல் இல்லை பாருங்கோ அப்படி பார்க்கும் போது இணையத்தில ஒருவரை ஒருவர் பார்க்காமலே எத்தனையோ காதல்கள் மலர்ந்துள்ளன..(அது தான் நிஜமான காதல்)...

நல்ல கருத்து....

அத்தோட இன்னொரு விசயம் சேவ்டி எப்படி தெரியுமா இப்ப குரு போய் ஒருவாவிட்ட காதலை சொல்லுறார் நேரா என்று வையுங்கோவேன் அவா செருப்பை தூக்கி காட்டிட்டாலும் பரவாயில்லை வீட்டை வந்து போட்டு கொடுத்துவிட்டா என்றா.

பேபி நீங்க நல்ல யாக்கரையாகத்தான் இருக்கீங்க,,,,,,

இப்படி பலரின் அனுபவம் உங்களுக்கு உதவியாக இருக்குது போல...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கு ! இஞ்சை என்ன கணக்குப்பாடமே படிப்பிக்கிறியள் ????????

மனுசனுக்கு ஒரு நாசமறுப்பும் விளங்கேல்லை :mellow::D

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு முன் பதிந்த திரு கலைஞன் (நம்ம பழைய மாப்பு..) அவர்கள் ஒரு விசமத் தனமான பிரச்சாரத்தை காதலுக்கு ஆதரவு என்ற பெயரில் முன்னெடுத்துச் செல்கிறார். காதலென்பதே வேலை மினக்கெட்ட வேலை என்கிறோம். அதற்கு இணையத்தை வீணடிப்பானேன் என்பதே எமது முதல் கேள்வி..

சரி இருக்கட்டும்.. காதல் ஒரு புனிதமான கத்தரிக்காய் என்றே வைத்துக் கொள்வோம். :rolleyes: இரண்டு பேர் இணையத்தின் மூலம் தொடர்பை ஏற்படுத்தி காதலை வளர்த்தார்கள் என்றால் (பார்க்காமலே காதல்..) அது எதிர்ப்பால் மீதுள்ள சாதாரண கவர்ச்சி அன்றி வேறென்ன? :lol: இணையத்தில் டைப் அடிக்கும்போது என்ன புலுடாவும் விடலாம்.. அதாவது அது ஒரு ஏமாற்று வேலை. நேருக்கு நேர் சந்திக்கும் போதே ஆயிரத்தெட்டு பம்மாத்து. இணையத்தில் சொல்லவா வேணும். ஆக அது சரிப்பட்டு வராது.

ஏற்கனவே அறிமுகமாகி பின் இணையம் மூலம் பரிமாறிக் கொள்வது பரவாயில்லை. ஆனால் காதல் என்பதே எதிர்ப் பால் கவர்ச்சி என்று இருக்கும் போது இணையத்தில் டைப் செய்து என்ன பயன். நேர விரயம் இல்லையா? மனதில் ஒரு நோக்கத்தை வைத்துக்கொண்டு ஏன் புலுடா விடுவது? ஓப்பிணா மேட்டரைச் சொல்லி நேருக்கு நேர் டீல் பண்ணினால்தானே பலன் அதிகம். :unsure: அதைவிட்டுட்டு புனிதமான காதல் அது இது என்று டைப் அடிப்பதில் எமக்கு உடன்பாடு இல்லை. அது பகல் வேசம்..

நேருக்கு நேர் சந்திக்கும்போது சிலசமயங்களில் கண்ணைப்பார்க்கும்போதே கள்ளம் செய்வது பிடிபட்டு விடும். இணையத்தில் வெறும் டைப் அடிப்பதால் கள்ளம் பிடிபட சான்ஸ் குறைவு. எனவே இணையக் காதல் கூடவே கூடாது. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.