Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புது தமிழ் தொலைக்காட்சி

Featured Replies

A new Tamil channel has started test transmissions on Eurobird 9 (9 degree East): 11.785, Horizonyal, SR 27.500 and fec 3/4 - free-to-air. The channel is called Euro Television, and it is believed to be a TV channel from Swiss.

தகவலுக்கு நன்றி கிருபன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போறபோக்கை பாக்க கோப்பயை கொஞ்சம் திருப்போணும் போலை கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

போறபோக்கை பாக்க கோப்பயை கொஞ்சம் திருப்போணும் போலை கிடக்கு.

சாப்பிடுற கோப்பையா :huh:

நல்ல தகவல், யூரோப் கோப்பைகள் மாத்திரம் தான் வேலைசெய்யுமோ உதுக்கு? இல்லாட்டி கனடா, அமெரிக்கா கோப்பைகளையும் பாவிச்சு இதப் பாக்கலாமோ?

  • தொடங்கியவர்

Zee TV Russia. ARY One World and ARY QTV have started free-to-air on Eurobird (9 degree East): 11.843, Vertical, SR 27.500 and fec 3/4. Allready on same frequency you can watch ARY The Musik free-to-air.

Zee TV Russia. ARY One World and ARY QTV have started free-to-air on Eurobird (9 degree East): 11.843, Vertical, SR 27.500 and fec 3/4. Allready on same frequency you can watch ARY The Musik free-to-air.

Eurobird 9 சற்லைற் என்ற பெயரே deck koder ல் இல்லையே. அப்ப என்ன செய்வது

Eurobird 9 சற்லைற் என்ற பெயரே deck koder ல் இல்லையே. அப்ப என்ன செய்வது

உதுக்கெல்லாம் ஒரே தீர்வு... கிருபாகரன் அண்ணை எந்த நாட்டில இருக்கிறார் எண்டு கண்டுபிடியுங்கோ. நான் முதலில அவர் இணைக்கிற வண்ணத்திரை செய்திகள பார்த்துவிட்டு இந்தியா எண்டு நினைச்சன். இப்ப யூரோப்போ இல்லாட்டி ஆபிரிக்காவோ எங்க இருக்கிறார் எண்டு தெரியவில்ல.

அவர் இணைக்கும் செய்திகளை எங்க இருந்து பெறுகின்றார்? ஏன் செய்தி மூலம் போடுவதில்லை. இல்லாட்டி கிருபா அண்ணை சி.என்.என் மாதிரி ஏதாவது சுயமா மீடியா சனல் ஏதும் வச்சு இருக்கிறாரோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சை போனால் விவரமாய் எல்லாத்தையும் அறியலாம் :D

http://www.lyngsat.com/europe.html

Eurobird (9 degree East) இல் தான் ஏற்கனவே TRTயின் DAN தொலைக்காட்சியும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இன்றுவரை நான் முயற்சித்துப் பார்த்தேன். 11.785, Horizonyal, SR 27.500 and fec 3/4 என்ற அலைவரிசையில் எந்தத் தொலைக்காட்சியும் வரவில்லை.

இங்கு சென்று பார்க்கவும்

http://en.kingofsat.net/tv-9E.php

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 9 பாகையில் ருபவாகினி , மற்றும் சிங்கள இணையதளங்களும் வேலை செய்வதாக அறிந்தேன். பட் பரீட்சித்து பார்க்க வில்லை

eurotelevision.jpg

புது தமிழ் தொலைக்காட்சி ஒண்டு வெகுவிரைவில வர இருக்குதாம். அதுக்கான பரீ்சார்த்த ஒளிபரப்புத் தானாம் இப்ப Eurobird 9 இல வருகுதாம். ஐரோப்பிய தொலைக்காட்சி (Euro Television) எண்ட பேரில வர இருக்குதாம். வெகு விரைவில வருமாம். கன நாள் இல்லை. அநேகமா இந்த மாதமளவில தொலைக்காட்சி புதுப்பொலிவுடன் வருமாம். தொலைக்காட்சி துறையில அறிவும் நீண்டகால அனுபவமும் உள்ள தொழில்நுட்பவியலாளர்கள் கலைஞர்கள் எல்லாம் இதில இணைஞ்சு பணியாற்றுகினமாம். ஐரோப்பிய தமிழாக்களுக்கு மட்டுமில்ல உலகத் தமிழாக்களுக்கு அறிமுகமான பல கலைமுகங்கள் இதுக்குள்ள இருக்கினமாம்.

இதோ வாறம் அதோ வாறம் எண்டு மக்களிட்ட எதிர்பார்ப்ப ஏற்படுத்தி ஏமாத்தாம.... 'இதோ வந்திட்டம் இனிக் கொண்டாட்டம்' எண்டு வரப்போகினம் எண்டு நினைக்கிறன். அதால தான் சத்தமில்லாமல் ஆர்ப்பாட்டமில்லாமல் அதிமேதாவித்தனமான அறிவுப்புகள் இல்லாமல் வீரவசனப் பேச்சுகள் இல்லாமல்... அமைதியா அடக்கமா செயல் திறனோட வேலைசெய்து இப்ப மக்களிட்ட வரப்போகினம் போல இருக்கு. பாப்பம் இவையாவது தமிழ்ச் சூழலில வித்தியாசமான ஒரு ஊடகமா புதுமையான தொலைக்காட்சியா திகழுவினமா எண்டு. எனக்கென்னவோ நம்பிக்கை இருக்கு. நான் கேள்விப்பட்ட தகவல்கள பாக்கேக்க 'இது புதுசு' எண்டு தான் தோணுது.

நமக்காய்... நமக்கே நமக்காய்... நம்மவர் படைப்புகளோடு வருமாம். இந்திய தயாரிப்பு நிகழ்ச்சியள் இல்லாமல் எங்கட தயாரிப்புகளுக்கு முன்னுரிமை குடுக்கபோகினமாம். எத்தின காலத்துக்கு தான் அடுத்தவன நம்பி வாழுறது. எங்களுக்கெண்டு சுயமிருக்குதானே? எங்களுக்கெண்டு கலையள் இருக்கு தானே? எங்களுக்கெண்டு ஒரு கலைமுகம் இருக்கு தானே? பிறகென்ன எங்கட கலைஞர்களக்கொண்டு எங்கட வாழ்வியல வெளிப்படுத்தேலாதா? ஏலும்தானே? அதத்தான் இந்தத் தொலைக்காட்சி செய்யப்போகுதாம். எங்களுக்கொண்டும் தெரியாது இந்தியனுக்குத்தான் எல்லாம் தெரியும் எண்டு சொல்லி அவனிட்ட மலிவா காசு குடுத்து நிகழ்ச்சி வாங்கி இங்க ஒளிபரப்புறத விட எங்கட கலைஞர்களுக்கு போதியளவு ஊதியத்த குடுத்து அவையள நிகழ்ச்சியள உருவாக்கலாம் தானே? எங்கட கலைஞர்களும் வளருவினம். எங்கட தனித்துவத்தையும் நாங்கள் பேணலாம். நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம் எண்டும் வாழலாம். அதுக்கு இப்பிடி தொலைக்காட்சி ஊடகங்கள் தேவைதானே. இவை அதை செய்வினம் போல கிடக்கு. இவை கட்டாயம் அத செய்வினம் எண்டு நினைக்கிறன். எங்கட கலைமுகங்கள் கட்டாயம் தெளிவாயும் சிறப்பாயும் தெரியப்போகுது. பாருங்கோ கட்டாயம்.

காசும் இல்ல. கார்ட்டும் இல்ல. உந்தக் கன்றாவியள் எதுவும் இல்லாம சும்மா இலவசமாத்தான் வருகுது. கொஞ்சம் இங்கால திரும்பிப் பாருங்கோவன. கோப்பைய ஒரு சொட்டுத் திருப்பினாக் காணும். புது ஒளி தெரியும். கோப்பை திருப்ப பயப்பிடுற ஆக்கள் டபுள் பூஸ்ரர் வாங்கிக் கொழுவுங்கோ. பிரச்சனை முடிஞ்சுது. இப்ப ஐரொப்பிய தொலைக்காட்சியின்ர ஒரு லோகோ மட்டும் போட்டிருக்கினம். நான் திருப்பிப் பார்த்த்தன். எனக்கு வேலை செய்யுது. என்ர நண்பர்களுக்கும் சொல்லி அவை இன்னொரு பூஸ்ரர் வாங்கிக் கொழுவினவயாம். அவைக்கும் வேலை செய்யுதாம். டபுள் பூஸ்ரர் ஒண்டும் பெரிய விலையில்லதானே இப்ப. இந்த மாசம் முடியுறதுக்குள்ள நிகழ்ச்சியள் ஒளிபரப்பாகத் தொடங்கிடுமாம். சுவிசில இருந்து தான் வருது எண்டு கேள்விப்பட்டன். சூரிச் மாநிலத்தில தான் கலையகம் இருக்காம். சுவிஸ் எண்டால் அழகுதானே. இந்தத் தொலைக்காட்சியும் அழகாத்தான் இருக்குமெண்டு நம்புவம்.

Edited by tamilneesan

  • கருத்துக்கள உறவுகள்

13 பாகையில் வருமா வராதா இந்த தொலைக்காட்சி

நல்ல விடயம் அப்ப தான் சண்டிவி கார்ட் மலிவகாக என்னால் வாங்க முடியும்

அது போக நானும் இந்த டிவியை பாக்கனும் என்றால் தயவு செய்து ரி ஆர் ரி டமிழ் ஒளி மற்றும் டமில் டேசிய ரிரின் போன்ற தொல்லை காட்சிகளில் வேலை செய்த ***முகங்கள் இல்லாம நல்ல டிவியாஹ வர வேண்டும் அப்ப தான் நான் பார்ப்பேன்

***

:wub::wub:

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

வரட்டும் வாழ்த்துகிறேன். :wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் அப்ப தான் சண்டிவி கார்ட் மலிவகாக என்னால் வாங்க முடியும்

அது போக நானும் இந்த டிவியை பாக்கனும் என்றால் தயவு செய்து ரி ஆர் ரி டமிழ் ஒளி மற்றும் டமில் டேசிய ரிரின் போன்ற தொல்லை காட்சிகளில் வேலை செய்த ***முகங்கள் இல்லாம நல்ல டிவியாஹ வர வேண்டும் அப்ப தான் நான் பார்ப்பேன்

***

:):wub:

உங்க ஆசைய புரிஞ்சுகொண்டு நடந்துக்குவாங்க :wub:

Eurobird (9 degree East) இல் தான் ஏற்கனவே TRTயின் DAN தொலைக்காட்சியும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இன்றுவரை நான் முயற்சித்துப் பார்த்தேன். 11.785, Horizonyal, SR 27.500 and fec 3/4 என்ற அலைவரிசையில் எந்தத் தொலைக்காட்சியும் வரவில்லை.

நான் இன்று பரிட்சித்து பார்த்தேன் ,Euro Television பருட்சாத்த ஒளிபரப்பும், மற்றும் தமிழ், சிங்கள, இந்தி என பல தொலைக்காட்சிகள் இலவசமாக ஒளிபரப்பாகின்றன.

Eurobird 9 (9 degree East): 12 635, Horizonyal, SR 27.500 இல் Euro Television வருகின்றது

Eurobird 9 (9 degree East): 12 693, Vertikal, SR 27.500 இல் மற்றைய தொலைக்காட்சிகள் வருகின்றன.

Edited by சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வருரது யார் எவர் என்டு தெரியாமை எல்லாரையும் வரவேற்றதாலைதான் தமிழனுக்கு காலம் சரியில்லாமை கிடக்கு. கவனம். அண்ணாச்சி கருத்துக்களத்திலை நுழைஞ்சு புது டி.விக்கு நல்ல விளம்பரமும் போட்டுட்டார். சரி சட்டியை அங்கை திருப்பு இங்கை திருப்பு எண்டு சொல்றியள் எங்கையப்பா திருப்பிறது? கிழக்கா மேற்கா கொஞ்சம் விபரமாச் சொல்லுங்கோவன்.

என்ன அது அரிவாளும் சம்மட்டியுமே உதுலை தெரியிறது. கவனமப்பா உள்ளை கொண்டுபோய் போட்டிடுவானுங்கள்.

Edited by vanangaamudi

ஏன் தான் ஓவர் பில்டப் தமிழ்நேசன் கொடுக்கிறார் என்று தெரியவில்லை. எல்லோரும் தொலைக்காட்சி தொடங்கும் போது உப்படித்தான்அறிக்கை வாசிப்பினம். ஆனால் பிறகு நடைமுறை எல்லாம் தலைகீழ். இந்தியத் தொலைக்காட்சிகளை மட்டம் தட்டுபவர்கள் முடிந்தால் இந்திய சினமாவோ திரைப்படப் பாடல்களோ இல்லாமல் நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டலாமே?? அது போல் ஏற்கனவே TTN க்கு சுவிசில் கலையகம் இருந்தது போல், இங்கு கலையகத்தில் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகள் பிரித்தானியாவிலிருந்து தான் ஒளிபரப்பாகுமே தவிர; இது நேரடி சுவிஸ் தொலைக்காட்சி அல்ல. அதுபோல் ஒளிபரப்பாளர்களாக வரும் பலர் அனுபவமில்லாதவர்கள் தான். உதாரணமாக குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வருபவர் இங்கு ஆர்கவ் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி. இவருக்கு ஒளிபரப்புத் துறையில் என்ன அனுபவமுள்ளதென்பதை தமிழ்நேசன் தான் விளக்க வேண்டும்.

தெரிஞ்ச விசயத்த தான் அண்ணா சொன்னன். :( vanangamudi.

புது ரிவி எண்டா என்ன அப்பிடி இலவசமா விடுறாங்கள் எண்டு பார்க்க மட்டும் வருவியள் என்ன. :lol:

சரி பிடிச்சு பாருங்கோவன். :o பெரிய சட்டி எண்டால் (80 cm ) இருக்கிற பூஸ்ரருக்கு இடது பக்கத்தில புது பூஸ்ரர ஒண்டு பூட்டுங்கோ.

@ Vasambu : எல்லாம் வர முதல் சொல்லிட்டு இருக்கலாம். அது சரி தான். அத நானும் ஏத்துக்கொள்ளுறன். அதுக்காக வர முதலே நீங்க முடிவு எடுக்காதேங்கோ நண்பரே. எதுவும் வந்தால் பிறகு பார்த்து கருத்து சொல்லுங்கோ அது ஏத்துக்கொள்ளக்கூடியதா இருக்கும

Edited by tamilneesan

தமிழ்நேசன்

வந்த பிறகு நிச்சயமாக எனது கருத்தைத் தெளிவாகவே அப்போதும் சொல்வேன். அதற்காக தற்போது நீங்கள் தரும் தவறான தகவல்களை தலையாட்டி வரவேற்க வேண்டும் என்று எண்ணாதீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

13பாகையில் இருப்பதை தரிசிப்பவர்களுக்கு 9பாகையில் இருப்பதையும் ஒரே நேரத்தில் தரிசிக்க முடிய வில்லை பூஸ்ரர் பூட்டுவது கஸ்டமாக உள்ளது

இரு பூஸ்ரர்களுக்கும் சிக்னல் பிரச்சனை வருகின்றது

இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் டக்கிளஸ் ஆரம்பித்துள்ளார் என்றும் அதனால் தான்

இலவசமாக போடப்போகினம் என்றும் கதை உலாவுகிறதே உண்மையா? :lol::o

  • கருத்துக்கள உறவுகள்

13பாகையில் இருப்பதை தரிசிப்பவர்களுக்கு 9பாகையில் இருப்பதையும் ஒரே நேரத்தில் தரிசிக்க முடிய வில்லை பூஸ்ரர் பூட்டுவது கஸ்டமாக உள்ளது

இரு பூஸ்ரர்களுக்கும் சிக்னல் பிரச்சனை வருகின்றது

ஓய் குசா பூஸ்ரர் பூட்ட முடியாட்டில் வீட்டு கூரையிலை பேசாமல் ஒரு பத்து சட்டியை பூட்டிவிடும் ஆளாளுக்கு ஒவ்வொரு பாகையிலை விடுவாங்கள் பிறகு ஒரு ஆறு மாதத்தாலை காசுகட்ட வழியில்லாமல் இன்னொரு பாகையிலை சரிவினம் இதுக்கெல்லாம் ஒரு சட்டியை வைச்சு திருப்பிக்கொண்டு இருக்க ஏலாதல்லோ???? இப்ப எனக்கு 90 பாகை நான் படம் போடுற நேரமாச்சு வரட்டோ :lol::o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.