Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள், கருணா தரப்பினருக்கு எதிராக தடை விதிக்கப்பட வேண்டும்

Featured Replies

இலங்கையில் இயங்கும் ஆயுதக் குழுக்கள் சிறுவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்கு எதிரபன நடவடிக்கையாக, அந்த அமைப்புக்கள் சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட வேண்டும் ஹியுமன் ரைட்ஸ் வொட்ச் அமைப்பு கோரியுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள், கருணா தரப்பு மற்றும் இலங்கை அரசாங்கம் என்பன சிறுவர் உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து கலந்துரையாட ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை இன்று (பெப்ரவரி21) கூடவுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் போலவே கருணா தரப்பும் சர்வதேச சிறுவர் சட்டங்கள் மற்றும் பாதுகாப்புச் சபை விதிகளுக்கு முரணான வகையில் சிறுவர்களை போரில் ஈடுபடுத்துவதாக ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த இரண்டு அமைப்புக்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் செயற்பாட்டாளரான ஜோ பெகர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, விடுவிக்கப்பட்ட பகுதிகளில் சிறுவர்கள் கடத்தப்படல், இராணுவத்தில் சிறார்கள் சேர்த்துக் கொள்ளப்படலுக்கு எதிராக செயற்படாமை மற்றும் கருணா தரப்பினருடனான தொடர்பு என்பவை காரணமாக இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புச் சபை தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

www.lankadissent.com/Tamil/news/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் போலவே கருணா தரப்பும் சர்வதேச சிறுவர் சட்டங்கள் மற்றும் பாதுகாப்புச் சபை விதிகளுக்கு முரணான வகையில் சிறுவர்களை போரில் ஈடுபடுத்துவதாக ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையை அணுக ஒரே ஒரு ராஜதந்திர தெரிவு மட்டும்தான் உள்ளது. விடுதலைப் புலிகள் பற்றிய குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும்பணியை அமைப்பிடம் விட்டுவிட்டு முழுக்கவனத்தையும் கருணாகுழு தனி அமைப்பல்ல அது அரசின் துணை ராணுவ அமைப்பு என்பதையும நிறுவுவதில் செலவு செய்ய வேண்டும். சிறுவர் ஆட்சேர்ப்பை எந்த விதத்திலும் நியாயப் படுத்தாது இப்பிரச்சினை கையாலப் படவேண்டும். இலங்கை அரசு தனது முன்னணி (front) அமைப்பான கருணாகுழுமூலம் சிறுவர்களை இலங்கை அரச துணை இராணுவப் படையில் சேர்ப்பதை சர்வதேச ரீதியில் அம்பலப் படுத்துவதும் நடவடிக்கை கோருவதும் அவசியம். இவை தொடர்பான ஊர்வலம் இயக்கம் கருத்தரங்குகள் மூலம் சர்வதேச சமூகத்துக்கும் ஐநாவுக்கும் அழுத்தம் கொடுப்பது பயன்தரும். எனினும் ராஜதந்திர அணுகுமுறைகள் செல்வாக்குப் பெறுகிற அரசியல் சூழல் இன்னும் நம்மிடை மேம்படவில்லையே.

களம் எல்லாத்தையும் தீர்மானிக்கும். திருகோணமலை பிடிச்சிட்டா உலகமே எங்கடை காலடியில விழும். கோணமாமலையில் எந்த நேரமும் கோடியேறலாம்.

மிகவிரைவில் எல்லாத்தையும் 1 புள்ளியில வைச்சு அடிப்பம். அடிக்கிற அடியில துண்டைக் காணம் துணியக் காணம் எண்டு ஐநாவே ஓடும்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நேரமும் கோடியேறலாம்
.

வீட்டு கோடி ஏறிடும் கவனம்.

களம் எல்லாத்தையும் தீர்மானிக்கும்.மிகவிரைவில் எல்லாத்தையும் 1 புள்ளியில வைச்சு அடிப்பம்.

குறுக்கார் உண்மையை சொல்லுராரோ அல்லது நக்கலடிக்குராரோ வழமை போல ஒன்டும் விளங்கல. ஆனால் வழமைபோல் அண்ணன்(குறுக்கார்) சொன்னதுபோல்தான் நடக்கும். அதிக பிரதேசங்களை கைப்பற்றுவதன் மூலம் தங்கள் பலம்வாய்த பிரதேசங்களையும் இழக்கும் நிலைக்கு இலங்கை இராணுவம் தள்ளப்படும்.

புள்ளி வைச்சு கோலம் போட வெளிக்கிட்டுட்டாங்கள். வாசகனுக்கு இந்த யாழ் களத்தில இருக்கின்ற சுருதிகள் விளங்கவில்லப்போல கிடக்குது. :huh::wub:

  • கருத்துக்கள உறவுகள்

புள்ளி வைச்சு கோலம் போட வெளிக்கிட்டுட்டாங்கள். வாசகனுக்கு இந்த யாழ் களத்தில இருக்கின்ற சுருதிகள் விளங்கவில்லப்போல கிடக்குது.

என்னைப்போல்......................

ஏமாறப்போறார்

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கர் யாழ்களத்தில நிறையப்பேர் இப்படித்தான் எழுதுகிறார்கள் என்று சொல்லிக்கொண்டு தனது ஆதங்கத்தைத்தான் இப்படி கொட்டிக் கொள்கிறார் என்று நினைக்கிறேன்.

குறுக்கர் சொல்வதுபோல இடங்களைக் கைப்பற்றி கொடியேற்றுவதும், களங்களை வெல்வதும் மிகவும் கடிணமாக இருந்தாலும் கூட, அவை நடந்தால்த்தான் எமக்கு விடுதலை. சும்மா எம்மால் முடியாது என்று சப்பைக் கட்டு கட்டுவதிலும் பார்க்க( இது ஓரளவிற்கு இப்போதய கள நிலவரங்களைப் பார்க்கும்போது உண்மையாக இருந்தாலும் கூட) ஒன்றில் பேசாமல் இருக்கலாம் அல்லது நம்பிக்கையுடன் பேசலாம். ஏனென்றால் அவரே சொல்வதுபோல "நம்பிக்கைதானே வாழ்க்கை அண்ணா".

போராடுபவர்கள் தமது நம்பிக்கையினை இன்னும் இழக்கவில்லை. அவர்கள் இன்னமும் தமது இலக்கினை நோக்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஈழத்தமிழரின் வரலாற்றில் பேச்சுவார்த்தைகளால் அவவ்கள் ஏமாற்றப்பட்டதே நிகழ்வுகளாயுள்ளன. அதன் பிரதிபலிப்புத்தான் ஆயுதப் போராட்டம். அதில் வலிமை பெற்றிருந்த தற்போதைய நிலையிலும் பேச்சுவார்த்தைகளால் எதையும் அடைய முடியவில்லை. இருக்கும் ஒரேவழி ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு அடிமைகளாய் இருக்க வேண்டியதுதான். இன்றைய பலத்தின் மூலம் எந்தத் தீர்வையும் பெறத் தவறின் பேரினவாதம் தமிழரில் சாம்பல் மேட்டில் நின்று கூத்தாடும்.

அட 94 யாழ்ப்பாணத்தை ஆமி பிடிச்சா பிறகும் உப்பு டியும் உதைவிட கூடவும் சனம் கதைச்சது தானே? ஆனா நடந்தது எல்லாம் இல்லாருக்கும் தெரியும் தானே?

நாங்கள் என்ன விரும்புறம் என்றதைவிட எங்களால என்ன ஏலுமென்ரதுதான் முக்கியம்... இல்லாட்டா ஒண்டுமே மிச்சம் கிடவாது... முடியாதெண்டா தலைவர் தொடங்கிருக்க மாட்டார்.

நாங்கள் நினைக்கிறமாதிரி சண்டை நடவாது... சண்டை எப்புடி நடந்தாலும்... எங்கட ஆதரவு முழுக்க எங்கட ஆக்களுக்குத்தான்...

1995 இல யாழ்பாணத்தை பிடிச்சாப்பிறகு என்ன நடந்தது?

உதுகளை பிடிக்கவெண்டு மோட்டுச் சிங்களவன் ஏனைய இடங்களில இருந்து படைகளை நகர்த்தியதாலை கிழக்கில பெரும் பகுதிகள் எல்லாம் சும்மா எங்கடை கைக்கு வந்துட்டுது இந்து சமுத்திரத்தின் கேந்தரிமுக்கியத்துவம் வாந்த இடத்திற்கு கல்லெறிஞ்சு விளையாடிக் கொண்டிருக்கிறம் எண்டு கொஞ்சக்காலம் பொழுது போக்காட்டினாங்கள்.

பிறகு அதுகளை மோட்டுச் சிங்களவன் பிடிக்க அது சும்மாவந்ததை அவங்கள் சுமந்து கொண்டு பிடிக்கிறாங்கள் எண்டு பொழுது போக்காட்டினம்.

யாழ்பாணத்தை பிடிக்கிற அளவுக்கு 2 தரம் அடிச்சனாங்கள் பிறகு பாவம் சிங்களவங்கள் எண்டு போட்டு இன்று போய் நாளை வா என்று விட்டிட்டம் எண்டு பொழுது போக்காட்டினம்.

பலவீனமே சா சா அப்பிடி எண்ட என்னவென்று இறுதி யுத்தம் எண்ணுவினம் இதே அதே எந்த நேரமும் எந்த வேலிக்காலையும் பாஞ்சு எல்லாருக்கும் பேதி குடுப்பம் எண்டு பொழுது போக்காட்டினம்.

இப்ப ஓயாத அலைகள் -3 பிடிச்ச இடங்களும் போகுதாம். அதுக்கு என்ன அகல கால் வைச்சாப்பிறகு நீண்ட கனரகப்பாச்சல் செய்து எல்லாத்தையும் இயங்கு நிலையில அமத்தப் போறம் எண்ணலாம்.

அம்பாறையில கண்ணிவெடி வெடிச்சதாம் பாத்தியளே மகிந்த நினைக்கிறமாதிரி கிழக்கு சிறீலங்காவின் கட்டுப்பாட்டில இல்லை. ஆனா மடுவில கண்ணி வெடிச்சாலும் வன்னி எங்கடை பரிபூரண கட்டுப்பாட்டிலான் இருக்கு.

இனி இறுதிப்புலியின் இறுதி மூச்சுவரை போராட்டம் நடக்கும் எண்ணுவியள். (ஏதோ அதுக்குத்தான் போராட்டம் தொடங்கினமாதிரி)

எல்லா வே* ஆட்டத்தையும் ஆடிப்போட்டு கடசியில

தலைவர் வெல்ல முடியும் எண்ட படியால் தானே தொடங்கினவர் எண்டு அவற்றை தலையில கட்டுங்கோ.

போராட்டம் தொடங்கினது வேறு வழியின்றி! தலைவர் தொடங்கினதும் அதனால் தான். வேறு வழியின்றி தொடங்கினதை வெல்லப்படும் என்று தானே தொடங்கினது என்ற தவறாக விளங்கிக் கொண்டு அவநம்பிக்கையில் இருந்தால் பேரழிவுகளும் தோல்வியும் நிச்சயம். வேறு வழியின்றி தொடங்கினதை வெற்றியாக்க கடினமாக உழைக்க வேண்டும். வெற்றி பெறும் என்ற பிரம்மையை பிரச்சாரத்தில் உருவாக்கினாத்தான் தெருக்கூத்துக்கு கூடுவதுபோல் கூட்டம் கூடும் விசிலடிக்கும் அங்கினேக்கை சில்லறைக் காசு எறிஞ்சு கை தட்டும் எண்டால் வெற்றி பெற முடியாது.

புலிகள் இந்திய இராணுவத்தை எதிர்கொண்டால் என்ன பிரேமதாசா காலத்தில் தலைவருக்கு இருந்த ஆபத்தை எதிர்கொண்டால் என்ன ஜெயசுக்குருவை எதிர் கொண்டால் என்ன ஒவ்வொரு கரும்புலித் தாக்குதலுக்கு போராளிகளை அனுப்பும் போதும் வேறு வழியின்றி தான் அதைச் செய்கிறார்கள். மாற்று வழிகளை வைத்துக் கொண்டு வீராப்பிற்காகவும் உங்கடை கவினயமான விபரிப்புகளிற்காகவும் செய்யவில்லை.

அவர்கள் ஒவ்வொரு சவால்களையும் வேறு வழியின்றி உச்ச அர்ப்பணிப்புகளோடு எதிர்கொள்ளுவதும் அர்பணிப்புக்கும் இறுதி மூச்சுவரை போராடி இறக்கவும் போராளிகள் இருக்கிறார்கள் என்பதற்காக அல்ல. போராட்டத்தை தக்கவைத்து பாதுகாத்து கால அவகாசத்தை பெறுவதுக்கு மாத்திரமே. அந்த கால அவகாசத்தில் போராட்டத்தின் தேவைகளை பூர்த்திய செய்ய முழுத் தமிழரும் முன்வருவார்கள் முக்கியமாக புலம்பெயர்ந்தவர்கள் பல துறைகளில் பல வழிகளில் தம்மைத் தயார்ப்படுத்தி தமிழ்த்தேசியத்தைப் பலப்படுத்துவார்கள் சர்வதேச அரங்கில் ஒரு தனிநாட்டிற்குரிய பல்பரிமாண பிரதிநிதித்துவத்தை முழுமைப்படுத்த சரியாகப்பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் மாத்திரமே.

களத்தில் நின்று அர்பபணிப்புகளும் இழப்புகளோடு போராடுபவர்கள் இழக்காது இருப்பது போராட்டம் வெல்லப்படும் என்ற நம்பிக்கை அல்ல. போராட்டத்தின் தேவைகளை உலக முழுவதும் பரந்துள்ள தமிழர்கள் உணர்வார்கள் தமிழ்த் தேசியம் என்றோ ஒரு நாள் எழுச்சி கொள்ளும் தம்மைப் பலப்படுத்தும் அதன் மூலம் இறுதி இலக்கை அடையலாம் என்று தான். தாம் இறுதி மூச்சுவரை போராடினால் சிங்களமே இந்தியாவோ சர்வதேசமோ தீர்வையோ அங்கீகாரத்தையும் தரும் தமிழீழம் கிடைத்துவிடும் என்று அல்ல.

குறுக்கர்... நீங்கள் இந்தமுறை சொல்லவதை நிராகரிப்பதற்குமில்லை.... ஆனாலும் சில விசயங்களை ஏற்பதுகுமில்லை...

எதுவா இருந்தாலும் உங்களின் கருத்து தெவாக சொல்லப்படவில்லை... அதை சொல்லுங்கோ.. பிறகு உங்களை மாதிரி நானும் நீட்டுக்கு எழுதுறன்...

சுருக்கமாக சொல்லுறது எண்ட ஆயுதங்களை கைய்யளிச்சுப் போட்டு கொளரவ ஆனந்தசங்கரி அய்யாவை தலைவராக ஏற்றுக் கொண்டு ஒற்றையாட்சிக் கீள் இருப்பம் எல்லாரும் வாங்கோ எண்ணிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகள் தாங்கள் ஏன் மிகவும் கடினமான சூழலிலும் நின்று சண்டை பிடிக்கிறோம் என்பதில் தெளிவாய் உள்ளனர்..

எம் பின்னால் எம்மை மலையாக நம்பி எம் மக்கள் நிற்கின்றனர். மக்களுக்கு விடுதலையை வாங்கிக் கொடுப்பதற்கான தனது இடையறாத முயற்சிக்கு நாம் தோள் தருவோம் என்ற நம்பிக்கையில் தலைவர் அவர்கள் இருக்கின்றார். எம் பின்னால் எமக்குப் பெரும் பலமாக அவர் நிற்கின்றார். என்ற நம்பிக்கையில் நாம் நிக்கிறோம்.

சிங்களத்தின் பற்களைப் பிடுங்கும் பணியை விட்டு விட்டு வீட்டுக்குவர எம்மால் முடியவில்லை.

ஆனால் புலத்தில் இருக்கும் சிலர் சும்மா இருந்துகொண்டு வீரம் பேசவும், வாய் வார்த்தைகளால் எல்லாவற்றையும் வெட்டிமுறிக்கலாம் என்பதற்காகவும்தான் போராட்டம் நடைபெறுகின்றது என்ற எண்ணத்தில் உள்ளனர். சிங்கள இராணுவம் இறந்தால் கொக்கரிக்கவும், உள்ளே புகுந்தால் கிலேசம் அடையவும்தான் இவர்களால் முடியும்.. புலம்பெயர் நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தனிநாட்டை அடையச் செய்யக் கூடிய பல பணிகள் உள்ளன.. அல்லது அல்லல்படும் மக்களுக்கு பல இடர்பாடுகளுக்கு மத்தியிலும் உதவி செய்யும் தொண்டுநிறுவனங்கள் ஊடாக பங்களிப்புக்கள் புரிய வாய்ப்புக்கள் உள்ளன.. எல்லாவற்றிற்கும் மனம் இருந்தால் இடம் உண்டு!

புலம்பெயர் நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தனிநாட்டை அடையச் செய்யக் கூடிய பல பணிகள் உள்ளன..

அவை எவை?

1,

2,

3,

4,

5,

?

சில பேர் நல்லா எங்கடை போராட்டத்தை விளங்கியிருக்கிறார் ஆனா இது விளங்க இவ்வளவு காலம் தேவைப்பட்டிருப்பது கொஞ்சம் காலம் கூடத்தான் போராட்டம் பின்தள்ளப்பட்டதுக்கு எங்கடை ஆட்கள் ஒரு சிலரின் சுயநலமும் காரணம் தான் உண்மையில போராட வெளிக்கிட்டவர்கள் நிறைப் பேர் இப்போதைக்கு இல்லைதான் ஆனா ஆயுதம் எடுத்துதான் போராட்டம் செய்யவேணும் எண்டு இல்லை இலங்கையின் பிரச்சனையை சாட்டாக வைச்சு வெளிநாட்டு போணவை கனஆட்கள் தங்களுக்கும் ஈழத்துக்கும் சம்மந்தம் இல்லாத மாதிரியும் வெளிநாட்டாக்கள் மாதிரி திரியிறது வெட்கப்படவேண்டிய விடயம். இப்பத்தைய எமது போராட்டத்துக்கு வெளிநாட்டில் இருப்பவரின் பங்குதான் மிகமுக்கியம் எவ்வளவோ தடைகள் இருக்கும் வடக்கு கிழக்கு பகுதியில் இராணுவத்தால் நடக்கும் மனித உரிமை மீறல்களை வெளிநாடுகளுக்கு தெளிபடுத்தவேண்டிய உங்களின் வேலைதானே.......... நாங்கள் இலங்கேலை இருந்து கொண்டு நாய் குலைச்சாலும் பயந்து வாழவேண்டிய நிலமை .......... நீங்கள் அதிஷ்டம் செய்து வெளிநாட்டுக்கு பறந்து விட்டீர்கள் அங்கிருந்து நீங்கள் செய்யும் இப்பிடியான உதவிகள் எமக்கு சுதந்திரக் காற்றை மிக விரைவில் சுவாசிக்க வழிவகுக்கும் அல்லவா?.........

  • கருத்துக்கள உறவுகள்

அவை எவை?

1,

2,

3,

4,

5,

?

இந்த ரேஞ்சில இங்குள்ளவர்கள் இருப்பதால்தான், கொசோவாவிற்குத் தனிநாடு 10 வருடங்களில் கிடைத்தும், தமிழருக்கு தனிநாடு உருவாக காலம் காலமாய் போராட வேண்டியுள்ளது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.