Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்கு அடம்பனை இராணுவம் பிடித்து விட்டதாம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓயாத அலைகள் 3 இன் போது கைப்பெற்றப்பட்ட தெற்கு அடம்பன் உள்ளிட்ட பகுதிகளை இராணுவம் மீளக் கைப்பெற்றி தொடர்ந்து மன்னார் நகரில் இருந்து வடக்கு நோக்கி முன்னேறி வருவதாக இராணுவப் பேச்சாளரை மேற்கோள் காட்டி டெயிலி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது..!

mannarva8.jpg

இச்சண்டையில் 12 புலிகளின் உடலங்களை தாங்கள் கண்டிருப்பதாகவும் இராணுவத்தில் 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும் இராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது.

கள முனையில் இராணுவத்தின் முன்னேற்றங்களை விடுதலைப்புலிகள் நேரடியாக ஒப்புக்கொள்ளா விட்டாலும்.. செய்திகளில் மோதல்கள் நடக்கும் இடங்களின் பெயர்களை மாற்றி வருவதை அவதானிக்கலாம். உயிலங்குளத்தில் ஆரம்பித்த சண்டை அப்புறம் பாப்பாமோட்டை.. பாலக்குழி வரை தொடர்ந்து இப்போ அடம்பன் வரை நகர்ந்திருக்கிறது. இது இராணுவம் சிறுகச் சிறுக முன்னேறி வருவதையே காட்டுகிறது..!

இராணுவம் விடத்தல் தீவை இலக்கு வைத்து இந்த நகர்வுகளை அதற்கு அதிகம் இழப்பு ஏற்படாத வகையில் செய்து வருகிறதாகவே தென்படுகிறது. :D

Edited by nedukkalapoovan

ஜெயசுக்குருவில மாங்கு மாங்கு எண்டு மாதக்கணக்காக கஸ்டப்பட்டு பிடிக்க அதை 2 நாளில மீட்ட மாதிரி உதுகளை பிடிக்கலாம். உது பெரிய விசையமில்லை.

இராணுவம் இழப்பை குறைத்த படி நகருது எண்டு சொல்லாதேங்கோ. அவங்களுக்கு முந்தினதை விட அதிக இழப்புகள் ஆனால் காட்டுக்குள்ளை புதைச்சு மறைக்கிறாங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயசுக்குருவில மாங்கு மாங்கு எண்டு மாதக்கணக்காக கஸ்டப்பட்டு பிடிக்க அதை 2 நாளில மீட்ட மாதிரி உதுகளை பிடிக்கலாம். உது பெரிய விசையமில்லை.

இராணுவம் இழப்பை குறைத்த படி நகருது எண்டு சொல்லாதேங்கோ. அவங்களுக்கு முந்தினதை விட அதிக இழப்புகள் ஆனால் காட்டுக்குள்ளை புதைச்சு மறைக்கிறாங்கள்.

புலம்பெயர்ந்துள்ளவையை நீங்கள் நல்லாத்தான் மேய்க்கிறீங்க. :D

இராணுவத்தின் சுடுதிறன் பல மடங்கு அதிகரித்திருப்பது வெளிப்படை. அந்த வகையில் அதன் முன்னேற்றங்களுக்கு சாத்தியம் உண்டு. அதேபோல் கள நிலவிரத்தை மாற்றியமைக்கக் கூடிய பலம் புலிகளிடம் இல்லை என்பது சரத்பென்செக்காவின் கணிப்பீடு போன்றது..! :D

  • கருத்துக்கள உறவுகள்

SLA suffers casualties in Mannaar clashes - LTTE

[TamilNet, Friday, 08 February 2008, 09:23 GMT]

At least 13 Sri Lanka Army soldiers were killed and 28 wounded in the last 3-days clashes in Mannaar district and the border areas of Vavuniyaa, according to LTTE's Operations Commands in the region. On Tuesday, 6 SLA soldiers were killed when the SLA launched a ground push, attempting to advance towards Adampan, Tigers said. At least 26 SLA soldiers were wounded in direct clashes that lasted for almost for 4 hours. Seven SLA soldiers were gunned down by Tiger snipers on Wednesday and Thursday in Paalaikkuzhi area. In the meantime, two covert operations by SLA infiltration teams were thwarted while they were engaged in placing Claymore bombs in Valaiyankaddu and Pa'ndivirichchaan areas.

Intense fighting raged from 9:30 a.m. till 1:30 p.m. on Tuesday when SLA launched a ground push, targeting Adampan.

On the same day, an SLA DPU team that had managed to penetrate into Valaiyankaddu area was detected and counter-attacked by an LTTE patrol at 9:15 a.m. The DPU team was lying ready to ambush, after placing Claymore bombs, narrowly managed to escape from the area, sustaining wounds. Three Claymore mines, remote control devices and batteries were recovered from the site, the Tigers said. The LTTE detected another DPU team in Pa'ndivirichchaan in the evening around 4:30. Following a clash, the DPU team withdrew towards SLA positions.

Tiger snipers gunned down four SLA soldiers in Paalaikkuzhi Wednesday between 8:00 and 9:30 a.m. One SLA soldier was wounded. Three more SLA soldiers were killed and another wounded in a similar sniper attack in Paalaikkuzhi on Thursday between 10:15 and 11:00 a.m.

SLA staged two intensive artillery attacks directed towards Mu'l'likku'lam , Mannar. The first attack beginning from 5.30 a.m. lasted an hour followed by another attack from 9:45 a.m. lasting till 11:00 a.m. The was no LTTE casualties in the artillery attacks.

On Thursday afternoon, another artillery barrage was staged by SLA at 2:50 p.m. targeting Paalamoaddai area.

An LTTE commander engaged in the defensive operations in Mannaar district, told reporters in Vanni that the SLA has been deploying artillery barrage aiming to inflict heavy casualties among the Tigers. However, Tigers have been successful in deploying counter measures in minimizing casualties, while inflicting casualties among the SLA soldiers, he said briefing media on the situation in Mannaar.

what they captured again???? here look at this came in 16Dec2007

Security News | Sundayobserver.lk - Sri Lanka... the land captured by the Security forces in the South of Adampan in the Manthai, Narikkulama and Parappakandal. ... www.defence.lk · www.helpheroes.lk/ ...

www.sundayobserver.lk/2007/12/16/sec01.asp - 34k - Cached - Similar pages

http://www.sundayobserver.lk/2007/12/16/sec01.asp

நான் கூகளில அடம்பன் எண்டு போட்டு தேடினதிலை இப்ப ஒரு 7தரமாவது தெற்கு அடம்பனை இராணுவம் பிடிச்சது எண்டு செய்தி வந்தது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னாரில் சிறீலங்காப் படையினரின் இரு முனை முன்னகர்வுகள் முறியடிப்பு

மன்னாரில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட இரு முனை முன்னகர்வு முயற்சிகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 1.50 மணியளவில் கனரக ஆயுதங்கள் சகிதம் மன்னார் சின்னப் பண்டிவிரிச்சான் பகுதி ஊடாக சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

pathivu

ஒரு மணிநேரம் நடைபெற்ற முறியடிப்புச் சமரின் பின்னர் சிறீலங்காப் படையினர் பலத்த இழப்புகளுடன் தமது பழைய நிலைகளுக்குப் பின்வாங்கிச் சென்றனர்.

முறியடிப்புச் சமரின் போது விடுதலைப் புலிகளால் வெடிபொருகட்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.

இதேபோன்று நேற்று வியாழக்கிழமை 2 மணியளவில் மன்னார் வலையன்கட்டுப் பகுதி ஊடாக சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட மற்றொரு முனை முன்னேற்ற முயற்சியும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

30 நிமிடம் நடைபெற்ற முறியடிப்புச் சமரையடுத்து சிறீலங்கா படையினருக்கு அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

சரத்பொன்சேக்காவின் கணிப்பீடுகள் என்று சொல்லி நாங்கள் நக்கலடிக்கும் சில விடையங்கள் அவரது பதவி நிலையால் வரும் நிர்ப்பந்தத்தில் சொல்லப்படுபவை.

இந்த நிர்ப்பந்தம் எந்த ஒரு அமைப்பிலும் உயர் பதிவியில் இருப்பவர்களிற்கு உள்ளது. அமொரிக்காவின் முன்னாள் தூதுவர் இளைப்பாறிய பின்னர் புலிகளை வாசிங்ரன் மாநாட்டிற்கு அழைக்காதது தவறு தடை செய்தது தவறு என்றது முதல் சிறீலங்கா பிரதமநீதியரசர் சொன்னது சரத் முனசிங்க சொன்னது என்று அடுக்கிக் கொண்டு போகலாம்.

அதேபோல் கிழக்கு மாகாணத்தின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர்கள் 2005 2006 சொன்ன பல விடையங்களை கணிப்பீடுகளாக கொள்ளலாம். ஏன் தமிழர் தரப்பின் ஏனைய பிரமுகர்கள் 2005 முன்னரும் பல கணிப்பீடுகள் சொன்னவை 2007 இலும் பல சொல்லப்பட்டன.

கள நிலமை யதார்த்தம் எப்படியிருந்தாலும் தமிழருக்கு போராட்டத்தில் நம்பிக்கையோடு இருக்க வேணும் தேசியம் என்ற வரையறைக்குள் கருத்துக்கள் சொல்ல வேண்டும் என்பது போல் பொன்சேக்காவுக்கும் அமெரிக்க தூதுவருக்கும் ஏன் மகிந்தவிற்கும் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவுக்கும் அவரவர் பதவி நிலைகள் அதை மய்யப்படுத்திய கொள்கைகள் விதிகள் என்ற வரையறைகள் நிர்ப்பந்தங்களிற்குள் கருத்துக்கள் கணிப்பீடுகள் சொல்ல வேண்டியிருக்கும்.

எல்லாத் தரப்பு பிரமுகர்களும் உண்மைகளை ஓரளவேனும் தெரிந்து கொண்டாலும் தமது நம்பிக்கை கொள்கை நிர்ப்பந்தங்களின் அடிப்படையில் இயங்குகிறார்கள் வெளிப்படையாக கருத்துக் கூறுகிறார்கள். இவற்றை ஒவ்வொரு தரப்பும் தமது வசதிக்கு ஏற்ப கணிப்பீடு பிழைச்சுப் போச்சு என்று எதிர்வினைப் பிரச்சாரம் செய்து பொழுது போக்காட்டலாம். அதற்கு அப்பால் ஒண்டும் நடக்கப் போவதில்லை.

ஆனால் இந்த போலியான தமது எதிர்வினைப் பிரச்சாரத்தில் தாமே நம்புவது தான் ஆபத்தானது. அதுவும் ஒன்றும் இல்லாது இருக்கும் ஒரு தரப்பு உருவாக்குவதற்கும் கட்டியெழுப்புவதற்கும் ஏகப்பட்ட விடையங்கள் உள்ள ஒரு தரப்பு இப்படியான மாயயை நம்புவதால் யாருக்கு என்ன பயன்?

மேலதிகமாக உள்ள (தமிழர் பகுதிகளையும் ஆக்கிரமித்திருக்கும் சிங்களத்) தரப்பு தமது போலியான பிரச்சாரத்தினை நம்பி ஏமாந்தாலும் அதிகப்படியாக இழக்கப்போவது எல்லாத்தையும் அல்ல மேலதிகமானதை மட்டும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா நீன்ட நாட்களுக்குப் பின் நக்கல்நளினம் இல்லாமல் நல்லதொரு பதிவு.நன்றி குறுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

அடம்பன் தெற்கில் கடும் மோதல் இரு இராணுவ அதிகாரிகள் பலி

2/8/2008 8:26:49 PM

வீரகேசரி நாளேடு - நேற்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற இம்மோதலானது சுமார் ஒன்றரை மணிநேரம் வரையில் நீடித்ததாகவும் விடுதலைப் புலிகளின் தாக்குதலை முறியடித்ததாகவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.

இம்மோதலின் போது காயமடைந்த இராணுவ அதிகாரிகள் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக இராணுவ பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இச்சண்டையில் 12 புலிகளின் உடலங்களை தாங்கள் கண்டிருப்பதாகவும் இராணுவத்தில் 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும் இராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது.

தெற்கு அடம்பன் பகுதியை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக சொல்லும் படையினரால் தாம் கண்ட புலிகளின் உடல்களை ஏன் கைப்பற்ற முடியாமல்போனது?

பாதுகாப்பு அமைச்சு, தேசியப் பாதுகாப்பு ஊடக நிலையம் ஆகியவற்றின் இணையத்தில் இந்த மோதலில் 12 புலிகள் கொல்லப்பட்டதாக மாத்திரம் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 12 உடல்களைக் கண்டதாகவோ அல்லது அந்த உடல்களைக் கைப்பற்றியதாகவோ எந்தச் செய்தியும் வெளியிடப்படவில்லை.

மின்னல் அண்ணை அப்ப நீங்கள் ஒவ்வொரு முறையும் இத்தனை சிறீலங்கா இராணுவம் பலி இத்தனை காயம் எண்டு ஏதோ ஒவ்வொண்டா எண்ணினா மாதிரி சொல்லுவியளே? அதை ஏன் எண்ணிப் போட்டு விட்டனீங்கள் கைப்பற்றி காட்சிப்படுத்திப் போட்டு கைய்யளிக்கலாமே?

களமுனையில ஆங்காங்கே சிதறிக் கிடக்கு எண்டெல்லாம் அறிக்கை விடுவியளே. குளோசப் இல்லாட்டியும் லோங் சொட்டாகத்தன்னும் ஆதாரத்துக்கு 2...3 படங்கள் விடலாமே?

மின்னல் அண்ணை அப்ப நீங்கள் ஒவ்வொரு முறையும் இத்தனை சிறீலங்கா இராணுவம் பலி இத்தனை காயம் எண்டு ஏதோ ஒவ்வொண்டா எண்ணினா மாதிரி சொல்லுவியளே? அதை ஏன் எண்ணிப் போட்டு விட்டனீங்கள் கைப்பற்றி காட்சிப்படுத்திப் போட்டு கைய்யளிக்கலாமே?

களமுனையில ஆங்காங்கே சிதறிக் கிடக்கு எண்டெல்லாம் அறிக்கை விடுவியளே. குளோசப் இல்லாட்டியும் லோங் சொட்டாகத்தன்னும் ஆதாரத்துக்கு 2...3 படங்கள் விடலாமே?

அண்ணை இப்படிக்கேட்டு என்ர வாயை அடைச்சுப்போட்டியள்.

புலம்பெயர்ந்துள்ளவையை நீங்கள் நல்லாத்தான் மேய்க்கிறீங்க. :D

இராணுவத்தின் சுடுதிறன் பல மடங்கு அதிகரித்திருப்பது வெளிப்படை. அந்த வகையில் அதன் முன்னேற்றங்களுக்கு சாத்தியம் உண்டு. அதேபோல் கள நிலவிரத்தை மாற்றியமைக்கக் கூடிய பலம் புலிகளிடம் இல்லை என்பது சரத்பென்செக்காவின் கணிப்பீடு போன்றது..! :unsure:

சுடுபடைத்திறன் இராணுவத்திற்கு அதிகமிருப்பின் முன்னேற்றங்கள் விரைவாயிருக்க வேண்டுமே. ஏன் மன்னார் கள முனையில் விடத்தல் தீவினைக் கைப்பற்றுவதற்கு இவ்வளவு தாமதம்.. களத் தமிழர்களையோ புலம்பெயர்ந்த ஈழத்தமிழரையோ ஏய்ப்பது அவ்வளவு எளிதல்ல. ஏய்ப்பவர்கள் ஏமாளிகளாகி விடுவார்கள். :D

மன்னார் மற்றும் வவுனியா பகுதியில் கடந்த மூன்று நாள் இடம்பெற்ற சன்டையில் 13 படையினர் பலி

மன்னார் மாவட்டத்திலும் வவுனியா எல்லைப்பகுதியிலும் கடந்த மூன்று தினங்களாக விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 13 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 28க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை மன்னார் அடம்பன் பகுதியில் விடுதலைப்புலிகளின் அணிக்கும் படையினருக்கும் இடையில் நான்கு மணித்தியாலம் இடம்பெற்ற நேரடி கடும் சமரின் போது 6 படையினர் கொல்லப்பட்டதுடன் 26 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

இதேபோன்று கடந்த புதன் கிழமை மற்றும் நேற்று வியாழக்கிழமை மன்னார் பாலைக்குழி பிரதேசத்தில் விடுதலைப்புலிகளின் சினைப்பர் தாக்குதல் அணிமேற்கொண்ட தாக்குதல் மற்றும் இதேநாளில் வேலயன்காடு மற்றும் பண்டிவிருச்சான் பகுதிகளின் இருமுனைகளில் முன்னேரிய இராணுவ ஆழ ஊடுருவும் படையணியுடனான மோதலில் 7 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து இப்பகுதியில் விடுதலைப்புலிகளின் அணிகள் மேற்கொண்ட தேடுதலின் போது 3கிளேமோர் குண்டுகள்,தூரத்தில் இருந்து இயக்கும் கருவி,பற்றறிகள் என்பனவற்றை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.

http://www.tamilwin.net/

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த செவ்வாய்க்கிழமை மன்னார் அடம்பன் பகுதியில் விடுதலைப்புலிகளின் அணிக்கும் படையினருக்கும் இடையில் நான்கு மணித்தியாலம் இடம்பெற்ற நேரடி கடும் சமரின் போது 6 படையினர் கொல்லப்பட்டதுடன் 26 படையினர் படுகாயமடைந்துள்ளனர்

இதன் அர்த்தம் என்ன???

அடம்பனுக்கு வந்தாச்சு என்றா???

இந்த இடங்களைத்தெரிந்தவர்கள் தயவுசெய்து சொல்லுங்களேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெற்கு அடம்பன் பகுதியை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக சொல்லும் படையினரால் தாம் கண்ட புலிகளின் உடல்களை ஏன் கைப்பற்ற முடியாமல்போனது?

பாதுகாப்பு அமைச்சு, தேசியப் பாதுகாப்பு ஊடக நிலையம் ஆகியவற்றின் இணையத்தில் இந்த மோதலில் 12 புலிகள் கொல்லப்பட்டதாக மாத்திரம் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 12 உடல்களைக் கண்டதாகவோ அல்லது அந்த உடல்களைக் கைப்பற்றியதாகவோ எந்தச் செய்தியும் வெளியிடப்படவில்லை.

இராணுவ இணையத்தளச் செய்தியில் சொல்லப்பட்டிருந்தது. அதை குறிப்பிட்டிருக்கிறேனே..! :D

22 SLA killed in Paalaikkuzhi fighting - LTTE

[TamilNet, Friday, 08 February 2008, 18:12 GMT]

Liberation Tigers Operations Command in Mannaar Friday said at least 22 Sri Lanka Army soldiers were killed in two separate counter-attacks in Paalaikkuzhi, thwarting a fresh drive by the SLA in its attempt to move towards Adampan. More than 11 SLA soldiers were killed in direct combat which lasted for almost 8 hours. Later, the Tigers launched another attack on the SLA troops that had pulled back, killing 11 more soldiers in sniper fire in no-man area. Meanwhile, Sri Lanka Air Force helicopter landed at least six times to airlift the wounded soldiers.

Fighting raged from 9:00 a.m. till 3:30 when SLA attempted to advance through Paalaikkuzhi. Sustaining heavy casualties, the SLA hastedly abandoned the operation leaving behind military hardware at 3:30 p.m. Assault rifles, rounds and holsters were seized by the LTTE.

Tigers also mounted another attack on the withdrawing SLA soldiers in which 11 more soldiers were gunned down in no-man area between 3:30 p.m. and 6:00 p.m. The SLA was mounting close range mortar attacks to enable their troops to locate their dead bodies.

Tiger casualties were minimum, no cadre was killed in two days fighting in Mannaar, according to the LTTE Operations Command.

In the meantime, SLA was forced to abandon another attempt to advance in Pa'ndivirichchaan on Friday after two hours of intense fighting from 1:30 p.m.

Four-hundred PK-LMG rounds, four RPG shells, and hundreds of various other rounds with holsters were seized by the Tigers from the SLA troops in Pa'ndivirichchaan.

The SLA had advanced into LTTE territory in Pa'ndivirichchaan Thursday afternoon following a two-hour clash. But, the SLA was pulled back when LTTE formations mounted a counter-attack that lasted for 15 minutes on Thursday. Three RPG shells, Two-hundred-and-thirty PK-LMG rounds and four-hundred AK rounds were seized by the Tigers. The SLA was pushed back at 2:30 p.m.

Another fighting was reported at Vi'laaththikku'lam on Thursday between 4:30 and 5:30 p.m. The SLA has suffered casualties at Vi'laaththikku'lam, the Tigers said adding exact casualty figures were not available.

செய்தித் தலைப்பும் அதுதானே. தெற்கு அடம்பனை இராணுவம் பிடித்து, விட்டதாம்.

எல்லாரும் திருக்கேதீஸ்வரத்தானைக் கும்பிடுங்கோ கடவுள் ஒரு நாளும் எங்களைக் கைவிடார். அடம்பன் விழாட்டி அடுத்த சமாதான காலத்தில வந்து பால்க்காவடி எடுக்கிறன் எண்டு நேத்திக்கடன் வைய்யுங்கோ. 58 ஆவது படையணி விடத்தல் தீவை அடைய முதல் சிதைக்கப்பட்டால் 108 பிரதட்டை செய்யிறன் எண்டு நேருங்கோ. இதுவும் அடுத்த சமாதான காலத்தில நிறைவேற்றலாம். அடம்பனுக்கை வைச்சே 58 ஆவது படையணியின்ரை கதையை முடிச்சா திருவாசி காளாஞ்சி வேல் பஞ்சாராத்தி எண்டு வஞ்சகமில்லாமல் இப்பவே உபயம் செய்யிறம் பிறகு சமாதான காலத்தில வந்து காவடி எடுக்கிறம் எண்டு நேத்திக்கடன் வைய்யுங்கோ. எல்லாம் வெற்றியா முடியும் ஒண்டுக்கும் கடுமையா யோசிக்காதேங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் திருக்கேதீஸ்வரத்தானைக் கும்பிடுங்கோ கடவுள் ஒரு நாளும் எங்களைக் கைவிடார். அடம்பன் விழாட்டி அடுத்த சமாதான காலத்தில வந்து பால்க்காவடி எடுக்கிறன் எண்டு நேத்திக்கடன் வைய்யுங்கோ. 58 ஆவது படையணி விடத்தல் தீவை அடைய முதல் சிதைக்கப்பட்டால் 108 பிரதட்டை செய்யிறன் எண்டு நேருங்கோ. இதுவும் அடுத்த சமாதான காலத்தில நிறைவேற்றலாம். அடம்பனுக்கை வைச்சே 58 ஆவது படையணியின்ரை கதையை முடிச்சா திருவாசி காளாஞ்சி வேல் பஞ்சாராத்தி எண்டு வஞ்சகமில்லாமல் இப்பவே உபயம் செய்யிறம் பிறகு சமாதான காலத்தில வந்து காவடி எடுக்கிறம் எண்டு நேத்திக்கடன் வைய்யுங்கோ. எல்லாம் வெற்றியா முடியும் ஒண்டுக்கும் கடுமையா யோசிக்காதேங்கோ.

யோ குறுக்கு முன்னாலை உள்ள காளிகோயில்லை கதிரவேலுவிட்டை புக்கைக்கு கையை நீட்டினது மறந்து போச்சுதோ :D:D

மன்னாரில் இராணுவம் இருக்கும் நிலை...

adampan_area.JPG

  • கருத்துக்கள உறவுகள்

களத் தமிழர்களையோ புலம்பெயர்ந்த ஈழத்தமிழரையோ ஏய்ப்பது அவ்வளவு எளிதல்ல. ஏய்ப்பவர்கள் ஏமாளிகளாகி விடுவார்கள். :D

உண்மைதான்.. காசு கொடுத்தவர்களுக்காகவாவது பிரதேசங்களை இராணுவம் கைப்பற்ற விடமாட்டார்கள்.. தப்பித்தவறி இராணுவம் விடத்தல்தீவைப் பிடித்தால், காசைக் கொடுத்தவர்கள் வட்டியோடு திருப்பித்தா என்றல்லவா நிற்பார்கள்!

அடம்பனை நோக்கிய முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிப்பு: 22 படையினர் பலி!

மன்னார் அடம்பனை நோக்கிய சிறீலங்காப் படையினரின் முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. முறியடிப்புத் தாக்குதலின் போது 22 படையினர் மேல் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயடைந்துள்ளனர்.

தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட கட்ளைப் பீடம் தெரிவிக்கையில்...

நேற்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில், சிறீலங்காப் படையினர் கனரக ஆயுதங்கள் சகிதம், அடம்பனை நோக்கி பாலக்குழி ஊடாக மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாள 8 மணி நேரம் இப்பகுதியில் கடும் சமர் இடம்பெற்றுள்ளது.

இந்த முறியடிப்புத் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 11 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் கடும் எதிர்த்தாக்குதலை அடுத்து அங்கிருந்து தப்பியோடி படையினர் மீது விடுதலைப் புலிகளின் குறி சூட்டு அணியினர் நடத்தி குறி சூட்டுத் தாக்குதலில் 11 படையினருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர்.

காயமடைந்த படையினரை ஏற்றிச் செல்ல ஆறு தடவைகள் உலங்கு வானூர்திகள் தரையிறங்கிச் சென்றதாகவும் விடுதலைப் புலிகளின் மன்னார் கட்டளைப் பீடம் மேலும் தெரிவித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு கால ராணுவ நடவடிக்கைகளில் ராணுவம் சிறிதளவேனும் முன்னேறித்தான் இருக்கிறது. போர் நடக்கும் களமுனைகள் மாற்றமடைந்துவருவதும் இதை ஊர்ஜிதப்படுத்துகிறது. பாரிய மரபுவழி ராணுவ நடவடிக்கை ஒன்றை நீண்ட காலத்துக்கு ஒரே இடத்தில் தடுத்து வைத்திருப்பது என்பது கடிணம்தான். 1997 இல் ஜயசிக்குறு படையணிகள் மாங்குளம் வரை முன்னேறி புலிகளின் பின்கதவைத் தட்டியதும் நினைவிருக்கு. ராணுவத்தின் முன்னேற்றம் என்பது அது கொடுக்க விரும்பும் விலையில் தங்கியிருக்கிறது. தடுத்து நிறுத்தும் சமருக்கும் தற்காப்புச் சமருக்கும் வேறுபாடு உண்டு. ஒன்று எதிரியை முன்னேற விடாதபடி தாக்குதல் நடத்துவது, மற்றயது ராணுவத்தின் முன்னகர்வின் வேகத்தைக் குறைத்தபடி அதிக இழப்பில்லாமல் பின்வாங்குவது.

இப்போது மன்னாரில் நடப்பது இவை இரண்டும்தான். தெற்கு அடம்பனில் ராணுவம் சில நாட்களுக்கும் முன்னர் கைப்பற்றியிருந்த ஒரு பகுதியை விட்டு அது தற்காலிகமாக பின்வாங்கியிருக்கிறது. ஆனால் அதன் முன்னேற்றம் கைவிடப்பட்டது என்பதல்ல இதன் அர்த்தம். தமிழ்நெட்டிலும் இதுதான் கூறப்பட்டிருக்கிறது.

புலிகளின் ஆள், ராணுவ வளங்களின் அடிப்படையில்தான் அவர்களின் எதிர்த்தாகுதலின் வீரியமும் இருக்கும். சாதகமில்லாத களமுனை ஒன்றில் பலம் பொருந்திய சிறிலங்காவின் மரபு வழி ராணுவத்தைச் சந்திக்க புலிகள் விரும்பப்போவதில்லை. களம் தமக்குச் சாதாகமாகத் திரும்பும்வரை புலிகள் தற்காப்புச் சமரைத்தான் செய்யவேண்டி இருக்கும். எமது எதிர்பார்ப்புகளுக்காக புலிகள் சாதகமில்லாத இடமொன்றில் தமது ஆள் ஆயுத வளங்களை இழப்பது என்பது அநியாயம்.இது நடக்கப்போவதுமில்லை.

அடம்பன் தெற்கில் கடும் மோதல் இரு இராணுவ அதிகாரிகள் பலி

வீரகேசரி நாளேடு - நேற்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற இம்மோதலானது சுமார் ஒன்றரை மணிநேரம் வரையில் நீடித்ததாகவும் விடுதலைப் புலிகளின் தாக்குதலை முறியடித்ததாகவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.

இம்மோதலின் போது காயமடைந்த இராணுவ அதிகாரிகள் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக இராணுவ பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.