Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

3516157464f2800264wm1.jpg

விடியலுக்காய் விழித்தெழுவோம்..!

சிங்கள பேரினவாத பயங்கரவாத அரசு திணித்துள்ள போர் எமது தாயக மண்ணை இடைவிடாது துரத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில்.. எமது மக்களின் ஒரே அபிலாசையான தனித் தமிழீழம் நோக்கிய நகர்வுகள் வீறுபெற்று எமது மக்களின் நீண்ட நாள் துயரங்கள் நீங்கி.. சுதந்திர தேசம் இப்புத்தாண்டோடு மலர அனைவரும் ஓரணியில் நின்று பாடுபடுவோமாக..!

--------------------

13-04-2008 தமிழ் சித்திரை புத்தாண்டு தினமாகும்.

இதனை முன்னிட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியற்துறைப் பொறுப்பாளர் நடேசன் வழங்கிய விசேட செய்தி இங்கு: http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry401187

கனேடியப் பிரதமர் வழங்கிய செய்தி இங்கு: http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25285

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சித்திரை புத்தாண்டை யாழ். களத்தின் மூலம் ஞாபகப்படுத்திய நெடுக்காலபோவானுக்கு நன்றி. யாழ்.களத்திலுள்ள அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்புத்தாண்டு எல்லா தமிழ் நெஞ்சங்களுக்கும் இனிதே மலர வாழ்த்துக்கள்.

tny06.gif

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சித்திரை புத்தாண்டை யாழ். களத்தின் மூலம் ஞாபகப்படுத்திய நெடுக்காலபோவானுக்கு நன்றி. யாழ்.களத்திலுள்ள அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்களோட நிற்காமல்.. தாயகக் கடமைகளை ஏற்று கொண்டு செயற்படுத்த மன உறுதியை வளர்த்துக் கொண்டு செயற்பட உறுதி பூணுறதுதான் எதிர்பார்க்கப்படுகுது.. இன்றைய புத்தாண்டு வேளையில்..!

Edited by nedukkalapoovan

அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

எல்லோருக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்...

எல்லோருடைய கனவும் சீக்கிரம் நிறைவேற இறைவனை பிரார்த்திப்போம்

யாழ்கள உறவுகளுக்கு என் இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

சித்திரைப் புத்தாண்டினைக் கொண்டாடும் யாழ்கள அனைத்துள்ளங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

மழையும், குளிரும், பனியும் மறைந்து மஞ்சள் வெயில் கண்டு உயிரினங்கள் கொஞ்சிக் குதூகலிக்க வையகம் சிலிர்க்கும் இளவேனிலின் வருகைக்குக் கட்டியம் கூறி இத்தரை மகிழ்ந்திட சித்திரை மலர்ந்துள்ளது.

தமிழர் வாழ்வோடும், வரலாறோடும் பின்னிப் பிணைந்த சித்திரையின் மாட்சிக்கு எத்தனையோ சாட்சியங்களை இலக்கியங்கள் கொண்டுள்ளன.

இந்திர விழா, வசந்த விழா என்றெல்லாம் கொண்டாடி களித்தது இச் சித்திரைத் திருநாளில்தான். திங்களையும், செங்கதிரையும் மாமழையையும் போற்றி இயற்கையோடு இயைந்து இன்புற்று வாழ்ந்த தமிழரின் சிறப்புக்குச் சித்திரைத் திருநாள் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

மதிமுக சார்பில் தமிழ்ப் பெருமக்களுக்கு சித்திரைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டமற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இல.கணேசன்:

பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உலகத்தில் முதன் முதலாக நாகரீகம் பண்பாடு தோன்றி வளர்ந்த நாடு நம் நாடு. 5,000 ஆண்டுக்கு முந்தைய புராணங்களில் கிரகங்களின் அசைவு குறித்து சொல்லப்பட்டுள்ளது. மிகிரர் வகுத்து அளித்த மிகிர சம்ஹிதா இன்றும் வானவியலுக்கு ஆதாரமாக உள்ளது.

காலக் கணக்கை வகுத்த நம் முன்னவர்கள் இந்த சித்திரை மாதத்தை ஒட்டிய காலம் ஆண்டு துவங்குவதாக கணித்தார்கள்.

அரசின் கொள்கை காரணமாக ஆண்டின் துவக்கத்தை மாற்றியமைக்காக ஆலய நடைமுறைகளில் குறிக்கிடுவது அத்துமீறிய செயல். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

ஆர்.எம். வீரப்பன்:

எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தனது வாழ்த்துச் செய்தியில்,

தை முதல்நாள் தான் தமிழர்களின் புத்தாண்டு தொடக்க நாள் என்றாலும் நீண்ட காலமாக தமிழ் மக்கள் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள்.

சித்திரை பிறக்கிற நாளன்று, இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் மத்திய அரசின் கல்வி நிலையங்களில் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துள்ளது.

இதைப் போன்றே, ஓகேனக்கல் குடிநீர் திட்டம் வருகிற ஆண்டில் பணி தொடங்கும். மேலும் கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களோடு ஏற்பட்டுள்ள நீர்வள சிக்கல்களும் முதல்வர் கருணாநிதியின் தீர்க்கமான நடவடிக்கைகளால் தீர்க்கப்படும்.

வருகிற ஆண்டுகள் தை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டாகத் தொடங்கும் என்று எம்.ஜி.ஆர். கழகத்தின் சார்பில் வாழ்த்துகிறேன்.

டாக்டர் சேதுராமன்:

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் டாக்டர் சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ் ஆண்டாக தைத் திங்கள் முதல் நாளை அரசு ஒருபுறம் ஆணை பிறப்பித்துள்ள நிலையில் இதனை தமிழ் ஆண்டாக அல்லாமல் சர்வாதாரி ஆண்டாக வரவேற்கலாம் என்று கூறியுள்ளார்.

சரத் குமார்:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இதுநாள் வரை தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வந்த சித்திரைத் திருநாள் என்பது தமிழ் மக்களின் பாரம்பரியத்தோடு இணைந்துவிட்ட திருநாளாகும்.

வேளாண்மை கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழர் வாழ்வில், வருகிற ஆண்டுக்குத் தேவையான முன் ஏற்பாடுகளில் புதுக்கணக்கு துவங்குவது, விளை நிலத்தை அபிவிருத்தி செய்வது போன்ற புதிய முயற்சிகள் தொடங்குவது இந்த சித்திரைத் திருநாளையொட்டிய சிறப்புக்களாகும்.

தமிழர் நலனைப் பேணிக் காப்பதில் முன்னிலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை அண்மைக் கால நிகழ்ச்சிகள் நமக்கு உணர்த்துகின்றன. எனவே ஓகேனக்கல் பிரச்சினையில் தமிழ் உலகம் காட்டிய ஒற்றுமை உணர்வு வளமான தமிழகத்தை உருவாக்குவதிலும் மேலோங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

அதே போல இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன், லட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர், இந்து இயக்க கூட்டமைப்பின் விநாயகர் வி.முரளி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நன்றி: தற்றிஸ்தமிழ்

இதை விட ஜெயலலிதா அம்மையாரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதை இணைக்க எனக்கு மனசில்லை

சிலரின் வாழ்த்தில் ஏற்பில்லாவிட்டாலும் வாழ்த்துத் தெரிவித்தார்கள் என்பதற்காக...

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளை வாசிச்சு அழுகிறதா சிரிக்கறதா எண்டு தெரியேல்லை ???? :wub:^_^

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுகளை வாசிச்சு அழுகிறதா சிரிக்கறதா எண்டு தெரியேல்லை ???? ^_^:lol:

அப்ப ஏன் வாசிக்கிறியள். இப்படிச் சொல்லிட்டு திரியவா..??! :wub::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

TamilNewYear6.jpg

tny06.gif

அனைவருக்கும்

இனிய

தமிழ்

புத்தாண்டு

வாழ்த்துக்கள்

அனைவருக்கும் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நெற்றின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி..

TamilNet wishes its readers a Happy & Prosperous Tamil, Malayala & Sinhala New Year!

sun_earth_zodiac_140.jpg

It is not only the Tamil New year, but also the New Year of Sinhalese (Alut Avurudu) and Malayalis (Vishu), even though the Kollam Era of Malayalam begins from the month of Aava'ni (August-September).

It is not appropriate to call it a Hindu New Year since vast majority of Hindus in India don't celebrate it a New Year. Yet, it is an auspicious day called Mesha-samkraanti for them. In Orissa, it is observed as Paana-samkraanti. The Sikhs and some Assamese also celebrate it as New Year under different names.

http://www.tamilnet.com/art.html?catid=99&artid=25298

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

நினைவு படுத்திய நெடுக்காலபோவானுக்கும் சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்திருக்கும் சித்திரைப்புத்தாண்டு உலகெல்லாம் பரந்து வாழும் உறவுகள் உட்பட, சுதந்திரக்காற்றை சுவாசிக்க தாயகத்தில் ஏக்கத்துடன் காத்திருக்கும் எங்கள் உடன்பிறப்புகள் உட்பட அனைத்து நெஞ்சங்களிற்கும் இனிதாகவும், அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறவும் எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுகள் அனைவருக்கும் என் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அன்புறவுகள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துகள். நன்றி நெடுக்ஸ். :lol::lol:

அன்பு உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

போர்நிறுத்தம் பிரகடனம் செய்து ஏ9 பாதையைத் திறக்க வேண்டும் இந்துமாமன்றம் புதுவருட செய்தியில் வலியுறுத்து

தமிழ் சிங்களப் புத்தாண்டு வேளை யிலாவது அரசாங்கம் போர் நிறுத்தத்தைப் பிரகடனப்படுத்த முன்வரவேண்டும். ஏ9 பாதையைத் திறந்து வடபகுதி மக்களுக் குத் தேவையான பொருள்களை அனுப்பி வைக்கவும் அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.

இவ்வாறு அகில இலங்கை இந்துமா மன்றம் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தி யில் வலியுறுத்தி உள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:

சிங்கள மக்களும் தமிழ்மக்களும் ஒன்று கூடி புத்தாண்டை கொண்டாடவிருக்கி றார்கள். இச்சந்தர்ப்பத்தில் கூட ஏ9 வீதி மூடப்பட்டிருப்பது வடபகுதி மக்கள் நாட் டின் ஏனைய பகுதி மக்களிடமிருந்து பிரிக் கப்பட்டு அவர்கள் இந்த நாட்டு மக்கள் அல்லர் என்ற உணர்வை ஏற்படுத்துகின் றது. இந்த நாட்டில் வாழும் சகல மக்களை யும் ஒன்றுபடுத்துவதுதான் அரசாங்கத்தின் கொள்கையானால் ஏன் இந்த நிலை தொடர வேண்டும்?

உச்ச நீதிமன்றத்தின் பல கட்டளைகள் உதாசீனப்படுத்தப்பட்டு தமிழ் மக்கள் மீது வீதித் தடை நிலையங்களில் துன்புறுத்தல் தொடர்கின்றது. மேலும் அவர்கள் கைது செய்யப்படுதலும் கடத்தப்படுதலும் தொடர் கின்றன. அவர்கள் நடமாடுகின்ற சுதந் திரம் மறுக்கப்பட்டுள்ளது.

இராணுவ நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு ஒழுங்குகள் என்ற பெயரில் விதிக்கப்பட்டுள்ள பல தடங்கல் களும் நீக்கப்பட்டு, நியாயமானதும் நீதியான துமான அரசியல்தீர்வை வழங்கவேண்டும் என்று அரசாங்கத்தை பகிரங்கமாக வேண் டுகிறோம்.

இலங்கை அரசாங்கத்துடன் தங்கள் செல் வாக்கைப் பாவித்து உடனடியாக போர் நிறுத் தம் செய்யப்படவும், இந்நாட்டில் மீண்டு ம் சமாதானம் ஏற்பட நியாயமான நீதியான அரசியல் தீர்வு காணப்படவும் வலியுறுத்து மாறு இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்திற் கும் அழுத்தம் கொடுக்கும்படி பாரெல்லாம் பரந்துவாழும் இந்து மக்களை பகிரங்கமாக வேண்டுகிறோம். என்று உள்ளது (அ)

உதயன்

இன்றைய தினம் தமிழ்ப் புத்தாண்டு என்பது ஒரு குறிப்பிட்டளவு மக்களால் புறக்கணிக்கப்பட்டிருக்கு என்பது மகிழ்ச்சிக்குரியதே. புலத்து தொலைக்காட்சிகளில் இதுபற்றி பலரது பேட்டிகளும் ஒளிபரப்பாயின. இவ் ஆரம்பமே மகிழ்வாக உள்ளது.

எனக்கு ஒரு சந்தேகம்!

இதை தமிழ்பேசும் முஸ்லிம் , கிறிஸ்தவ மக்களும் கொண்டாடினமா? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.