Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடேசன் அவர்களின் அறைகூவலை ஏற்போம் - புலம்பெயர் இளைஞர்கள்

Featured Replies

தமிழ் தேசியத்தை சிதைக்கும் ஆரியக் கருத்துக்களுக்கு எதிராக இலங்கை மண் போன் நூல்களை படைக்க வேண்டும் என்று அரசியற்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் அவர்கள் விடுத்த அறைகூவலை ஏற்போம் என்று புலம்பெயர்ந்து வாழும் புரட்சிகர சிந்தனை உள்ள இளைஞர்கள் உறுதி கூறி உள்ளார்கள்.

தமிழர்களின் பண்பாட்டை அழித்து இந்து மதத்தின் பெயரில் ஆரியர்கள் திணித்துள்ள பொய்களை அம்பலப்படுத்தும் பணிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையுள்ள புலம்பெயர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களுடைய குரலை அடக்குவதற்கு சில மதவெறியர்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில் தேசியத் தலைவர் அவர்களும், அரசியற்துறைப் பொறுப்பாளரும் தெரிவித்துள்ள கருத்துக்கள் தமக்கு உற்சாகத்தை ஊட்டுவதாக உள்ளன என்று இந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளார்கள். நடேசன் அவர்களுடைய அறைகூவலை ஏற்று மக்களுக்கு உண்மைகளை எடுத்துரைப்பதற்கு தொடர்ந்தும் உறுதியோடு பணியாற்றுவோம் என்றும் அவர்கள் கூறினார்கள்.

தமிழ் மன்னன் ஒருவன் ஆக்கிரமிப்பு மனோபாவம் ஒன்றுக்குப் பலியாக்கி அதில் உண்மைகளை திரிவுபடுத்தி பொய்மைகளை புனைவுபடுத்தி தமது இலக்கியக் கதையாடலுக்கான சுவையூட்டியாகச் சேர்த்துக் கொண்டவர்களின் முகத்திரையைக் கிழித்து உண்மையை அனைவருக்கும் உணரச் செய்த படைப்பு இது என்று தேசியத் தலைவர் இலங்கை மண் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இராமயணம், இதிகாசங்கள் போன்றவை தமிழர்களுக்கு எதிரான ஆக்கரமிப்பாளர்கள் திணிக்கப்பட்டவை என்றும் தேசியத் தலைவர் இலங்கை மண் நூலுக்கான வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: http://www.webeelam.com

தொடர்புபட்ட செய்தி:

ஆரியக் கருத்துக்கள் தமிழ் தேசியத்தை சிதைக்கின்றன - பா. நடேசன்

நேற்று கிளிநொச்சியில் நடந்த மாமனிதர் பொன் கணேசமூர்த்தியின் "இலங்கை மண்" என்று நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அந்த உரையிலே "வெளியிலே இருந்து தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட ஆரியக் கருத்துக்கள் தமிழ் தேசியத்தை சிதைப்பதாக பா. நடேசன் அவர்கள் தெரிவித்தார்.

குறிப்பாக வர்ணாச்சிரம தத்துவம், இராமாயணம் போன்றவைகள் தமிழ்தேசியத்தை இழிவு படுத்தி சிதைப்பதாக அவர் கூறினார். இலங்கை மண் என்று நூலின் மூலம் தமிழ் மன்னனை இழிவு படுத்தும் இராமாயணத்தை தோலுரித்த மாமனிதர் பொன் கணேசமூர்த்தி அவர்களை புலிகள் இயக்கத்தின் புரட்சிகர அணியில் உள்ள ஒரு வீரர் என்று பா. நடேசன் புகழ்ந்துரைத்தார்.

"பல இராமாயணங்கள் இருக்கின்ற போதும், அவைகள் எல்லாம் தமிழ் தேசியத்திற்கு எதிராக, தமிழ் தேசத்திற்கு எதிராக, தமிழ் மன்னர்களுக்கு எதிராக, எம்மை அசுரர்களாகக் காட்டுகின்ற பொய்யான, போலியான புனைகதைகளான விஞ்ஞான பூர்வற்ற கருத்துக்களையே வைத்திருக்கின்றன. இவைகளை நிராகரித்து எழுதப்பட்டுள்ள "இலங்கை மண்" விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான ஒரு நூலாக, விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்க்கின்ற நூலாக நாம் பார்க்கிறோம்" என்றும் பா. நடேசன் அவர்கள் மேலும் கூறினார்.

எமது கலை பண்பாட்டு விழுமியங்களை சீரழித்தவர்களுக்கு பொன் கணேசமூர்த்தி அவர்கள் தன்னுடைய நூலின் மூலம் நல்லதொடு சாட்டையடியைக் கொடுத்துள்ளார் என்று பா. நடேசன் குறிப்பிட்டார்.

இந்தியாவில் தமிழ்தேசியத்திற்கு எதிராக பரப்புரை செய்பவர்களுக்கு "இலங்கை மண்" போன்ற நூல்கள் நல்ல பதிலை கொடுக்கும் என்றும் பா. நடேசன் கூறினார். ஆரிய இந்துத்துவத்தின் பெயரில் தமிழர்களை அடக்கி வைத்திருக்க விரும்பும் பார்ப்பனிய சிந்தனை உள்ளவர்கள் இந்தியாவில் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வருவதும், அவர்களின் முன்னோர்கள் உருவாக்கிய இராமாயணத்தில் உள்ள பொய்களை அம்பலப்படுத்துவதாக இலங்கை மண் நூல் வெளிவந்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியப் போராட்டம் உச்சம் பெற்றுள்ள இந்த வேளையில் உலகம் எங்கும் உள்ள அறிஞர்களும், இளைஞர்களும் "இலங்கை மண்" போன்று படைப்புக்களை உருவாக்க வேண்டும் என்றும் பா. நடேசன் அவர்கள் அறைகூவல் விடுத்தார்.

  • Replies 65
  • Views 7.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ்மக்களே ஓடி வாருங்கள்

கொள்கையென்று வித்தால் எதுவுமே மிஞ்சாது என்பதால் புலிகளின் பெயரைப் பாவித்து திராவிட வியாபாரம் செய்வோம். முந்தினால் முந்துங்கள். பிந்தினாலும் சக்குப் பிடித்துப் போய் கிடைக்கும். இனாமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

30,40 வயது தாண்டியவர்கள் எல்லாம் இளைஞர்களாகவும், புலம்பெயர் தமிழ் இளைஞர்களின் சங்கமாகாகவும் தனித்து நின்று அறைகூவல் விடுக்கின்ற நிலையைப் பாரக்கின்ற போது, தமிழ்தேசியத்துக்கு எதிராக ராமசாமியின் கொள்கைப்படி, தலித் மாநாடு கூட்டிய இராயகரனின் கூட்டத்தையாவது பாராட்டலாம் போலிக்கின்றது. அதில் 20வது பேராவது போனார்கள்.

  • தொடங்கியவர்

பா. நடேசன் அவர்கள் தமிழ் தேசம் பற்றியும், தமிழ் தேசியம் பற்றியுமே பேசியிருக்கிறார்.

நாமும் தமிழ் தேசியமே பேசுகிறோம்.

பா. நடேசன் அவர்கள் தமிழ் தேசம் பற்றியும், தமிழ் தேசியம் பற்றியுமே பேசியிருக்கிறார்.

நாமும் தமிழ் தேசியமே பேசுகிறோம்.

ஆனால் ஈவேரா தமிழ் தேசியத்தை எப்போதும் ஆதரித்தது இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் புத்தியை இதிலும் காட்டுகின்றீர்களா? புலிகளின் பெயரை வைத்து வியாபாரம் செய்கின்ற ஆட்களைத் தான் சொல்கின்றோம்.

திரு.நடேசன் பேசுகின்ற தமிழ் தேசியம் உண்மையானது. நேர்மையானது. ஆனால் உங்களின் தமிழ்தேசியம் அப்படியா?

கன்னடர்களிடம் அடகுவைக்கப்ப்டட தமிழ் தேசியம் என்ற போலி முகமூடி தானே அது. தமிழ் தேசியம் பற்றிக் கதைப்பதற்கு தமிழுக்கு ஏதும் சாதித்திருக்க வேண்டும். தமிழ்படங்களுக்குத் தமிழ்பெயர் வைக்கச் சொல்லி விட்டு, ஆங்கிலப்பாடசாலைக்குப் பிள்ளைகளை அனுப்புகின்றவர்களோ, அல்லது விளம்பரப்பலகைக்குத் தார் பூசுகின்றவர்கள் எல்லாம் தமிழ் தேசியவாதி ஆகிட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இதே கருத்துகளோடும் தேசிய உணர்வோடும் ஏற்கனவே சில புலம்பெயர்ந்த எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நூல்களுக்கு இதுவரை ஒரு சிறு விமர்சனத்தைத்தானும் செய்யாது புலம்பெயர்ந்தவர்களின் மீடியாக்கள் புறக்கணிப்புச் செய்கின்றன. எதை எழுதினாலும் அதை எழுதியவர் கொஞ்சம் தமக்கு நெருக்கத்திலுள்ளவராயிருந்த

இதுவந்து இந்தியாவில உள்ள ஈவோ ராமசாமி சீடர்கள் தொண்டர்களை திருப்த்திப்படுத்த சொன்ன ஒன்றாகவும் எடுக்கலாம். ஆடுற ஆட்டை ஆடிக் கறக்க வேண்டும் பாடுற பாசுவை பாடிக் கறக்க வேண்டும் என்பதை புலிகளிற்கு நாங்கள் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. எனவே இப்படி எதாலும் சொன்னா அதாலை தூண்டப்பட்டு அதிக ஆதரவு அங்குள்ள புளித்துப் போன திராவிடக் கொள்கைகாரர் ஓடித்திரியலாம் தமிழ்நாட்டில. எல்லா வழிகளிலும் உதவியை தேடுவது தான் முக்கியம். அதை இந்து மதமே எங்களுக்கு போதிக்குது. இக்கட்டான இந்த நிலையில் இப்படி ஏதாவது 1...2 அறிக்கைகள் வரலாம் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம்.

ஆனால் இறுதியில் அந்த எல்லாம் வல்ல பரம்பொருளின் ஆணையில் இந்துக் குடியரசாக சுதந்திர தமிழீழம் நாளை மலர்ந்தே தீரும் அதை எவராலும் தடுக்க முடியாது. எல்லாம் எப்பவோ முடிந்த முடிபு. இந்த இடைப்பட்ட காலத்தில சபேசன் போன்றவர்கள் பாடு கொண்டாட்டம் தான். அவரைப் போன்றவர்களை நினைச்சா சிரிக்கிறதா அழுகிறதா எண்டு தெரியவில்லை. :)

என்ன என்ன நூல்கள் யாரால் எழுதப்படுள்ளன என்னும் விபரத்தைத் தந்தால் அவை பற்றிய விமரீசனங்களை இணையத்தினூடாக எடுதுச் செல்ல முடியும்.புலம் பெயர் சூழலில் ஊடகங்களின் போக்கையும் நாம் தான் மாற்ற வேண்டும்.எவையும் தானாக நடை பெற்று விடா

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் புத்தியை இதிலும் காட்டுகின்றீர்களா? புலிகளின் பெயரை வைத்து வியாபாரம் செய்கின்ற ஆட்களைத் தான் சொல்கின்றோம்.

திரு.நடேசன் பேசுகின்ற தமிழ் தேசியம் உண்மையானது. நேர்மையானது. ஆனால் உங்களின் தமிழ்தேசியம் அப்படியா?

கன்னடர்களிடம் அடகுவைக்கப்ப்டட தமிழ் தேசியம் என்ற போலி முகமூடி தானே அது. தமிழ் தேசியம் பற்றிக் கதைப்பதற்கு தமிழுக்கு ஏதும் சாதித்திருக்க வேண்டும். தமிழ்படங்களுக்குத் தமிழ்பெயர் வைக்கச் சொல்லி விட்டு, ஆங்கிலப்பாடசாலைக்குப் பிள்ளைகளை அனுப்புகின்றவர்களோ, அல்லது விளம்பரப்பலகைக்குத் தார் பூசுகின்றவர்கள் எல்லாம் தமிழ் தேசியவாதி ஆகிட முடியாது.

திரு துயவன்.

உங்களுடைய கருத்தில் எந்த யதார்த்தமுமில்லை! திரிவுபாடுமட்டுமே கிடக்கின்றது.

அ. ஆ. தவறவு எனவே இ. வும் தவறு என்றுதான் நீங்கள் சொல்லுகின்றீர்கள். இது எவ்வாறு ஒரு ஆரோக்கியமான விவாதமாக இருக்கும். நீங்கள் சபேசன் எதைபற்றி எழுதினாலும். இராமசாமியையும் மறைமுகமாக கருணாநிதியையும் தான் துக்கி முன் நிறுத்துகின்றீர்கள்.

நான் உங்களை ஒன்றே ஒன்று மட்டும் கேட்கின்றேன். இந்த இருவரையும் விட்டு விட்டு உங்களால் விவாதம் செய்ய முடியாதா? ஆரியம் தமிழ்மீது திட்டமிட்டு எத்தனையோ அழிவுகளை செய்தது.

இல்லை ஆரியம் அவ்வாறு செய்யவில்லை ஆரியமும் இந்து மதமும் தமிழரை பண்டுத்தியுள்ளது............... இந்த உங்களுடைய சொந்த கருத்தை இராமசாமியையும் கருயாநிதியையும் இருக்காமல் . எவ்வாறு பண்படுத்தியது என்பதை உங்களால் முன்வைக்க முடியுமானால். உங்களின் விவாதம் ஆரொக்கியமானதாக அமையும் வாசிக்கும் எமக்கும் ஏதாவது நன்மை பயக்கும். இதை எதிர்காலத்தில் செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்பு என்னிடம் இருக்கின்றது. அரைத்த மாவை மீண்டும் மீண்டும் அரைக்க மாட்டீர்கள் என உங்கள் மீது நம்பிக்கை வைக்கிறேன்.

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்

இதுவந்து இந்தியாவில உள்ள ஈவோ ராமசாமி சீடர்கள் தொண்டர்களை திருப்த்திப்படுத்த சொன்ன ஒன்றாகவும் எடுக்கலாம். ஆடுற ஆட்டை ஆடிக் கறக்க வேண்டும் பாடுற பாசுவை பாடிக் கறக்க வேண்டும் என்பதை புலிகளிற்கு நாங்கள் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. எனவே இப்படி எதாலும் சொன்னா அதாலை தூண்டப்பட்டு அதிக ஆதரவு அங்குள்ள புளித்துப் போன திராவிடக் கொள்கைகாரர் ஓடித்திரியலாம் தமிழ்நாட்டில. எல்லா வழிகளிலும் உதவியை தேடுவது தான் முக்கியம். அதை இந்து மதமே எங்களுக்கு போதிக்குது. இக்கட்டான இந்த நிலையில் இப்படி ஏதாவது 1...2 அறிக்கைகள் வரலாம் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம்.

ஆனால் இறுதியில் அந்த எல்லாம் வல்ல பரம்பொருளின் ஆணையில் இந்துக் குடியரசாக சுதந்திர தமிழீழம் நாளை மலர்ந்தே தீரும் அதை எவராலும் தடுக்க முடியாது. எல்லாம் எப்பவோ முடிந்த முடிபு. இந்த இடைப்பட்ட காலத்தில சபேசன் போன்றவர்கள் பாடு கொண்டாட்டம் தான். அவரைப் போன்றவர்களை நினைச்சா சிரிக்கிறதா அழுகிறதா எண்டு தெரியவில்லை. :)

மதங்கள் என்பவை உலகில் எல்லா பாகங்களிலும் மலிந்து விட்டது. ஏன் என்ற கேள்வியை எங்கே மனிதன் கேட்க தொடங்கினானோ....... அங்கே எல்லாம் மதவாதிகள் மறைய தொடங்கிவிட்டார்கள். அந்த கேள்வி இன்னமும் எளாத நாடுகளில் மட்டுமே தள்ளாடி கொண்டு நிற்கின்றது. இப்போது காசு கொடுத்துத்தான் செர்ஜ்ஜிற்கே அழைகின்றார்கள். உலகமயமாதலில் மற்றைய நாடுகளுடன் சார்ந்து நிற்கவேண்டியே நிர்ப்ந்தம் அனைத்து நாடுகளுக்கும் உள்ளது. அப்போது பகத்தறிவு தானாக பகிர்ந்து கொள்ளப்படும் அப்போது மதமென்ற போர்வையால் போர்த்தபட்ட மாயை தானக நீங்கும். இந்து மதத்தை முன்னுறுத்திய தமிழுழம் உங்களுடைய கற்பனை மட்டுமமாகவே எஞ்சும். கவலைபடாதீர்கள் வித்தியாசமான கற்பனை என்ற முறையில் எமக்குள் அது சிலநேரம் எஞ்சும்!

அய்யாக்களே அண்ணாக்களே.. ஏன் இப்படி அடிபடுறீங்கள்?

நீங்கள் இதில எழுதினா உடனே மாறிடுவாங்களாக்கும்..

அதெல்லாம் தானா உணரவேணும்..

எப்ப பார்த்தாலும் ஏன் எங்கட மண்டையை காய

வைக்கிறீங்கள்?

என்னடா வாழ்க்கை இது வெங்காயம்... :)

ஆரியம் தமிழ்மீது திட்டமிட்டு எத்தனையோ அழிவுகளை செய்தது.

ஆரியம் தமிழ் மீது திட்டமிட்டு அழிவுகளை செய்தது எண்டு உங்களின் கூற்றை ஒரு வாதத்துக்காக எடுத்து கொள்வோம்...

அப்போ அது சொல்லும் செய்தி என்ன எண்றால்

  1. ஆரியர் பலமான அறிவு படைத்தவர்கள்... சிந்தனை வளம் மிக்கவர்கள்...!!
  2. தமிழர்கள் பலவீனமான அறிவு படைத்தவர்கள்.... மற்றவனின் சிந்தனைகளை தங்களாக்கி கொண்டவர்கள்...
  3. படைப்புகளை எல்லாம் தமிழர்கள் சுயமாக ஆக்கவில்லை, ஆரியரின் அறிவு பின் புலத்தில் தான் அவர்களால் ஆக்க முடிந்தது..

இப்படி என்னால் சிந்திக்க முடியவில்லை... அப்படி சிந்திப்பது கூட இயலாமையின் வெளிப்பாடு... தமிழன் கப்பல் கட்டினான், கடல் கடந்தான், கட்டிட கலையில் சிறந்து விளங்கினான், எண்டு எல்லாம் படிக்கும் போது ஆரியன் மட்டும் தமிழனை ஏமாத்தினான் என்பதை நம்ப முடியவில்லை...

வேணும் எண்றால் தமிழனின் சரக்கை (ஆரிய) வட இந்தியன் பயன் படுத்தினான். மாற்றான் பயன் படுத்தியவற்றை தமிழன் ( திராவிடன் எண்று படித்து கொள்ளுங்கள்) தனது எண்று சொல்லி கொள்ள இப்போ விரும்பவில்லை...

உதாரணமாக உபநிடதங்களில் பெருண்பாண்மையானவை திராவிட உபநிடதங்கள். அதில் சில வடக்கர்களின்(ஆரிய) சிந்தனையையும் கலந்து எல்லாவற்றையும் சமஸ்கிருத்தத்தில் எழுதி வைத்து இருக்கிறார்கள்... இப்போ உபநிடதங்கள் எல்லாம் ஆரியர்களின் சொத்து எண்று நீங்கள் எல்லாம் சொல்லி கொள்கிறீர்கள்... அது சரியானதா...??

  • கருத்துக்கள உறவுகள்
:):D:D:D குறுக்குப் போன்ற புலம்பெயர் "புத்திஜீவிகளின்" (?) கருத்துக்களைத் தமிழீழத்தலைமை காதில் வாங்கிக் கொள்வதில்லை-ஏனென்று இப்போது தெரிகிறது. அது இருக்கட்டும், நிர்வாகம் இக்கருத்தை இப்படியே வைத்திருக்கப் போகிறதா அல்லது கத்தரிக்குமா?
  • கருத்துக்கள உறவுகள்

என்ன என்ன நூல்கள் யாரால் எழுதப்படுள்ளன என்னும் விபரத்தைத் தந்தால் அவை பற்றிய விமரீசனங்களை இணையத்தினூடாக எடுதுச் செல்ல முடியும்.புலம் பெயர் சூழலில் ஊடகங்களின் போக்கையும் நாம் தான் மாற்ற வேண்டும்.எவையும் தானாக நடை பெற்று விடா

நாரதர் அவர்களின் விசாரிப்பிற்கு நான் தனிப்பட்டமுறையில்தான் பதிலெழுத முடியும். இந்தக்களத்தில் எழுத விரும்பவில்லை. முடிந்தால் உங்கள் விபரங்களைத் தரவும். பதிலெழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

:) இன்று தமிழ்த்தேசியத்தின் மொத்த வடிவமும் புலிகள்தான். அவர்கள் எங்கள் எல்லாரையும் விடத் தமிழுக்கு அதிகம் நண்மை செய்து இருக்கிறார்கள். ஆனால் நாம் என்ன செய்கிறோம் ? புலிகளைக் கேலி செய்து" கையாளாகாத்தனம்" என்று சொல்கிறோம். இயலாமையின் வெளிப்பாடுதான் இந்த அறிக்கைகள் என்று சொல்கிறோம். எமக்கு தமிழ்த் தேசியமும், சுதந்திரமும் தேவையில்லை என்றால் நாம் ஒதுங்கிக் கொள்வதுதான் நல்லது. அதை விடுத்து தேசியத்தின் இயந்திரத்தையே பழிப்பது கேவலம்.

ஆரியத்தின் ஒரு வடிவம்தான் எம்மை அழித்து ஏப்பம் விடத்துடிக்கும் சிங்கள இனம் என்பதை நாம் ஏனோ இலகுவாக மறந்து விடுகிறோம்.

ஆரிய ஆக்கிரமிப்பும் அதன் விச்தரிப்பும் இந்தியா முழுவதும் பரவிக்கிடக்கிறதே ? ஏன் யாருக்கும் தெரியவில்லை. அதற்கு எதிராக யார் இயங்கினாலும் அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும். வெறுமனே இந்துமதம் பரப்பபட்டது என்பதால் ஆரிய விச்தரிப்பை நியாயப்படுத்த முடியாது.

சபேசன் பறவாய் இல்லை கலக்கிட்டிங்கள் போங்கள்

தூயவன் விடதிங்கள்................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசனால் நடேசன் கூறியவை திரிபுபடுத்தப்பட்டுள்ளது..

சபேசனால் நடேசன் கூறியவை திரிபுபடுத்தப்பட்டுள்ளது..

நடேசன் ஜயாவால் கூற முற்ப்பட்ட கருத்தும் சபேசனின் கருதும் ஒன்று தான் ஆனால் நடேசன் ஜய்யா புதிசாலிதனமாக் பேசி இருக்கிறார் சபேசன் எப்படா என்று காத்து இருந்து தனது ஆதங்கத்தை கொட்டி விட்டார்

:):D:D

நடேசன் ஜயாவால் கூற முற்ப்பட்ட கருத்தும் சபேசனின் கருதும் ஒன்று தான் ஆனால் நடேசன் ஜய்யா புதிசாலிதனமாக் பேசி இருக்கிறார் சபேசன் எப்படா என்று காத்து இருந்து தனது ஆதங்கத்தை கொட்டி விட்டார்

:D:D:D

ஆ! தங்கத்தைக் கொட்டிவிட்டாரா? அள்ளியெடுக்க ஏனையா தயக்கம்.? :lol::lol:

ஆனால் இறுதியில் அந்த எல்லாம் வல்ல பரம்பொருளின் ஆணையில் இந்துக் குடியரசாக சுதந்திர தமிழீழம் நாளை மலர்ந்தே தீரும் அதை எவராலும் தடுக்க முடியாது. எல்லாம் எப்பவோ முடிந்த முடிபு. இந்த இடைப்பட்ட காலத்தில சபேசன் போன்றவர்கள் பாடு கொண்டாட்டம் தான். அவரைப் போன்றவர்களை நினைச்சா சிரிக்கிறதா அழுகிறதா எண்டு தெரியவில்லை. :lol:

மதம் என்பது ஒரு நம்பிக்கை. ஆகவே மதம் மீது அதீத நம்பிக்கை வைக்காமல் நம் விடுதலைக்கு ஆக வேண்டிய நடவடிக்கைகளை செய்வது நன்று..!

இலங்கையை ஒரு பௌத்த சிங்கள நாடாக மாற்றியதால் ஏற்பட்ட பிரச்சினையை நாங்கள் மறக்கக்கூடாது. இதே பிரச்சினை மலேசியாவிலும்.. இந்நிலையில் வரும் காலத்தில் அமையும் தமிழ் ஈழ அரசு ஒரு இந்து அரசாக அமையும் என்று இங்கு ஒரு ஆள் அறை கூவல் விடுறார். என்ன கொடுமை...? இப்படியே நாம அடிசுக்கிட்ட மஹிந்த வடிவா கிளிநோச்சியிலே கொடி ஏத்துவார்.

***

இனவாத தோற்றமே மற்றய இனத்தின் பலவீனம்தானே... தமிழன் புத்திசாலியாகவும் எதிர்க்கால சிந்தனையோடு இருந்து இருந்தால் இனவாதம் சீண்டி கூட இருந்து இருக்க மாட்டாது... அதுக்கு தமிழர் தலைமை பிரிட்டிசாரிடம் கையொப்பம் இட்டவைகளே போதுமான ஆதாரம்...

தூரநோக்கு இல்லாவிட்டால் யாரும் யாரையும் கவிட்டுவிட முடியாது... தூரநோக்கு இருந்து இருந்தால் தமிழன் சிங்களவனிடம் கவிண்டு இருக்கவும் முடியாது...

மேலே தணிக்கை செய்யப்பட்ட கருத்திற்கான பதில் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

  • தொடங்கியவர்

எமது தேசியத் தலைவரும், அரசியற்துறைப் பொறுப்பாளரும் நேரடியாகவே சொல்லிவிட்டார்கள். இதிலே திரிவுபடுத்துவதற்கு ஒன்றுமே இல்லை.

நீங்கள்தான் விடுதலைப் புலிகள் இந்து மதத்தை எதிர்க்கிறார்கள் என்று திரிவுபடுத்துகிறீர்கள்.

விடுதலைப் புலிகள் தமிழினத்தை இழிவுபடுத்துகின்ற அனைத்தையும் எதிர்க்கிறார்கள். தமிழினத்தை இழிவுபடுத்துகின்ற விடயங்கள் மதத்தின் வடிவத்திலோ, வேறு எந்த வடிவத்திலோ வந்தாலும் அவர்கள் எதிர்ப்பார்கள்.

தமிழ் தேசியத்தை சிதைக்கின்ற விடயங்களை தன்னிடம் இருந்து நீக்க வேண்டிய இந்து மதத்தின் உடனடிக் கடமை. இதற்குத்தான் இந்துக்கள் குரல் கொடுக்க வேண்டும்.

அதை விட்டு புலிகள் அவசரப்படுகிறார்கள் என்று சொல்லக்கூடாது. என்னுடைய பார்வையில் விடுதலைப் புலிகள் மிக மிக நிதானமாகவே செயற்படுகிறார்கள்.

ஏமாளிகளும் கோமாளிகளும் இருக்கும் வரைக்கும் உதுக்கு முடிவு வராது...

திராவிடரிடம் இந்து மதம் பூந்ததினால் வந்த வினை... மதங்களை அழிப்பதுதான் இமக்குள்ள தலையாய கடமை.

மதங்களை அழியுங்கள்.... அறிவு தானே வளரும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத்தை சிதைக்கும் ஆரியக் கருத்துக்களுக்கு எதிராக இலங்கை மண் போன் நூல்களை படைக்க வேண்டும் என்று அரசியற்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் அவர்கள் விடுத்த அறைகூவலை ஏற்போம் என்று புலம்பெயர்ந்து வாழும் புரட்சிகர சிந்தனை உள்ள இளைஞர்கள் உறுதி கூறி உள்ளார்கள்.

தமிழர்களின் பண்பாட்டை அழித்து இந்து மதத்தின் பெயரில் ஆரியர்கள் திணித்துள்ள பொய்களை அம்பலப்படுத்தும் பணிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையுள்ள புலம்பெயர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களுடைய குரலை அடக்குவதற்கு சில மதவெறியர்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில் தேசியத் தலைவர் அவர்களும், அரசியற்துறைப் பொறுப்பாளரும் தெரிவித்துள்ள கருத்துக்கள் தமக்கு உற்சாகத்தை ஊட்டுவதாக உள்ளன என்று இந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளார்கள். நடேசன் அவர்களுடைய அறைகூவலை ஏற்று மக்களுக்கு உண்மைகளை எடுத்துரைப்பதற்கு தொடர்ந்தும் உறுதியோடு பணியாற்றுவோம் என்றும் அவர்கள் கூறினார்கள்.

தமிழ் மன்னன் ஒருவன் ஆக்கிரமிப்பு மனோபாவம் ஒன்றுக்குப் பலியாக்கி அதில் உண்மைகளை திரிவுபடுத்தி பொய்மைகளை புனைவுபடுத்தி தமது இலக்கியக் கதையாடலுக்கான சுவையூட்டியாகச் சேர்த்துக் கொண்டவர்களின் முகத்திரையைக் கிழித்து உண்மையை அனைவருக்கும் உணரச் செய்த படைப்பு இது என்று தேசியத் தலைவர் இலங்கை மண் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இராமயணம், இதிகாசங்கள் போன்றவை தமிழர்களுக்கு எதிரான ஆக்கரமிப்பாளர்கள் திணிக்கப்பட்டவை என்றும் தேசியத் தலைவர் இலங்கை மண் நூலுக்கான வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: http://www.webeelam.com

தொடர்புபட்ட செய்தி:

ஆரியக் கருத்துக்கள் தமிழ் தேசியத்தை சிதைக்கின்றன - பா. நடேசன்

நேற்று கிளிநொச்சியில் நடந்த மாமனிதர் பொன் கணேசமூர்த்தியின் "இலங்கை மண்" என்று நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அந்த உரையிலே "வெளியிலே இருந்து தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட ஆரியக் கருத்துக்கள் தமிழ் தேசியத்தை சிதைப்பதாக பா. நடேசன் அவர்கள் தெரிவித்தார்.

குறிப்பாக வர்ணாச்சிரம தத்துவம், இராமாயணம் போன்றவைகள் தமிழ்தேசியத்தை இழிவு படுத்தி சிதைப்பதாக அவர் கூறினார். இலங்கை மண் என்று நூலின் மூலம் தமிழ் மன்னனை இழிவு படுத்தும் இராமாயணத்தை தோலுரித்த மாமனிதர் பொன் கணேசமூர்த்தி அவர்களை புலிகள் இயக்கத்தின் புரட்சிகர அணியில் உள்ள ஒரு வீரர் என்று பா. நடேசன் புகழ்ந்துரைத்தார்.

"பல இராமாயணங்கள் இருக்கின்ற போதும், அவைகள் எல்லாம் தமிழ் தேசியத்திற்கு எதிராக, தமிழ் தேசத்திற்கு எதிராக, தமிழ் மன்னர்களுக்கு எதிராக, எம்மை அசுரர்களாகக் காட்டுகின்ற பொய்யான, போலியான புனைகதைகளான விஞ்ஞான பூர்வற்ற கருத்துக்களையே வைத்திருக்கின்றன. இவைகளை நிராகரித்து எழுதப்பட்டுள்ள "இலங்கை மண்" விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான ஒரு நூலாக, விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்க்கின்ற நூலாக நாம் பார்க்கிறோம்" என்றும் பா. நடேசன் அவர்கள் மேலும் கூறினார்.

எமது கலை பண்பாட்டு விழுமியங்களை சீரழித்தவர்களுக்கு பொன் கணேசமூர்த்தி அவர்கள் தன்னுடைய நூலின் மூலம் நல்லதொடு சாட்டையடியைக் கொடுத்துள்ளார் என்று பா. நடேசன் குறிப்பிட்டார்.

இந்தியாவில் தமிழ்தேசியத்திற்கு எதிராக பரப்புரை செய்பவர்களுக்கு "இலங்கை மண்" போன்ற நூல்கள் நல்ல பதிலை கொடுக்கும் என்றும் பா. நடேசன் கூறினார். ஆரிய இந்துத்துவத்தின் பெயரில் தமிழர்களை அடக்கி வைத்திருக்க விரும்பும் பார்ப்பனிய சிந்தனை உள்ளவர்கள் இந்தியாவில் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வருவதும், அவர்களின் முன்னோர்கள் உருவாக்கிய இராமாயணத்தில் உள்ள பொய்களை அம்பலப்படுத்துவதாக இலங்கை மண் நூல் வெளிவந்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியப் போராட்டம் உச்சம் பெற்றுள்ள இந்த வேளையில் உலகம் எங்கும் உள்ள அறிஞர்களும், இளைஞர்களும் "இலங்கை மண்" போன்று படைப்புக்களை உருவாக்க வேண்டும் என்றும் பா. நடேசன் அவர்கள் அறைகூவல் விடுத்தார்.

இதில் நான் சிவப்பால் சுட்டிக்காட்டியவை சபேசனின் இடைச்செருகலாகும்.

விடுதலைப்புலிகளின் கருத்துக்களோடு தாங்கள் விளக்கம் கொடுப்பதாக எண்ணிச் சேர்க்கின்ற இப்படிப்பட்ட கள்ளவேலைகள் குறித்து அனைவரும் அவதானமாகவே இருக்கவேண்டும். இவர்களின் கருத்துக்களையும் புலிகளின் கருத்துக்களாக தெரியவைக்கின்ற ஒரு மாயத்தோற்றமே இது.

நானும் சபேசன் சொல்வது போல திரு.நடேசன் அண்ணை சொல்லீயருக்கின்றாரோ என நம்பிஎல்லா இணையத்தளங்களிலும் தேடி அலுத்துவிட்டேன். மற்றும்படி பொன்.கணேசமூர்த்திக்கு கொடுக்கப்பட்ட இதே மரியாதை முன்பும் வழங்கப்பட்டது தான். புதிதாக ஒன்றையும் புலிகள் சொல்லவில்லை. ஆனால் இதை ஏதோ புலிகள் அறைகூவல் விடுப்பதாகவும் புலம்பெயர் இளைஞர்கள் கிளர்்நது எழுவதாகவும் கதை விடுகின்றார். அப்படி எந்தச் சம்பவுமும் சபேசனின் கணனியறைத் தாண்டி நடந்ததாக அறியமுடியவில்லை. சிலவேளை ஒருபேப்பர்காரர்கள் கிளர்ந்து எழுந்திருக்கலாம்.

சாதி, சீதனம், பெண்ணடிமைத்தனம் போன்றவற்றிற்கு காப்பரணாக நின்று அநீதியில் அமைந்த பழைய சமூக உறவுகளைத் தகர்த்தெறிந்து, புதிய சமூக உறவுகளைக் கட்டியெழுப்பி, புதிய புரட்சிகரமான கருத்துக்களை மக்களதுமனதைப் பற்றிக்கொள்ளும் விதத்தில் முன்வைத்தார்.

தேசியத்தலைவர் தெளிவாகவே சொல்கின்றார். அவரது கருத்தில் மதங்களைப் பற்றி ஏதுவுமே சொல்லப்படவில்லை. ஆனால் இங்கே சிலர் புலிகளின் கருத்துக்களைத் திரிவுபடுத்தி ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம், புலிகளுக்கு அவமரியாதை ஏற்படுத்த முயல்கின்றனர்.

ஒரு காலத்தில் வைணவர்களும், சைவர்களும் அடிபட்டோம். முரண்பட்டோம். ஆதிசங்கரர் வந்து அனைத்தையும் ஒன்றிணைத்து பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க முயன்றார். அதன் ஒரு வெளிப்பாடாகத் தான் தமிழ்மக்களின் அடையாளங்கள் தொலைந்து போனதாக நான் நம்புகின்றேன்.

இங்கே திராவிடக்குஞ்சுகள் செய்கின்ற சதி என்பது நயவஞ்சகமானது. காலம்காலமாக அசுரர்கள், என்போர், பயங்கரமானவர்கள் என்ற தோற்றத்தை மக்களிடம் வளர்க்கப்பட்ட புராணக்கதைகளை "டேய்! உன்னைத் தான்டா அவன் அசுரன் என்கின்றான்" என்று தமிழ்மக்களை நோக்கி திசைதிருப்பி விடுவதன் மூலம் தங்களின் கொள்கையில்லாத்தன்மையைக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். பயங்கரமாகச் சித்தரிக்கப்பட்டவர்கள் தாங்கள் தான் எனத் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்படுகின்ற உணர்வின் மூலம், மக்களிடையே பிரிவினைகளை உருவாக்கி அதில் குளிர்காய்ந்து இன்பம் காண்கின்றார்கள் இந்தத் திராவிடக்குஞ்சுகள். மற்றும்படி யாருமே தமிழர்களை அசுரன் என்று கருதியதாக இல்லை.

திராவிடன் என்றால் தமிழர்கள் மட்டும் என்றில்லைத் தானே. ஏன் கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகளுக்கு இந்த அருசரன் குறித்த எண்ணம் தங்களைச் சாடுகின்றது என்ற எண்ணம் வரவில்லை? ஏன் என்றால் ராமசாமி பிரிக்க முனைந்ததும், சிதைக்க முனைந்ததும் தமிழினத்தை மட்டும் தான். அதன் பலனை இன்று மெதுவாகவெனும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

  • தொடங்கியவர்

தூயவன் சிவப்பில் சுட்டியிருப்பவை இடைச் செருகல் அல்ல. அவைகள் செய்தியும், செய்தி பற்றிய கருத்தும் ஆகும்.

ஒரு செய்தியை தருகின்ற போது, அது பற்றிய எமது கருத்தையும் சொல்வது தவறு அல்ல.

பா. நடேசன் அவர்கள் இந்தியாவில் எமக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்பவர்களுக்கு இந்த இலங்கை மண் நூல் ஒரு நல்ல பதிலடி என்று குறிப்பிட்டார்.

காங்கிரஸ்காரர்களுக்கு "இலங்கை மண்" ஒரு பதிலடி அல்ல. ஆரியத்தை முன்னிறுத்தி, தமிழ் மன்னர்களை அரக்கர்கள் என்று சொல்லும் பார்ப்பனிய சிந்தனை கொண்டவர்களுக்குத்தான் "இலங்கை மண்" ஒரு பதிலடி. இதை புரிந்து கொள்வது ஒன்றும் கடினம் அல்ல. இதை நாம் சுட்டிக்காட்டியிருக்கிறோம்.

இராவணனை அசுரன் என்று இந்து மதம் சொல்கிறது. அசுரர்கள் பயங்கரமானவர்கள் என்று இந்து மதம் சொல்கிறது.

இவைகளை மறுத்து தமிழ் மன்னர்களையே அசுரர்கள் என்று ஆரியம் இழிவுபடுத்திவிட்டதாக எமது தேசிய இயக்கம் வெளிப்படையாக சொல்லி விட்டது. இதிலே யாருக்கும் எந்த சந்தேகமும் வராத வண்ணம் மிகத் தெளிவாகச் சொல்லி விட்டார்கள்.

அசுரன் என்று ஆரியம் கூறுகின்ற இராவணன் ஒரு தமிழனே என்று இன்றைக்கு ஈழத்தில் எந்த திராவிடக் குஞ்சும் சொல்லவில்லை. புலிகள் சொல்கிறார்கள்.

புலிகள் தமிழ் மக்களை திசை திருப்பி பிரிவினையை வளர்க்கிறார்கள் என்று நான் நம்பவில்லை. அவர்கள் நிதானமாக மக்களுக்கு உண்மையை சொல்லி தமிழ் தேசியத்தை மேலும் பலப்படுத்துகிறார்கள்.

மற்றும்படி இங்கே பெரியாரைப் பற்றி சம்பந்தமில்லாமல் சிலர் ஏன் பேசுகிறார்கள் என்று புரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.