Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறிழைக்க இந்திய அரசு முற்படுகின்றதா?: விடுதலைப் புலிகள் கேள்வி

Featured Replies

மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறிழைக்க இந்திய அரசு முற்படுகின்றதா? என்று தமிழீழ விடுதலைப் புலிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

Head Quarters

Liberation Tigers of Tamil Eelam

Tamil Eelam

10 March 2008

Is the Indian State attempting yet another historic blunder?

The State welcome given by the Indian State to the Head of the Sri Lanka military chief Lt. Col. Sarath Fonseka, who is heading the Sri Lankan State’s war of ethnic genocide against the Eelam Tamils, has deeply hurt them.

Liberation Tigers of Tamil Eelam (LTTE) strongly condemns the Indian State action of extending a State welcome to the military chief of the Sinhala State which has unilaterally abrogated the ceasefire agreement and has launched widespread military offensives in the Tamil homeland.

The Sri Lankan State is facing many warnings and condemnations for its attempt to seek a military solution and for its enormous human rights violations.

Despite this, the Sinhala State ignores these warnings and condemnations and continues with its abductions, killings, and arrests of Tamils.

The Sinhala State, keen to cover up this truth, is blaming the freedom movement of the Tamils, the LTTE, for the continuation of the war and is seeking assistance from the world for its war of ethnic genocide.

Many of the European countries, understanding this hidden motive of the Sinhala State, have halted all assistance that could support the ethnic genocide of the Tamils.

The Indian State also knows this truth. Yet, while pronouncing that a solution to the Tamil problem must be found through peaceful means, it is giving encouragement to the military approach of the Sinhala State. This can only lead to the intensification of the genocide of the Tamils.

LTTE wishes to point out to the Indian State that by this historic blunder it will continue to subject the Eelam Tamils to misery and put them in the dangerous situation of having to face ethnic genocide on a massive scale. On behalf of the Eelam Tamils, LTTE kindly requests the Tamils of Tamil Nadu to understand this anti-Tamil move of the Indian State and express their condemnation.

We did not leave the ceasefire agreement and we did not start the war. We are only undertaking a defensive war against the war of ethnic genocide of the Sri Lankan State.

We still have not abandoned the Norway sponsored peace efforts and we are ready to take part in such efforts.

In this context, the Indian State’s move of propping up the politically-militarily-economically weakened SriLankan State has upset Eelam Tamils.

The view expressed by the Indian military chiefs, "India wants to ensure that the Sri Lankan Army maintains its upperhand over the LTTE", just illustrates the efforts of the Indian State to prop up the Sinhala war machine.

Indian State must take the responsibility for the ethnic genocide of the Tamils that will be carried out by the Sinhala military re-invigorated by such moves of the Indian State.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24929

-------------

இதுவரை காலமும் இந்தியா எப்பவுமே எமது போராட்டம் வெல்லனும் என்று விரும்பின தேசமே அல்ல...!

Edited by nedukkalapoovan

ஒரு குளறுபடியான வெளிவிவகார கொள்கையுடைய நாடு டஹன் இந்தியா என்ன தமிழ்நாட்டில் தான் தூங்கி கொண்டு இருக்கிறார்கள்...

காலதிற்கு ஏற்ற சிறந்த ஒரு அறிக்கை. நீண்ட காலத்தின் பின்பு புலிகள் நேரடியாகவே இந்தியாவை கண்டிப்பது இந்த முறை தான்.

இந்த அறிக்கையின் நோக்கம், அறிக்கையை பார்த்து விட்டு உடனே இந்தியா தன்னை மாற்றிக் கொள்ளும் எனும் எதிர்பார்ப்பு அல்ல. நோர்வேயின் பங்களிப்பு இல்லாமல் இருக்கும் சூழ்நிலையில், சர்வதேச சக்திகளை ஓரம் கட்டிவிட்டு, இந்தியா மீண்டும் சிங்கள பேரினவாதிகளை திருப்தி செய்து கொண்டு மூக்கை நுழைப்பதற்கு எதிரான ஒரு வெளிப்படையான கண்டனம் இது

இன்றைய நிலையில் இந்தியாவை அல்ல, நோர்வேயினை அல்லது ஐரோப்பிய நாடொன்றின் மத்தியஸ்தத்தைதான் தமிழ் தரப்பு நாடும் என உறுதிபட கூறியுள்ளார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் எப்போதுமே இந்தியா பற்றிய மிகவும் தெளிவானதும், தீர்க்கதரிசனதுமான பார்வையைக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லை என்றால் 80 களில் ஆயுதப் போராட்டம் தொடங்கிய மற்றய போராளிக்குழுக்கள் இந்தியாவின் சொல்க் கேட்டு சிறிது காலத்தில் அழிந்து இலங்கை ராணுவத்தின் துணைக்குழுக்களாக இருப்பது போல புலிகளும் ஆகியிருப்பார்கள். புலிகளது இந்தியா பற்றிய தெளிவான பார்வையே இதை தடுத்தது.

புலிகள் இந்தியாவின் போலி முகத்திரையைக் கிழித்தெறியும் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் அதைச் செய்யத் தவறியதில்லை. 1987 இல் இந்திய ராணுவம் சுதந்திரம் கேட்டு ஓழமிட்ட தமிழர்களுக்கெதிராக தமது துப்பாக்கிகளை திருப்பியபோதே இந்தியாவின் கோரமுகம் வெளித் தெரிந்தது. அதன் பின் நடந்த படுகொலைகளும், அக்கிரமங்களும் இந்தியாவின் சுய ரூபத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டின.

எம்மில் பலருக்கு இன்னும் இதயத்தில் இந்தியாவுக்கென ஒரு மென்மையான பாகம் இருந்தாலும் புலிகள் தமது நிலைப்பாட்டில் தீர்க்கமாகவே இருப்பார்கள் என்பது திண்ணம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எமக்கு எதிரான நாடு அல்ல. ஆனால் அது செய்கின்ற செயல்கள் தான் மனவருத்தங்களை உருவாக்குகின்றது. ஒரு இன அழிப்புக்குத் துணைபோகின்ற செயலை இந்;தியா நிறுத்திக் கொள்ள முன்வரவேண்டும்.

தமிழக மக்கள், தமிழக கட்சிகள் நோக்கி எங்கள் ஆதங்க குரல்கள் எழுப்ப பட வேண்டும். அவர்களயும் போராட்டத்தை பாதுகாக்கும் அரணாக மாற்ற வேண்டும்.

தமிழகமக்கள் கிளர்ந்தெழுந்தால் தான் மத்திய அரசு கட்டுபடும்.

தமிழக கட்சிகளை நோக்கி எங்கள் குரல்கள் திரும்ப வேண்டும்

காலத்திற்கு ஏற்ற அறிக்கை தமிழீழ அரசு வெளியிட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

:lol: தூயவன்,

எதிரியையும் நண்பனையும் எப்படி வரையறை செய்கிறீர்கள் ? நண்மை செய்பவன் நண்பன், உங்களுக்கு தீமை செய்பவன் எதிரி என்பதுதானே சரி ?

பிறகு எங்கிருந்து இந்தப் புதுத் தத்துவம் வந்தது ? உங்களுக்குத் தீமை செய்து கொண்டே நண்பனாயிருப்பது எவ்வாறு ? உங்களை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு எதிரிக்கு உதவும் ஒரு நாட்டை எப்படி எங்களுக்கு எதிரி இல்லை என்கிறீர்கள் ? இந்தியா தானே வந்து முதுகில் குத்தும் வரை நண்பந்தான் என்கிறீர்கள்( 1987 இல் ஒருமுறை குத்தியதை நாம் ஏனோ மறந்துவிடுகிறோம்!!!!!).

நல்லது ஒரு வேளை இவை எல்லாவற்றையும் ஈழத்தமிழரான எம்மேல் கொண்ட அளவற்ற அன்பினால்த்தான் இந்தியா செய்கிறதோ என்னவோ ?!!!!!!!!!!!

இந்தியா எமக்கு எதிரான நாடு அல்ல. ஆனால் அது செய்கின்ற செயல்கள் தான் மனவருத்தங்களை உருவாக்குகின்றது. ஒரு இன அழிப்புக்குத் துணைபோகின்ற செயலை இந்;தியா நிறுத்திக் கொள்ள முன்வரவேண்டும்.

அதுக்கு காரணம் ராஜீவ் மரணத்துக்கு பிறகு இந்தியா விடயங்களில் தமிழர் தலைமை எதிர்புக்களை எப்போதும் காட்டியதில்லை...! எப்போதும் மென்மையான போக்கை கடைப்பிடித்தனர்...

அதை இந்திய அரசு ஒரு பலவீனமாகவே கருதியது, ( அதுக்கு ஆதாரமாக நிறைய ஆதாரங்களை சொல்ல முடியும்) இந்திய அரசுக்கு இப்போதைய நிலையில் இலங்கை அரசை படிய வைக்க எதையாவது செய்ய வேண்டு, அதன் மூலம் புலிகள் தங்களின் வழத்துக்கு வந்து விடுவார்கள் என்னும் எண்ணம் எப்போதும் இருந்தது மட்டும் உண்மை...

இப்போ இந்தியாவை கண்டித்ததின் மூலம் அச்சுறுத்தல் மூலம் ஈழத்தமிழர்களை படிய வைக்க முடியாது எனும் செய்தியை நீண்ட காலத்தின் பின்னர் கொடுக்க பட்டு இருக்கிறது... இந்தியாவை தேவை ஏற்படின் எதிர்க்க வேண்டி வரும் எனும் செய்தியைதான் சொல்லப்பட்டு இருக்கிறது ( அதுக்காக இராணுவ வளிகளில் எண்று இல்லை) இது நல்ல பயனை தரும் என்பது எனது எண்ணம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா அயல்நாடுகளுடன் அரசியல் ரீதியாக எப்போதுமே இரட்டை வேடம் தான் போடுகிறது. அதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல.இதன் காரணமாக தான் இந்தியாவை சுற்றி எதிரிகளை சம்பாதித்து வைத்துள்ளார்கள். இலங்கையையாவது தன்பிடிக்குள் வைத்திருக்கலாம் என படாத பாடு படுகிறது.

தமிழ் நாட்டிலிருந்து 40 உறுப்பினர்கள் வரை லோக்சபாவில் உள்ளார்கள். இது தமிழ் நாட்டுக்கு மிகப்பெரிய அரசியல் பலம். அதாவது தமிழ் நாட்டுக்கு மிக பெரிய(Bargaining Power) உண்டு. இவர்கள் இதன் மூலம் மத்திய அரசை இலங்கை தமிழர்களுக்கு சார்பான அல்லது நடுநிலைமையான கொள்கையை கொள்ளும் படி செய்ய முடியும்.ஆகவே தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் இதனை செய்ய வேண்டும். அல்லது ஈழ தமிழர்களாகிய நாம் தமிழ் நாட்டை வற்புறுத்த வேண்டும்.

இந்தியா எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் சில காரணங்கள் உள்ளது. இந்தியாவால் புலிகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேநேரம் இலங்கை பிரச்சினையில் ஒதுங்கி இருக்கவும் முடியாது. (காரணம் பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா..!). தமிழ் நாட்டால் பெரிதாக ஒன்றும் பண்ண முடியாது. காரணம் அரசியல். ஆக இந்தியா பண்ணக்கூடியது ஒன்று மட்டுமே..! பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது. ..!

யுத்த குற்றங்களுக்கு உதவி செய்த குற்றச்சாட்டை இந்தியா எதிர்நோக்கக்கூடும் - தமிழீழ விடுதலைப் புலிகள்

இலங்கையின் இராணுவத்தளபதிக்கு இராஜதந்திர அங்கீகாரம் வழங்குவதனூடாக தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை நியாயப்படுத்த இந்தியா முயற்சிப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

யுத்த குற்றங்களுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டுக்கு இந்தியா இலக்காகக் கூடும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் மக்கள் கோரமாக படுகொலைச் செய்யப்படும் யுத்தமொன்றுக்கு தலைமை தாங்கும் படைத்தளபதி சரத் பொன்சாகாவிற்கு அவ்வாறான ஒரு அந்தஸ்து வழங்கப்படுவதனை வன்மையாகக் கண்டிப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.

ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்த உடன்படிக்கையை ரத்து செய்து, தமிழர் பிரசேதங்களில் யுத்த முன்னகர்வுகளில் ஈடுபடும் இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

கடத்தல்கள், கைது செய்தல்கள் மற்றும் கொலைகள் போன்ற பல்வேறு வழிகளில் தமிழர்களின் மனித உரிமைகள் பாரிய அளவில் மீறப்படுவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

உண்மை நிலை மறைக்கப்பட்டு தமிழர்களின் சுதந்திரத்திற்காக போராடும் தமது அமைப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ் மக்களை படுகொலை செய்யப்படுவதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பை கோரிநிற்கும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து இந்தியா நன்கு அறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, தமிழ் மக்களுக்கு அமைதியான தீர்வுத் திட்டமொன்று தேவையென்ற போதிலும் இலங்கை அரசாங்கத்திற்கு யுத்த உதவிகளை வழங்கி வருவதாக அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்திய மத்திய அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டை சரியாக அடையாளங்கண்டு தமிழ்நாட்டு மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகள் கோரியுள்ளனர்.

இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளைவிட முன்னணியில் இருக்க வேண்டும் என இந்திய இராணுவ உயர் அதிகாரிகளினால் வெளியிட்டுள்ள கருத்தின் மூலம் இலங்கையின் யுத்த நிலைமைகள் குறித்தான இந்தியாவின் நிலைப்பாடு அம்பலமாகியுள்ளதாக புலிகள் அமைப்பு தெரிவிக்கின்றது.

நோர்வே அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட சமாதான முன்னெடுப்புக்கள் தொடர்பாக தமது அமைப்பு இன்னமும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நன்றி : www.lankadissent.com/Tamil/news

இப்படியொரு காலம் மறுபடியும் மலருமா? அப்படியொரு தலைவன் மறுபடியும் தமிழக மண்ணிலே....??

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறவுகள்

வைக்கோல் பட்டடை ............. என்று சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் சில காரணங்கள் உள்ளது. இந்தியாவால் புலிகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேநேரம் இலங்கை பிரச்சினையில் ஒதுங்கி இருக்கவும் முடியாது. (காரணம் பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா..!). தமிழ் நாட்டால் பெரிதாக ஒன்றும் பண்ண முடியாது. காரணம் அரசியல். ஆக இந்தியா பண்ணக்கூடியது ஒன்று மட்டுமே..! பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது. ..!

மிக மிகச் சரியாகச் சொன்னீர்கள். ஆனால் அவர்கள் பிள்ளையைக் கிள்ளி விடுவதில் தான் முழு அக்கறையையும் காட்டுகின்றது. 'தமிழீழம் தனிநாடாக விரைவில் உருவாக வேண்டும்!. அதற்கான அத்தனை வேலைகளிலும் ஒவ்வொரு ஈழத்தமிழனும் தோள் கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா

இது இப்போதும் எமக்கு தாய்நாடு

இதைமீறி எதையும் நினைத்ததில்லை நாம்

இவ்வளவும் நடந்தபின்பும் கூட

ஆனால் இன்று தொடங்கிய கொசோவாப்போராட்டம்

இன்றே சுதந்திரக்காற்றை சுவாசிப்பதற்கும்

அதைவிட எல்லாவகையிலும் கூடுதலாகப்பாதிக்கப்பட்ட

நாம் இன்னும் சுதந்திரக்காற்றை சுவாசிக்காதற்கும்

காரணம் என்ன???

காரணி என்ன???

யார் காரணம்???

ஒரே பதில்

இந்தியா

இந்தியா

இந்தியா............................

இந்தியத் துரோகங்கள் தமிழீழத்திதின் தேவையை ஒரு போதும் அழிக்க முடியாது. இந்தியாவின் கபடத் தனங்களுக்கு அப்பாற்பட்டு செயற்படுவதற்கு விடுதலைப்புலிகள் முடிவெடுத்ததன் ஆரம்பக் காட்சிதான் இந்த அறிக்கையென எனக்குத் தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் இறைவா

எனக்கும் அதே கனவுதான்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழப் போராட்டத்தில் பல தடங்கல்களை இந்தியாவின் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்போதுதான் பார்க்கமுடிகின்றது. செளத் புளக்கில் இருக்கும் "ஆலோசகர்கள்" எப்போதுமே தமிழ்த் தேசியப் போராட்டத்தை நசுக்கவே முயன்று வருகின்றனர். இதுவரை காலமும் ஒளித்துச் செய்த உதவிகள் பலனின்றிப் போனதால் தற்போது வெளிப்படையாகவே செய்யத் தொடங்கிவிட்டார்கள். எனவே புலிகளும் வெளிப்படையாக அறிக்கை விடவேண்டிய தேவை வந்துள்ளது. இதன் மூலம் எதுவும் உடனடியாக நடக்கப் போவதில்லை. எனினும் வரும் இந்தியப் பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் முடிவுகளை மாற்ற உதவி செய்யக்கூடும். இதன் மூலம் அதிகம் தொந்தரவு கொடுக்காத காங்கிரஸ் அல்லாத ஆட்சியொன்று அமைந்தாலே போதும் தமிழர் போராட்டம் முன்னோக்கிப் போக!

விடுதலைபுலிகள் இந்திய அரசை மிரட்டினார்கள் என வட இந்திய செய்தி நிறுவணம் பிரேக்கிங் நியுஸ் என அடிக்கடி போட்டு கொண்டு இருந்ததாக இந்திய நண்பர் ஒருவர் ஊடாக அறிந்தேன்

இந்தியா

இது இப்போதும் எமக்கு தாய்நாடு

இதைமீறி எதையும் நினைத்ததில்லை நாம்

இவ்வளவும் நடந்தபின்பும் கூட

ஆனால் இன்று தொடங்கிய கொசோவாப்போராட்டம்

இன்றே சுதந்திரக்காற்றை சுவாசிப்பதற்கும்

அதைவிட எல்லாவகையிலும் கூடுதலாகப்பாதிக்கப்பட்ட

நாம் இன்னும் சுதந்திரக்காற்றை சுவாசிக்காதற்கும்

காரணம் என்ன???

காரணி என்ன???

யார் காரணம்???

ஒரே பதில்

இந்தியா

இந்தியா

இந்தியா............................

அது உண்மை தான். எனென்றால் இந்தியாவுக்கு நாங்கள் ஒன்றும் முக்கியம் இல்லை. இந்தியா ஒன்றும் ரஷ்ய அல்ல அல்லது இலங்கை ஒன்றும் செர்பியாவும் இல்லை..

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறா?

இந்தியாவிற்குப் புலிகளின் கேள்வி

ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள அரசின் இன அழிப்பு செயலுக்குத் தலைமையேற்று நிற்கும் சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவை வரவேற்று உயர் அரச கெளரவத்தை வழங்கிய இந்திய அரசின் செயல் ஈழத் தமிழர்களை வேதனைக் குள்ளாக்கியுள்ளது.

போர் நிறுத்த உடன் படிக்கையிலிருந்து சிங்கள அரசு ஒரு தலைப்பட்சமாக வெளியேறி தமிழர் தாயகத்தில் போரை விரிவாக்கியுள்ள இக்கால சூழலில், தமிழின அழிப்பிற்கு தலைமையேற்று வழிநடத்தும் சிங்களத்தின் இராணுவத் தளபதிக்கு இத்தகைய அரசு கெளரவத்தை வழங்கியுள்ள இந்திய அரசின் செயலை புலிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

சிறிலங்கா அரசின் இராணுவ வழித்தீர்வுக்கு ஒருபுறமும் கட்டுக்கடங்காத மனித உரிமை மீறல்களுக்கு மறுபுறமுமாக. உலகளாவிய ரீதியில் சிங்கள அரசு கண்டனங்களுக்கும் எச்சரிக்கைகளுக்கும் அதிகளவில் உள்ளாகி வருகின்றது. ஆயினும் இக்கண்டனங்களையும் எச்சரிக்கைகளையும் புறம் தள்ளி விட்டு அதிகளவிலான ஆட் கடத்தல்கள். படுகொலைகள், இன ரீதியான கைதுகள் என்பனவற்றை சிங்களப் படைகள் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றன. இந்த உண்மையை மூடி மறைப்பதில் அக்கறை காட்டும் சிங்கள அரசு தொடரும் போருக்கான பழியைத் தமிழரின் சுதந்திர இயக்கமான புலிகள் இயக்கத்தின் மீது சுமத்தி தனது இன அழிப்புப் போருக்கு உலகின் உதவியைக் கோரி நிற்கின்றது.

சிங்கள அரசின் இந்த கபட நோக்கத்தைப் பல ஐரோப்பிய நாடுகள் புரிந்துகொண்டு தமிழின அழிப்பற்குத் துணைபோகக்கூடிய உதவிகளை நிறுத்தியுள்ளன.

இந்த உண்மை இந்திய அரசிற்கும் நன்கு தெரியும். ஆயினும் தமிழர் பிரச்சினைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வே காணவேண்டும் எனக் கூறிக்கொண்டு அதற்கு மாறாக இராணுவ ரீதியாக சிறிலங்கா அரசிற்கு நம்பிக்கையூட்டும் இந்திய அரசின் செயற்பாடுகள் தமிழின அழிப்பிற்கே வழிகோலும்.

இந்திய அரசின் இந்த வரலாற்றுத் தவறானது ஈழத்தமிழர்களைத் தொடர்ந்தும் இன்னல்களுக்குள்ளாக்கி, ஒரு பாரிய இன அழிவு அபாயத்துக்குள் அவர்களைத் தள்ளி விடும் என்பதை இந்திய அரசிற்கு சுட்டிக் காட்ட புலிகள் இயக்கம் விரும்புகின்றது. இந்திய அரசு புரியும் இந்த தமிழின விரோதச் செயலை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொண்டு அதற்கு தமது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என ஈழத்தமிழ் மக்கள் சார்பில் புலிகள் இயக்கம் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றது.

நாம் போர் நிறுத்த உடன் பாட்டிலிருந்து விலகவுமில்லை. போரைத் தொடங்கவும் இல்லை. எமது மக்க ளுக்கு எதிராக சிறிலங்கா அரசு தொடுத்துள்ள இன அழிப்புப் போருக்கு எதிராக தற்காப்புப் போரையே நடத்தி வருகின்றோம்.

நாம் இன்னமும் நார்வேயின் தலைமையிலான அமைதி வழி முயற்சி களிலிருந்து விலகவில்லை. நார்வே அரசின் தலைமையில் முன்னெடுக்கப்படும் சமாதான முயற்சிகளில் பங்கேற்க புலிகள் இயக்கம் தயாராகவே இருக்கின்றது.

இந்த நிலையில் அரசியலில் இராணுவ பொருளாதார ரீதியாக தொய்ந்து போயுள்ள சிறிலங்கா அரசிற்கு முட்டு கொடுக்கும் இந்திய அரசின் செயலானது ஈழத்தமிழ் மக்களை கோபத்துக்குள்ளாக்கி யுள்ளது.

புலிகளுடனான போரில் சிங்கள படைகள் இராணுவ ரீதியில் தொய்ந்து போவதை இந்தியா விரும்பவில்லை. என்ற இந்தியப் படையதிகாரிகளின் கூற்று சிங்களத்தின் போர் இயந்திரத்திற்கு முட்டு கொடுக்க முயலும் இந்திய அரசின் செயற்பாட்டையே வெளிப்படுத்துகின்றது.

இந்திய அரசின் இத்தகைய செயற் பாடுகளால் புத்தூக்கம் பெற்றுள்ள சிங்களப்படைகள் மேற்கொள்ளப் போகும் தமிழின அழிப்பிற்கு இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.thenseide.com/cgi-bin/Details.a...amp;newsCount=2

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறா?

இந்தியாவிற்குப் புலிகளின் கேள்வி

இந்திய அரசின் இத்தகைய செயற் பாடுகளால் புத்தூக்கம் பெற்றுள்ள சிங்களப்படைகள் மேற்கொள்ளப் போகும் தமிழின அழிப்பிற்கு இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.thenseide.com/cgi-bin/Details.a...amp;newsCount=2

ஈழத் தமிழர்கள் இந்திய அரசை நம்பி இருக்கவில்லை. புரிந்து கொண்டால் சரி

  • கருத்துக்கள உறவுகள்

:mellow: கறுப்பி,

இந்த தலைப்பு ஏற்கனவே இங்கு சொருகப்பட்டு விவாதிக்கப்பட்டதாக நினைவு. ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.